Thursday, 2 October 2025

காஸா மக்களுக்காக துஆ செய்வோம்!

 

காஸா மக்களுக்காக துஆ செய்வோம்!



அல்ஹம்துலில்லாஹ்! நேற்றையதினம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் வேண்டுகோளை ஏற்று தமிழகமெங்கும் "காஸா மக்களின் துயர் நீங்கிட" நஃபிலான நோன்பு நோற்று அவர்களுக்காக துஆ செய்யப்பட்டது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் சகோதர முஸ்லிம்களான காஸா மக்களின் துயரை நீக்கி சுபிட்சமான வாழ்க்கையை அம்மக்களுக்கு வழங்கியருள்வானாக!

இந்த மார்க்கத்தின் உயரிய அம்சங்களில் ஒன்று பிறர் நலம் நாடுவதும் அக்கறை கொள்வதுமாகும்.

பிறர் நலனில் அக்கறை கொள்வதோடு நின்று விடாமல், அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிவதை இஸ்லாம் உயர்ந்த பண்பாடாக அடையாளப் படுத்துகின்றது. 

அன்றாடம் கடைப்பிடிக்கத் தக்கவையாக இஸ்லாம் கற்றுத் தந்த பல நடைமுறைகளில் பிறருக்காக துஆ செய்யும் பண்பாடு வேறெந்த சமயங்களிலும் முக்கியத்துவம் தரப்படாத கலாச்சாரமாகும்.

நமக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைப் போல பிறருக்காகவும் பிரார்த்தனை புரிய வேண்டும். அதை அல்லாஹ் நல்ல பண்பாக, பாராட்டிக் கூறுகிறான். மார்க்கத்திற்காக சொந்த ஊரை விட்டு ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணம் மேற்கொண்டு மதீனா வந்த முஹாஜிர்களுக்காக மதீனாவை பூர்வீகமாகக் கொண்ட அன்சாரி நபித்தோழர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளதை அல்லாஹ் திருக்குர்ஆனில் சிலாகித்துக் கூறுகிறான்.

وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுகின்றனர். ( அல்குர்ஆன்: 59:10 )

நபி (ஸல்) அவர்களும் இந்தப் பண்பை உயரிய பண்பாகவும் இறைவனது அருளுக்கு நம்மை உரித்தாக்கும் பண்பாகவும் குறிப்பிடுகிறார்கள்.

பிறருக்காக நாம் நன்மை வேண்டி துஆ செய்தால் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் நமக்காக இறைவனிடம் நன்மையை வேண்டுவார் என்று நபிகளார் இதன் சிறப்பை எடுத்துரைக்கின்றார்கள்.

حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ، قَالَتْ: حَدَّثَنِي سَيِّدِي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ‘‘ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’’ என்று கூறுகிறார். இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா அவர்களின் மனைவி) உம்முத்தர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )

பிற முஸ்லிம்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் துஆச் செய்வதை இஸ்லாம் நமக்கு கடமையாக்கி இருக்கிறது.

1) ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் புகழ்வதைக் கேட்டால்...

தும்மிய ஒருவர் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறினால் அவருக்காக நாம் யர்ஹமுகல்லாஹ் என்று பிரார்த்திக்க வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர்அல்லது நண்பர்யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ்என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி ) 

قَدِمْتُ الشَّامَ، فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ، فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ، فَقَالَتْ: أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ، فَقُلْتُ: نَعَمْ، قَالَتْ: فَادْعُ اللهَ لَنَا بِخَيْرٍ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: ” دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ

ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் அவர்கள் கூறுகிறார்கள்: தர்தா அவர்கள், ஸஃப்வான் அவர்களின் மனைவியாக இருந்தார். ஸஃப்வான் கூறுகிறார்: நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ‘‘இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?’’ என்று கேட்டார். நான் ‘‘ஆம்’’ என்றேன்.

அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார்.

அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், ‘இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்’’ என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

2) தமக்கு உதவி செய்த பிற முஸ்லிமுக்கு....

ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்குப் பிரார்த்தனை செய்வதை மாநபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ بِمَكَّةَ وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَا حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ عَنْ سُعَيْرِ بْنِ الْخِمْسِ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ جَيِّدٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أُسَامَةَ بْنِ زَيْدٍ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் பிரார்த்தித்துக் கூறினால் அவர் நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார். அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி) ( நூல் : திர்மிதீ )

فَمَرَّ الْأَعْرَابِيُّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي أَصْحَابِهِ فَقَالَ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَوْفَيْتَ وَأَطْيَبْتَ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُولَئِكَ خِيَارُ عِبَادِ اللَّهِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُوفُونَ الْمُطِيبُونَ رواه أحمد

நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள். நபியவர்கள் தான் பேசியபடி பழங்களைக் கிராமவாசியிடம் அழகிய முறையில் ஒப்படைத்தார்கள். அந்தக் கிராமவாசி தனக்குரியதை பெற்றுக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) நீங்கள் (பேசிய படி) அழகிய முறையில் நிறைவேற்றி விட்டீர்கள் என்று கூறினார். (ஹதீஸின் கருத்து) அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ( நூல் : அஹ்மத்)

3) பிற முஸ்லிம்களின் பாவ மன்னிப்பிற்காக...

رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ

"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" (என்று இப்ராஹீம் பிரார்த்தித்தார்). ( அல்குர்ஆன்: 14: 41 )

رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًۭا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارًا

 

"என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும் நூஹ் பிரார்த்தித்தார்).

4) நோய் வாய்ப்பட்டிருக்கும் பிற முஸ்லிம்களுக்காக....

اَللّهُمَّ رَبَّ النَّاسِ اَذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ

الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமாஎன்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ”யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.” (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)

5) பிற முஸ்லிம்களின் ஜனாஸா வில் பங்கேற்று பாவமன்னிப்பிற்காக....

6) இன்னல் படும், துன்பத்தில் உழலும் முஸ்லிம்களுக்காக....

கப்பாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக அவரின் எஜமானியும், குறைஷித் தலைவர்களும் கடும் வேதனை செய்தார்கள்.

கற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்து, பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பர்கள்.

அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.

பலமுறை மாநபி {ஸல்} அவர்களிடம் முறையிட்ட போதும், மாநபி {ஸல்} அவர்கள் பொறுமையை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்கள்.

இந்நிலையில், நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானி உம்மு அன்மாரும் தன் பங்குக்குப் கொடுமை செய்தாள். 

ومر رسول الله به ذات يوم وهو يعذب، فرفع كفيه إلي السماء وقال

اللهم انصر خبابا

واستجاب الله لدعاء رسوله، فقد أصيبت أم أنمار بسعار غريب فجعلها تعوي مثل الكلاب!

ونصحها البعض بأن علاجها هو أن تكوي رأسها بالنار!

وهكذا ذاقت من نفس الكأس التي أذاقته لخباب بن الأرت.

ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று, கப்பாப் அவர்களின் தலையை அனுசரனையாய் தடவி விட்டு, ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் தலையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாள்.

சதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் கீழே வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி யாஅல்லாஹ்! கப்பாபுக்கு நீ உதவி செய்வாயாக!". என்று துஆச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது துஆவுக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.

ஆம்! உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி.

வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் அரபுலகத்தின் அனைத்து வைத்தியர்களிடமும் தூக்கிக் கொண்டு ஓடினார்.

ஆனால், யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை. இறுதியாக, அக்காலத்தில் சூட்டுக்கோல் வைத்திய முறை என்று ஒன்று இருந்தது. அதாவது, அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள். கடைசியாக, அதன் காரணமாகவே உம்மு அன்மார் இறந்தும் போனார்.

عن أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ

 "وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".

صحيح البخاري ومسلم والسنن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும் பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

 இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!

தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.

உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் கேள்வி...

அல்லாஹ் முஸ்லிம்களுக்கும், முஃமின்களுக்கும் வெற்றியை, நிம்மதியான வாழ்க்கையை தருவதாக அல்குர்ஆனில் பல இடங்களில் வாக்களிக்கின்றான்.

ஆனால், இன்று காஸா முஸ்லிம்கள் தொடர்படியாக இழப்புகளை மட்டுமே சந்தித்து வருகின்றனர். ஆனால், இஸ்ரேல் காஸா மக்களுக்கு எதிராக தொடர் படியாக தாக்குதலை நடத்தி அமோக வெற்றியைப் பெறுகின்ற காட்சிகளை மட்டுமே காண முடிகிறது.

ஏன் வெற்றி அவர்களின் வசம் ஆனது? ஏன் இறை உதவி முஸ்லிம்களுக்கு தாமதம் ஆகின்றது? ஏன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் செய்யும் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வதில்லை.

அல்லாஹ் எந்த அடியாருக்கும் அநீதி இழைப்பதில்லை. இது அல்லாஹ் தன் மீது ஆணையிட்டு விதியாக்கி இருக்கின்றான் எனும் போது, காஸா முஸ்லிம் சமூகம் ஏன் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது?

இந்த கேள்வி இன்று முஸ்லிம் சமூக முற்றத்தைத் தாண்டி, பொது வெளியிலும் அதிகமாகப் கேட்கப்படுகின்றது.

உஹத் யுத்தம் முஸ்லிம் உம்மத்திற்கு எல்லா காலத்திற்கும் தேவையான பல்வேறு பாடங்களையும், படிப்பினைகளையும் மறைத்து வைத்திருக்கிற மாபெரும் புதையலாகும்.

ஹிஜ்ரி 3 –ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 15 –இல் சனிக்கிழமை அன்று நடைபெற்ற யுத்தமாகும்.

ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்டு விட்ட வெற்றி, நபித்தோழர்களின் சிலரின் செயல்பாடுகளால் எதிரிகளின் வசம் மாறிப்போனது.

பத்ரில் எதிரிகள் அடைந்திருந்த அதே உயிரிழப்பு இப்போது முஸ்லிம்களின் தரப்பிலிருந்து ஏற்பட்டிருந்தது.

மாபெரும் மாண்பாளர்களாய் அறியப்பட்டிருந்த ஹம்ஸா (ரலி), முஸ்அப் (ரலி), அபுத்தஹ்தாஹ் (ரலி) ஸஅத் இப்னு ரபீஉ (ரலி) போன்ற முக்கிய நபித்தோழர்கள் உட்பட 70 பேர் வீர மரணம் அடைந்திருந்தனர்.

முஸ்லிம்கள் தடுமாறிப்போய், செய்வதறியாது திகைத்து நின்ற தருணமும் கூட.

அல்லாஹ்விற்காக போராடுகிற நாம் ஏன் தோற்றுப் போனோம்? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நம்மோடு இருக்கும் போது எப்படி நமக்கு தோல்வி ஏற்படும்? என்பது போன்ற கேள்விகள் அவர்களின் ஆழ்மனதை துளைத்தெடுத்தன.

அல்லாஹ் அவர்களின் தோல்விக்கான காரணங்களையும், தோல்வியிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும், அவர்களின் மனதை சாந்தப்படுத்துகிற ஆறுதல்களையும் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 139 முதல் 179 வரை தொடர்ச்சியான இறைவசனங்களின் மூலம் தெளிவு படுத்தினான்.

வெற்றியும்... தோல்வியும்...

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ () إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ()

அல்லாஹ் கூறினான்: நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.

இப்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதென்றால், இதற்கு முன்னர் உங்கள் எதிரணியினருக்கும் இதே போன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம்.

(உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்றுபகர்கின்றவர்களை உங்களிலிருந்து வேறுபடுவதற்காகத்தான்!

 

உயிரிழப்பும்.... உயிர் பாதுகாப்பும்....

اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ‏ 

"நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?

 وَلَقَدْ فَتَـنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ‏ 

அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். ( அல்குர்ஆன்: 29: 2,3 )

  اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ‏ 

உங்களில் தியாகம் புரிந்தோரை அல்லாஹ் அடையாளம் காட்டாமலும், பொறுமையாளர்களை அடையாளம் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாம் என்று நினைக்கிறீர்களா? ( அல்குர்ஆன்: 3: 142 )

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக காஸா மக்களை கொன்று குவித்திட, வெளியேற்றிட துடிக்கும் சியோனிச விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?

1. அநியாயக்காரர்களை அல்லாஹ் கண்டு கொள்ளாமல் இருப்பதில்லை....

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று நீங்கள் கருத வேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான்! ( அல்குர்ஆன்: 14: 42 )

2. அநியாயக்காரர்களின் முடிவு தாமதமாக்கப் படுவதில்லை....

 وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ

மேலும், கொடுமை புரிகின்றவர்கள் அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள்”. ( அல்குர்ஆன்: 26: 227 )

3. இஸ்ரேல் என்ன? எந்த கொம்பனாக இருந்தாலும் அத்து மீறினால் அழிவு நிச்சயம்....

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ () فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا

ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமும் இன்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். எங்களை விட வலிமை மிக்கவர் யார் இருக்கின்றார்கள்என்று.

அவர்களைப் படைத்த இறைவன் அவர்களை விட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்கு புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில், அபசகுணம் உடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்களை சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக! ( அல்குர்ஆன்: 41: 15, 16 )

மஸாபீஹுல் மிஹ்ராப் தளத்தில் ஃபலஸ்தீன் மற்றும் காஸா குறித்து பதிவு செய்யப்பட்ட தலைப்புகளும்... குறிப்புகளும்...

1) உலகின் மனசாட்சியை உலுக்கிய காஸாவின் முஹம்மது ஜகரிய்யா புகைப்படம்..

https://vellimedaiplus.blogspot.com/2025/07/blog-post_29.html?m=1

2) காஸா மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி தழைக்கட்டும்...

https://vellimedaiplus.blogspot.com/2025/01/blog-post_62.html?m=1

3) யாஅல்லாஹ்! ஃபலஸ்தீன மக்களுக்கு நீ உதவி செய்வாயாக!

https://vellimedaiplus.blogspot.com/2023/10/blog-post_12.html?m=1

4) வாழ்வதற்கு மறுக்கப்படும் ஃபலஸ்தீன குழந்தைகள்..

https://vellimedaiplus.blogspot.com/2023/11/blog-post.html?m=1

5) ரஃபா மக்களை காத்தருள்வாய் யாரப்பே!!

https://vellimedaiplus.blogspot.com/2024/05/blog-post_30.html?m=1

6) காஸா டூ கலிஃபோர்னியா!

https://vellimedaiplus.blogspot.com/2025/01/blog-post_16.html?m=1

7) இழப்பதும் அர்ப்பணிப்பதும் அல்லாஹ்விற்காக என்றால்...

https://vellimedaiplus.blogspot.com/2023/10/blog-post_19.html?m=1

8) குனூத் அந் நாஜிலா... சோதனைக்கால வேண்டல்!!

https://vellimedaiplus.blogspot.com/2025/09/zz.html?m=1

 

மஸாபீஹுல் மிஹ்ராப்

பஷீர் அஹமது உஸ்மானி.