குழந்தைகளிடம்
இடம் பெற வேண்டிய இனிய பண்புகளும்..
இடம் பெறக்கூடாத தீய பண்புகளும்.. 2.
ஒரு சமூகம்
நாகரிகம் கொண்டதாகவும், பண்பாடு
நிறைந்ததாகவும் இருக்கின்றது என்பதற்கான
அடையாளங்கள் பல இருக்கின்றன
அவைகளில் முதன்மையான அம்சம்
எதுவெனில் அந்த சமூகம்
குழந்தைகள் நலனில் அக்கறையும்,
முன்னேற்றமும் பெற்றிருக்கும்.
குழந்தைக்கான எதிர்பார்ப்பும்,
தேடலும் மனித வாழ்வில்
இன்றியமையாத ஒன்றாகும். சிலர்
அன்பின் அடையாளமாக, சிலர்
காதலின் சாட்சியாக, சிலர்
தலைமுறையை விருத்தி செய்யும்
ஆதாரமாக குழந்தைகளை நினைக்கின்றார்கள்.
மொத்தத்தில் குழந்தை
பாக்கியம் என்பது மனித
வாழ்வின் மிகப் பெரிய
அடையாளமாகவும், முகவரியாகவும் இருக்கின்றது
என்றால் அது மிகையல்ல.
குழந்தைகள் விஷயத்தில்
மிகப் பெரிய முன்னெடுப்புகளை சர்வதேச நாடுகள்
மேற்கொண்டு வருவதை பார்க்க
முடிகின்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சித் திட்டம், குழந்தைகள்
பாதுகாப்பு திட்டம், குழந்தைகள்
நலத்திட்டம், குழந்தைகள் மீதான
வன்முறை தடுப்பு, ஆதரவற்ற
குழந்தைகள் நலன் என
பெரிய பெரிய திட்டங்கள்,
அதற்கான செயல் வடிவங்கள்
என பல்வேறு வகையில்
குழந்தைகள் கவனம் பெறுகின்றார்கள்.
அந்த வகையில்
இஸ்லாமிய மார்க்கம் குழந்தைகள்
நலன் விஷயத்தில், குழந்தைகள்
பாதுகாப்பு விஷயத்தில் அதிகளவு
அக்கறை செலுத்தி இருப்பதை
பார்க்க முடிகின்றது.
அந்த விவரங்களில்
சிலதைத்தான் கடந்த வார
ஜும்ஆவின் போது நாம்
பார்த்தோம். இன்ஷா அல்லாஹ்
தொடர்ந்து இந்த வாரமும்
ஒரு சில விஷயங்களைப்
பார்க்க இருக்கின்றோம்.
குழந்தைகளிடம் இடம்
பெற வேண்டிய இனிய
பண்புகளின் பட்டியலில் இனி
வரும் பண்புகள் மிக
முக்கியமானதாகும்.
7. முபாரக்கன் அய்னமா குன்த்து
– எங்கிருந்த போதும்
அருள் வளம்
பெற்ற நிலை…
வாழ்க்கையில் தனிமையில்
இருக்கும் போதும், கூட்டாக
வாழும் போதும், பொறுப்புகளில்
வீற்றிருக்கும் போதும், ஊழியம்
செய்கிற போதும், பெற்றோர்,
சகோதர சகோதரிகள், நண்பர்கள்,
உறவினர்கள், சமூக, பிற
சமுதாய மக்கள், மனைவி
மக்கள் என உறவுகளோடும்,
செல்வம் வறுமை, இன்பம்,
துன்பம் என எதிரும்
புதிருமான இரு நிலைகளின்
போதும் அல்லாஹ்வின் அருள்
வளத்தை கைவரப் பெற்று
வாழ்வது மிகவும் இன்றியமையாத
ஒன்றாகும்.
ஏனெனில், பரக்கத்
இல்லாதவர்களே இங்கே பாழாய்
போகின்றார்கள். பாவிகளாய் மாறுகின்றார்கள்.
பதறுகின்றார்கள், நெறி பிறழ்ந்து
போகின்றார்கள்.
நமது பிள்ளைகள்
நம்முடன் இருக்கும் போதும்
சரி நம்மை விட்டு
பிரிந்து மதரஸா, பள்ளிக்கூடம்,
உறவினர் வீடு, நண்பர்களுடன்
விளையாட்டு என எங்கிருந்தாலும் அவர்கள் இறையருளோடு
தொடர்புள்ளவர்களாக இருக்கும்
பொருட்டு நல்லொழுக்கம் கற்பித்து
அவர்களை நாம் வளர்க்க
வேண்டும்.
ஆகவே, பரக்கத்தான வாழ்வு அமைவதென்பது ஒவ்வொரு முஃமினுக்கும் இந்த உலகில் வழங்கப்படுகிற அருட்கொடைகளில் ஆக உயர்ந்த அருட்கொடையாகும்.
வாழ்க்கையில் பரக்கத் அவசியம்..
وعن عبد
الله بن يسر قال : جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال : أي الناس خير ؟
فقال : " طوبى لمن طال عمره وحسن عمله
ஒரு மனிதர் நபி(ஸல்)
அவர்களிடம் மனிதர்களில் சிறந்தவர் யார் என்று கேட்டார்? நபி (ஸல்) அவர்கள் "எவருடைய ஆயுளும் நீண்டு அவரின்அமல்களும் அழகானதோஅவர் தான்மனிதர்களில் சிறந்தவர்
என்றார்கள் . (நூல். திர்மிதி. 2252 .)
வாழ்க்கைக்குப் பின்னரும் பரக்கத் அவசியம்...
عَنْ
أَبِي سَعِيدنِ الخُدْرِيِّؓ قَالَ: قُلْنَا: يارَسُولَ اللهِﷺ هذَا السَّلاَمُ
عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّي؟ قَالَ: قُولُوا: اَللّهُمَّ صَلّ عَلي مُحَمَّدٍ
عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلي إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلي مُحَمَّد
وَعَلي آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلي إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ. رواه
البخاري
யாரஸூலல்லாஹ்! ﷺ தங்கள் மீது ஸலாம் கூறும் முறையை நாங்கள்
தெரிந்துள்ளோம்.
(தஷஹ்ஹுதில்
( اَلسَّلَامُ
عَلَيْكَ أَيُّهَا النَّبِـيُّ وَرَحْـمَةُ اللهِ وَبَرَكَاتُهُ ) சொல்லித் தங்கள் மீது ஸலாம் கூறுகிறோம்) தங்கள் மீது ஸலவாத்
எவ்வாறு
சொல்வது என்பதையும் எங்களுக்குச் சொல்லுங்களேன்” என்று நாங்கள் கேட்டோம் ( اَللّهُمَّ صَلّ عَلي مُحَمَّدٍ عَبْدِكَ
وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلي إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلي مُحَمَّد وَعَلي
آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلي إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ ) ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை)
அவர்கள் மீது ரஹ்மத்தைப் பொழிந்ததைப்போல யால்லாஹ்! உன் அடியாரும், ரஸூலுமான ஹஜ்ரத் முஹம்மது ﷺ
அவர்கள் மீது,
ரஹ்மத்தைப் பொழிவாயாக! மேலும் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை)
அவர்கள் மீதும்,
ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும்
பரக்கத்தைப் பொழிந்ததைப்போல் ஹஜ்ரத் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் மீதும்
பரக்கத்தைப் பொழிவாயாக! என்று சொல்லுங்கள்” என நபி ﷺ அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத்குத்ரீ (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். (புகாரி)
இன்பத்திலும், துன்பத்திலும், பரக்கத் இருந்தால்...
وَعَنْ أبي يَحْيَى صُهَيْبِ بْنِ سِنَانٍ
قَالَ: قَالَ رَسُولُ الله ﷺ
عَجَباً لأمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ،
وَلَيْسَ ذَلِكَ لأِحَدٍ إِلاَّ للْمُؤْمِن: إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ
فَكَانَ خَيْراً لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خيْراً لَهُ
رواه مسلم.
ஸுஹைப் இப்னு
ஸினான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையாளரின் நிலை
குறித்து நான் ஆச்சர்யம் அடைகின்றேன். அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே
அமைகின்றது. இந்த நிலை ஒரு இறைநம்பிக்கையாளருக்கே தவிர வேறு யாருக்கும்
ஏற்படுவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றான்.
அது அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அவனுக்கு துன்பம் ஏற்பட்டால் பொறுமை
கொள்கின்றான். அதுவும் அவனுக்கு நன்மையாய் அமைகின்றது” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். (
நூல்: முஸ்லிம் )
8. வஸிய்யத்தும் பிஸ்ஸலாத்தி மா
தும்த்து ஹய்யா
– வாழும் காலமெல்லாம் தொழுகையை கடைபிடிக்க வலியுறுத்தல்..
தொழுகை எனும்
வார்த்தை குறித்து திருக்குர்ஆனில் கிட்டத்தட்ட 85 இடங்களில் அல்லாஹ் பேசுகிறான்.
وَاعْبُدْ
رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ (99)
உமக்கு மரணம்
வரும் வரை உமது இறைவனை (தொழுது) வணங்குவீராக’ என்று திருக்குர்ஆன் (15:99) குறிப்பிடுகிறது.
நபி {ஸல்} அவர்கள்
விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது மூன்று கட்டளைகள்
வழங்கப்பட்டன. அவை: 1)
ஐந்து வேளைத் தொழுகைகள், 2) திருக்குர்ஆனின்
இரண்டாவது அத்தியாயமான ‘பகரா’வின் இறுதி மூன்று வசனங்கள், 3) அவர்களின் சமுதாயத்தாரில்
இறைவனுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள்
மன்னிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன’ என்று நபி {ஸல்} அவர்கள்
கூறியதாக இப்னுமஸ்ஊத் (ரலி), அறிவிக்கின்றார்கள். (
நூல்: முஸ்லிம் )
ஐந்து வேளைத்
தொழுகை நிறைவேற்றுவது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ
وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا
(நபியே), சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழும் வரை
(ளுஹர், அஸர்,
மக்ரிப், இஷா) தொழுகையை நிலை
நிறுத்துவீராக;
இன்னும் ‘பஜ்ர்’ எனும் அதிகாலைத் தொழுகையையும் நிலைநிறுத்துவீராக; நிச்சயமாக பஜ்ர் தொழுகை சான்று கூறுவதாக இருக்கிறது’. (திருக்குர்ஆன் 17:78)
நம்பி
ஒப்படைக்கப்பட்ட பொருளை உரியவரிடம் எவர் திருப்பிக் கொடுக்கவில்லையோ, அவருக்கு பரிபூரண இறைநம்பிக்கை கிடையாது. எவருக்கு (உளூ) அங்க சுத்தம் இல்லையோ, அவருக்கு தொழுகை இல்லை. எவருக்கு தொழுகை இல்லையோ, அவருக்கு மார்க்கப்பற்றே கிடையாது. மார்க்கத்தில் தொழுகையின் அந்தஸ்து உடலில்
தலையின் அந்தஸ்தைப் போன்றதாகும். (தலையின்றி மனிதன் உயிர் வாழ இயலாதது போல்
தொழுகையின்றி மார்க்கம் எஞ்சி இருக்காது) என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: தப்ரானீ)
عن أبي
هريرة أن النبي صلى الله عليه وسلم قال: "أول ما يحاسب به العبد يوم القيامة
يحاسب بصلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر"( أخرجه الترمذي
في سننه وصححه الألبانى في صحيح سنن الترمذي حديث رقم 413).
மறுமைநாளில்
முதன்முதலாக தொழுகையைப் பற்றிதான் விசாரணை செய்யப்படும். அது சரியாக இருந்தால், மற்ற செயல்களும் சரியாக இருக்கும். அது சீர்குலைந்தால், மற்ற செயல்களும் சீர்குலைந்து இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் குர்த் (ரலி), நூல்: தப்ரானீ).
‘நிச்சயமாக உங்களில்
ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார்.
அவருக்கும்,
அவர் தொழும் திசைக்கும் இடையே இறைவன் இருக்கிறான் என நபி
(ஸல்) கூறினார்கள்’.
(அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
9. வஸிய்யத்தும் பிஸ்ஸகாத்தி மா
தும்த்து ஹய்யா
– வாழும் காலமெல்லாம் ஜகாத்தை வழங்க
வலியுறுத்தல்…
இஸ்லாமிய
மார்க்கத்தின் மூலம் அல்லாஹ் கடமையாக்கி இருக்கிற கடமைகள் அனைத்தும் மனிதனைத்
தூய்மைப் படுத்தும் நோக்கில் அமைந்திருப்பதை அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் மூலம்
விளங்க முடிகிறது.
ஜகாத் வழங்குவதும்
அப்படித்தான் ஜகாத் வழங்குகிற ஒரு முஸ்லிமை தூய்மைப்படுத்துகிறது.
இந்த சிந்தனையை
நாம் நம் குழந்தைகள் மனதில் ஆழமாக பதிய வைக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஏனெனில், இங்கே ஜகாத் என்பது ஏழைகள் இல்லா உலகை அமைக்க இஸ்லாம் வலியுறுத்துகிற
கடமையாகவும்,
உழைத்து தேடிய, சேமித்து வைத்திருக்கும்
பொருளாதாரத்தை பாதுகாக்கும் தூய்மைப்படுத்தும் சாதனமாகவே அடையாளப்
படுத்தப்பட்டுள்ளது. எனினும் மனிதனை தூய்மைப் படுத்துதலே
பிரதானமான நோக்கம் ஆகும்.
ஏனெனில், ஒருவனிடம் செல்வம் சேர்கின்றபோது, மேலும் மேலும் செல்வம்
சேர்க்க வேண்டும் என்ற பேராசை, சேர்த்த செல்வத்தை
பாதுகாக்கும் கஞ்சத்தனம்,
பிறரின் செல்வத்தில் ஆசை கொள்தல், ஏழைகளின் மீது
இரக்கம் கொள்ளாமை போன்ற பல்வேறு அழுக்குகள் அவனிடம்
ஏற்படுகின்றன.
செல்வத்தில் இது
போன்ற ஒர் அழுக்கும் சேர்வதில்லை. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது
தூய்மையாக்கப்பட வேண்டியவன் மனிதனே தவிர பொருளாதாரம் அல்ல என்பது தெளிவாகிறது.
மனிதனைத் தூய்மைப் படுத்தும் பிற கடமைகள்
ஏகத்துவ கலிமாவை
மொழிந்த ஒருவரை அந்த கலிமா இணைவைத்தல் மற்றும் கடந்த கால பாவங்கள் என்ற மாபெரும்
அசுத்தங்களிலிருந்து தூய்மைப்படுத்துகின்றது. தொழுகையைப் பேணித் தொழுகிற ஒருவரை
அந்த தொழுகை மானக்கேடான,
மற்றும் தீமையான காரியங்கள் எனும் அசுத்தங்களிலிருந்தும் தூய்மைப்படுத்துகிறது.
நோன்பு நோற்கும்
ஒருவரை அந்த நோன்பு,
மனதின் இச்சைகள் எனும் அசுத்தத்திலிருந்து தூய்மைப்
படுத்துகின்றது.
ஹஜ் மப்ரூர்
செய்தவரை அந்த ஹஜ்,
அனைத்து பாவங்களிலிருந்தும் சுத்தப்படுத்தி, அன்று பிறந்த பாலகனாக மாற்றி அவரை தூய்மைப்படுத்துகின்றது.
நோன்பு நோற்றவர்
நோன்பு பெருநாளன்று வழங்கும் ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மம் அவர் நோன்பு வைத்த
நிலையில் அவரையும் அறியாமல் செய்து விட்ட பாவங்களில் இருந்து பரிசுத்தமாக்கி தூய்மைப்படுத்துகின்றது.
செல்வம் குவிகின்ற
போது, நாம் மேலே கூறிக் காட்டிய அழுக்குகள் மனிதனிடம் சேர்கின்றன என்பதற்கு குர்ஆன்
மற்றும் நபி மொழியில் சான்றுகள் ஏராளம் உண்டு.
மனிதனைத்
தூய்மைப்படுத்தவே ஜகாத் கடமையாக்கப்பட்டது என்பதை இறைவனும் பின் வரும் வசனத்தில்
தெளிவாகவே குறிப்பிடுகிறான்.
خُذْ
مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ
عَلَيْهِمْ إِنَّ صَلاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
"(நபியே!) அவர்களின்
செல்வங்களில் தர்மத்தை எடுத்து, அதன் மூலம் அவர்களைத்
தூய்மைப்படுத்தி (அகத்திலும்) அவர்களை பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப்
பிரார்த்தனை செய்வீராக! ஏனெனில், உமது பிரார்த்தனை
அவர்களுக்கு மன அமைதியைத் தரும். அல்லாஹ் செவியேற்பவன், நன்கறிபவன்." (அல்குர்ஆன் 9:103)
பேராசை...
மனிதனிடம் செல்வம்
குவிகின்ற போது பேராசை ஏற்படுகிறது என்பதை பின்வரும் நபி மொழி விவரிக்கிறது.
عَنِ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِى أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ « لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِياً مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ ، وَلَنْ يَمْلأَ فَاهُ إِلاَّ التُّرَابُ ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ » رواه البخاري ومسلم, وإبن حبان, والترمذي, وأحمد
"மனிதனுக்குத்
தங்கத்திலான ஒரு ஓடை இருந்தால் தனக்கு இரண்டு ஓடைகள் இருக்க வேண்டுமென அவன்
ஆசைப்படுகிறான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது.
மேலும்,
(இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி
மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்,
இப்னுஹிப்பான், திர்மிதி, அஹ்மத்)
இரு ஓடையளவு
செல்வம் இருந்தால் மூன்றாவது ஓடையளவு வேண்டுமென ஆசைப்படுகிறான் என்று வேறொரு
அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
عَنْ أَنَسٍ رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ «
يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ حُبُّ الْمَالِ ، وَطُولُ
الْعُمُرِ »رَوَاهُ البخاري
"மனிதன் வளர வளர
அவனுடன் இரண்டு (ஆசைகளும் சேர்ந்தே) வளர்கின்றன. 1. பொருளாசை
2. நீண்ட நாள் வாழ வேண்டு மென்ற ஆசை. என நபி (ஸல்) அவர்கள்
கூறி யதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி:6421)
மனிதன் தனக்கு
மரணம் தழுவுகின்ற வரை பொருளை சேமிக்க வேண்டும் என்ற பேராசையில் அலைகின்றான். நபி
(ஸல்) அவர்கள் மனிதனது மன நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றார்கள்.
மண்ணறையைக் காணும்
வரை மனிதன் திருந்தப் போவதில்லை என பின்வரும் அத்தியாயத்தில் மனிதனின் பேராசையை
இறைவனும் விமர்சிக்கின்றான்.
أَلْهَاكُمُ التَّكَاثُرُ .حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ.كَلَّا سَوْفَ تَعْلَمُونَ . ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ .كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ.لَتَرَوُنَّ الْجَحِيمَ. ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ. ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ) (التكاثر)
"மண்ணறைகளை
(மரணத்தை) சந்திக்கும் வரை செல்வத்தைத் தேடுவது உங்கள் கவனத்தை (இறை
நினைவிலிருந்து) திருப்பி விட்டது. அவ்வாறல்ல! (அதன் விளைவை) அடுத்து நீங்கள்
அறிந்து கொள்வீர்கள். பின்னரும் அவ்வாறல்ல! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறல்ல!
நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தை காண்பீர்கள். பின்னர் நீங்கள் அதை
கண்ணுக்கெதிராகக் காண்பீர்கள். பின்னர் அந்நாளில், (உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்." (102: 1-8)
கஞ்சத்தனம்
மனிதன் வறுமையில்
உழல்கின்ற போது,
தமக்கு செல்வம் இருந்தால் அதனை
அறவழியில் அதிகளவில் செலவு செய்வேன், ஏழைகளுக்கு வாரி வாரி
வழங்குவேன்,
அனாதைகளை ஆதரிப்பேன் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி
வீசுகிறான்.
செல்வம் வந்ததும்
அவனிடம் கஞ்சத்தனம் குடியேறி விடுகிறது. தன் சுயமுயற்சியில் ஈட்டிய பொருளை செலவு
செய்தால் வறுமை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் அவனை ஆட்டிப் படைக்கிறது. பழைய
வாக்குறுதிகளை மறந்து விட்டு, மாபெரும் கஞ்சனாக மாறி, இரவு பகலாக செல்வத்திற்கு காவல்காரனாக செயலாற்றி தன் செல்வத்திலிருந்து எந்தப்
பயனையும் அடையாமல் அனைத்தையும் விட்டு விட்டு அனுபவிக்காமலேயே மரணித்தும் விடுகிறான்.
செல்வம் குவிகின்ற
போது மனிதனிடம் கஞ்சத்தனம் குடியேறி விடுகிறது என்பதை இறைவனே சுட்டிக் காட்டுகிறான்.
وَمِنْهُمْ
مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ
وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ))فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا
بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ) (التوبة:75, 76)
"அல்லாஹ் தன் அருளை
எங்களுக்கு வழங்கினால்,
தர்மம் செய்து நல்லோர்களில் ஆகி விடுவோம்" என அல்லாஹ்விடம்
உறுதி மொழி எடுத்துக் கொண்டோரும் அவர்களில் உள்ளனர். அல்லாஹ் தன் அருளை
அவர்களுக்கு வழங்கிய போது,
அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தனர். (தங்களின்
வாக்குறுதியை) அலட்சி யமாகப் புறக்கணித்து விட்டனர். ( அல் குர்ஆன்: 9:75,76
)
கஞ்சத்தனம்
இறைவனிடம் பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பின் வரும் வசனம்
எச்சரிக்கின்றது.
)وَلا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ
اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْراً لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ
مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ
وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ) آل عمرات)
"அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், அது தங்களுக்கு நல்லது எனக் கருதிக் கொள்ள வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்காகும். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அவற்றை
மறுமையில் (நெருப்பு) மாலையாக அவர்கள் அணிவிக்கப் படுவார்கள். வானங்கள், பூமியின் உரிமை இறைவனுக்குரியதே! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ்
நன்கறிந்தவன்" (3:180)
حدثني
عبد الله بن محمد بن أسماء الضبعي حدثنا جويرية عن مالك عن الزهري أن عبد الله بن
عبد الله بن نوفل بن الحارث بن عبد المطلب حدثه أن عبد المطلب بن ربيعة بن الحارث
حدثه قال اجتمع ربيعة بن الحارث والعباس بن عبد المطلب فقالا والله لو بعثنا هذين
الغلامين قالا لي وللفضل بن عباس إلى رسول الله
e فكلماه فأمرهما على هذه الصدقات فأديا ما يؤدي
الناس وأصابا مما يصيب الناس قال فبينما هما في ذلك جاء علي بن أبي طالب فوقف
عليهما فذكرا له ذلك فقال علي بن أبي طالب لا تفعلا فوالله ما هو بفاعل فانتحاه
ربيعة بن الحارث فقال والله ما تصنع هذا إلا نفاسة منك علينا فوالله لقد نلت صهر
رسول الله e فما نفسناه عليك قال علي أرسلوهما فانطلقا واضطجع علي قال فلما صلى رسول
الله e الظهر سبقناه إلى الحجرة فقمنا عندها حتى جاء فأخذ بآذاننا ثم قال اخرجا
ما تصرران ثم دخل ودخلنا عليه وهو يومئذ عند زينب بنت جحش قال فتواكلنا الكلام ثم
تكلم أحدنا فقال يا رسول الله أنت أبر الناس وأوصل الناس وقد بلغنا النكاح فجئنا
لتؤمرنا على بعض هذه الصدقات فنؤدي إليك كما يؤدي الناس ونصيب كما يصيبون قال فسكت
طويلا حتى أردنا أن نكلمه قال وجعلت زينب تلمع علينا من وراء الحجاب أن لا تكلماه
قال ثم قال إن الصدقة لا تنبغي لآل محمد إنما هي أوساخ الناس ادعوا لي محمية وكان
على الخمس ونوفل بن الحارث بن عبد المطلب قال فجاءاه فقال لمحمية أنكح هذا الغلام
ابنتك للفضل بن عباس فأنكحه وقال لنوفل بن الحارث أنكح هذا الغلام ابنتك لي
فأنكحني وقال لمحمية أصدق عنهما من الخمس كذا وكذا قال الزهري ولم يسمه لي رواه
مسلم والنسائي وأحمد وأبو داود وإبن خزيمة والبيهقي ومصنف عبد الرزاق.
அப்துல் முத்தலிப்
பின் ரபீஆ என்பவர் கூறுகிறார்: ..."அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகம் நன்மை
செய்பவர்கள் நீங்கள்! சொந்தத்தை அதிகம் சேர்ந்து நடப்பவர்கள் நீங்கள்! திருமணம்
முடிக்கும் வயதை நாங்கள் அடைந்துள்ளோம். எனவே, ஜகாத் வசூலிக்கும் பணியை
தந்தால்,
மற்ற மக்களைப் போன்று அதனை வசூலித்து, உங்களிடம் கொடுத்து விட்டு, மற்றவர்கள் (ஊதியம்)
பெறுவது போன்று நாங்களும் (ஊதியம்) பெற்று (அதன் மூலம் திருமணம் செய்து) கொள்வோம்' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் மௌனமாக
இருந்ததால்,
மீண்டும் கேட்கலாம் என நாங்கள் பேச நினைத்த போது, திரைக்குப் பின்னால் இருந்த ஜைய்னப் அவர்கள், பேசவேண்டாம் என சமிக்கை செய்தார்கள். பின்பு நபி (ஸல்)கூறினார்கள்: “முஹம்மதுவின்
குடும்பத்தினருக்கு ஜகாத் அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில், அது மக்களின் அழுக்காகும்” என்று. ( நூல்: முஸ்லிம், நஸாயி,
அஹ்மத், அபூ தாவூத், இப்னு குஸைமா,
பைஹகி, முஸன்ஃப் அப்துர்ரஜ்ஜாக் .)
இப்னு குஸைமாவின்
அறிவிப்பில்...
غسالة
ذنوب الناس
(ஜகாத், மக்களின் பாவங்களைக் கழுவியதாகும்) என இடம் பெற்றுள்ளது.
எனவே, ஜகாத் வழங்குவது மனிதனைத்
தூய்மைப் படுத்துகிறது என்பதை இந்த நபி மொழியின் கருத்தின் மூலம் புரிந்து கொள்ள
முடிகின்றது.
ஆகவே, குழந்தைப்
பருவத்திலேயே ஜகாத் என்றால் என்ன? என்பதில் இருந்து அதன் நன்மைக:ளை அது
ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கூறினோம் என்றால் பின்னால் பெரும் செல்வந்தராகவும்,
ஜகாத் வழங்க வேண்டும் என்ற சிந்தனையும் அந்த குழந்தையின் உள்ளத்திலே பதிந்து
விடும்.
தீய
பண்புகள்…
1.ஜப்பார்
– பெருமை கொண்டவனாக…
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
“பெருமை கொண்டு உன்
முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமை அடித்துக்
கொண்டு நடக்காதே. நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ்
நேசிப்பதில்லை”.
(திருக்குர்ஆன் 31:18)
தன்னிடம்
இருப்பதைக் கொண்டு ஆனந்தம் அடைபவர்களை ஒரு போதும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
إِذْ
قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
காரூணிடம் அவனுடைய
சமூகத்தார் கூறினார்கள்: “உன்னிடம் உள்ள செல்வ வளத்தைக் கொண்டு நீ பூரித்து விடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை”. ( அல்குர்ஆன்: 28:76
)
இதைப் போன்று நான், எனது,
என்னுடையது என பேசியவர்கள் எவரின் முடிவையும் அல்லாஹ்
அழகானதாய் அமைத்திடவில்லை.
قَالَ
أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ
“ஆதமை விட நான் தான்
சிறந்தவன்;
என்னை நீ நெருப்பால் படைத்தாய்; அவரை நீ களிமண்ணால் படைத்தாய்” என்று கூறிய ஷைத்தானின்
முடிவை அல்லாஹ் மோசமாய் அமைத்தான்.
وَنَادَى
فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَذِهِ
الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ () أَمْ أَنَا خَيْرٌ مِنْ
هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ () فَلَوْلَا أُلْقِيَ عَلَيْهِ
أَسْوِرَةٌ مِنْ ذَهَبٍ أَوْ جَاءَ مَعَهُ الْمَلَائِكَةُ مُقْتَرِنِينَ ()
ஃபிர்அவ்ன் தன்
சமூகத்தினரை நோக்கிக் கூறினான்: “என் மக்களே! எகிப்தின் அரசாட்சி
என்னுடையதல்லவா?
இந்த ஆறுகள் எனக்கு கீழேயல்லவா ஓடிக்கொண்டிருக்கின்றன? என்ன,
உங்களுக்குத் தெரியவில்லையா? நான் சிறந்தவனா?
அல்லது கேவலமானவரும் (தன்னுடைய கருத்தை) தெளிவாக எடுத்துக்
கூறவும் இயலாதவருமான இந்த ( மூஸா {அலை}… ) சிறந்தவரா?
இவருக்கு தங்கக் காப்புகள் ஏன் இறக்கித் தரப்படவில்லை? அல்லது வானவர்களின் குழு ஒன்று ஏன் இவருடன் வரவில்லை”. ( அல்குர்ஆன்: 43:51
– 53 ) என்று கூறிய ஃபிர்அவ்னின் முடிவை கேவலமாய் அமைத்தான்.
قَالَ إِنَّمَا
أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي
காரூண் தன்
சமூகத்தாரை நோக்கிக் கூறினான்: “எனக்கு கிடைத்திருக்கின்ற செல்வ
வளங்கள் அனைத்தும் என்னிடமுள்ள அறிவினால் தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன!” ( அல்குர்ஆன்: 28:78
) என்று கூறிய காரூணின் முடிவை பரிதாபகரமாய் அமைத்தான்.
‘கர்வம்’, ‘தலைக்கனம்’,
‘அகம்பாவம்’, ‘ஆணவம்’ பெருமை, ஆகிய தன்மையைக் கொண்ட குணாதிசயத்தை மனிதன் தன்னிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு
ஒரு சிறந்த வழியையும் அல்லாஹ் தன் அருள் மறையிலே இவ்வாறு பதிவு செய்கின்றான்:
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ
إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي
الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ
وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا
فَخُورًا
“அல்லாஹ் ஒருவனையே
வணங்குங்கள்,
அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தைக்கு
நன்றி செய்யுங்கள். அவ்வாறு உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,
அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களோடு
இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள். எவன் கர்வம் கொண்டு
பெருமையாக நடக்கிறானோ,
அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 4:36)
மேலும் பெருமை, கர்வம்,
ஆணவம் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ்
குறிப்பிடுகின்றான்.
(அல்குர்ஆன்: 16:22), (அல்குர்ஆன்: 7:
146), (அல்குர்ஆன்: 21:19, 7: 206), (அல்குர்ஆன்: 16:49),
(அல்குர்ஆன்: 32:15), (அல்குர்ஆன் 2:
245), (அல்குர்ஆன்: 11:10), (அல்குர்ஆன்: 7:
36-40), (அல்குர்ஆன்: 49:13), (அல்குர்ஆன்: 31:
7), (அல்குர்ஆன்: 39:49), (அல்குர்ஆன்: 40:60),
(அல்குர்ஆன்: 74: 1,2,3), (அல்குர்ஆன்: 40:
35,56)
ولَا تَمْشِ فِي الْأَرْضِ
مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا
எனவே முடிவாக:
அல்லாஹ் கூறுகிறான்: நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம். (ஏனென்றால்)
நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து
விடவும் முடியாது. (அல்குர்ஆன் 17:37)
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
அல்லாஹ்
கூறுகிறான். அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம், பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள், அவர்களுடன் வாதாட முற்பட்டால் “” சாந்தி
உண்டாகட்டும் “என்று கூறி (விலகி) சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன்: 25:63)
2. அஸிய்யன்
– மாறு செய்பவனாக..
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا
“எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு
செய்வாரோ அவர் நிச்சயமாக தெளிவான வழிகேடாக, திண்ணமாக வழி கெட்டு விட்டார்”. ( அல்குர்ஆன்:
33: 36 )
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ
نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ
“இன்னும் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும்
மாறு செய்து அவனது வரம்புகளை மீறுகின்றார்களோ, அவரை நரக நெருப்பில் அல்லாஹ் புகுத்தி
விடுவான். அதில் அவர் நிரந்தரமாக இருப்பார். மேலும், அவருக்கு இழிவு தரும் வேதனையும்
உண்டு”. ( அல்குர்ஆன்: 4:
14 )
அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்யும்
பண்பானது வழிகேட்டில் சேர்த்து விடும் பண்பாகும். இறுதியில் அவனை நரகில் தள்ளி விடும்
எனவே, மாறு செய்கிற தீய பண்புகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு நம் குழந்தைகளை பயிற்றுவிக்க
வேண்டும்.
மேலும், பெற்றோருக்கு மாறு செய்வது, வாக்குறுதிக்கு
மாறு செய்வது, உடன் படிக்கை மற்றும் ஒப்பந்தத்திற்கு மாறு செய்வது என பல்வேறு இறையடியார்க்
கடமைகளோடும் இறைவனும் இறைத்தூதரும் நம்மை எச்சரித்து இருக்கின்றார்கள்.
3. ஷகிய்யன்
– துர்பாக்கியம் நிறைந்தவனாக…
فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ
وَشَهِيقٌ (106) خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا
مَا شَاءَ رَبُّكَ إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِمَا يُرِيدُ
“துர்பாக்கியம் நிறைந்தவர்கள் நரகில் இருப்பார்கள்.
அதில் அவர்களுக்கு பெரும் கூச்சலும், புலம்பலுமே இருக்கும். உம்முடைய ரப்பு நாடினாலேயே
அன்றி வானங்களும், பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அதில் நிரந்தரமாக
இருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் தான் நாடியவற்றை செய்து முடிப்பவனாய் இருக்கின்றான்”.
( அல்குர்ஆன்:
11: 106,107 )
துர்பாக்கிய நிலை என்பது பல்வேறு பொருள்களைச் சுமந்த
ஓர் வார்த்தையாகும். இறைவனின் அருளை விட்டும் தூரமாகுதல், இறை நினைவை விட்டும் தூரமாகுதல்,
வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஆர்வம் மறக்கடிக்கப்படுதல், ஹலால் ஹராமில் அசட்டையாக இருத்தல்,
பாவத்தை விடாப்பிடியாக செய்தல் என பல்வேறு நிலைகளுக்கு அழைத்துச் செல்லும் மிகப்பெரிய
தீய பண்பாகும்.
وقال الفضيل بن عياض رَحمه الله: خَمـس من عَــلامـَات الشـقـوة
: القسْوة فِي القلب, وَجـمُــود العَيـن, وَقـلـة الحيَـاء, وَالرغبـة في
الدنيـا, وَطُول الأمَـل
ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்
: ஐந்து குணங்கள் இருப்பவர் துர்பாக்கியவான் ஆவார். 1.அழாத கண்கள் உடையவர், 2.வரண்டு
போன கடின இதயம் கொண்டவர், 3.நீண்ட பேராசை கொண்டவர், 4. உலகத்தின் மீது மோகம் உள்ளவர்,
5. வெட்க உணர்வு குறைவாக இருப்பவர்.
எனவே, நரகத்தைப் பெற்றுத் தரும் இத்தகைய தீய பண்புகளில்
இருந்து நமது தலைமுறையினரைப் பாதுகாத்து இடம் பெற வேண்டிய இனிய பண்புகளுடன் நமது எதிர்கால
தலைமுறையை நாம் உருவாக்குவோம்.
பெற்றோர் எனும் உயரிய பொறுப்பு....
உலகில் வாழும்
ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் வழங்கப் பட்டிருப்பதாக இஸ்லாம் வலியுறுத்திக்
கூறுகின்றது. அத்தோடு நின்று விடாமல் அப்பொறுப்புக்களை மிகச் சரியாக நிறைவேற்ற
வேண்டும் என்றும் இஸ்லாம் தூண்டுகின்றது.
பொறுப்புக்களைச்
செய்யாமல் தட்டிக் கழிக்கிறவர்கள், பொறுப்புக்களில்
இருந்து விலகிச் செல்கிறவர்கள் நாளை மறுமையில் இறைவனின் திருமுன் குற்றவாளிகளாக
நிறுத்தப்பட்டு, வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து
விசாரிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுவார்கள் என எச்சரிக்கையும்
செய்கின்றது.
ஆகவே, எனக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது என்று உலகில் எவரும் கூறிட
இயலாது.
அந்த வகையில்
அல்லாஹ் வழங்கியிருக்கும் பொறுப்புக்களில் மகத்தான பொறுப்பு பெற்றோர் எனும்
பொறுப்பாகும்.
அந்த பொறுப்பின்
கீழ் வழங்கப்பட்டுள்ள மக்கட்செல்வங்கள் குறித்து, வளர்ப்பு
குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அந்தப் பொறுப்பு
எவ்வளவு கனமானது என்பது குறித்து கீழ் வரும் இறை வசனம் உணர்த்துகின்றது.
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا
وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“எங்கள்
இறைவா! எங்கள் துணையை, எங்களின் சந்ததிகளை எங்களுக்கு கண்
குளிர்ச்சியாக நீ ஆக்கிவிடு! மேலும், எங்களை
இறையச்சமுடையோருக்கு தலைமை வகிக்கும் பண்புடையோராகவும் நீ ஆக்கியருள்” என்று ரஹ்மானின் அடியார்கள் பிரார்த்திப்பார்கள். ( அல்குர்ஆன்: 25: 74 )
அந்தந்த வயதில்
எது நல்லவை? எது தீயவை? என்ற
புரிதலையும், எந்த உறவு நல்ல உறவு? எது
தவறான உறவு? என்பன போன்ற அறிவையும் சேர்த்தே அல்லவா
மார்க்கம் கற்றுக் கொடுக்குமாறு ஏவுகின்றது.
மார்க்கத்தின்
அடிப்படைகளோடு இவைகள் அனைத்தையும் ஒருங்கே கற்றுக் கொடுப்பதே மிகச் சிறந்த ஒரு
பெற்றோரின் உயரிய கடமையாகும்.
லுக்மான்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் மகனுக்கு செய்த உபதேசங்களை பட்டியலிடும்
அல்குர்ஆனின் வசனங்களை என்றாவது நாம் முழுமையாக படித்துப் பார்த்திருப்போமா?
وَإِذْ
قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ
إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
وَوَصَّيْنَا
الإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ
فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
وَإِن
جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلا تُطِعْهُمَا
وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ
إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
يَا
بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُن فِي صَخْرَةٍ
أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ
لَطِيفٌ خَبِيرٌ
يَا
بُنَيَّ أَقِمِ الصَّلاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ
وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأُمُورِ
وَلا
تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلا تَمْشِ فِي الأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لا
يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
وَاقْصِدْ
فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الأَصْوَاتِ لَصَوْتُ
الْحَمِيرِ
சுமார் ஏழு
வசனங்களில் ( அத்தியாயம்: 31: 13 முதல் 19 வரை ) அல்லாஹ் அதை நயம்பட விவரிப்பான்.
இணை வைப்பின் வீரியம் குறித்து, இபாதத்தின் இன்பம்
குறித்து, நன்மையை ஏவி, தீமையை
தடுப்பதன் மகத்துவம் குறித்து, இறைவனின் முடிவின் மீது கொள்ள
வேண்டிய நம்பிக்கை மற்றும் பொறுமை குறித்து கூறியதன் பின்னர் அவர் தம் மகனுக்கு
கூறிய அறிவுரைகளைப் பாருங்கள்!
”மகனே!
மக்களை விட்டு உம் முகத்தை திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்கோடு நடக்காதே!
அகந்தையும், ஆணவமும் கொண்ட எவரையும் அல்லாஹ் ஒரு போதும்
நேசிப்பதில்லை.
உனது நடையில்
மிதமான நிலையை மேற்கொள்! உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள்! திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்”. ( அல்குர்ஆன்: 31: 18, 19 )
நம் அறிவுக்கும், சிந்தைக்கும் மிகச் சிறியதாக புலப்படுகிற அம்சங்களை வாழ்
நாளில் ஒரு போதும் செய்து விடக்கூடாது என்பதை எவ்வளவு அழகாக எச்சரிக்கின்றார்கள்.
ஆக மார்க்க
கடமைகளை, அடிப்படைகளைக் கற்றுக் கொடுப்பதோடு
யதார்த்த உலகின் வாழ்வியல் தத்துவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அதுவே மிகச்
சிறந்த போதனை! அப்படிப் போதிப்பவர்களே மிகச் சிறந்த பெற்றோர் ஆவர்.
மாஷா அருமையான கட்டுரை ஹழ்ரத்
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பயனுள்ள கல்வி ஞானங்களையும் வழங்கி பேரருள் புரிவானாக 🤲
மாஷா அல்லா அருமையான கட்டுரை ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா மென்மேலும் பரக்கத் செய்வானாக
ReplyDelete