வார்த்தையில் கண்ணியம்.. அதுவே வாழ்க்கையின் கண்ணியம்!
மனித சமூகத்திற்கு
அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடை
பேசும் ஆற்றலை வழங்கியதாகும்.
அது தான்
நம்மைப் பற்றி பிறர்
அறிந்து கொள்வதற்கும், பிறரைப்
பற்றி நாம் அறிந்து
கொள்வதற்கும் அடிப்படைக் காரணமாக
அமைந்திருக்கின்றது.
மனித சமூகத்தின்
மகிழ்ச்சியான வாழ்விற்கு இன்றியமையாதத்
தேவையாக இருப்பதும் இந்த
பேச்சாற்றல் தான்.
ஆதலால் தான்
அல்லாஹ் மனித சமூகத்தின்
மாண்பு குறித்து கூறும்
போது..
خَلَقَ
الْإِنْسَانَ (3) عَلَّمَهُ الْبَيَانَ (4)
“அவனே மனிதனைப்
படைத்தான்; அவனுக்கு பேசக்
கற்றுக் கொடுத்தான்.” ( அல்குர்ஆன்
55:3,4 ) என்று கூறுகின்றான்.
ஆனால், மகிழ்ச்சியையும்,
இன்பத்தையும் அடைந்து கொள்வதற்குப்
பதிலாக மனித சமூகம்
இன்று இந்த
ஆற்றலின் மூலம் துன்பத்தையும்
கேவலத்தையும் அல்லவா வாழ்க்கையில்
சந்தித்துக் கொண்டிருக்கிறது.
ஆக, ஒரு
மனிதனின் முன்னேற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் முக்கியக் காரணமாக
இருப்பது அவன் பேசுகிற
பேச்சுக்கள் தான் என்றால்
அதைப் பற்றியுண்டான முழுமையான
இஸ்லாமிய வழிகாட்டலைத் தெரிந்து
கொள்ள வேண்டியது ஓர்
இறைநம்பிக்கையாளனுக்கு மிகவும்
அவசியமாகும்.
அல்குர்ஆனில் அல்லாஹ்
பேசுவதின் ஒழுங்கு குறித்து
பேசியது போன்று மனித
வாழ்வின் மற்றைய வேறெந்த
அம்சங்கள் குறித்தும் மிக
அதிகமாகப் பேசியதில்லை.
உறவுகள் மேம்பட
நல்லதைப் பேசுங்கள்...
وَقُولُوا
لَهُمْ قَوْلًا مَعْرُوفًا
”அவர்களிடம் நல்ல
வார்த்தைகளைபக் கொண்டு பேசுங்கள்.” (அல்குர்ஆன்:4:5)
பாவங்கள்
மன்னிக்கப்பட, செயல்கள் சீராக.. நேர்மையாகப் பேசுங்கள்..
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70)
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
இறைநம்பிக்கை
கொண்டவர்களே! அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்! மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள்! அதன்
மூலம் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீராக்குவான்; மேலும், உங்களுடைய குற்றங்களையும்
மன்னிப்பான்.” (அல்குர்ஆன்:33:71)
நீதியோடு பேசுங்கள்..
وَإِذَا
قُلْتُمْ فَاعْدِلُوا
”இன்னும் பேசும்
போது நீதியுடன் பேசுங்கள்!
(அல்குர்ஆன்:6:152)
கவனமாகப் பேசுங்கள்…
”இரு எழுத்தர்கள்
அவனுடைய வலப்புறமும், இடப்புறமும்
அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு
செய்து கொண்டிருக்கின்றனர். அவன்
மொழிகிற எந்த ஒரு
வார்த்தையையும் அவர்கள் பதிவு
செய்யாமல் இருப்பதில்லை.” (அல்குர்ஆன்:50:17,18)
இன்னும் ஏராளமான
வசனங்கள் இவ்வாறு பேச்சின்
ஒழுக்கங்கள் குறித்து நமக்கு
வழிகாட்டுகின்றன.
அறிவுலக மாமேதை
இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள். மனிதன்
பேசுகின்ற சில பேச்சுக்கள்
சில போது அவனை
இறைவழிபாட்டிற்கும், சில போது
இறைநிராகரிப்பிற்கும் அழைத்துச்
சென்று விடுகின்றது.
பயனற்ற பேச்சு,
வழிகேடான சொற்கள், ஆபாசமாக
பேசுவது, எல்லை கடந்த
வார்த்தையாடல், பிறரை பரிகாசம்
செய்தல், பிறர் ரகசியத்தை
வெளியிடுதல், பிறரை பயமுறுத்தும்
வகையில் பேசுதல், பொய்,
புறம், கோள், இட்டுக்கட்டுதல்,
அவதூறு சுமத்துதல் என்று
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் தண்டனைக்குரிய நீண்ட
பேச்சுக்களின் வகைகளை பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் கூறினார்கள்: “ ஓர்
அடியான் பின் விளைவுகளை
அறியாது சில போது
யதார்த்தமாக பேசிவிடுகிறான். அதனால்
அவன் எழுபது மைல்
தூரம் நரகத்தில் வீசப்படுகிறான்.”
இன்னும் பேச்சின்
விபரீதத்தை அல்லாஹ்வும், அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
ஒரு படி மேலே
சென்று உணர்த்துகின்றார்கள்.
ஹஜ், நோன்பு,
ஸதக்கா போன்ற இபாதத்கள்
ஏற்றுக் கொள்ளப்படாமல் போவதற்கும்
சில வகையான பேச்சுக்களே
காரணம் என்று.
மொத்தத்தில், ஒரு
பலமொழி சொல்லப்படுவது போன்று
“பல்லக்கு ஏறுவதும் வாயாலே..
பல் உடைபடுவதும் வாயாலே…
என்பது போன்று வாழ்வில்
மிகவும் கவனமாகப் பேச
வேண்டும்.
அதற்காக பேச
வேண்டிய இடத்தில், பேச
வேண்டிய நேரத்தில் மௌனமாக
இருப்பதும், மௌனமாக இருக்க
வேண்டிய இடத்தில், இருக்க
வேண்டிய நேரத்தில் பேசுவதும்
மிகவும் ஆபத்து என்பதாக
இஸ்லாம் கூறுகின்றது.
ஒரு வார்த்தை..
ஸபா நாட்டு
அரசிக்கு ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் இஸ்லாமிய அழைப்பை
ஏந்திய கடிதத்தை ஹுத்
ஹுத் பறவையிடம் கொடுத்து
அனுப்பினார்கள்.
அது கொண்டு
சென்று அரசியின் மாளிகையில்
கொண்டு போட்டது. அதைப்
பிரித்துப் படித்து விட்டு
அந்த அரசி உடனடியாக
தம் அரசவைக் கூட்டத்தைக்
கூட்டி தம் அரசவைப்
பிரதானிகளிடம் விவாதிக்க ஆரம்பித்த
போது…
قَالَتْ
يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ (29) إِنَّهُ
مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (30) أَلَّا
تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ
”அரசவைப் பிரமுகர்களே!
மிக முக்கியமான, கண்ணியம்
நிறைந்த கடிதம் ஒன்று
என்னிடம் போடப்பட்டுள்ளது. அது
ஸுலைமான் என்பவரிடமிருந்து வந்துள்ளது.
மேலும், அருளாளன் அன்பாளன்
அல்லாஹ்வின் திருப்பெயரால் அது
தொடங்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக
நீங்கள் ஆணவத்துடன் நடந்து
கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாய் – பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்”
எனும் வாசகம் அதில்
உள்ளது.”
சமுதாயத்தலைவர்களே! என்னுடைய
இந்த விவகாரத்தில் நீங்கள்
எனக்கு நல்லதொரு ஆலோசனையை
வழங்க வேண்டும்!” (அல்குர்ஆன்:27:27-32) என்று கூறினார்.
இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற
அறிஞர் பெருமக்களில் சிலர்
”அந்த அரசி சொன்ன
இந்த வார்த்தை தான்
அவருக்கும், அவரின் சமூகத்திற்கும் இஸ்லாம் எனும்
நற்பேற்றை வழங்கியது” என்று
கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் மதீனா வந்த
பின்னர் அருகில் இருக்கிற
நாடாளும் மன்னர்களுக்கு இஸ்லாமிய
அழைப்பை அனுப்பி வைத்தார்கள்.
பாரசீக மன்னர்
குஸ்ரு பர்வேஸ் என்பவருக்கும்
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு
ஹுதாஃபா (ரலி) அவர்களிடம்
இஸ்லாமிய அழைப்பை ஏந்திய
கடிதம் ஒன்றை கொடுத்தனுப்பினார்கள்.
அரசவையில் நுழைந்த
அப்துல்லாஹ் (ரலி) அவர்களின்
தோற்றம், மற்றும் எளிமை
ஆகியவற்றைக் கண்ட மன்னர்
உள்ளே வர அனுமதி
மறுத்து, தம் மந்திரியிடம்
கடிதத்தைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் எனக்கு இட்ட
கட்டளை மன்னரை சந்தித்து
கடிதத்தை நேரில் கொடுப்பது
தான், ஆகவே நான்
தான் மன்னரிடம் நேரில்
கொடுப்பேன் என்றார்.
வேண்டா வெறுப்பாக
மன்னர் அனுமதி வழங்க,
மன்னரின் அருகே சென்று
கடிதத்தைக் கொடுத்தார்கள் அப்துல்லாஹ்
(ரலி)
அவர்கள்.
கடிதத்தின் முதல்
வாசகம் “இறைத்தூதர் முஹம்மது
{ஸல்}
அவர்கள் மரியாதைக்குரிய பாரசீக
மன்னருக்கு எழுதிக் கொள்வது
என்னவெனில்…
இதை மொழிபெயர்ப்பாளர் கூறியது தான்
தாமதம் கடிதத்தை வாங்கி
கிழித்து எறிந்து விட்டான்
மன்னன்.
அதன் பின்னர்
அவன் வாயில் இருந்து
வந்த வார்த்தைகள்.. என்ன?
யார் இந்த முஹம்மது
நபி?
முதலில் அவரது பெயர்,
அதன் பிறகு எனது
பெயரா? என்னவொரு அவமரியாதை?
முதலில் இந்தத் தூதரை
வெளியே அனுப்புங்கள்.”
பல மைல்
தூரம் சென்று திரும்பிய
அப்துல்லாஹ்வை அழைத்த பெருமானார்
ஆவலுடன் கேட்டார்கள் பாரசீக
மன்னர் என்ன சொன்னார்
என்று?
அவனின் பதிலையும்,
அவனுடைய செயலையும் அப்துல்லாஹ்
(ரலி)
சொல்லி முடித்த போது,
பெருமானார் {ஸல்} அவர்கள்
“அல்லாஹ் அவனுடைய ஆட்சியையும்
கிழித்தெறிவானாக!” என்று கூறினார்கள்.
( நூல்:
அல் பிதாயா வன்
நிஹாயா )
இங்கே, இரண்டு
நாடாளும் மன்னர்களுக்கு அவர்களின்
வாயில் இருந்து வந்த
வார்த்தைகளே அவர்களின் முடிவுகளுக்கு
காரணமாய் அமைந்ததை வரலாறு
நமக்கு உணர்த்துகிறது.
சில வார்த்தைகள்
கவலையை உண்டாக்கும்..
நபிய்யுல்லாஹ் யஃகூப்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யூஸுஃப்
(அலை)
அவர்களைப் பிரிந்து கவலையில்
ஆழ்ந்து, கண்பார்வைகளை இழந்து
தவிக்க காரணமாய் அமைந்தது
அவர்கள் உதிர்த்த ஓர்
வார்த்தை தான் என்று
குர்ஆன் கூறுகின்றது.
قَالُوا
يَا أَبَانَا مَا لَكَ لَا تَأْمَنَّا عَلَى يُوسُفَ وَإِنَّا لَهُ لَنَاصِحُونَ
(11) أَرْسِلْهُ مَعَنَا غَدًا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
(12) قَالَ إِنِّي لَيَحْزُنُنِي أَنْ تَذْهَبُوا بِهِ وَأَخَافُ أَنْ يَأْكُلَهُ
الذِّئْبُ وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ (13)
”எங்களின் தந்தையே!
நாங்கள் யூஸுஃபின் நலனில்
அக்கறை கொண்டவர்களாக இருக்கும்
நிலையில், அவர் விஷயத்தில்
நீங்கள் எங்களை நம்பால்
இருக்க காரணம் என்ன?
நாளை எங்களுடன் அவரை
அனுப்பி வையுங்கள்.
அவர் உண்டு
மகிழ்ந்து விளையாடட்டும்! அவரைப்
பாதுகாத்திட நாங்கள் இருக்கின்றோம்”
என்று கூறினார்கள்.
தந்தை யஃகூப்
“நீங்கள் அவரை அழைத்துச்
செல்வது என்னைக் கவலையில்
ஆழ்த்துகிறது. மேலும், நீங்கள்
அவர் விஷயத்தில் கவனக்குறைவாக
இருக்கும் போது அவரை
ஓநாய் அடித்துத் தின்று
விடுமோ என நான்
அஞ்சுகிறேன்”. சொன்னார்.
அவர் மொழிந்த
அந்த வார்த்தையைக் கொண்டே
அல்லாஹ் சோதித்தான்.
சில வார்த்தைகள்
தண்டனையைப் பெற்றுத்தரும்..
நாடாளும்
தகுதியைப் பெற இணைவைப்பில் ஊறிப்போயிருந்த அமாலிக்கா கூட்டத்தினரோடு போர்
புரிந்து, அங்கிருந்து அவர்களை வெளியேற்றி அங்கே
குடியிருக்குமாறு மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை சொன்ன போது..
قَالُوا يَا مُوسَى إِنَّ
فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَنْ نَدْخُلَهَا حَتَّى يَخْرُجُوا مِنْهَا
فَإِنْ يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ () قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ
يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا
دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ
كُنْتُمْ مُؤْمِنِينَ () قَالُوا يَا مُوسَى إِنَّا لَنْ نَدْخُلَهَا أَبَدًا مَا
دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ
()
மூஸாவே! அப்பூமியில்
மிக்க வலிமை வாய்ந்தவர்கள்
இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள்
வெளியேறாதவரை நாங்கள் அங்குச்
செல்லவே மாட்டோம். ஆயினும்
அவர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டால் நிச்சயமாக, நாங்கள்
நுழையத் தயாராக இருக்கின்றோம்”
என்று பதில் தந்தனர்.
அப்போது அங்கிருந்த
அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் கூறினார்கள்: “வலிமை வாய்ந்தவர்களைப்
பொருட்படுத்தாமல் நீங்கள் அப்பூமியில் நுழைந்து விடுங்கள்! நீங்கள் தான்
வெற்றியாளர்கள்! நீங்கள் நம்பிக்கைக் கொண்டோராயின் அல்லாஹ்வையே முழுமையாகச்
சார்ந்திருங்கள்!” என்றார்கள்.
மீண்டும், பனூ
இஸ்ரவேலர்கள் இப்படிக்கூறினர்: “மூஸாவே! அவர்கள் அங்கு இருக்கும் வரை நாங்கள் ஒரு
போதும் அங்கே நுழைய மாட்டோம். வேண்டுமாயின், நீரும், உம்முடைய இறைவனும் சென்று
போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்.”
இறுதியில், அவர்கள் கூறியது போன்றே அவர்களின் வார்த்தையின் மூலம் அவர்களின்
தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அல்குர்ஆனின் 5 –ஆம் அத்தியாயம்
24 -ஆம் வசனம் கூறுகின்றது.
சில வார்த்தைகளும்..
அதன் தாக்கங்களும்..
روى
عنه عبد الله بن سلام أنه قال: لم يبق من علامات النبوة شيء إلا وقد عرفته في وجه
محمد حين نظرت إليه، إلا اثنتين لم أخبرهما منه: يسبق حلمه غضبه، ولا يزيده شدة
الجهل عليه إلا حلماً. فكنت أتلطف له لأن أخالطه، وأعرف حلمه وجهله، قال: فخرج
رسول الله صلى الله عليه وسلم يوماً من الأيام من الحجرات، ومعه علي بن أبي طالب،
فأتاه رجل على راحلته كالبدوي، فقال: يا رسول الله، إن قرية بني فلان قد أسلموا،
وقد أصابتهم سنة وشدة، فإن رأيت أن ترسل إليهم بشيء تعينهم به فعلت. فلم يكن معه
شيء، قال زيد: فدنوت منه فقلت: يا محمد، إن رأيت أن تبيعني تمراً معلوماً من حائط
بين فلان إلى أجل كذا وكذا. فقال: " يا أخا يهود، ولكن أبيعك تمراً معلوماً
إلى أجل كذا وكذا، ولا أسمي حائط بني فلان " . فقلت: نعم، فبايعني وأعطيته
ثمانين ديناراً، فأعطاه للرجل، قال زيد: فلما كان قبل محل الأجل بيومين أو ثلاثة،
خرج رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار، ومعه أبو بكر وعمر،
وعثمان في نفر من أصحابه، فلما صلى على الجنازة أتيته، فأخذت بمجامع قميصه وردائه
ونظرت إليه بوجه غليظ، ثم قلت: ألا تقضي يا محمد حقي؟ فو الله ما علمتكم يا بني
عبد المطلب لسيئ القضاء مطل. قال: فنظرت إلى عمر وعيناه تدوران في وجهه، ثم قال:
أي عدو الله، أتقول لرسول الله ما أسمع! فو الذي بعثه بالحق لولا ما أحاذر فوته
لضربت بسيفي رأسك. ورسول الله صلى الله عليه وسلم ينظر إلى عمر في سكون وتبسم، ثم
قال: " يا عمر، أنا وهو إلى هذا منك أحوج، أن تأمره بحسن الاقتضاء، وتأمرني
بحسن القضاء، اذهب به يا عمر فاقضه حقه، وزده عشرين صاعاً مكان ما روعته " .
قال زيد: فذهب بي عمر، فقضاني وزادني، فأسلمت.
மதீனாவின் ஒரு
நாள் காலைப் பொழுது.. ஒரு கிராமவாசி பதற்றத்துடனும், பரபரப்போடும் அண்ணலாரை நோக்கி
வந்தார். அப்போது அண்ணலாரும், அலீ (ரலி) அவர்களும் மதீனாவின் வீதியில் நின்று கொண்டிருந்தார்கள்.
மாநபி {ஸல்}
அவர்களின் அருகே வந்த அந்த கிராமவாசி ”அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன கிராமத்தில்
இருந்து வருகின்றேன். இப்போது எங்களின் கிராமத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு
மக்களெல்லாம் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
நான் அவர்களிடையே இஸ்லாத்தை
அறிமுகம் செய்த போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்களென்றால் உங்கள் உணவுகள்
விசாலமடையும் என்று கூறினேன்.
இப்போது, இந்தப்
பஞ்சமும் வறட்சியும் அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடுமோ என்று நான்
அஞ்சுகின்றேன். தாங்கள் ஏதாவது உதவி புரிந்து அம்மக்களை வறட்சியிலிருந்து
விடுவிக்க வேண்டும்.
அது அவர்களின்
வாழ்க்கையில் பேருதவியாக அமையும்” என்று கூறி உதவி வேண்டி நின்றார்.
அப்போது,
பெருமானார் {ஸல்} அவர்கள் உடனடியாக அவருக்கு உதவிட வேண்டும் என்று
விரும்பினார்கள். ஆனால், அப்போது நபிகளாரிடம் ஒன்றும் இல்லை.
சுற்றும் முற்றும்
பார்க்கிறார்கள். அந்தப் பார்வையில் தெரிந்தவர்கள் எவராவது வந்தால் அவரிடம்
இருந்து ஏதாவது கடனாகப் பெற்று உதவிடலாம் என்ற உயர்ந்த நோக்கு தெறித்தது.
அண்ணலாருக்கு
சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஸைத் இப்னு
ஸஅனா என்கிற யூத பாதிரி ஒருவர் நபி {ஸல்} அவர்களின் அருகே வந்தார்.
வந்தவர் நபி {ஸல்}
அவர்களை நோக்கி “முஹம்மதே! {ஸல்} நான் உதவி செய்கிறேன், ஆனால், அதற்குப் பகரமாக
பேரீத்தம்பழ அறுவடை நேரத்தில் இன்னவரின் தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழத்தில்
நான் கொடுக்கும் பணத்திற்குச் சமமாக பேரீத்தம் பழங்களை தரவேண்டும்” என்று
கூறினார்.
அதற்கு நபி {ஸல்}
அவர்கள் “யூத சகோதரா! குறிப்பிட்ட அந்த அறுவடை நேரத்தில், குறிப்பிட்ட இன்னாருடைய
தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழங்களை நீர் கொடுக்கும் பணத்திற்கு சமமாக வழங்க
நான் சம்மதிக்கிறேன், மேலும், நீர் இன்ன நாளில்
(ஒரு நாளைக் குறிப்பிட்டு) வந்து எம்மிடம் அதைப்
பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்கள்.
அப்போது, ஸைத்
இப்னு ஸஅனா அண்ணலாரிடம் 80 தீனார்களை கடனாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட
நபி {ஸல்} அவர்கள் அந்த கிராமவாசியிடம் கொடுத்து, உமது ஊரில் உள்ள எல்லோருக்கும்
இதை பிரித்துக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்களும், தோழர்கள் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி – அன்ஹும்) அவர்களும்,
இன்னும் சில நபித்தோழர்களும் அன்ஸாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாத் தொழுகைக்காக
மஸ்ஜிதுன் நபவீயின் வெளிப்பகுதியிலே வீற்றிருந்தார்கள்.
ஜனாஸா கொண்டு
வரப்படுகிறது. தூரத்திலே ஸைத் இப்னு ஸஅனாவும் வந்து கொண்டிருக்கிறார்.
நபிகளார் சொன்ன
காலக்கெடுவுக்கு இன்னமும், இரண்டு அல்லது மூன்று தினங்கள் பாக்கி இருக்கிறது.
ஜனாஸா தொழுது
முடித்து நின்று கொண்டிருந்த அண்ணலாரை நோக்கி பாய்ந்து வந்த ஸைத் இப்னு ஸஅனா கடுகடுத்த
முகத்தோடு, அண்ணலாரின் கழுத்தில் போட்டிருந்த துண்டைப் பிடித்து இழுத்தவாறு
“முஹம்மதே! {ஸல்} ஏன் இன்னும் எனது கடனைத் திருப்பித் தரவில்லை? அப்துல்
முத்தலிபின் மக்கள் கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள், வாக்கு
கொடுத்தால் நிறைவேற்ற மாட்டார்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்!” என்று உரக்க
கத்தினார்.
அண்ணலாரிடம்
மரியாதைக் குறைவாகவும், தரம் தாழ்ந்தும் நடந்து கொண்ட அந்த யூதரின் செயல் கண்டு
கொதித்தெழுந்த உமர் (ரலி) அவர்கள் முகம் சிவந்தவர்களாக “அல்லாஹ்வின் விரோதியே!
அல்லாஹ்வின் தூதரிடமா நீ இவ்வாறு பேசுகிறாய்? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
மாத்திரம் இப்போது இங்கே இல்லை என்று சொன்னால் உனது தலையை நான் கொய்திருப்பேன்”
என்று ஆவேசமாகப் பேசினார்கள்.
அதனைக் கேட்ட
மாநபி {ஸல்} அவர்கள் புன்முருவல் பூத்த முகத்தோடு உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமரே! நீங்கள் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது!
கடனைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று என்னிடம் தான் தாங்கள் கூறியிருக்க
வேண்டும்.
மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது கொஞ்சம் மரியாதையுடன் கேளுங்கள்
என்று அவரிடம் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.
ஆனால், உங்கள் பேச்சால் இவரை நீங்கள் பயமுறுத்தி விட்டீர்கள்.
இவரை அழைத்துச் சென்று நான் வாங்கிய கடனுக்குப் பகரமாக நான் சம்மதித்தது
போன்று இன்ன தோடத்து பேரீத்தம் பழங்களை கொடுங்கள்.
மேலும், அவரை பயமூட்டும் வகையில் பேசியதற்கு பரிகாரமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களை அதிகமாகக் கொடுங்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள்
அவரை அழைத்துக் கொண்டு போய் நபி {ஸல்} அவர்கள்
சொன்னது போன்றே அவரது கடனையும் திருப்பிச் செலுத்தி, இன்னும்
அதிகமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களையும் கொடுத்தார்கள்.
அதனைப் பெற்றுக் கொண்ட
ஸைத் இப்னு ஸஅனா ஏன் எனக்கு அதிகமாகத் தருகின்றீர்கள்? என்று உமர் (ரலி) அவர்களிடம்
கேட்டார்.
உம்மை அச்சமூட்டும்
வகையில் அமைந்து விட்ட என் பேச்சுக்குப் பரிகாரமாக உமக்கு வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று
உமர் (ரலி) அவர்கள் காரணம் கூறினார்கள்.
அது கேட்ட ஸைத் இப்னு
ஸஅனா ஆச்சர்யம் மேலிட உமரை நோக்கி “உமரே!
என்னை அடையாளம் தெரிகிறதா? நான் தான் யூதப் பண்டிதர்
ஸைத் இப்னு ஸஅனா” என்று அறிமுகம் செய்து கொண்டார்.
அவரை ஏற்கனவே அறிந்திருந்த
உமர் (ரலி) அவர்கள் ஓ பண்டிதரே!
எல்லாம் தெரிந்த நீர் ஏன் அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டீர்? என வினவினார்கள்.
قال
زيد بن سعنة ما من علامات النبوة شيء إلا وقد عرفته في وجه محمد حين نظرت إليه إلا
خصلتين لم أخبرهما منه يسبق حلمه جهله ولا يزيده شدة الجهل عليه إلا حلما
அதற்கு, ஸைத் இப்னு ஸஅனா “இறுதித் தூதர் வருகை மற்றும்
அவரின் அடையாளங்கள் குறித்து தவ்ராத் வேதத்திலே சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் நான் முஹம்மதிடம்
{ஸல்} பார்த்து விட்டேன்.
ஆனால், இரண்டு அடையாளங்களை மட்டும் இது வரை நான் பார்த்ததில்லை.
அதை உறுதிபடுத்தத்தான் நான் இவ்வாறு நடந்து கொண்டேன். இப்போது அதையும் நான் பார்த்து விட்டேன். இப்போது நான்
தெளிவாகி விட்டேன்” என்று கூறினார்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள்
“அந்த இரண்டு குணாதிசயங்கள் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் இப்னு
ஸஅனா “இறைத்தூதர் பொறுமையின் சிகரமாக விளங்குவார்,
தன்னோடு உறவாடுபவர்கள் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் அவர்களிடம்
புத்திசாலித்தனத்தோடு இறைத்தூதர் நடந்து கொள்வார்” எனவே,
இப்போது எனக்கு தெளிவாகி விட்டது.
உமரே! இதோ நான் இஸ்லாத்தை மனதார ஏற்றுக்கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம்
என்னை அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தைத்
தழுவினார்கள் ஸைத் இப்னு ஸஅனா (ரலி) அவர்கள்.
( நூல்: உஸ்துல் காபா, அல் இஸாபா ஃபீ தம்யீஜிஸ் ஸஹாபா
)
வார்த்தையில் கண்ணியம்.. வாழ்க்கையின் கண்ணியம்..
و عن أنس رضي الله عنه قال ، عن النبي صلى الله عليه و سلم قال
دخلت
الجنة فسمعت خشفة بين يدي فقلت : ما هذه الخشفة ؟ فقيل
الرميصاء
بنت ملحان أم سليم - رضى الله عنها
السلسلة الصحيحة
الجزء 3الثالث ص395
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும்
ஒரு சபையில் “எனக்கு சுவனம் காட்டப்பட்டது அப்போது அதில் நான்
நுழைந்தேன். எனக்கு முன்னால் யாரோ ஒருவர் நடந்து செல்லும் காலடி
சப்தத்தை நான் கேட்டேன். அப்போது நான் நடந்து செல்வது யார்?
என்று கேட்டேன். அது ருமைஸா பிந்த் மில்ஹான்
(ரலி) என்று கூறப்பட்டது” எனக் கூறினார்கள்.
உலகில் வாழும் காலத்திலேயே
சுவனத்தின் சோபனத்தைப் பெறும் பேறு பெற்ற அப்பெண்மனி நபித்தோழியர்களில் உம்மு ஸுலைம்
என்று வரலாற்றில் அறியப்படுகிற அனஸ் (ரலி)
அவர்களின் தாயார் ருமைஸா பின்த் மில்ஹான் (ரலி)
அவர்கள் ஆவார்கள்.
மிகச் சாதாரணமாக இப்பேற்றை
அவர்கள் பெறவில்லை. இஸ்லாமிய வாழ்வில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு
தியாகங்களை மேற்கொண்டார்கள்.
எனினும், வரலாற்று ஆசிரியர்கள் இவர்களைப் பற்றி குறிப்பிடும் போது
“அவர்கள் பேசினால் அறிவார்ந்த முறையில் பேசுவார்கள். பேச்சின் துவக்கமும், முடிவும் உயர்ந்த இலக்கை நோக்கியதாக
அமைந்திருக்கும். அல்லாஹ்வும், அவன் தூதரும்
பொருந்திக் கொள்கிற பேச்சையே அவர்கள் பேசுவார்கள்.” என்று கூறுவார்கள்.
இந்தக் கண்ணோட்டத்தோடு
உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்க்கை
வரலாற்றை வாசிக்க முற்படும் போது ஏராளமான செய்திகள் காணக்கிடைக்கிறது.
அதிலிருந்து இரண்டை
மட்டும் இங்கு பார்ப்போம்.
كانت
تحت مالك بن النضر والد أنس بن مالك في الجاهلية، فغضب عليها وخرج إلى الشام، ومات
هناك. فخطبها أبو طلحة الأنصاريّ وهو مشرك فقالت: أما إني فيك لراغبة، وما مثلك
يُرَدّ، ولكنك كافر، وأنا امْرَأَة مسلمة،
حدثنا أبو جعفر
مُحَمَّد بن مسلمة الواسطي، حدثنا يزيد بن هارون، حدثنا حماد بن سلمة، عن ثابت
وإسماعيل بن عَبْد الله بن أبي طلحة، عن أنس: أن أبا طلحة خطب أم سليم فقالت: يا
أبا طلحة، ألست تعلم أن إلهك الذي تعَبْد ينبت من الأرض، ينجرها حبشي بني فلان؟
قال: بلى. قالت: أفلا تستحي تعَبْد خشبة؟! إن أنت أسلمت فإني لا أريد منك الصداق
غيره. قال: حتى أنظر في أمري. فذهب ثم جاء فقال: أشهد أن لا إله إلا الله ، وأن
مُحَمَّداً رسول الله. فقالت: يا أنس، زوّج أبا طلحة. فتزوّجها.
ஆரம்ப காலத்திலேயே
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாக்கியசாலி. இவர் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டதை விரும்பாத இவர்களின் கணவர் மாலிக் பின் நஜர் உம்மு ஸுலைம் அவர்களிடம்
கோபித்துக் கொண்டு ஷாமிற்குச் சென்று விட்டார்.
இதன் பின்னர் சில மாதங்களிலேயே
அவர் இறந்தும் விட்டார். இப்போது, அபூதல்ஹா என்பவர்
உம்மு ஸுலைம் அவர்களை திருமணம் செய்ய விரும்புவதாக தூது அனுப்பினார்.
அபூதல்ஹாவை நேரில்
வரவழைத்த உம்மு ஸுலைம் அவர்கள் அவரிடம் “அபூதல்ஹாவே!
உம்மை திருமணம் செய்யும் விஷயத்தில் எமக்கும் உளப்பூர்வமான ஆசை உண்டு.
ஆனால், நான் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன்.
ஆனால், நீங்களோ இறை நிராகரிப்பாளராக இருக்கின்றீர்கள். இந்நிலையில் என்னை நீங்கள் திருமணம் செய்வதற்கு சாத்தியமே இல்லை.
அபூதல்ஹாவே! நீங்கள் என்றாவது உங்கள் கடவுளர்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்ததுண்டா?
நீங்கள் வணங்குகின்ற கற்சிலையின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்ந்ததுண்டா?
கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள்! எங்கோ ஒரு நிலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு
பாறையை இன்ன கோத்திரத்தைச் சார்ந்த ஒரு ஹபஷீ அடிமையான ஒரு சிற்பியல்லவா சிலையாக வடித்திருக்கின்றான்?
நீங்கள் அதைப் போய்
தெய்வமாக, காக்கும் கடவுளாக வணங்குகின்றீர்களே?
எந்தச் சக்தியும் இல்லாத, எந்த வலிமையும் கொண்டிராத
இந்த கல்லுக்கு முன்னால் தலைசாய்த்து வணங்குகின்றீர்களே? உங்களுக்கு
வெட்கமாக இல்லையா?” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அபூதல்ஹா
தவறென்பது போல் ஆம் என்று தலையசைத்தார்.
மீண்டும், உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் ”என்னை நீங்கள் திருமணம் செய்ய வேண்டுமானால்
அந்த அசுத்தத்திலிருந்து மீண்டு, பரிசுத்தமான இஸ்லாத்திற்கு வருவதைத்
தவிர வேறு முகாந்திரமே இல்லை” என்று திட்ட வட்டமாகக் கூறி அனுப்பி
வைத்தார்கள்.
உம்மு ஸுலைம் அவர்களின்
ஒவ்வொரு கேள்வியும் அவரை துளைத்தெடுத்திருக்க வேண்டும். மூன்று நாள் கழித்து உம்மு ஸுலைம் (ரலி)
அவர்களைச் சந்தித்து தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
ஆம்! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அபூதல்ஹா (ரலி)
அவர்கள். அடுத்து அவர்களைத் திருமணம் செய்ய வேண்டும்.
மஹர் கொடுக்கக் கூட வழியில்லாத வறியவராக விழி பிதுங்கி அபூதல்ஹா
(ரலி) நின்ற போது உங்கள் ஷஹாதா கலிமாவையே நான்
மஹராக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறி நெகிழச் செய்தார்கள்.
( நூல்: உஸ்துல் காபா, தபகாத் இப்னு ஸஅத் )
இஸ்லாமிய வரலாற்றில்
கலிமா ஷஹாதாவையே மஹராகப் பெறும் பாக்கியம் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்கு மாத்திரமே கிடைத்தது.
இன்றைக்கு சமூகத்தில்
காதல் வயப்பட்டு தம் சக கல்லூரி மற்றும் தம் நிறுவனத்தில் பணிபுரியும் மாற்று மதத்தவர்களோடு
ஓடிப்போகும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் சிந்தித்து உணர வேண்டிய மாபெரும் படிப்பினையை
இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அவர்கள் நான் முஸ்லிம், நீ காஃபிர் என்று கூறி முடித்திருந்தால் வரலாற்றில் எங்காவது ஒரு
மூலையில் பேசப்பட்டிருப்பார்கள்.
ஆனால், அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இருளடைந்திருந்த ஒருவருக்கு
ஒளியேற்றியது.
வழிகேட்டில் இருந்த
ஒருவருக்கு நேர்வழியைக் காட்டியது. சில போது
நாம் பேசும் பேச்சுக்கள் நம்முடைய வாழ்க்கையின் கண்ணியத்திற்கு அடிப்படையாய் அமைந்து
விடும் என்பதை இந்த வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
அடுத்து, இன்னொரு செய்தி…
فولد
له منها غلام كان قد أعجب به فمات صغيراً فأسف عليه، ويقال: أنه أبو عمير صاحب
النغير ثم ولدت له عبد الله بن أبي طلحة فبورك فيه وهو والد إسحاق ابن عبد الله بن
أبي طلحة الفقيه وإخوته وكانوا عشرة كلهم حمل عنه العلم
இனிதே நடந்தேரிய இந்த
திருமணத்தின் வாயிலாக அல்லாஹ் மழலைப் பாக்கியத்தை வழங்கினான். அபூ உமைர் என்று இருவராலும் மிகச் செல்லமாக அழைக்கப்பட்டார் அந்த
மழலை.
அண்ணலார் {ஸல்} அவர்கள் கூட அந்த மழலையிடத்திலே மிகவும்
பாசத்தோடும் பரிவோடும் பழகியதாக வரலாற்றில் பிரபல்யமான ஒரு நிகழ்ச்சியும் உண்டு.
ஒரு நாள் வியாபார விஷயமாக
அபூதல்ஹா (ரலி) வெளியூர் சென்றிருந்த
தருணம் அது..
திடீரென நோய் வாய்ப்பட்டு
அபூ உமைர் இறந்து போகிறார். அந்நாளின் இரவில் அபூதல்ஹா ஊர் திரும்பி வீட்டிற்கு
வந்தார்.
எப்போதையும் விட தம்
வீடு இப்போது மிகவும் அமைதியாக இருப்பதை அபூதல்ஹா உணர்ந்தார். ஒருவேளை சிறுவன் அபூஉமைர் உறங்கியிருப்பதால் இவ்வாறு அமைதியாக
இருக்குமோ என்று மனதினில் நினைத்துக் கொண்டார் அபூதல்ஹா (ரலி)
அவர்கள்.
கை, கால் கழுகி சுத்தமான பின்பு உணவுத்தட்டின் அருகே வந்தமர்ந்தார்.
அழகிய முறையில் உணவு பரிமாறி, இல்வாழ்க்கையில்
ஈடுபட்டு தன் இயல்பு நிலைக்கு திரும்பினார் அபூதல்ஹா (ரலி)
அவர்கள்.
அறிவின் சிகரம் இப்போது
தம் கணவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் அறிவார்ந்த முறையில்.. நம்மிடம் யாராவது ஒருவர் ஒரு பொருளை தந்து அமானிதமாக வைத்திருக்கச்
சொல்லி, பின்பு அந்தப் பொருளை கொடுத்தவர் கேட்டால் நாம் என்ன
செய்வோம்? சொல்லுங்கள்” என்று…
கொடுத்தவர் கேட்டால்
நமக்குச் சொந்தமில்லாத அந்தப் பொருளை திருப்பிக் கொடுத்து விடுவோம்” என்று அபூதல்ஹா கூறினார்.
இப்போது, மெல்ல தம் மகன் அபூ உமைர் இறந்த செய்தியை இப்படிக் கூறினார் உம்மு
ஸுலைம் (ரலி) “உங்களுடைய குழந்தையும் அல்லாஹ்
வழங்கிய ஓர் அமானிதம் தான். இப்போது அவன் அதைத் திரும்ப எடுத்துக்
கொண்டான். எனவே நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள். இன்னாலில்லாஹி… என்று.
நான் வந்த உடனேயே இதை
நீ கூறியிருக்க வேண்டியது தானே? என்று கடிந்து கொண்டார்
அபூதல்ஹா.
உங்களின் நிம்மதியை
கெடுத்து விடும் எந்தக் காரியத்தையும் செய்யும் துணிவு எனக்கில்லை என்றார் உம்மு ஸுலைம் (ரலி).
மறுநாள் நபிகளாரின்
அவைக்கு வந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள்,
தம் மனைவி உம்மு ஸுலைம் (ரலி) நடந்து கொண்ட விதம் குறித்து முறியிட்டார்கள்.
அது கேட்ட அண்ணலார் “உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் பொறுமையையும் உளத்தின்மையையும் சிறப்பித்துக் கூறி வெகுவாகப் பாராட்டி
விட்டு, “அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபூ உமைருக்குப் பகரமாக
ஒரு நல்ல குழந்தையை வழங்குவானாக!” என்று துஆச் செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆவின் பொருட்டால் அப்துல்லாஹ்
எனும் மகன் பிறந்தார். இவரும் அனஸ் (ரலி)
அவர்களைப் போன்று அண்ணலாரின் அண்மையில் வளரும் பாக்கியத்தைப் பெற்றார்.
அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சந்ததியில் இஸ்லாமிய அறிஞர்
பெருமக்கள் பத்து பேர் தோன்றினார்கள்.
( நூல்: இஸ்தீஆப் )
அவர்கள் தம் அருமை
மகனார் இறந்த செய்தியை தம் கணவரிடம் சொன்ன அந்த விதம் இஸ்லாமிய வரலாற்றில் சிறந்து
விளங்கிய பத்து மேன்மக்களை தந்த பாரம்பர்யம் எனும் கண்ணியத்தை பெற்றுத்தந்தது.
ஆகவே, நம் வாயிலிருந்து நாம் உதிர்க்கும் அந்த வார்த்தைகள் தாம் நம்
வாழ்க்கையின் கண்ணியத்தை தீர்மானிக்கிறது.
வார்த்தையில் கண்ணியத்தைப்
பேணுவோம்! வாழ்க்கையில் கண்ணியத்தைப் பெறுவோம்!
”ஒரு மனிதனின்
மௌனம் அவனுக்கு மாத்திரமே நன்மையை வழங்கும் ஆற்றல் கொண்டது. ஆனால்,
ஒரு மனிதனின் கண்ணியமான பேச்சு ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு நன்மையை வழங்கிடும்
ஆற்றல் மிக்கது” எனும் அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்களின் வார்த்தையைக் கொண்டு நிறைவு செய்கிறேன்.
வஸ்ஸலாம்!!
جزاك الله خيرا
ReplyDeleteJazakallah
ReplyDeleteMake dua for us to control our speech
ReplyDelete