Thursday, 12 April 2018

ராகுல் காந்தியின் மன்னிப்பும்… இம்ததுல்லாஹ் அவர்களின் பொறுமையும்…


ராகுல் காந்தியின் மன்னிப்பும்
இம்ததுல்லாஹ் அவர்களின் பொறுமையும்

 

 
நாட்டில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒரு சம்பவம் வெகுவாகப் பாராட்டப்படுகின்றது.

இன்னொன்று கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருக்கின்றது. பாராட்டைப் பெறுகிற அந்த சம்பவம் அரசியல் பிரபலம் தொடர்புடையது. கண்டு கொள்ளப்படாத அந்த சம்பவம் சாமானிய முஸ்லிம் ஒருவரோடு தொடர்புடையது.

கடந்த மார்ச் 10 –ஆம் தேதி சிங்கப்பூரிலுள்ள ஐ..எம் எனும் கல்வி நிறுவனமொன்றின் முன்னாள் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்த உரையில் ”தமது தந்தையை கொலை செய்த குற்றத்தில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானித்தமையை நினைவுபடுத்திப் பேசிய ராகுல் காந்தி 2016ஆம் ஆண்டில் இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்ததையும் சுட்டிக் காட்டினார்.

தமது தந்தையை கொலை செய்தவர்களை தாமும் தமது சகோதரி பிரியங்காவும் மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி அந்த உரையில் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் அண்டு மே மாதம் 21 ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னித்து விட்டதாக பொதுவெளியில் பதிவு செய்கின்றார்.

அதுவும் அந்த சம்பவத்தோடு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருக்கும் அந்த குற்றவாளிகளை தாமும், அவர் தம் சகோதரியும் மன்னித்து விட்டதாக கூறுகின்றார்.

இதை அரசியல் தலைவர்களும், சமூகத்தின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் வெகுவாகப் பாராட்டியும், ராகுல் காந்தியின் பெருந்தன்மையை இது குறிப்பதாகவும் புகழாரம் சூட்டுகின்றனர்.

ராகுல் காந்தியின் மன்னிப்பை பாராட்டிய இதே அரசியல் தலைவர்களும், சமுதாய அமைப்பின் தலைவர்களும் அதை விட பன்மடங்கு பெருந்தன்மையோடு நடந்து கொண்ட ஒரு மாமனிதரையும் பாராட்டி இருக்க வேண்டும்.

அந்த மனிதர் குறித்த செய்திகளை பாராட்டி ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அப்படி யாரும் செய்யவில்லை. அந்த பெருந்தன்மையான காரியத்தைச் செய்தது இம்ததுல்லாஹ் எனும் ஒரு முஸ்லிம் என்கிற காரணத்தால் தான்.

விதிவிலக்காக தமிழ் ஹிந்து நாளிதழின் வெளியீட்டு இதழான காமதேனு இதழ் மட்டும் சமாதான தூதுவர் எனும் தலைப்பில் தமது கடைசி பக்கத்தில் 4 வரியுடன் செய்தியை வெளியிட்டு இருந்தது.

கடந்தவாரம் நாடெங்கும் இராம நவமி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இராம பக்தர்கள் என்றும், தேச பக்தர்கள் என்றும் அழைக்கப்படுகிறவர்களால் இராம நவமி ஊர்வலங்கள் தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது.

மேற்குவங்கம் அசன் சாலில் நடந்த இராம நவமி ஊர்வலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையில் நூரானீ மஸ்ஜிதின் இமாம் மௌலானா இம்தாதுல்லாஹ் ரஷீதி அவர்களின் 16 வயது நிரம்பிய, பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அழகிய ஆண்மகன் ஸிப்ஃகதுல்லாஹ் கொடூர கொலை செய்யப்பட்டார்.

இராம நவமி ஊர்வலம் நடைபெற்ற அன்று இமாம் அவர்களின் மகன் காணாமல் போயிருக்கின்றார். இமாம் அவர்களும் காவல் நிலையத்தில் சென்று தன் மகனை காணவில்லை என்று புகாரை பதிவு செய்திருக்கின்றார்.

நான்கு நாட்கள் கழித்து முக நூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில், 16 வயது நிரம்பிய அந்த ஆண்மகனை கம்பத்தில் கட்டி வைத்து பக்தர்கள் போர்வையில் இருந்த காவிப்பயங்கரவாதிகளும், தேச பக்தர்கள் எனும் போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் தேச விரோதிகளும் ஆயுதங்களால் கடுமையாக அடித்து, தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்கிற காட்சி வைரலாக மேற்கு வங்கும் முழுவதும் பரவியது.

அடுத்த சில நொடிகளில் நாடெங்கும் அந்த வீடியோ பரபரப்பாக பேசப்பட்டது. தன் மகன் கொடூரமாக கொலை செய்யப்படுகிற அந்த வீடியோ காட்சியை இமாம் அவர்களிம் கனத்த இதயத்தோடும், விழிகளில் வழிந்தோடிய கண்ணீரோடும் பார்க்கின்றார்.

இறுதிச் சடங்கிற்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவு பெற்று மாநில மற்றும் சொந்த ஊர், சொந்த மாவட்ட முஸ்லிம் மக்கள் என பல்லாயிரக்கணக்காணோர் ஜனாஸா தொழுகையில் பங்கெடுக்க திரண்டிருந்தனர்.

திரண்டிருந்த மக்கள் கூட்டம் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்த இமாம் சிறிய உரையொன்றை நிகழ்த்தினார்.

“அல்லாஹ்வால் அருளப்பட்ட என் மகனின் ஆயுட்காலம் முடிந்து போனது. அவனுக்கான வாழ்வை அவன் வாழ்ந்து முடித்து விட்டான். இனி இன்னொருவரின் வாரிசு இது போன்று கொல்லப்படாமல் தடுப்பதும், அமைதியையும், சமாதானத்தையும் நாடெங்கிலும் ஏற்படுத்துவது தான் நம் மீதான கடமை.

என் மீதும், என் மகன் மீதும் நீங்கள் உண்மையிலேயே அன்பு கொண்டிருக்கின்றீர்களென்றால் அமைதியாக இப்படியே கலைந்து சென்று விடுங்கள்.

என்னுடைய அசன்சாலில், என்னுடைய இந்த ஊரில், என்னுடைய இந்த நாட்டில் ஒற்றுமையும், அமைதியும் நிலவுவது அவசியம் என்பதை நான் அறிவேன்.

எனவே, அமைதிக்கும், நிம்மதிக்கும் குந்தகம் விளைவிக்கும் எத்தகைய வன்முறையிலும் எவரும் ஈடுபட வேண்டாம்” என திரண்டிருக்கும் உங்களையும், இந்த தேசத்தின் முஸ்லிம் உம்மத்தையும் கேட்டுக் கொள்கின்றேன்” என்று இமாம் இம்தாதுல்லாஹ் ரஷீதி அவர்கள் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதி தவழ உரையாற்றினார்.

இந்த உரையைக் கேட்டு கண்ணீருடனும், கனத்த இதயத்துடனும் திரண்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

படுகொலை செய்யப்பட்டதை அறிந்த காவல்துறை அதிகாரிகள் இமாம் அவர்களை அழைத்து “ நீங்கள் யார் மீதாவது சந்தேகம் கொள்கின்றீர்களா? எனக் கேட்டதற்கு, நான் யார் மீது சந்தேகப்படுவது? என் மகன் இறந்து விட்டான். என் மகனை கொலை செய்த எவரையும் நான் பார்க்கவில்லை” என் ஒருவனின் இழப்புக்காக அப்பாவிகள் பிரச்சனைகளில் சிக்குவதை நான் விரும்பவில்லை” இயன்றால் நீங்களே கொலைக் குற்றவாளிகளை கைது செய்து கொள்ளுங்கள்” என்று இமாம் அவர்கள் கூறிவிட்டார்கள். ( ஹிந்துஸ்தான் டைம்ஸ், த சிட்டிசன்.இன் )

உணர்ச்சிப் பெருக்கும், ஆவேசமும், ஆத்திரமும் நிறைந்திருந்த அந்தச் சூழலில் மிகப் பெரிய அளவிலான சேதத்தை தவிர்க்கும் முகமாக இமாம் அவர்கள் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கையாண்டு நாட்டில் வன்முறை, கலவரம் ஏதும் நிகழா வண்ணம் தடுத்திருக்கின்றார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இமாம் அவர்களுக்கு நிறைவான நற்கூலியையும், சிறந்த பகரத்தையும், படுகொலை செய்யப்பட்ட அவரது மகனுக்கு ஷஹீதுடைய அந்தஸ்தையும் வழங்குவானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

சிறுவயது மரணம் அதற்காக பொறுமை காப்பதும்… நன்மையை எதிர்பார்த்து இருப்பதும்….

حدثنا موسى بن إسماعيل حدثنا عبد الواحد حدثنا عاصم عن أبي عثمان عن أسامة بن زيد قال كان ابن لبعض بنات النبي يقضي فأرسلت إليه أن يأتيها فأرسل إن لله ما أخذ وله ما أعطى وكل إلى أجل مسمى فلتصبر ولتحتسب   فأرسلت إليه فأقسمت عليه فقام رسول الله صلى الله عليه وسلم وقمت معه ومعاذ بن جبل وأبي بن كعب وعبادة بن الصامت فلما دخلنا ناولوا رسول الله الصبي ونفسه تقلقل في صدره حسبته قال كأنها شنة فبكى رسول فقال سعد بن عبادة أتبكي ؟ فقال
 إنما يرحم الله من عباده الرحماء
رواه البخاري


உஸாமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள் என் மகன் உயிர் பிரியும் தருவாயில் உள்ளான்; எனவே தாங்கள் வருகை தர வேண்டும்என்று சொல்லியனுப்பினார்கள்.

அப்போது அண்ணலார் அவர்களுக்கு ஸலாம் கூறியனுப்பினார்கள். மேலும், அல்லாஹ் வாங்கிக் கொள்வதனைத்தையும் அவனுடையதேயாகும். ஒவ்வொரு விஷயமும் அவனிடம் முடிவானதும், கால நிர்ணயம் நிச்சயிக்கப்பட்டதுமாகும். எனவே, நீ மறுமையில் கூலி பெறும் எண்ணத்துடன் பொறுமையை மேற்கொள்! என்றும் சொல்லியனுப்பினார்கள்.

மீண்டும் நபி (ஸல்) அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள் அவசியம் வருகை தரும்படி வலியுறுத்திக் கூறியனுப்பினார்கள்.

அப்போது, அண்ணலாரும் அண்ணலாருடன் ஸஅத் பின்  உப்பாதா (ரலி),முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் க அப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும், இன்னும் சிலரும் சென்றார்கள். குழந்தை அண்ணலாரிடம் கொண்டு வரப்பட்டது.

அண்ணலார் (ஸல்) தம்மடி மீது குழந்தையை அமர்த்திக் கொண்டார்கள். அப்போது அந்த குழந்தையின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது.

இந்தக் காட்சியைக் கண்டு நபி (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து வெள்ளமென கண்ணீர் வழியலாயிற்று.

இதைக் கண்ட ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது என்ன? (தாங்கள் அழுகின்றீர்களே) எனக் கேட்டார்கள்,

அப்போது, அண்ணலார் (ஸல்) “இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளத்தில் வைத்துள்ள கருணை உணர்ச்சியாகும்என்றார்கள் காரூண்ய நபி (ஸல்) அவர்கள்.

                ( நூல்: புகாரி )

பழிவாங்கும் உணர்ச்சியை விட மன்னித்தலும், பொறுமையுமே சிறந்ததாகும்...

روى الدارقطني عن ابن عباس قال: لما انصرف المشركون عن قتلى أحد انصرف رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فرأى منظرا ساءه، رأى حمزة قد شق بطنه، واصطلم أنفه، وجدعت أذناه، فقال:" لولا أن يحزن النساء أو تكون سنة بعدي لتركته حتى يبعثه الله من بطون السباع والطير لأمثلن مكانه بسبعين رجلا"

உஹத் யுத்தகளத்தை மாநபி {ஸல்} அவர்கள் யுத்தம் முடிந்து ஷஹீத்களை பார்வையிட்டு வருகிற பொழுது, ஒரு உடலின் அருகே மாநபி {ஸல்} அவர்கள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றார்கள். நெஞ்சு பொறுக்காமல் அழுகின்றார்கள்.

ஆம்! அஸதுல்லாஹ் ஹம்ஜா (ரலி) அவர்களின் வீர மரணம்! மாநபி {ஸல்} அவர்களை ஓர் உலுக்கு உலுக்கிற்று!

வயிறு கிழிக்கப்பட்டு, குடல்கள் எல்லாம் அறுக்கப்பட்டு, மூக்கு சிதைத்து, காதுகளை கிழித்து, தலையை கொய்து, மண்டை ஓட்டை பிய்த்து எடுத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த ஹம்ஜா (ரலி) அவர்களின் உடலைப் பார்த்த மாநபி {ஸல்} அவர்கள்.....

பெண்கள் கவலை கொள்வார்கள் எனும் அச்சம் எனக்கு இல்லை எனில், எனக்குப் பிறகு இந்த நடைமுறை காலம், காலமாக பின்பற்றப்பட்டு விடுமோ எனும் அச்சம் எனக்கு இல்லாதிருக்குமானால்,

என் பெரிய தந்தையே! உங்களின் இந்த உடலை இந்த வனாந்தரத்திலேயே விட்டு விட்டுச் சென்று விடுவேன்! நாளை மஹ்ஷ்ரில் அல்லாஹ் மக்களை அவர்களின் புதைகுழிகளில் இருந்து எழுப்பும் போது, அவர்கள் அங்கிருந்து எழுந்து வரும்போது, நீங்கள் இந்த வனாந்தரத்தில் விடப்பட்ட பின்னர் உங்களை தின்ற வனவிலங்குகளின் வயிறுகளில் இருந்து மஹ்ஷரை நோக்கி வருவதை நான் விரும்பி இருப்பேன்! இப்போது சொல்கின்றேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதே போன்று எதிரிகளின் எழுபது பேர்களை சிதைக்காமல் விட மாட்டேன்என சபதமெடுத்து விட்டு, கஃபன் செய்து மாநபி {ஸல்} அவர்கள் அங்கேயே ஓரிடத்தில் அடக்கம் செய்தார்கள்.

அந்த இடத்திலேயே மாநபி {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ்….

وَإِنْ عاقَبْتُمْ فَعاقِبُوا بِمِثْلِ ما عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ ()

நீங்கள் தண்டிக்க வேண்டும் என விரும்பினால் உங்களை அவர்கள் எவ்வாறு தண்டித்தார்களோ அவ்வாறே தண்டித்து விடுங்கள் நபியே! மாறாக, நீங்கள் பொறுமை காத்தீர்கள் என்றால் அதுவே பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்ததாகும்என இறைவசனத்தை இறக்கியருளினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபதத்தை முறித்துக் கொண்டு, சத்தியத்திற்கான பரிகாரத்தைச் செய்தார்கள். ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ, இப்னு கஸீர் )


-
ﺩﺧﻞ (اﺑﻦ ﻋﻤﺮ) ﻋﻠﻰ (ﻋﺜﻤﺎﻥ) -ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ- ﺃﺛﻨﺎء ﺣﺼﺎﺭﻩ، ﻓﻘﺎﻝ ﻟﻪ
ﻋﺜﻤﺎﻥ) - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ -: اﻧﻈﺮ ﺇﻟﻰ ﻣﺎ ﻳﻘﻮﻝ ﻫﺆﻻء، ﻳﻘﻮﻟﻮﻥ: اﺧﻠﻌﻬﺎ ﻭﻻ ﺗﻘﺘﻞ ﻧﻔﺴﻚ، ﻓﻘﺎﻝ (اﺑﻦ ﻋﻤﺮ) ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ: ﺇﺫا ﺧﻠﻌﺘﻬﺎ ﺃﻣﺨﻠﺪ ﺃﻧﺖ ﻓﻲ اﻟﺪﻧﻴﺎ؟ ﻓﻘﺎﻝ (ﻋﺜﻤﺎﻥ) - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ -: ﻻ، ﻗﺎﻝ: ﻓﺈﻥ ﻟﻢ ﺗﺨﻠﻌﻬﺎ ﻫﻞ ﻳﺰﻳﺪﻭﻥ ﻋﻠﻰ ﺃﻥ ﻳﻘﺘﻠﻮﻙ؟ ﻗﺎﻝ (ﻋﺜﻤﺎﻥ) - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ -: ﻻ، ﻗﺎﻝ: ﻓﻬﻞ ﻳﻤﻠﻜﻮﻥ ﻟﻚ ﺟﻨﺔ ﺃﻭ ﻧﺎﺭا؟ ﻗﺎﻝ: ﻻ، ﻗﺎﻝ: ﻓﻼ ﺃﺭﻯ ﻟﻚ ﺃﻥ ﺗﺨﻠﻊ ﻗﻤﻴﺼﺎ ﻗﻤﺼﻜﻪ اﻟﻠﻪ ﻓﺘﻜﻮﻥ ﺳﻨﺔ ﻛﻠﻤﺎ ﻛﺮﻩ ﻗﻮﻡ ﺧﻠﻴﻔﺘﻬﻢ ﺃﻭ ﺇﻣﺎﻣﻬﻢ ﻗﺘﻠﻮﻩ.
- وعرض عليه الصحابة ﺃﻥ ﻳﺪاﻓﻌﻮا ﻋﻨﻪ، ﻭﻳﺨﺮﺟﻮا اﻟﻐﻮﻏﺎء ﻋﻦ اﻟﻤﺪﻳﻨﺔ ﺇﻻ ﺃﻧﻪ ﺭﻓﺾ ﺃﻥ ﻳﺮاﻕ ﺩﻡ ﺑﺴﺒﺒﻪ، ﻭﺃﺭﺳﻞ ﻛﺒﺎﺭ اﻟﺼﺤﺎﺑﺔ ﺃﺑﻨﺎءﻫﻢ ﺩﻭﻥ اﺳﺘﺸﺎﺭﺓ (ﻋﺜﻤﺎﻥ) ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻭﻣﻦ ﻫﺆﻻء (اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻋﻠﻲ) ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻭ(ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ) ، وﺃﺭﺳﻞ (على بن أبى طالب) ﺇﻟﻰ
ﻋﺜﻤﺎﻥ
 ﻓﻘﺎﻝ: ﺇﻥ ﻣﻌﻲ ﺧﻤﺴﻤﺎﺋﺔ ﺩاﺭﻉ (فارس مدرع)، ﻓﺄﺫﻥ ﻟﻲ ﻓﺄﻣﻨﻌﻚ ﻣﻦ اﻟﻘﻮﻡ، ﻓﺈﻧﻚ ﻟﻢ ﺗﺤﺪﺙ ﺷﻴﺌﺎ ﻳﺴﺘﺤﻞ ﺑﻪ ﺩﻣﻚ، ﻓﻘﺎﻝ: ﺟﺰﻳﺖ ﺧﻴﺮا، ﻣﺎ ﺃﺣﺐ ﺃﻥ ﻳﻬﺮاﻕ ﺩﻡ ﻓﻲ ﺳﺒﺒﻲ ،

உஸ்மான் (ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த போது இப்னு உமர் (ரழி) அவர்கள் அங்கு சென்றதும் உஸ்மான் (ரழி) அவர்கள் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் முகீரா இப்னு அஹ்னஸ் கூறுவது பற்றி நீர் என்ன சொல்கிறீர்’; என்றுஆலோசனை கேட்கிறார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் நீங்கள் ஆட்சியை அவர்களுக்குக் கொடுத்து விட்டால் உங்களை உலகில் அவர்கள் வாழவிடுவார்கள் என்று நினைக்கிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள்இல்லை என்னைக் கொலை செய்வார்கள்என்றார்கள்.

மீண்டும் இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் ஆட்சியை நீங்கள்அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் உம்மைக் கொலை செய்வதைத் தவிர வேறெதையாயினும் அவர்களால் செய்ய முடியுமா?’ எனக் கேட்டார்கள்.

அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் இல்லைஎன்றார்கள். தொடர்ந்தும்  இப்னு உமர் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் அவர்களுக்கு சொர்க்கமும், நரகமும் சொந்தமா?’ எனக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் ;இல்லைஎன்றார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் நீங்கள் ஆட்சியை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தால் இஸ்லாத்தில் அது முதல் ஸுன்னாவாக மாறிவிடும். எனவே அல்லாஹ் உங்களுக்கு அணிவித்த இந்த ஆடையை அல்லாஹ்வை சந்திக்கும் வரை நீங்கள் கழட்ட வேண்டாம் அதுவே நான் உங்களுக்குக் கூறும் அறிவுரைஎன்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உஸ்மான் (ரழி) அவர்கள் தன் உயிர் பிரியும் வரை இதே ஆலோசனையில் உறுதியாக இருந்தார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த போது சில நபித்தோழர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் சென்று ஹஜ்ஜுக்குச் செல்ல அனுமதி கேட்டார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் அவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

அப்போது அந்த நபித்தோழர்கள் நாம்  ஹஜ்ஜுக்குச் சென்று வரும் போது ஆட்சி அவர்களுக்கு மாறிவிட்டால் நாம் என்ன செய்வது?’ என்று கேட்டார்கள் அதற்கவர்கள் கூட்டமைப்போடு இருந்து கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

அதற்கு அந்நபித்தோழர்கள் கூட்மைப்பு அவர்களுக்கு பைஅத் செய்திருந்தால் நாம் என்ன செய்வது?’ என்று கேட்டதும் உஸமான் (ரழி) அவர்கள் அவர்களோடு இருந்து கொள்ளுங்கள்என்றார்கள்.

அப்போது ஹஸன் (ரழி) அவர்கள் அங்கே வந்து உஸ்மானே நான் உங்கள் கையிலிருக்கின்றேன் தாங்கள் சொன்னால் அவர்களோடு போர் செய்யவும் தயாராகவுள்ளேன் என்றார்கள்.

அப்போது உஸ்மான் (ரழி) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் ஏவல் வரும் வரை திரும்பிச் சென்று வீட்டிலிருப்பீராக! இரத்தம் ஓட்டுவதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை!” என்றார்கள்.

( நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}.... )

மன்னிப்பதற்கும், பொறுமை காப்பதற்கும் பெருந்தன்மையான மனம் வேண்டும்...

உஹத் யுத்தகளத்தின் பரபரப்பான தருணம் அது

புறமுதுகிட்டு ஓடிய எதிரிகள் மீண்டும் வந்து முஸ்லிம்களை நிலை குலையச் செய்த அபாயகரமானச் சூழல், நாலா புறமும் முஸ்லிம்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர்.

இப்போது, யுத்தகளம் முழுவதையும் எதிரிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.

" وَأَمّا حُسَيْلُ بْنُ جَابِرٍ فَاخْتَلَفَتْ عَلَيْهِ أَسْيَافُ الْمُسْلِمِينَ فَقَتَلُوهُ وَلَا يَعْرِفُونَهُ فَقَالَ حُذَيْفَةُ : أَبِي ! فَقَالُوا : وَاَللّهِ إنْ عَرَفْنَاهُ، وَصَدَقُوا!! قَالَ حُذَيْفَةُ : يَغْفِرُ اللّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرّاحِمِينَ . فَأَرَادَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يَدِيَهُ، فَتَصَدّقَ حُذَيْفَةُ بِدِيَتِهِ عَلَى الْمُسْلِمِينَ ، فَزَادَهُ ذَلِكَ عِنْدَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ خَيْرًا "
"سيرة ابن هشام" (2 / 86)
وروى البخاري (4065) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ : أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ ! فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ ( أي وهم يظنون أنهم من العدو ) فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ : أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ! فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ . فَقَالَ حُذَيْفَةُ : غَفَرَ اللَّهُ لَكُمْ .
 وكان النبي صلى الله عليه وسلم قد أَسَرَّ إلى حذيفة أسماء المنافقين ، وضبط عنه الفتن الكائنة في الأمة .

இந்த யுத்தத்தில் ஹுதைஃபா (ரலி) அவர்கள், தங்களது தந்தை ஹுஸைல் இப்னு ஜாபிர் (ரலி) அவர்களோடு களம் புகுந்திருந்தார்கள்.

இருவரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஹுஸைல் (ரலி) அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் எதிரி தப்பி ஓடுகின்றான். அவனைத் துரத்திக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்கள் ஓடுகின்றார்கள்.

சற்று தூரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, ஹுஸைல் (ரலி) அவர்களை எதிரியாகவும், தப்பி ஓடும் எதிரியை முஸ்லிமாகவும் தவறாக நினைத்துக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்களுக்குப் பின்னால், அவரைத் தாக்க துரத்திக் கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் நின்று கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதைக் கண்ணுற்று நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்தவர்களாகதோழர்களே! அவர் என் தந்தை, அவர் ஒரு முஸ்லிம்என உரக்க சப்தமிட்டவாறே பின்னால் ஓடினார்கள்.

யுத்தகளத்தின் களேபரத்தில் ஹுதைஃபாவின் குரல் நபித்தோழர்களின் செவிகளுக்கு எட்டவில்லை.

எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ அது நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விட்டது. ஆம் நபித்தோழர்கள் ஹுதைஃபாவின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.

ஹுஸைல் (ரலி) அவர்களின் தலை துண்டாக வீழ்ந்த அதே நேரத்தில், அவர்கள் அணிந்திருந்த முகக்கவசமும் உடைந்து தெறித்தது.

நபித்தோழர்கள் அருகே சென்று பார்க்கின்றார்கள். அது ஹுதைஃபா (ரலி) அவர்களின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்கள்.

ஒரு முஸ்லிமை சக முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயமாக கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வோடு தலைகுனிந்தவர்களாக செய்வதறியாது விக்கித்து நின்றார்கள் நபித்தோழர்கள்.

இதே நேரத்தில் ஹுதைஃபா அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். செய்வதறியாது விக்கித்து நிற்கும் தோழர்களை இரக்க மனதோடும், வாஞ்சையோடும் நோக்கிய ஹுதைஃபா (ரலி) அவர்கள்தோழர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்! நீங்கள் ஒன்றும் என் தந்தையை திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை! தவறுதலாகத்தான் செய்து விட்டீர்கள்! கிருபையாளர்களுக்கெல்லாம் கிருபையாளனான அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்! என்று உணர்வுகளை அடக்கி, உயர்ந்த எண்ணத்தோடு வார்த்தைகளை உதிர்த்து விட்டு, யுத்தகளம் நோக்கி எதிரிகளைத் தாக்க விரைந்து சென்றார்கள்.

யுத்தகளம் ஓய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் எடுத்துச் சொல்லப்பட்டது. ஹுதைஃபா (ரலி) அவர்களை அழைத்து கட்டித்தழுவி ஆறுதல் மொழி பகர்ந்தார்கள்.

தந்தையை இழந்த மகனுக்கு தக்க நஷ்ட ஈட்டை வழங்குமாறு ஹுஸைலைக் கொன்ற நபித்தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

நஷ்டஈடாக வழங்கப்பட்ட தொகையை அண்ணலாரிடமே திருப்பித்தந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! இந்த தொகையை ஏழை முஸ்லிம்களுக்கு உங்கள் கரங்களாலே வழங்கி விடுங்கள்என்று கூறி நபி {ஸல்} அவர்களை நெகிழ வைத்தார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹுதைஃபா (ரலி) அவர்களின் மீதான அன்பும், நேசமும் நபி {ஸல்} அவர்களுக்குப் பல்கிப் பெருகியது.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}…, ஸீரத் இப்னு ஹிஷாம், புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடுமையான சோதனைகள், மனதை கனக்கச் செய்யும் இழப்புக்கள், மோசமான மரணங்கள், தாங்கமுடியாத வலிகள், மனச் சுமைகள் ஆகியவற்றிலிருந்து உங்களையும் என்னையும் நம் சந்ததிகள், நம் குடும்பத்தார்கள் அனைவரையும் காத்தருள்வானாக! ஆமீன்!!

ஆசிஃபா பானு எனும் மலரை கசக்கிப்பிழிந்த காவிகள்!!!

 


முஸ்லிம்களின் மீதான வெறுப்புணர்வும், காழ்ப்புணர்ச்சியும் ஃபாஸிச பயங்கர வாதிகளால் 100 ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு சிறிய, சிறிய இடைவெளிக்குப் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக தொடுக்கப்பட்டு வருவதைப் பார்த்து வருகின்றோம்.

சில போது, ஆளும் வர்க்கத்தின் மூலமாகவும், சில போது ஊடகங்களின் மூலமாகவும், சில போது நீதி மற்றும் சட்டத்தின் மூலமாகவும், சில போது வன்முறை மற்றும் கலவரங்களின் மூலமாகவும், சில போது விமர்சனங்களின் மூலமாகவும், சில போது கொடூரமான படுகொலைகளின் மூலமாகவும் இப்படியாக முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடரப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் மாட்டுக்கறி பிரச்சனை தொடர்பாக 36 பேருக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

 How did Asifa disappear?

When she went missing on 10 January, her family was living in a village around 72km (45 miles) east of Jammu city. On that afternoon, her mother recalls, Asifa went to the forest to bring home the horses. The horses returned but Asifa did not.
Ms Naseema informed her husband. He and some neighbours started looking for her. Armed with flash lights, lanterns and axes, they went deep into the forest and searched through the night. But they could not find her.
Two days later, on 12 January, the family filed a police complaint. But, according to Mr Pujwala, the police were not helpful. One of the police officers, he alleges, said Asifa must have "eloped" with a boy.
As news of the crime news spread, Gujjar staged protests and blocked a highway, forcing police to assign two officers for the search. One of those who was assigned, Deepak Khajuria, was himself arrested in connection with the crime.
Five days later, Asifa's body was found.
"She had been tortured. Her legs were broken," recalled Ms Naseema, who had rushed to the forest along with her husband to see the body. "Her nails had turned black and there were blue and red marks on her arm and fingers."
இந்நிலையில், ஜம்மு கஷ்மீர் மாநிலம் ரசானா கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது யூசுஃப், நஸீமா தம்பதியரின் 8 வயது மகள் ஆசிஃபா காணாமல் போகின்றார் 10/01/2018 அன்று.

குதிரை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் ஆசிஃபாவை காணவில்லை என போலீஸில் புகார் அளித்தார் ஆசிஃபாவின் தந்தை யூசுஃப் 12/01/2018 அன்று.

இந்நிலையில் காணாமல் போன 7 ( 19/01/2018 ) நாட்களுக்குப் பிறகு காட்டுப்பகுதியில் சடமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும், சிறுமியை கற்பழித்த விவகாரத்தில் தொடர்புடைய காவிக் கும்பலிடம் 1.50 லட்சம் லஞ்சமாகப் பெற்று காவல்துறை வழக்கை மூடி மறைக்க திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர்களின் கடுமையான போராட்டம் காரணமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பின்னர் இந்த வழக்கு ஜம்மு கஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டு 8 காவி குண்டர்களை கைது செய்துள்ளது.

இந்த 8 பேர்களில் சஞ்ஜய் ராம் என்கிற 60 வயதான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தலைமை தாங்கி, மூளையாக செயல்பட்டிருக்கின்றான்.

சிறுமியை கடத்திச் சென்றி, கோவிலில் அடைத்து வைத்து மயக்கமருந்து கொடுத்து தொடர்ச்சியாக பல நாட்கள் கொடூரமாக கற்பழித்து சிறுமியின் முகத்தில் கல்லால் அடித்து கொன்றிருக்கின்றனர்.

இது போன்ற ஈனச் செயலை, மாபாதகச் செயலை துணிந்து காவிகள் செய்வதற்கு காரணம் பாஜக மத்தியிலும், கஷ்மீரில் கூட்டணி ஆட்சியிலும் அமர்ந்திருப்பது தான்.

இந்தக் கொடூர குற்றவாளிகளுக்கு கஷ்மீரின் வக்கீல்களும், காவல்துறையின் இரண்டு உயரதிகாரிகளும், ஜம்மு பாஜக வின் இரண்டு அமைச்சர்களும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம் சமூகத்து ஆண்களை கொடூரமாக கொலை செய்வதும், முஸ்லிம் பெண்மக்களை குழந்தைகள் என்று கூட பார்க்காமல் ஈவு இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்து கொல்வதும் என்று ஃபிர்அவ்னிய சிந்தனையோடு திரிந்து கொண்டிருக்கும் காவிப்பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிக்குமானால் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் கொஞ்சமாவது குறையும்.

யாஅல்லாஹ்! இரக்கமற்ற இப்பாவிகளை, ஃபிர்அவ்னிய சிந்தனை கொண்ட இந்தக் காவிகளை நீயே கடுமையாக தண்டிப்பாயாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத் காலத்திற்கேற்ப கண்ணீர் பதிவுகள். إنما أشكو بثي وحزني إلى الله என்ற நிலை மட்டுமே முஸ்லிம்களுக்கு உதவும்.

    ReplyDelete