Wednesday, 27 March 2013

தண்ணீர் ஒர் மாபெரும் அருட்கொடை!


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தண்ணீர் ஒர் மாபெரும் அருட்கொடை!


உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.உலகில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கின்றார்கள் என்று .நா.சபை தெரிவிக்கின்றது.
எதிர்கால தண்ணீர் தேவையை மனதிற்கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?அங்கு தண்ணீர் உள்ளதா?என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது.மீதமுள்ள 2.5 சதவீதம் தான் சுத்தமான நீர்.அதிலும் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது.மீதமுள்ள 0.26 சதவீத தண்ணீரைத்தான் உலகமனைத்திலுமுள்ள மனிதர்கள் அனைவரும் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது.
தண்ணீருக்கான சண்டைகள் நாள் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன.வீதிகளில் மட்டுமில்லாமல் மாநிலங்களுக்கு இடையிலும் அது தொடருகின்றன.
ஓர் எழுத்தாளன் இப்படி சொன்னான்:
மூன்றாம் உலகப்போர் அது தண்ணீருக்காக வேண்டி நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை”.
எனவே தான் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு, தேவை, அவசியம், குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென .நா.சபை மார்ச் 22ம் தேதியை தண்ணீர் தினமாக அறிவித்து ஒரு வார காலம் உலகெங்கும் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுப்டுத்துகின்றன. இப்படி மாசுபட்ட தண்ணீரை அருந்துவதால் உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போவதாகவும், டைபாய்டு, அமீபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய்தாக்குதல் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
மறுபுறம், வறட்சியாலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டும், நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டும் வருவதால் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆகநீரின்றி அமையாது உலகுஎன்று வள்ளுவன் சொன்னது போல மனித சமுதாயத்தின் அரணாக, இயக்கமாக விளங்கும்தண்ணீர்பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது?என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டிய அவசியம் முழு முஸ்லிம் உம்மாவிற்கும் உண்டு.
தண்ணீர் பற்றி இஸ்லாம்,
அல்லாஹ் கூறுகின்றான்:
தண்ணீரிலிருந்தே நாம் தான் உயிரினங்களை (படைத்தோம்) வெளிப்படுத்தினோம்
அல்குர் ஆன்: 21:30
அல்லாஹ் கூறுகிறான்!
மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றான்.பின்னர், வானிலிருந்து சுத்தமான நீரை வெளியாக்குகின்றான். பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு இதன் மூலம் நாம் உயிரூட்டுவதற்காகவும், மேலும் நம்முடைய படப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும் தான்! இந்த நிகழ்வுகளை அவர்களிடையே அடிக்கடி நாம் உண்டு பண்ணுகின்றோம். அவர்கள் படிப்பினை பெற வேண்டுல் என்பதற்காக!
அல்குர் ஆன்: 25:48


அல்லாஹ் கூறுகின்றான்:
என்ன?இவர்கள் பார்க்கவில்லையா?வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம் தண்ணீரை ஒலித்தோட செய்கின்றோம்.அதிலிருந்து பயிகளை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களும் உண்ணுகின்றனர், இவர்களுடைய கால்நடைகளும் உண்ணுகின்றது
அல் குர் ஆன்: 32:27
அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும் வானத்திலிருந்து அருள் மிக்க நீரினை இறக்கினோம்.பின்னர் அதன் மூலம் தோட்டங்களையும், தானியங்களையும், குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற பேரீச்ச மரங்களையும் முளைக்கச் செய்தோம். இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும்
அல்குர் ஆன்: 50: 9-11
அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா?மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்காளா?அல்லது நாம் பொழியச் செய்கின்றோமா?நாம் விருப்பினால் நீங்கள் குடிக்க முடியாதபடி உவர்ப்பு நீராக ஆக்கியிருப்போம்.நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
அல்குர் ஆன்: 56: 68-70
அல்லாஹ் கூறுகின்றான்:
பின்னர், மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.நிச்சயமாக, நாம் நீரை தாராளமாக பொழிந்தோம்.பின்னர் வியக்கத்தகுந்த முறையில் பூமியைப் பிளந்தோம். பிறகு, அதில் தானியங்களையும், திராட்சைகளையும், காய்கறிகளையும், ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும், அடர்ந்த தோட்டங்களையும், விதவிதமான கனிகளையும், புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருட்களாகும் பொருட்டு
அல்குர் ஆன்: 80: 24-32
மேற்கூறிய இறைவசனங்கள் அனைத்தும் தண்ணீரின் மூலம் மனித சமுதாயம் அடைந்து கொண்டிருக்கின்ற பயன்பாடுகள் குறித்தும், மனிதனின் மூலமே தண்ணீர் தான் என்பது பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.
இன்றைய விஞ்ஞானம் மனித உடற்கூறுகள் 71 சதவீதம் தண்ணீரால் ஆனது என்கிறது.
ஆக, தண்ணீர் ஒன்று இல்லையென்றால் இவ்வுலகம் உயிர்கோளம் என்ற நிலையையும், மனித சமுதாயம் வாழும் நிலையையும் எய்திருக்காது.
அருட்கொடையும் விசாரணை மன்றமும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது படைப்பினங்கள் அனைத்திற்குமே கணக்கிலடங்காத அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அதிலும் மனிதன்னுக்கு தான் வழங்கியுள்ள அருட்கொடைகள் பற்றி குறிப்பிடும் போது,
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது”.
அல்குர் ஆன்: 16:18
மேலும், உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தேவந்தவை தாம்
அல்குர் ஆன்: 16:53
இப்படி கூறுகின்றான்,
அந்த வகையில் தண்ணீர் என்பது ஓர் அருட்கொடையாகும்அப்துல்லாஹ்ஹிப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்ஒரு நாள் மதிய வேளையில் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலை நோக்கிச் சென்றார்கள். அங்கே அபூபக்கர் (ரலி) அவர்கள் இருப்பதைக் கண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கரே! என்ன இந்நேரம்?பள்ளியில் அமர்ந்திருக்கின்றீர்?உம்மை இங்கே வரவைத்தது எது?என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களை இங்கே வர வைத்தது எதுவோ அது தான் என்னையும் இங்கே வரவைத்தது என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் பள்ளியை நோக்கி வந்தார்கள்.வந்தவரிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்டதையே உமர் (ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.அப்போது உமர் (ரலி) அவர்கள், உங்கள் இருவரையும் பள்ளியை நோக்கி வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் வரவத்தது என்றார்கள்.
மற்றொரு அறிவிப்பில்..
நபிகளார் பள்ளிக்கு வருகை தந்த போது அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) இருவரும் பள்லியில் இருந்தனர்.நபி (ஸல்) என்ன காரியமாய் இங்கு வந்தீர்கள் எனக் கேட்ட போது, கடும் பசியால் நாங்கள் இங்கு வந்தோம் எனப் பதிலளித்தார்கள். அப்போதுநானும் பசியால் தான் இங்கு வந்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களும், முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி (ரஹ்) ஆகியோரும் பதிவு செய்திருக்கின்றனர்.
பின்னர், நபி (ஸல்) அவர்கள், இருவரோடும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர், பின்பு நபி (ஸல்) வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல்ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம் என்று கூறினார்கள்.நபிகளார் நடுவே வர முறையே þÕÅÕõ ÅÄÐõ þ¼ÐÁ¡¸ ¿¼óÐ ÅóÐ «Òø ¨†…õ (ÃÄ¢) «Å÷¸Ç¢ý Å£ðÊý Óý ÅóÐ ¿¢ýÈ¡÷¸û.
Á¡¿À¢ (…ø) «Å÷¸û ãýÚ Ó¨È …Ä¡õ ÜÈ¢ Å£ðÊüÌû Åà «ÛÁ¾¢ §¸¡Ã¢É¡÷¸û, À¾¢§ÄÐõ Åá¾¾¡ø ¾¢ÕõÀ¢ ÅÕžüÌ ¾Â¡Ã¡É §À¡Ð «í§¸ Å£ðÎ Å¡ºü¸¾Å¢ý À¢ýÒÈÁ¢ÕóÐ «øÄ¡‹Å¢ý ྦྷÃ!±Ûõ Ìçġ¨º §¸ð¼Ð.«Ð §ÅÚ Â¡Õ¨¼Â Ìçġº¨ºÔÁøÄ, «Òø ¨†…Á¢ý Á¨ÉÅ¢, ¯õÓ ¨†…õ (ÃÄ¢) «Å÷¸Ç¢ý Ìçġ¨º¾¡ý.
«øÄ¡‹Å¢ý ྦྷÃ!¯í¸Ç¢ý ÒÉ¢¾ š¡ø …Ä¡õ ¦º¡øÄôÀÎŨ¾ Á£ñÎõ Á£ñÎõ §¸ð¸ Å¢ÕõÀ¢§Â ¦ÁÇÉõ ¸¡ò§¾ý ±ýÈ¡÷¸û.
¿À¢ (…ø) «Å÷¸û «ôÀÊ¡?¿øÄÐ ± À¾¢ø ÜȢŢðÎ «Òø ¨†…õ ±í§¸?¸¡½Å¢ø¨Ä§Â?±É Å¢ÉŢɡ÷¸û. þ§¾¡ «Õ§¸¾¡ý ¾ñ½£÷ ¦¸¡ñÎ Åà ¦ºýÈ¢Õ츢ýÈ¡÷.ºüÚ §¿Ãò¾¢ø ÅóРŢÎÅ¡÷ «ÐŨà þ§¾¡ þó¾ ŢâôÀ¢ø ºüÚ «ÁÕí¸û ±É ¦º¡øĢŢðÎ ´Õ ÁÃò¾¢ý ¸£§Æ Ţâô¨À Ţâò¾¡÷¸û ¯õÓ ¨†…õ (ÃÄ¢) «Å÷¸û.
º¢È¢Ð §¿Ãò¾¢ø «Òø ¨†…õ (ÃÄ¢) ÅóРŢð¼¡÷¸û. Ó¸ ÁÄ÷§Â¡Î Á¡À¢ (…ø) Å÷¸¨ÇÔõ, ¯Á÷ (ÃÄ¢) ÁüÚõ «âÀì¸÷ (ÃÄ¢) þÕŨÃÔõ ÅçÅüÈ¡÷¸û. ¿À¢¸Ç¡¨Ãô À¡÷òÐ ¾í¸ÇÐ ÅÕ¨¸ ±ÉìÌ ¸ñ ÌÇ¢÷¨Â ²üÀÎò¾¢ Å¢ð¼Ð ±ýÚ ºó§¾¡„òмý ÜȢɡ÷ «Òø ¨†…õ (ÃÄ¢) «Å÷¸û. À¢ýÉ÷ ¾í¸ÇÐ §ÀÃ£îº ÁÃò¾¢ø ²È¢ ¸¡öó¾, ®ÃôÀ¾Á¡É, þÇÅð¼Á¡É §Àãò¾ங் ¸É¢¸¨Ç ÀÈ¢òÐì ¦¸¡ñÎ ÅóÐ ¿À¢ (…ø) «Å÷¸û Óý ÅóÐ ¦¸¡Îò¾¡÷¸û. ãÅÕõ ¾¢Õô¾¢Â¡¸ º¡ôÀ¢ð¼¡÷¸û. §ÁÖõ ¦¸¡ñÎ ÅÃÅ¡? ±É Å¢ÉާÀ¡Ð «Òø ¨†…§Á! §À¡Ðõ, ¾ñ½£÷ ¦¸¡ñÎ Å¡Õí¸û ±ýÚ ¿À¢ (…ø) ÜȢɡ÷¸û. ¿øÄ ÌÇ¢÷ó¾ ¿£¨Ã ¦¸¡ñÎ ÅóÐ ¦¸¡Îò¾¡÷ «Òø ¨†…õ (ÃÄ¢) «÷¸û. ãÅÕõ ¾ñ½£÷ «Õó¾¢É¡÷¸û. À¢ýÒ ¿À¢ (…ø) «÷¸û “þó¾ ¾ñ½£Õõ þ¨ÈÅÉ¢ý «Õ𦸡¨¼¸Ç¢ø ¸ðÎôÀð¼Ð ¾¡ý þÐ ÌÈ¢òÐõ ÁÚ¨Á¢ø ¿£í¸û Å¢º¡Ã¨½ ¦ºöÂôÀÎÅ£÷¸û” ±Éì ÜȢɡ÷¸û.
நூல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம்:707
அல்குர்நுபீ, பாகம்:10, பக்கம்:382
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
உனக்கு உடல் ஆரோக்கியத்தை நான் தரவில்லையா?குளிர்ந்த நீரைக்கொண்டு நான் தாகம் தீர்க்கவில்லையா?என்று தான் மனிதர்களிடம் அல்லாஹ் முதன்முதலில் விசாரிப்பான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி, இப்னுஹிப்பான்
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தமது தந்தை ஜுபைர் (ரலி) வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்-தகாஸூர் 102 வது அத்தியாயம் இறங்கிய போது நபித்தோழர்களிடையேஓதிக்காண்பித்தார்கள். அதில் 8ம் வசனத்தை ஓதிகாண்பித்த போது சுற்றியிருந்த நபித்தோழர்கள் எந்தெந்த அருட்கொடைகள் குறித்தெல்லாம் நாங்கள் மறுமை நாளில் கேள்வி கேட்கப்படுவோம் என்று கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் பேரித்தம் பழம் ஆகியவை குறித்தும் கேள்வி கேட்கப்படுவீர்கள் என்று பதிலளித்தார்கள்
நுல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம்:708
அபிவிருத்தி - பரக்கத்
அல்லாஹ் ஐந்து விஷயங்களை பரக்கத் - அபிவிருத்தி- வளமிக்கது என குர் ஆனில் குறிப்பிட்டுக் கூறுகிறான்.அதில் தண்ணீரும் ஒன்று.
1.   அல்லாஹ் எனும் திருப்பெயர்
பெரும் அருள் வளங்கள் நிறைந்ததாக இருக்கின்றது, கீர்த்தியும் கண்ணியமும் மிக்க உம் இறைவனின் திருப்பெயர்!”
அல் குர் ஆன்:55:78
2.   ஸலாம் சொல்லுவது:
எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும் போது நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள்.இது நல்லாசி எனும் முறையில் நிர்ணயிக்கப்பட்டதும்அருள் வளங்கள்கொண்டதும்.தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்திதுணர்ந்து செயல்படக் கூடும்!
அல் குர் ஆன்:24:61
3.   ஜைத்தூன் மரம்
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது, அவ்விளக்கு கண்ணாடி கூண்டினுள் இருக்கிறது, அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது. அவ்விளக்கு, கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச்சேர்ந்ததாயும் இல்லாதஅருல் வளமிக்கஒலிவ ஜைத்தூன் மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது.
அல் குர் ஆன்:24:25
4.   தண்ணீர்
மேலும் நாம் வானத்திலிருந்துஅருள் வளமிக்கதண்ணீரினை இறக்கினோம்.
அல் குர் ஆன்:50:9
5.   ஹரம் ஷரீஃப்
நிச்சயமாக, மனிதருக்காக எழுப்பப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்வளம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது
அல் குர் ஆன்:3:96
தண்ணீரை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும், இறை மறுப்பாளர்களுக்கு தண்டனையாகவும் ஆக்கியுள்ளான் என குர் ஆன் சான்று வழங்குகின்றது.
அல்லாஹ் பத்ரின் வெற்றிக்கு பிண்ணனியில் இருக்கின்ற அல்லாஹ்வின் பேருதவியை எண்ணிப்பார்க்குமாறும், வெற்றியின் மூலம் கிடைத்த கனீமப் பொருட்களும் அல்லாஹ்வின் பேருபகாரம் தான் என்று கூறி நினைத்துப்பார்க்குமாறும் 8:7-10 வரையிலுள்ள வசனத்தில் கூறிவிட்டு பத்ர் வெற்றியின் சூட்சமத்தை அல்லாஹ் பிவரும் வசனத்தில் நினைவுபடுத்துகிறான்.
இதையும் நினைத்துப்பாருங்கள், அல்லாஹ் உங்களை சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மனநிம்மதியையும், அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும் அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது தண்ணீரை பொழியச் செய்தான்”.
அல் குர் ஆன்:8:11
என் இறைவனே! என் சமூகத்தார் என்னை பொய்யென்று தூற்றிவிட்டனர். இனி எனக்கும் அவர்களுக்கு இடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக! மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறுதியில் நிரம்பிய ஒரு கப்பலில் அவரையும், அவருடனிருந்தவர்களையும் நாம் காப்பாற்றினோம்.பின்னர், எஞ்சியிருந்த மனிதர்களை நீரில் மூழ்கடித்து விட்டோம்.
அல் குர் ஆன்:26: 117-120
மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம். உமது கைத்தடியினால் கடல் நீரின் மீது அடியும்! உடனே கடல் பிளந்து அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகி விட்டது.அதே இடத்திற்கு நாம் ஃபிர் அவ்னின் கூட்டத்தாரையும் நாம் நெருங்கி வரச் செய்தோம்.மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.பிறகு ஃபிர் அவ்னின் கூட்டத்தாரை நாம் கடல் நீரில் மூழ்கடித்து விட்டோம்.
அல் குர் ஆன்:26: 62-66
மேற்கூறிய சான்றுகளில் இறைநம்பிக்கையாளர்களுக்கு தண்ணீரை அல்லாஹ் அருளாகவும், இறை மறுப்பாளர்களுக்கு தண்டனையாகவும் ஆக்கியிருப்பதை குர் ஆனில் மூலம் சுட்டிக் காட்டுகிறான்.
நிம்மதியான வாழ்க்கை
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று சிரியாவிலிருந்து தம் துணைவியார் மற்றும் பச்சிளம் குழந்தையை அழைத்துக் கொண்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவின் அரேபிய பாலைவன மண்ணில் அன்புத் துணைவியாரையும், குழந்தையையும் விட்டு விட்டுஇருகரமேந்தி துஆ செய்து விட்டு வந்தார்கள். கடும் வெயில், சுடும் பாலைவன மணல், நாவறண்டு தாகத்தால் தண்ணீருக்கு ஸஃபவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஓடினார்கள், தேடினார்கள்.ஏமாற்றமே மிஞ்சியது.எங்கும் கானல் நீர் தான்.பச்சிளங்குழந்தையும் நாவறட்சியால் வீறிட்டு அழுகிறது. பரிதவிக்கிறார்கள், குழந்தையின் பாதத்திலிருந்து உலகின் கோடான கோடி மக்களின் தாகத்தை தீர்க்கின்ற மறுமை நாள் வரை வற்றாத ஜம் ஜம் எனும் நீரூற்றை பேரற்புதத்தை அல்லாஹ் வெளிப்படுத்தினான். உலகிலேயே புனிதம் நிறைந்த ஒரு தண்ணீர் உண்டென்றால் அது ஜம் ஜம் தண்ணீர் மட்டும் தான்.அதை பருகுபவர்களுக்கு மன் நிம்மதியும், உடல் ஆரோக்கியமும், வலிமையும் தருவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம் என்பதை இவ்வரலாறு உணர்த்துகிறது.
ஸபஃ சமுதயத்தினருக்கு அவர்கள் வசித்த இடத்திலேயே ஒரு சான்று இருந்தது.வலப்பறமும், இடப்புறமும் (நீரோடை வழிந்தோடும்) இரு தோட்டங்கள் இருந்தன. உண்ணுங்கள் உங்கள் இறைவன் வழங்கிய ஆகாரத்தை! மேலும் நன்றி செலுத்துங்கள்.நாடோ நன்கு செழிப்பாக இருக்கிறது.படைத்த இறைவன் மன்னிப்பாளனாக இருக்கிறான்.இரவு, பகல் முழுவதும் அச்சமற்றவர்களாய் வாழுங்கள்.
மேற்கூறப்பட்ட இந்த இரு நிகழ்வுகளும் அச்சமற்ற நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் மிக அத்தியாவசியம் என்பதை உணர்த்துகிறது.
எனவே, தண்ணீர் என்பது மனித சமுதாயத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒர் அருட்கொடையாகும்.ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கோ தண்ணீர் என்பது மாபெரும் அருட்கொடையாகும்.ஏனெனில் தண்ணீர் பந்தம் மறுமையிலும் இறைநம்பிக்கையாளனோடு தொடர்கிறது.பல்வேறு சிறப்புகளையும், மாண்புகளையும் கொண்ட ஓர் அற்புதமான மாபெரும் அருட்கொடைதான் தண்ணீர்.
மறுமையும், தண்ணீரும்,
அல்லாஹ் குர் ஆனில் எங்கெல்லாம் சுவனத்தைப் பற்றி பேசிகிறானோ அங்கெல்லாம் தண்ணீர் ஒலித்தொடும் நீரோடையையோ சுவனத்தின் முதற்பாக்கியமாக கூறுகின்றான்.
அவ்வளவு ஏன்?அல்லாஹ்வின் அரியாசணம் - அர்ஷ் கூட தண்ணீரின் மீது தான் அமைந்துள்ளதாக குர் ஆன் கூறுகின்றது.
இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டுள்ளது.அதன் மகத்துவம் இதுதான். அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், மதுரமான தேன் ஆறுகளும் ஓடிக் கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு அனைத்து கனி வகைகளும் இருக்கும்.அவர்களின் மேலான இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ளோடு பள்ளியில் அமர்ந்திருந்தோம்.நபி (ஸல்) அவர்கள் தலையை மிகவும் தாழ்த்தியவர்களாக அமர்ந்திருந்தார்கள்.சிறிது நேரத்தில் எங்களை நோக்கி புன்முறுவல் பூத்தவர்களாக தலையை உயர்த்தினார்கள்.அப்போது நபித் தோழர்கள்உங்களை சிரிப்பில் ஆழ்த்திய விஷயம் எது?என்று கேட்டனர்.அதற்கு நபி (ஸல்) அவர்கள் சற்று முன்னர் என்னிடம் ஜிப்ரயீல் (அலை) வந்து 109 வது அத்தியாயமான கவ்ஸரை அல்லாஹ் இறக்கியருளியதாக கூறி முழு அத்தியாயத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.பின்னர், கவ்ஸர் என்றால் என்ன என்று அறிவீர்களா?என்று கேட்டார்கள்.அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றனர்.அதற்கு நபி (ஸல்) அவர்கள்அது ஒரு நீரோடை, அது சுவனத்தில் அமைந்துள்ளது.அதை எனக்கு தருவதாக என் இறைவன் வாக்களித்துள்ளான்”.இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன.அது ஓர் நீர் தடாகம் அதை நோக்கி எனது உம்மத்தினர் வானில் தென்படும் வின்மீன்கள் அளவுக்கு அனுப்பப்ப்டுவார்கள் என்று கூறினார்கள்.
நூல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம். 723


அபு ஹூரைரா அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்நான் உங்களுக்கு முன்பே சென்று கவ்ஸரின் அருகே உங்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அதில் ஒருமுறை குடித்தால் தாகமென்பதே ஏற்படாது
(நூல்: திர்மிதி)
எச்சரிக்கையும், சோபனமும்:
இன்றைய விஞ்ஞானிகள் தண்ணீரை ஆய்வு செய்துபூமி படைக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை பூமியிலுள்ள மொத்த தண்ணீரின் கன அளவு மாறவே இல்லை என்று கூறுகிறார்கள்ஆனாலும், தண்ணீர் உலகத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை பார்க்க முடிகிறது.
வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகிய தண்ணீரின் பயன்பாட்டை தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால் இஸ்லாம் கூறுகிற ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் ஒட்டு மொத்த மனித சமூகமும் பின்பற்றி நடக்க வேண்டும்.
வீண் விரயம் கூடாது.
உண்ணுங்கள், பருகுங்கள்; பருகுங்கள், ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்!திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.
அல் குர் ஆன் : 7:32
ஒரு சமயம் ஸஅத் (ரலி) எனும் நபித்தோழரிடம்ஓடும் நதியில் நீர் உளூச் செய்தாலும் விரயம் செய்யாதீர்என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.
மாசுபடுத்துதல் கூடாது:
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், குளம், ஏரி, குட்டை போன்ற் நீர் நிலைகளில் சிறுநீர் கழிப்பதையும், அசுத்தம் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பில், மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர் நிலைகளில் (ஆறு, குளம்) போன்றவற்றில் சிறுநீர் கழிக்கவும், மாசுபடுத்தவும் வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்
நூல்: ரியானாஸ்ஸாலிஹீன்; பக்கம் 667
இறுதியாக..
அல்லாஹ் வழங்கியிருக்கின்ற எந்தவொரு அருட்கொடையும் நம்மிடம் இருந்து பிடுங்கப்படாமல் இருக்க வேண்டுமானால் படைத்த இறைவனுக்கு நாம் நன்றியாளர்களாக இருக்க வேண்டும்.
நீங்கள் நன்றியுணர்வோடு நடந்து கொள்வீர்களானால் நாம் (நமது அருட்கொடைகளை) இன்னும் அதிகப்படுத்தி தருவோம்
அல்குர் ஆன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்திய பின் பின்வரும் துஆவை ஓதுவார்கள் என இமாம் நவபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்,
இறைவா! நீயே புகழுகுறியவன், உன்னுடைய தனிபெரும் கருணையால் தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய்! எங்கள் பாவங்களை நீ மனதில் கொண்டிருப்பாயேயானால் நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்
எனவே,
மாபெரும் அருட்கொடையான தண்ணீரை நாம் ஒவ்வொரு முறை பருகும் போதும், பயன் படுத்தும் போதும் அது நம்மை விட்டும் நீங்காமலிருக்க வல்ல ரஹ்மானுக்கு நன்றிணர்வை வெளிப்படுத்துகிற நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக! ஆமின்
வஸ்ஸலாம்

4 comments:

  1. அறுமையான பதிவு

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் நல்ல பதிவு

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் நல்ல பதிவு

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்
    زادك الله وعملك

    ReplyDelete