Thursday, 25 September 2025

குனூத் அந் நாzzஜிலா - சோதனைக்கால இறைவேண்டல்!

குனூத் அந் நாzஜிலா - சோதனைக்கால இறைவேண்டல்!

இஸ்ரேலிய யூத இராணுவத்தினாலும், அமெரிக்க ஆயுத பலத்தாலும் ஃபலஸ்தீனிய முஸ்லிம்கள் மிகப் பெரும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

யூதக் கொடுங்கோலர்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களிலிருந்து குறிப்பாக காஸாவிலிருந்து அவர்களை வெளியேற்றி அவற்றை அபகரிப்பதற்காக வான்வெளி மற்றும் தரைவழி மூலமாக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர். 

முஸ்லிம்களின் மூன்றாவது முக்கிய இறையில்லமான பைத்துல் மக்திஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டே யூதப் பயங்கரவாத இராணுவம் மிகப் பெரும் தாக்குதலை நடத்தி ஃபலஸ்தீனிய மக்களை அச்சுறுத்தியும், கொன்று குவித்தும் வருகின்றனர். 

ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகில் இஸ்லாமிய சமுதாயம் எங்கெல்லாம், எப்போதெல்லாம் மிகப் பெரும் சோதனைகளுக்கு உள்ளாகின்றதோ அப்போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் பிற முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

அந்த வகையில் பாலஸ்தீன முஸ்லிம்களின் அவலங்கள் நீங்குவதற்காக இறை உதவியை வேண்டி கடமையான ஐங்காலத் தொழுகைகளில்  குனூத் நாzஜிலா - சோதனைக்கால பிரார்த்தனையை செய்யுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தமிழ்நாடு முஸ்லிம்களை கேட்டுக் கொண்டுள்ளது.

குனூத்துன் நாzஜிலா என்றால் என்ன? அதன்  சட்டதிட்டங்கள் என்ன?

குனூத்துன் நாஜிலா என்பது முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனையான காலகட்டங்களில்  இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை இறக்க வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதிய குனூத் ஆகும். 

இதனை நபி (ஸல்) அவர்கள் தாங்கள் வாழும் காலத்தில் ஏற்பட்ட சோதனையான காலகட்டத்தில்  ஓதியுள்ளார்கள்.

حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்என்றும் கூறினார்கள் ( நூல்: முஸ்லிம் )

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ الْقُنُوتِ…. إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلًا إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ

நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள். ( நூல்: புகாரி )

குனூத் அந் நாஜிலா சுப்ஹுத் தொழுகையில் மட்டுமா? அல்லது அனைத்து தொழுகையிலுமா?

சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை சுப்ஹுத் தொழுகையில் மட்டும் ஓத வேண்டுமா? அல்லது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓத வேண்டுமா? என்று பார்த்தோமேயானால் பின்வரும் சில நபிமொழிகள் நபி ஸல் அவர்கள் சுப்ஹுத் தொழுகை மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள் என்பதையும், கடமையான தொழுகைகளில் கடைசி ரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஒதியுள்ளார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது.

حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَأُقَرِّبَنَّ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَصَلَاةِ الْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ رواه البخاري

அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர் , இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள். ( நூல் : புகாரி )

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி) ( நூல்: முஸ்லிம் )

عَنِ ابْنِ عَبَّاسٍ - رضي الله عنه - قَالَ: "قَنَتَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنَ الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ " أخرجه أحمد وأبو داود والحاكم كلهم من طريق ثابت بن يزيد عن هلال بن خباب عن عكرمة عن ابن عباس به، قال النووي: "رواه أبو داود بإسناد حسن أو صحيح" (المجموع 3/ 482). وقال ابن القيم: "وهو حديث صحيح" (زاد المعاد 1/ 280).

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த நபிமொழியில் ஐந்து நேரத் தொழுகையிலும் ஓதியதாக இடம் பெற்றுள்ளது.

எப்படி ஓத வேண்டும்?

குனூத் அந் நாஜிலாவை மிக நீளமாகவோ மிகவும் சுருக்கியோ ஓதக்கூடாது. 

மேலும் வழக்கமான குனூத்தை ஓதுவதோடு யாருக்காக குனூத் அந் நாஜிலா ஓதுகின்றோமோ அவர்களின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். அதே போன்று யாருக்கு இறை சாபம் இறங்க வேண்டும் என்றும் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். இது மாநபி ஸல் ஓதிய குனூத் அந் நாஜிலா தொடர்பான ஹதீஸ்களில் காணக் கிடைக்கின்றன.

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ مُحَمَّدٍ قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் (சோதனைக்கால) குனூத் ஓதினார் களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்என்று பதிலளித்தார்கள். ருகூஉவுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்? என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ருகூஉவுக்குப் பின்பு இலகுவான நேரம் ஓதினார்கள் எனப் பதிலளித்தார்கள். ( நூல் : புகாரி )

حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்ஓதினார்கள். அதில், "இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள் ( நூல் : புகாரி )

கைகளை உயர்த்தியும், சப்தமாகவும் பிரார்த்திக்க வேண்டும்

மேற்கண்ட நபிமொழியில் இமாமாக தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையை பின்னால் நின்று தொழுத நபித்தோழர்கள் செவியேற்றுள்ளனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

 حدثنا عبد الله حدثني أبي ثنا هاشم وعفان المعني قالا حدثنا سليمان عن ثابت قال كنا عند أنس بن مالك …. فقال أنس فما رأيت رسول الله صلى الله عليه و سلم وجد على شيء قط وجده عليهم فلقد رأيت رسول الله صلى الله عليه و سلم في صلاة الغداة رفع يديه فدعا عليهم …. (تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم، مسند أحمد بن حنبل – (3 / 137)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக நபியவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் தன்னுடைய இரு கைகளை உயர்த்தி (நபித்தோழர்களை கொலை செய்தவர்களுக்கு) எதிராக பிரார்த்னை செய்ததை நான் பார்த்தேன். ( நூல் : அஹ்மத் )

ஆமீன் சொல்ல வேண்டுமா?

இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் இமாம் ஓதும் குனூத் அந் நாஜிலாவிற்கு ஆமீன் சொல்ல வேண்டுமா? என்றால் ஆம் பின் வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

عَنِ ابْنِ عَبَّاسٍ - رضي الله عنه - قَالَ: "قَنَتَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنَ الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ " أخرجه أحمد وأبو داود والحاكم كلهم من طريق ثابت بن يزيد عن هلال بن خباب عن عكرمة عن ابن عباس به، قال النووي: "رواه أبو داود بإسناد حسن أو صحيح" (المجموع 3/ 482). وقال ابن القيم: "وهو حديث صحيح" (زاد المعاد 1/ 280).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லுஹ்ர், அஸ்ர், மக்ரிப், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு தொடர்படியாக ஒரு மாத காலம் குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பனூ ஸுலைம் இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். மேலும், ரிஅல், தக்வான், உஸைய்யா கோத்திரத்தார்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்வார்கள். பின்னால் நின்று தொழுபவர்கள் அந்த பிரார்த்தனைக்கு ஆமீன் சொல்வார்கள்" என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: அபூதாவூத் )

நான்கு இமாம்களும்.... நாஜிலா குனூத்தும்....

قال الطحاوي في شرح معاني الآثار (1/ 254): "ثبت بما ذكرنا أنَّه لا ينبغي القنوت في الفجر، في حال حرب ولا غيره، 

இமாம் தஹாவி போன்ற சில ஹனபிஃ இமாம்கள் பஃஜ்ரு தொழுகையை தவிர்த்து ஏனைய சப்தமிட்டும் ஓதும் தொழுகைகளில் (மஃரீப் & இஷா) துன்பங்கள் நிகழும் போது ஓதிக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.

رواه ابن أبي شيبة (2/ 317)، حدثنا وكيع قال: حدثنا سفيان عن عبدالأعلى: ((أنَّ أبا عبدالرحمن السلمي قنت في الفجر يدعو على قطري))؛ وإسناده حسن.

عبدالأعلى بن عامر الثعلبي توسط فيه الحافظ ابن حجر فقال: "صدوق يهم"، وبقية رواته ثقات، وقطري هو ابن الفجاءة.

முஸ்னது இப்னு அபீ ஷைபாவில் 2/317 ல் அபூ அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமி (ரஹ்) பல சஹாபாக்களிடம் ஹதீஸ் கலையை பயின்ற முதல் நூற்றாண்டை சேர்ந்த தாபிஈ ஆவார்கள். இவர்கள் இப்னு புஃஜாஆ என்ற கத்ரி என்பவருக்கு எதிராக பஃஜ்ரு தொழுகையில் குனூத் ஓதிய சான்று ஒன்று வந்திருக்கிறது , இதன் தரம் ஹஸன் என்ற அங்கீகாரமான செய்தி ஆகும்.

قال ابن الهمام في فتح القدير (1/ 379): "هذا ينشئ لنا أنَّ القنوت للنازلة مستمر لم ينسخ، وبه قال جماعة من أهل الحديث ... وما ذكرنا من أخبار الخلفاء رضي الله عنهم يفيد تقرره؛ لفعلهم ذلك بعده صلى الله عليه وسلم، فيجب كون بقاء القنوت في النوازل مجتهدًا ... فتكون شرعيته مستمرة، وهو محمل قنوت من قنت من الصحابة رضي الله عنهم بعد وفاته صلى الله عليه وسلم

இந்த அடிப்படையில் குனூத் அந் நாஜிலா ஓதுவது ஹனஃபி மத்ஹபில் இருக்கிறது  பார்க்க -ஃபத்ஹுல் கதிர் - 1/379 மற்றும் சில நூல்கள்.

ஹனஃபி ஃபிக்ஹு துறையில் தலை சிறந்த இமாம் ஆகிய இப்னுல் ஹுமாம் ரஹ் கூறுகிறார்கள்:- குனூத்துன் நாஜிலா தொடர்ந்து அமலில் இருந்து வந்திருக்கிறது அது சட்டத்திலிருந்து அகற்றப்படவில்லை,

இவ்வாறு தான் ஹதீஸ் கலை வல்லுனர்களும் கூறுகின்றனர். நபியவர்கள் காலத்துக்கு பின் குலபாஃகளும் (ரலியல்லாஹு அன்ஹும்) தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர் என்பது நமக்கு ஆதாரமாக இருக்கிறது.

انظر: الأم (1/ 205)، والحاوي (2/ 152)، ونهاية المطلب (2/ 187)، وروضة الطالبين (1/ 254)، والمجموع (3/ 494)، وأسنى المطالب (1/ 158)

மேலும், இந்த அடிப்படையில் குனூத் அந் நாஜிலா ஓதுவது

ஷாஃபிஈ மத்ஹபிலும் இருக்கிறது பார்க்க -அல் - உம்மு - 1/205 மற்றும் சில நூற்கள். 

انظر: الفروع (1/ 543)، والمبدع (2/ 13)، وكشاف القناع (2/ 421)، ومعونة أولي النهى (2/ 266).

குனூத் அந் நாஜிலா ஓதுவது ஹம்பலி மத்ஹபிலும் இருக்கிறது பார்க்க -அல் - ஃபுரூஉ- 1/543 மற்றும் சில நூற்கள்.

இந்த கருத்தில் இமாம் இப்னு ஹஸ்ம், இமாம் ஷௌகானி, இப்னுல் கையிம், மாற்று கருத்தாளர்களான  ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, மற்றும் சமகால சவுதியைச் சேர்ந்த மார்க்க அறிஞரான முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் போன்றோரும் தங்கள் நூற்களில் குனூத் அன் நாஜிலா ஐவேளை தொழுகையில் ஓதுவதற்கு ஆதாரமாக கூறியிருக்கிறார்கள்.

ஆக குனூத் அன் நாஜிலாவை ஐவேளை தொழுகையில் ஓதுவதற்கு சங்கையான இமாம்களின் குர்ஆன், ஸுன்னாவின் பார்வையில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆதாரங்களே போதுமான ஒன்றாகும். 

வாருங்கள்! நாமும் குனூத் அன் நாஜிலாவை ஐவேளை தொழுகையில் நமது பள்ளிவாயில்களில் ஓதி  ஃபலஸ்தீனத்தின் நமது சகோதரர்களுக்கு ஆதரவாக அக்கிரமக்கார ஜியோனிஸ யூதப் பயங்கரவாத இஸ்ரேலுக்கு எதிராக துஆச் செய்வோம்!!

ஃபலஸ்தீன மக்களும்... குனூத் அந் நாஜிலாவும்....

ஃபலஸ்தீன மக்கள் படும் துயரங்களை நீக்கவும், அவர்களை இத்தகைய சொல்லெனா துயரங்களில் ஆழ்த்திய யூதப் பயங்கரவாதிகளுக்கு இறைச் சாபம் உண்டாகவும் நாம் மேற்கொள்ளும் இந்த குனூத் அந் நாஜிலா மிகவும் பொருத்தமான ஒன்று தான். குனூத் அந் நாஜிலா ஓதப்படுவதற்கு அந்த மக்கள் மிகவும் தகுதியானவர்களே!

ஆம்! குனூத் அந் நாஜிலா ஓதப்பட்ட வரலாற்று பின்னணியை நாம் ஆராய்ந்து பார்த்தோமேயானால் ஒரு ஒற்றுமையை நாம் பார்க்கலாம். 

நபி ஸல் அவர்கள் யாருக்காக குனூத் அந் நாஜிலா ஓதினார்களோ அவர்கள் அனைவரும் குர்ஆனை மனனம் செய்தவர்கள். இங்கே ஃபலஸ்தீன மக்களில் பெரும்பாலானோர் குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் ஆவார்கள்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: "أَنَّ رِعْلاً وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَبَنِي لَحْيَانَ اسْتَمَدُّوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَدُوٍّ فَأَمَدَّهُمْ بِسَبْعِينَ مِنَ الْأَنْصَارِ كُنَّا نُسَمِّيهِمُ الْقُرَّاءَ فِي زَمَانِهِمْ كَانُوا يَحْتَطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ حَتَّى كَانُوا بِبِئْرِ مَعُونَةَ قَتَلُوهُمْ وَغَدَرُوا بِهِمْ فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَنَتَ شَهْرًا يَدْعُو فِي الصُّبْحِ عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَبَنِي لَحْيَانَ قَالَ أَنَسٌ فَقَرَأْنَا فِيهِمْ قُرْآنًا ثُمَّ إِنَّ ذَلِكَ رُفِعَ (بَلِّغُوا عَنَّا قَوْمَنَا أَنَّا لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا)" (أخرجه البخاري).

நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறினர். மேலும், தம் சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பு உத்தரவிடும்படியும் நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் காரீகள்’ (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், ‘பீரு மஊனாஎன்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.

நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள்என்பதே அந்த வசனம்.

பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டுவிட்டது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ( நூல்: புகாரி )

எத்தனையோ போர்களில் ஏராளமான நபித்தோழர்கள் வீர மரணம் எய்தியுள்ளார்கள். குறிப்பாக உஹதிலும் கூட 70 நபித்தோழர்கள் வீர மரணம் அடைந்தார்கள் அதற்கெல்லாம் சாபப் பிரார்த்தனை கேட்காத, கோபத்தின் உச்சத்தை அடையாத நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை தோளில் தூக்கி, நெஞ்சில் சுமந்தவர்கள் துரோகிகளால் கொல்லப்பட்டார்கள் என்று அறிந்ததும் ஒரு மாத காலம் தொழுகையில் குனூதுன் நாஜிலா (எனும் சாபப் பிரார்த்தனை) கேட்டுள்ளார்கள் என்றால் குர்ஆனை மனனம் செய்த காரிகளின் கண்ணியத்தை நம்மால் உணர முடிகின்றது.

ஆம்! ஃபலஸ்தீன மண்ணின் மகிமையில் இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டிய மகத்தான ஒன்று உலகின் நிலப்பரப்பில் அதிக ஹாஃபிழ்களைக் கொண்ட நிலப்பரப்பு ஃபலஸ்தீன் என்றால் அது மிகையாகாது.

நாம் வாழும் நிகழ்கால உலகின் பாலஸ்தீன மக்கள்  தங்கள் குழந்தைகள், தந்தைமார்கள், சகோதரர்கள், தாங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகள், தங்களின் வியாபாரங்கள் அனைத்தையும் இழந்த பின்பும் அவர்களின் உள்ளத்திலிருந்து உதிரும் வார்த்தை 'அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்' 'ஹஸ்புனல்லாஹ் நியமல் வக்கீல்' இவர்களின் திட உறுதியைப் பார்த்து இன்று உலகம் ஸ்தம்பித்து நிற்கிறது. 

பாலஸ்தீன மக்களின் நம்பிக்கையை பார்த்து குறிப்பாக அக்டோபர் 7 - 2023 ற்கு பிறகு நூற்றுக் கணக்கானோர் இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள் என புள்ளிவிவரம் சொல்கிறது.

அமெரிக்காவின் டிக்டோக் பிரபலம் Megan Rice, கலிஃபோர்னியா வின் பேராசிரியர் Henry Klassen, , ஸ்பெயின் நாட்டின் முன்னால் கால்பந்து வீரர்Jose Ignacio, அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் Shaun King, பாடகர் Lil Jon போன்று பலர் இதில் அடங்குவார்கள்.

இவர்கள் அனைவரும் பாலஸ்தீன மக்களின் உறுதிக்கும் நிலைகுலையாமைக்கும் என்ன காரணமென்று ஆராய்கின்றனர் இறுதியில் அல் குர்ஆன் என்ற இறைவேதம் இவர்களை பண்படுத்தியுள்ளதை விடையாக பெற்று அல்குர்ஆனை படிக்க ஆரம்பித்து பின்னர் இஸ்லாத்தை ஏற்கிறார்கள்.

பாலஸ்தீன மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கு காரணம் அவர்கள் குர்ஆனின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என அண்மையில் The Guardian என்ற பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. 

இன்றைய உலகின் அதிகளவு குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் பட்டியலில் பாலஸ்தீன காஸாவும் உள்ளது என்கிறது மற்றுமொரு புள்ளிவிவரம்.

காஸாவில் கான்யூன்ஸ் மாகாணம் அல் மவாசி நகரில் உள்ள அநாதைகள் பராமரிப்பு நிறுவனமான அல் பராக்காவில் 15/09/2025 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற குர்ஆன் மனன போட்டியில் ஆர்வமாக 500 மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்வு சர்வதேச அளவில் முஸ்லிம் சமூகத்தின் நெஞ்சை நெகிழ வைத்தது இதற்கு ஒரு சான்றாகும்.

இஸ்ரேல் தொடுத்து வரும் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டும் கூட, நாள்தோறும் குண்டு வெடிப்பு சப்தங்களை கேட்டுக் கொண்டே தங்கள் இதயங்களில் உள்ள இறைமறையை விட்டுக் கொடுக்கத் துணியாத அந்த இளந்தளிர்களின் இறைநம்பிக்கை உள்ளபடியே நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஃபலஸ்தீன் கையறு நிலையில் உள்ள நாடு...

ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான் ஃபலஸ்தீன்.

அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் தூதரகங்கள் உள்ளன. ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஃபலஸ்தீன் அணிகள் பங்கேற்கின்றன.

ஆனால், இஸ்ரேலுடனான நீண்டகால மோதலின் காரணமாக, ஃபலஸ்தீனுக்கு உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளும் இல்லை, தலைநகரமும் இல்லை, ராணுவமும் இல்லை.

மேற்குக் கரை இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால், 1990களில் அமைக்கப்பட்ட ஃபலஸ்தீன் ஆட்சி தன் நிலம், தன் மக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

காஸா பகுதியும் தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி பேரழிவு தரும் போரின் காரணமாக சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) தற்போது நடைபெற்று வருகிறது. 

காஸாவில் போரை நிறுத்தும் முயற்சியாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூா்வமாக அங்கீகரித்துள்ளன. 

பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்  கூறியதாவது, "தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை. காசா பிரச்சினையைத் தீர்க்க இரு நாடுகள் தீர்வுதான் ஒரே வழி.

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும். 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு நாடுகள் 

தீர்வு இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது" என்று தெரிவித்தார்.

நடப்பு ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்த வாரம் மேலும் பல நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட ஆயத்தமாகிவருகின்றன.

இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ள சூழலில், சா்வதேச நாடுகளின் இத்தகைய முயற்சிகளை இஸ்ரேல் அலட்சியம் செய்து வருவதை இஸ்ரேலிய ராணுவத்தின் முரட்டுத்தனமான தாக்குதல்கள் நிரூபித்து வருகின்றன.

தொடர்ந்து காஸாவை தாக்கி வரும் இஸ்ரேல் அங்கிருந்து மக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தி வருகிறது.

ஹமாஸை அழிப்பதாகக் கூறி காசாவை முழுமையாக நிர்மூலமாக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். அதன் ராணுவம் காசா நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறது. 

நகரைத் தரைமட்டமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. படுக்கைகள் மற்றும் உடமைகளை மூட்டை கட்டிக்கொண்டு, எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையுமின்றி மக்கள் நிராதரவாகப் புலம்பெயர்கின்றனர்.

ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் (OCHA), இந்த வாரம் ஒரு நாளில் மட்டும் 20,000 பேருக்கு மேல் காசா நகரை விட்டு தெற்குப் பகுதிகளுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியிலிருந்து இதுவரை காசா நகரின் 3.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காசா அரசின் ஊடக அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “9 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா நகரத்தில் உறுதியாக இருக்கின்றனர். வலுக்கட்டாய இடம் பெயர்வையும் வெளியேற்றத்தையும் உறுதியாக அவர்கள் நிராகரிக்கின்றனர்எனத் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 65,334 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  

இந்த எண்ணிக்கை வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒவ்வொரு எண்ணிக்கையும் ஒரு வாழ்க்கை. ஒரு குடும்பம். ஒரு கனவு. ( நன்றி: புதிய தலைமுறை, 24/09/2025 )

காஸாவில் நடப்பது இனப்படுகொலையா?

இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்வதாக ஐநா ஆணையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஐ.நா விசாரணைக் குழு தலைவர் நவ்பி பில்லே, "காஸாவில் பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது, அதை தொடர்ந்து செய்து வருகிறது என்ற முடிவுக்கு ஆணையம் வந்துள்ளது.

அக்டோபர், 2023 காஸா பகுதியில் தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இப்போது 2 ஆண்டுகளாகிறது.

1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலத்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகவும் இரக்கமற்ற தாக்குதலாக இது உள்ளது.

பாலத்தீன மக்கள் கொல்லப்படுவதும், அவர்கள் பசியில் மரணமடைவதும் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றன." என தெரிவித்தார். ( நன்றி: பிபிசி தமிழ், 16/09/2025 )

ஐ.நா தெரிவித்துள்ள "இனப்படுகொலை" என்ற இந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆக எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது உறுதியாக தெரியாது. அப்படியே நிரூபணம் ஆனாலும் நெதன்யாகு தண்டிக்கப்படுவாரா என்பதையும் உறுதி செய்ய முடியாது. 

ஏனெனில், ஒரு சூழ்நிலை இனப்படுகொலையாக உள்ளதா? என்பதை தன்னால் தீர்மானிக்க முடியாது என்றும் சர்வதேச நீதிமன்றங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை அமைப்புகளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் ஐ.நா. கூறுகிறது.

சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு சில வழக்குகளில் மட்டுமே இனப்படுகொலை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. 

1994இல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலை, 1995இல் போஸ்னியாவில் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை மற்றும் 1975 முதல் 1979 வரை கம்போடியாவில் கமர் ரூஜின் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை.

சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆகியவை இனப்படுகொலை குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற முக்கிய சர்வதேச நீதிமன்றங்களாகும். ருவாண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இனப்படுகொலைகள் குறித்து விசாரிக்க ஐ.நா. தற்காலிக தீர்ப்பாயங்களையும் அமைத்தது.

இனப்படுகொலை நடந்ததா என ஒரு நீதிமன்றம் தீர்மானிக்க பல ஆண்டுகள் ஆகலாம்.

ருவாண்டாவின் வழக்கில், ஐ.நா. அமைத்த தீர்ப்பாயம் இனப்படுகொலை நடந்ததாக முறையாக முடிவு செய்ய கிட்டத்தட்ட பத்தாண்டுகள் எடுத்தது.

மேலும் 1995இல் ஸ்ரெப்ரெனிகா படுகொலையில் கிட்டத்தட்ட 8,000 முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டதை 2017-ஆம் ஆண்டு வரை சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை என்று அங்கீகரிக்கவில்லை. அதன் பின்னர் தான் இனப்படுகொலை என்று அங்கீகரித்தது.

யார்க் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் ரேச்சல் பர்ன்ஸ், மிகக் குறைவான குற்றவாளிகளே தங்கள் குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

 

"ருவாண்டா, முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் கம்போடியாவில் உண்மையான குற்றவாளிகளின் எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் ஒருசிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்."

கிடப்பில் போடப்பட்டுள்ள இனப்படுகொலை வழக்குகள்...

1932-33இல் யுக்ரேனில் ஜோசப் ஸ்டாலினின் கூட்டுமயமாக்கல் கொள்கைகளால் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறந்த 'ஹோலோடோமரை' பல அரசாங்கங்களும் நாடாளுமன்றங்களும் சமீபத்திய ஆண்டுகளில் இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ளன

2017 -ல் காம்பியா நாடு மியான்மருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு. பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு, முஸ்லிம் ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக "பரவலான மற்றும் திட்டமிட்ட அழிக்கும் நடவடிக்கைகளை" அவர்களின் கிராமங்களில் நடத்தியதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கு இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ( நன்றி: பிபிசி தமிழ், 17/09/2025 )

அப்படியே இனப்படுகொலை என்று வரையறை செய்தாலும் கூட அந்த நாட்டை தனிமைப்படுத்த அல்லது அதன் மீது சர்வதேச நீதிமன்றங்கள் ஆதிக்கம் செலுத்த அதிகாரம் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.

சுருங்கச் சொன்னால் "இது போன்ற நடவடிக்கைகளால் எந்த பாதிப்பும் இனப்படுகொலை" செய்பவர்களுக்கு ஏற்படப் போவதில்லை. 

ஒரு சூழல் சட்டரீதியாக இனப்படுகொலை என்று வரையறுக்கப்பட்டவுடன், தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதைத் தடுக்க அல்லது நிறுத்துவதற்கு ராஜீய, தடைகள் அல்லது ராணுவ தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, ருவாண்டா இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது, தீர்மானத்தின் கீழ் சட்ட மற்றும் அரசியல் கடமைகளைத் தவிர்க்க, அமெரிக்க அதிகாரிகள் "இனப்படுகொலை" என்ற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் இருந்ததாக அமெரிக்காவால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தின.

"ஐ.நா. வரையறையுடன் கூட, வரையறை செய்யத் தவறுதல், செயல்படத் தவறுதல் மற்றும் விசாரணை செய்யத் தவறுதல் ஆகியவை இன்னும் உள்ளன," என்று யார்க் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் ரேச்சல் பர்ன்ஸ் கூறுகின்றார். ( நன்றி: பிபிசி தமிழ், 17/09/2025 )

இனப்படுகொலை என்பதன் வரையறை என்ன?

இந்தச் சொல் 1943இல் யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கினால் உருவாக்கப்பட்டது. அவர் கிரேக்க வார்த்தையான "ஜெனோஸ்" (இனம் அல்லது பழங்குடி) மற்றும் லத்தீன் வார்த்தையான "சைடு" (கொல்லுதல்) ஆகியவற்றை இணைத்தார்.

 

அவரது சகோதரரைத் தவிர அவரது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் கொல்லப்பட்ட யூத இனப்படுகொலை பயங்கரங்களைக் கண்ட பிறகு சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று லெம்கின் வலியுறுத்தினார்.

அவரது முயற்சிகள் 1948 டிசம்பரில் ஐ.நா. இனப்படுகொலை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது, இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. 2022-ஆம் ஆண்டு வரை, இது 153 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீர்மானத்தின் இரண்டாம் பிரிவு, இனப்படுகொலை என்பதை "தேசிய, இன, இனவியல், அல்லது மதக் குழுவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்று" என்று வரையறுக்கிறது:

குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது

குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவிப்பது

குழுவின் அழிவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே மோசமான வாழ்க்கை சூழலை உருவாக்குவது

குழுவிற்குள் பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பது

குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக மற்றொரு குழுவிற்கு மாற்றுவது

கையெழுத்திட்ட நாடுகளுக்கு இனப்படுகொலையை "தடுக்கவும் தண்டிக்கவும்" ஒரு பொதுவான கடமையை தீர்மானம் விதிக்கிறது. ( நன்றி: பிபிசி தமிழ், 17/09/2025 )