கழற்றி விடுங்கள்! உங்கள் காலணியை..
{ فَاخْلَعْ
نَعْلَيْكَ}
சங்கை நிறைந்த
ரஜப் மாதத்தின் நிறைவுப் பகுதியை நாம் அடைந்திருக்கின்றோம்.
சற்றேறக்குறைய
இன்னும் ஒரு மாதத்தில் ரமழானை நாம் அடைவதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ரமழான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்று அவனுக்கு பொருத்தமான, அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய வகையில் நல்லறங்கள் செய்யும் நற்பேற்றினை நம்
அனைவருக்கும் வழங்கியருள்வானாக!
ரமழானுக்கு
பல்வேறு சிறப்பு பெயர்கள் இருக்கின்றன.
ரமழான் கரீம், ரமழான் முபாரக்,
ரமழான் தஹூர், ரமழான் அளீம் இப்படி
சிறப்பு பெயர்களின் வரிசையில் "ரமழான் முகத்தஸ்" பரிசுத்தமான, பரிசுத்தப்படுத்தும் மாதம் என்றொரு சிறப்பு பெயரும் உண்டு.
الاسلام
يرى ان القداسة في الاصل لله وحده، وان الاشياء والاماكن والأزمنة والأشخاص
والالفاظ تكتسب القداسة بارتباطها بالله، فالقرآن كتاب مقدس لانه كتاب الله والنبي
هو الإنسان الكامل المقدّس لانه رسول من الله. فلا قداسة بالأصل الا لله
அடிப்படையில்
அல்லாஹ் ஒருவன் மட்டுமே பரிசுத்தமானவன் என்று இஸ்லாம் சான்றுரைக்கிறது.
உலகில்
தூய்மையானவையாக,
பரிசுத்தமானதாக அறியப்படுகிற விஷயங்களாகட்டும், இடங்களாகட்டும்,
காலங்களாகட்டும், மனிதர்களாகட்டும்
பரிசுத்தமானவை என்று அழைக்கப்படுவதெல்லாம் அல்லாஹ்வோடு தொடர்பில் உள்ளவைகள் ஆகும்.
மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பரிசுத்தம் என்று அடையாளப்படுத்தியவைகள் ஆகும்.
அந்த வகையில்
குர்ஆனை பரிசுத்த வேதம் என்று இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், அது "கலாமுல்லாஹ்" ஆம் அது அல்லாஹ்வின் பேச்சாகும்.
நபிமார்கள்
என்பவர்கள் மனிதர்களில் குணங்களால் பூரணமானவர்களும், பரிசுத்தமானவர்களும் ஆவார்கள்.
ஏனெனில், அவர்கள் "ரஸூலுல்லாஹ்" அல்லாஹ்வின் தூதை சுமப்பவர்கள் ஆவார்கள்.
இதே போன்று தான்
கஅபாவும்,
ஏனெனில், அது
"கஅபதுல்லாஹ்" இப்படியாக பல்வேறு விஷயங்களை நாம் அல்குர்ஆனின் துணை
கொண்டு சான்று பகர முடியும். ஆக பரிசுத்தம், தூய்மை என்பது
அடிப்படையில் அல்லாஹ் எதை யாரை பரிசுத்தமாக ஆக்கி இருக்கின்றானோ அவைகள் அனைத்தும்
பரிசுத்தமானவையே!
அந்த வகையில்
ரமழான் மாதம் பரிசுத்தமான பரிசுத்தப்படுத்துகிற மாதமாகும்.
ஏனெனில், கலாமுல்லாஹ் - அல்லாஹ்வின் பேச்சான அல்குர்ஆன் இறங்கிய மாதமாகும்.
ரமழானின் மூலமாக
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்
அடியார்களை பாவங்களில் இருந்து மன்னிப்பின் வாயிலாக
தூய்மையாக்குகின்றான்.
நரகில் இருந்து
விடுதலை வழங்கி சுவனத்திற்கு தகுதியாக்கி பரிசுத்தமாக்குகின்றான்.
ஆகவே, ரமழான் மாதம் "பரிசுத்தமான, பரிசுத்தப்படுத்துகிற
தூய்மையான" மாதம் ஆகும்.
பரிசுத்தமானவைகளுடனான தொடர்பில் ஓர் இறைநம்பிக்கையாளர் எப்படி இருக்க வேண்டும்?
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் கலீமுல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட
நிகழ்வை கூறும் போது அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களுக்கு இட்ட
கட்டளை மிகவும் கவனத்திற்கு உரியதாகும்.
اِنِّىْۤ
اَنَا رَبُّكَ فَاخْلَعْ نَـعْلَيْكَ اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
“நிச்சயமாக நான் தான்
உம்முடைய இறைவன்;
நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர்
“துவா”
என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். ( அல்குர்ஆன்: 20:
12 )
அசுத்தங்களை
சுமக்கும் காலணிகளை கழற்றச் சொன்னான்.
இந்த
இறைவசனங்களின் ஊடாக அல்லாஹ் நமக்கு உணர்த்தும் பாடமும், படிப்பினையும் என்ன?
ஆம்! தூய்மையான, புனிதமான,
பரிசுத்தமான ஒன்றை நாம் அணுகும் முன்பாக நாம் முதலில்
நம்முடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளை நம்மை விட்டும் தூரமாக்க வேண்டும்.
தீய குணங்களில்
இருந்து தூரமாக வேண்டும். பாவ அழுக்குகளை விட்டும் விலக வேண்டும்.
கழிசடையான
எண்ணங்களில் இருந்து நாம் நம் சிந்தனைகளை தூய்மை படுத்த வேண்டும்.
இது தான்
புனிதமானவைகளோடு தொடர்பில் இருக்கும் ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையாகும்.
மாநபி (ஸல்) அவர்கள் புனிதமானவர்கள்!
படைப்புகளில்
மிகச்சிறந்த,
மனித குலத்தின், நபிமார்களின் தலைவரான
மாநபி (ஸல்) அவர்கள் உடனான தொடர்பில் நபித்தோழர்களும் இந்த உம்மத்தும் எப்படி
நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பின்வருமாறு
வழிகாட்டுகின்றான்.
1) உங்களில் ஒருவரை ஒருவர் அழைப்பது போன்று அழைக்கக்கூடாது!
لَا
تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا قَدْ
يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ
الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ
يُصِيْبَهُمْ عَذَابٌ
اَ لِيْمٌ
(முஃமின்களே!) உங்களில்
ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை
ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி
விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு
மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
( அல்குர்ஆன்: 24:
63 )
2) செயலால்,
சொல்லால் முந்தக்கூடாது!
يٰۤاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَيْنَ يَدَىِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ
اتَّقُوا اللّٰه اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ
முஃமின்களே!
அல்லாஹ்வுக்கும்,
அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள்
முந்தாதீர்கள்;
அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.
يٰۤاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ
وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ
اَعْمَالُكُمْ وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ
முஃமின்களே!
நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை
உயர்த்தாதீர்கள்;
மேலும், உங்களுக்குள் ஒருவர்
மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து
போசாதீர்கள்,
(இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள்
அமல்கள் அழிந்து போகும்.
اِنَّ
الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ
الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰى لَهُمْ مَّغْفِرَةٌ
وَّاَجْرٌ عَظِيْمٌ
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத்
தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச்
சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
اِنَّ
الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا
يَعْقِلُوْنَ
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே! ( அல்குர்ஆன்: 49: 1-4 )
يٰۤاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ
لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ
فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ
لِحَـدِيْث ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُم
وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا
فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ
وَقُلُوْبِهِنَّ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ
تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ
اللّٰهِ عَظِيْمًا
முஃமின்களே!
(உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில்
பிரவேசிக்காதீர்கள்;
ஆனால், நீங்கள்
அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர்
வெட்கப்படுவார்;
ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும்
அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை
செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய
மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.
اِنَّ
الَّذِيْنَ يُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِى الدُّنْيَا
وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِيْنًا
எவர்கள்
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும்,
அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி
இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 33: 53 & 57 )
கஅபா ஆலயம் புனிதமானவையாகும்!
1. ஈமான் இல்லாத எவரும்...
اَجَعَلْتُمْ
سِقَايَةَ الْحَـآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَـرَامِ كَمَنْ اٰمَنَ
بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَجَاهَدَ فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَوٗنَ
عِنْدَ اللّٰهِ وَ اللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَۘ
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத்
தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும்
அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை
அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். ( அல்குர்ஆன்: 9: 19 )
مَا
كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى
اَنْفُسِهِمْ بِالـكُفْرِ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ وَ فِى النَّارِ
هُمْ خٰلِدُوْنَ
“குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள்
என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள். ( அல்குர்ஆன்: 9: 17 )
يٰۤاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا
الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚ وَ اِنْ خِفْتُمْ عَيْلَةً
فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ ؕ اِنَّ اللّٰهَ
عَلِيْمٌ حَكِيْمٌ
ஈமான்
கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால்,
அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப்
பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் -
அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச்
செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 9: 28 )
இஹ்ராமும்,
ஹஜ்ஜும் புனிதமானது!
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآٮِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ
الْحَـرَامَ وَلَا الْهَدْىَ وَلَا الْقَلَٓاٮِٕدَ وَلَاۤ آٰمِّيْنَ الْبَيْتَ
الْحَـرَامَ يَبْـتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا وَاِذَا
حَلَلْتُمْ فَاصْطَادُوْا وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ
صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ اَنْ تَعْتَدُوْا وَتَعَاوَنُوْا عَلَى
الْبِرِّ وَالتَّقْوٰى وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ
وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
முஃமின்களே! (நீங்கள்
இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின
மார்க்க அடையாளங்களையும்,
சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய)
ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக்
களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர்
மீதுள்ள வெறுப்பானது,
நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்;
பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து
கொள்ளுங்கள்;
பாவத்திலும், பகைமையிலும் நீங்கள்
ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்
- நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். ( அல்குர்ஆன்: 5: 2 )
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَيَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَىْءٍ مِّنَ الصَّيْدِ تَنَالُـهٗۤ اَيْدِيْكُمْ وَ رِمَاحُكُمْ لِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّخَافُهٗ بِالْـغَيْبِ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰ لِكَ فَلَهٗ عَذَابٌ اَ لِيْمٌ
ஈமான்
கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக
அல்லாஹ் உங்களை சோதிப்பான்;
ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ்
அறி(விப்ப)தற்காகத்தான்;
இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை
தரும் வேதனையுண்டு. ( அல்குர்ஆன்: 5: 94 )
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ وَمَنْ
قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ
يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ
كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ
اَمْرِهٖ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ
وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ
ஈமான்
கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில்
வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர்
வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு,
ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான
ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய
இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய
குர்பானியாகும்;
அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக
அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம்
செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 5: 95 )
اَلْحَجُّ
اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا
فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ
اللّٰهُ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ
يٰٓاُولِى الْاَلْبَابِ
ஹஜ்ஜுக்குரிய
காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள்
பேசுதல்,
சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே!
எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
(
அல்குர்ஆன்: 2: 197 )
ஆக
புனிதமானவைகளின் புனிதம் கெடாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் நமக்கு
இருக்கிறது.
ஒரு படி மேலாக
அல்லாஹ் இப்படி வலியுறுத்துவான்.
وَمَنْ
يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
இதுதான் (இறைவன்
வகுத்ததாகும்,)
எவர் அல்லாஹ் புனிதமாக்கிய சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ
நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும். ( அல்குர்ஆன்: 22:
32 )
وَمَنْ
يُّعَظِّمْ حُرُمٰتِ اللّٰهِ فَهُوَ خَيْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖؕ
இதுவே
(முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ
அது அவருக்கு,
அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; ( அல்குர்ஆன்: 22:
30 )
அந்த
வகையில் ரமழானை எதிர் பார்த்து காத்திருக்கும் நாம் ரமழானை அடையும் முன்பாக நமது
நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரமழானின்
ஒவ்வொரு நொடிப்பொழுதுகளையும் பாக்கியமாக அமைத்திட இப்போதே திட்டங்களை வகுக்க வேண்டும்.
பொதுவாக
இஸ்லாம் பெரும்பாலும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் முன்பாக அசுத்தங்களில் இருந்து
தூய்மை படுத்திட தூண்டுகிறது.
இறைநம்பிக்கையின்
ஒரு அம்சமாக தூய்மையை இஸ்லாம் சொல்லியிருப்பது இஸ்லாம் தூய்மைக்கு எவ்வளவு
முக்கியத்துவம் தந்துள்ளது என்பதற்கு சான்றாகும். ஈமானின் பாதி, தூய்மை என்று நபிகளார் கூறியுள்ளது முஸ்லிம்களை தூய்மையின்
பிறப்பிடமாக வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளது.
الطُّهُورُ
شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، …
“தூய்மை இறைநம்பிக்கையில்
பாதியாகும். அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும்
தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்" ( நூல்: முஸ்லிம்-381 )
தொழுகையும்,
தர்மமும்...
ஒருவர் ஐவேளைத்
தொழும் போது முகம்,
கை,
கால், தலை மற்றும் வாய், மூக்கு ஆகியவற்றை தூய்மை செய்கிறார். இவ்வாறு செய்த பின்னரே தொழ வேண்டும்
என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஆகுமான வழியில் திரட்டப்பட்ட பொருளாதாரத்தில் இருந்தே தர்மம் செய்ய வேண்டும்
என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
لَا
تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ
“அங்கத் தூய்மை (உளூ)
செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால்
செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (
நூல் : முஸ்லிம் )
தொழுகைக்கு முன்பாக அசுத்தங்களை நீக்குவதன் பயன் என்ன?
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்
குச் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும்
லாஹிகூன்’
(அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது
இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து
சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, “நம் சகோதரர்களை
(இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம்
சகோதரர்கள்”
என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து
கொள்வீர்கள்,
அல்லாஹ்வின் தூதரே?” என்று
கேட்டார்கள்.
அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை
கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே
இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ள மாட்டாரா, கூறுங்கள்”
என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும்
நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது)
தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன்.
அறிந்து
கொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம்
துரத்தப்படுவதைப் போன்று,
சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை
நான் “வாருங்கள்’
என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள்” என்று சொல்லப்படும். அப்போது நான் “(இவர்களை) இறைவன் தன்
கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக; அப்புறப்படுத்துவானாக!” என்று கூறுவேன். ( நூல் : முஸ்லிம் )
எனவே தான் ரஜபு மாதத்தின்
துவக்கத்தில் இருந்து "அல்லாஹ்வே! ரஜப் மாதத்திலும், ஷஅபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! ரமழான் மாதத்தை அடையும்
பாக்கியத்தை எங்களுக்கு வழங்கியருள்வாயாக!" என்று துஆ கேட்குமாறு மாநபி ஸல்
அவர்கள் இந்த உம்மத்தை கேட்டுக் கொண்டார்கள்.
ரஜபிலும், ஷஅபானிலும் பரக்கத் செய்! என்றால் அமல்களில் பரக்கத், கால நேரங்களில் பரக்கத், துஆ கேட்பதில் பரக்கத், தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுவதற்கான பரக்கத், நஃபிலான நோன்பு நோற்க பரக்கத், தான தர்மங்கள் செய்வதில்
பரக்கத்,
குர்ஆன் ஓதுவதில் பரக்கத் இப்படியாக இரண்டு மாதங்களிலும்
அமல்கள் செய்வதற்கு அல்லாஹ்விடம் பரக்கத் கேட்டு துஆச் செய்ய வேண்டும். அத்தோடு
அமல்கள் செய்வதில் ஆர்வமும், ஈடுபாடும் காட்ட
வேண்டும்.
ரஜபை தவற விட்டோம் என்றால் ஷஅபானில் ஆவல் கொள்வோம்..
قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان
شهري ورمضان شهر أمتي…….)).
‘ரஜப் அல்லாஹ்வின் மாதம்,
ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின்
மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
قال النبي صلي الله عليه وسلم “شعبان شهري ورمضان شهر
أمتي..
(نزهة المجالس 1/194)
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: ஷஃபான் என்னுடைய மாதம்,ரமழான் என்னுடைய
சமூகத்தின் மாதம் ஆகும். (
நூல்: நுஜ்ஹதுல் மஜாலிஸ் 1/194 ).
قالت
عائشة رضي الله عنها “كان أحب الشهور الي النبي صلي الله عليه وسلم شعبان
(نزهة المجالس 1/194)
அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு,
மாதங்களில் மிகப் பிரியமானது ஷஃபான் . ( நூல்:நுஜ்ஹதுல் மஜாலிஸ் 1/194).
سأل أسامة بن زيد حِبُّ النبي صلى الله عليه
وسلم وابن حِبه؛ فقال: ((يا رسول الله، لم أرَكَ تصوم شهرًا من الشهور ما
تصوم من شعبان؟ قال صلى الله عليه وسلم: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان،
وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم)
உஸாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:-
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய
மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன்.
அதற்கவர்கள்,
அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும்
மாதமாகும்.
இம்மாதம் பற்றி மக்கள் கவனகுறைவாக இருக்கின்றார்கள்.
இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன.
இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக்
காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.” (அபுதாவூத்,
நஸஈ,
ஸஹீஹ் இப்னு ஹுஸைமா) இதனை அல்பானி “ஹசன்”
என்று கூறுகின்றார்கள்
நபித்தோழர்களின்
ஆர்வம் குறித்து அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
وكذلك كانوا يستعدون بقراءة القرآن فيقول أنس بن مالك
صاحب رسول الله- صلى الله عليه وآله وسلم-: "كان المسلمون إذا دخل شعبان
انكبُّوا على المصاحف فقرءوها، وأخرجوا زكاة أموالهم تقويةً للضعيف والمسكين على
صيام رمضان
“ஷஃபான் மாதத்தின் பிறை தென்பட்டதும் நபித்தோழர்கள் குர்ஆன் ஓதுவதில் மும்முரமாகி விடுவார்கள், தங்கள் பொருட்களுக்கான
ஸகாத்தை வெளியாக்கி,
ஏழை எளியவர்களான முஸ்லிம்கள் ரமழான் மாதத்தின் நோன்புக்கான
ஆயத்தம் செய்வதற்காக வழங்கி விடுவார்கள், அதிகாரிகள் கைதிகளை
வரவழைத்து யாருக்கு மார்க்க தண்டனை அளிக்க வேண்டுமோ அவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு, மீதமிருப்போரில் எவர்கள் விடுதலைக்கு தகுதியானவர்களோ அவர்களை விடுதலை செய்து
விடுவார்கள்,
வியாபாரிகள் தங்கள் கடன்களை அடைத்து விடுவதோடு, மற்றவர்களிடமிருந்து தனது கடன்களை வசூலித்துக் கொள்வார்கள். (இவ்வாறு
முபாரக்கான ரமழான் மாதம் வருவதற்கு முன்னரே தன்னை ஓய்வாக்கிக்கொள்வார்கள்) மேலும்
ரமழான் மாதத்தின் பிறை தென்பட்டதும் குளித்து (ஒருசிலர்) இஃதிகாபில் அமர்ந்து
விடுவார்கள்.”
( நூல்: குன்யதுத் தாலிபீன் )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ரமழானுக்கு
முன்பாக நன்மைகளின் பால், நல்லறங்களின் பால் ஆர்வமுள்ளவர்களாக ஆசை கொண்டவர்களாக ஆக்கியருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment