Wednesday, 9 April 2014

தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும்!



               

தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும்!






  இஸ்லாம் மனித சமூகத்திற்கு ஓர் இணக்கமான மார்க்கமாகும்.

மனித சமூகத்திற்கு அது வழங்கியிருக்கின்ற சுதந்திரம் எண்ணிலடங்காததாகும்.

ஒரு மனிதன் எதையெல்லாம் விரும்புகின்றானோ அவற்றையெல்லாம் செய்கிற சுதந்திரத்தை அவனுக்கு வழங்கியிருக்கின்றது.

ஆனால், ஒரேயொரு நிபந்தனை அவன் விரும்புகின்ற அந்த செயல் அவனுக்கு நன்மை பயக்குமா? அல்லது தீமையை விளைவிக்குமா?

ஆகுமான வழியில் அமைந்ததா? அல்லது தடை செய்யப்பட்ட வழியில் அமைந்ததா? என்று பரிசீலித்துப் பார்க்கச் சொல்கிறது.

ஆம்! எதைச் செய்ய வேண்டும் என நினைக்கின்றானோ அதை முதலில் தேர்வு செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது.

அதுவும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

தேர்ந்தெடுக்கும் அந்த பண்பை ஓர் இறைவிசுவாசியின் அழகிய அடையாளமாகவும், வெற்றி பெற்ற மேன்மக்களின் சிறந்த பண்பாகவும், நடுநிலையாளர்களின் சீரிய சிந்தனையின் வெளிப்பாடாகவும் வர்ணிக்கிறது.

அழகிய அந்த நற்பண்பு கொண்டிருப்பவனை அது வாழ்த்துகிறது, பாராட்டுக்கள் பல வழங்கி கௌரவிக்கிறது.

வெற்றியாளனின் சிறந்த பண்பு

وَنَفْسٍ وَما سَوَّاها (7) فَأَلْهَمَها فُجُورَها وَتَقْواها (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا (10)

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப் படுத்தி பின்னர், அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீது சத்தியமாக! திண்ணமாக, மனதை (நன்மையைக் கொண்டு) தூய்மை படுத்தியவன் வெற்றி பெற்று விட்டான்; மேலும், மனதை (தீமையைக் கொண்டு) நசுக்கியவன் தோற்று விட்டான்.

                                                                (அல்குர்ஆன்:91:7-10)

இங்கே நன்மையை தேர்வு செய்தவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என அல்லாஹ் விவரிக்கின்றான்.

நடுநிலையாளனின் சீரிய சிந்தனை

قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ (32) قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ (33) قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ (34) وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَ يَرْجِعُ
الْمُرْسَلُونَ (35)

அல்லாஹ் கூறுகின்றான்: “ (ஸுலைமான் (அலை) அவர்களின் கடிதத்தைப் படித்து காட்டி விட்டு) அரசி கூறினாள்: “சமுதாயத்தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் எனக்கு ஆலோசனை வழங்குங்கள்.

நீங்கள் இல்லாமல் எந்த விவகாரத்தையும் நான் முடிவு செய்வதில்லை.”  அவர்கள் பதில் கூறினார்கள்: “நாம் வல்லமை மிக்கவர்களாகவும், கடுமையாக போரிடக்கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.”

அரசி கூறினாள்: “அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டின் மீது படையெடுத்தால் அதனை அழித்து விடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத் தான் அவர்கள் செய்கின்றார்கள்.

ஆகவே, நான் (அவருக்கு) ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர், என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.”

                                                               (அல்குர்ஆன்:27:32-35)

இங்கே ஸபா நாட்டு அரசியின் முன்னால் வைக்கப்பட்ட ஆலோசனையில் இறுதியாக அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த சீரிய சிந்தனை அவருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஹிதாயத் நேர்வழி கிடைப்பதற்கு வழிகோலியதாக வரலாறு நமக்கு சொல்லித்தருகின்றது.

நபிகளாரின் முன்மாதிரி

عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ عَزَّ وَجَل .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும்படி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையேஅது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் தேர்வு செய்வார்கள்.

அது பாவமான காரியமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள் தான் அதிலிருந்து விலகி வெகுதொலைவில் சென்றுவிடுவார்கள்.

(நூல்: முஸ்லிம், பாபு முபாஅததிஹி {ஸல்} லில் ஆஸாமி வஃக்தியாரிஹி)

  قال- ثم أتيت بإناءين أحدهما فيه لبن والآخر فيه خمر فقيل لي خذ فاشرب أيهما شئت فأخذت اللبن فشربته فقال لي جبريل أصبت الفطرة ولو أنك أخذت الخمر غوت أمتك

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டிருந்த போது நபிகளாருக்கு ஒரு கோப்பையில் மதுபானமும், இன்னொரு கோப்பையில் பாலும் வழங்கப்பட்டதாம். அப்போது நபிகளார் {ஸல்} அவர்கள் பாலை அருந்துவதற்காக தேர்ந்தெடுத்தார்களாம். அதைக் கண்ணுற்ற ஜிப்ரயீல் (அலை) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! இயற்கையான பானத்தையே நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நீங்கள் மதுவை தேர்ந்தெடுத்திருப்பீர்களேயானால் உங்களது சமுதாயம் வழிகெட்டுப் போயிருக்கும்என்று கூறினார்கள்.

                             (நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:6, பக்கம் 173)

முஸ்லிம் ஷரீஃபின் இன்னொரு அறிவிப்பில்..

عَنْ الزُّهْرِيِّ قَالَ قَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُو هُرَيْرَةَ
إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ فَقَالَ لَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ

ஜிப்ரயீல் (அலை) அவர்கள்இயற்கையை தேர்ந்தெடுப்பதற்கு நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! என்று கூறியதாக, கூடுதலாக அபூஹுரைரா (ரலி) அறிவிப்பின் படி பதிவாகியுள்ளது.

1.முஸ்அப் இப்னு உமைர் (ரலி)

நபித்துவத்தின் 11-ஆம் ஆண்டு, மக்காவிற்கு ஹஜ் செய்ய வந்த கஜ்ரஜ் கோத்திரத்தைச் சார்ந்த சிலரிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஏகத்துவ அழைப்பை எத்திவைக்கின்றார்கள்.

அல்லாஹ் அவர்களின் இதயத்தில் ஏகத்துவ ஜோதியை ஏற்றிவைத்தான். அவர்கள் மதீனா சென்றதும் இஸ்லாத்தைப் பற்றியுண்டான விளக்கத்தை பரவலாக, மதீனா நகரெங்கும் வியாபித்துக் கூறினார்கள்.

இதன் விளைவாக, அடுத்த ஆண்டு ஹஜ் செய்ய வரும் போது புதிதாக ஏழு நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். முந்தைய ஆண்டு 5 நபர்கள், தற்போது 7 நபர்கள் என மொத்தம் 12 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
سفير الإسلام في المدينة
وبعد أن تمت البيعة وانتهى الموسم بعث النبي صلى الله عليه وسلم مع هؤلاء المبايعين أول سفير في يثرب؛ ليعلم المسلمين فيها شرائع الإسلام، ويفقههم في الدين، وليقوم بنشر الإسلام بين الذين لم يزالوا على الشرك، واختار لهذه السفارة شابًا من شباب الإسلام من السابقين الأولين، وهو مُصْعَب بن عُمَيْر العبدرى رضي الله عنه .

                       (நூல்: ரஹீக் அல் மக்தூம், பாடம் அகபதுல் ஊலா)

قال ابن اسحاق فلما انصرف عنه القوم بعث رسول الله صلى الله عليه وسلم معهم مصعب بن عمير بن هاشم بن عبد مناف بن عبد الدار بن قصي وأمره ان يقرئهم القرآن ويعلمهم الإسلام ويفقههم في الدين فكان يسمى المقرىء

                              (நூல்:தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:94)


இன்னும் இதை விட இஸ்லாத்தை மதீனாவிலே விரிவடையச் செய்ய விரும்பிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்}, முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு அனுப்பினார்கள்.

மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்த முஸ்அப் (ரலி) அவர்கள் அடுத்த முறை 60 முஸ்லிம்களை தயார் செய்து அனுப்பினார்கள்.

அதற்கடுத்த முறை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது. தமது தஃவா எனும் மார்க்க அழைப்பால் உஸைத் பின் ஹுளைர் (ரலி), ஸஅத் இப்னு முஆத் (ரலி) அஸ்அத் இப்னு ஸர்ராரா (ரலி) போன்ற உன்னதமான மேன்மக்களை வென்றெடுத்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது, மதீனாவின் எல்லையில் திரண்டு வந்து வரவேற்கும் இதயப்பூர்வமான ஒரு கூட்டத்தை உருவாக்கினார்கள்.

எத்தனையோ நபித்தோழர்கள் இருந்தும், உமர், உஸ்மான், அபூபக்ர் (ரலி-அன்ஹும்) போன்ற பெரிய நபித்தோழர்கள் இருந்தும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்அப் (ரலி) அவர்களை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதற்கான விடை இதோ….

அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கஅபாவின் நிழலில் அமர்ந்திருக்கும் போது, முஸ்அப் (ரலி) அவர்கள் அங்கே வருகை தருகின்றார்கள்.
முஸ்அப் (ரலி) அவர்கள் அணிந்திருந்த மேலாடை முரட்டு கம்பளியால் ஆனதாக இருந்தது. பல இடங்களில் கிழிந்து ஏராளமான இடங்களில் ஒட்டுப் போடப்பட்டு இருந்தது. ஓரிடத்தில் ஒட்டுப்போட துணியில்லாததால் தோலையோ, அல்லது இலை தளையையோ வைத்து ஒட்டுப்போட்டு இருந்தார்கள்.

அதைக்கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள், அப்படியே கண்ணீர் வடிக்கின்றார்கள்.

فدخلت على رسول الله صلي الله عليه وسلم وهو مضطجع على حصير، فجلست فأدنى عليه إزاره وليس عليه غيره، وإذا الحصير قد أثر في جنبه، فنظرت ببصري في خزانة رسول الله صلي الله عليه وسلم فإذا أنا بقبضة من شعير نحو الصاع، ومثلها قرظا في ناحية الغرفة، وإذا أفيق «3» معلق- قال- فابتدرت عيناي. قال: (ما يبكيك يا بن الخطاب)؟ قلت يا نبي الله، وما لي لا أبكى وهذا الحصير قد أثر في جنبك، وهذه خزانتك لا أرى فيها إلا ما أرى! وذاك قيصر وكسرى في الثمار والأنهار وأنت رسول الله صلي الله عليه وسلم
وصفوته، وهذه خزانتك! فقال: (يا ابن الخطاب ألا ترضى أن تكون لنا الآخرة ولهم الدنيا) قلت: بلى.

தொடர்ந்து அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைச் சந்திக்க உமர் (ரலி) வருகின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஈச்சமர நாரினால் வேயப்பட்ட கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார்கள்.

எழுந்து அமர்ந்த நபிகளாரின் முதுகில் ஈச்சமர நாரின் தடங்கலால் ஏற்பட்டிருந்த வடுவைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! கைஸர் கிஸ்ரா போன்ற மன்னர்களெல்லாம் பஞ்சு மெத்தைகளில் உறங்கிற போது, நீங்கள் அல்லாஹ்வின் தூதராயிற்றே! இவ்வாரெல்லாம் துன்பம் அனுபவிக்க வேண்டுமா? என்று கேட்டார்கள்.

அது கேட்ட மாநபி {ஸல்} அவர்கள்கத்தாபின் மகனே! இந்த நிலை கண்டு நீர்பொருந்திக் கொள்ள மாட்டீரா? அல்லாஹ் அவர்களுக்கு இந்த உலகத்தின் சுகபோகங்களையும், நமக்கு மறுமையின் அழியா இன்பங்களையுமல்லவா தருவதாக வாக்களித்திருக்கின்றான்.

ஆகவே, நான் மறுமையின் சுகபோகத்தையும் இன்பத்தையும் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளேன்என்று கூறினார்கள்.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள்ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நான் பொருந்திக்கொள்கின்றேன்என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் வடித்த கண்ணீர் அது அல்லாஹ்வின் தூதர் மேல் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாகும்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வடித்த கண்ணீரோ, “தாம் உயிரோடு வாழ்கிற போதே தாம் எத்தகைய வாழ்வைத் தேர்ந்தெடுத்தோமோ அந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்கிற ஒரு மனிதரை அல்லாஹ் நம் கண் முன்னால் நடமாட விட்டிருக்கின்றானே! எனும் நன்றிப் பெருக்கில் வெளியான ஆனந்தக் கண்ணீராகும்என அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள்.

(நூல்: தஃப்ஸீர் அல் குஷைரீ, தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:9, பக்கம்:483)

முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் விரும்பியவாறு வாழ்வதற்கு வசதிகள் இருந்தும் அவர்கள் இப்படியான ஓர் வாழ்வை தேர்ந்தெடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் மதீனாவிற்கான முதல் அழைப்பாளராக, நபி வாழ்கிற காலத்திலேயே நபி அல்லாத ஒருவர் அழைப்புப் பணி செய்யும் சிறப்பு வாய்ந்த முதல் நபராக தேர்ந்தெடுத்தார்கள்.

எதைத் தேர்ந்தெடுப்பது?

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِى سَعِيدُ بْنُ أَبِى سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ »  

நான்கு விஷயங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப் படுகின்றாள்; அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகிற்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுள்ள பெண்ணை தேர்ந்தெடுத்து (வாழ்வில் பெற்று) க்கொள்ளும்! உமக்கு நலம் உண்டாகட்டும்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                            (நூல்:புகாரி, ஹதீஸ் எண்: 5090.)

மார்க்கப் பற்றைத் தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்து விடுவதும், செல்வத்தையும் அழகையும் மட்டும் பார்த்து திருமணம் செய்வதும் ஓர் இறை விசுவாசியின் செயலன்று என நபிகளார் அறிவுறுத்துகின்றார்கள்.


عَنْ الشَّعْبِيِّ حَدَّثَنِي النُّعْمَانُ بْنُ بَشِيرٍ
أَنَّ أُمَّهُ بِنْتَ رَوَاحَةَ سَأَلَتْ أَبَاهُ بَعْضَ الْمَوْهِبَةِ مِنْ مَالِهِ لِابْنِهَا فَالْتَوَى بِهَا سَنَةً ثُمَّ بَدَا لَهُ فَقَالَتْ لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا وَهَبْتَ لِابْنِي فَأَخَذَ أَبِي بِيَدِي وَأَنَا يَوْمَئِذٍ غُلَامٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ هَذَا بِنْتَ رَوَاحَةَ أَعْجَبَهَا أَنْ أُشْهِدَكَ عَلَى الَّذِي وَهَبْتُ لِابْنِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا بَشِيرُ أَلَكَ وَلَدٌ سِوَى هَذَا قَالَ نَعَمْ فَقَالَ أَكُلَّهُمْ وَهَبْتَ لَهُ مِثْلَ هَذَا قَالَ لَا قَالَ فَلَا تُشْهِدْنِي إِذًا فَإِنِّي لَا أَشْهَدُ عَلَى جَوْرٍ

عَنْ الشَّعْبِيِّ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ
انْطَلَقَ بِي أَبِي يَحْمِلُنِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ كَذَا وَكَذَا مِنْ مَالِي فَقَالَ أَكُلَّ بَنِيكَ قَدْ نَحَلْتَ مِثْلَ مَا نَحَلْتَ النُّعْمَانَ قَالَ لَا قَالَ فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي ثُمَّ قَالَ أَيَسُرُّكَ أَنْ يَكُونُوا إِلَيْكَ فِي الْبِرِّ سَوَاءً قَالَ بَلَى قَالَ فَلَا إِذًا


 நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “என்னுடைய தந்தை (பஷீர் [ரலி]) என்னை அழைத்துக் கொண்டு அண்ணலாரின் சபைக்கு வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓர் அடிமை இருந்தான். அவனை நான் என்னுடைய இந்த மகனுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டேன்என்று கூறினார்கள். அதற்கு, அண்ணலார்நீர் உம்முடைய புதல்வர்கள் அனைவருக்கும் அன்பளிப்புச் செய்தீரா?” என்று கேட்டார்கள்.

இல்லைஎன்று என் தந்தை பதில் கூறினார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள்அந்த அடிமையைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில்… “அப்படியென்றால் நீர் என்னை இச்செயலுக்கு சாட்சியாக்காதீர்! நான் கொடுமையாளர்களுக்கு சாட்சியாக மாட்டேன்என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில்… “எல்லாப் புதல்வர்களும் உம்முடன் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டுமென நீர் விரும்புகின்றீரா?” என்று நபிகளார் கேட்டார்கள்.

அதற்கு, என் தந்தைஆம்! அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றேன்என்றார்கள்.

அப்படியானால் இப்படி பாரபட்சமாக நடந்து கொள்ளாதீர்என்று அண்ணல் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                      (நூல்: முஸ்லிம், பாடம், அல் ஹிபாத்)

இங்கே நபி {ஸல்} அவர்கள் பஷீர் (ரலி) அவர்களிடம் பஷீர் (ரலி) அவர்கள் அன்பளிப்புச் செய்ய தேர்ந்தெடுத்த விதம் தவறானது என்பதை சுட்டிக் காட்டினார்கள்.

நன்மை பயப்பதை தேர்வு செய்க!

 عن أبي أمامة الباهلي قال: " جاء ثعلبة بن حاطب الأنصاري إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، فقال: " ويحك يا ثعلبة، قليل تؤدي شكره خير من كثير لا تطيقه " . ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، قال: " أما لك في أسوة حسنة، والذي نفسي بيده لو أردت أن تسير الجبال معي ذهباً وفضة لسارت " ، ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، والذي بعثك بالحق لئن رزقني الله مالاً لأعطين كل ذي حق حقه، فقال رسول الله صلى الله عليه وسلم: " اللهم ارزق ثعلبة مالاً، الله ارزق ثعلبة مالاً " ، قال: فاتخذ غنماً فنمت كما ينمي الدود، فكان يصلي مع رسول الله صلى الله عليه وسلم الظهر والعصر، ويصلي في غنمه سائر الصلوات، ثم كثرت ونمت، فتقاعد أيضاً حتى صار لا يشهد إلا الجمعة، ثم كثرت ونمت فتقاعد أيضاً حتى كان لا يشهد جماعة ولا جماعة، وكان إذا كان يوم جمعة خرج يتلقى الناس يسألهم عن الأخبار فذكره رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال: " ما فعل ثعلبة " ؟ فقالوا: يا رسول الله، اتخذ ثعلبة غنماً لا يسعها واد، فقال رسول الله صلى الله عليه وسلم: " يا ويح ثعلبة، يا ويح ثعلبة، يا ويح ثعلبة " ، وأنزل الله آية الصدقة، فبعث رسول الله صلى الله عليه وسلم رجلاً من بني سليم، ورجلاً من بني جهينة، وكتب لهما أسنان الصدقة كيف يأخذان وقال لهما: " مرا بثعلبة بن حاطب، وبرجل من بني سليم، فخذا صدقاتهما " ، فخرجا حتى أتيا ثعلبة فسألاه الصدقة، وأقرآه كتاب رسول الله صلى الله عليه وسلم فقال: ما هذه إلا جزية: ما هذه إلا أخت الجزية: انطلقا حتى تفرغا ثم عودا إلي، فانطلقا وسمع بهما السلمي، فنظر إلى خيار أسنان إبله، فعزلها للصدقة، ثم استقبلهما بها، فلما رأياها قالا: ما هذا عليك، قال: خذاه فإن نفسي بذلك طيبة، فمرا على الناس وأخذا الصدقة، ثم رجعا إلى ثعلبة، فقال: أروني كتابكما، فقرأه فقال: ما هذه إلا جزية، ما هذه إلا أخت الجزية، اذهبا حتى أرى رأيي، فأقبلا فلما رآهما رسول الله صلى الله عليه وسلم قبل أن يكلماه قال: " يا ويح ثعلبة " ، ثم دعاء للسلمي بخير، وأخبراه بالذي صنع ثعلبة، فأنزل الله عز وجل: " ومنهم من عاهد الله لئن آتانا من فضله " إلى قوله " وبما كانوا يكذبون " وعند رسول الله صلى الله عليه وسلم رجل من أقارب ثعلبة سمع ذلك، فخرج حتى أتاه، فقال: ويحك يا ثعلبة، قد أنزل الله عز وجل فيك كذا وكذا فخرج ثعلبة حتى أتي النبي صلى الله عليه وسلم، فسأله أن يقبل منه صدقته فقال: " إن الله تبارك وتعالى منعني أن أقبل منك صدقتك " ، فجعل يحثي التراب على رأسه، فقال رسول الله صلى الله عليه وسلم " هذا عملك، قد أمرتك فلم تطعني " ، فلما أبى رسول الله صلى الله عليه وسلم أن يقبض صدقته رجع إلى منزله، وقبض رسول الله صلى الله عليه وسلم ولم يقبض منه شيئاً.
ثم أتى أبا بكر رضي الله عنه حين استخلف، فقال: قد علمت منزلتي من رسول الله صلى الله عليه وسلم وموضعي من الأنصار فاقبل صدقتي، فقال أبو بكر: لم يقبلها رسول الله منك، أنا أقبلها؟ فقبض أبو بكر رضي الله عنه ولم يقبلها.
فلما ولي عمر أتاه فقال: يا أمير المؤمنين، اقبل صدقتي، فقال: لم يقبلها منك رسول الله صلى الله عليه وسلم ولا أبو بكر، أنا أقبلها؟ فقبض ولم يقبلها.
ثم ولي عثمان رضي الله عنه فأتاه فسأله أن يقبل صدقته، فقال: لم يقبلها رسول الله ولا أبو بكر ولا عمر، أنا أقبلها؟ ولم يقبلها. وهلك ثعلبة في خلافة عثمان رضي الله عنه.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் ஸஅலபா இப்னு ஹாத்தப் என்கிற நபித்தோழர் வந்தார்.

அல்லாஹ்வின் தூதரே! செல்வச் செழிப்பான வாழ்விற்காக அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்என்றார்.

ஸஅலபாகுறைவாக வழங்கப்பட்டு அதற்காக நீர் நன்றி செலுத்துவது இருக்கிறதே, நிறைவான செல்வம் வழங்கப்பட்டு நன்றி செலுத்தாமல் வாழ்வதைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் முன்பு போலவே ஸஅலபா, அண்ணலாரிடம் வந்து கேட்டுக் கொண்டார்.

அதற்கு அண்ணலார், உனக்கு என் வாழ்க்கையில் அழகிய முன் மாதிரி இல்லையா? “என்னைப் பாரும்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணை! நான் விரும்பினால் இதோ தெரிகிற இந்த மலைகளை தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித்தருவான்!” (என்றாலும் எளிமையாக நான் வாழவில்லையா?) என்று கூறினார்கள்.

மூன்றாவது முறை நபிகளாரின் முன்வந்து நின்ற போது, அல்லாஹ்வின் தூதரே! எனக்காக துஆ செய்யுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்குகின்ற செல்வத்திலிருந்து நான் யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அவைகளை முறையாக முழுமையாக கொடுப்பேன்! இது உங்களை சத்தியத்தை கொண்டு அனுப்பிய அந்த இறைவனின் மீது ஆணைஎன்று முழங்கினார்.

அப்போது, அண்ணலார் அவருக்காக மூன்று முறை பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆ பரக்கத்தால் ஸஅலபாவின் (ஆடு, மாடு, ஒட்டகை) மந்தை பல்கிப் பெருகியது.

எப்போதும் பள்ளிவாசலிலேயே சுற்றித்திரிந்து கொண்டுஹமாமுல் மஸ்ஜித்பள்ளிப்புறாவாக இருந்த அவர் இப்போது லுஹர் மற்றும் அஸர் ஆகியவற்றை மட்டும் அண்ணலாருடன் தொழுது வந்தார்.

மீதமுள்ள தொழுகைகளை அவரின் மந்தையிலேயே தொழுது கொண்டிருந்தார்.

மந்தை இன்னும் பல்கிப் பெருகியது, ஜும்ஆவிற்கு மட்டும் வந்து கொண்டிருந்தார்.

மதீனாவில் அவரின் மந்தையை வைப்பதற்கு இடமே கிடைக்கவில்லை எனும் நிலை ஏற்படும் அளவிற்கு மந்தை பல்கிப் பெருகியது.

மதீனாவை விட்டு வெகு தூரமிருக்கின்ற ஓர் மலைப்பகுதியில் பிரம்மாண்டமான ஓர் இடத்தில் அவர் மந்தையை அமைத்தார்.

இப்போது அவரிடம் இருந்து ஜும்ஆவிற்கான நற்பேரும் அகன்று போனது.

ஒருமுறை நபிகளார் ஸஅலபா என்ன ஆனார்? என்று வினவியதற்கு, நபித்தோழர்கள் அவரின் நிலையை விளக்கிக் கூறினார்கள்.

அப்போது, அண்ணலார்யா வய்ஹ ஸஅலபாஸஅலபா விற்கு ஏற்பட்ட நாசமே! என்று மூன்று முறை கூறினார்கள்.

இந்நிலையில் அல்லாஹ் ஜகாத்தின் சட்டத்தை அருளினான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஸஅலபாவிடமும், ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த இன்னொரு நபித்தோழரிடமும் ஜகாத் வசூலிக்க இரண்டு நபர்களை, ஜகாத் பற்றிய விவரத்தோடும், என்னென்ன பொருளுக்கு என்னென்ன ஜகாத் வழங்க வேண்டும் என்கிற தகவலும் அடங்கிய ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்.

அவர்கள் நேராக ஸஅலபாவிடம் வந்து, கடிதத்தைக் கொடுத்து தம்மை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுப்பிவைத்ததின் நோக்கத்தைக் கூறினார்கள்.

ஜகாத்தின் விவரங்களைப் படித்த பிறகு, ஸஅலபா சொன்னார்: ”என்ன இது ஒரு முஸ்லிமிடம் ஜிஸ்யா வரி கேட்பது போலல்லவா இருக்கிறதுஎன்றார்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த இன்னொரு நபித்தோழரைச் சந்தித்து, கடிதத்தைக் கொடுத்து தங்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்ததின் நோக்கத்தைக் கூறினார்கள்.

ஜகாத்தின் விவரங்களைப் படித்த அவர் சற்று ஓய்வெடுங்கள். இதோ கணக்கெடுத்து விட்டு ஜகாத்தைத் தருகின்றேன்என்றார்கள்.

இதோ! என்னுடைய ஜகாத்! கொண்டு செல்லுங்கள். இப்போது தான் இதை வழங்கியதன் மூலம் என் மனம் நிம்மதி அடைவதை உணர்கின்றேன்என்றார்கள்.

அதைப் பெற்றுக் கொண்ட இருவரும், மீண்டும் ஸஅலபாவிடம் வந்தனர். முன்பு போலவே கூறிய அவர் ஜகாத் தர முடியாது என மறுத்து விட்டார்.

அங்கிருந்து விடை பெற்று இருவரும் மதீனா நோக்கி வந்தார்கள். நேராக மஸ்ஜிதுன் நபவீயில் வந்திறங்கினார்கள்.
அவர்கள் இருவரும் பேச்சு கொடுக்கும் முன்பாகவேயா வைஹ ஸஅலபாஎன்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

பின்பு நடைபெற்ற சம்பவங்களை அவ்விருவரும் நபிகளாரிடம் விவரித்தார்கள். ஸஅலபாவை சபித்த நபிகளார் {ஸல்} அவர்கள், ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த அந்த நல்ல நபித்தோழருக்கு துஆ செய்தார்கள்.

அப்போது அல்லாஹ் ஸஅலபாவின் இந்தச் செயலை இடித்துரைத்து வசனங்களை இறக்கியருளினான்.

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ (76) فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ (77)

அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்; “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம்; மேலும், நல்லவர்களாக வாழ்வோம்என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள்.

ஆகவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தினாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் நயவஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான்.”

                                                       (அல்குர்ஆன்:9:75-77)

நபிகளாரின் அவையிலிருந்த ஸஅலபாவின் உறவினர் ஒருவர் ஓடோடிச் சென்று இந்தச் செய்தியை ஸஅலபாவிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் பதறித்துடித்த ஸஅலபா தமக்கான ஜகாத்தை கணக்கிட்டு, எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்தார். அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.

அதற்கு, அண்ணல் {ஸல்} அவர்கள்அல்லாஹ் உம்மிடமிருந்து உம்முடைய ஜகாத்தைப்பெறுவதற்கு தடை செய்துவிட்டான்என்று கூறினார்கள்.

அங்கிருந்து விடை பெற்ற ஸஅலபா தம் தலை மீது மண்ணை அள்ளி தூவிய வாறு சென்றார்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்ஸஅலபாவே! இது தான் உம்முடைய செயலாகும். முன்னரே உமக்கு உணர்த்தினேன். ஆனால், நீர் என் சொல்லை ஏற்க மறுத்து விட்டீர்என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் காலத்தில் ஸஅலபாவிட மிருந்து ஜகாத் பெற மறுத்து விட்டார்கள்.

முறையே பின்னர் ஆட்சியாளர்களாக இருந்த அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் வாங்க மறுத்து விட்டார்கள்.

இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅலபா இறந்து போனார்.

(நூல்: உஸ்துல் ஃகாபா, பாகம்:1, பக்கம்:333, அல் இஸாபா, பாகம்:1, பக்கம்:930)

பத்ர் மற்றும் உஹதில் கலந்து கொண்டவர்கள்,எந்நேரமும் பள்ளிவாசலோடு தொடர்பில் இருந்தவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த விதம் தவறாக அமைந்ததால் இப்படியான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஏகோபித்து இவர்களின் விஷயத்தில் இத்தோடு நின்று கொள்வது சாலச் சிறந்தது எனவும், மேற்கொண்டு அவர்களின் இறுதி விவகாரம் அல்லாஹ்வோடு தொடர்புடையது என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றார்கள்.

வாழ்த்தும்..அங்கீகாரமும்…


فَبَشِّرْ عِبَادِ (17) الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ (18)

அல்லாஹ் கூறுகின்றான்:  “எனவே, (நபியே!) சொல்வதை ஆழ்ந்து கவனமாகக் கேட்டு, பின்பு அவற்றில் சிறந்த அம்சத்தை தேர்ந்தெடுத்து பின்பற்றுகின்ற என் அடியார்களுக்கு நீர் நற்செய்தியை அறிவித்து விடுவீராக! இத்தகையவர்களுக்குத் தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கின்றான். அவர்களே விவேகமான அறிவு படைத்தவர்களாவார்கள்.”  (அல்குர்ஆன்:39:17,18)

ஆகவே, ஓர் இறை நம்பிக்கயாளன் தன்னுடைய வாழ்வில் அவன் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது அவனுடைய ஈருலக வாழ்வின் வளங்களுக்கு எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.

தான் அணிகிற செருப்பில் இருந்து துவங்கி தன்னுடைய வாழ்வில் அங்கம் வகிக்கிற எந்த ஒன்றாக இருந்தாலும், அது நம்மை ஆட்சி செய்கிற ஆட்சியாளனாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், வாழ்க்கைத் துணையாக இருந்தாலும், மொழிகிற வார்த்தையாக இருந்தாலும் நல்லவற்றையே மிக மிக நல்லவர்களையே தேர்வு செய்ய வேண்டும்.

இன்றைய சரியான தேர்வே! நாளைய சிறந்த வாழ்விற்கான துவக்கம்!!

நல்லதையே தேர்ந்தெடுப்போம்! அல்லதை தவிர்த்திடுவோம்!!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லவற்றை தேர்ந்தெடுக்கின்ற நற்பேற்றை தந்தருள்வானாக!

         ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!

சங்கைக்குரிய உலமா நண்பர்களே! நிறைய உலமாக்கள் நம்மோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தினந்தோரும் சுபுஹுக்குப் பின்னர் 10 அல்லது 15 நிமிடங்கள் பேசுவதற்கு தோதுவாக தினந்தோரும் தங்களின் வலைப்பூவில் பதிவுகள் இட்டால் நன்றாக இருக்கும். உலமாக்களும் பயனடைவார்கள் என்று கூறினர்.

நிறையவே சிரமம் தான் என்றாலும் இன்ஷா அல்லாஹ்… தினந்தோரும் பதிவுகள் போடுவதற்கென்று தனியாக ஒரு ப்ளாக் Fabashirebaadh.blogspot.in எனும் பெயரில் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.

இன்ஷா அல்லாஹ்… மிக விரைவில் அதற்கான அறிவிப்பை நான் வெளியிடுவேன்.

நபிமார்களின் வாரிசுகளாகிய சங்கைமிகு உலமா பெருமக்களாகிய நீங்கள் எனக்காக அல்லாஹ்விடத்தில் கால நேரங்களில் பரக்கத் செய்து, கல்வியறிவையும் விசாலமான விளக்கத்தையும் தந்தருள துஆ செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இது குறித்த உங்களின் மேலான ஆலோசனைகளையும் உங்களின் கருத்துக்களையும் என்னுடைய இந்த baseerahmed184@gmail.com அல்லது risbreal143@gmail.com எனும் மெயில் ஐடிக்கு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

            என்றென்றும் உங்கள் துஆவின் ஆதரவில்….

மௌலவி, ஹாஃபிள். என்.எஸ்.எம். பஷீர் அஹ்மத் உஸ்மானி. மேலப்பாளையம். திருநெல்வேலி.






5 comments:

  1. ஆக்க பூர்வமான. கலத்திற்கு தோதுவான அற்புதமான அல்லாஹ் மென்மேலும் உங்களின் முயற்சியில் பரகத்செய்வானாக. ஆமீன்

    ReplyDelete
  2. Allah ungaludaya ilmil Barakath seyvanaga. Aameen

    ReplyDelete
  3. கவனம் தான் சுவனம் தரும் என்பதை நிரூபித்து விட்டீர்களே

    ReplyDelete
  4. جزاكم الله خيرًا..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மௌலானா நல்ல பல கருத்துக்களை தந்துள்ளீர்கள் அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete