இந்த மூன்று விஷயங்களை விட்டும் நம் உயிர் நிரபராதியாகப்
பிரிய வேண்டும்!!!
மண்ணறை வாழ்க்கை,
அதைத் தொடர்ந்து மஹ்ஷர்,
மீஜான், கேள்வி கணக்கு,
ஸிராத், அதனைத்தொடர்ந்து சுவனம்
அதில் இறை தரிசனம்,
நபிமார்களின் தோழமை, மேன்மக்களின்
சகவாசம், இன்பங்கள் என்ற
நீண்ட நெடிய நிரந்தரமான ஓர் வாழ்க்கையை நோக்கியது ஓர் முஃமினின் வாழ்க்கைப் பயணம்.
அந்த வாழ்க்கைப்
பயணத்தை துவக்கி வைப்பது தான் மரணம் ஆகும். மரணம்
அது உலகில் எவராலும்
தவிர்க்க முடியாதது; தப்பிக்க
முடியாதது. அது நாம்
எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும்
நம்மை வந்து சேர்ந்து
விடும் மகத்தான ஆற்றல்
கொண்டதாகும்.
அத்தகைய மரணத்தை
அழகிய முறையில் அமைத்துக்
கொள்ள வேண்டும் என்பதாக
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களும் நம்மை வலியுறுத்துகின்றார்கள்.
குறிப்பாக மூன்று
விஷயங்களை விட்டும் நாம்
நிரபராதியாக நிரூபித்த நிலையில்
நம்முடைய உடலை விட்டும்
உயிர் பிரிய வேண்டும்
என மாநபி {ஸல்}
அவர்கள் ஆணைபிறப்பித்துள்ளார்கள்.
அத்தோடு நின்றுவிடாமல்
அந்த மனிதரால் தான்
சுவனத்திலும் பிரவேசிக்க முடியும்
என நபி {ஸல்}
அவர்கள் கூறுகின்றார்கள்.
في حديث
ثوبان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم
((من فارق الروحُ
الجسد وهو بريء من ثلاث دخل الجنة: الكبر، والدَّيْن، والغلول))
رواه الترمذي برقم (1572)، وصححه الألباني في صحيح سنن الترمذي
ஸவ்பான் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ““எவருடைய உயிர் உடம்பை விட்டும் பிரியும்போது மூன்று விஷயங்களைவிட்டும் நிரபராதியாகப் பிரிகின்றதோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். (அவை) பெருமையும் மோசடியும் கடனுமாகும்.”
என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்:
திர்மிதீ )
பெருமை, கடன்,
மோசடி என்கிற இந்த மூன்று விஷயங்களும் அது தனிமனிதனோடு தொடர்புடைய பிரச்சனை மட்டுமல்ல.
அது சக
மனிதர்களோடும் தொடர்புடையது. அவன் மட்டும் பாதிக்கப்படுவான் என்றில்லை அதனால் அவனைச் சார்ந்துள்ள அத்துனை
பேரும் பாதிக்கப்படுவார்கள்.
அதிலும் குறிப்பாக
கடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில்
நாம் மிகவும் கவனமாக
நடந்து கொள்ள வேண்டும்.
கடன் என்பது
இல்லாதவனும், ஏழையும் தான்
வாங்குவார்கள் என்கிற காலம்
மலையேறிப் போய் பெரும்
முதலாளிகளும், தொழிலதிபர்களும் ஏன்?
அரசுகளும் கூட கடனில்
தத்தளித்துக் கொண்டு தான்
இருக்கின்றன என்பதை நாட்டு
நடப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
கடந்த 15/03/2018 அன்று
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக துணை
முதலமைச்சர் ஓ.பி.எஸ்
பட்ஜெட்டை தாக்கல் செய்து
ஆற்றிய உரையின் போது
“அடுத்த மார்ச் மாதத்திற்குள்
அரசின் கடன் சுமை
3.55 லட்சம் கோடியாக இருக்கும்
என்றும், தமிழகத்தில் குழந்தை
முதற்கொண்டு சாதாரண குடிமக்கள்
மீது சுமார் 40000 ரூபாய்க்கு
மேல் கடன்சுமை இருப்பதாக”
தெரிவித்தார்.
அதாவது, அரசு
வாங்குகிற கடனின் மீது
மறைமுகமாக தமிழக மக்கள்
ஒவ்வொருவரின் மீதும் அதை
திருப்பிச் செலுத்துவதற்கான கடமை
உள்ளது என்று அர்த்தம்.
இது பரவாயில்லை.
இன்னொரு அதிர்ச்சியான தகவலும்
மத்திய அரசின் சார்பாக
வெளியிடப்பட்டது.
மத்திய அரசுக்கு
சொந்தமான வங்கிகளில் 7,564 தொழிலதிபர்கள்
93 ஆயிரத்து 357 கோடி ரூபாயை
திருப்பி செலுத்தாமல் இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக 91 தொழிலதிபர்கள்
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும்
அபாயம் இருப்பதாக கண்டறிந்து,
அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆக இன்று
கடன் வாங்குவோரின் எண்ணிக்கை
அதிகரித்து இருப்பது போன்று,
அதைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் பெருகி
இருக்கின்றது.
கடன்
வாங்குவதில் இருந்து பாதுகாப்பு தேடிய
மாநபி {ஸல்}
அவர்கள்…
حَدَّثَنَا أَبُو
الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ
قَالَ حَدَّثَنِى أَخِى عَنْ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِى عَتِيقٍ عَنِ
ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ أَنَّ عَائِشَةَ - رضى الله عنها - أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - كَانَ يَدْعُو فِى الصَّلاَةِ
وَيَقُولُ « اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ » .
فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ
الْمَغْرَمِ قَالَ « إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ
فَأَخْلَفَ »
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது “இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்” என்று கூறுவார்கள்.
இதைச் செவியுற்ற ஒருவர் நபி {ஸல்} அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப்
பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து அதற்கு மாறு செய்கின்றான்” என்று பதில் கூறினார்கள். ( புகாரி )
கடனுடைய நிலையில் மரணம்! அது தவிர்க்கப்பட
வேண்டும் என்று விரும்பிய வேந்தர் நபி {ஸல்} அவர்கள்…
நபி(ஸல்) அவர்களது
காலத்தில் பல
நபித்தோழர்கள் மரணித்தனர். அவர்களில் கடன் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளோருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
அவ்வாறு நடத்த வேண்டுமெனில் யாரேனும் ஒருவர் அவரது கடனுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் நபி {ஸல்} அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள்.
“நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா
கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது நபி
{ஸல்} அவர்கள் ”இவர் கடனாளியா?' என்று கேட்டபோது, நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச்
சென்றிருக்கிறாரா?' என்று நபி {ஸல்} கேட்டபோது 'இல்லை' என்றனர்.
நபி {ஸல்} அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
عن جابر بن عبد الله قال : توفي رجل فغسلناه وكفناه وحنطناه ثم أتينا
به رسول الله – صلى الله عليه وسلم – ليصلي عليه ، فقلنا : تصلي عليه ؟ فخطا خطوة
ثم قال: " أعليه دين ؟ " قلنا : ديناران ، فانصرف ، فتحملهما أبو قتادة
، فأتيناه ، فقال : أبو قتادة : الديناران عليّ ، فقال رسول الله : " قد أوفى
الله حقَّ الغريم وبرئ منهما الميت ؟ قال : نعم ، فصلى عليه ، ثم قال بعد ذلك
بيومين : " ما فعل الديناران ؟
قلت : إنما مات أمس ،
قال : فعاد إليه من الغد فقال : قد قضيتها ، فقال رسول الله : الآن بردت جلدته
" رواه أحمد وصححه الحاكم وحسنه المنذري
பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ”இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி {ஸல்} அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?' என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர்.
'இவர் எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். 'இவர் கடனாளியா? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டபோது 'இரண்டு தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.
நபி {ஸல்} அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை
நடத்துங்கள்' என்றனர். அப்போது, நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா (ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி {ஸல்} அவர்கள்
அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அவரின் கடனை அடைத்து
விட்டீரா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! நேற்று தானே
இறந்திருக்கின்றார்? என்றேன்.
பின்னர், மறுநாள் நானே மாநபி {ஸல்} அவர்களிடம் சென்று
“அல்லாஹ்வின் தூதரே! அந்த இரண்டு தீனார் கடனை நான் அடைத்து விட்டேன்” என்றேன்.
அதற்கு நபி {ஸல்} அவர்கள் “இப்போது தான் அவரின் உடல் மண்ணறையில் குளிர்ந்து
இருக்கும்” என்று நவின்றார்கள்.
நபி {ஸல்} அவர்கள் கடனாளியாக மரணித்து விடக்கூடாது என்கிற
விஷயத்தில் எந்தளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்பதற்கு மேற்குறித்த சம்பவம்
மிகச் சிறந்த சான்றாகும்.
பெரும்பாவங்களுக்குப் பின்னர் பெரிய
பாவமும், மன்னிக்க முடியாத பாவமும்....
ففي صحيح مسلم أن رسول الله – صلى الله عليه وسلم
قام في أصحابه فذكر لهم أن الجهاد في سبيل الله والإيمان بالله أفضل
الأعمال ، فقام رجل فقال : يا رسول الله أرأيت إن قُتلت في سبيل الله تُكفر عني
خطاياي ؟ فقال رسول الله : " نعم ، إن قتلت في سبيل الله وأنت صابر محتسب
مقبل غير مدبر " ، ثم قال رسول الله –
صلى الله عليه وسلم – : " كيف قلت ؟ " ، قال :
أرأيت إن قتلت في سبيل الله أتكفر عني خطاياي ؟ فقال رسول الله : " نعم ،
وأنت صابر محتسب مقبل غير مدبر إلا الدين فإن جبريل عليه السلام قال لي ذلك "
நபி {ஸல்} அவர்களிடத்தில்
ஒரு தோழர்
வருகை தந்து ”அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில்
கொல்லப்பட்டால்,
அது என்னுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அமையுமா?” எனக் கேட்டார்.
அதற்கு
நபியவர்கள் “ஆம். நீ பொறுமைசாலியாகவும்
கூலியை
எதிர்பார்க்கக் கூடியவனாகவும் பின்வாங்காமல் முன்னோக்கிச்
சென்று போர்
புரியக்கூடியவனாகவும் இருக்க அல்லாஹ்வுடைய பாதையில் கொலை
செய்யப்பட்டால்
( அந்த சிறப்பு உனக்குக் கிடைக்கும் )” என்றார்கள்.
பிறகு நபி {ஸல்} அவர்கள்
மீண்டும்
அத்தோழரை அழைத்து, “நீர் எவ்வாறு வினவினீர்?” எனக் கேட்க, அத்தோழரும் முன்பு அவர் கேட்டது போலவே கேள்வியை மீண்டும் கூறினார்.
அதற்கு நபி {ஸல்}
அவர்கள் முன்பு கூறிய அதே பதிலைக் கூறிவிட்டு, “கடனைத் தவிர”
என்று கூறினார்கள். “இதனை நிச்சயமாக ஜிப்ரீல் இப்போது தான் எனக்குக் கூறிவிட்டுச் சென்றார்” எனப்
பகர்ந்தார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வுடைய
பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் சிறப்புக்கள் தொடர்பாக ஏராளமான செய்திகள்
அல்குர்ஆனிலும், நபிமொழிக் கிரந்தங்களிலும் காணக்கிடைக்கின்றது. எடுத்துக்காட்டாக… அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:
وَلَا
تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ
عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
”(விசுவாசங்கொண்டோரே) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் நிச்சயமாக எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்களின்
இரட்சகனிடத்தில்
உயிருள்ளளோராக இருக்கிறார்கள். அவனால் அவர்கள்
உணவளிக்கப்படுகிறார்கள்.
(ஆலு இம்ரான்: 169)
எனவே, இத்தகைய சிறப்பைப் பெற்ற உயிர்த்தியாகிக்குக் கூட
கடன் மன்னிக்கப்பட மாட்டாது என்றால் கடன் குறித்த விஷயம் எவ்வளவு பாரமானது என்பதை
விளங்க வேண்டும்.
يقول الرسول – صلى الله عليه وسلم – : " إن أعظم الذنوب عند الله
أن يلقاه بها عبد بعد الكبائر التي نهى الله عنها أن يموت رجل وعليه دين لا يدع له
قضاءً " رواه أحمد وأبو داود
”அல்லாஹ்விடத்தில்
மிகப் பெரும் பாவமாக கருதப்படுவது எதுவெனில் ஓர் அடியான் அல்லாஹ்வை அவன்
தடுத்திருக்கிற பெரும்பாவங்களோடு சேர்த்து, வாங்கிய கடனை நிறைவேற்றாமலும், அதை
நிறைவேற்றும் அளவிற்கு எதையும் வைக்காமலும் சந்திப்பதாகும்” என்று நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.”
( நூல்: அஹ்மத்,
முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் )
கடன் பட்டோரின் கடனை யார் பொறுப்பேற்க
வேண்டும்?...
நபி {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான வெற்றிகளை கொடுத்தான் பல யுத்தங்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஃகனீமத்தாக
ஏராளமான செல்வங்கள் குவிய ஆரம்பித்தது.
இஸ்லாமிய
சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக அவர்கள் மாறினார்கள்,
மதீனா இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக மாறியது.
தங்களின் கண் முன்னால் கடனை அடைக்க முடியாமல் அல்லல் படும் ஏழைகளின் நிலைமைகளும், இறுதிச் சடங்கின் போது ஏற்படுகிற
சங்கடங்களும் கண் முன் வந்து நிழலாடியது. கடனை அடைக்க அரசின் சார்பாக நிதியுதவி
செய்தார்கள்.
கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத்
தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது 'இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று கேட்பார்கள்.
'கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச்
சென்றிருக்கிறார்' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள்.
இல்லையென்றால் 'நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!'' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.
روى أحمد (24455) عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ
رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( مَنْ حُمِّلَ مِنْ أُمَّتِي
دَيْنًا، ثُمَّ جَهِدَ فِي قَضَائِهِ، فَمَاتَ وَلَمْ يَقْضِهِ، فَأَنَا وَلِيُّهُ )
அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன்
மூலம் செல்வம் குவிந்ததால்), 'இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்!
இறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில்
இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்!
யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது
அவர்களின்
வாரிசுகளுக்குரியதாகும்!'' என்று கூறினார்கள்.
என ஸலமா இப்னு
அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரீ
)
கவலையிலும், சங்கடத்திலும் முடக்கி விடும் ஆற்றல் கொண்டது கடன்....
روى أن النبي – صلى الله عليه وسلم – دخل ذات يوم المسجد فإذا هو برجل
من الأنصار يقال له أبو أمامة ، فقال : يا أبا أمامة ما لي أراك جالساً في المسجد
في غير وقت الصلاة ؟ فقال : هموم لزمتني وديون يا رسول الله ، قال : أفلا أعلمك
كلاماً إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك ؟ قال : قلت : بلى يا
رسول الله ، قال : " قل إذا أصبحت وإذا أمسيت : اللهم إني أعوذ بك من الهم
والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل ، وأعوذ بك من غلبة
الدين وقهر الرجال " ، قال : ففعلت ذلك ، فأذهب الله عز وجل همي وقضى عني
ديني ، ومنها ما رواه أحمد والترمذي وصححه الحاكم وحسنه الألباني
ஒரு முறை நபி
{ஸல்} அவர்கள்
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு
அவர்களைக்
கண்டார்கள். அப்போது அவரை நோக்கி: “தொழுகையுடைய நேரமல்லாத ஒரு நேரத்தில் உங்களைப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருக்கக் காண்கிறேனே!?” என
ஆச்சரியத்துடன் வினவினார்கள்.
அதற்கவர் “என்னைப் பீடித்த துயரமும் கடன்களும் தான் காரணம்
அல்லாஹ்வின் தூதரே!”
என்று பதிலளித்தார். அப்போது நபியவர்கள்: “நீ மொழிந்தால் அல்லாஹுத்தஆலா உன்னுடைய துயரத்தைப் போக்கக்கூடியதும் உன்னுடைய கடனை நிறைவேற்றி வைக்கக்கூடியதுமான ஒரு வார்த்தையை நான் உனக்குக் கற்றுத்தரட்டுமா?” என வினவினார்கள்.
அதற்கு அபூஉமாமா ரலியல்லாஹு அன்ஹு “ஆம். அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளிக்க,
பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
“நீ காலைப் பொழுதையும்
மாலைப் பொழுதையும் அடைந்தால் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பீராக!
اللهُمَّ
إنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ وَأعوْذُ بِكَ مِنَ العَجْزِ
وَالكَسَل وَأعوذ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ وَأعوذ بك مِنْ غَلَبَةِ الدَّيْنِ
وَقَهْرِ الرِّجَال
அபூ உமாமா
ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபியவர்கள் கற்றுத்தந்த
இவ்வார்த்தைகளை
ஓதிவந்தேன். அல்லாஹ் என்றுடைய துயரத்தைப் போக்கி என்னுடைய
கடனையும்
நிறைவேற்றி வைத்தான்.”
( நூல்: அபூதாவுத் )
கடன் வாங்குதலும்… அதன் ஒழுங்கும்….
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِىُّ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِى
الْغَيْثِ عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله
عليه وسلم - قَالَ « مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى
اللَّهُ عَنْهُ ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ »
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவன் மக்களின் பணத்தை அல்லது பொருட்களை திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன்
வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே திருப்பிச்
செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை ஏமாற்றி அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை
அழித்து விடுவான்”
என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (
நூல்: புகாரி )
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى عَنْ مَعْمَرٍ عَنْ
هَمَّامِ بْنِ مُنَبِّهٍ أَخِى وَهْبِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا
هُرَيْرَةَ - رضى الله عنه - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم
- « مَطْلُ الْغَنِىِّ ظُلْمٌ »
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “வசதியுள்ளவர் தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி தள்ளிப் போடுவது
அநியாயமாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ سَلَمَةَ
عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - أَتَى النَّبِىَّ -
صلى الله عليه وسلم - رَجُلٌ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ
أَصْحَابُهُ . فَقَالَ « دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً » .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களிடம் ஒரு மனிதர், தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார். அப்போது, அவர் நபி {ஸல்} அவர்களிடம் சற்றுக் கடுமையாகப் பேசினார்.
அங்கே அமர்ந்திருந்த நபித் தோழர்கள் அவரைத் தண்டிக்க
விரும்பினார்கள். அதைப் புரிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள்
“அவரை விட்டு
விடுங்கள். கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள ஆர்வமும்… அக்கறையும்…
قال الإمام أحمد: حدثنا يونس بن محمد، حدثنا ليث، عن جعفر بن ربيعة، عن
عبد الرحمن بن هُرْمُز، عن أبي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر
"أن رجلا من بني إسرائيل سأل بعض بني إسرائيل أن يُسْلفه ألف دينار، فقال:
ائتني بشهداء أشهدهم. قال: كفى بالله شهيدًا. قال: ائتني بكفيل. قال: كفى بالله
كفيلا. قال: صدقت. فدفعها إليه إلى أجل مسمى، فخرج في البحر فقضى حاجته، ثم التمس
مركبًا يقدم عليه للأجل الذي أجله، فلم يجد مركبًا، فأخذ خشبة فنقرها فأدخل فيها
ألف دينار وصحيفة معها إلى صاحبها، ثم زَجج موضعها، ثم أتى بها البحر، ثم قال:
اللهم إنك قد علمت أني استسلفت فلانًا ألف دينار، فسألني كفيلا فقلت: كفى بالله
كفيلا. فرضي بذلك، وسألني شهيدًا، فقلت: كفى بالله شهيدًا. فرضي بذلك، وإني قد
جَهِدْتُ أن أجد مركبًا أبعث بها إليه بالذي أعطاني فلم أجد مركبًا، وإني
اسْتَوْدعْتُكَها. فرمى بها في البحر حتى ولجت فيه، ثم انصرف، وهو في ذلك يطلب
مركبًا إلى بلده، فخرج الرجل الذي كان أسلفه ينظر لعل مركبًا تجيئه بماله، فإذا
بالخشبة التي فيها المال، فأخذها لأهله حطبًا فلما كسرها وجد المال والصحيفة، ثم
قدم الرجل الذي كان تَسَلف منه، فأتاه بألف دينار وقال: والله ما زلت جاهدًا في
طلب مركب لآتيك بمالك فما وجدت مركبًا قبل الذي أتيت فيه. قال: هل كنت بعثت إلي
بشيء؟ قال: ألم أخبرك أني لم أجد مركبًا قبل هذا الذي جئت فيه؟ قال: فإن الله قد
أدى عنك الذي بعثت به في الخشبة، فانصرف بألفك راشدًا".
وهذا إسناد صحيح وقد رواه
البخاري في سبعة مواضع من طرق صحيحة
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்,
நாங்கள்
அவர்களோடு அமர்ந்திருந்த சபையில் எங்களிடம் கூறினார்கள்:
“இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம்
ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், ”என்னிடம் சாட்சிகளை அழைத்து வாரும்! அவர்களைச் சாட்சியாக வைத்து உமக்கு கடன்
தருகின்றேன்” என்றார்.
கடன் கேட்டவர் “சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்” என்றார். அப்படியானால், “ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டு வாரும்! அவரை ஜாமீனாக வைத்து உமக்கு கடன்
தருகின்றேன்” என்றார் கடன் கேட்கப்பட்டவர்.
அதற்கு, கடன் கேட்டவர் “பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்” என்றார்.
அப்போது, கடன் கேட்கப்பட்டவர் “நீர் கூறுவதும் ஒரு வகையில் உண்மை தான்!” என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர
வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவரிடம் ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்.
கடன் வாங்கியவர் கடல் வழிப் பயணம் புறப்பட்டு,
தம் காரியங்களை
முடித்து விட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச்
செலுத்த வேண்டும் என்பதற்காக வாகன வசதியைத் தேடினார். ஆனால், அவருக்கு எந்த வாகனமும் கிடைக்க வில்லை.
அப்போது, அவர் ஒரு மரக்கட்டையை விலைக்கு வாங்கி, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும், கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.
பின்னர், கடற்கரையோரமாக அந்த மரக்கட்டையை கொண்டு
வந்து, வானை நோக்கி கையை உயர்த்தி….
“இறைவா! இன்ன மனிதரிடம் நான் ஆயிரம்
பொற்காசுகளைக் கடனாகக் கேட்டேன். அவர் பிணையாளி வேண்டுமென்றார். நானோ அல்லாஹ்வே நீயே போதுமானவன்!” என்றேன்.
அவர் உன்னைப்
பிணையாளியாக ஏற்றுக் கொண்டார்.
என்னிடம் சாட்சிகளைக் கொண்டு வருமாறு கோரினார்.
நானோ அல்லாஹ்வே
நீயே சாட்சிக்குப் போதுமானவன்!” என்றேன்.
அவர் உன்னை
சாட்சியாக ஏற்றுக் கொண்டார்.
அவர் கூறிய தவணை முடிவடையும் முன்பாக அவருக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்து
விடும் முயற்சியில் இறங்கி, வாகனத்திற்கு ஏற்பாடு செய்தேன்! அல்லாஹ்வே! ஒரு வாகனமும் எனக்கு கிடைக்கவில்லை. இதையெல்லாம் நீ நன்கறிவாய்!
எனவே, இதோ அவருக்குரிய பொற்காசுகள் நிரப்பிய
மரக்கட்டையை இந்த கடலில் வீசுகின்றேன்! இதை உரியவரிடத்தில் சேர்க்கும்
பொறுப்பையும் உன்னிடத்தில் ஒப்படைக்கின்றேன்” என்று பிரார்த்து விட்டு அதைக் கடலில்
வீசினார். அது கடலின் நடுப்பகுதிக்கு சென்றதும்
திரும்பி விட்டார். அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக
வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார்.
இதனிடையே, கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரின்
வருகையை எதிர் பார்த்த வண்ணம் இருந்தார். ஒன்று அவர் வருவார், அல்லது நமது செல்வத்துடன் வாகனம் எதுவும் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம்
புறப்பட்டார்.
அப்போது, ஒரு ஓரத்தில் ஒரு மரக்கட்டை கிடப்பதைக்
கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப்
பயன்படட்டும் என்கிற நோக்கத்தில் அதை எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்தார்.
அதைப் பிளந்து பார்த்த போது, “ஆயிரம் பொற்காசுகளையும் கடிதத்தையும்
கண்டார்.
சிறிது நாட்கள் கழித்து, கடன் வாங்கியவர் கடன் கொடுத்த
அம்மனிதரைச் சந்திக்க வந்தார். வந்தவர்
”அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! உமது பணத்தை உமக்கு தருவதற்காக வாகனம்
தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது,
தான் வாகனம்
கிடைத்து உம்மிடம் வந்திருக்கின்றேன். இதோ! உமக்கு தருவதற்காக ஆயிரம் பொற்காசுகளை
கொண்டு வந்திருக்கின்றேன்” என்று பொற்காசுகள் பொதியப்பட்ட கைப்பையை
கடன் கொடுத்தவரிடம் காட்டினார்.
அதற்கு கடன் கொடுத்தவர் “எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?” என்று கேட்டார். அப்போது,
கடன் வாங்கியவர் “வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்திருக்கின்றேன் என்று உமக்கு நான்
தெரிவித்தேனே!” என்றார்.
அதற்கு கடன் கொடுத்தவர் “நீர் மரத்தில் வைத்து எனக்கு அனுப்பியதை
உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்து விட்டான்.
எனவே, நீர் கொண்டு வந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு சரியான வழியில் உமது
ஊருக்குச் செல்வீராக! என்றார்.
( நூல்: முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர், புகாரி
)
கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே மிகச் சிறந்த மனிதராவார்….
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ عَنْ
أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ كَانَ لِرَجُلٍ
عَلَى النَّبِىِّ - صلى الله عليه وسلم - سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ
يَتَقَاضَاهُ فَقَالَ - صلى الله عليه وسلم - « أَعْطُوهُ » . فَطَلَبُوا سِنَّهُ
، فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا . فَقَالَ « أَعْطُوهُ » .
فَقَالَ أَوْفَيْتَنِى ، وَفَّى اللَّهُ بِكَ . قَالَ النَّبِىُّ - صلى الله عليه
وسلم - « إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً »
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் தாம் கடனாக வாங்கிய ஒரு
குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. ஒரு முறை அம்மனிதர் தன் ஒட்டகத்தை
திருப்பித் தருமாறு கேட்டு நபி {ஸல்} அவர்களிடம் வந்தார்.
அப்போது, நபித்தோழர்களிடம் “அவருக்கு கொடுத்து விடுங்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். தோழர்கள்
அவருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம் தான் அவர்களுக்குக் கிடைத்தது.
நபி {ஸல்} அவர்கள் ”அதையே அவருக்கு கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் “நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள்!
அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாக அளிப்பானாக!” என்று சொன்னார்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள் “உங்களில் மிகச் சிறந்தவர், தான் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே!” என்று கூறினார்கள். ( புகாரி )
அல்லாஹ் நம் அனைவரையும் கடன் வாங்குவதிலிருந்து பாதுகாப்பானாக!, வாங்கிய கடனை இழுத்தடிக்காமல்
கொடுப்பதற்கு தவ்ஃபீக் செய்வானாக!
அவன் தந்த பொருளாதாரத்தில் பரக்கத் செய்து
அதைக் கொண்டு திருப்தியோடு வாழும் நல்ல நஸீபை தவ்ஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!
நம்முடைய உயிர் உடலை விட்டும் பிரியும் போது கடன் சுமை இன்றி நிரபராதியாகப்
பிரிய அல்லாஹ் அருள் புரிவானாக!
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!
جزاكم الله خيراً في الدّارين.بارك الله في علمك.حيّاك الله حياةً طّيّبةً
ReplyDeleteஆமீன் யாரப்பல் ஆலமீன்!
DeleteJazakllah
ReplyDeleteஅல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), 'இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்!
ReplyDeleteஇறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்!'' என்று கூறினார்கள். என ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தரவும்
في رواية الترمذي عن أبي هريرة: أن رسول الله صلى الله عليه وسلم كان يؤتى بالرجل المتوفى عليه الدين فيقول: هل ترك لدينه من قضاء، فإن حدث أنه ترك وفاء صلى عليه، وإلا قال للمسلمين: صلوا على صاحبكم. فلما فتح الله عليه الفتوح قام فقال: أنا أولى بالمؤمنين من أنفسهم، فمن توفي من المسلمين فترك ديناً علي قضاؤه، ومن ترك مالاً فهو لورثته. وهو حديث صحيح
Delete