Wednesday, 24 March 2021

 

ரமலானை ஆசையுடன் வரவேற்போம்!!!

 



கடந்த ஆண்டின் இதே நாட்களில் நாம் ஊரடங்கு என்பது எவ்வளவு வீரியமானது என்பதை உணராமல் நுழைந்திருந்த தருணம்.

ஏறத்தாழ மிஃராஜ் இரவு, பராஅத் இரவு, அருளும், மன்னிப்பும், நரக விடுதலையும் நிறைவாக வழங்கப்படுகிற ரமலானின் 30 நாட்களையும், லைலத்துல் கத்ர் இரவையும், ஈதுல் ஃபித்ரையும், ஹஜ்ஜின் வணக்கங்களையும், பாக்கியம் நிறைந்த துல்ஹஜ்ஜுடைய பத்து நாட்களின் அமல்களையும் ஈதுல் அள்ஹாவையும் கூட்டாக, மஸ்ஜிதுகளில் நிறைவேற்றும் பாக்கியத்தை ஒட்டு மொத்தமாக உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகமும் இழந்திருந்தோம் 

நமக்கெல்லாம் தீனில் முஸீபத் ஏற்படுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை கொரோனா கால ஊரடங்கு உணர்த்தி இருப்பதை அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டோம் 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் வாழ்வில் இன்னொரு முறை இப்படியான பேரிப்புகள் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து அருள்புரிவானாக! ஆமீன்!

அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இந்த ஆண்டின் மிஃராஜ் இரவை சிறப்பாகக் கடந்து இரண்டு தினங்களில் பராஅத் இரவின் பேறுகளை அனுபவிக்க இருக்கின்றோம். அதனைத் தொடர்ந்து அருளும், மன்னிப்பும், நரக விடுதலையும் நிறைவாக வழங்கப்படுகிற ரமலானின் 30 நாட்களையும், நோன்பு நோற்பதையும், லைலத்துல் கத்ர் இரவையும், ஈதுல் ஃபித்ரையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் எண்ணங்களை எவ்வித சிரமங்களும் இன்றி ஈடேறச் செய்வானாக! ரமலானை அடைந்து நோன்பு நோற்று, 30 நாட்களிலும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு ரப்பின் மேலான மக்பூலிய்யத்தைப் பெற்ற மேன்மக்களாக ஆகியருள்வானாக! ஆமீன்!

நம் வாழ்வில் நாம் இதுவரை சந்தித்த ரமலானை விட இந்த ரமலானில் மிக அதிகமாக அமல்கள் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோம்! அதே எண்ணத்தோடு நாம் ரமலானை வரவேற்போம்!

பொதுவாக மனிதனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிக் கொண்டே இருக்கும் ஒரு அற்புதமான அம்சம் தான் ஆசைகள்.

ஆசைகள் தான் ஒரு மனிதனை வடிவமைக்கின்றன. ஆசைகள் தான் ஒரு மனிதனை அடையாளப்படுத்துகின்றன. ஆசைகள் தான் ஒரு மனிதனின் தேவைகளை நிர்ணயிக்கின்றன.

இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கின்றன. சிலருக்கு புதிதாக எதையாவது கற்றுக் கொள்வதில் ஆசை, சிலருக்கு குடும்பத்தில், சமூகத்தில் அங்கீகாரம், மரியாதை பெற ஆசை, சிலருக்கு பொறுப்பை பெற, இன்னும் சிலருக்கு பொறுப்புடன் நடக்க ஆசை இப்படி ஆசைகளின் பட்டியல் மிக நீண்டது.

ஆசைகள் எப்போதும் மறைவதில்லை. ஆனால், மாறுகின்றன. ஒரு ஆசையை இன்னொரு ஆசையின் மூலம் மனிதன் வென்று கொண்டே இருக்கின்றான்.

இஸ்லாமும்.. ஆசையும்…

மனித சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கிற இறைநம்பிக்கையாளன் ஒருவன் இறை திருப்தியை பெறுகிற நோக்கில் வெளிப்படுத்துகிற ஆசைகளை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது, ஏற்றுக் கொள்கின்றது அதற்காக அவன் மேற்கொள்ளும் முயற்சிகளை இஸ்லாம் வரவேற்கின்றது

عن أبي هريرة – رضى الله عنه - قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا تمنى أحدكم فلينظر ما يتمنى فإنه لا يدري ما يكتب له من أمنيته ) رواه احمد

”உங்களில் ஒருவர் ஆசைப்பட்டால் அவர் எதை ஆசைப்படுகிறார் என்பதை சிந்தனை செய்து கொள்ளட்டும்! ஏனெனில் அவரின் எந்த ஆசைக்கு கூலி எழுதப்படுகிறது என்று அவர் அறியமாட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                 ( நூல்: அஹ்மத் )

ஆசைகளை எச்சரிக்கையுடன் வெளிப்படுத்தத் தூண்டும் இஸ்லாம் உயர்வான ஆசைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது.

إِنَّ اللهَ تَعَالَى يُحِبُّ مَعَالِيَ الأُمُوِر وَأَشرَافَهَا، وَيَكَرهُ سَفْسَافَهَا

ஹஸன் இப்னு  அலீ (ரலி)  அறிவிக்கின்றார்கள்: “திண்ணமாக! அல்லாஹ்  காரியங்களில்,  செயல்களில் மிக உயர்ந்தவற்றையும், சிறப்பானவற்றையும்  பிரியப்படுகின்றான்  என நபி {ஸல்}  அவர்கள் கூறினார்கள்   ( நூல்: தப்ரானீ )
ولما ولدت النّعمان بن بشير حملَتْهُ إلى رسول الله صَلَّى الله عليه وسلم، فدعا بتمرة فمضغها، ثم ألقاها في فيه فحنّكه بها، فقالت: يا رسول الله، ادْع الله أن يكثر ماله وولده، فقال

 "أما ترضين أن يعيش كما عاش خاله حميدًا، وقُتل شهيدًا، ودخل الجنّة"

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் சகோதரி அம்ரா (ரலி) அவர்கள் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கின்றார்கள். அம்ராவின் கணவர் பஷீர் (ரலி) அவர்கள் நுஃமான் என அந்தக் குழந்தைக்கு பெயரிட்டு அண்ணலாரிடம் ஆசி பெற்று வருமாறு தம் மனைவி அம்ராவை நபி {ஸல்} அவர்களிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கையில் நுஃமானைக் கொடுத்த அம்ரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் பிள்ளை நுஃமானுக்கு பொருளாதார வளத்திற்கும், அதிக பிள்ளைச் செல்வத்திற்கும் துஆச் செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் ஒரு பேரீத்தம் பழத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதை வாயில் போட்டு மென்று நுஃமானுக்கு கொடுத்து விட்டு அர்வா! என்ன உன்னுடைய ஆசை இப்படி இருக்கிறது? உன் சகோதரன், நுஃமானின் மாமா அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் போல உன் மகன் புகழோடு வாழ வேண்டும்என்ற ஆசை உமக்கு இல்லையா? பெரும் போராளியாக இருந்து மார்க்கத்திற்காக உயிர் நீத்து, சுவனத்து வாழ்வைப் பெற்ற அந்த உன்னத நிலையை உம் மகன் அடைய வேண்டும் என்ற ஆசை உமக்கில்லையா?” என்று கேட்டார்கள்.

எல்லோரையும் போல காசு, பணத்திற்கு ஆசைப்படாமல் உயர்ந்த ஆசைகளைக் கொண்டு தங்களின் மழலைகளை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அர்வா (ரலி) அவர்களின் ஆழ்மனதினில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விதைத்தார்கள்.

அர்வா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் எண்ணப்படி நுஃமான் (ரலி) அவர்களை வார்த்தெடுத்தார்கள்.

ஆதலால், அல்லாஹ் அர்வா (ரலி) அவர்கள் தங்களின் மகனுக்காக நபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்ற பொருளாதார வளத்தையும், பிள்ளைச் செல்வங்களையும் வழங்கினான்.

பின் நாளில் நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் மாபெரும் மார்க்கப் போராளியாக, மனித நேய மாண்பாளராக, வாரி வழங்கும் வள்ளலாக முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கூஃபா மற்றும் ஹிம்ஸ் பகுதிகளின் மாட்சிமை மிக்க கவர்னராக விளங்கினார்கள்.  ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா  

மேலும், உயர்ந்த ஆசைகளை எளிதில் அடைவதற்காக இறைவனின் உதவியைத் தேடுமாறு இஸ்லாம் கூறுகின்றது.

وَفِي الحَدِيثِ: «إِذَا تَمَنَّى أَحَدُكُمْ، فَلْيَسْتَكْثِرْ، فَإِنَّمَا يَسْأَلُ رَبَّهُ»؛ رَوَاهُ عَبْدُ بْنُ حُمَيْدٍ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانٍ وَالأَلْبَانِيُّ

 நீங்கள் ஒவ்வொருவரும் அதிகமாக ஆசைப்படுங்கள். ஏனெனில் நீங்கள், உங்கள் ஆசைகள் நிறைவேற உதவி கேட்கப்போவது தன் ரப்பிடம் தான்என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.                                                                                             ( நூல்: இப்னு ஹிப்பான் )

காலம் கடந்த ஆசைகள்..

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِقَبْرٍ، فَقَالَ:\"مَنْ صَاحِبُ هَذَا الْقَبْرِ؟\"فَقَالُوا: فُلانٌ، فَقَالَ:\"رَكْعَتَانِ أَحَبُّ إِلَى هَذَا مِنْ بَقِيَّةِ دُنْيَاكُمْ\".

“ஒரு கப்ரை கடந்துசென்ற பூமான் நபி ஸல் அவர்கள் இந்த கப்ரில் அடங்கப்பட்டிருப்பவர் யார்?என வினவினார்கள். அது இன்னார் என ஸஹாபாக்கள் கூறினார்கள். அப்போது, நபி ஸல் அவர்கள்,நீங்கள் சாதாரணமாக கருதும் இரண்டு ரக்அத் தொழுகையின் நன்மை இவருக்கு கிடைப்பது முழு உலமும் கிடைப்பதை விடவும் விருப்பமானது” என்றார்கள்.                              ( நூல்: தப்ரானி 

عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:يَوَدُّ أَهْلُ الْعَافِيَةِ ، يَوْمَ الْقِيَامَةِ ، حِينَ يُعْطَى أَهْلُ الْبَلاَءِ الثَّوَابَ ، لَوْ أَنَّ جُلُودَهُمْ كَانَتْ قُرِضَتْ فِي الدُّنْيَا بالْمَقَارِيضِ.أخرجه التِّرْمِذِي (2402).

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உலக வாழ்வின் போது உடல் ஆரோக்கியத்தோடும், மன நிறைவோடும், நிம்மதியோடும் வாழ்ந்த நல்லடியார்கள், 

நாளை மறுமை நாளில், உலக வாழ்வின் போது பெரும் சோதனைகளால் ஆட்படுத்தப்

பட்ட நல்லடியார்களுக்கு அல்லாஹ் வழங்குகிற மகத்தான கூலியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு  உலகில் வாழும் காலத்தில் நம்முடைய உடல்களெல்லாம் கத்தரியால் 

வெட்டப்பட்டிருக்கக் கூடாதா? என ஆசை கொள்வார்கள் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                                                   (  நூல்: திர்மிதீ, ஹதீஸ் எண்: 2402 )

ஆசைகளால் உயர்ந்த அந்தஸ்துகளை அடைந்து கொண்ட உத்தமர்கள்..

إن عمرو بن الجموح كان يبكي بكاء شديدا من عدم مشاركته في الغزوات، وكان يشعر بأن قعوده عن القتال لعرج شديد في ساقه استسلام لمحنته وعجز عن الجهاد ونيل الشهادة في سبيل الله، وكان دائما يبكي حظه ويتوعد نفسه بالتخلي عن خمولها وعجزها· وتأتي غزوة أحد فيجمع عمرو بن الجموح أبناءه الاربعة قائلا: لقد منعتموني الخروج الى بدر·· فلا تمنعوني الخروج الى أحد· وقال أبناؤه: إن الله قد عذرك ونحن نكفيك·· وتركهم عمرو قاصداً رسول الله صلي الله عليه وسلم ولحق به ابناؤه فبادر الرسول الكريم قائلا: يا رسول الله إن بني هؤلاء يريدون أن يحبسوني عن الخروج معك· والله إني لأرجو أن أطأ بعرجتي هذه الجنة· فتبسم الرسول الكريم وقال: ''أما أنت فقد عذرك الله، ولا جهاد عليك''· وألح عمرو بن الجموح في الخروج وبكي بين يدي رسول الله، فقال الرسول الكريم لأبنائه: لا عليكم، لا تمنعوه، لعل الله يرزقه الشهادة· ويسرع عمرو الى سلاحه ويمضي به ويشاهده المسلمون متحدياً عرجته يتعثر حينا ويخترق الصعاب حينا آخر ومعه صديقه عبدالله بن عمرو بن حرام وحوله أولاده الاربعة· ويرتفع صوت عمرو حينما اشتدت الغزوة قائلا: اللهم ارزقني الشهادة في سبيلك· ولا تردني الى أهلي خائبا، ويوصي ولده جابر قائلا: إني أرجو أن أكون أول من يصاب في أحد، فأوصيك ببنات عبدالله خيرا· ويستشهد عمرو وصديقه عبدالله ويدفنان في قبر واحد، وينظر الرسول الكريم في وجه عمرو بن الجموح ثم يقول: ''والذي نفسي بيده لقد رأيت عمرو بن الجموح يطأ في الجنه بعرجته''·

உஹதுப் போர் மேகம் மதீனாவைச் சூழ்ந்தபோது, களத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த முஸ்லிம்களில் அம்ரிப்னுல் ஜமூஹ்வின் மகன்களும் முக்கியமானவர்கள். வீட்டிற்கு வருவதும் ஆயுதங்கள் தயார் செய்வதும் செல்வதும் என்று பரபரவென இயங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தாமும் கவசம் தரிக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்துத்தான் திகைத்துப் போனார்கள் புதல்வர்கள்.

"அன்பிற்குரிய தந்தையே! தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டான். பிறகு ஏன் இந்தளவு சிரமம், எடுத்துக் கொள்கின்றீர்கள்?"

நபியவர்களைச் சந்தித்து நியாயம் கேட்க விந்தி விந்தி விரைந்த அம்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! என் கால் ஊனத்தைக் காரணமாக்கி நான் நல்லறம் புரிவதை என் மகன்கள் தடுக்கப் பார்க்கின்றனர். நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன். தத்திக்கொண்டேனும் சொர்க்கம் சென்றடைவதே என் ஆசையாக இருக்கிறது"

அவரது உறுதியை உணர்ந்த நபியவர்கள் கூறினார்கள், "இவரையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு வீர மரணம் நிகழவேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்து இருக்கலாம்"

இறைத் தூதரின் அனுமதி அமல்படுத்தப்பட்டது. ஏதோ மகத்தான பரிசில் கிடைத்தது போல் புன்னகையுடன் வீட்டிற்கு விரைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ் (ரலி). திரும்பி வரப்போகும் உத்தரவாதம் ஏதும் இல்லை என்ற நிச்சய உணர்வுடன் தம் மனைவியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டவர், கஅபாவை நோக்கித் திரும்பிக் கையேந்தினார்.

"யா அல்லாஹ்! எனக்கு வீர மரணத்தை அளித்தருள்வாயாக. என்னை ஏமாற்றமுடன் வீடு திரும்ப வைத்துவிடாதே!"

யுத்த களத்தில் நுழைந்து வீர தீரத்துடன் போராடி ஷஹீத் ஆனார்கள். மாநபி {ஸல்} அவர்கள் யுத்தம் முடிந்து அம்ர் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டு கிடக்கும் காட்சியைப் பார்த்து விட்டு “இதோ! அம்ர் இப்னு ஜமூஹ் (ரலி) அவர்கள் மாற்றுத் திறன் வாய்ந்த கால்களால் தவழ்ந்து தவழ்ந்து சுவனம் செல்வதைப் பார்க்கின்றேன்” என்று கூறினார்கள்.                           ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா )

قال رسول الله صلى الله عليه وسلم: "من نوقش الحساب عذب ". قال سعيد بن جبير: حدثنا ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: " عرضت علي الأمم، فرأيت النبي ومعه الرهط، والنبي يمر ومعه الثلاثة والاثنان، والنبي يمر ومعه الرجل الواحد، والنبي يمر وليس معه أحد، إلى أن رفع لي سواد عظيم فقلت: هذه أمتي. قيل: ليس بأمتك، هذا موسى وقومه.

الرسول  تابع

مخاطبة اصحابه قائلا بحسب حديث ابن عباس رضي الله عنه إلى أن رفع لي سواد عظيم قد سد الافق، فقيل: هذه أمتك، ومعهم سبعون ألفا يدخلون الجنة بغير حساب ولا عذاب" قال: ثم دخل النبي صلى الله عليه وسلم فخضنا في أولئك السبعين، وجعلنا نقول: من الذين يدخلون الجنة بغير حساب ولا عذاب؟ أهم الذين صحبوا النبي صلى الله عليه وسلم أم هم الذين ولدوا في الإسلام ولم يشركوا بالله شيئا؟ إلى أن خرج النبي صلى الله عليه وسلم فقال: ما هذا الذي كنتم تخوضون فيه ؟ قال: فأخبره، فقال: " هم الذين لا يسترقون ولا يكتوون، وعلى ربهم يتوكلون " فقام عكاشة بن محصن فقال: (أنا منهم يا رسول الله؟) قال: " أنت منهم " وقام رجل آخر من المهاجرين فقال: أنا منهم يا رسول الله؟ قال: "سبقك بها عكاشة

 

உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்கள் நபிகளாரின் அவையிலே அமர்ந்திருந்தார்கள்.

 

அண்ணலார் {ஸல்} அவர்கள் மஹ்ஷரின் நிலைமைகளை விவரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது நபி {ஸல்} அவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி 70000 நபர்கள் என் உம்மத்தவர்கள் சுவனம் நுழைவார்கள் என்று கூறினார்கள்.

 

சுற்றியிருந்த நபித்தோழர்கள் அவர்கள் எத்தகைய அமல் செய்தவர்கள்? என வினவ, நபிகளார் அதற்கான பதிலை விவரித்தார்கள்.

 

சற்றும் தாமதிக்காமல் உக்காஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அந்த எழுபதினாயிரம் நபர்களில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகின்றேன்! எனக்காக துஆ செய்யுங்கள் என்றார்கள்.

 

وبشره رسول الله صلى الله عليه وسلم أنه ممن يدخل الجنة بغير حساب.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அல்லாஹ் உம்மையும் அவர்களில் ஒருவனாக ஆக்கட்டும்!” என்று துஆ செய்தார்கள்.


وقال الإمام أحمد: حدثنا عبد الله بن محمد، ثنا أبو خالد الأحمر، عن الحجاج، عن الحكم، عن مقسم، عن ابن عباس: أن رسول الله بعث إلى مؤتة فاستعمل زيدا، فإن قتل زيد فجعفر، فإن قتل جعفر فابن رواحة، فتخلف ابن رواحة، فجمع مع النبي فرآه فقال له: «ما خلفك؟».
فقال: أجمع معك.
قال: «لغدوة أو روحة خير من الدنيا وما فيها».
وقال أحمد: ثنا أبو معاوية، ثنا الحجاج، عن الحكم، عن مقسم، عن ابن عباس قال: بعث رسول الله
عبد الله بن رواحة في سرية فوافق ذلك يوم الجمعة
قال: فقدم أصحابه وقال: أتخلف فأصلي مع رسول الله الجمعة ثم ألحقهم.
قال: فلما صلى رسول الله رآه فقال: «ما منعك أن تغدو مع أصحابك؟».
فقال: أردت أن أصلي معك الجمعة ثم ألحقهم.
فقال رسول الله صلى الله
«لو أنفقت ما في الأرض جميعا ما أدركت غدوتهم».

     

 அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த நபித்தோழர்களில் ஒருவராவார்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூத்தா யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பும் போது, வழக்கத்திற்கு மாறாக தளபதிகளாக மூன்று நபித்தோழர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

 

ஆரம்பமாக, ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார்! அவர் காயமுற்றால் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் இஸ்லாமியப் படை வீரர்கள் அடுத்த தளபதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறி படையை வழியனுப்பி வைத்தார்கள்.

 

படை புறப்பட்டுச் சென்ற நாள் வியாழன் மாலையாக இருந்தது. விடிந்தால் வெள்ளிக்கிழமை.

 

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தளபதிகளை நியமிக்கும் அந்த விதத்தைப் பார்த்தே நிச்சயம் தாம் மூத்தா யுத்தத்தில் ஷஹீதாகி விடுவோம் என்று உறுதியாக நம்பினார்கள்.

 

ஆகையால், ”எப்படியும் நாம் ஷஹீதாகி விடுவோம். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை இனி பார்க்க முடியாது. கடைசியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பின் நின்று ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டுச் செல்வோம் என்று மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.

 

ஜும்ஆ தொழுகைக்கான பாங்கு சொல்லப்படவே, நபி {ஸல்} அவர்கள் தம்மைப் பார்த்து விடாதவாறு ஒரு ஓரமான இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

 

தொழுகை முடிந்து வெளியே செல்லும் போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களைப் பார்த்து விட்டார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அழைத்து நேற்றே நான் யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பி வைத்தேனே! ஏன் நீங்களும் அவர்களுடன் செல்லாமல் இருந்து விட்டீர்? உம்மை செல்ல விடாமல் செய்த காரியம் எது?” என்று வினவினார்கள்.

 

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறுதியாக உங்களுக்குப் பின்னால் நின்று ஜும்ஆ தொழுகையை தொழுதிடும் ஆவல் தான் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. இதோ அல்லாஹ்வின் தூதரே! யுத்த களத்தை நோக்கித் தான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். விரைவாகச் சென்று வழியில் படைப்பிரிவில் சேர்ந்து கொள்வேன் என்று பதில் கூறினார்கள்.

 

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ்வே! பூமி முழுவதையும் நீர் செலவழித்தாலும் கூட,  முன்னால் சென்று விட்ட படைப்பிரிவினர் அடைந்த நன்மைகளை உம்மால் அடைந்து கொள்ள முடியாதே!” என்று நபி {ஸல்} அவர்கள் பரிவோடு கூறினார்கள்.

 

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களோடு நான் இருக்கும் ஒரு காலைப் பொழுதோ, அல்லது மாலைப் பொழுதோ இந்த உலகமும், உலகின் அனைத்துச் செல்வங்களும் எனக்கு கிடைப்பதை விட மேலாக நான் கருதுகின்றேன்!” என்று கூறி, விடை பெற்று  யுத்தகளம் நோக்கி விரைந்தார்கள்.                      ( நூல்: முஸ்னத் அஹ்மத் )


فعَنْ طَلْحَةَ بْنِ خِرَاشٍ ، قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ:لَمَّا قُتِلَ عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ ، يَوْمَ أُحُدٍ ، لَقِيَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَقَالَ : يَا جَابِرُ ، أَلاَ أُخْبِرُكَ مَا قَالَ اللهُ لأَبِيكَ ؟ (وَقَالَ يَحْيَى فِي حَدِيثِهِ : فَقَالَ : يَا جَابِرُ ، مَا لِي أَرَاكَ مُنْكَسِرًا ؟ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، اسْتُشْهِدَ أَبِي وَتَرَكَ عِيَالاً وَدَيْنًا ، قَالَ : أَفَلاَ أُبَشِّرُكَ بِمَا لَقِيَ اللهُ بِهِ أَبَاكَ ؟) قَالَ : بَلَى ، يَا رَسُولَ اللهِ ، قَالَ : مَا كَلَّمَ اللهُ أَحَدًا قَطُّ إِلاَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ، وَكَلَّمَ أَبَاكَ كِفَاحًا ، فَقَالَ : يَا عَبْدِي ، تَمَنَّ عَلَيَّ أُعْطِكَ ، قَالَ : يَا رَبِّ ، تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً ، فَقَالَ الرَّبُّ سُبْحَانَهُ : إِنَّهُ سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لاَ يَرْجِعُونَ ، قَالَ : يَا رَبِّ ، فَأَبْلِغْ مَنْ وَرَائِي ، قَالَ : فَأَنْزَلَ اللهُ ، تَعَالَى : (وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ).أخرجه ابن ماجة (190) الألباني :حسن الظلال ( 602 ) ، التعليق الرغيب ( 2 / 190 - 191 ).

 

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “என் தந்தை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உஹது போரில் கொல்லப்பட்ட போது நபி {ஸல்} அவர்கள் என்னை சந்தித்து-ஜாபிரே! ஏன் கவலையாக இருக்கிறீர்? என விசாரித்தார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தை உஹதில் ஷஹீதாகிவிட்டார். அவர் குடும்பங்களையும் சில கடன்களையும் விட்டுச்சென்றுள்ளார். அவரின் கடனை அடைத்து, குடும்பத்தை எப்படி நடத்துவது? என யோசனை செய்து  கொண்டிருக்கிறேன்” என்று நான் கூறினேன்.

 

அதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், அல்லாஹ் உன் தந்தையை எப்படி சந்தித்தான் என்று கூறட்டுமா? என கேட்டார்கள். அவசியம் கூறுங்கள் என்றேன்.

 

“அல்லாஹ் யாருடனும் திரையின்றி பேசமாட்டான். ஆனால் உன் தந்தையுடன் நேரடியாக திரையின்றி பேசினான். என் அடியானே! உனக்கு என்ன வேண்டும்?.நீ ஆசைப்படு. அதை உனக்கு நான் கொடுக்கிறேன்!” என்று அல்லாஹ் கூறினான்.

 

அதற்கு உன் தந்தை-ரப்பே! எனக்கு மீண்டும் உயிர் கொடு, அதை உனக்காக (நான் கொல்லப்பட்டு) திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்றார்கள்.

 

அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன்,  இங்கு வந்தவர்கள் யாரும் திருப்பி உலகுக்கு அனுப்பபடமாட்டார்கள் என்ற என் தீர்ப்பு முந்திவிட்டது” என்று கூறியபோது- அப்படியானால் என்னைப்பற்றிய செய்திகளையாவது என்னை பிரிந்துவாடும் என் குடும்பத்திற்கு எத்திவைப்பாயாக என கூறினார்கள். அப்போது அல்லாஹ்

 

وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ

 

“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணிவிடவேண்டாம்.அவர்கள் உயிருள்ளவர்கள்.அவர்கள் ரப்பிடம்

உணவ ளிக்கப்படுகிறார்கள்”. என்ற ஆயத்தை இறக்கினான்.

 

 

ஆசைகள் இருந்தால் மட்டும் போதாது

 

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ وَاللَّفْظُ لِأَبِي الطَّاهِرِ قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى أَحَدٍ يُدْعَى مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالُوا حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ ح و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ كِلَاهُمَا عَنْ الزُّهْرِيِّ بِإِسْنَادِ يُونُسَ وَمَعْنَى حَدِيثِهِ

 

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, “அல்லாஹ்வின் அடியாரே! இது பெரும் நன்மையாகும்! இதன் வழியாக நுழையுங்கள்!” என்று அழைக்கப்படுவார்.

 

தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 

அப்போது, அங்கிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாக அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள்.

 

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் ஆமாம் நீரும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என நான் ஆசிக்கின்றேன். ஒருவராக இருப்பீர் என நான் நம்புகின்றேன் என்று கூறினார்கள்.                                            ( நூல்:முஸ்லிம் )

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ

 قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :«مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا»؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَاقَالَ:«فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً»؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا»؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَا. قَالَ:«فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًا»؟ قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه :أَنَافَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :«مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ» .
أخرجه مسلم .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் எங்களிடம், “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

 

இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

 

இன்றைய தினம் ஓர் உங்களில் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

 

இன்றைய தினம் உங்களில் ஒரு நோயாளியைச் சந்தித்து நலம் விசாரித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

 

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எந்த மனிதர் நல்லறங்களான இவையனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்றார்கள்.                       ( நூல்: முஸ்லிம் )

 

இங்கே, அபூபக்ர் (ரலி) அவர்கள் முந்தைய நபிமொழியில் தங்கள் ஆசையை வெளிப்படுத்தியதையும், அடுத்த நபிமொழியில் அதற்கான செயல் வடிவம் கொடுத்ததையும் பார்க்க முடிகின்றது.

 

ஆகவே, நம் ஆசைகளை வணக்க வழிபாடுகள் விஷயத்தில் செலுத்துவோம், எதிர்வருகிற ரமலானை அமல்களால் நிரப்பி இறைநேசத்தையும், இறைநெருக்கத்தையும் பெறுவோம்! அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

11 comments:

  1. ماشاءالله
    .بارك الله في علمك

    ReplyDelete
  2. தமிழ்நாட்டு மக்களின் ஆசையும் தேவையும் வேறுபக்கமாக இருக்க
    ஒரு உண்மை விசுவாசியான(முஃமின்களின்)
    ஆசை எதென்பக்கம் இருக்கவேண்டும்
    நம்மை திசைகாட்டுகிறார்
    Baarakallah

    ReplyDelete
  3. بارك الله فيك يا أخي الكريم

    ReplyDelete
  4. தேர்தலை பற்றிய கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்

      Delete
    2. இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பதிவு செய்யப்படும்

      Delete
  5. பாரக்கல்லாஹ் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  6. Masha Allah நல்ல கட்டுரை

    ReplyDelete
  7. அல்ஹம்துலில்லாஹ் உஸ்தாத்! தங்களது அருமையான பயான் குறிப்புகளின் மூலம் ரமலானின் ஜும்ஆக்களும் பயான் நிகழ்வுகளும் மேலும் சிறப்பாகின்றன. جزاكم الله خيرا كثيرا يا استاذ الكريم திருப்பூர்

    ReplyDelete