உயர்வான, வெற்றிகள்
பல நிறைந்த மனித
வாழ்க்கையின் பிண்ணனியில் தியாகம்
எனும் மாபெரும் அர்ப்பணிப்பு
அதிகமாகவே இடம் பெற்றிருக்கும்.
மதிப்பும், விருப்பமும்
நிறைந்த எத்தனையோ விஷயங்களை
அர்ப்பணித்த பின்னர் தான்
வாழ்க்கையில் மனிதன் வெற்றி
பெறுகின்றான்.
சாதாரண மனித
வாழ்வுக்கே அர்ப்பணிப்பும், தியாகமும்
அத்தியாவசியம் என்றால் ஈமானிய
உணர்விற்கும், இஸ்லாமிய வாழ்விற்கும்
அர்ப்பணிப்பும், தியாகமும் தான்
உயிர் நாடியாகும், அற்புதமான
திறவுகோலாகும்.
ஈமானை அடிப்படையாகக்
கொண்ட ஓர் உன்னதமான
வாழ்விற்கு ஆதாரமாகவும், அடையாளமாகவும்,
திறவுகோலாகவும் இருக்கின்ற காரணிகளை
அல்லாஹ் அல்குர்ஆனில் விவரிக்கின்ற
போது மூன்று விஷயங்களை
கூறுகின்றான்.
ஒன்று, தொழுகை;
மற்றொன்று, ஈகை, மூன்றாவது,
அர்ப்பணிப்பு – தியாகம்.
1. தொழுகை இஸ்லாமிய
வாழ்வின் அடையாளமாகும்.
فَإِنْ
تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ
وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
”ஆயினும், எவர்கள்
பாவமீட்சி பெற்று தொழுகையை
நிலை நாட்டி, ஜகாத்தும்
கொடுத்து வருகின்றார்களோ, அத்தகையோர்
தாம் தீனில் – இறை
மார்க்கத்தில் உங்களின் சகோதரர்களாவார்கள்.” (அல்குர்ஆன்:9:11)
2. ஈகை இஸ்லாமிய
வாழ்வின் ஆதாரமாகும்.
إِنَّ
سَعْيَكُمْ لَشَتَّى (4) فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى (5) وَصَدَّقَ
بِالْحُسْنَى (6) فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى (7) وَأَمَّا مَنْ بَخِلَ
وَاسْتَغْنَى (8) وَكَذَّبَ بِالْحُسْنَى (9) فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى (10)
“நிச்சயமாக, உங்களுடைய
முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன.
எனவே, எவர் இறைவழியில்
வாரி வழங்கினாரோ, மேலும்,
இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகியும் இருக்கின்றாரோ,
மேலும், சத்தியத்தை உண்மையென
ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு
இலகுவான (இஸ்லாமிய) வாழ்வின்
பாதையை நாம் இலகுவாக்குவோம்.
ஆனால், எவர்
இறைவழியில் வாரிவழங்குவதில் கஞ்சத்தனம்
செய்கிறாரோ, மேலும், தன்
இறைவனை பொருட்படுத்தாமல் நடந்து
கொள்கின்றாரோ, மேலும், சத்தியத்தை
பொய்யெனக் கருதுகின்றாரோ அவருக்கு
கடினமான வாழ்வை நோக்கிய
பாதையை எளிதாக்குவோம்.” (அல்குர்ஆன்:92:4-10)
3. தியாகம் ஈமானிய
வாழ்வின் திறவுகோலாகும்.
إِنَّمَا
الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا
وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ
الصَّادِقُونَ
“உண்மையில், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதும்,
அவனுடைய தூதரின் மீதும்
நம்பிக்கை கொள்கின்றார்கள். பிறகு,
அவர்கள் கொண்ட அந்த
நம்பிக்கையில் அவர்கள் (அணுவளவும்)
ஐயம் கொள்வதில்லை.
மேலும், தங்களுடைய
செல்வங்களாலும், தங்களின் உயிர்களாலும்
அல்லாஹ்வின் வழியில் அர்ப்பணிக்கின்றார்கள்.
அத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.” (அல்குர்ஆன்:49:15)
சுவனத்தின் சுகந்தத்தை
நுகரவும், நாசகார நரகத்தை
விட்டு விடுதலை பெறவும்
அடிப்படை அம்சமாக அல்லாஹ்
அல்குர்ஆனில் அர்ப்பணிப்பு மற்றும்
தியாகத்தைக் குறிப்பிடுகின்றான்.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ
عَذَابٍ أَلِيمٍ (10) تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي
سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ
كُنْتُمْ تَعْلَمُونَ
”இறைநம்பிக்கையாளர்களே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக்
காப்பாற்றக்கூடிய வியாபாரத்தை
உங்களுக்கு நான் அறிவித்து
தரட்டுமா? அல்லாஹ்வின் மீதும்,
அவனுடைய தூதரின் மீதும்
நம்பிக்கை கொள்ளுங்கள்!
மேலும், அல்லாஹ்வின்
வழியில் உங்கள் பொருள்களாலும்,
உயிர்களாலும் தியாகம் செய்யுங்கள்.
நீங்கள் அறியக்கூடியவர்களாயின், இதுவே
உங்களுக்குச் சிறந்ததாகும்.” (அல்குர்ஆன்:61:11)
إِنَّ
اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ
لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ
وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ
أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي
بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
”நிச்சயமாக, அல்லாஹ்
இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின்
உயிர்களையும், உடமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு
வாங்கிக் கொண்டான்.
அவர்கள் அல்லாஹ்வின்
வழியில் போர் புரிகின்றார்கள்;
கொல்கின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள். அவர்களுக்கு
சுவனம் கிடைக்கும் எனும்
வாக்குறுதி அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள
ஒரு திடமான வாக்குறுதியாகும்.”
(அல்குர்ஆன்:9:111)
இஸ்லாம் என்றாலே
ஒரு முஸ்லிம் தன்னை
முழுமையாக இறைவனிடம் சமர்ப்பித்து
விடுதல் எனும் பொருளைக்
கொண்டதாகும்.
ஏதோ சில
உடமைகளை மட்டும் சமர்ப்பித்து
விடுவதால் உண்மை முஸ்லிமாக
அவர் அறியப்பட மாட்டார்.
அல்லாஹ் எங்கெல்லாம்
அர்ப்பணிப்பு மற்றும் தியாகம்
குறித்து ஆணையிடுகின்றானோ அங்கெல்லாம்
செல்வத்தையும், உயிரையும் சேர்த்தே
கூறுகின்றான்.
ஒரு முஸ்லிமின்
அர்ப்பணிப்பில், தியாகத்தில் அல்லாஹ்
இந்த இரண்டு அம்சங்களையுமே
எதிர்பார்க்கின்றான்.
ஆதலால் தான்
சத்திய சன்மார்க்கத்திற்காக செல்வத்தையும்,
உயிர்களையும் வாரிவழங்குவதில் மேன்மக்களான
ஸஹாபாக்கள் பேரார்வம் கொண்டிருந்தனர்.
அல்லாஹ்வின் திருப்திக்காக
தங்களின் ஒட்டு மொத்த
வாழ்க்கையையும் அர்ப்பணிக்க கன
நேரம் கூட அவர்கள்
தாமதிக்க வில்லை.
செல்வத்தை வாரி
வழங்குவதில் ஸஹாபாக்களின் தியாகம்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் மதீனாவிற்கு வந்த
உடன் முதன் முதலில்
அந்த மக்களுக்கு ஈகைச்
சிந்தனையையும், அர்ப்பணிப்பு உணர்வையும்
ஏவினார்கள், தூண்டினார்கள்.
அதன் விளைவாக
மார்க்கமும் மேலோங்கியது. சமுதாய
மக்களின் வாழ்க்கையின் தரமும்
உயர்ந்தது.
அந்த மக்கள்
எல்லா நிலைகளிலும் இந்த
இரண்டு அம்சங்களையும் பற்றிப்
பிடித்துக் கொண்டிருந்தார்கள் என
வரலாறு பதிவு செய்திருக்கின்றது.
அல்லாஹ்வின் ஒரேயொரு
கட்டளை அந்த பெருமக்களின்
வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றிப்போட்டது.
எந்த அளவுக்கெனில்,
இருக்கும் போதும் அள்ளிக்
கொடுத்தார்கள். இல்லாத போதும்
கொடுக்க முடியாமல் போனது
குறித்து ஏங்கினார்கள்.
அடியோடு மாற்றிய
அந்த இறைக்கட்டளை இது தான்.
لَنْ
تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ
شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
அல்லாஹ் கூறுகின்றான்:
“உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில்
அர்ப்பணிக்காத வரை நீங்கள்
நன்மையினை அடைந்திட முடியாது.
மேலும், எதனை நீங்கள்
அர்ப்பணித்தாலும் திண்ணமாக,
அல்லாஹ் அதனை நன்கு
அறிபவனாக இருக்கின்றான்.”
இந்த இறை
வசனம் இறங்கிய பின்னர்
ஒவ்வொரு நபித்தோழர்களும் அறத்திலும்,
அர்ப்பணிப்பிலும் தங்களை
ஈடுபடுத்தினார்கள்.
وكذلك
فعل زيد ابن حارثة، عمد مما يحب إلى فرس يقال له (سبل) وقال: اللهم إنك تعلم أنه
ليس لي مال أحب إلي من فرسي هذه، فجاء بها [إلى ] «2» النبي صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فقال: هذا في سبيل الله. فقال لأسامة بن زيد (اقبضه). فكأن
زيدا وجد من ذلك في نفسه. فقال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن
الله قد قبلها منك). ذكره أسد بن موسى.
ஜைத்
இப்னு ஹாரிஸா (ரலி)
அவர்கள் ”தங்களது வீட்டில்
இருந்து அழுது புலம்பியவர்களாக யாஅல்லாஹ்! என்னிடத்திலே
சொல்லிக் கொள்ளும் அளவிற்கு
பணம் ஒன்றும் இல்லை.
என்னிடம் நான் மிகவும்
நேசிக்கின்ற ஒன்றாக இதோ
இந்த குதிரை மட்டும்
தான் இருக்கின்றது. இதோ
அதையும் உனக்காக அர்ப்பணித்து
விடுகின்றேன்” என்று சொல்லியவராக
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களிடம் வந்து குதிரையை
கொடுத்தார்கள்.
அதைப் பெற்றுக்
கொண்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”ஜைதே! அல்லாஹ் உம்மிடமிருந்து இந்த ஈகையை
அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்.” என்று கூறினார்கள்.
يحدثنا الذهبي عن الكرماء
الثلاثة وهم عبد الله بن جعفر وعرابة الأوسي وقيس بن سعد بن عبادة قال اجتمع نفر
في الحرم فقالوا من أكرم الناس وقال أحدهم بل عرابة الأوسي أكرم منه قال الثالث
أكرمهم هو قيس بن سعد بن عبادة.
قال أحد الحكماء في الحرم أنا أحكم بينكم ليذهب كل واحد منكم إلى الحرم وليغير ملابسه ويلبس لباس فقير ويسأل صاحبه عطية وبعد سنة نجتمع هنا لكي ننظر ماذا أعطى صاحب كل واحد له.
فذهب صاحب قيس بن سعد إلى المدينة وفي الطريق لبس ملابس بالية وذهب إليه في المدينة المنورة وأتى منزله ودق الباب فخرجت الجارية وكان قيس نائما فقالت ماذا تريد قال أنا رجل فقير مسكين أريد صاحبك قالت هو نائم وخذ ألف دينار فأخذها ورجع.
أما صاحب عرابة الأوسي فقد ذهب إليه ووجده قد خرج إلى صلاة العصر وكان عرابة شيخا كبيرا أعمى وهو يعتمد على اثنين من غلمانه فقال له صاحبه أنا فقير منقطع مسكين قصدت الله ثم قصدتك فقال عرابة إن الحقوق أخذت مالي وما بقي عندي شيء إلا هذين الغلامين فهما لك فأخذ الخادمين وذهب.
أما عبد الله بن جعفر فأتاه صاحبه ووجده قد خرج إلى الشام فقال له أنا رجل مسكين قصدت الله ثم قصدت قال له عبد الله لو أتيتني في المدينة لأخذت شيئا أكثر ما عندي إلا هذا الفرس والسيف خذهما وسوف أبقى تحت ظل الشجرة والناس سيعرفونني.
ذهب الثلاثة إلى مكة ليتحاكموا فحكم بينهم أن أجودهم عرابة الأوسي لأنه ما بقي عنده إلا الغلامين فأعطاهما.
هؤلاء هم من سادات الأجواد لكن أجود منهم من جاد بنفسه وباع نفسه بيعا لا رجع
قال أحد الحكماء في الحرم أنا أحكم بينكم ليذهب كل واحد منكم إلى الحرم وليغير ملابسه ويلبس لباس فقير ويسأل صاحبه عطية وبعد سنة نجتمع هنا لكي ننظر ماذا أعطى صاحب كل واحد له.
فذهب صاحب قيس بن سعد إلى المدينة وفي الطريق لبس ملابس بالية وذهب إليه في المدينة المنورة وأتى منزله ودق الباب فخرجت الجارية وكان قيس نائما فقالت ماذا تريد قال أنا رجل فقير مسكين أريد صاحبك قالت هو نائم وخذ ألف دينار فأخذها ورجع.
أما صاحب عرابة الأوسي فقد ذهب إليه ووجده قد خرج إلى صلاة العصر وكان عرابة شيخا كبيرا أعمى وهو يعتمد على اثنين من غلمانه فقال له صاحبه أنا فقير منقطع مسكين قصدت الله ثم قصدتك فقال عرابة إن الحقوق أخذت مالي وما بقي عندي شيء إلا هذين الغلامين فهما لك فأخذ الخادمين وذهب.
أما عبد الله بن جعفر فأتاه صاحبه ووجده قد خرج إلى الشام فقال له أنا رجل مسكين قصدت الله ثم قصدت قال له عبد الله لو أتيتني في المدينة لأخذت شيئا أكثر ما عندي إلا هذا الفرس والسيف خذهما وسوف أبقى تحت ظل الشجرة والناس سيعرفونني.
ذهب الثلاثة إلى مكة ليتحاكموا فحكم بينهم أن أجودهم عرابة الأوسي لأنه ما بقي عنده إلا الغلامين فأعطاهما.
هؤلاء هم من سادات الأجواد لكن أجود منهم من جاد بنفسه وباع نفسه بيعا لا رجع
ஒரு நாள் சிலர் கஅபாவின்
அருகே ஒன்று கூடி ”நம்மிடையே வாழ்கிற மேன்மக்களான நபித்தோழர்களில் அல்லாஹ்விற்காக
வாரி வழங்குவதில் முதலாம் இடத்தில் இருப்பவர்கள் யார்?” என பேசிக் கொண்டிருந்தனர்.
எல்லோரும் மூன்று
நபித்தோழர்களின் பெயர்களை குறிப்பிட்டு மூவரில் ஒவ்வொருவரையும் இவர் தாம்
முதலாமவர் என்று தர்க்கித்துக் கொண்டனர்.
அப்போது, அங்கே
வந்த அறிஞர்களில் ஒருவர் இந்த விஷயத்தில் நான் ஒரு எளிய வழியைக் கூறுகிறேன். அதன்
மூலம் உங்களின் இந்த வாதத்திற்கு விடை கிடைத்திடும். என்ன அந்த எளிய முறையைக்
கூறவா?” என்று கேட்டார்கள்.
கூறுங்கள் என
அனைவரும் ஒருமித்துக் கூறினார்கள். அப்போது, அந்த அறிஞர் “உங்களில் ஒருவர் ஏழை
போன்ற தோற்றத்தில் மூவரிடமும் தனித்தனியே சென்று தான் ஏழ்மை நிலையில்
இருப்பதாகவும், அல்லாஹ்விற்காக ஏதாவது உதவி செய்யுங்கள்” என்று கேட்க வேண்டும்.
பின்னர் என்ன
நடக்கின்றது? என்பதை அவர் இங்கு வந்து விளக்க வேண்டும். அதன் பிறகு யார் மிகச்
சிறந்த கொடைவள்ளல், வாரி வழங்குவதில் முதலாமவர் என்பதை தீர்மானிக்கலாம்” என்று
கூறினார்.
அங்கே ஒருவர் தான்
சென்று வருவதாகக் கூறினார். அந்த மூன்று நபித்தோழர்களும் அப்போது மதீனாவில்
வசித்து வந்தார்கள்.
மதீனாவிற்கு
பயணமானார் அந்த மனிதர். முதலாவதாக கைஸ் இப்னு ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.
வீட்டின் முன் நின்று
வாசல் கதவை தட்டினார். உள்ளிருந்து கைஸ் (ரலி)
அவர்களின் பணிப்பெண் கதவைத் திறந்து, என்ன வேண்டும்
உமக்கு? என்ன காரணமாக இங்கு வந்துள்ளீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு, அவர் நான் கைஸ் (ரலி) அவர்களைச் சந்திக்க வந்திருக்கின்றேன். அவரைப் பார்க்க
வேண்டும்” என்றார்கள்.
கைஸ் (ரலி) அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது சந்திக்க இயலாது என்றார் அப்பெண்மணி.
இது கேட்டதும், தம் முகத்தை மிகவும் வாடிய தோற்றத்தில் வைத்துக் கொண்டு அப்படியென்றால்
இப்போது அவர்களைப் பார்க்க முடியாதா? என இரக்கமாகக் கேட்டார்கள்.
இல்லை, பார்க்க முடியாது. உம்முடைய தேவை என்னவோ
அதை எம்மிடம் கூறும்! என்றார் அப்பெண்மணி.
உடனே, அவர் நான் ஒரு ஏழை, என்னிடம் வாழ்க்கைக்கு
தேவையான எதுவும் இல்லை. கைஸ் (ரலி)
அவர்களிடம் இந்த விவரத்தைக் கூறி, ஏதேனும் உதவிப்
பற்றுச் செல்லலாம் எனும் ஆவலுடன் வந்தேன். ஆனால், அவரைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே! எனக் கூறினார்.
இதைக் கேட்டதும் அப்பெண்மணி
இவ்வளவு தானா? உமது இந்த நிலையை மாற்றிட என்னுடைய எஜமான் வந்து
தான் உமக்கு உதவி செய்ய வேண்டும் என்று இல்லை. உம் போன்றவர்கள்
வந்தால் அவர்களின் தேவையை நிறைவேற்றிட எமக்கு அனுமதியும் அதிகாரமும் தந்திருக்கின்றார்.
கொஞ்சம் காத்திருங்கள்! இதோ வருகிறேன். என்று கூறிய அப்பணிப்பெண்
உள்ளே சென்றார்.
வெளியே வந்த அப்பெண்மணி, யாசித்த அம்மனிதரை அழைத்து இந்தாருங்கள்! 1000 தீனார் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த உயர்தர ஒட்டகத்தையும்
ஓட்டிச் செல்லுங்கள்! உம் வாழ்க்கைத் தரத்தை இதைக் கொண்டு உயர்த்திக்
கொள்ளுங்கள்! என்று கூறி அதை அவரிடம் ஒப்படைத்தார்கள்.
அதை வாங்கிக் கொண்ட
அவர் அதைப் பத்திரப் படுத்தி வைத்து விட்டு, நேராக அப்துல்லாஹ்
இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்களின் இல்லத்திற்குச்
சென்றார்கள்.
வீட்டின் முன்னால்
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
ஷாமிற்கு வியாபார நிமித்தமாக பயணம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்கள்.
அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் வந்த அந்த நபர்,
தம் தேவைகளை முறையிட்டார்.
அது கேட்ட அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தாம்
ஷாமிற்கு புறப்பட தயார் படுத்தி இருந்த இரண்டு ஒட்டகத்தையும் அதில் இருந்த பொருட்கள்
மற்றும் பொற்காசுகள் அனைத்தையும் கொடுத்து விட்டார்கள்.
அவரிடம் இருந்து வாங்கிய
பொருட்கள் மற்றும் குதிரைகளை பெற்றுக் கொண்ட அவர் அவைகளை பத்திரப் படுத்தி வைத்துக்
கொண்டு, மூன்றாமவரிடம் சென்றார்.
அராபதுல் அவ்ஸீ (ரலி) அவர்கள் தாம் அந்த மூன்றாமவர்.
இரு கண்களிலும் பார்வை இன்றி காலம் கழித்துக் கொண்டிருந்த அவர்கள் தம்
இரு பணியாளர்களின் உதவியோடு அஸர் தொழுகைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
வழியில் அந்த நபர்
அராபதுல் அவ்ஸீ (ரலி) அவர்களைச் சந்தித்து
தம் தேவைகளைக் கூறினார்.
இது கேட்டதும் தான்
தாமதம் உடனடியாக தம் இரு பணியாளர்களையும் இதோ இவர்களை வைத்துக் கொள்ளுங்கள்! தற்போது இவர்கள் இருவரைத் தவிர கொடுப்பதற்கு வேறெதுவும் என்னிடம்
இல்லை! என்று கூறி இரு பணியாளர்களையும் கொடுத்தார்கள்.
கொடுத்து விட்டுச்
சென்ற அந்த நபித்தோழரால் தொடர்ந்து நடந்து செல்ல முடியவில்லை. பார்வை தெரியாததால் கீழே விழுந்து கையில், காலில் காயம் ஏற்பட்டது.
இந்த காட்சியைக் கண்ட
அந்த நபர், உணர்ச்சி வசப்பட்டு அவர்களின் அருகே வந்து
“என்னை விட நீங்கள் தான் இப்போது அதிக தேவை உள்ளவராக இருக்கின்றீர்கள்.
இதோ உங்களின் அடிமைகளை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள்.
அது கேட்ட அராபதுல்
அவ்ஸீ (ரலி) அவர்கள் நாம் கொடுத்த
எந்த பொருளையும் திரும்ப வாங்குவதில்லை, அல்லாஹ்விற்காகவே கொடுத்தேன்.
உங்களுக்கு தேவை இல்லை எனும் போது நான் கொடுத்த ஒன்றை திரும்ப எடுத்துக்
கொள்ள அனுமதி இல்லை. எனவே, நான் அந்த இரு
அடிமைகளையும் அல்லாஹ்விற்காக விடுதலை செய்கிறேன்” என்று கூறியவராக
தவழ்ந்து, தவழ்ந்து பள்ளிவாசலை நோக்கி சென்றார்கள்.
அந்த மனிதர் தான் பத்திரப்
படுத்தி வைத்திருந்த அத்துனை பொருட்களையும், ஒட்டகம் மற்றும்
குதிரைகளையும் ஓட்டிக் கொண்டு மக்கா வந்து சேர்ந்தார்.
பின்னர் தாம் வந்து
சேர்ந்து விட்ட செய்தியை தம் நண்பர்களுக்கும், அறிஞருக்கும்
சொல்லி அனுப்பி ஹரமில் ஒன்று கூடுமாறு கேட்டுக் கொண்டார்.
முன்பு போல் ஹரமில்
ஒன்று கூடிய தம் தோழர்கள் மற்றும் அறிஞரிடத்தில் தாம் கண்ட காட்சிகளை ஒன்று விடாமல்
விவரித்தார்.
அராபத்துல் அவ்ஸீ (ரலி) அவர்களின் செய்தியைக் கூறும் போது சபையில்
இருந்த அனைவரும் தேம்பித்தேம்பி அழுதனர்.
இப்போது அந்த அறிஞர்
சொன்னார். மூன்று பேருமே வாரி வழங்குவதில் சளைக்காதவர்கள்
என்றிருந்தாலும் தம்மிடம் கொடுப்பதற்கு தமக்கு உதவி செய்கிற வேலைக்காரர்களைத் தவிர
வேறெவரும் இல்லை எனும் நிலை இருந்த போதும் கூட இருப்பதைக் கொடுத்து விட்டு தவழ்ந்து,
தவழ்ந்து சென்றாரே அந்த அராபத்துல் அவ்ஸீ (ரலி)
அவர்களே அல்லாஹ்விற்காக வாரி வழங்குவதில் முதலாமவர். மிகச் சிறந்தவர் எனக் கூறி அந்த வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.
இந்தச் செய்தியை அல்லாமா
தஹபீ (ரஹ்) அவர்கள் ஸியரு அஃலாமின்
நுபலா எனும் நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
அல்லாஹ் ஏன் உயிரோடு
செல்வத்தை இணைத்துக் கூறினான் என்றால் உண்மையில் ஒரு மனிதன் தன் உயிருக்கு இணையாக, நிகராக மதிப்பது பொருளாதாரத்தையும் செல்வத்தையும் தான்.
எனவே, அர்ப்பணிப்பு, தியாகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில்
செல்வத்தையும் உயிரையும் அல்லாஹ்வின் வழியில் அர்ப்பணம் செய்ய முன் வர வேண்டும்.
இந்த தியாகத் திருநாள்
சிந்தனையாக இந்த நல்ல நிகழ்வை நம் மனதில் பதிவு செய்வோம்.
அல்லாஹ் நம் எல்லோரையும்
அவனுக்காக, அவனின் மார்க்கத்திற்காக தியாகம் செய்கிற நல்லோர்களாக
ஆக்கியருள்புரிவானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!
இந்த கட்டுரை என் உள்ளத்தை ரணமாக்கி விட்டது! சூப்பர் மௌலானா!
ReplyDelete