பரக்கத்தான வாழ்வைத் தந்தருள்வாய் யாஅல்லாஹ்!!!
இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான சங்கை நிறைந்த ரஜப் மாதத்தின் முதல் ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.
ரஜப் மாதம் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுமந்து நிற்கும் ஒரு மாதம் ஆகும்.
இந்த உம்மத்திற்கு தொழுகையும், ஜகாத்தும் கடமையாக்கப்பட்ட மாதம் ஆகும்.
இந்த மாதத்தில் தான் கஅபாவை கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று இந்த உம்மத்திற்கு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான்.
பெருமானார் {ஸல்} அவர்கள் இறைவனை தரிசித்து, உரையாடி மகிழ்ந்த மிஃராஜ் பயணம் நிகழ்ந்த மாதமாகும்.
மாநபி {ஸல்} அவர்களோடு தோழமை கொண்டிருந்த நபித்தோழர்கள் பலரும், மேதகு ஷாஃபிஈ (ரஹ்) மாதகு கஸ்ஸாலி (ரஹ்) போன்ற மார்க்க விற்பன்னர்களும், அஷ்ஷைகு காஜா முயீனுத்தீன் அஜ்மீரி (ரஹ்) போன்ற இறை நேசச் செல்வர்களும், மஹ்மூத் கஜ்னவீ போன்ற நீதிவழுவா ஆட்சியாளர்களும் இந்த உலகை விட்டு விடை பெற்றுச் சென்ற மாதமாகும்
எல்லாவற்றிற்கும் மேலாக “சங்கையான நான்கு மாதங்கள்” என அல்லாஹ் அல்குர்ஆனில் போற்றிப் புகழும் நான்கில் ஒன்று நாம் அடைந்திருக்கும் இந்த ரஜப் மாதம் ஆகும்
இந்த ரஜப் மாதம் துவங்கி விட்டால் “அல்லாஹ்வே! ரஜப் மாதத்தில் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! இன்னும் ஷஅபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும், ரமழான் மாதத்தை அடையும் நற்பேற்றை எங்களுக்கு வழங்கியருள்வாயாக!” என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்குமாறு இந்த உம்மத்தை மாநபி {ஸல்} தூண்டிய மாதமாகும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுக்கும் எனக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் குடும்பத்தாருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பரக்கத் செய்வானாக! ஆமீன்!
பரக்கத்தான வாழ்வு அமைவதென்பது ஒவ்வொரு முஃமினுக்கும் இந்த உலகில் வழங்கப்படுகிற அருட்கொடைகளில் ஆக உயர்ந்த அருட்கொடையாகும்.
ஆகவே தான் பெருமானார் {ஸல்} அவர்கள் நாம் பெரிதும் கவனமெடுக்காத சாதாரண விஷயங்களின் ஊடாகக் கூட பரக்கத்தை இறைவனிடம் கேட்கத் தூண்டி இருப்பதைக் காணமுடிகின்றது.
தொழுகைக்காக இன்ன பிற வழிபாடுகளுக்காக நாம் உளூ செய்கிறோம். அப்படி நாம் உளூ செய்கிற போது உளூவின் ஆரம்பத்தில் இறுதியில் ஓத வேண்டிய துஆக்களை மாநபி {ஸல்} அவர்கள் கற்றுத் தந்தது போன்று உளூவின் இடையே ஓதுகிற துஆவையும் கற்றுத்தந்துள்ளார்கள்.
اللهُمَّ
اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي
அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னித்து விடுவாயாக! என் வீட்டை ( உன் அருளால்) விசாலமாக்குவாயாக! இன்னும் என் வாழ்வாதாரத்தில் பரக்கத் செய்வாயாக!! ( நூல்: முஸ்னத் இப்னு அபீ ஷைபா )
பரக்கத் என்றால் என்ன
பரக்கத் என்ற வார்த்தையை நாம் விளங்கிக் கொண்ட விதம் பிழையானதும் தவறானதுமாகும். ஆம்! எல்லாவற்றிலும் அதிகமாக இருப்பதையே இங்கே நாம் பரக்கத் என்று நம்புகின்றோம்.
அதிகமாக சம்பாதிப்பது, அதிகமாக வியாபாரம் நடப்பது, அதிகமாக லாபம் ஈட்டுவது, அதிகமாக சாப்பிடுவது, ஓய்வு நேரங்கள் அதிகமாக கிடைப்பது, அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்வது, அதிக வாகனம் வைத்திருப்பது, நிறைய தோட்டம் துரவுகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பது இது தான் பரக்கத் என்று நாம் நினைத்து வருகிறோம்.
ஆனால் உண்மையில் இஸ்லாம் வகுத்திருக்கும் அளவு கோலில் எல்லாவற்றிலும் அதிகமாக இருப்பது என்பது பரக்கத்திற்கான அறிகுறியே அல்ல.
மாறாக, நாம் வாழ்க்கையில் பெற்ற எல்லா அருட்கொடைகளிலும் பிறரை விட குறைவாக நாம் பெறுகிற போதும் நம்முடைய மனம் நிறைவாக இருப்பதற்குப் பெயர் தான் பரக்கத் ஆகும்.
ஆகுமான வழியில் செய்யப்படும் தொழில் மூலம் குறைவாக வருமானம் கிடைத்தாலும் வாழ்க்கையின் எல்லா தேவைகளும் அதன் மூலம் பூர்த்தியாகும் என்றிருந்தால் அது வருமானத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய பரக்கத் ஆகும்.
.குறைவாக வியாபாரம் நடந்து மனதில் எவ்வித சஞ்சலமும் ஏற்படாமல், பிற வியாபாரிகள் பெறுகிற லாபம் பொறாமையையும் ஏற்படுத்தாமல் இருந்து, கிடைத்த லாபத்தை பொருந்திக் கொள்கிற மனம் வந்தால் அது வியாபாரத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய பரக்கத் ஆகும்.
குறைந்த அளவுள்ள உணவு பல பேரின் பசியை போக்குவதற்கு போதுமானதாக அமைந்து விட்டால் அது உணவில் அல்லாஹ் ஏற்படுத்திய பரக்கத் ஆகும்.
குறைவான காலத்தில், குறைவான நேரத்தில் நாம் எதிர்பார்த்திடாத அதிக காரியங்கள் நடைபெறுமானால் அது நேரத்தில் ஏற்படும் பரக்கத் ஆகும். குறைவான ஆயுட்காலம் பெற்றிருக்கிற நாம் குறைவான காலமே வாழ்ந்தாலும் செயற்கரிய பல சாதனைகளை நிகழ்த்த முடியுமானால் அது ஆயுட்காலத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய பரக்கத் ஆகும்
சுருங்கக் கூற வேண்டுமானால், பரக்கத் என்பது அல்லாஹ் ஓர் அடியானுக்கு வழங்குகிற மறைமுக அருளாகும். பரக்கத் எனும் பேரருள் இருப்பதை ஒரு முஃமின் முழுமையாக நம்ப வேண்டும்.
ஏனெனில், அது காட்சிப் பொருள் அல்ல. அனுபவித்து உணர வேண்டிய அற்புதமான ஒன்றாகும்
தம்மிடம் அதிகமாக இருப்பதை அடையாளப்படுத்தியவர்களெல்லாம் அழிந்து போனதாக அல்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது. சில போது சிலருக்கு அதிகமாக வழங்கப்படுவதே அழிவிற்கான அடையாளம் தான் என்று அல்குர்ஆன் சான்று பகர்கின்றது.
அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் முற்காலத்தில் வாழ்ந்த இரண்டு மனிதர்கள் குறித்து பேசும் இறைவன் அவர்களிடையே நடந்த உரையாடலைப் பதிவு செய்திருக்கின்றான்.
அதில் ஒரு மனிதனின் அழிவுக்கு அவன் அடையாளப்படுத்திய அதிகமான பொருட்செல்வங்களும், மக்கள் செல்வங்களுமே காரணம் என்று குறிப்பிடுகின்றான்.
பார்க்க அல் கஹ்ஃப் அத்தியாயம் வசனம் 32 முதல் 43 வரையாகும்
فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُون
”அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்தபோது அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றாமல் விட்டபோது (முதலில் ரிஜ்கின் -வாழ்வாதாரத்தின்) அனைத்து வாசல்களையும் நாம் அவர்களுக்கு திறந்து விட்டோம்.
பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த போது (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரென பிடித்துக் கொண்டோம்.அப்போது அவர்கள் நம்பிக்கையிழந்தவர்களாக ஆகிவிட்டனர். ( அல்குர்ஆன்: 6 ; 44 )
பரக்கத்திற்காகப் பிரார்த்தனை செய்தல்...
பிரார்த்தனை செய்யுங்கள்! என்று எந்தத் தோழர் கோரிக்கை வைத்தாலும் அல்லது எவருக்காவது மனமுவந்து நபி {ஸல்} அவர்கள் பிரார்த்தனை செய்தாலும் நபி {ஸல்} அவர்கள் இன்னின்னவருக்கு அதிகமான செல்வத்தை வழங்குவாயாக என்று கேட்கமாட்டார்கள். மாறாக, அவருக்கு நீ எதைத் தந்தாயோ அதிலே பரக்கத் செய்வாயாக என்று தான் நபி {ஸல்} அவர்கள் பிரார்த்தனை புரிவார்கள்.
பரக்கத் எனும் பேரருளின் முக்கியத்துவத்தை மாநபி {ஸல்} அவர்களின் இந்த நடைமுறையில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا وَعَلَيْهِ دَيْنٌ فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي فَأَبَوْا فَلَمْ يُعْطِهِمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي وَقَالَ سَنَغْدُو عَلَيْكَ فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “என் தந்தையார் உஹுதுப் போரின்போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி {ஸல்} அவர்களிடம் சென்றேன்.
(விஷயத்தைக் கூறினேன்.) நபி {ஸல்} அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர்.
ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி {ஸல்} அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, நாம் உன்னிடம் காலையில் வருவோம் என்று என்னிடம் கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள்.
பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன்.
(முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக இருந்தன. ( நூல் : புகாரி 2395 )
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ قَالَ مَا هَذَا قَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அப்துர்
ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள்
நிற அடையாளத்தைக் கண்ட நபி {ஸல்} அவர்கள், இது என்ன? என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு
தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்
என்று பதிலளித்தார்கள்
நபி {ஸல்} அவர்கள், பாரக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை வழங்குவானாக! என்று பிரார்த்தித்து விட்டு, ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து அளியுங்கள்! என்று சொன்னார்கள். ( நூல் : புகாரி, 5155 )
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا
حَرَمِيٌّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ
قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி{ஸல்} அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபி {ஸல்} அவர்கள், அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் பரகத் அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரி, 6344
حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى – قَالَ – فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِىَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِى النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى – قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّى وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الإِصْبَعَيْنِ – ثُمَّ أُتِىَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِى عَنْ يَمِينِهِ – قَالَ – فَقَالَ أَبِى وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِى مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம். அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபி {ஸல்} அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டபோது நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்வே இவர்களுக்கு வழங்கியவற்றில் இவர்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் இவர்களை மன்னித்து இவர்களுக்கு அருள் புரிவாயாக என்று கேட்டார்கள். ( நூல் : முஸ்லிம் )
بَاب حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ
حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِي سَمِعْتُ يُونُسَ عَنْ ابْنِ
شِهَابٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَيْ مَا
جَعَلْتَ بِمَكَّةَ مِنْ الْبَرَكَةِ تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ عَنْ
يُونُسَ
அல்லாஹ்வே! மக்காவிற்கு எவ்வளவு பரக்கத் செய்தாயோ அதைவிட இரண்டு மடங்கு மதினாவிற்கு பரக்கத் செய்வாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். ( நூல் : புகாரி 1885 )
மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்குச் சென்றபோது நபியவர்களும், ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர் தோழர்களும் உண்ணுவதற்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். உள்ளூர்வாசிகளான அன்ஸாரிகளும் கஷ்டப்பட்டார்கள்.
இந்த மக்களுக்கு அதிகமான செல்வத்தை வழங்குமாறு நபி {ஸல்} அவர்கள் பிரார்த்தனை செய்யவில்லை. மாறாக மதீனா மக்கள் பயன்படுத்தும் அளவுப் பாத்திரங்களில் அல்லாஹ்வே பரக்கத் செய்! என்றுதான் பிரார்த்தனை செய்தார்கள்.
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ
இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத் அளிப்பாயாக! குறிப்பாக அவர்களது ஸாஉ, முத்து எனும் அளவுப் பாத்திரங்களில் நீ பரக்கத் அளிப்பாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். ( நூல் : புகாரி 2130 )
பொருளாதாரத்தில் அல்லாஹ் வழங்குகிற பரக்கத்தால் ஏற்படும் நல்ல விளைவுகள்…
خرج
رسول الله- صلى الله عليه وسلم- إلى السوق ومعه ثمانية دراهم، فإذا جارية على
الطريق تبكي، فقال لها: ما يبكيك؟ فقالت: بعثني أهلي بدرهمين لأشتري بهما حاجة
فأضللتهما. (أي ضيعتهما) فأعطاها درهمين ومضى بستة، فاشترى بأربعة قميصا، ولبسه
وانصرف وإذا بشيخ من المسلمين ينادي: من كساني كساه الله من خضر الجنة، فبادر رسول
الله- صلى الله عليه وسلم- إلى خلع القميص وألقاه عليه، ثم ذهب إلى السوق فاشترى
بدرهمين قميصا فلبسه، وفي طريق عودته منه رأى الجارية؛ حيث تركها تبكي، قال لها:
ما يبكيك؟ فقالت: بأبي وأمي أنت يا رسول الله، طالت غيبتي عن أهلي وأخشى عقوبتهم،
فقال لها: الحقي بأهلك. وجعل يتبعها حتى أتت دور الأنصار، وإذا رجالهم غائبون وليس
فيها إلا النساء، فقال: السلام عليكن ورحمة الله، فسمعته النساء فعرفنه ولم يسمع
مجيباً ثم عاد الثانية ثم الثالثة رافعاً صوته، فقلن بأجمعهن: السلام عليك يا رسول
الله ورحمته وبركاته. فقال عليه الصلاة والسلام: أما سمعتن ابتداء سلامي؟
فقلن: بلى، ولكننا أحببنا أن نكثر لأنفسنا وذرياتنا من
بركة تسليمك.
فقال: جاريتكن هذه أبطأت عنكن وخشيت العقوبة فهبن لي
عقوبتها.
فقلن: وهبنا لك عقوبتها وقد أعتقناها لممشاها معك، فهي
حرة لوجه الله.
فانصرف النبي صلى الله عليه وسلم وهو يقول: «ما رأيت
ثمانية أعظم بركة من هذه الثمانية، أمن الله بها خائفاً، وكسا بها عاريين، وأعتق
بها نسمة،
பெருமானார் {ஸல்} அவர்கள் ஒரு நாள் வீட்டிலிருந்து எட்டு திர்ஹம்களை எடுத்துக் கொண்டு ஆடை ஒன்றை வாங்குவதற்காக மதீனாவின் கடைவீதியை நோக்கி வருகின்றார்கள்.
வருகிற வழியில் ஒரு சிறுமி அழுது கொண்டு நிற்பதைக் கண்டு அருகில் சென்று ஸலாம் சொல்லி ஏன் அழுகின்றாய்? என்று கருணையோடு கேட்டார்கள்.
பதில் ஸலாம் சொல்லிய பின் அந்தச் சிறுமி “என் எஜமானி அவர்கள் வீட்டுக்குத் தேவையான சாதனங்கள் வாங்க என்னிடம் நான்கு திர்ஹம்களை கொடுத்து அனுப்பினார்கள். வருகிற வழியில் எங்கோ அந்த திர்ஹம்கள் தொலைந்து விட்டது.
சாதனங்கள் வாங்காமல்
சென்றால் என்னுடைய எஜமானி
என்னை ஏசுவார்கள்” என்றாள்.
உடனே கருணை நபி {ஸல்} அவர்கள் தங்களிடம் உள்ள எட்டு திர்ஹம்களில் இருந்து நான்கு திர்ஹம்களை அந்தச் சிறுமியிடம் கொடுத்து இதை வைத்து சாதங்களை வாங்கி உன் எஜமாயிடம் சென்று கொடுத்து விடு” என்று கூறி கடை வீதிக்கு சென்று விட்டார்கள்.
ஒரு கடையில் இரண்டு திர்ஹம் கொடுத்து ஒரு ஆடையை வாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள். வீட்டை அடைந்ததும் வீட்டு வாசலில் ஒரு ஏழை யாசகர் உடுத்த என்னிடம் ஆடையில்லை. எனக்கு அணிவதற்கு ஆடை வழங்கினால் அல்லாஹ் அவருக்கு ஆடை அணிவிப்பான்” என்று கூறினார்.
இது கேட்ட காரூண்ய நபி {ஸல்} அந்த ஏழை யாசகருக்கு அந்த ஆடையை வழங்கினார்கள். மீதமிருக்கிற இரண்டு திர்ஹம்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மதீனாவின் கடை வீதிக்கு வந்து, அதே கடையில் இரண்டு திர்ஹம்களுக்கு ஆடை ஒன்றை வாங்கினார்கள்.
கடை வீதியில் வந்து கொண்டிருந்த போது வேறொரு ஏழை யாசகர் “அணிவதற்கு என்னிடம் ஆடையில்லை. அணிவதற்கு யாராவது எனக்கு ஆடை வழங்கினால் அல்லாஹ் அவருக்கு ஆடை அணிவிப்பான்” என்று கூறினார்.
அதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த ஆடையை அந்த ஏழை யாசகருக்கு வழங்கி விட்டு கடை வீதியை விட்டு வெளியே வந்தார்கள்.
சற்று நேரத்திற்கு முன்பு அந்தச் சிறுமி எங்கு நின்று அழுது கொண்டிருந்தாலோ அதே இடத்தில் கையில் சாதனங்களோடு நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள்
அந்த சிறுமியின் அருகே சென்று அன்பாக பேசிய அண்ணல் நபி {ஸல்} அந்தச் சிறுமியிடம் இப்போது ஏன் நீ அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்கள்.
அதற்கு, “என் எஜமானி என்னை கடைக்கு அனுப்பி வெகு நேரமாகி விட்டது. நான் இவ்வளவு தாமதமாக சென்றால் காரணம் கேட்பார்கள். நான் நடந்தவற்றைச் சொன்னாள் என்னை ஏதாவது செய்து விடுவார்களோ? என்று நான் பயப்படுகின்றேன்” என்றாள் அந்தச் சிறுமி. தொடர்ந்து அந்தச் சிறுமி “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! என்னை என் எஜமானியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களைக் கூறி எனக்காக பரிந்துரை செய்வீர்களா?” என்று கேட்டாள்.
மாநபி {ஸல்} சம்மதித்து விட்டு, தாம் முன்னால் செல்வதாகவும், தமக்குப் பின்னால் நடந்து வருமாறும் வீடு வந்ததும் தம்மிடம் சொல்லுமாறும் அந்தச் சிறுமியிடம் கூறினார்கள்.
அந்தச் சிறுமி அடையாளம் காட்டிய வீடு ஒரு அன்ஸாரித் தோழருடையது. அந்த வீட்டின் முன்பாக நின்று பெருமானார் {ஸல்} அவர்கள் ஸலாம் கூறினார்கள்.
அந்த வீட்டில் இருந்த பெண்கள் ஸலாம் சொன்னவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தான் என்பதை தெரிந்து கொண்டார்கள். பதில் ஸலாம் கூறவில்லை.
இரண்டாவது முறையாக நபி {ஸல்} அவர்கள் ஸலாம் கூறினார்கள். இப்போதும் பதில் ஸலாம் கூறவில்லை. மூன்றாவது முறையாக ஸலாம் கூறியதும் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து அந்த பெண்கள் பதில் ஸலாம் கூறினார்கள்.
ஏன் நீங்கள் முதல் மற்றும் இரண்டாவது ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை என்று மாநபி {ஸல்} அவர்கள் கேட்க, அந்தப் பெண்கள் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும், அபிவிருத்தியும் உங்கள் மீது நிலவட்டும்! என்று துஆச் செய்வது நீங்களாயிற்றே! அது தான் உங்கள் துஆவை ஆதரவு வைத்து, உங்கள் துஆவின் மூலம் விளைகிற பரக்கத்தை ஆதரவு வைத்து உடனடியாக பதில் கூறாமல் சிறிது தாமதித்தோம்” என்று கூறினார்கள்.
பின்பு “கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கூறி இந்தச் சிறுமியின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் அந்த வீட்டுப் பெண்களிடம் கூறினார்கள்.
அப்போது, அந்தப் பெண்கள் “இந்த உம்மத்தின் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் பாக்கியம் நிறைந்த உங்கள் பரிந்துரையை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்போம்” என்றார்கள்.
பின்பு அந்த்ப் பெண்கள் “அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியும், உங்களை கண்ணியம் செய்யும் பொருட்டாக அடிமைப் பெண்ணான அந்தச் சிறுமியை இதோ! இப்போதே உரிமை விட்டு விடுகின்றோம்” என்று கூறினார்கள்.
அப்போது பெருமானார் {ஸல்} அவர்கள் “இந்த எட்டு திர்ஹம்களில் உள்ள அதிகமான பரக்கத்தை விட வேறெந்த திர்ஹம்களிலும் நான் கண்டதில்லை.
இதோ, இந்த
திர்ஹம்கள் மூலம் ஒருவரின்
பயத்தை அல்லாஹ் நீக்கி
நிம்மதி வழங்கி இருக்கின்றான்.
ஆடையில்லா இரண்டு ஏழைகளுக்கு
அல்லாஹ் ஆடை வழங்கியிருக்கின்றான்.
ஒரு அடிமையை அல்லாஹ்
உரிமை விட்டிருக்கின்றான்” என்று
கூறினார்கள். ( நூல்: Zஜாதுல்
மஆத், புஸ்தானுல் ஃபுகராஃ
வநுZஜ்ஹத்துல்
குர்ராஃ )
ஆயுட்காலத்தில் அல்லாஹ் வழங்குகிற பரக்கத்தால் ஏற்படும் நல்ல விளைவுகள்…
ஹிஜ்ரி 631 முஹர்ரம் மாதத்தில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் தெற்குப் பகுதியின் நவா எனும் ஊரில் பிறந்து யஹ்யா என்று பெயரிடப்பட்டு முஹ்யித்தீன் என்று பட்டப்பெயராலும், அபூ ஜகரிய்யா என்று குறிப்புப்பெயராலும் அழைக்கப்பட்டு, ஹிஜ்ரி 676 இதே ரஜப் மாதத்தின் பிறை 24 –ல் இந்த உலகை விட்டும் விடைபெற்றுச் சென்ற உலக்ம் போற்றிப் புகழ்கிற மாமேதை இமாம் நவவீ (ரஹ்) அவர்களின் 45 ஆண்டு கால வாழ்க்கை மிகப் பெரிய முன்னுதாரணமாகும்
ولد الإمام النووي (رحمه الله) في محرم عام 631هـ في قرية نَوَى
من أبوين صالحين، ولما بلغ العاشرة من عمره بدأ في حفظ القرآن وقراءة الفقه على
بعض أهل العلم هناك. وصادف أن مرَّ بتلك القرية الشيخ ياسين بن يوسف المراكشي،
فرأى الصبيانَ يُكرِهونه على اللعب، وهو يهربُ منهم ويبكي لإِكراههم، ويقرأ
القرآن، فذهب إلى والده ونصحَه أن يفرِّغه لطلب العلم، فاستجاب له. وفي سنة 649هـ
قَدِمَ مع أبيه إلى دمشق لاستكمال تحصيله العلمي في مدرسة دار الحديث، وسكنَ
المدرسة الرَّواحِيَّة، وهي ملاصقة للمسجد الأموي. وفي عام 651هـ حجَّ مع أبيه، ثم
رجع إلى دمشق، وهناك أكبَّ على علمائها ينهل منهم.
மராக்குஷ் மாநகரத்தைச் சேர்ந்த ஷைக் யாஸீன் பின் யூசுப்
அவர்கள் ஒருதடவை நவா என்கிற அந்தச் சிற்றூருக்குச் சென்றிருந்தபொழுது ஒரு
காட்சியைக் கண்டார். சிறுவர் யஹ்யாவை சம வயதுடைய சிறுவர்கள் விளையாட வருமாறு
வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கு விளையாட்டில்
ஆர்வமில்லை. அதிகமாக வற்புறுத்தியதால் அழுதுகொண்டே அவர்களை விட்டும்
ஓடுகிறார். எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்று ஷைக் யாஸீன் பின்தொடர்ந்த பொழுது வீட்டிற்குச் சென்று
குர்ஆனை எடுத்து ஓதினார் சிறுவர் யஹ்யா. உடனே அவரது தந்தை ஷரஃப் அவர்களைச்
சந்தித்து, ‘உங்கள் புதல்வரைக்
கல்வி கற்பதிலேயே முழுமையாக ஈடுபடுத்துங்கள். இதோ! இந்தச் சிறுவயதில் விளையாட்டில்கூட ஆர்வம் இல்லாமல்
குர்ஆன் ஓதுகிறரர் உங்கள் புதல்வர்’ என்று கேட்டுக் கொண்டார்! தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டுத்
தம் புதல்வரின் படிப்புக்காக எல்லா உதவிகளும் செய்தார்.
பத்து வயதிலேயே
குர்ஆனை முழுமையாகக் கற்று மனப்பாடம் செய்தார்கள்.
தங்கள் ஊரிலேயே கல்வியில் சிறந்த ஆசிரியர்களிடம் அரபி இலக்கணம், இலக்கியம், நபிமொழிகள், அறிவிப்பாளர்கள் வரலாறு மற்றும் ஃபிக்ஹுச் சட்ட விளக்கம் போன்ற பல்வேறு கலைகளைக் கற்றார்கள்
சிறுவர் யஹ்யா
அவர்கள்,
தாருல் ஹதீஸ் மத்ரஸாவில் சேர்ந்து கல்வி கற்பதற்காக ஹிஜ்ரி 649 ஆம் ஆண்டு தம் தந்தையுடன் திமிஷ்க் மாநகரம் வந்து அங்கு ஷரமிய்யா என்ற
மதரஸாவில் கல்வி கற்க சேர்ந்தார்கள்.
وكان
ينام في غرفته التي سكن فيها يوم نزل دمشق في المدرسة الرَّواحية، ولم يكن يبتغي
وراء ذلك شيئًا.
அந்த மதரஸாவில் இமாம் அவர்கள் தங்குவதற்கு வசதியில்லாததால் அந்த அதரஸாவின் அறிஞர் ஒருவரின் அறிவுரையின் பேரில் டமாஸ்கஸின் கிழக்குத் திசையில் உமையா மஸ்ஜிதுடன் இணைந்த கட்டிடமான மத்ரஸா ரவாஹிய்யாவில் தங்கி கல்வி கற்றார்கள்.
அந்த மதரஸாவில்
இருக்கும் மிக சிறிய அறையில் தங்கி கல்வியைக் கற்றார்கள். பார்வையாளர் யாராவது
வந்தால் புத்தகங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இடவசதி செய்து கொடுக்கும்
அளவிற்கு அந்த அறை சிறியதாக இருந்ததாக கூறப்படுகிறது.
أجمعَ أصحابُ كتب التراجم أن الإمام
النووي كان رأسًا في الزهد، وقدوة في الورع، وعديم النظير في مناصحة الحكام،
والأمر بالمعروف والنهي عن المنكر. ومن أهمِّ صفاته الزهد والورع،
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் உலகப் பற்றில்லாத – பேணுதலான வாழ்வை மேற் கொள்பவர்களாக இருந்தார்கள் என
வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறுகின்றார்கள்.
கல்விப்பணியில் முழுஈடுபாடு கொண்டிருந்ததுடன்
பொதுமக்களுக்கு வழிகாட்டுவதிலும் நன்மையைக் கடைப் பிடிக்குமாறு ஏவுதல் – தீமையைத் தடுத்தல் போன்ற பெரும் பணிகளிலும் நல்லார்வமும்
ஈடுபாடும் கொண்டிருந்தார்கள்.
ஆட்சியாளர்களின் தவறான போக்கைத் தக்க முறையில்
கண்டிப்பதற்கும் அவர்கள் தயங்கியதில்லை.
ஹிஜ்ரி 665 ஆம்
ஆண்டு திமிஷ்கில் புகழ்பெற்ற கல்விக்கூடமாகிய தாருல் ஹதீஸ் மத்ரஸாவில் தலைமை
ஆசிரியராகப் பொறுப் பேற்றார்கள். மரணம் அடையும் வரையில் தாருல் ஹதீஸ் மத்ரஸாவிலேயே
ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.
இமாம் நவவி அவர்கள் மத்ரஸாவில் தலைமை ஆசிரியராகப்
பணியாற்றும் போது எவ்வித ஊதியமும் பெற்றுப் பயனடையவில்லை
ஒவ்வொரு மாத ஊதியத்தையும் மத்ரஸா நிர்வாகியிடமே சேமித்து
வருவார்கள். ஓராண்டில் பெருந்தொகை ஒன்று சேர்ந்ததும் ஏதேனும் சொத்து
வாங்கி அதனை மத்ரஸா பெயரில் வக்ஃப் செய்து விடுவார்கள். அல்லது நூல்கள் வாங்கி
அங்கிருந்த நூலகத்திற்கு கொடுத்து விடுவார்கள்.
فيُروى أنه سُئلَ: لِمَ لمْ تتزوَّج؟ فقال: "نَسيتُ"؛ وذلك
لاشتغاله العظيم بتحصيل العلم ونشره.
وفي حياة الإمام النووي أمثلة كثيرة تدلُّ على ورعٍ شديد، فكان لا يقبل من أحدٍ هديةً ولا عطيَّةً، وكان لا يقبل إلا من والديه وأقاربه، فكانت أُمُّه ترسل إليه القميص ونحوه ليلبسه، وكان أبوه يُرسل إليه ما يأكله،
சுய செலவுகளுக்குத் தேவையான பண உதவியை அவர்களின் தந்தை
அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆடைகள் தேவையெனில் தங்கள் தாயாரிடம் இருந்து தருவித்துக்
கொள்வார்கள்.
ஒரு முறை ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை? என்று
கேட்டதற்கு நான் மறந்து விட்டேன்” என்று பதில் கூறினார்களாம். அந்தளவு கல்வியைத்
தேடுவதிலும், தேடிய கல்வியை சமூகத்திற்கு வழங்குவதிலும் தங்கள் வாழ்க்கையையே
அர்ப்பணித்தார்கள்.
யாரேனும் அன்பளிப்போ சன்மானமோ வழங்கினால் அந்த நபர்
மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தால் மட்டுமே – அந்த அன்பளிப்பு தமக்குத் தேவை என்றால்தான் பெற்றுக்
கொள்வார்கள்.
இமாம் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஆடம்பரமான வாழ்க்கையை
விரும்பியதில்லை. எளிய உணவுகள், எளிமையான
ஆடைகளிலேயே வாழ்வைக் கழித்தார்கள். திருமணத்திலும்கூட அவர்களது மனம் நாட்டம் கொள்ளவில்லை. அந்த
அளவுக்கு கல்விப் பணியில் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்!
நடுத்தரமான வாழ்க்கைச் சூழ்நிலையில் இருந்து திமிஷ்க்
மாநகரம் சென்ற இமாம் அவர்களை எல்லா வசதி வாய்ப்புகளும் தேடிவந்தன! இளமையின் வசந்த
காலத்தில் – அனைத்து ஆரோக்கியமும் சக்தியும் நிரம்பி
இருந்தும்கூட அவர்கள் இன்ப வாழ்வையும் வசதிவாய்ப்புகளையும் – கல்விப் பணிக்காகவே தியாகம் செய்துவிட்டு சாதாரணமான – எளிய வாழ்க்கையிலேயே மனநிறைவு கண்டார்கள்.
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் சிறந்த மார்க்க மேதையாக இருந்ததினால் டமாஸ்கஸ் மற்றும் அதைச் சுற்றி வாழ்ந்த மக்களாளும், பிற மார்க்க அறிஞர்களாளும் அங்கீகரிக்கப்பட்ட அறிஞராகத் திகழ்ந்தார்கள். பல்வேறு நூல்களை இமாம் அவர்கள் எழுதி இருக்கின்றார்கள்
صنَّف الإمام النووي (رحمه الله) كتبًا في الحديث والفقه عمَّ
النفع بها، وانتشر في أقطار الأرض ذكرها؛ منها: المنهاج في الفقه، وشرح مسلم،
ومنها المبهمات، ورياض الصالحين، والأذكار، وكتاب الأربعين، والتيسير في مختصر
الإرشاد في علوم الحديث. ومنها الإرشاد، ومنها التحرير في ألفاظ التنبيه، والعمدة
في صحيح التنبيه، والإيضاح في المناسك، والإيجاز في المناسك، ومنها التبيان في
آداب حملة القرآن ومختصره، ومنها مسألة الغنيمة، وكتاب القيام، ومنها كتاب
الفتاوى، ومنها الروضة في مختصر شرح الرافعي، وقطعة في شرح التنبيه، وقطعة في شرح
البخاري، وقطعة يسيرة في شرح سنن أبي داود، وقطعة في الإسناد على حديث الأعمال
والنيات، وقطعة في الأحكام، وقطعة كبيرة في التهذيب للأسماء واللغات، وقطعة مسودة
في طبقات الفقهاء، ومنها قطعة في التحقيق في الفقه إلى باب صلاة المسافر، ومسودات
كثيرة.
ஷாஃபிஈ ஃபிக்ஹின் சட்டத்துறையின் ஆளுமை மிக்க அறிஞராகத் திகழ்ந்த இமாம் நவவீ (ரஹ்) அவர்கள். ஷாஃபிஈ மத்ஹபின் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களுக்கு அடுத்த நிலையில் வைத்து அழகு பார்க்கப்படுகின்றார்கள்.
ரியாளுஸ் ஸாலிஹீன்
மின் கலாமி ஸைய்யிதில் முர்ஸலீன், ஸஹீஹ் முஸ்லிமின்
விரிவுரை,
அல் மஜ்மூஃ (அல் முஹத்தஃப் விரிவுரை), அல் அத்கார்
அல் அர்பஈனுந் நவவிய்யா, தஹ்தீபுல் அஸ்மா வல் லுகாத், அல் மின்ஹாஜ் என மிகப்பிரபல்யமான கிரந்தங்களையும், இன்னும் ஏராளமான நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்கள்.
ஸஹீஹ் முஸ்லிமுக்கு, ‘மின்னத்துல் முன்இம்’ (ஸைஃபுர்ரஹ்மான் அல் முபாரக்பூரீ), ‘ஃபத்ஹுல் முல்ஹிம்’ (ஷப்பீர் அஹ்மது உஸ்மானீ & முஹம்மது ஸாஹித் அல்-கவ்ஸரீ) ஆகிய விரிவுரைகள் உள்ளனவென்றாலும் இமாம் நவவீ (ரஹ்) அவர்களது ‘அல்-மின்ஹாஜ் பி ஷரஹி ஸஹீஹ் முஸ்லிம்’ என்ற விரிவுரையே ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்புக்குப் புகழ் பெற்ற விரிவுரையாகத் திகழ்கிறது.
இமாம் நவவீ (ரஹ்) அவர்களது கடும் உழைப்பு, ஸஹீஹ் முஸ்லிமுக்கான விரிவுரையான ‘அல்-மின்ஹாஜ்’ இல் பளிச்செனெத் தெரிகிறது. புகழ்பெற்ற ரியாளுஸ் ஸாலிஹீன் தொகுப்பில் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்களைப் பெரும்பாலும் இடம்பெறச் செய்திருக்கிறார்.
இமாம் நவவீ (ரஹ்) அவர்களின் புகழ்பெற்ற ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ்களின் தொகுப்பே உலகளவில் இன்று பல்வேறு கலாசாலையில் ஹதீஸ் பாடமாகவும், சர்வதேச இமாம்கள் பலரின் அதிகாலை உரையாகவும் இருக்கின்றது.
இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இரண்டு முறை ஹஜ்
செய்திருக்கின்றார்கள். மரணம்
அடைவதற்கு சில காலம் முன்பு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். வக்ஃப்
நிர்வாகத்தில் இருந்து எடுத்த எல்லா நூல்களையும் திரும்ப ஒப்படைத்தார்கள். தங்கள்
ஆசிரியர்களின் மண்ணறைகளைத் தரிசித்து அவர்களுக்காக அல்லாஹ்விடம் அழுது அழுது
பிரார்த்தனை செய்தார்கள்.
தங்கள் நண்பர்களையெல்லாம் சந்தித்து விடை பெற்றார்கள். பிறகு
தங்கள் தந்தையின் கப்றை ஜியாரத் செய்துவிட்டு பிறகு பைத்துல் முகத்தஸ் மற்றும்
கலீல் ஆகிய இடங்களையும் ஜியாரத் செய்தார்கள்.
பிறகு நவா திரும்பி அங்கே நோயுற்ற இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 676 ஆம் ஆண்டு ரஜப் பிறை 24 இல் மரணம் அடைந்தார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக! அன்னாரின் சேவைகளைக் கபூல் செய்தருள்வானாக! ( நூல்: துஹ்ஃபதுத் தாலிபீன் லிஇமாமி இப்னு அத்தார் (ரஹ்).., அல் மன்ஹலில் உத்பு லிஇமாமி அஸ்ஸஃகாவீ (ரஹ்)…
பரக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வோம்!!
பரக்கத் எனும் மறைமுக அருள் ஒருவருக்குக் கிடைக்க வேண்டுமானால் அவர் அல்லாஹ்விடம் அதை வேண்டுவதுடன் சில தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நபி {ஸல்} அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
و حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ
عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ
أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي
ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ
خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ
أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ وَلَا
يَشْبَعُ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى قَالَ حَكِيمٌ
فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا
بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ يَدْعُو حَكِيمًا إِلَى الْعَطَاءِ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ ثُمَّ
إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ
مِنْهُ شَيْئًا فَقَالَ عُمَرُ إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ
عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى
أَنْ يَأْخُذَهُ فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنْ النَّاسِ بَعْدَ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள்
கூறியதாவது: “நான் நபி {(ஸல்} அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு
வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன்
எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரக்கத் ஏற்படுத்தப்படும். யார் இதைப்
பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரக்கத் ஏற்படுத்தப்படாது.
அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவர் போலாவார். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச்
சிறந்தது என்று கூறினார்கள். ( நூல் : புகாரி 1472 )
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ
وَعَمْرٌو النَّاقِدُ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِىِّ عَنْ
عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَسَعِيدٍ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ سَأَلْتُ
النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَأَعْطَانِى ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِى
ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِى ثُمَّ قَالَ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ
حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ
بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِى يَأْكُلُ وَلاَ
يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் : செல்வத்தை உரிய முறையில் யார் அடைகிறாரோ அவருக்கு அதில் பரக்கத் வழங்கப்படும். செல்வத்தை முறையற்ற வழிகளில் யார் அடைகிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார் என்று கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் )
حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ يُونُسَ حَدَّثَنِي أَبُو الْعَلَاءِ بْنُ
الشِّخِّيرِ حَدَّثَنِي أَحَدُ بَنِي سُلَيْمٍ وَلَا أَحْسَبُهُ إِلَّا قَدْ رَأَى
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ اللَّهَ تَبَارَكَ
وَتَعَالَى يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ
اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ وَوَسَّعَهُ وَمَنْ لَمْ
يَرْضَ لَمْ يُبَارِكْ لَه
அல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கியதில் சோதிக்கிறான். அல்லாஹ் பங்கிட்டுத் தந்ததை யார் பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் தந்தவற்றில் பரக்கத் செய்கிறான். மேலும் விசாலமாக்குகிறான். எவர் பொருந்திக் கொள்ளவில்லையோ அவருக்கு அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான். ( நூல்: அஹ்மத் 19398 )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பரக்கத்தான
வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். ஒரே வார்த்தையில் கூறுவதானால் பரகத்தான ஆக்கத்தை வழங்கிய உங்களுக்கு அல்லாஹ் அனைத்து வகையிலும் பரகத் செய்வானாக! ஆமீன் 🤲. جزاكم الله خيرا كثيرا يا استاذ الكريم Tiruppur
ReplyDeleteபரிபூரண பரக்காத்துகளை எல்லாம்வல்ல அல்லாஹ் தங்களுடைய ஈருலக வாழ்விலும் தங்களுக்கு தந்து அழகு பார்ப்பானாக ஆமீன்....
ReplyDeleteجزاكم الله حضرت مرحبا
அற்புதமான பதிவு! بارك الله فيك
ReplyDelete