சொற்பொழிவுகள்…. அதன் நோக்கமும்… இலக்கும்…
இன்றைக்கு சமூகத்தில் சொற்பொழிகள் - பயான்கள் கேட்கும் பழக்கம் அதிகரித்து இருக்கின்றது.
தினந்தோறும் ஆங்காங்கே திருக்குர்ஆன் விளக்கவுரை, ஹதீஸ் விளக்கவுரை, தர்பியா வகுப்புகள், தஃவா வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.
இது தவிர்த்து மஸாயில் வகுப்புகள், பெண்கள் பயான், மாதாந்திர பயான், மார்க்க விளக்க கூட்டங்கள் என முஸ்லிம் சமூகம் மார்க்கம் சம்பந்தமான தொடர்புகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றது.
இப்போதெல்லாம் உலமாக்கள் நவீன மயமான, காலத்திற்கு தேவையான பல்வேறு தலைப்புக்களில் தரமான ஜும்ஆ உரைகளை சமூகத்தின் சிந்தனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும், சமூகத்தில் அனாச்சாரங்கள், மூடபழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், வரதட்சணைக் கொடுமை, பகைமை உணர்வு, ஐக்கியமின்மை, தலாக், வட்டி என பல்வேறு பாவங்களின் அணிவகுப்புகள் இந்த உம்மத்தில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
சொற்பொழிவின் நோக்கங்களும், அதன் இலக்குகளும் இந்த சமுதாயத்தை ஏன் சென்றடையவில்லை?
அறிவுரைகள் இந்த சமூகத்தின் அறிவுக் கதவுகளை ஏன் இன்னும் திறந்திடவில்லை?
என்றாவது இது குறித்து நாம் சிந்தித்து இருக்கின்றோமா? இது விஷயமாக நாம் ஆராய்ந்து இருக்கின்றோமா?
இன்றைக்கு பெரும்பாலும் எந்த உரையாக இருந்தாலும் அதில் ஒரு எதிர்பாராத திருப்பம், நாலு பஞ்ச் டயலாக், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் ஆக்ரோஷம், ரொமான்ஸ், அழுகை, நெஞ்சை நெகிழச் செய்யும் அழுத்தமான ஒரு செய்தி இப்படி பல்வேறு கோணங்களில் இருக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
சொற்பொழிவாளர்களும் அதற்கேற்ப தங்களது உரைகளை செதுக்கிக் கொள்கின்றார்கள்.
ஆக கேட்பவர்களும், சொற்பொழிவு ஆற்றுபவர்களும் ஒரே சிந்தனையில் தான் இருக்கின்றார்கள்.
விதி விலக்காக சில நல்ல சொற்பொழிவாளர்களும், சில நல்ல கேட்பாளர்களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
சொற்பொழிவாளர்களின் கவனத்திற்கு…
وَذَكِّرْ
فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ
”(நபியே!) நீர் அம்மக்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பீராக! ஏனெனில், அறிவுரை இறை நம்பிக்கையாளர்களுக்கு பயனளிக்கக் கூடியதாகும்.”
فَذَكِّرْ
إِنْ نَفَعَتِ الذِّكْرَى (9) سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى
“(நபியே!) நீர் அம்மக்களுக்கு அறிவுரை வழங்குவீராக! அறிவுரை பலனளிக்குமாயின்! எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவர் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்.”
கேட்பாளர்களின் கவனத்திற்கு….
إِنَّ
فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ
شَهِيدٌ
”சிந்தித்துணரும் இதயமும், கவனமாக செவிமடுக்கும் திறனும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவுரையில் படிப்பினைகள் பல இருக்கின்றன.”
فَبَشِّرْ
عِبَادِ (17) الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ
أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ
”(நபியே!) சொற்பொழிவுகளைக் கேட்டு, அவற்றில் சிறந்த அம்சத்தைப் பின் பற்றுகிற என் அடியார்களுக்கு நீர் நற்செய்தி அறிவித்து விடுவீராக! இத்தகையவர்களுக்குத் தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கின்றான். அவர்களே விவேகம் உடையவர்கள் ஆவார்கள்.
وَلَقَدْ
ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ
بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ
بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ
”ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும் அவர்கள் அவற்றால் சிந்தித்துணர்வதில்லை.
அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவர்கள் அவற்றால் நல்லவைகளைப் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன; ஆயினும் அவர்கள் அவற்றால் நல்ல விஷயங்களைக் கேட்பதில்லை.
அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன்? அவற்றை விடவும் அவர்கள் மிகவும் கீழானவர்கள்! அவர்கள் தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.”
وَالَّذِينَ
إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
மேலும், தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும் போது அவற்றைக் குறித்து செவிடர்களாயும், குருடர்களாயும் இருப்பதில்லை.”
ஆக, சொற்பொழிவுகளும், நல்லுரைகளும், அறிவுரைகளும் எந்த நோக்கத்தில் இருக்க வேண்டும்? அதன் இலக்கு எதை நோக்கியதாக இருக்க வேண்டும்? என்பதை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.
எனவே தான் பெருமானார் {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயின் மிம்பர் படி மாத்திரமல்லாது, சந்தர்ப்பம் கிடைக்கிற அனைத்து இடங்களிலும் சொற்பொழிவுகள் பல நிகழ்த்தி மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து, ஆன்மிக உணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.
சொற்பொழிவுகளுக்கு மிகுந்த ஆற்றலும், வலிமையும் இருப்பதை உணர்ந்த பெருமானார் {ஸல்} அவர்கள் தங்களின் கடைசி ஹஜ்ஜில் உலக வரலாற்றில் இனி யாருமே ஆற்ற முடியாத ஒரு பேருரையை நிகழ்த்தினார்கள்.
ஆம், அந்த சொற்பொழிவின் வீரியமும், யதார்த்தமும் தான் நபித்தோழர்களை உலகெங்கும் பயணிக்க வைத்தது, இன்று உலகில் 200 கோடி முஸ்லிம்கள் உருவாக காரணமாக அமைந்தது.
ஆம்! அந்த அரஃபா தினத்தின் பிரசங்கத்தை, பேருரையை, சொற்பொழிவை நாம் உணர வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்று குழுமியிருந்த ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அந்த சத்திய மேன்மக்களைப் பார்த்து சொன்ன அந்தக் கட்டளை “பல்லிகூ அன்னீ வலவ் ஆயத்தன்” நமக்குமானது தான்.
நபிகளார் {ஸல்} அவர்கள் ஆற்றிய சில சொற்பொழிகள் இந்த உம்மத்திற்கு ஏற்படுத்திய தாக்கங்கள், அன்றைய ஸஹாபாக்களுக்கு ஏற்படுத்திய பயன் பாடுகள் குறித்து கொஞ்சம் பார்ப்போம்.
ஹுனைன் யுத்தம் ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தமாகும். நபித் தோழர்களுக்கு ஃப்த்ஹ் மக்காவின் அபார வெற்றி, பெரும்பான்மை, ஆயுதபலம் என அத்தனையும் ஒரு விதமான பெருமையை ஏற்படுத்தி இருந்தது.
கிட்டத்தட்ட 12,000 நபித்தோழர்கள் அந்த யுத்தத்தில் பங்கு பெற்றிருந்தனர்.
ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
قال
حدثنا عفان من كتابه
قال حدثنا سليمان يعني ابن المغيرة قال
ثنا ثابت عن عبد الرحمن بن أبي ليلى عن
صهيب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى همس شيئا لا نفهمه
ولا يحدثنا به قال فقال رسول الله صلى الله عليه وسلم فطنتم لي قال قائل نعم قال فإني
قد ذكرت نبيا من الأنبياء أعطي جنودا من قومه فقال من يكافئ هؤلاء أو من يقوم
لهؤلاء أو كلمة شبيهة بهذه شك سليمان قال فأوحى الله إليه اختر لقومك بين إحدى ثلاث إما أن أسلط
عليهم عدوا من غيرهم أو الجوع أو الموت قال فاستشار قومه في ذلك فقالوا أنت نبي
الله نكل ذلك إليك فخر لنا قال فقام إلى صلاته قال وكانوا يفزعون إذا فزعوا إلى
الصلاة قال فصلى قال أما عدو من غيرهم فلا أو الجوع فلا ولكن الموت قال فسلط عليهم
الموت ثلاثة أيام فمات منهم سبعون ألفا فهمسي الذي ترون أني أقول اللهم يا رب بك أقاتل وبك أصاول ولا حول ولا قوة إلا بالله
ஹுனைனில் நபிகளார் ஒரு நாள் சுபுஹ் தொழுகையை தொழவைத்தார்கள். தொழுகையிலோ அல்லது தொழுகையின் முடிவிலோ திடீரென நபி {ஸல்} அவர்கள் முனகும் சப்தத்தை நாங்கள் கேட்டோம்.
அந்த முனகல் சப்தமும், அதன் வார்த்தைகளும் எங்களுக்கு விளங்கவில்லை. அதற்கான காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுது முடித்ததும் இது குறித்து நாங்கள் வினவினோம்.
அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் “நீங்கள் அதை கேட்டீர்களா? என எங்களிடம் வினவினார்கள்.
ஆமாம்,
”நாங்கள் கேட்டோம்” என்று கூறியதும், நபி {ஸல்}
அவர்கள் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்:
”தோழர்களே! நமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நபி, தமது சமுதாயம் பெரும்பான்மை பலத்துடனும், எவராலும் எளிதில் வீழ்த்திட முடியாத ஆற்றலுடனும் வாழ்ந்து வருவதை நினைத்து பெருமிதம் கொண்டார்.
خيـّر الله تعالى ذلك النبي وأصحابه بأمر من ثلاثة أمور
1- أن يسلط عليهم عدواً شديداً يحتل بلادهم ويستبيحها ، فيأسرهم ويستذلهم
2- أو أن يعاقبهم بالجوع الشديد
3- وإما أن يرسل عليهم الموت فيقبض منهم الكثير
1- أن يسلط عليهم عدواً شديداً يحتل بلادهم ويستبيحها ، فيأسرهم ويستذلهم
2- أو أن يعاقبهم بالجوع الشديد
3- وإما أن يرسل عليهم الموت فيقبض منهم الكثير
இந்த பெருமிதம் மிகவும் ஆபத்தானது என்பதை அந்த நபிக்கு அறிவுறுத்திட நினைத்த வல்ல ரஹ்மான் அந்த நபியிடத்தில் “நபியே! உமது சமுதாயம், உம்முடைய பெருமிதத்தால் பெரும்பான்மை பலத்தை இழக்கும் அபாயகரமான ஓர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அவர்களின் பெரும்பான்மை பலத்தை குறைத்திடுவதற்காக பின் வருகிற மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்றை நீரும், உம் சமூக மக்களும் தேர்ந்தெடுத்து நம்மிடம் தெரிவிக்க வேண்டும்.
1. பலமான எதிரிகளை அவர்களின் மீது நான் சாட்டுவதன் மூலம் அவர்களின் எண்ணிக்கையை குறைத்திடுவேன். 2. பசி, பஞ்சம், பட்டினி போன்றவைகளை அவர்களின் மீது சாட்டி சோதித்திடுவேன். 3. இவ்விரண்டுமின்றி இயற்கையான மரணத்தின் மூலம் உம் சமூகத்தின் எண்ணிக்கையை குறைத்திடுவேன்.
இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பீராக! என்று வஹீ மூலம்
அறிவித்தான்.
இறைச் செய்தியை பெற்றுக் கொண்ட அந்த நபி தம் சமூகத்தார்களை ஒன்றிணைத்து நடந்த சம்பவங்களை விளக்கிக் கூறி, இது இறைவனின் கட்டளை மூன்றில் எதை நீங்கள் தேர்வு செய்கின்றீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு அம்மக்கள் “நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதராய் இருக்கின்றீர்கள்! எங்களின் வாழ்விற்கு எது சிறந்த முடிவாக இருக்கும் என்பதை தாங்களே நன்கு அறிவீர்கள். ஆகவே, நீங்கள் தேர்ந்தெடுக்கிற எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் முழு மனதோடு, விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அந்த இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். நீண்ட நேரம் அந்த இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். ஏனெனில், அந்த சமூகத்திற்க்கு ஏதாவது
பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தொழுகையில் ஈடுபடுவார்கள்.
தொழுது முடித்ததும் அல்லாஹ் அவருக்கு தெளிவான முடிவெடுக்கும் ஆற்றலை வழங்கினான்.
தாம் தெரிவு செய்திருக்கிற அந்த முடிவை அல்லாஹ்வின் சன்னிதானத்தில் முறையிட்டார்!
என் இறைவனே! என் உம்மத்தினரின் மீது பலம் வாய்ந்த எதிரிகளை நீ சாட்டி விடாதே! அவர்கள் என் சமூக மக்களை கேவலப்படுத்தி விடுவார்கள்.
என் இறைவனே! என் உம்மத்தினரின் மீது பசி, பட்டினி, பஞ்சம் போன்றவற்றை சாட்டிவிடாதே! அதனால் உன் மீது இருக்கிற நம்பிக்கையில் என் சமூகத்தார்கள் குறைவு செய்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.
என் இறைவனே! இயற்கையான மரணத்தையே என் சமூக மக்களுக்கு வழங்கி விடு! அது தான் கௌரவமாகவும், சிறந்ததாகவும் இருக்கும் என நான் கருதுகின்றேன். அதையே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்” என்று துஆ செய்தார்.
உடனடியாக, அல்லாஹ் அந்த துஆவை கபூல் செய்தான். ஆம்! அன்றைய நாளிலேயே அந்த சமூகத்தின் எழுபதினாயிரம் மக்கள் இறந்து போனார்கள்” என்று கூறிய அண்ணலார் இந்தச் செய்தியை அல்லாஹ் எனக்கு அறிவித்துக் கொடுத்தான்.
أما أنا فأقول : " اللهم بك أقاتل ، وبك أحاول ، وبك أصاول ، ولا
قوة إلا بك
ஆதலால், நான் அல்லாஹ்விடம் “யா அல்லாஹ்! உன் அருளாலேயே நான் சன்மார்க்க சேவை செய்கின்றேன். உன் துணை கொண்டே எதிரிகளை நான் எதிர் கொள்கின்றேன். உன்னையன்றி எனக்கோ, என் சமூகத்திற்கோ எந்த ஆற்றலும், வலிமையும் இல்லை” என்று மன்றாடினேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
فقال أصحابه من بعده : اللهم بك نقاتل ، وبك نحاول ، وبك نصاول ، ولا
قوة إلا بك
وذلت ألسنتهم بها
وذلت ألسنتهم بها
இதைக் கேட்டதும், நபித்தோழர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெருமிதம்
குறைந்து, அல்லாஹ்வின் மீதான அச்சமும், ஆதரவும் சூழ்ந்து கொள்ள அனைவரும் வானை நோக்கி கையை உயர்த்தி ”அல்லாஹ்வே!
உன் அருளாலேயே நாங்கள் எதிரிகளுடன் போர் புரிகிறோம். உன் துணை கொண்டே நாங்கள் தீனின்
சேவையைச் செய்கிறோம். எங்களுக்கு உன்னையன்றி எந்த ஆற்றலும், வலிமையும் இல்லை”. என்று
கூறினர்.
பெருமானார் {ஸல்} அவர்கள் ஆற்றிய உரை உடனடியாக அவர்களின் உள்ளத்தில்
ஊடுருவிச் சென்றது அவர்களின் இதயத்தில் இடம் பெற்றிருந்த பெருமையும் அகன்றது.
அல்லாஹ்வும் ஹுனைனின் வெற்றிக்குப் பிறகு நபித்தோழர்களின் இந்த
செயல் குறித்து விமர்சித்து இறைவசனத்தை இறக்கியருளினான்.
لَقَدْ
نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ
أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ
الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى
رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ
“இதற்கு முன்னர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அல்லாஹ் உங்களுக்கு
உதவி புரிந்துள்ளான். இப்போது, ஹுனைன் போர் நடைபெற்ற நாளிலும் அவன் உதவி செய்ததை நீங்கள்
பார்த்தீர்கள். இன்று உங்களின் பெரும்பான்மை உங்களை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது.
ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் தரவில்லை. மேலும், பூமி
இவ்வளவு விசாலமாக இருந்தும் உங்களுக்கு குறுகிப் போய் விட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகிட்டு
ஓடிவிட்டீர்கள்.
பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது
சாந்தியை இறக்கியருளினான்.
இதே ஹுனைன் யுத்தத்தில் மாநபி {ஸல்} அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை
சொற்பொழிவு நிகழ்த்திடும் வாய்ப்பை நபித்தோழர்களின் இன்னுமொறு செயல் தூண்டியது.
அந்த உரை நபித்தோழர்களின் வாழ்வில், குறிப்பாக அன்ஸாரிகளின் வாழ்வில்
மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
قدوم وفد هوازن
وبعد توزيع الغنائم
أقبل وفد هوازن مسلماً، وهم أربعة عشر رجلاً ورأسهم زهير ابن صُرَد، وفيهم أبو
بُرْقَان عم رسول اللّه صلى الله عليه وسلم من الرضاعة، فأسلموا وبايعوا ثم قالوا
: يا رسول اللّه، إن فيمن أصبتم الأمهات والأخوات، والعمات والخالات، وهن مخازي
الأقوام :
فامنن علينا رسول
اللّه في كرم ** فإنك المرء نرجوه وننتظر
امنن على نسوة قد
كنت ترضعها ** إذ فوك تملؤه من محضها الدرر
وذلك في أبيات .
فقال : ( إن معي من ترون، وإن أحب الحديث إلى أصدقه، فأبناؤكم ونساؤكم أحب إليكم
أم أموالكم ؟ ) قالوا : ما كنا نعدل بالأحساب شيئاً . فقال : ( إذا صليت الغداة ـ
أي صلاة الظهر ـ فقوموا فقولوا : إنا نستشفع برسول اللّه صلى الله عليه وسلم إلى
المؤمنين، ونستشفع بالمؤمنين إلى رسول اللّه صلى الله عليه وسلم أن يرد إلينا
سبينا ) ، فلما صلي الغداة قاموا فقالوا ذلك . فقال رسول اللّه صلى الله عليه وسلم
: ( أما ما كان لي ولبني عبد المطلب فهو لكم، وسأسأل لكم الناس ) ، فقال المهاجرون
والأنصار : ما كان لنا فهو لرسول اللّه صلى الله عليه وسلم . فقال الأقْرَع بن
حابس : أما أنا وبنو تميم فلا . وقال عُيَيْنَة بن حِصْن : أما أنا وبنو فَزَارَة
فلا . وقال العباس بن مِرْدَاس : أما أنا وبنو سُلَيْم فلا . فقالت بنو سليم : ما
كان لنا فهو لرسول اللّه صلى الله عليه وسلم . فقال العباس بن مرداس : وهنتموني .
فقال رسول اللّه
صلى الله عليه وسلم : ( إن هؤلاء القوم قد جاءوا مسلمين، وقد كنت استأنيت
سَبْيَهُمْ، وقد خيرتهم فلم يعدلوا بالأبناء والنساء شيئاً، فمن كان عنده منهن شيء
فطابت نفسه بأن يرده فسبيل ذلك، ومن أحب أن يستمسك بحقه فليرد عليهم، وله بكل
فريضة ست فرائض من أول ما يفيء اللّه علينا ) ، فقال الناس : قد طيبنا لرسول اللّه
صلى الله عليه وسلم . فقال : ( إنا لا نعرف من رضي منكم ممن لم يرض، فارجعوا حتى
يرفع إلينا عُرَفَاؤكم أمركم ) ، فردوا عليهم نساءهم وأبناءهم، لم يتخلف منهم أحد
غير عيينة بن حصن، فإنه أبي أن يرد عجوزاً صارت في يديه منهم، ثم ردها بعد ذلك،
وكسا رسول اللّه صلى الله عليه وسلم السبي قبطية قبطية .
ஹுனைன் யுத்தத்தில்
ஸகீஃப் கோத்திரத்தார்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். ஹவாஸின் கோத்திரத்தார்களில்
பெருமளவு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கைதிகளாக
பிடிக்கப்பட்டனர்.
ஹவாஸின்
கோத்திரத்தார்களின் மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் ஃகனீமத்தாக கிடைத்தன.
இந்நிலையில், ஜுஹைர் இப்னு ஸுர்த்
என்பவரின் தலைமையில் 14 நபர்கள் அடங்கிய ஹவாஸின் குழு ஒன்று இஸ்லாமை ஏற்று நபி {ஸல்} அவர்கள் ஜிஇர்ரானா எனும்
இடத்தில் இருக்கும் போது வந்தனர்.
அந்தக் குழுவில்
நபி {ஸல்} நபி {ஸல்} அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார்.
நபிகளாரிடம்
அவர்கள் பைஅத் செய்த பின்னர் “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்களில் எங்களின்
தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர்.
அவர்களுக்கு
ஏதாவது தீங்கு ஏற்படுமேயானால் அது எங்களின் சமுதாயத்திற்கே ஏற்பட்ட கேவலமாகும்.
ஆகவே, எங்களின் போர்க்
கைதிகளையும், செல்வங்களையும் எங்களிடம்
திருப்பித் தந்து விடுங்கள்” என்றார்கள்.
அதற்கு
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “சுற்றியிருந்த நபித்தோழர்களை சுட்டிக்காட்டி என்னுடன் நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர்.
எனவே, நான் என் தனிப்பட்ட
முடிவை அறிவிக்க முடியாது. ஆகவே, ழுஹர் தொழுகைக்குப் பின்னர் எங்களிடம் வாருங்கள். வந்து, சபையில் எழுந்து நின்று “நாங்கள் அல்லாஹ்வின்
தூதருடைய பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின்
பரிந்துரையால் அல்லாஹ்வின் தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி
கோருகின்றோம்” என்று கூறுங்கள்” என கூறி அனுப்பி வைத்தார்கள்.
ஹவாஸின்
குழுவினர் ழுஹர் தொழுகைக்குப் பின்னர் வந்து நபிகளார் கூறிய படியே சபையில் எழுந்து
கூறினார்கள்.
அப்போது
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை போற்றிப்
புகழ்ந்து விட்டு, “அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகின்றேன்: உங்களுடைய இந்தச்
சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர்.
இவர்களில்
(நம்மிடம்) போர்க்கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை
நான் சிறந்த்தாகக் கருதுகின்றேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச்
சம்மதிக்கின்றார்களோ அவர் திருப்பித் தந்து விடட்டும்.
அல்லாஹ் எதிர் காலத்தில் முதலாவதாக
தரவிருக்கின்ற (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற
வரை அவர்களைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்துக்
கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
பின்பு, ”எனக்கும் அப்துல்
முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் அவர்களிடமே திருப்பித் தந்து
விடுகின்றேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
இதனைக் கேட்ட
அன்ஸாரிகளும், முஹாஜிர்களும் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கும் சொந்தமானது தான்!
நாங்களும் இதற்கு உடன் படுகிறோம்” என்றார்கள்.
ஆனால், கூட்டத்திலிருந்த அக்ரஃ
இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் “நானும், பனூதமீம் கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். உயய்னா இப்னு
ஹிஸ்ன் (ரலி) அவர்கள் “நானும் ஃபஸாரா கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள்.
இது போன்றே
அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரலி) அவர்கள் “நானும் பனூ ஸுலைம்
கிளையாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். அப்போது, பனூ ஸுலைம் கிளையார்கள்
இடைமறித்து “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரியதை தந்து விடுகிறோம்” என்றனர்.
மீண்டும்
அண்ணலார் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று “இவர்கள் இஸ்லாத்தை ஏற்று
நம்மிடம் வந்திருக்கின்றார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் கனீமா
பங்கீட்டை தாமதம் செய்தேன்.
நான் இவர்களிடம்
பொருள் வேண்டுமா? அல்லது கைதிகள் வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் “எங்களின் குடும்பம் தான் வேண்டும்” என்று கூறி விட்டனர். அதற்கு நிகராக
அவர்கள் எதையும் கருதவில்லை.
எனவே, யார் கைதிகளை எவ்வித
பகரமும் இன்றி விடுவிக்கின்றார்களோ அவர் இனிதே செய்திடட்டும். அல்லது பகரம் பெற
விரும்பினால், அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து
அவருடைய பங்கிற்கு பகரமாக ஆறு பங்குகள் வழங்கப்படும்” என்று கூறினார்கள்.
இதனைக் கேட்டுக்
கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக “அல்லாஹ்வின் தூதரே!
எந்தப்பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை விடுவித்திட முன் வருகின்றோம்”
என்று கூறினார்கள்.
அதற்கு
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உங்களில் முழுமையான திருப்தியுடன் செய்பவர் யார்? திருப்தியின்றி செய்பவர்
யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் சென்று ஆலோசித்து
உங்கள் தலைவர்களிடம் உங்கள் முடிவை தெரிவித்து விடுங்கள்.
உங்களின்
தலைவர்கள் வந்து என்னிடம் உங்களின் முடிவை தெரிவிக்கட்டும்!” என்று கூறி
அமர்ந்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களிடம் தலைவர்கள் வந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாகத்
தெரிவித்தார்கள்.
(நூல்: புகாரி, பாடம், பாபு கவ்லில்லாஹி “வயவ்ம ஹுனைனின்.. தஹ்தீப்
ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:241,242. ரஹீக் அரபி, பாடம், குதூமு ஹவாஸின்...)
இன்னும் ஏராளமான சந்தர்ப்பங்களில் நபி {ஸல்} அவர்கள் நபித்தோழர்களிடையே
சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.
பத்ரில் வெறும் 313 நபித் தோழர்களால் 1000 எதிரிகளை துணிவாக எதிர் கொள்ளத்
தயார் படுத்தியது நபிகளாரின் வீரம் சொரிந்த உரை தான்.
ஃபத்ஹ் மக்காவில் அண்ணலார் பொது மன்னிப்பு வழங்கி ஆற்றிய பேருரை “நபித்
தோழர்கள் எந்த அளவுக்கு அண்ணலாரின் உரைகளுக்கு முக்கியத்துவம் வழங்கினார்கள்
என்பதை உலகிற்கு பறை சாற்றியது.
அது போன்று தான் அரஃபா தினத்தன்று அண்ணலார் ஆற்றிய உரை அந்த சத்திய தோழர்களின்
இதயத்தில் ஊடுருவிச் சென்று எந்த இடத்தில் எந்த திசையில் நின்றார்களோ, அந்த திசை
நோக்கி பயணம் மேற்கொண்டு இன்று இந்த இந்தியா வரை உலகில் சூரியன் அஸ்தமிக்காத தேசம்
வரை சத்திய ஏகத்துவ சன்மார்க்கத்தை கொண்டு வந்து சேர்த்தனர்.
நபி {ஸல்} அவர்கள் அரஃபா பேருரையை, சொற்பொழிவை உலகெங்கும் எடுத்துச் சென்றிட
வேண்டும் என்ற இலக்கோடும், நோக்கோடும் நிகழ்த்தினார்கள்.
அந்த உரையை நிகழ்த்திய நாளை நாம் நினைவு கூர்வதோடு, அந்த உரையின்
முக்கியத்துவத்தை உலக சமூகத்திற்கு எடுத்துச் சென்றிட, சேர்த்து வைத்திட நாம்
கடமைப் பட்டிருக்கின்றோம்.
"
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً ،
அது தான் அண்ணலாரின் ஆசையும், ஆணையும் கூட…
அல்லாஹ் நம் அனைவருக்கும் சொல்வது போன்று செயல் படுவதற்கும், கேட்பதில்
சிறந்ததை தேர்வு செய்து செயலாற்றுவதற்கும் தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!
அருமை
ReplyDeleteபுல்லரித்து விட்டது மிக அருமை
ReplyDeleteஅல் ஹம்து லில்லாஹ்
ReplyDelete👍
ReplyDelete