தித்திக்கும்
திருமறை – ரமழான்
சிந்தனை:- 26.
நபி {ஸல்} அவர்கள்
அதிகம் விரும்பிய அல் அஃலா அத்தியாயம்!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
25 –வது நோன்பை நோற்று, 26 – வது தராவீஹை
நிறைவு செய்து,
26 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் அத் தக்வீர் முதல் அஷ் ஷம்ஸு ஸூரா வரை நிறைவு செய்யப்பட்டு, வசனங்கள்
ஓதப்பட்டுள்ளது.
இன்று தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அல் அஃலா அத்தியாயத்தின் 9 முதல் 12 – ம் வசனம் வரை உபதேசம் செய்வது, அறிவுரை செய்வது குறித்து அல்லாஹ்
குறிப்பிடுகின்றான்.
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى (9) سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى
(10) وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى (11) الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى
“ஆகவே, அறிவுரைகள்
மக்களுக்குப் பலனளிக்குமாயின் நீர் அறிவுரை வழங்குவீராக!” அல்லாஹ்வை
அஞ்சக்கூடியவர் விரைவில் அறிவுரை பெறுவார். மிகுந்த துற்பாக்கியம் உடையவனே
அறிவுரையை விட்டும் விலகிக் கொள்வான். அவன் தான் நரகின் பெரும் நெருப்பில்
நுழையக்கூடியவன்”. ( அல்குர்ஆன்: 87: 9-12 )
தற்போதைய
வரிசைப்படி 87 –வது அத்தியாயமாக இடம் பெற்றிருக்கும் இந்த அத்தியாயம் அல்குர்ஆன்
இறக்கியருளப்படுகின்ற போது 8 –வது அத்தியாயமாக இறக்கியருளப்பட்டது.
ஹிஜ்ரத்துக்கு
முன்னால் இறக்கியருளப்பட்ட முஃபஸ்ஸல் அத்தியாயமாகும். 19 வசனங்களைக் கொண்ட
ஸூராவாகும்.
روى
البخارى حديثا جاء عن البراء بن عازب رضي الله عنه قال
أول من قدم علينا من أصحاب النبى صلّى الله عليه وسلم مصعب بن
عمير وابن أم مكتوم فجعلا يقرءاننا القرآن ثم جاء عمار وبلال وسعد، ثم جاء عمر
بن الخطاب فى عشرين ثم جاء النبى صلّى الله عليه وسلم فما رأيت أهل المدينة فرحوا
بشيء فرحهم به حتى رأيت الولائد والصبيان يقولون
هذا رسول الله صلّى الله عليه وسلم قد جاء فما جاء حتى قرأت:
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى فى سورة مثلها
பர்ராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்; நபித்தோழர்களில் (நாடு
துறந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’
செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் ‘முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும்,
‘இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம்.
அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பிறகு, அம்மார்(ரலி),
பிலால்(ரலி), ஸஃத் இப்னு அபீ
வக்காஸ்(ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர்
இப்னுல் கத்தாப்(ரலி) வந்தார்கள்.
அதற்குப் பிறகே
நபி {ஸல்} அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி {ஸல்} அவர்கள(து வருகையா)ல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள்
மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், ‘இதோ இறைத்தூதர் {ஸல்}
அவர்கள் வந்துவிட்டார்கள்’
என்று கூறி (மகிழலாயி)னர். நான்,
‘ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87 வது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முபஸ்ஸல்)
அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி {ஸல்} அவர்கள்
(மதீனாவிற்கு) வருகை தரவில்லை. ( நூல்: புகாரி )
தொழுகையில்
சிரமமின்றி தொழுவதற்காக நபியவர்களால் ஓதுவதற்கு காட்டிக்கொடுக்கப்பட்டது,
وعن جابر بن عبد الله رضي الله عنه: أن رسول الله
صلى الله عليه وسلم قال لمعاذ: [هلا صليت بـ: ((سَبِّحِ اسْمَ رَبِّكَ
الْأَعْلَى))، ((وَالشَّمْسِ وَضُحَاهَا))، ((وَاللَّيْلِ إِذَا يَغْشَى))] (متفق
عليه). (2) أرشد النبي -صلى الله عليه وسلم- إلى تسبيح الله عند قراءة السورة:”كان
إذا قرأ “سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى”16) قال: سبحان ربىَ الأعلى”.
ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ்(ரலி)அவர்கள் கூறினார்கள்:ஒருவர் (தண்ணீர் இறைப்பதற்குரிய) இரண்டு கமலைகளை
எடுத்துக் கொண்டு இருள் சூழ்ந்த நேரத்தில் வந்தார். முஆத்(ரலி) (இஷாத்) தொழுகை
நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தம் கமலைகளை வைத்துவிட்டு முஆத்(ரலி) உடன்
தொழுகையில் சேர்ந்தார். முஆத்(ரலி) ‘பகரா’ அல்லது ‘நிஸா’
அத்தியாயத்தை ஓதலானார்கள். உடனே அந்த மனிதர்
(தொழுகையை)விட்டுவிட்டுச்) சென்றார்.இது பற்றி முஆத்(ரலி) குறை கூறியது அந்த
மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி(ஸல்) அவர்களிடம்
வந்து இது பற்றி முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘முஆதே! நீர் குழப்பம் ஏற்படுத்துபவரா?’ என்று மும்முறை
கேட்டார்கள். ‘ஸப்பிஹிஸ்மரப்பி’, வஷ்ஷம்ஸி வளுஹாஹா வல்லைலி
இதாயக்ஷா’
ஆகிய அத்தியாயங்களை ஓதி நீர் தொழுகை நடத்தக் கூடாதா? நிச்சயமாக உமக்குப் பின்னால் முதியவர்கள், பலவீனர்கள், அலுவலுடையவர்கள் உள்ளனர்’ என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி:705, முஸ்லிம்)
இரு பெருநாட்களிலும், வெள்ளிக்கிழமையிலும்
தொழுகையில் ஓதுதல்,
عن النعمان بن بشير رضي الله عنه: [أن رسول الله صلى الله عليه
وسلم كان يقرأ في العيدين ويوم الجمعة (سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى)، و(هَلْ
أَتَاكَ حَدِيث الْغَاشِيَةِ) (رواه مسلم).
நுஃமான் இப்னு பஷீர்
(ரலி) அவர்கள் கூறினார்களால் : நபி ஸல் அவர்கள் இரு பெருநாட்களிலும் ஜும்ஆவிலும் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா ஹல் அதாக’ ஆகிய சூராக்களை ஓதுவார்கள், அவ்விரண்டும் ஒரே நாளில்
வந்தால் இரண்டு தொழுகைகளிலும் அவ்விரண்டையும் ஓதுவார்கள். (முஸ்லிம்)
வித்ர் தொழுகையில் ஓதுதல்,
أنَّ النَّبيَّ -صلَّى الله عليه وسلَّم- كان يوتِر بسورة
(سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى). وسورة (قلْ يَا أَيّهَا الْكَافِرونَ) وسورة
(قلْ هوَ اللَّه أَحَدٌ).
இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் வித்ர்
தொழுகையில் ‘ஸப்பிஹிஸ்ம,
குல் யாஅய்யுஹல் காபிரூன், குல் ஹுவல்லாஹு அஹத்’ ஆகிய சூராக்களை
ஓதுவார்கள். (அஹ்மத்: 2725,
2726)
நபி {ஸல்} தங்களுடைய கடைசி இமாமத்தில் ஓதிய சூரா..
عن عبد
الله بن الحارث قال: آخر صلاة صلاها رسول الله صلّى الله عليه وسلم المغرب. فقرأ
في الركعة الأولى بسبح اسم ربك الأعلى وفي الثانية بقل يا أيها الكافرون.
நபி {ஸல்} அவர்கள் கடைசியாக இமாமத் செய்தது மஃக்ரிப்
தொழுகையாகும். அதில் நபி {ஸல்} அவர்கள் ஸப்பிஹிஸ்ம ஸூராவையும், குல் யா அய்யுஹல் காஃபிரூன்
ஸூராவையும் ஓதினார்கள்.
நபி {ஸல்} வழமையாக ஓதும் சூரா…
كان يواظب الرسول على قراءتها كل ليلةٍ: “أنَّ النَّبيَّ -صلَّى
اللَّهُ عليهِ وسلَّمَ- كانَ لا يَنامُ حتَّى يقرأَ المسبِّحاتِ ويقولُ: فيها آيةٌ
خيرٌ من ألفِ آيةٍ”.
நபி {ஸல்} தினந்தோரும் ஸப்பிஹிஸ்ம சூராவை இரவில்
ஓதி வருவதை வழமையாக வைத்திருந்தார்கள். மேலும், ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா எனும் இந்த
ஆயத் குர்ஆனின் ஆயிரம் ஆயாத்களை விட சிறந்தது என்றும் கூறுவார்கள்.
அறிவுரையின் முக்கியத்துவம்…
பெருமானார் {ஸல்}
அவர்கள் வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் நபித்தோழர்களுக்கு உபதேசமும்,
அறிவுரையும் வழங்கி வந்துள்ளார்கள்.
தொழுகைக்குப்
பிறகு, மண்ணறையில் அடக்கம் செய்ய காத்திருக்கும் போது, அடக்கம் செய்த பின்பு,
திருமண நிகழ்வின் போது, யுத்தம் நடைபெறும் இடங்களில் என பல்வேறு சந்தர்ப்பங்களில்
தனி நபருக்கோ, இருவர் அல்லது மூவருக்கோ, ஒரு குழுவினருக்கோ, திரளான மக்களுக்கோ
அறிவுரைகள் வழங்கிய பல்வேறு நபிமொழிகள் ஹதீஸ் நூற்களில் காணக்கிடைக்கின்றது.
நபி {ஸல்} ஸஹாபிய
சமூகத்தை உபதேசங்களின் வார்ப்பிலும், அறிவுரைகளின் ஆளுமையாளுமே உருவாக்கினார்கள்.
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.(87:9)
இந்த வசனம் மூலம்
அல்லாஹ்,
அவன் இறக்கிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யுமாறும், அதனை வைத்து வஹியை ஏற்றுக்கொள்ளும் முஃமின்களுக்கு அறிவுரை செய்யுமாறு
பணிக்கின்றான். அதே நேரம் பிடிவாதம் பிடித்து, சத்தியத்தை தெரிந்து
கொண்டே மறுப்போருக்கு அறிவுரை செய்து பயனில்லை என்பதையும் இந்த வசனம்
சுட்டிக்காட்டுகின்றது.
அலி (ரலி) அவர்கள்
: ‘மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பொய்யர்களென கருதப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?’ என்று கூறுவார்களாம். (புஹாரி:127)
இப்னு மஸ்ஊத்
(ரலி) அவர்கள்: ‘ஒரு சமூகத்தின் புத்தி அடைந்துகொள்ளாத ஒரு செய்தியை அவர்களுக்கு சொல்வது, அவர்களில் சிலரை குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.’ என்று கூறுவார்களாம். (முஸ்லிம்,முன்னுரை)
‘எனவே, மனிதர்களை மூன்று சாராராக நோக்கலாம்; சத்தியத்தை
விளங்கி ஏற்றுக்கொள்பவர்கள், சத்தியமா,
அசத்தியமா என்ற குழப்பத்தில் இருப்பதோடு, ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்ற சந்தேகத்திற்கு இடமானவர்கள், தெரிந்துகொண்டே பிடிவாதத்திற்கு மறுப்பவர்கள். இவர்களில் மூன்றாவது சாராரைத் தவிர்த்து அடுத்தவர்கள் அறிவுரை செய்யப்பட
வேண்டியவர்களே.’
(அல்வாஉல் பயான்)
سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் உபதேசத்தை ஏற்பான். (87:10)
இந்த வசனம்
யாருக்கு உடனே அறிவுரை பயனளிக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது, இதில் முஃமிங்களுக்கு தனது ஈமானை நிரூபித்துக்கொள்ள சிறந்ததோர் வழி
இருக்கின்றது,
அதுதான், ‘குர்ஆன் நபி வழி போதனைகளை
கேட்கின்ற போது அதனை ஏற்கும் வீதம் எவ்வளவு, கணக்கெடுக்காமல்
மறுக்கும்,
புறக்கணிக்கும் வீதம் எவ்வளவு? என்று சிந்திப்பதாகும்., இதுவே எமது ஈமான், இறையச்சம் ஆகியவற்றை தீர்மானிக்கும்.
وَّذَكِّرْ
فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம்
முஃமின்களுக்கு நற்பயனளிக்கும். ( அல்குர்ஆன்: 51: 55 )
وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ
ஆனால்
துர்பாக்கியமுடையவனோ,
அதை விட்டு விலகிக் கொள்வான். (87:11)
இந்த வசனம் மூலம்
அறிவுரைகள் யாருக்கு பயனளிக்காது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது, அவர்களே பாக்கியத்தை இழந்தவர்கள். அதேநேரம் அறிவுரைகளை வேண்டுமென்றே
புறக்கணிப்பவர்கள் தங்களது இறையச்சத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
அபூ வாகித்
அல்லைஸீ (ரலி) அவர்கள்
கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள்
மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர்
சென்றுவிட்டார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள்.
அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில்
அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில்
உட்கார்ந்து)விட்டார். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். நபி (ஸல்) அவர்கள்
(கூட்டத்திலிருந்து) முடிந்ததும்,’அந்த மூன்று நபர்கள்
பற்றி சொல்லித்தரட்டுமா! அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார், அல்லாஹ்வும் அவரை சேர்த்துக்கொண்டான், அடுத்தவர் வெட்கப்பட்டார், அல்லாஹ்வும் அவர் விடயத்தில் வெட்கப்பட்டான், அடுத்தவர் புறக்கணித்து சென்றார், அல்லாஹ்வும் அவரை
புறக்கணித்தான்.’
என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰىۚ
அவன் தான் பெரும்
நெருப்பில் புகுவான். (87:12)
இப்படிப்பட்ட
இஸ்லாமிய அறிவுரைகளை புறக்கணிக்கும் மனிதர்கள் ஒதுங்குமிடம்
நரகம் என்பதும் அஞ்சவேண்டிய அம்சமாகும், அதனையே அல்லாஹ் இந்த
வசனத்தில் குறிப்பிடுகின்றான்,
எனவே யார்
துர்ப்பாக்கியம் அடைகின்றானோ அவன் நரகம் நுழைவதும் அதில் நிரந்தரமாக இருப்பதும்
உறுதியானதே. அல்லாஹ் கூறுகின்றான்:
فَاَمَّا الَّذِيْنَ شَقُوْا فَفِى النَّارِ لَهُمْ فِيْهَا زَفِيْرٌ
وَّشَهِيْقٌ
ۙ خٰلِدِيْنَ
فِيْهَا
துர்பாக்கிய
சாலிகள் (நரக) நெருப்பில் இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். ( அல்குர்ஆன்: 106,107 )
நபித்தோழர்களுக்கு அறிவுரை பலனளித்தது…
حدثنا
أبو اليمان: أخبرنا شعيب، عن الزُهري قال: حدثني عوف بن مالك بن الطفيل، هو ابن
الحارث، وهو ابن أخي عائشة زوج النبي ﷺ لأمها، أن عائشة حدثت:
أن عبد الله بن الزبير قال في بيع أو عطاء أعطته عائشة: والله لتنتهين عائشة أو لأحجرن عليها، فقالت: أهو قال هذا؟ قالوا: نعم، قالت: هو لله علي نذر، أن لا أكلم ابن الزبير أبداً. فاستشفع ابن الزبير إليها، حين طالت الهجرة، فقالت:لا والله لا أشفع فيه أبداً ولا أتحنث إلى نذري. فلما طال ذلك على ابن الزبير، كلم المسور بن مخرمة وعبد الرحمن بن الأسود بن عبد يغوث، وهما من بني زهرة، وقال لهما: أنشدكما بالله لما أدخلتماني على عائشة، فإنها لا يحل لها أن تنذر قطيعتي. فأقبل به المسور وعبد الرحمن مشتملين بأرديتهما، حتى استأذنا على عائشة، فقالا: السلام عليك ورحمة الله وبركاته أندخل؟ قالت عائشة: ادخلوا، قالوا: كلنا؟ قالت: نعم، ادخلوا كلكم، ولا تعلم أن معهما ابن الزبير، فلما دخلوا دخل ابن الزبير الحجاب، فاعتنق عائشة وطفق يناشدها ويبكي، وطفق المسور وعبد الرحمن يناشدانها إلا ما كلمته، وقبلت منه، ويقولان: إن النبي ﷺ نهى عما قد علمت من الهجرة، فإنه: (لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث ليال). فلما أكثروا على عائشة من التذكرة والتحريج، طفقت تذكرهما وتبكي وتقول: إني نذرت، والنذر شديد، فلم يزالا بها حتى كلمت ابن الزبير،وأعتقت في نذرها ذلك أربعين رقبة، وكانت تذكر نذرها بعد ذلك، فتبكي حتى تبل دموعها خمارها.
நபி {ஸல்}
அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின்
தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி
துஃபைல்(ரஹ்) கூறினார்.
ஆயிஷா (ரலி) (தம் வீடு ஒன்றை) `விற்றது தொடர்பாக` அல்லது `நன்கொடையாக வழங்கியது தொடர்பாக`
(அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்)
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) (அதிருப்தியடைந்து) `அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்)
கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்` என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம்
தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா (ரலி) (தம் வீடு ஒன்றை) `விற்றது தொடர்பாக` அல்லது `நன்கொடையாக வழங்கியது தொடர்பாக`
(அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்)
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) `அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்)
கைவிடவேண்டும். அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்` என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம்
தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா (ரலி), `அவரா இப்படிக்
கூறினார்?` என்று
கேட்டார்கள். மக்கள், `ஆம்` என்றனர். அப்போது ஆயிஷா (ரலி),
`இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும்
பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்` என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாள்கள் பேச்சு
வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு
(முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் (ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து
பேசியபோது) ஆயிஷா (ரலி), `முடியாது.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும்
ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்` என்று கூறிவிட்டார்கள்.
ஆயிஷா (ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட
நாள்களாம்விட்டபோது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ் (ரலி)
ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர் (ரலி), `அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன்.
என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள
சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!` என்று கூறினார்கள். எனவே, மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி)
அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி)
அவர்களிடம் சென்றார்கள்.
(அங்கு சென்ற) உடனே `அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு` என்று சலாம் சொல்லிவிட்டு, `நாங்கள் உள்ளே வரலாமா?`
என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா (ரலி),
`உள்ளே வாருங்கள்` என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள்
(மூவரும்) `நாங்கள் அனைவரும்
உள்ளே வரலாமா?` என்று கேட்டனர்.
ஆயிஷா (ரலி), `ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்` என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர் (ரலி)
இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.
அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர் (ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த)
திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத்
தொடங்கினார்கள். மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களும் (வெளியே
இருந்தபடி) இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத்
தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா (ரலி) அவர்களிடம்
வேண்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இருவரும், `ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல்
பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று` என்று நபி {ஸல்} அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்` என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடம் (உறவைப்
பேணுவதன் சிறப்பு குறித்து) அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப்
பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா (ரலி) அழலானார்கள்.
மேலும், `(நான்
அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும்
கடுமையானதாகும்` என்று (அவர்கள்
இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி)
இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா (ரலி)
(தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை
முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப்
பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள்
அழுவார்கள். ( நூல்: புகாரி )
எனவே, அறிவுரைகளும், உபதேசங்களும் இறைநம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும் என்ற
அடிப்படையில் தான் இது போன்ற பல சந்தர்ப்பங்களில் உபதேசங்களும், அறிவுரைகளும்
நிகழ்த்தப்படுகின்றது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உபதேசிக்கிற, உபதேசத்தைக் கேட்கிற நம் அனைவருக்கும்
இந்த உபதேசங்களின் மூலம் பயன் பெரும் நஸீபை வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment