Sunday, 25 June 2017

ஈகைத்திருநாள் சிந்தனை – 2017 நாம் எங்கே செல்கின்றோம்?...



ஈகைத்திருநாள் சிந்தனை 2017
நாம் எங்கே செல்கின்றோம்?...


நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றீர்கள்? இப்படியொரு கேள்வி என்னையும், உங்களையும் நோக்கி எழுப்பப்படுகிறது.

கேள்வியைக் கேட்பவன் வேறு யாரமல்ல. உங்களையும், என்னையும் அகிலத்தையும் படைத்த ரப்புல் ஆலமீன்.

فَأَيْنَ تَذْهَبُونَ ()

ஆம்! அல்லாஹ் தான் இந்தக் கேள்வியைக் கேட்பதாக அல்குர்ஆனின் 81 –ஆம் அத்தியாயத்தின் 26 –ஆம் வசனம் கூறுகின்றது.

ஒவ்வொரு நாளும் நம்மில் ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமாக கேள்வியும் கூட.

இன்று நான் எங்கே செல்கிறேன்? எதை நோக்கி செல்கிறேன்? நான் செய்யும் செயல் மூலம் எங்கே செல்கிறேன்?

எங்கே ஒரு முறைக் கேட்டுப் பாருங்கள்? உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்?

وقال الإمام أحمد أيضًا: حدثنا أبو نوح قراد  أنبأنا ليث بن سعد، عن مالك بن أنس، عن الزهري، عن عروة، عن عائشة؛ أن رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم، جلس بين يديه، فقال: يا رسول الله، إن لي مملوكين، يكذبونني، ويخونونني، ويعصونني، وأضربهم وأشتمهم، فكيف أنا منهم؟ فقال له رسول الله صلى الله عليه وسلم: "يحسب ما خانوك وعصوك وكذبوك وعقابك إياهم، إن  كان عقابك إياهم دون ذنوبهم، كان فضلا لك [عليهم] وإن كان عقابك إياهم بقدر ذنوبهم، كان كفافا لا لك ولا عليك، وإن كان عقابك إياهم فوق ذنوبهم، اقتص لهم منك الفضل الذي يبقى  قبلك". فجعل الرجل يبكي بين يدي رسول الله صلى الله عليه وسلم: ويهتف، فقال رسول الله صلى الله عليه وسلم: "ما له أما يقرأ كتاب الله؟: { وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ } فقال الرجل: يا رسول الله، ما أجد شيئًا خيرًا من فراق هؤلاء -يعني عبيده-إني أشهدك أنهم أحرار كلهم.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அருமைத் தோழர்களோடு மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருக்கின்ற தருணம் அது.

மாநபியின் அருமைத் தோழர்களில் ஒருவர் அண்ணலாரின் சபைக்குள் முகமன் கூறி உள்ளே நுழைகிறார்.

அவரின் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. அவரின் பதற்றமான குரலே அவர் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் என்பதை உணர்த்தியது.

அண்ணலாரின் மிகச் சமீபமாக வந்த அந்த நபித்தோழர், மாநபி {ஸல்} அவர்களின் அருகாமையில் அமர்ந்தார்.

அல்லாஹ்வின் தூதரே! நான் சில தொழில்கள், வியாபாரங்கள் செய்து வருகின்றேன். என்னிடம் சில பணியாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களை நான் நம்பி பணியில் அமர்த்தி இருக்கின்றேன்.

ஆனால், தவறு செய்கின்றார்கள் ஏன் செய்தீர்கள் என்று கேள்வி கேட்டால் கொஞ்சம் கூட பயமில்லாமல் பொய் பேசுகின்றார்கள்.

என் பொருளை, என பணத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து எனக்கு நம்பிக்கைத் துரோகம் இழக்கின்றார்கள்.

நான் ஏதாவது செய்யுமாறு ஆணையிட்டால், நான் சொன்னதற்கு நேர் மாறான ஒன்றை செய்கின்றார்கள்.

அவர்களின் இந்த செயல்களால் சில போது நான் அவர்களை கடுமையான முறையில் பேசியும், திட்டியும் விடுகின்றேன். கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் அடித்தும் விடுகின்றேன்.

அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களோடு நடந்து கொள்ளும் முறை சரிதானா? நான் சராசரி மனிதனாக நடந்து கொள்கிறேனா? அல்லது ஒரு முஸ்லிமாக நான் நடந்து கொள்கிறேனா? என பதறியவாறே தமது இந்த நடத்தை தங்களுடைய நல்ல குணத்தை பாதிக்கும் செயல்களாக மாறி விடுமோ எனும் அச்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் வெளிப்படுத்தினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின் வருமாறு பதில் கூறினார்கள்:
தோழரே! நாளை மறுமை நாளில் விசாரணை மன்றத்தில் அல்லாஹ் உங்களுக்கும் அடிமைகளுக்கும் நடந்த நிகழ்வுகள் குறித்து உங்களையும், அவர்களையும் அழைத்து விசாரிப்பான்.

பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மோசடி செய்ததும், பொய் சொன்னதும், மாறு செய்ததும் மீஜான் தராசின் தட்டில் வைக்கப்படும். நீங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும் அவர்களை அடித்ததும் தராசின் இன்னொரு தட்டில் வைக்கப்படும்.இரண்டும் சமமாக இருந்தால் இருவருக்கும் பிரச்சனை இல்லை.

உங்களிடம் இருந்து நிகழ்ந்த செயல்பாடுகள் அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து அவர்களின் நன்மைகளை எடுத்து உங்களுக்கு தரப்படும்.

நீங்கள் நடந்து கொண்ட விதம் அதிகம் என்றால் உங்களிடமிருந்து நன்மைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படும்! என்றுஅதனை கேட்ட மாத்திரத்தில் அந்த நபித்தோழர் அழுதார். அதிர்ச்சியில் அலறினார், கூக்குரலிட்டு அழுதார்.

அந்த நபித்தோழரை மீண்டும் அழைத்த மாநபி (ஸல்) அவர்கள் “நாம் மறுமை நாளில்,துல்லியமாக் எடை போடும் தராசுகளை நிறுத்துவோம். பிறகு எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கப்பட மாட்டாது. அவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம் (அங்கு) அவர் முன் கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நாமே போதுமானவனாக இருக்கின்றோம் ( அல்குர்ஆன்: 21: 47 ) எனும் இறை வசனத்தை ஓதிக்காண்பித்து நீர் அல்லாஹ்வின் வேதத்தில் ஓதியதில்லையா? எனக் கேட்டார்கள்.

இத்தனையையும் மிகவும் அதிர்ச்சி விலகாமல் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித்தோழர்,அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! பிரச்சனைக்குரிய பணியாளர்களை விடுதலை செய்வதே தனக்கும், அவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கூறியவாறே அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அனைவரையும் இக்கணமே விடுதலை செய்கிறேன்! அதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்! என கூறியவாறே சபையில் இருந்து விடை பெற்றுச் சென்றார்.

பாருங்கள்! உன்னத நபியின் உண்மைத்தோழர்கள் தங்கள் வாழ்வில் எந்தளவு  தங்களைத் தாங்களே நாம் யார்? நாம் எங்கே செல்கிறோம்? நாம் செய்கிற செயல் மூலம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம் என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் சான்று ஆகும்.

                         ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, முஸ்னத் அஹ்மத் )

ஆக, நம்மிடம் இருந்து வெளியாகும் எந்தவொரு சொல்லும், செயலும் நம்முடைய அக்லாக்கை, நம்முடைய ஈமானை கேள்விக்குறியாக்கி விடாமல் பாதுகாத்திட வேண்டும்.

நம்மைச் சுற்றிலும் எத்தனையோ முஸ்லிம்கள் பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், நம்மைச் சுற்றிலும் எவ்வளவோ பேர் தேவையுடையவர் களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மருத்துவ உதவிகள் எதிர் பார்த்து சிலர், கல்வி உதவிகள் எதிர் பார்த்து சிலர், திருமண உதவிகள் எதிர் பார்த்து சிலர், வாழ்வாதார உதவிகள் எதிர் பார்த்து சிலர், ஒரு வேளை உணவை எதிர்பார்த்து சிலர் என ஏழைகளாக, வறியோர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

என்றாலும், நம்மில் பலர் அது பற்றி கவலைப் படுவதில்லை, எனக்கென்ன? நான் உண்டு, என் வேலை உண்டு என்று கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் செல்கின்றார்களே அவர்களை நோக்கித் தான் ரப்பு  فَأَيْنَ تَذْهَبُونَ  என கேட்கின்றான்.

உலகளாவிய அளவில் போர் மேகம் சூழ்ந்த பகுதியில் வாழும் முஸ்லிம்கள் எல்லாமும் இருந்து ஆனால் எதுவும் கிடைக்காமல், உண்ண உணவில்லாமல், உடுத்த உடையுமில்லாமல், அகதிகளாக, சிறைக்கைதிகளாக, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே அவர்களைப் பற்றியும் எந்தக் கவலையும் இல்லாமல் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று சென்று கொண்டிருக்கின்றார்களே  அவர்களை நோக்கித் தான் ரப்பு  فَأَيْنَ تَذْهَبُونَ  என கேட்கின்றான்.

தன்னைச் சுற்றி வாழ்கிறவர்களைப் பற்றியும் கவலை இல்லை, உலகத்தின் எங்கோ ஒரு மூலை, முடுக்கில் கஷ்டப்படும் முஸ்லிம் சமூகத்திற்காகவும் கவலைப் படுவதில்லை என்றால் இவ்வளவு அவசரமாக நாம் எங்கு செல்கின்றோம்?

உலகில் எந்த மூலையில் ஓர் ஈமானியன் சிரமப்பட்டு, அவன் சிரமத்தை களைய நாம் உதவ வில்லை என்றாலும் நாம் ரப்பின் முன் குற்றவாளியே! ரப்பு நம்மிடத்திலே கேட்கத்தான் செய்வான்.

குறைந்த பட்ச உதவியாக தினமும் நாம் கேட்கும் துஆவிலாவது சில நிமிடங்களை அவர்களுக்காக ஒதுக்கி இருக்க வேண்டும்.

ஆனாலும், நம்மில் பலர் அப்படிச் செய்வதில்லை. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

في كتاب سمط النجوم العوالي للامام العصامي وفي الرياض النضرة للمحب الطبري
لما رجع رضي الله عنه من الشام إلى المدينة - انفرد عن الناس؛ ليتعرف أخبار رعيته، فمر بعجوز لها خباء، فقصدها، فقالت: يا هذا، ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله عني خيراً. قال لها: ولم؟ قالت: لأنه ما فاتني من عطائه منذ ولي أمر المسلمين دينار ولا درهم، فقال: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟! فقالت: سبحان الله: ما ظننت أن أحداً يلي على الناس، ولا يدري ما بين مشرقها ومغربها. فبكى عمر، فقال: واعمراه بك أتدافعه منك حتى العجائز، ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر؟ فإني أرحمه من النار، فقالت: لا تهزأ بي، يرحمك الله؟ فقال عمر: لست بهزاء - فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً - فبينما هو كذلك إذ أقبل: علي بن أبي طالب، وعبد الله بن مسعود - رضي الله عنهما - فقالا: السلام عليك يا أمير المؤمنين. فوضعت العجوز يدها على رأسها، وقالت: واسوأتاه، شتمت أمير المؤمنين في وجهه، فقال: لا عليك، يرحمك الله.
ثم طلب وفاء فلم يجده، فقطع قطعة من مرقعته، وكتب فيها: " بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى عمر ظلامتها منذ ولي إلى يوم كذا بخمسة وعشرين ديناراً، فما تدعيه عند وقوفه في المحشر بين يدي الله تعالى فهو منه بريء شهد على ذلك من فلانة: علي بن أبي طالب، وعبد الله بن مسعود " .
قال أبو طلحة: ثم دفع الكتاب إلي، وقال: إذا مت فاجعله في كفني؛ ألقى به ربي عز وجل.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலம். அபூ உபைதா (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில் ஷாமுக்குச் சென்று விட்டு மதீனா நோக்கி, தம் நண்பர்கள் இப்னு மஸ்வூத் (ரலி), அலீ (ரலி) மற்றும் சிலரோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அவர்களில் இருந்து பிரிந்து தங்களின் ஆட்சியின் நிலைகள் குறித்து மக்கள் என்ன கூறுகின்றார்கள் என அறிய ரகசியமாக ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.

அப்போது வயதான மூதாட்டி ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். அந்த மூதாட்டி உமர் (ரலி) அவர்கள் யார் என்று தெரியாமல் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்களிடம் எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?  நீ யார்? என்று கேட்டார் அந்த மூதாட்டி.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் தாம் மதீனாவைச் சார்ந்தவர் என்றும் மதீனாவிற்கு ஒரு வேளையாக வந்து விட்டு மீண்டும் மதீனா திரும்புவதாகக் கூறினார்கள்.

அம்மூதாட்டி, “உமர் எப்படி இருக்கின்றார்?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் அவர் சலாமத்தாக நலமோடு உள்ளார்” என்றார்கள்.

அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் உமருக்கு நற்கூலி வழங்காமல் இருப்பானாக! என்றார்கள். அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்? இப்படித் துஆச் செய்கின்றீர்கள் என வினவினார்கள்.

அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாள் அம்மூதாட்டி.

உன் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?  என்று கலீஃபா உமர் (ரலி) கேட்ட போது, ம்மூதாட்டி, “சுப்ஹானல்லாஹ்! மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா என்ன உமர்?” என்று கேட்டார்.

இது கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். அழுது கொண்டே தங்களின் ஆன்மாவோடு  ”உமரே! உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உலகில் உண்டு! இதோ இந்த மூதாட்டி உட்பட” என்றார்கள்.

அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே! உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்ற பிரியப்படுகின்றேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். 

அதைக் கேட்ட அம்மூதாட்டி,  என்னைக் கேலி செய்யாதீர்! யாரோ ஒரு உமருக்காக நீர் இரக்கப்படுகின்றீர்! அல்லாஹ் உமக்கு அருள் புரிவான்! என்றார்.

அதற்கு, உமர் ரலி,  இல்லை அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே!  நான் கேலி செய்யவில்லை, உண்மையைத் தான் பேசுகிறேன் என்று கூறி - ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக அம்மூதாட்டியின் கையில் கொடுத்தார்கள்.

அப்போது, அப்பக்கம் வந்த அலி (ரலி), மற்றும் இப்னு மஸூத் (ரலி) ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்.

அதை செவியுற்ற அந்த மூதாட்டி,இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களை, அவர்களின் முகத்திற்கு நேராகவே திட்டிவிட்டேனே! என்று பயந்து நடுங்கினார்.

இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.

அதில் எழுதப்பட்ட விஷயம் “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....  உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல்  இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 25 தீனார் பெற்றுக் கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.

மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி அலி (ரலி) மற்றும் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய இருவரையும் சாட்சியாக்கி அந்த தோல் பேப்பரை தங்களோடு மதீனா கொண்டு வந்தார்கள்.

இந்தச் செய்தியை நினைவு படுத்தும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “பின்னர், ஒரு நாள் என்னை அழைத்த உமர் (ரலி) அவர்கள் அந்த தோல் பேப்பரை என்னிடம் கொடுத்து, அபூதல்ஹாவே! நான் மரணித்து என்னை கஃபன் செய்கிற போது “இந்த தோல் பேப்பரையும் என்னோடு இணைத்து விடுங்கள்! இந்தக் கடிதத்தோடு என் ரப்பைச் சந்திக்க விரும்புகின்றேன்” என்றார்கள்.

( நூல்: அர் ரியாளுன் நள்ரா லில் முஹிப்பி லிஇமாமி அத் தபரீ (ரஹ்), ஸமத்துன் நுஜூமுல் அவாலீ லிஇமாமி அல் உஸாமீ (ரஹ்)... )

உலகில் எந்தப் பாகத்தில் வாழும் எந்த ஒரு முஸ்லிம் கஷ்டப்பட்டாலும் அதில் எல்லா முஸ்லிமுக்கும் பங்கு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

எண்ணிக்கையைச் சொல்வதற்கு நாம் உலகின் முஸ்லிம்களைச் சொந்த மாக்கும் போது, அவர்களின் சுக, துக்கங்களையும் சொந்தமாக்கிக் கொள்வது தானே அறிவுடமை ஆகும்.

எனவே, யார் என்ன ஆனால் என்ன? ஃபலஸ்தீனில் முஸ்லிம் கொல்லப்பட்டால் எனக்கென்ன? சோமாலியாவில் பட்டினியால் பரிதவித்தால் எனக்கென்ன? சிரியாவில் பச்சிளங்குழந்தைகள் முதற் கொண்டு இளம் பெண்கள், முதிர்ந்த பெண்கள் என யார் அகதிகளானால் எனக்கென்ன? கஷ்மீரில், சர்வதேச அளவில் இளைஞர்களை இழுத்துச் சென்று தீவிரவாதிகள் எனக் கூறி சிறையில் அடைத்தால் எனக்கென்ன? என்று சொல்வதிருக்கின்றதே அது அழகிய ஒரு முஸ்லிமுக்கான அடையாளமும் அல்ல. அவன் அழகிய முஸ்லிமும் அல்ல.

எனவே, ஈகைத்திரு நாளான இன்று நாம் நம்முடைய ஈகையை வெளிப்படுத்தும் போது உயரிய நிலையிலே வெளிப்படுத்த வேண்டும். அழகிய முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

வாழும் காலமெல்லாம் சிரமப்படும் சக முஸ்லிமுக்கு, கஷ்டப்படும் சக முஸ்லிமுக்கு வறுமையில் வாடும் சக முஸ்லிமுக்கு ஈந்து உதவி, அவனது துயரைத் துடைத்து அவனை வாழ்வில் எவரிடமும் தேவையாகாத நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

நம்முடைய உதவிகளைப் பெற முடியாத நிலையில் இருக்கிற சக முஸ்லிம்களுக்காக அவர்களின் துயர்கள் துடைத் தெறியப்படுவதற்காக அல்லாஹ்விடம் முறையிட வேண்டும்.

அல்லாஹ் ஈகையோடு நடந்து கொள்ளாத மூன்று வகை மனிதர்களுக்கு மறுமையிலும், சில போது இம்மையிலும் கடுமையான தண்டனை உண்டு என்று கூறுகின்றான்.

وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ () وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ ()

அறியாமையால் ஏழைகளுக்கும், வறியோருக்கும் ஈந்தளிக்காமல் வாழ்ந்த ஒருவர் நாளை மறுமையில் ஸகர் எனும் நரகத்தில் வீற்றிருப்பார் என அல்குர்ஆனின் 74: 44, 45 –இல் அல்லாஹ் கூறுகின்றான்.

إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ (17) وَلَا يَسْتَثْنُونَ (18) فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِنْ رَبِّكَ وَهُمْ نَائِمُونَ (19) فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ (20) فَتَنَادَوْا مُصْبِحِينَ (21) أَنِ اغْدُوا عَلَى حَرْثِكُمْ إِنْ كُنْتُمْ صَارِمِينَ (22) فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ (23) أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ (24) وَغَدَوْا عَلَى حَرْدٍ قَادِرِينَ (25) فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ (26) بَلْ نَحْنُ مَحْرُومُونَ () قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُلْ لَكُمْ لَوْلَا تُسَبِّحُونَ () قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ () فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَلَاوَمُونَ () قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ () عَسَى رَبُّنَا أَنْ يُبْدِلَنَا خَيْرًا مِنْهَا إِنَّا إِلَى رَبِّنَا رَاغِبُونَ () كَذَلِكَ الْعَذَابُ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ

அலட்சியத்தால் ஏழைகளுக்கும், வறியோருக்கும் ஈகையோடு நடக்காமால் வாழ்ந்த ஒரு கூட்டத்தாருக்கு அல்லாஹ் உலகிலேயே அல்லாஹ் தண்டித்ததோடல்லாமல் நாளை மறுமையில் இதை விட மகத்தான பெரிய தண்டனை உண்டு என்று அல்குர்ஆனின் 68: 17 – 32 –இல் அல்லாஹ் கூறுகின்றான்.

إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ () وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ ()

அகம்பாவத்தால் ஏழைகளுக்கும், வறியோருக்கும் இரக்க குணத்தோடு, வாரி வழங்காமல் வாழ்ந்த காரூணுக்கு இவ்வுலகில் தண்டனை வழங்கியதோடல்லாமல் நாளை மறுமையிலும் மகத்தான தண்டனை உண்டு என அல்குர்ஆனின் 28: 76 – 82 –இல் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

ஆகவே, இந்த எச்சரிக்கைகளை மனதிற் கொண்டு மிகவும் கவனமாகவும், பொறுப்புணர்வோடும் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

எங்கிருந்து ஈகையைத் துவக்க வேண்டும்?...

இன்று நாம் பள்ளிவாசல் தோறும் காணும் துயரக் காட்சி இது தான்! தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலையில் இருக்கிற நம்முடைய பள்ளிவாசலுக்கு மருத்துவ உதவிக்கும், திருமண உதவிக்கும், வாழ்வாதார உதவிக்கும், வந்து உதவி கேட்டு நிற்கும் இவர்கள் யார்? ஏன் இவர்கள் குடும்பத்தில் ஒருவர் கூடவா செல்வந்தராக இல்லை!? இவரின் முஹல்லாவில் ஒரு தனவந்தர் கூடவா இல்லை!? இவரின் தெருவில் இரக்க சிந்தனை கொண்ட ஒரு அயல் வீட்டு வாசியுமா இல்லை!?....

ஆம்! இருக்கின்றார்கள். ஆனால், மேலே சொன்ன அறியாமை, அலட்சியம், அகம்பாவம் ஆகிய மூன்றில் ஏதாவது சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் ஒரேயொரு கட்டளை அந்த பெருமக்களின் வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றிப்போட்டது.

எந்த அளவுக்கெனில், இருக்கும் போதும் அள்ளிக் கொடுத்தார்கள். இல்லாத போதும் கொடுக்க முடியாமல் போனது குறித்து ஏங்கினார்கள்.

அடியோடு மாற்றிய அந்த இறைக்கட்டளை இது தான்!

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில் அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.”                                             ( அல்குர்ஆன்: 3: 92 )

இந்த இறை வசனம் இறங்கிய பின்னர் தான் ஒவ்வொரு நபித்தோழர்களும் அறத்திலும், அர்ப்பணிப்பிலும் தங்களை ஈடுபடுத்தினார்கள்.

وقال الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، سمع أنس بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري  بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها يا رسول الله حيث أراك الله تعالى فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ، ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله. فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه. أخرجاه

முதன் முதலாக இதைத் துவக்கிவைத்தவர்கள் அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி) அவர்கள். தங்களுக்கு மிகவும் விருப்பமான பைருஹா தோட்டத்தை அறமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் “உங்களின் குடும்பத்தார்களுக்கு அந்த தோட்டத்தைப் பகிர்ந்தளித்து கொடுத்து விடுங்கள்!” என்று கூறினார்கள்.

அண்ணலாரின் ஆணையை ஏற்று அபூ தல்ஹா (ரலி) அவர்கள் முதலில் தங்களின் நெருங்கிய இரத்த உறவுகளுக்கும், பெரிய தந்தையின் மக்களுக்கும் வழங்கினார்கள்.                                 ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )


وكذلك فعل زيد ابن حارثة، عمد مما يحب إلى فرس يقال له (سبل) وقال: اللهم إنك تعلم أنه ليس لي مال أحب إلي من فرسي هذه، فجاء بها إلى  النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: هذا في سبيل الله. فقال لأسامة بن زيد اقبضه. فكأن زيدا وجد من ذلك في نفسه. فقال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن الله قد قبلها منك)

அடுத்து ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள்தங்களது வீட்டில் இருந்து அழுது புலம்பியவர்களாக யாஅல்லாஹ்! என்னிடத்திலே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணம் ஒன்றும் இல்லை. என்னிடம் நான் மிகவும் நேசிக்கின்ற ஒன்றாக இதோ இந்த குதிரை மட்டும் தான் இருக்கின்றது. இதோ அதையும் உனக்காக அர்ப்பணித்து விடுகின்றேன்என்று சொல்லியவராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து குதிரையை கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் குதிரையைச் சபையில் விட்டுச் சென்றதும் அவர்களின் மகனான உஸாமா (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள்.

                                             ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

عن ابن عمر رضي الله عنهما أن عمر تصدق بمال له على عهد رسول الله ? وكان يقال له: ثمغ، وكان به نخل، فقال عمر: يا رسول الله إني استفدت مالاً، وهو عندي نفيس، فأردت أن أتصدق به، فقال النبي ?: تصدق بأصله، لا يباع ولا يوهب، ولا يورث، ولكن ينفق ثمر. فتصدق به عمر، فصدقته تلك في سبيل الله، وفي الرقاب، والمساكين، والضيف وابن السبيل، ولذوي القربى، ولا جناح على من وليه أن يأكل بالمعروف، أو يؤكل صديقه غير متمولٍ به،
 وفي رواية: أصاب عمر بخيبر أرضاً، فأتى النبي ? فقال: أصبت أرضاً لم أصب مالاً قط. أنفس منه، كيف تأمرني به؟ قال:إن شئت حبست أصلها وتصدقت بها، فتصدق عمر: أنه لا يباع أصلها، ولا يوهب، ولا يورث، في الفقراء وذوي القربى، والرقاب، وفي سبيل الله، والضيف، وابن السبيل، لا جناح على من وليها أن يأكل منها بالمعروف، أويطعم صديقاً غير متموِّل فيه

உமர் (ரலி) அவர்கள் நபிகளாரின் சமூகத்திற்கு வருகை தந்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கைபரில் கிடைத்த ஒரு பங்கு நிலமானஸமஃக்உள்ளது.

அதை விடவும் சிறந்த மதிப்புமிக்க வேறொரு பொருள் என்னிடம் இல்லை; நான் அதனை அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க விரும்புகின்றேன். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? அன்பு கூர்ந்து எனக்கு ஆலோசனை நல்குங்கள்என்று பணிவுடன் வேண்டி நின்றார்கள்

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்உமரே! நீர் விரும்பினால் அதன் அசலை வக்ஃப் செய்து விடுங்கள்! அதில் இருந்து கிடைக்கும் லாபத்தை தர்மம் செய்து விடுங்கள்.” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நல்கிய ஆலோசனையின் படி தங்களின் நிலத்தை அர்ப்பணிப்புச் செய்தார்கள்.

அதாவது, அந்த நிலம் விற்கவோ, அன்பளிப்புச் செய்யவோ பட மாட்டாது. அதற்கு யாரும் வாரிசு ஆகவும் முடியாது. அதன் முழு வருமானமும் வறுமையில் வாடும் உமர் (ரலி) அவர்களின் உறவினர்கள், பின்னர், ஊரில் இருக்கும் ஏழை, எளியோர், வறியோர், விருந்தாளிகள், பிரயாணிகள் ஆகியோருக்கு செலவழிக்கப்படும்.

மேலும், அடிமையை விடுதலை செய்யவும், சன்மார்க்கப் போருக்காக செலவழிக்கவும் அதில் இருந்து பயன் படுத்தலாம். மேலும், இந்தச் சொத்தைக் கண்காணித்துப் பாதுகாப்பவர் என்கிற முறையில் அவரும் நியாயமான முறையில் சிறிது எடுத்துக் கொள்ளலாம். அல்லது அவரின் நண்பர்களுக்கும் அதிலிருந்து தர்மமாக வழங்கிக் கொள்ளலாம். ஆனால்,ஒரு போதும் அதிலிருந்து சொத்தாக எதையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

( நூல்: ஃப்ஸ்லுல் கிதாப் ஃபீ ஸீரதி இப்னுல் கத்தாப் லில் இமாமிஸ் ஸுல்லாபி )

அல்லாஹ் இந்த நன்னாளில் மகிழ்ச்சியாக நம்மை வைத்திருப்பது போன்று வாழ்க்கையில் வாழும் காலமெல்லாம் மகிழ்ச்சியோடு வைப்பானாக! இன்று நம் எல்லோரையும் ஒன்று கூட்டியது போன்று அல்லாஹ் நாளை மறுமையிலும் சுவனத்தில் ஒன்று சேர்ப்பானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!!

அனைவருக்கும் ஈத் முபாரக்! ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!


7 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் ஈத் முபாரக் மௌலானா

    ReplyDelete
  2. جزاك الله خير الجزاء

    ReplyDelete
  3. جزاك الله خير الجزاء

    ReplyDelete
  4. جزاك الله خير الجزاء

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். இந்த ஈத் பெருநாளில் தாங்கள் அருமையான பயான் குறிப்புகளை ஈகையாக எங்களுக்கு வழங்கி விட்டீர்கள் உஸ்தாத். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
    Replies
    1. وعليكم السلام ورحمة الله وبركاته
      امين.

      Delete
  6. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete