Thursday, 20 June 2013

பொருளாதாரம் வலிமை அடைந்திட


பொருளாதாரம் வலிமை அடைந்திட
இஸ்லாம் ஓர் உலகளாவிய மார்க்கம். முஸ்லிம்கள் உலக அமைதிக்கும் சம நீதிக்கும் பாதுகாவல்ர்கள், உலகை ஆள்வதற்கும், மனித சமூகத்தையும் வழி நடத்துவதற்கும் மெத்தப் பெருத்தமானவர்கள் என்கிற பெருமையை இழந்து நிற்கிற பரிதாபகரமான காட்சியை உலக அரங்கில் காண முடிகிறது.
இழந்த பெருமையை மீட்டெடுக்க இந்த முஸ்லிம் சமூகம் கையாள வேண்டிய மூன்று அம்சங்களில் முதல் அம்சமான கல்வி - வஞ்ஞான அறிவை மேம்படுத்துத தொடர்பான மார்க்க வழிகாட்டுதலை கடந்தவார ஜூம்ஆ உரையில் விரிவாகக் கண்டோம்.
இந்த வாரம்,
            இரண்டாம் அம்சமானபொருளாதார வலிமையை வளப்படுத்துதல்சம்பந்தமான மார்க்க வழிகாட்டுதலை காண்போம்.
இஸ்லாமியப் பார்வையில் பொருளாதாரம்:
            பொருளாதாரத்தின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அல்லாஹ் தன் அருள்மறையின் பல பாகங்களில் குறிப்பிடுகின்றான்.
            பொருளாதாரம் குறித்த தகவலைத் தருகிற போதுகூட அழகிய வார்த்தைகளைத்தான் அல்லாஹ் பயன்படுத்துகின்றான்.
            இங்கே அல்லாஹ் பொருளாதாரம் - மனித வாழ்வின் ஸீனத் - அலங்காரம் என்று கூறுகின்றான்.
            இங்கே அல்லாஹ் பொருளாதாரத்தை கைர் - நலவுகள் என்ற வார்த்தையைக் கொண்டு அலங்கரிக்கின்றான்.
            மேன்மக்களான இமாம்கள்கைர்என்ற வார்த்தையை பரந்து விரிந்த நன்மைகள் - நலவுகள் அனைத்தையும் குறிக்கும் ஜாமிஃ ஆன வார்த்தையாகும் என்று வர்ணிப்பார்கள்.
            உதாரணமாக, அவசரத்தில் உதவுகிற நபருக்கும், ஆபத்தில் இக்கட்டான சூழ்நிலையில் பேருதவி செய்கிற நபருக்கும் மன மகிழ்ச்சியோடு நன்றி தெறிவிக்கும் முகமாக
அல்லாஹ் உனக்கு நலவுகளை நல்குவானாக! என்று மாநபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.
            மன வாழ்க்கையின் மூலம் புது இல்லற வாழ்க்கையை துவங்கும் புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் போது
அல்லாஹ் உமக்கு
என்று மாநபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
            ஆக கைர் என்கிற வார்த்தையின் பொருள் மிகவும் ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கியது.
அல்குர் ஆன்:
            இங்கே அல்லாஹ் பொருளாதாரத்தை குவ்வத் - ஆற்றல் என்ற வார்த்தையைக் கொண்டு மேலும் வலிப்படுத்துகின்றான்.
            இங்கே குவ்வத் என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமான பொருள் பொருளாதாரம் என்றே பெரும்பாலான விரிவுரையாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.
            மாநபி (ஸல்) அவர்கள் கூறியதாக சுஃப்யான் அஸ்-ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
            பணத்தை - பொருளாதாரத்தை சேமித்து வையுங்கள்
            ஒரு காலம் வரும் பொருளாதாரம் இல்லையென்றால்
            உங்களை கைக்குட்டை கசக்கி எறிவது போன்று எறிந்து விடுவார்கள்
நூல்: மிஸ்காத்
ஆக, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் பொருளாதாரத்தை குறித்து தருகிற முக்கியத்துவத்தை மேலே நாம் பார்த்தோம்.
பொருளாதாரம் வலிமை அடைந்திட:
ஒரு மனிதன் பொருளாதரத்தில் வலிமை அடைந்திட வேண்டுமெனில் அவன் அதற்காக கடுமையான உழைப்பில் தன்னை ஈடுபடுத்திட வேண்டுமென இஸ்லாம் பணிக்கிறது.
            ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வேண்டி நின்றார் நபி (ஸல்) அவர்கள் உன்னிடம் ஏதேம் பொருள் இருக்கிறதா? என்று வினவினார்கள். அதற்கவர், கிழிந்த போர்வையைத்தவிர என்னிடம் வேறொன்றும் இல்லை என்றார். அப்படியானால் அதைக் கொண்டு வாரும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். வீட்டிலிருந்த போர்வையை எடுத்துக் கொண்டு நபிகளாரிடம் கொடுத்தார் அவர். மாநபியின் அவையில் இரண்டு தீனாருக்கு ஏலம் போனது அந்தப்போர்வை.
இரண்டு தீனாரை அம்மனிதர் கையில் கொடுத்து ஒன்றை உமது வீட்டின் தேவைக்குப் பயன்படுத்து, மற்றொன்றை வைத்து உனக்கு தெரிந்த தொழிலுக்கான சாதனத்தை வாங்கி உழைத்து பொருளாதாரத்தை வலிமை படுத்திக்கொள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.
ஒரு சமயம் நபிகளரிடம்எந்த பொருளதாரம் சிறந்தது? என வினப்பட்டத்து. ஒரு மனிதர் தன் உடலால் உழைத்து ஈட்டும் பொருளாதாரமே  மிகச் சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்     
ஆகுமான வழியில் உழைத்துபொருளாதரத்தை ஈட்டுவது, முஸ்லிமான அனைத்து ஆண்களின் மீதும், பெண்களின் மீதும் கட்டாயம் கடமையாகும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் பெரிய சஹாபாக்கள் சிலர் அன்னையை சந்திக்க வந்து உரையாடிக் கொண்டிருந்தனர். திடீரென மதீனவெங்கும் புழுதிப் படலங்கள் படர ஆரம்பித்தன. வந்தவர்கள் என்னவோ, ஏதோ என்று திகைத்து நின்ற போதுவந்திருந்தவர்களை நோக்கி பயப்பட வேண்டாம் வியாபாரத்திற்கு சென்ற அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃ (ரலி) லாபத்தோடு திருப்பியிருப்பார்கள். அதுதான் அவர் அழைத்துச் சென்ற 700 குதிரைகளின் காலடிக் குழம்புகள் பட்ட புழுதிதான் நீங்கள் பார்ப்பது என விளக்கமளித்தார்கள்.
இதே போல் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அண்ணலாரைத் தொடர்ந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தவர்கள் ஸஅத் இப்னுர்ரபீஃ எனும் மதீனத்து அன்சாரித் தோழரோடு சகோதர உறவை ஏற்படுத்தினார்கள்.
ஸஅத் பின் ரபீஃ (ரலி) அவர்கள் சகோதர உறவு ஏற்படுத்தப்பட்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் சகோதரரே!
மதீனாவின் பெருந்தன்வந்தர்களில் நானும் ஒருவன் எனது சொத்தில் சரிபாதியை நீர் எடுத்துக் கொள்ளும்! என் வாழ்க்கை துணைவியர் இரண்டு பேர் அவர்களில் நீர் விரும்பியவரை மணந்து கொள், நான் மணவிலக்கு அளித்து விடுகிறேன் என்று கூறினார்கள்.
சகோதரரே! உமது சொத்தையும், வாழ்க்கைத்துணைவியரையும் நீரே உம்மோடு வைத்துக் கொள்ளுங்கள்! எனக்கு அவைகள் வேண்டாம் நான் அப்படி வாழவும் விரும்பவில்லை.
எனக்கு மதீனாவின் கடைவீதியை காட்டுங்கள் என்றார்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள். அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை மதீனாவின் கடைவீதிக்கு அழைத்துச் சென்றார் ஸஅத் (ரலி) அவர்கள்.
அங்கே! ஒரு பொருளை வாங்கி, அதை விற்று லாபத்தோடு இல்லம் திரும்பினார் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள்
இப்படி சிறுக சிறுக உழைத்து ஈட்டிய பொருளாதாரம் தான் இன்று மதீனாவில் 700 ஒட்டகைகள் மீது லாபத்தை ஈட்டி வரும் அள்விற்கு.
            எனவே உழைப்புதான் பொருளாதார வலிமைக்கு அடிப்படை ஆதாரம் என்பதை இந்த உம்மத் உணர வேண்டும்.
தனி மனித வாழ்வில் பொருளாதாரம்.
ஒரு மனிதனை அவன் உயிரோடு இருக்கும் போதும், இறந்தபின்னரும் சமூகத்திற்கு சிறந்தவனாய், நல்லவனாய் அடையாளப்படுத்திக் காட்டுவது இந்தப் பொருளாதாரம்.
ஒரு மனிதர் நபிகளாரின் வையில்
அல்லாஹ்வின் தூதரே! இரு தந்தையர்களில் யார் சிறந்தவர்? ஒருவர் மார்க்க விழுமியங்களோடு வாழ்கிறார், அத்தோடு தமது சந்ததியினருக்கு விசாலமான பொருளாதாரத்தை விட்டுச் செல்கிறார்.
இன்னொருவர், மார்க்க விழுமியத்தோடு வாழ்கிறார். ஆனால் தமது சந்ததியினருக்கு தேவையான அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்தாமல் செல்கிறார்.
இருவரில் முதலாமவரே சிறந்த தந்தை என மாநபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மரண தருவாயில் இருக்கும் போது நபிகள் (ஸல்) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களைச் சந்திக்க சென்றார்கள். தமது பொருளாதாரத்தை முழுவதுமாக அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிப்பு செய்யத்தாம் தயாராக இருப்பதாகச் சொன்னபோது,
            வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிப்புச் செய்வீராக.
ஏனெனில்,
உம்முடைய மக்களை சந்ததியை பிற மக்களிடம் யாசிப்பவர்களாக விட்டுச் செல்வதை விட, அவர்களை பிற மக்களிடம் தேவையற்றவர்களாக செல்வந்தர்களாக விட்டிச் செல்வது தான் மிகச் சிறந்த அறச் செயலாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல்: புகாரி
(இதே சம்பவத்தின் முழு விவரத்தை அறிய நம்முடைய இஸ்லாம் விரும்பும்  அறப்பணிகள் எனும் தலைப்பில் தெடவும்)
இஸ்லாமிய வளர்ச்சியில்
இஸ்லாத்தின் ஆரம்ப கால வளர்ச்சியில் முக்கியப் பங்கும் பெரும்பங்கும் வகிப்பது பொருளாதாரம் தான். உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுவார்களாம்
            எங்களின் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள்
            எங்களின் தலைவர்களை - பிலால், அம்மார், கப்பாப்
            போன்றவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுத்தார்கள்
இவ்வகையிலும் இன்னும் பல வகையிலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் 80,000 தீனார்களை இஸ்லாத்திற்காக வாரி வழங்கினார்கள்.
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் கணக்கிலடங்கா செல்வங்களும், சொத்துக்களும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது.
ஹிஜ்ரத் செய்து வந்த பின்னர்,
உஸ்மான் (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஆகிய இரு செல்வந்தர்களின் பொருளாதாரமும்கணக்கில்லாமல் செலவிடப்பட்டுள்ளது. மேலும், இது அவர்கள் வாழும் காலங்களில் தொடர்ந்ததை வரலாற்றில் நிரம்பவே காண முடிகிறது.
            நபி (ஸல்) அவர்களின் வஃபாத்திற்குப்பிறகு நான்கு கலீஃபாக்களும், ஹிஜ்ரி 100ல் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களும் வேறு சில ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக தமது பொருளாதாரத்தை தாராளாமாக அற்பணித்ததை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது.
            உமையாக்களின் ஆட்சி இஸ்லாமிய வளர்ச்சிக்கு தடையானது.
            பின்னர் ஹிஜ்ரி 100ல் உமர் தனது இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மீண்டும் இஸ்லாமிய வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் தம்மை ஈடுபடுத்தினார்கள். அதன் பிறகு வளர்ச்சி, வீழ்ச்சி என்று மாறி மாறி இஸ்லாம் வரலாற்றில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.
உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 99 (கி.பி. 718 முதல்) ஹிஜிரி 101 (கி.பி. 720 வரை) 2 ஆண்டுகள் 5 மாதங்கள் வரை அதன் பிறகு 25 வருடங்கள் 10 மாதங்கள் இஸ்லாமிய உலகம் இருண்டுதான் காணப்பட்டது.
ஹிஜிரி 132 கி.பி. 750 முதல் ஹிஜிரி 641 கி.பி. 1243 வரை
524 ஆண்டுகள் அப்பாஸியாக்களின் ஆட்சிக்காலம் இஸ்லாமிய உலகின் பொன்னான ஆட்சிக்காலம் எனலாம்.
இன்று உலகில் அறியப்படும், போற்றப்படும் கல்வி - விஞ்ஞானம்- மருத்துவம் அனைத்திலும் முஸ்லிம்கள் முன்னோடிகளாய், கண்டுபிடிப்பாளர்களாய் ஜொலித்த காலமும் அதுதான்.
            அப்பாஸிய கலீஃபா ஹாரூன் அல் ரஷீதுடைய மகன் கலீஃபா அல் மாமூன் என்பவர்தான் முதன் முறையாக இந்தியா, சீனா, கிரேக்க மொழியிலுள்ள தத்துவம், அறிவியல் மற்றும் தர்க்க கலைச் சார்ந்த எண்ணற்ற நூல்களை அரபியில் மொழியாக்கம் செய்தார். இதற்காகபைத்துல் ஹிகமாஎனும் ஞான பீடத்தை கி.பி. 830ல் திறந்து வைத்தார். இதில் ஒரு பெரும் நூலமும் ஒரு ஆராய்ச்சிக்கூடமும், ஒரு மொழியாக்கத்துறையும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
            அப்பாஸிய கலீஃபாக்கள் தங்களது பொருளாதாரத்தில் பெருமளவை இஸ்லாம் இகமெங்கும் அறிவு சுடரொளியை பரப்பிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக செலவிட்டார்கள்.
            கிட்டத்தட்ட 524 ஆண்டுகள் 5 நூற்றாண்டுகள் இஸ்லாமிய கல்வி, விஞ்ஞான சமூகம் உலகை வழிநடத்திச் சென்றது.
அறிவியல் முன்னோடிகளான முஸ்லிம் அறிஞர்கள்
1.      ஜாபிர் பின் ஹைய்யான் (கி.பி. 5-15ம் நூற்றாண்டின் இராசயனவியலில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் பலதை உலகிற்கு அடையாளப்படுத்தினார்கள்.இரசானவியல் சம்பந்தமாக 50க்கும் மேற்பட்ட நூற்களையும் எழுதியுள்ளார்.
2.      முஹம்மத் பின் மூஸா அல்குவாரிஸ்மி (கி.பி. 840) கணிதவியலிலும்
3.      அலீ இப்னு சீனா (கி.பி. 980-1030) மருத்துவத்துறையிலும்
4.      முஹம்மத் பின் ஸகாரிய்யா அல் ராஸீ (கி.பி. 864-930) மருத்துவம், கணிதம், வானவியல், தத்துவம், இரசானவியல் ஆகிய துறைகளிலும்
5.      அபூ அப்துல்லாஹ் அல் பத்தானி (கி.பி. 868-929) வானவியல், வான சாஸ்திரம் ஆகிய துறைகளிலும்
6.      அபூபக்ர் அல் ராஸீ (கி.பி. 865-925) அம்மை நோய் தடுப்பூசி, இரத்தக்குழாய், இதயம் சம்பந்தமான துறைகளிலும்
7.      யாகூப் இப்னு இஷாக் அல் சிந்தி (கி.பி. 800) புவியியல், மருத்துவம், தத்துவம், வானவியல், கணிதம் ஆகிய துறைகளிலும்
8.      ஸாபித் பின் குந்தா (கி.பி. 836-901) பொறியாளர், வானவியல் ஆகிய துறைகளிலும்
9.      அலீ இப்னு ரப்பான் அல் தாபரீ (கி.பி. 838-870) கலைக் களஞ்சியத்துறையிலும்
10. அபூ அல் நஸ்ர் அல் பாராபீ (கி.பி. 870-950) சமூகவியல், அளவையியல், மெய்யியல் ஆகிய துறைகளிலும்
11. அபுல் ஹஸன் அலீ அல் பஸ்ஊதி (கி.பி.957) புவியியல், வரலாறு, நிலவியல் ஆகிய துறைகளிலும்
12. அபுல் ஹஸன் அல் மாவர்ரீ (கி.பி. 972-1058) சட்டத்துறை, நீதித்துறை, அரசியல் ஆகிய துறைகளிலும்
13. அபுல் காஸிம் அல் ஸஹராஷு (கி.பி. 936-1013) அறுவை சிகிச்சை அது சம்பந்தமான கருவிகள் கண்டுபிப்பு ஆகிய துறைகளிலும்.
14. அபூ மர்வான் இப்னு ஸுஹர் (கி.பி. 1091-1161) விஞ்ஞானம், மருத்துவம், நுண்ணுயிர் ஆகிய துறைகளிலும்
15. அபூரைஹான் அல்பிரூனி (கி.பி.973-1048) நுண் பொருளாய்வியல், புவியியல், கணிதவியல், வரைபடவியல் ஆகிய துறைகளிலும்
இன்னும் ஏராளமான அறிவியல் துறை பலதில் இஸ்லாமிய அறிஞர் மேதைகள் பலர் சாதனையாளர்களாகவும், கண்டுப்பிடிப்பாளர்களாகவும், நிபுணர்களாகவும் திகழ்ந்த அந்த பொற்காலம் அப்பாஸியக் கலீஃபாக்கள் ஆட்சிபுரிந்த காலம்.
      இஸ்லாம் உலகில் பெருமையோடு பயணிக்க அப்பாஸிய ஆட்சியாளர்களின் பொருளாதாரம்தான் பிண்ணனி வகித்ததை வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது.
நூல்: ஓர் உலகளாவிய வரலாறு
பக்கம் 103-106, 353-359
120ம் நூற்றாண்டில் அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் செல்ஜூக்கிய மன்னர் நிஜாமுல் முல்க் அவர்களுடன் இணைந்து ஜாமிஆ நிஜாமிய்யா பல்கலைகழகம் ஒன்றை உருவாக்கினார்கள். இதன் மூலம் உலகை ஆளுமை செய்கிற பல துறைகளின் இஸ்லாமிய கல்வியாளர்கள் உருவாகி இவ்வுலகை வழிநடத்தினார்கள். இதற்கு 400 ஆண்டுகளுக்கு பின்தான் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது.
அதன் பிறகு,
தாத்தாரியாக்களின் படையெடுப்பு, ஸ்பெயினின் வீழ்ச்சியென இஸ்லாம் உலகை ஆளுகிற பெருமையை இழந்தது.
நமது இந்திய தேசத்தை அடுத்து இருக்கிற இலங்கை நாடு சிங்களவர்கள் ஆளுகிற நாடு. இந்த அரசின் கொள்கை முடிவுகளில் கூட இலங்கையின் நளீமி உலமாக்கள் தலையிடுகிற, தீர்மானிக்கிற பங்கெடுக்கின்ற பெருமையை இஸ்லாமிய உலகிற்கு ஏற்படுத்தியக்கொடுத்து நளீம் ஹாஜியார் எனும் தனிப்பெரும் செல்வந்தரின் அரவணைப்பும், பொருளாதாரமும் தான் என்றால் அது மிகையல்ல.
1933ல் இலங்கையில் உள்ள பேருவளை எனும் கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தார்.
இளமையிலும் வறுமை தொடரவே உழைத்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் மாணிக்க கல் வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்தினார்.
சுப்ஹானல்லாஹ்
அல்லாஹ் அருளால் அசுர வளர்ச்சி சில ஆண்டுகளிலிலேயே இலங்கையில் அறியப்பட்ட செல்வந்தர்களில் ஒருவராக உயர்ந்தார்.தனக்கு வழங்கப்பட்டிருக்கும் செல்வம் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அமானிதம் என்பதை உணர்ந்தார்.மேலும் இந்த முஸ்லீம் உம்மத்திற்கு இந்த அம்மனிதம் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து 1970ல் இலங்கையிலுள்ள அரபுகல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். ஆலீம்களின் குடும்ப பிண்ணனியையும் ஆய்வு செய்த அவர் சமூகத்தின் முதுகெலும்பாக திகழும் மதரஸாக்களும், உலமாக்களும் பொருளாதார வளர்ச்சியின்மையால் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்து சரி செய்தார். பின்னர், தன்னோடு சில மார்க்க உலக அறிஞர்களை இணைத்துக்கொண்டு முஸ்லிம்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார்.
அதன் விலைவாக, ஜாமிஆ நளீமிய்யா எனும் உலகக் கல்வியும் மார்க்க கல்வியும் ஒருங்கே பெற்ற ஒரு மாபெரும் கலாசாலையை உருவாக்கினார்கள்.
இன்று அங்கிருந்து வெளியேறிய அறிஞர் பெருமக்கள் சிங்கள அரசின் அனைத்து அதிகார மட்டங்களிலும் இடம் பெற்று, இஸ்லாமிய ஆளுமைத்திறன் மீதான நம்பத்தன்மையை உறுதிபடுத்தியுள்ளனர்
நூல்:CMN சலீம் அவர்கள் எழுதிய தீர்வு
இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் காலந்தொட்டு 20ம் நூற்றாண்டின் நளீம் ஹாஜியார் வரைபொருளாதார வலிமையை வளப்படுத்தியும், பொருளாதாரத்தின் துனை கொண்டும் பல உத்தமமான நன்மக்கள் இஸ்லாத்தின் உயர்வுக்கும், மேன்மைக்கும் அரும்பாடுபட்டிருக்கிறார்கள்.
நம்முடைய பங்களிப்பு என்ன?
இஸ்லாமும் முஸ்லிம்களும் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டுமானால்..
மேலே சொன்னவாறு பொருளாதாரத்தை வலிமை படுத்த வேண்டும், முன்னோர்கள் செலவிட்டது போல சமூகத்தின் அனைத்து துறைகளிலும் செலவிடப்பட வேண்டும். அதற்கு சமூகத்துடைய செல்வந்தர்களின் பொருளாதாரமும் ஒரு முகப்படுத்த வேண்டும்.
ஜகாத் - பைத்துல்மால்:
இன்றைக்கு சமூகத்தில் செல்வந்தர்கள் பலர் தாமாக முன்வந்து ஜகாத் கொடுக்கின்றார்கள். என்றாலும் அனைவரும் தனித்தனியே வழங்குவதில் சமூகத்தில் அதன் தாக்கம் பிரதிபலிக்கவில்லை. பைத்துல்மால் எனும் அமைப்பின் கீழ் அனைவரின் ஜகாத் பொருளும் ஒருமுகப்படுத்தப்பட்டு நபி வழியில் அல்குர் ஆனில் ஒளியில் வினியோகம் செய்யப்படுமேயானால் நமது பொருளாதாரத்தைக் கொண்டே நமது சமூகத்தின் உயர்வை நாமே தீர்மானிக்க முடியும்.
எந்த அரசிடமும் இட ஒதுக்கீடு கேட்டு கெஞ்சத் தேவையில்லை.
இஸ்லாமிய வங்கி:
நாம் உழைத்து ஈட்டுகிற பொருளாதாரம், வலிமைப்படுத்தப்பட, வளப்படுத்தப்பட வேண்டுமானால் ஈட்டிய பொருளாதாரத்தை இஸ்லாம் சேமிக்க சொல்கிறது.
ஆடம்பரமாக வீண்செலவுகள் செய்வோரையும், சிக்கனம் என்ற பெயரில் கருமியாக இருப்போரையும் கண்டிக்கும் இஸ்லாம், பனத்தை சேமிக்குமாறு ஊக்கப்படுத்துகிறது.
ஆனால், இன்று உலக அளவில் முஸ்லிம்கள் சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.
நமது இந்திய தேசத்திலும் அது போன்ற நிலைதான் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீதியரசர் ராஜீந்தர் சச்சார் தமது அறிக்கையில் நாட்டில் இயங்குகின்ற 27 பொதுத்துறை வங்கிகளில் முஸ்லிம்கள் சேமிப்பு கனக்கு பரிவர்த்தனையில் 12 விழுக்காடு தான் பங்கு பெற்றுள்ளனர். அதாவது நாட்டில் வசிக்கும் 25 கோடி முஸ்லிம்களில் 3 1/2 கோடி முஸ்லிம்களுக்குவன்ஹ்கிப்தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2005ல் Legal News and Views எனும் ஆய்வில் வங்கிகளில் முஸ்லிம்களால் கைவிடப்பட்ட வட்டிப்பணம் 75,000 கோடி கேட்பாரற்று கிடக்கின்றது. அதிலும் குறிப்பாக கேரள வங்கிகளில் மட்டும் 45,000 கோடி என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இன்றைய வங்கிகளின் இயக்கம் வட்டியை அடிப்படையாக கொண்டிருப்பதால் முஸ்லிம்களின் சேமிக்கத் தவறுகின்றார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆளும் காங்கிரஸ் அரசிடம் இக்கோரிக்கை  முன்வைக்கப்பட்ட போது 2006ம் ஆண்டில் இது குறித்து பரிசீலனை செய்யுமாறு ரிசர்வ் வங்கியை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். ஆனால் சாத்தியமில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கைவிடப்பட்டுள்ளது.
நூல்: தீர்வு
அரசின் கதவுகளை தட்டுவோம்
ஆனால், ரிசர்வ் வங்கி சாத்தியமில்லை என்று சொன்னது முற்றிலும் பொய் என்பதை உறுதிப் படுத்துவது போல அமைந்தது உலக வங்கிகள் மூடு விழாக்கள் நடத்திய காட்சிகள்.
20ம் நூற்றாண்டில் இறுதியில் நூழிலையில் தொங்கிக்கொண்டிருந்த கம்யூனிஷமும், சோஷலிஷமும் முற்றிலுமாய் தோற்றுப் போயின, முடங்கிப் போயின.
2008ல் அமெரிக்கவில் இயங்கிய உலக நாடுகளின் பல வங்கிகள் திவாலாகியதாக அறிவிக்கப்பட்டபோது உலக நாடுகள் ஆட்டம் கண்டது, இந்தியாவும் கூட.
ஆனால் அதே கால கட்டத்தில் 2008ம் ஆண்டு 75 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் எவ்வித சேதாரமும் இன்றிபெற்றி நடை போடுவதாகசர்வதேச நாணய நிதியும்தனது ஆய்வரிக்கையில் வெளியிடப்பட்டது.
மேலும், ஜுன் 2011ம் ஆண்டு .பி. போபாலில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பொருளாதார நிபுணர் இர்பான் ஷஹீத் தமது உரையில் இன்று உலகில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் இயங்குவதாக தெளிவுபடுத்தினார்.
நமது நாட்டில் வாழும் ஒட்டு பொத்த முஸ்லிம்களிம் ஒன்றினைந்து அரசுகளின் கதவை தட்டுகிற பொழுது நிச்சயம் இஸ்லாமிய வங்கி இந்தியாவில் இயக்கப்பட வாய்ப்புண்டு.
ஒருமித்து நின்ற காலங்களில் இந்திய முஸ்லிம் சமூகம் பல காரியங்களை சாதக மாக்கியிருக்கிறது என்பதே இந்திய வரலாற்று உண்மை.
எனவே,
ஆகுமான வழியில் உழைப்போம், பொருளீட்டுவோம், பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவோம், வளப்படுத்துவோம் இந்த சமூகம் இழந்த பெருமையை மீட்டெடுக்கும் பணியில் நம்மை ஈடுபடுத்துவோம்!
மீண்டும் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாத்தை கட்டியெழுப்புவோம்!
அல்லாஹ் அருள்புரிவானாக! துணை நிற்பானாக! ஆமின்.
வஸ்ஸலாம்.

1 comment: