Wednesday, 1 May 2013

இஸ்லாம் இகமெங்கும் பரவியது இப்படியன்றோ!


இஸ்லாம் இகமெங்கும் பரவியது இப்படியன்றோ!
இன்றைய உலகத்தில் சன்மார்க்க இஸ்லாத்தின் மீது பல்வேறு குற்றசாட்டுகளையும்,விமார்சனங்களைய்யும் இஸ்லாத்திற்கெதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் எழுப்பிவருகீன்றனர் அவ்வப்போதுஅதற்கான விளக்கங்களையும், பதில்களையும் இஸ்லாமிய சமூகத்தின் அறிஞர்களும், ஆய்வாளர்களும், நேரடி விவாதத்தின் மூலமாகவும்,கருத்தரங்குகளின் மூலமாகவும்தெளிவு படுத்திவருகின்றனர்.
            அந்தக் குற்றச்சாட்டுகளில் மிகவும் ஆபத்தானதும், அபத்தமானதும் இதுதான்..
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது
            குறிப்பாக இந்தியாவில் இந்த விமர்சனத்தை அள்ளி வீசியவர்கள் காவி பயங்கரவாதிகள். இவர்கள் இந்தியாவில் ஆட்சியில் அமர்ந்திருந்தபோது இந்திய இஸ்லாமிய வரலாற்றில் பல திரிபுகளை ஏற்படுத்தி, உண்மைகளை மறைத்து ஒட்டுமொத்த இந்திய சமூக மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக மாற்ற முனைந்ததை நாமறிவோம்.
உண்மையில்..இஸ்லாம் மனித மனங்களை எப்படி வென்றிருந்தது?
எத்தகைய மனம் கொண்ட மாந்தர்களையெல்லாம் அது கவர்திருந்தது?
எந்தெந்த வழிகளெல்லாம் மனித இதயங்களில் ஊடுருவிச் சென்றது?என்பதை திறந்த புத்தமாகமாய் விளங்கும் இஸ்லாமிய வரலாற்றுப்பக்கங்களை கொஞ்சம் திருப்பிப்பார்ப்போம்.
இவர்களின் விமர்சனம் எத்தகைய பாரதூரமான, அபத்தம் என்பது தெரிய வரும்.ஆச்சர்யமும், வியப்பும் நிறைந்த பல அரிய சம்பவங்களை வரலாற்றில் பல பக்கங்கள் நிரப்பியிருக்கின்றன.இஸ்லாம் வென்றெடுத்த மனிதர்களில் சிலர் இப்படியும் இருந்தனர்.
இஸ்லாத்தை அதன் ஏகத்துவ எழுச்சியை அழித்தொழித்திட வேண்டும் என கங்கணம் கட்டி முழு நேரத்தையும் கழித்தவர், இஸ்லாத்தையும், இறைத்தூதரையும், முஸ்லிம்களையும் கொன்றொழித்திட படை நடத்திய தளபதிகள்.
தன்னுள் இஸ்லாம் மலர்ந்திடக் கூடாதென ஊரையே காலி செய்து விட்டு ஓடியவர்கள், கல்மனமும், கொடூர மனமும் படைத்தவர்கள்.
ஒழுங்கீனமும், மனித நேயமற்ற சிந்தனையும், செயல்பாடுகளையும் கொண்டிருந்தவர்கள் என பட்டியல் பல தருகின்ற அளவு மிக நீண்டது மனித மனங்களை இஸ்லாம் வென்ற வரலாறு.இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்கள் சில போது அல்லாஹ்வின் அற்புதத்தால் கவுரப்பட்டனர்.சிலபோது அல்லாஹ்வின் வார்த்தையின் வசீகரத்தால் கவரப்பட்டனர்.
சிலபோது இஸ்லாத்தின் கொள்கைகளால், கோட்பாடுகளால் சட்டங்களால், ஆளுமையால், நீதி வழங்கும் மாண்பால், இஸ்லாம் கூறும் சமத்துவம். சகோதரத்துவம், சமய நல்லிணக்கம், மனித நேயம் ஆகியவற்றால் கவரப்பட்டனர் என்று அன்று முதல் இன்று வரை இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களில் பிண்ணனியில் மேற்கூறிய ஏதேனும் ஒரு அம்சம் தான் தன்னை ஒரு முஸ்லிமாக அடையாளப்படுத்த உதவியிருக்கிறது என்கிற பேருண்மை இறைத்தூதரின் பணி:
ஏகத்துவ அழைப்பை மக்களிடையே எடுத்தியம்ப அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர்களே இறைத்தூதர்கள். இவர்கள் அனுப்பப்பட்டதின் நோக்கம் இஸ்லாமிய ஜோதியை இகமெங்கும் ஒளிரச்செய்வதும், ஏகத்துவத்தை மேலோங்கிச் செய்வதும், இறைக்கட்டளையின் படி வாழ்ந்து காட்டுவதும் தான் என அல்லாஹ் பல்வேறு இறைவசனங்களின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளான். அதனடிப்படையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள் இப்பூமிக்கு வருகை புரிந்துள்ளார்கள்.படைகள் நடத்தி, யுத்தங்கள் பல கண்டு நாடு பிடிப்பதோ, ஆட்சி அமைப்பதோ அவர்களின் நோக்கமாகவோ, வாழ்வின் அம்சமாகவோ இருக்கவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:-

 وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

தூதர்கள் அனைவரையும், அவரவரின் சமுதாய மொழியிலேயே நாம் அனுப்பி வைத்தோம் (ஏகத்துவ செய்தியை) தெள்ளத்தெளிவாக அவர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! பின்னர் அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிபிறச் செய்கின்றான்; நாடுகின்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான்.அவன் யாரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.
அல்குர் ஆன்: 14:4
அல்லாஹ் கூறுகின்றான்:-

 لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

திண்ணமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாருக்கு தூதரக அனுப்பினோம்.அவர் கூறினார்; ‘என் சமூகத்தாரே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குகள்! அவரைத்தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை.மகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அல்குர் ஆன்: 7:59
அல்லாஹ் கூறுகிறான்:

وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا ۗ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ ۚ أَفَلَا تَتَّقُونَ

மேலும், ஆத் சமூகத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹீதை நாம் (தூதராக) அனுப்பினோம். அவர் கூறினார்; என் சமுதயத்தாரே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள்! அவனன்றி வேறு இறைவன் இல்லை.எனவே, நீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகி அல்லாஹ்வை பயந்து வாழமாட்டீர்களா?
அல்குர் ஆன்: 7:65
அல்லாஹ் கூறுகின்றான்:
  وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا ۗ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ قَدْ جَاءَتْكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ
மேலும், ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (தூதராக) அனுப்பினோம். அவர் கூறினார்; என் சமுதாயத்தவர்களே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள் அவனைத்தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை.உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
அல்குர் ஆன்: 7:73
இன்னும், இறைத்தூதர்கள் பலர் இந்த உலகத்தில் செய்த பணிகள் குறித்து ஏராளமான இறைவசனங்களில் அல்லாஹ் விவரித்துள்ளான்.
            இறைத்தூதர்களின் வருகையை இறுதியாக்கிய முஹம்மத் (ஸல்) அவர்களும் அனைத்து இறைத்தூதர்களும் செய்த பணியைத்தான் செய்தார்கள்
அல்லாஹ் கூறுகின்றான்:
 لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

நிச்சயமாக அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருதவிகளைச் செய்துள்ளான். அதாவது, அவர்களிடையெ தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையை தூய்மைப்படுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் அனுப்பி வைத்தான். ஆனால், அவர்களோ இதற்குமுன் அப்பட்டமான வழிகேட்டில்தான் இருந்தார்கள்.
அல்குர் ஆன்: 3:164
            அல்லாஹ் கூறுகின்றான்:

 مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

(மக்களே!)முஹம்மத் (ஸல்) உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர், ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறுதி நபியாகவும் இருக்கின்றனர்.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
அல்குர் ஆன்: 33:40
ஆக ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையிலான அனைத்து இறைத்தூதர்களுமே தூதுச் செய்தியை தம் சமூக மக்களிடம் சேர்த்திடும் பணியை மாத்திரமே மேற்கொண்டுள்ளார்கள். எனினும், முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் அனைத்து யுத்தங்களும் தற்காப்பு நடவடிக்கையின் பேரில் அமைந்தது என்றே அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஒருமித்து கூறுகிறார்கள். ஏனெனில், இந்த மார்க்கத்தை நிர்பந்தித்து ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
அல்லாஹ் கூறுகிறான்:-
 لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ

தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்)எந்த ஒரு கட்டாயமோ நிர்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரானவழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது”.
அல்குர் ஆன்: 2:256
மேலும் அவரவர்களின் கொள்கைப்ப்டி வாழ உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.ஏனெனில் இஸ்லாமிய கொள்கையும், மார்க்கமும் தான் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்..
قُلِ اللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَّهُ دِينِي   فَاعْبُدُوا مَا شِئْتُم مِّن دُونِهِ

            “(நபியே! அம்மக்களிடம்) அறிவிப்பீராக! நான் என்னுடைய கீழ்ப்படிதலை - தீனை அல்லாஹ்வுக்கு முற்றிலும் உரித்தாக்கிய வண்ணம் அவனையே வணங்குவேன். நீங்கள் அவனை விடுத்து யார், யாரை எல்லம் விரும்புகின்றீர்களோ அவர்களை வணங்கிக்கொண்டிருங்கள்
அல்குர் ஆன் 39: 14,15
வரலாற்றின் வெளிச்சத்தில்...
كان عدي بن حاتم يدين بالركوسيّة وهو دين مندثر بين اليهودية والمسيحية أما قبيلته يدينون بالمسيحية حين ظهور الإسلام
يقال بأن رسول الله أرسل لهم علي بن أبي طالب لغزوهم وكان عدي في بلاد الشام في ذلك الوقت فتم الغزو وأخذوا أسرى، وكان من بين الأسيرات سفانة بنت حاتم الطائي أخت عدي، فدار بينها وبين الرسول حواراً أوضحت فيه أنها سيدة في قومها وأنها ابنة حاتم الطائي ففك اسرها.
كان عدي بن حاتم من ألدّ أعداء الإسلام، لأنه هدد زعامته لقبيلته طيء، إلا أنه وبعد إسلام أخته سفانة، وبعدما وصله أن الرسول يتمنى إسلامه ليتعاون معه، وفد على الرسول في سنة 7 هـ - 628م، وكانت وفادته لاستكشاف أمر هذا الرسول الجديد ولم يكن في نيته أن يسلم، ولما وصل المدينة قابل محمد في مسجده ولاحظ أنه لا يدعى بالملك أو الزعيم، فعرف أن الرسول لا يسعى للملك أو الزعامة. فأخذه إلى بيته وهناك حادثه في أمر الإسلام وكان مما قال له:
" لعلك يا عدي إنما يمنعك من الدخول في هذا الدين ما ترى من حاجة المسلمين وفقرهم، فوالله ليوشكن المال أن يفيض فيهم، حتى لا يوجد من يأخذه، ولعله يا عدي إنما يمنعك من الدخول في هذا الدين ما ترى من قلة المسلمين وكثرة عدوهم، فوالله لتوشكن أن تسمع بالمرأة تخرج من القادسية على بعيرها حتى تزور هذا البيت لا تخاف إلا الله، ولعله يا عدي إنما يمنعك من الدخول في هذا الدين أنك ترى أن الملك والسلطان في غيرهم، فهم ضعاف، وايم الله لتوشكن أن تسمع بالقصور البيض من أرض بابل قد فتحت عليهم، وإن كنوز كسرى قد صارت إليهم".
وأسلم عدي بعدها، وعاش حتى سنة 68 هـ - 688م، وشارك في حرب الصحابة، بعد مقتل عثمان بن عفان، وكان إلى جانب علي بن أبي طالب..


நஜ்த் தேசத்தில் இருந்து வந்திருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் காணவேண்டும் என நபித் தோழர்களிடம் வேண்டிநின்றார் அவரை அழைத்துக்கொண்டு மஸ்ஜித் நபவீக்குள் இருந்த பெருமானார்(ஸல்) அவர்களின் முன் கொண்டு நிறுத்தினர் யார் இவர்? என நபி (ஸல்) அவர்கள் வினவ, வந்தவர் நான் அதீ இப்னு ஹாத்திம் என்றார்
ஒரு முறை நஜ்த் பகுதியில் இருந்து கைதியாக பிடிக்கப்பட்டு வந்தவர்களில் இவரின் சகோதரி ஸஃபானாவும் ஒருவர் நபிகளாரிடம் விடுதலை வேண்டி நின்ற அப்பெண்மணியிடம்நபிக்ளார் முகவரி கேட்டபோது அதீ இப்னு ஹாத்திமின் சகோதரி என பதிலளித்தார். அப்போது நபி(ஸல்)அவர்கள்
அல்லாஹ்வ்வைவிட்டும், அல்லாஹ்வின் துதரை விட்டும் விரண்டோடியவன் தானே உனது சகோதரன்?எனக் கூறினார்கள் அந்த அதீ இப்னு ஹாத்திம் தான் இப்போது நபி(ஸல்) அவர்களைத் தேடி வந்திருந்தார்
நபிகளார் அவர்களை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் வழியில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியொருவர் நபிகளாரை அழைத்தார்கள் நபி(ஸல்)அவர்கள்அந்தபெண்மணி அருகே நின்றார்கள் மிகநீண்டநேரம் அப்பெண்மணி தமது தேவை குறித்து பேசிகொண்டிருந்தார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள் கால்கடுக்க, முகம் சுழிக்காமல், பேசி முடிக்கும் வரை நின்று கொண்டே இருந்தார்கள்.
அதீ இப்னு ஹாத்தீம் சொல்கிறார்:
நான் என் மனதினுள்நிச்சயமாக இவர் ஓர் அரசராக இருக்க வாய்ப்பில்லை எனக் கூறிக்கொண்டேன்
பின்பு நபி (ஸல்) அவர்கள் என்னை அவர்களின் வீட்டிற்குள் அழைத்துச்சென்று மெல்லிய தலையணையில் என்னை அமருமாறு கூறினார்கள்.நான் நீங்கள் அமருங்களேன்என்றான்.நீயே அமர்ந்துகொள் நானும் தலையணை மீது அமர்ந்துகொண்டேன்.
நிச்சயம் இதுபோன்ற எந்த ஒரு காரியத்தையும் அரசர்களால் செய்ய முடியாது என நான் என மனதினுள் கூறிக்கொண்டேன்.பின்பு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் நீ ரகூஸி தானே?(ரகூஸி என்றால் கிறிஸ்தவத்தையும், நட்சத்திரத்தை வணங்குவதையும் கூட்டாக செய்து வந்த சமூகம்) என்று கேட்டார்கள்.
ஆம் என்றேன், பின்பு நபிகளார் அதிய்யே! இந்த மக்களின் (முஸ்லிம்களின்) வறுமைதான் இந்த மார்க்கத்தில் உன்னை இணைப்பதற்கு தடையாக உள்ளதா?
ஒரு காலம் வரும்! இவர்களின் கரங்களில் செல்வம் கொழிக்கும்! ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள் அல்லது, இந்த மார்க்கத்தை ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவானதாகவும், எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த மார்க்கத்தில் இணைவதற்கு தடையாக உள்ளத?
ஒரு காலம் வரும்! ஒரு பெண் தன்னந்தனியே காதிஸிய்யாவிலிருந்து தன்னுடைய வாகனதில் புறப்பட்டு வந்து எவருடைய பயமும் இன்றி கஃபாவை வலம் வருவாள்.அல்லது, ஆட்சி அதிகாரம் முஸ்லிமல்லாதவர்களின் கரங்களில் இருப்பது தான் இந்த மார்க்கத்தில் இணைவதற்கு தடையாக உள்ளதா?
ஒரு காலம் வரும்! பாபிலின் வெள்ளை மாளிகையும், கோட்டை கொத்தளமும் வெற்றிக் கொள்ளப்படுவதை நீ காது குளிர கேள்விப்படுவாய்! என நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
உன்மையில் அவர் (முஹம்மத் (ஸல்)) நபி என்பதையும், அல்லாஹ்வின் துதர் தான் என்பதை நான் விளங்கிக்கொண்டேன். பின்பு நான் நபி (ஸல்) அவர்களின் கரம் பிடித்து தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என அதீஇப்னு ஹாதிம் (ரலி) கூறினார்கள்.
மேலும், என் வாழ்நாளில் நபிகளார் முன்னறிவிப்புச் செய்தவைகளில் மூன்றில் இரண்டை நான் பார்த்து விட்டேன்.
பாபில் வெற்றி கொள்ளப்பட்டதும் ஒரு பெண் தனியே கஃபாவை வலம் வந்ததும், முஸ்லிம்களின் செல்வம் கொழிப்பதை நான் பார்க்கவில்லை.நீங்கள் பார்ப்பீர்கள் என்று அதீ இப்னுஹாதிம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தஹ்தீப் - சீரத் இப்னு ஹிஷாம் பக்கம்: 272-274
அல்லாஹ்வின் துதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் நான்கு நபர்களை நேசிக்குமாறு எனக்கு கட்டளை பிறப்பித்தான்.மேலும், அல்லாஹ்வும் அவ்ர்களை நேப்பதாக என்னிடம் தெரிவித்தான் அவர்கள் இவர்கள் தான்”:
1.      அலீ (ரலி)  2.அபூதர் (ரலி)  3.மிக்தாத் (ரலிஸல்மான்ஃபார்ஸி (ரலி)

நூல்: அஹ்மத்: பாகம்: 5 பக்கம்: 351
அல்லாஹ் நேசிக்கச் சொல்ல கட்டளை பிறப்பிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் தான் ஸல்மான (ரலி)
அஹ்ஸாப் யுத்தத்தின் போது ஸல்மான்  (ரலி) வழங்கிய ஆலோசனையும், அல்லாஹ்வின் உதவியும் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.
மதாயின் மாகாணத்தின் கவர்னராக இருந்தபோது தூதுக்குழு ஒன்று ஸல்மான் கூடை பிண்ணிக்கொண்டிருந்தார். நீங்கள் இம் மாகாணத்தின் கவர்னர் ஆயிற்றே அரசுக்கருவூலத்திலிருந்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாமே என வந்தவர்கள் கேட்டபோது
கையால் உழைத்து அதிலிருந்து பெரும் ஊதியத்தில் என் வாழ் நாள் கழியவே நான் விரும்புகின்றேன்என்றார்கள்.
மேலும் யாரிடமும் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள், ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் 5000 தீனாரை அவரிடம் கொடுத்தாலும் கொடுத்தவர் அந்த இடத்தை விட்டு வெளியேறும் முன் அவை அனைத்தையும் ஸத்கா -தர்மம் செய்துவிடுவார்.
மிகவும் எளிமையாக வாழ்ந்து கொண்டிருந்த ஸல்மான் (ரலி) தனக்கென வீடு கூட கட்டியிருக்கவில்லை மரத்தின் கீழோ சுவரின் ஒரத்திலோ தங்கிக்கொள்வார்அவரின் நண்பர் ஒருவர் தொடர்ந்து வீடு ஒன்று கட்டிக்கொள்ளுமாறு வலியுறுத்தவே உம்முடைய விருப்பத்திற்காக வேண்டுமானால் ஒரு வீட்டை கட்டுகிறேன். ஆனால்வீட்டில் உள்ளே நுழைந்து நின்றால் தலை முகட்டில் தட்ட வேண்டும், கீழே படுத்து காலை நீட்டினால் கால் விரல்கள்சுவரில்முட்டவேண்டும்இந்த அமைப்பில் தான் என் வீடு அமைந்திருக்க வேண்டும். என்றார், அவரின் நண்பரும் அதை ஆமோதித்து அப்படியே வீட்டை கட்டினார்.
அறிவு ஞானத்தில் ஸல்மான் (ரலி) நம்மிடையே லுக்மான் (அலை)போன்றவர்கள் என அலீ (ரலி) கூறுவார்கள்.
உயர்பதவியில் இருந்த போதும் எளிமை,சொந்த உழைப்பில் தான் வாழவேண்டும் என்கிற நேர்மை இக்கட்டான தருணங்களில் ஆலோசனை தரும் புத்திகூர்மை, எல்லாவற்றிற்கும் மேலாக தம் நேசரையே நேசம் கொள்ளுமாறு கட்டளையிட்ட அல்லாஹ்வின் கட்டளைககு சொந்தக்காரர் ஸல்மான (ரலி) அவர்கள்
யார் இவர்?
பாரசீகத்தில் பெரும் தனவந்தரின் குடும்பத்தில் பிறந்தவர், நெருப்பை வணங்கும் ஆச்சாரமான குடுமபத்தில் பிறந்தவர், வளமாக வாழ எல்லா அம்சங்களையும் கொண்டவர், அவரின் இளமைப்பருவம், ஆன்மீகத்தில் அதிக நாட்டமும், இறைவன் யார் என்பதில் தேட்டமும் கொள்ளவைத்தது. உண்மை மார்க்கம் எது வென்பதை கண்டுபிடிப்பதில் அதிக முனைப்பும் காட்டினார்.ஆதலால், கிறுஸ்துவ, யூத பாதிரிமார்களுடன் நெருக்கத்தை எற்படுத்திக் கொண்டார்.அதிலும் குறிப்பாக ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன் அதிக நட்பும், மதிப்பும். கொண்டிருந்தார், அவர் தம் மரண தருவாயில் விரைவில் ஒரு நபி மக்காவில் தோன்றுவார் அவர் கொண்டுவரும் இஸ்லாமிய மார்க்கமே உண்மையானது என்று கூறியதோடு நபி (ஸல்) அவர்கள் குறித்த சில அடையாளங்களையும் சொல்லிவிட்டு இறந்துபோனார். மக்காவை தேடி புறப்பட்ட அவர் சிலரால் ஏமாற்றாப்பட்டு வாதில் குரா எனும் ஊரில், ஒருவரிடம் அடிமையாக்கப்பட்டார்
மனம் முழுவதும் சத்திய தீனின் மீதும், நபிகளாரின் வருகை குறித்துமே நிரம்பி இருந்தது. அவர் ஆசை அன்று நிறைவேறியது
தன் எஜமானின் சொந்தக்காரர் ஒருவர், தன் எஜமானிடம்  நபி (ஸல்) அவர்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்.
மனதினுள் எப்படியாவது முஹம்மத் (ஸல்) அவர்களை கண்டிரவேண்டும் என ஆவல் கொண்டார் ஸல்மான் (ரலி) அதற்கு அச்சாரம் போட்டது போல் இந்த அடிமையை எனக்கு விலைக்கு தந்துவிடு என்று விலைகொடுத்து வாங்கி கொண்டுவந்தான். ஸல்மான் (ரலி) அவர்களை மதீனாவுக்கு. பாரசீகத்தில் தொடங்கிய சத்தியத் தேடலுக்கான பயணம் ஒரு வழியாக மதீனாவை வந்தடைந்ததில் ஸல்மான் (ரலி) க்கு ஒருவகையில் சந்தோஷம் இதோ அருகில தான் மக்கா இன்னும் கொஞ்சம் நாளில்நபியை சந்தித்துவிடலாம். சமயம் பார்த்து காத்திருக்கையில் ஸல்மானின் காதில் தேனாய் வந்து விழுந்தது.இதோ கூப்பிடும் தூரத்திலிருக்கின்ற குபாவில் நபிகாளாரும் அவர் தம் அருமைதோழர்களும், வந்து தங்கியிருக்கிறார்கள் எனும் செய்தி.மறுநாளே சில பேரித்தம் பழங்களை எடுத்துக் கொண்டு குபா நோக்கி விரைந்தார் ஸல்மான்.
அங்கே ஓரிடத்தில் பாதிரி சொன்ன முக அடையாளங்களை கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது உங்களுக்கும், உங்களது தோழருக்கும் நான் தருகிற தர்மப் பொருள், கொஞ்ஜம் பேரீத்தம்பழம் உண்ணுங்கள் என்று நபிகளாரின் கையில் கொடுத்தார். ஸல்மானே! எனக்கு தர்மப் பொருள் ஆகுமானதல்ல என்று சொல்லிய நபி (ஸல்) தோழர்களிடம் கொடுத்துவிட்டார்கள்.
மறுநாளும் பேரீத்தம்பழத்தோடு வந்த ஸல்மான் நபியின் முன்வந்து இது உங்களுக்கும், உங்களது தோழருக்கும் நான் தருகிற அன்பளிப்பு என்றவராக நபிகளாரின் கையில் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள் தோழர்களையும் உண்ணச் சொன்னார்கள். பாதிரி சொன்ன முக அடையாளமும், ஸதகாவை உண்ணமாட்டார் என்ற அடையாளமும், ஒத்துப் போக மூன்றாம் அடையாளத்தைக் காண நபிகளாரின் முதுகுப்பக்கம் எங்கெல்லாம் திரும்பியதோ அங்கெல்லாம் நின்றார். ஸல்மானின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலாடையை விலக்கி நுபவ்வத் தொளிரும் முத்திரையை ஸல்மான் காணும் படிச்செய்தார்கள். நபித்துவ முத்திரையை கண்ட ஸல்மான் முத்தமிட்டு மகிழ்ச்சி பொங்க சத்திய தீனுல் இஸ்லாத்தை தம் வாழ்வில் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் ஸல்மான் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரல்) அவர்களின் சன் மார்க்க தேடலை கேட்டு தெரிந்தபின் இப்படிச் சென்னார்கள்.இந்த தீன் விண்வெளியில் இருந்திருந்தாலும் அங்குவந்தும் இந்த தீனை ஏற்றுக்கொண்டிருப்பார் ஸல்மான் (ரலி).
நூல்: முஸ்லிம்
பின்பு நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் சில ஈட்டை கொடுத்து ஸல்மானின் அடிமைச் சங்கிலியை உடைத்த்றிந்தனர்.
அதன்பின்னர் நபி (ஸல்) அவர்கள் அபுத் தர்தா (ரலி) அவர்களுடன் ஸல்மானுக்கு சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.
ஸல்மான் (ரலி) அவர்கள் கூறுவார்களாம்; உண்மை மார்க்கத்தை அடைய வேண்டும் என்ற தேடலில் 10க்கும் மேற்பட்ட இறைவனை எனக்கு காட்டிவிட்டார்கள்.இறுதியாக, நபி (ஸல்) அவர்கள் தான் ஏக இறைவனின் மார்க்கமாகிய இஸ்லாத்தைக் கொண்டு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
நூல்: இஸ்தீ ஆப்: பாகம்: 1 பக்கம்: 355-358
முஸைலமத்துல் கத்தாப் தன்னை நபியென வாதிட்டு யமாமாவில் பெரும் குழப்பம் ஏற்படுத்திய பெரும்பாலானவர்களை முஸைலமாவில் பின்னால் மதம் மாறிச் சென்றுவிட்டனர்.ஸூமாமாகொன்றுவிட வேண்டுமென்றால் நன்றியளானாய் நானிருப்பேன், பொருள் வேண்டுமென்றால் நீங்கள் நாடியதை கேளுங்கள் நான் தருகிறேன்என்பார்கள்.
இப்படியே மூன்றுமறை உரையாடல் நடந்தது.
மூன்றாம் உரையாடலின் முடிவில், எழுந்து சென்று, குளித்துவிட்டு வந்த ஸூமாமா சத்திய தீனுல் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்கள்.
பின்பு நபி (ஸல்) அவர்களிடத்தில்...
என்னை இங்கு கொண்டுவரபட்ட நாளிலிருந்து
இப்பூபியில் பிடிக்காத முகம் உங்களது முகம் மட்டுமே!
இப்பூமியில் பிடிக்காத தீன் தீனுல் இஸ்லாம் மட்டுமே!
இப்பூமியில் பிடிக்காத ஊர் இந்த மதீனா மட்டுமே~
என்று கருதினேன்! ஆனால்,
அல்லாஹ்வின் தூதரே! இப்போதோ,
எனக்கு பிடித்த முகமாக உங்களது முகத்தையும்,
நான் நேசிக்கும் மார்க்கமாக இஸ்லாத்தையும்,
எனக்கு வாழப்பிடிக்கும் தேசமாக மதீனாவையும் நான் கருதுகிறேன் என்றார்.
நூல்: இஸ்தீ ஆப்: பாகம்: 1 பக்கம்: 126-127
இன்னும் ஏராளம், ஏராளம் ஏடுகள் எங்கும் நிரம்பிக் காணக் கிடைக்கிறது.
வாளுருவிக்கொண்டு வள்ளல் நபியின் தலையை கொய்து வரக்கிளம்பிய உமர் (ரலி) அவர்களின் பிரவேசம்! உலகமே பொய்படுத்திய போது தோளோடு தோள் நின்று உண்மைப்படுத்திய ஸீத்தீக்குல் அக்பர் அபூபக்கர் (ரலி) அவர்களின் பிரவேசம்! படைகள் பல திரட்டி இஸ்லாத்தை உருத்தெரியாமல் அழித்திட புறப்பட்ட தளபதி அபூ சுஃப்யான் (ரலி) அவர்களின் பிரவேசம்! என அனைவரின் உள்ளத்தையும் இஸ்லாம் கழுத்தில் வாளை வைத்துக்கொண்டு வென்றெடுக்கவில்லை.
வாகாய் ஒளிரும் இஸ்லாமிய சரித்திரத்தை ஒருமுறையெனும் திறந்த மனதோடு படித்துப்பாருங்கள்.குறை மதியாளர்களின் குருட்டு விமர்சனங்களுக்கு நிறை மார்க்கம் இஸ்லாத்தின் எழுச்சி தரும் சான்றுகளையும், ஆதாரங்களையும் சத்தியமென உரைப்பீர்கள்.பின்பென்ன நீங்களும் இஸ்லாம் வென்றெடுத்தவர்களின் வரலாற்றில் ஒளிரத்தெடங்கிவிடுவீர்கள்.
உங்களையும் அறியாமல் உங்களின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றெடுக்கும்! உங்கள் உதடுகள் இப்படி உதிர்க்கும்! இஸ்லாம இகமெங்கும் பரவியது இப்படியன்றோ!!
வஸ்ஸலாம்





            

No comments:

Post a Comment