இஸ்லாத்தைத் தந்த
இறைவனுக்காக நாம் அர்ப்பணித்தது என்ன?....
அல்லாஹ் நமக்களித்திருக்கிற அருட்கொடைகளில் இஸ்லாம்
என்பது மகத்தான அருட்கொடையாகும்.
அருட்கொடை என்றால்
என்ன?
அல்லாஹ் மனிதனுக்கு
வழங்கிய அருட்கொடைகளை அந்நஹ்ல்
அத்தியாயம் 4-ஆம் வசனத்திலிருந்து
17 –ஆம் வசனம் வரை
பட்டியலிட்டு விட்டு இப்படிக்
கூறுவான்.
وَإِنْ
تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
“அல்லாஹ்வின் அருட்கொடைகளை
நீங்கள் எண்ணிட முயன்றால்
அவற்றை உங்களால் எண்ணவே
முடியாது”.
அதே அத்தியாயத்தில் இன்னொரு இடத்தில்…
وَمَا
بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
“மேலும், உங்களுக்கு
கிடைத்திருக்கிற ( வாழ்க்கை வசதிகள்
) அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்
தாம்” ( அத்தியாயம் 16: வசனம்:
53 )
இவ்வுலகில் மனித
சமூகத்தை வாழ வைக்க
அல்லாஹ் வழங்கியிருக்கிற, வழங்கிக்
கொண்டிருக்கிற எண்ணிலடங்கா கிருபைகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையே!.
அவன் வழங்கிய
அருட் கொடைகளிலேயே மிக
உன்னதமானதும், மிக உயர்வானதும்
இது தான் “ மனித
வாழ்வின் உண்மையின் மீதும்,
யதார்த்தத்தின் ( இஸ்லாத்தின் ) மீதும்
” நம்மை வாழச் செய்து
அதற்காக ( வேதத்தையும், எண்ணற்ற
தூதுவர்களையும், இறுதித்தூதராக சர்தார்
நபி
{ஸல்}
அவர்களையும் ) வழிகாட்டியும் இருக்கின்றான்.
أَكْمَلْتُ
لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ
الْإِسْلَامَ دِينًا
“இன்று உங்களுடைய
தீனை உங்களுக்காக நான்
முழுமையாக்கி விட்டேன். எனது
அருட்கொடையையும் உங்கள்
மீது நான் நிறைவு
செய்து விட்டேன். இன்னும்,
உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய
தீன் – வாழ்க்கை நெறியாக
ஏற்றுக் கொண்டு விட்டேன்”. ( அல்குர்ஆன்:
5: 3 )
ஆம்! மனித
வாழ்வின் உண்மையும், யதார்த்தமும்
“படைத்த இறைவனை வணங்கி,
படைத்த இறைவனுக்காக வாழ்ந்து,
மேலான அவனது திருப்தியையும்,
பொருத்தத்தையும் பெற்றுத்தருகிற எல்லா நிலைகளையும்
அடைந்து, படைத்த இறைவனுக்காகவே
உயிர் துறப்பதும் ஆகும்.
இத்தகைய உயிரோட்டமான
சிந்தனையில் ஓர் இறை
நம்பிக்கையாளன் சீராக பயணிக்க
முற்பட வேண்டும். அதுபோது ஏற்படுகிற
போரட்டங்களை, இஸ்லாத்தை தந்த
இறைவனுக்காக துணிவோடு எதிர்
கொள்ள வேண்டும்.
அதற்காக தியாகங்களையும், இழப்புகளையும், அர்ப்பணங்களையும் சந்திக்க நேர்ந்தால்
உண்மையான மனதோடும், தூய்மையான சிந்தனையோடும் வரவேற்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த ரீதியில்
அமைகிற இழப்புகளை, தியாகங்களை, அர்ப்பணங்களை இஸ்லாம்
மிக உயர்வாகக் கருதுகிறது;
அதற்கான பிரதிபலனை உன்னதமான
ஓர் வாழ்விற்கான சேமிப்பாக
பாதுகாத்து வைக்கிறது.
ஆம்! மேலான
சுவனபதியின் திறவு கோலாக
அதைப் பார்க்கிறது.
வாழ்வில் ஏற்படும்
சிறு இழப்புகளுக்காக கண்ணீர் சிந்துபவன்
மனிதன். இஸ்லாத்தை தந்த
இறைவனுக்காக இழப்பதற்கு நம்மிடம்
எதுவுமே இல்லையே என
கண்ணீர் சிந்துபவன் தான் உண்மையான
ஓர் முஸ்லிம்.
மார்க்கத்தைப் பற்றிய
எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும்…
முதலில் நாம்
நம்முடைய மார்க்கத்தை உயர்வாகக்
கருத வேண்டும். அப்படிக்
கருதி நம்முடைய வாழ்வைத்துவங்குவோமேயானால் உயர்வான இந்த
எண்ணத்தின் காரணமாக அல்லாஹ்
நம்முடைய வாழ்வையும் உயர்த்துவான்.
இந்த எண்ணம்
தான் நம்மை சத்திய
தீனை நேசிப்பதற்கும், அந்த
தீனுக்காக வேண்டி வாழ்வதற்கும்,
அந்த தீனுக்காக தியாகங்கள்,
அர்ப்பணங்கள் செய்வதற்கும், அந்த
தீனுக்காக எத்தகைய இழப்பையும்
தாங்குகிற மனோவலிமையையும் பெற்றுத்
தரும்.
1. உமர்
(ரலி) அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற
உயர்ந்த எண்ணம்…
உமர் (ரலி) அவர்கள் முஸ்லிமாக தன்னை
அடையாளப் படுத்தும் முன்
அன்றைய
அரபுலகமும், உமர் அவர்களின் சக காலத்து
மக்களும் இப்படிச் சொன்னார்கள்.
“கத்தாப் வளர்க்கும்
கழுதை
ஒருவேளை
சரியாகிவிடும் ஆனால்
கத்தாபின் மகன்
ஒருபோதும் சரியாக
மாட்டார்”
ஒருபடி மேலாக, கத்தாப் தன் மகன் உமரைப் பார்த்து “நீ ஒட்டகம் மேய்க்க கூட லாய்க்கு இல்லை” என்று சொன்னார்.
உலகமே கண்டு
வியக்கும் மனிதராக, உலக அரசியல், ஆட்சியாளர்களே வியந்து
போற்றும் மனிதப் புனிதராக உமர்
(ரலி) மாறியது எப்படி?
உமர் (ரலி) அவர்கள் என்று இறை நம்பிக்கையுள்ள
அனைவராலும் அழைக்கப் பெற்றது
எப்படி?
இரண்டரை லட்சம்
சதுர கிலோ மீட்டர்
பரப்பளவு கொண்ட இஸ்லாமியப்
பேரரசை ஆண்ட “அமீருல்
முஃமினீன்” என்று வரலாற்றுப்
பக்கத்தில் இடம் பெற்றது
எப்படி?
வாருங்கள்!
உமர் (ரலி) அவர்களை
வரலாற்று நாயகராக இடம்
பெறச் செய்த அந்த தருணம் எது என்பதை கொஞ்சம் வாசித்து விட்டு வருவோம்.
இஸ்லாமிய ஜோதி
மக்காவின் இருளை விரட்டிக் கொண்டிருந்த பொன்னான நேரம் அது….
ஆம்! ஏகத்துவ அழைப்பை மாநபி
(ஸல்)
அவர்கள் அந்த முரட்டு மக்களிடையே எடுத்துச் சொல்லிக்
கொண்டிருந்த தருணம் அது.
நூறு செந்நிற
ஒட்டகைகளைப் பரிசிலாகப் பெற
வேண்டும் என்ற முனைப்போடு
வாளேந்தி வந்த உமர்
அவர்களுக்கு அல்லாஹ் ஏகத்துவத்தை
– ஹிதாயத்தை நஸீபாக்கினான்.
عن ابن عباس قال : سألت عمر بن الخطاب : لأي شيء سميت
الفاروق ؟ قال : أسلم حمزة قبلى بثلاثة أيام ـ ثم قص عليه قصة إسلامه . وقال في
آخره : قلت ـ أي حين أسلمت : يا رسول الله، ألسنا على الحق إن متنا وإن حيينا ؟
قال : ( بلى، والذي نفسي بيده، إنكم على الحق وإن متم وإن حييتم ) ، قال : قلت :
ففيم الاختفاء ؟ والذي بعثك بالحق لنخرجن، فأخرجناه في صفين، حمزة في أحدهما، وأنا
في الآخر، له كديد ككديد الطحين، حتى دخلنا المسجد، قال : فنظرت إلىّ قريش وإلى
حمزة، فأصابتهم كآبة لم يصبهم مثلها، فسماني رسول الله صلى الله عليه وسلم (
الفاروق ) يومئذ .
உமர் (ரலி)
அவர்கள் ஆட்சியாளராக மதீனாவில்
வீற்றிருந்த ஒரு நாள்
காலைப் பொழுதில் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள்
உமர் (ரலி) அவர்களுடன்
உரையாடிக்கொண்டிருந்தார்கள். உரையாடலின்
இடையே இப்னு அப்பாஸ்
(ரலி)
அவர்கள், உமர் (ரலி)
அவர்களிடம் “மக்களெல்லாம் உங்களை
ஃபாரூக் என்று அழைக்கின்றார்களே?
உங்களுக்கு ஃபாரூக் என்ற
பெயர் வரக்காரணம் என்ன?”
என்று கேட்டார்கள்.
நான்
திருக்கலிமாவை மொழிந்த பின் முதன் முறையாக அண்ணலாரின் திருச்
சமூகத்திற்கு வந்தேன்.
அப்போது அங்கே
ஹம்ஜா அவர்கள் நிற்பதைக் கண்டேன். அப்போது தான் ஹம்ஜா (ரலி) அவர்கள் எனக்கு மூன்று
நாட்களுக்கு முன்பாக இஸ்லாத்தில் இணைந்து கொண்டதை அறிந்து கொண்டேன்.
நேராக, மாநபி
{ஸல்} அவர்களின் அருகாமையில் சென்று “அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர்
வாழ்ந்தாலும் சத்தியத்தின் மீது தானே இருக்கின்றோம்” என்று கேட்டேன். அதற்கு, நபி
{ஸல்} அவர்கள் “ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக!
நீங்கள் இறந்தாலும், உயிர் வாழ்ந்தாலும் சத்தியத்தின் மீது தான் இருக்கின்றீர்கள்”
என்று கூறினார்கள்.
அதற்கு, நான்
“அப்போது ஏன் நாம் மறைவாக செயல்பட வேண்டும்? உங்களை சத்திய மார்க்கத்தைக் கொண்டு
அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே
ஆகவேண்டும்” என்று கூறினேன்.
பின்னர்,
முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் இன்னொரு அணியில் ஹம்ஜா
(ரலி) அவர்களும் இருந்து கொண்டு, நபி {ஸல்} அவர்களை இரு அணிகளுக்கு நடுவில்
ஆக்கிக் கொண்டோம்.
திருகையிலிருந்து
மாவுத்துகள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. அதே
வேகத்தில் நாங்கள் கஅபாவுக்குள் நுழைந்தோம்.
அங்கே, என்னையும்
ஹம்ஜாவையும் நபி {ஸல்} அவர்களோடு சேர்ந்தாற்போல் பார்த்த குறைஷிகளுக்கு அன்று வரை
ஏற்பட்டிராத கைசேதமும், துக்கமும் ஏற்பட்டது.
குறைஷிகளின்
முகத்தில் தென்பட்ட கவலை ரேகைகளை பார்த்த பூமான் நபி {ஸல்} அவர்கள் அன்று தான்
எனக்கு ஃபாரூக் – சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டியவர்” என்று
பெயரிட்டார்கள். அன்று முதல் மக்களும் என்னை அவ்வாறே அழைக்கத் தொடங்கினர்.
ஷஹாதாவை மொழிந்த
அடுத்த நொடியிலேயே இஸ்லாத்தை தன் உயிரை விட உயர்வாகக் கருதினார்கள். அவர்கள்
வாயில் இருந்து வெளிப்பட்ட ““அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர்
வாழ்ந்தாலும் சத்தியத்தின் மீது தானே இருக்கின்றோம்” இந்த வார்த்தையே நம் உயிரைக் கொடுத்தேனும்
இஸ்லாம் உயர்வானது என்பதை எதிரிகளுக்கு உணர்த்த வேண்டும் என்ற அவர்களின்
நெஞ்சுரத்தை வெளிப்படுத்தியது.
அத்தோடு
நின்றிடாமல் இஸ்லாத்தை அழிக்க நினைத்தோர் மத்தியில் வலம் வந்து எதிரிகளின் மனதில்
அச்ச உணர்வை ஏற்படுத்தினார்கள்.
இதன் பின்னர்
நடந்த நிகழ்வுகளை நபித்தோழர்கள் சிலரின் வாயிலாக வரலாற்றில் பதிவானதை நாம்
பார்ப்போம்.
وعن صهيب بن سنان
الرومى رضي الله عنه قال : لما أسلم عمر ظهر الإسلام، ودعى إليه علانية، وجلسنا
حول البيت حلقًا، وطفنا بالبيت، وانتصفنا ممن غلظ علينا، ورددنا عليه بعض ما يأتى
به .
ஸுஹைப் இப்னு
ஸினான் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய
பின்பு தான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பும்
கொடுக்கப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும்,
எங்களுக்கு கஅபாவை தவாஃபும் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து
கொண்டவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி
கொடுத்தோம்”.
وعن
عبد الله بن مسعود قال : ما زلنا أعزة منذ أسلم عمرما كنا نقدر أن نصلى عند الكعبة
حتى أسلم عمر .
அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத்
தழுவியதன் பின்னரே நாங்கள் பலம் மிக்கவர்களாக ஆனோம். மேலும், அது வரை நாங்கள்
கஅபாவின் அருகே கூட நெருங்க முடியாதவர்களாகவே இருந்தோம்”. ( நூல்: ரஹீக் அல் மஃக்தூம் )
உமர் (ரலி)
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை, புகழை, உயர்வை தீர்மானித்த அந்தத் தருணம் இது தான்
என்றால் அது மிகையல்ல.
2. அனஸ்
இப்னு நள்ர்
(ரலி) அவர்களுக்கு சுவனத்துத் தென்றலை நுகர்ந்திட உதவிய
உயரிய ஏக்கம்…
أخبرنا أبو عبد الله
محمد بن محمد بن سرايا ن علي البلدي وغير واحد بإسنادهم عن محمد بن إسماعيل
البخاري، أخبرنا عمرو بن زرارة، أخبرنا زرارة، حدثني حميد الطويل، عن أنس بن مالك،
عن عمه أنس بن النضر، وبه سمي أنس: غاب عمي عن قتال بدر فقال: يا رسول الله؛ غبت
عن أول قتال قاتلت فيه المشركين، والله لئن أشهدني الله قتال المشركين ليرين الله
ما أصنع، فلما كان يوم أحد انكشف المسلمون، فقال: اللهم إن أعتذر إليك مما صنع
هؤلاء، يعني المسلمين، وأبرأ إليك مما جاء به هؤلاء، يعني المشركين، ثم تقدم، فاستقبله
سعد بن معاذ فقال: أي سعد، هذه الجنة ورب أنس أجد ريحها دون أحد، قال سعد بن معاذ:
فما استطعت ما صنع، فقاتل. قال أنس: فوجدنا به بضعاً وثمانين ما بين ضربة بسيف، أو
طعنة برمح، أو رمية بسهم، ووجدناه قد قتل ومثل به المشركون، فما عرفته أخته الربيع
بنت النضر إلى ببنانه.
قال أنس: كنا نرى أو
نظن أن هذه الآية نزلت فيه وفي أشباهه " من المؤمنين رجال صدقوا ما عاهدوا
الله عليه " .
வியாபார விஷயமாக
ஷாமுக்குச் சென்று திரும்பி
வந்து கொண்டிருந்த அனஸ்
(ரலி)
அவர்கள் மதீனாவின் எல்லைக்குள்
காலடியெடுத்த வைத்த போது
மதீனா முன்பை விட
இப்போது உலகின் நாலா
பாகங்களிலும் அறியப்பட்டிருந்ததை எண்ணி
அகமகிழ்ந்தார்கள்.
ஆம்! பத்ரின்
வெற்றியும், எவராலும் வெற்றி
கொள்ள முடியாது என்று
அன்றைய நாடுகள் அஞ்சிக்
கொண்டிருந்த மக்கா குறைஷிகளை
புற முதுகிட்டு ஓடச்
செய்ததையும், நபித்தோழர்களின் அஞ்சா
நெஞ்சத்தையும் தம் பயணத்தின்
வழி நெடுக பிற
பகுதி மக்களெல்லாம் புகழோடு
பேசியதே அவர்களின் அக
மகிழ்வுக்கு காரணம்.
ஊரில் நுழைந்த
அனஸ் (ரலி) அவர்கள்
தான் சந்திக்கும் அத்துனை
நபர்களிடமும் ஆவலோடு பத்ரின்
காட்சிகளை விசாரித்துக் கொண்டே
வந்தார்.
பத்ருக்கான தயாரிப்பு,
போர் மேகம் சூழ்ந்த
காலகட்டம், பத்ருக்கான ஆலோசனை,
போருக்கான வியூகம், முஹாஜிர்,
அன்ஸார் ஆகியோர்களின் தலைவர்கள்
ஆற்றிய நெஞ்சுரம் நிறைந்த
உரைகள், படை வீரர்களின்
அணிவகுப்பு, போர்முனை, யுத்தகளத்தின்
காட்சிகள், மலக்குமார்களைக் கொண்டு
அல்லாஹ் உதவியது, கலந்து
கொண்டோருக்கும், வீரமரணம் அடைந்தோருக்கும் அல்லாஹ் வழங்கிய
சோபனம் என பத்ரைப்
பற்றிய கள நிகழ்வுகளை
மக்கள் வர்ணித்தனர்.
இதுவரை, ஆனந்தத்தோடும்,
மகிழ்ச்சியோடும் கேட்டுக்
கொண்டிருந்த அனஸ் இப்னு
நள்ர் (ரலி) அவர்களுக்கு
“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
பத்ரில் தம்மால் கலந்து
கொள்ள முடியாமல் போனதை
எண்ணி” புழுவாய் துடித்தார்.
அழுது கண்ணீர் வடித்தார்.
அன்றிலிருந்து மதீனாவின்
வீதிகளில், தெருக்களில் காணும்
மக்களிடம் எல்லாம் “அல்லாஹ்
எனக்கு மட்டும் பத்ரைப்
போன்று ஒரு வாய்ப்பைத்
தரட்டும், அப்படித்தந்தால் அவனுக்காக,
அவன் தந்த இந்த
தீனுக்காக நான் என்னவெல்லாம்
செய்வேன் தெரியுமா?” கண்டிப்பாகச்
செய்வேன்! அந்த நாளில்
நான் என்ன செய்யப்
போகிறேன் என்று நீங்களும்
பார்க்கத்தான் போகின்றீர்கள்” என்று
கூறிக் கொண்டே இருப்பார்.
இப்படியாக நாட்கள்
நகர்ந்து கொண்டே இருந்தது.
அன்றொரு நாள் மாநபி
{ஸல்}
அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த
ஓர் உன்னதமான தருணத்தில்
“அல்லாஹ்வின் தூதரே! இணை
வைப்பாளர்களோடு நடந்த முதல்
யுத்தமான பத்ர் யுத்தத்தில்
கலந்து கொள்ள முடியாத
துர்பாக்கியசாலியாக நான்
ஆகிவிட்டேன்! அப்போது நான்
வியாபார விஷயமாக வெளியூர்
சென்றிருந்தேன்.
ஆனால், அல்லாஹ்வின்
மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்!
இன்னொரு முறை இணை
வைப்பாளர்களோடு போரிடும் வாய்ப்பை
வழங்கினால் நான் என்ன
செய்வேன் என்பதை அல்லாஹ்
உங்களுக்கு காண்பிப்பான்! நீங்களும்
அதைப் பார்ப்பீர்கள்” என்றார்கள்.
அவர்கள் எதைப்
பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்களோ அதை நிறைவேற்றத்
தோதுவான தருணத்தை அல்லாஹ்
உஹத் எனும் வடிவில்
வழங்கினான்.
ஆம்! மீண்டும்
மதீனாவை போர் மேகம்
சூழ்ந்து கொண்டது. உஹதுக்கான
அழைப்பு பெருமானார் {ஸல்}
அவர்களிடம் இருந்து வந்தது.
முதல் ஆளாய்
தம்மைப் பதிவு செய்து,
முதல் வரிசையில், முதல்
நபராய் தம்மை ஆக்கிக்
கொண்டார்கள்.
உஹத் யுத்தகளம்..
நாலாபுறமும் முஸ்லிம் படைகள்
சிதறி ஓடிய சிக்கலான
நேரம் அது…
“யாஅல்லாஹ்! முஸ்லிம்கள்
இப்படி சிதறி ஓடுகின்றார்களே அவர்களுக்காக நான்
உன்னிடம் அதற்கான காரணத்தைக்
கூறுகின்றேன். இந்த இணை
வைப்பாளர்கள் எதைச் செய்கின்றார்களோ அதில் இருந்தும்
நான் முழுமையாக விலகிக்
கொள்கின்றேன்! என்று பிரார்த்தித்து விட்டு வாளை
கையில் ஏந்தியவராக வேகமாக
களத்தின் மையப் பகுதியை
நோக்கி விரைகின்றார்கள்.
நிலமை மிகவும்
மோசமாக இருக்கிறதே தோழரே!
இவ்வளவு வேகமாக எங்கே
செல்கின்றீர் என்று ஸஅத்
இப்னு முஆத் (ரலி)
அவர்கள் கேட்க, “இதோ
உஹத் மலையடிவாரத்தில் இருந்து
சுவனத்தின் சுகந்தம் என்னை
அழைத்துக் கொண்டிருக்கின்றது, அதை
நுகர்ந்திடத்தான் விரைவாகச்
செல்கின்றேன்” என்று அனஸ்
இப்னு நள்ர் (ரலி)
அவர்கள் பதில் கூறிவிட்டு
களத்தினில் புகுந்தார்கள்.
ஸஅத் இப்னு
முஆத் (ரலி) அவர்கள்
“அனஸ் இப்னு நள்ர்
போன்று என்னால் நடந்து
கொள்ள ஒரு போதும்
இயலாது” என்று கூறிவிட்டு…
யுத்தகளத்தின் கடைசி கட்ட
காட்சியை விளக்கினார்கள்.
யுத்தம் முடிவுற்று
ஷுஹதாக்களை அடையாளம் காணும்
பணி துவங்கியது. ஒரு
உடலின் அருகே நாங்கள்
சென்று பார்த்தோம். எந்த
விதத்திலும் அடையாளம் காண
முடியாத படி உடல்
முழுவதும் சல்லடையாக்கப்பட்டு, முகம்
முழுவதும் சிதைக்கப்பட்டு கிட்டத்தட்ட
80 க்கும் அதிகமான காயங்கள்
உடலின் சில பகுதிகள்
வாளால் துண்டாடப்பட்டு இருந்தது.
இன்னும் சில பகுதிகள்
ஈட்டியால் குத்தப் பட்டு
இருந்தது, இன்னும் சில
பகுதிகளில் அம்பால் துவைக்கப்பட்டு இருந்தது.
இறுதியில், அந்த
உடல் அனஸ் இப்னு
நள்ர் (ரலி) அவர்களுக்குரியது தான் என்பதை
அவர்களின் சகோதரி ருபைவு
(ரலி)
அவர்கள் அடையாளம் காட்டிய
பின்னர் தான் நாங்கள்
அறிந்து கொண்டோம்.
அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறைநம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்:
“அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த
வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கின்றார்கள்.
அவர்களில் சிலர் தமது
நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்.
இன்னும், சிலர் அதற்கான
நேரத்தை எதிர்பார்த்த வண்ணம்
காத்திருக்கின்றார்கள்” எனும் அஹ்ஸாப்
அத்தியாயத்தின் 23 –ஆம் வசனம்
அனஸ் இப்னு நள்ர்
(ரலி)
அவர்களின் விஷயமாகவே இறக்கியருளப்பட்டது.
( நூல்:
உஸ்துல் ஃகாபா, அல்
இஸ்தீஆப் )
3. உம்மி
மக்தூம் (ரலி)
அவர்களை உயர்வடையச் செய்த தீராத
ஆர்வம்…
அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) கண்பார்வையை இழந்த மாற்றுத் திறனாளி, இஸ்லாமிய
ஜோதியை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட பாக்யசாலி.
في
أعقاب غزوة بدر أنزل الله على نبيه صلى الله عليه وسلم
من آي القرآن ما يرفع شأن المجاهدين ويفضلهم على القاعدين ،
لينشط المجاهد إلى الجهاد ، ويأنف القاعد من القعود ، فأثر ذلك
في نفس ابن أم مكتوم رضي الله عنه وعز عليه أن يُحرم من ذلك الفضل وقال
( يا رسول الله لو أستطيع الجهاد لجاهدت )
ثم سأل الله بقلب خاشع أن ينزل القرآن في شأنه وشأن أمثاله
ممن تعوقهم عاهاتهم عن الجهاد ، فهو بحكم عاهته محروم من
هذه العبادة العظيمة ، فكان يتألم وكان يبكي ، وكان يسأل
النبي صلى الله عليه وسلم ، أن يسأل ربه أن ينزل قرآنا في
شأن ابن أم مكتوم رضي الله عنه المعذور ، وشأن أمثاله ممن
تعوقهم عاهاتهم عن الجهاد ، وجعل يدعو في ضراعة :
( اللهم أنزل عذري ، اللهم أنزل عذري )
فما أسرع أن استجاب الله سبحانه لدعائه ، حدث زيد بن ثابت
رضي الله عنه كاتب وحي رسول الله صلى الله عليه وسلم فقال :
( كنت إلى جنب الرسول صلى الله عليه وسلم ، فغشيته السكينة ،
ونزل عليه الوحي ، فلما سُري عنه قال : " اكتب يا زيد "
فكتبت : (( لا يستوي القاعدون من المؤمنين ))
فقام ابن أم مكتوم وقال :
( يا رسول الله فكيف بمن لا يستطيع الجهاد ؟ )
قال فما انقضى كلامه حتى غشيت رسول الله صلى الله عليه
وسلم السكينة ، ولما سُري عنه قال : " اقرأ ما كتبته يا زيد "
فقرأت (( لا يستوي القاعدون من المؤمنين ))
قال : اكتب (( غير أولي الضرر ))
فكأن من إكرام الله سبحانه أن يستجيب لهذا الصحابي الجليل ،
من آي القرآن ما يرفع شأن المجاهدين ويفضلهم على القاعدين ،
لينشط المجاهد إلى الجهاد ، ويأنف القاعد من القعود ، فأثر ذلك
في نفس ابن أم مكتوم رضي الله عنه وعز عليه أن يُحرم من ذلك الفضل وقال
( يا رسول الله لو أستطيع الجهاد لجاهدت )
ثم سأل الله بقلب خاشع أن ينزل القرآن في شأنه وشأن أمثاله
ممن تعوقهم عاهاتهم عن الجهاد ، فهو بحكم عاهته محروم من
هذه العبادة العظيمة ، فكان يتألم وكان يبكي ، وكان يسأل
النبي صلى الله عليه وسلم ، أن يسأل ربه أن ينزل قرآنا في
شأن ابن أم مكتوم رضي الله عنه المعذور ، وشأن أمثاله ممن
تعوقهم عاهاتهم عن الجهاد ، وجعل يدعو في ضراعة :
( اللهم أنزل عذري ، اللهم أنزل عذري )
فما أسرع أن استجاب الله سبحانه لدعائه ، حدث زيد بن ثابت
رضي الله عنه كاتب وحي رسول الله صلى الله عليه وسلم فقال :
( كنت إلى جنب الرسول صلى الله عليه وسلم ، فغشيته السكينة ،
ونزل عليه الوحي ، فلما سُري عنه قال : " اكتب يا زيد "
فكتبت : (( لا يستوي القاعدون من المؤمنين ))
فقام ابن أم مكتوم وقال :
( يا رسول الله فكيف بمن لا يستطيع الجهاد ؟ )
قال فما انقضى كلامه حتى غشيت رسول الله صلى الله عليه
وسلم السكينة ، ولما سُري عنه قال : " اقرأ ما كتبته يا زيد "
فقرأت (( لا يستوي القاعدون من المؤمنين ))
قال : اكتب (( غير أولي الضرر ))
فكأن من إكرام الله سبحانه أن يستجيب لهذا الصحابي الجليل ،
பத்ர் யுத்தம் முடிவடைந்து, பத்ரில் கலந்து கொண்டவர்களுக்கு அல்லாஹ்
அளித்த சிறப்புகளை கேள்விபட்டு அந்த சிறப்புக்களை தம்மால் அடைய முடியவில்லையே என்ற
ஏக்கத்தோடும், பத்ரில் கலந்து கொள்ளாதவர்களை அல்லாஹ்
விமர்சித்து இறைவசனம் இறக்கியருளியுள்ளான் என்பதைக் கேள்விபட்டு ஒரு வித
நடுக்கத்தோடும் நபிகளாரின் அவைக்கு நபிகளாரைக் காண வருகை தந்தார்கள் அப்துல்லாஹ்
(ரலி) அவர்கள்.
”அல்லாஹ்வின் தூதரே! என்னால்
இயலுமானால் நானும் போரில் கலந்து கொண்டிருப்பேனே!” என்று
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம்
தன் இயலாமையை முறையிட்டார்கள்.
பின்னர், வானை நோக்கி கையை உயர்த்தி “யாஅல்லாஹ்
என் விஷயத்திலும், என் போன்ற இயலாதவர்களின் நிலை குறித்தும்
நீ உன் திருமறையில் வசனம் ஒன்றை இறக்கியருள வேண்டும்” என
அல்லாஹ்விடம் அழுது மன்றாடினார்கள்.
உடனடியாக அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அந்நிஸா
அத்தியாயத்தின் 95 –ஆம் இறைவசனத்தை இறக்கியருளினான்.
அத்தோடு நின்று விட வில்லை அவர்களின் ஈமானிய உணர்வு, இஸ்லாத்தை தந்த
இறைவனுக்காக, இந்த சத்திய சன்மார்க்கத்திற்காக அல்லாஹ்வின்
பாதையில் போரிட்டு வீர மரணத்தை தழுவ வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்களாக, அந்த நாளை எதிர் நோக்கியவர்களாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.
وظيفتها في ساحات القتال فكان يقول
أقيموني بين الصفين ، وحملوني اللواء أحمله لكم وأحفظه
فأنا أعمى لا أستطيع الفرار
أقيموني بين الصفين ، وحملوني اللواء أحمله لكم وأحفظه
فأنا أعمى لا أستطيع الفرار
எப்பொழுதெல்லாம் யுத்த களங்களை நோக்கி நபித்தோழர்கள்
செல்வார்களோ, அப்பொழுதெல்லாம் “என்னையும் உங்களோடு அழைத்துச்
செல்லுங்கள்! இரண்டு படைகளுக்கு மத்தியில் என்னை நிறுத்தி
முஸ்லிம்களின் கொடியை என் கையில் தாருங்கள்.
நான் கண்பார்வையை இழந்தவன் என்பதால் எந்த பேராபத்தைக்
கண்டும் அஞ்சவோ, புறமுதுகிட்டு ஓடவோ என்னால் முடியாது. என் உடலில்
உயிர் இருக்கும் வரை கொடியைக் கீழே வீழ்ந்திடாமல் காத்திடுவேன்” என்று ஆர்வத்தோடு கூறுவார்கள்.
ஒன்றல்ல, இரண்டல்ல உஹதில் துவங்கி யுத்தத்திற்காக மக்கள் அணிதிரள்கிற
போதெல்லாம் முதல் ஆளாய் வந்து நிற்பார்கள் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள்.
في السنة الرابعة عشرة للهجرة ، عقد عمر بن الخطاب
رضي الله عنه العزم على أن يخوض مع الفرس معركة
فاصلة تزيل دولتهم وتزيل ملكهم ، وتفتح الطريق أمام
جيوش المسلمين ، فأمر الفاروق رضي الله عنه على الجيش
الكبير سعد بن أبي وقاص ، ووصاه وودعه ، ولما بلغ الجيش
القادسية ، برز عبد الله بن أم مكتوم رضي الله عنه لابسا درعه
مستكملا عدته ، وندب نفسه لحمل راية المسلمين والحفاظ
عليها أو الموت دونها ، والتقى الجمعان في أيام ثلاثة قاسية
عابسة ، فكانت حربا لم يشهد لها تاريخ الفتوح مثيلا ،
حتى انجلى الموقف في اليوم الثالث عن نصر مؤزر للمسلمين ،
وكان ثمن هذا النصر المبين مئات الشهداء ، وكان من بين
هؤلاء الشهداء عبد الله بن أم مكتوم رضي الله عنه ، فقد وجد
صريعا مضرجا بدمائه وهو يعانق راية المسلمين
இறுதியாக, அல்லாஹ் அவர்களின் ஆர்வத்தை அங்கீகரித்து
அவர்களுக்கு உயர்வளிக்க நாடினான். அந்த நாளும் வந்தது. அவர்களின் தீராத
ஆர்வத்திற்கு உரிய மதிப்பும் அன்று கிடைத்தது.
ஆம்! ஹிஜ்ரி 14 –ஆம் ஆண்டு உமர் (ரலி)
அவர்களின் கிலாஃபத்தில் ஸஅத் இப்னு வக்காஸ் (ரலி)
அவர்களின் தலைமையில் ஒரு மாபெரும் படை பாரசீகத்தை நோக்கிப்
புறப்பட்டது. அதுவே காதிஸிய்யா யுத்தம் என்று வரலாறு பதிவு
செய்திருக்கிறது.
இஸ்லாமிய வரலாறு அதுவரையிலும் காணாத உக்கிரமமான போர்
நிகழ்ந்தது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக கடும் பின்னடைவயும் பெருமளவிலான இழப்பையும்
முஸ்லிம் படையினர் சந்தித்தனர்.
அதில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் கவச உடையணிந்து இஸ்லாமியக் கொடியை ஏந்தி நின்றார்.
மூன்றாம் நாளின் பிற்பகலில் இருந்து முஸ்லிம்களின் கை ஓங்க
ஆரம்பித்து, அது வெற்றியோடு முடித்து வைக்கப்பட்டது.
இந்தப்போரில் வீரத் தியாகிகளின் உடல்களை வீரர்கள்
கணக்கெடுக்கும் போது, அங்கே ஓரிடத்தில் உடலெங்கும் பலத்த காயங்களுடன் இரத்தத்தில் துவைந்து போன
நிலையில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் ஷஹீதாகி கிடந்தார்கள்.
ஆனால், அவரின் இரண்டு கரங்களும் முஸ்லிம்களின் கொடியை மார்போடு
கட்டித்தழுவிய நிலையில் இறுக்க பிடித்திருந்தன.
அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக!
( நூல்: ரிஜாலுன் அன்zஜலல்லாஹு ஃபீஹிம் குர்ஆனா லி இமாமி அப்துர்ரஹ்மான் உமைரா, தபகாத்துல் குப்ரா லி
இமாமி இப்னு ஸஅத், தாரீகுல் இஸ்லாம் லி இமாமி அத்தஹபீ
)
ஒரு இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு அல்லாஹ்விற்காக, ஈமானுக்காக ஏதேனும் ஒரு தியாகத்தை
அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் எந்த அளவு அப்துல்லாஹ் இப்னு
உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் ஆர்வம்
காட்டினார்கள் என்பதை மேற்கூறிய வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
தியாகம் என்றாலே
உயிரை விடுவது தான் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அது தவறான
கண்ணோட்டமல்ல. ஆனால், அது இறுதியான ஒன்று.
அதற்கு முன்னால்
மனிதன் பல்வேறு தியாகங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
உதாரணமாக, கால நேரங்கள், பொருளாதாரம், வாழ்க்கை, உணர்வுகள், கருத்துக்கள், நாட்டங்கள், உள்ளார்ந்த மன்ப்பான்மைகள் போன்றவைகளாகும்.
உயிரை துறப்பது
மட்டும் தியாகம் அல்ல உயிர்ப்போடும், அர்ப்பணிப்போடும் வாழ்வது தான் தியாகம்!
உயிரை விடுவது
மட்டும் தான் தியாகம் என்று மார்க்கம் சொல்லி இருந்தால் இன்று கண்ணுக்கெட்டிய
தூரம் வரை மயானமும், மண்ணறைகளும் மட்டும்தான் காட்சி தரும்.
இஸ்லாத்தை
பொருத்தமாட்டில் தியாகம் என்பதற்கு மதிப்புமிக்க மிகவும் விரும்பக்கூடிய விஷயங்களை
ஒருமனிதன் இறைவனுக்காக விட்டுக் கொடுப்பது அல்லது அர்ப்பணிப்பது என்பது
பொருளாகும்.
ஆகவே, எந்தெந்த வழிகளில் எல்லாம் நாம் இந்த இஸ்லாத்திற்காக, ஈமானிற்காக அல்லாஹ்விற்காக தியாகங்களையும், அர்ப்பணங்களையும்
செய்ய முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் உண்மையாகவே முயற்சி செய்வோம்!
ஏனெனில், மறுமை நாளில்…
ثُمَّ
لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ (8)
“பிறகு, அந்நாளில் (
மறுமை நாளில் ) அல்லாஹ் வழங்கிய
அருட்கொடைகளைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்கப்படத்தான் போகின்றீர்கள்”
( அல்குர்ஆன்:
102: 8 )
அல்லாஹ் நாளை மறுமையில் ”அடியானே! உனக்கு
வழங்கிய அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடையான இஸ்லாத்தை தந்ததற்காக நீ என்ன
செய்தாய்?” என்று கேட்டால் என்ன பதிலைக் கூறப் போகின்றோம்?”
அல்லாஹ்விற்காகவும், இஸ்லாத்திற்காகவும், ஈமானுக்காகவும்
வாழ்கிற நல்ல நஸீபை அல்லாஹ் நம் எல்லோருக்கும் வழங்குவானாக!
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல்
ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
இன்ஷா அல்லாஹ்…. விடுமுறையில் ஊர் செல்வதால் வருகிற வாரம் ஜும்ஆ பதிவு போட இயலாது என்பதைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றென்றும் உங்களின் துஆவின் ஆதரவில்…
பஷீர் அஹ்மத் உஸ்மானி
பல பணிகளுக்கு மத்தியிலும் இதற்கென்று நேரம் ஒதுக்கி பதிவிட்ட உங்களது பணிகளுக்கு ஈருலகிலும் நிரப்பமான கூலியை இறைவன் தந்தருள்வானாக
ReplyDeleteபாரக்கல்லாஹ் ...அருமையான உரை ,,வரலாறை கன் முன் நிருத்துகிறது....அல்ஹம்து லில்லாஹ்
ReplyDelete