வான்மறை கண்ட சமூகத்தை
வன்முறையால் வீழ்த்திட
முடியாது!!
இந்திய தேசமெங்கும்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களில் அனைத்து
தரப்பு மக்களும் தன்னெழுச்சியாக பங்கேற்று எதிர்ப்புகளை
பதிவு செய்து வருகின்றனர்.
நாட்டின் 14 முதல்வர்கள்
தங்கள் மாநிலங்களில் அமுல்படுத்த
மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றி
உள்ளனர். குறிப்பாக ஆளும்
பிஜேபி யோடு கூட்டணியில்
பங்கு பெற்று பீகாரில்
ஆட்சி நடத்துகிற நிதிஷ்குமார்
தலைமையிலான அரசும் இந்த
தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றது.
ஆனாலும், இந்தச்
சட்டத்தை முஸ்லிம்கள் மட்டுமே
எதிர்க்கின்றார்கள் என்கிற
தோற்றத்தை தொடர்ந்து மத்திய
அரசும் அதன் பரிவாரங்களும்,
சங்கிகளும், ரஜினி போன்ற
இறக்குமதியாளர்களும் பதிவு
செய்ய முனைவது நாட்டில்
வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு
பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி
இருக்கின்றது.
இதன் தொடர்ச்சியாக,
இந்தியாவின் முதல் ஷஹீன்
பாக் டெல்லி போராட்டகளம்
சர்வதேச ஊடகங்களை உற்று
நோக்க வைத்தது. சர்வதேச
அமைப்புகள் தீர்மானங்கள் நிறைவேற்றவும்,
இந்திய அரசை வலியுறுத்தவும் வழிகோலியது.
எனவே, சர்வதேச
கவனத்தைப் பெற்றுத் தந்த
போராட்டகளமான ஷீன் பாக்கை
முன்மாதிரியாகக் கொண்டு
நாட்டின் சில பகுதிகளில்
ஷஹீன் பாக்குகள் துவங்கப்பட்டன.
தமிழகத்தின்
முதல் ஷஹீன் பாக்
கடந்த 08/02/2020 அன்று
மேலப்பாளையத்தில் பகுதி
நேர தொடர் இருப்பு
போராட்டகளமாக (மாலை 04:00 மணிமுதல்
இரவு 09:00 மணிவரை) அனைத்து
இயக்கங்கள் அரசியல் கட்சிகள்
சார்பாக துவங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
தமிழகத்தில் தற்போது வரை
30 க்கும் மேற்பட்ட இடங்களில்
அமைதியான முறையில் தொடர்
இருப்பு போராட்டங்கள் ஷஹீன்
பாக் பாணியில் நடைபெற்று
வருகின்றது.
எப்படியாவது இந்த
போராட்டகளங்களை சீர் குலைக்க
வேண்டும் என்கிற முயற்சியில்
ஃபாஸிச பரிவாரங்கள் களமிறக்கப்பட்டன,
கடுமையாக முயற்சிக்கவும் செய்தன.
அதன் விளைவாக டெல்லி
ஷஹீன் பாக்கில் மூன்று
துப்பாக்கிச் சூடுகளும், தமிழகத்தில்
சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன்
பாக்கில் தடியடியும் நடத்தினர்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்த
விளைவுகள் நடக்கவில்லை.
எனினும் போராட்டக்களங்களில் அமைதியும், சிஏஎ,
என்பிஆர், என்ஆர்சி, -க்கு
எதிரான ஆக்ரோஷமான கோஷங்களும்
போராட்டக்காரர்களால் தொடர்ந்து
எழுப்பப் பட்டு வருகின்றன.
எனவே, இந்த
போராட்டகளங்கள் இனிமேலும் தொடரக்கூடாது
என்கிற வன்மமான எண்ணத்துடன்
கலவர பூமியாக, வன்முறை
களமாக மாற்ற வேண்டும்
என்கிற வெறியுடன் தலைநகர்
டெல்லியில் இன்னொரு ஷஹீன்
பாக்கான ஜாஃப்ராபாத் பகுதியை
பாஜக மற்றும் அதன்
பரிவாரங்கள், சங்கிகள் தேர்ந்தெடுத்தனர்.
பிஜேபியின் முக்கியமான
தலைவர்களில் ஒருவரான கபில்
மிஸ்ரா இதற்கான தீப்பொறியை
பற்ற வைத்தார். வடகிழக்கு
டெல்லி கலவர பூமியாக,
வன்முறை களமாக மாற்றப்பட்டது.
முஸ்லிம்கள் தேடித்தேடி
தாக்கப்பட்டனர். முஸ்லிம்களின் கடைகள்
சூறையாடப்பட்டன. அவர்களின் பொருட்கள்
திருடப்பட்டன. அந்தப் பகுதியில்
உள்ள தர்ஹா, பள்ளிவாசல்கள்
தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.
டைம்ஸ் ஆஃப்
இந்தியா ஊடகத்தின் நிருபர்
முஸ்லிமா? இந்துவா? என்று
பேண்ட்டுக்குள் கை விட்டு
பரிசோதிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றார்.
வியாழன் காலை
தினசரிகளின் செய்திப்படி 24 உயிர்ப்பலிகள்
என்று வந்தது. ஆனால்,
வியாழன் காலை 10:15 மணி
நிலவரப்படி உயிர்ப்பலி எண்ணிக்கை
35 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்றவர்களின் எண்ணிக்கை 150 க்கும்
மேலாக உள்ளது. இன்னும்
பல பேர் நிலைமை
கவலைக்கிடமாக இருப்பதாக ஜிடிபி
மருத்துவமனையில் இருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுக்க முழுக்க
பாஜக வின் வெறியாட்டத்தின் விளைவாலேயே இந்த
வன்முறை அரங்கேற்றப்பட்டிருக்க தினமணி
உள்ளிட்ட சில ஊடகங்களும்,
ரஜினி போன்ற சில
இறக்குமதி பிரபலங்களும், அறிவு
ஜீவிகளும் 70 நாட்களைக் கடந்து
அறவழியில், அமைதியாய் நடந்து
கொண்டிருக்கிற ஷஹீன் பாக்குகளையும்,
ஷஹீன் பாக் போராட்டகாரர்களையும் நோக்கி “இந்தப்
போராட்டகளங்கள் தான், இவர்கள்
தான் காரணம்” என
கை நீட்டுகின்றார்கள்.
மிகப்பெரிய இன
ஒழிப்பை திட்டமிட்டு அரங்கேற்ற
நினைத்து துவங்கிய இந்த
வன்முறை முதற்கட்டமாக 35 உயிர்களை
பலியாக கொடுத்திருக்கின்றது.
காவல்துறையின், உளவுத்துறையின் மெத்தனம் தான்
காரணம் என்று கடுமை
காட்டிய நீதியரசர் முரளிதரன்
இரவோடு இரவாக பணிமாற்றமும்
செய்யப்பட்டு இருக்கின்றார்.
முஸ்லிம்களும்…
இழப்புகளும்..
இந்திய மக்கள்
தொகையில் 13.4 சதவீதம் இருப்பதாக
சொல்லப்படும் இந்திய முஸ்லிம்
சமூகம் கலவரத்தில் 65 சதவீதம்
கொல்லப்படுகின்றார்கள் என்கின்றார்
தேசிய காவல்துறை அகாடமியின்
ஆய்வாளர் வி.என்
ராய்.
இந்திய மக்கள்
தொகையில் 13.4 சதவீதம் இருப்பதாக
சொல்லப்படும் இந்திய முஸ்லிம்
சமூகம் சிறைச்சாலைகளில் 21 சதவீதம்
அடைபட்டு கிடக்கின்றனர் என்கிறது
தேசிய குற்றப்புலணாய்வு புள்ளி
விவரம்.
இந்திய மக்கள்
தொகையில் 13.4 சதவீதம் இருப்பதாக
சொல்லப்படும் இந்திய முஸ்லிம்
சமூகத்தின் சொத்துக்கள், உடமைகள்,
நிறுவனங்கள், கடைகள் மட்டுமே
கலவரங்களின் போது பெருத்த
சேதாரத்தை சந்திக்கின்றது என்கிறது
கலவரங்களை ஆய்வு செய்வதற்காக
அமைக்கப்பட்ட பல்வேறு கமிஷன்களின்
ஆய்வறிக்கை.
மொத்தத்தில் முஸ்லிம்கள்
என்பதற்காகவே இந்த தாக்குதல்கள்,
சேதாரங்கள், சிறைச்சாலைகள், உயிர்ப்பலிகள்
நிகழ்த்தப்படுகின்றன என்றால்
அது மிகையல்ல.
இன்னும் எத்தனை
முஸ்லிம்களை அடைத்து சிறைச்சாலைகளை
நிரப்பப் போகின்றீர்கள் நீங்கள்?
இன்னும் எவ்வளவு சொத்துக்களை,
உடமைகளை சேதப்படுத்தப் போகின்றீர்கள்
நீங்கள்? இன்னும் எத்தனை
முஸ்லிம்களின் உயிர்கள் வேண்டும்
உங்களுக்கு?
ஒரு கால
கட்டத்தில் இந்தியா எனும்
தேசம் சுதந்திர தேசமாக
விளங்க வேண்டும் என்பதற்காக
உடமைகளை, சொத்துக்களை, உயிர்களை
இந்த சமூகம் இழந்தது.
அன்றும் அது தன்னுடைய
சதவீதத்தை விட அதிகமான
தியாகங்களைச் செய்தது.
இன்று அந்த
நாட்டில் சுதந்திரமாக எல்லா
உரிமைகளோடும் வாழ வேண்டும்
என்பதற்காக சொத்துக்களை, உடமைகளை,
உயிர்களை தொடர்ந்து இழந்து கொண்டிருக்கின்றது. இன்றும் அது
தன்னுடைய சதவீதத்திற்கும் மிக
அதிகமான தியாகங்களைச் செய்து
கொண்டிருக்கின்றது.
ஜனநாயகத்தின் மீது
நம்பிக்கை வைத்தோம் காஷ்மீர்
உரிமையை பறித்தார்கள். மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை
வைத்தோம் முத்தலாக் சட்டத்தை
நடைமுறை படுத்தினார்கள். சட்டத்தின்
மீது நம்பிக்கை வைத்தோம்
தடா,
பொடா, என்ஐஏ என
அத்தனைச் சட்டங்களையும் பயன்படுத்தி
சிறையை நிரப்புகின்றார்கள். நீதியை
நம்பினோம் 450 ஆண்டு பாரம்பர்ய
பாபர் மசூதியை இழந்து
நிற்கின்றோம்.
தொடர்ந்து நம்
உடமைகள் தான் சேதத்திற்குள்ளாகிறது!
நம் சொத்துக்கள் தான்
சூறையாடப்படுகின்றது! நம் பெண்களின்
மானமும், கற்பும் தான்
காவு வாங்கப்படுகின்றது! கர்ப்பிணிப்
பெண்களின் வயிற்றில் வாழ்வதற்கு
கூட இந்த சங்கப்பரிவார
கூட்டங்கள் நம் சந்ததிகளை
அனுமதிப்பதில்லை! அப்படியே நாம்
பிறந்தாலும் இங்கே இவர்கள்
நம்மை வாழ விடுவதில்லை!
என்ன செய்யப்போகின்றோம்!
எதை ஈடாகக் கொடுத்து
இந்த தேசத்தில் நாம்
வாழப்போகின்றோம்? இடைவிடாது எழும்
இந்தக் கேள்விகள் நம்மை
தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றது.
வன்முறையில் பாதிக்கப்படுவதென்பது மிகப்
பெரும் துயரம்
ஆகும்…
வன்முறையாளர்களிடம் சிக்கிக்
கொண்ட மனிதர்களை அவ்வளவு
எளிதாக மாநபி {ஸல்}
அவர்கள் கடந்து போய்விட
வில்லை. அவர்களுக்காக கவலைபட்டார்கள்.
அவர்களைச் சந்தித்து ஆறுதல்
கூறினார்கள். அவர்களுக்காக துஆ
செய்தார்கள். வன்முறையாளர்களின் தீங்குகளில்
இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு
அறிவுறுத்தினார்கள்.
வன்முறையால் பாதிக்கப்படுபவர்களின் சடலங்களைக் கூட
வன்முறையாளர்களிடம் விட்டு
விட மாநபி {ஸல்}
அவர்கள் பயந்தார்கள்.
கப்பாப் இப்னு
அல் அரத் (ரலி)
யாஸிர் (ரலி), அபாஜன்தல்
(ரலி),
போன்றோர் வன்முறையாளர்களிடம் சிக்கித்
தவித்த போது ஆறுதல்
வார்த்தைகளை கூறினார்கள். அவர்களுக்காக
துஆ செய்தார்கள் எனும்
செய்தியை வரலாற்றில் பார்க்க
முடிகின்றது.
أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ:
"اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ
بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ
أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول:
"اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا
عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".
قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ
قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ
"وَمَا تَرَاهُمْ
قَدْ قَدِمُوا".
صحيح البخاري ومسلم والسنن
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன்
ஹமிதஹ்" என்று கூறியதும் பின்வருமாறு
குனூத் ஓதுவார்கள்:
“இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்)
வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக்
காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா!
இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!
இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்)
யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச
ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!
தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்னர் (ஒரு நாள்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான்
பார்த்தேன்.
உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட)
மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன்.
அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள்
(மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.
فلما بلغ النبي صلى الله عليه وسلم هذا الخبر قال لأصحابه أيكم( ينزل )
(1) خبيبا عن خشبته وله الجنة؟ فقال الزبير: أنا يا رسول الله وصاحبي المقداد بن
الأسود، فخرجا يمشيان بالليل ويكمنان بالنهار حتى أتيا التنعيم ليلأ 31/ب وإذا حول
الخشبة أربعون رجلا من المشركين نائمون نشاوى فأنزلاه فإذا هو رطب ينثني لم يتغير
منه شيء بعد أربعين يوما، ويده على جراحته وهي تبض دما اللون لون الدم والريح ريح
المسك، فحمله الزبير على فرسه وسارا فانتبه الكفار وقد فقدوا خبيبا فأخبروا قريشا
فركب منهم سبعون، فلما لحقوهما قذف الزبير خبيبا فابتلعته الأرض فسمي بليع الأرض.
فقال الزبير: ما جراكم
علينا يا معشر قريش، ثم رفع العمامة عن رأسه وقال: أنا الزبير بن العوام وأمي صفية
بنت عبد المطلب وصاحبي المقداد بن الأسود أسدان رابضان يدافعان عن شبليهما فإن
شئتم ناضلتكم وإن شئتم نازلتكم وإن شئتم انصرفتم، فانصرفوا إلى مكة، وقدما على
رسول الله صلى الله عليه وسلم وجبريل عنده فقال يا محمد إن الملائكة لتباهي بهذين
من أصحابك فنزل في الزبير والمقداد بن الأسود { وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي
نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ } حين شريا أنفسهما لإنزال خبيب عن خشبته
عيون الأثر لابن سيد
الناس: 2 / 56-66
ஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி
காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.
ஆம்! குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு
தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம்.
எதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள்.
ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான் அங்கே வந்தார்.
வந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின் அருகே சென்று “குபைபே!
உம்மை துன்புறுத்த வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும்
என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல!
குபைபே! உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான்! அதுவும் ஒற்றை
வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே!
“இந்தக்
கழுமரத்தில் முஹம்மத் {ஸல்} அவர்கள்
ஏற்றப்படுவதை நான் விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை
சொல்லிவிடு!
உமக்கு வாழ்க்கை தருகின்றோம்! உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்” என்றார்.
“என்
மனைவி, மக்களுடன் வாழவோ, உலக
இன்பத்தில் திளைக்கவோ நான் ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு
அழிப்பீர்களே அப்போதும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
என் வாயால் ஒரு போதும் நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும்
சொல்லப்போவதில்லை.
கேட்டுக் கொள்ளுங்கள்! நபி {ஸல்} அவர்களின் திருப்பாதங்களில் சிறு
முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
இது கேட்ட அபூசுஃப்யான் ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே
ஃகுபைபை காலி செய்யுமாறு சைகை செய்தார்.
தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை
திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.
கையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக
தாக்கினார்கள் எதிரிகள்.
மரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர்
பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி “இறைவா! உன் திருத்தூதர்
எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம்! எங்களின் இந்த
நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு! என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி
வைத்துவிடு!” என்று இறைஞ்சினார்கள்.
அல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடனே அங்கீகரித்தான். ஆம்! குபைப்
(அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ஸல்} அவர்களுக்கு
அறிவித்தான்.
நபி {ஸல்}
அவர்கள் குபைப் (ரலி) அவர்கள் தங்கள் மீது
வைத்திருந்த உள்ளார்ந்த அன்பை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.
வார்த்தையில் கூட விட்டுக் கொடுக்காத குபைப் (ரலி) அவர்களுக்கு ஏதாவது செய்ய
வேண்டுமென நபி {ஸல்}
அவர்கள் விரும்பினார்கள்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொடூரமாக கொலை
செய்யப்பட்ட குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை பாவிகள் கழுமரத்திலிருந்து கீழே
இறக்காமல் அரபுலக மக்களுக்கு காட்சிப் பொருளாக ஆக்கியிருப்பதைக் கேட்டு நபி {ஸல்} அவர்கள் வேதனை அடைந்தார்கள்.
உடனடியாக, தங்களது தோழர்களை ஒன்று கூட்டிய நபி {ஸல்} அவர்கள், தோழர்களை நோக்கி “தோழர்களே!
ஃகுபைப் (ரலி) அவர்களை ஏனைய ஷுஹதாக்களோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என என் மனம்
விரும்புகின்றது. மக்காவிற்குச் சென்று குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை கைப்பற்றி
இங்கே யார் கொண்டு வருகின்றார்களோ அவர் சுவனவாசியென்று நான் சாட்சி பகர்கின்றேன்!”
என்று கூறினார்கள்.
அங்கே, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் சென்று குபைப் (ரலி)
அவர்களின் உடலைக் கொண்டு வருகின்றேன்! எனக்கு துணையாக, நீங்கள்
எனக்கு கொள்கைச் சகோதரராக ஆக்கிய மிக்தாத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை அழைத்துச்
செல்கிறேன்” என்றார்கள்.
உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு மக்காவின் எல்லைக்கு இருவரும் வந்தார்கள்.
பகலில் மக்கள் நடமாட்டத்தையும், எதிரிகளின் எண்ணிக்கையையும் கண்காணித்து விட்டு, சிறந்த ஓர் திட்டத்தை தயார் செய்து இரவுக்காக காத்திருந்தார்கள்.
நள்ளிரவு நேரத்தில் ஓசைபடாமல் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட மரத்தை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
விவேகத்தோடு செயல்பட்ட அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினார்கள். அப்போது குபைப் (ரலி) அவர்களின் அந்த பூவுடல் சிதையாமல் அப்படியே இருந்தது.
கொல்லப்பட்டு 40 நாட்களாகியும் உடலில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. பூஉடல் செந்நிறமாகவும், வாடை கஸ்தூரி வாடையாகவும் இருந்தது.
குபைப் (ரலி) அவர்களின் உடலை சுபைர் (ரலி)
அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.
இதே நேரத்தில் பாதுகாப்புக்கு நிண்றிருந்தவர்கள் போதையிலிருந்து தெளிந்து, கண் விழித்துப் பார்த்த போது குபைபை காணாது திகைத்துப் போனார்கள்.
உடனே குறைஷித்தலைவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 70 குதிரை
வீரர்கள் விரைவாக சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக, ஸுபைர் (ரலி) அவர்களையும், மிக்தாத் (ரலி) அவர்களையும் அந்த குதிரை வீரர்கள் மடக்கினர்.
மடக்கியதும் குபைப் (ரலி) அவர்களின் உடலை ஸுபைர்
(ரலி) அவர்கள் பூமியில் வைத்தார்கள். பூமி குபைப் (ரலி) அவர்களின் உடலை விழுங்கிக் கொண்டது. அதனாலேயே முதன் முதலாக பூமியால் விழுங்கப்பட்டவர் என்று குபைப் (ரலி)
அவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
( நூல்: தஃப்ஸீர்
அல் பஃக்வீ, உயூனுல் அஸர் ஃபீ ஃபுனூனில் மஃகாஸி
வஷ்ஷமாயிலி வஸ்ஸியர் லி இமாமி இப்னு ஸைய்யிதின் நாஸ் )
பழிக்குப்பழியும்.. மனித உயிர்களின் மதிப்பும்…
மனிதனின் உணர்வுகளுக்கும் மனிதனின் உடமைகளுக்கும்
மனிதனின் மானத்திற்கும், மனிதனின்
மரியாதைக்கும் மனிதனின் உயிருக்கும்
இஸ்லாம் வழங்கியிருக்கும் கண்ணியத்தைப்
போன்று உலகில் வேறெந்த
மதங்களும், கொள்கைகளும், இஸங்களும்
வழங்கியதில்லை. இனி எப்போதும்
வழங்கப் போவதும் இல்லை.
பின்வரும் இந்த
ஓரு இறைவசனமே மகத்தான
சான்றாகும்.
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
“எவரொருவர் ஒரு
(மனிதனை) ஆன்மாவை வாழ
வைக்கின்றாரோ அவர் உலகின்
ஒட்டு மொத்த மனித
சமூகத்தையும் வாழ வைத்தவர்
போன்றவர் ஆவார்”.
( அல்குர்ஆன்: 5: 32 )
فقال الحافظ أبو بكر البزار:
حدثنا الحسن بن يحيى، حدثنا عمرو بن عاصم، حدثنا صالح المري ، عن
سليمان التيمي، عن أبي عثمان، عن أبي هريرة، رضي الله عنه؛ أن رسول الله صلى الله
عليه وسلم وقف على حمزة بن عبد المطلب، رضي الله عنه، حين استشهد، فنظر إلى منظر
لم ينظر أوجع للقلب منه. أو قال: لقلبه [منه] فنظر إليه وقد مُثِّل به فقال رسول
الله صلى الله عليه وسلم: "رحمة الله عليك، إن كنت -لما علمتُ-لوصولا للرحم،
فعولا للخيرات، والله لولا حزن من بعدك عليك، لسرني أن أتركك حتى يحشرك الله من
بطون السباع -أو كلمة نحوها-أما والله على ذلك، لأمثلن بسبعين كمثلتك.
فلما سمع المسلمون ذلك قالوا:
والله لئن ظهرنا عليهم لنمثلن بهم مثلة لم يمثلها أحد من العرب بأحد قط.
فنزل جبريل، عليه السلام، على محمد صلى الله عليه وسلم بهذه
السورة وقرأ: { وَإِنْ عَاقَبْتُمْ
فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ } إلى آخر الآية، فكفر رسول الله صلى
الله عليه وسلم -يعني: عن يمينه-وأمسك عن ذلك
.
உஹத் யுத்தகளம் முஸ்லிம்களுக்கு தோல்வியோடு முடிந்திருந்த தருணம் அது. ஆராத ரணங்களையும்,
நெஞ்சமெங்கும் வடுக்களையும் தந்திருந்தது.
இஸ்லாமியப் படையில் உயிர் துறந்தவர்களை அடையாளம் கண்டு, எண்ணிக்கையை
கணக்கிட்டுக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரலி)
அவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்த காட்சி பெருமானார்
{ஸல்} அவர்களை நிலைகுலைய வைத்தது.
ஹம்ஜா (ரலி) அவர்கள் உடலின் அலங்கோல நிலையைக் கண்டு மனம்
வெதும்பி கோபத்தோடு நபி {ஸல்} அவர்கள் “அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! உலகில்
நீங்கள் வாழும் போது இரத்த உறவுகளை பேணக்கூடியவராகவும், நன்மையான
காரியங்களை செய்யக்கூடியவராகவும் வாழ்ந்து வந்தீர்கள்!
பெண்கள் கவலை கொள்வார்கள். எனக்குப் பின் இது ஒரு நடைமுறையாக ஆகிவிடும் என்கிற அச்சம்
மாத்திரம் எனக்கு ஏற்படாதிருப்பின் காட்டு மிருகங்களில் வயிறுகளில் இருந்தும்,
பறவையுடைய வயிறுகளில் இருந்தும் அல்லாஹ் தங்களை எழுப்பவேண்டும்
என்பதற்காக (உங்களின் உடலை பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் உணவாக)
இந்த இடத்திலேயே விட்டு விடுவேன்.
ஆனால், எல்லாம் வல்ல இறைவன் எனக்கு அவர்கள் மீது வெற்றியளித்தான் எனில்
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்: “தங்களின்
உயிருக்குப் பதிலாக எதிரிகளின் எழுபது பேரை இது போன்று செய்திடுவேன்” என்று கூறினார்கள்.
அப்போது, அருகிலிருந்த நபித்தோழர்களும் “எங்களுக்கு அல்லாஹ்
வெற்றியை நல்கினான் எனில், அரபுலகத்தில் யாரும் செய்யாத
அளவுக்கு மிகவும் கொடூரமான முறையில் பழிக்குப் பழியாக நாங்கள் நடந்து கொள்வோம்,
நிச்சயம் நாங்கள் நடந்து கொள்வோம்” என்றனர்.
பின்னர், நபி {ஸல்} அவர்கள்
ஷுஹதாக்களுக்கு தொழுவித்து, நல்லடக்கம் செய்து விட்டு சோகமே
உருவாக அமர்ந்திருந்தார்கள்.
அப்போது, அங்கே அல்லாஹ்வின் திருவசனங்களைத் தாங்கி ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து…
وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ
وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ () وَاصْبِرْ وَمَا صَبْرُكَ
إِلَّا بِاللَّهِ وَلَا وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِمَّا
يَمْكُرُونَ () إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ
مُحْسِنُونَ ()
“மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால், உங்கள் மீது எந்த
அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்! எனினும், நீங்கள்
பொறுமையாக இருப்பீர்களாயின் திண்ணமாக, இதுவே பொறுமையைக்
கடைபிடிப்பவர்களுக்குச் சிறந்ததாகும்.
நபியே! நீர் பொறுமையுடன் உமது பணியை ஆற்றிக்கொண்டிருப்பீராக! மேலும், நீர் பொறுமையாய் இருப்பதென்பது அல்லாஹ்வின்
பேருதவியினால் தான் என்பதையும் விளங்கிக்கொள்வீராக! அவர்களின்
செயல்கள் குறித்து நீங்கள் வருந்தவும் வேண்டாம். அவர்களின்
சூழ்ச்சிகள் குறித்து மனம் குமுறவும் வேண்டாம்.
எவர்கள் இறையச்சம் கொள்கின்றார்களோ, மேலும் நன்னடத்தையை மேற்கொள்கின்றார்களோ
அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்” எனும் அந் நஹ்ல்
அத்தியாயத்தின் 126 முதல் 128 வரையிலான
வசனங்களை ஓதிக்காண்பித்தார்கள்.
இதன் பின்னர் நபி {ஸல்} அவர்கள் சத்தியத்திற்கான பரிகாரத்தைச் செய்து
விட்டு தங்களது சத்தியத்தை முறித்துக் கொண்டார்கள்.
ஆகவே தான் பின் நாளில் வஹ்ஷீ அவர்களையும் ஹிந்தா அவர்களையும் நபி {ஸல்} அவர்கள் மன்னித்தார்கள்.
( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் குர்துபீ, தஃப்ஸீர் அல் மள்ஹரீ )
இங்கே, பழிக்குப்பழி வாங்குகிற செயலை அல்லாஹ் அங்கீகரித்த போதிலும் ”பொறுப்பது தான் பொறுமையாளர்களுக்கு நல்லது” என அல்லாஹ் நபி {ஸல்} அவர்களுக்கு அறிவுறுத்துகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அல்லாஹ்வின் அறிவுரையை,
வழிகாட்டலை ஏற்றுக் கொண்டார்கள்.
வன்முறையின் வடிவங்கள் வெவ்வாறானவை…
வன்முறைக்கு எதிர்வினை
வன்முறை என்றால், வன்முறைக்கு தீர்வு வன்முறை தான் என்றால் இங்கே
முஸ்லிம்களுக்கு எதிராக அதிகாரத்தின் மூலம் வன்முறை நிகழ்த்தப்படுகின்றது. ஆட்சியின் பெயரால் வன்முறை நிகழ்த்தப்படுகின்றது. சட்டத்தின்
பெயரால், நீதியின் பெயரால், ஊடகத்தின் பெயரால் என்று ஒரு நீண்ட
பட்டியலைத் தர முடியும்.
கல்லெடுத்தவனை கல்லால்
எதிர்க்கிறோம், வாள் எடுத்தவனை வாளால் எதிர்க்கிறோம் என்றால்
மற்ற மற்ற வழிகளில் வன்முறையை நிகழ்த்துபவர்களை எப்படி எதிர் கொள்வது?
அப்சல்குரு, யாகூப் மேமன் ஆகியோரை தூக்கில் போட்ட போது நாட்டின் பெரும்பான்மை
மக்களின் கூட்டு மனசாட்சி என்றது நீதி மன்றம்.
நாட்டு மக்களில் பெரும்பான்மையோர்
குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கிற போதும் இப்போது கூட்டு மனசாட்சி அடிப்படையில் நீதி
வழங்க முடியவில்லை. ஏனெனில், முஸ்லிம் சமூகம்
இதை எதிர்க்கின்றது. எனவே நீதியின் பெயரால் இங்கே முஸ்லிம் சமூகத்தின்
பெயரால் வன்முறை நிகழ்த்தப்படுகின்றது.
தமிழகத்தில் மறைந்த
ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த அநீதி ஒன்றை எடுத்துக்காட்டாக இங்கே கூறினால் பொருத்தமாக
இருக்கும்.
ஐஏஎஸ் அதிகாரி முனீர்
ஹோடாவுக்கு எதிரான அரசியல் வன்முறையை ஏவியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
கோவை குண்டு வெடிப்பு
வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாஸர் மதானிக்கு செயற்கை கால் பொருத்துவதற்காக அனுமதி
கேட்டு அனுப்பப்பட்ட மனுவை பரிசீலித்து ஒப்புதல் அளித்தார் அப்போதைய உள்துறை செயலாளர்
முனீர் ஹோடா.
முஸ்லிம் என்பதாலேயே
ஒரு தீவிரவாதிக்கு உதவ முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு, தீவிரவாதத்திற்கு அவர் உதவியதாகவும் பழிசுமத்தி, பதவியில் இருந்து தூக்கி எறிந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
திமுக ஆட்சிக்கு வந்த
பிறகு முனீர் ஹோடாவுக்கு சிறப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போதும் “தீவிரவாதிக்கு உதவிய ஹோடாவுக்கு
உயர் பதவி வழங்கியிருப்பதாக மட்டமாக விமர்சித்தார் ஜெயலலிதா.
ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ, டாக்டரையோ, ஐஏஎஸ் அதிகாரியையோ அவர்களின் பதிவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே
இச்சமூகம் தலைப்படுகின்றது என்றால் இந்த வன்முறையை எப்படி? எதைக்
கொண்டு எதிர்கொள்வது?
மதக்கலவரங்களை விசாரிக்க
இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதி கூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத் தான் ஆதரிப்பார் என்ற
கண்மூடித்தனமான நம்பிக்கை விதைக்கப்பட்டு, இந்து நீதிபதிகள் எல்லோரும்
நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம் நீதிபதிகள் மதவெறியர்கள்
என்பது போலவும் கருத்து வன்முறை நாட்டில் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆதலால் தான் அதிகளவில் முஸ்லிம்கள் குற்றவாளிகளாகவும், இந்துக்கள் நீதிமான்களாகவும் நாட்டில் கருதப்படுகின்றனர். இந்த வன்முறையை எப்படி? எதைக் கொண்டு எதிர் கொள்வது?
இப்படி பல்வேறு வடிவங்களிலால்
ஆன வன்முறைகளை நாள் தோரும் நாட்டில் எங்காவது எதிர் கொண்டே இருக்கிற முஸ்லிம் சமூகம்
எப்படி இந்த வன்முறைகளில் இருந்து தம் சமூகத்தை காப்பாற்றுவது?
ஒட்டு மொத்தமான பல்வேறு
வடிவங்களிலான இந்த வன்முறைகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தை படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வால்
மட்டுமே பாதுகாக்க, காப்பாற்ற முடியும்.
இது தான் உலகில் அநியாயக்காரர்களை
எதிர்த்து, ஆட்சியாளர்களை எதிர்த்து, வெற்றி வாகை சூடிய எல்லா காலத்தைய முஸ்லிம் சமூகத்தின் வரலாறுகளும் பகர்கின்ற
சான்றுகளாகும்.
அல்லாஹ் பாதுகாக்க
வேண்டுமானால் மூன்று விதமான பண்புகளை முஸ்லிம் சமூகம் அவசியமாக்கிக் கொள்ள வேண்டும்.
1.
அசைக்க முடியாத இறைநம்பிக்கை, 2. வணக்க
வழிபாடுகளில் பற்றுதல், 3. பிரார்த்தித்தல்.
عن أنس
بن مالك رضي الله عنه قال : ( كان رجل من أصحاب النبي صلى الله عليه وسلم من
الأنصار يكنى ( أبا معلق ) ، وكان تاجراً يتجر بماله ولغيره يضرب به في الآفاق ،
وكان ناسكا ورعا ، فخرج مرة فلقيه لص مقنع في السلاح ، فقال له : ضع ما معك فإني
قاتلك ، قال : ما تريد إلى دمي ! شأنك بالمال ، فقال : أما المال فلي ، ولست أريد
إلا دمك ، قال : أمَّا إذا أبيت فذرني أصلي أربع ركعات ؟ قال : صلِّ ما بدا لك ،
قال : فتوضأ ثم صلَّى أربع ركعات ، فكان من دعائه في آخر سجدة أن قال : ( يا ودود ! يا ذا العرش المجيد
! يا فعَّال لما يريد ! أسألك بعزك الذي لا يرام ، وملكك الذي لا يضام ، وبنورك
الذي ملأ أركان عرشك ، أن تكفيني شرَّ هذا اللص ، يا مغيث أغثني ! ثلاث مرار ) قال
: دعا بها ثلاث مرات ، فإذا هو بفارس قد أقبل بيده حربة واضعها بين أذني فرسه ،
فلما بصر به اللص أقبل نحوه فطعنه فقتله ، ثم أقبل إليه فقال : قم ، قال : من أنت
بأبي أنت وأمي فقد أغاثني الله بك اليوم ؟ قال : أنا ملَكٌ من أهل السماء الرابعة
، دعوت بدعائك الأول فسمعت لأبواب السماء قعقعة ، ثم دعوت بدعائك الثاني فسمعت
لأهل السماء ضجة ، ثم دعوت بدعائك الثالث فقيل لي : دعاء مكروب ، فسألت الله تعالى
أن يوليني قتله .
قال أنس رضي الله عنه : فاعلم أنه من توضأ وصلى أربع ركعات ودعا بهذا الدعاء استجيب له مكروباً كان أو غير مكروب ) .
أخرجه ابنُ أبي الدنيا في " مجابي الدعوة " ( 64 ) و" الهواتف " ( 24 ) ، ومن طريقهِ أخرجه اللالكائي في " شرح أصولِ الاعتقاد " ( 5 / 166 ) وبوَّب عليه
قال أنس رضي الله عنه : فاعلم أنه من توضأ وصلى أربع ركعات ودعا بهذا الدعاء استجيب له مكروباً كان أو غير مكروب ) .
أخرجه ابنُ أبي الدنيا في " مجابي الدعوة " ( 64 ) و" الهواتف " ( 24 ) ، ومن طريقهِ أخرجه اللالكائي في " شرح أصولِ الاعتقاد " ( 5 / 166 ) وبوَّب عليه
" سياق ما روي من كراماتِ أبي معلق " ،
وأخرجه " أبو موسى المديني " – كما ذكر ذلك الحافظ ابن حجر في "
الإصابة " ( 7 / 379 ) في ترجمة
أبي معلق
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபீ முஅல்லகுல் அன்ஸாரி என்கிற நபித்தோழர் ஒருவர் இருந்தார். மிகவும் பேணுதலும், வணக்க வழிபாட்டில் பற்றுதலும் நிறைந்து
காணப்பட்டார்.
பெரும் வியாபாரியாக
திகழ்ந்த அவர் அவ்வப்போது வியாபார விஷயமாக வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் செல்வார்.
அப்படி ஒரு முறை வெளியூர்
சென்று திரும்பி இருந்த போது அவரச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது ஆச்சர்யமான
நிகழ்வொன்றைக் கூறினார்.
வியாபாரத்தை முடித்துக்
கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் போது ஓரிடத்தில் கொள்ளையன் ஒருவன் இடைமறித்து
பொருளையும், பணத்தையும் புடுங்கிக் கொண்டு, அபீ முஅல்லக்கை கொலை செய்ய வாளை உருவினான்.
பணத்தையும், பொருளையும் தான் எடுத்துக் கொண்டாயே என்னை ஏன் கொல்லப் போகின்றாய்?
என்று அந்த அன்ஸாரித் தோழர் கேட்க, கொள்ளையன் என்னுடைய
நடைமுறை இது தான் என்று கூறினான்.
அப்படியென்றால் எனக்கு
நான்கு ரக்அத் தொழ சிறிது நேரம் அவகாசம் கொடு என்றார் அன்ஸாரித்தோழர். சாகப்போகிற உமக்கு தொழத்தானே அனுமதி வேண்டும்? தொழுது கொள்! என்றான் கொள்ளையன்.
ஒழுச் செய்து தொழ ஆரம்பித்த
அவர், தொழுகையின் நான்காவது ரக்அத்தின் கடைசி ஸஜ்தாவில்
அல்லாஹ்விடம் மனமுருகி பின்வருமாறு இறைஞ்சினார்.
அல்லாஹ்வே! பேரன்பு கொண்ட பெரும் கருணையாளனே! கீர்த்தி
மிக்க அர்ஷின் அதிபதியே! நாடியதை நாடியவாறு செயல்படுத்தும் ஆற்றல்
கொண்டவனே!
களங்கப்படுத்தப்படாத
உன் கண்ணியத்தை கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்! பங்கு கேட்கப்பட
முடியாத உன் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்! அரியணை முழுவதும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் ஒளியைக் கொண்டு உன்னிடம்
கேட்கின்றேன்!
இந்த கொள்ளையனின் தீங்கிலிருந்து
என்னை காத்தருள்! அபயம் அளிப்பவனே! எனக்கு
அபயம் அளிப்பாயாக! அபயம் அளிப்பவனே எனக்கு அபயம் அளிப்பாயாக!
அபயம் அளிப்பவனே எனக்கு அபயம் அளிப்பாயாக! என்று
கேட்டு விட்டு தொழுகையை முடித்து பார்த்தால் பிரம்மாண்டமான ஒருவர் கையில் பெரிய ஆயுதத்துடன்
நின்று கொண்டிருக்கின்றார்.
கொள்ளையன் கீழே பிணமாக
வீழ்ந்து கிடக்கின்றான். அங்கே நின்றிருந்தவரை நோக்கி “என் தாயும் தந்தையும் உமக்கு அர்ப்பணமாகட்டும்! நீர்
யார்? எங்கிருந்து வந்திருக்கின்றீர்? என்று
கேட்டாராம்.
அதற்கவர், நான் நான்காம் வானத்தில் இருக்கும் மலக் வானவர் ஆவேன்.
உம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ் எனக்கு கட்டளையிட்டான்” என்று கூறிவிட்டு, உம்முடைய முதல் வார்த்தையான யாவதூத்
– பேரன்பு கொண்ட பெரும் கருணையாளனே எனும் வார்த்தையை கேட்கும் போது முதலாவது
வானம் குலுங்கியது. இரண்டாவது வார்த்தையான கீர்த்திமிக்க அர்ஷின்
அதிபதியே என்று நீர் அல்லாஹ்வை அழைத்த போது இரண்டாவது வானம் நடுங்கியது, மூன்றாவது வார்த்தையான நாடியதை நாடியவாறு செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவனே என்று
அல்லாஹ்வை நீர் அழைத்த போது, அல்லாஹ் என்னைக் கூப்பிட்டு
“என் அடியான் ஏதோ நெருக்கடியில் இருக்கின்றான். விரைவாகச் சென்று என்
அடியானுக்கு உதவுவீராக!” என்றான்.
உமக்கு உதவுவதற்காகவே
நான்காம் வானத்தில் இருந்து அல்லாஹ் என்னை அனுப்பி வைத்தான் என்று சொல்லிவிட்டு அவர்
சென்று விட்டார்” என்று என்னிடம் அன்ஸாரித்தோழர் கூறினார்.
இந்த நிகழ்வை கூறிய
பின்னர் அனஸ் (ரலி) அவர்கள்
“எவர் ஒழூச் செய்து நான்கு ரக்அத் தொழுது இந்த துஆவை கேட்பார் என்றால்
அவர் எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்” என்றார்கள். ( நூல்: அல் இஸாபா
)
وتروي
عن نفسها رضي الله عنها كما جاء في الطبقات لابن سعد فتقول: “جاءني أهل أبي العكر
فقالوا: لعلك على دينه، فقلت: إي والله!
إني لعلى دينه، فقالوا: لا جرم لنعذِّبنّك عذابا شديدا،
تقول: فارتحلوا بنا من دارنا وكنا بذي الخلصة وهو موضعنا، فساروا يريدون منزلا
فحملوني على جمل ثقال شر ركابهم وأغلظهم، يطعموني الخبز بالعسل، ولا يسقونني قطرة
ماء، حتى إذا انتصف النهار وسخنت الشمس ونحن قائضون، نزلوا فضربوا أخبيتهم وتركوني
في الشمس، حتى ذهب عقلي وسمعي وبصري، ففعلوا ذلك بي ثلاثة أيام، فقالوا لي في
اليوم الثالث: اتركي ما أنت عليه، قالت: فما دريت ما يقولونه إلا
الكلمة بعد الكلمة، فأشير بأصبعي إلى السماء بالتوحيد، فوالله إنّي لعلى ذلك وقد
بلغني الجهد، إذ وجدت برد دلو على صدري فأخذته، فشربت منه نفسا واحدا ثم انتزع
مني، فذهبت أنظر فإذا هو معلق بين السماء والأرض، فلم أقدر عليه ثم دُلّي إليّ
ثانية فشربت منه نفسا ثم رفع، فذهبت أنظر فإذا هو بين السماء والأرض، ثم دُليّ
إليّ مرة ثالثة، فشربت منه حتى رويت وأهرقت على رأسي ووجهي وثيابي، قالت فخرجوا
فنظروا وقالوا: من أين لك هذا يا عدوة الله!؟
قالت فقلت: إن عدو الله غيري من خالف دينه، وأما قولكم من أين هذا، رزقا
رزقنيه الله. فانطلقوا سراعا إلى قربهم وأدواهم فوجدوها موكّأة لم تحل، فقالوا
نشهد أن ربّك هو ربّنا، وأن الذي رزقك ما رزقك في هذا الموضع، بعد أن فعلنا بك ما
فعلنا، هو الذي شرع الإسلام.”
فهاهي
أم شريك بصبرها وثباتها، تعضدها يد الله وتسقيها من ماء السماء، فتقذف الرعب
في قلوب الكافرين بعدتهم وتعدادهم، وتجبرتهم على الإقرار بدين الحق بعد مكابرة
وتجبّر، والإلتحاق برسول الله صلى الله عليه وسلم في المدينة المنورة .
உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் மக்காவில் பெண்களிடம் இரகசிய
அழைப்புப் பணியின் மூலம் இஸ்லாத்தைக் கொண்டு சேர்த்த மகத்தான பெண்மனியாவார்கள்.
இவர்கள் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டு, தங்கள் இஸ்லாத்தை மறைமுகமாக வைத்திருந்த நாட்களில்
எப்படியோ இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்த இவரின் குடும்பத்தார்கள்
இஸ்லாத்தை விட்டு விடும்படி நிர்பந்தித்தனர். உம்முஷரீக்
(ரலி) அவர்கள் மறுக்கவே சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில் உம்மு
ஷரீக் (ரலி) அவர்களின் ஒட்டு
மொத்த கோத்திரத்தாரும் ஒன்று சேர்ந்து கொடுமை புரிய ஆரம்பித்தனர். அதன் ஒரு பகுதியாக உணவு, தண்ணீர் கொடுக்காமல் சுடும்
பாலை மணலில், கொளுத்தும் வெயிலில் கயிற்றால் கட்டி போட்டனர்.
உணவும், நீரும் இல்லாமல் சோர்ந்து போய் பசியும், தாகமும் மிகைத்து நினைவுகள் அற்று மயக்க நிலைக்கு போய்விட்டார்கள்.
மயக்கம் தெளிந்து நினைவு வந்ததும் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார்கள்.
இஸ்லாத்தை விட்டால்
மாத்திரமே தண்ணீர் தருவோம் என்று கூறினார்கள் அவர்களின் கோத்திரத்தார்.
மேலே கையை உயர்த்தி
அல்லாஹ் எனக்கு என் தாகத்தை தீர்ப்பான் என்று கூறினார்கள்.
அப்படியே வெய்யிலில்
விட்டு விட்டு அவர்கள் சென்று விட்டார்கள். சிறிது நேர
இடைவெளிக்கு பின்னர் வருகை தந்த அவர்கள் அங்கே கண்ட காட்சி வியப்பின் விளிம்பிற்கே
அழைத்துச் சென்றது.
பதறித் துடித்தார்கள், அங்கும் இங்கும் ஓடினார்கள். எதை எதையோ திறந்து
பார்த்தார்கள்.
ஆம்! உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் முழுவதுமாய் நனைந்திருந்தார்கள். அவர்களின் ஆடை
முழுதும் தண்ணீரால் நனைக்கப்பட்டிருந்தது. நல்ல திடகாத்திரமாக
ஆரோக்கியமாக இருப்பதைக் கண்ட அவர்கள்.
என்ன உம்மு ஷரீக்? எப்படி நீர் உம்மிடம் வந்தது? யார் உமக்கு
உதவி செய்தது? என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்கள்.
அதற்கு, ஆசுவாசமாய் உம்மு ஷரீக் (ரலி) பதில் கூறினார்கள். ”நான் நினைவற்று கிடந்தேன்.
என் நெஞ்சின் மீது ஏதோ தட்டுவது போன்று உணர்ந்தேன். பார்த்தேன் வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு வாளி தொங்கிக் கொண்டு இருந்தது.
அதன் உள்ளே தண்ணீர் நிரம்பி இருந்தது. என் வாயருகே
வந்தது ஒரு மிடரு தான் குடித்திருப்பேன் மேலே சென்று விட்டது. மீண்டும் அதே போன்று என் முன்பாக அதே வாளி, அதே ஒரு மிடரு
தண்ணீர் மீண்டும் மேலே சென்று விட்டது. மூன்றாம் முறை தண்ணீரை
என் மேனி முழுவதும், என் ஆடை முழுவதும் ஊற்றிச் சென்றது.
இப்போது சொல்கின்றேன்! எனக்கு என்னுடைய அல்லாஹ் இந்த மதுரமான நீரை வழங்கினான்”
என்று.
அதைக் கேட்டதும் அவர்களின்
ஒட்டு மொத்த கோத்திரமும் ஷஹாதா கூறி இஸ்லாமானார்கள். ( நூல்: தபகாத்
இப்னு ஸஅத் )
நிராயுதபாணிகளாக விடப்பட்ட
இரண்டு பேர்களின் வாழ்க்கையில் அல்லாஹ் எவ்வாறு உதவி செய்தான். அந்த உதவியை அவர்களால் எப்படி பெற முடிந்தது என்பது குறித்து நாம்
சிந்திக்க வேண்டும்.
நமெக்கெதிரான எல்லாமும்
வன்முறையால் சூழப்பட்டிருக்கும் போது அல்லாஹ் மாத்திரமே நம்மை பாதுகாக்கவும், நமக்கு உதவி செய்யவும் உற்ற துணையாய் இருக்கின்றான். அவனிடமே நாம் உதவி கேட்போம்!
அல்லாஹ்வே! சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சியில் இருந்தும், வன்முறையாளர்களின் வன்முறையில் இருந்தும் எங்களை காத்தருள்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
வஸ்ஸலாம்!!!!