Thursday, 22 December 2016

சிரியா!!! சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…



சிரியா!!!
சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை
 
 
0% குளிர், எதற்கும் உதவாத உக்கி, இத்துப் போன கூடாரங்கள், உறைந்து போகச் செய்யும் பனிக்காற்றுகள், நாலாபுறங்களில் இருந்தும் வெடித்துச் சிதறடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கிகள், வான்வழியாக குண்டு மழைப் பொழிவுகள், கற்பைப் பாதுகாக்க தற்கொலை செய்யும் பத்தினிச் சகோதரிகள், மலை போல் குவிந்து கிடக்கும் பிணக்குவியல்கள் என்று இதற்கு மத்தியில் எஞ்சியிருப்பவர்களை எப்படி பாதுகாப்பது, எங்கிருக்கிறது தஞ்சம் எனும் கேள்வியோடு அழும் முகங்களை முகநூல், டுவிட்டர், வலைதளம் என நவீன ஊடகங்களின் வாயிலாக பார்க்கும் போது மனம் கனக்கின்றது.

கல் மனதையும் கரைய வைத்து, கண்ணீரை வரவழைக்கச் செய்யும் ஓர் காட்சி ஓர் அபலைப் பெண்ணின் அழுகுரல்நாங்கள் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்! எங்களுக்காக துஆச் செய்யுங்கள்!” என்று.

ஆம்! கடந்த இரு வாரங்களாக அமெரிக்க, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவோடும், மறைமுக இராணுவ உதவிகளோடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஷாம் தேசத்தின் ஹலப் ( அலெப்பா ) பகுதியை கூட்டு இனப்படுகொலைக் களமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது பஷர் அல் அஸத் தலைமையிலான சிரிய அரசின் இராணுவப் படை.

இந்த யுத்தத்தின் நோக்கம் மேற்குலக வல்லரசு அமெரிக்க, சிதறுண்டு போன முன்னாள் வல்லரசு ரஷ்யா, மிகப்பழைய வல்லரசான அன்றைய பாரசீகப் பூமியைக் கொண்டிருக்கிற ஈரான் ஆகியவற்றின் இஸ்லாமிய விரோத மனப்பான்மையே! என்பதை முதலில் நாம் ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

வாருங்கள்! சிரிய முஸ்லிம்களுக்கு உலக முஸ்லிம்கள் எவ்வாறு கடமைப் பட்டிருக்கின்றார்கள்? நாம் என்ன செய்ய வேண்டும்? அங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்பதை வரலாற்றின் ஊடாக அறிந்து வருவோம்!!!

சிரியாவின் பூகோள அமைப்பும்…. அதன் வரலாறும்…..

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும்,  ஜோர்டானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

சிரியாவின் மக்கள் தொகை 22.85  மில்லியன் ( 2013 ஆண்டின் உலக வங்கியின் கணக்குப்படி ) ஆகும். மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டது.

முதலாம் உலகப் போர் ஏற்படுத்திய மிகப்பெரும் தாக்கம் துருக்கி கிலாஃபத் வீழ்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் மேற்குலக நாடுகளால் கண்காணிக்கப்படும் நாடுகளாகஆக்கப்பட்டன. இதன் அடிப்படையில் சிரியா பிரான்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழிருந்த சிரியா 1941 ல் சுதந்திரம் பெற்று, 1945 ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் மூலம் தேசிய அரசாங்கம் ஒன்றையும் அமைத்தது.

அதன் முதல் ஜனாதிபதியாக சுக்ரி குவைலித் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 1958 ம் ஆண்டு எகிப்துடன் இடம்பெற்ற ஓர் ஒப்பந்ததத்தின் மூலம் எகிப்து, சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய அரபு குடியரசு என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டன. தொடர்ந்து 1961 ல் இராணுவ சபை ஒன்று உருவாக்கப்பட்டு சிரியா எகிப்தில் இருந்து பிரிந்து தனி நாடாக மாறியது.

தனி நாடாக மாறிய சிரியாவின் முதல் ஜனாதிபதியாக நாசிம் அல் குத்ஸி தேர்வு செய்யப்பட்டார். 1963 மார்ச் மாதம் 08 ம் தேதி சிரியாவின் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் இராணுவப் புரட்சியின் மூலம் சிரியாவின் ஆட்சித்தலைமையைக் கைப்பற்றி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தார்.

1963 ல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஹாபிஸ் அல் அஸத் 2000 ம் ஆண்டில் தான் மரணிக்கும் வரையில் சிரியாவின் ஆட்சியாளராக இருந்தார்.

2000 ம் ஆண்டு ஹாபிஸ் அல் அஸத் மரணித்ததைத் தொடர்ந்து அவரின் புதல்வர் பஷர் அல் அஸத் ஆட்சி பீடத்திற்கு வந்தமர்ந்தார்.

தற்போதும் பஷர் அல் அஸத் தான் ஆட்சியாளராக இருக்கிறார். சிரியாவை ஆளும் பாத் கட்சியினரும்,  பஷர் அல் அஸத் குடும்பத்தினரும் ஷீயாக்களின் நுஸைரிய்யா பிரிவைச் சார்ந்த அலவிய்யா எனும் தரீக்காவைச் சார்ந்தவர்களாவர்.

நுஸைரிய்யாப் பிரிவினரின் வழிகெட்ட அகீதாக்கள்...

جعل النصيرية علياً إلهاً

நுஸைர் என்பவனின் பெயரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அலி (ரலி) அவர்களுக்கு இறைத்தன்மை கற்பிப்பதோடு, பாத்திமா (ரலி) அவர்களை தெய்வீகத் தன்மை கொண்டவர் என்றும் வாதிடுகின்றார்கள்.

நபியவர்களின் அருமைத் தோழர்களை கடுமையாக விமர்சிக்கும் இவர்கள், நபி {ஸல்} அவர்களின் தூய துணைவியர்களான ( ஆயிஷா (ரலி) மற்றும் ஹஃப்ஸா (ரலி) ) முஃமீன்களின் அன்னையர்களை நவூது பில்லாஹ் நா கூசாமல் வி.......சாரிகள் என்றும் தூற்றுகின்றனர்.

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் வணக்க வழிபாடு முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுக்கின்றார்கள்.  

இத்தகைய  நுஸைரிய்காக்களைப் பொருத்தவரையில் இவர்களின்  அகீதா கொள்கைக்கும், நம்பிக்கைக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

பெரும்பான்மையாக வாழ்கிற அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களை, சிறுபான்மைச் சமூகமாகவுள்ள ஷீயாவின் அதி தீவிரப் பிரிவான நுஸைரிய்யா - அலவிய்யாக்கள் கடந்த ஐம்பது வருடங்களாக ஆளும் ஆட்சியாளர்களாக இருந்து ஆள்வதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் இராணுவத்தோடு சேர்ந்து கொன்று குவித்து வருகின்றார்கள்.

கேடு கெட்ட கொள்கையைச் சுமந்து நிற்கிற ஆட்சியாளர் பஷர் அல் அஸத் மற்றும் பாத் கட்சியினருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய துவங்கியதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து ஐ.நா. சபையின் அகதிகள் மறுவாழ்வுத் துறைத் தலைவர் ஆண்டோனியா கஸ்ட்ரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக 2011 முதல் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுவரை 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சம் பேர் அகதிகளாகி உள்ளனர்.

லெபனானில் 10,14,000 பேரும் துருக்கியில் 8,15,000 பேரும் ஜோர்டானில் 6,08,000 பேரும் அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இவர்கள் தவிர ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

இன்றைய உலகின் அதிகமான அகதிகளை உருவாக்கிய ஒரு யுத்தமாக சிரியாவின் உள்நாட்டு யுத்தம் கணிக்கப்படுகின்றது.

வரலாற்றில் பல ஆட்சி மாற்றங்களையும், ஆட்சியாளர்களையும் சந்தித்த சிரிய மக்கள் தற்போது ஆட்சி மாற்றம் என்ற ஒற்றைக் கோஷத்திற்காக இரத்த சாட்சிகளை சுமந்து நின்று கொண்டிருக்கின்றார்கள்.

சிரியாவும், இஸ்லாமிய உலகும்…..

சிரியாவிற்கும் முஸ்லிம்களுக்கும் உண்டான தொடர்பு என்பது அல்லாஹ்வின் தூதர்களான லூத் {அலைஹிஸ்ஸலாம்} இப்ராஹீம் {அலைஹிஸ்ஸலாம்}, ஸுலைமான் {அலைஹிஸ்ஸலாம்} மூஸா {அலைஹிஸ்ஸலாம்} ஆகியவர்களிடம் இருந்தே துவங்கிற்று. இன்ஷா அல்லாஹ் பின்னர் இதை விரிவாகக் காணலாம்

மாநபி {ஸல்} அவர்களுக்கும் சிரியாவுக்குமான தொடர்பு என்பது கி.பி 626 –இல் ஹிஜ்ரி 5 –ஆம் ஆண்டு தூமத்துல் ஜந்தல் எனும் படையெடுப்பின் வாயிலாக முதலாவது தொடர்பு ஏற்பட்டது.

படையெடுப்புக்கான காரணம் இது தான் ”சிரியாவின் சில கோத்திரத்தினர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதுடன், மதீனா நகரை தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்தனர் என்ற செய்தி ஒற்றர்களின் மூலம் கிடைக்கப் பெற்றதும் சிரியாவின் துமா பகுதியின் மீது படையெடுப்பை மேற்கொள்ளுமாறு மாநபி {ஸல்} அவர்கள் பணித்தார்கள்.

இதன் பின்னர்,  ஹிஜ்ரி 12 -இல் அபூபக்கர் (ரலி) தலைமையிலான இஸ்லாமிய ஆட்சியின் போது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தலைமையிலான இஸ்லாமியப் படை சிரியாவின் தென்மேற்கு பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

அதன் பின்னர், உமர் (ரலி) அவர்கள் தலைமையிலான இஸ்லாமிய ஆட்சியின் போது அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் தலைமையிலான படை டமாஸ்கஸ் உள்ளிட்ட முழு சிரியாவையும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

அன்றைய சிரியாவின் இஸ்லாமிய ஆளுநராக முஆவியா (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர் உமையாக்களின் ஆட்சியில் சுமார் 90 வருடங்கள் சிரியாவின் தலை நகராக டமாஸ்கஸ் தான் இருந்தது.

பின்னர் கி.பி. 878 இல் எகிப்திய ஆட்சியாளர் அஹ்மத் பின் துலூன் என்பவர் சிரியாவைக் கைப்பற்றினார். கி.பி. 969 முதல் 1027 வரை எகிப்திய பாதிமிய்யாக்களின் ஆட்சி தொடர்ந்தது. பின்னர் சல்ஜூக்கியர்கள் கைவசமானது. சிறிது காலம் கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்தது.

பின்னர் சிலுவை யுத்தத்தின்போது சிரியாவின் சில பகுதிகளை முஸ்லிம் படைகள் மீட்டது. இதற்கு நூருத்தீன் ஸன்கி தலைமை வகித்தார்.  பின்னர் ஸலாஹுத்தீன் ஐயூபி அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

1193 இல் ஸலாஹுத்தீன் ஐயூபின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் கிறிஸ்தவர்கள் தன்வசமாக்க முயன்றார்கள்.

பின்னர் 1517 இல் துருக்கிய மன்னர் முதலாம் ஸலீம் சிரியாவை உஸ்மானிய சாம்ராஜியத்தோடு இணைத்தார். இவ்வாறு மூன்று நூற்றாண்டுகள் சிரியா உஸ்மானிய சாம்ராஜியத்தின் கீழ் இருந்தது.

1. சோபனமும், அருள்வளங்களும் நிறைந்த பூமி ஷாம்.....

ஜோர்டான், லெபனான், ஃபலஸ்தீன், சிரியா ஆகிய இந்த ஒட்டு மொத்த பகுதியைத் தான் இஸ்லாமிய வரலாறு ஷாம் என்று குறிப்பிடுகின்றது.

ذكر شيخ الإسلام تسع آيات من القرآن الكريم تدل على فضل بلاد الشام وبركته

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் “அல்லாஹ் அல்குர்ஆனில் சுமார் 9 இடங்களில் ஷாம் என்பது பரக்கத் நிறைந்த, தூய்மையான, புண்ணியம் நிறைந்த பூமி என்று குறிப்பிடுகின்றான்” என்று கூறுவார்கள்.

وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ
”பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்”.                 ( அல்குர்ஆன்: 7: 137 )
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ 
”(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப் புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக் கவே (இவ்வாறே செய்தோம்.) நிச்சயமாக அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்”.                                   ( அல்குர்ஆன்:17:1 )

وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ

”அவரையும், லூத்தையும் நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் காப்பாற்றினோம்”.                                 ( அல்குர்ஆன்: 21:71. )

وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ

”வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்”.                    ( அல்குர்ஆன்: 21:81. )

وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ

”இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பாதைகளையு)ம் அமைத்தோம்; “அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்)”.                  ( அல்குர்ஆன்: 34:18 )

فَلَمَّا أَتَاهَا نُودِيَ مِنْ شَاطِئِ الْوَادِ الْأَيْمَنِ فِي الْبُقْعَةِ الْمُبَارَكَةِ مِنَ الشَّجَرَةِ

”அவர் அங்கே வந்தபோது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து "மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்'' என்று அழைக்கப்பட்டார்”.          ( அல்குர்ஆன்: 28:30 )

إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى

      நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் துவாஎன்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்”.                                   ( அல்குர்ஆன்: 20:12 )

إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى

 துவாஎன்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து, கூறியதை நீர் நினைவு கூறுவீராக!”.                ( அல்குர்ஆன்: 79:16 ) 

يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ 

 ”(தவிர, அவர்) என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்என்றும் கூறினார்”.                                            ( அல்குர்ஆன்: 5:21 )

جاء في تفسير الطبري وتفسير ابن كثير: "قال مجاهد، والحسن، وسعيد بن جبير، ومالك عن زيد بن أسلم، وقتادة، والضحاك، وغيرهم: يعني قرى الشام؛ يعنون
 أنهم كانوا يسيرون من اليمن إلى الشام في قرى ظاهرة متواصلة، وقال العوفي
 عن ابن عباس: القرى التي باركنا فيها بيت المقدس".

மேற்கூறிய அத்தனை வசனங்களில் இடம் பெற்றிருக்கிற  باركنا, الْمُقَدَّسَة, الْمُبَارَكَةِ என்ற வார்த்தைகள் ஷாமையே குறிக்கின்றன என்று விரிவுரையாளர்கள் விளக்கம் தருகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் ஷாம் குறித்து பல்வேறு சோபனங்களைக் கூறியிருக்கின்றார்கள்.

عن عبدالله بن حوالة، قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((ستجندون أجنادًا: جندًا بالشام، وجندًا بالعراق، وجندًا باليمن))، قال عبدالله بن حوالة: خِرْ لي يا رسول الله إن أدركت ذلك، قال: ((عليك بالشام؛ فإنها خيرة الله من أرضه، يجتبي إليها خيرته من عباده، فأما إن أبيتم فعليكم بيَمَنكم، واسقُوا من غُدُركم؛ فإن الله توكَّل لي بالشام وأهله))؛ رواه أبو داود برقم 2483، وأحمد 4/110، 5/33 و288، وابن حبان، والحاكم،

அப்துல்லாஹ் இப்னு ஹவாலா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”சிரியா படை, ஈராக் படை,  யமன் படை என்று நீங்கள் பல ராணுவப்படைகளை பார்ப்பீர்கள்” என  நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! நான் பங்கு பெற்று போர் செய்வதற்கு இம்மூன்றில் எந்தப் படையை தேர்வு செய்ய வேண்டும்? என கேட்டேன்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! ஏனெனில், அது அல்லாஹ் அவன் படைத்த பூமியில் தேர்வு செய்த பூமியாகும்!” அல்லாஹ் சிரியாவையும், அங்கு வாழும் மக்களையும் எனக்காக பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளான்!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

وعن عبدالله بن عمرو قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((إني رأيت عمود الكتاب انتُزِع من تحت وسادتي، فنَظرت فإذا هو نور ساطع عمد به إلى الشام، ألا إن الإيمان - إذا وقعت الفتن - بالشام)) رواه الحاكم 4/509، وأبو نعيم في الحلية 5/252، وانظر: "مجمع الزوائد" 10/58، وقال الألباني

என் தலையனைக்கு கீழ் இருந்த வேதத்தின் முளைக் கம்புகள் கழட்டப்பட்டு சிரியாவில் அது ஜொலிப்பதாக காண்கிறேன். தெரிந்துகொள்ளுங்கள்! ஈமானுக்கு சோதனை வந்தால் அது சிரியாவில் போய் ஒளிந்து கொள்ளும்!” என்று என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
عن عبدالله بن عمر قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((ستخرج نار في آخر الزمان من حضرموت قبل يوم القيامة تحشر الناس))، قالوا: يا رسول الله، فما تأمرنا؟ قال: عليكم بالشام))؛ رواه الترمذي برقم 2217، وأحمد 2/8، ، وقال الألباني: حديث صحيح

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”கியாமத் நாளின் சமீபத்தில் ஹழ்ரமவ்த் என்ற ஊரிலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும் என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, ”அப்போது எங்கு அடைக்கலம் தேட வேண்டும்? என நாங்கள் கேட்டோம். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் நீங்கள் சிரியாவில் தங்குங்கள்!” என்று பதில் கூறினார்கள்.

عن عبدالله بن عمرو رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: "ستكون هجرة بعد هجرة، فخيار أهل الأرض ألزمهم مهاجر إبراهيم -يعني الشام- قال: ويبقى في الأرض شرار أهلها تلفظهم أرضوهم وتقذرهم نفس الله، وتحشرهم النار مع القردة والخنازير". رواه أبو داوود وصححه الألباني.

”ஹிஜ்ரத்துக்கு பின் ஹிஜ்ரத் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் நல்லவர்கள் யாவரும் இப்ராஹீம் {அலை} அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமியான சிரியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அடைக்கலமாகி விடுவார்கள்.    பூமியில் கெட்டவர்கள் மட்டும் வசிப்பர். அவர்களை நெருப்பு துரத்தும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ومن حديث عبدالله بن حوالة: "عليك بالشام فإنها خيرة الله من أرضه" يعني اختاره الله من أرضه "يجتبي إليه خيرته من عباده" رواه أبو داود وهو حديث صحيح

சிரியாவை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்! அது அல்லாஹ் அவன் படைத்த பூமியில் தேர்வு செய்த பூமியாகும்!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ويأتي المسيح من قبل المشرق -يعني المسيح الدجال- وهمته المدينة حتى إذا جاء دبر أحد تلقته الملائكة، فضربوا وجهه قبل الشام هنالك يهلك.. هنالك يهلك"كررها هو بأبي وأمي صلوات ربي وسلامه عليه.. ففي الشام يقتل الدجال وهو الذي يسفك فيه دمه. رواه الترمذي.

”கிழக்கு பக்கத்திலிருந்து தஜ்ஜால் வருவான்.அவன் மதீனாவை நாடி வரும்போது மலக்குகள் அவனை தடுத்து நிறுத்தி சிரியாவின் பக்கம் அனுப்பி வைப்பார்கள்.அந்த பூமியில் தான் அவன் அழிந்து நாசமாகுவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

وعن أبي ذر قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((الشام أرض المحشر والمنشر))؛ قال الألباني: حديث صحيح
 .
”சிரியா மஹ்ஷர் நடைபெரும் பூமி ஆகும்” என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال عبدالله بن عمرو رضي الله تعالى عنه: صلى بنا النبي عليه الصلاة والسلام ثم أقبل على القوم فقال: "اللهم بارك لنا في مدينتنا، وبارك لنا في مدنا وصاعنا، اللهم بارك لنا في حرمنا، وبارك لنا في شامنا" حديث صحيح.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நபி {ஸல்} அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். பின்பு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை முன்னோக்கி, யா அல்லாஹ்! எங்கள் மதீனாவில் பரக்கத் செய்வாயாக! எங்களுடைய முத்து மற்றும் ஸாஃவு விலும் பரக்கத் செய்வாயாக! யாஅல்லாஹ்! எங்கள் ஹரமிலும் பரக்கத் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களின் ஷாம் (சிரியா) பூமியிலும் பரக்கத் செய்வாயாக என நபி {ஸல்} அவர்கள் துஆ செய்தார்கள்”.

عن زيد بن ثابت قال: كنا عند رسول الله -صلى الله عليه وسلم- نؤلف القرآن من الرقاع، فقال رسول الله -صلى الله عليه وسلم ((طوبى للشام))، فقلنا
 لأي ذلك يا رسول الله؟ قال: ((لأن ملائكة الرحمن باسطة أجنحتها عليها))؛ رواه الترمذي برقم 3954، وأحمد 5/184، وابن حبان 114، والطبراني في الكبير، والحاكم 2/229، و611، وقال: على شرط الشيخين، وقال المنذري 4/11: "رواه ابن حبان في صحيحه، والطبراني بإسناد صحيح"، وقال الألباني: هو حديث صحيح.

ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”ஒரு நாள் நாங்கள் நபி {ஸல்} அவர்களின் சபையில் அமர்ந்து இறைச் செய்தியை எழும்புகளில் பதிவு செய்து கொண்டிருந்தோம். அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் ஷாமுக்கு சோபனம் உண்டாகட்டும்!” என்று கூறினார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதரே! எதன் காரணம் கொண்டு இவ்வாறு சோபனம் கூறுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “அளவற்ற அருளாளனின் அருள் நிறைந்த வானவர்கள் தங்களின் இறக்கைகளை அந்தப் பகுதியில் விரித்தவாறு இருந்து கொண்டிருக்கின்றார்கள்” என்று பதில் கூறினார்கள்.

2. சிரிய முஸ்லிம்களின் மீது நமக்கான அவசரக் கடமைகள் என்ன?

1. நமக்கும் அவர்களுக்கும் இடையே இஸ்லாம் கூறும் சகோதர பந்தம் இருக்கின்றது.

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ

“திண்ணமாக! இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள். எனவே, உங்களின் சகோதரர்களின் காரியத்தில் சீர்திருத்தத்தையே நீங்கள் நாடுங்கள்!”                                           ( அல்குர்ஆன்: 49: 10 )

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ

“இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் மற்ற இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் நேசர்கள் ஆவார்கள்”. ( அல்குர்ஆன்: 9: 71 )

தான் நேசம் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் இக்கட்டான, சோதனையான நேரத்தில் நேசம் கொண்ட காரணத்தால் எவ்வாரெல்லாம் அந்த நேசத்தை வெளிப்படுத்துவாரோ அவ்வாறே சிரிய முஸ்லிம்கள் விஷயத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

2. பிற முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துன்பம் தங்களுக்கு ஏற்பட்டது போன்று உணர வேண்டும்.

கப்பாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக அவரின் எஜமானியும், குறைஷித் தலைவர்களும் கடும் வேதனை செய்தார்கள்.

கற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்து, பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பர்கள்.

அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.

பலமுறை மாநபி {ஸல்} அவர்களிடம் முறையிட்ட போதும், மாநபி {ஸல்} அவர்கள் பொறுமையை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்கள்.

இந்நிலையில், நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானி உம்மு அன்மாரும் தன் பங்குக்குப் கொடுமை செய்தாள்.

ومر رسول الله به ذات يوم وهو يعذب، فرفع كفيه إلي السماء وقال
اللهم انصر خبابا
واستجاب الله لدعاء رسوله، فقد أصيبت أم أنمار بسعار غريب فجعلها تعوي مثل الكلاب!
ونصحها البعض بأن علاجها هو أن تكوي رأسها بالنار!
وهكذا ذاقت من نفس الكأس التي أذاقته لخباب بن الأرت.

ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று, கப்பாப் அவர்களின் தலையை அனுசரனையாய் தடவி விட்டு, ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் தலையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாள்.

சதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் கீழே வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி யாஅல்லாஹ்! கப்பாபுக்கு நீ உதவி செய்வாயாக!". என்று துஆச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது துஆவுக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.

ஆம்! உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி.

வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் அரபுலகத்தின் அனைத்து வைத்தியர்களிடமும் தூக்கிக் கொண்டு ஓடினார்.

ஆனால், யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை. இறுதியாக, அக்காலத்தில் சூட்டுக்கோல் வைத்திய முறை என்று ஒன்று இருந்தது. அதாவது, அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள்.

கடைசியாக, அதன் காரணமாகவே உம்மு அன்மார் இறந்தும் போனார்.

3. முஸ்லிமின் துன்பம் நீங்கும் வரை அவர்களுக்காக துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

عن أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ
 "وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".
صحيح البخاري ومسلم والسنن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும்  பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

 “இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!

தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.

உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3. நமக்கான பாடங்களும், படிப்பினைகளும் என்ன?

1. நிறைவான ஈமானும், குறைவில்லா நன்றியுணர்வும் இருந்தால் அல்லாஹ் தண்டிப்பதில்லை...

مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا

“நீங்கள் நன்றி செலுத்துபவர்களாய் இருந்து, இறைநம்பிக்கையின் (ஈமானின்) வழியில் நடப்பீர்களாயின் உங்களை ஏன் அல்லாஹ் தண்டிக்கப்போகின்றான்? மேலும், அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும், அவர்களை நன்கறிபவனாகவும் இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 4: 147 )

تَنْزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُنْقَعِرٍ () فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

“அந்தக் காற்று மக்களை வேகமாக தூக்கி எறிந்து கொண்டிருந்தது. அப்போது, அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்! எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! எப்படி இருந்தது என்னுடைய எச்சரிக்கைகள்!”                    ( அல்குர்ஆன்: 54: 20, 21 )

2. சோதனைகளின் போது இறை உதவியின் மீது நிராசை அடைந்து விடக் கூடாது.....

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

“உங்களுக்கு முன் சென்றுவிட்ட ( இறைநம்பிக்கையுடைய ) வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?

இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. அன்றைய இறைத் தூதரும், அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்? என்று புலம்பிக் கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப் பட்டார்கள்.

அப்பொழுது, அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது! “இதோ அல்லாஹ் உடைய உதவி மிக அண்மையில் இருக்கின்றது” என்று.       ( அல்குர்ஆன்: 2: 214 )

3. உலக ஆசையும், உயிர் வாழ்வதின் மீதான ஆசையையும் விட்டொழிக்க வேண்டும். இல்லையெனில்?.......


ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள்,  உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கால சூழல் வரும்  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அன்றைய தினம் நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்.

எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் வஹ்னை ஏற்படுத்தி விடுவான் என்று பதிலளித்தார்கள்.

 அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். 
உலகத்தை நேசிப்பது;மரணத்தை வெறுப்பது என்று பதிலளித்தார்கள். (நூல்: அஹ்மத்)

4. முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவிக்கும் கொடிய விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?

1. அழித்து விடுவான்….

1. அநியாயக்காரர்களை அல்லாஹ் கண்டு கொள்ளாமல் இருப்பதில்லை....

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

“இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று நீங்கள் கருத வேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான்!        ( அல்குர்ஆன்: 14: 42 )

2. அநியாயக்காரர்களின் முடிவு தாமதமாக்கப் படுவதில்லை....

 وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ

“மேலும், கொடுமை புரிகின்றவர்கள் அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள்”.  (அல்குர்ஆன்:26:227)

3. வல்லரசுகள் என்ன? எந்த கொம்பனாக இருந்தாலும் அத்து மீறினால் அழிவு நிச்சயம்....

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ () فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا

“ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமும் இன்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களை விட வலிமை மிக்கவர் யார் இருக்கின்றார்கள்” என்று.

அவர்களைப் படைத்த இறைவன் அவர்களை விட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்கு புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில், அபசகுணம் உடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்களை சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக!    ( அல்குர்ஆன்: 41: 15, 16 )

2. நேர்வழியைக் கொடுத்து இந்த தீனுக்காக வேலை வாங்கி உயர் நிலையை வழங்குவான்.

இறைநிராகரிப்பில் இருக்கும் போது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும், முஸ்லிம்களை கொன்றொழிக்க வேண்டும், மாநபி {ஸல்} அவர்களை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று வீறு நடை போட்டு, பல யுத்தங்களுக்கு தளபதிகளாய், வழிகாட்டிகளாய், மதியூகிகளாய் விளங்கிய அபூ சுஃப்யான், காலித் இப்னு வலீத், ஸுஹைல் இப்னு அம்ர், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமைய்யா, உமர் போன்றோர்களுக்கு ஈமானை வழங்கி சான்றோர்களாய் மாற்றினான் அல்லாஹ்.

فقال عكرمة
رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول .." .

இதோ, பெருமானார் {ஸல்} அவர்கள் முன் நின்று கலிமாவை மொழிந்து, மனம் உருகிப் பேசிய இக்ரிமா {ரலி} அவர்கள்:   அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன்.

இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  

5. சிரியா முஸ்லிம்களுக்காக துஆச் செய்வோம்! அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை….

இந்த துஆவிற்கு ஹரக்கத் போட்டு, பிரிண்ட் எடுத்து ஜும்ஆவிற்கு வருகை தரும் ஜமாஅத்தார்களுக்கு கொடுத்து ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் தாங்களும் ஓதுமாறும் தாங்கள் வீட்டுப் பெண்களையும் ஓதச் சொல்லுமாறும் வலியுறுத்தவும்.

இமாம்களும் ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின்னரும், ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவிலும் ஓதுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது, இதை தமிழ்ப்படுத்த நேரமில்லாத காரணத்தினால் இப்படிப் பதிவிடுகின்றேன்.

இன்ஷா அல்லாஹ்… நாளை காலைக்குள் தமிழ் படுத்தி அப்டேட் செய்கின்றேன்.

اللهم أنج المستضعفين من المؤمنين والمسلمين في بلاد الشام، وفي مشارق الأرض ومغاربها يا أرحم الراحمين، واجعل لهم فرجاً ومخرجاً

اللهم انصر المجاهدين في سبيلك، وألّف بين قلوبهم، ووحّد صفوفهم، ووفقهم لاتباع كتابك وسنة نبيك، ويسّر لهم أسباب النصر وفتح بيت المقدس وإقامة شريعتك

اللهم اجعلهم من الذين إن مكنتهم في الأرض أقاموا الصلاة وآتوا
الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر، ولله عاقبة الأمور
اللهم أنت ربنا و إلهنا و خالقنا قصدناك و رجوناك فلا تخيب رجاءنا و دعوناك فاستجب دعاءنا
اللهم انصرأهلنا في سوريا و اليمن وفلسطين و ليبيا و العراق و مصر و تونس والسودان وكافة بلاد المسلمين نصراً عزيزاً من عندك على من يحاربونك و يحاربون سنة نبييك
ودينك و يقتلون عبادك ، اللهم كِن سلاحهم واضرب وجوههم و مزقهم و فتتهم
واجعل أمرهم شتاً شتاً ، واجعل بيننا وبينهم سداً سداً ، و صب
عليهم العذاب صباً صباً ، و أطفأ نارهم و شلّ إرادتهم
اللهم عليك في بشار الاسد وحاشيته ومن يواليه من داخل البلاد وخارجها
اللهم جردهم من حولهم وقوتهم و سلطهم على أنفسهم و اجعل بأسهم بينهم
اللهم زلزل الأرض من تحت أقدامهم وألق الرعب فى قلوبهم وانصر اهلنا الابرياء فى كل مكان
اللهم انصر عبادك المؤمنين على القوم الفاسدين
أللهم أن الأعداء قد استهانوا بدينك وبعبادك
اللهم انهم أظهروا علينا قوتهم فأرنا فيهم قدرتك
اللهم زلزلهم أللهم أجعلهم عبرة للعالمين
أللهم يا أكبر من كل كبيرعليك بمن تجبر وتكبر
أللهم أنصرشعوب المسلمين وأشف جرحاهم وفك قيد اسراهم وأرحم شهدائهم وموتاهم
اللهم أرزقهم النصر على عدوهم وألأمان
أللهم أرزقهم الرزق الحلال وعوض عليهم
أللهم عوض عنهم خسائرهم و وسع عليهم ارزاقهم
يا ألله يا ألله يا ألله
حسبنا الله و نعم الوكيل

சிலுவையுத்தக்காரர்கள், மங்கோலியர்கள், தார்த்தாரியர்கள், பொதுவுடமை வாதிகள், யூதர்கள், கிருஸ்துவர்கள், ஆகியோர் இஸ்லாமிய மண்ணில் இழைத்த கொடூரக் குற்றங்களை போல, தங்களின் முன்னாள் சகாக்களை பின்பற்றி அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் அவர்களின் இஸ்லாமிய விரோதி ஷீஆக்களும், அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் பஷர் அல் அஸாத் போன்ற கயவர்களும் தங்களுடைய மூர்க்கத்தனமான வன்கொடுமைகளை மீண்டும் புனித பூமியான ஷாமிலே அரங்கேற்றம் செய்யலாம் என்று திட்டமிடுகிறார்கள்.

ஆனால் இதற்கு முன்னால், முஸ்லிம்களை எதிர்த்த எதிரிகள் இறுதியில் அடைந்த கதி என்ன என்பது வரலாறு நெடுகிலும் பரவி, விரவிக் கிடக்கின்றது, படிப்பினை பெற மறுக்கிறார்கள்!

முஸ்லிம் உம்மாவின் எதிரிகள் அனைவரும் வேரறுக்கப்படுவார்கள்! இஸ்லாத்தின் மகத்துவமும் முஸ்லிம்களின் பெருமையும் மீண்டும் உலகில் நிலை நாட்டப்படும்!  

அல்லாஹ்வின் கதவுகளை தட்டுவோம்! சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை விரட்டும் காலம் வெகு அருகாமையில் அண்மிவிட்டது என்பதை உலகிற்கு பறை சாற்றுவோம்!!

இன்ஷா அல்லாஹ்... வரும் நாட்கள் மாற்றத்தை காண காத்திருக்கிறது; அந்த மாற்றத்தைக் காண அல்லாஹ் நம் எல்லோருக்கும் தௌஃபீக் செய்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

8 comments:

  1. இப்னு தைமிய்யா ஷைஹூல் இஸ்லாம் (றஹ்)
    விளங்கிடும்.
    ஷைஹூல் ழலாலா (வழி கெட்டவன்) என்றுதானே வரலாறு கூறுகிறது.

    ReplyDelete
  2. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் சில கொள்கைகளின் முரண்பட்டாலும் நிறைய விஷயங்களில் உடன் படுகின்றார் இப்னு தைமிய்யா அவர்கள்.

    மேலும் நான் இங்கு அவர்களுடைய கருத்தை பதிவு செய்ததோடு திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் கூற்றையும் பதிவு செய்து இருக்கிறேன்.

    ஆகவே மாற்றுக் கருத்தாளர்கள் கூறுகிற எல்லாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவன் நான் இல்லை.

    மாற்று கருத்து கொண்டவர்கள் கூறுவது குர்ஆனின் வசனத்திற்கும் நபி மொழிக்கும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைக்கும் ஒத்து வரும் எனும் போது அதை அங்கீகரிப்பேன். That's all

    ReplyDelete
  3. Masha Allah அருமையான முயற்சி பாரகல்லாஹ்

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  5. அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  6. Baarkallahu fee ilmika ya shaikh jazakallah khair

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். தாங்கள்கட்டுரையில் ் குறிப்பிட்டிருப்பதைப் போன்று சிரியா மக்களுக்காக தினசரி சுப்ஹு தொழுகையில் எங்கள் பள்ளியில் குனூத் நாஜிலா ஓதிவருகிறோம்.

    ReplyDelete