Thursday, 5 August 2021

முன்மாதிரி முஸ்லிமாக வாழ ஆசைப்படுவோம்!!!

 

முன்மாதிரி முஸ்லிமாக வாழ ஆசைப்படுவோம்!!!

 


தற்போது (2021) டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் 73 கிலோ எடைப் பிரிவிற்கான ஜூடோ போட்டியில் இஸ்ரேலிய வீரர் தோஹர் புட்புல்லை எதிர்த்து சூடானைச் சேர்ந்த முஹம்மது அப்துர் ரஸூல் மோதுவதாக இருந்தது. திடீரென அப்துர் ரஸூல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதற்கு முந்தைய சுற்றிலும் இதே போன்று புட்புல்லுக்கு எதிராக விளையாடுவதை மறுத்து போட்டியிலிருந்து விலகியிருந்தார் அல்ஜீரிய வீரர் நவுரின். நவுரினுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில், கடந்த 2019 –ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் இதே புட்புல்லை எதிர்த்து விளையாட மாட்டேன் என மறுத்திருந்தார்.

விளையாட மறுத்ததற்கான காரணத்தை சொல்லும் போதுஎல்லாவற்றையும் விட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலால் அனுபவித்து வரும் நீண்ட கால பிரச்சினை தான் எங்களுக்கு முக்கியம்என்று கூறியிருக்கின்றார்கள். இது சர்வதேச அளவில் பாலஸ்தீன மக்களுக்கான பிரச்சினையின் வீரியத்தை உணர்த்துவதாய் அமைந்திருந்தது. சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதே டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 1 –ம் தேதி நடைபெற்ற சம்பவம் ஒன்றும் சர்வதேச அளவில் புகழ்ந்து பேசப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறது.

அந்த நிகழ்விற்கு சொந்தக்காரர்கள் இத்தாலியின் ஜன்மார்க்கோ டம்பேரி கத்தாரின் முட்டாஸ் பார்ஷிம்.

இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் பங்கேற்றிருந்தனர்.  பங்கேற்ற எல்லா வீரர்களும் தங்களுக்கான வாய்ப்பில் தாண்டி முடிக்கின்றனர். ஜன்மார்க்கோ டம்பேரி மற்றும் முட்டாஸ் பார்ஷிம் இருவரும் முறையே 2.37 மீட்டருக்கு தாண்டி சமநிலையில் முடிக்கின்றனர்.

யாருக்கு தங்கப்பதக்கத்தை கொடுப்பது என்கிற கேள்வி எழுகிறது. டை பிரேக்கர் எனும் சுற்று தொடங்கியது. கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் இருவரும் முன்பு போலவே சம நிலையில் முடிக்கின்றனர். போட்டியின் நடுவர் வேகமாக அருகில் வந்துஜம்ப் ஆஃப்அதாவது முடிவை தீர்மானிக்கும் வகையில் ஒருமுறை கடைசியாக தாண்டுகின்றீர்களா? என இருவரிடமும் கேட்கின்றார்.

காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதால் போட்டியில் இருந்து பின் வாங்குவதாக ஜன்மார்க்கோ டம்பேரி கூறுகின்றார்.

ஆனால், முட்டாஸ் பார்ஷிம்இரண்டு பேருக்கும் தங்கப்பதக்கம்கிடைக்க வாய்ப்பிருக்கின்றதா? என்று கேட்கின்றார். ஆம்! இருக்கின்றது. அது உங்களுடைய விருப்பம் என்கிறார் நடுவர். தானும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார் முட்டாஸ் பார்ஷிம்.

சக எதிர் வீரரின் பதக்கக் கனவையும், திறமையையும், விடாமுயற்சியையும் மதித்து அவரும் தங்கப்பதக்கம் பெறத் தகுதியானவரே என்ற அடிப்படையில் முட்டாஸ் பார்ஷிம் இந்த முடிவை மேற்கொள்கின்றார். இருவருக்கும் தங்கப்பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

முன்னதாக முட்டாஸ் பார்ஷிம் இந்த முடிவை அறிவிக்கும் போது மைதானத்தில் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, மைதானத்தை முத்தமிட்டு, முட்டாஸ் பார்ஷிமை ஜன்மார்க்கோ டம்பேரி ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்ததை சமூக வலைதளங்களில் வீடியோவில் பார்க்கும் போது உலகமே ஆனந்தம் கொண்டது.

நொடிப்பொழுதில் ஜன்மார்க்கோ டம்பேரி மட்டுமல்ல உலக மக்களே மகிழ்ச்சியில் திளைக்க காரணமாகிப்போனார் முட்டாஸ் பார்ஷிம்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே அமைந்திருக்கும் முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் ஆலிம்கள் நிறைந்திருக்கும் ஊர் தான் திட்டுவிளை.

இந்த ஊரில் நியாஸ் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. சுற்று வட்டாரத்தின் அனைத்து சமூக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற ஹோட்டல் என்றால் மிகையல்ல.

தரம், ருசி என வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் ஒரு ஹோட்டல். எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தால் கடை நிரம்பி வழிவதை சாலையில் செல்லும் போது பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன் இந்த ஹோட்டலுக்கு வெள்ளை சட்டை அணிந்து, காவி வேட்டி கட்டி, கையில் காவிக்கயிறு கட்டி ஒரு காரில் இருந்து நடுத்தர வயதுடைய ஒருவர் இறங்கி வந்தார். பார்த்த உடனே அவர் ஆர்.எஸ்.எஸ் காரர் என்று விளங்கிவிடும்.

வந்தவர் நேராக புரோட்டா மாஸ்டர் சேக் என்பவரை அணுகி என்னுடைய பர்ஸை நான் மற்ந்து வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். எனக்கு பத்து புரோட்டாவும் சிக்கனும் வேண்டும் என்று கேட்டார். அடுத்த வாரம் இந்த வழியாக வரும் போது பணம் தருகின்றேன் என்கிறார்.

வந்தவர் யார்? எந்த ஊர்? என்ற எந்த விசாரணையையும் செய்யாமல் உள்ளே சென்ற சேக் பத்து புரோட்டாவையும் சிக்கனையும் கொண்டு வந்து கையில் கொடுக்கின்றார்.

சொன்னது போலவே ஒரு வாரம் கழித்து அந்த நபர் வாங்கிய புரோட்டா, சிக்கனுக்கான பணத்தை புரோட்டா மஸ்டர் சேக் அவர்களிடம் கொடுத்து விட்டு மன நெகிழ்வோடு நன்றி தெரிவித்து விட்டுநான் ஆர்.எஸ்.எஸ்ன் தீவிர பற்றாளன். முஸ்லிம்களை கண்டாலே எனக்குப் பிடிக்காது. எந்த முஸ்லிமைப் பார்த்தாலும் நான் எதிரியாகத்தான் பார்ப்பேன். இப்படிப்பட்ட என்னை தலைகீழாக மாற்றியது உங்களுடைய செயல் தான்என்று கூறி விட்டு தொடர்ந்தார்.

உங்களிடம் புரோட்டாவும் சிக்கனும் கடன் வாங்கிய அன்றுநான்  என்னுடைய ஊர் குலசேகரத்திலிருந்து மாலை நேரத்தில் என்னுடைய காரில் நாகர்கோவிலுக்கு ஒரு வேளையாக சென்று விட்டு என்னுடைய எஸ்டேட்டுக்கு திரும்பிக்கொ கொண்டிருக்கும் போது என்னுடைய எஸ்டேட்டில் வேலை செய்பவருக்கு சாப்பிட ஏதாவது வாங்கி செல்லலாம் என காரை நிறுத்தி பர்ஸை பார்த்தேன். அப்போது தான் நான் வீட்டிலேயே பர்ஸை மறந்து விட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது.

உடனடியாக ஆர்,எஸ்,எஸ்ன் பொறுப்பாளர் ஒருவர் நடத்துகிற ஓட்டலுக்கு சென்று என் நிலையைக் கூறி கடன் கேட்டேன். கேட்ட மாத்திரத்திலேயே முகத்தில் அடித்தாற்போல் பேசி கடனெல்லாம் தரமுடியாது என்று கூறிவிட்டார். இத்தனைக்கும் நானும் அவரும் ஒரே கொள்கையில் பயணிப்பவர்கள்.

அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று பணம் எடுத்து வந்து எங்காவது ஒரு ஹோட்டலில் உணவு வாங்கி எஸ்டேட் வேலையாளுக்கு கொடுக்கலாம் என்று நினைத்து திட்டுவிளை வழியாக சென்றேன். வழியில் தான் உங்கள் கடையைப் பார்த்தேன்.

நம்பிக்கையில்லாமல் தான் உங்கள் ஓட்டலுக்கு வந்து கடன் கேட்டேன். ஆனால், நீங்களோ சற்றும் யோசிக்காமல் எந்த விவரமும் கேட்காமல் எனக்கு உதவி செய்தீர்கள்.

அன்றைய தினம் எனக்கு உறக்கமே வரவில்லை. என்னுள் பல சிந்தனை. நான் உயர்வாக நினைத்த என் கொள்கைக்காரன் எனக்கு உதவி செய்ய மறுக்கின்றான். நான் எதிரியாக நினைத்த ஒரு முஸ்லிம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்திருக்கின்றார். இனிமேலும்,  நான் முஸ்லிம்களை எதிரியாக நினைக்கத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்ல் இருந்தால் நான் மனிதனே இல்லை என்ற முடிவுடன் தூங்கச் சென்றேன்.

மறுநாள் காலையில் கண்விழித்து எழுந்ததும் முதல் வேலையாக காவிக் கயிறை அறுத்து எறிந்து விட்டேன். இதோ பாருங்கள் என் கையைஎன்று நியாஸ் ஹோட்டல் ஷேக்கிடம் நன்றிப்பெருக்குடன் பேசி விடை பெற்றுச் சென்றார். அந்த இந்து சகோதரர்.

கடந்த பதினைந்து நாட்களுக்குள்ளாக நடைபெற்ற நிகழ்வுகள் இது.

முஹம்மது அப்துர் ரஸூல், நவுரின், முட்டாஸ் பார்ஷிம், ஷேக் ஆகியோரின் செயலை, அவர்களோடு தொடர்புடைய இந்நிகழ்வுகளை முஸ்லிமாக நாம் மிக எளிதாக கடந்து விட முடியாது.

முதல் இருவரின் செயல்கள் சக முஸ்லிமோடு நடந்து கொள்ள வேண்டிய முறையையும், இரண்டாமவரின் செயல் ஒரு முஸ்லிம் சக மனிதனோடு நடந்து கொள்ள வேண்டிய பண்பாட்டையும், மூன்றாமவரின் செயல் ஒரு முஸ்லிம் எதிரி மனப்பான்மை கொண்டவரோடு மேற்கொள்ள வேண்டிய பரந்த மனப்பான்மையை, விசாலமான நடத்தையை உணர்த்துவதாய் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த உலகில் நாம் பெரும்பாலும் முஸ்லிம் என்கிற பெயரிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அப்படி வாழ்ந்திடவே நாம் ஆசைப்படுகின்றோம்.

ஆனால், பெயருக்கு முஸ்லிமாக வாழாமல் உண்மை முஸ்லிமாக, முஸ்லிம் என்ற வார்த்தையின் பொருளின் கனத்தையும், பொறுப்பையும் உணர்ந்த முஸ்லிமாக, முன்மாதிரி முஸ்லிமாகா வாழ நாம் ஆசைப்பட வேண்டும். இஸ்லாம் அத்தகைய முஸ்லிமாக வாழுமாறே வலியுறுத்துகின்றது.

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

எவர் நற்செயல் புரிந்த நிலையில், அல்லாஹ்வின் பால் மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டு மேலும், நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறுகின்றாரோ அவரை விட அழகிய வார்த்தையை கூறுபவர் யார் இருக்கின்றார்?”.                                         ( அல்குர்ஆன்: 41: 33 )

ஒரு முஸ்லிமின் சொல்லும், செயலும் எந்தவொரு உயினத்திற்கும், சக மனிதர்களுக்கும் நலம் பயப்பதாய் அமைய வேண்டும் என்று தூண்டுகிற இஸ்லாம், அதே வேளையில் ஒரு முஸ்லிமின் சொல்லும், செயலும் எவ்விதத்திலும் அச்சுறுத்தலாய், ஆபத்தை விளைவிப்பதாய் அமைந்து விடக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறது.

தன்னை உலகின் கடவுளென பிரகடனப்படுத்தி, சொல்லெனாத் துன்பங்களை விளைவித்து வந்த ஃபிர்அவ்னின் முன்பாக மூஸாஹாரூன் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோரை இறைத்தூதுவர்களாக அனுப்பிய அல்லாஹ் இருவரிடமும் வலியுறுத்தியது இது தான்.

اذْهَبَا إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى

நீங்கள் இருவரும் ஃபிர்அனிடம் செல்லுங்கள்; நிச்சயமாக, அவன் வரம்பு மீறியவனாக இருக்கின்றான். அவனிடம் நீங்கள் இருவரும் மென்மையாக பேசுங்கள். அதனால், அவன் உங்கள் அறிவுரையை ஏற்கக்கூடும்; அல்லது இறைவனுக்கு அஞ்சக்கூடும்!”.                                           ( அல்குர்ஆன்: 20: 43, 44 )

மாநபி {ஸல்} அவர்களின் தொடர் வெற்றிப் பயணத்திற்கான பிரதான கரணிகளை பட்டியலிடும் அல்லாஹ் முதன்மையாக குறிப்பிடும் இரு காரணிகள் இது தான்.

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ

நபியே! அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் அம்மக்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்நெஞ்சம் கொண்டவராகவும் இருந்திருப்பீரேயானால் இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப்போயிருப்பார்கள்”.                                    ( அல்குர்ஆன்: 3: 159 )

 

ஆகவே, நாம் பயணிக்கிற எல்லாத் துறைகளிலும் பெயர் தாங்கி முஸ்லிம், சராசரி முஸ்லிம் என்கிற நிலையைத் தாண்டி முன்மாதிரி முஸ்லிமாக வாழ ஆசைப்படுவோம்.

1.   அச்சுறுத்துவது போன்று நம் சொல்லும், செயலும் அமைந்து விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருப்போம்

 

روى عنه عبد الله بن سلام أنه قال: لم يبق من علامات النبوة شيء إلا وقد عرفته في وجه محمد حين نظرت إليه، إلا اثنتين لم أخبرهما منه: يسبق حلمه غضبه، ولا يزيده شدة الجهل عليه إلا حلماً. فكنت أتلطف له لأن أخالطه، وأعرف حلمه وجهله، قال: فخرج رسول الله صلى الله عليه وسلم يوماً من الأيام من الحجرات، ومعه علي بن أبي طالب، فأتاه رجل على راحلته كالبدوي، فقال: يا رسول الله، إن قرية بني فلان قد أسلموا، وقد أصابتهم سنة وشدة، فإن رأيت أن ترسل إليهم بشيء تعينهم به فعلت. فلم يكن معه شيء، قال زيد: فدنوت منه فقلت: يا محمد، إن رأيت أن تبيعني تمراً معلوماً من حائط بين فلان إلى أجل كذا وكذا. فقال: " يا أخا يهود، ولكن أبيعك تمراً معلوماً إلى أجل كذا وكذا، ولا أسمي حائط بني فلان " . فقلت: نعم، فبايعني وأعطيته ثمانين ديناراً، فأعطاه للرجل، قال زيد: فلما كان قبل محل الأجل بيومين أو ثلاثة، خرج رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار، ومعه أبو بكر وعمر، وعثمان في نفر من أصحابه، فلما صلى على الجنازة أتيته، فأخذت بمجامع قميصه وردائه ونظرت إليه بوجه غليظ، ثم قلت: ألا تقضي يا محمد حقي؟ فو الله ما علمتكم يا بني عبد المطلب لسيئ القضاء مطل. قال: فنظرت إلى عمر وعيناه تدوران في وجهه، ثم قال: أي عدو الله، أتقول لرسول الله ما أسمع! فو الذي بعثه بالحق لولا ما أحاذر فوته لضربت بسيفي رأسك. ورسول الله صلى الله عليه وسلم ينظر إلى عمر في سكون وتبسم، ثم قال: " يا عمر، أنا وهو إلى هذا منك أحوج، أن تأمره بحسن الاقتضاء، وتأمرني بحسن القضاء، اذهب به يا عمر فاقضه حقه، وزده عشرين صاعاً مكان ما روعته " . قال زيد: فذهب بي عمر، فقضاني وزادني، فأسلمت.

 

மதீனாவின் ஒரு நாள் காலைப் பொழுது.. ஒரு கிராமவாசி பதற்றத்துடனும், பரபரப்போடும் அண்ணலாரை நோக்கி வந்தார். அப்போது அண்ணலாரும், அலீ (ரலி) அவர்களும் மதீனாவின் வீதியில் நின்று கொண்டிருந்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்த அந்த கிராமவாசி அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன கிராமத்தில் இருந்து வருகின்றேன். இப்போது எங்களின் கிராமத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு மக்களெல்லாம் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

நான் அவர்களிடையே இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்களென்றால் உங்கள் உணவுகள் விசாலமடையும் என்று கூறினேன்.

இப்போது, இந்தப் பஞ்சமும் வறட்சியும் அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். தாங்கள் ஏதாவது உதவி புரிந்து அம்மக்களை வறட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

அது அவர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமையும்என்று கூறி உதவி வேண்டி நின்றார்.அப்போது, பெருமானார் {ஸல்} அவர்கள் உடனடியாக அவருக்கு உதவிட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், அப்போது நபிகளாரிடம் ஒன்றும் இல்லை.

சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். அந்தப் பார்வையில் தெரிந்தவர்கள் எவராவது வந்தால் அவரிடம் இருந்து ஏதாவது கடனாகப் பெற்று உதவிடலாம் என்ற உயர்ந்த நோக்கு தெறித்தது.

அண்ணலாருக்கு சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஸைத் இப்னு ஸஅனா என்கிற யூத பாதிரி ஒருவர் நபி {ஸல்} அவர்களின் அருகே வந்தார்.வந்தவர் நபி {ஸல்} அவர்களை நோக்கி முஹம்மதே! {ஸல்} நான் உதவி செய்கிறேன், ஆனால், அதற்குப் பகரமாக பேரீத்தம்பழ அறுவடை நேரத்தில் இன்னவரின் தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழத்தில் நான் கொடுக்கும் பணத்திற்குச் சமமாக பேரீத்தம் பழங்களை தரவேண்டும்என்று கூறினார்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் யூத சகோதரா! குறிப்பிட்ட அந்த அறுவடை நேரத்தில், குறிப்பிட்ட இன்னாருடைய தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழங்களை நீர் கொடுக்கும் பணத்திற்கு சமமாக வழங்க நான் சம்மதிக்கிறேன், மேலும், நீர் இன்ன நாளில் (ஒரு நாளைக் குறிப்பிட்டு) வந்து எம்மிடம் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.அப்போது, ஸைத் இப்னு ஸஅனா அண்ணலாரிடம் 80 தீனார்களை கடனாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட நபி {ஸல்} அவர்கள் அந்த கிராமவாசியிடம் கொடுத்து, உமது ஊரில் உள்ள எல்லோருக்கும் இதை பிரித்துக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், தோழர்கள் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி அன்ஹும்) அவர்களும், இன்னும் சில நபித்தோழர்களும் அன்ஸாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாத் தொழுகைக்காக மஸ்ஜிதுன் நபவீயின் வெளிப்பகுதியிலே வீற்றிருந்தார்கள்.ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. தூரத்திலே ஸைத் இப்னு ஸஅனாவும் வந்து கொண்டிருக்கிறார்.நபிகளார் சொன்ன காலக்கெடுவுக்கு இன்னமும், இரண்டு அல்லது மூன்று தினங்கள் பாக்கி இருக்கிறது.

ஜனாஸா தொழுது முடித்து நின்று கொண்டிருந்த அண்ணலாரை நோக்கி பாய்ந்து வந்த ஸைத் இப்னு ஸஅனா கடுகடுத்த முகத்தோடு, அண்ணலாரின் கழுத்தில் போட்டிருந்த துண்டைப் பிடித்து இழுத்தவாறு முஹம்மதே! {ஸல்} ஏன் இன்னும் எனது கடனைத் திருப்பித் தரவில்லை? அப்துல் முத்தலிபின் மக்கள் கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டார்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்!என்று உரக்க கத்தினார்.

அண்ணலாரிடம் மரியாதைக் குறைவாகவும், தரம் தாழ்ந்தும் நடந்து கொண்ட அந்த யூதரின் செயல் கண்டு கொதித்தெழுந்த உமர் (ரலி) அவர்கள் முகம் சிவந்தவர்களாக அல்லாஹ்வின் விரோதியே! அல்லாஹ்வின் தூதரிடமா நீ இவ்வாறு பேசுகிறாய்? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மாத்திரம் இப்போது இங்கே இல்லை என்று சொன்னால் உனது தலையை நான் கொய்திருப்பேன்என்று ஆவேசமாகப் பேசினார்கள்.

அதனைக் கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் புன்முருவல் பூத்த முகத்தோடு உமர் (ரலி) அவர்களை நோக்கி உமரே! நீங்கள் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது! கடனைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று என்னிடம் தான் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது கொஞ்சம் மரியாதையுடன் கேளுங்கள் என்று அவரிடம் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.

ஆனால், உங்கள் பேச்சால் இவரை நீங்கள் பயமுறுத்தி விட்டீர்கள். இவரை அழைத்துச் சென்று நான் வாங்கிய கடனுக்குப் பகரமாக நான் சம்மதித்தது போன்று இன்ன தோடத்து பேரீத்தம் பழங்களை கொடுங்கள்.மேலும், அவரை பயமூட்டும் வகையில் பேசியதற்கு பரிகாரமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களை அதிகமாகக் கொடுங்கள் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு போய் நபி {ஸல்} அவர்கள் சொன்னது போன்றே அவரது கடனையும் திருப்பிச் செலுத்தி, இன்னும் அதிகமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களையும் கொடுத்தார்கள்.அதனைப் பெற்றுக் கொண்ட ஸைத் இப்னு ஸஅனா ஏன் எனக்கு அதிகமாகத் தருகின்றீர்கள்? என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்.

உம்மை அச்சமூட்டும் வகையில் அமைந்து விட்ட என் பேச்சுக்குப் பரிகாரமாக உமக்கு வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் காரணம் கூறினார்கள். ( நூல்: உஸ்துல் காபா, அல் இஸாபா ஃபீ தம்யீஜிஸ் ஸஹாபா )

2.   வாழும் காலம் முழுவதும் நம்மை குறித்து நெகிழ்ந்து கொண்டே இருக்கும் படியான செயலை செய்ய வேண்டும்

ثُمَّ صَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ صباحَ خمْسينَ لَيْلَةً عَلَى ظهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا، فَبينَا أَنَا جَالسٌ عَلَى الْحال الَّتي ذكَر اللَّهُ تعالَى مِنَّا، قَدْ ضَاقَتْ عَلَيَّ نَفْسِى وَضَاقَتْ عَليَّ الأَرضُ بمَا رَحُبَتْ، سَمعْتُ صَوْتَ صَارِخٍ أوفَى عَلَى سَلْعٍ يَقُولُ بأَعْلَى صَوْتِهِ: يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ، فخرَرْتُ سَاجِداً، وَعَرَفْتُ أَنَّهُ قَدْ جَاءَ فَرَجٌ فَآذَنَ رسولُ الله ﷺ النَّاس بِتوْبَةِ الله عَزَّ وَجَلَّ عَلَيْنَا حِين صَلَّى صَلاة الْفجْرِ فذهَبَ النَّاسُ يُبَشِّرُوننا، فذهَبَ قِبَلَ صَاحِبَيَّ مُبَشِّرُونَ، وَرَكَضَ رَجُلٌ إِليَّ فرَساً وَسَعَى ساعٍ مِنْ أَسْلَمَ قِبَلِي وَأَوْفَى عَلَى الْجَبلِ، وكَان الصَّوْتُ أَسْرَعَ مِنَ الْفَرَسِ، فلمَّا جَاءَنِي الَّذي سمِعْتُ صوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَيَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ ببشارَته واللَّه مَا أَمْلِكُ غَيْرَهُمَا يوْمَئذٍ، وَاسْتَعَرْتُ ثَوْبَيْنِ فَلَبسْتُهُمَا وانْطَلَقتُ أَتَأَمَّمُ رسولَ الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَتَلَقَّانِي النَّاسُ فَوْجاً فَوْجاً يُهَنِّئُونني بِالتَّوْبَةِ وَيَقُولُون لِي: لِتَهْنِكَ تَوْبَةُ الله عَلَيْكَ، حتَّى دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رسولُ الله ﷺ جَالِسٌ حَوْلَهُ النَّاسُ، فَقَامَ طلْحَةُ بْنُ عُبَيْداللهِ رضي الله عنه يُهَرْوِل حَتَّى صَافَحَنِي وهَنَّأَنِي، واللَّه مَا قَامَ رَجُلٌ مِنَ الْمُهاجِرِينَ غَيْرُهُ، فَكَان كَعْبٌ لاَ يَنْساهَا لِطَلحَة.
قَالَ كَعْبٌ: فَلَمَّا سَلَّمْتُ عَلَى رَسُولِ الله ﷺ، قَالَ: وَهوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُور "أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ، مُذْ ولَدَتْكَ أُمُّكَ" فقُلْتُ: أمِنْ عِنْدِكَ يَا رَسُول اللَّهِ أَم مِنْ عِنْد الله؟ قَالَ

 لاَ بَلْ مِنْ عِنْد الله ، وكانَ 

தபூக் யுத்தத்திற்கு செல்லாமல் தங்கி விட்ட கஅப் இப்னு மாலிக் (ரலி) ஹிலால் இப்னு உமைய்யா (ரலி), மிராரா (ரலி) ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டிருந்த கால கட்டத்தில் அல்லாஹ் அம்மூவரின் தவ்பாவை ஏற்றுக் கொண்டதாக இறை வசனத்தை இறக்கியருளிய அந்த தருணத்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறும் போது

ஐம்பதாவது நாள் அதிகாலையில் என் வீட்டின் முகட்டில் நான் ஃபஜ்ர் தொழுகையை தொழுது முடித்துவிட்டு, (அல்லாஹ் எங்களைப் பற்றி குர்ஆனில் கூறியது போல்) இந்தப் பூமி உயிர் வாழ்வதற்கு கஷ்டமாகிவிட்டதே! பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் குறுகிப் போய் விட்டதே! என மன வேதனையோடு இருக்கும் போதே, ஸல்வு எனும் மலை மீதிலிருந்து ஓர் அறிவிப்பாளர் ஓ!...! கஅப் இப்னு மாலிக்! நற்செய்தி பெறுவீராக!என்று நற்செய்தி கூறுவதை நான் கேட்டேன்.                                   

அப்படியே ஸஜ்தாவில் வீழ்ந்தேன். நம்முடைய துன்பமெல்லாம் நீங்கி விட்டது என்று நான் அறிந்து கொண்டேன்.  நபி {ஸல்} அவர்கள் ஸுபுஹ் தொழுது முடித்த பிறகு, ”எங்களது பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு, எங்கள் மீது மீண்டும் கருணை பொழிந்து விட்டான்என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.   உடனே மக்கள் அந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்துவிட புறப்பட்டுவிட்டார்கள்.  எவரது உரத்த குரலினால் நற்செய்தியை நான் செவியுற்றேனோ, அவர் என்னிடம் வந்த போது அவரது நற்செய்திக்குப் பரிசாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவருக்கு அணிவித்தேன்”. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்போது அதைத் தவிர வேறு ஆடைகள் என்னிடம் இல்லை.                         

பின்பு நான் வேறு ஒருவரிடம் ஆடைகளை இரவலாகப் பெற்று, அதை அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைக் காண புறப்பட்டு வந்தேன்.   வழியில் என்னைக் கண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தித்து உமது பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு வாழ்த்துக்கள்என்று வாழ்த்துக் கூறினர்.  மகிழ்ச்சி மழையில் நனைந்தவாறே நான் பள்ளிக்குள் நுழைந்தேன்.                                                 

 அங்கு பூமான் நபி {ஸல்} அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர்.அப்போது தல்ஹா பின் உபைதுல்லாஹ் {ரலி} அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். எனக்கு கைலாகு கொடுத்து, எனக்கு வாழ்த்துதெரிவித்தார்கள்.                                                                                                                        

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரைத் தவிர முஹாஜிர்களில் வேறெவரும் எழுந்து வரவில்லை.தல்ஹா (ரலி)” அவர்களின் இந்த உபகாரத்தை கஅப் (ரலி) உயிர் உள்ளவரை மறக்கவே இல்லை.என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.                                  

 

பின்னர், நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நான் ஸலாம் கூறினேன். அப்போது மாநபி {ஸல்} அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது.  

நபி {ஸல்} அவர்கள் என்னைப் பார்த்து “” உம் அன்னை உம்மைப் பெற்றெடுத்த நாள் முதற்கொண்டு உமக்குக் கிடைக்கப் பெறாத சிறந்த இந் நன்நாளினைக் கொண்டு மகிழ்வு அடைவீராக!என்று கூறினார்கள்.                                                        

நான்  இந்த வாழ்த்துச் செய்தி தாங்களிடம் நின்றும் உள்ளதா? அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததா?” என கேட்டேன். அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் இல்லை.. இது, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும்என்றார்கள்.(   நூல்:ரியாளுஸ் ஸாலிஹீன்,பாடம்:2, ஹதீஸ் எண்:21. )

3.   உலகை விட்டு நாம் சென்று விட்டாலும் உலகம் உள்ள வரை நமக்கு நன்மைகள் வந்து சேரும் படியான காரியத்தை முதல் நபராக செய்ய வேண்டும். 

عن أبي عمرو جرير بن عبد الله رضي الله عنه قال كنا في صدر النهار عند رسول الله صلى الله عليه وسلم فجاءه قوم عراة مجتابي النمار أو العباء متقلدي السيوف عامتهم بل كلهم من مضر فتمعر وجه رسول الله صلى الله عليه وسلم لما رأى بهم من الفاقة فدخل ثم خرج فأمر بلال فأذن وأقام ثم صلى ثم خطب فقال: { يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ } إلى آخر الآية { إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا } والآية الأخرى التي في آخر الحشر { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ } تصدق رجل من ديناره من درهمه من ثوبه من صاع بره من صاع تمره حتى قال ولو بشق تمرة فجاء رجل من الأنصار بصرة كادت كفه تعجز عنها بل قد عجزت ثم تتابع الناس حتى رأيت كومين من طعام وثياب حتى رأيت وجه رسول الله صلى الله عليه وسلم يتهلل كأنه مذهبة فقال رسول الله صلى الله عليه وسلم: من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء رواه مسلم

 

ஒரு நாள் அதிகாலைப் பொழுது நபிகளாரைச் சந்திக்க குழு ஒன்று வந்திருந்தது. அண்ணலாரின் சபைக்குள் வந்த போது அவர்களின் தோற்றத்தைக் கண்டதும் அண்ணலாரின் முகம் செந்நிறமாக மாறியது.

வந்திருந்த அக்குழுவினர் முளர் கோத்திரத்தினர். கந்தலாடை, ஒட்டிய வயிறு, உலர்ந்த முகம், பிதுங்கிய விழிகள், எலும்பும் தோலுமாக அவர்களின் முழுத்தோற்றமும் அவர்களின் ஏழ்மையையும், வறுமையையும் பறை சாற்றியது.

அண்ணல் நபிகளாரின் முகம் வாடியது. அவர்களை பள்ளியில் அமர வைத்தார்கள். பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லச் சொன்னார்கள்.

தொழுகை முடிந்ததும், மக்களை நோக்கி உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அந்த உரையில் அந்நிஸா அத்தியாயத்தின் முதல் வசனத்தையும், அல் ஹஷ்ர் அத்தியாயத்தின் 58 மற்றும் 59 –ஆம் வசனத்தை ஓதிக்காண்பித்து விட்டு வந்திருந்த வறியோருக்கு உதவுமாறு வலியுறுத்தினார்கள்.

ஒரு சிறிய துண்டு ஈத்தம் பழத்தை தான் தர முடியும் என்றால் கூட அவர் அதைக் கொண்டு வந்து தரட்டும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, அன்ஸாரித்தோழர்களில் ஒருவர் தன் கைகளால் சுமக்க முடியாத அளவுக்கு ஒரு பை நிறைய வெள்ளியை எடுத்து வந்தார். அவரைத் தொடர்ந்து மக்கள் ஒருவர் பின் ஒருவராக கொண்டு வரத்தொடங்கினர்.

 

ஏராளமான உடைகளும், உணவுப் பொருட்களும் குவிந்த வண்ணம் இருந்தன. அண்ணலாரின் அழகிய முகம் மலர்ந்து இலங்கியது.

குவிந்த குவியலை இன்முகத்துடன் வழங்கி முளர் கோத்திரத்தார்களை வழியனுப்பும் போது பெருமானார் {ஸல்} அவர்கள் எவரேனும் மார்க்கத்தில் நல்லதோர் முன்மாதிரியை ஏற்படுத்துவாரேயானால் அதற்குரிய பிரதிபலன் அவருக்கு கிடைக்கும். அத்தோடு, அதனை அடிப்படையாகக் கொண்டு அதனைப் பின்பற்றுவோரின் பிரதிபலனும் அவருக்கு கிடைக்கும். பின்பற்றுவோரின் நன்மையில் இம்மியளவும் குறையாது.

மேலும், எவரேனும் மார்க்கத்தில் ஓர் அநாச்சாரத்தை உண்டு பண்ணினால் அதற்குண்டான தீமை அவருக்கு கிடைக்கும். அத்தோடு, அதனை அடிப்படையாகக் கொண்டு அதனைப் பின்பற்றுவோரின் பாவமும் அவருக்கு கிடைக்கும். பின்பற்றுவோரின் பாவத்தில் இம்மியளவும் குறையாது.என்று கூறினார்கள். ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன், முஸ்லிம் )

4.   நம் சொல்லும் செயலும் ஒருவர் சுவனத்தில் நுழைவதற்கு காரணமாய் அமைய வேண்டும்.

لقد بهرت عبقرية خالد قوّاد الروم وأمراء جيشهم، مما حمل أحدهم، واسمه جرجح على أن يدعو خالدا للبروز اليه في احدى فترات الراحة بين القتال.
وحين يلتقيان، يوجه القائد الرومي حديثه الى خالد قائلا:
" يا خالد، أصدقني ولا تكذبني فان الحرّ لا يكذب..
هل أنزل على نبيّكم سيفا من السماء فأعطاك ايّاه، فلا تسلّه على أحد الا هزمته"؟؟
قال خالد: لا..
قال الرجل:
فبم سميّت يبف الله"؟
قال خالد: ان الله بعث فينا نبيه، فمنا من صدّقه ومنا من كذّب.ز وكنت فيمن كذّب حتى أخذ الله قلوبنا الى الاسلام، وهدانا برسوله فبايعناه..
فدعا لي الرسول، وقال لي: أنت سيف من سيوف الله، فهكذا سميّت.. سيف الله".
قال القائد الرومي: والام تدعون..؟
قال خالد:
الى توحيد الله، والى الاسلام.
قال:

هل لمن يدخل في الاسلام اليوم مثل ما لكممن المثوبة والأجر؟
قال خالد: نعم وأفضل..
قال الرجل: كيف وقد سبقتموه..؟
قال خالد:
لقد عشنا مع رسول الله صلى الله عليه وسلم، ورأينا آياته ومعجزاته وحق لمن رأى ما رأينا، وسمع ما سمعنا أن يسلم في يسر..
أما أنتم يا من لم تروه ولم تسمعوه، ثم آمنتم بالغيب، فان أجركم أجزل وأكبر اا صدقتم الله سرائركم ونواياكم.
وصاح القائد الرومي، وقد دفع جواده الى ناحية خالد، ووقف بجواره:
علمني الاسلام يا خالد"".!!!
وأسلم وصلى ركعتين لله عز وجل.. لم يصلّ سواهما، فقد استأنف الجيشان القتال.. وقاتل جرجه الروماني في صفوف المسلمين مستيتا في طلب لبشهادة حتى نالها وظفر بها..!!

அபூபக்ர் (ரலி) ஆட்சி காலத்தில் ரோமர்களை எதிர்த்து கண்ட களம் தான் யர்மூக் யுத்தம்.யுத்தம் நடைபெற்ற முதல் நாள் இரவில் ஓய்வு நேரத்தின் போது ரோமப் படையின் தளபதிகளில் ஒருவரான ஜூர்ஜஹ் காலித்இப்னு வலீத்  (ரலி) அவர்களைச் சந்திக்க வேண்டும் என முஸ்லிம் படையினரிடம் வேண்டி நின்றார்.

சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. காலித் (ரலி) அவர்களின் முன்

வந்து நின்ற ஜுர்ஜஹ் கேட்டார்:

காலித் ! உண்மையை சொல்லுங்கள் ஏனெனில் சுதந்திர மனிதர்கள் பொய்

 சொல்வதில்லை. என்னை  ஏமாற்றக் கூடாது  ஏனெனில்,  கண்ணியவான்கள்  ஏமாற்றுவதில்லை. 

தொடர்ந்தார் தமது  உரையாடலை  காலித்  உங்களுக்கு  முஹம்மத்  {ஸல்}  அவர்கள் வானுலகிலிருந்து அல்லாஹ்வின்  புறத்திலிருந்து  ஒரு வாளைப்  பெற்று  உங்களிடம் தந்துள்ளாராமே! உண்மையா? ” என்ற் கேட்டார்.

 உண்மை இல்லை என்றார் காலித் (ரலி).  அப்படியென்றால் உங்களை ஏன்
அனைவரும் அல்லாஹ்வின் வாள் என அழைக்கின்றார்கள்.

நாங்கள் வழிகேட்டில் இருந்தோம் இறைவன் எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியை நல்கினான் அவரை நாங்கள் புறக்கணித்தோம்.

 பின்னர் அவரின் வழி செல்லும் ஒரு சிலர் எங்களில்  உருவானார்கள்.  இறைத்தூதரையும் அவரின் வழி செல்வோரையும் நாங்கள் துன்புறுத்த  ஆரம்பித்தோம்.  

எங்களுக்கிடையே சில போர்களும் நடந்தன ஒரு கட்டத்தில் இறைத்தூதரின்   கை ஓங்கியது. எங்கள் மீது நெருக்கடி இறுகியது எங்களின் இதயங்களும்
தலைகளும் அல்லாஹ்வுக்கு முன் அடிபணிந்தன இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக எங்களை அல்லாஹ் நேர்வழியில் ஆக்கினான். அல்லாஹ்வின் 

இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு இணைந்து நாங்களும் தீமைக்கெதிராக போராடினோம்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் வெளியில் எடுத்த வாள்களில் ஒரு வாள் நீ ! என்று என்னிடம் கூறினார்கள் அதற்குப்பிறகு நான் அப்படியே அறியப்படுகிறேன் அப்படியானால் எதை நோக்கி எங்களை அழைக்கின்றீர்கள் என ஜுர்ஜஹ் கேட்டார்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று  ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மக்களை அழைக்கிறோம் என 

காலித் ரலி சொன்னார்கள். இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களும் உங்களைப்  போன்று அந்ததஸ்தைப் பெற முடியுமா? என ஜுர்ஜஹ் கேட்டார் என்னை விட இன்னும்  சிறந்த அந்ததஸ்தை உங்களால் அடைய முடியும் என்றார் காலித் (ரலி).

மேலான காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் விளக்கம் கலங்கிப் போயிருந்த  ஜுர்ஜஹ் இதயத்தை தெளிவு பெறச் செய்தது. ஆம்! அக்கனமே  அவர் இஸ்லாத்தை  எற்றுக் கொண்டார் கிடைத்த இடை வெளியில் தொழவும் கற்றுக் கொண்டார்.  ஆம் ! இஸ்லாத்தை இதயத்தில் ஏந்தியதற்க்கு  நன்றிக்கடனாக  இரண்டு  ரக்அத்  தொழுது கொண்டார்.

 ஒரு புது உத்வேகத்துடன் இஸ்லாமிய  அணியில்  ஒரு  படை  வீரராக  களம்  கண்டார். தளபதியாக இருந்து போரிட்டதை விட  இப்போது  பன்  மடங்கு இதயம்  பூரித்திருந்ததை அவர் உணர ஆரம்பித்திருந்தார். மறுகனமே யுத்த களத்தின்  நடுவில் புகுந்து அனாயசமாக போரிட்டு சுவனத்திற்கான தமது  முன் பதிவை செய்து கொண்டார் ஆம்! ஷஹீத் வீர மரணம் அடைந்தார். அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக்கொள்வானாக!!
                                                   

 ஒரு முஸ்லிம் என்பவர் சராசரியாக வாழ்வதைக் காட்டிலும் மிகச் சிறந்த  செயலைத் தேர்ந்தெடுத்து, அதை முனைப்போடு செய்து மிகச் சிறந்த முஸ்லிமாக  மட்டுமே வாழ வேண்டும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் மூலம் விளங்க  முடிகின்றது.

ஆகவே, நாம் பங்காற்றும் எந்த ஓர் துறையிலும் சராசரியான ஓர் மனிதனாக, முஸ்லிலிமாக வாழாமல் மிகச் சிறந்த பெற்றோராக, மிகச் சிறந்த ஆலிமாக, மிகச் சிறந்தகணவனாக & மனைவியாக, மிகச்சிறந்த தோழனாக, தோழியாக, மிகச் சிறந்த  உறவினராக, அண்டை வீட்டுக்காரனாக, மிகச் சிறந்த மனிதனாக, மிகச் சிறந்த எஜமானனாக, மிகச் சிறந்த ஊழியராக, மிகச் சிறந்த முஸ்லிமாக, மிகச் சிறந்த தலைவராக, மிகச் சிறந்த தொண்டராக, மிகச் சிறந்த எழுத்தாளராக இப்படி அனைத்து துறைகளிலும் முன்மாதிரி முஸ்லிமாக வாழ ஆசைப்படுவோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் முன்மாதிரி முஸ்லிமாக வாழச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

 

 

11 comments:

  1. மாஷாஅல்லாஹ், அற்புதம் ஹஜ்ரத்!
    நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வேற லெவல்.

    ReplyDelete
  2. திட்டுவிளையில் நடைபெற்ற சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

    ReplyDelete
  3. காலத்திற்கேற்ற உதாரண ஜோடிப்பு அருமை பாரகல்லாஹ்..! ஹஜ்ரத்..

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் மிக அருமை தலைப்பிற்குள்ளாக மிக அருமையான கட்டுரைகள் அல்லாஹ் உங்களின் முயற்சிகளை கபூல் செய்யட்டும்.வியந்துவிட்டேன் பாரகல்லாஹு

    ReplyDelete
  6. அருமையான ஆளுமை யான கட்டுரை காலத்திற்கேற்ப தேவையான கட்டுரை எல்லாம்வல்ல இறைவன் தன்னுடைய பரிபூரண அன்பால் தங்களுடைய கல்வியை அப்படியே பொருந்திக்கொள்வானாக

    ReplyDelete
  7. சமகால சம்பவங்களை குர்ஆன் ஹதீஸ் பார்வையில் மக்களுக்கு படிப்பினை செய்திகளை எத்தி வைப்பதற்கு உங்கள் ஆக்கம் பெரும் உதவி உஸ்தாத். جزاكم الله خير الجزاء يا أستاذ

    ReplyDelete
  8. Hazrath ungal bayanai ethir paarthu tamilagam kathirukkirathu

    ReplyDelete