ஹஜ் – உள்ஹிய்யா அல்லாஹ் எதிர் பார்ப்பது என்ன?
அல்லாஹ் இந்த
மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கிற வழிபாட்டு முறைகளாகட்டும்,
வாழ்க்கை வழி முறைகளாகட்டும்,
ஏற்று நடக்கச் சொன்ன
ஏவல்களாகட்டும், விலகி ஒதுங்கச்
சொன்ன விலக்கல்களாகட்டும் ஒவ்வொன்றின்
பிண்ணனியிலும் மகோன்னதமான பல
பயன்பாடுகள் அதனுள் ஒளிந்திருக்கிறது.
ஏனெனில், அல்லாஹ்வின்
எந்த ஒரு கட்டளையாக
இருந்தாலும் அந்த கட்டளையின்
இறுதியில் அதற்கான பயன்பாட்டையும்,
அதை மீறினால் அதனால்
ஏற்படும் விளைவுகளையும் சொல்லாமல்
இருப்பதில்லை.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் தான் மனித
சமூகத்திற்கான மாண்பும், உயர்வும்
இருக்கிறது.
வாழ்க்கை முறைகளில்…
1.கொடுக்கல் வாங்கல்
சம்பந்தமாக….
ذَلِكُمْ
أَقْسَطُ عِنْدَ اللَّهِ
”இதுவே அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு மிக
நீதியான முறையாகும்.”
அல்லாஹ் மனித
சமூகத்திற்கு கடன் குறித்தான
சட்ட வழிகாட்டுதலையும், விரிவான
ஆலோசனைகளையும் வழங்கிய பின்னர்
மேற்கூறியவாறு குறிப்பிடுகின்றான்.
இந்த இறைவசனத்தை
நிறைவு செய்கிற போது...
وَاتَّقُوا
اللَّهَ وَيُعَلِّمُكُمُ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
“அல்லாஹ்வின்
கோபத்திலிருந்து நீங்கள்
தப்பித்துக் கொள்ளுங்கள்; மேலும்,
அவன் உங்கள் (வாழ்க்கை
முறைகளில்) நேரான வழியை
கற்றுத் தருகின்றான். மேலும்,
அனைத்து விஷயங்களையும் நன்கறிபவனாய்
இருக்கின்றான்” என்று கூறி
நிறைவு செய்கிறான்.
(அல்குர்ஆன்: 2:282)
2.திருமணம் சம்பந்தமாக…
كِتَابَ
اللَّهِ عَلَيْكُمْ
”இது அல்லாஹ்வின்
கட்டளையும், சட்டமுமாகும். இதனைப்
பின் பற்றுவது உங்களின்
மீது கடமையாகும்.”
அல்லாஹ் மனித
சமூகத்திற்கு திருமணம் குறித்தான
தெளிவான சட்ட வழிகாட்டுதலையும்,
விரிவான ஆலோசனைகளையும் வழங்கிய
பின்னர் மேற்கூறியவாறு குறிப்பிடுகின்றான்.
இறுதியாக, இந்தச்
சட்டங்களையும், கட்டளைகளையும் நிறைவு செய்கிற போது...
يُرِيدُ
اللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ
وَيَتُوبَ عَلَيْكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (26)
وَاللَّهُ
يُرِيدُ أَنْ يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ
أَنْ تَمِيلُوا مَيْلًا عَظِيمًا (27) يُرِيدُ اللَّهُ أَنْ يُخَفِّفَ عَنْكُمْ
وَخُلِقَ الْإِنْسَانُ ضَعِيفًا (28)
“உங்களுக்கு முன்
சென்ற உத்தமர்களின் வழிமுறைகளை உங்களுக்கு விளக்கிடவும், அவ்வழிகளிலேயே உங்களை
நடத்திச் செல்லவும் அல்லாஹ் விரும்புகின்றான்.
அவன் உங்கள்
பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்ப நாட்டம் கொண்டுள்ளான்.
மேலும், அல்லாஹ்
நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான். ஆம்! அல்லாஹ் உங்கள்
பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்பவே விரும்புகின்றான்.
ஆனால், தம் மனோ
இச்சைகளைப் பின் பற்றிக் கொண்டிருப்பவர்களோ நேரிய வழியிலிருந்து நீங்கள் வெகுதூரம்
விலகிச் சென்றிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
அல்லாஹ் உங்கள்
மீதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த விரும்புகின்றான். ஏனென்றால், மனிதன் பலவீனமாகப்
படைக்கப்பட்டுள்ளான்.”
(அல்குர்ஆன்: 4:23 – 28)
3.தலாக், குலாஃ,
சம்பந்தமாக...
تِلْكَ
حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ
هُمُ الظَّالِمُونَ
“இவை அல்லாஹ்
ஏற்படுத்தியுள்ள வரம்புகளாகும். எனவே, நீங்கள் அவற்றை மீறிச் செல்லாதீர்கள்.
மேலும், யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றார்களோ அவர்களே அக்கிரமக்காரர்கள்
ஆவர்.”
(அல்குர்ஆன்: 2:229)
தலாக், மற்றும்
குலாஃ சம்பந்தமான விதிகளை அறிவித்த பின்னர் மனித சமூகத்தை நோக்கி அல்லாஹ் இவ்வாறு
குறிப்பிடுகின்றான்.
4.வாரிசுரிமைச்
சட்டம் சம்பந்தமாக...
வாரிசுரிமை
குறித்தான விதிகளையும், சட்டவடிவத்தையும் தந்த பின்னர் அது குறித்து கூறும் போது..
لَا
تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا فَرِيضَةً مِنَ اللَّهِ إِنَّ
اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
“உங்களுடைய
பெற்றோர்கள் விஷயத்திலும், உங்களுடைய பிள்ளைகள் விஷயத்திலும் உங்களுக்கு நன்மை
செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
ஆகவே, அல்லாஹ்வே இச்சட்டங்களை (இப்பங்குகளை) நிர்ணயம் செய்துள்ளான்.”
இறுதியாக, இந்தச்
சட்டங்களையும், கட்டளைகளையும் நிறைவு செய்கிற போது...
وَمَنْ يَعْصِ
اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا
وَلَهُ عَذَابٌ مُهِينٌ
“எவர்
அல்லாஹ்விற்கும், அவன் தூதருக்கும் மாறு செய்து அவன் ஏற்படுத்திய வரம்புகளை
மீறுகின்றார்களோ, அவனை அல்லாஹ் நரகத்தில் புகுத்தி விடுவான்.
அவன் அதிலே
நிரந்தரமாக தங்கியிருப்பான். மேலும், அவனுக்கு இழிவு மிக்க தண்டனையும் உண்டு.”
(அல்குர்ஆன்: 4:11 – 14)
குற்றவியல்
சம்பந்தமாக...
விபச்சாரம்,
பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கற்பித்தல் சம்பந்தமான விதி முறைகளைப் பற்றி
பேசுவதற்கு முன்பாகவே அல்லாஹ் இப்படிக் குறிப்பிடுவான்.
سُورَةٌ
أَنْزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنْزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
”இது ஓர்
அத்தியாயம்; இதனை நாம் இறக்கியருளினோம். இதனை நாம் விதியாக்கி இருக்கின்றோம்.
மேலும், இதில் தெளிவான சட்டங்களையும், கட்டளைகளையும் நாம் இறக்கியிருக்கின்றோம்.
இதனால், வாழ்வில் நீங்கள் பல பாடங்களை பெறக்கூடும்.”
அடுத்து அதன்
ஒவ்வொரு சட்டத்தின் வீரியத்தையும், விதிமுறைகளையும் விவரித்த பின்னர் இடையிடையே
இப்படிக் கூறுவான்.
وَلَوْلَا
فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ وَأَنَّ اللَّهَ تَوَّابٌ حَكِيمٌ
“உங்களின் மீது
அல்லாஹ்வின் அருளும், கருணையும் இல்லாமல் போயிருந்து,
மேலும், அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும், நுண்ணறிவாளனாகவும்
இல்லாது போயிருந்தால் நீங்கள் நிச்சயம் எப்பொழுதோ
பேரிழப்பிற்கு ஆளாகியிருப்பீர்கள்.”
وَلَوْلَا
فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ لَمَسَّكُمْ
فِي مَا أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ عَظِيمٌ
”உங்களின் மீது
அல்லாஹ்வின் அருளும், கருணையும் இல்லாமல் போயிருந்தால்,
நீங்கள் எந்த விஷயங்களில் மூழ்கியிருக்கின்றீர்களோ அதன் பயனாக இம்மையிலும்,
மறுமையிலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பெரும் வேதனை ஏற்பட்டுவிடும்.”
(அல்குர்ஆன்: 24: 1,10,14,20)
ஆக எந்த ஒரு இறைக்
கட்டளையாக இருந்தாலும் அதன் மூலம் மனித சமூகத்திற்கு எண்ணற்ற பல பயன்பாடுகளும், அல்லாஹ்வின் சில எதிர் பார்ப்புகளும் இருப்பதை மேற்கூறிய இறைவசனங்கள்
நமக்கு உணர்த்துகின்றன.
அந்த அடிப்படையில்
ஹஜ் மற்றும் உள்ஹிய்யாவின் மூலம் ஏற்படுகிற பயன்பாடுகள் என்ன?
ஹஜ் மற்றும் உள்ஹிய்யாவின்
மூலம் அல்லாஹ் எதிர் பார்ப்பது என்ன? என்ற இரு
கேள்விகளோடு இந்த வார ஜும்ஆ உரையை அணுகுவோம்.
ஹஜ் என்பது?
அல்லாஹ் நான்கு விஷயங்களை
அல்குர்ஆனில் மிகப் பெரியது என பிரம்மாண்டமாக கூறுகின்றான்.
1.அல்லாஹ்வின்
கோபம் மிகப் பெரியது.
لَمَقْتُ
اللَّهِ أَكْبَرُ
”அல்லாஹ் உங்கள்
மீது கொள்கிற கோபம், நீங்கள் உங்களுக்கிடையே கொள்கிற கோபத்தை
விட மிகப் பெரியது.” (அல்குர்ஆன்:40:10)
2.அல்லாஹ்வின்
திருப்தி மிகப் பெரியது.
وَرِضْوَانٌ
مِنَ اللَّهِ أَكْبَرُ
”இன்னும்.
எல்லாவற்றிற்கும் மேலான அல்லாஹ்வின் திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும்.” (அல்குர்ஆன்:9:72)
3.அல்லாஹ்வைப்
பற்றிய நினைவு மிகப் பெரியது.
وَلَذِكْرُ
اللَّهِ أَكْبَرُ
“மேலும்,
அல்லாஹ்வை நினைவு கூர்வது மிகப் பெரிய விஷயமாகும்.” (அல்குர்ஆன்:29:45)
4.ஹஜ் என்பதும்
மிகப் பெரியது.
يَوْمَ
الْحَجِّ الْأَكْبَرِ
“மேலும்,
மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில்… (அல்குர்ஆன்:9:3)
அதாவது, அல்லாஹ்வின் கோபம் பெரியது, அல்லாஹ்வின்
திருப்தியும் பெரியது, அல்லாஹ்வின் திக்ரும் பெரியது,
வணக்க வழிபாட்டில் ஹஜ்ஜும் பெரியது என்பதை இந்த இறைவசனம்
உணர்த்துகிறது.
ஹஜ் எனும் இபாதத் செய்யப்படுகிற
இடமும் புனிதமானது.
அல்லாஹ் சில விஷயங்களை பரக்கத் அபிவிருத்தி என குர் ஆனில் குறிப்பிட்டுக் கூறுகின்றான். அதில் கஅபாவும் ஒன்று.
1. அல்லாஹ் எனும் திருப்பெயர்.
تَبَارَكَ اسْمُ رَبِّكَ
ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ
“பெரும் அருள் வளங்கள் நிறைந்ததாக இருக்கின்றது, கீர்த்தியும் கண்ணியமும் மிக்க உம் இறைவனின் திருப்பெயர்!”
(அல் குர் ஆன்:55:78)
2. ஸலாம் சொல்லுவது.
فَإِذَا دَخَلْتُمْ
بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ
مُبَارَكَةً طَيِّبَةً
“எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும்போது நீங்கள் உங்களைச் சார்ந்த வர்களுக்கு ஸலாம்கூறுங்கள்.
இது நல்லாசி எனும் முறையில்
நிர்ணயிக்கப்பட்டதும் அருள் வளங்கள்
நிறைந்ததும் தூய்மையானதும் ஆகும்.
இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்தித்துணர்ந்து செயல்படக் கூடும்!
(அல்குர்ஆன்: 24:61)
3. ஜைத்தூன் மரம்.
اللَّهُ نُورُ
السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ
الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ
مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின்ஒளியாக இருக்கின்றான். அவனது ஒளிக்குஉவமைஇவ்வாறாகும்.
“ஒரு மாடத்தில் விளக்குவைக்கப்பட்டிருக்கின்றது, அவ்விளக்கு கண்ணாடிகூண்டினுள் இருக்கிறது, அக்கண்ணாடிக் கூண்டுமுத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது.
அவ்விளக்கு, கிழக்கைச் சேர்ந்ததாயும்,மேற்கைச் சேர்ந்ததாயும்
இல்லாத “அருள் வளமிக்க” ஒலிவ ஜைத்தூன் மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்
படுகின்றது.”
(அல் குர் ஆன்:24:25)
4. தண்ணீர்.
وَنَزَّلْنَا مِنَ
السَّمَاءِ مَاءً مُبَارَكًا
மேலும், நாம் வானத்திலிருந்து “அருள் வளமிக்க” தண்ணீரினை இறக்கினோம்.
(அல் குர் ஆன்:50:9)
5. ஹரம் ஷரீஃப்.
إِنَّ أَوَّلَ بَيْتٍ
وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ
“நிச்சயமாக, மனிதருக்காக எழுப்பப்பட்ட முதல்வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும்.அருள்வளம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார்அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அதுஉள்ளது”
(அல் குர் ஆன்:3:96)
.
ஹஜ் செய்யும்
நாட்களும் மிகச் சிறப்பானது.
إِنَّ
عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ
يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ
قوله
تعالى: (مِنْها أَرْبَعَةٌ حُرُمٌ) الأشهر الحرم المذكورة في هذه الآية ذو القعدة
وذو الحجة والمحرم ورجب
”உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை
பன்னிரண்டாகும். வானங்களையும், பூமியையும்
அவன் படைத்த நாள்
முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில்
இவ்வாறே உள்ளது. அவற்றில்
நான்கு மாதங்கள் சங்கைக்குரியன
ஆகும்.”
இதில் ஹஜ்ஜுக்குரிய
மாதங்களான துல்கஅதா, துல்ஹஜ்,
முஹர்ரம், மற்றும் உம்ராவிற்குரிய மாதமான ரஜபும்
ஆகும்.
1- أن
الله تعالى أقسم بها، والعظيم لا يُقسِم إلا بعظيم، قال تعالى: {وَالْفَجْرِ - وَلَيَالٍ
عَشْرٍ}[الفجر:2]، قال غير واحد من السلف والخلف: هي عشر ذي الحجة، وهو قول جماهير
المفسرين، واختاره ابن كثير.
2- وجاء في قوله تعالى: {....وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ...}[الحج:28]، قال ابن عباس:
«الأيام المعلومات أيام العشر، والأيام المعدودات أيام التشريق» رواه البخاري
معلَّقاً مجزوماً به، وهو صحيح. قاله النووي، وهو قول الشافعي، والمشهور عن أحمد
بن حنبل.
3- أنها أفضل أيام الدنيا، كما شهد بذلك النبي- صلى الله عليه وسلم -،
فعن جابر- رضي الله عنه - أن رسول الله- صلى الله عليه وسلم - قال: «أفضل أيام الدنيا العشر»
يعني عشر ذي الحجة، قيل: ولا مثلهن في سبيل الله؟ قال: «ولا مثلهن في سبيل الله،
إلا رجلٌ عُفِّر وجهه بالتراب» رواه البزار وغيره وحسنه الهيثمي والمنذري.
4- أنه- صلى الله عليه وسلم - حثّ فيها على العمل الصالح، وذلك لشرف
الزمان بالنسبة لأهل الأمصار، وشرف المكان بالنسبة لحجاج بيت الله الحرام، وقد
تقدم ذلك.
5- أنه- صلى الله عليه وسلم - أمر فيها بكثرة التسبيح والتحميد
والتكبير.
6- أن فيها يوم عرفة ويوم النحر.
7- أن فيها الأضحية والحج.
قال
الحافظ ابن حجر: «والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة، لمكان اجتماع أمهات
العبادة فيه، وهي الصلاة والصيام والصدقة والحج، ولا يتأتى ذلك في غيره»
மேலும், உலகில்
சூரியன் உதிக்கும் நாட்களில்
துல்ஹஜ்ஜுடைய முதல் பத்து
நாட்கள் பாக்கியம் நிறைந்த
நாட்களாகும்.
ஏனெனில், அல்லாஹ்
அந்த நாட்களின் இரவுகள்
மீது சத்தியமிடுகிறான். அல்லாஹ்வை
நினைவு கூர்வதற்கான குறிப்பிட்ட
நாட்கள் என அல்லாஹ்
குர்ஆனில் குறிப்பிடும் நாட்களும்
முதல் பத்து நாட்கள்
தான் என இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள்
குறிப்பிடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களும் உலக நாட்களில்
மிகச் சிறந்தது “துல்ஹஜ்ஜின்
முதல் பத்து நாட்கள்”
என கூறியுள்ளார்கள்.
وفي حديث عبد الله
بن عمر، أن النبي- صلى الله عليه وسلم - قال: «ما من أيام أعظم عند الله ولا أحب
إليه من العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن من التهليل والتكبير
والتحميد» رواه أحمد، ورواه الطبراني، ولفظه: «فأكثروا فيهن من التسبيح والتهليل
والتحميد والتكبير» وجوّده المنذري وصححه أحمد شاكر.
மேலும், அந்த
நாட்களில் அதிகமாக இபாதத்களில்
ஈடுபடவேண்டுமென நபி {ஸல்}
அவர்கள் ஆர்வமூட்டியிருக்கின்றார்கள்.
மேலும், அந்த
பத்து நாட்களில் தான்
அரஃபா தினம், தியாகத்தை
நினைவு கூறும் தினம்,
ஹஜ்ஜுடைய தினமும் இடம்
பெறுகின்றது.
ஆக வழிபாடுகளில்
ஹஜ் மிகப் பெரியதாகவும்,
வழிபடும் இடத்தால் ஹஜ்ஜிற்குரிய
இடம் அருள் வளம்
நிறைந்ததாகவும், ஹஜ்ஜிற்குரிய மாதமும் நாட்களும்
மகத்துவமும் சங்கையும் நிறைந்ததாகவும் இருக்கின்றது.
உண்மையில் ஹஜ்
என்பது எவ்வளவு மகத்துவம்
வாய்ந்த ஓர் இறைவழிபாடு
என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
மனித சமூகம்
அடையும் பயன்பாடுகள்.
1.மனிதன் தூய்மை
நிலைக்கு சென்று விடுகின்றான்.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ
حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ سَمِعْتُ أَبَا حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ
كَمَا وَلَدَتْهُ أُمُّهُ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள் கூறினார்கள்: “யார் அல்லாஹ்விற்காக இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறார்களோ, மேலும், அதில் எந்த பாவத்தையும்,
தீங்கையும் செய்யவில்லையோ அவர் அன்று பிறந்த பாலகன் போன்றாகிறார்.”
2. சுவர்க்கமே
கூலி.
(( العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج
المبرور ليس له جزاء إلاّ الجنة )) رواه البخاري (1773) ومسلم (3289) من حديث أبي
هريرة >.
”நன்மையான ஹஜ்ஜுக்கு
சுவனம் தான் கூலியாகும்”. என நபி {ஸல்}
அவர்கள் அருளியதாக ஆதரப்பூர்வமான ஆறு கிரந்தங்களின் இமாம்களும் பதிவு
செய்திருக்கின்றார்கள்.
3. மறுமையில்
ஷஃபாஅத் செய்யும் பாக்கியம்.
عن
أبي سعيد الخدري حديث الشفاعة الطويل (فو الذي نفسي بيده ما منكم من أحد بأشد
مناشدة لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامة لإخوانهم الذين في النار
يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم أخرجوا من عرفتم) الحديث.
நரகில் வேதனை செய்யப்படுகின்ற
சில பாவிகளான முஃமின்களைப் பார்க்கும் சுவனத்து முஃமின்கள் அல்லாஹ்விடத்தில் “யா அல்லாஹ்! இவர்கள் எங்களோடு தொழுதார்கள்.
எங்களோடு நோன்பும் பிடித்தார்கள். மேலும்,
ஹஜ்ஜும் செய்தார்கள்” எனக் கூறுவார்களாம்.
அப்போது, அல்லாஹ் உங்களுக்கு அறிமுகமான அவர்களை
அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறுவான். என மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4.அருள் மழையில்
நனைகிறார்.
وعن
ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ينزل كل
يوم على حجاج بيته الحرام عشرين ومائة رحمة ستين للطائفين وأربعين للمصلين وعشرين
للناظرين". قال المنذري في الترغيب والترهيب رواه البيهقي بإسناد حسن
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு
நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும்,
கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும்,
கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை
ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.”
5. ஏழ்மையை
விரட்டும், பாவங்களை அழித்திடும்.
(( تابعوا بين الحج والعمرة؛ فإنهما ينفيان
الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب
إلا الجنة )) رواه الترمذي (810) وابن خزيمة في صحيحه (2512) والنسائي (2631) من حديث ابن مسعود >، وإسناده
عندهم حسن، ورواه
النسائي (2630) بإسناد صحيح من حديث ابن عباس { ، وليس فيه (( والذهب والفضة ))
والجملة الأخيرة.
”ஹஜ்ஜையும்,
உம்ராவையும் தொடர்ச்சியாக செய்யுங்கள். ஏனெனில்,
அது கொல்லனின் நெருப்பு தங்கம், வெள்ளியில் இருக்கும்
அழுக்கை அழிப்பது போன்று, வறுமையையும், பாவத்தையும் அழித்து விடும்.” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
6. முன் பாவங்கள்
மன்னிக்கப்படும்.
(( أما علمت ـ يا عمرو! ـ أن الإسلام يهدم ما
كان قبله؟ وأن الهجرة تهدم ما كان قبلها؟ وأن الحج يهدم ما كان قبله؟ )) رواه مسلم
(321).
அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது
நபி {ஸல்} அவர்கள் “அம்ரே! ஒருவர் முஸ்லிமாகி விட்டால் அவரின் முன் பாவங்கள்
மன்னிக்கப்படுகின்றன. ஒருவர் ஹிஜ்ரத் செய்தால் அவரின் முன் பாவங்கள்
மன்னிக்கப் படுகின்றன. ஒருவர் ஹஜ் செய்தால் அவரின் முன் பாவங்கள்
மன்னிக்கப்படுகின்றன.” என்று கூறினார்கள்.
இன்னும் ஏராளமான பயன்பாடுகளையும், நன்மைகளையும் இந்த மனித சமூகத்திற்கு வழங்கி அல்லாஹ் கௌரவித்துள்ளான்.
என்றாலும், ஹஜ் என்ற இந்த உயரிய வழிபாட்டின் மூலம் அல்லாஹ் முக்கியமான ஐந்து
மாற்றங்களையும், பண்பாடுகளையும் எதிர்பார்க்கின்றான்.
அது ஹஜ்ஜுடைய காலங்களுக்குப்
பின்னரும் வாழ்வில் எல்லா நிலைகளிலும் தொடர வேண்டும் எனவும் எதிர் பார்க்கின்றான்.
1.சில போது
அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடப்பதில் அறிவுக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது.
ولذلك وظف عليهم
فيها أعمالا لا تأنس بها النفوس ولا تهتدي إلى معانيها العقول كرمي الجمار
بالأحجار والتردد بين الصفا والمروة على سبيل التكرار
وبمثل هذه الأعمال يظهر كمال الرق والعبودية
فإن الزكاة إرفاق ووجهه مفهوم وللعقل إليه ميل
والصوم
كسر للشهوة التي هي آلة عدو الله وتفرغ للعبادة بالكف عن الشواغل
والركوع والسجود في الصلاة تواضع لله عز و جل
بأفعال هي هيئة التواضع وللنفوس أنس بتعظيم الله عز و جل
فأما ترددات السعي ورمي الجمار وأمثال هذه
الأعمال فلا حظ للنفوس ولا أنس فيها ولا اهتداء للعقل إلى معانيها فلا يكون في
الإقدام عليها باعث إلا الأمر المجرد وقصد الامتثال للأمر من حيث إنه أمر واجب
الإتباع فقط وفيه عزل للعقل عن تصرفه وصرف النفس والطبع عن محل أنسه فإن كل ما
أدرك العقل معناه مال الطبع إليه ميلا ما فيكون ذلك الميل معينا للأمر وباعثا معه
على الفعل فلا يكاد يظهر به كمال الرق والانقياد ولذلك قال صلى الله عليه و سلم في
الحج على الخصوص لبيك بحجة حقا تعبدا ورقا // حديث لبيك بحجة حقا تعبدا ورقا تقدم
في الزكاة // ولم يقل ذلك في صلاة ولا غيرها
அறிவுலக மாமேதை இமாம்
ஃகஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறும் போது..
ஜகாத் மற்றும் நோன்பு, தொழுகை போன்ற இபாதத்களில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகளையும் பயன்பாடுகளையும்
அறிவால் ஒருவனால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஆனால், ஸயீ செய்வது, ஷைத்தானுக்கு கல் எறிவது,
ஸஃபா மர்வா மலைக்குன்றுகளுக்கு இடையே ஓடுவது போன்ற செயல்களைச் செய்யும்
போது மனிதனின் உள்ளத்தால், மனிதனின் அறிவால் விளங்கிக் கொள்ள
முடிவதில்லை.
அல்லாஹ் ஏவியிருக்கின்றான்
செய்கிறோம். நபிகளார் {ஸல்}
அவர்கள் செய்து காட்டியிருக்கின்றார்கள் செய்கிறோம் எனும் உணர்வு மாத்திரமே
எழுகிறது.
ஹஜ்ஜிலே அறிவுக்குரிய
அதிகாரம் நீக்கப்பட்டு, முழுமையாய் தன்னை அல்லாஹ்விற்கு முன் சரணடைத்தல்,
கீழ்ப்படிதல், அடிமைப்படுதல் போன்ற உயரிய பண்பாடுகளுக்கு
முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆதலால் தான், வேறெந்த இபாதத்துக்கும் (தொழுகை,
நோன்பு, ஜகாத்) கற்றுத் தராத
வாக்கியங்களை பெருமானார் {ஸல்} அவர்கள்
ஹஜ்ஜுடைய வணக்கத்திற்கு மட்டும் கற்றுத்தந்தார்கள்.
லப்பைக், அல்லாஹும்ம லப்பைக்… என்று.
(நூல்: இஹ்யா உலூமித்தீன்)
நபியுல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களிடம் எறும்பு பேசியதாக குர்ஆன்
கூறுகின்றது, கண் இமைக்கும் நேரத்தில் சபா நாட்டு அரசியின் சிம்மாசனம்
சுலைமான் (அலை) அவர்களின் முன் கொண்டு வரப்பட்டதாக
குர்ஆன் கூறுகின்றது இல்லை, என் அறிவுக்கு இது சரியாகப் பட வில்லை.
என் அறிவு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று கூறிட இயலாது.
2. இறையச்சத்திற்கு
முக்கியத்துவம் தர வேண்டும்.
وَتَزَوَّدُوا
فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ
”இன்னும் நீங்கள்
(ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். வழித்துணைச்
சாதனங்களில் எல்லாம் மிகச் சிறந்தது இறையச்சம் தான்”.
عن ابن عباس: كان
أناس يخرجون من أهليهم ليست (6) معهم أزْودة، يقولون: نَحُجُّ بيت الله ولا
يطعمنا.. فقال الله: تزودوا (7) ما يكف وجوهكم عن الناس.
وقال ابن أبي حاتم:
حدثنا محمد بن عبد الله بن يزيد المقري، حدثنا سفيان، عن عمرو بن دينار، عن عكرمة:
قال: إن ناسًا كانوا يحجون بغير زاد، فأنزل الله: { وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ
الزَّادِ التَّقْوَى }
وكذا رواه ابن جرير
عن عمرو -وهو الفَلاس (8) -عن ابن عيينة.
ஏமன் வாசிகள்
ஹஜ்ஜுக்காக வரும் போது ஒன்றுமில்லாமல் கிளம்பி வந்து விடுவார்கள். ஹஜ்ஜுக்கு வந்த
இடத்தில் வருவோர் போவோரிடம் கையேந்த ஆரம்பித்தனர்.
பாருங்கள்
அல்லாஹ்விற்காக நாங்கள் ஹஜ் செய்ய வந்திருக்கின்றோம். எங்களுக்கு உதவி புரியுங்கள்
என்று யாசிக்கலானார்கள்.
அல்லாஹ் அப்போது
தான் இவ்வசனத்தை இறக்கியருளினான்.
( நூல்: இப்னு கஸீர் )
3. கட்டளைகளை
மீறுவதில் துணிவு கூடாது. 4. ஒரு பாவம் செய்து விட்டால் உடனடியாக
அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும்.
ஹஜ்ஜுடைய வணக்கத்தில் ஈடுபடுகிற
ஒவ்வொரு ஹாஜியும் அதன் ஒவ்வொரு அர்கானிலும், கிளை இபாதத்களிலும், இஹ்ராமின் நிலைகளிலும்
மிகச் சரியாக ஈடுபட வேண்டும்.
அவ்வாறு ஈடுபட முடியாது போகும்
பட்சத்தில் அதற்காக கஃப்ஃபாரா குற்றப் பரிகாரத்தில் ஈடுபட வேண்டும் என அல்லாஹ் விதித்திருக்கின்றான்.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَأَنْتُمْ حُرُمٌ وَمَنْ
قَتَلَهُ مِنْكُمْ مُتَعَمِّدًا فَجَزَاءٌ مِثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ
يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ
طَعَامُ مَسَاكِينَ أَوْ عَدْلُ ذَلِكَ صِيَامًا لِيَذُوقَ وَبَالَ أَمْرِهِ عَفَا
اللَّهُ عَمَّا سَلَفَ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللَّهُ مِنْهُ وَاللَّهُ عَزِيزٌ
ذُو انْتِقَامٍ
وَأَتِمُّوا
الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ
الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ
فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ
أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ فَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ
إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ
ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ
كَامِلَةٌ ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
1. இஹ்ராம் உடைய நிலையில்
வேட்டையாடக் கூடாது.
2. குர்பானி பிராணியை பலியிடும்
முன் தலைமுடியை மழிக்கக் கூடாது.
3. ஹஜ் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டால்…
எனவே, ஹஜ்ஜில் மாத்திரமல்ல
வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் இது போன்றே ஒரு பாவத்தைச் செய்து விட்டால் உடனடியாக
நன்மையான காரியத்தில் தன்னை ஈடுபடுத்திட வேண்டும். அத்தோடு நின்று விடாமல் அல்லாஹ்விடம்
அதற்காக தவ்பாவும் செய்ய வேண்டும்.
இதற்கு நபித்தோழர் அபூ லுபாபா
(ரலி) அவர்களின் வாழ்க்கை ஓர் அழகிய முன்மாதிரியாகும்.
وَآخَرُونَ
اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى
اللَّهُ أَنْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
وقال ابن عباس: {
وَآخَرُونَ } نزلت في أبي لُبابة وجماعة من أصحابه، تخلفوا عن غزوة تبوك، فقال
بعضهم: أبو لبابة وخمسة معه، وقيل: وسبعة معه، وقيل: وتسعة معه، فلما رجع النبي
صلى الله عليه وسلم من غزوته (2) ربطوا أنفسهم بسواري المسجد، وحلفوا لا يحلهم إلا
رسول الله صلى الله عليه وسلم، فلما أنزل الله هذه الآية: { وَآخَرُونَ
اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ } أطلقهم النبي صلى الله عليه وسلم، وعفا عنهم.
அபூ லுபாபா (ரலி) அவர்கள்
தபூக் யுத்தத்திற்கு செல்லாமல் பின் தங்கிய சிலர்களில் அவர்களும் ஒருவர்.
அவர்கள் தாங்கள் பின் தங்கிவிட்டதின்
தீமைகளை உணர்ந்த பின்னர், பள்ளிக்குச் சென்று தங்களை ஒரு தூணில் கயிற்றால் கட்டிக்
கொண்டு அதற்காக அல்லாஹ்விடம் அழுது புலம்பி தௌவ்பா செய்தார்கள்.
அல்லாஹ் மன்னித்து அருள் பாளித்தான்
எனும் செய்தியை குர்ஆனில் வசனமாக இறக்கியருளப்பட்டது.
பிறகு நபி {ஸல்} அவர்களின் திருச்சபைக்கு வந்த அபூ
லுபாபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!
நான் செய்த இந்த குற்றத்திற்குப் பகரமாக என் சொத்து முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில்
செலவளிக்கிறேன்” என்று வேண்டி நின்றார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} “முழுச் சொத்தும் வேண்டாம்; மூன்றில் ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக அர்ப்பணம் செய்யுங்கள்”
என்றார்கள்.
பிரிதொரு சந்தர்ப்பத்தில்..
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا
أَمَانَاتِكُمْ وَأَنْتُمْ تَعْلَمُونَ
قال عبد الله بن
أبي قتادة والزهري: أنزلت في أبي لُبابة بن عبد المنذر، حين بعثه رسول الله صلى
الله عليه وسلم إلى بني قُرَيْظة لينزلوا على حكم رسول الله صلى الله عليه وسلم،
فاستشاروه في ذلك، فأشار عليهم بذلك -وأشار بيده إلى حلقه -أي: إنه الذبح، ثم فطن
أبو لبابة، ورأى أنه قد خان الله ورسوله، فحلف لا يذوق ذواقا حتى يموت أو يتوب
الله عليه، وانطلق إلى مسجد المدينة، فربط نفسه في سارية منه، فمكث كذلك تسعة
أيام، حتى كان يخر مغشيا عليه من الجهد، حتى أنزل الله توبته على رسوله. فجاء
الناس يبشرونه بتوبة الله عليه، وأرادوا أن يحلوه من السارية، فحلف لا يحله منها
إلا رسول الله صلى الله عليه [وسلم] (1) بيده، فحله، فقال: يا رسول الله، إني كنت
نذرت أن أنخلع من مالي صدقة، فقال (2) يجزيك الثلث أن تصدق به" (3)
பனூகுரைளாக்கள் தாங்கள் முஸ்லிம்களுடன்
செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிய பொழுது நபிகளார் {ஸல்} அவர்கள் தோழர்களோடு சென்று பனூகுரைளாக்களின்
வசிப்பிடத்தை முற்றுகையிட்டார்கள்.
அண்ணலாரின் தீர்வுக்கு தாங்கள்
கட்டுப் பட போவதில்லை எனவும், தங்களுக்கான இந்த விவகாரத்தில் ஸஅத் இப்னு முஆத் (ரலி)
அவர்களின் தீர்ப்புக்கே செவிசாய்ப்போம் என உறுதியாகக் கூறி விட்டனர் பனூ குறைளாக்கள்.
இந்த விவகாரத்தில் ஸஅத் இப்னு
முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அபூ லுபாபா (ரலி) அவர்கள்
முன் கூட்டியே பனூ குறைளாவினருக்கு சாடையாகச் சொல்லி விட்டார்கள்.
அபூ லுபாபா (ரலி) அவர்களின்
இந்தச் செயல் பாட்டை அல்லாஹ் மாநபி {ஸல்} அவர்களுக்கு அறிவித்து விட்டான்.
இந்தச் செயலைக் கண்டித்து
இறைவசனமும் இறக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அபூ லுபாபா (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில்
ஒரு தூணில் தம்மைக் கட்டிப் போட்டுக் கொண்டு தாம் இனி ஒரு போதும் உண்ணவோ, பருகவோ போவதில்லை
என சத்தியம் செது கொண்டார்.
இது ஒரு வார காலமாக நீடித்த
போது, அவர்களின் மகள் அண்ணலாரிடம் வந்து தமது தந்தையின் செயல் குறித்து முறையிட்டார்.
அதற்கு பதிலளித்த அண்ணலார்,
”உமது தந்தை தாம் செய்த செயலுக்காக என்னிடம் வருத்தம் தெரிவித்திருந்தால் போதுமே நான்
மன்னித்திருப்பேனே” என்று கூறினார்கள்.
இந்தச் செய்தியை தம் தந்தையாரிடம்
சென்று சொன்ன போது, ”அல்லாஹ்வின் தூதர் என்னை மன்னிக்க வேண்டும், அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்களே வந்து என்னுடைய கட்டையும் அவிழ்த்து விட வேண்டும்” என்று தம் மகளிடம்
கூறினார்.
பின்னர் நபிகளாரே வந்து தாம்
மன்னித்து விட்டதாகக் கூறி, அவரின் விரதத்தை முடித்து வைத்து கட்டையும் அவிழ்த்து விட்டார்கள்.
அல்லாஹ் மன்னித்து அருள் பாளித்தான்
எனும் செய்தியை குர்ஆனில் வசனமாக இறக்கியருளினான்.
பிறகு நபி {ஸல்} அவர்களின் திருச்சபைக்கு வந்த அபூ
லுபாபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!
நான் செய்த இந்த குற்றத்திற்குப் பகரமாக என் சொத்து முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில்
செலவளிக்கிறேன்” என்று வேண்டி நின்றார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} “முழுச் சொத்தும் வேண்டாம்; மூன்றில் ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக அர்ப்பணம் செய்யுங்கள்”
என்றார்கள்.
( நூல்: இப்னு கஸீர், இஸ்தீஆப் )
5. இறைவழிபாட்டில்
தன்னை முழுமையாக சரணடைத்திட வேண்டும்.
உலகில் எந்த ஒரு பயணத்தை மனிதன்
மேற்கொண்டாலும் அதனால் தனக்கு கிடைக்கும் உலகாதாய நோக்கங்களை வெகுவாகவே விரும்புகிறான்.
ஆனால், இங்கே ஹஜ்ஜிற்கான பயணத்தின்
போதோ தம் உடல், உயிர், உறவுகள், வீடு, வியாபாரம், பொருளாதாரம், ஆசை, இன்பம் என தன்னுடைய
உலகாதாயங்கள் அனைத்தையும் அல்லாஹ்விற்காக முற்றிலுமாய் சரணடைத்து விடுகின்றான்.
இந்த நிலை ஹஜ்ஜோடு நின்று
விடாமல் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் நீடித்திருக்க வேண்டும் என்பதை
அல்லாஹ் விரும்புகின்றான்.
ஆதலால் தான் ஹஜ்ஜைப் பற்றிய
அறிமுகம், அதன் சிறப்புகள், அதன் மகத்துவம் பற்றி பேசும் இறைவன் அந்த இறைவசனத்தின்
முடிவிலே இப்படிக் கூறுவான்:
“அல்லாஹ்விற்கு அஞ்சி அவனுடைய
கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் வாழுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்
என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.”
(அல்குர்ஆன்:2:196)
ஆகவே, ஹஜ் என்கிற உயரிய வணக்கத்தின்
மூலம் அல்லாஹ் எதிர் பார்க்கிற இந்த பண்பாடுகளைக் கொண்டவர்களாக அல்லாஹ் நம் அனைவர்களையும்
ஆக்கியருள்புரிவானாக! ஆமீன்!
உள்ஹிய்யா சம்பந்தமாக அதன்
சிறப்புக்கள், அதன் சட்டங்கள் என அனைத்தையும் இதோ உங்களின் மேலான பார்வைக்கு…
நீங்களே மொழியாக்கம் செய்து
கொள்ளுங்கள்!
الأضحية: هي ما يذبح يوم
عيد الأضحى من بهيمة الأنعام تقرّبا إلى الله تعالى.
قال النّووي رحمه الله في
" المجموع " (8/382):" قيل سمّيت بذلك لأنّها تُفعل في الضّحى، وهو
ارتفاع النّهار ".
وقال الحافظ
(3/10):" كأنّ تسميتها اشتُقّت من اسم الوقت الذي تشرع فيه ".
ومن هذا التّعريف ندرك:
أنّ ما يُذبح في غير هذا
الوقت لا يعتبر أُضحية، إلاّ من عذر.
وأنّ ما يذبح من غير
الأنعام لا يُعتبر أُضحية.
وأنّ ما يذبح بغير نيّة
التقرّب إلى الله لا يُعتبر أُضحية.
في فضل الأضحية
لم يرد حديث صحيح في
فضلها، إلاّ حديث الترمذي عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رضي الله عنه:
أَنَّ النَّبِيَّ صلّى الله عليه وسلّم سُئِلَ: أَيُّ الْحَجِّ
أَفْضَلُ ؟ قَالَ: (( الْعَجُّ وَالثَّجُّ ))، والثّجّ هو: إراقة
الدمّ.
ثمّ إنّ الأُضحية داخلة
تحت عموم قوله تعالى:{ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ }.
ويزداد فضلها ظهورا من
خلال الحِكَم العظيمة من مشروعيّتها، من ذلك:
أ) التقرّب إلى الله بالذّبح
من بهيمة الأنعام.
ب) التصدّق على الفقراء
والمحتاجين.
ت) التودّد إلى الأصدقاء
بالهديّة من لحوم الأضاحي.
ث) الأكل منها والتّوسعة على
النّفس والعيال، قال تعالى:{ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ
الْفَقِيرَ }.
وفي صحيح مسلم عَنْ
نُبَيْشَةَ الْهُذَلِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ الله صلّى الله عليه وسلّم: (( أَيَّامُ
التَّشْرِيقِ: أَيَّامُ أَكْلٍ، وَشُرْبٍ، وَذِكْرٍ لله تعالى )).
ج) إظهار شعائر الله تعالى
من صلاة، وتضحية، وإعلاء كلمة الله تعالى بها.
ح) ذكر حال أئمّة الهدى من
الملّة الحنيفيّة كإبراهيم وإسماعيل عليهما السّلام وأتباعهما.
خ) التشبّه بالحجّاج،
والشّوق إلى ما هم فيه من الخير العميم، والأجر العظيم، وقد سنّ الله لنا أن نكبّر
كما يكبّرون، فقال:{ وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ }.
وشرع لنا ترك الحلق وقصّ
الأظافر لمن أراد التّضحية. كلّ ذلك للتشبّه بالحجّاج.
فإذا ثبت للأضحية هذا
الفضل، فما حُكْمُ الأضحية.
حكم الأضحية.
اختلف العلماء في حكمها
على ثلاثة أقوال:
- القول الأوّل: أنّها واجبة على
القادر.
وهو قول الإمام أبي
حنيفة، ورواية عن مالك وأحمد، والثّوري، والأوزاعي، وربيعة، والليث، وهو الظّاهر
للأدلّة التّالية:
1- ما رواه أحمد وابن ماجه
وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ
يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا )) [حديث حسن].
قال السّندي رحمه
الله:" ليس المراد أنّ صحة الصلاة تتوقّف على الأضحية، بل هو عقوبة له
بالطّرد عن مجالس الأخيار، وهذا يفيد الوجوب، والله تعالى أعلم ".
2- ما رواه أحمد وأبو داود
عن مخنف بن سليم أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال: (( يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ كُلِّ
بَيْتٍ أُضْحِيَةُ كُلَّ عَامٍ )).
[حديث حسن].
- القول الثّاني: أنّها فرض كفاية، قال
الحافظ:" وفي وجه للشّافعية من فروض الكفاية ".
- القول الثّالث: للجمهور أنّها سنّـة
مؤكّدة، قال ابن قدامة في "المغني"(9/345):
" روي ذلك عن أبي
بكر، وعمر، وبلال، وأبي مسعود البدري رضي الله عنهم.
وبه قال سويد بن غفلة، وسعيد بن المسيب، وعلقمة،
والأسود، وعطاء، والشافعي، وإسحاق، وأبو ثور، وابن المنذر " اهـ
ماذا على من أراد أن يُضَحّي ؟
- أوّلا: يجب عليه أن يستحضر
النيّة، فلا يُضحّي لأجل التّباهي أمام النّاس، ولا لأجل الأولاد.
فمن العيب أن يقول
المضحّي: اللهمّ هذا منك ولك، وهو غير مخلص في قوله ذلك.
- ثانيا: من أراد التّضحية ودخل
عليه هلال ذي الحِجَّة حَرُم عليه أن يقلع شيئاً من أظفاره، أو يحلق شيئاً من شعره
[شعر رأسه أو إِبِطِه أو عانته].
ودليل ذلك ما رواه مسلم
عن أمّ سلمة أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ كَانَ لَهُ ذِبْحٌ
يَذْبَحُهُ، فَإِذَا أُهِلَّ هِلَالُ ذِي الْحِجَّةِ فَلَا
يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ شَيْئًا حَتَّى يُضَحِّيَ )) .
والحكمة في ذلك - والله
أعلم - التشبّه بالمُحرِم كما سبقت الإشارة إليه.
هل يجوز الاشتراك في الأُضحية ؟
لا يجوز الاشتراك في
الأُضحية إن كانت من الضّأن، وإنّما يصحّ الاشتراك في الإبل والبقر.
ذلك لأنّ الأُضحية عبادة
وقُربة إلى الله، فلا يجوز وقوعها إلاّ على الوجه الذي شرعه الله زمنا وعددا وكيفية.
قال أهل العلم: يشترك
سبعة من البيوت في البقر والإبل؛ للحديث الذي رواه مسلم عن جابر رضي الله عنه قال:
( نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ
عَنْ سَبْعَةٍ ).
أمّا الشّاة فلا تُجزئ
إلاّ عن بيت واحد للحديث السّابق ذكره: (( إِنَّ عَلَى أَهْلِ كُلِّ
بَيْتٍ أُضْحِيَةٌ كُلََّ عَامٍ )).
[معنى أهل بيت واحد: أهل
الرّجل الذين هم تحت كفالته ونفقته، ولو كانوا مائة نفس].
ما هي شروط الأضحية ؟
يشترط في الأضحية شروط في
الجنس، والسنّ، والوصف.
1- أمّا الشّروط التي يجب
توفرّها في الجنس: أن تكون من الأنعام، قال تعالى:{ لِيَشْهَدُوا مَنَافِعَ
لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا
رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ }.
والأنعام هي: الإبل، والبقر، والغنم.
( والغنم يشمل الضّأن والمعز ).
وأفضلها الغنم، فالبقر،
فالإبل [هذا لغير الحاجّ المتمتّع والقارن].
قال النّووي رحمه الله:
" وأجمع العلماء على
أنه لا تجزي الضحية بغير الإبل والبقر والغنم, إلاّ ما حكاه ابن المنذر عن الحسن
بن صالح أنه قال: تجوز التضحية ببقرة الوحش عن سبعة، وبالظبي عن واحد، وبه قال
داود في بقرة الوحش، والله أعلم "اهـ.
2- أمّا الشّروط التي يجب
توفّرها في السنّ: فلا يقبل من الإبل والبقر والماعز إلاّ الثّـني.
لما رواه مسلم عَنْ
جَابِرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: (( لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ
عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنْ الضَّأْنِ )).
قال النّووي:" قال
العلماء: المسنة هي: الثنية من كل شيء من الإبل
والبقر والغنم فما فوقها، وهذا تصريح بأنّه لا يجوز الجَذَع من غير الضأن في حال
من الأحوال، وهذا مجمع عليه على ما نقله القاضي عياض "اهـ.[1]
الثّني من الإبل: هو ما أكمل خمس سنوات،
ودخل في السّادسة.
والثّني من البقر
والمعز: هو ما أكمل سنتين ودخل في الثّالثة.
أمّا الضّـأن [الكبش والنّعجة]
فيجزئ فيها الجَذَع: وهو ما استكمل سنةً على الصّحيح.
وهذا قول أئمّة اللّغة،
وجمهور الفقهاء. قال النّووي رحمه الله:
" والجذع من الضأن: ما له سنة تامة، هذا هو
الأصح عند أصحابنا، وهو الأشهر عند أهل اللغة وغيرهم. وقيل: ما له ستة أشهر، وقيل:
سبعة، وقيل: ثمانية، وقيل: ابن عشرة ..".
[انظر" فتح الباري
(10/12)، و" المجموع " للنّووي (13/118)].
نعم، قال بعض أهل العلم: إنّ الضّأن إذا كان
أقلّ من سنة، وكان يشبه ابن السّنة التّامّة، فيجزئ إن شاء الله.
3- أمّا الأمور التي ينبغي
توفّرها في الوصف: فهي تدور بين الاستحباب والوجوب.
فنذكر ما هو على سبيل
الأفضليّة، ثمّ العيوب التي تردّ بها الأضحية.
ما أفضل الأضاحي ؟
- أفضل الأضاحي الضّأن (
والكبش أفضل من النّعجة ).
ويستحبّ أن يكون سمينا
عظيما
قال الله عزّ وجلّ:{ وَمَن يُعَظِّم شَعَائِرَ
اللهِ فَإِنَّهَا مِنْ تَقوَى القُلُوبِ }، قال ابن عبّاس رضي
الله عنه:" تعظيمها: استسمانها واستحسانها ".
لذلك قالت عائشة:" كَانَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم يُضَحِّي بِكَبْشَيْنِ
عَظِيمَيْنِ سَمِينَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ ".
أقرنين :لهما قرون.
أملحين: الأملح هو الأبيض الذي
يخالطه سواد في عينيه وسواد في قوائمه.
وفي صحيح البخاري عن
أَبِي أُمَامَةَ بن سهل-وهو غير أبي أمامة المعروف - قَالَ:" كُنَّا نُسَمِّنُ
الْأُضْحِيَّةَ بِالْمَدِينَةِ، وَكَانَ الْمُسْلِمُونَ
يُسَمِّنُونَ ".
ما هي العيوب التي تردّ بها
الأضحية ؟
لا تجزئ التّضحية
بالعوراء الواضح عَوَرُها، ولا العمياء، ولا العرجاء الواضح عرجها، ولا المريضة
الواضح مرضها، ولا المكسور عظمها.
والأحاديث الصّحيحة كثيرة
في بيان ذلك، ومن أشهرها:
ما رواه الإمام مالك في
" الموطأ " عن البراء بن عازب رضي الله عنه أنََّ النَّبِيَّ صلّى الله عليه وسلّم سُئِلَ: مَاذَا
يُـتَّقَى مِنْ الضَّحَايَا ؟ فأشار بيده وقال: ((أَرْبَعًا: الْعَرْجَاءُ الْبَيِّنُ
ظَلْعُهَا، وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ
مَرَضُهَا، وَالْعَجْفَاءُ الَّتِي لَا تُنْقِي ))[2].
ويلحق بـهذه الأربع ما
كان مثلها أو أولى منها بعدم الإجزاء، فلا يُضَحَّى بها وهي:
العمياء.
والمبشومة - وهي التي انتفخ بطنها
ولم تستطع إخراج ما في بطنها ( حتى تُـثْـلِط ) أي: حتّى تخرج فضلاتها.
تنبيهات:
1- غير هذه العيوب
كالمقطوعة الأُذُن، ومشقوقة الأُذن طولا، الّتي لم يَرِد ذكرُها في هذا الحديث عدّه العلماء عيبا
مخلاّ بشروط الكمال، لا بشروط الصحّة، والله أعلم.
2- قوله صلّى الله عليه وسلّم: ( البيّن ) دليل على أنّه يُعفى عن اليسير من
العيوب.
3- لا يضرّ أن تكون
الأُضحية مكسورة القرن، فقد روى التّرمذي أنّ عليّ بن أبي طالب رضي الله
عنه سُئِلَ عن ذلك فقال:" لاَ يَضُرُّكَ ".
4- لا يضرّ أن يكون الكبش
موجوءاً، أي: منـزوع الخصيتين، فقد ( ضَحَّى النَّبِيُّ صلّى الله عليه وسلّم بِكَبْشَيْنِ
مَوْجُوءَيْنِ ).
[رواه ابن ماجه بسند صحيح
عن عائشة].
5- لا يجوز المبالغة في
تـتبّع العيوب، بل يُقتصر على ما ذكرته النّصوص.
ما حكم الأُضحية التي
لحقها عيب بعد شرائها ؟
روى الإمام البيهقي بسند
صحيح أنّ عبد الله بن الزّبير سئل عن ناقة عوراء فقال: " إن كان أصابها بعد ما
اشتريتموها فامضوها، وإن كان أصابها قبل
فابدلوها ".
وهو قول عطاء، والإمام
مالك، وغيرهم.
ما حكم بيع شيء من
الأُضحية ؟
اعلم أنّه يحرُم على
المسلم أن يبيع شيئا من أُضحيته، وهو مذهب عطاء، والنّخعي، والإمام مالك، وإسحاق،
والشّافعيّة.
ويدلّ على ذلك أمران:
- الأوّل: عَنْ أَبِي هُرَيْرَةَ
رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم: (( مَنْ بَاعَ جِلْدَ
أُضْحِيَتِهِ فَلاَ أُضْحِيَةَ لَهُ )).
[رواه الحاكم وقال:"
صحيح الإسناد "].
- الثّاني: أنّه يحرم إعطاء شيء من
الأُضحية أُجرةً للجزّار الّذي يُسْتأجر للذّبح، بل يُعطَى أُجرته مالاً، ثمّ
يُعطى منها هديّة.
فقد روى الشّيخان عن عليّ
بن أبي طالب رضي الله عنه قال:" أَمَرَنِي رَسُولُ
اللهِ صلّى الله عليه وسلّم أَنْ لاَ أُعْطِيَ
الجَازِرَ مِنْهَا شَيْئاً ".
فإذا لم يجز إعطاء الجازر
أجرته منها، فلا يجوز بيعها من باب أولى.
ما هي آداب الذّبـح ؟
1- اختيار آلة حادّة، حتّى لا يُعذّب
الحيوان: فإنّ الله قال:{ وَأَحسِنُوا إِنَّ اللهَ يُحِبُّ المُحسِنِينَ }
وفي الحديث الّذي رواه
مسلم عن شدّاد بن أوس رضي الله عنه أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال:
(( إِنَّ اللهَ كَتَبَ
الإِحْسَانَ فِي كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ
فَأَحْسِنُوا القِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ
فَأَحْسِنُوا الذِّبْحَةَ، وَلِْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلِْيُرحْ ذَبِيحَـتَـهُ )).
2- من الرّفق بالحيوان أن لا يشحذ السّكين أمام
الأُضحية، ولا يذبحها بحضرة أضحية أخرى، ولا يجرّها بعنف للذّبح.
فقد " مَرَّ رَسُولُ
اللهِ صلّى الله عليه وسلّم بِرَجُلٍ يَشْحَذُ سِكِّينَهُ أَمَامَ
الأُضْحِيَةِ، فَقَالَ: (( أَفَلاَ قَبْلَ هَذَا ؟ أَتُرِيدُ أَنْ تُمِيتَهَا
مَوْتَـَتيْنِ، هَلاَّ حَدَدْتَ شَفْرَتَكَ
قَبْلَ أَنْ تُضْجِعَهَا ؟)).
3- وتوضع الأُضحية على
جانبها الأيسر، ويضع الذّابح قدمه اليمنى على جانبها الأيمن.
4- يوجّه وجه الأُضحية إلى
القبلة، كما يشير إليه حديث جابر رضي الله عنه عند أبي داود حين قال:"
كَانَ النَّبِيُّ صلّى الله عليه وسلّم إِذَا أَرَادَ أَنْ يَذْبَحَ
ذَبِيحَتَهُ وَجَّهَهَا ..." أي: إلى القبلة.
5- ذكر اسم الله:
فيقول عند الذّبح :"
بسم الله، والله أكبر، اللهمّ هذا منك ولك، اللهمّ تقبّل منّي ".
وقد اختلف العلماء
اختلافا كبيرا في حكم من ترك التّسمية على خمسة أقوال، لذلك على المسلم أن يُراعي
ذكرَ اسم الله خروجا من خلاف العلماء.
6- ولا يجوز أن يشرع في
سلخها وكسر عظمها قبل خروج روحها، قال عمر بن الخطّاب رضي الله عنه:
" لاَ تَعْجَلُوا
الأَنْفُسَ حَتَّى تُزْهَقَ " [انظر " فتح الباري "(9/526)].
7- لا بدّ من مراعاة وقت
الذّبح: وهو بعد صلاة العيد يوم الأضحى إلى آخر يوم من أيّام التشريق.
وأيّام التشريق: ثلاثة بعد يوم العيد،
فتكون أيّام الذّبح أربعة، ويجزئ الذّبح ليلا، والذبح في النهار أفضل، وأفضله يوم
العيد، ثم ما بعده على التّوالي.
ولا تصحّ الأضحية قبل
وقتها، ولا تصحّ أيضا بعده، إلاّ من عذر.
ومن ذبح قبل الصّلاة
فعليه الإعادة، لما رواه البخاري ومسلم عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قال: قَالَ
النَّبِيُّ صلّى الله عليه وسلّم:
(( إِنَّ أَوَّلَ قَالَ مَا
نَبْدَأُ فِي يَوْمِنَا هَذَا: أَنْ نُصَلِّيَ، ثُمَّ
نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ
فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ نَحَرَ قَبْلَ
الصَّلَاةِ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لِأَهْلِهِ، لَيْسَ مِنْ النُّسْكِ فِي
شَيْء ٍ)).
8- ومن السنّة أن لا يأكل
المضحي شيئا يوم النحر حتى يضحي فيأكل من أضحيته ، فقد روى الدّارمي عن
أَبِي موسى الأشعريّ رضي الله عنه أنّ النبيّ صلّى الله عليه وسلّم كان يفعل.
كيف تُقسَم الأُضحية ؟
جاء في صحيح مسلم عن
سلمةَ بنِ الأكْوَع رضي الله عنه قال رسول الله صلّى الله عليه وسلّم: (( كُلُوا، وَأَطْعِمُوا، وَادَّخِرُوا )).
وفي رواية أبي داود: (( وَاتَّجِرُوا )) أي:اطلبوا الأجر.
من أجل ذلك استحبّ
العلماء أن تقسّم الاضحية ثلاثة أثلاث: ثلث يأكل منه أهل البيت، وثلث يُتَصدّق به،
وثلث يطعم به الأضياف والجيران.
தியாகம் சம்பந்தமாக பேச விரும்புபவர்கள் நம்முடைய
பழைய பதிவான “தியாகிகள் மறக்கப்படுவதில்லை” “உடமைகளும்.. தியாகமும்” ஆகிய தலைப்புக்களைப்
பார்வையிடவும்.
இன்ஷா அல்லாஹ்… ஈதுல் அள்ஹா பேருரை, அடுத்த வார
ஜும்ஆ உரை இரண்டும் தியாகங்களைத் தாங்கிய செய்திகளோடு வரும்.
என்றென்றும்
உங்கள் துஆவின் ஆதரவில்…
நாங்கள் மொழியாக்கம் செய்வதானால் கிதாப் பெயர் மட்டும் போதுமே! முஆதைக் காணோம்
ReplyDelete