அருள் மறைச் சாரல்:- தராவீஹ் சிந்தனை:- 1.
கேள்வி கேட்பதன் அவசியமும்… ஒழுங்குகளும்…
அல்ஹம்துலில்லாஹ்!
பாக்கியம் நிறைந்த ரமழானை அடைந்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த ரமழானை பூரணமான உடல் நலத்தோடும், மன நிறைவோடும்
இன்பத்தோடும் அடைவதற்கு அருள் புரிவானாக!
ரமழானில் பூரணமாக
நோன்பு நோற்பதற்கும்,
வணக்க வழிபாடுகளை ஆர்வத்தோடு நிறை வேற்றுவதற்கும், தானதர்மங்களை ஆசையோடு வழங்கி மகிழ்வதற்கும், தீமைகள்,
பாவங்கள் ஆகியவற்றிலிருந்து முழுமையாக விலகி வாழ்வதற்கும்
அருள் புரிவானாக!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால் முதல் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, முதல் நோன்பை நோற்கும் தேட்டத்தில் நாம் அமர்ந்திருக்கும் இந்த அழகான
தருணத்தில் இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட பல்வேறு வசனங்களில் இருந்து ஒரு
வசனத்தின் பொருளையும்,
விளக்கத்தையும், அதன் மூலம் நமக்கு
கிடைக்கின்ற படிப்பினைகளையும் பேசவும் கேட்கவும் இன்ஷா அல்லாஹ்.... எதிர்
காலத்தில் எடுத்து நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் பரக்கத்தான ரமழானை பாக்கியமாக கழித்திடும் நற்பேற்றை தந்தருள்வானாக! ஆமீன்!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
இன்று ஓதப்பட்ட
அல்பகரா அத்தியாயத்தின் 108
- வது வசனத்தில்
மூஸா (அலை)
அவர்களிடம் அவர்களின் சமூகத்தார் கேள்வி கேட்டது போன்று உங்களது தூதரான முஹம்மது
நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்காதீர்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆணை
பிறப்பிக்கின்றான்.
اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْـَٔـلُوْا
رَسُوْلَـكُمْ كَمَا سُٮِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُؕ وَمَنْ يَّتَبَدَّلِ الْکُفْرَ
بِالْاِيْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ
இதற்கு முன்
மூஸாவிடம் (கேள்வி) கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் (கேள்வி) கேட்க
விரும்புகிறீர்களா?
நம்பிக்கையை (இறை) மறுப்பாக மாற்றுபவர் நேர்வழியை விட்டு
விலகி விட்டார். ( அல்குர்ஆன்: 2: 108 )
இஸ்லாம்
அறிவுப்பூர்வமான அற்புதமான ஓர் மார்க்கம். ஏன்? எதற்கு? எப்படி?
என்ன? எவ்வாறு? என்று கேள்வி கேட்டு சிந்தித்து தெளிவு பெறுவதை ஊக்குவிக்கும் அழகான
மார்க்கம்.
மேற்கூறிய இறை
வசனத்தின் ஊடாக மார்க்கம் தொடர்பான எந்தக் கேள்வியும் கேட்கவே கூடாது எனும்
முடிவுக்கு ஒரு இறை நம்பிக்கையாளன் வந்து விடக்கூடாது.
ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மேன்மக்களான நபிமார்கள் கேள்வி கேட்டு
பதிலளித்துள்ளான். அவனால் புனிதப்படுத்தப்பட்ட மர்யம் (அலை) அவர்களின் கேள்விக்கு
பதிலளித்துள்ளான். மேலான வானவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளான் என்கிற
செய்திகளெல்லாம் அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உஸைர் (அலை)
அவர்கள் கேட்ட கேள்வியும்,
அல்லாஹ்வின் பதிலும்...
اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ
وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ
مَوْتِهَا فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ قَالَ كَمْ لَبِثْتَؕ
قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ
فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ وَانْظُرْ اِلٰى
حِمَارِك وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ
نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا فَلَمَّا تَبَيَّنَ لَهٗ قَالَ اَعْلَمُ
اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
மேலும், ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்)
உச்சிகளெல்லாம் (இடிந்து,
விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம்
(இந்நிலையில்) இருந்தீர்?”
என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்;
“இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ
பாரும் உம்முடைய உணவையும்,
உம்முடைய பானத்தையும்; (கெட்டுப்
போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர்
அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல்
சதையைப் போர்த்துகிறோம்”
எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்)
அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ்
எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 2: 259 )
இப்ராஹீம் (அலை) கேட்ட கேள்வியும், அல்லாஹ் கூறிய பதிலும்...
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ
اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى قَالَ اَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلٰى
وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ
فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ
ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக்
காண்பிப்பாயாக!”
எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு
கேட்கிறேன்)”
என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம்
திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து)
அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின்,
அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப்
பறந்து) வரும்;
நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்)
கூறினான்.. ( அல்குர்ஆன்: 2:
260 )
மர்யம் (அலை) அவர்களின் கேள்வியும், வானவர் மூலம் அல்லாஹ் கூறிய பதிலும்..
قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ
رَبِّكِ لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا
“நிச்சயமாக நான் உம்முடைய
இறைவனின் தூதன்;
பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
قَالَتْ
اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا
அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக
இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
قَالَ كَذٰلِكِ ۚ قَالَ رَبُّكِ هُوَ
عَلَىَّ هَيِّنٌ ۚ وَلِنَجْعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ
وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا
“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர்
அத்தாட்சியாகவும்,
நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன்
கூறுகிறான்”
எனக் கூறினார். ( அல்குர்ஆன்: 19: 19-21 )
மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மார்க்கம் தொடர்பான விவகாரங்களில் கேள்வி கேட்டு
தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு தூண்டுகிறான்.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ
اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ فَسْـــَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ
كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ
بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِؕ
وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ
وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
(முஹம்மதே!) உமக்கு முன்
ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். (மக்களே!) நீங்கள்
அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
மக்களுக்கு
அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். ( அல்குர்ஆன்: 16:
43,44 )
وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا
رِجَالًا نُوحِي إِلَيْهِمْ ۖ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا
تَعْلَمُونَ
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம்.
(மக்களே!) நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (அல்குர்ஆன்: 21: 7 )
ஏகத்துவத்தை
மறுத்து தவறான வாதங்களை முன்வைத்து இறைத்தூதர் அவர்களிடம் கேட்கப்பட்ட பல்வேறு
கேள்விகளுக்கு அல்லாஹ் இறைவசனங்களை இறக்கியருளி பதில் தந்ததை அல்குர்ஆனின் பல்வேறு
வசனங்கள் ஊடாக நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.
قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي
يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ۚ ذَٰلِكَ رَبُّ الْعَالَمِينَ
وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا
وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ
பூமியை இரண்டு
நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு
நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்” என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில்
பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச்
சரியான விடை இதுவே. ( அல்குர்ஆன்: 49: 9,10 )
سَاَلَ سَآٮِٕلٌ ۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ
لِّلْكٰفِرِيْنَ لَيْسَ لَهٗ دَافِعٌ ۙ
مِّنَ اللّٰهِ ذِى الْمَعَارِجِؕ
தகுதிகள் உடைய
அல்லாஹ்விடமிருந்து (ஏக இறைவனை) மறுப்போருக்கு நிகழக் கூடிய வேதனை குறித்துக்
கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவன் யாருமில்லை. ( அல்குர்ஆன்: 70; 1-3 )
மேலும், இதே போன்று இறைநம்பிக்கை கொண்ட பிறகு நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட
பல்வேறு சந்தேகங்களை கேள்வி கேட்டு அதற்கு அருள் மறை வசனங்கள் மூலம் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் தெளிவு படுத்தியதையும் அல்குர்ஆனில் காண முடிகிறது.
அல்பகரா
அத்தியாயத்தின் 187,
215, 217, 219, 220, 222 மற்றும் அல் அன்ஃபால்
வசனம் 1.மாயிதா வசனம் 4
ஆகிய வசனங்கள் ஆகும்.
இந்த இறைவசனங்களை
அல்லாஹ் குறிப்பிடும் போதே "யஸ்அலூனக்க! நபியே! உம்மிடம் அவர்கள் இவ்வாறு
கேள்வி கேட்கின்றனர்" என்று குறிப்பிடுகின்றான்.
மேலும், இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை குறிப்பிடாமல் அந்த
கேள்விகளுக்கு அளித்த பதிலை "குல் - நபியே! அவர்களிடம் கூறிவிடுவீராக!"
என்று குறிப்பிடுகின்றான்.
إن فعل الأمر "قل" من أكثر الكلمات ورودًا في القرآن
الكريم؛ حيث وردت 332 مرة، وهي رسالة مباشرة من الله سبحانه وتعالى يجب تبليغ ما
بعدها إلى كل البشر، وعلى كل من يؤمن بالله ورسوله تبليغ هذا الأمر.
பதில் கூறும்
முகமாக அமைந்த இந்த வார்த்தை 332 இடங்களில் அல்குர்ஆனில்
இடம் பெற்றுள்ளது.
ஆக கேள்வி கேட்பது, அதற்கு பதிலை,
தெளிவைப் பெறுவது, பதிலை, தெளிவை அளிப்பது இஸ்லாம் வழங்கியிருக்கிற மகத்தான அனுமதியும் அருட்கொடையும்
ஆகும்.
எனினும்
அல்குர்ஆனில் இரண்டு வகையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேள்வி கேட்பதற்கு தடை
விதித்துள்ளான்.
ஒன்று:-
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـــَٔلُوْا عَنْ
اَشْيَآءَ اِنْ تُبْدَ لَـكُمْ تَسُؤْكُمْۚ وَاِنْ تَسْــَٔـلُوْا عَنْهَا حِيْنَ
يُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَـكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا ؕ وَاللّٰهُ
غَفُوْرٌ حَلِيْمٌ
قَدْ سَاَ لَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا
كٰفِرِيْنَ
நம்பிக்கை
கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு
வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில்
அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன். உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் இவ்வாறு கேள்வி
கேட்டனர். பின்னர் அவர்கள்,
அவற்றை மறுப்போராக ஆகி விட்டனர். (அல்குர்ஆன்: 5:101,102)
عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ
كَانَ قَوْمٌ يَسْأَلُونَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم
اسْتِهْزَاءً فَيَقُولُ الرَّجُلُ مَنْ أَبِي وَيَقُولُ الرَّجُلُ تَضِلُّ
نَاقَتُهُ أَيْنَ نَاقَتِي فَأَنْزَلَ اللَّهُ فِيهِمْ هَذِهِ الآيَةَ {يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ
تَسُؤْكُمْ} حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ كُلِّهَا.
சிலர் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர்
நபி (ஸல்) அவர்களிடம்,
“என் தந்தை யார்?” என்று கேட்டார்.
தமது ஒட்டகம் காணாமற்போய் விட்ட இன்னொருவர் “என் ஒட்டகம் எங்கே?” என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த
வசனத்தை அருளினான்:
இறைநம்பிக்கை
கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை
ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி
நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும்.
நீங்கள் (இதுவரை
விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு
வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். அறிவிப்பாளர்: இப்னு
அப்பாஸ் (ரலி) ( நூல்: புகாரி )
இன்னொன்று இன்று
ஓதப்பட்ட 108
-வது இறை வசனம் ஆகும்.
நபி (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும்... நபி (ஸல்) அவர்கள் கூறிய பதில்களும்...
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு தெரியாத, சந்தேகத்திற்குரிய
அனைத்து விஷயங்களைக் குறித்தும் நபித்தோழர்கள் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
படைத்தவன் – படைப்பினங்கள்,
தனி மனித ஒழுங்கு – சமூக ஒழுக்கம்,
ஆண்கள் – பெண்கள்,
இம்மை – மறுமை, நம்பிக்கையாளர்கள் –
மறுப்பாளர்கள், நேர்வழி – வழிகேடு,
நன்மை – தீமை,
சுவனம் - நரகம் என்று எல்லா விதமான அம்சங்களிலும் கேள்விகள்
கேட்டு மார்க்கத்தைத் தெளிவு படுத்திக் கொண்டார்கள்.
இப்படி எதையும்
சீர்தூக்கி ஆராய்ந்து,
கேள்வி கேட்டு தெளிந்து பின்பற்றுவது தான்
நம்மை நேர்வழிக்கு அழைத்துச் செல்வதோடு. தீய காரியங்களை
விட்டு விலகுவதற்கும் வழிகாட்டும்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ
بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه
وسلم فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى
السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُحَدِّثُ فَقَالَ بَعْضُ
الْقَوْمِ سَمِعَ مَا قَالَ فَكَرِهَ مَا قَالَ وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ
يَسْمَعْ حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ أَيْنَ – أُرَاهُ – السَّائِلُ ،
عَنِ السَّاعَةِ قَالَ هَا أَنَا يَا رَسُولَ اللهِ قَالَ فَإِذَا ضُيِّعَتِ
الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ إِذَا
وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ.
ஓர் சபையில் நபி
(ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிக்கொண்டிருக்கும் போது
அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, “மறுமை நாள்
எப்போது?”
எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலளிக்காமல்)
தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை’ என்று கூறினர். மற்ற சிலர், “நபியவர்கள் அந்த மனிதர்
கூறியதைச் செவியுறவில்லை’
என்றனர்.
நபி (ஸல்) அவர்கள்
தமது பேச்சை முடித்துவிட்டு, “மறுமை நாளைப் பற்றி
(என்னிடம் கேள்வி) கேட்டவர் எங்கே?” என்று
கேட்டார்கள். உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்’ என்றார். நபி (ஸல்)
அவர்கள்,
“அமானிதம் (அடைக்கலம்) பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை
எதிர்பாரும்!”
என்று சொன்னார்கள். அதற்கவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
அதிகாரங்கள் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை
நாளை எதிர்பாரும்!”
என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),, ( நூல்: புகாரி )
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ
الْعَاصِ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه
وسلم وَقَفَ فِي حَجَّةِ الْوَدَاعِ بِمِنًى لِلنَّاسِ يَسْأَلُونَهُ فَجَاءَهُ
رَجُلٌ فَقَالَ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ فَقَالَ اذْبَحْ ،
وَلاَ حَرَجَ فَجَاءَ آخَرُ فَقَالَ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ
أَرْمِيَ قَالَ ارْمِ ، وَلاَ حَرَجَ فَمَا سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم
عَنْ شَيْءٍ قُدِّمَ ، وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ ، وَلاَ حَرَجَ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது
மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் கேள்விகள்
கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் (சட்டம்)
தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்னால் என் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“பரவாயில்லை; இப்போது
குர்பானி கொடுத்துக் கொள்வீராக!”
என்றார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم
سُئِلَ فِي حَجَّتِهِ فَقَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَأَوْمَأَ بِيَدِهِ
قَالَ ، وَلاَ حَرَجَ قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ فَأَوْمَأَ بِيَدِهِ ،
وَلاَ حَرَجَ.
மற்றொருவர் வந்து “நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பரவாயில்லை;
இப்போது கல் எறிந்து கொள்வீராக!” என்றார்கள். (அன்றைய தினம்) (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள்
முற்படுத்திச் செய்யப்பட்டு விட்டதாகவும் (முற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில
கிரியைகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்ட போதெல்லாம் “பரவாயில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்!’ என்றே சொன்னார்கள். அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),, ( நூல்: புகாரி )
عَنْ
أَبِي هُرَيْرَةَ: أَنَّ أَعْرَابِيًّا أَتَى رَسُولَ اللهِ صلى الله عليه وسلم
فَقَالَ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ وَإِنِّي أَنْكَرْتُهُ
فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هَلْ لَكَ مِنْ إِبِلٍ قَالَ
نَعَمْ قَالَ فَمَا أَلْوَانُهَا قَالَ حُمْرٌ قَالَ هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ
قَالَ إِنَّ فِيهَا لَوُرْقًا قَالَ فَأَنَّى تُرَى ذَلِكَ جَاءَهَا قَالَ يَا
رَسُولَ اللهِ عِرْقٌ نَزَعَهَا قَالَ وَلَعَلَّ هَذَا عِرْقٌ نَزَعَهُ وَلَمْ
يُرَخِّصْ لَهُ فِي الاِنْتِفَاءِ مِنْهُ.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “(வெள்ளை நிறத்தவனான
எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்” என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?” என்று கேட்டார்கள்.
அந்தக் கிராமவாசி,
“ஆம்”
என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள்
“அவற்றின் நிறம் என்ன?”
என்று கேட்டார்கள். அவர், “சிவப்பு”
என்று சொன்னார். “அவற்றில் சாம்பல் நிற
ஒட்டகங்களும் உள்ளனவா?”
என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் “(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன” என்று பதிலளித்தார்.
“(தாயிடம் இல்லாத) அந்த
(சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?” என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, “ஆண் ஒட்டகத்தின்
பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் “(உன்னுடைய) இந்த மகனும்
உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக் கூடும்” என்று கூறி,
அவன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை
நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. அறிவிப்பாளர்: அபூஹுரைரா
(ரலி), நூல்: ( புகாரி )
நபி (ஸல்)
அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில்
ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத(ன்
முன்னங்காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் “உங்களில் முஹம்மது அவர்கள் யார்?’ என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். “இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம்’ என்று நாங்கள் சொன்னோம்.
உடனே அம்மனிதர்
நபி (ஸல்) அவர்களை “அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!’ என்றழைத்தார். அதற்கு
நபியவர்கள் “என்ன விஷயம்?”
என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்
“நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும்
நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உம் மனதில் பட்டதைக்
கேளும்!”
என்றார்கள்.
உடனே அம்மனிதர் “உம்முடைய,
உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!”
என்றார்கள். அடுத்து அவர் “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகளைத் தொழுது
வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம்,
அல்லாஹ் சாட்சியாக” என்றார்கள்.
அவர் “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க
வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்,
அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள்.
அவர், “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள்
செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு
உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
“ஆம்,
அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு)
அம்மனிதர் “நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்” என்று கூறிவிட்டு “நான்,
எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின்
தூதுவனாவேன்;
நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம்
பின் ஸஅலபா”
என்றும் கூறினார். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), ( நூல் : புகாரி )
இப்படிக் கேள்வி
கேட்க கூடாது:-
عَنْ
أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
دَعُونِي
مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ
وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ
فَاجْتَنِبُوهُ ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ.
“எதை நான்
தெளிவுபடுத்தாமல் விட்டு விட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டு விடுங்கள்.
உங்களுக்கு முன் சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகம் கேள்வி கேட்டதாலும், நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலும்தான் அழிந்து போயினர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ( நூல்: புகாரி)
عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي
وَقَّاصٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
إِنَّ
أَعْظَمَ الْمُسْلِمِينَ جُرْمًا مَنْ سَأَلَ عَنْ شَيْءٍ لَمْ يُحَرَّمْ
فَحُرِّمَ مِنْ أَجْلِ مَسْأَلَتِهِ.
“தடை செய்யப்படாத ஒன்றைப்
பற்றி ஒருவர் கேள்வி கேட்டு அக்கேள்வியின் காரணமாக அது தடை செய்யப்பட்டது என்றால்
அந்த மனிதர்தான் முஸ்லிம்களிலேயே மிகப் பெரிய குற்றவாளி” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி-7289 )
أَنَسَ
بْنَ مَالِكٍ يَقُولُ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
لَنْ يَبْرَحَ النَّاسُ
يَتَسَاءَلُونَ حَتَّى يَقُولُوا هَذَا اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ فَمَنْ
خَلَقَ اللَّهَ
மக்கள் (பல
புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இறுதியில்,
“அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்றுகூடக் கேட்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி), ( நூல்: புகாரி )
عَنِ
الشَّعْبِيِّ عَنْ وَرَّادٍ كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ مُعَاوِيَةَ
كَتَبَ إِلَى الْمُغِيرَةِ
أَنِ اكْتُبْ إِلَيَّ بِحَدِيثٍ
سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ : فَكَتَبَ إِلَيْهِ
الْمُغِيرَةُ أَنِّي سَمِعْتُهُ يَقُولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلاَةِ لاَ
إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ
وَهْوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ثَلاَثَ مَرَّاتٍ قَالَ : وَكَانَ يَنْهَى عَنْ
قِيلَ وَقَالَ وَكَثْرَةِ السُّؤَالِ وَإِضَاعَةِ الْمَالِ وَمَنْعٍ وَهَاتِ
وَعُقُوقِ الأُمَّهَاتِ وَوَأْدِ الْبَنَاتِ.
முஃகீரா பின்
ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி)
அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள்.
அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற ஹதீஸ் ஒன்றை
எனக்கு எழுதியனுப்புங்கள்”
என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா (ரலி)
அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்:
நபி (ஸல்) அவர்கள்
தொழுது முடித்தவுடன்,
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன்
தனித்தவன்;
அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே
உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்” என்று கூறுவார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள்,
(இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர்
சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப்)
பேசுவது,
அதிகமாகக் (கேள்வி அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது,
(அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப்
புண்படுத்துவது,
பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை
விதித்து வந்தார்கள். ( நூல்: புகாரி )
عَنْ
أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
دَعُونِي
مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ
وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ
فَاجْتَنِبُوهُ ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا
اسْتَطَعْتُمْ.
“எதை நான் தெளிவுபடுத்தாமல் விட்டு விட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டு
விடுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகம் கேள்வி
கேட்டதாலும்,
நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலும்தான் அழிந்து
போயினர்”
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ( நூல்: புகாரி )
عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي
وَقَّاصٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ
أَعْظَمَ الْمُسْلِمِينَ جُرْمًا مَنْ سَأَلَ عَنْ شَيْءٍ لَمْ يُحَرَّمْ
فَحُرِّمَ مِنْ أَجْلِ مَسْأَلَتِهِ.
“தடை செய்யப்படாத ஒன்றைப்
பற்றி ஒருவர் கேள்வி கேட்டு அக்கேள்வியின் காரணமாக அது தடை செய்யப்பட்டது என்றால்
அந்த மனிதர்தான் முஸ்லிம்களிலேயே மிகப் பெரிய குற்றவாளி” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ( நூல்: புகாரி )
மூஸா
(அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன? :
மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது
போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று (அல்குர்ஆன்: 2:108) வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
1. وكقولهم: ﴿ لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى
نَرَى اللَّهَ جَهْرَةً ﴾ [البقرة: 55]،
2. وكقولهم:
﴿ اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا
لَهُمْ آلِهَةٌ ﴾ [الأعراف: 138].
.3,4.وكسؤال بني إسرائيل لموسى ﷺ عن
البقرة لما قال لهم موسى: إِنَّ اللّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُواْ
بَقَرَةًَ [سورة البقرة:67] فتعنتوا في السؤال فشدد الله عليهم، فهذا كله
مذموم ولا ينبغي للإنسان أن يتشاغل به.
மூஸா நபியிடம்
அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதற்கு திருக்குர்ஆனின் விரிவுரையாளர்கள்
நான்கு விஷயங்களை அவர்கள் மூஸா நபியிடம் கேட்டுள்ளனர் என்பதை அறியத் தருகின்றனர்.
அந்த நான்கு
விஷயங்களையுமே இவ்வசனம் குறிக்கும் என்று புரிந்து கொள்வது தான் முழுமையான
விளக்கமாக அமையும்.
அந்த நான்கு விஷயங்கள்
1. மூஸா
நபியவர்களையும் அவர்களது சமுதாயத்தையும் கடலில் மூழ்காமல் இறைவன் காப்பாற்றிக் கரை
சேர்த்தான். இதன் பின்னர் சிலைகளை வழிபடும் ஒரு கூட்டத்தினரை மூஸாவின் சமுதாயத்தினர்
கடந்து செல்லும் போது.
ؕ قَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّـنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ
اٰلِهَةٌ
“மூஸாவே! இவர்களுக்குப் பல
கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக” என்று கேட்டனர்.
( அல்குர்ஆன்: 7: 138 )
عن سنان بن أبي سنان عن أبي واقد الليثي
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ
لَهَا: ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ، فَقَالُوا: يَا
رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ،
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سُبْحَانَ اللَّهِ هَذَا
كَمَا قَالَ قَوْمُ مُوسَى {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ}
[الأعراف: 138] وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ
قَبْلَكُمْ
நபி (ஸல்) அவர்கள்
ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணை கற்பிக்கும் மக்களுக்கு உரியது. “தாத்து அன்வாத்’
என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணை கற்பிப்பவர்கள் தமது
ஆயுதங்களைத் தொங்கவிடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு “தாத்து அன்வாத்’ எனும் புனித மரம் இருப்பது போல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை
ஏற்படுத்துங்கள்”
என்று கேட்டனர்.
அப்போது நபி (ஸல்)
அவர்கள்,
“அல்லாஹ் தூயவன். “அவர்களுக்குப் பல
கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக’ என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும்
அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
2. மூஸா நபியின்
சமுதாயத்தினர் இறைவனின் ஆற்றலையும், வல்லமையையும் கண்கூடாகக்
கண்ட பின்னர்..
فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ
الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ
“அல்லாஹ்வை எங்கள்
கண்முன்னே காட்டுவீராக!”
என்று மூஸாவிடம் கேட்டார்கள். உடனே பெரும் சப்தம் ஏற்பட்டு
மூர்ச்சையானார்கள்.
(அல்குர்ஆன்: 4:153)
3. இறைவன் எந்தச்
சட்டத்தைப் போடுவதாக இருந்தாலும் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சட்டம்
இயற்றுவான் என்று நம்ப வேண்டும். அதில் குடைந்து, குடைந்து கேள்வி கேட்டால் அது நமக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற கேள்விகளையும் மூஸா நபியின் சமுதாயத்தினர், மூஸா (அலை) அவர்களிடம் கேட்டுள்ளனர். மூஸா (அலை) அவர்களின் காலத்தில் ஒருவர்
கொல்லப்பட்டார். கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியால்
இறந்தவர் மீது அடியுங்கள்;
இறந்தவர் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை அடையாளம்
காட்டுவார் என்று இறைவன் கட்டளையிட்டான்.
ஒரு மாட்டை அறுங்கள் என்று அல்லாஹ் கூறியவுடன் ஏதாவது ஒரு
மாட்டை அவர்கள் அறுத்திருக்கலாம். எத்தகைய மாட்டை அவர்கள் அறுத்திருந்தாலும் இறைக்
கட்டளையைச் செயல்படுத்தியவர்களாக ஆகியிருப்பார்கள். ஆனால், மாட்டின் வயது என்ன?
நிறம் என்ன? தன்மை என்ன என்று
தேவையற்ற பல கேள்விகளைக் கேட்டு தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
4.வஹீ அருளப்படும்
காலகட்டத்தில் இறைத்தூதரிடம் கூடுதல் விளக்கம் கேட்கக் கூடாது என்ற கருத்தையும்
இவ்வசனம் உள்ளடக்கி நிற்கின்றது.
(அல்குர்ஆன்: 2:67 ) வசனங்களில் இது விரிவாக கூறப்படுகின்றது.
மூஸா (அலை) அவர்களிடம் இஸ்ரவேலர்கள் கேட்டது போல் நபி (ஸல்)
அவர்களிடம் கேட்கக் கூடாது
என்ற கருத்தைத்தான் இவ்வசனம் கூறுகின்றது.
ஆகவே,அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வழிகாட்டிய அடிப்படையில் மார்க்கம் தொடர்பான சந்தேகங்களை
தெளிவு படுத்திக் கொள்ளும் நல்ல தௌஃபீக்கை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்
அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment