இன்றைய உலகில்
அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் அம்சமாக இஸ்லாமும்,
இறைத்தூதர் {ஸல்} அவர்களும்
இருப்பதை நாம் உணர்ந்து
வருகின்றோம்.
இஸ்லாமும், இறைத்தூதர்
{ஸல்}
அவர்களும் விமர்சிக்கப்படுவதற்கு நியாயமான
காரணங்கள் எதுவும் இல்லை.
என்றாலும், ஏதாவது
சாக்கு போக்குகளை வாரி
இறைத்து விமர்சனங்களை தொடர்ச்சியாக
தொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் ஏற்று வாழ்கிற,
பரந்துபட்ட பாருலகின் 200 கோடிக்கும்
மேற்பட்ட முஸ்லிம்களாகிய நமக்கு
விமர்சனங்களுக்கான பதிலை
தர வேண்டிய கடமையும்
கடப்பாடும் இருக்கிறது.
அந்த வகையில்,
இஸ்லாமும், இறைத்தூதர் {ஸல்}
அவர்களும் எங்கெல்லாம் விமர்சிக்கப்பட்டார்களோ, அங்கெல்லாம் அந்தந்த
கால கட்டத்தில் வாழ்ந்த
அறிஞர் பெருமக்களும், மேன்மக்களும்
தகுந்த எதிர்வினையை ஆற்றியதாக
வரலாற்றின் ஊடாக விளங்க
முடிகின்றது.
இதுபோன்ற தருணங்களில்
நாம் நமக்கேன் வம்பு
என்று மௌனிகளாக இருந்து
விடுகின்றோம் அல்லது மிக
எளிதாக கடந்து விடுகின்றோம்
எனில், நன்றாக விளங்கிக்
கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் விசாரணை
மன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவோம்.
“இன்னும், அந்நாளில்,
(அல்லாஹ் வழங்கிய) அருட்கொடைகள்
குறித்து நீங்கள் ஒவ்வொருவரும்
கேள்வி கேட்கப்படுவீர்கள்”. ( அல்குர்ஆன்:
102: 8 )
நமக்கு வழங்கப்பட்ட
அருட்கொடைகளில் இருபெரும் அருட்கொடைகளான
இஸ்லாம் குறித்தும், இறைத்தூதர்
முஹம்மது {ஸல்} அவர்கள்
குறித்தும் நாம் இறைவனால்
கேள்வி கேட்கப்படுவோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இத்தகைய நிலையிலிருந்து உங்களையும், என்னையும்
முழு உம்மத்தையும் பாதுகாத்து
அருள்வானாக!! ஆமீன்!
இஸ்லாம் இந்த
உலகில் அதிக மக்களால்
அன்றாடம் தேடப்படும், பேசப்படும்
பேசு பொருள் ஆகும்.
உலகில் ஏதாவதொரு காரணத்திற்காக
அன்றாடம் இஸ்லாம் குறித்து
பேசப்படுகின்றது.
உலகில் இஸ்லாத்தைத்
தவிர வேறெந்த மதங்களுக்கும்,
சமயங்களுக்கும் இந்த சிறப்பு
கிடையாது.
ஏனெனில், இஸ்லாம்
என்பது இறைவனால் பரிந்துரைக்கப்பட்ட,
ஏற்றுக் கொள்ளப்பட்ட மகத்தான
மார்க்கம் ஆகும்.
இறைத்தூதர் முஹம்மது
{ஸல்}
அவர்கள் நாள் தோரும்
அதிக மக்களால் தேடப்படுகிற தேர்வு
செய்யப்படுகிற மகத்தான வாழ்வியல்
வழிகாட்டியாவார்கள்.
மனித சமூகத்தின்
வாழ்க்கைப் போக்கையே புரட்டிப்
போட்ட மனிதர்கள் என்றொரு
பட்டியலை எவர் முன்னிறுத்தினாலும் முஹம்மது நபி
{ஸல்}
அவர்களே அதில் முதன்மையான
இடத்தைப் பெறுவார்கள்.
மனித சமூகத்தின்
மேம்பாட்டில் சாதனை புரிந்த
மனிதர்கள் என்றொரு பட்டியலை
எவர் முறைப்படுத்தினாலும் அதிலும்
முஹம்மது நபி {ஸல்}
அவர்களே முதன்மையான
இடத்தைப் பெறுவார்கள்.
மனித சமூக
வரலாற்றை வடிவமைத்த மனிதர்கள்
என்றொரு பட்டியலை எவர்
தயாரித்தாலும் அங்கேயும் முஹம்மது
{ஸல்}
அவர்களே முதலிடம் வகிப்பார்கள்.
தாம் வாழும்
காலம் மட்டுமல்ல, முழு
உலகமும் வாழ்கிற காலம்
வரை ஒருவரின் புகழுக்கு
“நிலையான, நிரந்தரச் சான்று”
வழங்கப்பட்டிருக்கிறது என்றால்
அந்த புகழுக்குச் சொந்தக்காரர்
முஹம்மது {ஸல்} அவர்கள்
மட்டுமே.
ஏனெனில்,
وَرَفَعْنَا
لَكَ ذِكْرَكَ
“நபியே! நாம்
உம்முடைய புகழை உயர்த்திக்
கொண்டே இருப்போம்”.
பலதார
மணம் என்றால் என்ன?
ஓர் ஆணோ
அல்லது ஒரு பெண்ணோ
ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளைக்
கொண்டிருப்பதாகும். இருபாலருக்கும் பொதுவான
பலதார மணத்தை பாலிகேமி
(Polygymy) என்று சொல்லப்படும்.
இந்த பாலிகேமி
என்பது பால் வேற்றுமைகளின்
அடிப்படையில் இருவகைப்படும்.
1.(Polygyny) – பாலிஜினி
ஒரு ஆண் ஒன்றுக்கும்
மேற்பட்ட பெண்களை மணந்து
ஏக காலத்தில் வாழ்வது.
2.(Polyandry) – பாலியாண்ட்ரி
ஒரு பெண் ஒன்றுக்கும்
மேற்பட்ட ஆண்களை மணந்து
ஏக காலத்தில் வாழ்வது.
இதில் முதல்
வகையான பாலிஜினி விஷயத்தில்
இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏக
காலத்தில் அதிகப்படியாக நான்கு
பெண்களை திருமணம் செய்து
கொள்வது (Quadrogyny) குவாட்ரோஜினி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வகையான
பாலியாண்ட்ரி முற்றிலுமாக இஸ்லாத்தில்
தடை செய்யப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான பலதார அனுமதியும்…
பெண்கள் பல
ஆண்களோடு வாழ்வதற்கான தடையும்…
وَإِنْ
خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ
النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا
فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا
“அநாதைகளுடன் நீதமாக
நடக்க இயலாது என்று
நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு
விருப்பமான பெண்களை இரண்டு
இரண்டாக, மும்மூன்றாக, நான்கு
நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள்.
ஆனால், (அவர்களிடையே) நீதமாக
நடந்திட முடியாது என்று
நீங்கள் அஞ்சினால் ஒரு
பெண்ணை மட்டும் நீங்கள்
மணம் முடித்துக் கொள்ளுங்கள்.
அல்லது உங்கள் கைகள்
சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே
நீங்கள் மனைவியாக்கிக் கொள்ளுங்கள்.
நீதி தவறாமல் இருப்பதற்கு
இதுவே மிக நெருக்கமானதாகும்”. ( அல்குர்ஆன்:
4: 3 )
جاء في صحيح البخاري عن عروة بن الزبير أن عائشة زوجَ النبي صلى الله
عليه وسلم أخبرته: (أنَّ النكاح في الجاهلية كان على أربعة أنحاء: فنكاحٌ منها
نكاحُ الناس اليوم، يخطب الرجل إلى الرجل وليته أو ابنته، فيُصدِقُها ثمَّ ينكحها.
ونكاحٌ آخر: كان الرجل يقول لامرأته إذا طَهُرَتْ من طَمْثِها: أرسلي
إلى فلان فاستبضعي منه، ويعتزلها زوجها ولا يمسها أبدًا حتَّى يتبين حملُها من ذلك
الرجل الذي تستبضع منه، فإذا تبين حملُها أصابها زوجها إذا أحب، وإنما يفعل ذلك
رغبة في نجابة الولد، فكان هذا النكاح نكاحَ الاستبضاعِ.
ونكاحٌ آخر: يجتمع الرَّهْطُ ما دون العَشَرَة فيدخلون على المرأة كلهم
يُصيبها، فإذا حملت ووضعت ومر عليها ليالٍ بعد أن تضع حملها أرسلت إليهم، فلم
يستطع رجل منهم أن يمتنع حتى يجتمعوا عندها، تقول لهم: قد عرفتم الذي كان من
أمركم، وقد ولدت فهو ابنك يا فلان، تسمي من أحبت باسمه فيلحق به ولدها، لا يستطيع
أن يمتنع به الرجل.
ونكاحُ الرابع: يجتمع الناس الكثير فيدخلون على المرأة لا تمتنع ممن
جاءها، وهنَّ البغايا كُنَّ يَنْصِبْنَ على أبوابهن رايات تكون عَلَماً، فمن
أرادهنَّ دخل عليهنَّ، فإذا حملت إحداهنَّ ووضعت حملها جُمعوا لها وَدَعَوْا لهم
القَافَةَ، ثم ألحقوا ولدها بالذي يرون، فَالتاطَ به ودُعي ابنه لا يمتنع من ذلك،
فلما بُعث محمد صلى الله عليه وسلم بالحق هدم نكاحَ الجاهلية كله إلا نكاح الناسِ
اليوم).
அன்னை ஆயிஷா
(ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஜாஹிலிய்யா
எனும் அறியாமைக் காலத்தில்
திருமணம் நான்கு முறைகளில்
நடைபெற்றது.
1.இன்று மக்களிடையே
நடைபெறும் திருமணம். ஒரு
ஆண் இன்னொரு ஆணிடம்
அவருடைய பாதுகாப்பில் இருக்கும்
பெண்ணைக் குறித்தோ அல்லது
அவரது மகளைக் குறித்தோ
திருமண ஆலோசனை நடத்துவார்.
பின்னர் அப்பெண்ணுக்கு மஹர்
கொடுத்து திருமணம் செய்து
கொள்வார்.
2.ஒருவர் தனது
மனைவி மாதவிடாயில் இருந்து
சுத்தமாகி விட்டால் “நீ
இன்ன நபருடன் சென்று
உறவு வைத்துக் கொள்”
என்று கூறுவார் அவ்வாறு
அவள் உறவு வைத்து,
கர்ப்பம் உறுதியாகும் வரை
அவளைப் பிரிந்து இருப்பார்.
கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதும் அவளை தம்மோடு
சேர்த்துக் கொள்வார். மதிநுட்பமும்,
வீரமும் நிறைந்த சந்ததிகள்
பிறக்க வேண்டும் என்பதற்காக
இவ்வாறு செய்தனர்.
3.பத்துக்கும் குறைவான ஆண்களிடம் ஒரு பெண் உறவு வைத்துக் கொள்வாள். கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுத்ததும் தன்னுடன் உறவு வைத்த அனைவரையும் அழைத்து “தான் உறவு கொண்டதை நினைவு படுத்தி விட்டு, இதோ! இப்போது நான் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளேன். பின்னர், இது உன்னுடைய குழந்தை என அவள் விரும்பிய ஒருவரின் பெயர் கூறி அவரிடம் அந்தக் குழந்தையை ஒப்படைப்பாள். அந்த குழந்தை அந்த நபருக்குச் சொந்தமாகும். அவரால் அதை மறுக்கவும் முடியாது.
4.ஒரு பெண்ணிடம் ஏராளமான ஆண்கள் சென்று வருவார்கள். ஒருவரையும் அவள் மறுக்கமாட்டாள். இவர்களின் வீடுகள் முன்னால் கொடி போன்ற சில அடையாளங்களை இட்டிருப்பார்கள். இவர்கள் விலைமாதுகள். இவர்களோடு யார் வேண்டுமானாலும் தொடர்பு வைத்துக் கொள்ளலாம்.
அந்தப் பெண்
கர்ப்பம் அடைந்து, குழந்தை
பெற்றெடுத்ததன் பின்னர் அவளுடன்
தொடர்பு வைத்த அனைவரும்
அழைக்கப்பட்டு அந்தக் குழந்தை
யாரைப் போன்று இருக்கிறதோ
அவரே அந்தக் குழந்தையின்
தந்தையாக அறிவிக்கப்பட்டு அவரிடம்
வழங்கப்படும். அவரும் அதை
மறுக்க மாட்டார்.
நபி {ஸல்}
அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட
போது இன்று மக்களிடையே
இருக்கும் திருமணம் அல்லாத
மற்ற அனைத்து திருமண
முறைகளையும் முற்றிலுமாக தடை
செய்தார்கள். ( நூல்:
புகாரி, பாடம், திருமணம்
)
நான்கு
பெண்களை விட
கூடுதலாக திருமணம் செய்ய முடியுமா?
மேற்கூறிய இந்த
இறைவசனத்தின் கருத்துரையில் இமாம்
ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்
“இறைத்தூதர் {ஸல்} அவர்களைத்தவிர
வேறு எவருக்கும் நான்கை
விட அதிக பெண்களை
மனைவியராக வைத்திருப்பதற்கு அனுமதி
கிடையாது என்பது அல்குர்ஆனின்
விளக்கவுரையாக விளங்கும் ஸுன்னாவின்
மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இமாம் ஷாஃபிஈ
(ரஹ்)
அவர்களின் இக்கருத்தை சட்டத்துறையின் அனைத்து அறிஞர்களும்
கருத்தொற்றுமையுடன் ஏற்றுக்
கொண்டுள்ளனர்.
أَنْبَأَنَا
يَحْيَى بْنُ مَحْمُودٍ، إِجَازَةً بِإِسْنَادِهِ إِلَى ابْنِ أَبِي عَاصِمٍ،
قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا بَكْرُ بْنُ
عَبْدٍ الرَّحْمَنِ، عَنْ عِيسَى بْنِ الْمُخْتَارِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى،
عَنْ حُمَيْضَةَ، عَنْ قَيْسِ بْنِ الْحَارِثِ، قَالَ: " أَسْلَمْتُ وَلِي
ثَمَانِ نِسْوَةٍ، فَأَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ
أَتَخَيَّرَ مِنْهُنَّ أَرْبَعًا
".
அஸத் குலத்தைச்
சார்ந்த கைஸ் இப்னுல்
ஹாரிஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். “நான் மாநபி
{ஸல்}
அவர்களின் கரம் பிடித்து
இஸ்லாத்தைத் தழுவினேன். பின்னர்
நான் மாநபி {ஸல்}
அவர்களிடம் “எனக்கு எட்டு
மனைவியர்கள் இருக்கின்றார்கள்? நான்
எவ்வாறு நடந்து கொள்வது
என்று கேட்டேன்?. அதற்கு,
நபி
{ஸல்}
அவர்கள் “உமக்கு பிடித்தமான
நான்கு மனைவியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் வாழ்க்கை
நடத்துங்கள்” என்று கூறினார்கள்.
பின்னர் நான் நான்கு
மனைவியர்களைத் தேர்ந்தெடுத்து விட்டு
மற்ற நால்வரை தலாக்
கொடுத்து விட்டேன். ( நூல்:
அல் ஜுர்ஹு வத்
தஃதீல் லிஇமாமி இப்னு
அபீ ஹாத்தம் அர்ராஸீ,
உஸ்துல் ஃகாபா லிஇமாமி
இப்னுல் அஸீர் )
حَدَّثَنَاهُ
أَبُو عَبْدِ اللهِ بْنُ مَخْلَدٍ، ثنا الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ، ثنا
يَزِيدُ بْنُ هَارُونَ، أنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ
الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «أَسْلَمَ غَيْلَانُ بْنُ
سَلَمَةَ وَتَحْتَهُ عَشْرُ نِسْوَةٍ، فَأَمَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَخْتَارَ مِنْهُنَّ أَرْبَعًا
حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ، ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ
شِيرَوَيْهِ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أنا عِيسَى بْنُ يُونُسَ،
وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، ح، وَحَدَّثَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ
أَحْمَدَ بْنِ الْحَسَنِ، ثنا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ،
حَدَّثَنِي أَبِي، ثنا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَا: ثنا مَعْمَرٌ،
عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ، أَنَّ
غَيْلَانَ بْنَ سَلَمَةَ الثَّقَفِيَّ، أَسْلَمَ وَتَحْتَهُ عَشْرُ نِسْوَةٍ،
فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْتَرْ مِنْهُنَّ
أَرْبَعًا» زَادَ إِسْحَاقُ فِي حَدِيثِهِ عَنْ إِسْمَاعِيلَ: «وَيَتْرُكُ
سَائِرَهُنَّ»
ஃகைலான் இப்னு
ஸலமா அஸ்ஸகஃபீ (ரலி)
அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவுக்குப்
பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டார்கள். அவர்களுக்கு பத்து
மனைவியர் இருந்தார்கள்.
மாநபி {ஸல்}
அவர்கள் ஃகைலான் (ரலி)
அவர்களிடமும் நால்வரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி மற்றவர்களை
மணவிலக்குக் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள்.
( நூல்: மஃரிஃபதுஸ் ஸஹாபா
லிஇமாமி அபூ நயீமுல்
அஸ்பஹானீ )
قال
الإمام أبو عبد الله محمد بن إدريس الشافعي، رحمه الله، في
مسنده:
أخبرني من سمع ابن أبي الزِّناد يقول: أخبرني عبد المجيد بن سُهَيل بن عبد الرحمن عن عوف بن الحارث، عن نوفل بن
معاوية الديلي، رضي الله عنه، قال: أسلمت وعندي خمس نسوة، فقال لي رسول الله صلى
الله عليه وسلم: "اختر أربعا أيتهن
شئت، وفارق الأخرى".
مسند الشافعي
برقم (1606) ومن طريق البيهقي في السنن الكبرى (7/184)
நௌஃபல் இப்னு
முஆவியா (ரலி) எனும்
நபித்தோழர் அறிவிக்கின்றார்கள்: “நான்
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக
ஏற்றுக் கொள்ளும் போது
எனக்கு ஐந்து மனைவியர்கள்
இருந்தனர். இதையறிந்த நபி
{ஸல்}
அவர்கள் ஐந்தில் நான்கு
மனைவியரோடு சேர்ந்து வாழுங்கள்.
மற்றுமொருவரை நீங்கள் மணவிலக்கு
செய்து விடுங்கள். அந்த
நால்வர் யாராக இருக்க
வேண்டும் என்பதை நீங்களே
தேர்வு செய்து கொள்ளுங்கள்!”
என்று என்னிடம் கூறினார்கள். ( நூல்: முஸ்னத்
ஷாஃபிஈ )
ஐந்து மனைவியரோடு,
எட்டு மனைவியரோடு, பத்து
மனைவியரோடு வாழ்ந்து வந்தவர்களை
நான்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!
மற்றவர்களை மணவிலக்கு செய்து
விடுங்கள் என்று கூறி
மாநபி {ஸல்} அவர்கள்
வரையறை செய்ததை மேற்கூறிய
நிகழ்வுகளின் மூலம் நாம்
உணர்ந்து கொள்ள முடியும்.
ஆகவே, ஏக காலத்தில்
நான்கு மனைவியரோடு மட்டுமே
ஒரு முஸ்லிம் வாழ்க்கை
நடத்த முடியும்.
பலதாரமண அனுமதி கட்டளையா?
ஆர்வமூட்டுதலா?
மேற்படி இறைவசனத்தில்
வழங்கப்பட்டுள்ள அனுமதி
என்பது ஒவ்வொரு ஆண்களும்
நான்கு மனைவியரை கட்டாயமாக
மணந்து கொள்ள வேண்டும்
என்ற கட்டளையையோ அல்லது நான்கு மனைவியரை
மணந்து கொள்ளுங்கள் என்று
ஆர்வமூட்டும் விதமாகவோ அருளப்படவில்லை.
மாறாக, வழி
தவறி விடுவோம், அநீதி
இழைத்து விடுவோம் என்ற
அச்சம் இருப்பவர்களுக்கான அனுமதியே
தவிர. அனைவருக்குமானது அல்ல.
மேலும், இந்த
வசனம் அருளப்பட்டதன் பிண்ணனியையும்
நாம் அறிந்து கொள்ள
வேண்டும்.
அநாதைப் பெண்கள்
விஷயத்தில் அந்தக் கால
ஆண்கள் நடந்து கொண்ட
விதம் குறித்து தெரிவிக்கும்
முகமாக இந்த இறைவசனம்
அருளப்பட்டது.
அநாதைகளின் பொறுப்பாளர்களை நேரடியாக முன்னிறுத்தி
அவர்களிடம் அல்லாஹ் கூறுகின்றான்.
உங்களில் எவருடைய பாதுகாப்பிலோ,
பொறுப்பிலோ அநாதைப் பெண்கள்
இருந்தால், நீதியான மஹர்
தொகையைக் கொடுக்காமல் அவர்களைத்
திருமணம் செய்ய்தாதீர்கள். அவ்வாறு
கொடுக்க முடியாது என்று
நீங்கள் நினைத்தால் அப்பெண்களை
விட்டுவிட்டு இதர பெண்களை
மணம் முடித்துக் கொள்ளுங்கள்.
இப்பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்
உங்களுக்கு நான்கு பெண்கள்
வரை மணப்பதற்கு அனுமதி
வழங்கியுள்ளான். மேலும், ஒன்றுக்கும்
மேற்பட்ட பெண்களைத் திருமணம்
செய்து அவர்களுடன் நீதியான
முறையில் நடந்து கொள்ள
முடியாது என்று நீங்கள்
அஞ்சினால் ஒரு மனைவியை
மட்டுமோ அல்லது சொந்த
அடிமைப் பெண்ணை மட்டுமோ
மனைவியாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
விமர்சனமும்…
தெளிவும்…
இந்த இறைவசனத்தில்
(அல்குர்ஆன்: 4: 3 ) வழங்கப்பட்டுள்ள அனுமதியை வைத்து
பலர் இது பெண்களுக்கு
இழைக்கப்படும் அநீதி என்றும்,
அநாகரிகமான, அருவருப்பான, ஒதுக்கித்தள்ள
வேண்டிய அம்சம் என்றும்
விமர்சனம் செய்கின்றனர்.
இந்த விமர்சனங்கள்
ஏதோ இன்றோ நேற்றோ
தோன்றியதாக நினைத்து விடக்கூடாது.
பல நூற்றாண்டுகளாக இந்த
விமர்சனங்கள் வைக்கப்படுகின்றது.
மேற்குலகும், ஐரோப்பாவும்
தான் இந்த விமர்சனங்களைத் தூக்கிக் கொண்டு
உலகெங்கும் அலைந்தன. அது
தற்போது இந்தியாவில் நிலை
கொண்டு நிற்கின்றது.
கடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின்
பல்வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகள்
இது குறித்து விமர்சிக்காமல் தீர்ப்பே கூறியது
இல்லை என்று சொல்லும்
அளவுக்கு அது இந்தியாவில்
நிலை கொண்டுள்ளது.
ஏதோ இஸ்லாம்
பலதாரமணத்தை ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் நிர்பந்தமாக்கியுள்ளது போன்ற
தோற்றத்தையும், ஒன்றுக்கும் மேற்பட்ட
திருமணங்களை செய்யாதவர் இஸ்லாமிய
வட்டத்தை விட்டே சென்று
விடுவார் என இஸ்லாம்
சட்டமியற்றியுள்ளது போன்றுமான
ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி
வைத்துள்ளனர்.
இந்தியாவில் அதிகமாக
பலதாரமணம் செய்தவர்கள் யார்?
என்ற கேள்விக்கு 1961 –ம்
ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்
தொகை கணக்கெடுப்பில் பல்வேறு
மதத்தவர்களில் பலதாரமணம் செய்தவர்களின்
கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் தான்
மிகவும் குறைவாக பலதாரமணம்
செய்தவர்கள் என்று கூறுகின்றது.
பழங்குடியினர் 15.25%, புத்தர்கள்
7.9%, ஜைனர்கள் 6.72%, ஹிந்துக்கள் 5.8% முஸ்லிம்கள்
5.7% சதவீதத்தினர் ஆவார்கள்.
பூனேவிலுள்ள கோகலே
இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் பி. மல்லிகா
என்பவர் இந்தியாவில் பல்வேறு
பிரிவினரிடையே பலதாரமணத்தைக் குறித்து
மேற்கொண்ட ஆய்வின் முடிவில்
அவர் வெளியிட்ட ஆய்வறிக்கையில்
“முஸ்லிம்கள் இந்துக்களை விடவும்
அதிகமாக பலதாரமணம் செய்துள்ளார்கள்”
என்பதற்கு ஒரு ஆதாரம்
கூட இல்லை என
தெரிவித்து இருக்கின்றார். ( Ram Puniyani. Com
– munal politics. Facts versus myth. P: 148 )
மேற்குலகும், ஐரோப்பாவும்
பலதாரமணத்தை பெண்குலத்திற்கு எதிரான
செயல் போல சித்தரித்தாலும் அவர்களின் செயலும்
நடைமுறையும் அதற்கு எதிரானதாக
அமைந்திருப்பதை பார்க்க முடிகின்றது.
பாலியல் (உடலுறவு)
சுதந்திரம் என்ற கொள்கையை
வெளிப்படையாகவே அறிவித்து கட்டுப்பாடில்லாத பாலியல் சுதந்திரத்தை
ஊக்குவித்து வரும் அவர்கள்
இந்த உலகத்திற்கு செய்த
நன்மைகள் என்ன என்பதை
சிந்திக்க வேண்டும்.
விரும்பிய ஆணும்
பெண்ணும் விரும்பிய ஆண்
பெண்ணுடன் உறவு வைத்துக்
கொள்ளலாம் என்பதை அறிவித்து
அது போல் இந்த
உலகில் வாழத்துணிந்ததன் விளைவை
இந்த உலகு இந்த
நாள்வரை சந்தித்துக் கொண்டு
தான் இருக்கின்றது.
2007 –ம் ஆண்டின்
கணக்குப்படி அமெரிக்காவின் பல்வேறு
மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத
சந்ததிகள் தொடர்பான ஆய்வில்
கொலம்பியாவில் 64.4%, மிஸ்ஸிஸிப்பியில்
62%, நியூமெக்ஸிகோவில் 59.6% அலாஸ்காவில் 56.7%, லூயிஸ்தானாவில்
56.7%, கலிஃபோர்னியாவில் 56.4%, தெற்கு
கரோலினாவில் 50.6%, ஜியோர்ஜியாவில்
50.2%, அர்க்கன்ஸாஸில் 50.2% சுதந்திரமான பாலியல்
உறவால் தந்தை யாரென்று
அறியப்படாத குழந்தைகள் மேற்கூறப்பட்ட
சதவீத அளவில் உருவாகி
இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Keoyana Ray
Statistical Approach to IiIegitimacy p. 8-9 )
இதே போன்று
ஆஸ்திரேலியாவில் 31% சதவீதமும், ஐரோப்பிய
நாடுகளான பல்கேரியா, ப்ரான்ஸ்,
ஸ்காட்லாந்து, வெயில்ஸ், ஸ்லோவேனியா,
ஸ்காண்டினேவியா நாடுகளில் பாதிக்குழந்தைகள் சட்டவிரோத குழந்தைகளாக
இருக்கின்றார்கள் என்கிறது
சர்வதேச அமைப்பு ஒன்றின்
புள்ளிவிவரம்.
ஒரு நாட்டில்
சட்டவிரோத குடிகளை ஆய்வு
செய்து தான் பார்த்திருப்போம்.
ஆனால், சொந்த நாட்டு
மக்களின் குழந்தைகளை சட்டவிரோத
குழந்தைகள் என்று பெயரிட்டு
அழைக்கும் விநோதத்தை இவர்கள்
மூலமாகத்தான் அறிகின்றோம்.
அடுத்து பாலியல் சுதந்திரத்தால் இந்த உலகுக்கு அவர்கள்
செய்த இன்னொரு நன்மையும் உண்டு. ஆம்! ஸிஃபிலி, கொனேரியா, எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி
பாலியல் நோய்கள்.
1999 வாக்கில் வட அமெரிக்காவில் 1.4 கோடி, தென்
ஐரோப்பா 1.7 கோடி, கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பியாவில் 2.2 கோடி, வட ஆப்ரிக்காவில்
1 கோடி, துணை ஸஹாரா ஆப்ரிக்காவில் 6.9 கோடி, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில்
15.1 கோடி கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்கில் 1.8 கோடி, லத்தீன் அமெரிக்கா மற்றும்
கரீபியன் பிரதேசங்களில் 7.8 கோடி, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் 10 லட்சம் என
கோடிக்கணக்கான மனிதர்கள் உயிர்க்கொல்லி பாலியல் நோய்க்கு ஆளாகினர். (STD
Statistics World Wide. AVERT. Org )
பெண்ணினத்திற்கு ஆதரவாக இருப்பது போன்று பெண்ணியம்
பேசிய இவர்கள் பெண்ணினத்துக்கும் உலக மனித சமூகத்திற்கும் பாலியல் (உடலுறவு) சுதந்திரம்
எனும் பெயரில் மிகப்பெரிய ஆபத்தை விளைவித்தார்கள்.
ஆனால், இஸ்லாம் வழங்கியிருக்கிற பலதாரமணம் என்பது
இது போன்ற சட்டவிரோத சந்ததிகள், பாலியல் நோய்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்
சட்டப்படியான பாதுகாப்பான உறவு முறையாகும்.
ஆனபோதிலும் கடினமான சில நிபந்தனைகளின் அடிப்படையில்
சமூகத்திலுள்ள சில பிரச்சினைகளுக்குத் தீர்வாகவே இஸ்லாம் பலதாரமணத்தை அங்கீகரித்துள்ளது.
முஸ்லிம்களில் சிலர் இதை தவறாகப் பயன்படுத்துகின்றனர்
என்கிற ஒற்றைக் காரணத்திற்காக ஒட்டு மொத்தமாக இந்த அங்கீகாரத்தை விமர்சிப்பது ஏற்றுக்
கொள்ள முடியாது. மேலும், இதை தவறான மதச் சடங்கு என்று விமர்சிப்பதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
இறைத்தூதர் முஹம்மது {ஸல்} அவர்கள் பலதாரமணம் ஏன்
செய்தார்கள்?
முஹம்மது நபி {ஸல்} அவர்கள் ( நவூதுபில்லாஹ் ) பெண்களின்
மீதான மோகத்தாலும், இச்சையாலும் பல திருமணங்களை திருமணம் செய்து கொண்டார் என்கிற குற்றச்சாட்டை
விமர்சனம் என்கிற பெயரில் சிலர் சேற்றை வாரி இறைக்கின்றார்கள்.
25 வயதில் 40 வயது நிறைந்த கதீஜா (ரலி) அவர்களை
(தங்களை விட 15 வயது மூத்த பெண்ணை) திருமணம் செய்து தங்களின் இல்லற வாழ்க்கையைத் துவங்கிய
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கதீஜா (ரலி) அவர்கள் இறக்கும் வரை சுமார் 25 ஆண்டுகள்
ஒரே பெண்ணாகிய கதீஜா (ரலி) அவர்களுடனே தங்கள் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
அவர்கள் இறப்பெய்திய பின்னர் இரண்டு ஆண்டுகள் அதே
நிலையில் அவர்களைப் பற்றிய கவலையிலேயே வாழ்ந்தார்கள்.
தங்களின் 52 –வது வயதில் தங்களை விட வயதில் மிகவும்
மூத்த ஸவ்தா பிந்த் ஸம்ஆ (ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள்.
அதன் பின்னர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம்
செய்தார்கள். 52 வயதுக்குப் பிறகு 60 வயதை வரை மாநபி {ஸல்} அவர்கள் 11 திருமணம் செய்தார்கள்.
இதில் எங்கே பெண் மீதான மோகம் உள்ளது என்பதை கூற
வேண்டும்? இச்சையும், மோகமும் உள்ளவர்கள் விதவைகளையும், பல குழந்தைகளைப் பெற்றெடுத்த
முதியவர்களையுமா மணம் முடிக்க முன்வருவார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்? 52 வயதுக்கு
மேல் திருமணம் செய்து கொண்ட மாநபி {ஸல்} அவர்கள் மீது களங்கம் சுமத்துபவர்கள் கவனிக்க
வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைத்துப்
பெண்களும் விதவைகளும், பல குழந்தைகளின் தாயுமாவார்கள்.
பெருமானார் {ஸல்} அவர்கள் செய்து கொண்ட பலதாரமணம்
குறித்து பேசுகிற, எழுதுகிற வரலாற்று அறிஞர் பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்களை
பட்டியல் போடுகின்றார்கள்.
அவைகளில் மிக முக்கியமான மூன்று காரணங்களை இங்கே
குறிப்பிடுவது நன்றாக அமையும் என்று கருதுகின்றேன்.
1.சமூக நலன் சார்ந்த திருமணம். 2.இறைவனின் நேரடி
கட்டளையின் படி அமைந்த திருமணம். 3.அரசியல் நோக்கத்தில் அமைந்த திருமணம்.
1.சமூக நலன் சார்ந்த திருமணம்.
அன்னை கதீஜா (ரலி), அன்னை ஸவ்தா (ரலி) அன்னை உம்மு
ஸலமா (ரலி) அன்னை ஜைனப் பிந்த் குஸைமா (ரலி) அன்னை ஹஃப்ஸா பிந்த் உமர் (ரலி) ஆகியோருடனான
திருமணங்களின் பிண்ணனியில் விதவைகளுக்கு மறுவாழ்வு தர முன்வரவேண்டும் என்பது நோக்கமாகக்
கொள்ளப்பட்டது.
இதில் அன்னை கதீஜா (ரலி), அன்னை ஸவ்தா (ரலி), அன்னை
உம்மு ஸலமா (ரலி) ஆகியோருக்கு முந்தைய கணவரின் மூலம் குழந்தைகளையும் பெற்றிருந்தனர்.
எனவே, அத்தகைய குழந்தைகளுக்கும் தந்தை அந்தஸ்தில் இருந்து சிறந்தவராக விளங்க வேண்டும்
என்ற ஊக்குவிப்பு நோக்கமாக கொள்ளப்பட்டது.
ஜைனப் பிந்த் குஸைமா (ரலி) ஹஃப்ஸா (ரலி) இருவரும்
ஷுஹதாக்களின் மனைவியர் ஆவார்கள். எதிர்காலத்தில் போரில் வீரமரணம் அடைகிறவர்களின் மனைவியர்களுக்கு
மறுமண வாய்ப்பு வழங்க சமூகம் முன்வர வேண்டும் என்பதும் நோக்கமாகக் கொள்ளப்பட்டது.
2.அல்லாஹ்வின் நேரடி கட்டளைப்படி நடந்த திருமணம்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணமும், அன்னை
ஜைனப் பிந்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் திருமணமும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்த திருமணம்
ஆகும்.
நபியவர்கள்ஆயிஷாவைமணமுடிப்பதுகுறித்துஒருகனவுகண்டார்கள்.
ஸஹீஹுல்புகாரீஹதீஸ்தொகுப்பில்அச்செய்திபதிவாகியுள்ளது.
ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது:"நான் உன்னைக் கனவில் இரு முறை கண்டேன். உன்னைப்
பட்டுத்துணியின் துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, "இது உங்கள் மனைவிதான்;
(முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற,
(நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன்.
அப்போது நான்,
"இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து
(விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள்
என்னிடம் கூறினார்கள். (புகாரீ 3895)
நபி (ஸல்)
அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள்
ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்.
உக்கால்
எனும் அரபிய சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத் (ரலி) அவர்களை
கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி)
அவர்களிடம் வளர்ந்து வந்தார்.
கதீஜா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்த
பின் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள்
விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம், நீங்கள்
விரும்பினால் விடுதலை செய்து விடலாம் என்று கூறி விட்டார்கள்.
அதன் பின்
அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருக்கலானார். இந்நிலையில் தன் மகன்
மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸாவும், அவரது
சகோதரர் கஃப் என்பவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை
செய்யுமாறும் அதற்குரிய விலையைத் தந்து விடுவதாகவும் கூறினார்கள். அதற்கு
நபியவர்கள் உங்களுடன் வருவதற்கு ஸைத் ஒத்துக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை
அழைத்துச் செல்லலாம்; எனக்கு
நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தரவேண்டியது இல்லை. அவர் உங்களுடன் வர விரும்பா விட்டால்
அவரை உங்களுடன் அனுப்ப இயலாது என்று கூறி விட்டனர்.
வந்தவர்கள், ஸைத்
அவர்களிடம் பேசிப் பார்த்தனர். முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில்
நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது என்று ஸைத் திட்டவட்டமாக மறுத்து
விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஸைத் இனி மேல் என் மகனாவார். அவர் இனி மேல்
அடிமையில்லை; நான்
அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார், எனக்கு
முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அறிவித்தார்கள்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஸைத்துக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது
தந்தை மகிழ்ச்சியுடன் பிரிந்து சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மத்
(ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை (அல் இஸாபா)
அன்றிலிருந்து
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை ஸைத் இப்னு முஹம்மத்
(முஹம்மதுவின் மகன் ஸைத்) என்றே ஸைத் குறிப்பிடப்பட்டார்.
அவர்களின்
தந்தையர் பெயராலேயே குறிப்பிடுங்கள் (33:5) என்ற வசனம்
அருளப்படும் வரை முஹம்மதின் மகன் ஸைத் என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம் என்று
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் (4782) காணப்படுகிறது.
சொந்த மகன்
போலவே ஸைத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது
ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக்
காரியங்களுக்கும் நபியவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள்.
அது போல்
ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே
சார்ந்திருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்திடவே இந்த விபரங்கள்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரியான உமைமா என்பவரின் மகள் ஸைனப்
அவர்களை – அதாவது
தமது மாமி மகளை – ஸைத்துக்கு
ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள். மிகவும் உயர்ந்த குலம் என்று
பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணாகிய தமது மாமி மகளை ஒரு அடிமைக்குத்
திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அபைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத
புரட்சியாகும்.
ஜஹ்ஷ் உடைய
மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின்
மகன் ஸைத்துக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தினாலோ ஓராண்டுக்கு மேல்
நிலைக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே
குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஸைனபை தலாக் கூறும் நிலைக்கு ஸைத்
(ரலி) அவர்கள் ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகிறது.
யாருக்கு
அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது
மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று நீர்
கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள்
மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே
தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது
(விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள்
தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை
(வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது
என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக
இருக்கிறது.
( திருக்குர்ஆன் 33:37 )
நபி {ஸல்}
அவர்களுக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துத் தந்ததாக இவ்வசனம் கூறுகிறது.
இதற்கு
இரண்டு காரணங்கள் உள்ளன. வளர்ப்பு மகனை, மகன் எனக் கருதி
மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கு உண்டு என அன்றைய சமுதாயம் நம்பி
வந்தது.
வளர்க்கப்பட்டவர், தனது
மனைவியை விவாகரத்துச் செய்த பின் வளர்த்தவர் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்; அது, மருமகளை
விவாகம் செய்ததாக ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பது
இத்திருமணத்திற்குரிய காரணம்.
நபி (ஸல்)
அவர்கள் ஸைனப் மீது ஆசைப்பட்டு, ஸைதை விவாகரத்து செய்யச் சொன்னதாக இஸ்லாத்தின் எதிரிகள்
சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஸைனப்
(ரலி) மீது நபிகள் நாயகத்திற்கு ஆசை
இருந்தால் அவர்கள் கன்னிப் பருவத்திலேயே ஸைனபைத் திருமணம் செய்திருக்க முடியும்.
அவர்கள் தான் அப்பெண்ணிற்குப் பொறுப்பாளராகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள்
ஸைதுக்கே மணமுடித்துத் தருகிறார்கள்.
எனவே
இறைவனின் நாட்டப்படியே இத்திருமணம் நடந்தது. இளமையோடு இருக்கும் போது அவரை மணந்து
கொள்ளாமல், பல
வருடங்கள் ஸைதுடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவரை மணந்து கொண்டதற்கு உடல் ரீதியான
காரணத்தைக் கூறுவது முற்றிலும் தவறாகும்.
ஸைத் (ரலி)
தம் மனைவி ஸைனபை தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் அவர் ஆலோசனை செய்ததும், நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தலாக் கூற வேண்டாம் என்று அவருக்குப் போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாகக்
கூறப்படுகிறது.
இதே
வசனத்தில் இறுதிப் பகுதியில் அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றை உம் மனதிற்குள்
மறைத்துக் கொண்டீர் மக்களுக்கு அஞ்சினீர் என்று இறைவன் கடிந்துரைக்கிறான்.
காலம்
காலமாக மகனுடைய மனைவி என்று நம்பி வந்திருக்கும் போது சொந்த மருமகளாக அவளைக் கருதி
வந்திருக்கும் போது அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே
செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்களின் உள்ளம் எளிதில் இடம் தராது.
தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தை தலைமுறை,தலைமுறையாக
வளர்த்துக் கொண்டு விட்டார்கள்.சமுதாயம் பரிகசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின்
தயக்கத்தை அதிகமாக்கும்.
உலகத்தின்
விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல் பாரம்பர்யப் பழக்கத்துக்கு எள்ளளவும் இடம்
தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று
கருதிய இறைவன் இதற்கு அவர்களையே தேர்வு செய்தார்ன்.
இதனால்
சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில்
இறைவன் மறைமுகமாகச் சொல்கிறான்.
இறைத்தூதர்கள்
இறைவனிடம் செய்திகளை எடுத்துச் சொல்ல வேண்டும், அவனுக்கு அஞ்ச வேண்டும், அல்லாஹ்வைத்
தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது.(33:39)
எவருக்கும்
அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து அஞ்சுவதற்குரிய ஒன்றாக
இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.
3.அரசியல் நோக்கத்தில்
அமைந்த திருமணம்.
அன்னை ஜுவைரிய்யா (ரலி) அன்னை மைமூனா (ரலி) அன்னை
ஸஃபிய்யா (ரலி) அன்னை உம்மு ஹபீபா (ரலி) ஆகியோரின் திருமணங்கள் அரசியல் காரணங்களுக்காக அமைந்தது.
இம்மூவரையும் திருமணம் செய்து கொண்டதன் பின்னர்
அவர்களைச் சார்ந்த பலர் இஸ்லாத்தை தாமாக முன்வந்து ஏற்றுக் கொண்டனர்.
நபி(ஸல்) கடைசி மனைவி மைமூனா (ரலி). அவரை திருமணம் செய்து கொண்டது முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது. பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமை தழுவினார். அவருடன் மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ் (ரலி) இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளை நம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில் காரணமாக இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சித்தியாவார்.
எனவே, பெருமானார் {ஸல்} அவர்களின்
மீதும், இஸ்லாத்தின் மீதும் பலதார மணம் எனும் பெயரால் அவதூறு மலங்களை அள்ளிவீசும் அறிவற்ற
சமூகத்தின் முன்பாக நாம் இறைவனின் வார்த்தை, இறைத்தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கையைக்
கொண்டு அழகிய முறையில் தஃவா கொடுப்போம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைவருக்கும்
ஹிதாயத்தை நஸீபாக ஆக்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
மாஷா அல்லாஹ்
ReplyDeleteதரமான விளக்கத்தை
கட்டுரையில் பதிவாக்கி
சிந்தனையை சீரமைத்து
ஆசிரியருக்கு அல்லாஹ்
அருள் புரிவானாக ஆமீன்
ماشاء الله
ReplyDelete