Thursday, 22 February 2024

நபித்தோழர்களின் மாண்பும்.... மகத்துவமும்....

 

பித்தோழர்களின்

«رَضِىَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ»

மாண்பும்.... மகத்துவமும்....


தவ்ஹீதின் பெயரால் இன்று சிலர் நபித்தோழர்களான சத்திய ஸஹாபாக்களை வழி தவறியவர்களாக, நபித்தோழர்களின் வழி செல்வதை வழிகேடாக சித்தரிக்கவும், தம்மை விட மார்க்க அறிவு குன்றியவர்களாகக் காட்டவும் கச்சை கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர். 

அதுவும்  இந்த வழிகெட்ட கூட்டத்தினர் தங்களை சத்தியவாதிகளாகவும், ஏகத்துவவாதிகளாகவும் அடையாளப்படுத்துவது ஆச்சர்யமானதும், கவலையுமான விஷயமுமாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் நபித்தோழர்கள் விஷயத்தில் ஷியாக்கள் மிகத் தெளிவாகவே மீறினார்கள். அதே போன்று கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற கூட்டத்தினரும் மீறினர். 

இன்று இவர்கள் அவர்களை விட  தங்களது பேச்சு, எழுத்து, சைக்கினை மூலமாகக் கூட நபித் தோழர்களை எல்லை மீறி, விமர்சித்தும், குறை கூறியும்  வருகின்றனர்.

இந்த உலகில் எவரும் பெற்றிறாத, இனி ஒருக்காலும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர்.

நபி (ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி (ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதையும் யாரும் பெற முடியாது.

வஹி இறங்குவதையும் அதன் அடையாளங்களையும் கண்களால் கண்டனர்.  இதையும் இனி யாரும் அடைய முடியாது. 

முன் வேதங்களில் அவர்களின் குணநலன்களும், வழிபாட்டு விழுமியங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதையும் இனி யாரும் அடைய முடியாது. 

இவ்வாறு யாரும் பெறமுடியாத பெரும் பாக்கியத்திற்குரியவர்களாக அல்லாஹ்வே அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.

தமது நபியின் நண்பர்களாக தமது மார்க்கத்தின் உதவியாளர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமாக அவர்கள் இருப்பதே அவர்களின் சிறப்புக்களுக்கெல்லாம் மகுடமாகத் திகழ்கின்றது.

அவர்கள் அல்லாஹ்வினாலேயே முஃமின்கள்என்றும், ‘நேர்வழி பெற்றவர்கள்என்றும், சிறந்த சமூகம் என்றும் சிலாகித்துப் போற்றப்பட்டவர்கள்.

அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டதாக அறிவித்துவிட்டபிறகும் கூட  இந்த வழிகெட்ட சிலரால் அவர்ளைப் பொருந்திக் கொள்ள முடியாது என்று அடம் பிடிப்பதை  வழிகேட்டின் அடையாளம் என்று கூறாமல் வேறு என்ன கூற முடியும்?!.

நபித்தோழர்களின் மாண்பும்.... மகத்துவமும்....

மாநபி (ஸல் ) 23 ஆண்டு காலங்களுக்கு பிறகு இந்த உம்மத்திற்கு  எழுத்து வடிவிலான ஒலி வடிவிலான குர்ஆனையும் சுன்னாவையும் மட்டும் விட்டுச் செல்ல வில்லை.

       மாறாக, எழுத்து வடிவிலான ஒலி வடிவிலான அந்த குர்ஆனையும் சுன்னாவையும் நமக்கு எதார்த்தமாக செயல்பாடுகளாக உள்வாங்கி அதன்படி வாழ்க்கையை மேற்கொண்ட உத்தம தோழர்களான ஸஹாபாக்களையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். 

       அபூபக்ர், உமர், உஸ்மான், அலி, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல், ஸைத் இப்னு ஸாபித் (ரலி – அன்ஹும்) போன்ற நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் அல்ல இலட்சத்திற்கும் மேற்பட்ட தோழர்களை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் நமக்காக விட்டுச் சென்றார்கள். 

       மாநபி (ஸல்) அவர்களை யார் நேசிக்கின்றார்களோ, அவர்கள் நமக்கு  தந்த குர்ஆனை யார் நேசிக்கின்றார்களோ, அவர்களுடைய சுன்னாவை யார் நேசிக்கின்றார்களோ, அவர் கண்டிப்பாக மாநபி (ஸல்) அவர்களுடைய சுன்னாவையும் அல்லாஹ்வுடைய வேதத்தையும் நமக்கு கற்பித்த, அதன்படி வாழ்ந்து காட்டிய அந்த சஹாபாக்களையும் நேசிப்பார்.

       அவர்களைப் போன்று தானும் ஆக வேண்டும் என்று அவர் ஆசைப்படுவார். அவர்களைப் பற்றி அறிய ஆசைப்படுவார். அவர்களுடைய கூற்றுகளை உபதேசங்களை புரிந்து வாழ ஆசைப்படுவார். 

       அவர்களைப் பற்றி குர்ஆனில் அல்லாஹ் எப்படி புகழ்கிறான், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)  அவர்களைப் எப்படி உயர்வாக பேசுகிறார்கள் என்பதை கற்று அந்த சஹாபாக்களை மதிக்க அவர் ஆரம்பித்து விடுவார்.

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஸஹாபாக்கள்!

وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰى

            அல்லாஹ் தேர்ந்தெடுத்த அடியார்கள் மீது அல்லாஹ்வுடைய ஸலாம் உண்டாகட்டும்!  (அல்குர்ஆன் 27 : 59)

       அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த வசனத்தில் தேர்ந்தெடுத்த அடியார்கள் என்று கூறுவது "நபியின் தோழர்களைத் தான்" என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சூரா நம்லுடைய வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள். 

وقال سفيان في قوله عز وجل ( الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ)(الرعد: 28) قال : هم أصحاب محمد -صلى الله عليه وسلم

"நபியின் தோழர்களைத் தான்" என்று ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் சூரா ரஅதுடைய 28 - ம் வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள். 

وعن وهب بن منبه -رحمه الله -في قوله تعالى ( بِأَيْدِي سَفَرَةٍ (15) كِرَامٍ بَرَرَةٍ) (عبس:16) قال هم أصحاب محمد -صلى الله عليه وسلم

"நபியின் தோழர்களைத் தான்" என்று வஹப் இப்னு முனப்பஹ் (ரஹ்) அவர்கள் சூரா அபஸவுடைய 15, 16 வது வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள். 

وقال قتادة في قوله تعالى ( يَتْلُونَهُ حَقَّ تِلاوَتِه)(البقرة:121) هم أصحاب محمد - صلى الله عليه وسلم -آمنوا بكتاب الله وعملوا بما فيه 

"நபியின் தோழர்களைத் தான்" என்று கதாதா (ரஹ்) அவர்கள் சூரா பகராவுடைய 121 வது வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள். 

நபித்தோழர்களின் மாண்புகள் மற்றும் மகத்துவம் குறித்து திருக்குர்ஆன் குறிப்பிடும் சான்றுகள்!

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏகஇறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்.

 

وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ ۗ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். ( அல்குர்ஆன்: 48:29 )

الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர். ( அல்குர்ஆன்: 7:157 )

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

ஹிஜ்ரத் செய்தோரிலும்,  அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்பவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. ( அல்குர்ஆன்: 9:100 )

لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். ( அல்குர்ஆன்: 9:108 )

لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ ۚ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ

وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّىٰ إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنْفُسُهُمْ وَظَنُّوا أَنْ لَا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوا ۚ إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். ( அல்குர்ஆன்:9: 117,118 )

 

وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ لَا يَسْتَوِي مِنْكُمْ مَنْ أَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ ۚ أُولَٰئِكَ أَعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِينَ أَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டுப் போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். ( அல்குர்ஆன்: 57:10 )

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். ( அல்குர்ஆன்: 59:9 )

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். ( அல்குர்ஆன்: 48:18 )

நபித்தோழர்களின் மாண்புகள் மற்றும் மகத்துவம் குறித்து நபி (ஸல்) அவர்கள் வழங்கிய சான்றுகள்.

حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَتْنِي أُمُّ مُبَشِّرٍ

لَا يَدْخُلُ النَّارَ، إِنْ شَاءَ اللهُ، مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ أَحَدٌ، الَّذِينَ بَايَعُوا تَحْتَهَا

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்’’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு முபஷ்ஷிர் (ரலி), நூல்: முஸ்லிம் 

 

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُهُ مِنْهُ مَرَّتَيْنِ قَالَ: أَخْبَرَنِي حَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُول :- إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ أَنْ يَكُونَ قَدِ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ

அல்லாஹ், பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்என்று கூறி விட்டிருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ( நூல்: புகாரி  )

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ، ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ، وَلاَ نَصِيفَهُ»

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி), நூல்: புகாரி 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ»

இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்;  நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரி 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الأَنْصَارُ لاَ يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ، وَلاَ يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ، فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ»

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க  மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும்  மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான். அறிவிப்பவர்: பராஉ (ரலி), நூல்: புகாரி 

 

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ: سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، قَالَ: سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» – قَالَ عِمْرَانُ: لاَ أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلاَثَةً – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَنْذِرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ»

‘‘உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி) நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

«النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ، فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ، وَأَنَا أَمَنَةٌ لِأَصْحَابِي، فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِي مَايُوعَدُونَ، وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي، فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمَّتِي مَا يُوعَدُونَ»

நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்ரி (ரலி) நூல்: புகாரி

"நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுதோம். பின்னர் இவ்வாறே இங்கிருந்த நபியுடன் இஷாவையும் தொழுதால் என்ன எனக் கூறி அவ்வாறே அமர்ந்திருந்தோம். எம்மிடம் வந்த நபி (ஸல்) அவர்கள் (மஃரிப் முதல்) இங்கேதான் இருந்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு நாம் அல்லாஹ்வின் தூதரே உங்களுடன் மஃரிபைத் தொழுதோம். இஷாவையும் உங்களுடன் தொழும் வரை இங்கேயே அமர்ந்திருப்போம் என்று எமக்குள் உறுதி கொண்டோம்.என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நல்லது செய்தீர்கள்என்று கூறி வானத்தின் பக்கம் தன் தலையை உயர்த்தினார்கள். அவர்கள் அதிகமாக வானத்தைப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். பின்னர், நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது (அழிவு) வந்து விடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பாவேன். நான் போய்விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்துக்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் போய்விட்டால் எனது உம்மத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறி: அபூ புர்தா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்: 207, 6629 – அஹ்மத்: 19566, 19795 – இப்னுஹிப்பான்: 7249)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيَقُولُونَ فِيكُمْ مَنْ صَاحَبَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ. ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ، ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ "".

 

. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார்மீது படை யெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?” என்று கேட்பார்கள். ஆம் (இருக்கிறார்கள்)என்று அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும்.

பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் அறப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றார் களா?” என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், “ஆம், இருக்கிறார்கள்என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “ஆம், இருக்கின்றார்கள்என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பித்தோழர்களை குறை கூறுவதும், விமர்சிப்பதும்....
وقال الإمام أحمد - رحمه الله تعالى - "إذا رأيت رجلا يذكر أصحاب رسول الله - صلى الله عليه وسلم - بسوء فاتهمه على الإسلام". 

وقال - رحمه الله تعالى - " لا يجوز لأحد أن يذكر شيئا من مساويهم ولا يطعن على أحد منهم بعيب ولا نقص فمن فعل ذلك فقد وجب على السلطان تأديبه وعقوبته ليس له أن يعفو عنه بل يعاقبه ويستتيبه فان تاب قبل منه وإن ثبت أعاد عليه العقوبة وخلده الحبس حتى يموت أو يراجع".

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கேவலப்படுத்த நினைத்தனர். அது அவர்களுக்கு சாத்தியமற்றதாகி விட்டது. எனவே, அவரது தோழர்களைக் கேவலப்படுத்தினர். அதன் மூலம் நபி(ஸல்) அவர்களை கேவலப்படுத்தினர். நபி(ஸல்) நல்லவராக இருந்திருந்தால் அவரது தோழர்களும் நல்லவர்களாக இருந்திருப்பர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர்என விபரிக்கின்றார். (நூல்: அஸ்ஸாரிமுல் மஸ்லூல்)

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களது தோழர்களில் எவரைப்பற்றியாவது குறை கூறுபவனைக் கண்டால் அவனது இஸ்லாத்தில் சந்தேகம் கொள்என்று குறிப்பிட்டார்கள்.

ولعل كثيرا من الكتاب ممن في قلوبهم مرض الذين ينتقصون أصحاب رسول الله - صلى الله عليه وسلم - في الصحف وغيرها يرون أن الوقت لم يحن بعد لانتقاص القرآن والسنة فرأوا أن تقليل شأن الصحابة الكرام عند الناس هو من أخصر الطرق لرد الكتاب والسنة كما قال أبو زرعة - رحمه الله تعالى - " إذا رأيت الرجل ينتقص أحدا من أصحاب رسول الله - صلى الله عليه وسلم - فاعلم أنه زنديق وذلك أن الرسول حق والقرآن حق وإنما أدى إلينا هذا القرآن والسنة أصحابُ رسول الله - صلى الله عليه وسلم - وإنما يريدون أن يجرحوا شهودنا ليُبطلوا الكتاب والسنة والجرح بهم أولى وهم زنادقة " ا.هـ.

இமாம் அபூ சுர்ஆ அர்ராஸி(ரஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது நபி(ஸல்) அவர்களது தோழர்களி;ல் ஒருவரையாவது குறை கூறுபவனைக் கண்டால் அவன் ஸிந்தீக்என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவமும், அவர்கள் கொண்டு வந்தவையும் சத்தியமாகும். அல் குர்ஆன் உண்மையாகும்ளூ சுன்னா உண்மையாகும் இவை அனைத்தையும் எம்மிடம் ஒப்படைத்தவர்கள் ஸஹாபாக்களாவார்கள். நபித்தோழர்களை குறை கூறும் இவர்கள் எமது சாட்சியாளர்களைக் காயப்படுத்துவதன் மூலம் (அவர்கள் ஒப்படைத்த குர்ஆனையும், சுன்னாவையும் பொய்யாக்க முனைகின்றனர். நபித்தோழர்களைக் காயப்படுத்துவதுதான் இவர்களது முதல் பணி. எனவே இவர்கள் ஸிந்தீக்குகளாவர்)எனக் குறிப்பிடுவது ஆழ்ந்து அவதானிக்கத்தக்கதாகும். (அல் கிபாயா பீ இல்மில் ரிவாயா லில் கதீப் அல் பக்தாதி 97, இஸாபா பீ தம்யீஸீஸ் ஸஹாபா 1/11)

وروى الحافظ ابن عساكر عن الإمام أبي زرعة "أن رجلا قال له: إني أبغض معاوية، فقال له أبو زرعة: ولم؟ قال: لأنه قاتل علياً، فقال له أبو زرعة: ويحك، إن رب معاوية رحيم، وخصم معاوية خصم كريم، فأيش (٣) دخولك أنت بينهما رضي الله عنهما

இமாம் அபு ஸுர்ஆ (ரஹ்) அவர்கள் அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து பேசுகிறார்; நான் முஆவியாவை வெறுக்கிறேன் என்று. 

முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்ட அந்த கருத்து வேற்றுமையை தொடர்ந்து ஏற்பட்ட அந்த யுத்தம், இதனால் சிலர் முஆவியா (ரலி) அவர்களை மரியாதை குறைவாக பேசுகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் வந்து சொல்கிறார், நான் முஆவியாவை வெறுக்கிறேன் என்று.

அதற்கு இமாம் என்ன பதில் சொன்னார்கள்: முஆவியா இடத்தில் விசாரணை செய்யப்போவது நாளைக்கு மறுமையில் நீயா? முஆவியாவுடைய ரப்பா? முஆவியா குற்றம் செய்திருந்தால் அந்த குற்றத்திற்காக அவரை விசாரிக்க போவது யார்? நீயா அல்லது முஆவியாவுடைய ரப்பா?

முஆவியாவுடைய ரப்பு ஆகியவன் ரப்புர் ரஹீம் - கருணைமிக்கவன், இரக்கமுள்ளவன். சரி, முஆவியா தப்பு செய்திருந்தால், அலீ நியாயத்தில் இருந்தால், அலீவுடைய ரப்பு யார்? அவனும் அல்லாஹ். 

அலீக்காக முஆவியாவிடத்தில் நீதம் வாங்கக் கூடியவன் யார்? அல்லாஹ் தான். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தண்டிப்பதாக இருந்தால் தண்டிக்கக்கூடியவன் யார்? அல்லாஹு தஆலா தான். 

இப்படி அவன் ரஹீமாகவும் இருக்கின்றான், கரீமாகவும் இருக்கின்றான். எந்த முஆவியா இடத்தில் அலீக்காக வேண்டி நீதத்தை வாங்க வேண்டுமோ அந்த ரப்பு தான் உன்னுடைய ரப்பு. ரப்புர் ரஹீம் -கருணை உள்ளவன், இரக்கம் உள்ளவன். 

அதேநேரத்தில் தயாளமுள்ளவன். அவன் நாடும் போது முஆவியாவை மன்னிக்கவும் செய்யலாம். அதே நேரத்தில் முஆவியாவை மன்னித்துவிட்டு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனது திருப்திபடுகின்ற அளவு அவர்களுக்கு அவனுடைய தயாளத்தால் அல்லாஹு தஆலா அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சுவர்கத்தின் பதவிகளை உயர்த்தலாம். அவன் மிகப் பெரிய தயாளன். அந்த இருவரும் தங்களது ரப்பிடத்தில் அதை பேசிக் கொள்வார்கள். அந்த இருவருக்கும் இடையில் உள்ளே செல்வதற்கு நீ யார்?

முஆவியாவும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களுடைய தீர்ப்புக்காக நாளை மறுமையில் உன்னிடத்தில் வருவார்களா? ரப்பிடத்தில் செல்வார்களா? அந்த ரப்பு, ரஹீம் ரவூஃப் கரீம். அவன் அவர்களை திருப்திபடுத்துவான். 

முஇஆவியாவை மன்னிப்பதற்கும் அல்லாஹ் போதுமானவன், அலீக்கு கண்ணியத்தை உயர்த்துவதற்கும் அல்லாஹ் போதுமானவன். இந்த இருவருக்குமிடையில் உள்ளே நுழைந்து தீர்ப்பு செய்வதற்கு நீ யார்? என்று அந்த மனிதருக்கு அழகிய பாடத்தை கொடுத்தார்கள்.

وقد عزي إلى عبد الله بن المبارك ـ رحمه الله تعالى ـ ففي مرقاة المصابيح على مشكاة المصابيح: قيل لابن المبارك أيهما أفضل معاوية أو عمر بن عبد العزيز؟ فقال الغبار الذي دخل في أنف فرس معاوية مع النبي صلى الله عليه وسلم خير من مثل عمر بن عبد العزيز كذا وكذا مرة. انتهى

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடத்தில் ஒருவர் கேட்கிறார்; உமர் இப்னு அப்துல் அஸீஸ் சிறந்தவரா? முஆவியா சிறந்தவரா? என்று. 

       உமர் இப்னு அப்துல் அஸீஸ் இவர் தாபியீன், முஆவியா (ரலி) மாநபி {ஸல்} அவர்களுடைய தோழர். ரசூலுல்லாஹ் உடைய மனைவியின் சகோதரர். குர்ஆனுடைய வஹியை எழுதியவர். கடைசி காலத்தில் அவர் இஸ்லாமை ஏற்றிருந்தாலும் இந்த இஸ்லாமிற்காக மிகப்பெரிய தியாகங்களை செய்த, இஸ்லாமிற்காக ஜிஹாதுகளை செய்து பல நாடுகளை வெற்றி கொண்டு, இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய மன்னர்களில் ஒருவர்.

       ஆனால், மன்னர் ஆட்சி என்ற காரணத்தால் அவர்களை சிலர் குறைவாகப் பேசலாம். அப்படிப்பட்ட சிந்தனையில் உள்ளவர் ஒருவர் தான் இப்படி கேட்கிறார்: முஆவியா சிறந்தவரா? அல்லது உமர் இப்னு அப்துல் அஸீஸ் சிறந்தவரா? என்று. 

       அப்போது அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) கூறுவதைப் பாருங்கள். முஆவியா உடைய மூக்குத் துவாரத்தில் அவர் ரசூலுல்லாஹ் உடன் பயணம் செய்த போது ஏற்பட்ட அந்த புழுதி தூசி இருக்கிறது அல்லவா, அந்த தூசி உமர் இப்னு அப்துல் அஸீஸை விட சிறந்தது, அவரை விட சிறப்பானது என்பதாக.

       உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) ஐந்தாவது கலீஃபா என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமுக்காக வாழ்ந்து நீதத்தை நிலைநாட்டி மார்க்கத்தை உறுதிப்படுத்திய மிகப் பெரிய தாபியீ. 

       அவர் ஒரு மன்னர் மட்டுமல்ல, அரசர் மட்டுமல்ல, மிகப்பெரிய இமாம்; ஆலிம். பல ஹதீஸ்களை அறிவித்த ஒரு பெரிய ஹதீஸ்களுடைய ராவி -அறிவிப்பாளர் அவர். அப்படி ஒரு உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தும் கூட, ஒரு தாபியீ எவ்வளவு தான் அமல்களில் உயர்ந்திருந்தாலும் ரசூலுல்லாஹ்வுடைய கடைசி காலத்தில் இஸ்லாமை ஏற்று இஸ்லாமுக்காக வாழ்ந்த ஒரு ஸஹாபியினுடைய மூக்கில் பயணத்தில் செல்லும் போது ஏற்படக்கூடிய அந்த புழுதி தூசுக்கு கூட அவர் சமமாக மாட்டார்கள்.

وقال السرخسي - رحمه الله تعالى - " فمن طعن فيهم فهو ملحد منابذ للإسلام دواؤه السيف إن لم يتب " ا.هـ.

இமாம் ஸரஹ்ஷி ரஹ் சொல்கிறார்கள்: இவர்களுடைய கூற்றும் அதுதான், யார் ஸஹாபாக்களின் விஷயத்திலேயே விமர்சனங்கள் செய்கிறாரோ அவன் ஒரு முல்ஹித் -இறை நிராகரிப்பாளனாக இருப்பான். இஸ்லாமை உள்ளுக்குள் எதிர்ப்பவனாக இருப்பான்.

அவன் திருந்தவில்லை என்றால் அவனுக்கு நாம் கொடுக்க கூடிய சிகிச்சை, நம்முடைய வாள்தான். இஸ்லாமிய நாடாக இருக்குமேயானால் நபித்தோழர்களை விமர்சனம் செய்பவர்களுக்கு கொடுக்கப் படக்கூடிய தண்டனை வாள்தான். 

قال الطحاوي - رحمه الله تعالى - " ونحب أصحاب رسول الله صلى الله عليه وسلم ولا نُفرط في حب أحد منهم، ولا نتبرأ من أحد منهم ونبغض من يبغضهم، وبغير الحق يذكرهم، ولا نذكرهم إلا بخير، وحبهم دين وإيمان وإحسان، وبغضهم كفر ونفاق وطغيان " ا.هـ.

இமாம் தஹாவி ரஹ் சொல்கிறார்கள்: நம்முடைய கொள்கை, ரசூலுல்லாஹ்வின் தோழர்களை நேசிப்போம். அவர்களில் ஒருவரை நேசிப்பதில் அளவு கடக்க மாட்டோம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் அவர்களுக்கு என்ன கண்ணியத்தை கொடுத்தார்களோ அந்த கண்ணியத்தை குறைக்கவும் மாட்டோம். அதற்கு மேலாக அவர்களை ஷியாக்கள் ராஃபிதாக்கள் உயர்த்துவது போன்று அவர்களை நாங்கள் அளவு கடந்து உயர்த்தவும் மாட்டோம். 

       அந்த தோழர்களில் யார் ஒருவரை விட்டும் நாங்கள் நீங்கிக் கொள்ள மாட்டோம். அதாவது எங்களுக்கு சஹாபாக்கள் பிடிக்காது; நாங்கள் அவர்களை பின்பற்ற மாட்டோம்; அவர்களுக்கும் எங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சம்பந்தம் இல்லை என்று நாங்கள் விலகிக் கொள்ள மாட்டோம். 

யார் சஹாபாக்களை வெறுப்பாரோ அவர்களை நாமும் வெறுப்போம். நபித்தோழர்களை யார் வெறுப்பாரோ அவர்களை நாமும் வெறுப்போம். நாம் அவர்களைப் பற்றி பேசினால் நல்லதை தான் பேசுவோம். சஹாபாக்களை நேசிப்பது தீனாகும் -மார்க்கமாகும். இறை நம்பிக்கையை அதிகப்படுத்தக்கூடிய ஒரு அமலாகும். உள்ளத்தின் தக்வாவை உள்ளத்தின் நன்மையை அதிகப்படுத்தக்கூடிய ஒரு செயலாகும். 

       ஸஹாபாக்களை வெறுப்பது, அவர்களை கோபிப்பது, அவர்கள் மீது பகைமை காட்டுவது இறை நிராகரிப்பை ஏற்படுத்தக்கூடியது. நயவஞ்சகத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மார்க்கத்தை விட்டு ஒருவனை வெளியேற்றக் கூடிய செயலாகும்.

وقال ابن الصلاح - رحمه الله تعالى - " إن الأمة مجمعة على تعديل جميع الصحابة، ومَن لابس الفتن منهم فكذلك بإجماع العلماء الذين يُعتد بهم في الإجماع " ا.هـ.

இமாம் இப்னு ஸலாஹ் -ஹதீஸ் கலையின் மிகப்பெரிய அறிஞர். (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: இந்த உம்மத்துடைய அறிஞர்கள் எல்லாம் அவர்களின் ஒருமித்த முடிவு, சஹாபாக்கள் நல்லவர்கள்; நீதமானவர்கள்; மார்கத்தில் நம்பத்தகுந்தவர்கள் ஆவார்கள் என்பது. 

       அவர்களில் எல்லோரும் அலீ ரழியல்லாஹு அன்ஹு, முஆவியா ரழியல்லாஹு அன்ஹு இருவருக்கும் இடையே நடந்த குழப்பத்தில் பங்கெடுத்தவராக இருந்தாலும் சரி, எல்லா சஹாபாக்களும் நீதமானவர்கள்; நல்லவர்கள் இதுதான் அறிஞர்களின் முடிவாகும். 

وقال الإمام محمد بن صُبيح بن السماك - رحمه الله تعالى - لمن انتقص الصحابة " علمتَ أن اليهود لا يسبون أصحاب موسى - عليه السلام - وأن النصارى لا يسبون أصحاب عيسى - عليه السلام - فما بالك يا جاهل سببت أصحاب محمد - صلى الله عليه وسلم -؟ وقد علمتُ من أين أوتيتَ لم يشغلك ذنبك أما لو شغلك ذنبك لخفت ربك، ولقد كان في ذنبك شغل عن المسيئين فكيف لم يشغلك عن المحسنين؟ أما لو كنت من المحسنين لما تناولت المسيئين، ولرجوت لهم أرحم الراحمين، ولكنك من المسيئين فمن ثَمَّ عبت الشهداء والصالحين، أيها العائب لأصحاب محمد - صلى الله عليه وسلم - لو نمتَ ليلك، وأفطرت نهارك لكان خيرا لك من قيام ليلك، وصوم نهارك مع سوء قولك في أصحاب رسول الله - صلى الله عليه وسلم - فويحك لا قيام ليل، ولا صوم نهار، وأنت تتناول الأخيار فأبشر بما ليس فيه البشرى إن لم تتب مما تسمع وترى.. وبم تحتج يا جاهل إلا بالجاهلين، وشر الخلف خلف شتم السلفِ، لَواحدٌ من السلفِ خيرٌ من ألف من الخلف " ا.هـ.

இமாம் முஹம்மது இப்னு ஸுபைஹ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ஹிஜ்ரி 183 ல் இறந்த மிகப்பெரிய ஓரு ஹதீஸ் கலையின் அறிஞர். இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய ஆசிரியர். ஸஹாபாக்களை பற்றி குறைவாக, விமர்சனம் செய்யக் கூடிய, ஏசக்கூடிய மக்களைப் பார்த்துச் சொல்கிறார்கள்:

       ஓ மனிதனே! எங்கேயாவது யஹூதிகளை பார்த்திருக்கிறாயா? மூசா நபியின் தோழர்களை அவர்கள் ஏசியதாக. யூதர்கள் மூசா நபியின் தோழர்களை ஏசியதாக நீ பார்த்திருக்கிறாயா? ஏசியதில்லையே. கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் தோழர்கள் ஏசியதில்லையே. முட்டாளே, உனக்கு என்ன நேர்ந்தது? முஹம்மதின் தோழர்களை நீ ஏச வந்துவிட்டாய். 

       எனக்கு தெரியும்; இந்த முஸிபத் உனக்கு எப்படி ஏற்பட்டது என்று. உன்னுடைய பாவங்களை பற்றி நீ சிந்திக்கவில்லை. நீ செய்த அநியாயங்கள் குற்றங்களைப் பற்றி சிந்திக்கவில்லை. உன்னுடைய பாவத்தை நினைத்து பார்த்திருந்தால் உனது ரப்பை நீ பயந்திருப்பாய். நீ உனது பாவத்தை சிந்தித்து இருந்தால் அதற்கு தவ்பா கேட்டு இருப்பாய். குற்றம் செய்தவர்களை பாவிகளை பார்த்து ஏளனமாக பேசி இருக்க மாட்டாய், உன்னுடைய பாவத்தைப் பற்றி நீ சிந்தித்து இருந்தால். 

       காரணம், அவரை விட பாவம் என்னிடத்தில் அதிகமாக இருக்கிறது என்று உனது பாவத்தை நினைத்து நீ பயந்து இருப்பாய். அப்படி இருக்க அல்லாஹ் யாரை மன்னித்து நல்லவர்கள் என்று சான்று சொன்னானோ அந்த சஹாபாக்களை பற்றி நீ எப்படி பேசி இருப்பாய்? உனது பாவத்தை பற்றி நீ சிந்தித்து இருந்தால் நீ பாவிகளை பற்றிய பேச மாட்டாயே! சஹாபாக்கள் அந்த நல்லவர்களை பற்றி எப்படி பேசியிருப்பாய். 

       சரி, நீ உயர்ந்த நல்லவர்தான் என்று வைத்துக் கொண்டால் பாவிகளை பார்த்து அவர்களை திருத்துவதற்கு தான் நீ முயற்சி செய்திருப்பாயே தவிர, அவர்களை விமர்சனம் செய்திருக்கமாட்டாய். அளவற்ற அருளாளன் கருணையாளனுக்கெல்லாம் கருணையாளன் இவர்களை மன்னிக்கப் போதுமானவன் என்று அந்த பாவ மன்னிப்புக்காக நீ துஆ செய்திருப்பாய். 

       நான் உறுதியாகச் சொல்கிறேன்: நீ மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவன். எனவேதான், யாரை அல்லாஹ் ஷஹீதுகள் என்று அங்கீகரித்தனோ, யாரை ஸாலிஹீன் என்று அல்லாஹ் அங்கீகரித்தனோ அவர்களை நீ குறை பேச துணிந்துவிட்டாய். நீ தீயவர்களில் உள்ளவன்; நீ கெட்டவர்களில் உள்ளவன். 

       எனவேதான் யாரை அல்லாஹ் ஷஹீதுகள், ஸாலிஹீன்கள் என்று அங்கீகரித்தானோ அவர்களை நீ குறை பேசி விட்டாய்.

ஆகவே, இது போன்ற வழிகெட்ட கொள்கை உடையோர்களின் கொள்கையில் இருந்து சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் எந்த தூய வடிவில் இஸ்லாத்தைச் சொன்னாலும் அதில் ஈமானை பறிக்கக்கூடிய கலப்படம் இருக்கும் என்கிற விழிப்புணர்வோடு இந்த சமூகம் பயணிக்க வேண்டும்.

நபித்தோழர்களை அல்குர்ஆனின், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மேனாள் அறிஞர்களின் வழிநின்று நேசிப்போம்!

நபித்தோழர்களை யார் வெறுப்பாரோ அவர்களை நாமும் வெறுப்போம். நாம் நபித்தோழர்களைப் பற்றி பேசினால் நல்லதை தான் பேசுவோம்.

2 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற்பாக்கியங்கள் தருவானாக ஆமீன்

    ReplyDelete