Thursday, 9 May 2019

அல்லாஹ்வின் அருள் இல்லையானால்?...

அல்லாஹ்வின் அருள் இல்லையானால்?...





அல்ஹம்துலில்லாஹ்அல்லாஹ்வின் மகத்தான அருளும், கருணையும் பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடும் புனிதமிக்க ரமழான் மாதத்தின் அருள் நிறைந்த முத்திய பத்தின் முதல் ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

ரமழானின் முப்பது நாட்களை மூன்று பிரிவாக பிரித்து முதல் பத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும், இரண்டாம் பத்தில் பாவ மன்னிப்பையும், மூன்றாமது பத்தில் நரக விடுதலையையும் வல்ல நாயனிடம் மன்றாடி கேட்க வேண்டுமென நபி {ஸல்} அவர்கள் கூறுவார்கள்.

ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவனுடைய வாழ்வில் அல்லாஹ்வின் அருள் என்பது மிகவும் ஆளுமைக்குரிய ஒன்றாகும்.

ஈருலகிலும் அல்லாஹ்வின் அருள் அவனைச் சூழ்ந்திருக்க வேண்டுமென அவன் ஆசிப்பதும், நேசிப்பதும் ஈமானுக்கு அடுத்த படி மிக முக்கியமான ஒன்றாகும்.

மேன் மக்களான அறிஞர் பெருமக்கள் சொல்வார்கள்: “ஓர் இறை நம்பிக்கையாளன் நேர்வழியில் நடப்பதற்கும், வெற்றிக்கான வாழ்க்கை வாழ்வதற்கும், சீதேவித்தனம் நிலைத்திருப்பதற்கும், நல் அமல்கள் செய்வதற்கும், இன்னும் அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று நடப்பதற்கும், விலக்கல்களை தவிர்ப்பதற்கும், பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், சுவனத்தில் நுழைவதற்கும், நரகில் இருந்து ஈடேற்றம் பெறுவதற்கும் அல்லாஹ்வின் அருள் மிகவும் இன்றியமையாதது

சுருங்கச்சொன்னால் அல்லாஹ்வின் அருள் இல்லையென்றால் ஒட்டு மொத்த வாழ்க்கையும் இல்லை.


ரஹ்மான்அருளாளன் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் 54 இடங்களில் கூறுகின்றான்.

ரஹீம்நிகரற்ற அன்புடையோன் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் 95 இடங்களில் கூறுகின்றான்.

ரஹ்மான் ரஹீம் ஆகிய இந்த இரண்டின் மூலச்சொற்களும் ரஹ்மத் என்பதாகும்.

ரஹ்மத் என்ற வார்த்தைக்கு ரிக்கத் - மென்மை, ஷஃபகத் - இரக்கம், தஅத்துஃப் - கிருபை, என்று பொருள்.

கிட்ட தட்ட ரஹ்மான் ரஹீம் என்ற இந்த வார்த்தையை தொழுகையில் தினந்தோரும் ஃபர்ளான 17 ரக்அத்தில் 27 தடவை ஓதுகின்றோம்.

அல்லாஹ்வின் அருள் மனித வாழ்வின் முக்காலத்திற்கும் தேவையான பெரும் பாக்கியமாகும். அல்லாஹ்வின் அருள் மனித வாழ்வின் எல்லா உலகிற்கும் அத்தியாவசியமான அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருள் மனித வாழ்வின் எல்லா பகுதிகளுக்கும் அவசியமான பாக்கியமாகும்.

ஆம்! அருள் நின்றிலங்கும் முந்தைய, முதல் பத்தில் நாம் வீற்றிருக்கின்றோம். அல்லாஹ்விடம் அவனது அளவிலா அருளை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் அருள் ஒரு மனிதனுக்கு இல்லாதிருக்குமானால், கிடைக்காமல் போகுமானால் மனித வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனின் வசனங்கள் வாயிலாக பல இடங்களில் எச்சரிக்கின்றான்.

فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَـكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ‏ 

உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள். ( அல்குர்ஆன்: 2: 64 )


وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏ 

அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.                                        ( அல்குர்ஆன்: 4: 83 )


وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ‏ 

இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيْمٌ‌ 
இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ 

இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.  

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ 

உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது. எனினும், தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான். மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 24: 10, 14, 20, 21 )

மேற்சொல்லப்பட்ட வசனங்களில் ஒருவர் ஹிதாயத்தில் நிலைத்திருப்பதற்கும், நஷ்டவாளியாக ஆகாமல் இருப்பதற்கும், செய்த பாவத்திற்கு ஈருலகிலும் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கும், செய்த பாவத்திற்காக தவ்பா செய்ய நஸீப் கிடைப்பதற்கும், தவ்பா ஒப்புக்கொள்ளப்படுவதற்கும் அல்லாஹ்வின் அருள் தான் மிக முக்கிய காரணம் என வலிமையாகவே சொல்லப்பட்டுள்ளது.

1.   அல்லாஹ்வின் அருளின் துணையின்றி சுவனத்தின் நற்பேறும் கிடைக்காது…

روى الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال رحمه الله:" أخبرني أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا عبد الله بن صالح المقرئ ثنا سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل ثنا عبيد بن شريك ثنا يحيى بن بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم فقال:" خرج من عندي خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن لا يجعل للأرض ولا لشيء يفسده عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر عليه إذا هبطنا وإذا عرجنا فنجد له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل فيقول له الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الله عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்} எங்களை நோக்கிதோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார்என்று கூறி விட்டு எங்களிடம்என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள்முஹம்மத் {ஸல்} அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.

அந்த அடியார் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட மலைப்பிரதேசத்தில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார்.

கடல் சூழ்ந்தஉப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான். அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.

தினமும் மாலை நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.

ஒரு நாள் அந்த நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போதுயாஅல்லாஹ்! என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்! மேலும், என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்என்று கோரினார்.

அல்லாஹ்வும் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.

வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே நிலையிலேயேக் கண்டோம்.

தொடர்ந்து ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்: “ நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.

அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கிஇதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்என்பான்.

அதற்கு, அவர் அல்லாஹ்விடம்அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால், நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால், என்னுடைய 500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.

அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்குஇந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்என்று கட்டளையிடுவான்.

அப்போது வானவர்கள்இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.

நீ வழங்கிய மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லைஎன்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.

فيقول أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي رب برحمتك أدخلني الجنة فيقول ردوه فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من قواك لعبادة خمس مائة عام فيقول أنت يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج لك الماء العذب من الماء المالح وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام إنما الأشياء برحمة الله تعالى يا محمد". هذا حديث صحيح الإسناد
  
அது கேட்ட அல்லாஹ் வானவர்களிடம்இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்என்பான்.

அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர்இறைவா! உன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.

அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம்அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!” என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.

அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல் இதோ….

அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?

அடியான்: நீ தான் என் இறைவா!

அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?

அடியான்: நீ தான் என் இறைவா!

அல்லாஹ்: கடலும்உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும், புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?

அடியான்: நீதான் என் இறைவா!

அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தாசிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?

அடியான்: நீதான் என் இறைவா!

இந்த உரையாடலை முடித்து வைக்கும் முகமாக, இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம்என் அடியானே! இவை அனைத்தும் என் அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்! இப்போதும், நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்! அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனேஎன்று கூறி விட்டு வானவர்களை நோக்கிஇதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்பான்.

இதைக் கூறி விட்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம்முஹம்மத் {ஸல்} அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றதுஎன்று கூறி விடை பெற்றுச் சென்றார்என்று நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.                 ( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )

2.   தவ்பா செய்வதற்கும், தவ்பா ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் அல்லாஹ்வின் அருள் வேண்டும்….

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ 

உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது. எனினும், தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான். மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

قَالَ: سَمِعْتُ كعْبَ بنَ مَالكٍ رضِي الله عنه يُحَدِّثُ بِحدِيِثِهِ حِين تخَلَّف عَنْ رسولِ اللهِ ﷺ، في غزوةِ تبُوكَ. قَال كعْبٌ: لمْ أَتخلَّفْ عَنْ رسولِ الله ﷺ، في غَزْوَةٍ غَزَاها قط إِلاَّ في غزْوَةِ تَبُوكَ، غَيْر أَنِّي قدْ تخلَّفْتُ في غَزْوةِ بَدْرٍ، ولَمْ يُعَاتَبْ أَحد تَخلَّف عنْهُ، إِنَّما خَرَجَ رسولُ الله ﷺ والمُسْلِمُونَ يُريُدونَ عِيرَ قُريْش حتَّى جَمعَ الله تعالَى بيْنهُم وبيْن عَدُوِّهِمْ عَلَى غيْرِ ميعادٍ. وَلَقَدْ شهدْتُ مَعَ رسولِ اللَّهِ ﷺ ليْلَةَ العَقبَةِ حِينَ تَوَاثَقْنَا عَلَى الإِسْلامِ، ومَا أُحِبُّ أَنَّ لِي بِهَا مَشهَدَ بَدْرٍ، وإِن كَانتْ بدْرٌ أَذْكَرَ في النَّاسِ مِنهَا، وكانَ مِنْ خَبَري حِينَ تخلَّفْتُ عَنْ رسولِ اللهِ ﷺ، في غَزْوَةِ تبُوك أَنِّي لَمْ أَكُنْ قَطُّ أَقْوَى ولا أَيْسَرَ مِنِّي حِينَ تَخلَّفْتُ عَنْهُ في تِلْكَ الْغَزْوَة، واللَّهِ ما جَمعْتُ قبْلها رَاحِلتيْنِ قطُّ حتَّى جَمَعْتُهُما في تِلْكَ الْغَزوَةِ، ولَمْ يكُن رسولُ الله ﷺ يُريدُ غَزْوةً إِلاَّ ورَّى بغَيْرِهَا حتَّى كَانَتْ تِلكَ الْغَزْوةُ، فغَزَاها رسولُ الله ﷺ في حَرٍّ شَديدٍ، وَاسْتَقْبَلَ سَفراً بَعِيداً وَمَفَازاً. وَاسْتَقْبَلَ عَدداً كَثيراً، فجَلَّى للْمُسْلمِينَ أَمْرَهُمْ ليَتَأَهَّبوا أُهْبَةَ غَزْوِهِمْ فَأَخْبَرَهُمْ بوَجْهِهِمُ الَّذي يُريدُ، وَالْمُسْلِمُون مَع رسولِ الله كثِيرٌ وَلاَ يَجْمَعُهُمْ كِتَابٌ حَافِظٌ" يُريدُ بذلكَ الدِّيَوان" قَالَ كَعْبٌ: فقلَّ رَجُلٌ يُريدُ أَنْ يَتَغَيَّبَ إِلاَّ ظَنَّ أَنَّ ذلكَ سَيَخْفى بِهِ مَا لَمْ يَنْزِلْ فيهِ وَحْىٌ مِن اللَّهِ، وغَزَا رَسُول الله ﷺ تلكَ الغزوةَ حِينَ طَابت الثِّمَارُ والظِّلالُ، فَأَنا إِلَيْهَا أَصْعرُ، فتجهَّز رسولُ الله ﷺ وَالْمُسْلِمُون معهُ، وطفِقْت أَغدو لِكىْ أَتَجَهَّزَ معهُ فأَرْجعُ ولمْ أَقْض شَيْئاً، وأَقُولُ في نَفْسى: أَنا قَادِرٌ علَى ذلِكَ إِذا أَرَدْتُ، فلمْ يَزلْ يَتَمادى بي حتَّى اسْتمَرَّ بالنَّاسِ الْجِدُّ، فأَصْبَحَ رسولُ الله ﷺ غَادياً والْمُسْلِمُونَ معَهُ، وَلَمْ أَقْضِ مِنْ جِهَازي شيْئاً، ثُمَّ غَدَوْتُ فَرَجَعْتُ وَلَم أَقْض شَيْئاً، فَلَمْ يزَلْ يَتَمادَى بِي حَتَّى أَسْرعُوا وتَفَارَط الْغَزْوُ، فَهَمَمْتُ أَنْ أَرْتَحِل فأَدْركَهُمْ، فَيَاليْتَني فَعلْتُ، ثُمَّ لَمْ يُقَدَّرْ ذلِكَ لي، فَطفقتُ إِذَا خَرَجْتُ في النَّاسِ بَعْد خُرُوجِ رسُول اللهِ ﷺ يُحْزُنُنِي أَنِّي لا أَرَى لِي أُسْوَةً، إِلاَّ رَجُلاً مَغْمُوصاً عَلَيْه في النِّفاقِ، أَوْ رَجُلاً مِمَّنْ عَذَرَ اللَّهُ تعالَى مِن الضُّعَفَاءِ، ولَمْ يَذكُرني رَسُولُ اللهِ ﷺ حتَّى بَلَغ تَبُوكَ، فقالَ وَهُوَ جَالِسٌ في القوْمِ بتَبُوك: ما فَعَلَ كعْبُ بْنُ مَالكٍ؟ فقالَ رَجُلٌ مِن بَنِي سلمِة: يا رَسُولَ اللهِ حَبَسَهُ بُرْدَاهُ، وَالنَّظرُ في عِطْفيْه. فَقال لَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ t: بِئس مَا قُلْتَ، وَاللَّهِ يا رَسُولَ اللهِ مَا عَلِمْنَا علَيْهِ إِلاَّ خَيْراً، فَسكَت رَسُولُ اللهِ ﷺ. فبَيْنَا هُوَ علَى ذَلِكَ رَأَى رَجُلاً مُبْيِضاً يَزُولُ بِهِ السَّرَابُ، فقالَ رسولُ اللهِ ﷺ: كُنْ أَبَا خَيْثمَةَ، فَإِذا هوَ أَبُو خَيْثَمَةَ الأَنْصَاريُّ وَهُوَ الَّذي تَصَدَّقَ بِصَاعِ التَّمْر حِيْنَ لمَزَهُ المنافقون.
قَالَ كَعْبٌ: فَلَّما بَلَغني أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَدْ توَجَّهَ قَافلا منْ تَبُوكَ حَضَرَني بَثِّي، فطفقتُ أَتذكَّرُ الكذِبَ وَأَقُولُ: بِمَ أَخْرُجُ مِنْ سَخطه غَداً وَأَسْتَعينُ عَلَى ذلكَ بِكُلِّ ذِي رَأْي مِنْ أَهْلي، فَلَمَّا قِيلَ: إِنَّ رَسُولَ اللهِ ﷺ قدْ أَظِلَّ قَادِمَاً زاحَ عَنِّي الْبَاطِلُ حَتَّى عَرَفتُ أَنِّي لم أَنج مِنْهُ بِشَيءٍ أَبَداً ذَلك جَاءَهُ الْمُخلَّفُونَ يعْتذرُون إِليْه وَيَحْلفُون لَهُ، وَكَانُوا بِضْعاً وثمَانين رَجُلا فَقَبِلَ منْهُمْ عَلانيَتهُمْ وَبَايَعَهُمْ وَاسْتغفَر لهُمْ وَوَكلَ سَرَائرَهُمْ إِلى الله تعَالى. حتَّى جئْتُ، فلمَّا سَلَمْتُ تبسَّم تبَسُّم الْمُغْضب ثمَّ قَالَ: تَعَالَ فجئتُ أَمْشي حَتى جَلَسْتُ بيْن يَدَيْهِ، فقالَ لِي: مَا خَلَّفَكَ؟ أَلَمْ تكُنْ قَدِ ابْتَعْتَ ظَهْرَك، قَالَ قُلْتُ: يَا رَسُولَ الله إِنِّي واللَّه لَوْ جلسْتُ عنْد غيْركَ منْ أَهْلِ الدُّنْيَا لَرَأَيْتُ أَني سَأَخْرُج منْ سَخَطه بعُذْرٍ، لقدْ أُعْطيتُ جَدَلا، وَلَكنَّني وَاللَّه لقدْ عَلمْتُ لَئن حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيثَ كَذبٍ ترْضى به عنِّي لَيُوشكَنَّ اللَّهُ يُسْخطك عليَّ، وإنْ حَدَّثْتُكَ حَديث صدْقٍ تجدُ علَيَّ فِيهِ إِنِّي لأَرْجُو فِيه عُقْبَى الله
U، واللَّه ما كَانَ لِي مِنْ عُذْرٍ، واللَّهِ مَا كُنْتُ قَطُّ أَقْوَى وَلا أَيْسر مِنِّي حِينَ تَخلفْتُ عَنك.
قَالَ: فقالَ رسولُ الله ﷺ: أَمَّا هذَا فقَدْ صَدَقَ، فَقُمْ حَتَّى يَقْضيَ اللَّهُ فيكَ وسَارَ رِجَالٌ مِنْ بَنِي سَلمة فاتَّبعُوني، فقالُوا لِي: واللَّهِ مَا عَلِمْنَاكَ أَذنْبتَ ذَنْباً قبْل هذَا، لقَدْ عَجَزتَ في أنْ لا تَكُون اعتذَرْت إِلَى رَسُول الله ﷺ بمَا اعْتَذَرَ إِلَيهِ الْمُخَلَّفُون فقَدْ كَانَ كافِيَكَ ذنْبكَ اسْتِغفارُ رَسُول الله ﷺ لَك. قَالَ: فَوالله ما زَالُوا يُؤنِّبُوننِي حتَّى أَرَدْت أَنْ أَرْجِعَ إِلى رسولِ الله ﷺ فأَكْذِب نفسْي، ثُمَّ قُلتُ لهُم: هَلْ لَقِيَ هَذا معِي مِنْ أَحدٍ؟ قَالُوا: نَعَمْ لقِيَهُ مَعَكَ رَجُلان قَالا مِثْلَ مَا قُلْتَ، وَقيلَ لَهمَا مِثْلُ مَا قِيلَ لكَ، قَال قُلْتُ: مَن هُمَا؟ قالُوا: مُرارةُ بْنُ الرَّبِيع الْعَمْرِيُّ، وهِلال ابْن أُميَّةَ الْوَاقِفِيُّ؟ قَالَ: فَذكَروا لِي رَجُلَيْنِ صَالِحَيْن قدْ شَهِدا بدْراً فِيهِمَا أُسْوَةٌ. قَالَ: فَمَضيْت حِينَ ذَكَروهُمَا لِي. وَنهَى رَسُول الله ﷺ عَنْ كَلامِنَا أَيُّهَا الثلاثَةُ مِن بَين من تَخَلَّف عَنهُ، قالَ: فاجْتَنبَنا النَّاس أَوْ قَالَ: تَغَيَّرُوا لَنَا حَتَّى تَنَكَّرت لِي في نَفْسي الأَرْضُ، فَمَا هيَ بالأَرْضِ الَّتي أَعْرِفُ، فَلَبثْنَا عَلَى ذَلكَ خمْسِينَ ليْلَةً. فأَمَّا صَاحبايَ فَاستَكَانَا وَقَعَدَا في بُيُوتهمَا يَبْكيَانِ وأَمَّا أَنَا فَكُنتُ أَشَبَّ الْقَوْمِ وَأَجْلَدَهُمْ، فَكُنتُ أَخْرُج فَأَشهَدُ الصَّلاة مَعَ الْمُسْلِمِينَ، وَأَطُوفُ في الأَسْوَاقِ وَلا يُكَلِّمُنِي أَحدٌ، وآتِي رسولَ الله ﷺ فأُسَلِّمُ عَلَيْهِ، وَهُو في مجْلِسِهِ بعدَ الصَّلاةِ، فَأَقُولُ في نفسِي: هَل حَرَّكَ شفتَيهِ بردِّ السَّلامِ أَم لاَ؟ ثُمَّ أُصلِّي قَريباً مِنهُ وأُسَارِقُهُ النَّظَرَ، فَإِذَا أَقبَلتُ عَلَى صلاتِي نَظر إِلَيَّ، وإِذَا الْتَفَتُّ نَحْوَهُ أَعْرَضَ عَنِّي، حَتى إِذا طَال ذلكَ عَلَيَّ مِن جَفْوَةِ الْمُسْلمينَ مشَيْت حَتَّى تَسوَّرْت  جدارَ حَائط أبي قَتَادَةَ وَهُوَا ابْن عَمِّي وأَحبُّ النَّاسَ إِلَيَّ، فَسلَّمْتُ عَلَيْهِ فَواللَّهِ مَا رَدَّ عَلَيَّ السَّلامَ، فَقُلْت لَه: يَا أَبَا قتادَة أَنْشُدكَ باللَّه هَلْ تَعْلَمُني أُحبُّ الله وَرَسُولَه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم؟ فَسَكَتَ، فَعُدت فَنَاشَدتُه فَسكَتَ، فَعُدْت فَنَاشَدْته فَقَالَ: اللهُ ورَسُولُهُ أَعْلَمُ. فَفَاضَتْ عَيْنَايَ، وَتَوَلَّيْتُ حَتَّى تَسَوَّرتُ الْجدَارَ فبَيْنَا أَنَا أَمْشي في سُوقِ المدينةِ إِذَا نَبَطيُّ منْ نبطِ أَهْلِ الشَّام مِمَّنْ قَدِمَ بالطَّعَامِ يبيعُهُ بالمدينةِ يَقُولُ: مَنْ يَدُلُّ عَلَى كعْبِ بْنِ مَالكٍ؟ فَطَفقَ النَّاسُ يُشِيرُونَ لَهُ إِلَى حَتَّى جَاءَني فَدَفَعَ إِلى كتَاباً منْ مَلِكِ غَسَّانَ، وكُنْتُ كَاتِباً. فَقَرَأْتُهُ فَإِذَا فيهِ: أَمَّا بَعْدُ فَإِنَّهُ قَدْ بلَغَنَا أَن صاحِبَكَ قدْ جَفاكَ، ولمْ يجْعلْك اللَّهُ بدَارِ هَوَانٍ وَلا مَضْيعَةٍ، فَالْحقْ بِنا نُوَاسِك، فَقلْت حِين قرأْتُهَا: وَهَذِهِ أَيْضاً مِنَ الْبَلاءِ فَتَيمَّمْتُ بِهَا التَّنُّور فَسَجرْتُهَا حَتَّى إِذَا مَضَتْ أَرْبَعُون مِن الْخَمْسِينَ وَاسْتَلْبَثِ الْوَحْىُ إِذَا رسولِ رسولِ الله ﷺ يَأْتِينِي، فَقَالَ: إِنَّ رسولَ الله ﷺ يَأَمُرُكَ أَنْ تَعْتزِلَ امْرأَتكَ، فقُلْتُ: أُطَلِّقُهَا، أَمْ مَاذا أَفعْلُ؟ قَالَ: لاَ بَلْ اعتْزِلْهَا فَلاَ تقربَنَّهَا، وَأَرْسلَ إِلى صَاحِبيَّ بِمِثْلِ ذلِكَ. فَقُلْتُ لامْرَأَتِي: الْحقِي بِأَهْلكِ فَكُونِي عِنْدَهُمْ حَتَّى يَقْضِيَ اللُّهُ في هذَا الأَمر، فَجَاءَت امْرأَةُ هِلالِ بْنِ أُمَيَّةَ رسولَ الله ﷺ فقالتْ لَهُ: يَا رَسُولَ الله إِنَّ هِلالَ بْنَ أُميَّةَ شَيْخٌ ضَائعٌ ليْسَ لَهُ خادِمٌ، فهلْ تَكْرهُ أَنْ أَخْدُمهُ؟ قَالَ: "لاَ، وَلَكِنْ لاَ يَقْربَنَّك"فَقَالَتْ: إِنَّهُ وَاللَّه مَا بِهِ مِنْ حَركةٍ إِلَى شَيءٍ، وَوَاللَّه مَا زَالَ يَبْكِي مُنْذُ كَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ إِلَى يَوْمِهِ هَذَا. فَقَال لِي بعْضُ أَهْلِي: لَو اسْتأَذنْت رسولِ اللهِ ﷺ في امْرَأَتِك، فقَدْ أَذن لامْرأَةِ هِلالِ بْنِ أُمَيَّةَ أَنْ تَخْدُمَهُ؟ فقُلْتُ: لاَ أَسْتَأْذِنُ فِيهَا رسولَ الله ﷺ، ومَا يُدْريني مَاذا يَقُولُ رسولُ الله ﷺ إِذَا اسْتَأْذَنْتُهُ فِيهَا وَأَنَا رَجُلٌ شَابٌّ فلَبِثْتُ بِذلك عشْر ليالٍ، فَكَمُلَ لَنا خمْسُونَ لَيْلَةً مِنْ حينَ نُهي عَنْ كَلامنا.
ثُمَّ صَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ صباحَ خمْسينَ لَيْلَةً عَلَى ظهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا، فَبينَا أَنَا جَالسٌ عَلَى الْحال الَّتي ذكَر اللَّهُ تعالَى مِنَّا، قَدْ ضَاقَتْ عَلَيَّ نَفْسِى وَضَاقَتْ عَليَّ الأَرضُ بمَا رَحُبَتْ، سَمعْتُ صَوْتَ صَارِخٍ أوفَى عَلَى سَلْعٍ يَقُولُ بأَعْلَى صَوْتِهِ: يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ، فخرَرْتُ سَاجِداً، وَعَرَفْتُ أَنَّهُ قَدْ جَاءَ فَرَجٌ فَآذَنَ رسولُ الله ﷺ النَّاس بِتوْبَةِ الله عَزَّ وَجَلَّ عَلَيْنَا حِين صَلَّى صَلاة الْفجْرِ فذهَبَ النَّاسُ يُبَشِّرُوننا، فذهَبَ قِبَلَ صَاحِبَيَّ مُبَشِّرُونَ، وَرَكَضَ رَجُلٌ إِليَّ فرَساً وَسَعَى ساعٍ مِنْ أَسْلَمَ قِبَلِي وَأَوْفَى عَلَى الْجَبلِ، وكَان الصَّوْتُ أَسْرَعَ مِنَ الْفَرَسِ، فلمَّا جَاءَنِي الَّذي سمِعْتُ صوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَيَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ ببشارَته واللَّه مَا أَمْلِكُ غَيْرَهُمَا يوْمَئذٍ، وَاسْتَعَرْتُ ثَوْبَيْنِ فَلَبسْتُهُمَا وانْطَلَقتُ أَتَأَمَّمُ رسولَ الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَتَلَقَّانِي النَّاسُ فَوْجاً فَوْجاً يُهَنِّئُونني بِالتَّوْبَةِ وَيَقُولُون لِي: لِتَهْنِكَ تَوْبَةُ الله عَلَيْكَ، حتَّى دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رسولُ الله ﷺ جَالِسٌ حَوْلَهُ النَّاسُ، فَقَامَ طلْحَةُ بْنُ عُبَيْداللهِ رضي الله عنه يُهَرْوِل حَتَّى صَافَحَنِي وهَنَّأَنِي، واللَّه مَا قَامَ رَجُلٌ مِنَ الْمُهاجِرِينَ غَيْرُهُ، فَكَان كَعْبٌ لاَ يَنْساهَا لِطَلحَة.
قَالَ كَعْبٌ: فَلَمَّا سَلَّمْتُ عَلَى رَسُولِ الله ﷺ، قَالَ: وَهوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُور "أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ، مُذْ ولَدَتْكَ أُمُّكَ" فقُلْتُ: أمِنْ عِنْدِكَ يَا رَسُول اللَّهِ أَم مِنْ عِنْد الله؟ قَالَ: لاَ بَلْ مِنْ عِنْد الله
U، وكانَ رسولُ الله ﷺ إِذَا سُرَّ اسْتَنارَ وَجْهُهُ حتَّى كَأنَّ وجْهَهُ قِطْعَةُ قَمر، وكُنَّا نعْرِفُ ذلِكَ مِنْهُ، فلَمَّا جلَسْتُ بَيْنَ يدَيْهِ قُلتُ: يَا رسولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِن مَالي صدَقَةً إِلَى اللَّهِ وإِلَى رَسُولِهِ.
فَقَالَ رَسُول الله ﷺ: أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْر لَكَ، "فَقُلْتُ إِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذي بِخيْبَر. وَقُلْتُ: يَا رَسُولَ الله إِن الله تَعَالىَ إِنَّما أَنْجَانِي بالصِّدْقِ، وَإِنْ مِنْ تَوْبَتي أَن لا أُحدِّثَ إِلاَّ صِدْقاً ما بَقِيتُ، فوالله مَا علِمْتُ أَحَداً مِنَ المسلمِين أَبْلاْهُ اللَّهُ تَعَالَى في صدْق الْحَديث مُنذُ ذَكَرْتُ ذَلكَ لرِسُولِ الله ﷺ أَحْسَنَ مِمَّا أَبْلاَنِي اللَّهُ تَعَالَى، وَاللَّهِ مَا تَعمّدْت كِذْبَةً مُنْذُ قُلْت ذَلِكَ لرَسُولِ اللَّهِ ﷺ إِلَى يَوْمِي هَذَا، وَإِنِّي لأَرْجُو أَنْ يَحْفظني اللَّهُ تَعَالى فِيمَا بَقِي، قَالَ: فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ حَتَّى بَلَغَ: إِنَّهُ بِهِمْ رَؤُوفٌ رَحِيمٌ، وَعَلَى الثَّلاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ حَتَّى بَلَغَ: اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ [التوبة:117-119].

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தனிப் பெரும் பாசத்திற்குரிய நபித்தோழர்களில் இவரும் ஒருவர். நபிகளார் காலத்து கவிஞர்களில் இவரும் ஒருவர். தபூக் யுத்தத்திற்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல், கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார்கள்.                                   

இவரோடு சேர்த்து இன்னும் இரண்டு நபித்தோழர்களும் ஹிலால் இப்னு உமைய்யா {ரலி}, முராரா இப்னு ரபீஆ {ரலி} ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.                                                
மாநபி {ஸல்} அவர்கள் இம்மூவரின் விஷயத்திலும் அல்லாஹ்வின் உத்தரவு வரும் வரை இம்மூவரோடும் பேசக்கூடாது என முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டார்கள்.                             

இதன் பின்னர் நடந்தவைகளை கஅப் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் வாயிலாகவே நாம் அறிந்து கொள்வோம்.                      

கஅப் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பின் தங்கியவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் எவரும் பேசக்கூடாதென நபி {ஸல்} அவர்கள் தடை விதித்தார்கள்.                 

மக்கள் எங்களை விட்டும் ஒதுங்கிக்கொண்டார்கள். எங்களின் விஷயத்தில் மக்களின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டிருந்தது. எனது மனதினில் விரக்தி ஏற்பட்டு இந்தப் பூமியே என்னைப் பொறுத்தவரை அந்நிய பூமியாகத் தோன்றியது! நான் முன்பு அறிந்திருந்த பூமி போன்று அது இல்லை! ஐம்பது இரவுகளாக இந்நிலையிலேயே நாங்கள் இருந்தோம்.                             

என்னுடைய மற்ற இரு தோழர்களோ வீட்டிலேயே அழுத வண்ணம் முடங்கிவிட்டார்கள். மூன்று பேரில் நான் மட்டுமே வயதில் குறைந்தவன். ஆகையால், நான் வெளியில் செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்து கொள்வேன். யாருமே என்னுடன் பேச மாட்டார்கள்.                                                
நபி {ஸல்} அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும் போது, அவர்களின் முன் ஆஜராகி ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கின்றார்களா? இல்லையா? என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்.                                      

பிறகு, அவர்களுக்கு அருகிலேயே நான் தொழுவேன். ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நபிகளார் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்களின் பக்கமாக முன்னோக்கும் போதோ, என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.                    
இவ்வாறாக, சக முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு நீடிப்பதை நான் கடினமானதாக உணர்ந்த போது ஒரு நாள் அப்படியே நான் வீதி வழியே நடந்து சென்றேன்.                          

அப்போது அபூ கதாதா {ரலி} அவர்களின் வீட்டருகே சென்று கொண்டிருந்தேன். அபூகதாதா {ரலி} அவர்களின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன்.                                                          
அவர் என் சிறிய தந்தையின் மகனாவார்! மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் அவரே! அவருக்கு நான் ஸலாம் சொன்னேன்.                                                        
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என் ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை. நான் அவரிடம் அபூ கதாதாவே! அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்கின்றேன்! நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கின்றேன்? என்பது உமக்குத் தெரியாதா?” என்று நான் கேட்டேன்.                                       
அதற்கு அவர் அமைதியாக இருந்தார். மீண்டும் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்டேன். அப்போதும் அமைதியாகவே இருந்தார்.                                                              
மூன்றாவது முறையும் கேட்டபோது, அவர் சொன்னார் அல்லாஹ்வும், அவன் தூதரும் தான் நன்கறிந்தவர்கள்என்று. இதைக் கேட்ட மாத்திரத்தில் என் கண்களிரண்டும் கண்ணீர் வடித்தன. பீறிட்டுவந்த அழுகையை அடக்கியவனாக நான் அங்கிருந்து வந்த வழியே வெளியேறினேன்.                                                
அப்படியே, மதீனாவின் கடைவீதியில் நான் வந்து கொண்டிருந்த போது அங்கே ஒருவன் கஅப் இப்னு மாலிக்கைப் பற்றி அறிவித்துக் கொடுப்பவர் எவரேனும் உள்ளனரா? என்று கேட்டுக் கொண்டிருந்தான். உடனே மக்கள் என்பக்கம் சுட்டிக்காட்டி அவனுக்கு நான் தான் கஅப் என்பதை அறிவித்தனர்.                                                     
அருகில் சென்று விசாரித்தேன். சிரியாவில் இருந்து வருவதாகவும், கஸ்ஸான் மன்னன் ஒரு கடிதம் தந்ததாகவும் என்னிடம் கொடுத்தான். அதைப் படித்தேன்.                          
அதில் எழுதி இருந்ததாவது: கஸ்ஸான் மன்னனாகிய நான் எழுதுவது என்னவெனில், உம்முடைய தோழர் உம்மை வெறுத்து ஒதுக்கி விட்டார் எனும் செய்தி எம்மை வந்தடைந்துள்ளது. கேவலமும், உரிமையிழப்பும் உடைய பூமியில் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம்.    
                                           
இங்கே வந்து விடும். உம்மை நாம் சகல மரியாதையுடன் நடத்துவோம்.என்றிருந்தது. அதைப் படித்த போது இதுவும் ஒரு சோதனையே!என நான் என்னையே நொந்து கொண்டேன். பின்பு நான் அந்த கடிதத்தை நெருப்பில் எரித்துவிட்டேன்.                         

இவ்வாறாக,ஐம்பதில் நாற்பது நாட்கள் கழிந்து விட்ட போது, நபியவர்களிடம் இருந்து ஒரு தூதுவர் என்னிடம் வந்தார்.                  வந்தவர் என்னிடம் நீர் உம் மனைவியை விட்டும் பிரிந்திருக்குமாறு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்என்று கூறினார்.                              

என் மனைவியை மண விலக்கு செய்திட வேண்டுமா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்? என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கவர் இல்லை.. உம் மனைவியை விட்டும் விலகியிரும்! நெருங்கக் கூடாதுஎன்று தான் நபிகளார் கூறியதாக வந்தவர் கூறினார்.                                                                   
இதே போன்ற கட்டளையை என் மற்றைய இரு தோழர்களுக்கும் மாநபி {ஸல்} அவர்கள் அனுப்பி இருந்தார்கள். அவர் சென்றதும், நான் என் மனைவியிடம் நீ உன் பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுவிடு! அல்லாஹ் என் விஷயத்தில் ஒரு தீர்வை வழங்கும் வரை அவர்களோடே தங்கியிருஎன்று கூறி அனுப்பி வைத்தேன். இதே நிலையில் பத்து நாட்கள் கழிந்தது.                            

எங்களோடு எவரும் பேசக்கூடாது என்று தடை விதித்து ஐம்பது நாட்கள் நிறைவடைந்தது! பிறகு ஐம்பதாவது நாள் அதிகாலையில் என் வீட்டின் முகட்டில் நான் ஃபஜ்ர் தொழுகையை தொழுது முடித்துவிட்டு, (அல்லாஹ் எங்களைப் பற்றி குர்ஆனில் கூறியது போல்) இந்தப் பூமி உயிர் வாழ்வதற்கு கஷ்டமாகிவிட்டதே! பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் குறுகிப் போய் விட்டதே! என மன வேதனையோடு இருக்கும் போதே, ஸல்வு எனும் மலை மீதிலிருந்து ஓர் அறிவிப்பாளர் ஓ!...! கஅப் இப்னு மாலிக்! நற்செய்தி பெறுவீராக!என்று நற்செய்தி கூறுவதை நான் கேட்டேன்.                                      
அப்படியே ஸஜ்தாவில் வீழ்ந்தேன். நம்முடைய துன்பமெல்லாம் நீங்கி விட்டது என்று நான் அறிந்து கொண்டேன்.                            

நபி {ஸல்} அவர்கள் ஸுபுஹ் தொழுது முடித்த பிறகு, ”எங்களது பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு, எங்கள் மீது மீண்டும் கருணை பொழிந்து விட்டான்என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.                                               
உடனே மக்கள் அந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்துவிட புறப்பட்டுவிட்டார்கள். எவரது உரத்த குரலினால் நற்செய்தியை நான் செவியுற்றேனோ, அவர் என்னிடம் வந்த போது அவரது நற்செய்திக்குப் பரிசாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவருக்கு அணிவித்தேன்”. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்போது அதைத் தவிர வேறு ஆடைகள் என்னிடம் இல்லை.                           

பின்பு நான் வேறு ஒருவரிடம் ஆடைகளை இரவலாகப் பெற்று, அதை அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைக் காண புறப்பட்டு வந்தேன்.                                                    

வழியில் என்னைக் கண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தித்து உமது பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு வாழ்த்துக்கள்என்று வாழ்த்துக் கூறினர்.            

மகிழ்ச்சி மழையில் நனைந்தவாறே நான் பள்ளிக்குள் நுழைந்தேன். அங்கு பூமான் நபி {ஸல்} அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர்.                  அப்போது தல்ஹா பின் உபைதுல்லாஹ் {ரலி} அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். எனக்கு கைலாகு கொடுத்து, எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.                                                                                                                     
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரைத் தவிர முஹாஜிர்களில் வேறெவரும் எழுந்து வரவில்லை. {”தல்ஹா {ரலி} அவர்களின் இந்த உபகாரத்தை கஅப் {ரலி} உயிர் உள்ளவரை மறக்கவே இல்லை.என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் கஅப் பின் மாலிக் {ரலி} அவர்களின் மகனார் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.}                                         
           
பின்னர், நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நான் ஸலாம் கூறினேன். அப்போது மாநபி {ஸல்} அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது.                                
                                   
நபி {ஸல்} அவர்கள் என்னைப் பார்த்து “” உம் அன்னை உம்மைப் பெற்றெடுத்த நாள் முதற்கொண்டு உமக்குக் கிடைக்கப் பெறாத சிறந்த இந் நன்நாளினைக் கொண்டு மகிழ்வு அடைவீராக!என்று கூறினார்கள்.                                                                                                            
நான்  இந்த வாழ்த்துச் செய்தி தாங்களிடம் நின்றும் உள்ளதா? அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததா?” என கேட்டேன். அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் இல்லை.. இது, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும்என்றார்கள். ( நூல்:ரியாளுஸ் ஸாலிஹீன்,பாடம்:2, ஹதீஸ் எண்:21. )

3.   நேர்வழியிலும், நன்மையிலும் நீடித்திருக்க வேண்டுமானால் அல்லாஹ்வின் அருள் வேண்டும்…

فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَـكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ‏ 

உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள். ( அல்குர்ஆன்: 2: 64 )


وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏ 

அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.                                        ( அல்குர்ஆன்: 4: 83 )

عن أبي أمامة الباهلي قال: " جاء ثعلبة بن حاطب الأنصاري إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، فقال: " ويحك يا ثعلبة، قليل تؤدي شكره خير من كثير لا تطيقه " . ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، قال: " أما لك في أسوة حسنة، والذي نفسي بيده لو أردت أن تسير الجبال معي ذهباً وفضة لسارت " ، ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، والذي بعثك بالحق لئن رزقني الله مالاً لأعطين كل ذي حق حقه، فقال رسول الله صلى الله عليه وسلم: " اللهم ارزق ثعلبة مالاً، الله ارزق ثعلبة مالاً "

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் ஸஅலபா இப்னு ஹாத்தப் என்கிற நபித்தோழர் வந்தார்.

அல்லாஹ்வின் தூதரே! செல்வச் செழிப்பான வாழ்விற்காக அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்என்றார்.

ஸஅலபாகுறைவாக வழங்கப்பட்டு அதற்காக நீர் நன்றி செலுத்துவது இருக்கிறதே, நிறைவான செல்வம் வழங்கப்பட்டு நன்றி செலுத்தாமல் வாழ்வதைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் முன்பு போலவே ஸஅலபா, அண்ணலாரிடம் வந்து கேட்டுக் கொண்டார்.

அதற்கு அண்ணலார், உனக்கு என் வாழ்க்கையில் அழகிய முன் மாதிரி இல்லையா? “என்னைப் பாரும்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணை! நான் விரும்பினால் இதோ தெரிகிற இந்த மலைகளை தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித்தருவான்!” (என்றாலும் எளிமையாக நான் வாழவில்லையா?) என்று கூறினார்கள்.

மூன்றாவது முறை நபிகளாரின் முன்வந்து நின்ற போது, அல்லாஹ்வின் தூதரே! எனக்காக துஆ செய்யுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்குகின்ற செல்வத்திலிருந்து நான் யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அவைகளை முறையாக முழுமையாக கொடுப்பேன்! இது உங்களை சத்தியத்தை கொண்டு அனுப்பிய அந்த இறைவனின் மீது ஆணைஎன்று முழங்கினார்.

அப்போது, அண்ணலார் அவருக்காக மூன்று முறை “ யாஅல்லாஹ்! ஸஅலபாவிற்கு உன்புறத்தில் இருந்து ரிஜ்கை வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆ பரக்கத்தால் ஸஅலபாவின் (ஆடு, மாடு, ஒட்டகை) மந்தை பல்கிப் பெருகியது.

، قال: فاتخذ غنماً فنمت كما ينمي الدود، فكان يصلي مع رسول الله صلى الله عليه وسلم الظهر والعصر، ويصلي في غنمه سائر الصلوات، ثم كثرت ونمت، فتقاعد أيضاً حتى صار لا يشهد إلا الجمعة، ثم كثرت ونمت فتقاعد أيضاً حتى كان لا يشهد جماعة ولا جماعة، وكان إذا كان يوم جمعة خرج يتلقى الناس يسألهم عن الأخبار فذكره رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال: " ما فعل ثعلبة " ؟ فقالوا: يا رسول الله، اتخذ ثعلبة غنماً لا يسعها واد، فقال رسول الله صلى الله عليه وسلم: " يا ويح ثعلبة، يا ويح ثعلبة، يا ويح ثعلبة " ، وأنزل الله آية الصدقة، فبعث رسول الله صلى الله عليه وسلم رجلاً من بني سليم، ورجلاً من بني جهينة، وكتب لهما أسنان الصدقة كيف يأخذان وقال لهما: " مرا بثعلبة بن حاطب، وبرجل من بني سليم، فخذا صدقاتهما " ، فخرجا حتى أتيا ثعلبة فسألاه الصدقة، وأقرآه كتاب رسول الله صلى الله عليه وسلم فقال: ما هذه إلا جزية: ما هذه إلا أخت الجزية: انطلقا حتى تفرغا ثم عودا إلي، فانطلقا وسمع بهما السلمي، فنظر إلى خيار أسنان إبله، فعزلها للصدقة، ثم استقبلهما بها، فلما رأياها قالا: ما هذا عليك، قال: خذاه فإن نفسي بذلك طيبة، فمرا على الناس وأخذا الصدقة، ثم رجعا إلى ثعلبة، فقال: أروني كتابكما، فقرأه فقال: ما هذه إلا جزية، ما هذه إلا أخت الجزية، اذهبا حتى أرى رأيي، فأقبلا فلما رآهما رسول الله صلى الله عليه وسلم قبل أن يكلماه قال: " يا ويح ثعلبة " ، ثم دعاء للسلمي بخير، وأخبراه بالذي صنع ثعلبة، فأنزل الله عز وجل: " ومنهم من عاهد الله لئن آتانا من فضله " إلى قوله " وبما كانوا يكذبون " وعند رسول الله صلى الله عليه وسلم رجل من أقارب ثعلبة سمع ذلك، فخرج حتى أتاه، فقال: ويحك يا ثعلبة، قد أنزل الله عز وجل فيك كذا وكذا

எப்போதும் பள்ளிவாசலிலேயே சுற்றித்திரிந்து கொண்டுஹமாமுல் மஸ்ஜித்பள்ளிப்புறாவாக இருந்த அவர் இப்போது லுஹர் மற்றும் அஸர் ஆகியவற்றை மட்டும் அண்ணலாருடன் தொழுது வந்தார்.

மீதமுள்ள தொழுகைகளை அவரின் மந்தையிலேயே தொழுது கொண்டிருந்தார்.

மந்தை இன்னும் பல்கிப் பெருகியது, ஜும்ஆவிற்கு மட்டும் வந்து கொண்டிருந்தார்.

மதீனாவில் அவரின் மந்தையை வைப்பதற்கு இடமே கிடைக்கவில்லை எனும் நிலை ஏற்படும் அளவிற்கு மந்தை பல்கிப் பெருகியது.

மதீனாவை விட்டு வெகு தூரமிருக்கின்ற ஓர் மலைப்பகுதியில் பிரம்மாண்டமான ஓர் இடத்தில் அவர் மந்தையை அமைத்தார்.

இப்போது அவரிடம் இருந்து ஜும்ஆவிற்கான நற்பேரும் அகன்று போனது.

ஒருமுறை நபிகளார் ஸஅலபா என்ன ஆனார்? என்று வினவியதற்கு, நபித்தோழர்கள் அவரின் நிலையை விளக்கிக் கூறினார்கள்.

அப்போது, அண்ணலார்யா வய்ஹ ஸஅலபாஸஅலபா விற்கு ஏற்பட்ட நாசமே! என்று மூன்று முறை கூறினார்கள்.

இந்நிலையில் அல்லாஹ் ஜகாத்தின் சட்டத்தை அருளினான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஸஅலபாவிடமும், ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த இன்னொரு நபித்தோழரிடமும் ஜகாத் வசூலிக்க இரண்டு நபர்களை, ஜகாத் பற்றிய விவரத்தோடும், என்னென்ன பொருளுக்கு என்னென்ன ஜகாத் வழங்க வேண்டும் என்கிற தகவலும் அடங்கிய ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்.

அவர்கள் நேராக ஸஅலபாவிடம் வந்து, கடிதத்தைக் கொடுத்து தம்மை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுப்பிவைத்ததின் நோக்கத்தைக் கூறினார்கள்.

ஜகாத்தின் விவரங்களைப் படித்த பிறகு, ஸஅலபா சொன்னார்: ”என்ன இது ஒரு முஸ்லிமிடம் ஜிஸ்யா வரி கேட்பது போலல்லவா இருக்கிறதுஎன்றார்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த இன்னொரு நபித்தோழரைச் சந்தித்து, கடிதத்தைக் கொடுத்து தங்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்ததின் நோக்கத்தைக் கூறினார்கள்.

ஜகாத்தின் விவரங்களைப் படித்த அவர் சற்று ஓய்வெடுங்கள். இதோ கணக்கெடுத்து விட்டு ஜகாத்தைத் தருகின்றேன்என்றார்கள்.

இதோ! என்னுடைய ஜகாத்! கொண்டு செல்லுங்கள். இப்போது தான் இதை வழங்கியதன் மூலம் என் மனம் நிம்மதி அடைவதை உணர்கின்றேன்என்றார்கள்.

அதைப் பெற்றுக் கொண்ட இருவரும், மீண்டும் ஸஅலபாவிடம் வந்தனர். முன்பு போலவே கூறிய அவர் ஜகாத் தர முடியாது என மறுத்து விட்டார்.

அங்கிருந்து விடை பெற்று இருவரும் மதீனா நோக்கி வந்தார்கள். நேராக மஸ்ஜிதுன் நபவீயில் வந்திறங்கினார்கள்.

அவர்கள் இருவரும் பேச்சு கொடுக்கும் முன்பாகவேயா வைஹ ஸஅலபாஎன்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

பின்பு நடைபெற்ற சம்பவங்களை அவ்விருவரும் நபிகளாரிடம் விவரித்தார்கள். ஸஅலபாவை சபித்த நபிகளார் {ஸல்} அவர்கள், ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த அந்த நல்ல நபித்தோழருக்கு துஆ செய்தார்கள்.

அப்போது அல்லாஹ் ஸஅலபாவின் இந்தச் செயலை இடித்துரைத்து வசனங்களை இறக்கியருளினான்.

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ (76) فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ (77)

அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்; “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம்; மேலும், நல்லவர்களாக வாழ்வோம்என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள்.

ஆகவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தினாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் நயவஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான்.”

                                                       (அல்குர்ஆன்:9:75-77)

நபிகளாரின் அவையிலிருந்த ஸஅலபாவின் உறவினர் ஒருவர் ஓடோடிச் சென்று இந்தச் செய்தியை ஸஅலபாவிடம் தெரிவித்தார்.

فخرج ثعلبة حتى أتي النبي صلى الله عليه وسلم، فسأله أن يقبل منه صدقته فقال: " إن الله تبارك وتعالى منعني أن أقبل منك صدقتك " ، فجعل يحثي التراب على رأسه، فقال رسول الله صلى الله عليه وسلم " هذا عملك، قد أمرتك فلم تطعني " ، فلما أبى رسول الله صلى الله عليه وسلم أن يقبض صدقته رجع إلى منزله، وقبض رسول الله صلى الله عليه وسلم ولم يقبض منه شيئاً.
ثم أتى أبا بكر رضي الله عنه حين استخلف، فقال: قد علمت منزلتي من رسول الله صلى الله عليه وسلم وموضعي من الأنصار فاقبل صدقتي، فقال أبو بكر: لم يقبلها رسول الله منك، أنا أقبلها؟ فقبض أبو بكر رضي الله عنه ولم يقبلها.
فلما ولي عمر أتاه فقال: يا أمير المؤمنين، اقبل صدقتي، فقال: لم يقبلها منك رسول الله صلى الله عليه وسلم ولا أبو بكر، أنا أقبلها؟ فقبض ولم يقبلها.
ثم ولي عثمان رضي الله عنه فأتاه فسأله أن يقبل صدقته، فقال: لم يقبلها رسول الله ولا أبو بكر ولا عمر، أنا أقبلها؟ ولم يقبلها. وهلك ثعلبة في خلافة عثمان رضي الله عنه.

இதைக் கேட்டதும் பதறித்துடித்த ஸஅலபா தமக்கான ஜகாத்தை கணக்கிட்டு, எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்தார். அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.

அதற்கு, அண்ணல் {ஸல்} அவர்கள்அல்லாஹ் உம்மிடமிருந்து உம்முடைய ஜகாத்தைப்பெறுவதற்கு தடை செய்துவிட்டான்என்று கூறினார்கள்.

அங்கிருந்து விடை பெற்ற ஸஅலபா தம் தலை மீது மண்ணை அள்ளி தூவிய வாறு சென்றார்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்ஸஅலபாவே! இது தான் உம்முடைய செயலாகும். முன்னரே உமக்கு உணர்த்தினேன். ஆனால், நீர் என் சொல்லை ஏற்க மறுத்து விட்டீர்என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் காலத்தில் ஸஅலபாவிட மிருந்து ஜகாத் பெற மறுத்து விட்டார்கள்.

முறையே பின்னர் ஆட்சியாளர்களாக இருந்த அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் வாங்க மறுத்து விட்டார்கள்.

இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅலபா இறந்து போனார். ( நூல்: உஸ்துல் ஃகாபா, பாகம்:1, பக்கம்:333, அல் இஸாபா, பாகம்:1, பக்கம்:930 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்புகளை ஏற்றுக் கொள்வானாக! நம்முடைய இரவு வணக்கங்களை கபூல் செய்வானாக! ரமழான் மாதத்தில் பகலிலும், இரவிலும் நாம் செய்கிற கடமையான, உபரியான, ஸுன்னத்தான வழிபாடுகளையும், இதர நன்மையான செயல்பாடுகள், தானதர்மங்கள் அனைத்தையும் பரிபூரணமாக ஏற்றுக் கொள்வானாக!

எஞ்சியிருக்கிற நாட்களில் நோன்புகள் நோற்பதற்கும், வாழும் காலமெல்லாம் ரமழானை அடைவதற்கும், நல் அமல்கள் செய்வதற்கும் நமக்கும், நமது மனைவி, மக்கள் மற்றும் நமது குடும்பத்தார்கள் யாவருக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்தருள்வானாக!!!

சங்கைக்குரிய உலமாக்களே! தங்களின் துஆவில் இந்த பாவியையும் மறக்காமல் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

4 comments:

  1. ரமலான் மாதத்தில் உங்கள் சேவை தொடர்வது ஆச்சரியம்..
    அல்லாஹ் உங்களுக்கு மேலும் கல்வி ஞானத்தையும் உங்களுக்கு அதிகமான ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்குவானாக..
    ஆமீன்.

    ReplyDelete
  2. ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

    ReplyDelete