Tuesday 26 August 2014

மன்னிப்போம்! மறப்பதற்காக

                 மன்னிப்போம்! மறப்பதற்காக



  

FORGIVE TO FORGET ஆங்கிலத்தில் இப்படிச் சொல்வார்கள்: “மன்னிப்போம்! மறப்பதற்காக

இன்றைய மனித சமூகத்தில் மிகவும் அரிதாகிப் போன நற்பண்புகளில் மன்னிக்கும் மனோபாவமும் ஒன்று.

ஒரு மனிதனை சமுதாயத்தின் முன்னே மிக உயர்ந்தவனாய் அடையாளப் படுத்துகின்ற ஓர் ஒப்பற்ற பண்பாடு இருக்குமேயானால் அது பழிவாங்குவதற்கு எல்லா வகையிலும் வழியும், சக்தியும் இருந்து பெருந்தன்மையோடு மன்னித்து விடும் அந்தப் பண்பு தான்.

குடும்ப உறவுகளில் காணப்படும் விரிசல், அண்டை அயலருடனான நெருக்கத்தில் பிளவு, சமூக மக்களுடனான பழக்க வழக்கங்களில் நெருடல், இரத்த உறவுகளில் ஏற்படும் இழப்பு, நட்பு வட்டாரத்தில் உருவாகும் பிணக்கு, பொது வாழ்வில் ஏற்படும் சரிவு என, மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் அடிப்படை அம்சமாக இருப்பது, அவனிடம் இல்லாமல் போன மன்னிக்கும் மனப்பக்குவம் தான்.

எப்போது மனிதன் இந்த உயரிய பண்பாட்டை இழந்து விடுகின்றானோ, அப்போதே அவன் வாழ்வின் பெரும்பாலான நல்லவர்களையும், நலவுகளையும் இழந்து விடுவான்.

وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (22)

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களிடையே பண்பு நலன்களும், வசதி வாய்ப்புகளும் உடையவர்கள், “தங்களுடைய உறவினர்கள், வறியவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்கு உதவிகள் செய்ய மாட்டோம்என்று சத்தியம் செய்ய வேண்டாம்.

அவர்களை மன்னித்து விட வேண்டும்; பொறுத்துக் கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா? மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.”

وهذه الآية نزلت في الصدِّيق، حين حلف ألا ينفع مِسْطَح بن أثاثة بنافعة بعدما قال في عائشة ما قال، كما تقدم في الحديث. فلما أنزل الله براءةَ أم المؤمنين عائشة، وطابت النفوس المؤمنة واستقرت، وتاب الله على مَن كان تكلم من المؤمنين في ذلك، وأقيم الحد على مَن أقيم عليه  -شَرَع تبارك وتعالى، وله الفضل والمنة، يعطفُ الصدِّيق على قريبه ونسيبه، وهو مِسْطَح بن أثاثة، فإنه كان ابن خالة الصديق، وكان مسكينًا لا مال له إلا ما ينفق عليه أبو بكر، رضي الله عنه، وكان من المهاجرين في سبيل الله، وقد وَلَق وَلْقَة تاب الله عليه منها، وضُرب الحد عليها. وكان الصديق، رضي الله عنه، معروفًا بالمعروف، له الفضل والأيادي على الأقارب والأجانب. فلما نزلت هذه الآية إلى قوله: { أَلا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ } أي: فإن الجزاء من جنس العمل، فكما تغفر  عن المذنب إليك نغفر  لك، وكما تصفح نصفح  عنك. فعند ذلك قال الصديق: بلى، والله إنا نحب -يا ربنا -أن تغفر لنا. ثم رَجَع إلى مسطح ما كان يصله من النفقة، وقال: والله لا أنزعها منه أبدًا، في مقابلة ما كان قال: والله لا  أنفعه بنافعة أبدًا، فلهذا كان الصدّيق هو الصديق [رضي الله عنه وعن بنته].

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது வீசப்பட்ட அவதூறான குற்றச்சாட்டை அள்ளி வீசியவர்களில் அப்பாவியான சில முஸ்லிம்களும் ஈடுபட்டிருந்தனர். மேலும், அதனைத் தாமும் பரப்பிக் கொண்டுமிருந்தனர்.

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான மிஸ்தஹ் இப்னு உஸாஸா (ரலி) அவர்களும் இந்த விவகாரத்தில் பங்கு கொண்டவர்களில் ஒருவர்.

மிஸ்தஹ் இப்னு உஸாஸா (ரலி) அவர்கள் மிகவும் ஏழ்மையானவர். அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் மிஸ்தஹ் (ரலி) அவர்களின் குடும்ப செலவினங்களுக்கு பணம் கொடுத்து வந்தார்கள்.

இதை அறிந்து கொண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி மேல் நான் மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு உதவி, உபகாரம் செய்ய மாட்டேன்!” என்று கூறினார்கள்.

உடனடியாக, மிஸ்தஹ் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டார்கள்.

அல்லாஹ் இது குறித்து உடனடியாக மேற்கூறிய இறைவசனத்தை இறக்கியருளினான்.

இந்த இறைவசனம் இறக்கப்பட்டதும் அண்ணலாரின் திருச்சபைக்கு ஓடோடி வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! உன் மன்னிப்பை நான் விரும்புகின்றேன்! அவரின் மீதான வெறுப்பை அகற்றி, அவரை நான் மன்னித்து விட்டேன்.”

உடனடியாக, மிஸ்தஹை அழைத்துச் சொன்னார்களாம்இனி ஒரு போதும் நான் உனக்கு வழங்கி வந்த செலவினங்களை நிறுத்த மாட்டேன்என்று.

                                       ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

மன்னிக்கும் மனோபாவம் பெற்றிருப்பவருக்கு அல்லாஹ் பல்வேறு வகையான நற்பேறுகளை வழங்கி கௌரவிக்கின்றான்.

1.இறையச்சம் உள்ளவராக அல்லாஹ் ஆக்குகின்றான்.

{ وَأَن تَعْفُواْ أَقْرَبُ لِلتَّقْوَى وَلاَ تَنسَوُاْ الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ } [ البقرة237 ] .


அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், நீங்கள் மன்னித்து (விட்டுக் கொடுத்து) வாழ்வது தான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். மேலும், நீங்கள் உங்களுக்கிடையில் தயாள குணத்துடன் நடந்து கொள்ள மறந்து விட வேண்டாம்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.”

                                            ( அல்குர்ஆன்: 2:237 )

2.சொர்க்கத்திற்குரியவர்களாக ஆக்குகின்றான்.

{ وَسَارِعُواْ إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ * الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاء وَالضَّرَّاء وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ } [ آل عمران 133-134 ] .

அல்லாஹ் கூறுகின்றான்: “இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் ( செல்லும் பாதையில் ) விரைந்து செல்லுங்கள்! அது வானங்கள், பூமியின் அளவிற்கு விசாலமானது.

மேலும், இறையச்சமுடையோருக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எத்தகையோர்கள் எனில், வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும், அவர்கள் ரோஷத்தை அடக்கிக் கொள்வார்கள்.

மேலும், மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர் பண்பு கொண்டிருப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.

3.கண்ணியம் உள்ளவர்களாக வாழச் செய்கின்றான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه ، قال الله تعالى : عَنْ رَسُولِ اللّهِ صلى الله عليه وسلم قَالَ : " مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ ، وَمَا زَادَ اللّهُ عَبْداً بِعَفْوٍ إِلاَّ عِزًّا ، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلّهِ إِلاَّ رَفَعَهُ اللّهُ " [ أخرجه مسلم ] .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “தர்மம் செய்பவரின் பொருளில் அல்லாஹ் ஒரு போதும் குறைவை ஏற்படுத்துவதில்லை. பிறரின் குற்றங்களை மன்னித்து வாழ்பவரை அதிக கண்ணியத்தோடே தவிர வாழ வைக்காமல்  இருப்பதில்லை. பணிவோடு நடப்பவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.”

                ( நூல்: முஸ்லிம், அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) )

4.அளப் பெரும் கூலி வழங்கி கௌரவப்படுத்துகின்றான்.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

அல்லாஹ் கூறுகின்றான்: “தீமைக்கு அது போன்ற தீமை தான் கூலியாகும். எனினும் எவர் மன்னித்து, சீர்படுத்திக் கொள்கின்றாரோ அவருக்கு கூலி வழங்குவது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. திண்ணமாக, அல்லாஹ் அநியாயம் செய்பவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.”

பெரும்பாலான இடங்களில் அல்லாஹ் மன்னிக்கும் மனோபாவத்தை குறிக்கஅல் அஃப்வு” - العفو  என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான்.
அத்தோடு மாத்திரமல்லாமல்அஸ் - ஸஃப்ஹ்الصّفح என்ற வார்த்தையையும் இணைத்தே கூறுவான்.

الفرق بين العفو والصفح :
العفو والصفح متقاربان في المعنى فيقال :
صفحت عنه : أعرضت عن ذنبه وعن تثريبه ، كما يقال : عفوت عنه .
إلا أن الصفح أبلغ من العفو فقد يعفو الإنسان ولا يصفح .
فالصفح ترك المؤاخذة ، وتصفية القلب ظاهراً وباطناً ،

இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட நெருக்கமான ஒரே பொருளைக் கொடுத்தாலும் சற்று வித்தியாசம் இருக்கின்றது. அஃப்வை விட ஸஃப்ஹ் மிகவும் உயர்வானது என அல் ஹிஜ்ர் அத்தியாயத்தின் 89 –ஆம் வசனத்தின் விளக்கத்தில் அறிஞர் பெருமக்கள் விளக்கம் தருகின்றார்கள்.

والعفو : هو التجاوُزُ عن الذنب وتَرْك العِقاب عليه ، وأَصله المَحْوُ والطمْس ، مأْخوذ من قولهم عَفَت الرياحُ الآثارَ إِذا دَرَسَتْها ومَحَتْها ، وكل من اسْتَحقَّ عندك عُقوبة فتَرَكتَها فقد عَفَوْتَ عنه ،

அஃப்வு என்றால் தண்டிக்கும் படியான ஒரு தவறைச் செய்கின்றவனை மன்னித்து அவனை தண்டிக்காமல் விட்டு விடுவதாகும்.

மன்னிப்பதன் எல்லை.

وعند أبي داود وصححه الألباني من حديث عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو رضي الله عنه قال : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ : يَا رَسُولَ اللهِ كَمْ نَعْفُو عَنِ الْخَادِمِ ؟ فَصَمَتَ ، ثُمَّ أَعَادَ عَلَيْهِ الْكَلاَمَ ، فَصَمَتَ ، فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ قَالَ : " اعْفُوا عَنْهُ فِي كُل يَوْمٍ سَبْعِينَ مَرَّة " [ أخرجه أبو داود وصححه الألباني ]

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்துஅல்லாஹ்வின் தூதரே! நம்மிடம் வேலை செய்யும் ஒரு பணியாளனை எத்தனை முறை மன்னித்து விட வேண்டும்? அவன் செய்யும் பிழைகளுக்காக.. என்று கேட்டார்.

நபிகளார் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். நபிகளாரின் மௌனம் நீடித்தது. மூன்றாவது முறையாகக் கேட்ட போது தினமும் எழுபது முறை மன்னிப்பதற்கு அனுமதி இருக்கின்றதுஎன்று பதில் கூறினார்கள்.

                  ( நூல்: அபூதாவூத், ஜாமிவுஸ் ஸஹீஹ் லில் அல்பானீ )

முன்னோர்களான மேன்மக்கள் மன்னித்து பெருந்தன்மையோடு நடப்பதையே விரும்பினார்கள்.

قال الحسن بنُ علي رضي الله تعالى عنهما : " لو أنَّ رجلاً شتَمني في أذني هذه ، واعتذر في أُذني الأخرَى ، لقبِلتُ عذرَه "

ஹஸன் இப்னு அலீ (ரலி) அவர்கள் சொல்வார்கள்: “என்னுடைய ஒரு காதின் அருகே வந்து ஒருவன் என்னை ஏசிப் பேசுகின்றான். அவனே மற்றொரு காதின் அருகே வந்து அது தவறென்றான் எனில் அவனுடைய அந்த ஒப்புதலை ஏற்று நான் அவனை மன்னித்து விடுவேன்.

وقال الفضيل بنُ عياض رحمه الله : " إذا أتاك رجلٌ يشكو إليك رجلاً فقل : يا أخي ، اعفُ عنه ؛ فإنَّ العفو أقرب للتقوى ، فإن قال : لا يحتمِل قلبي العفوَ ، ولكن أنتصر كما أمرَني الله عزّ وجلّ فقل له : إن كنتَ تحسِن أن تنتَصِر ، وإلاّ فارجع إلى بابِ العفو ؛ فإنّه باب واسع ، فإنه من عفَا وأصلحَ فأجره على الله ، وصاحِبُ العفو ينام علَى فراشه باللّيل ، وصاحب الانتصار يقلِّب الأمور ؛ لأنّ الفُتُوَّة هي العفوُ عن الإخوان " . [ أدب المجالسة لابن عبد البر 116 ]

ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “தோழனே! ஒரு மனிதர் உன்னிடம் வந்து இன்னொரு மனிதர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்என்று முறையிட்டால், முறையிடும் அந்த மனிதரிடம்சகோதரனே! தவறாக நடந்து கொண்ட அவரை நீ மன்னித்து விடு! ஏனெனில் அது தான் இறையச்சத்திற்கு நெருக்கமான செயல்என்று சொல்லி விடு.

அவர்மன்னிக்க எனக்கு மனம் வர வில்லை, கண்டிப்பாக நான் அவரை பழி வாங்குவேன் அல்லாஹ் எனக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கின்றான்என்று உன்னிடம் சொல்வாரேயானால்,

அவரிடம்உன்னால் அவர் உன்னிடம் நடந்து கொண்ட அதே முறையில் நடந்து கொள்ள முடியுமானால் நீ பழி வாங்கு. அப்படி உன்னால் முடியாது போனால் அவரை நீ மன்னித்து விடு! மன்னிக்கும் மனப்பான்மை என்பது விசாலமான வாசல் போன்றது.

அல்லாஹ் அப்படி மன்னித்து விடுபவர்களுக்கு அளவிட முடியாத பேறுகளை வழங்கி கௌரவிக்கின்றான்.

மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனால் மட்டுமே இரவில் நிம்மதியாக தூங்க முடியும். பழி வாங்கும் எண்ணம் கொண்டவனால் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது.

உண்மையில் வீரன் - ஆண்மகன் என்பவன் தன் சகோதரனின் தவறை மன்னிப்பவனே! என்று கூறி விடு!”

                    ( நூல்: அதபுல் மஜாலிஸா லி இப்னி அப்துல் பர் (ரஹ்) )

உலகில் நடைபெறுகிற எல்லா வகையான குழப்பங்களுக்கும், கலகங்களுக்கும் ஆணிவேராக இருப்பது பழிவாங்க வேண்டும் என்கிற உணர்ச்சியால் மனிதன் உந்தப் படுவது தான்.

யாராவது அடித்து விட்டால் அதற்கு பகரமாக பல முறை அவனை அடிக்காமல் மனம் நிம்மதி பெறுவதில்லை.

எவராவது ஏசி விட்டால் அவனையும் அவன் குடும்பத்தையும் ஏசிப் பேசாமல் மனம் குளிர்வதில்லை.

யாராவது தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தி விட்டால் என்ன விலை கொடுத்தாவது அவனுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் உறக்கம் வருவதில்லை.

அதனால் தான் பெருமானார் {ஸல்} அவர்கள்மன்னிப்பதால் அல்லாஹ், கண்ணியத்தோடே வாழச் செய்கிறான்என்று கூறினார்கள்.

ஆனால், மனிதனோசமூகம் தம்மை கோழை என்று சொல்லி விடும். ஆண்மையற்றவன் என்று கூறி விடும்என்று நினைத்துக் கொள்கின்றான்.

மாறாக, மன்னித்து விடுவதால் மதிப்பு உயர்கிறது. யாரை மன்னித்து விட்டானோ அவனது உள்ளத்திலும் இவனைப் பற்றியுண்டான மதிப்பு மென்மேலும் உயர்கிறது.

வரலாற்றில் வாகாய் பல்வேறு நிகழ்ச்சிகள் நாம் சிந்திப்பதற்கும், செயலாற்றுவதற்கும் குவிந்து கிடக்கின்றன. ஒரு சிலவற்றை இங்கு நாம் காண்போம்.

அண்ணல் நபிகளார் வாழ்விலிருந்து…..

سُئِلَت عائشة رضي الله عنها عن خلُق رسولِ الله صلى الله عليه وسلم فقالت : " لم يكن فاحِشًا ولا متفحِّشًا ولا صخَّابًا في الأسواق ، ولا يجزِي بالسيِّئة السيئة ، ولكن يعفو ويصفح " [ أخرجه أحمد والترمذي وقال : حديث حسن صحيح وأصله في الصحيحين ] .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், ”மாநபி {ஸல்} அவர்களின் குண நலன்கள் எவ்வாறு இருந்தது?” என்று கேட்கப்பட்டது.

அண்ணல் நபிகளார் அருவருப்பான பேச்சுக்களை பேசுபவர்களாகவோ, பேசத் தூண்டுபவர்களாகவோ, வீதியில் நின்று உரத்தக் குரலில் பேசக் கூடியவர்களாகவோ, தீங்கு செய்பவர்களுக்கு பதிலுக்கு தீங்கு செய்பவர்களாகவோ ஒரு போதும் இருந்ததில்லை. மாறாக, “அதிகம் மன்னிக்கக் கூடியவர்களாகவும், பொறுத்துக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.”

                                          ( நூல்: அஹ்மத், திர்மிதீ )


عن أبي هريرة قال: كان إسلام ثمامة بن أثال الحنفي أن رسول الله صلى الله عليه وسلم دعا الله حين عرض لرسول الله صلى الله عليه وسلم بما عرض أن يمكنه منه، وكان عرض لرسول الله وهو مشرك، فأراد قتله فأقبل ثمامة معتمراً وهو على شركه حتى دخل المدينة، فتحير فيها، حتى أخذ، فأتى به رسول الله صلى الله عليه وسلم فأمر به فربط إلى عمود من عمد المسجد، فخرج رسول الله صلى الله عليه وسلم عليه، فقال: " ما لك يا ثمام هل أمكن الله منك " ؟ فقال: قد كان ذلك يا محمد، إن تقتل تقتل ذا دم، وإن تعف تعف عن شاكر، وإن تسأل مالاً تعطه، فمضى رسول الله صلى الله عليه وسلم وتركه، حتى إذا كان من الغد مر به، فقال: " ما لك يا ثمام " ؟ قال: خير يا محمد؛ إن تقتل تقتل ذا دم، وإن تعف تعف عن شاكر. وإن تسألا مالاً تعطه، ثم انصرف رسول الله صلى الله عليه وسلم، قال أبو هريرة: فجعلنا، المساكين. نقول بيننا: ما نصنع بدم ثمامة؟ والله لأكلة من جزور سمينة من فدائه أحب إلينا من دم ثمامة، فلما كان من الغد مر به رسول الله صلى الله عليه وسلم فقال: " ما لك يا ثمام " ؟ قال: خير يا محمد، إن تقتل تقتل ذا دم، وإن تعف تعف عن شاكر، وإن تسأل مالاً تعطه، فقال رسول الله صلى الله عليه وسلم: " أطلقوه قد عفوت عنك يا ثمام " .
فخرج ثمامة حتى أتى حائطاً من حيطان المدينة، فاغتسل فهي وتطهر، وطهر ثيابه ثم جاء إلى رسول الله صلى الله عليه وسلم وهو جالس في المسجد فقال: يا محمد، لقد كنت وما وجه أبغض إلي من وجهك، ولا دين أبغض إلي من دينك، ولا بلد أبغض إلي من بلدك، ثم لقد أصبحت وما وجه أحب إلي من وجهك، ولا دين أحب إلي من دينك، ولا بلد أحب إلي من بلدك؛ وإني أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً عبده ورسوله، يا رسول الله، إني كنت خرجت معتمراً، وأنا على دين قومي، فأسرني أصحابك في عمرتي؛ فسيرني، صلى الله عليك، في عمرتي، فسيره رسول الله صلى الله عليه وسلم في عمرته، وعلمه، فخرج معتمراً، فلما قدم مكة، وسمعته قريش يتكلم بأمر محمد، قالوا: صبأ ثمامة، فقال: والله ما صبوت ولكنني أسلمت وصدقت محمداً وآمنت به، والذي نفس ثمامة بيده لا تأتيكم حبة من اليمامة، وكانت ريف أهل مكة، حتى يأذن فيها رسول الله صلى الله عليه وسلم وانصرف إلى بلده، ومنع الحمل إلى مكة، فجهدت قريش، فكتبوا إلى رسول الله صلى الله عليه وسلم يسألونه بأرحامهم، إلا كتب إلى ثمامة يخلي لهم حمل الطعام؛ ففعل ذلك رسول الله.
ولما ظهر مسيلمة وقوي أمره، أرسل رسول الله صلى الله عليه وسلم فرات بن حيان العجلي إلى ثمامة في قتال مسيلمة وقتله.

யமாமா தேசத்தைச் சார்ந்த ஸுமாமா என்பவரை கைதியாகப் பிடித்து மஸ்ஜிதுன் நபவீயின் தூணில் கட்டப்பட்டிருந்தது.

ஸுமாமாவை அண்ணலார் கடந்து செல்கிற போதுஉம்முடைய முடிவு தான் என்ன? உம் உள்ளத்தில் என்ன நினைத்திருக்கின்றீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஸுமாமா மிகத் தெளிவாகவே இப்படிக் கூறினார்: “நீங்கள் என்னைக் கொன்றால், கொல்லப்படுவதற்கு முழுத் தகுதி வாய்ந்த ஒருவனையே கொன்றவராவீர்கள். ஏனெனில், உங்களிடம் கைதியாக நான் பிடிக்கப் பட்டிருக்கின்றேன்.

மேலும், உங்களின் எதிரணியில் நான் இருக்கின்றேன். என்னை நீங்கள் மன்னித்து விட்டு விட்டீர்கள் என்றால் அது உங்களின் தகுதிக்கு மகுடம் போன்றது. அதற்குப் பிரதிபலனாக என்னை நன்றியுள்ளவனாக நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் என்னை விடுவிக்க என் பொருளாதாரத்தைக் கேட்டாலும் அதையும் நான் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.”

மூன்று நாட்களாக நபிகளாரின் இதே கேள்விக்கு, தினமும் இப்படியே பதில் கூறினார் ஸுமாமா இப்னு அஸால் அவர்கள்.

நான்காவது நாளில் அவரை விடுதலை செய்திடுமாறு அண்ணலார் உத்தரவிட்டார்கள். விடுதலையாகிச் சென்ற அவர் மதீனாவின் ஒரு கிணற்றுப் பகுதிக்குச் சென்று குளித்து, புத்தாடை அணிந்து அண்ணலாரின் அவைக்கு வந்து..

முஹம்மத் அவர்களே! சற்று முன்பு வரை இந்த உலகத்தில் எனக்கு பிடிக்காத முகம் ஒன்று உண்டென்றால் அது உங்களின் முகமாகத்தான் இருந்தது.

பிடிக்காத ஊர் ஒன்று உண்டென்றால் அது நீங்கள் வசிக்கும் இந்த ஊராகத்தான் இருந்தது.

மிகவும் பிடிக்காத ஒரு மார்க்கம் உண்டென்றால் அது நீங்கள் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கமாகத்தான் இருந்தது.

ஆனால், நீங்கள் என்னிடம் காட்டிய பரிவை அனுபவித்த பின்னால், என்னிடம் நடந்து கொண்ட நடைமுறையை உணர்ந்த பின்னால்

உங்களின் முகமும், நீங்கள் வசிக்கும் இந்த ஊரும், உங்களின் மார்க்கம் இஸ்லாமும் உயர்வாய், எனக்கு மிகவும் விருப்பமாய் மாறிப் போனது.

தங்களின் கரங்களைக் கொடுங்கள்! இதோ, ஷஹாதா கூறுகின்றேன்என்று கூறி முஸ்லிம் ஆனார்கள்.

அடுத்து அவர் இப்படிக் கூறினார்: “அல்லாஹ்வின் தூதரே! நான் என்னுடைய தீனின் பிரகாரம் உம்ராச் செய்யவே மக்கா வந்தேன். உங்களின் தோழர்கள் என்னைக் கைது செய்து இங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

இப்போதோ நான் சத்திய தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன். தீனுல் இஸ்லாத்தின் படி உம்ராச் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தாருங்கள்.”

அண்ணல் நபிகளார் உம்ராச் செய்ய கற்றுக் கொடுத்தார்கள். பின்னர் அங்கிருந்து ஸுமாமா (ரலி) அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

யமாமாவில் முஸைலமாவின் போலி நபித்துவப் பிரச்சாரம் முளைத்து வேர் விட்டு படர்ந்த போது, பெரும்பாலனவர்கள் முஸைலமாவோடு சேர்ந்து விட்டாலும் ஸுமாமா (ரலி) அவர்களும், அவர்களின் குடும்பத்தார்களும் சத்திய தீனில் நிலைத்து நின்றதோடு மாத்திரமல்லாமல் துணிந்து நின்று எதிர்த்தார்கள்.

                                                ( நூல்: உஸ்துல் ஃகாபா )

அண்ணலாரின் மன்னிக்கும் மனோபாவம் எத்தகைய மாமனிதரை உருவாக்கியது!?”

அண்ணலாரின் இது போன்ற மன்னிப்பால் இக்ரிமா (ரலி), வஹ்ஷீ (ரலி), ஹிந்தா (ரலி) அபூ சுஃப்யான் (ரலி) போன்ற மாணிக்கங்கள் கிடைக்கப் பெற்றார்கள்.


ولما أسلم كان المسلمون يقولون: هذا ابن عدو الله أبي جهل! فساءه ذلك، فشكى إلى رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم لأصحابه: " لا تسبوا أباه، فإن سب الميت يؤذي الحي " .
ونهاهم أن يقولوا: عكرمة بن أبي جهل. اللهم صل على محمد، وعلى آل محمد، فما أحسن هذا الخلق وأعظمه وأشرفه.
ولما أسلم عكرمة قال: يا رسول الله، لا أدع مالاً أنفقت عليك إلا أنفقت في سبيل الله مثله.

மன்னிப்பு வழங்கப் பெற்ற இக்ரிமா (ரலி) அவர்கள் நபிகளாரின் சபைக்கு வருகை தந்த போது, ”அல்லாஹ்வின் தூதரே! எப்படி நான் இந்த மார்க்கத்திற்கு எதிராக என்னுடைய பொருளாதாரத்தை செலவழித்தேனோ, அதை விடப் பன் மடங்கு இந்த மார்க்கத்திற்காக நான் என் பொருளாதாரத்தை செலவு செய்வேன்என்று உற்சாகத்துடன் கூறினார்.

                                 ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம். )

ஹிஜ்ரத்திற்கு முன்னால் கஅபாவிலே தொழ வேண்டும் என்ற ஆசையிலே மாநபி {ஸல்} அவர்கள், அன்றைக்கு கஅபாவின் திறவுகோலை வைத்திருந்த உஸ்மான் இப்னு தல்ஹாவை அழைத்து தன் ஆவலை வெளிப்படுத்தி, கஅபாவைத் தமக்காக திறக்குமாறு கேட்டார்கள்.

ஆனால், உஸ்மான் இப்னு தல்ஹாவோ அதற்கு மறுத்து விட்டார். அதற்கு, அண்ணலார் {ஸல்} அவர்கள்நல்லது! நீர் நம்மை உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுத்து விட்டீர்! இன்ஷா அல்லாஹ்இதே சாவி ஒரு காலத்தில் நம்முடைய கைக்கு வரும்! அப்போது நாம் யாரிடம் இந்த சாவியைத் தருகின்றோமோ அவரின் கையிலேயே என்றென்றும் இருக்கும்என்று கூறினார்கள்.

وأخرج ابن جرير ، وَابن المنذر عن ابن جريج في قوله {إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها} قال : نزلت في عثمان بن طلحة قبض منه النَّبِيّ صلى الله عليه وسلم مفتاح الكعبة ودخل به البيت يوم الفتح فخرج وهو يتلو هذه الآية فدعا عثمان فدفع
إليه المفتاح قال : وقال عمر بن الخطاب : لما خرج رسول الله صلى الله عليه وسلم من الكعبة وهو يتلو هذه الآية - فداؤه

அந்த நாளும் வந்தது. ஆம்! ஃபத்ஹ் மக்கா, இப்போது அண்ணலாரின் கரங்களிலே கஅபாவின் திறவுகோல், அலீ (ரலி) அவர்கள் இன்னொரு அறிவிப்பில் அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்களிடம் அந்தப் பொறுப்பைத் தருமாறு வேண்டி நின்ற போது எங்கே உஸ்மான் இப்னு தல்ஹா?” என்றழைத்து (அப்போது அவர்கள் முஸ்லிமாகி விட்டிருந்தார்கள்.)

 அவர்களின் கையில் கஅபாவின் திறவுகோலைத் திணித்து இது பாரம்பர்யமாக உம் குடும்பத்தார் வசமே இருக்கும்என்று கூறிவிட்டுதிண்ணமாக! அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அமானத்அடைக்கலப் பொருட்களை அவற்றிற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்என்ற இறை வசனத்தை ஓதினார்கள்.

                                  ( நூல்: தஃப்ஸீர் அத் துர்ருல் மன்ஸூர் )

தர மறுத்த போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? ஆனால், பழிவாங்க சக்தியும், வலிமையும், வழியும் இருந்து மன்னித்து விட்டார்களே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்!

அண்ணலாரின் அணுகுமுறையை வார்த்தையால் தான் வர்ணித்து விட முடியுமா?

ஏடுகளும் தாங்காது, எழுத்துக்களும் நிறைவுறாது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்தெழுதினால்….

எப்போது ஒரு மனிதன் மன்னிக்க மறுப்பான் என்றால் அவனிடம் கோப உணர்ச்சி மிகையாக காணப்படும் போதும், ரோஷம் அளவுக்கதிகமாய் அவனை ஆக்கிரமித்திருக்கின்ற போதும் தான்.

இந்த இரண்டு உணர்வுகளையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மிகவும் கட்டுப்பாடாக வைத்திருந்தார்கள்.

وعن عائشة رضي الله عنها قالت: «ما انتقم رسول الله صلى الله عليه وسلم لنفسه في شيء يؤتى إليه حتى يُنتهك من حرمات الله فينتقم لله»(4).
(4) صحيح البخاري، رقم 6853، ص1181.

மேலும், கட்டுப்பாடாக வைத்திருக்குமாறு தமது உம்மத்தினரான நமக்கும் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

وصدق رسول الله صلى الله عليه وسلم حين قال: «لا تغضب»، وحين قال عليه الصلاة والسلام: «ليس الشديد بالصرعة، إنما الشديد الذي يملك نفسه عند الغضب»، وصدق الله تعالى في بيانه العظيم صفات المتسابقين إلى الخيرات: ? وَالْكَاظِمِينَ الْغَيْظَ ?..

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்துவ வாழ்க்கையில் நாற்பது முறை மட்டுமே கோபப்பட்டிருக்கின்றார்கள். அதுவும் தனக்காக ஒரு போதும் கிடையாது. அல்லாஹ்விற்காகவும், சத்திய சன்மார்க்கத்திற்காகவும் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு ஆதாரப் பூர்வமான நபிமொழிகளின் துணையோடு நிரூபிக்க இயலும்.

(இன்ஷா அல்லாஹ்… எதிர் வரும் ரபீவுல் அவ்வலிலே “மாநபியை சினமுறச் செய்த அந்த நாற்பது தருணங்கள்!” எனும் தலைப்பில் விரிவாகக் காண்போம்.)

பொதுவாகவே, பிறரைப் புண்படுத்தும் படியாக நடந்து விட்டு அவர்களின் உணர்வுகளை ஊணப் படுத்தி விட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு நடையாய் நடக்கும் அந்தச் சூழ்நிலையை உருவாக்காமல் மிகக் கவனமாக வாழ்க்கைப் பாதையை அமைக்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது.


روى مُحَمَّد بن إسحاق عن نافع وزيد بن أسلم، عن ابن عُمر، وعن سعيد بن أبي المقبري، وابن المنكدر عن أبي هريرة، وعن عَمَّار بن ياسر، قالوا: قد قدمت دُرَّة بِنْت أبي لهب المدينة مهاجرةً، فنزلت في دار رافع بن المعلّي الزرقيّ، فقال لها نسوة جلسْنَ إليها من بني زريق: أنتِ ابِنة أبي لهب الذي يقول الله له: " تبّت يدا أبي لهب وتبّ " فما يغني عنكِ مهاجرتكِ؟ فأتت دُرَّة النَّبِيّ صلّى الله عليه وسلّم فذكرت له ما قلن لها فسكّنها وقال: " اجلسي " . ثم صلى بالناس الظهر، وجلس على المنبر ساعةً ثم قال: " أيها الناس، ما لي أُوذى في أهلي؟ فوالله إن شفاعتي لتنال بقرابتي حتى إن صُداءَ وحكماً وسلهماً لتنالها يوم القيامة وسِلْهَمُ في نسب اليمن " .

அண்ணல் நபிகளாரின் அவைக்கு அழுத வண்ணமாக ஓடோடி வருகின்றார் துர்ரா (ரலி) என்ற பெண்மணி.

மிகவும் ஆர்வத்தோடு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பெண்மணிகளில் அவரும் ஒருவர்.

ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணத்தின் பதிவேட்டில் இடம் பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

அந்தப் பெண்மணியின் அழுகையைப் பார்த்து அண்ணலாரின் திரு முகம் கூட மாறிப் போனது.

காரணம் கேட்கின்றார்கள் நபிகளார். அந்தப் பெண்மணி ”அன்ஸாரிப் பெண்மணிகளில் பனீ ஸரீக் குடும்பப் பெண்கள் தன்னை சுடு வார்த்தைகளால் காயப் படுத்தி விட்டதாக” அழுது கொண்டே கூறினார்கள்.

அவர்களின் கரம் பற்றிப் பிடித்து, ஆறுதல் கூறி அமர வைத்தார்கள். அப்போது ளுஹர் தொழுகைக்கான நேரமாக அது இருந்தது.

துர்ரா (ரலி) அவர்கள் வேறு யாருமல்ல. அண்ணலாரின் மிக நெருங்கிய உறவினரான அபூ லஹபின் மகள் தான்.

இப்போது நமக்கு புலப்பட்டிருக்கும் பனூ ஸரீக் பெண்மணிகள் எத்தகைய வார்த்தைகளால் துர்ரா (ரலி) அவர்களைக் காயப் படுத்தியிருப்பார்கள் என்று.

ஆம்! இப்படிச் சொன்னார்களாம்: “உமது தந்தை அபூலஹபின் கேட்டினாலும், அண்ணலாரின் மீது கொண்டிருந்த தீராத பகமையினாலும் அல்லாஹ் உமது தாயையும், தந்தையையும் சபித்து ஒரு சூராவையே தனது குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளான். நீ ஹிஜ்ரத் செய்து எந்த பலனையும் அடையப் போவதில்லை.” என்று.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ளுஹர் தொழுகைக்குப் பின்னர், மிம்பரின் மீதேறி “மக்களே! என் குடும்பத்தார்களின் விஷயத்தில் இப்படி இப்படியெல்லாம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் நோவினைப் படுத்தாதீர்கள்.” என்று கூறினார்கள்.

பின்னர், துர்ரா (ரலி) அவர்களை தமதருகே அழைத்து “எவர் உம்மை கோபப்படுத்துவாரோ, அவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுவான். நீ என்னைச் சார்ந்தவள். நான் உன்னைச் சார்ந்தவன்.” என்று கூறினார்கள்.

பின்னர், இது பற்றி அறிந்த அப்பெண்மணிகள் தமது தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார்கள்.

            ( நூல்: உஸ்துல் ஃகாபா, தபகாத் இப்னு ஸஅத், அல் இஸ்தீஆப். )

மேன் மக்களின் வாழ்விலிருந்து…

உலகைத் துறந்த ஆத்ம ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் ஒரு முறை ஒரு துறைமுகத்தின் அருகே அமர்ந்து தமது கிழிந்த தங்களது துணியை தைத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அங்கே ஒரு கப்பல் வந்து நின்றது. கப்பலில் பயணம் செய்த சிலர் மேள தாளங்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

அந்த காலத்தில் ஒரு பழக்கம் இருந்தது. ஆடல் பாடலின் ஊடே நடுவே ஒருவரை அமர வைத்து இரு கன்னங்களிலும் மாறி, மாறி அறைந்து அவரை அழ வைத்து ரசிக்கின்ற கொடிய பழக்கம்.

ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களை அழைத்துச் சென்று நடுவே அமர வைத்து தங்களின் கொடூர ரசனையை ரசிக்க ஆரம்பித்தனர்.

அல்லாஹ்வின் நேசரல்லவா அவர்கள்.? ஓர் அசரீரி கேட்டது: ”உங்களுடன் இப்படி நடந்து கொள்கின்றார்களே? நீங்கள் விரும்பினால் இந்தக் கப்பலை அப்படியே புரட்டி, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விடுகின்றேன்.”

இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் கையேந்தி இப்படித் துஆ செய்தார்களாம்: “இறைவா! நீ இக்கப்பலைப் புரட்டி இவர்களை அழித்திடும் ஆற்றல் பெற்றிருப்பதைப் போன்றே, இவர்களின் கல்புகளைப் புரட்டி இவர்களை சீர் திருத்தும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றாய்! இறைவா! இவர்களின் அறிவுக் கண்களை நீ திறந்து விடு! அவர்கள் தமது தவறுகளை உணரும் பொருட்டு…”

சிறிது நேரத்திலேயே அவர்கள் தங்களின் தீய நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோரினர். சிறிது காலத்திலேயே இறை நேசத்திற்குரிய வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டனர்.

( நூல்: ஃபகீஹுல் உம்மத் மஹ்மூது ஹஸன் கங்கோஹி அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பான “குதுபாத்தே மஹ்மூத்” எனும் உர்தூ நூலிலிருந்து.. )

நிறைவாக…

வள்ளுவன் சொன்னான்: ”இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்”

மன்னிப்பதோடு நின்று விடாமல், உதவி உபகாரமும் செய்திட வேண்டுமாம்.

       கோபத்தைக் கை விடுவோம்! ரோஷத்தைக் கை விடுவோம்!

                   மன்னிப்போம்! மறப்பதற்காக….

  மாபெரும் மன்னிப்பாளனின் மன்னிப்பிற்கு தகுதி பெறுவதற்காக!

அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்தருள்வானாக! ஆமீன்!

                          வஸ்ஸலாம்!!

இன்ஷா அல்லாஹ்… எமது சிராஜுல் ஹுதா மக்தப் மதரஸாவின் ஆண்டு விழா ஆண்டு தோறும் ஹஜ்ஜுப் பெருநாள், மற்றும் அதற்கு அடுத்த நாள் என இரண்டு தினங்கள் மிகச் சிறப்பாக நடைபெரும்.

மாணவ மாணவியரின் பேச்சுப் போட்டி, கிராஅத் போட்டி நடைபெறும்.

இந்த ஆண்டு மாணவ மாணவியர்களைக் கொண்டு ஒரு பட்டிமன்றமும், ஒரு கருத்தரங்கமும் நடத்த திட்டமிட்டிருக்கின்றோம்.

அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட இருப்பதால் வருகின்ற இரண்டு வாரங்கள் நமது வலைப்பூவில் பதிவுகள் இட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

                         என்றென்றும் உங்கள் துஆவுடன்…

                             இப்னு மஸ்வூத் உஸ்மானி.  









1 comment:

  1. Halrath,Adikkadi ippadi leave pottal eppadi??ungal sevai engalukku idaividamal thevai.Allah udhavi seyvanaha .Aameen.

    ReplyDelete