தித்திக்கும்
திருமறை – ரமழான்
சிந்தனை:- 25.
சுவனவாசிகளின்
உரையாடலும்... சுவாரஸ்யமான சுவனமும்...
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
24 –வது நோன்பை நோற்று, 25 – வது தராவீஹை
நிறைவு செய்து,
25 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் அல் மஆரிஜ் முதல் சூரத்து அபஸ வரை நிறைவு செய்யப்பட்டு, 393 வசனங்கள்
ஓதப்பட்டுள்ளது.
இன்று தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அல் முத்தஸ்ஸிர் அத்தியாயத்தின் 40 முதல் 47 – ம் வசனம் வரை சுவனவாசிகளின் உரையாடல் குறித்து அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
فِي جَنَّاتٍ
يَتَسَاءَلُونَ (40) عَنِ الْمُجْرِمِينَ (41) مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42)
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ (43) وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ
(44) وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ (45) وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ
الدِّينِ (46) حَتَّى أَتَانَا الْيَقِينُ (47)
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்- குற்றவாளிகளைக் குறித்து-
”உங்களை ஸகர் (நரகத்தில்)
நுழைய வைத்தது எது?”
(என்று கேட்பார்கள்.)
அவர்கள் (பதில்)
கூறுவார்கள்;
”தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ”அன்றியும்,
ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.
”(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும்
மூழ்கிக்கிடந்தோம். ”இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ”உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்” எனக் கூறுவர்).
சுவனம் செல்ல ஆசிப்போம்! அதற்காகப் பிரார்த்திப்போம்!!
மரணத்திற்குப்
பின்னால் மனிதர்களாகிய நாம் இரு இல்லங்களில் ஒன்றை அடைய இருக்கின்றோம். ஒன்று
சுவனம், இன்னொன்று நரகம். நரகத்தை பாவங்கள் செய்து மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்
ஆனால், சுவனம் என்பது இலகுவாகப் பெற முடியாத மகத்தான பாக்கியமாகும். அதற்காக நாம் பல
தியாகங்கள் செய்தாக வேண்டும். சிரமங்கள் பல மேற்கொள்ள வேண்டும்.
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ
الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ
“உங்களில் போராளிகள், சகிப்புத்தன்மை உடையோர் யார் என்பதை அறியாது சுவனத்தில் (எளிதாக)
பிரவேசிக்கலாம் என நினைக்கின்றீர்களா? ( அல்குர்ஆன்: 3:142
)
ஏனெனில், சுவனம்
ஒன்றே முஃமின்களின் இறுதியான தங்குமிடமாகும். அது இறை விசுவாசிகளான நமக்காகத்தான்
தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் நுழைய நமக்கு உரிமை உண்டு. ஆனால் அதன் தகுதிகளுடன், அதற்குத் தகுதி பெற்ற மக்களாக நாம் மாற முயற்சி செய்ய வேண்டும். அதன்
முதற்கட்டமாக நாம் சுவனம் செல்ல ஆசைப்பட வேண்டும்.
சுவனத்தை ஒரு
முஃமின் ஆசை வைப்பதுடன்,
அதை அல்லாஹ்விடமும் வேண்டி நிற்கவேண்டும். நபிமார்கள், போராளிகள்,
நல்லடியார்கள் வசிக்கும் அந்த சுவனத்தில் நம்முடைய காலும் தடம்
பதித்திட வேண்டும் என்ற ஆசை ஒரு முஃமினிடம் மேலோங்க வேண்டும்.
وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
இன்பம் நிறைந்த
சுவனத்தின் வாரிசுக்காரர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கிடுவாயாக! (அஷ்ஷுஃரா. வசனம்:
85) என தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ
بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ
الْقَوْمِ الظَّالِمِينَ
என் இரட்சகனே!
சுவனத்தில் உன்னிடத்தில் எனக்கென்று ஒரு மாளிகை அமைத்திடு, ஃபிர்அவ்ன்,
அவனது (கொடுமையான) நடவடிக்கையில் இருந்து என்னைக் காத்திடு!
( அத் தஹ்ரீம், வசனம்: 11 ) என்று அன்னை ஆசியா (ரழி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
فقال رسول الله صلى الله عليه وسلم
(قوموا إلى جنة عرضها
السماوات والأرض)، قال
يقول عمير بن الحمام الأنصاري
يا رسول الله! جنة
عرضها السماوات والأرض؟ قال
(نعم) قال: بخٍ بخٍ
(كلمة تطلق لتفخيم الأمر وتعظيمه في الخير)، فقال رسول الله صلى الله عليه وسلم
(ما يحملك على قولك: بخٍ بخٍ؟)، قال: لا والله يا رسول الله إلا رجاءة أن أكون من
أهلها، قال
(فإنك من أهلها)، فأخرج تمرات من قرنه (جعبة السهام) فجعل يأكل
منهن، ثم قال: لئن أنا حييت حتى آكل تمراتي هذه إنها لحياة طويلة، قال: فرمى بما
كان معه من التمر ثم قاتلهم حتى قُتِل
مسلم.
அல்லாஹ்வின்
தூதரே! நான் இந்தப்போரில் கொல்லப்பட்டால் நீங்கள் வாக்களிக்கின்ற சுவனம்! வானங்கள், பூமியை விட விசாலமானதா ? என உமைர் பின் ஹுமாம்
(ரழி) கேட்க, ஆம்! என நபி {ஸல்} அவர்கள் கூறியது தான் தாமதம் தனது கையில் இருந்த பேரீத்தம் கனிகளை வீசி
எறிந்து விட்டு களத்தில் குதித்து ஷஹீதானார்கள். பத்ர் ஷுஹதா உமைர் இப்னு ஹுமாம்
(ரலி). சுவனத்தின் மீது அவர்களுக்கு எவ்வளவு ஆசை.
ஏனென்றால்... சுவனம் என்பது சுவாரஸ்யங்கள் நிறைந்தது...
يَقُولُ
اللهُ عَزَّ وَجَلَّ
أَعْدَدْتُ
لِعِبَادِيَ الصَّالِحِينَ، مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا
خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أَطْلَعَكُمُ اللهُ عَلَيْهِ ”
ثُمَّ قَرَأَ {فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ}
[السجدة: 17]
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின்
உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்”என்று கூறினான். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ்
அறிவித்திருப்பது சொற்பமே!
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, “அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள
கண் குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (32:17) எனும் வசனத்தை நபி {ஸல்} அவர்கள் ஓதிக்காட்டினார்கள். ( புகாரி-5439
)
சுவனத்து சுவாரஸ்யங்களில்
ஒன்று…
روى أن امرأة عجوزاً جاءته تقول: يا رسول الله: ادع الله لي أن
يدخلني الجنة»، فقال لها: «يا أم فلان! إن الجنة لا يدخلها عجوز» (أخرجه الترمذي).
وانزعجت المرأة وبكت، ظناً منها أنها لن تدخل الجنة، فلما رأى ذلك منها بين لها
غرضه: أن العجوز لن تدخل الجنة، بل ينشئها الله خلقاً آخر، فتدخلها شابة بكراً..
وتلا عليها قول الله تعالى: {إنا أنشأناهن إنشاء، فجعلناهن أبكاراً، عرباً
أتراباً}، (سورة الواقعة الآيات 35-37).
அல்லாஹ்வின்
தூதரிடம் ஒரு மூதாட்டி வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் அவன் என்னை
சுவனத்தில் நுழைவிக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், இன்னாரின் தாயே என அழைத்து மூதாட்டிகள் (வயோதிகர்கள்) சுவனத்தில்
நுழையமாட்டார்கள் எனக் கூறியதும் அப்பெண் அழுதவராக திரும்பினார். அவரிடம், சுவனத்தில் அம்மூதாட்டி (அவரது வயோதிக தோற்றத்தில்) நுழையமாட்டார் எனக்
கூறிவிட்டு,
அல்லாஹ் அல்குர்ஆனில் (சுவனவாதிகளான) அவர்களை நாம்
புதுப்படைப்பாக்கி,
கன்னியர்களாகவே ஆக்கியுள்ளோம் என்ற அல்வாகிஆ அத்தியாத்தில்
இடம் பெறும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். இந்தச் செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த
ஆதாரத்திற்கு கொள்ள முடியுமான செய்தியாகும். (ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா)
சுவனத்தில்
நுழைவோரின் வயதெல்லை முப்பத்தி மூன்று என்று திர்மிதி, அஹ்மத் ஆகிய கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. சுவனத்தில் நுழைவோர் முப்பத்தி
மூன்று வயதை உடையவர்களாகவும், (முறுக்கேறிய)
இளைஞர்களாகவும்,
மேனியில் முடி அற்றவர்களாகவும், தாடி முளைக்காதவர்களாகவும் இருப்பார்கள் (திர்மிதி, அஹ்மத்)
ஆதமின் நபியின்
உயர்த்தை உடையவர்களாக சுவனவாதிகள் இருப்பார்கள் என்று புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. ஆதமின் உயரம் பற்றி செய்தி
விபரமாக முன்னர் தரப்பட்டுள்ளது.
சுவனத்து சுவாரஸ்யங்களில் இன்னொன்று...
إِنَّ
فِي الْجَنَّةِ لَسُوقًا، يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ، فَتَهُبُّ رِيحُ
الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ، فَيَزْدَادُونَ حُسْنًا
وَجَمَالًا، فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا
وَجَمَالًا، فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ: وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا
حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ: وَأَنْتُمْ، وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ
بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு.
அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக்
காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும்.
உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும்
அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது
அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற
பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின்
மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும்
பெற்றிருக்கிறீர்கள்”
என்று கூறுவர். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம்-5448 )
சுவனத்து சுவாரஸ்யங்களில்
இன்னொன்று…
சுவனத்தில்
இறுதியாக நுழையும் ஒரு மனிதன் அவன், -ஸிராத்- பாலத்தைக்
கடந்து செல்லும் வேளை ஒரு தடவை நடந்தும், மற்றொரு தடவை தவழ்ந்தும்
செல்லுவான். (வழியில்) நரகத்தின் தீச்சுவாலை அவனை சில போது தீண்டிவிடும். அவன்
அந்தப் பாலத்தைக் கடந்ததும் நரகின் பக்கமாக திரும்பிப் பார்த்து
تَبَارَكَ
الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ
أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
உன்னில் இருந்தும்
என்னைப் பாதுகாத்தானே அவன் (அல்லாஹ்) மகத்துவம் நிறைந்தவன், அவன் முதல்,
மற்றும் இறுதியாக வந்தவர்கள் எவருக்கும் வழங்காத (பல
வெகுமதிகளை) எனக்கு அவன் வழங்கியுள்ளான் எனக் கூறுவான். (முஸ்லிம்).
இறுதியாக நுழையும்சுவனவாதி
பற்றிய மற்றொரு செய்தியின் தொடரில் ….. ‘அப்போது அவன்
முன்பாக (சுவனத்து) மரம் ஒன்று உயர்த்தப்படும், எனது இரட்சகனே! அதன்
நிழலில் நிழல் பெறவும்,
அதன் கீழ் ஓடும் நீரைப்பருகவும் என்னை இந்த மரத்தின் பக்கம்
நெருக்கி வைப்பாயாக என வேண்டுவான். ஆதமின் மகனே! நான் இதை உனக்கு வழங்கினால் வேறு
எதையும் நீ என்னிடம் கேட்பாயா என அல்லாஹ் கேட்பான். அவன் இல்லை எனது இரட்சகனே!
நான் அதைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என வாக்குறுதி செய்ததும் அல்லாஹ் அதை
வழங்குவான். பின்னும் அதைவிட அழகான மரம் ஒன்று கொடுக்கப்படுவான். பின்னும் அவன்
அதில் ஆசை வைத்து அதன் நீரை அருந்திட, நிழல் பெற மீண்டும்
கேட்பான்,
அல்லாஹ் அவனிடம் ஆரம்ப வாக்குறுதியை நினைவுபடுத்திக்
கூறும்போது இதன் பின் எதையும் கேட்கமாட்டேன் எனக் கூறுவான். அந்த மரத்தில் இருந்து
ஆரம்பமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவனவாசல்வரை நெருக்கப்படுவான். ….. என்ற நீண்ட ஹதீஸின் தொடரில்
அப்போது அவன்
சுவனவாதிகளின் சப்தத்தை செவிமடுப்பான். எனது இரட்சகனே! என்னை அதில் நுழைவிப்பாயாக!
எனக் கூறுவான். ஆதமின் மகனே நான் உனக்கு உலகையும், அதை போன்றதொரு மடங்கும் தருவேன். அதைக் கொண்டு நீ பொருந்திக் கொள்வாயா எனக்
கேட்பான்,
قَالَ
يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ
அப்போது அந்த
சுவனவாதி,
நீ அகிலங்களின் அதிபதியாக இருந்து கொண்டு என்னைப் பரிகாசம்
செய்கின்றாயா?
எனக் கேட்பான் எனக் கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான இப்னு
மஸ்ஊத் (ரழி) அவர்கள் சிரித்தார்கள். இதை செவிமடுத்தோர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் இவ்வாறே சிரித்தார்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன
அடிப்படையில் சிரித்தார்கள் எனக் கேட்டபோது அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின்
சிரிப்பின் மூலம் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவனவாசிகள் உரையாடுவார்கள்..
சக சுவனவாசிகளுடன்...
சுவர்க்கத்தில்
இருப்போர் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றபோது கூறிக்கொள்ளும் காணிக்கையாக ஸலாமை
அல்லாஹ் அறிமுகம் செய்கின்றான்.
تَحِيَّتُهُمْ
يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامٌ
அவர்கள்
சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை ஸலாம் என்பதாகும். ( அல்குர்ஆன்: 33: 44 )
تَحِيَّتُهُمْ
فِيهَا سَلَامٌ
அவர்களின் காணிக்கை
ஸலாமாகும் ( அல்குர்ஆன்: 14: 23 )
நரகவாசிகளுடன்...
وَنَادَىٰٓ
أَصْحَٰبَ
ٱلنَّارِ أَن قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّۭا فَهَلْ وَجَدتُّم
مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّۭا ۖ قَالُوا۟ نَعَمْ ۚ فَأَذَّنَ مُؤَذِّنٌۢ
بَيْنَهُمْ أَن لَّعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ
மேலும்
அச்சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்து, “எங்கள் இறைவன்
அளித்த வாக்குறுதியின் படி சந்தோஷமான சுக வாழ்வு எங்களுக்குக் கிடைத்திருப்பது
உண்மையென ஆகிவிட்டது. அதே போல் இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டால் நரக
வேதனைகளுக்கு ஆளாவீர்கள் என்று சொல்லப்பட்டதும் உண்மையே என ஆகிவிட்டதா?” என்று கேட்பார்கள். அதற்கவர்கள், “ஆம் அது உண்மையாகி
விட்டது”
என்பார்கள். இதற்கிடையில் “அக்கிரமச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து அழிந்து
போவதும் உண்மையே”
என்ற இறைச் செய்தியும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ٱلَّذِينَ
يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًۭا وَهُم بِٱلْءَاخِرَةِ
كَٰفِرُونَ.
அவர்கள் அல்லாஹ்
காட்டிய வழியில் சிறந்த சமுதாயம் உருவாவதைத் தடுத்து வருவதோடு, இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பதில் உண்மைக்கு முரணாகவும் சொல்லி வருகின்றனர்.
தாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற இறுதி பின் விளைவுகள் ஏற்படும்
என்பதை ஏற்றுக் கொள்ளாததோடு அவற்றைப் பொய்ப்பித்தும் வருகின்றனர்.
وَبَيْنَهُمَا
حِجَابٌۭ ۚ وَعَلَى ٱلْأَعْرَافِ رِجَالٌۭ يَعْرِفُونَ كُلًّۢا بِسِيمَىٰهُمْ ۚ
وَنَادَوْا۟ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيْكُمْ ۚ لَمْ يَدْخُلُوهَا
وَهُمْ يَطْمَعُونَ.
இதுதான்
சுவனவாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளாகும். இறைவழிகாட்டுதலை
ஏற்றுக் கொள்பவர்களுக்கும்,
மறுப்பவர்களுக்கும் இடையே அவர்களுடைய உள்ளங்களில் திரை
இருக்கும். (மேலும் பார்க்க- 57:13-14) இது அவர்களை இணைய விடாது.
ஆக சுவனவாசிகள் தம் ஆற்றல்மிக்க நன்னடத்தை கொண்டு, உயர் பதவிகளின் சிகரத்தில் இருப்பார்கள். மக்களிடையே உள்ள செயல்பாடுகள்
மற்றும் அவர்களின் நடத்தையை வைத்து நல்லவர்கள் யார் தீயவர்கள் யார் என்பதை
அடையாளம் கண்டு கொள்வார்கள். சுவர்க்க பூமியாகத் திகழும் சமுதாயத்தில் நுழைய தகுதி
உடைய நல்லவர்களிடம்,
“இன்னும் ஆவல் எதற்கு? நீங்கள் அமைதிப்
பூங்காவாகத் திகழும் இச்சுவர்க்கத்தில் மனநிறைவோடு நுழையுங்கள்” என்று அழைப்பார்கள்.
وَإِذَا
صُرِفَتْ أَبْصَٰرُهُمْ تِلْقَآءَ أَصْحَٰبِ ٱلنَّارِ قَالُوا۟ رَبَّنَا لَا
تَجْعَلْنَا مَعَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.
அதே சமயம் நரகவாசிகளை
அவர்கள் கவனிக்கும் போது,
“எங்களை பரிபாலிப்பவனே! இத்தகைய மோசமான சமூகத்தவர்களுடன்
இணைந்து வாழும்படி எங்களை செய்துவிடாதே” என்று கூறுவார்கள்.
وَنَادَىٰٓ
أَصْحَٰبُ ٱلْأَعْرَافِ رِجَالًۭا يَعْرِفُونَهُم بِسِيمَىٰهُمْ قَالُوا۟ مَآ
أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ.
மேலும் உயர்
பதவியின் சிகரத்தில் இருப்பவர்கள், தவறான பாதையில்
செல்பவர்களை அடையாளங் கண்டு அவர்களை அழைத்து, “நீங்கள்
இதுவரையில் சேமித்து வைத்த செல்வங்களோ, நீங்கள் ஆணவத்துடன்
கட்டிக் காத்து வந்த பதவிகளோ இப்போது எந்தப் பலனையும் அளிக்கவில்லையே” என்று கேட்பார்கள்.
أَهَٰٓؤُلَآءِ
ٱلَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحْمَةٍ ۚ ٱدْخُلُوا۟
ٱلْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ.
நரகவாசிகளை நோக்கி,“ இவர்களைத் தானே அல்லாஹ் ஒருபோதும் அருள் புரிய மாட்டான் என்று உறுதியாகக் கூறி
வந்தீர்கள்?”
என்று கூறி, சுவனத்திற்கு செல்ல தகுதி
உடையவர்களைப் பார்த்து,
“நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள். இனி எவ்வித துயரமோ அச்சமோ
இல்லாத சுகமான வாழ்வைப் பெறுவீர்கள்” என்று கூறுவார்கள்.
وَنَادَىٰٓ
أَصْحَٰبُ ٱلنَّارِ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ أَنْ أَفِيضُوا۟ عَلَيْنَا مِنَ
ٱلْمَآءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ ۚ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا
عَلَى ٱلْكَٰفِرِينَ.
நரகவாசிகளின்
நிலையோ அந்தோ பரிதாபம்! அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து அல்லாஹ் உங்களுக்கு
அளித்தவற்றில் குடிக்க தண்ணீரோ அல்லது உண்ண உணவோ இருந்தால் அதில் கொஞ்சமேனும்
எங்களுக்குக் கொடுங்கள் என்று கெஞ்சுவார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு
இதில் எதுவும் உரிமையில்லை”
என்று கூறிவிடுவார்கள்.
ٱلَّذِينَ
ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَهْوًۭا وَلَعِبًۭا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
ۚ فَٱلْيَوْمَ نَنسَىٰهُمْ كَمَا نَسُوا۟ لِقَآءَ يَوْمِهِمْ هَٰذَا وَمَا
كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ.
ஏனென்றால் அவர்கள்
அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் சீரிய சிந்தனை செலுத்துவதை விட்டுவிட்டு, அவற்றை வீண் விளையாட்டாக எடுத்துக் கொண்டார்கள். மேலும் அவர்களுக்குக்
கிடைத்திருந்த தற்காலிக சொகுசு வாழ்வின் ஈர்ப்பில் மயங்கிக் கிடந்தனர். அவர்கள்
செய்வது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. அதனால் இறைவன்
நிர்ணயித்துள்ள “மனித செயல்களின் இறுதி விளைவுகளைப்” பற்றியும் கவலைக்
கொள்ளவில்லை. எனவே அவர்களுடைய இன்றைய இழிநிலையைப் பற்றி இறைவன் கவலைப்பட
போவதில்லை. (
அல்குர்ஆன்: 7: 44 – 51 )
அல்லாஹ் அடியார்களுடன் உரையாடுவான்..
அல்லாஹ்வுடன்
நேரடியாக உரையாடுதல் இது சுவனவாதிகள் பெறும் மிகப் பெரும் பாக்கியமாகும். சுவனத்தில்
நுழையும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்கள் அந்த அல்லாஹ்வுடன் நேரடியாகப்
பேசுவார்கள் என்று பல நபிமொழிகள் தெரிவிக்கின்றன.
عَنْ
عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَسَيُكَلِّمُهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
لَيْسَ بَيْنَ اللَّهِ وَبَيْنَهُ تُرْجُمَانٌ [صحيح البخاري
]
உங்களில் எவரும்
மறுமையில் அல்லாஹ் அவரோடு பேசாமல் இருப்பதில்லை. அல்லாஹ்வுக்கும் அவருக்கும்
இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கமாட்டார்கள். (புகாரி) மற்றொரு அறிவிப்பில்:
مَا
مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ
تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ -صحيح البخاري
உங்கள் எந்த
ஒருவருடனும் அவரது இரட்சகன் பேசாமல் இருப்பதில்லை. அவனுக்கும் அம்மனிதனுக்கும்
இடையில் மொழிபெயர்ப்பாளர்களோ, அவரை மறைக்கின்ற திரையோ
இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).
عَنْ
عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ
قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ
فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ
وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا
أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ
சுவனவாதிகள் சுவனத்தில்
நுழைந்ததும்,
நான் உங்களுக்கு ஏதும் அதிகப்படியாகத் தந்திட நீங்கள்
விரும்புகின்றீர்களா?
என்று அல்லாஹ் (சுவனவாதிளை நோக்கி) கேட்பான். அதற்கு
அவர்கள்,
எமது முகங்களை நீவெண்மையாக்கவில்லையா? எம்மை நீ சுவனத்தில் நுழைவிக்கவில்லையா? எம்மை நீ நரகத்தில்
இருந்து காப்பாற்றவில்லையா?
(இதை விடவும் வேறு என்ன இருக்கின்றது) என பதில்
அளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். இந்நிலையில் அவர்கள் தமது
இரட்சகனைப் பார்ப்;பதை விட வேறு எந்த ஒன்றும் இவர்களுக்கு விருப்பமானதாகக்
கொடுக்கப்பட்டமாட்டார்கள்.
حَدَّثَنَا
أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ حَمَّادِ
بْنِ سَلَمَةَ بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ ]
لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ صحيح مسلم
மற்றொரு
அறிவிப்பில்: எவர்கள் நன்மைகளைச் செய்தார்களோ அவர்களுக்கு (நன்மைகளும்), அதிகப்படியானவைகளும் இருக்கின்றன என்ற வசனத்தை- அல்லாஹ்வை மறுமையில் காண்பதைச்
சுட்டிக்காட்டி மேற்படி வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (முஸ்லிம்)
عَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا
أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ
رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ
تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ
قَالُوا يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ
عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا (صحيح البخاري
சுவனவாதிகளிடம், சுவனவாதிகளே! என்று அழைப்பான். அப்போது எங்கள் இரட்சகனே உனது அழைப்பிற்கு நாம்
உனது அழைப்பிற்கு வழிப்பட்டோம், உன்பாக்கியத்திற்கு
வழிப்பட்டோம் என்று கூறுவார்கள். நீங்கள் நான் வழங்கி இருப்பதைப் பொருத்திக்
கொண்டீர்களா?
என்று கேட்பான் உனது படைப்புக்கள் யாருக்கும் வழங்காததை நீ
எமக்கு வழங்கி இருக்க அதைக் கொண்டு நாம் பொருந்திக் கொள்ளாமல் இருக்க எமக்கென்ன
நேர்ந்துள்ளது என்று கேட்பார்கள். நான் அதைவிட சிறந்ததை உங்களுக்கு தருகின்றேன்
என்று கூறுவான். (சுவனவாதிகள்) அதைவிட சிறந்ததா (அது ) என்ன என (ஆச்சரியமாக)
வினவுவார்கள்.
فَيَقُولُ
أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا (صحيح
البخاري)
“உங்கள் மீது நான் எனது
திருப்தியை இறக்குகின்றேன்,
“இனி ஒரு போதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்” என்று கூறுவான். (புகாரி).
அல்லாஹ்வும்.. சுவனத்து விவசாயியும்…
அல்லாஹ்வின் தூதர்
அவர்கள் ஒருநாள் நபித்தோழர்களோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது அவர்களுடன்
கிராமப்புற மனிதர் ஒருவரும் அமர்ந்திருந்தார். அப்போது ‘சுவனத்தில் விவசாயம் செய்ய ஒரு மனிதன் தனது இரட்சகனிடம் அனுமதி கோருவார்.
அதற்குப் பதில் தரும் வகையில் அல்லாஹ் நீ விரும்பியது (இங்கு) உனக்கில்லையா எனக்
கேட்பான். அவர் ஆம். என்பார், அப்படியானால் நான்
விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என அவன் அல்லாஹ்விடம் கூறுவான் (அதில் அவன்
ஈடுபட்டதும்) அது உடன் முளைத்து, அதன் தளைகள்
கண்பார்வைக்கு கவர்ச்சியானதாகி, அது நன்றாக வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையையும் எட்டி, மலைகள் போன்று ஆகிவிடும்.
அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ், ஆதமின் மகனே உன்னை நான்
விட்டுவிடுகின்றேன். உன்னை எதனாலும் மன நிரப்பம் அடையச் செய்ய முடியாது என்று
கூறுவான். உடனே அக்கிராமவாசி:
فَقَالَ
الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا
فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ
فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – صحيح البخاري
அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! விவசாயம் செய்ய விரும்பும் அந்த மனிதர் , ஒன்று குரைஷியராக அல்லது அன்ஸாரி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில்
அவர்கள்தாம் விவசாயிகள்,
நாம் விவசாயிகள் அல்லவே! என்றதும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் (புகாரி)
உங்கள் சுவனப் பிரவேசத்துக்கு மனத்தூய்மையான ஒரு ஷஹாதா போதும்...
وقد
أخبرنا عبد الله بن حامد الفقيه، قال أخبرنا إبراهيم بن محمد الهروي، قال أنبأنا
أبو شاكر ميسرة ابن عبد الله عن أبي عبد الله العجلي عن عمرو بن محمد عن عبد
العزيز بن أبي داود، قال كان رجل بالبادية قد اتخذ مسجداً، فجعل في قبلته سبعة
أحجار، فكان إذا قضى صلاته قال: يا أحجار أشهدكم أن لا إله إلا الله، قال: فمرض
الرجال فمات فعرج بروحه، قال: فرأيت في منامي أنه قال: أمر بي إلى النار، فرأيت
حجراً من تلك الأحجار قد عظم فسد عنى باباً من أبواب جهنم، قال وسد عنى بقية
الأحجار أبواب جهنم.
ஒருவர் தான் வசிக்கும் ஊரில் பள்ளிவாசல் ஒன்றை ஏற்படுத்தினார். அவர் கிப்லாவில் ஏழு கற்களை
வைத்திருப்பார். தொழுது முடிந்ததும் கையில் ஏழு கற்களை எடுத்துக்
கொண்டு இருந்தன. அவைகளை நோக்கி அவர் நான் லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர்
ரசூலுல்லாஹ் என்று உறுதிமொழி கூறியதற்கு நீங்கள் என் இறைவனிடம் சாட்சியாக இருங்கள்
என கூறினார். அன்றிரவு அவர் துன்கிகொண்டிருக்கும் போது கனவு ஒன்று கண்டார். அந்தக்
கனவில் அவர் நோய் வாய்ப்பட்டு, இறந்து போகின்றார். பின்னர், நியாயத் தீர்ப்புநாளில்
அவர் விசாரிக்கப்பட்டார். அவர் மீது நரக தண்டனை விதிக்கப்பட்டது. அவரை மலக்குகள்
இழுத்துக் கொண்டு நரக வாயிலை அடைந்தனர். அப்பொழுது அந்த ஏழு கற்களில் ஒன்று வந்து
நரகத்தின் வாயிலை அடைத்துக் கொண்டது. மலக்குகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை அகற்ற
முயன்றும் அது அசையக்கூட இல்லை. அதனை விட்டு விட்டு நரகத்தின் வேறொரு வாசலுக்கு அவரை
கொண்டு போனார்கள். அந்த வாயிலையும் அக்கற்களில் ஒன்று அடைத்து நிற்கக் கண்டு அதை
அகற்ற முயன்றார்கள்.அவர்களால். அதை அசைக்கக்கூட முடியவில்லை இவ்வாறே அவர்கள்
நரகத்தின் ஏழு வாயில்களுக்கும் அவரை இழுத்து செல்ல அவை அனைத்தையும் அந்த ஏழு
கற்களும் அடைத்து நிற்க கண்டார். பின்னர் அவரை அர்ஷின் அடியிற் கொண்டு போய்
நிறுத்திக் கொண்டு இறைவனே! உனது இந்த அடிமையின் கருமத்தை நீயே நன்கறிவாய். இவரை
நரகம் கொண்டு போய் சேர்க்க எங்களால் இயலவில்லை என்று விண்ணப்பித்தனர்.
அப்பொழுது இறைவன்
அந்த அடியரை நோக்கி எனது அடிமையே நீ சில கலிமாவை சொன்னதற்கு சில கற்களை சாட்சி
வைத்தாய் அவை உனக்குள்ள உரிமைக்குப் பங்கம் செய்யவில்லையெனில் நான் எவ்வாறு உன்
உரிமைக்குப் பங்கம் செய்வேன். நீ கலிமாவை சொன்னதற்கு நானே சாட்சி என்று கூறிவிட்டு
மலக்குகளே இந்த அடியானை சுவனத்தில் சேர்த்து வையுங்கள்! எனக் கட்டளையிடுவான்.
அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு சுவனபதி நோக்கி நடந்தனர் அங்கு போய் பார்க்கும்
போது அதன் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்படிருந்தன அப்பொழுது அந்த ஷஹாதத்துக் கலிமா வந்து அந்த வாயில்கள் அனைத்தையும் திறந்து
விட அவர் உள்ளே நுழைந்தார். இவ்வாறு கண்டு கண் விழித்த அவர் தன ஆயுள் முழுதும்
அக்கலிமாவை விடாது ஓதி வந்தார். என இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள்
தங்களது அல் வாபிலுஸ் ஸய்யிப் எனும் நூலிலும், இமாம் இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்)
அவர்கள் தங்களது
அத் தக்வீஃபு மினன் நார் எனும் நூலிலும், இமாம்
முஹம்மது இப்னு ஸீரீன் ரஹ் அவர்கள் இந்த செய்தியை அடிப்படையாக வைத்து கனவில்
ஒருவர் மஸ்ஸிதில் இருப்பது போன்றோ இபாதத் செய்வது போன்றோ கனவு கண்டால் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் அவரை நன்மையின் பால் அழைத்துச் செல்கிறான் என்று
விளக்கம் அளித்துள்ளார்கள். ( நூல்: அல் வாபிலுஸ் ஸய்யிப், அத் தக்வீஃபு
மினன் நார் )
சுவனத்தை
ஆசிப்போம்! சுவனத்திற்காக பிரார்த்திப்போம்! இன்ஷா அல்லாஹ் சுவனத்தில்
பிரவேசிப்போம்! சுவனத்து சுவாரஸ்யங்களை அனுபவிப்போம்! அல்லாஹ்வோடு உரையாடும் மேலான
நற்பேற்றினை அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும் வழங்கியருள்வானாக!!
No comments:
Post a Comment