Thursday, 18 September 2014

இப்படியும் வாழ முடியுமா?


                    இப்படியும் வாழ முடியுமா?

 

  
இவ்வுலகில் நாம் காணுகிற ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு விதமான ஆயுள் வரையறை இருக்கிறது.

பொதுப்படையாக, அதற்கு முன்னரோ அல்லது விதி விலக்காக அதற்கு பின்னரோ அந்த உயிரினத்தின் ஆயுள் நிறைவு பெறலாம்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வரையறுக்கப்பட்ட ஆயுள் என்ன என்பதை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் முடிவில்  சில தகவல்களை உலக சமுதாயத்தின் பார்வைக்கு தந்திருக்கின்றார்கள்.

மே என்று அழைக்கப்படக்கூடிய ஒரு வகை அதன் வாழ்க்கை ஒரு நாள் காலையில் ஆரம்பித்து அந்த நாளின் மாலையிலேயே முடிந்து விடுமாம். இது தான் உயிரினங்களிலேயே மிகவும் குறைந்த ஆயுள் கொண்ட உயிரினம்.

கிரியோசோட்எனும் புதர் வகையைச் சார்ந்த ஒரு தாவரம் அதன் ஆயுள் என்ன தெரியுமா? 11,700 பதினோராயிரத்து எழுநூறு ஆண்டுகளாம்.

சில பாக்டீரியாக்கள் லட்சம் ஆண்டுகளுக்குக் கூட உயிரோடு இருக்குமாம். சில பாக்டீரியாக்களை உறையச் செய்து அவற்றை உப்பில் ஆழமாக புதைத்து விட்டால் ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை கூட அவை உயிருடன் இருக்குமாம்.

பறவை இனங்களில் அண்டியங்கண்டோல் எனும் பறவை 75 ஆண்டுகளும், நீரில் வாழும் மீன் இனங்களில் ஒரு வகை மீன் இனம் 82 ஆண்டுகளும், ஊர்வனவற்றில் ஆமைகள் 152 ஆண்டுகளும் வாழும் வரையறை பெற்றவைகளாம்.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால், இந்த உயிரினங்கள் எல்லாம் ஏறக்குறைய அவற்றிற்கான ஆயுட்காலம் வரைக்கும் பெரும்பாலும் வாழ்ந்து விடுகின்றன.

ஆனால், மனித இனத்தின் ஆயுட்காலம் 60 முதல் 70 அல்லது 80 என்று வைத்துக் கொண்டாலும் மிகக் குறைவானவர்களே அந்த வரையறையை பூர்த்தி செய்கிறார்களாம்.

நிர்ணயித்த வரையறை வரும் முன்னரே இடையிலேயே பட்டுனு போய் விடுவது இந்த மனிதர்கள் தான் என்று கூறி ஆய்வறிக்கையை இறுதி செய்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனாலும், மனிதர்கள் முடிந்து விடுகிற இந்த உலக வாழ்விற்காக எத்துணை அரும்பாடு படுகின்றார்கள்.

லட்சியம், விருப்பம், கனவு, அந்தஸ்து, மரியாதை, புகழ், பணம், கௌரவம் என எத்துணை எதிர்பார்ப்புகளோடு வாழ்கிறார்கள்.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

அல்லாஹ் உலக வாழ்க்கை குறித்து விமர்சிக்கும் போதுஅவன் தான் மரணத்தையும், வாழ்வையும் ஏற்படுத்தினான். உங்களில் யார் மிகச் சிறப்பான செயல்களை செய்கிறார்கள் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு!”

வெறும் 34 ஆண்டுகள், அதிலும் சத்திய சன்மார்க்க நெறியோடு 16 ஆண்டுகளே வாழும் பாக்கியம் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கையை வாழ்ந்து சென்ற ஒரு மாமனிதரின் வாழ்க்கையை வாசித்துப் பார்த்தால்இப்படியும் வாழ முடியுமா?” என புருவத்தை உயர்த்தி, வியப்பின் விளிம்பிற்கே சென்று விடுவோம்.

வாருங்கள்! கொஞ்சம் வாசித்து விட்டு வருவோம்! வல்லோனாம் அல்லாஹ் அது போன்றதொரு வாழ்க்கையை வாழ எனக்கும் உங்களுக்கும் அருள் பாளிப்பானாக! ஆமீன்!

இளமையின் ஆரம்பப் பருவத்திலே வாழத்துவங்கிய அவர்கள் அதே இளமைப் பருவத்தின் மத்தியப் பகுதியில் இறையோனின் அழைப்பை ஏற்று வாழ்வைத் துறந்தார்கள்.

முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் திருக்கரத்தால் இஸ்லாத்தை ஏற்றார்கள். இரண்டாம் அகபாவில் பங்கு பெற்ற பாக்கிய சாலிகளில் ஒருவராகவும், பத்ர் மற்றும் உஹதில் களம் கண்ட போராளியாகவும் பரிணமித்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்களின் பல்வேறு சோபனங்களுக்கும், தனிப்பெரும் அன்புக்கும் சொந்தக்காரராக திகழ்ந்தார்கள்.

வாழும் காலத்தில் ஒரு இறைநம்பிக்கையாளன் எந்தெந்த துறைகளிலெல்லாம் உயர்வடைய விரும்புவானோ, அத்துணை துறைகளிலும் சிகரத்தின் உச்சிக்கே சென்று பேரொளியாய் ஜொலித்தார்கள்.

கல்வி கற்கும் மாணவராக, போதிக்கும் ஆசானாக, குடும்பத் தலைவராக, வாரி வளங்கும் கொடை வள்ளலாக, நீதி வழுவா ஆட்சியாளராக, சத்திய மார்க்கத்தின் அழைப்பாளராக, இறையோனின் உண்மை அடியாராக, இறைத்தூதரின் காதலராக, சோதனையின் போது பொறுமையாளராக, செல்வச் செழிப்பின் போது எளிமையானவராக வாழ்ந்து வரலாற்றில் நிகரில்லா ஓர் இடத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

நபிகளார் வாழும் காலத்திலும் சரி, நபிகளாரின் மறைவுக்குப் பின்னரும் சரி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தாலும் மிகவும் நேசிக்கப்பட்டார்கள். மதிக்கப்பட்டார்கள்.

அவர் தான்… ”வாழ்க்கையையே வழிபாடாக மாற்றியமைத்த வாஞ்சை மிகு நபித் தோழர் முஆத் இப்னு ஜபல் (ரலி)” அவர்கள்.

அழைப்புப் பணியாளராக….

மதீனாவில் இஸ்லாம் அடியெடுத்து வைத்திருந்த ஆரம்ப கால தருணம் அது. ஒரு சில இளைஞர்கள் ஒன்று கூடி மதீனாவை சிலை வணக்கமில்லா தூய பூமியாக ஆக்க வேண்டும் என தீர்மானமெடுத்தார்கள்.

தங்களின் தலைவராக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.

ஒரு நாள் இரவுப் பொழுதில் ஓரிடத்தில் ஒன்று கூடிய இந்த இளைஞர்கள் எங்கிருந்து இந்தப் பணியை ஆரம்பிப்பது என்று ஆலோசித்த போது, தங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த பனூ ஸலமா கோத்திரத்தைச் சார்ந்த முஆத் இப்னு அம்ர் (ரலி), முஅவ்வித் இப்னு அம்ர் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அம்ர் (ரலி) இம்மூவரின் தந்தையான அம்ர் இப்னுல் ஜமூஹ் (ரலி) அவர்களின் வீட்டில் இருந்து துவங்குவதாக முடிவெடுத்தார்கள்.

ஏனெனில், அவர் தான் பனூ ஸலமா கோத்திரத்தார்களின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். அவர் சன்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் ஒட்டு மொத்த கோத்திரமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் என்று இளைஞர்கள் குழு கருதினர்.

அதன் தொடக்கமாக காலையில் விடிந்ததும் சத்திய மார்க்கத்தின் அழைப்பாளர் முஸ்அப் (ரலி) அவர்களிடம் அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களை அவர்களின் மூன்று ஆண் மக்களும் அழைத்துச் சென்று இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுத்தனர்.

பேசியபடி முஸ்அப் (ரலி) அவர்களின் சபையில் மகன்கள் மூவரும் தந்தை அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களை ஆஜர்படுத்தினர்.

رَوَى ثَابِتٌ البُنَانِيُّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ:
قَدِمَ مُصْعَبُ بنُ عُمَيْرٍ المَدِيْنَةَ يُعَلِّمُ النَّاسَ، فَبَعَثَ إِلَيْهِ عَمْرُو بنُ الجَمُوْحِ: مَا هَذَا الَّذِي جِئْتُمُوْنَا؟
قَالُوا: إِنْ شِئْتَ جِئْنَاكَ، فَأَسْمَعْنَاكَ القُرْآنَ.
قَالَ: نَعَمْ.
فَقَرَأَ صَدْراً مِنْ سُوْرَةِ يُوْسُفَ، فَقَالَ عَمْرٌو: لست فاعلاً حتى أستشير مناة، يعني صنمه، فأنظر ما يقول؟   
وَدَخَلَ عَلَى مناة ، فَقَالَ: يَا مناة ! تَعْلَمُ -وَاللهِ- مَا يُرِيْدُ القَوْمُ غَيْرَكَ، فَهَلْ عِنْدَكَ مِنْ نَكِيْرٍ؟

 ثم قال  :يا مناة, لا ريب أنك قد علمت بأن هذا الداعية الذي وفد علينا من مكة لا يريد أحداً بسوء سواك، وأنه إنما جاء لينهانا عن عبادتك، وقد كرهت أن أبايعه على الرغم مما سمعت من جميل قوله، حتى أستشيرك، فأشر عليَّ، فلم يردّ عليه مناة بشيء،

 فقال: لعلك قد غضبت، وأنا لم أصنع شيئاً يغضبك بعد، ولكن لا بأس فسأتركك أياماً حتى يسكت عنك الغضب.


முஸ்அப் (ரலி) அவர்கள் ஏகத்துவ அழைப்பை அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களிடம் எடுத்தியம்பினார்கள். பின்பு, அம்ர் அவர்களிடம் சூரா யூஸுஃபின் ஒரு சில வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

அதைக் கேட்டதும் அம்ர் அவர்கள்நான் இது விஷயமாக எங்கள் குல தெய்வம் (பனூ ஸலமா கோத்திரத்தார் வழிபடும் சிலை) மனாத்திடம் ஆலோசனை செய்து விட்டுத் தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்என்று கூறி அங்கிருந்து விடை பெற்றார்.

நேராக, மனாத்தின் முன் வந்து நின்ற அம்ர் அவர்கள்மக்கள் உன் அல்லாத ஒருவனை கடவுளாக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நீ அறிந்திருப்பாய் என நான் கருதுகின்றேன்.

அது சம்பந்தமாக உன் அபிப்பிராயமென்ன? அது தவறென்று நீ மறுப்பேதும் கூற விரும்புகின்றாயா? உன்னை வணங்குவது தவறென்கிறார் மக்காவில் இருந்து வந்த அவர். அது சம்பந்தமாகத் தான் உன்னிடம் ஆலோசனைக் கேட்க வந்திருக்கின்றேன் என்று மனாத் சிலை முன்பு நின்று பேசினார்.

எங்கே கல் பேசியிருக்கின்றது? சில நிமிட மௌனத்திற்குப் பின் அம்ரே தொடர்ந்தார். “எனக்குத் தெரியும்! இந்த விஷயங்களால் நீ சினமுற்று இருப்பாய் என்று.. மேலும், மேலும் உன்னைச் சீண்டிப்பார்க்க எனக்கு விருப்பமில்லை. கொஞ்ச நாள் நீ நிம்மதியாக ஓய்வெடு! இன்னொரு நாள் இது குறித்து நான் கேட்டுக் கொள்கிறேன்என்றார்.

فكان معاذ بن عمرو بن الجموح بعد إسلامه ومعاذ بن جبل يدخلان ليلاً إلى الدار فيأخذان هذا الصنم ويلقيانه في مكان مخلفاتهم منكساً على رأسه, فلما يصبح عمرو يذهب فيأتي به ويغسله ويعطره, وهو يتوعد من فعل به ذلك, وكل ليلة يحدث هذا المشهد. وذات يوم وضع عمرو سيفاً في رقبة صنمه الذي يعبده وقال له:((لأني لا أعلم من يفعل بك هذا, فإن كنت تستطيع الدفاع عن نفسك فهذا السيف معك فافعل)). وبالليل جاء الفتيان فأخذا السيف من عنقه ثم أحضرا كلباً ميتاً فقرنوه به بحبل وألقوه في بئر من الآبار فيها يقضي الناس حاجتهم حيث لم يكونوا قد اتخذ الناس مكانا لقضاء الحاجة في بيوتهم. وفي الصباح قام عمرو يبحث عنه قلما وجده كذلك, علم أنه لا نفع

وقال  : واللـه لو كنت إلها لم لمثل
أنـت وكلب وسط بئر في قرن
أف لمثــواك إلهـا مسـتدن   
فالآن فتشناك عن شر الغبـن




இது தான் நல்ல சந்தர்ப்பம் எனக் கருதிய இளைஞர் குழு அன்றிரவே அங்கிருந்து மனாத்தை முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் தலைமையில் சென்று கடத்தி வந்து பனூ ஸலமாவினரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஓர் பாழடைந்த கிணற்றுப் பகுதியில் வீசியெறிந்தனர்.

காலையில் மனாத்தை காணாது அதிர்ச்சியடைந்த அம்ர் ஊர் முழுக்க தேடி அலைந்து ஒருவாராக அங்கிருந்து எடுத்து வந்து குளிப்பாட்டி, உயர் ரக அத்தர் பூசி மீண்டும் அதே இடத்தில் மனாத்தை வைத்தார்.

இரண்டாம் நாளும் முன்பு போலவே கடத்திச் சென்று இப்போது வேறு ஒரு குப்பை மேட்டில் வீசினர்.

மறு நாளும் அம்ர் தேடி எடுத்து வந்து குளிப்பாட்டி, அத்தர் பூசி அதே இடத்தில் மனாத்தை வைத்து விட்டு அருகே ஒரு வாளை நட்டு வைத்துசத்தியமிட்டுச் சொல்கிறேன்! யார் இதை செய்கிறார் என்று தெரியவில்லை. இனி உன்னை நீயே பாதுகாத்துக் கொள். உன்னைத் தூக்கிச் செல்ல யாராவது வந்தால் இந்த வாளைக் கொண்டு உன்னை தற்காத்துக் கொள்!” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

மூன்றாம் நாள் இரவும் சிலையை எடுத்துச் சென்ற இளைஞர்கள் மனாத்தை ஒரு செத்த நாயின் கழுத்தில் கட்டி வீட்டு, வாளை வேறொரு குழியில் போட்டு விட்டனர்.

மூன்றாம் நாளும் அதைத் தேடிச் சென்ற அவர் மனாத் கிடந்த கோலத்தைப் பார்த்து விட்டு  “நீ மட்டும் உண்மையான கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் குப்பை மேட்டில் வந்து கிடக்கமாட்டாய்என்று சொல்லி விட்டு அங்கிருந்து சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை என்ற உணர்வோடு திரும்பினார்கள்.

  ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா, உஸ்துல் காபா, அல் இஸ்தீஆப் )

ஆம்! அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு அம்ர் இப்னுல் ஜமூஹ் (ரலி) அவர்கள் அடைந்த சிறப்பு இருக்கிறதே அது ஒரு தனி வரலாறு இன்ஷா அல்லாஹ் இன்னொரு உரையில் அதைக் காண்போம்.
ஓர் அழைப்பாளராக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களும், இளைஞர்களும்அம்ர் அவர்களுக்கு எதை புரிய வைக்க வேண்டுமென விரும்பினார்களோ அதில் வெற்றியும் கண்டார்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் செய்த முதல் நற்பணியே இஸ்லாமிய அழைப்புப் பணி தான்

சில மாதங்களுக்குப் பின் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். அண்ணலாரின் வருகைக்குப் பின் முஆத் (ரலி) அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது.

கல்வி பயிலும் மாணவராக

அண்ணல் நபிகளாரின் அருகாமையில் அமர்ந்து குர்ஆன் வசனங்களை, சட்ட திட்டங்களை, உபதேசங்களை மிகவும் ஆர்வத்தோடு கேட்டு, அதை அங்கு வந்து கேட்க முடியாமல் போன மற்ற நபித்தோழர்களுக்கும் சொல்லும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தார்கள்.

அண்ணலாரின் சபையில் அமர்ந்து ஆர்வத்தோடு செவி மடுக்கும் அவரின் கல்வித்தாகத்தை விளங்கிய நபி {ஸல்} அவர்கள் சபைக்குள் நுழையும் போதெல்லாம் முஆத் இருக்கின்றாரா? என்று கேட்பார்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களின் இந்த ஓயாத கல்வித் தாகத்தால் ஒரு முறை மாநபி {ஸல்} அவர்கள் தோழர்களை நோக்கி இப்படிக் கூறினார்கள்.

قَالَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: (خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: مِنِ ابْنِ مَسْعُوْدٍ، وَأُبِيٍّ، وَمُعَاذِ بنِ جَبَلٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ)

 ”குர்ஆனின் அறிவை நீங்கள் நான்கு நபர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்! 1. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல், ஸாலிம் மவ்லா அபீ ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹும்)”

இன்னொரு சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார்கள்.

عَنْ خَالِدٍ، وَعَاصِمٍ، عَنْ أَبِي قِلاَبَةَ:
عَنْ أَنَسٍ مَرْفُوْعاً: (أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي: أَبُو بَكْرٍ، وَأَشَدُّهَا فِي دِيْنِ اللهِ: عُمَرُ، وَأَصْدَقُهَا حَيَاءً: عُثْمَانُ، وَأَعْلَمُهُم بِالحَلاَلِ وَالحَرَامِ: مُعَاذٌ، وَأَفْرَضُهُم: زَيْدٌ، وَلِكُلِّ أُمَّةٍ أَمِيْنٌ، وَأَمِيْنُ هَذِهِ الأُمَّةِ: أَبُو عُبَيْدَةَ

என் உம்மத்தில் மிகவும் இரக்கமுடையவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆவார்கள். தீனுடைய காரியங்களில் மிகவும் ரோஷமுடையவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்கள். உண்மை பேசுவதிலும், வெட்க உணர்விலும் மேலோங்கியவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆவார்கள். ஹலால், ஹராமை மிகவும் விளங்கியவர் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

போதிக்கும் ஆசானாக

ابْنُ سَعْدٍ: أَنْبَأَنَا مُحَمَّدُ بنُ عُمَرَ، حَدَّثَنَا إِسْحَاقُ بنُ يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، قَالَ:
لَمَّا فَتَحَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- مَكَّةَ، اسْتَخْلَفَ عَلَيْهَا عَتَّابَ بنَ أَسِيْدٍ يُصَلِّي بِهِم، وَخَلَّفَ مُعَاذاً يُقْرِئُهُم وَيُفَقِّهُهُم

மக்கா வெற்றிக்குப் பிறகு மக்காவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி இணைந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்காவாசிகளுக்கு கவர்னராக அத்தாப் இப்னு உஸைத் (ரலி) அவர்களையும், குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கும், சன்மார்க்க சட்டதிட்டங்களை போதிப்பதற்கும் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை ஆசானாகவும் நியமித்தார்கள்”.

وروى سهل بن أبي حثمة، عن أبيه قال: كان الذين يفتون على عهد رسول الله صلى الله عليه وسلم من المهاجرين: عمر، وعثمان، وعلي. وثلاثة من الأنصار: أُبي بن كعب، ومعاذ بن جبل، وزيد بن ثابت.


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழும் காலத்திலேயே மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வளித்திடும் ஆற்றல் மிக்க ஆறு நபித்தோழர்கள் உண்டு. முஹாஜிர்களில் மூன்று பேர். 1.உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), அன்ஸார்களில் மூன்று பேர். 1.உபை இப்னு கஅப் (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி), ஜைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் ஆவார்கள்.

                                               ( நூல்: உஸ்துல் ஃகாபா )

فهذا عائذ الله بن عبدالله يحدثنا انه دخل المسجد يوما مع أصحاب الرسول صلى الله عليه وسلم في أول خلافة عمر..قال:
" فجلست مجلسا فيه بضع وثلاثون، كلهم يذكرون حديثا عن رسول الله صلى الله عليه وسلم، وفي الحلقة شاب شديد الأدمة، حلو المنطق، وضيء، وهو أشبّ القوم سنا، فاذا اشتبه عليهم من الحديث شيء ردّوه اليه فأفتاهم، ولا يحدثهم الا حين يسألونه، ولما قضي مجلسهم دنوت منه وسالته: من أنت يا عبد الله؟ قال: أنا معاذ بن جبل".


ஆயிதல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) எனும் தாபியீ கூறுகின்றார்கள்:  

நான் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் மஸ்ஜிதுன் நபவீயிற்குச் சென்றேன். அங்கே முப்பதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் ஒரு இளம் வயது வாலிபரிடம் நபிகளாரின் ஹதீஸ் குறித்தும், சன் மார்க்க சட்டதிட்டங்கள் குறித்தும் வினா எழுப்பிக் கொண்டிருக்க, சற்றும் அசராமல் ஒவ்வொன்றுக்கும் மிக அழகிய முறையிலே பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

உடனடியாக அந்த சபையில் என்னையும் ஒரு மாணவராக நான் இணைத்துக் கொண்டேன். அவர்கள் அளிக்கும் பதிலில் ஒளியும், இனிமையும் இழையோடியதை நான் அறிந்து கொண்டேன்.

நீண்ட நேரத்திற்குப் பின் சபை முடிந்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது அவர் அருகே சென்று அல்லாஹ்வின் அடியாரே நீங்கள் யார்? என்று வினவினேன். அதற்கு அவர்கள் நான் தான் முஆத் இப்னு ஜபல் (ரலி) என்று அடக்கத்தோடும் பணிவோடும் பதில் கூறினார்கள்.

وهذا أبو مسلم الخولاني يقول:
" دخلت مسجد حمص فاذا جماعة من الكهول يتوسطهم شاب برّاق الثنايا، صامت لا يتكلم. فاذا امترى القوم في شيء توجهوا اليه يسألونه. فقلت لجليس لي: من هذا..؟ قال: معاذ بن جبل.. فوقع في نفسي حبه".

அபூ மூஸ்லிம் ஃகவ்லானி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் ஹிம்ஸ் நகரின் ஒரு பள்ளிவாயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு பெருங்கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களின் நடுவே ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.

அவரை நான் உற்று நோக்கினேன். அவரது கண்களும், பற்களும் வெண்முத்துக்கள் போல் பளிச்சிட்டன. ஆனால், அவரோ மிகவும் அமைதியாகவும், அடக்கமாகவும் அமர்ந்திருந்தார்.

அங்கே கூடியிருந்தவர்கள் அவ்வப்போது தங்களுக்கான மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று கொண்டிருந்தனர். அப்போது நான் இவர் யார்? என அங்கிருந்தோரிடம் வினவ, அவர்கள் இவர் தான் முஆத் இப்னு ஜபல் (ரலி) பதில் கூறினார்கள்.

அன்றிலிருந்து நான் அவர்களை நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.

وهذا شهر بن حوشب يقول:
" كان أصحاب رسول الله صلى الله عليه وسلم اذا تحدثوا وفيهم معاذ بن جبل، نظروا اليه هيبة له"…
ஷஹ்ர் இப்னு ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபித்தோழர்கள் ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கும் அவைக்கு முஆத் (ரலி) வருகை புரிந்தார்கள் என்றால் முஆத் (ரலி) அவர்களை மரியாதை கலந்த பார்வையோடு அணுகுவார்கள்.

                                  ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.)

அரசியல் ஆலோசகராக…..

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு ஏற்படுகிற முக்கியமான பிரச்சனைகளின் போது பின் வரும் ஏழு நபித்தோழர்களிடம் ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டார்கள்.

அவர்கள் 1. உமர் (ரலி), 2. உஸ்மான் (ரலி), 3. அலீ (ரலி), 4. உபை இப்னு கஅப் (ரலி), 5. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), 6. ஜைத் இப்னு ஸாபித் (ரலி), 7. முஆத் இப்னு ஜபல் (ரலி) ஆகியோர் ஆவார்கள்.

ولقد كان أمير المؤمنين عمر رضي الله عنه يستثيره كثيرا..
وكان يقول في بض المواطن التي يستعين بها برأي معاذ وفقهه:
" لولا معاذ بن جبل لهلك عمر "..

மேலும், உமர் (ரலி) அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான விவகாரங்களில் முஆத் (ரலி) அவர்களின் கருத்துக்கே முக்கியத்துவம் வழங்குவார்கள்.

சில சந்தர்ப்பங்களில் முஆத் (ரலி) அவர்களின் உயரிய ஆலோசனையின் அடிப்படையில் பிரச்சனைக்கு தீர்வு அமைந்து விட்டால் உமர் (ரலி) இப்படிக் கூறுவார்களாம்: “முஆத் மட்டும் இல்லை என்றால் உமர் அழிந்து போயிருப்பார்என்று

حَدَّثَنِي أَشْيَاخٌ مِنَّا أَنَّ رَجُلاً غَابَ عَنِ امْرَأَتِهِ سَنَتَيْنِ، فَجَاءَ وَهِيَ حُبْلَى، فَأَتَى عُمَرَ، فَهَمَّ بِرَجْمِهَا.
فَقَالَ لَهُ مُعَاذٌ: إِنْ يَكُ لَكَ عَلَيْهَا سَبِيْلٌ، فَلَيْسَ لَكَ عَلَى مَا فِي بَطْنِهَا سَبِيْلٌ.
فَتَرَكَهَا، فَوَضَعَتْ غُلاَماً بَانَ أَنَّهُ يُشْبِهُ أَبَاهُ، قَدْ خَرَجَتْ ثَنِيَّتَاهُ.
فَقَالَ الرَّجُلُ: هَذَا ابْنِي.
فَقَالَ عُمَرُ: عَجِزَتِ النِّسَاءُ أَنْ يَلِدْنَ مِثْلَ مُعَاذٍ، لَوْلاَ مُعَاذٌ لَهَلَكَ عُمَرُ (2) . (2) نسبه صاحب الكنز (37499) إلى عبد الرزاق، وابن أبي شيبة والبيهقي في " الدلائل ".

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒருவர் வந்து, அமீருல் முஃமினீன் அவர்களே! நான் வெளியூர் சென்றிருந்தேன். இரண்டு ஆண்டுகளாக ஊரில் இல்லை. வந்து பார்த்தால் என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்.

காரணம் கேட்டால் நான் தான் என்கிறாள். விசாரித்து தீர்வைச் சொல்லுங்கள்என்று முறையிட்டார். உமர் அவர்கள் ஆலோசனை செய்து ரஜ்ம் கல்லெறி தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்தார்கள்.

இதைக் கேள்வி பட்ட முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், அவள் வேண்டுமானால் தவறு செய்திருக்கலாம்; வயிற்றில் இருக்கும் சிசு ஒரு தவறும் செய்யாதது. ஆகவே, குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார்கள்.

அவகாசம் வழங்கப்பட்டது. ஒரு நாள் முறையிட்ட அந்த நபர் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு ஓடோடி வந்தார். வந்தவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! கஅபாவின் இறைவனான அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! பிறந்த அந்த குழந்தை எனக்குரியது தான்! அது என் சாயலிலேயே இருக்கின்றது! என்றார்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் “முஆத் மட்டும் இல்லை என்றால் இந்த உமர் அழிந்து போயிருப்பார்! என்றார்கள்.


                      ( நூல்: உஸ்துல் ஃகாபா, தஃப்ஸீர் அல் குர்துபீ. )

தலை சிறந்த ஆட்சியாளராக...

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை நபி {ஸல்} அவர்கள், யமனுக்கு ஆளுநராக நியமித்தார்கள்.

நபி {ஸல்} அவர்களின் கட்டளைப்படி முஆத் (ரலி) அவர்கள், செல்வந்தர்களிடமிருந்து முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் முறையாக பகிர்ந்தளித்தார்கள்.

இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் கணிசமாக ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடியது.

உமர் (ரலி) ஆட்சியின் போது, முஆத் (ரலி) அவர்கள் யமனில் இருந்து மூன்றில் ஒரு பங்கை மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், காரணம் கேட்டதற்கு முஆத் (ரலி) அவர்கள் ஏழைகள் கிடைக்க வில்லை என்று பதில் கூறினார்கள்.

அடுத்த ஆண்டு யமனில் இருந்து ஜகாத்தாக வசூலித்ததில் பாதி தொகையையும், அதற்கு அடுத்த ஆண்டு முழுத்தொகையையும் அனுப்பி வைத்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.

உமர் (ரலி) அவர்கள் காரணம் கேட்டதற்கு, யமன் தேசத்தில் ஒரு ஏழை கூட இல்லை” என்று பதில் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அந்த பொருளாதாரத்தைக் கொண்டு இஸ்லாம் இயம்பும் இன்ன பிற வழிகளில் அதைச் செலவிட்டார்கள்.

                                                   ( நூல்: அல் அம்வால் )

வாரி வழங்கும் வள்ளலாக...


முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களுக்கு வல்ல அல்லாஹ் மகத்தான பல நற்பேறுகளை வழங்கியிருந்தான். அவர்களுக்கு வழங்கப்பட்ட பேறுகள் குறித்து வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் வனப்பாகவே சான்றுரைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் யமனுக்கு ஆளுநராக, இஸ்லாமிய அழைப்பாளராகச் சென்ற அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் மதீனாவிற்கு வந்திருந்தார்கள்.

قَدِمَ مُعَاذٌ مِنَ اليَمَنِ بِرَقِيْقٍ، فَلَقِيَ أَبُو بَكْرٍ بِمَكَّةَ، فَقَالَ: مَا هَؤُلاَءِ؟
قَالَ: أُهْدُوا لِي.
فَدَفَعَهُمْ أَبُو بَكْرٍ إِلَيْهِ، ثُمَّ أَصْبَحَ، فَرَآهُمْ يُصَلُّوْنَ.
قَالَ: لِمَنْ تُصَلُّوْنَ؟
قَالُوا: لِلِّهِ.
قَالَ: فَأَنْتُم لِلِّهِ (4) .
(4) أخرجه ابن سعد 3 / 2 / 122، وأبو نعيم 1 / 232 في " الحلية "، مرسلا ووصله الحاكم 3 / 2 / 272 من طريق: الأعمش، عن أبي وائل، عن عبد الله وصححه ووافقه الذهبي.

ஒரு முறை ஹஜ் செய்வதற்காக முஆத் (ரலி) அவர்கள் கஅபாவிற்கு வருகை புரிந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் ஹஜ் செய்ய வந்திருந்தார்கள். முஆத் (ரலி) அவர்களைச் சுற்றி ஏராளமான அடிமைகள் நின்று கொண்டிருந்ததைக் கண்ட ஸித்தீக் (ரலி) அவர்கள்இவர்கள் எல்லாம் யார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு முஆத் (ரலி) அவர்கள்அபூபக்ர் அவர்களே! உங்கள் முன் நிற்கின்ற இந்த அடிமைகள் என்னுடைய அயராத உழைப்பினால் எனக்கு கிடைத்த வெகுமதிகள் ஆகும்என்று கூறினார்கள்.

அது கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள்முஆத் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற அருட்பேறுகள் குறித்து நான் மிகவும் அகமகிழ்வு கொள்கின்றேன்என்று கூறினார்கள்.

உடனே முஆத் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அந்த அடிமைகளை அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள்.

மறுநாள், இரவுத் தொழுகைக்காக எழுந்த அபூபக்ர் (ரலி) அவர்கள், அங்கே கண்ட காட்சியைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

ஆம்! அங்கே அந்த அடிமைகள் தஹஜ்ஜத் தொழுது கொண்டிருந்தனர். தொழுது முடித்ததும் அவர்களின் அருகே வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் “நீங்கள் யாருக்காக தொழுதீர்கள்! என்று கேட்டார்கள். அதற்கு அந்த அடிமைகள் நாங்கள் அல்லாஹ்விற்காகத் தொழுதோம்!” என்றார்கள்.

அப்படியானால் நான் உங்கள் அனைவரையும் அல்லாஹ்விற்காக விடுதலை செய்கிறேன்” என்று கூறி விடுதலை செய்தார்கள்.


فَقَدِمَ عَلَى أَبِي بَكْرٍ، فَقَالَ لَهُ عُمَرُ:
هَلْ لَكَ يَا مُعَاذُ أَنْ تُطِيْعَنِي؟ تَدْفَعُ هَذَا المَالَ إِلَى أَبِي بَكْرٍ، فَإِنْ أَعْطَاكَهُ فَاقْبَلْهُ.
فَقَالَ: لاَ أَدْفَعُهُ إِلَيْهِ، وَإِنَّمَا بَعَثَنِي نَبِيُّ اللهِ لِيَجْبُرَنِي.
فَانْطَلَقَ عُمَرُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: خُذْ مِنْهُ، وَدَعْ لَهُ.
قَالَ: مَا كُنْتُ لأَفْعَلَ، وَإِنَّمَا بَعَثَهُ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- لِيَجْبُرَهُ.
فَلَمَّا أَصْبَحَ مُعَاذٌ، انْطَلَقَ إِلَى عُمَرَ، فَقَالَ:
مَا أَرَانِي إِلاَّ فَاعِلَ الَّذِي قُلْتَ، لَقَدْ رَأَيْتُنِي البَارِحَةَ - أَظُنُّهُ قَالَ - أُجَرُّ إِلَى النَّارِ، وَأَنْتَ آخِذٌ بِحُجْزَتِي.
فَانْطَلَقَ إِلَى أَبِي بَكْرٍ بِكُلِّ مَا جَاءَ بِهِ، حَتَّى جَاءهُ بِسَوْطِهِ.

وفي خلافة أبي بكر رجع معاذ من اليمن، وكان عمر قد علم أن معاذا أثرى.. فاقترح على الخليفة أبي بكر أن يشاطره ثروته وماله..!
ولم ينتظر عمر، بل نهض مسرعا الى دار معاذ وألقى عليه مقالته..
كان معاذ ظاهر الكف، طاهر الذمة، ولئن كان قد أثري، فانه لم يكتسب اثما، ولم يقترف شبهة، ومن ثم فقد رفض عرض عمر، وناقشه رأيه..
وتركه عمر وانصرف..
وفي الغداة، كان معاذ يطوي الأرض حثيثا شطر دار عمر..
ولا يكاد يلقاه.. حتى يعنقه ودموعه تسبق كلماته وتقول:
" لقد رأيت الليلة في منامي أني أخوض حومة ماء، أخشى على نفسي الغرق.. حتى جئت وخلصتني يا عمر"..
وذهبا معا الى أبي بكر.. وطلب اليه معاذ أن يشاطره ماله، فقال أبو بكر:" لا آخذ منك شيئا"..
فنظر عمر الى معاذ وقال:" الآن حلّ وطاب"..
ما كان أبو بكر الورع ليترك لمعاذ درهما واحدا، لو علم أنه أخذه بغير حق..
وما كان عمر متجنيا على معاذ بتهمة أو ظن..

மதீனாவில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்ட போது, ஒரு மாலைப் பொழுதில் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.

பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒரு யோசனை எம்மிடம் உண்டு. வேண்டுமானால் முஆத் (ரலி) அவர்களை அழைத்து அவர்கள் யமனில் சம்பாதித்த அவரின் தேவைக்குப் போக மீதமிருக்கிற அனைத்து சொத்துக்களையும் அரசுக்கு ஒப்படைக்கு மாறு சொல்லுங்கள்.

நீங்கள் ஆட்சியாளர் தானே! அவர் தந்தார் என்றால் இந்த நிலை கொஞ்சம் மாறிவிடும் அல்லவா?” என்று கூறினார்கள்.

அது கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள்அவர்களாக விரும்பி எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்! மாறாக, அவரிடம் இருந்து எதையும் கட்டாயப்படுத்தி நான் பெற்றுக் கொள்ளமாட்டேன்.” என்றும், மேலும், முஆத் அவர்களை நபி {ஸல்} அவர்கள் யமனுக்கு அனுப்பும் போதே பொருளீட்டுவதற்கும் சம்பாத்யம் செய்வதற்கும் அனுமதி அளித்திருந்தார்கள்என்று கூறி மறுத்து விட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்ததும், முஆத் (ரலி) அவர்களை நேரிடையாகச் சந்தித்து மதீனாவின் நிலையை எடுத்துக் கூறி தமது அபிப்பிராயத்தைக் கூறினார்கள்.

முஆத் (ரலி) அவர்கள் மறுத்து விடுகின்றார்கள். முஆத் (ரலி) மறுத்ததும் அங்கிருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயத்தை நிராகரித்த முஆத் (ரலி) அவர்கள் நீண்ட நேரம் யோசித்தார்கள். சட்டென அவருக்கு பழைய கனவொன்று மின்னல் கீற்று போல் பளிச்சிட்டு மறைந்தது. மீண்டும் அதிகம் உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயம் குறித்து சிந்தித்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.

ஒருவாராக உமர் (ரலி) அவர்களின் வீட்டை நோக்கி நடந்தார்கள். அந்த நடையில் அவர்கள் எடுத்த முடிவின் வேகம் தென்பட்டது.

வீட்டின் கதவை தட்டி உமர் (ரலி) அவர்களை வெளியே அழைத்த முஆத் (ரலி) அவர்கள்உமர் அவர்களே! நான் உங்களுடைய ஆலோசனையையும், அபிப்பிராயத்தையும் ஏற்கின்றேன்

என்னுடைய இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று என்னிடம் நீங்கள் அவசியம் கேட்கத்தான் வேண்டும்?” என்றார் முஆத் (ரலி) அவர்கள்.

உம்முடைய மன மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று உமர் (ரலி) அவர்கள் வினவியதற்கு

ஒரு முறை நான் கனவொன்று கண்டேன். அதில் ஆழமான நீர்ச்சுழலில் நான் சிக்கிக்கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கப்போகிறேன் எனும் அச்சம் மனதை ஆட்கொண்ட போது, நீங்கள் தான் வந்து கரம் கொடுத்து என்னைக் காப்பாற்றினீர்கள்என்று முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பின்னர், உமர் அவர்களையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று தமது பொருளாதாரம் முழுவதையும் கொடுத்து விட்டு, அமீருல் முஃமினீன் அவர்களே! இதோ இங்கிருப்பவைகள் மட்டும் தான் நான் சம்பாதித்தது! அதை நான் அல்லாஹ்விற்காக தந்துவிட்டேன்என்று கூறி சென்று விட்டார்கள்.

(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:139, ஸியரு அஃலா மின் நுபலா, பாகம்:1)

இறையோனின் உண்மை அடியாராக

உமர் (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஃபலஸ்தீனிய மக்களுக்கு தீனமுதம் பருகச் செய்யும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த தருணம் அது

أَنَّ أَبَا عُبَيْدَةَ لَمَّا أُصِيْبَ، اسْتَخْلَفَ مُعَاذَ بنَ جَبَلٍ، يَعْنِي فِي طَاعُوْنِ عَمَوَاس، اشْتَدَّ الوَجَعُ، فَصَرَخَ النَّاسُ إِلَى مُعَاذٍ: ادْعُ اللهَ أَنْ يَرْفَعَ عَنَّا هَذَا الرِّجْزَ.
قَالَ: إِنَّهُ لَيْسَ بِرِجْزٍ، وَلَكِنْ دَعْوَةُ نَبِيِّكُم، وَمَوْتُ الصَّالِحِيْنَ قَبْلَكُم، وَشَهَادَةٌ يَخُصُّ اللهُ بِهَا مَنْ يَشَاءُ مِنْكُم.

அமவாஸ் எனும் காலாரா நோய் பரவியிருந்த காலமும் கூட. ஃபலஸ்தீனின் கவர்னராக இருந்த அபூ உபைதா (ரலி) அவர்கள் காலராவின் கடுமையான தாக்குதலால் மரணத்தின் விளிம்பிற்கே வந்து விட்டிருந்த நேரத்தில், முஆத் (ரலி) அவர்களை அழைத்து தமக்குப் பின் ஃபலஸ்தீனிய மக்களுக்கு கவர்னராக இருக்குமாறு வஸிய்யத் செய்து விட்டு ஷஹீதாகிப் போனார்கள்.

கிட்டத்தட்ட 30,000 முஸ்லிம்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

மக்களெல்லாம் ஒன்று திரண்டு முஆத் (ரலி) அவர்களிடம்முஆத் (ரலி) அவர்களே! இந்தப் பிணி அகல அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திக்க்ககூடாதா?” என முறையிட்ட போது..

மக்களை நோக்கி முஆத் (ரலி) அவர்கள்மக்களே! இது பிணி அல்ல! இது உங்கள் நபியின் துஆவாகும். உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லடியார்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நல்ல மரணமாகும். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தான் இது போன்ற ஷஹாதா வீர மரணத்தை வழங்குகின்றான்.

قَالَ مُعَاذُ بنُ جَبَلٍ:
سَمِعْتُ رَسُوْلَ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- يَقُوْلُ: (سَتُهَاجِرُوْنَ إِلَى الشَّامِ، فَيُفْتَحُ لَكُم، وَيَكُوْنُ فِيْهِ دَاءٌ كَالدُّمَّلِ، أَوْ كَالوَخْزَةِ، يَأْخُذُ بِمَرَاقِّ الرَّجُلِ، فَيَشْهَدُ - أَوْ فَيَسْتَشْهِدُ - اللهُ بِكُمْ أَنْفُسَكُم، وَيُزَكِّي بِهَا أَعْمَالَكُم).
اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ مُعَاذاً سَمِعَهُ مِنْ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَأَعْطِهِ هُوَ وَأَهْلَ بَيْتِهِ الحَظَّ الأَوْفَرَ مِنْهُ.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஷாமை வெற்றி கொள்வீர்கள்.  அங்கே ஒரு கொள்ளை நோய் ஏற்படும். அல்லாஹ் உங்களை அது கொண்டு வீர மரணம் அடையச் செய்வான். அது கொண்டு உங்களின் செயல்களை தூய்மை படுத்துவான்என்று.

அல்லாஹ்வே! இந்த முஆத் அந்த சத்தியத் தூதர் உரைத்த அந்தச் செய்தியை உண்மையிலேயே செவியேற்றிருந்தால் எனக்கும், என் குடும்பத்தார்களுக்கும் உடனடியாக அந்த ரஹ்மத்தைக் கொடுத்து விடு!” என்று துஆச் செய்து விட்டு தமது உரையைத் தொடர்ந்தார்கள்.

فقال: (يا أيّها الناس، توبوا إلى الله من ذنوبكم توبة نصوحاً فإِن عبد الله لا يلقى الله تائباً من ذنبه إلا كان حقاً على الله أَن يغفر له. ثم قال: إنكم أيها الناس، قد فُجِعتم برجل ــــ والله ــــ ما أَزعم أَني رأيت من عباد الله عبداً قطُّ أَقل غِمْراً، ولا أبرأ صدراً، ولا أَبعد غائلة، ولا أَشد حباً للعاقبة، ولا أَنصح للعامة منه، فترحَّموا عليه ثم أَصْحِروا للصلاة عليه، فوالله لا يلي عليكم مثله أبداً). فاجتمع الناس وأُخرج أَبو عبيدة رضي الله عنه وتقدَّم معاذ رضي الله عنه فصلّى عليه، حتى إذا أُتي به قبره دخل قبره معاذ بن جبل وعمرو ابن العاص والضحَّاك بن قيس، فلما وضعوه في لحده وخرجوا فشنّوا عليه التراب، فقال معاذ بن جبل: (يا أبا عبيدة، لأثنِيَنَّ عليك ولا أقول باطلاً أَخاف أَن يلحقني بها من الله مَقْتٌ: كنتَ ــــ والله ــــ ما علمتُ من الذاكرين الله كثيراً، ومن الذين يمشون على الأَرض هَوْناً وإِذا خاطبهم الجاهلون قالوا سلاماً، ومن الذين إِذا أَنفقوا لم يُسرفوا ولم يقتُروا وكان بين ذلك قواماً، وكنت والله من المُخبتين، المتواضعين، الذين يرحمون اليتيم والمسكين ويُبغضون الخائنين المتكبرين).

மக்களே! அல்லாஹ்விடம் உங்கள் பாவங்களுக்காக உளமார வருந்தி தவ்பாச் செய்து கொள்ளுங்கள்! தவ்பாச் செய்த நிலையில் மரணிக்கும் ஒருவரின் பாவத்தை மன்னிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது.

யாருக்காவது கடன் பட்டிருந்தால் உடனடியாகத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! ஏனெனில், திருப்பிச் செலுத்தும் வரை அது உங்களின் மீது அமானிதமாகவே இருக்கின்றது.

யாராவது சக முஸ்லிமிடம் பிணக்குற்றிருந்தால் உடனடியாக கைலாகு செய்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், மூன்று நாட்களுக்கு மேல் சக முஸ்லிமிடம் பேசாமலிருப்பது அல்லாஹ்விடம் கடும் தண்டனைக்குரிய செயலாகும்.

மக்களே! நீங்கள் நல்லதொரு தலைவரை இழந்த துயரத்தில் இருக்கின்றீர்கள்!

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதோ! இந்த அபூ உபைதா அவர்களை விட பணிவான ஒருவரை, நேர்மையான ஒருவரை, அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றரஹ்மானின் அடியார்களுக்கான அத்துணைப் பண்புகளையும்ஒருங்கே பெற்றிருந்த ஒருவரை இந்தப் பூமியின் மீது நான் கண்டதில்லை.

அவருக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்! அவரின் இறுதித் தொழுகையில் பங்கெடுங்கள்! அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பானாக! என்று உருக்கமானதொரு உரை நிகழ்த்தி விட்டு, அபூஉபைதா (ரலி) அவர்களின் இறுதித் தொழுகையை நடத்தினார்கள்.

                                        ( நூல்: ஹயாதுஸ் ஸஹாபா )

அல்லாஹ் முஆத் அவர்களின் துஆவைக் கபூல் செய்தான். ஆம்! அந்த நோய் அவர்களுக்கும், அவர்களின் இரண்டு மகன்கள், இரண்டு மனைவியர்களுக்கும், பற்றிக் கொண்டது.

என்ன இலவசங்களா? அன்பளிப்புகளா? எனக்கும் கொஞ்சம் கொடு!. என் குடும்பத்தாருக்கும் கொஞ்சம் கொடு! என்று கேட்பதற்கு..

உலகமகாச் சோதனைகளைக் கூட இறைவனிடமிருந்து சோபனமாகவே பெற்றுக் கொண்டார்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள்.

فَمَاتَتْ ابْنَتَاهُ، فَدَفَنَهُمَا فِي قَبْرٍ وَاحِدٍ، وَطُعِنَ ابْنُهُ عَبْدُ الرَّحْمَنِ، فَقَالَ - يَعْنِي لاِبْنِهِ لَمَّا سَأَلَهُ كَيْفَ تَجِدُكَ؟ - قَالَ: {الحَقُّ مِنْ رَبِّكَ فَلاَ تَكُنْ مِنَ المُمْتَرِيْنَ} [آلُ عِمْرَانَ: 60].
قَالَ: {سَتَجِدُنِي إِنْ شَاءَ اللهُ مِنَ الصَّابِرِيْنَ} [الصَّافَّاتُ: 102].
قَالَ: وَطُعِنَ مُعَاذٌ فِي كَفِّهِ، فَجَعَلَ يُقَلِّبُهَا، وَيَقُوْلُ:
هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ حُمُرِ النَّعَمِ.

கொஞ்சம் தலைவலி அதிகமானால் இறைவனை நிந்திக்கும் நாம் எங்கே? வாழ்வையே நிலைகுலைத்திடும் தீராத நோயில் தமக்கும், தம் குடும்பத்தாருக்கும் பங்கு கேட்ட முஆத் (ரலி) அவர்கள் எங்கே?

முஆத் (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு நோயின் தாக்குதல் தீவிரமடைந்து மரணத்தின் விளிம்பில் இருந்த போது தம் மகனைச் சந்திக்க முஆத் (ரலி) அவர்கள் வருகை தந்தார்கள்.

அருகில் அமர்ந்த தன் தந்தையை நோக்கி, தனயன் அப்துர்ரஹ்மான் அவர்கள்இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே, இதனைச் சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்”. எனும் பொருள் உள்ள 2 –ஆம் அத்தியாயத்தின் 147 –ஆம் வசனத்தை ஓதினார்.

அதற்கு, முஆத் (ரலி) அவர்கள்அல்லாஹ் நாடினால்.. என்னை நீங்கள் பொருமையானவர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்”. எனும் பொருள் உள்ள 37 –ஆம் அத்தியாயத்தின் 102 –வது இறைவசனத்தை பதிலாகக் கூறினார்கள்.

                                        ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

குர்ஆனே அவர்களின் மூச்சாகவும், பேச்சாகவும் இருந்தது. குர்ஆனில் உருவான சமூகம் அல்லவா அவர்கள்?

இறுதியில், அவர்களின் இரு மகன்களும், இரண்டு மனைவியர்களும் இந்த நோயின் தாக்கத்தால் ஷஹீத் ஆனார்கள்.

கடைசியாக, முஆத் (ரலி) அவர்களுக்கும் அந்த நோய் பற்றிக் கொண்ட போதுஇந்த நோய் எனக்கு செந்நிற ஒட்டகைகள் அன்பளிப்பாக கிடைப்பதை விட மிகவும் மேலானதுஎன்றார்களாம்.

" اللهم اني كنت أخافك، لكنني اليوم أرجوك، اللهم انك تعلم أني لم أكن أحبّ الدنيا لجري الأنهار، ولا لغرس الأشجار.. ولكن لظمأ الهواجر ومكابدة الساعات، ونيل المزيد من العلم والايمان والطاعة"..
وبسط يمينه كأنه يصافح الموت، وراح في غيبوبته يقول:
" مرحبا بالموت..
حبيب جاء على فاقه"..

அவர்களின் இறுதி நேரத்தில்அல்லாஹ்வே! உனது தண்டனையை நினைத்து நான் அஞ்சிக்கொண்டிருந்தேன்! இன்று நிகரற்ற உன் அருளை, சுவன பேரின்பத்தை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கின்றேன்!

உலகில் என் எண்ணத்தை நீயே நன்கறிவாய்! நான் பாய்ந்தோடும் நதிகளின் அழகை ரசிக்கவோ, மரங்களை நட்டு தோப்பாக மாற்றி பயனடையவோ, விரும்பியதில்லை!

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! அல்லாஹ்வே! உலகில் நான் வாழ்ந்த ஒவ்வொரு மணித்துளிகளையும் அறிஞர்களுடன் இருக்கவும், உனது நினைவை பரிமாறிக் கொள்கின்ற நல்லோர்களுடனும், சான்றோர்களுடனும் நட்பு கொண்டு வாழவே விரும்பினேன்!

நீயே! என்னைப் பற்றி அறிந்தவனாக இருக்கின்றாய்! இதோ நீ அனுப்பிய உன் தூதாகிய மரணத்தை மனமார நான் ஏற்றுக் கொள்கின்றேன்!

இரு கரம் ஏந்திமரணமே! நீ வருக! உன் வரவு நல் வரவாகட்டும்! என்று மரணத்தை வரவேற்றவர்களாக ஷஹாதா வீர மரணம் அடைந்தார்கள்.

                                      ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )


நீதி மிக்க குடும்பத்தலைவராக

أمّا وَرَعُهُ؛ فكان لِمُعاذ بن جبل امْرأتان، فإذا كان عند إحْداهما لم يشْرب في بيت الأخرى الماء، لِيُحَقِّقَ العدْل الكامل بينهما, هذه الليلة لِفُلانة فيأكل ويشْرب وينام عندها، أمّا عند الأخرى فَكان لا يشْرب عندها الماء في الليلة التي ليسَتْ لها، ألم يقل الله عز وجل:
﴿وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا﴾
[ سورة النساء الآية: 3 ]


யஹ்யா இப்னு ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “முஆத் (ரலி) அவர்கள் இரண்டு பெண்களை மணம் முடித்திருந்தார்கள். இருவரையும் சமமாகவும், நீதியோடும் நடத்தினார்கள்.

இருவரின் வீட்டிற்கும் முறை வைத்து வருவார்கள். தங்குவார்கள். எந்த அளவுக்கு நீதமாக நடந்தார்களென்றால், ஒரு மனைவியின் வீட்டில் தங்கியிருக்கையில் இன்னொரு மனைவியின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடிப்பதையும், உளூச் செய்வதையும் கூட பாவமென நினைத்து தவிர்த்து வந்தார்கள்.

காலரா நோயின் காரணமாக இரு மனைவியரும் ஒரே நேரத்தில் வீர மரணம் அடைந்தார்கள். அந்த அகால நேரத்திலும் கூட நீதி செலுத்த தவற வில்லை. இருவரையும் ஒரே குழியில் அடக்கம் செய்ய வேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது, மண்ணறையில் யாரை முதலில் வைப்பது எனும் எண்ணம் எழுந்த போது சீட்டைக் குலுக்கிப் பார்த்து முடிவைத் தேர்ந்தெடுத்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.

                       ( நூல்: தபகாத் இப்னு ஸஅத், ஹயாதுஸ் ஸஹாபா )

எளிமையின் சிகரமாக

أَنَّ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُ- أَخَذَ أَرْبَعَ مَائَةِ دِيْنَارٍ، فَقَالَ لِغُلاَمٍ: اذْهَبْ بِهَا إِلَى مُعَاذٍ ، ثُمَّ تَلَهَّ سَاعَةً فِي البَيْتِ حَتَّى تَنْظُرَ مَا يَصْنَعُ.
قَالَ: فَذَهَبَ بِهَا الغُلاَمُ، فَقَالَ: يَقُوْلُ لَكَ أَمِيْرُ المُؤْمِنِيْنَ: خُذْ هَذِهِ.
فَقَالَ: وَصَلَهُ اللهُ وَرَحِمَهُ.
ثُمَّ قَالَ: تَعَالَيْ يَا جَارِيَةُ، اذْهَبِي بِهَذِهِ السَّبْعَةِ إِلَى فُلاَنٍ، وَبِهَذِهِ الخَمْسَةِ إِلَى فُلاَنٍ، حَتَّى أَنْفَذَهَا.
فَرَجَعَ الغُلاَمُ إِلَى عُمَرَ، وَأَخْبَرَهُ، فَوَجَدَهُ قَدْ أَعَدَّ مِثْلَهَا لِمُعَاذِ بنِ جَبَلٍ، فَأَرْسَلَهُ بِهَا إِلَيْهِ.
فَقَالَ مُعَاذٌ: وَصَلَهُ اللهُ، يَا جَارِيَةُ! اذْهَبِي إِلَى بَيْتِ فُلاَنٍ بِكَذَا، وَلِبَيْتِ فُلاَنٍ بِكَذَا.
فَاطَّلَعَتْ امْرَأَةُ مُعَاذٍ، فَقَالَتْ: وَنَحْنُ - وَالله - مَسَاكِيْنُ، فَأَعْطِنَا.
وَلَمْ يَبْقَ فِي الخِرْقَةِ إِلاَّ دِيْنَارَانِ، فَدَحَا بِهِمَا (2) إِلَيْهَا.
وَرَجَعَ الغُلاَمُ، فَأَخْبَرَ عُمَرَ، فَسُرَّ بِذَلِكَ،

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் தமது அந்தரங்க பணியாளரிடம் 400 தீனார்களை கொடுத்து, இதை முஆத் (ரலி) அவர்களிடம் கொடுத்து அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் இதை உங்களிடம் தரச் சொன்னார்கள்என்று கூறிவிட்டு, முஆத் (ரலி) அந்த திர்ஹத்தை என்ன செய்கிறார்? என்று பார்த்து வருமாறு அனுப்பினார்கள்.

அதேப் போன்று, கவனித்து விட்டு நேராக உமர் (ரலி) அவர்களிடம் வந்த பணியாளர் அங்கு தாம் கண்ட காட்சியை விவரித்தார்கள்.

நான் கொண்டு பணமுடிப்பைக் கொடுத்ததும் தம் பணியாளரை அழைத்து, இன்னின்னவர்களுக்கு இன்னின்ன அளவு கொடுத்து விடுங்கள்! என சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில்…,

முஆத் (ரலி) அவர்களின் துணைவியார் முஆத் (ரலி) அவர்களின் அருகே வந்துநாமும் ஏழைகள் தாமே! நமக்காக ஏதாவது தாருங்களேன்என்று கூறிய போது பங்கு வைத்துப் போக எஞ்சியிருந்தஇரு திர்ஹம்களைஎடுத்து தம் துணைவியாரிடத்திலே முஆத் (ரலி) கொடுத்தார்கள்என்று பணியாளர் சொல்லி முடித்ததும் உமர் (ரலி) அவர்கள் வியப்பின் உச்சத்திற்கே சென்றார்கள்.

தம் ஆட்சியதிகாரத்தின் கீழ் இப்படியான நீதியும், நேர்மையும் நிறைந்த நல்லோர்களைத் தந்த வல்ல ரஹ்மானைப் புகழ்ந்தார்கள்.

                   ( நூல்: தபகாத் இப்னு ஸஅத், ஹுல்யத்துல் அவ்லியா )

ஏழைகளில்லா ஏமனை உருவாக்கிய ஏற்றமிகு தோழர் தன் சொந்த வாழ்க்கையை ஏழ்மையிலும், எளிமையிலும் கழித்தார்கள்.

நிறைவாக,

ஒரு வார்த்தை.. ஒரு கட்டளை

ஈடு இணையில்லா ஓர் ஒப்பற்ற வாழ்க்கையை வாழுமாறு அவர்களைத் தூண்டியது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு நாள் பொழுதில் உதிர்த்த ஒரு வார்த்தை தான்..

وعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, فَقَالَ:
((إِنِّي لَأُحِبُّكَ يَا مُعَاذُ, فَقُلْتُ: وَأَنَا أُحِبُّكَ يَا رَسُولَ اللَّهِ, فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَلَا تَدَعْ أَنْ تَقُولَ فِي كُلِّ صَلَاةٍ رَبِّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ))
أخرجه النسائي في سننه

ஆம்! அண்ணலாரின் அண்மையில் சுகம் பெற்றுக் கொண்டிருந்த ஓர் உயரிய தருணத்தில் ஓ முஆதே! என்றழைத்து.. முஆத் அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்து நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “முஆதே! உம்மை நான் நேசிக்கின்றேன்!

அது கேட்ட, முஆத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நானும் தங்களை நேசிக்கிறேன்! என்றார்கள்.

மீண்டும் நபி {ஸல்} அவர்கள் முஆதே! அது உண்மையானால், கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்…

யா அல்லாஹ்! உன்னை நினைப்பதிலும், உனக்கு நன்றி செலுத்துவதிலும், உன்னை அழகிய முறையில் வணங்குவதிலும் எனக்கு உதவி புரிவாயாக! என்று பிரார்த்திப்பதை விட்டு விட வேண்டாம்” என்று கட்டளையிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் இந்த வலிமை நிறைந்த வார்த்தையும், ஆற்றல் நிறைந்த கட்டளையுமே அவர்கள் உயர்வின் உச்சத்திற்கே, சிகரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

இஸ்லாத்தில் நுழையும் போது முஆத் (ரலி) அவர்களின் வயது 18, அம்ர் இப்னுல் ஜமூஹ் அவர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் அழைப்பாளராக மிளிர்ந்த போது முஆத் (ரலி) அவர்களின் வயது 19, பத்ரில் வீரராக களம் கண்ட போது வயது 20, மக்காவிற்கு ஆசானாகச் சென்ற போது வயது 26, ஏமனுக்கு ஆட்சியாளராகச் சென்ற போது வயது 28,
நபிகளார் {ஸல்} அவர்களில் உறவில் திளைத்தது வெறும் 8 ஆண்டுகள். மொத்தத்தில் இஸ்லாமிய நிழலில் முஆத் இப்னு ஜபல் (ரலி) இளைப்பாரியது வெறும் 16 ஆண்டுகளே!

வெறும் 34 ஆண்டுகள், அதிலும் சத்திய சன்மார்க்க நெறியோடு 16 ஆண்டுகளே வாழும் பாக்கியம் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கையை வாழ்ந்து சென்ற ஒரு மாமனிதரின் வாழ்க்கையை வாசித்துப் பார்த்து விட்டோம்!

இப்படியும் வாழ முடியுமா?” எனும் கேள்வி எழுவது நியாயம் தானே!”

அல்லாஹ் நம் அனைவரையும் அவனுக்கு பொருத்தமான முறையிலே வாழும் நல்ல நஸீபைத் தந்தருள்வானாக! ஆமீன்!

இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. விரிவை அஞ்சி இத்தோடு நாம் சுருக்கிக் கொண்டோம்.

இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்தர்ப்பத்தில் மீதத்தைத் தருவோம்.

                               வஸ்ஸலாம்!















2 comments:

  1. மௌலானா! அசத்தி விட்டீர்கள்! இப்படியும் எழுத முடியுமா என்ற வியப்பையும் ஏற்படுத்தி விட்டீர்கள்! வார்த்தை அலங்காரம், சூப்பர்! அல்லாஹ் தங்களுக்கு எல்லா வகையிலும் அருள் புரியட்டும். !

    ReplyDelete