Wednesday, 19 July 2017

திருப்புமுனைகளை தமதாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்!!!



திருப்புமுனைகளை தமதாக்கி
உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்!!!



மனிதப் பிறப்பு அது இறைவன் வழங்கிய மகத்தான அருள் என்றால், அந்த இறைவன் நமக்களித்த வாழ்க்கை என்பது மாபெரும் அருள் ஆகும். அந்த வாழ்வை மகத்தான வாழ்வாக அமைத்து வாழ்வதற்கு அல்லாஹ் தௌஃபீக் செய்வதென்பது நிகரில்லா அருளாகும்.

மனித வாழ்க்கையில் சில தருணங்கள் மிகவும் முக்கியமானவை. அல்ல, அல்ல பொக்கிஷமானவை.

ஆம்! நம் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் திரும்பிப் பார்க்க வைக்கிற மாதிரியான சில தருணங்கள் நம் வாழ்க்கையில் எப்போதாவது அமையும்.

அப்போது, நம்மிடம் எழும் இரு கேள்விகள் மிகவும் கவனத்திற்குரியது. அந்த இரு கேள்விகள் இது தான்.

வாழ்க்கையோட உயரிய நோக்கத்திற்காக என் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நான் விட்டுக் கொடுப்பதா? இல்லை,

என் முன்னால் இருக்கும் உயரிய குறிக்கோளையே விட்டுக் கொடுப்பதா?”

தேர்ந்தெடுக்கும் அந்தத் தருணம் தான் நம் வாழ்வில் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் திருப்புமுனையாகும்.

அந்த மகத்தான வாழ்க்கையை அல்லாஹ்விடம் கேட்டுப் பெறுமாறு அல்குர்ஆன் தூண்டுகின்றது,

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ()
எங்கள் இறைவா! உன்னுடைய பிரத்யேக அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் ( வாழ்க்கையின் ) காரியங்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக!”                                                ( அல்குர்ஆன்: 18: 10 )

எல்லா இளைஞர்களைப் போன்று கனவுகளோடும், எதிர்காலத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புகளோடும் வாழாமல், எல்லா இளைஞர்களைப் போன்று ஆசைகளுக்கும், உணர்வுகளுக்கும் இடம் கொடுத்து வாழாமல், எல்லா இளைஞர்களைப் போன்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வாழ்ந்த சில இளைஞர்களின் வாழ்க்கையை அல்குர்ஆனில் அல்லாஹ் அடையாளப் படுத்துகிற விதம் மிகவும் அற்புதமானது.

கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் ஈமானுக்காக தூக்கியெறிந்த அந்த அஸ்ஹாபுல் கஹ்ஃப் எனும் இளைஞர்களின் வாழ்க்கையை كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا   என்று அடையாளப் படுத்துகின்றான்.

ஆசைகளையும், உணர்வுகளையும் இறைவனைப் பயந்து தூக்கி எறிந்த யூஸுஃப் (அலை) எனும் இளைஞரின் வாழ்க்கையை نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ என்று அடையாளப் படுத்துகின்றான்.

இறைவனின் விருப்பத்திற்கு முன்னால் தன்னுடைய விருப்பு, வெறுப்புகளை தூக்கியெறிந்த இஸ்மாயீல் (அலை) எனும் இளைஞரின் வாழ்க்கையை وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا என்று கூறி அடையாளப் படுத்துகின்றான்.

ஆக, வாழ்வது என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்கிறோம் என்பது தான் மிக முக்கியம்.

1. என் வாழ்நாளில் ஒரு நாளாவது இப்படி என்னால் வாழ முடியுமா? என ஏங்க வைக்கும் நபித்தோழர் (ரலி) ஒருவரின் வாழ்க்கை….

மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்த அந்த நபித்தோழரைச் சுற்றிலும் மனைவி, மக்கள் உறவுகள் நின்று கொண்டு நபித்தோழரின் ஸக்ராத் வேதனையைக் கண்டு மனம் தாளாமல் அழுது கொண்டிருந்தனர்.

قال أبو إسحاق السبيعي: لما احتضر أبو سفيان بن الحارث بن عبد المطلب قال: لا تبكوا علي، فإني لم أتنطف  بخطيئة منذ أسلمت.

ஸக்ராத்தின் வேதனையின் உச்சத்தில் உழன்று கொண்டிருந்த அந்த நபித்தோழர் மனைவி, மக்கள், உறவுகளை நோக்கிஎன் அருகாமையில் நின்று எவரும் அழாதீர்கள்! ”நான் இஸ்லாத்தை ஏற்ற நொடிப்பொழுதில் இருந்த இப்போது இந்த நொடிப்பொழுது வரை என் ரப்பின் கட்டளைக்கு மாற்றமான எந்தவொரு பாவத்தையும் நான் செய்ததில்லை!” என்று கூறினார்கள்.

இப்படியான ஒரு உயரிய, உத்திரவாதமான பதிலை இந்தச் சபையில் இருக்கும் என்னாலோ, உங்களாலோ தர முடியுமா? சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

أبو سفيان بن الحارث هو ابن عم النبي صلى الله عليه وسلم المغيرة بن الحارث بن عبد المطلب بن هاشم الهاشمي.

அந்த நபித்தோழர் வேறு யாருமல்ல, மாநபி {ஸல்} அவர்களின் பெரிய தந்தை ஹாரிஸ் அவர்களின் மகனார் அபூ ஸுஃப்யான் முகீரா இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள்.

வாருங்கள்! அபூ ஸுஃப்யான் முகீரா (ரலி) அவர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய அந்தத் தருணத்தைக் கொஞ்சம் வாசித்து விட்டு வருவோம்!

இத்தனைக்கும் மகத்துவமான வாழ்வு வாழ்ந்த அந்தப் புனிதர் இப்பூவுலகில் இஸ்லாமிய நெறியோடு வாழ்ந்தது வெறும் 13 ஆண்டு காலம் மட்டும் தான்.

وكان أخا النبي، صلى الله عليه وسلم، من الرضاعة، أرضعتهما حليمة.

நபி {ஸல்} அவர்களும், அபூ ஸுஃப்யான் அவர்களும் ஏக காலத்தில் பிறந்தவர்கள். அதே போன்று ஏக காலத்தில் ஹலீமா (ரலி) அவர்களிடம் பால் குடித்த பால்குடி சகோதரரும் கூட.

முஹம்மத் {ஸல்} அவர்கள் தங்களை நபியாக மக்காவாசிகளிடம் அறிமுகம் செய்த போது முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார் என அரபுலகமே பெரிதும் எதிர்பார்த்தது அபூ ஸுஃப்யான் அவர்களைத்தான்.

ஆனால், நேர் மாற்றமாக மாநபி {ஸல்} அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்களின் பட்டியலில் முன் வரிசையில் தம்மை இணைத்துக் கொண்டார் அபூ ஸுஃப்யான்.

وكان أبو سفيان بن الحارث بن عبد المطلب من الشعراء المطبوعين. وكان سبق له هجاء في رسول الله صلى الله عليه وسلم وإياه عارض حسان بن ثابت بقوله

எந்தளவுக் கெனில், மாநபி {ஸல்} அவர்களை இழித்தும், பழித்தும் பல கவிகளை இயற்றி மாநபி {ஸல்} அவர்கள் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று கவி படிப்பார்.

ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அபூ ஸுஃப்யானின் கவிகளுக்கு பதிலடி கொடுத்து இயற்றிப் பாடிய கவிகள் ஏராளம்.

மாநபி {ஸல்} அவர்கள் குடும்பத்தில் பிறந்து, அவர்களோடு வளர்ந்து, அவர்களோடு தோழமை கொண்டு மாநபி {ஸல்} அவர்களையே எதிர்த்ததால் எதிரிகள் அபூ ஸுஃப்யானை தலையில் வைத்துக் கொண்டாடினர்.

சக எதிர்ப்பாளர்களின் புகழில் சிக்கிய அபூ ஸுஃப்யான் தங்களுடைய 60 –ஆவது வயது வரை அந்தப் புகழிலேயே மயங்கிக் கிடந்தார்.

மக்காவின் எவரும் எதிர் பார்க்காத அந்த நாள் வந்தது. ஆம்! ஃபத்ஹ் மக்கா, மக்காவை மாநபி {ஸல்} அவர்களின் தலைமையில் வெற்றி வாகை சூடினர் முஸ்லிம்கள்.

அந்த வெற்றியோடு சேர்ந்து மாநபி {ஸல்} அவர்களின் கருணை நிறைந்த அபய அறிவிப்புபொது மன்னிப்பு அறிவிப்பும் சேர்ந்தே வந்தது. அது அபூ ஸுஃப்யானின் காதுகளுக்கும் வந்தது.

இப்போது, அவருக்கு முன்னால் இரண்டு கேள்விகள் இருந்தது. ஒன்று மாநபி {ஸல்} அவர்களை கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்த போதும் தம் சொந்த சமூகத்தையும் தாண்டி எல்லா தரப்பு மக்களிடமும் நன் மதிப்பும், செல்வாக்கும் கொஞ்சம் கூட சரிந்திடவில்லை.

பொதுமன்னிப்பைப் பெற்று இப்படியே புகழோடும், செல்வாக்கோடும் வாழ்ந்து விடுவதா? அல்லது,

உயர்வு மேவும் இஸ்லாத்தை ஏற்று, மாநபி {ஸல்} அவர்களின் அருகாமையை பெற்று நரகிலிருந்தும், கடந்த காலங்களில் இஸ்லாத்திற்கும், மாநபிக்கும் இழைத்த பெரும் பாவங்களில் இருந்து நிரந்தர விடுதலையைப் பெற்றுத் தருகிற ஷஹாதாவை மொழிந்து வாழ்வை புதுப்பித்துக் கொள்வதா?

ثم أسلم فحسن إسلامه فيقال: إنه ما رفع رأسه إلى رسول الله صلى الله عليه وسلم حياء منه. وكان إسلامه يوم الفتح قبل دخول رسول الله صلى الله عليه وسلم مكة لقيه هو وابنه جعفر بن أبي سفيان بالأبواء فأسلما. وقيل: بل لقيه هو وعبد الله بن أبي أمية بين السقيا والعرج فأعرض رسول الله صلى الله عليه وسلم عنهما فقالت له أم سلمة: لا يكن ابن عمك وأخي ابن عمتك أشقى الناس بك وقال علي بن أبي طالب لأبي سفيان بن الحارث. إيت رسول الله صلى الله عليه وسلم من قبل وجهه، فقل له ما قال إخوة يوسف ليوسف عليه السلام: " تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين " . يوسف: 91. فإنه لا يرضى أن يكون أحد أحسن قولاً منه ففعل ذلك أبو سفيان فقال له رسول الله صلى الله عليه وسلم: " لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين " . يوسف: 92. وقبل منهما وأسلما وأنشده أبو سفيان قوله في إسلامه واعتذاره مما سلف منه

தம் மகன் ஜஅஃபரை அழைத்து ஆலோசித்து தீர்க்கமான ஓர் முடிவையும் எடுத்து தம் தந்தையின் சகோதரரின் மகனான அலீ (ரலி) அவர்களிடம் வந்து தஞ்சம் புகுந்தார்கள்.

தாம் எடுத்திருக்கும் அந்த முடிவை அலீ (ரலி) அவர்களிடம் எடுத்துக் கூறி, தம்மையும், தம் மகனையும் பெருமானார் {ஸல்} அவர்களிடம் அழைத்துச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.

அலீ (ரலி) அவர்களும் பெருமானாரைச் சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்று சொல்லி அழைத்து வந்தார்கள்.

கடந்த காலங்களில் மாநபிக்கு எதிராக இழித்தும், பழித்தும் அவர் இயற்றிப் பாடிய கவிகள் மனக்கண் முன் வந்து செல்கிறது, குற்ற உணர்வின் மிகுதியால், வெட்க உணர்வு ஆட்கொண்ட நிலையில் மாநபி {ஸல்} அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் முன்பாக நிமிர்ந்து பார்க்க தைரியம் இன்றி தலை குனிந்து நின்றார் அபூ ஸுஃப்யான் தமது மகனோடு.

கூடாரத்திற்குள் நுழைந்த அலீ (ரலி) பெருமானார் {ஸல்} அவர்களை வெளியே அழைத்து வந்தார்கள்.

அபூ ஸுஃப்யானே! எப்படி இருக்கின்றீர்? மாநபி {ஸல்} அவர்களின் குரல் கேட்டு தலை நிமிர்ந்து பேச வெட்கப்பட்டு குனிந்தவாரே! “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில் அல்லாஹ் எங்களை விட உமக்குச் சிறப்பை வழங்கியுள்ளான்! மேலும், திண்ணமாக, நாங்கள் தவறிழைத்தவர்களாகவே இருந்தோம்என்று கூறினார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில், மாநபி {ஸல்} அவர்கள் மறுமொழியாகஇன்று உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! அவன் எல்லோரையும் விட அதிகம் கருணை புரிபவன்என பகர்ந்தார்கள்.

பின்பு, மாநபி {ஸல்} அவர்களிடம் கடந்த காலங்களில் தாம் செய்து விட்ட தவறுகளுக்காக மன்னிப்பு வேண்டினார்கள் தந்தையும், மகனும். மாநபி {ஸல்} அவர்களின் தூய கரத்தைப் பிடித்து இருவரும் ஷஹாதாக் கூறி இஸ்லாத்தில் அடியெடுத்து வைத்தார்கள்.

அவர்களின் முன்பாக எழும்பிய கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலைத் தேர்ந்தெடுத்து அந்த பொக்கிஷமான தருணத்தை இஸ்லாம் எனும் ஏகத்துவ ஜோதி கொண்டு அழகு படுத்தினார்கள்.

அல்லாஹ் அபூ ஸுஃப்யான் முகீரா இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்களின் முழு வாழ்வையும் அழகு படுத்தினான்.

இதன் பின்னர் மாநபி {ஸல்} அவர்களின் அதிகப்படியான அன்புக்கும் நெருக்கத்திற்கும் சொந்தக்காரர் ஆனார் அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்கள்.

ويوم حنين، حيث نصب المشركون للمسلمين كمينا خطيرا، وانقضوا عليهم فجأة من حيث لا يحتسبون انقضاضا وبيلا أطار صواب الجيش المسلم، فولّى أكثر أجناده الأدبار وثبت الرسول مكانه

في تلك اللحظة الرهيبة، كانت هناك قلة لم تذهب بصوابها المفاجأة
وكان منهم أبو سفيان بن الحارث وولده جعفر

ولقد كان أبو سفيان يأخذ بلجام فرس الرسول، وحين رأى ما رأى أدرك أن فرصته التي بحث عنها قد أهلت.. تلك أن يقضي نحبه شهيدا في سبيل الله، وبين يدي الرسول
وراح يتشبث بمقود الفرس بيسراه، ويرسل السيف في نحور المشركين بيمناه.

وعاد المسلمون الى مكان المعركة حتى انتهت، وتملاه الرسول ثم قال
" أخي أبو سفيان بن الحارث..؟؟"
ما كاد أبو سفيان يسمع قول الرسول " أخي"..
حتى طار فؤاده من الفرح والشرف. فأكبّ على قدمي الرسول يقبلهما، ويغسلهما بدموعه.

மாநபி {ஸல்} அவர்களோடு ஹுனைன் யுத்தத்தில் பங்கெடுத்தார் அபூ ஸுஃப்யான் (ரலி). யுத்தத்தில் ஒரு சந்தர்பத்தில் எதிரிகளின் கை ஓங்கவே சத்திய ஸஹாபாக்கள் மாநபி {ஸல்} அவர்களை அங்கேயே விட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் திரும்பி வந்து பார்த்த அன்ஸாரித்தோழர்கள் மாநபி {ஸல்} அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து நின்று கொண்டிருந்த அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்களை ஆச்சர்யத்தோடு சுற்றி, சுற்றி வந்து அல்லாஹ்வின் தூதரே! இவர் யார்? என கேட்டார்கள்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள்இவர் என் சகோதரர்என்று கூறினார்கள். அதைக் கேட்ட அபூ ஸுஃப்யான் அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களின் சகோதரனா? என்று முகத்தில் ஆயிரமாயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தியவராக வினவினார். ஆம்! நீர் என் சகோதரரே! என்று மீண்டும் மாநபி {ஸல்} கூறியதும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஒட்டகத்தின் மீதமர்ந்திர்ந்த மாநபி {ஸல்} அவர்களின் புனிதப் பாதத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தார்கள்.

அன்ஸாரிகள் முதன் முறையாக அப்போது தான் அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்களைப் பார்த்தார்கள். அது தான் ஆச்சர்யத்தோடு யார் எனக் கேட்டார்கள். அன்ஸாரிகள் மட்டுமல்ல அபூ ஸுஃப்யானை முதன் முறையாக பார்க்கும் யாரும் இப்படித்தான் ஆச்சர்யப் பட்டுப்போவார்கள்.

ويقال: إن الذين كانوا يشبهون برسول الله صلى الله عليه وسلم جعفر بن أبي طالب والحسن بن علي بن أبي طالب وقثم بن العباس بن عبد المطلب وأبو سفيان بن الحارث بن عبد المطلب والسائب بن عبيد بن عبد يزيد بن هاشم بن المطلب بن عبد مناف

ஆம்! வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள்: மாநபி {ஸல்} அவர்களின் தோற்றத்தை அப்படியே உரித்து வைத்தவர்கள் போன்று 5 நபித்தோழர்கள் இருப்பார்கள்.

1. ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), 2. ஹஸன் இப்னு அலீ (ரலி), 3. குஸம் இப்னு அப்பாஸ் (ரலி), 4. ஸாயிப் இப்னு உபைத் இப்னு யஸீத் (ரலி) 5. அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் (ரலி).

இந்த ஐவரும் மாநபி {ஸல்} அவர்களின் தந்தை வழி உறவுகள் ஆவர்.

பெருமானார் {ஸல்} அவர்களே அடிக்கடி இப்படிச் சொல்வார்களாம்: “அபூ ஸுஃப்யானே! என் தோற்றத்தில் ஒத்திருப்பது போன்று என் குணத்திலும் நீர் ஒத்து இருக்கின்றீர்!” என்று.

وروى أبو حبة البدري أن رسول الله صلى الله عليه وسلم قال: " أبو سفيان خير أهلي أو من خير أهلي " .

இன்னொரு முறைஅபூ ஸுஃப்யான் என் குடும்பத்தில் மிகச் சிறந்தவர்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

إن النبي صلى الله عليه وسلم أحب أبا سفيان هذا،  وقال: أرجو أن يكون خلفا من حمزة

இன்னொரு முறைஅபூ ஸுஃப்யானே! அல்லாஹ் உம்மை ஹம்ஸாவிற்கு பின்னர் எமக்கு உறுதுணையாக தந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 روى عفان عن وهيب عن هشام بن عروة عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " أبو سفيان بن الحارث من شباب أهل الجنة أو سيد فتيان أهل الجنة " .

இவற்றையெல்லாம் விட முத்தாய்ப்பாக அபூ ஸுஃப்யான் சுவனத்து இளைஞர்களில் ஒருவர்என்றும், இன்னொரு ரிவாயத்தில்அபூ ஸுஃப்யான் சுவனத்து இளைஞர்களின் தலைவர்என்றும் கூறினார்கள்.

وكان سبب موته أنه حج فحلق رأسه، فقطع الحجام ثؤلولاً كان في رأسه فمرض منه حتى مات بعد مقدمه من الحج بالمدينة،

ஹஜ்ஜுப் பயணம் மேற்கொண்டிருந்த அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்கள் மினாவில் தலைமுடியை மழிப்பதற்காக நாவிதர் முன் அமர்ந்தார்கள். நாவிதர் தலை முடியை மழிக்கும் போது தலையில் இருந்த அவருடைய மச்சத்தையும் சேர்த்து மழித்து விடவே மரணப் படுக்கையில் வீழ்ந்தார்கள்.

وذات يوم شاهده الناس في البقيع يحفر لحدا، ويسويّه ويهيّئه.. فلما أبدوا دهشتهم مما يصنع قال لهم:
" اني أعدّ قبري"..
وبعد ثلاثة أيام لا غير، كان راقدا في بيته،..

ஒரு நாள் ஜன்னத்துல் பகீவு மைய வாடியில் அதிகாலை நேரத்திலிருந்து ஒருவர் குழி தோண்டிக் கொண்டிருந்தார். லுஹர் நேரத்தை சமீபித்த போதும் அவர் தொடர்ந்து தோண்டிய குழியை சரி செய்வதில் ஈடுபட்டிருந்தார்.

யார்? என்று பார்ப்பதற்காக மக்கள் அவரின் அருகே சென்றனர். மக்களெல்லாம் வியப்பின் விளிம்பிற்கே வந்து விட்டனர் அவர் அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்களே தான்.

யார் இறந்து போய் விட்டார்கள்? நீங்கள் ஏன் குழி தோண்டிக் கொண்டிருக்கின்றீர்கள்? என்று மக்கள் கேட்க, “இது எனக்காக நான் தோண்டிய குழி, நான் இறந்து விட்டால் என்னை நீங்கள் இதில் தான் அடக்கம் செய்ய வேண்டும்என அமைதியாக மக்களை நோக்கி பதில் கூறினார்.

மக்களெல்லாம் அவரின் அந்தச் செயலை மிகவும் சாதாரணமாகக் கருதிக் கொண்டிருந்த போது குழி வெட்டிய மூன்றாவது நாளே அபூ ஸுஃப்யான் முகீரா இப்னு ஹாரிஸ் (ரலி) இந்த உலகிற்கு விடை கொடுத்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி…..

விடை கொடுப்பதற்கு சற்று முன்பாக அவர்கள் சொன்னதை மறுபடியும் ஒரு முறை நினைவு படுத்திப் பார்ப்போம்

قال أبو إسحاق السبيعي: لما احتضر أبو سفيان بن الحارث بن عبد المطلب قال: لا تبكوا علي، فإني لم أتنطف  بخطيئة منذ أسلمت.

 என் அருகாமையில் நின்று கொண்டு எவரும் அழாதீர்கள்! ”நான் இஸ்லாத்தை ஏற்ற நொடிப்பொழுதில் இருந்து இப்போது, இந்த நொடிப்பொழுது வரை என் ரப்பின் எந்தவொரு கட்டளைக்கு மாற்றம் செய்ததில்லை, எந்தவொரு பாவத்தையும் நான் செய்ததில்லை!” 

சுமார் 20 ஆண்டுகள் இஸ்லாத்திற்கெதிரான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த அபூ ஸுஃப்யானுக்கு அல்லாஹ் கொடுத்த அந்த திருப்புமுனையை பொக்கிஷமாகக் கருதி, தங்களின் வாழ்க்கையை உயரியதோர் குறிக்கோளோடு அமைத்து அதை நோக்கி பயணித்து உலகம் உள்ள வரை போற்றப்படுகிற, வியப்பின் விளிம்பிற்கே கொண்டு செல்கிற மகத்தான வாழ்க்கைக்கு சொந்தக்காரராக மாறிப் போனார்கள் அபூ ஸுஃப்யான் முகீரா இப்னு ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப், ஸியரு அஃலா மின் நுபலா, அல் அம்ஸால், தப்ரானீ )

2. எப்படித் தான் இப்படியெல்லாம் வாழ முடிந்ததோ என வாசிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்  மாமேதை (ரஹ்) ஒருவரின் வாழ்க்கை….

நான்காம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் வாழ்ந்து, மறைந்த ஹதீஸ் கலைத் துறையில் சிறந்து விளங்கிய இமாம்களில் ஒருவரான அபூஹாத்தம் என்றும் இப்னு ஹிப்பான் (ரஹ்) என்றும் அறியப்படுகின்ற முஹம்மத் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை பிரமிக்க வைக்கிற அளவிற்கான ஆச்சர்யங்களைக் கொண்டதாகும்.

قال ابن العماد

 قلت وأكثر نقاد الحديث على أن صحيحه أصح من سنن ابن ماجه. والله أعلم

نشأ الإمامُ ابنُ حبان في مدينة بُست، وأمضى فيه طفولته وأوائل شبابه، ثم غادرها إلا أنه عاد إليها في آخر عمره، وتوفي فيها. وكان الإمام ابن حبان من الأئمة الذين جمعوا بين الحديث والفقه. وقد ذكر العلماء أنَّ الإمام ابن حبان من المجتهدين، قال الإمام ابن كثير (ت 774هـ): "أحد الحفَّاظ الكبار المصَنِّفين المجتَهِدين، رحلَ إلى البلدان، وسمعَ الكثير من المشايخ..."
وكان الإمام ابن حبان يَعيب على المحدِّثين الذين يهتمُّون بالإسناد فقط، دون الاهتمام بالمتون، كما كان يعيب على الفقهاء الذين يهتمُّون بالمتون فقط، دون الاهتمام بطرق الأحاديث. وقد أشارَ إلى هذا الموضوع في مقدمة (صحيحه)، وكادَ ينفرِد بمذهب خاص فيما يتعلَّق بزيادة الثقة، حيث اشترطَ في المحدِّث الثقة الذي تُقبَل منه الزيادة في المتن أن يكون فقيهًا.
 ومما اشتُهِرَ فيه الإمام ابن حبان هو الرحلة في طلب الحديث النبوي، حيث إنه قد استغرق قرابة أربعين سنة في رحلاته إلى أن رجع إلى وطنه بُست أخيرًا. وقد أشارَ الإمامُ ابنُ حبان إلى كثرة رحلاتِه قائلًا: "ولعلَّنا قد كتبنا عن أكثر من ألفَي شيخ من إسبيجاب إلى الإسكندرية"، و«إسبيجاب» إقليمٌ يقعُ أقصى الشرق الإسلامي في ذلك الوقت، وكانت ثغرًا من أشهر ثغور الإسلام على حدود القبائل التركية التي لم تدخل بعد في الإسلام، قال المقدسيُّ (ت نحو 380هـ): "ويُقال: إنَّ بها ألفًا وسبعمائة رباط، وهي ثغر جليل ودار جهاد"، وكان هذه الأربطةُ للمجاهدين المتطوِّعين، تَشترِك في بنائها مدُن ما وراء النهر قاطبة. كما أنّ الإسكندرية من أشهر مدن مصر، والتي كانت آخر مدينة يُرحَل إليها من جهة المغرب الإسلامي، قال الشيخ شعيب الأرنؤوط في مقدمة تحقيقه لصحيح ابن حبان: "يريد من قوله هذا أن يبيِّن لنا أنه رحل إلى أقصى ما تمكن الرحلة إليه لطلب العلم في عصره... ولا يسعُنا إزاء هذا العدد الضخم من الشيوخ في تلك الرقعة الواسعة من الأرض إلا أن نُرَدِّد مع الذهبي قولَه: هكذا فلتكن الهِمَم". فرحلات الإمام ابن حبان شملَت أقصى الشرق وأقصى الغرب في البلاد الإسلامية التي كان يُرحَل إليها في ذلك الوقت.

மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் ஹிஜ்ரி – 273 –இல் பிறந்து, நான்காம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் வாழ்ந்து ஹிஜ்ரி – 354 ஷவ்வால் பிறை 22 ஜும்ஆ தினத்தின் இரவன்று இப்பூவுலகை விட்டும் பிரிந்து சென்றார்கள்.

ஏறத்தாழ 81 ஆண்டு காலம் உலகில் வாழும் பாக்யம் பெற்ற இமாம் அவர்கள் மகத்தான வாழ்க்கையை வாழ்ந்து சென்றார்கள்.

فإن ابن حبان ترجم له ابن هبة الله في كتابه تاريخ مدينة دمشق وذكر فضلها وتسمية من حلها من الأماثل فقال فيه

محمد بن حبان بن أحمد بن حبان بن معاذ بن معبد بن سعيد بن شهيد ويقال ابن معبد بن هدبة بن مرة بن سعد بن يزيد بن مرة بن يزيد بن عبد الله ابن دارم بن مالك بن حنظلة بن مالك بن زيد مناة بن تميم بن مر بن أد ابن طابخة بن إلياس بن مضر بن نزار بن معد بن عدنان أبو حاتم التميمي البستي أحد الأئمة الرحالين والمصنفين المحسنين

இமாமவர்களின் வம்சத் தொடர் பிரபல்யமான அரபுக் கிளையான அத்னான் கிளையின் தமீமீ கோத்திரத்தாருடன் சென்று சேர்கிறது.

இன்றைய ஆஃப்கானிஸ்தான் நாட்டின் காபூல் மாகாணத்தின் ஸஜஸ்தான் நகரின் புஸ்த் எனும் கிராமத்தில் பிறந்த இமாம் அவர்கள் 10 வயதிற்குள்ளாகவே அரபு மொழியைக் கற்றுத் தேறினார்கள்.

தங்களின் 11 –ஆவது வயதில் மார்க்கக் கல்வியைத் தேடி புறப்பட்ட இமாம் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளாக 2000 ஷைகுகளிடம் இருந்து ஹதீஸ் மற்றும் வரலாறு, மருத்துவம், வானவியல் மற்றும் விண்வெளியியல், தர்க்கம் மற்றும் ஃபிக்ஹ், அரபு மொழியியல் மற்றும் இலக்கணம் ஆகியவைகளைக் கற்றுத் தேறி தங்களது 50 –ஆவது வயதில் அன்றைய அப்பாஸிய கலீஃபாவான அமீர் முளஃப்ஃபர் இப்னு அஹ்மத் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஸமர்கந்த் மற்றும் நஸா ஆகிய பகுதியின் தலைமை காழியாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

ஆஃப்கனில் இருந்து கிழக்கில் இருக்கிற, ஆஃப்கனில் இருந்து மேற்கிலிருக்கிற அனைத்து நாடுகளுக்கும் மார்க்கக் கல்வியைத் தேடி பயணம் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

ஹதீஸ்கலையை பிரபல்யமான இமாம் நஸாயீ (ரஹ்), இப்னு குஸைமா (ரஹ்) ஆகியோரிடமிருந்து கற்றார்கள்.

பிரபல்யமான ஹதீஸ்கலை வல்லுனர்களான இமாம் தாரகுத்னீ, இமாம் அபூயஃலா, இமாம் இப்னு முன்தஹ், ( ரஹ் – அலைஹிம் ) ஆகியோரின் ஹதீஸ் துறை ஆசிரியராகவும் திகழ்ந்தார்கள்.
قال الإدريسي:
 وكان أبو حاتم على قضاء سمرقند مدة طويلة وكان من فقهاء الدين وحفاظ الآثار والمشهورين في الأمصار والأقطار عالما بالطب والنجوم وفنون العلوم ألف المسند الصحيح والتاريخ والضعفاء والكتب الكثيرة في كل فن وفقه الناس بسمرقند
وبنى بها الأمير المظفر بن أحمد بن نصر بن أحمد بن سامان صفة لأهل العلم خصوصا لأهل الحديث ثم تحول أبو حاتم من سمرقند إلى بست ومات بها

ஸமர்கந்தில் கலீஃபா அவர்கள் ஹதீஸ் துறைக்கென்று கட்டிக் கொடுத்த மதரஸாவில் ஹதீஸ் பாடங்களை நடத்தினார்கள்.

தலைமை காழியாகவும், ஆசிசியராகவும் இருந்து கொண்டு ஸஹீஹ் இப்னு ஹிப்பான் எனும் ஹதீஸ் நூல் உட்பட ஏராளமான வரலாற்று, ஃபிக்ஹ், ஹதீஸ் துறை சார்ந்த நூற்களை எழுதி இருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக அவர்கள் எழுதிய 17 நூற்கள் மேற்கூறப்பட்ட அத்துனை துறை சார்ந்ததிலும் மிகச் சிறந்த நூற்களாகவும், அரிய பல கருத்துக்களைத் தாங்கி நிற்பதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

இந்த 17- நூற்களில் 6 – நூற்கள் 10 பாகங்களையும், 2 நூற்கள் 20 பாகங்களையும், 3 நூற்கள் 3 பாகங்களையும் கொண்டதாகும்.

20 பாகங்களைக் கொண்ட 2 நூற்களும் மக்கா, மதீனாவின் அறிஞர்கள், மற்றும் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஆகியோரின் தரத்தையும், வரலாற்றையும் எடுத்துக் கூறும் மகத்தான பொக்கிஷங்களாகும்.

40 ஆண்டுகால கல்விப் பயணத்தில் 2000 ஆசிரியர்களிடம் இருந்து பெற்ற கல்வியின் துணை கொண்டு ஆசிரியப்பணி மற்றும் நீதிபதிப்பணி ஆகியவற்றைச் செய்து கொண்டு இடையில் கிடைத்த நேரங்களைக் கொண்டு நூற்றுக் கணக்கான நூற்களை எழுதிக் குவித்து இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களின் வாழ்வு உண்மையில் உலகையே திரும்பிப்பார்க்க வைக்கும் வாழ்வே.

இத்தனைக்கும் இமாம் அவர்கள் வெறும் 30 ஆண்டுகளில் இத்தனை நூற்களை எழுதிக் குவித்து இருக்கின்றார்கள்.

இமாம் இப்னுல் ஹம்மாத் (ரஹ்) அவர்கள் “ஸுனன் இப்னு மாஜாவை விட இப்னு ஹிப்பான் (ரஹ்) தொகுத்த ஸஹீஹ் இப்னு ஹிப்பான் நூலே மிகச் சிறந்த நூலாகும்.

அல்லாமா தகபீ (ரஹ்) அவர்கள் தங்களின் ஸியரு அஃலா மின் நுபலாவிலும், இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல் பிதாயா வன் நிஹாயாவிலும், இப்னுல் அஸீர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல் காமில் ஃபித் தாரீஃகிலும் மிக அற்புதமாக இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களின் வாழ்வை பதிவு செய்திருக்கின்றார்கள்.

ஷாஃபீஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக அறியப்படும் இமாம் அவர்கள் ஃபிக்ஹ் துறையிலும் மிகச் சிறந்து விளங்கி இருக்கின்றார்கள்.

இமாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த எந்த அறிஞரும் ஹதீஸ் மற்றும் கல்வித் துறையில் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களைப் போன்று சாதித்ததில்லை என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தலை சிறந்த அறிஞர்களின் மாணவராகவும், தலை சிறந்த இமாம்களின் ஆசிரியராகத் திகழ்ந்த இமாம் முஹம்மத் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தங்களின் சொந்த ஊரான புஸ்த்திலேயே இவ்வுலகை விட்டுப் பிரிந்து, புஸ்த்திலேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள்.

( நூற்கள்: அல்பிதாயா அன் நிஹாயா, அல் காமில் ஃபித்தாரீஃக், ஸியரு அஃலா மின் நுபலா )

ஆகவே, சாதாரணமாக எல்லோரையும் போன்று வாழ்வது வாழ்க்கையல்ல, எல்லோரும் ”வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும்” என்று கூறும் அளவுக்கு மகத்தான வாழ்க்கையை வாழ்ந்து வரலாறாய் மரணிக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அழகிய முறையில், லட்சியத்தோடும், குறிக் கோளோடும் வாழ்கிற நல்ல நஸீபை, தௌஃபீக்கை தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

10 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமை நல்ல முயற்சி பாரகல்லாஹ்

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ் அருமை

    ReplyDelete
  3. அல்ஹம்து லில்லாஹ் அருமை

    ReplyDelete
  4. தனக்கு கிடைத்த அருளை (வாய்ப்பை)
    சரியாக பயன் படுத்தி கொண்டார் அபூஸுஃப்யான்(ரலி)

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. ரமலானுக்கு பிறகு தங்களது பதிவை எதிர்பார்த்து ஏங்கிய என்னைப்போன்ற பல ஆலிம்களின் மனதில் இப்போது தான் திருப்தி ஏற்பட்டிருக்கிறது الحمدلله وجزاكم الله خير الجزاء يا أستاذ

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. ரமலானுக்கு பிறகு தங்களது பதிவை எதிர்பார்த்து ஏங்கிய என்னைப்போன்ற பல ஆலிம்களின் மனதில் இப்போது தான் திருப்தி ஏற்பட்டிருக்கிறது الحمدلله وجزاكم الله خير الجزاء يا أستاذ

    ReplyDelete