எது
முதலில்.......?
உலகளாவிய அளவில்
முஸ்லிம்களின் இருப்பு இன்று
கேள்விக்குறியாகி வருகின்றது.
முஸ்லிம்களின் அடையாளங்கள்
பயங்கரவாதமாகவும், தீவிரவாதமாகவும் சித்தரிக்கப்
படுகின்றது.
முஸ்லிம் சமூகத்தின்
அதிகாரம், அரசியல், செல்வாக்கு
சரிந்து கொண்டிருக்கின்றது.
உலகெங்கிலும் உள்ள
சிறைச்சாலைகள் முஸ்லிம்களால் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தினந்தோரும் உலகில்
எங்காவது ஒரு பகுதியில்
முஸ்லிம் என்ற ஒரே
காரணத்திற்காக பெண்கள், குழந்தைகள்
என கொத்து கொத்தாய்
உயிர்கள் கொல்லப் பட்டு
வருகின்றது.
வீடு, வாசல்,
சொத்து, சுகங்களை இழந்து
அகதிகளாய் தஞ்சம் புகும்
முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் பெருகி வருகின்றது.
மொத்தத்தில், இன்றைய
முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை
நிலைகள் மகிழ்ச்சி மிக்கதாய்
அமையப் பெற்றிருக்கவில்லை.
உலகளாவிய அளவில்
துவங்கி நாம் வசிக்கும்
தெரு வரைத் தொடர்ந்து
நல் இல்லங்கள் வரை
தொடர்கிறது.
அதிலும் குறிப்பாக
இன்று முஸ்லிம் சமூகத்தின்
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக, நிம்மதியானதாக,
சந்தோஷம் நிறைந்ததாக இல்லை
என்பது மறுக்க முடியாத
உண்மையாகும்.
ஆனால், அல்லாஹ்வின்
வார்த்தைகளும், வாக்குறுதிகளும் இதற்கு
நேர்மாற்றமாய் அமைந்திருப்பதை அல்குர்ஆனில்
காணமுடிகின்றது.
وَلِلَّهِ
الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ
அல்லாஹ் கூறுகின்றான்:
“ஆயினும், உண்மையில் கண்ணியம்
என்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய
தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் மட்டுமே
சொந்தமானதாகும்”. ( அல்குர்ஆன்:
63: 8 )
يَا
أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ ()
அல்லாஹ் கூறுகின்றான்:
“ ( நபியே! ) உமக்கும், உம்மைப்
பின்பற்றுகிற இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ்
போதுமானவனாக இருக்கின்றான்”.
( அல்குர்ஆன்: 8: 64 )
وَعَدَ
اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ
لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ
وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ
مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا
அல்லாஹ் கூறுகின்றான்:
“உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை
கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ
அவர்களிடம் – அல்லாஹ் வாக்குறுதி
அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப்
பூமியில் பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு
முன் வாழ்ந்த மக்களை
பிரதிநிதிகளாக்கியது போன்று.
மேலும், அவர்களுக்காக
அல்லாஹ் எந்த மார்க்கத்தை
விரும்பினானோ அந்த மார்க்கத்தை
வலுவான அடிப்படைகள் மீது
நிலைநாட்டுவான். மேலும், அவர்களின்
இன்று நிலவுகின்ற அச்ச
நிலையை அமைதி நிலையாய்
மாற்றித் தருவான்”.
( அல்குர்ஆன்: 24: 55 )
مَنْ
عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ
حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا
يَعْمَلُونَ ()
அல்லாஹ் கூறுகின்றான்:
“ஆணாயினும் பெண்ணாயினும் எவர்
இறை நம்பிக்கை கொண்டவராய்
இருக்கும் நிலையில் நற்செயல்
புரிகின்றாரோ அவரை இவ்வுலகில்
மகிழ்ச்சியான வாழ்வு வாழச்
செய்வோம்”. ( அல்குர்ஆன்:
16: 97 )
முஸ்லிம் சமூகத்தின்
இன்றைய இத்தனைப் பிரச்சனைகளில்
தலையாயது எது? முதலில்
சரி செய்யப்பட வேண்டிய
இன்றியமையாத காரியம் எது?
முஸ்லிம்களின் இருப்பை
ஸ்திரப்படுத்துவதா? அரசியல், அதிகாரம்,
செல்வாக்கு ஆகியவைகளை மீட்டெடுப்பதா?
அகதிகளாவதில் இருந்து காப்பாற்றுவதா?
உயிர்ப்பலிகள் நடைபெறாமல் தடுப்பதா?
அல்லது மகிழ்ச்சியான குடும்பங்களை
அமைப்பதா?
எது முதலில்?
அதுவும் எந்த அடிப்படையில்?
வாருங்கள்! இஸ்லாமிய வழிகாட்டுதலின் கீழ் இன்றைய
முஸ்லிம் சமூகத்தின் இன்றியமையாத
தேவை எது? என்பதை
சற்று பார்த்து விட்டு
வருவோம்!!
உலக முஸ்லிம்
சமூகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு
காண்பதா? அல்லது இன்றைய
நம் குடும்ப வாழ்வை
மகிழ்ச்சிகரமாக அமைப்பதா? என்பதை
முன்னிறுத்தி நாம் குர்ஆன்,
ஸுன்னாவை அணுகினால் முதலில்
நாம் நம் குடும்ப
வாழ்வை சரி செய்வதைத்
தான் தேர்ந்தெடுக்க வேண்டும்
என்கிற தீர்வைப் பதிலாகப்
பெற முடிகிறது.
எது
முதலில்………?
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வதாக இருக்கட்டும், நல்லறங்களைக்
கொண்டு ஏவுவதாக இருக்கட்டும்,
நரகில் இருந்து காப்பாற்றும்
முயற்சியில் ஈடுபடுவதாக இருக்கட்டும்
முதலில் அதை நம்
குடும்பங்களில் இருந்து தான்
தொடங்க வேண்டும் என்று
அல்லாஹ் ஆணையிடுவதை குர்ஆனில்
பார்க்க முடிகின்றது.
وَأَنْذِرْ
عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
அல்லாஹ் கூறுகின்றான்:
( நபியே! ) “உம்முடைய மிக
நெருங்கிய உறவுகளை அச்சமூட்டி
எச்சரிக்கை செய்யுங்கள்!”. ( அல்குர்ஆன்:
26: 214 )
وَأْمُرْ
أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا
அல்லாஹ் கூறுகின்றான்:
( நபியே! ) “தொழுகையைப் பேணி
வருமாறு உம்முடைய குடும்பத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக!
நீரும் அதை முறையாக
கடை பிடித்து வருவீராக!.” ( அல்குர்ஆன்:
20: 132 )
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا
النَّاسُ وَالْحِجَارَةُ
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும்,
கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த
நரக நெருப்பிலிருந்து உங்களையும்,
உங்கள் குடும்பத்தார்களையும் காப்பாற்றிக்
கொள்ளுங்கள்!”.
( அல்குர்ஆன்: 66: 6 )
ஆக உலக
முஸ்லிம்களின் காரியங்களுக்கு முன்னால்
நம்முடைய குடும்ப வாழ்க்கை
சரி செய்யப்பபட வேண்டியதன்
அவசியத்தை மேற்கூறிய இறை
வசனங்கள் நமக்கு உணர்த்துவதை
புரிந்து கொள்ள முடிகின்றது.
எங்கிருந்து துவங்குவது……..?
குடும்ப அமைப்பு
இது அல்லாஹ் மனித
சமூகத்திற்கு வழங்கியிருக்கிற மாபெரும்
மகத்தான அருட்கொடையாகும்.
தாய் தந்தை,
மகன் மகள், சகோதரன்
சகோதரி, மாமன் மச்சான்,
சிறிய தந்தை பெரிய
தந்தை, மாமி சின்னம்மா,
கணவன் மனைவி, பேரன்
பேத்தி என நீண்டதொரு
பட்டியலைக் கொண்டது குடும்ப
அமைப்பில் உருவாகும் உறவு
முறைகள்.
ஆனால், இன்றைய
குடும்ப அமைப்பில், குடும்ப
உறவுகளில் நிலவுகிற பிணக்குகள்,
சண்டை சச்சரவுகள், தகராறுகள்
தலைமுறைகளைத் தாண்டியும் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தி வருவதைப்
பார்க்கும் போது வழக்கம்
போல இந்த அருட்கொடையையும் முஸ்லிம் சமூகம்
வீணடித்துக் கொண்டிருக்கின்றதோ என்று
எண்ணத்தோன்றுகின்றது.
மேற்கூறிய குடும்ப
அமைப்பில் கூறப்பட்ட ஒவ்வொரு
உறவு முறைகளோடும் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும்
என்று இஸ்லாம் அழகியதொரு
வழிகாட்டலை வழங்கியுள்ளது.
உறவுகளோடு நாம்
எவ்வாறு நடந்து கொள்ள
வேண்டும் என்பதற்கு பின்வரும்
நபிமொழி ஒன்று போதுமானதாகும்.
عن أبي هريرة
رضي الله عنه أن رجل جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إن لي قرابة
أصلهم ويقطعوني وأحسن إليهم ويسيئون إليَّ وأحلم عنهم ويجهلون عليَّ، فقال صلى
الله عليه وسلم: « لئن كنت قلت فكأنما تسفهم المل، ولا يزال معك من الله ظهير
عليهم ما دمت على ذلك» رواه مسلم.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு
மனிதர் நபி {ஸல்}
அவர்களின் திருமுன் வந்து
நின்று “அல்லாஹ்வின் தூதரே!
எனக்குச் சில உறவுகள்
இருக்கின்றார்கள். அவர்களுடைய உரிமைகளை
நான் மிகச் சரியாக
நிறை வேற்றி வருகின்றேன்.
ஆனால், அவர்களோ என்
உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான்
அவர்களுடன் நல்ல விதமாக
நடந்து கொள்கின்றேன். ஆனால்,
அவர்களோ என்னுடன் மிக
மோசமாக நடந்து கொள்கின்றனர்.
நான் அவர்களோடு
பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும் நடந்து
கொள்கின்றேன். ஆனால், அவர்களோ
என்னுடன் மிகவும் அறிவீனமாக
நடந்து கொள்கின்றனர்” என்று
முறையிட்டார்.
அதற்கு, நபி
{ஸல்}
அவர்கள் “நீர் சொல்வதைப்
போன்றே அவர்களுடன் நடந்து
கொண்டிருந்தால், அது அவர்களின்
முகத்தில் கரி பூசுவதைப்
போன்றதாகும். அல்லாஹ் அவர்களுக்கு
எதிராக எப்போதும் உமக்கு
உதவிய வண்ணம் இருப்பான்;
இதே பண்பில் நீர்
நிலைத்திருக்கும் வரை!”
என்று பதில் கூறினார்கள்.
( நூல்:முஸ்லிம்)
இந்த நபிமொழி
குடும்ப அமைப்பில் எல்லா
உறவுகளோடும் பொருந்திப் போவதை
எளிதாக விளங்க முடிகின்றது.
திருமண
உறவும்….. சமூகத்தின் நிலையும்….
சமீப காலமாக
முஸ்லிம் சமூகத்தில் ஒரு
உறவு முறை குடும்ப
அமைப்பின் மற்றெல்லா உறவு
முறைகளையும் சிதைவுக்கு உள்ளாக்கி,
குடும்ப அமைப்பில் மிகப்
பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி
வருவதை பார்க்க முடிகின்றது.
சில போது
அந்த உறவு முறையைக்
கொண்டவர்களே பிரிந்து போவதையும்
பார்க்க முடிகின்றது.
ஆகவே, முதலில்
அதை சரி செய்ய
முன் வருவோம். ஏனெனில்,
இந்த உறவு தான்
மற்றெல்லா உறவுகளோடும் அதிகம்
தொடர்புடையது.
ஆம்! திருமண
பந்தத்தின் மூலம் இணைகிற
கணவன் – மனைவி உறவு
முறை தான் அது.
وَمِنْ آيَاتِهِ
أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ
بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ
يَتَفَكَّرُونَ ()
அல்லாஹ் கூறுகின்றான்:
“மேலும், அவனுடைய சான்றுகளில்
இதுவும் ஒன்றாகும். அவன்
உங்களுக்காக உங்களில் இருந்தே
உங்களுக்கான துணைகளைப் படைத்தான்;
நீங்கள் அவர்கள் மூலம்
அமைதி பெற வேண்டும்
என்பதற்காக! மேலும், உங்கள்
இருவரிடையே அவனே அன்பையும்,
கருணையையும் தோற்றுவிக்கிறான். திண்ணமாக,
சிந்திக்கும் மக்களுக்கு இதில்
நிறையச் சான்றுகள் உள்ளது”.
( அல்குர்ஆன்: 30: 21 )
அன்பும், கருணையும்
அமைதியும் நிறைந்திருக்கும் ஓர்
உறவு எப்படி பிரிவையும்,
பாதிப்பையும் உண்டாக்கும்?
ஒரு முஃமினின்
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானது,
அன்பு தவழ்வது, நிம்மதி
நிறைந்தது என்றால் ஏன்
இன்றைய குடும்பங்கள் சிதைவச்
சந்திக்கின்றது?
இப்படியான கேள்விகளோடு
இதை அணுகினால் முஸ்லிம்
சமூகம் அடிப்படையான பல
அம்சங்களைக் கோட்டை விட்டதே
காரணம் என்பது தெரியவரும்.
1. திருமணம் செய்ய வேண்டிய பருவத்தில் திருமணம் செய்து வைக்க
வேண்டும்….
இஸ்லாம் திருமண
வயதை அடைந்த ஆண்களை
நேரடியாக அழைத்துக் கூறுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“ உங்களுக்கு விருப்பமான பெண்களை
நீங்கள் மணம் முடித்துக்
கொள்ளுங்கள்!” ( அல்குர்ஆன்:
4: 3 )
அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “உங்களில் திருமணத்தின்
பொறுப்பைச் சுமக்கும் ஆற்றல்
உள்ளவர் திருமணம் புரிந்து
கொள்ளட்டும்! ஏனெனில், திருமணம்
பார்வை ( அங்கும் இங்கும்
அலைவதை விட்டும் ) யைத்தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தை
( காம இச்சையினால் சுதந்திரமாகத்
திரிவதை விட்டும் ) ப்பாதுகாக்கின்றது.
மேலும், திருமணத்தின் பொறுப்பைச்
சுமக்க ஆற்றல் இல்லாதவர்
இச்சையின் வேகத்தைத் தணித்திட
அவ்வப்போது நோன்பு வைத்துக்
கொள்ளட்டும்!”. ( நூல்:
முஸ்லிம் )
திருமணத்திற்கான தகுதி
( உடல் வலுவும், பொருளாதார
வசதியும் ) வந்து விட்டால்
தாமதிக்காமல் உடனடியாக இஸ்லாமிய
வழிகாட்டலின் படி திருமணம்
செய்து கொள்ள வேண்டும்.
ஆனால், இன்றைய
சமூகத்தில் ஏறத்தாழ நிறைய
கமிட்மெண்ட்களுக்குப் பின்னர்
தான் திருமணம் செய்து
வைக்கப் படுகின்றது.
இரு பாலரிடையே
அதிக வயது வித்தியாசம்,
புரிதலற்ற தன்மை போன்றவை
காலதாமதத்தால் ஏற்பட்டு, பிரச்சனையாகி
இறுதியில் மணவிலக்கும் ஏற்பட்டு
விடுகின்றது.
2. தனிமையை கண்காணிக்காத பெற்றோர்களும், தடம் புரளும்
பருவ வயதினரும்…..
குறிப்பிட்ட வயதைத் தொடுகிற போது பெற்றோர்கள் தங்களின்
வயது வந்து ஆண், பெண் பிள்ளைகளுக்கு தனிமையை கொடையாக கொடுத்து விடுகின்றனர்.
தனி அறை, தனி மொபைல், தனி கம்ப்யூட்டர், லேப்டாப்,
டேப்லெட், பைக், என்று எல்லையில்லா சுதந்திரம் வழங்கி விடுகின்றனர்.
இண்டெர்நெட் வசதியைப் பயன்படுத்தி தவறான காட்சிகள்,
படங்கள், சாட்டிங், ஃபேஸ்புக் என்று வழி தவறிட பெற்றோர்களே காரணமாய் அமைந்து விடுகின்றனர்.
இன்று முஸ்லிம் சமூகத்து பருவ வயதினர் பலர் பாலியல்
வித்தியாசம் இன்றி மது, சுய இன்பம், விபச்சாரம் என்று தடம் புரண்டு விடுவதை அங்கொன்றும்
இங்கொன்றுமாய் கேள்விபட்டு வருகின்றோம்.
அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும். நம் இளைய தலைமுறையினரை.
திருமணத்திற்கு முந்தைய இந்த தடம் புரளளால் பலர்
திருமணத்திற்கு பின் நிம்மதியிழந்து வாழ்வதையும் பார்த்து வருகின்றோம்.
இளமைப்பருவம் சரி செய்யப்பட வேண்டிய சரியான பருவம்
ஆகும். தனிமையில் தவறு செய்யும் பருவ வயதினரை கண்காணித்து, பக்குவப்படுத்த வேண்டியது
இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட.
தனிமையில் இறையச்சத்தின் துணை கொண்டு வெற்றி பெற்ற
இளைஞர்…
அழகிய வரலாறு என அல்லாஹ்வால்
பெரிதும் புகழப்படுகிற வரலாற்றின் ஒரு பகுதியில் நடைபெறுகிற காட்சி இது…
அங்கு நடந்த காட்சியை
குர்ஆன் இவ்வாறு விவரிக்கின்றது….
நாமும் கொஞ்சம் நினைவு
படுத்தித் தான் பார்ப்போமே!...
وَرَاوَدَتْهُ
الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ
هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا
يُفْلِحُ الظَّالِمُونَ (23)
“அவர் எந்தப்
பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அந்தப் பெண் அவரை அடைய வலை விரித்தார்!
ஒரு நாள் வாயில்களை எல்லாம் அடைத்துத் தாழிட்டு விட்டு “வாரும்!” என்று அழைத்தார். அதற்கு,
யூஸுஃப் “அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்!”
திண்ணமாக, என் ரப் – அதிபதி
எனக்கு நல்ல கண்ணியத்தை வழங்கியுள்ளான். ( அப்படியிருக்க இது
போன்ற இழிவான ஒரு செயலை நான் செய்வேனா என்ன?” ) இது போன்ற அக்கிரமமான
செயலைச் செய்வோர் ஒரு போதும் வெற்றி அடைவதில்லை!” என்று கூறினார். (அல்குர்ஆன்: 12: 23 )
நேற்று வரை தம்மை அரவணைத்து
நின்ற, தாய் போன்று பராமரித்த ஒரு பெண் அரண்மனையின்
ஒரு வாசலை அல்ல, அத்துனை வாசல்களையும் அடைத்து விட்டு,
யாரும் இல்லை, யாரும் பார்க்க முடியாது என்கிற
தொணியில் தவறான உறவிற்கு அழைத்த போது, அதுவும் தனிமையில் யாரும் இல்லை என்று
உத்திரவதமும் கிடைத்த பின்னரும் கூட யூஸுஃப் (அலை) அவர்கள் அந்த இழி
செயலை செய்வதை விட்டும் தங்களை தற்காத்துக் கொள்ள தக்வா எனும் இறையச்சம் கொண்டு
மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார்கள்.
தடம் புரண்டு சென்றிடாமல்
உயிரையே விலையாய் கொடுத்த இளைஞர்…..
وقد ورد معناه في حديث
رواه إسحاق بن بشر في كتابه " المبتدأ " حيث قال : أنبأنا يعقوب الكوفي ، عن
عمرو بن ميمون ، عن أبيه ، عن ابن عباس ، أن رسول الله صلى الله عليه وسلم ليلة
أسري به رأى زكريا في السماء ، فسلم عليه وقال له : يا أبا يحيى ،
خبرني عن
قتلك ; كيف كان ؟ ولم قتلك بنو
ص: 412 إسرائيل ؟ قال :
يا محمد ، أخبرك أن يحيى كان خير أهل زمانه ، وكان أجملهم ، وأصبحهم وجها
، وكان كما قال الله تعالى
سيدا وحصورا وكان لا يحتاج إلى النساء ، فهويته امرأة ملك بني إسرائيل ، وكانت بغية
، فأرسلت إليه ، وعصمه الله ، وامتنع يحيى وأبى عليها ، وأجمعت على قتل يحيى ،
ولهم عيد يجتمعون في كل عام ، وكانت سنة الملك أن يوعد ولا يخلف ولا يكذب . قال :
فخرج الملك إلى العيد فقامت امرأته فشيعته ، وكان بها معجبا ، ولم تكن تفعله فيما
مضى ، فلما أن شيعته قال الملك : سليني ، فما سألتني شيئا إلا أعطيتك . قالت :
أريد دم يحيى بن زكريا . قال لها : سليني غيره
. قالت : هو ذاك . قال : هو لك . قال : فبعثت جلاوزتها إلى يحيى ، وهو في محرابه
يصلي ، وأنا إلى جانبه أصلي . قال : فذبح في طست وحمل رأسه ودمه إليها . قال :
فقال رسول الله صلى الله عليه وسلم : فما بلغ من صبرك ؟ قال : ما انفتلت من صلاتي
. قال : فلما حمل رأسه إليها ، فوضع بين يديها ، فلما أمسوا خسف الله بالملك وأهل
بيته وحشمه ، فلما أصبحوا قالت بنو إسرائيل : قد غضب إله زكريا لزكريا ، فتعالوا حتى
نغضب لملكنا ، فنقتل زكريا . قال : فخرجوا في طلبي ليقتلوني ، وجاءني النذير فهربت منهم ،
وإبليس أمامهم يدلهم علي ، فلما تخوفت أن لا أعجزهم ، عرضت لي شجرة فنادتني وقالت
: إلي إلي . وانصدعت لي فدخلت فيها . قال : وجاء إبليس حتى أخذ بطرف ردائي ،
والتأمت الشجرة ، وبقي طرف ردائي خارجا من الشجرة ، وجاءت بنو إسرائيل فقال إبليس : أما رأيتموه دخل هذه
الشجرة ؟ هذا طرف ردائه ، دخلها بسحره . فقالوا : نحرق هذه الشجرة . فقال إبليس :
شقوه بالمنشار شقا . قال : فشققت مع الشجرة بالمنشار . قال له النبي صلى الله عليه
وسلم : هل وجدت له مسا أو وجعا ؟
قال : لا
، إنما وجدت ذلك الشجرة جعل الله روحي فيها
هذا سياق غريب ، وحديث عجيب
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் – மிஃராஜ்
சென்றிருந்த போது ஜகரிய்யா (அலை) அவர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
உரையாடலின் இடையே அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் ”நீங்கள் எவ்வாறு எதற்காக கொலை செய்யப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள்
“எனது மகன் யஹ்யா (அலை) அவர்கள் ஸாலிஹான, அழகுமிக்க, நல்லொழுக்கமுள்ள, தெளிவான சிந்தனையும்,
பெண்களின் மீதான மோகமும் இல்லாத சிறந்த இளைஞராக இருந்தார்.
இஸ்ரவேலர்களைச் சார்ந்த ஓர்
அரசனின் மனைவி ஒருத்தி என் மகன் யஹ்யாவின் மீது மோகம் கொண்டு, அவருடன் தவறான உறவு கொள்ள
விரும்பி, தன்னுடைய பணிப்பெண் ஒருவரை தூதனுப்பினாள். பல முறை அவள் தூதனுப்பினாள்.
ஆனால், என் மகன் யஹ்யா மறுத்து
விட்டார். அல்லாஹ் என் மகனை அத்தீய செயலிலிருந்து காப்பாற்றினான்.
இதனால் என் மகன் மீது சினங்கொண்ட
அவள் என் மகன் யஹ்யாவை கொலை செய்ய திட்டமிட்டாள்.
இவ்வாறிருக்க ஆண்டு தோரும்
வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும் அவர்களின் பண்டிகை நாளும் வந்தது. ஒவ்வொரு ஆண்டும்
அரசன் தன் மனைவிக்கு அவள் விரும்புகிற பரிசில்களை வழங்குவான்.
இந்நிலையில், எல்லா நாட்களையும்
விட அன்று மிகவும் அழகாக தன் மனைவி இருப்பதைக் கண்டு “இவ்வாண்டு உனக்கு மிக உயர்ந்த
ஓர் பரிசை, அதுவும் நீ எதை விரும்பினாலும் உனக்கு தர வேண்டுமென விரும்புகின்றேன்” என்றான்
அரசன்.
அதற்கவள், ”யஹ்யா (அலை) அவர்களின்
தலை தான் வேண்டும்” என்று கூறினாள். இது அல்லாத வேறெதைக் கேட்டாளும் தருகின்றேன்” என்றான்
அரசன். ஆனால், அவளோ ”எனக்கு யஹ்யாவின் தலை தான் வேண்டும்” என்றாள்.
மனைவியின் அழகில் அடிமைப்
பட்டுக்கிடந்த அரசன் ”யஹ்யா (அலை) அவர்களின் தலையைக் கொய்து வருமாறு தன் சேவகர்களுக்கு
ஆணை பிறப்பித்தான்.
அரசனின் சேவகர்கள் பைத்துல்
முகத்தஸ் நோக்கி வந்தார்கள். நானும், யஹ்யாவும் மிஹ்ராபின் அருகே சற்று இடைவெளி விட்டு
நின்று தொழுது கொண்டிருந்தோம்.
அரசனின் சேவகர்கள் யஹ்யாவின்
தலையை வெட்டி அவரது தலையையும், இரத்தத்தையும் ஒரு தட்டில் ஏந்தியவர்களாக அரசனின் மனைவியிடம்
கொண்டு சென்றார்கள்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள்
“நீங்கள் எப்படி இவ்வளவு பொறுமையாக இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு, ஜகரிய்யா (அலை)
அவர்கள் ”நான் என் ரப்போடு உரையாடிக் கொண்டிருந்தேன். தொழுது கொண்டிருந்தேன். நடந்த
எதுவும் எனக்குத் தெரியாது. தொழுது முடித்த பின்னர் தான் இந்த விவரமெல்லாம் எனக்குத்
தெரிந்தது” என்று பதில் கூறிவிட்டு…
யஹ்யா (அலை) அவர்கள் கொலை
செய்யப்பட்ட அன்று மாலை நேரத்தில் அரசனும், அவன் மனைவியும், குடும்பத்தார்களும், அவனின்
சேவகர்களும் அரண்மனையோடு அல்லாஹ்வின் கோபத்தால் இருந்த இடத்திலேயே பூமிக்குள் இழுக்கப்பட்டார்கள்.
இதை அறிந்து கொண்ட இஸ்ரவேலர்கள்
“ஜகரிய்யாவின் இறைவன் ஜகரிய்யாவிற்காக கோபப்பட்டான். இஸ்ரவேலர்களே! ஒன்று படுங்கள்!
நாம் நம் அரசருக்காக கோபப்படுவோம். நாமும் ஜகரிய்யாவை ஒன்று திரண்டு கொல்வோம்” என சபதமிட்டுப்
பழிவாங்க திட்டமிட்டார்கள்.
இச்செய்தி எனக்கு எட்டியதும்
நான் அவர்கள் கண்ணில் படாதிருக்க காட்டு வழியே ஓடினேன். ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை
நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தேன். அப்போது, எனக்கு முன்பாக இருந்த ஓர் மரம் “அல்லாஹ்வின்
நபியே! என்னுள் ஒளிந்து கொள்ளுங்கள்! உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்றது.
நான் அதனுள் சென்று ஒளிந்து
கொண்டேன். என்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு இப்லீஸ் வழிகாட்டிக் கொண்டு வந்தான்.
ஆனால், மிக விரைவாக என்னைப் பின் தொடர்ந்த அவன் மரத்தின் உள்ளே நான் ஒளியும் போது எனது
ஆடையின் சிறிய ஒரு பகுதியைப் பிடித்து இழுத்துக் கொண்டான். பிளந்த மரம் மூடிய போது
என் ஆடையின் சிறிய பகுதி வெளியே தெரிந்தது.
இஸ்ரவேலர்கள் மரத்தை நெருங்கியதும்
இப்லீஸ் அடையாளம் காட்டிக் கொடுத்தான். கடும் கோபத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் என்னை
மரத்தோடு வைத்து தீயிட்டுக் கொளுத்திட முனைந்தார்கள்.
ஆனால், இப்லீஸோ ரம்பத்தால்
இரு கூறாக என் உடல் பிளக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறினான். அதன் பின்னர் ரம்பத்தால்
மரத்தையும், என்னையும் இரண்டாகப் பிளந்தார்கள்” என்று கூறினார்கள்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள்
“அறுக்கப்பட்ட போது உங்களுக்கு அதன் வேதனை தெரியவில்லையா?” என்று வினவியதற்கு, ஜகரிய்யா
(அலை) அவர்கள் “அல்லாஹ் தான் எனது உயிர் இவ்வாறு பிரிய வேண்டும் என நாடியுள்ளான்; அவ்வாறிருக்கையில்,
எனக்கு எப்படி அது வேதனையாக தெரியும். இல்லை, எனக்கு அப்படியொரு உணர்வு அப்போது ஏற்படவில்லை”
என்று பதில் கூறினார்கள்.
( நூல்: அல்பிதாயா வன் நிஹாயா லி இமாமி இப்னு
கஸீர் (ரஹ்)….. )
தனிமையில் தவறு செய்யும் பருவ
வயதினர் தவறு செய்யாமல் இருக்க, தடம் புரளாமல் இருக்க மேன்மக்களான நபிமார்கள் எவ்வளவு
சிரமத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். என்று அவர்களின் வரலாற்றின் மூலம் படிப்பினை பெறவேண்டும்.
3. துணையைத் தேர்ந்தெடுப்பதில்
அவசரப்படும் பருவ வயதினரும்… பெற்றோர்களும்….
காதலும், வெள்ளை & சிகப்புத்தோலும்
இன்றைய பருவ வயதினரின் எல்லையில்லா லட்சியம், பவுனும், லட்சங்களும் இன்றைய பெற்றோர்களின்
இலக்கு ஆதலால் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மார்க்கத்தின் வரம்புகளை தூக்கி எறிந்து
விட்டு, அவசர அவசரமாக திருமணம் செய்கின்றனர்.
இறுதியில் அமைதிப்பூங்காவாகவும்,
நிம்மதி தரும் சோலையாகவும் இருக்க வேண்டிய இல்லறம், குடும்ப அமைப்பு சீர்குலைந்து சின்னாபின்னமாகி
விடுகின்றது.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின்
தூதரும் துணையைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் பருவ வயதினருக்கும், பெற்றோர்களுக்கும்
அற்புதமானதோர் வழிகாட்டையைத் தந்துள்ளனர்.
அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில்
திருமண உறவு குறித்துப் பேசுகின்றான்.
யாரைத் திருமணம் செய்ய வேண்டும்.
யாரைத் திருமணம் செய்யக் கூடாது. எப்படியானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்? எப்படிப்பட்டவர்களை
தேர்வு செய்யக் கூடாது? திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்டவர்கள் யார்? திருமண உறவின்
அவசியம், மகத்துவம், இல்லற வாழ்வின் நோக்கம், திருமணத்திற்குப் பின் கணவன் மனைவி இடையே
ஏற்படும் கருத்து வேறுபாடுகளிகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் இப்படியாக திருமணம்
சம்பந்தமாக நீண்ட நெடியதொரு விளக்கத்தை அல்குர்ஆனின் பல இடங்களிலும் பேசுகின்றான்.
( பார்க்க: அல்குர்ஆன்: 2:
221, 4: 3, 4: 23, 24: 3, 24: 26, 24: 32 )
عن أبي هريرة رضي الله عنه قال: قال
رسول الله صلى الله عليه وسلم: ((تُنكح المرأة لأربع: لمالها، ولحسبها، وجمالها،
ولدينها، فاظفر بذات الدين تربت يداك)). متفق عليه
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகின்றாள்; அவளுடைய செல்வ வளத்திற்காக, அவளுடைய
குடும்பப் பாரம்பரியத்திற்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர்
மார்க்கப்பற்றுடைய பெண்ணையே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்! உமக்கு நலமும், சோபனமும் உண்டாகட்டும்!”.
” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبيُّ ، وَجَعْفَرُ بْنُ عَوْنٍ ، عَنْ الْإِفْرِيقِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا
تَزَوَّجُوا النِّسَاءَ لِحُسْنِهِنَّ ، فَعَسَى حُسْنُهُنَّ أَنْ يُرْدِيَهُنَّ ،
وَلَا تَزَوَّجُوهُنَّ لِأَمْوَالِهِنَّ ، فَعَسَى أَمْوَالُهُنَّ أَنْ
تُطْغِيَهُنَّ ، وَلَكِنْ تَزَوَّجُوهُنَّ عَلَى الدِّينِ ، وَلَأَمَةٌ خَرْمَاءُ
سَوْدَاءُ ذَاتُ دِينٍ أَفْضَلُ
" .
அப்துல்லாஹ் இப்னு அம்ர்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக மட்டும் திருமணம்
முடிக்காதீர்கள்; அவர்களுடைய அழகு அவர்களை அழித்து விடக்கூடும்! பெண்களை அவர்களின்
செல்வ வளத்திற்காக மட்டும் திருமணம் முடிக்காதீர்கள்; அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும்,
அடங்காத தன்மையிலும் அவர்களை ஆழ்த்தி விடக்கூடும்.
மாறாக, மார்க்கப்பற்றின் அடிப்படையில்
அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். மார்க்கப்பற்று கொண்ட கருப்பு நிறஅடிமைப் பெண்,
அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடைய மார்க்கப் பற்றில்லாக் குடும்பப் பெண்ணை விடச்
சிறந்தவள் ஆவாள்”. ” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: அல் முன்தகா
)
رواه الترمذي عن أبي هريرة
قال
قال رسول الله صلى الله
عليه وسلم: إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه، إلا تفعلوا تكن فتنة في
الأرض وفساد عريض.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்
(ரலி) அறிவிக்கின்றார்கள்: “எவருடைய மார்க்கப் பற்றையும், நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ
அத்தகைய மனிதர் உங்களிடம் பெண்கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்து கொடுத்து விடுங்கள்.
நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் பெருகி விடும்” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
1. மார்க்கத்திற்காக காதலை
தூக்கி எறிந்த இளைஞர்….
மர்ஸத் இப்னு அபூ மர்ஸத்
அல் ஃகனவீ (ரலி)
இவர்கள் ஆஸிம் (ரலி) அவர்களோடு ஷஹீதாக்கப் பட்டவர்களில் ஒருவர். பத்ர் மற்றும் உஹத்
யுத்தகளங்களில் கலந்து கொண்ட தீரர்களில் ஒருவர்.
இவர் கைதிகளாகவும், பிணையாகவும்
பிடிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வீரராக அன்றைய அரபுலகத்தில் அறியப்பட்டார்கள்.
அநியாயமாக பிடித்து வைக்கப்பட்டிருக்கின்ற
கைதிகளை எதிரிகளின் இடத்திற்கே சென்று அசாத்திய தைரியத்தோடு மீட்டு வரும்
தைரியசாலி. அதற்காக சில திர்ஹத்தை சம்பந்த பட்டவர்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.
ஒரு நாள் அவர்கள் ஒருவரை
மீட்டெடுக்க இரவு நேரத்தில் ஓரிடத்தில் பதுங்கியிருந்த போது அவர்களின் ஜாஹிலிய்யா
காலத்து காதலி அனாக் என்பவளைச் சந்திக்க நேரிடுகின்றது.
இவர்கள் இஸ்லாத்திற்கு
வந்த பின் அன்று தான் அவளைச் சந்திக்கின்றார்கள். தற்போது அவள் தகாத செயல்
செய்யும் விபச்சாரியாக மாறிவிட்டிருந்தாள்.
அந்த இரவிலும் இவரை
அடையாளம் கண்டு கொண்ட அனாக் இன்றிரவு தம்மோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு
அழைக்கின்றாள்.
அனாக்! இஸ்லாம்
விபச்சாரத்தை தடை செய்திருக்கின்றது அது மானங்கெட்ட செயல் என்றும், அதன் அருகே கூட
நெருங்கக் கூடாது எனவும் தடை செய்திருக்கின்றது. ஆகவே தூர விலகிச் செல் என்று கூறி
விரட்டி விட்டார்கள் மர்ஸத் (ரலி) அவர்கள்.
நம்மை காசு பணம் கொடுத்து அழைக்க ஆயிரம் பேர்
காத்து கிடக்க, நாம் வலிய அழைத்தும் வராமல் நம்மை அலட்சியம் செய்து விரட்டி விடுகிறாரே எனும்
கோபத்தில் அவரை ”அவர் எந்த இடத்தில் மறைந்து கைதியை தூக்கிச் செல்ல வந்திருந்தாரோ
அவர்களின் பெயர் கூறி அழைத்து இதோ மர்ஸத் உங்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு
கைதியை களவாடிச் செல்ல வந்திருக்கின்றார்
என்று கூறி” சிக்க வைத்தாள்.
அவர்கள் துரத்தி வர
மர்ஸத் (ரலி) அவர்கள் அங்கிருந்து தப்பி, அருகே இருந்த ஒரு
குறுகலான மலைக்குன்றில் ஒளிந்து கொண்டார்கள்.
அவரைத் தேடி வந்த அந்த
நபர்கள் மர்ஸத் (ரலி) அவர்கள் ஒளிந்திருந்த அந்த மலைக்குன்றின் மீது வரிசையாக
ஒருவர் பின் ஒருவராக சிறுநீர் கழித்தனர்.
மலைக்குன்றின் பின் புறம்
ஒளிந்திருந்த மர்ஸத் (ரலி) அவர்களின் தலை முழுக்க சிறுநீர் நன்றாக நனைத்து
விட்டிருந்தது.
துரத்தி வந்தவர்கள்
அங்கிருந்து சென்ற பின்னர் அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்து நடந்த
சம்பவத்தை நபிகளாரிடம் விளக்கிக் கூறி தாம் அனாக்கை திருமணம் செய்ய விரும்புவதாக
சொன்னார்கள்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் மர்ஸத் (ரலி) அவர்கள் கேட்க, அப்போதும்
நபிகளார் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
பின்னர் அண்ணலாரின்
சபையிலிருந்து மர்ஸத் (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள்.
அவர்கள் சென்ற பின்னர், அல்லாஹ் நூர்
அத்தியாயத்தின் 3-ஆம் வசனத்தை
இறக்கியருளினான்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள், மர்ஸத் (ரலி) அவர்களை அழைத்து வரச் சொல்லி “விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம்
செய்யும் பெண்ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணையோ தவிர வேறெவரையும்
திருமணம் செய்ய வேண்டாம்.
விபச்சாரம் செய்யும்
பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இணைவைப்பாளனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய
வேண்டாம். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடுக்கப்பட்டிருக்கின்றது” எனும் (அல்குர்ஆன்:24:3) வசனத்தை ஓதிக்
காண்பித்தார்கள்.
பின்பு ”அனாக்கை நீர்
திருமணம் செய்ய வேண்டாம்” என்று
கூறினார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல்
குர்துபீ, பாகம்:7, பக்கம்:116., அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:382,383., அபூ தாவூத், கிதாபுன் நிகாஹ் )
மாற்றாருடன் ஓடிப்போகும் நம் காலத்து இளைஞர்களும், இளைஞிகளும் சிந்தித்து
உணர வேண்டிய ஓர் பாடத்தை மேற்கூறிய வரலாறு உணர்த்துகின்றது.
மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்து
மாசில்லாமல் வாழ்ந்த யுவதி.....
وقال الإمام أحمد: حدثنا عبد الرزاق، أخبرنا
مَعْمَر، عن ثابت البُنَاني، عن أنس قال: خطب النبي صلى الله عليه وسلم على
جُلَيْبيب امرأة من الأنصار إلى أبيها، فقال: حتى أستأمر أمها. فقال النبي صلى
الله عليه وسلم: فنعم إذًا. قال: فانطلق
الرجل إلى امرأته،فذكر ذلك لها ، فقالت:
لاها الله ذا ، ما وجد رسول الله صلى الله
عليه وسلم إلا جلَيبيبا، وقد منعناها من فلان وفلان؟ قال: والجارية في سترها تسمع. قال: فانطلق الرجل يريد أن يخبر النبي
صلى الله عليه وسلم بذلك. فقالت الجارية: أتريدون أن تَرُدّوا على رسول الله صلى
الله عليه وسلم أمره؟ إن كان قد رضيه لكم فأنكحوه. قال: فكأنها جَلَّت عن أبويها،
وقالا صدقت. فذهب أبوها إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إن كنت رضيته فقد
رضيناه. قال: "فإني قد رضيته". قال: فزوجها ، ثم فزع أهل المدينة، فركب جُلَيْبيب فوجدوه
قد قتل، وحوله ناس من المشركين قد قتلهم، قال أنس: فلقد رأيتها وإنها لمن أنفق بيت بالمدينة .
وقال الإمام أحمد: حدثنا عفان، حدثنا حماد -يعني:
ابن سلمة -عن ثابت، عن كنانة بن نعيم العدوي، عن أبي برزة الأسلمي أن جليبيبا كان
امرأ يدخل على النساء يَمُرّ بهن ويلاعبهن، فقلت لامرأتي: لا يدخلن اليوم
عليكم جُليبيبُ، فإنه إن دخل عليكم لأفعلن ولأفعلن. قال: وكانت الأنصار إذا كان
لأحدهم أيّم لم يزوجها حتى يعلم: هل لنبي الله صلى الله عليه وسلم فيها حاجة أم لا
؟ فقال رسول الله صلى الله عليه وسلم لرجل من الأنصار: "زوجني ابنتك".
قال: نعم، وكرامة يا رسول الله ، ونُعْمَة
عين. فقال: إني لست أريدها لنفسي. قال: فلمن يا رسول الله؟ قال: لجليبيب.
ஒரு முறை நபி {ஸல்} அவர்கள், ஜுலைபீப் (ரலி) அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.
அதற்கு ஜுலைபீப் அவர்கள் ”அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்? என்று விரக்தியுடன் கேட்டார்”.
”தோழரே! அல்லாஹ்விடத்தில் நீர் ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லை. ஊரின் இந்த பகுதியில் உள்ள (ஒரு இடத்தை சுட்டிக்காட்டி) இன்ன மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண் கேட்டதாக சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி {ஸல்} அவர்கள்.
அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார் சொன்ன அந்த விஷயத்தைக் கூறினார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மறுக்கவும் முடியாமல், ஆமோதிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர். அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.
அ ப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்து….
”வந்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே எனக்காக அனுப்பிய மணாளன், நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மா நபி {ஸல்} அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள்” என்று கூறிவிட்டு....
وَمَا
كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ
يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ
فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا (36)
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்துவிட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.” எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்தார்கள்.
பின்பு “ என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன். ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்” என்று கூறினார்கள்.
(நூல்: இப்னு கஸீர், பாகம்:3)
جليبيب،
بضم الجيم، على وزن قنيديل، وهو أنصاري، له ذكر في حديث أبي برزة الأسلمي في إنكاح
رسول الله صلى الله عليه وسلم ابنة رجل من الأنصار، وكان قصيراً دميماً، فكأن
الأنصاري أبا الجارية وامرأته كرها ذلك، فسمعت الجارية بما أراد رسول الله صلى
الله عليه وسلم فتلت قول الله: " وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله
ورسوله أمراً أن يكون لهم الخيرة من أمرهم " وقالت: رضيت، وسلمت لما يرضى لي
به رسول الله صلى الله عليه وسلم، فدعا لها رسول الله، وقال: " اللهم اصبب
عليها الخير صباً، ولا تجعل عيشها كداً " ز فكانت من أكثر الأنصار نفقة
ومالاً.
நபி {ஸல்} அவர்களின் முன்னே அமர்ந்து அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை நிகழ்வினையும் ஜுலைபீப் {ரலி} விவரித்துக்கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி {ஸல்} அவர்கள்
”இறைவா! அப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாக! கேடுகளும், சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே!” என்று அகம் மகிழ துஆ செய்தார்கள்.
இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலி} அவர்கள் ”மதீனாவிலேயே, அன்ஸாரிப் பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை” என்று கூறுகின்றார்கள்.
( நூல்: உஸ்துல்
ஃகாபா, இஸ்தீஆப்,பாகம்:1,பக்கம்:155,156 )
ஆகவே, மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்காமல் மனோ இச்சையின்
அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் குடும்ப அமைப்பில் மிகப்பெரிய சிதைவுகளைச்
சந்திக்க வேண்டியது ஏற்படும்.
இன்ஷா அல்லாஹ்…. சீரமைக்கும் பணி அடுத்த வாரமும்
தொடரும்…
வஸ்ஸலாம்!!!
இஸ்லாமிய சமூகம் உயர வெற்றி பெற உள்கட்டமைப்பை சீர்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் அருமையான பதிவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete