பராஅத் இரவு – சிந்தனை!
முத்தான மூன்று பாக்கியங்களைப்
பெற்றுத் தரும் ஸியாரத்!!
ஒரு முஸ்லிமுடைய
எல்லா வகையான வெற்றிக்கும்
அடிப்படையாக இஸ்லாம் மூன்று
அம்சங்களை அடையாளப்படுத்துகின்றது.
1.உலக பற்றற்ற
நிலை, 2.மரண சிந்தனை,
3.மறுமை நாளைப் பற்றிய
பயம்.
இம்மூன்று அம்சங்களை
முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கின்ற காலமெல்லாம் வெற்றிப்
பாதையிலேயே பயணிக்கும். இம்மூன்று
அம்சங்களும் ஒன்று இன்னொன்றோடு
மிக நெருங்கிய தொடர்புடையது.
இந்த மூன்று
படித்தரங்களின் படி வாழ்க்கையை
அமைத்துக் கொள்வதற்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மிகப்பெரிய
அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டியதிருக்கும்.
எனினும், இந்த
மூன்று அம்சங்களை இலகுவாப்
பெற்று விட முடியும்?
என்று நம்பிக்கை தருகின்றது
நபி
{ஸல்}
அவர்களின் நபி மொழி.
ஆம்! ஒரு
அமல் இருக்கின்றது அந்த
அமலை ஒரு முஸ்லிம்
செய்து வருகின்றார், தவறாது
கடைபிடித்து வருகின்றார் என்றால்
இந்த மூன்று பாக்கியங்களையும் பெற்றுக் கொள்ள
முடியும்.
ஆம்! அது
என்ன அமல்? எல்லோருமே
ஆவலாய் இருப்பது தெரிகின்றது.
இன்றைய பராஅத்
இரவில் மக்ரிப் தொழுகைக்குப்
பின்னர் மூன்று யாஸீன்
ஓதி துஆச் செய்து
விட்டோம் அல்லவா?
அடுத்து இஷாத்
தொழுது விட்டு சிறப்பு
அமல்களின் ஒரு பகுதியாக
இதோ பயான் பேசிக்
கொண்டும், கேட்டுக் கொண்டும்
இருக்கின்றோம் அல்லவா?
அடுத்து என்ன
செய்யப்போகின்றோம். திக்ர் மஜ்லிஸ்,
அதற்கடுத்து தஸ்பீஹ் தொழுகை,
அதற்கடுத்து சிறப்பு துஆ.
அதற்கடுத்து இறந்து
போன நமது மூதாதையர்களின் மண்ணறையைச் சந்தித்து
அவர்களுக்கு ஸலாம் சொல்லி,
அவர்களுக்காக ஈஸால் ஸவாபு
செய்து துஆச் செய்ய
இருக்கின்றோம்.
இன்றைக்கு நாம்
செய்து கொண்டிருக்கின்ற அமல்களில்
ஒரு அமல் தான்
அது.
அந்த அமல் எது?
சீக்கிரம் சொல்லுங்கள்! என்று
மனதுக்குள் சொல்வது உங்களின்
கண்களில் தெரிகின்றது.
ஆம்! அந்த
அமல் “ஸியாரத்துல் குபூர்
– மண்ணறையைச் சந்தித்தல்” ஆகும்.
நாம் கடைசியாக செய்ய
இருக்கும் அமல் தான்
அது.
عن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي وابن ماجه وزاد رزين ممن استحق النار وقال الترمذي سمعت محمدا يعني البخاري يضعف هذا الحديث
ஒரு நாள் இரவு நான் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை
காணவில்லை. (உடனே எங்கே
போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத்
தேட ஆரம்பித்தேன்)
அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள
முஸ்லிம்களின்
மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக
இருந்தார்கள்.
(நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) மாநபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
“அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம்
செய்துவிடுவார்கள்
என்று பயப்படுகிறீர்களோ” என்று கேட்டார்கள்.
நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும்
தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன்.
அப்போது, மாநபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய
இரவாகிய) ஷஃபான்
மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி
பனீ குலைப் என்ற
கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின்
எண்ணிக்கையை விட அதிகமான
ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று
கூறினார்கள்” என
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு
அன்ஹா அறிவிக்கிறார்கள். ( நூல்கள்: திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299 )
பாக்யமும், மகத்துவமும் நிறைந்த பராஅத் இரவொன்றில் மாநபி {ஸல்} அவர்கள் பள்ளியில் அமர்ந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக இறந்து போனவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிற
மண்ணறைகளுக்கு
சென்று
அவர்கள்
மீது
இறைவனின்
மன்னிப்பும்
கருணையும்
கிடைக்க
வேண்டும்
என்பதை
விரும்பினார்கள்
என்றால்
மண்ணறைவாசிகள்
மீதான
நம்
கவனம்
எவ்வாறு
இருக்க
வேண்டும்
என்பதை
நாம்
உணர
வேண்டும்.
ஸியாரத் என்றால்…
ஸியாரத் என்ற
அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால்
மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக
மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
ஸியாரத் எதற்காக…
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ
الْخَلَّالُ قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمِ النَّبِيلُ حَدَّثَنَا سُفْيَانُ
عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كُنْتُ
نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ
قَبْرِ أُمِّهِ فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ رواه الترمذي
புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகின்றன. நூல் : திர்மிதி
"கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில்
நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய
நினைவையும் ஏற்படுத்த வல்லது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியிருக்கிறார்கள். (இப்னு மாஜா 1569, மிஷ்காத் பக்கம் 154)
قال رسول الله صلى الله عليه وسلم (( أَلا إِنِّي قَدْ كُنْتُ
نَهَيْتُكُمْ عَنْ ثَلاثٍ ثُمَّ بَدَا لِي فِيهِنَّ: نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ
الْقُبُورِ، ثُمَّ بَدَا لِي أَنَّهَا تُرِقُّ الْقَلْبَ وَتُدْمِعُ الْعَيْنَ
وَتُذَكِّرُ الآخِرَةَ فَزُورُوهَا
இன்னொரு அறிவிப்பில்..
“உள்ளங்களை மென்மையாக்கும், கண்களில் கண்ணீரை சொறியச் செய்யும்” ஆகவே, நீங்கள் ஸியாரத்
செய்யுங்கள் என்று நபி {ஸல்} அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நபி {ஸல்} அவர்கள்
ஜியாரத்தை அனுமதிக்கும் போது அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக்
கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மறுமையை
நினைவுபடுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில்
மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக்
குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸியாரத் தொடர்பான சட்ட வழிகாட்டல்...
قال ابن عبد البر رحمه الله : " في هذا الحديث
من الفقه : إباحة الخروج إلى المقابر وزيارة القبور
மேற்கூறிய
ஹதீஸ்களில் இருந்து ஸியாரத் செய்வது, ஸியாரத் செய்வதற்காக வெளியே செல்வது ஷரீஅத்தில்
அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது என இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்.
وقال النووي رحمه الله : " اتفقت نصوص الشافعي
والأصحاب على أنه يستحب للرجال زيارة القبور , وهو قول العلماء كافة ; نقل العبدري
فيه إجماع المسلمين
இமாம் நவவீ (ரஹ்)
அவர்கள் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நிலைப்பாட்டைக் கூறும் போது “ஆண்களுக்கு முஸ்தஹப்
ஆகும்” என்று கூறுகின்றார்கள்.
قال الإمام ابن حزم رحمه الله تعالى في المحلي: ونستحب
زيارة القبور، وفرض ولو مرة،
இமாம் இப்னு ஹஸ்ம்
அஷ்ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
وزيارة القبور مستحبةٌ للنساء عند الأحناف، وجائزةٌ عند
الجمهور،.
ஸியாரத் என்பது
ஹனஃபிய்யாக்களிடம் பெண்கள் விஷயத்தில் முஸ்தஹப்பாகும். மேலும், பெரும்பான்மையான
இமாம்களிடத்தில் ஜாயிஸ் – அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
மண்ணறைகளை ஸியாரத் செய்வதில் நான்கு வகைகள் உள்ளன.
முதல்வகை:
பெருமானார் {ஸல்} அவர்களின் ரவ்ளாவை ஸியாரத் செய்வது.
أجمعت الأمة الإسلامية على جواز زيارة قبر النبي -صلى
الله عليه وسلم-، وذهب جمهور العلماء إلى أنّها سنةٌ مستحبةٌ، وقال بعضهم: زيارة
قبر النبي -صلى الله عليه وسلم- سنةٌ مؤكدةٌ.
பெருமானார் {ஸல்} அவர்களின்
ரவ்ளாவை ஸியாரத் தொடர்பாக சில இமாம்கள் ஸுன்னத் முஸ்தஹப் என்றும் சில இமாம்கள் ஸுன்னத்
முஅக்கதா என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் வாஜிப் என்றும் கூறுகின்றனர்.
وكذلك
حديث (من زار قبري وجبت له شفاعتي) أخرجه الدارقطني في سننه (2/278)
"எவர் என் கப்ரை
தரிசிக்கிறாரோ அவருக்கு எனது ஷபாஅத் (பரிந்துரைப்பு) கடமையாகி விட்டது"
(தாரகுத்னி பாகம் 2
பக்கம் 278 பைஹகீ 3/490) என்றும் "என்னை ஸியாரத் செய்வதற்கென்றே தயாராகி எவர் என்னை தரிசிக்கிறாரோ
அவர் நாளை மறுமையில் என் அருகில் இருப்பார்" (மிஷ்காத் 240) என்றும் ஹதீஸ் வந்துள்ளது.
இந்த ஹதீஸை
அடிப்படையாகக் கொண்டு சில பெரிய அறிஞர்கள் ஹஜ்ஜுக்கு என்று ஆயத்தமாகி மக்கா நகரம்
செல்வது போன்றே புனித ஸியாரத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு புனித மதீனாப் பயணம்
மேற் கொண்டுள்ளார்கள் என்பதை வலிமார்களின் மற்றும் நல்லவர்களான ஸாலிஹீன்களின்
வரலாறுகளில் காணமுடிகிறது.
لما روى الدارقطني بإسناده عن ابن عمر: قال: قال
رسول الله -صلى الله عليه وسلم-: من حج فزار قبري بعد وفاتي فكأنما زارني في حياتي»،
"எவர் ஹஜ்ஜு செய்து விட்டு என் வபாத்திற்குப் பிறகு என் கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவர் என்னை என் ஹயாத்திலேயே சந்தித்தவரைப் போன்றவராகிவிடுகிறார்" (மிஷ்காத் 241) என்று ஹதீஸ் வந்துள்ளதால் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் பெருமானாரின் புனித ரவ்ழா ஷரீபை தரிசிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இரண்டாம் வகை: இறை நேசர்களின் மண்ணறையை ஸியாரத் செய்வது..
كان النبي يقوم بزيارة قبور الشهداء في أحد وبدر
ويدعو لأصحابها وزيارة قبر أمه صلى الله عليه وسلم
நபி {ஸல்} அவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை
ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களும்
உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களும் உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி) அவர்களும்
அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள். (தபரானி பாகம் 3 பக்கம் 241 கிதாபுல் ஜனாஇஸ்)
روي أن علي بن أبي طالب رضي الله عنه لما رجع من صفين ودخل
أوائل الكوفة، رأى قبرا. فقال قبر من هذا؟ فقالوا: قبر خباب بن الارت. فوقف عليه
وقال: "رحم الله خبابا. أسلم راغبا. وهاجر طائعا. وعاش مجاهدا. وابتلى في
جسمه أخرا..
ஹல்ரத் அலீ (ரலி) அவர்கள் ஸிஃப்ஃபீன் போர் முடிந்து வந்து கொண்டிருக்கையில்
ஓரிடத்தில் ஒரு மண்ணறையைப் பார்க்கிறார்கள்.
அது சமீபத்தில்
இறந்து போன ஒருவருடைய மண்ணறை என்பதை உணர்ந்தார்கள். பின்பு அருகில் இருந்த தமது தோழர்களிடத்தில் இது யாருடைய மண்ணறை என
வினவினார்கள்.
தோழர்கள் அது “ஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்களுடையது என்றார்கள்.
கேட்டதும் தான் தாமதம் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தேம்பித் தேம்பி அழுதவர்களாக…
யாஅல்லாஹ்! ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக! பேரார்வத்தோடு முஸ்லிமானார்! உன் உவப்பையும், உன் தூதரின் நெருக்கத்தையும் பெறுவதற்காகவே ஹிஜ்ரத்தும்
செய்தார்! தான் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ கொள்கைக்காக பல் வேறு இன்னல்களை
தாங்கிக் கொண்டார்! யாஅல்லாஹ் ஃகப்பாப் (ரலி) அவர்களின் மீது உன் கருணை மழையைப் பொழிவாயாக! ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:234 )
فقد روي أن الإمام الشافعي رضي الله عنه كان يزور قبري الإمامين
أبي حنيفة وموسى الكاظم رضي الله عنهما ويدعو لهما ويدعو عندهما. وكذلك كان يفعل
الإمام احمد بن حنبل رضي الله عنه الذي كان يزور قبر معروف الكرخي. وكان الحسن الخلال
يزور قبر موسى الكاظم
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இமாமுல் அஃளம் அபூஹனீஃபா
(ரஹ்) அவர்கள் மற்றும் இமாம் மூஸல் காழிம் (ரஹ்) ஆகியோரின் மண்ணறைகளை ஸியாரத் செய்ய
வருவார்கள். அவர்களுக்காக துஆச் செய்வார்கள். தங்களுக்காக துஆச் செய்யுமாறு வேண்டிக்
கொள்வார்கள்.
இமாம் அஹ்மத்
இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் மஅரூஃபுல் கர்ஃகீ (ரஹ்) அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்ய
வருவார்கள்.
இமாம் ஹஸனுல்
ஃகிலால் (ரஹ்) அவர்கள் இமாம் மூஸல் காழிம் (ரஹ்) அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்ய
வருவார்கள்.
மூன்றாம் வகை: பெற்றோர் மற்றும் சகோதரர்கள் & உறவுகளின் மண்ணறையை ஸியாரத் செய்வது.
عن أبي هريرة - رضي الله عنه- قال: قال رسول الله - صلى الله
عليه وسلم-: «من زار قبر والديه أو أحدهما كل جمعة غفر له وكتب بارًا».
"எவர் ஒவ்வொரு
வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து
வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்று எழுதப்படும்"
என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, மிஷ்காத் பக்கம் 154)
و كانت عائشة رضي الله عنها
تزور قبر أخيها عبد الرحمن بن أبي بكر رضي الله عنهما
عن عبدِ اللهِ بنِ أبي مُلَيكةَ،
أنَّ عائشَةَ رَضِيَ اللَّهُ عنها أقبلَتْ ذاتَ يومٍ من المقابِرِ،
فقُلْتُ لها: يا أمَّ المؤمنينَ مِن أينَ أقبَلْتِ؟ قالت: مِن قَبرِ أخي عبدِ
الرحمنِ بنِ أبي بكرٍ. فقلت لها: أليسَ كان رسولُ اللهِ صلَّى الله عليه وسلَّم
نهى عن زيارَةِ القبورِ؟ قالت: نعم، كان نهى، ثُمَّ أَمَرَ بزيارَتِها )) .
4- عن عائشة رَضِيَ اللَّهُ عنها، قالت: ((ألَا
أُحَدِّثُكم عنِّي وعن رسولِ الله صلَّى الله عليه وسلَّم، قلنا: بلى.. الحديث،
وفيه: قالت: قلْتُ: كيف أقولُ لهم يا رسولَ الله؟ قال: قولي: السَّلامُ على أهلِ
الدِّيارِ من المؤمنينَ والمُسْلمينَ، ويَرْحَمُ اللهُ المُستَقدِمينَ مِنَّا
والمُستَأخرينَ، وإنَّا إن شاءَ الله بكم لَلاحقونَ
அப்துல்லாஹ் பின் அபீ மலீகா (ரலி) கூறுகிறார் :ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள்
கப்ருகளை ஜியாரத் செய்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம்
இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர்
ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின்
மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்குச் சென்றுவரக்
கூடாது என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தடைசெய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம்
முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்தித்துவருமாறு ஏவினார்கள் எனக்
கூறினார்கள்.
وكانت
سيدتنا الزهراء بنت رسول الله صلى الله عليه وسلم تزور قبر عمها حمزة رضي الله عنه
ومعها بعض النساء،
அன்னை பாத்திமா
நாயகி ரலியல்லாஹுஅன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு
அவர்களை ஸியாரத் செய்து வந்தார்கள். நூல்: முஸ்னத் அப்துர்
ரஸ்ஸாக் 3-572,
முஸ்தத்ரக் 1- 377
நான்காம் வகை: முஸ்லிம்களின் கப்ருகளை ஸியாரத் செய்வது.
மண்ணறைகளுக்குச்
சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால்
அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச்
செய்துவிட்டு வருதல் ஒரு வகையாகும். இதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.
ـ
حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ
الآخَرَانِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ
أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ
رَسُولُ اللّهِ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّهِ يَخْرُجُ مِنْ
آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ. فَيَقُولُ:السَّلاَمُ عَلَيْكُمْ دَارِ قَوْمٍ
مُؤْمِنِينَ. وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَداً. مُؤَجَّلُونَ. وَإِنَّا، إِنْ شَاءَ
اللّهُ، بِكُمْ لاَحِقُونَ. اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ
وَلَمْ يُقِمْ قُتَيْبَةُ قَوْلَهُ وَأَتَاكُمْ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்
இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும்
(மதீனாவிலுள்ள) பகீஉல் ஃகர்கத் பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு
(பின்வருமாறு) கூறுவார்கள்: அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன.
ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி
அஹ்லி பகீஇல் ஃகர்கத்.
(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது
சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப் போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ்
நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல்
ஃகர்கதில் உள்ளோரை நீ மன்னிப்பளிப்பாயாக!)
நூல் : முஸ்லிம்
قد روي مسلم عن عائشة رضي الله عنها قالت: إن جبريل أتاه. فقال: إن ربك
يأمرك أن تأتي أهل البقيع فتستغفر لهم. قالت: قلت: كيف أقول لهم يا رسول الله؟
قال: "قولي: السلام على أهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله
المستقدمين منا والمستأخرين، وإنا إن ش
لاحقون. نسأل الله لنا ولكم العافية
"ஆயிஷா
(ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: ஜிப்ரீல் "உம் இறைவன் உம்மை
"பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி
கட்டளையிடுகின்றான்'
என்று (என்னிடம்) கூறினார்'' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
நான்
"அல்லாஹ்வின் தூதரே! அடக்கத் தலங்களில் இருப்பவர்களுக்காக நான் என்ன சொல்ல
வேண்டும்?''
என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ
யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு
பி(க்)கும் ல லாஹிகூன்''
என்று சொல்'' என்றார்கள்.
பொருள்: அடக்கத்
தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி
பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும்
அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து
சேரக்கூடியவர்களாக உள்ளோம்.
எனவே, வருடத்திற்கு ஒரு முறை
என்றில்லாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஸியாரத் செய்வோம். இறை நேசர்களின் ஸியாரத்தை
விரும்பி செய்வோம். உயிருக்கு உயிரான உயிரினும் மேலான நாயகம் ஸல் அவர்களின் ரவ்ளாவை
ஸியாரத் செய்து கொண்டே இருப்போம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்
அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நஸீபாக ஆக்குவானாக!
Alhamdulillah.. barakkallah...hazrath
ReplyDeleteJazakkumullah Hazrath
ReplyDeleteBarakkallahu fee ilmika
Miha arumayana கட்டுரை hazrat barakallah
ReplyDeleteஆஹா!. ஜியாரத் என்னும் அமல் நம் சமூகத்தில் குறைந்து வரும் சூழலில் ஜியாரத் குறித்து அருமையான ஆதார பூர்வமாக விஷயங்களை வழங்கியுள்ளீர்கள்.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத்.
ஜஸாகுமுல்லாஹ் கைரன் உஸ்தாத்.
திருப்பூர்