Thursday, 11 April 2013

உயர்ந்த இலட்சியமே உயர்வைத்தரும்!


உயர்ந்த இலட்சியமே உயர்வைத்தரும்!
மனிதன் வாழ்வின் உயர்வையும், உச்சத்தையும் அடைய வேண்டுமானால் அவன் உயர்ந்த இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் கொண்டவனாய் அதை நோக்கிய பயணத்தில் மன உறுதியோடும், முழு முயற்சியோடும் முன்னேறிச் செல்பவனாய் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளும் போதுதான் சாத்தியமாகும்.
ஓர் அறிஞன் சொன்னான்:
குறிக்கோள் இல்லாத வாழ்க்கையும், இலட்சியமும் இல்லாத பயணமும், கடிவாளம் இல்லாத குதிரையைப் போன்றது.எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வேண்டும்.அதுவே ஓர் ஒறை நம்பிக்கையாளனுக்கு ஆயிரம் மடங்கு இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
தீர்மானிக்கப்படாத இலக்கை நோக்கி பயணம் செய்யும் ஓர் இறை நம்பிக்கையாளன் இம்மை, மறுமை ஆகிய இருகளங்களிலும் தோல்வியை சந்திப்பான்.
மேலும், இலட்சியத்தோடும், குறிக்கோளோடும் தமது வாழ்க்கையை வாழத்துவங்கும் ஓர் இறை நம்பிக்கையாளன் தமது இலட்சியத்தையும், குறிக்கோளையும் உயர்வான ஒன்றை இலக்காக அமைத்து முன்னேறிச் செல்ல வேண்டும் ஏனெனில்,

  وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.(மூமின்களே!) உங்களின் இலக்கு நன்மையானவற்றில் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்
(அல் குர் ஆன்: 2:148)
ஹஸன் இப்னு (ரலி) அறிவிக்கின்றார்கள்:


(إِنَّ اللهَ تَعَالَى يُحِبُّ مَعَالِيَ الأُمُوِر وَأَشرَافَهَا، وَيَكَرهُ سَفْسَافَهَا

திண்ணமாக!அல்லாஹ் காரியங்களில், செயல்களில் மிக உயர்ந்தவற்றையும், சிறப்பானவற்றையும் பிரியப்படுகின்றான்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
(நூல்: தப்ரானீ)
ஓர் இறை நம்பிக்கையாளன் உலக வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையையும் உயர்ந்த இலக்கை நோக்கியதாகவே அமைந்திருக்க வேண்டும் என மேற்கூறிய இறைவசனமும், நபி மொழியும் நமக்கு உணர்த்துகிறன்றது.
அல்லாஹ் குர்ஆனில் இபாதுர் ரஹ்மான் எனும் இறையடியார்களின் நற்பண்புகளை உயர்த்திக் கூறுகிற போது இறுதியாக

  وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

அவர்கள் இப்படிப் பிரார்த்திப்பார்கள்எங்கள் இறைவா! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக!
(அல் குர் ஆன்: 25:74)
ரஹ்மானின் அடியார்கள் இறையச்சமுடையயோராய் எங்களை ஆக்கு! என்று கூறவில்லை மாறாக! இறையச்சமுடையோருக்குத் இமாம்களாக - தலைவர்களாக ஆக்கு! என்றுதான் கூறியிருக்கிறார்கள்.ஆக உயர்வான இலட்சியமும், குறிக்கோளும் ஓர் இறைநம்பிக்கையாளன் உயர்வைப்பெற உதவிகரமாய் இருக்கும் என இங்கே உணர்த்தப்படுகிறது.
தமது அந்திம காலத்தில் கண் பார்வையின்றி மிகச்சிரமத்தோடு வாழ்ந்து வந்த அந்த நபித்தோழரிடம்நீங்கள் அல்லாஹ்விடம் இந்தக் குறை நீங்க பிரார்த்திக்கக் கூடாதா?என மக்கள் கோரினர்.இறைவன் விரும்பிய முறையில் இப்படி வாழவே நான் விரும்புகின்றேன் என்று சொன்னார் அநத் நபித்தோழர்.
சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட பதின்மரில் ஒருவர், உமர் (ரலி) அவர்களால் அமைக்கப்பட்ட நம்பிக்கையான ஷீரா ஆலோசனைக் குழுவின் ஆறு நபரில் ஒருவர்.அல்லாஹ்வின் பாதையில் முதல் அம்பை எய்திய மாண்புக்குச் சொந்தக்காரர்.இவையெல்லாவற்ரையும் விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அமுத வாயால் எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும் என்ற பாராட்டைப் பெற்றவர். ஆம்! இப்படி அடுக்கடுக்கான பல உயர்வினை பெற்ற அந்த நபித்தோழர்தான் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள்.
ஏதோவொரு உயர்வான இலட்சியமும், குறிக்கோளும் தான் இத்தகைய உயர்ந்த ஸ்தானத்திற்கு அவரை கொண்டு வந்திருக்கும். அவரின் வரலாற்றை எடுத்தியம்பும் எந்தவொரு வரலாற்று ஆசிரியர்களும் மறக்காமல் அவர் தம் தாயோடு உரையாடிய உரையாடலை மிக உயர்வானது! மிக ஆச்சர்யமானது! என்று குறிப்பிடாமல் இருந்ததில்லை.
இஸ்லாத்தை தம் வாழ்க்கை நெறியாக அவர் ஏற்றுக்கொண்ட போது சற்றேறக்குறைய அவரின் வயது 17.இளமைப்பருவம் நபிகளாரின் மீதும், இறைமார்க்கத்தின் மீதும் அள்விலாக்காதலும், உறுதுயும் பற்றும் கொண்டிருந்தார்கள்.நபிகளாரின் மீதும், இறைமார்க்கத்தின் மீதும் அள்விலாக் காதலும், உறுதியும் பற்றும் கொண்டிருந்தார்கள்.அந்தக் காதலையும் பற்றையும் உரசிப்பார்க்க அவரின் காதில் வந்து விழுந்தது ஓர் அதிர்ச்சித் தகவல்.ஆம் அவரது தாயாரின் ஒரு முறையாவது தன் மகனோடு மனம் விட்டு பேச வேண்டும் என்கிற பேராவல்.ஸஅதின் சொந்த பந்தங்கள் அவரது தாயாரின் வேண்டுகோளைச் சொல்லி ஸஅத் (ரலி) அவர்களை அழைத்துச் சென்றனர்.
எப்படியாவது ஸஅத் இஸ்லாத்திலிருந்து வெளியேறி தமது மூதாதையர்களின் பழைய மார்க்கத்தின் படி வாழ்ந்திட முன்வர வேண்டும் என்ற முனைப்போடு ஸஅதின் தாயார் ஸஅதை நோக்கி கூறினார். மகனே! ஸஅது! நீ தேர்ந்தெடுத்துள்ள மார்க்கம் எத்தகையது தெரியுமா?உனது தாயும் தந்தையும் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தை அது அழித்துவிடும். இறைவன் மீது ஆணை! நீ இந்த மார்க்கத்தையும் முஹம்மதையும் விட்டுவிடத்தான் வேண்டும்.இல்லாவிட்டால் உண்ணாமல் பருகாமல் என்னை நானே அழித்துக்கொள்வேன். அப்படி நடந்தால் நான் இன்றி நீ கை சேதப்படுவாய்! உலகம் உன்னை ஏசும்! பேசும்! தாயைக் காப்பாற்றாத மகன் என்று தூற்றும் என்றார்.

قوله تعالى: { وَوَصَّيْنَا ٱلإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْناً...} الآية. [8].
قال المفسرون: نزلت في سعد بن أبي وَقَّاص، وذاك أنه لما أسلم قالت له أمه حَمْنَةٌ: يا سعد، بلغني أنك صبوت، فوالله لا يُظِلّني سقف بيت من الضِّحِّ والرِّيح، ولا آكل ولا أشرب حتى تكفر بمحمد وترجع إلى ما كنت عليه. وكان أحب ولدها إليها، فأبى سعد، وصبرت هي ثلاثة أيام لم تأكل ولم تشرب ولم تستظل بظل حتى خُشي عليها، فأتى سعد النبي صلى الله عليه وسلم، وشكا ذلك إليه، فأنزل الله تعالى هذه الآية، والتي في لقمان، والأحقاف.

உண்மையில் தனது தாயாரின் மீது பரிவும் அளவற்ற அன்பும் கொண்டவராய், எந்நிலையிலும் தாயின் சொல்லுக்கு வழிப்பட்டு நடப்பவராய், பணிவிடை செய்பவராய் இருந்ததினால் அவரது தாய் இவ்வழியை கையாண்டார். ஆனால் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களோ ஒருக்காலும் தீனின் இஸ்லாத்தின் மீதான பற்றுதலை என் உள்ளத்திலிருந்து வெளியேற்றிட முடியாது என்று சொல்லிவிட்டார்.ஸஅதின் தாயார் பிடிவாதாமாக உண்ணாமலும் பருகாமலும் இருந்ததனால் மரணத்தின் விளிம்பிற்கு வந்து விட்டார்.மீண்டும் அவரது சொந்த பந்தங்கள் வந்து முறையிடவே தமது தாயாரைக் காண வந்தார்.மீண்டும் தாயார் தனது பழைய மார்க்கத்திற்கு வரும்படி வற்புறுத்திய போதேதாயே!உமக்கு நூறு ஆன்மாக்கள் இருந்து அது ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்டாலும் ஒருபோதும் நான் இஸ்லாத்தை விட்டு விட மாட்டேன்.நீ விரும்பினால் சாப்பிடு, அல்லது சாப்பிடாமல் போ அதனால் எனக்கொன்றும் ஆகிவிடப்போவதில்லை என்று சப்தமிட்டு கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள் அத் (ரலி) அவர்கள்.
அப்போது அல்லாஹ் இவரின் சம்பந்தமாக
பெற்றோர் நலன் பேண வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று தன் வயிற்றில் அவனை சுமந்தாள்.மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் ஆனது.எனக்கு நன்றி செலுத்து, மேலும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து.என் பக்கமே நீ திரும்பி வர வேண்டியுள்ளது. ஆனால் எதனை நீ அறிய மாட்டாயோ அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை கட்டாயப்படுத்தினால் அவர்களுடைய பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறையில் நீ நடந்து கொள்! மேலும் யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவருடைய வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உன்களுக்கு அறிவித்து விடுவேன்
(அல் குர் ஆன்: 2:148)
இந்த இரண்டு வசனங்களை அல்லாஹ் இறக்கியருளியுளினான்
நூல்: கிஸஸ் - அஸ் - ஸஹாபா
இப்போது, யோசித்து பாருங்கள்..
ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் உன்னதமான இலட்சியமும், குறிக்கோளுமே ஈருலகிலும் உயர்வான வாழ்க்கைக்கு வழிகோழியது என்பதை அவரின் வரலாற்றின் மூலம் உணர முடியும்.
இலக்கை நோக்கி செல்ல தயாராக இருக்கும் ஓர் உண்மை விசுவாசி இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு உயர்வை நினைத்தால் ஒரு போதும் உயர்வை அடைந்து கொள்ள முடியாது. சில இழப்புகளையும் மேற்கொள்ளாமல் இலக்கை எளிதில் அடைந்துகொள்ள இயலாது என பேரறிஞர் இப்னுல் கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்
அல்லாஹ் கூறுகிறான்:

  لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا   دَرَجَاتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا

இறை நம்பிக்கையாளர்களில் எவர்கள் தக்க காரணமின்றி அறப்போரில் கலந்து கொள்ளாமல் (ஊரில்) தங்கினார்களோ அவர்களும், எவர்கள் தங்களுடைய உயிராலும், பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போரில் கலந்து கொண்டவர்களும் சமமாக மாட்டார்கள். அறப்போரில் கலந்து கொள்ளாமல் (ஊரில்) தங்கி விட்டவர்களை விட தங்களுடைய உயிராலும், பொருளாலும் அறப்போரில் கலந்து கொண்டவர்களுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கிறான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்துள்ளான்.எனினும், அறப்போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விட்டவர்களை விட கலந்து கொண்டவர்களின் கூலி அவனிடம் மிக உயர்வானதாக இருக்கின்றது.அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த பதவிகளும், மன்னிப்பும், பேரருளும் இருக்கின்றன.மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், இரக்க முடையவனுமாய் இருக்கின்றான்.
(அல் குர் ஆன்: 4:95)

 لَا يَسْتَوِي مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ ۚ أُولَٰئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

மேலும், உங்களில் (யார் வெற்றிக்குப்பின் செலவு செய்வார்களோ, மேலும் அறப்போரும் புரிவார்களோ அவர்கள்) வெற்றிக்கு முன் செலவு செய்து, அறப்போரும் புரிந்தவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். அத்தகையவர்களின் அந்தஸ்து, பின்னர் செலவு செய்தவர்களை விடவும், அறப்போர் புரிந்தவர்களை விடவும் மிக உயர்ந்ததாகும்.ஆயினும், அல்லாஹ் இரு சாராருக்கும் நல்வாக்குறுதியளித்துள்ளான்.நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
(அல் குர் ஆன்: 57:10)
மேற்கூறிய இரு இறைவசனங்களும், காலத்தே முயற்சி செய்யாதவர்களும் அமர்ந்து கொண்டே உயர்வினைப் பெறலாம் என நினைத்துக் கொண்டிருப்பவர்களும் மிக உயர்ந்த அந்தஸ்தினை பெற முடியாது என்பதை உணர்த்துகின்றது. எனவே, உயர்வான இலக்கை நோக்கி செல்கிற பயணத்தில் சோர்வடையாமல் முழு முயற்சியோடு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.
உயர்வான நிலையை அடைய வேண்டுமானால் உயர்வான செயல்களை செய்யக் கூடியவர்களாய் இருக்க வேண்டும்.உயர்வான செயல்களை செய்ய வேண்டுமானால் உயர்வான எண்ணங்களை கொண்டவர்களாய் இருக்க வேண்டும்.
பனூ இஸ்ரவேலர்களில் ஓர் வணக்கச்சாலி கடுமையான பஞ்ச காலத்தில் ஓர் மணல் நிறைந்த மேட்டுப் ப்குதியில் நடந்து சென்றார். அங்கிருந்த மணற் பரப்பை பார்த்து இவைகளின் அளவு என்னிடம் தானியம் இருந்தால் மக்களின் பசி, பட்டினியை நான் போக்கியிருப்பேனே!என மனதினில் எண்ணிக்கொண்டார். அல்லாஹ் அக்காலத்தில் வாழ்ந்த நபியிடம் அந்த வணக்க சாலியை அழைத்து இவ்வாறு கூறி விடுங்கள் தானியத்தை தானமாக -ஸதக்காவாக வழங்கியதன் கூலியை உமக்கு அல்லாஹ் கடமையாக்கி விட்டான் என்று கூறினான்
நூல்: தன் பீஹில் காஃபிலீன், பக்கம்:337
ஓர் விலையுயர்ந்த வாகனத்தையோ, பொருளையோ பார்க்கும் போது அதை வாங்குவதற்குத்தான் பணம் வேண்டும்.அதை நினைத்து பார்ப்பதற்கு பணம் தேவையில்லை.எனவே, உளப்பூர்வமான எண்ணங்கள் உயர்வான செயல்களை உருவாக்கும்.
ஓர் இறை நம்பிக்கையாளன் தனது அனைத்துக் காரியங்களிலும் உயர்வான இலட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.
நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் நட்பை, நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது உயர்வான இலக்கை கொண்டவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுங்கள் என வழிகாட்டுகின்றான்.

وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَن ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا

(நபியே) எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனை துதிக்கின்றார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் உமது உள்ளத்தைத் திருப்பி கொள்ளச் செய்வீராக! ஒரு போதும் உமது பார்வையை அவர்களை விட்டும் திருப்பி விட வேண்டாம்.உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்பிகின்றீரா என்ன? நம்மை நினைவு கூர்வதை விட்டும் எவனது இதயத்தை நாம்அலட்சியம் கொள்ளச் செய்துள்ளோமோ எவன் தன் செயல் பாட்டில் வரம்பு மீறிச் சென்று கொண்டு இருக்கின்றானோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
(அல் குர் ஆன்: 18:28)
இப்படித்தான் ஒரு மனிதன் தனது வாழ்வில் வியாபாரத்தையோ, விவசாயத்தையோ, கல்வியையோ, திருமணத்தையோ, வீட்டையோ, பொருளையோ தேர்ந்தெடுக்கும் போது உயர்வானதையே தேர்ந்தெடுக்குமாறு இறைவனும், இறைத்தூதரும் கட்டளையிடுகின்றார்கள். இறைவனும் அவர்களையே நேசிக்கிறான் என்பதை ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் வலியுறுத்துகிறது..
அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸை இமாம் ஹாக்கீம் (ரஹ்) அவர்கள் தமது முஸ்தத்ரக் அல் ஹாக்கீம் எனும் நூலில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்.

عن أبي موسى الأشعري – رضي الله عنه ـ ، أن رسول الله – صلى الله عليه وسلم ـ نزل بأعرابي فأكرمه ، فقال له : « يا أعرابي سل حاجتك » قال : يا رسول الله ، ناقة برحلها, وأعنز يحلبها أهلي . قالها مرتين ، فقال له رسول الله – صلى الله عليه وسلم ـ:أعجزت أن تكون مثل عجوز بني إسرائيل ؟ فقال أصحابه : يا رسول الله ، وما عجوز بني إسرائيل ؟ قال : « إن موسى أراد أن يسير ببني إسرائيل فأضل عن الطريق ، فقال له علماء بني إسرائيل : نحن نحدثك أن يوسف أخذ علينا مواثيق الله أن لا نخرج من مصر, حتى ننقل عظامه معنا ، قال : وأيكم يدري أين قبر يوسف ؟ قالوا : ما تدري أين قبر يوسف إلا عجوز بني إسرائيل ، فأرسل إليها, فقال: دليني على قبر يوسف, فقالت : لا والله لا أفعل حتى أكون معك في الجنة ، قال : « وكره رسول الله– صلى الله عليه وسلم ـ ما قالت, فقيل له : أعطها حكمها فأعطاها حكمها فأتت بحيرة ، فقالت : أنضبوا هذا الماء . فلما نضبوه قالت : احفروا هاهنا, فلما حفروا إذا عظام يوسف ، فلما أقلوها من الأرض, فإذا الطريق مثل ضوء النهار »

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அப்போது ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.நபி (ஸல்) அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தினார்.இச்செயலை கண்டு அக மகிழ்ந்து போன மதீனா வந்தால் அவசியம் தங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள்.
சிறிது காலம் கழித்து அக்கிராம வாசி மதீனா வந்தார்.நபி (ஸல்) அவர்களை மஸ்ஜிதுந் நபவீயில் சந்தித்தார்.அவரை நபி (ஸல்) அவர்கள் அன்புடன் உபசரித்தார்கள். அவர் விடைபெற்ற போது என்னிடம் ஏதாவது கேளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் அக்கிராம வாசியிடம் கேட்டார்கள்.அவர் எனக்கு ஓர் ஒட்டகம் தேவை அதை நான் வாகனமாக பயன் படுத்திக் கொள்வேன் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள்.அதற்கவர், அதை பாதுகாக்க ஒரு நாய் வேண்டும் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள், அதற்கவர் அவ்விரண்டையும் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணைத்தாருங்கள் என்று கேட்டார்.
இதுதான் உங்கள் தேவையா என மாநபி (ஸல்) கேட்ட போது, ஆமாம் அல்லாஹ்வின் தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார் அவர்.
அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ஒரு ரிவாயத்:
அக்கிராமவாசி பால் கறக்கும் ஓர் ஒட்டகம், பாலை கறக்க ஓர் பாத்திரம், பாலை அளக்க ஒரு அளவை தாருங்கள் என்றார்.இதைக்கேட்ட நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள் என்று கூறிய போது இவை மட்டும் போதும் என்றார் அக்கிராமவாசி.
அல்லாமா தப்ரானீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ரிவயாத்
அக்கிராமவாசி ஓர் ஒட்டகம் தேவை, தாங்கள் அதை வழங்கினால் வாகனமாக பயன்படுத்திக் கொள்வேன், இன்னும் சில ஆடுகளைத் தந்தால் அதன் பாலைக் கறந்து என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வேன் என்றார். இதுதான் உங்களின் தேவையா? என்று வினவியபோது ஆமாம் இறைத்தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார்.
இதைக்கேட்டதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்:
அல்லாஹ்வின் தூதராகிய நான் உமது தேவை குறித்து கேட்டபோது இவ்வளவு மலிவான பொருளை கேட்டு விட்டீரே! மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மூதாட்டி மூஸா (அலை) அவர்களிடம் கேட்டது போல நீங்களும் கேட்க தவறி விட்டீரே! உம்மை விட அம்மூதாட்டி சிறந்தவள் என்றார்கள்.
உடனே சுற்றியிருந்த தோழர்கள் யார் அந்த மூதாட்டி?அப்படி என்ன தான் கேட்டார்?ஆர்வமாய் அண்ண்லாரிடம் கேட்டார்கள்.
மூஸா நபியவர்கள் பனூ இஸ்ரவேலவர்களை எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது பாதை தெரியாமல் பயணம் தடைபட்டது. அது குறித்து ஆலோசித்த போது அங்கிருந்த மூத்த வயதுடையவர்கள்இஸ்ரவேலவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு பயண மேற்கொள்வதாக இருந்தால் தமது ஜனாஸாவையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என நபி யூஸுப் (அலை) அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் அதனால் தான் பயணம் தடை படுவதாகவும்சொன்னார்கள். சக நபி யூசுப் (அலை) அவர்களின் அடக்கத்தலம் குறித்து விசாரித்த போது இது குறித்த தகவல் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிற்கு தெரியும் என தெரிந்து கொண்டார்கள்.
இறுதியில், அம் மூதாட்டியை சந்தித்த மூஸா (அலை) அடக்கத்தலம்குறித்து விசாரித்தார்கள்.
நான் அறிவித்து தந்தால் எனக்கு என்ன சன்மானம் தருவீர்கள்?என அம்மூதாட்டி கேட்டார்.என்ன வேண்டும்?எது கேட்டாலும் தருகிறேன் என்று மூஸா (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.அப்படியானால், மறுமையில் சுவனத்தில் உங்களுடன் நான் இருக்க வேண்டும் என தமது கோரிக்கையை முன் வைத்தார்கள்.அம்மூதாட்டியின் ஆர்வத்தையும், ஆவலையும் கண்டு வியந்த நபி மூஸா (அலை) அவர்கள் ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். பின்பு அம்மூதாட்டி காண்பித்த நீரோடை அருகேயிருந்து யூஸுப் (அலை) அவர்களின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டு, பைத்துல் முகத்தஸை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
நூல்: அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம்
இன்னும் இது போன்ற நிறைய சந்தர்ப்பங்களில் துஆ செய்ய வேண்டி நிற்போரின் உயர்வான வேண்டுகோலை மட்டுமே நபி (ஸல்) விரும்புவார்கள்.அதற்காக துஆவும் செய்வார்கள்.
பிரதான நோக்கமும், உயர்வான குறிக்கோள்களில்லாத நபர்களின் வேண்டுகோளை வாஞ்சையோடு சுட்டிக்காட்டுவார்கள்.
உலகச் செல்வமா?மறுமை நற்பேறா?
அம்ரா பிந்த் ரவாஹா (ரலி) எனும் நபித்தோழி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் சகோதரி, நூஃமான் இப்னு பஷீர் அவர்கள் சிறு குழந்தையாய் இருக்கும் பருவத்தில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீத்தம் பழம் கொண்டுவரச் செய்து, தமது புனித வாயால் மென்று அதை நுஃமான் (ரலி) வாயில் வைத்தார்கள்.பிறகு அந் நபித் தோழி நபியவர்களிடம் இக்குழந்தைக்கு அதிக பொருட் செல்வமும், மழலைச்செல்வமும் கிடைக்கப்பெற்றிட அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இக்குழந்தை நுஃமான் (ரலி) அவரின் தாய்மாமன் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களைப் போன்று புகழுக்குறிய வாழ்க்கை வாழ்ந்து சன்மார்க்கப் போரில் உயிர் நீத்து, மேலான சுவனத்தை பெற்றது போன்று நுஃமானும் வாழ்வதை நீ பொருந்திக் கொள்ள மாட்டாயா? எனக் கேட்டார்கள்.
நூல்: இஸ்தீஆப், பாகம்:3 பக்கம்:239
நிவாரணமா?விசாரணையா?
உம்மு சுபர் (ரலி) என்கிற நபித்தோழி திடீரென மனநிலை பாதிக்கப்பட்டார்கள்.அவரது சகோதரர்கள் அப்பெண்மனியை நபிகளாரிடம் அழைத்து வந்தனர். அல்லாஹ்வின் தூதரே! எங்களின் சகோதரி திடீரென மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல் செயல்படுகிறார்.அந்நிலை ஏற்படும் போது தமது மார்பினில் பயங்கரமாக அடித்துக் கொள்கிறார்.எங்களால் அதைப் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை என முறையிட்டனர்.அது கேட்ட அண்ணலார்நீங்கள் விரும்பினால் அந்நிலை மாற அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன் அல்லாஹ் குணமாக்கி மீண்டும் பழைய நிலமைக்கு மாற்றிவிடுவான்!அல்லது நீங்கள் விரும்பினால் (அவளை அப்படியே வைத்து பராமரிப்பதாக கூறினால்) அவள் அப்படியே இருந்து விட்டு போகட்டும்.அவள் மீது மறுமையில்எவ்வித விசாரணையும் கேட்கப்பட மாட்டாது என்று கூறினார்கள்.இதன் மீதான முடிவெடுக்கும் முழு உரிமையையும் தமது சகோதரி உம்மு சுபர் (ரலி) அவர்களிடம் விட்டுவிட்டார்கள் அவர்களின் சகோதரர்கள். உடனே அப்பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! என்னை இப்படியே விட்டு விடுங்கள்.நான் இப்படியே வாழ்ந்து விட்டு போகிறேன் என்றார்கள்.உடனே நபியவர்கள் அப்பெண்மணியை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு அப்பெண்மணியின் சகோதரர்களிடம் கூறினார்கள்.
நூல்: இஸ்தீஆப்: பாகம்: 3 பக்கம் 273
நபி (ஸல்) அவர்கள் எப்படி உயர்வான காரியங்களையும், மேலான செயல்களையும் விரும்புவார்களோ அது போன்றே தமது உம்மத்தினரும் உயர்வான இலட்சியங்களையும், மேலான குறிக்கோளையும் நேசிப்பவர்களாய் இருக்க வேண்டும் என ஆசை கொண்டதை மேற்கூறிய இரு சம்பவங்களும் உணர்த்துகின்றன
இறுதியாக..
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عن العرباض بن سارية - رضي الله عنه - قال : قال النبي - صلى الله عليه وسلم - : "إذا سألتم الله فسألوه الفردوس ، فإنه سر الجنة" .(صحيح). 
عن عبادة بن الصامت - رضي الله عنه - قال : قال النبي - صلى الله عليه وسلم - : "إن في الجنة مائة درجة ، ما بين كل درجتين كما بين السماء والأرض ، والفردوس أعلاها درجة ،ومنها تفجر أنهار الجنة الأربعة ، ومن فوقها يكون العرش ، فإذا سألتم الله فاسألوه الفردوس" .(صحيح).

நீங்கள் அல்லாஹ்விடம் சுவனத்தைக் கேட்டால் ஃபிதவ்ஸ் எனும் சுவனத்தையே கேளுங்கள்.ஏனெனில், அதுதான் உயர்வானதும், மிக்க மேலானதுமாகும்.அதற்கு மேலாகத்தான் அல்லாஹ்வின் அர்ஷ் அரியாசனம் உள்ளது.அங்கிருந்துதான் சுவனத்து நதிகள் வெளியாகின்றது. அது தான் பரந்து விரிந்த சுவனத்தின் மத்தியப்பகுதிநடுப்பகுதியாகும்
நூல்: புஹாரி
ஆக, ஒரு மூஃமின் உலக வாழ்க்கைக்காவோ, மறுமை வாழ்க்கைக்காகவோ எதுவொன்றை தேர்ந்தெடுக்கின்றானோ அது மேலானதாய், மிக உயர்வானதாய் அமைந்திருக்க வேண்டுமென அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விரும்புகின்றார்கள். அத்தோடு நின்று விடாமல் அதற்காக முழு முயற்சியோடும், உத்வேகத்தோடும் செயல்படுமாறு பணிக்கின்றார்கள்.
எனவே,
உயர்ந்த இலட்சியங்களை நோக்கி,
உயர்ந்த குறிக்கோளை நோக்கி,
உயர்ந்த இலக்கை நோக்கி,
பயணித்து ஈருலக வாழ்விலும் உயர்வைப் பெறுகின்ற நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!
ஆமீன்!
வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment