இறைவனின் திருப்தியைக் கேள்விக்குறியாக்கும் திரும்பாத கடன்!!
الحمد لله رب
العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين كالمبتدعة والمشركين وأشهد
أن لا إله إلا الله وحده ولا شريك له إله الأولين والآخرين وقيوم السماوات
والأرضين وأشهد أن محمدا عبده ورسوله وخيرته من خلقه أجمعين
اللهم صل على محمد وعلى آل محمد وأصحابه ومن
تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا
أما بعد :
மாநிலங்களவையில் கேள்வி
நேரத்தில் கேட்கப்பட்ட கேள்வி
ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர்
( அருண் ஜேட்லி ) பதிலளிக்கும்
போது “கடனைத் திருப்பிச்
செலுத்தும் திறன் இருந்தும்
8,167 நபர்கள் வங்கியில் தாங்கள்
வாங்கிய கடனைத் திருப்பிச்
செலுத்தவில்லை.
இதன் மொத்த
மதிப்பு 76,685 கோடி ரூபாயாகும்.
இதில் கடந்த 2015 – 2016 –ஆம்
நிதியாண்டில் 1,724 பேர் மீது
( FIR ) முதல்
தகவல் அறிக்கை பதிவு
செய்யப் பட்டுள்ளது” என்று
தெரிவித்துள்ளார்.
( தமிழ் தி இந்து
நாளிதழ், 20/7/2016 )
இஸ்லாமும்… கடன் குறித்த வழிகாட்டலும்…
கடன் என்பது
மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக இடம்
பெற்றுள்ள ஓர் அம்சமாகும்.
கடன் வாங்கும்,
கடன் கொடுக்கும் பழக்கம்
மனித சமூகம் கூட்டாக
வாழத் தொடங்கியதிலிருந்தே துவங்கியதாக
வரலாறுகளில் காணப்படுகின்றது.
நிர்பந்தமான, இக்கட்டான,
அவசியமான சூழ்நிலையில் அகப்பட்ட
ஓர் மனிதன் அந்த
சூழ்நிலையை எதிர்கொள்ள சக
மனிதர்களிடம் குறிப்பிட்ட ஓர்
கால அவகாசத்தை நிர்ணயித்து,
பொருளாகவோ அல்லது பணமாகவோ
பெற்றுக் கொள்வதற்கு கடன்
எனப்படுகின்றது.
இறைநம்பிக்கையாளன் ஒருவனுக்கு
வாழ்க்கையில் இது போன்ற
தருணங்கள் ஏற்பட்டால், கடன்
வாங்கிக் கொள்ள இஸ்லாமிய
மார்க்கமும் அனுமதி வழங்குகின்றது.
ஆனால், அதற்கான
எல்லைகளை அவன் கடந்து
விடக்கூடாது. அதன் வரம்புகளை
அவன் மீறி விடக்கூடாது.
ஆம்! ஏனைய
விஷயங்களுக்கு வகுத்துத் தந்திருப்பதைப் போன்றே கடன்
விஷயத்திலும் இஸ்லாம் அழகிய
வழிகாட்டலை வழங்கியிருக்கின்றது.
தொழுகை, நோன்பு,
ஜகாத், ஹஜ் போன்ற
வணக்க வழிபாடுகளைக் குர்ஆனில்
குறிப்பிடும் அல்லாஹ் அவைகளின்
எல்லா பரிமாணங்களையும் மிக
விரிவாகக் கூறிட வில்லை.
ஆனால், கடன்
குறித்து பேசுகிற போது
மிக விரிவாக, தெளிவாக
விவரித்துப் பேசுவதை 2- ஆம்
அத்தியாயத்தின் 282 – ஆம் வசனத்தில்
பார்க்கலாம். இன்னும், சொல்லப்போனால்
அல்குர்ஆனின் 6666 வசனங்களில் மிகப்பெரிய
வசனம் கடன் குறித்துப்
பேசுகிற இந்த வசனம்
தான்.
கடன் என்பது
மேற்கூறிய இக்கட்டான சூழ்நிலைகளின்
போது வாங்கிய காலம்
போய் எடுத்ததற்கெல்லாம் கடன்
வாங்கும் பழக்கம் இன்று
பெருகிப் போய் இருக்கின்றது.
வீட்டுக்கடன், கல்விக்கடன்,
விவசாயக் கடன், இரு
சக்கர, நான்கு சக்கர
வாகனக் கடன், அணியும்
ஆடைகள், மின் சாதனப்
பொருட்கள், சமையல் அறைச்
சாதனங்கள் என ஒரு
நீண்ட பட்டியலைக் கொண்டது
இந்த கடன்.
ஆடம்பர மோகம்,
பிறர் போல் வாழ
வேண்டும் என்கிற ஆசை
எந்த வழியிலாவது வாழ்க்கையில்
முன்னேறி விட வேண்டும்
என்கிற வெறி, வீண்
விரயமான செலவுகள் என
வாழ்க்கைப் போங்கை மாற்றத்
துவங்கியதன் விளைவு இன்று
நடமாடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் கடனாளிகளாகவே நடமாடிக்
கொண்டிருக்கின்றார்கள்.
வாழ்க்கைத் தேவைகளும்….
செலவுகளும்….
لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ
سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا
يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ
يُسْرًا ()
“அல்லாஹ்வால் வசதி
வழங்கப்பட்டவர்கள் தங்களின்
வசதிக் கேற்ப செலவு
செய்து கொள்ளவும். மேலும்,
வசதி குறைவாக வழங்கப்பட்டிருக்கின்றவர்களும், அல்லாஹ் அவர்களுக்கு
வழங்கியதிலிருந்து தமக்காக
செலவு செய்து கொள்ளவும்;
எந்த ஓர் ஆத்மாவையும்
அல்லாஹ் அதற்கு கொடுத்திருப்பதேயல்லாமல் ( மிகையாகச் செலவு
செய்யும் படி ) சிரமம்
கொடுக்க மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர் அல்லாஹ்
வெகு விரைவில் இலகுவையும்,
சுகமான வாழ்வையும் ஏற்படுத்தித்
தருவான்”. ( அல்குர்ஆன்:
65: 7 )
எனவே, அல்லாஹ் வழங்கியிருக்கிற பொருளாதாரத்தைக்
கொண்டு எளிமையாக செலவு செய்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
மேலும், இக்கட்டான சூழ்நிலைளின் போது கடன் வாங்கினால்
அதை முறையாக திருப்பிக் கொடுத்து விட வேண்டும். திரும்பாத கடன் இறை திருப்தியைக் கேள்விக்குறியாக்கி
விடும் என்பதை நபிமொழிகள் பலதின் வாயிலாக அறிய முடிகின்றது.
حَدَّثَنَا
عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِىُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ
بِلاَلٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِى الْغَيْثِ عَنْ أَبِى هُرَيْرَةَ -
رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « مَنْ أَخَذَ
أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ ، وَمَنْ أَخَذَ
يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ »
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவன்
மக்களின் பணத்தை அல்லது பொருட்களை திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ
அவன் சார்பாக அல்லாஹ்வே திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி
அதை ஏமாற்றி அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து
விடுவான்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: புகாரி )
حَدَّثَنَا
مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى عَنْ مَعْمَرٍ عَنْ هَمَّامِ بْنِ
مُنَبِّهٍ أَخِى وَهْبِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ - رضى
الله عنه - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « مَطْلُ
الْغَنِىِّ ظُلْمٌ »
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “வசதியுள்ளவர்
தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி தள்ளிப் போடுவது அநியாயமாகும்”
என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: புகாரி )
حَدَّثَنَا
مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ سَلَمَةَ عَنْ أَبِى سَلَمَةَ
عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - أَتَى النَّبِىَّ - صلى الله عليه وسلم -
رَجُلٌ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ . فَقَالَ «
دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً » .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி
{ஸல்} அவர்களிடம் ஒரு மனிதர், தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார். அப்போது,
அவர் நபி {ஸல்} அவர்களிடம் சற்றுக் கடுமையாகப் பேசினார். அங்கே அமர்ந்திருந்த நபித்
தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அதைப் புரிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள்
“அவரை விட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.
கடனைத்
திருப்பிச் செலுத்துவதில் உள்ள
ஆர்வமும்… அக்கறையும்…
قال الإمام أحمد: حدثنا يونس بن محمد،
حدثنا ليث، عن جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هُرْمُز، عن أبي هريرة، عن رسول
الله صلى الله عليه وسلم أنه ذكر "أن رجلا من بني إسرائيل سأل بعض بني
إسرائيل أن يُسْلفه ألف دينار، فقال: ائتني بشهداء أشهدهم. قال: كفى بالله شهيدًا.
قال: ائتني بكفيل. قال: كفى بالله كفيلا. قال: صدقت. فدفعها إليه إلى أجل مسمى،
فخرج في البحر فقضى حاجته، ثم التمس مركبًا يقدم عليه للأجل الذي أجله، فلم يجد
مركبًا، فأخذ خشبة فنقرها فأدخل فيها ألف دينار وصحيفة معها إلى صاحبها، ثم زَجج
موضعها، ثم أتى بها البحر، ثم قال: اللهم إنك قد علمت أني استسلفت فلانًا ألف
دينار، فسألني كفيلا فقلت: كفى بالله كفيلا. فرضي بذلك، وسألني شهيدًا، فقلت: كفى
بالله شهيدًا. فرضي بذلك، وإني قد جَهِدْتُ أن أجد مركبًا أبعث بها إليه بالذي
أعطاني فلم أجد مركبًا، وإني اسْتَوْدعْتُكَها. فرمى بها في البحر حتى ولجت فيه،
ثم انصرف، وهو في ذلك يطلب مركبًا إلى بلده، فخرج الرجل الذي كان أسلفه ينظر لعل
مركبًا تجيئه بماله، فإذا بالخشبة التي فيها المال، فأخذها لأهله حطبًا فلما كسرها
وجد المال والصحيفة، ثم قدم الرجل الذي كان تَسَلف منه، فأتاه بألف دينار وقال:
والله ما زلت جاهدًا في طلب مركب لآتيك بمالك فما وجدت مركبًا قبل الذي أتيت فيه.
قال: هل كنت بعثت إلي بشيء؟ قال: ألم أخبرك أني لم أجد مركبًا قبل هذا الذي جئت
فيه؟ قال: فإن الله قد أدى عنك الذي بعثت به في الخشبة، فانصرف بألفك
راشدًا".
وهذا إسناد
صحيح وقد رواه البخاري في سبعة مواضع من
طرق صحيحة
அபூஹுரைரா (ரலி)
அறிவிக்கின்றார்கள்: “ ஒரு நாள்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள், நாங்கள் அவர்களோடு
அமர்ந்திருந்த சபையில் எங்களிடம்
கூறினார்கள்:
“இஸ்ரவேலர்களில் ஒருவர்
மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள்
கடனாகக் கேட்டார். கடன்
கேட்கப்பட்டவர், ”என்னிடம் சாட்சிகளை
அழைத்து வாரும்! அவர்களைச்
சாட்சியாக வைத்து உமக்கு
கடன் தருகின்றேன்” என்றார்.
கடன் கேட்டவர்
“சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்”
என்றார். அப்படியானால், “ஒரு
பிணையாளியை என்னிடம் கொண்டு
வாரும்! அவரை ஜாமீனாக
வைத்து உமக்கு கடன்
தருகின்றேன்” என்றார் கடன்
கேட்கப்பட்டவர்.
அதற்கு, கடன்
கேட்டவர் “பிணை நிற்க
அல்லாஹ்வே போதுமானவன்” என்றார்.
அப்போது, கடன் கேட்கப்பட்டவர்
“நீர் கூறுவதும் ஒரு
வகையில் உண்மை தான்!”
என்று கூறி, குறிப்பிட்ட
தவணைக்குள் திருப்பித் தர
வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவரிடம் ஆயிரம்
பொற்காசுகளை வழங்கினார்.
கடன் வாங்கியவர்
கடல் வழிப் பயணம்
புறப்பட்டு, தம் காரியங்களை
முடித்து விட்டு, குறிப்பிட்ட
தவணையில் கடனைத் திருப்பிச்
செலுத்த வேண்டும் என்பதற்காக
வாகன வசதியைத் தேடினார்.
ஆனால், அவருக்கு எந்த
வாகனமும் கிடைக்க வில்லை.
அப்போது, அவர்
ஒரு மரக்கட்டையை விலைக்கு
வாங்கி, அதைக் குடைந்து
அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும்,
கடன் கொடுத்தவருக்கு ஒரு
கடிதத்தையும் உள்ளே வைத்து
அடைத்தார்.
பின்னர், கடற்கரையோரமாக
அந்த மரக்கட்டையை கொண்டு
வந்து, வானை நோக்கி
கையை உயர்த்தி….
“இறைவா!
இன்ன மனிதரிடம் நான்
ஆயிரம் பொற்காசுகளைக் கடனாகக்
கேட்டேன். அவர் பிணையாளி
வேண்டுமென்றார். நானோ அல்லாஹ்வே
நீயே போதுமானவன்!” என்றேன்.
அவர் உன்னைப் பிணையாளியாக
ஏற்றுக் கொண்டார்.
என்னிடம் சாட்சிகளைக்
கொண்டு வருமாறு கோரினார்.
நானோ அல்லாஹ்வே நீயே
சாட்சிக்குப் போதுமானவன்!” என்றேன்.
அவர் உன்னை சாட்சியாக
ஏற்றுக் கொண்டார்.
அவர் கூறிய
தவணை முடிவடையும் முன்பாக
அவருக்குரிய பணத்தை அவரிடம்
கொடுத்து விடும் முயற்சியில்
இறங்கி, வாகனத்திற்கு ஏற்பாடு
செய்தேன்! அல்லாஹ்வே! ஒரு
வாகனமும் எனக்கு கிடைக்கவில்லை.
இதையெல்லாம் நீ நன்கறிவாய்!
எனவே, இதோ
அவருக்குரிய பொற்காசுகள் நிரப்பிய
மரக்கட்டையை இந்த கடலில்
வீசுகின்றேன்! இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பையும்
உன்னிடத்தில் ஒப்படைக்கின்றேன்” என்று
பிரார்த்து விட்டு அதைக்
கடலில் வீசினார். அது
கடலின் நடுப்பகுதிக்கு சென்றதும்
திரும்பி விட்டார். அத்துடன்
தமது ஊருக்குச் செல்வதற்காக
வாகனத்தையும் அவர் தேடிக்
கொண்டிருந்தார்.
இதனிடையே, கடன்
கொடுத்தவர் கடன் வாங்கியவரின்
வருகையை எதிர் பார்த்த
வண்ணம் இருந்தார். ஒன்று
அவர் வருவார், அல்லது
நமது செல்வத்துடன் வாகனம்
எதுவும் வரக்கூடும் என்று
நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார்.
அப்போது, ஒரு
ஓரத்தில் ஒரு மரக்கட்டை
கிடப்பதைக் கண்டார். தமது
குடும்பத்திற்கு விறகாகப்
பயன்படட்டும் என்கிற நோக்கத்தில்
அதை எடுத்து வீட்டுக்குக்
கொண்டு வந்தார்.
அதைப் பிளந்து
பார்த்த போது, “ஆயிரம்
பொற்காசுகளையும் கடிதத்தையும்
கண்டார்.
சிறிது நாட்கள்
கழித்து, கடன் வாங்கியவர்
கடன் கொடுத்த அம்மனிதரைச்
சந்திக்க வந்தார். வந்தவர்
”அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
உமது பணத்தை உமக்கு
தருவதற்காக வாகனம் தேடும்
முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன்.
இப்போது, தான் வாகனம்
கிடைத்து உம்மிடம் வந்திருக்கின்றேன்.
இதோ!
உமக்கு தருவதற்காக ஆயிரம்
பொற்காசுகளை கொண்டு வந்திருக்கின்றேன்”
என்று பொற்காசுகள் பொதியப்பட்ட
கைப்பையை கடன் கொடுத்தவரிடம்
காட்டினார்.
அதற்கு கடன்
கொடுத்தவர் “எனக்கு எதையாவது
அனுப்பி வைத்தீரா?” என்று
கேட்டார். அப்போது, கடன்
வாங்கியவர் “வாகனம் கிடைக்காமல்
இப்போது தான் வந்திருக்கின்றேன் என்று உமக்கு
நான் தெரிவித்தேனே!” என்றார்.
அதற்கு கடன்
கொடுத்தவர் “நீர் மரத்தில்
வைத்து எனக்கு அனுப்பியதை
உமது சார்பாக அல்லாஹ்
என்னிடம் சேர்த்து விட்டான்.
எனவே, நீர் கொண்டு
வந்த ஆயிரம் பொற்காசுகளை
எடுத்துக் கொண்டு சரியான
வழியில் உமது ஊருக்குச்
செல்வீராக! என்றார்.
( நூல்:
முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர்
இப்னு கஸீர், புகாரி
)
قال أنس بن مالك: لما انكشف الناس يوم اليمامة قلت لثابت بن قيس بن
شماس: ألا ترى يا عم؟ ووجدته يتحنط فقال: ما هكذا كنا نقاتل مع رسول الله صلى الله
عليه وسلم، بئس ما عودتم أقرانكم، وبئس ما عودتكم أنفسكم؛ الله إني أبرأ إليك مما
جاء به هؤلاء، يعني الكفار، وأبرأ إليك مما يصنع هؤلاء، يعني المسلمين، ثم قاتل
حتى قتل، بعد أن ثبت هو وسالم مولى أبي حذيفة؛ فقاتلا حتى قتلا، وكان على ثابت درع
له نفيسة فمر به رجل من المسلمين فأخذها، فبينما رجل من المسلمين نائم أتاه ثابت
في منامه فقال له: إني أوصيك بوصية، فإياك أن تقول: هذا حلم، فتضيعه؛ إني لما قتلت
أمس، مر بي رجل من المسلمين فأخذ درعي، ومنزله في أقص الناس، وعند خبائه فرس يستن
في طوله وقد كفأ على الدرع برمة وفوق البرمة رحل، فأت خالداً، فمره فليبعث
فليأخذها؛ فإذا قدمت الدينة على خليفة رسول الله صلى الله عليه وسلم، يعني أبا
بكر، فق له: إن علي من الدين كذا وكذا، وفلان من رقيقي عتيق، وفلان؛ فاستيقظ الرجل
فأتى خالداً فأخبره، فبعث إلى الدرع فأتى بها على ما وصف، وحدث أبا بكر رضي الله
عنه برؤياه، فأجاز
யமாமா யுத்தம்,
பொய்யன் முஸைலமாவை எதிர்
கொள்ள அபூபக்ர் (ரலி)
அவர்கள் அனுப்பிய பெரும்
படையில் மிக ஆர்வத்தோடு
கலந்து கொண்டார் ஸாபித்
இப்னு கைஸ் (ரலி)
அவர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே
கடுமையான சண்டை நிகழ்ந்தது.
போரின் உச்ச கட்ட
நேரமது, ஆக்ரோஷமாகவும் வீரமாகவும்
சுழன்று சுழன்று வாள்
வீசிய வேங்கை ஸாபித்
(ரலி)
அவர்கள் எதிரி ஒருவனின்
எதிர் பாராத தாக்குதலால்
ஷஹீத் வீர மரணம்
அடைகின்றார்கள்.
அன்றிரவு யுத்தத்தில்
கலந்து கொண்ட ஒருவரின்
கனவில் வந்து “ நான்
போருக்கு வரும் போது
கவச உடை அணிந்து
இருந்தேன். நான் கடுமையாக
தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, மதீனாவின்
இன்ன பகுதியைச் சேர்ந்த
முஸ்லிம் படை வீரர்
ஒருவர் என் அருகே
வந்து இன்னின்ன அடையாளங்களைக்
கொண்ட என் கவச
உடையை கழற்றிச் சென்று
விட்டார்.
காலித் (ரலி)
அவர்களை உம்முடன் அழைத்துக்
கொண்டு, அவரிடம் சென்று
அந்த கவச உடையைப்
பெற்று அதை விற்று,
கலீஃபா அபூபக்ர் (ரலி)
அவர்களிடம் அதை ஒப்படைத்து
எனக்கு இன்னின்னாரிடம் இன்னின்ன
கடன் இருக்கின்றது. அவர்களை
அழைத்து என் சார்பாக
கடனை அடைக்கச் சொல்லுங்கள்.”
இதை நான் உமக்கு
வஸிய்யத்தாக சொல்கின்றேன்”. என்று
ஸாபித் (ரலி) அவர்கள்
கூறினார்கள்.
மறு நாள்
அது போன்றே அவரின்
கவச உடை பெறப்பட்டு,
கடனும் நிறைவேற்றப்பட்டது.
فأجاز
وصيته، ولا يعلم أحد أجيزت وصيته بعد موته سواه.
இந்த செய்தியை
அறிவிக்கின்ற அனஸ் இப்னு
மாலிக் (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்:
“நான் அறிந்து
நாங்கள் வாழும் காலத்தில்
கனவில் செய்யப்பட்ட வஸிய்யத்
ஒன்று நிறைவேற்றப்பட்டதென்றால் அது ஸாபித்
(ரலி)
அவர்கள் விஷயத்தில் மட்டும்
தான், வேறு எவருக்கும்
இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில்லை.”
( நூல்: உஸ்துல் ஃகாபா,
ஸியரு அஃலா மின்
நுபலா, இஸ்தீஆப் )
உயிரோடு வாழ்கிற
காலத்திலேயே கடன் வாங்கி
விட்டு, கடன் கொடுத்தவனை
தவிக்க விடுகிற உலகத்தில்
இறந்த பின்னரும் கூட
கனவில் வந்து நிறைவேற்றச்
சொன்ன ஸாபித் (ரலி)
அவர்களின் இந்த அம்சம்
உண்மையில் வியப்பின் விளிம்பிற்கே
நம்மை அழைத்து வந்து
விடுகின்றது.
கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே மிகச்
சிறந்த மனிதராவார்….
حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ عَنْ أَبِى سَلَمَةَ عَنْ
أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِىِّ - صلى
الله عليه وسلم - سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ - صلى الله
عليه وسلم - « أَعْطُوهُ » . فَطَلَبُوا سِنَّهُ ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ
سِنًّا فَوْقَهَا . فَقَالَ « أَعْطُوهُ » . فَقَالَ أَوْفَيْتَنِى ، وَفَّى
اللَّهُ بِكَ . قَالَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - « إِنَّ خِيَارَكُمْ
أَحْسَنُكُمْ قَضَاءً »
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி
{ஸல்} அவர்கள் தாம் கடனாக வாங்கிய ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத்
திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. ஒரு முறை அம்மனிதர் தன் ஒட்டகத்தை திருப்பித்
தருமாறு கேட்டு நபி {ஸல்} அவர்களிடம் வந்தார்.
அப்போது, நபித்தோழர்களிடம் “அவருக்கு கொடுத்து விடுங்கள்”
என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். தோழர்கள் அவருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய
ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம் தான் அவர்களுக்குக் கிடைத்தது.
நபி {ஸல்} அவர்கள் ”அதையே அவருக்கு கொடுத்து விடுங்கள்”
என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் “நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள்! அல்லாஹ்வும்
உங்களுக்கு நிறைவாக அளிப்பானாக!” என்று சொன்னார்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள் “உங்களில் மிகச் சிறந்தவர்,
தான் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே!” என்று கூறினார்கள். (
புகாரி )
கடன் வாங்குவதிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபி
{ஸல்} அவர்கள்…
حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ ح وَحَدَّثَنَا
إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِى أَخِى عَنْ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِى
عَتِيقٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ أَنَّ عَائِشَةَ - رضى الله عنها -
أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - كَانَ يَدْعُو فِى
الصَّلاَةِ وَيَقُولُ « اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ
وَالْمَغْرَمِ » . فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ
اللَّهِ مِنَ الْمَغْرَمِ قَالَ « إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ
وَوَعَدَ فَأَخْلَفَ »
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது “இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்” என்று கூறுவார்கள்.
இதைச் செவியுற்ற ஒருவர் நபி {ஸல்} அவர்களிடம்,
“அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக்
காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “மனிதன் கடன் படும் போது
பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து அதற்கு மாறு செய்கின்றான்” என்று பதில் கூறினார்கள்.
( புகாரி )
அல்லாஹ் நம் அனைவரையும் கடன் வாங்குவதிலிருந்து
பாதுகாப்பானாக!, வாங்கிய கடனை இழுத்தடிக்காமல் கொடுப்பதற்கு தவ்ஃபீக் செய்வானாக! அவன்
தந்த பொருளாதாரத்தில் பரக்கத் செய்து அதைக் கொண்டு திருப்தியோடு வாழும் நல்ல நஸீபை
தவ்ஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல்
ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. காலத்திற்கேற்ப அருமையான பதிவு. பயான் குறிப்பு மூலம் எங்களுக்கு உதவும் தங்களுக்கு அல்லாஹ்ன்மேலும்ுஇல்மை வழங்குவானாக. இதுவரை தாங்கள் பதிவிட்ட மிஹ்ராப்விளக்குகளைபுத்தகமாக வெளியிடலாமே.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! வாராக்கடன் வரம் பெற்ற விஜய் மல்லையா பற்றிய செய்தி பரபரப்பாக பேசப்படுகிற இந்த சமயத்தில் தங்களது இந்த பயான் அருமையான உதவி. الحمد لله. جزاكم الله خيرا كثيرا
ReplyDelete