Sunday, 17 March 2024

மனைவியிடம் சிறந்தவராய் விளங்குங்கள்!!!

 

தராவீஹ் சிந்தனை:- 7, உங்களில் சிறந்தவர் தொடர்:- 6.

மனைவியிடம் சிறந்தவராய் விளங்குங்கள்!!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் ஆறாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, ஏழாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

ஆறாவதாக  இன்றைய அமர்வில் மனைவியோடு சிறந்த முறையில் விளங்குபவரே உங்களில் சிறந்தவர் என்ற நபிமொழி குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

« أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى هُرَيْرَةَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) - ( நூல் : திர்மிதி )

எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.

அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (4:19)

மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்;

 

பெண்கள் வியத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!என உபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

உலகின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய பெரும் தலைவர்கள் பலரும், சித்தாந்தம் பேசிய சிந்தனைவாதிகள் பலரும், கொள்கைகள் பேசிய தத்துவவாதிகள் பலரும் சறுக்கிய ஒரு இடம் இருக்குமானால் அது இல்லறம் தான்.

ஆனால், முழு உலகத்திற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய எம்பெருமான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மாத்திரமே இல்லற வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்.

எப்போதுமே மாநபி (ஸல்) அவர்கள் தாம் அடைந்த இன்பத்தை இந்த உம்மத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சாமானிய முஸ்லிமும் அடைய வேண்டும் என்று விரும்புவார்கள்.

அது போலவே இல்லற வாழ்விலும் தாம் அடைந்த இலக்கை தமது உம்மத்தில்  ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்று தூண்டுகின்றார்கள்.

இன்னொரு அறிவிப்பில்... நபி ஸல் அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது.

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ يُوسُفَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي  ‏قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏هَذَا ‏ ‏حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ ‏ ‏مِنْ حَدِيثِ ‏ ‏الثَّوْرِيِّ ‏ ‏مَا أَقَلَّ مَنْ رَوَاهُ عَنْ ‏ ‏الثَّوْرِيِّ ‏ ‏وَرُوِيَ ‏ ‏هَذَا عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُرْسَلًا ‏

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!நான் என் மனைவியரிடம் சிறந்து விளங்குபவனாக இருக்கின்றேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( திர்மிதீ )

முதலாவதாக வீட்டிற்குள் நுழையும் ஒரு கணவன் அந்த வீட்டு இல்லத்தரசியின் கணவனாக நுழைய வேண்டும்.

ஆனால், இன்று என்ன நடக்கிறது? ஒரு ஆசிரியர் வீட்டிற்குள் நுழையும் போது "கண்டிப்பான ஆசிரியராகவே" நுழைகிறார்.

ஒரு காவல்துறை அதிகாரி வீட்டிற்குள் நுழையும் போது "விரைப்போடு" காவல்துறை அதிகாரியாகவே நுழைகிறார்.

இப்படியாக ஒவ்வொரு துறை வாரியாக அவரவர் தொழில் சார்ந்த மனிதர்களாகவே வீட்டிற்குள் நுழைகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரின் எந்த வீட்டிற்குள்ளும் அவரவரின் கணவராக மாத்திரமே தவிர நுழைந்ததில்லை.

அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற நிலையில் எங்கேயும் எந்த மனைவியரின் வீட்டிற்குள்ளும் நுழைய வில்லை.

ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்குள் ஆயிஷா (ரலி) அவர்களின் கணவராக, உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டிற்குள் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் கணவராக நுழைவார்கள்.

عن عائشة رضي الله عنها أنها قالت ذلك في وصف النبي صلى الله عليه وسلم .

فقد جاء في حديث طويل في قصة سعد بن هشام بن عامر حين قدم المدينة ، وأتى عائشة رضي الله عنها يسألها عن بعض المسائل ، فقال : يا أُمَّ المُؤمِنِينَ ! حَدِّثِينِي عَن خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ .

قَالَت : يَا بُنَيَّ أَمَا تَقرَأُ القُرآنَ ؟ قَالَ اللَّهُ : ( وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ ) خُلُقُ مُحَمَّدٍ القُرآنُ )

أخرجها أبو يعلى (8/275) بإسناد صحيح .

قال النووي رحمه الله تعالى في "شرح مسلم" (3/268) :

ஆதலால் தான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி ஸல் அவர்களின் குணம் குறித்து கேட்கப்பட்ட போது "நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது" என்றார்கள்‌

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!!

حَدَّثَنِى مَنْ سَمِعَ حَجَّاجًا الأَعْوَرَ – وَاللَّفْظُ لَهُ – قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى عَبْدُ اللَّهِ – رَجُلٌ مِنْ قُرَيْشٍ عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسِ بْنِ مَخْرَمَةَ بْنِ الْمُطَّلِبِ أَنَّهُ قَالَ يَوْمًا أَلاَ أُحَدِّثُكُمْ عَنِّى وَعَنْ أُمِّى قَالَ فَظَنَنَّا أَنَّهُ يُرِيدُ أُمَّهُ الَّتِى وَلَدَتْهُ. قَالَ قَالَتْ عَائِشَةُ أَلاَ أُحَدِّثُكُمْ عَنِّى وَعَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. قُلْنَا بَلَى. قَالَ

قَالَتْ لَمَّا كَانَتْ لَيْلَتِىَ الَّتِى كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فِيهَا عِنْدِى انْقَلَبَ فَوَضَعَ رِدَاءَهُ وَخَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عِنْدَ رِجْلَيْهِ وَبَسَطَ طَرَفَ إِزَارِهِ عَلَى فِرَاشِهِ فَاضْطَجَعَ فَلَمْ يَلْبَثْ إِلاَّ رَيْثَمَا ظَنَّ أَنْ قَدْ رَقَدْتُ فَأَخَذَ رِدَاءَهُ رُوَيْدًا وَانْتَعَلَ رُوَيْدًا وَفَتَحَ الْبَابَ فَخَرَجَ ثُمَّ أَجَافَهُ رُوَيْدًا فَجَعَلْتُ دِرْعِى فِى رَأْسِى وَاخْتَمَرْتُ وَتَقَنَّعْتُ إِزَارِى ثُمَّ انْطَلَقْتُ عَلَى إِثْرِهِ حَتَّى جَاءَ الْبَقِيعَ فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ انْحَرَفَ فَانْحَرَفْتُ فَأَسْرَعَ فَأَسْرَعْتُ فَهَرْوَلَ فَهَرْوَلْتُ فَأَحْضَرَ فَأَحْضَرْتُ فَسَبَقْتُهُ فَدَخَلْتُ فَلَيْسَ إِلاَّ أَنِ اضْطَجَعْتُ فَدَخَلَ فَقَالَ « مَا لَكِ يَا عَائِشُ حَشْيَا رَابِيَةً ». قَالَتْ قُلْتُ لاَ شَىْءَ. قَالَ « لَتُخْبِرِينِى أَوْ لَيُخْبِرَنِّى اللَّطِيفُ الْخَبِيرُ ». قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِى أَنْتَ وَأُمِّى. فَأَخْبَرْتُهُ قَالَ « فَأَنْتِ السَّوَادُ الَّذِى رَأَيْتُ أَمَامِى ». قُلْتُ نَعَمْ. فَلَهَدَنِى فِى صَدْرِى لَهْدَةً أَوْجَعَتْنِى ثُمَّ قَالَ « أَظَنَنْتِ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ». قَالَتْ مَهْمَا يَكْتُمِ النَّاسُ يَعْلَمْهُ اللَّهُ نَعَمْ. قَالَ « فَإِنَّ جِبْرِيلَ أَتَانِى حِينَ رَأَيْتِ فَنَادَانِى فَأَخْفَاهُ مِنْكِ فَأَجَبْتُهُ فَأَخْفَيْتُهُ مِنْكِ وَلَمْ يَكُنْ يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ وَضَعْتِ ثِيَابَكِ وَظَنَنْتُ أَنْ قَدْ رَقَدْتِ فَكَرِهْتُ أَنْ أُوقِظَكِ وَخَشِيتُ أَنْ تَسْتَوْحِشِى فَقَالَ إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِىَ أَهْلَ الْبَقِيعِ فَتَسْتَغْفِرَ لَهُمْ ». قَالَتْ قُلْتُ كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ « قُولِى السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلاَحِقُونَ ».

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். பகீஃ-க்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல் : முஸ்லிம் 1619

மனைவியின் ஆசைக்கு மதிப்பளியுங்கள்!!

وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ تَشْتَهِينَ تَنْظُرِينَ فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ حَسْبُكِ قُلْتُ نَعَمْ قَالَ فَاذْهَبِي.

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, “நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் செல்என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி. 

மனைவியை புரிந்து கொள்ளுங்கள்!!

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ قَالَ لِى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « إِنِّى لأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّى رَاضِيَةً ، وَإِذَا كُنْتِ عَلَىَّ غَضْبَى » . قَالَتْ فَقُلْتُ مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ فَقَالَ « أَمَّا إِذَا كُنْتِ عَنِّى رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لاَ وَرَبِّ مُحَمَّدٍ ، وَإِذَا كُنْتِ غَضْبَى قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ » . قَالَتْ قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ ، مَا أَهْجُرُ إِلاَّ اسْمَكَ .

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: என்னிடம் நபி {ஸல்} அவர்கள், “எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியாக இருக்கின்றாய்; எப்போது நீ என்னைக் குறித்து அதிருப்தியாக கோபத்துடன் இருக்கின்றாய் என்று உன்னைப் பற்றி நான் நன்கு அறிந்து வைத்திருக்கின்றேன்என்று கூறினார்கள்.

அதற்கு, நான் எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று வினவினேன். அப்போது, நபி {ஸல்} அவர்கள் என்னைக் குறித்து நீ திருப்தியோடு இருந்தால் பேச்சின் இடையே முஹம்மதின் இறைவன் மீது சத்தியமாகஎன்று கூறுவாய்! என் மீது கோபமாக இருந்தால் இப்ராஹீம் (அலை) அவர்களின் இறைவன் மீது சத்தியமாகஎன்று கூறுவாய்!என்று சொன்னார்கள்.

அதற்கு, நான் உண்மைதான் அல்லாஹ்வின் தூதரே! ஆனால், ஒன்று நான் தங்களது பெயரின் மீது தான் கோபம் கொள்வேனே தவிர, தங்களின் மீது அல்லஎன்று கூறினேன்.   ( நூல்: புகாரி )     

ஈகோ இன்றி பழகுங்கள்!!

وعن عائشة رضي الله عنها:-  أن رسول الله - صلى الله عليه وسلم - خرج من عندها ليلا ، قالت : فغرت عليه ، فجاء فرأى ما أصنع . فقال : " ما لك يا عائشة ! أغرت ؟ " فقلت : وما لي لا يغار مثلي على مثلك ؟ فقال رسول الله - صلى الله عليه وسلم - : " لقد جاءك شيطانك " قالت : يا رسول الله ! أمعي شيطان ؟ قال : " نعم " . قلت : ومعك يا رسول الله ؟ قال : " نعم ! ولكن أعانني الله عليه حتى أسلم  .

 رواه مسلم

அன்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் அண்ணலார் வருகை தந்திருக்கின்ற முறை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இரவின் நடுப்பகுதியில் எழுந்து தொழ ஆரம்பித்து விட்டார்கள்.

நடு நிசியில் கண்விழித்த ஆயிஷா (ரலி) அவர்கள், அருகில் உறங்கிக் கொண்டிருந்த நபிகளாரைக் காணாமல் பதட்டமடைந்து இருட்டாக இருந்ததால் தங்களின் கையால் தேடுகின்றார்கள்.

கொஞ்சம் தள்ளி அண்ணலாரின் காலை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அப்போது, நபி {ஸல்} அவர்கள் ஆயிஷாவே! உன்னிடம் ஷைத்தான் வந்து விட்டானா?” ( அதாவது நான் வேறெந்த மனைவியின் வீட்டும் பாதி இரவிலேயே சென்று விட்டேன் என்று சந்தேகித்துக் கொண்டாயா?” எனும் பொருள்பட ) என்று கேட்டார்கள்.

உடனே, ஆயிஷா (ரலி) அவர்கள் அப்படியானால், ”அல்லாஹ்வின் தூதரே! உங்களின் ஷைத்தான் என்ன செய்து கொண்டிருக்கின்றான்என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ் ஷைத்தானை எனக்கு முற்றிலும் வழிப்பட வைத்து விட்டான். என்னிடம் ஷைத்தான் நல்லதைத் தவிர வேறொன்றையும் அவன் எனக்கு சொல்வதில்லைஎன்று பதில் கூறினார்கள்.   ( நூல்: நஸாயீ )

இதற்குப் பின்னர் நபி {ஸல்} அவர்கள் இரவு வணக்கத்தில் ஈடுபட விரும்பினால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுமதி வாங்கி விட்டு வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் அதற்கு அனுமதி வழங்கி விடுவார்கள்.

மனைவியருடனான உறவில், தொடர்பில் சிறந்தர் எனும் சான்றைப் பெற வல்ல ரஹ்மான் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment