Wednesday, 9 December 2015

மனித நேயம் மலரட்டும்! மானுடம் தழைக்கட்டும்!



மனித நேயம் மலரட்டும்! மானுடம் தழைக்கட்டும்!



கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலக மனித சமூகம் பேரிடர் தந்த 14 வெள்ளங்களை கண்டிருக்கிறது. அதில் தற்போதைய வெள்ளமும் ஒன்றுஎன உலக சுகாதார நிறுவனம் அளித்த அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

சென்னை மாநகர மக்கள் எதிர் கொண்ட மழை 100 வருஷங்களில் காணாதது என்று பரவலாக பலர் பேசுகின்றார்கள்; எழுதுகின்றார்கள்.

ராணுவத்தின் முப்படைகளும், தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில அமைப்புகளும் களத்தில் இறங்கியும் மக்களின் துயரங்கள் தொடர்கின்றன.

பல ஆண்டு உழைப்பிலும், சேமிப்பிலும் கட்டிய வீடுகள், வாங்கிய பொருட்கள், வாகனங்கள் தங்களின் கண் முன்னே கடும் சேதத்துக்கு உட்பட்டிருப்பதைத் தாங்க முடியாமல் கதறுபவர்களின் குரல்களைக் கேட்க முடிகிறது.

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிலிருந்து, ஃபிளாட்பாரங்களில் வசிக்கும் மக்களைத் தொடர்ந்து, சிறு தொழில், வியாபாரம், கூலி வேலை செய்பவர்கள் என லட்சக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவிப்பதை அன்றாடம் ஊடகங்கள், வாட்ஸ்அப், முகநூல் போன்றவற்றின் மூலம் பார்க்க முடிகிறது.

மழை வெள்ளத்தால் 15,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பான அசோசேம் மதிப்பிட்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்த மழை வெள்ளம் முன்னெப்போதும் இல்லாத அளவில் மனித நேய மாண்பாளர்கள், மனிதாபிமான உள்ளம் கொண்ட பெருங்கொண்ட ஓர் சமூகத்தை சமுதாயத்திற்கு அடையாளப்படுத்தி உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ”இதுவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மீட்புப் பணியில் 600 படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 லட்சத்து 32 ஆயிரத்து 924 பேர் மீட்கப்பட்டு 5 ஆயிரத்து 554 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, 85 லட்சத்து 98 ஆயிரத்து 280 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளது.

இது தவிர்த்து ராணுவம் 60 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தி 19 ஆயிரத்து 500 பேரை மீட்டெடுத்து 60 ஆயிரம் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இராணுவ கர்னல் ஆண்டனி கிராஸி கூறியுள்ளார்.

இது போக, இயக்கங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தி இந்து தமிழ் நாளேடு வாசகர்கள் என பரவலான மக்கள் மகத்தான பங்களிப்பை தந்திருக்கின்றனர்.

பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், இரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ஃபிளாட்பாரங்கள் போன்றவை மக்களின் புகலிடங்களாக மாறிப்போயின.

அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து, மனிதம் தழைக்க, மனித நேயம் மலர முழுமையாக தம்மை அர்ப்பணித்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்

மனித நேயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட, ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற மனித நேய மாண்பாளர்களுக்கு இஸ்லாம் வழங்கும் நன்மைகளையும், இஸ்லாம் கூறும் சோபனங்களையும் பார்ப்போம்.

1. சேவையும் இறைவழிபாடுதான்

அல்குர்ஆன் இறைவனுக்கு வழிபடுவதை மனித வாழ்க்கையின் லட்சியம் எனக் குறிப்பிடுகிறது.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ ()

நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு வழிபட வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை”.  ( அல்குர்ஆன்: 51: 56 )

அல்குர்ஆன் அல்லாஹ்வின் படைப்பினங்களுக்கு, சக மனிதர்களுக்கு சேவை செய்வதை வாழ்க்கையின் குறிக்கோள் என வலியுறுத்துகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், ஸுஜூதும் செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனுக்கு வழிபடுங்கள். மேலும், சேவையாற்றுங்கள். நீங்கள் வெற்றியடையக் கூடும்!”.                                    ( அல்குர்ஆன்: 22: 77 )

ஒரு மனிதன் வழிபாடுகளின் மூலம் இறை உவப்பையும், இறை நெருக்கத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் தூண்டும் அதே வேளையில் அந்த வழிபாட்டை இரு கூறுகளாக பிரித்திருக்கின்றது.

ஒன்று உடல் ரீதியிலானது. இன்னொன்று உடமை மற்றும் பொருள் ரீதியிலானது.

இறைவனின் நெருக்கத்தை, பொருத்த்தத்தைப் பெறுவதற்காக எவ்வாறு உடல் ரீதியான வழிபாடு முக்கியம் என்று குர்ஆன் வலியுறுத்துகிறதோ அதே போன்று உடமை மற்றும் பொருள் ரீதியான வழிபாடும் முக்கியம் என வலியுறுத்துகிறது.

ஆகவே தான் குர்ஆனில் அல்லாஹ் தொழுகையையும் ஜகாத்தையும் பல இடங்களில் ஒன்றிணைத்தே வலியுறுத்திக் கூறுகின்றான்.

இறைவனின் முன் பக்திப் பரவசத்துடன் தலை தாழ்த்துவது மட்டுமல்ல வழிபாடு என்பது.

மாறாக, தான் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தில் சக மனிதர்களுக்கும் உரிமை உள்ளது என்ற உணர்வுடன் சேவையாற்றுவதும், உதவிக்கரம் நீட்டுவதும் வழிபாடு தான் என்பதை உணர்த்துவதற்காகத் தான் உடல் ரீதியான தொழுகையையும், பொருள் ரீதியான ஜகாத்தையும் இணைத்தே அல்லாஹ் கூறியிருக்கின்றான்.

மேலும், தற்போது முஸ்லிம் சமூகம் தாங்கள் செய்த நற்பணிகளை, சேவைகளை எண்ணி பெருமிதம் அடைந்து வருவதை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக பகிர்வு தளங்களில் பரிமாறுவதின் தெரிய முடிகின்றது.

இதில் முஸ்லிம் சமூகம் மன நிறைவும், பெருமிதமும் அடைந்து விடக் கூடாது. ஏனெனில், உலகில் யார் பாதிக்கப்பட்டாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று அரவணைக்கவும், உதவிக்கரம் நீட்டவும் இஸ்லாம் ஆணையிட்டுள்ளது.

وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ

அல்லாஹ் உமக்கு உபகாரம் செய்திருப்பதைப் போன்று நீயும் சக மனிதர்களுக்கு உபகாரம் செய்”.                              ( அல்குர்ஆன்: 28: 77 )

2. மனித நேயப்பண்பு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பாகும்..

أصابت خيل رسـول اللـه -صلى اللـه عليه وسلم- ابنة حاتم الطائي في سبايا
طيّ فقدمتْ بها على رسـول الله -صلى الله عليه وسلم-فجُعِلَتْ في حظيرة بباب
المسجد فمرّ بها رسول الله -صلى الله عليه وسلم- فقامت إليه وكانت امرأة جزلة ، فقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَ الوافد،فقال ومَنْ وَافِدُك ؟، قالت عدي بن حاتم ، قال الفارُّ من الله ورسوله ؟، ومضى حتى مرّ ثلاثاً ، فقامت وقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَالوافد فامْنُن عليّ مَنّ الله عليك قال قَدْ فعلت ،

ஹாத்திம் தாயி என்பவருடைய மகள் ஸஃபானாவும், அவரின் கோத்திரத்தாரும் கைதியாக பிடிக்கப்பட்டு மதீனாவின் மஸ்ஜித்துன் நபவீயின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தருணம் அது..

நிலைமையை உணர்ந்து கொண்ட ஸஃபானா தழுதழுத்த குரலில் நபி {ஸல்} அவர்களிடம்அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையோ இறந்து விட்டார். என்னை ஆதரிக்க வேண்டிய என் சகோதரன் அதீயோ என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டு ஓடிவிட்டார். என் மீது கருணை காட்டுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்!” என்றார்.

இந்த அபயக்குரல் மூன்று நாட்களாக மாநபி {ஸல்} அவர்களின் காதுகளில் பள்ளிவாசலைக் கடந்து வீட்டிற்கும், வீட்டைக் கடந்து பள்ளிவாசலுக்கும் செல்கிற போது ஒலித்துக் கொண்டே இருந்தது.

மூன்றாம் நாள் ஸஃபானாவின் அருகே சென்ற பெருமானார் {ஸல்} அவர்கள் அன்பு கூர்ந்து நோக்கிஸஃபானாவே! உம்முடைய கோரிக்கை தான் என்ன?” ஆதரவுடன் கேட்டார்கள்.

وفي رواية أخرى أن سُفانة قد قالتلرسول الله -صلى الله عليه وسلم- يا مُحَمّد ! إن رأيتَ أن تخلّي عنّي فلاتشمِّت بي أحياء العرب ؟! فإنّي ابنة سيّد قومي ، وإنّ أبي كان يفُكّ العاني ،ويحمي الذّمار ، ويُقْري الضيف ، ويُشبع الجائع ، ويُفرّج عن المكروب ، ويفشيالسلام ويُطعم الطعام ، ولم يردّ طالب حاجة قط ، أنا ابنة حاتم الطائي )قالالنبي -صلى الله عليه وسلم- يا جارية ، هذه صفة المؤمن حقاً ، لو كان أبوكإسلامياً لترحّمنا عليه خلّوا عنها فإن أباها كان يُحِبّ مكارم الأخلاق ، والله يحب مكارم الأخلاق

அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை வறியோருக்கும், எளியோருக்கும், வாழ வழியில்லாதோருக்கும் கலங்கரை விளக்கமாய் இருந்தவர். உயிருடன் வாழும் காலம் வரைக்கும் ஈந்து கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்த மாமனிதர் அவர். ஆனால், நானும், என் சமூகமும் இன்று இப்படி நிராயுதபாணிகளாய் நின்று கொண்டிருக்கின்றோம். எங்கள் மீது கருணை காட்டுங்கள்! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்!” என்றார்.

قال
رسـول الله صلى الله عليه وسلم
(( ارحموا عزيز قوم ذلّ ، وغنياً افتقر ، وعالماً ضاع بين جهّال ))
[ ذكر هذه  ابن هشام في سيرته ، والطبري في تاريخه ]

நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அண்ணலார் ஸஃபானாவின் தந்தையை வாழ்த்தி விட்டு, விடுதலை அளிப்பதாக கூறிவிட்டு அணிய ஆடையும், உண்ண உணவும், செலவுக்கு பணமும் கொடுத்து விட்டு சுற்றியிருந்த தோழர்களை நோக்கி கண்ணியமானவர்கள் இழிவடைந்த நிலையில் இருப்பதைக் கண்டாலோ, வசதி படைத்தவர்கள் வறுமையில் மாட்டிக் கொண்டாலோ, அறிவுபடைத்தவர்கள் முட்டாள்களிடத்தில் சிக்கிக் கொண்டாலோ உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள்என கூறினார்கள்.

பின்னர், தகுந்த பாதுகாப்போடு ஸஃபானாவை அவரின் சொந்த ஊரான ஷாமுக்கு அனுப்பி வைத்தார்கள். ( நூல்: இப்னு ஹிஷாம், அத்தாரிக் லித் தபரீ )                     

இப்போது, முஸ்லிம் சமூகம் அண்ணலாரின் இந்த அன்புக் கட்டளையைத் தானே செய்திருக்கின்றது.

எனவே, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் வலியுறுத்திய கடமையைத் தான் செய்திருக்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.

முஸ்லிம் சமூகம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

நம்மை நோக்கி வருகிற பிற சமூக மக்களின் வாழ்த்துக்களை, பாராட்டுக்களை எண்ணி, அகமகிழ்ந்து போகிறோம் எனில் இஸ்லாம் மனித நேயப் பணிகளுக்கு வழங்குகிற அபரிமிதமான நன்மைகளை இழக்கும் அபாயம் நேரிடலாம்.

3. எல்லா காலங்களிலும் மனித நேயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)

தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்”.                                               ( அல்குர்ஆன்: 60:8 )

4. அனைத்து உயிரினங்களோடும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்..

وعَنْ أَبِي هُرَيْرَةَ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :¬«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ إِذْ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا، فَنَزَلَ فِيهَا فَشَرِبَ، وَخَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنْ الْعَطَشِ مِثْلُ الَّذِي بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ». فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا؟ فَقَالَ: «فِي كُلِّ ذِي كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»[البخاري ومسلم].

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்குக் கடுமையாக தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி நீர் அருந்தினான். தாகம் தீர நீர் அருந்திய பின்னர் மேலே வந்தான். அங்கே நாயொன்று தாகத்தின் கொடுமையால் தரையை நக்கிக் கொண்டிருந்தது.

அப்போது அந்த மனிதன் நாம் எவ்வாறு தாகத்தால் துடித்துக் கொண்டிருந்தோமோ அவ்வாறு தானே இந்த நாயும் தாகத்தால் துடித்துக் கொண்டிருக்கின்றதுஎன்று தன் மனதினுள் எண்ணினான்.

உடனே, கிணற்றுக்குள் இறங்கி தனது காலுறைக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வெளியே வந்து அந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனது இந்தச் செயலை மிகவும் மதித்தான். அதன் விளைவாக அவனது பாவங்களை மன்னித்தான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! பிராணிகளுக்குச் சேவை செய்தாலும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் ஈரமான ஈரலுடைய எந்த ஒன்றுக்கும் அதாவது எந்த ஓர் உயிர் பிராணிக்கும் சேவை செய்தாலும் நன்மை கிடைக்கும் என்று பதில் கூறினார்கள்.                                        ( நூல்: புகாரி )

5. மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையே!..

وعن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا رب كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني قال يا رب كيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني قال يا رب كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان فلم تسقه أما علمت أنك لو سقيته لوجدت ذلك عندي رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களை நோக்கி மறுமை நாளில் அல்லாஹ் மனிதனிடம் மனிதனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீயோ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே!” என்று கேட்பான்.

மனிதன் பதைபதைப்போடு என் இறைவனே! நீ தானே அனைத்துலகையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றாய்! உன்னை எப்படி நான் வந்து நலம் விசாரிப்பதுஎன்று கேட்பான்.

அப்போது, அல்லாஹ் இன்ன மனிதன் நோயுற்றிருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது உடல் நலம் பற்றி நீ விசாரிக்கச் செல்லவில்லையே! நீ அவனை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” என்று கூறுவான்.

மீண்டும், அல்லாஹ் மனிதா! உன்னிடம் நான் உணவு கேட்டேனே? நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை?” என்று கேட்பான்.

அதற்கு, மனிதன் அகில உலகங்களின் இரட்சகன் நீ! எப்போது நீ பசியோடு இருந்தாய்? நான் உனக்கு எப்படி உணவளிப்பது?” என்று கேட்பான்.

அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் பசியோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது பசியை போக்கிட உணவு கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.

மீண்டும், அல்லாஹ் மனிதா! நான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்டேனே? ஏன் எனக்கு நீ குடிக்கத் தண்ணீர் தரவில்லை?” என்று கேட்பான்.

அதற்கு, மனிதன் அகில உலகங்களின் அதிபதி நீ! எப்போது தாகித்திருந்தாய்? உனக்கு எவ்வாறு நான் தண்ணீர் புகட்டுவது?” என்று கேட்பான்.

அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் தாகத்தோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது தாகத்தைப் போக்கிட நீ தண்ணீர் கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தீர்த்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.
                                                        ( நூல்: முஸ்லிம் )

மனித குலத்திற்கு செய்யும் சேவையை இறைவன் தனக்கு செய்யும் சேவைக்கு ஒப்பாக்கி கூறுவதில் இருந்து மனிதகுல சேவையின் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.

6. ஓர் உயிரை வாழ வைப்பதென்பது

وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

எவர் ஓர் உயிரை வாழ வைக்கின்றாரோ அவர் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் வாழ வைத்தவரைப் போன்றவராவார்”.          ( அல்குர்ஆன்: 5: 32 )

7. வறியவர்களின் நிலை கண்டு வாரி, வாரி வழங்க வேண்டும்..

عن جرير بن عبد الله البجلي قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “”(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு சபையில் அமர்ந்திருந்தோம்.

அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் ( கழுத்துகளில் ) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லது, அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

அவர்களது வறிய நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( ஒருவித பதட்டத்தோடு ) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.

அப்போது,  “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.

 பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்” என்கிற  (4 –ஆம் அத்தியாயத்தின் 1 –ஆவது ) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.

பின்னர், ‘அல் ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள ”இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ எனும் ( 59 –ஆம் அத்தியாயத்தின் 18 –ஆவது ) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது ( உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்றும் ”பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.

உடனே ( நபித்தோழர்கள் ) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை ( நிறைய பொருட்களைக் ) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது, பின்னர் தொடர்ந்து மக்கள் ( தங்களின் தர்மப் பொருட்களுடன் ) வந்துகொண்டிருந்தனர்.

இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று இலங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது.

அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட) வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு” என்று கூறினார்கள்.                                    ( நூல்: முஸ்லிம் )

மனித நேய மாண்பாளர்களுக்கும், மனித குலத்திற்கு சேவை செய்வோருக்கும் இஸ்லாம் கூறும் சோபனங்கள்

பசித்தவருக்கு உணவளிப்பது, தாகிப்பவருக்கு தண்ணீர் அளிப்பது, ஆடையில்லாதோருக்கு ஆடை கொடுப்பது, உணவு சமைப்பதற்கு உபகரணங்கள் வழங்குவது, இதர இன்றியமையாதத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது மிகச் சிறந்த செயல் எனக் கூறிடும் இஸ்லாம் அதற்காக அபரிமிதமான நன்மைகளை வாரி வழங்குகின்றது.

1. இறை நேசத்திற்கு உரியவராகின்றார்.

وقد قال النبي – صلى الله عليه وسلم 
 أحب الناس إلى الله عزَّ وجل أنفعهم للناس ، وأحب الأعمال إلى الله عزَّ وجل سرور تدخله على مسلم ، أو تكشف عنه كربه ، أو تقضي عنه ديناً ، أو تطرد عنه جوعاً ، ولو أن تمشي مع أخيك في حاجته أحب إليَّ من أن أعتكف في المسجد شهراً

ஒரு கிராமவாசி மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்துஅல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்கு பிரியமான செயல் எது? என்று வினவினார்.

 அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} “மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் நேசத்திற்குரியவர் சக மனிதர்களுக்கு எல்லா வகையிலும் பயன் தருகின்றவரே! செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிமின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஆகும்.

அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய ஒரு கஷ்டத்தை நீக்குவதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய கடனை அடைப்பதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய பசியை, வறுமையை போக்குவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!

மீண்டும், கேள்வி கேட்ட அந்த கிராமவாசியை நோக்கிநீர் உம் சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்து செல்வதென்பது ஒரு மாத காலம் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதை விட எனக்கு மிகப் பிரியமானதாகும்என்று பதில் கூறினார்கள்.                                       ( நூல்: அஹ்மத் )

2. இக்கட்டான தருணங்களில் இறை உதவிக்கு சொந்தமாகின்றார்…

في كتاب البر والصلة للإمام ابن الجوزي
ما رواه الإمام : عن عكرمة رحمه الله قال 

إن ملكا ممن سبق ، قال لأهل مملكته : إن تصدق أحد بشيء لأقطعن يديه
فجاء رجل إلى امرأة ، فقال : تصدقي علي ، قالت : كيف أتصدق عليك
والملك يقطع يدي كل من يتصدق .. 

قال : أسألك بوجه الله ، لما تصدقت عليّ ، فتصدقت عليه برغيفين ، فعلم
بذلك الملك ، فأرسل إليها فقطع يديها ..
 ثم إن الملك قال لأمه : دليني

على امرأة جميلة أتزوجها ؟ قالت : هاهنا امرأة ما رأيت مثلها قط ، ولكن
بها عيب شديد ، إنها قطعاء اليد .. فأرسل إليها ، فلما نظر إليها أعجبته ،
فقال : أتريدين أن أتزوجك ؟ قالت : نعم .. فتزوجها ، ودخل بها ، فحسدها
ضرائر لها ، فخرج الملك يقاتل عدوا ، فكتب ضرائرها إليه أنها فاجرة  وقد ولدت غلاما ،
  
فكتب الملك إلى أمه : خذي هذا الغلام ، فاحمليه على عنقها
واضربيها ، واخرجيها من الدار إلى الصحراء ، وبينما هي تمشي والصبي
على عنقها إذ مرت بنهر ، فنزلت لتشرب ، فبدر الصبي عن رقبتها
فوقع في الماء فغرق .. فجلست تبكي ..

وبينما هي كذلك .. مرّ بها رجلان ، فقالا لها : ما يبكيك ؟
قالت : ابني كان على عاتقي ، فسقط في الماء فغرق ..
فقالا لها : أتحبين أن نخرجه لك ؟ قالت : إي والله ..
قال : فدعوا الله عز وجل ، فخرج ابنها إليها ، ثم قالا : أتحبين
أن نرد يديك إليك ؟
قالت : نعم ، فدعوا الله ، فاستوت يداها ..
فقالا لها : أتدرين من نحن ؟
قالت : لا .. قالا : نحن رغيفاك اللذان تصدقت بهما

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் இக்ரிமா (ரஹ்) அவர்களின் வாயிலாக ஓர் செய்தியை தங்களின் ”அல் பிர்ரு வஸ்ஸிலா” எனும் நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

“முன் சென்ற காலத்தில் ஓர் அநியாயக்கார அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்கள் எவரும் தர்மம் செய்யக்கூடாது என்று தடைவிதித்திருந்தான். தடையை மீறுபவர்களின் இரு கைகளையும் துண்டித்து பெரும் தண்டனை வழங்கி தண்டித்து வந்தான்.

இந்நிலையில், ஒரு வீட்டின் முன்னால் நின்று கொண்டு ஒருவர் பசிப்பதாகவும், உணவு வேண்டும் என்றும் யாசித்துக் கொண்டிருந்தார். அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்மனி தங்கள் நாட்டுச் சட்டத்தைக் கூறி தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார்.

ஆனால், அந்த யாசகரோ, தாம் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டதாகவும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தமக்கு உண்பதற்கு உணவு வழங்குமாறும் வேண்டி நின்றார்.

இளகிய உள்ளம் படைத்த அந்தப் பெண்மனி வீட்டின் உள்ளே சென்று இரண்டு ரொட்டிகளை எடுத்து வந்து பசியால் துடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் வழங்கினார்.

அரசரின் அமைச்சர்களுக்கு இது தெரிய வரவே அப்பெண்மனியின் இரு கைகளும் துண்டிக்கப்பட்டது.

சில மாதங்கள் கழித்து அந்த அரசனுக்கு திருமண ஏற்பாடுகள் நடை பெற்றது. எந்தப் பெண்ணும் அரசனுக்கு பிடிக்காமல் போகவே அரசன் தன் தாயிடம் எனக்கு அழகிய பெண்ணைத் திருமணம் செய்து கொடு என்று கூறினான்.

அப்போது, அரசனின் தாய் நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை நமது நாட்டில் பார்த்தேன். அவளை விட அழகான எந்த ஒரு பெண்ணையும் நான் பார்த்ததில்லை என்று கூறி விட்டு, ஆனால், அவளுக்கு ஒரு குறை உண்டு அவளுக்கு இரண்டு கைகளும் இல்லை என்று கூறினாள்.

பரவாயில்லை, அந்தப் பெண்ணையே தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு அரசன் தன் தாயிடம் கூறினாள்.

இறுதியில், அரசனுக்கு அந்தப் பெண்ணைப் பேசி திருமணமும் செய்து வைத்தாள் அந்தத் தாய்.

திருமணம் நடந்த இரவன்று இல்லற வாழ்க்கை முடிந்ததன் பின்னர் தன் மனைவியிடம் ஏன் உனக்கு இரண்டு கைகளும் இல்லை? என்று கேட்டான்.

அப்போது, அந்தப் பெண்மனி மேலே நடந்த அந்த நிகழ்வுகளை விவரித்துக் கூறினாள். கொதித்தெழுந்த அவன் அவளோடு வாழாமல் அவளை கொடுமைப் படுத்தினான்.

சில நாட்கள் கழித்து எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று விட்டான். இல்லற வாழ்வில் ஈடுபட்டதன் விளைவாக அப்பெண்மனி கர்ப்பமானாள். அடுத்த பத்து மாதத்தில் அழகிய ஆண்மகனையும் பெற்றெடுத்தாள்.

போர் முனையில் இருக்கும் தம் மகனுக்கு தாய் ஆசையோடு ஆண் வாரிசு ஒன்று பெற்றெடுத்திருப்பதைக் கடிதத்தின் மூலம் தெரிவித்தாள்.

அரசன் பதில் கடிதம் ஒன்றை எழுதினான். அதில்.. “என் நாட்டின் சட்டத்தை மதிக்காத ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்ததை நான் மறக்க விரும்புகின்றேன். எனவே, அவளையும், அவள் பெற்றெடுத்த ஆண் வாரிசையும் அரண்மனையை விட்டு துரத்தி விடுங்கள் தாயே!” என்று எழுதப் பட்டிருந்தது.

மகனாக இருந்தாலும் அரசன் அல்லவா? அவன் ஆணைக்கிணங்க அப்பெண்மனி பெற்றெடுத்த மகனோடு நாட்டை விட்டு துரத்தப் பட்டாள்.

கண்ணீரோடு அந்தப் பெண் தன் வாரிசை நெஞ்சோடு ஒரு துணியில் வாரி கட்டிக்கொண்டு காட்டின் வழியாக நடந்து வந்தாள்.

பசியும், தாகமும் அவளை வாட்டி வதைக்கவே அங்கும் இங்கும் ஏதாவது கிடைக்காத என ஏங்கித்தவித்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு, அங்கே வந்தாள்.

இரு கைகளும் தான் இல்லையே? எப்படி தண்ணீர் குடிக்க முடியும். ஆடு, மாடு குடிப்பது போன்று தலையை தாழ்த்தி ஓடும் நதியில் வாய் வைத்து உறிஞ்சி தண்ணீர் குடித்தாள். கன நேரத்தில் அவள் நெஞ்சோடு கட்டியிருந்த துணி அவிழ்ந்து அதனுள் இருந்த குழந்தை ஓடும் நதிக்குள் விழுந்தது.

துடி துடித்துப்போனாள். செய்வதறியாது திகைத்து நின்றாள். நதிக்குள் விழுந்த குழந்தை நதிக்குள் மூழ்கி இறந்து போனது.

ஆற்றுப் படுகையின் ஓரத்தில் அமர்ந்து அல்லாஹ்விடம் முறையிட்டாள். அப்போது அங்கே இரண்டு மனிதர்கள் வந்தார்கள்.

அழுது கொண்டிருந்த அப்பெண்மனியிடம் அழுகைக்கான காரணத்தை வினவ, அப்பெண்மனி நடந்த சம்பவத்தைக் கூறி அழுதாள்.

அப்போது, அவ்விருவரும் ”பெண்ணே! உனக்கு உன் குழந்தை மீண்டும் உயிருடன் வேண்டுமா?” என்று கேட்க, அவள் ஆம் என்றாள்.

அவ்விருவரும் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அப்போது தான் அந்த ஆச்சர்யம் நடந்தது. எந்த இடத்தில் குழந்தை மூழ்கியதோ அங்கிருந்து அழுகுரலோடு குழந்தை மீண்டும் உயிருடன் வந்தது.

மீண்டும், அவ்விருவரும் ”பெண்ணே! வெட்டப்பட்ட உன் இரு கைகளும், முன்பு போல் உனக்கு வேண்டுமா?” என்று கேட்க, அவள் ஆம் என்றாள்.

அவ்விருவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். என்ன ஆச்சர்யம்? முன்பு போல் அவளுக்கு இரு கைகளும் வந்து விட்டது.

இப்போது, அவர்கள் இருவரும் அப்பெண்மனியிடம் ”நாங்கள் இருவரும் யார் தெரியுமா?” என்று கேட்டனர்.

இழந்த இரு கைகளையும், இறந்து போன குழந்தையையும் மீண்டும் கண்ட அந்தப் பெண் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் “தெரியாது” என்று பதில் கூறினாள்.

அப்போது, அவ்விருவரும் ”நாங்கள் இருவரும் தான் நீ இறை திருப்தியை நாடி வழங்கிய இரண்டு ரொட்டிகள், அல்லாஹ் உனக்கு உதவி செய்வதற்காக இப்போது எங்களை இந்த உருவ அமைப்பில் அனுப்பி வைத்தான்” என்று கூறினார்கள்.

( நூல்: கிதாபு அல் பிர்ரு வஸ்ஸிலா லி இமாமி இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்).. )

3. மண்ணறை முதல் மஹ்ஷர் வரை உதவி செய்யப்படுவார்….


فعن جعفر بن يزيد، عن جعفر بن محمد عن أبيه عن جده رضي الله عنهم قال: قال رسول الله صلى الله عليه وسلم
ما أدخل رجلٌ على مؤمنٍ سروراً إلا خَلَقَ الله عزَّ وجل من ذلك السرور ملكاً يعبد الله عزَّ وجل ويوحِّده، فإذا صار العبد في قبره، أتاه ذلك السرور فيقول: أما تعرفني ؟! فيقول له: مَن أنت ؟ يقول: أنا السرور الذي أدخلتني على فلان، أنا اليوم أونس وحشتك، وألَقِّنك حجتك، وأثبتك بالقول الثابت، وأشهدك مشاهدك يوم القيامة، وأشفع لك إلى ربك، وأريك منزلتك في الجنة

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கையாளன் ஒருவன் தன் சக முஸ்லிமின் வாழ்வில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியின் பிரதிபலனாக அல்லாஹ் ஒரு வானவரை படைக்கிறான். அந்த வானவர் அல்லாஹ்வை வணங்குகின்றார்.

அந்த இறைநம்பிக்கையாளர் இறந்து, கப்ரில் வைக்கப்பட்ட பிறகு அந்த மகிழ்ச்சிக்கு அழகிய தோற்றம் கொடுத்து அல்லாஹ் கப்ருக்கு அனுப்புகின்றான். அது அவன் முன்னால் வந்து நின்றுநான் யார் என்பதை நீ அறிவாயா?” என்று கேட்கும்.

அப்போது, அந்த முஃமின் நீயார்? என்று கேட்பார். அதற்கு அந்த உருவம் நான் தான் உலகில் இன்ன மனிதனின் வாழ்வில் நீ ஏற்படுத்திய மகிழ்ச்சி என்று சொல்லி விட்டுதொடர்ந்துஇன்று நான் உன்னுடைய வெருட்சியை நீக்க வந்திருக்கின்றேன். உம் ஆதாரத்தை நிலை நிறுத்தவும், உம்மை வானவர்களின் கேள்வியின் போது சிறந்த பதிலை கொண்டு தரிபடுத்தவும் வந்திருக்கின்றேன்.

மறுமை நாளில் உனக்கு சாட்சியாகவும், உம் இறைவனிடத்தில் சிறந்த பரிந்துரையாகவும் நான் இருப்பேன்.

மேலும், சுவனத்தில் உம் இருப்பிடம் எது என்பதை இப்போது உமக்கு காண்பித்து தரவே நான் இங்கு வந்துள்ளேன்!” என்றும் அது சொல்லும்.

                                               ( நூல்: தர்ஃகீப் வத் தர்ஹீப் )

4. சுவனத்தில் சாந்தியோடு நுழைவார்…

فعن عبد الله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «اعبدوا الرحمن، وأطعموا الطعام، وأفشوا السلام، تدخلوا الجنة بسلام»


அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள், பசித்தவருக்கு உணவளியுங்கள், ஸலாத்தைப் பரப்புங்கள், நீங்கள் சாந்தியோடு சுவனம் நுழைவீர்கள்!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                            ( நூல்: திர்மிதீ )

وعن البراء بن عازب رضي الله عنه قال :جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، علمني عملا يدخلني الجنة. قال :«أعتق النسمة وفك الرقبة، فإن لم تطق ذلك
فأطعم الجائع واسق الظمآن

பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சுவனத்தில் நுழையச் செய்திடும் ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள்!” என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் ”அடிமையை விடுவிப்பீராக! ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்போரை காப்பாற்றுவாயாக! அல்லது அகதிகளை ஆதரிப்பீராக! இவற்றைச் செய்திட உம்மால் இயலவில்லை எனில் பசித்தவருக்கு உணவளிப்பீராக! அல்லது தாகித்தவருக்கு தண்ணீர் வழங்குவீராக!” என்று கூறினார்கள். (நூல்:இப்னு ஹிப்பான்) 

وروى أحمد في المسند، والترمذي في السنن عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم
 أيما مؤمن أطعم مؤمنا على جوع أطعمه الله يوم القيامة من ثمار الجنة، وأيما مؤمن سقى مؤمنا على ظمأ سقاه الله يوم القيامة من الرحيق المختوم، وأيما مؤمن كسا مؤمن على عري كساه الله من خضر الجنة

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் பசித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு உணவளிக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து கனிகளை மறுமையில் வழங்குவான்.

“எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் தாகித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு தண்ணீர் கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு ரஹீக்கில் மஃதூமின் நீரை  மறுமையில் புகட்டுவான்.


“எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் ஆடையில்லாதிருந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கு அணிய ஆடை கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து பட்டாடையை மறுமையில் அணிவிப்பான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                  ( நூல்: திர்மிதீ )

وروى أحمد في الزهد عن عبد الله بن عبيد بن عمير، قال
 يحشر الناس يوم القيامة أجوع ما كانوا وأعطش ما كانوا وأعرى ما كانوا ، فمن أطعم لله عز وجل أطعمه الله عز وجل ، ومن كسا لله عز وجل كساه الله عز وجل ، ومن سقى لله عز وجل سقاه الله عز وجل ،

அப்துல்லாஹ் இப்னு உபைத் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிற இன்னொரு அறிவிப்பில்… இறை நம்பிக்கையாளர் – என்ற வார்த்தை இடம் பெறாமல் பொதுவாக அல்லாஹ்விற்காக யார் மேற்கூரிய நற்பணிகளை செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மேற்கூரிய சோபனங்களை வழங்குவதாக முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆகவே, உலக மாந்தருக்கு சேவை செய்தல், மனித நேயத்தோடும், மனிதாபிமானத்தோடும் நடத்தல் என்கிற மகத்தான பணியை இஸ்லாம் வழிபாடாகவே கருதுகின்றது.

அதற்கென எல்லையில்லா பல நன்மைகளை வாரி வழங்குவதை மேற்கூரிய நபிமொழிகள், மற்றும் வரலாறுகள், திருமறை வசனங்கள் உணர்த்துவதை நம்மால் உணர முடிகின்றது.

எனவே, எல்லா காலத்திலும், எல்லா மனிதர்களிடத்திலும் மனித நேயத்தோடு நடந்து மானுடம் தழைக்க உதவியாளர்களாய் இருப்போம்!

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களோடும் இரக்கத்தோடும், சேவை உணர்வோடும் நடந்து கொள்ளும் அழகிய பண்பைத் தந்தருள் புரிவானாக!
           
           ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
                     வஸ்ஸலாம்!!!

17 comments:

  1. உலகம் உள்ள வரை உதவும் உள்ளம் கொண்டவர்கள் என்பதை செயலில் காட்டிய முஸ்லிம்கள் படிக்க வேண்டிய பதிவு
    உதவிக்கு பின் பெருமை வேண்டாம் என்பதை கூறும் பதிவு

    ReplyDelete
  2. அருமையான தகவல்




    நீண்ட நீண்ட சம்பவங்கள்


    ஜஸாகல்லாஹ்


    ReplyDelete
  3. திடீர்னு மவ்லானா இப்படிதான் அசத்திடுவார் அல்ஹம்துலில்லாஹ் அருமையான படைப்பு அறிவார்ந்த அனுகுமுறை

    ReplyDelete
  4. திடீர்னு மவ்லானா இப்படிதான் அசத்திடுவார் அல்ஹம்துலில்லாஹ் அருமையான படைப்பு அறிவார்ந்த அனுகுமுறை

    ReplyDelete
  5. Masha Allah அற்புதமான கட்டுரை

    ReplyDelete
  6. Nice jumaa bayan at salem Ammapet ... jazakallah khairen kasheera...

    ReplyDelete
  7. Nice jumaa bayan at salem Ammapet ... jazakallah khairen kasheera...

    ReplyDelete
  8. அற்புதமான கட்டுரை அல்லாஹ் தாங்களுக்கு சிறப்பான அந்தஸ்து வழங்குவானாக ஆமீன்

    ReplyDelete
  9. எப்பவுமே சேவை செய்யும் பஷீர் ஆலிம்சா உங்கள் சேவையை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்! அற்புதமான தகவல்கள். Jazakallahu خيرا கஸீரன் fiddhaarain

    ReplyDelete
  10. தீடீர்னு அசத்துபவர் அல்ல எப்பவும் அசத்தக்கூடியவர்

    ReplyDelete
  11. மாஷா அல்லாஹ்...
    மனிதநேயம் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எவவளவு பிரதானமானது என்பதை குறித்து ஒரு பெரும் தகவல் களஞ்சியத்தையே தந்துள்ளீர்கள் மவ்லானா...
    ஜஸாக்குமுல்லாஹு அஹ்ஸனல் ஜஸா

    ReplyDelete
  12. மனித நேயத்தை பிரபஞ்ச உண்மைகளுடன் பூமான் நபி(ஸல்) அவர்களின் அருமையான முன்மாதிரிகளுடன் விளக்கினீர்கள். தாங்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள். ஜஸாகல்லாஹ்

    ReplyDelete