நீங்களும்… நானும்…. 1614 நாட்கள் மட்டுமே!
எனக்கு மட்டும்
இந்த பூமியில் வாழ்வதற்கு
இன்னொரு வாய்ப்பு கிடைத்தால்
நிச்சயம் என்னுடைய வாழ்க்கையை
நீ விரும்பிய வழியில்,
நீ கட்டளையிட்ட முறையில்
அமைத்துக் கொள்வேன் இறைவா!
என்று, பூமியில் பிறந்த
நாள் முதற்கொண்டு இறக்கும்
நாள் வரை அல்லாஹ்வை
மறந்து வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள்
இரண்டு இடங்களில் முறையிட்டு
இறைவன் முன் மன்றாடுவார்கள் என அல்லாஹ்
அல்குர்ஆனில் பல இடங்களில்
பேசுகின்றான்.
அதில்,
ஒன்று உலகில்
உயிர் பிரியும் ஸக்கராத் நேரம்….
وَلَيْسَتِ
التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ
الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ
أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا ()
அல்லாஹ்
கூறுகின்றான்: “எவர்கள் பாவங்கள் புரிந்தவாறு வாழ்ந்து விட்டு மரணம் நெருங்கும்
போது “நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கு
மன்னிப்புக் கிடையாது. மேலும், இறுதி மூச்சு வரை நிராகரிப்பிலேயே
மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்கு
துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்”. ( அல்குர்ஆன்: 4: 18 )
وَأَنْفِقُوا
مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ
رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ
الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا
அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்து விடுங்கள்!
ஏனெனில், அந்த நேரத்தில் நல்வழியில் செலவு செய்யாதவர்
“என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது கால அவகாசம்
அளிக்கக் கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” என்று கூறுவார்.
ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து
விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும், கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக
வழங்குவதில்லை”. ( அல்குர்ஆன்:
63: 10 )
حَتَّى
إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99) لَعَلِّي أَعْمَلُ
صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا
அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமானால்,
“என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத்
திரும்ப அனுப்புவாயாக! அங்கு சென்று நான் நற்செயல் புரிந்து வருகின்றேன்!”
என்று கூறுவான். அப்போது, இவ்வாறு ஒரு போதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கும்
வெற்று வார்த்தைகள் தாம்!” என்று கூறப்படும்”. (அல்குர்ஆன்: 23: 99)
இன்னொன்று, நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை பார்க்கும் நேரம்……
وَمَنْ
خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ
خَالِدُونَ () تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ () أَلَمْ
تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ () قَالُوا
رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ () رَبَّنَا أَخْرِجْنَا
مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُونَ ()
“எவர்களுடைய எடைத்தட்டுகள்
இலேசாக இருக்குமோ அவர்கள்
தங்களைத் தாங்களே இழப்புக்கு
ஆளாக்கிக் கொண்டவர்களாவர். அவர்கள்
நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.
நெருப்பு அவர்களுடைய முகங்களின்
தோலை நக்கித் தின்றுவிடும்.
மேலும், அங்கே அவர்களின்
தாடைகள் வெளிப்பட்டு விடும்.
அப்போது, அல்லாஹ்
“என்னுடைய வசனங்கள் உங்களுக்கு
ஓதிக் காண்பிக்கப் பட்ட
போது அவற்றைப் பொய்
என்று கூறிய மக்கள்
நீங்கள் அல்லவா? என்று
கேட்பான்.
அதற்கவர்கள், “எங்கள்
இறைவனே! எங்களின் துர்பாக்கியம்
எங்களை அமுக்கி விட்டிருந்தது.
உண்மையிலேயே நாங்கள் வழிதவறிய
மக்களாகவே இருந்தோம். எங்கள்
இறைவா! எங்களை இங்கிருந்து
விடுவித்து, வெளியேற்றி ( உலகிற்கு
) விடு; நாங்கள் மீண்டும்
இவ்வாறு தவறு செய்தால்,
நிச்சயம் நாங்கள் அநியாயக்காரர்கள் ஆவோம்” என்று
கதறுவார்கள். ( அல்குர்ஆன்:
23: 103 – 107 )
என்ன பலன்?
இனிமேல் அந்த வாய்ப்பு
கிடைக்கவே கிடைக்காது என
தெரிந்த பின்னரும் மனிதன்
மன்றாடுவான்.
அல்லாஹ் மனிதனுக்கு
வழங்கிய அருட்கொடைகளில் ஆக
உயர்ந்த பெரும் அருட்கொடை
வாழ்நாள் – ஆயுட்காலம் ஆகும்.
வாழ்வதற்கு நாட்களும்,
ஆயுளும் இருந்தால் தானே
அல்லாஹ்வின் இன்னபிற அருட்கொடைகளை
வாழ்க்கையில் அனுபவிக்க முடியும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ: أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ السِّتِّينَ إِلَى
السَّبْعِينَ ، وَأَقَلُّهُمْ مَنْ يَجُوزُ ذَلِكَ
وحسنه الألباني في "صحيح الترمذي" .
وحسنه الألباني في "صحيح الترمذي" .
الترمذي (3550) وحسنه ، وابن ماجة (4236)
மாநபி {ஸல்}
அவர்கள் இந்த உம்மத்தின்
ஆயுட்காலம் குறித்து குறிப்பிடும்
பொழுது “60 – அறுபதுக்கும் 70 – எழுபதுக்கும்
இடையே தான் உள்ளது.
எனினும் இந்த வரம்பைக்
கடப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே!”
என்று கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ )
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் மதிப்பிட்ட முறையில்
சராசரியாக ஒருவர் 63 ஆண்டுகள்
இந்த உலகில் வாழ்கிறார்
என்று வைத்துக் கொள்வோம். உண்மையில்
அவர் வாழ்வதற்கு வாய்ப்பு
வழங்கப்படுவது வெறும் 1614 நாட்கள்
மட்டுமே.
அந்த 1614 நாட்கள்
என்பது மிகவும் இன்றியமையாத
ஒன்றாகும். அந்த நாட்கள்
தான் அவரின் ஈருலக
வெற்றிகளை தீர்மானிக்கின்றது.
அது என்ன
1614 நாட்கள்? வாருங்கள்! அறிந்து
கொண்டு, வாய்ப்பு வழங்கப்பட்ட
அந்த நாட்களுக்குள் ஈருலக
வெற்றிக்கான வாழ்க்கையை வாழ
முயற்சிப்போம்!
63 வயது ஆயுட்காலம்
கொண்ட ஒருவருக்கு, ஆயுளில்
ஒரு வருடம் என்பது
365 நாட்களைக் கொண்டது. 63 –ஐ
365 நாட்களில் பெருக்கினால் வரும்
விடை 22,995 நாட்கள் ஆகும். 63 × 365 = 22995 நாட்கள்.
இத்தோடு சேர்த்து
சில விவரங்களை நாம்
விளங்கிக் கொள்வோம்.
ஒரு நாளில்
சராசரியாக நாம் ஏழு
மணி நேரம் தூங்குகின்றோம் என்று வைத்துக்கொண்டால் அதில் 18 வருடங்கள்
கழிந்து விடுகின்றது. 18× 365 = 6570 நாட்கள்
ஆகும்.
ஒரு குடும்பத்தலைவிக்கோ,
ஒரு மாணவருக்கோ, ஒரு
நிறுவனத்தின் தலைவர் மற்றும்
ஊழியர்களுக்கோ தங்களின் பொறுப்புக்களை,
வேலைகளை செய்ய ஒரு
வாரத்தில் 50 – முதல் 60 மணி
நேரம் வரை ஆகின்றது.
அதனடிப்படையில் பார்த்தால் அதில்
21 வருடங்கள் கழிந்து விடுகின்றது.
21× 365 = 7665 நாட்கள்
ஆகும்.
தினந்தோரும் குளிப்பது,
மூன்று நேரங்கள் உணவு
உண்பது, காலை, மாலைக்
கடன்கள் போவது, அலுவலகம்,
வீடு, மற்றும் தங்களின்
சுய தேவை மற்றும்
வேலைகளுக்காக வெளியே செல்வது
என்ற வகைகளுக்கு 4 முதல்
5 மணி நேரம் தேவைப்படுகின்றது.
அதனடிப்படையில் பார்த்தால் அதில்
12 வருடங்கள் கழிந்து விடுகின்றது.
12 × 365 = 4380 நாட்கள் ஆகும்.
பொழுதுபோக்கு அம்சங்களான
வாட்ஸ்அப், இண்டெர்நெட், தொலைக்காட்சி,
நியூஸ்பேப்பர், அரட்டை அடிப்பது,
வம்புபேசுவது போன்ற விஷயங்களுக்காக தினந்தோரும் 2 மணி
நேரம் வரை செலவாகின்றது.
அதனடிப்படையில் பார்த்தால் அதில்
5 ¼ வருடங்கள் கழிந்து விடுகின்றது. 5¼ × 365 = 1935½ நாட்கள் ஆகும்.
உடல் ரீதியான,
மன ரீதியான ஆரோக்கியம்
கிடைப்பதற்கு உடற்பயிற்சிகள் செய்வதற்காக
ஒரு வாரத்திற்கு 6 மணி
நேரம் தேவைப்படுகின்றது. அந்த
வகையில் பார்த்தால் அதில்
1½ வருடங்கள்
கழிந்து விடுகின்றது. 1½ × 365 = 830½ நாட்கள்
ஆகும்.
6570 + 7665 + 4380 + 1935 ½ + 830 ½ = 21381 நாட்கள் ஆகும்.
இப்போது இந்த நாட்களோடு
22995 நாட்களை
கழித்தால் 1614 நாட்கள் மட்டும்
தான் மீதம் இருக்கின்றது.
22,995 –
21381 = 1614
நாட்கள் ஆகும்.
அல்லாஹ்விற்கு செய்ய
வேண்டிய கடமைகளை நிறைவேற்ற,
அல்லாஹ்வின் அடியார்களுக்குச் செய்ய
வேண்டிய கடமைகளைச் செய்ய,
புதிய ஒரு இல்மைக்
கற்றுக் கொள்ள, புதிய
ஓர் அமலை அறிந்து
கொள்ள, சமூகத்திற்கு தொண்டாற்ற,
மனித நேயப்பணிகளில் ஈடுபட,
மண்ணறை, மறுமையின் வாழ்க்கையில்
வெற்றி பெற, ஆன்மீக
வாழ்வின் துணை கொண்டு
இறை நெருக்கம் பெற…..
இப்படியாக நாம் செய்ய
வேண்டிய விஷயங்களின் பட்டியல்
நீண்டு கொண்டே போகின்றது.
செய்ய வேண்டிய
விஷயங்கள் நிறைய இருக்கின்றது,
ஆனால், அதையெல்லாம் செய்து
முடிப்பதற்கான அவகாசங்களை அல்லாஹ்
நமக்கு குறைந்த அளவே
( அதாவது 1614 நாட்கள் தான்
) தந்திருக்கின்றான்.
இப்போது நமக்கு
முன்னால் இருக்கின்ற மிகப்பெரிய
கேள்வி இது தான்.
எப்படி இவ்வளவு குறைந்த
நாட்களில் அல்லாஹ், ரஸூலின்
பிரியத்திற்குரிய வாழ்க்கையை
வாழ்வது? அல்லாஹ்வும், ரஸூலும்
பொருந்திக்கொள்கிற வாழ்க்கையை
வாழ்வது?
வாருங்கள்! அல்லாஹ்வும்,
அவன் தூதரான முஹம்மத்
{ஸல்}
அவர்களும் கூறுகிற வழிகாட்டுதலைப் பார்த்து, செயல்பட்டு
ஈருலக வெற்றியைப் பெருவோம்!!
1. வாழ
வேண்டியது… சராசரி
முஸ்லிமாகவா? (அ)
மிகச்சிறந்த முஸ்லிமாகவா?
முஹம்மத் {ஸல்}
அவர்களின் உம்மத்தாகிய நம்மை
அறிமுகப்படுத்தும் போதே
அல்லாஹ் சிறந்த உம்மத்
என்றே அறிமுகப்படுத்துகின்றான்.
كُنْتُمْ
خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ
“மனித இனத்தைச்
சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கிற சமூகத்தில் மிகச்சிறந்த
சமூகத்தவராய் நீங்கள் இருக்கின்றீர்கள்”. ( அல்குர்ஆன்:
3: 110 )
அல்லாஹ் அனுப்பிய
சமூகங்கள் அனைத்தும் சராசரியாக
இருக்கும் பட்சத்தில் மிகச்சிறந்த
சமூகம் நாம் தான்
எனும் போது, உலகில்
நாம் நம்முடைய வாழ்க்கையை
சராசரி ஒரு மனிதனாக,
ஒரு முஸ்லிமாக வாழாமல்
மிகச் சிறந்த ஒரு
மனிதனாக, ஒரு முஸ்லிமாக
வாழ்வது தான் பொருத்தம்
ஆகும்.
ஏனெனில், அல்லாஹ்
இவ்வாறு கூறுகின்றான்:
وَلِكُلٍّ
وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
“ஒவ்வொரு (சமூகத்திற்கும்)
வருக்கும் அவரவர் செல்கிற
பாதைகள் என்று ஒன்று
இருக்கின்றது. (இறைநம்பிக்கை கொண்டவர்களே!)
நீங்கள் மிகச் சிறந்த
செயல்களை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்”.
( அல்குர்ஆன்:2: 148 )
அல்லாஹ் நபிமார்களையும்,
நல்லோர்களையும் குறித்து புகழ்ந்து
பேசும் போது அவர்களிடம்
இருந்த உயர்பண்புகளில் ஒன்றாக….
1. ஜகரிய்யா
(அலை) அவர்களின் பிரார்த்தனைக்கு பதில்
அல்லாஹ் கூறும்
போது….
فَاسْتَجَبْنَا
لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا
يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا
خَاشِعِينَ ()
“பிறகு, நாம்
அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்
கொண்டு, அவருக்கு யஹ்யாவை
கொடையாக வழங்கினோம். அவருடைய
மனைவியை அதற்கு தகுதியுள்ளவராகவும் நாம் ஆக்கினோம்.
ஏனெனில், இவர்கள் இருவரும்
மிகச் சிறந்த செயல்களை
முனைந்து விரைவாக செய்யக்கூடியவர்களாகவும், பேரார்வத்துடனும், அச்சத்துடனும்
நம்மிடம் இறைஞ்சக்கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள்,
நம் முன் பணிந்தவர்களாகவும் திகழ்ந்தார்கள்” ( அல்குர்ஆன்:
21: 90 )
2. நல்லோர்களைப் பற்றி அல்லாஹ் பாராட்டிக் கூறும்
போது…
وَالَّذِينَ
يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ
رَاجِعُونَ () أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ
()
“மேலும், தம்
இறைவனிடம் திரும்பிச் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றோம் எனும்
எண்ணத்தில் இதயம் நடுங்கியவாறு
இருக்கின்றார்களே அத்தகையவர்கள்
மிகச் சிறந்த செயல்களின்
பக்கம் விரைந்து செல்பவர்களாகவும்,
ஒருவரையொருவர் முந்திச் சென்று
அவற்றை அடையக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்”.
( அல்குர்ஆன்: 23: 60, 61 )
3. வெற்றிக்கான வழிகளை ஒன்றாக
அல்லாஹ் அடையாளப்படுத்தும் போது…
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ
وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()
“இறைநம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் ருகூவும், சுஜூதும்
செய்யுங்கள்! உங்கள் இறைவனுக்கு
அடிபணிந்து வாழுங்கள்! மேலும்,
மிகச் சிறந்த செயலையே
செய்யுங்கள்! (இதன் மூலம்)
நீங்கள் வெற்றியடையக்கூடும்!”. ( அல்குர்ஆன்:
22: 77 )
4. நோன்பின் சலுகைகளை அறிவித்து விட்டு அல்லாஹ் கூறும் போது….
أَيَّامًا
مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ
أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ
فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ
كُنْتُمْ تَعْلَمُونَ ()
“உங்களில் எவரேனும்
நோயாளியாகவோ, பிரயாணத்திலோ இருந்தால்,
அவர் அந்நாட்களில் நோன்பு
நோற்காமல் மற்ற நாட்களில்
கணக்கிட்டு நோற்றுக் கொள்ள
வேண்டும். நோன்பு நோற்க
சக்தி இருந்தும் நோற்காமல்
விட்டு விட்டால் அவர்கள்
மீது ஃபித்யா எனும்
பரிகாரம் கடமையாகும். அது
ஒரு ஏழைக்கு உணவளிப்பதாகும்.
ஆனால், எவரேனும் விரும்பி
அதிக நன்மைகள் செய்தால்
அது அவருக்கே சிறந்ததாகும்.
என்றாலும், நீங்கள் அறிவுடையோராயிருப்பின் நோன்பு நோற்பதே
நீங்கள் செய்யும் மிகச்
சிறந்த செயலாகும்”. ( அல்குர்ஆன்:
2: 184 )
ஆக ஒரு
முஸ்லிம் என்பவர் சராசரியாக
வாழ்வதைக் காட்டிலும் மிகச்
சிறந்த செயலைத் தேர்ந்தெடுத்து,
அதை முனைப்போடு செய்து
மிகச் சிறந்த முஸ்லிமாக
மட்டுமே வாழ வேண்டும்
என்பதை மேற்கூறிய இறைவசனங்கள்
தூண்டுவதை விளங்க முடிகின்றது.
அப்படியானால்! வெறும்
1614 நாட்களில் நாம் சராசரி
மனிதனாகவோ, இல்லை சராசரி
முஸ்லிமாகவோ வாழ்கிறோம் என்றால்
இந்த உலகிலும் நாம்
தோற்றுப் போவோம், மண்ணறை
மற்றும் மறுமையிலும் தோற்றுப்
போவோம்.
ஆதலால் தான் பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில்
“ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில்
மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில பண்பியல்களை பட்டியலிட்டார்கள்.
عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
خَيْرُ
مَا يُخَلِّفُ الرَّجُلُ مِنْ بَعْدِهِ ثَلَاثٌ ؛ وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ ،
وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا ، وَعِلْمٌ يُعْمَلُ بِهِ مِنْ بَعْدِهِ
அப்துல்லாஹ் இப்னு
அபூகதாதா (ரலி) அவர்கள்
தங்களின் தந்தை மூலமாக
அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதர்
தன் மரணத்திற்குப் பின்
பிற்படுத்தி வைத்து விட்டு
வருவதில் மிகச் சிறந்தது
மூன்று அம்சங்களாகும்.
1. அவருக்காக துஆச்
செய்யக் கூடிய ஸாலிஹான
சந்ததிகளை விட்டு வருவது.
2. நன்மைகளை தொடர்படியாக பெற்றுக்
கொடுத்துக் கொண்டிருக்கிற அளவில்
அவர் செய்த அறப்பணிகள்,
3. அவருக்குப் பின்னாலும் சமூகத்திற்கு
பயன் தருகிற அளவிலான
கல்விப்பணி” ஆகியவைகளாகும் என
மாநபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
عن ابن عمر رضي
الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم
(( خير الناس أحسنهم خلقا ))
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“மனிதர்களில் மிகச் சிறந்தவர்கள் பண்பாடுகளால் மிகவும் சிறந்து விளங்குபவரே!” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்:
தப்ரானீ )
(( خير الناس من طال عمره وحسن عمله ، وشر الناس من طال عمره وساء
عمله ))
“மனிதர்களில்
மிகச்சிறந்தவர் அழகிய செயல்பாடுகளோடு நீண்ட ஆயுட்காலம் வாழ்பவரே! மனிதர்களில் மிகக்
கெட்டவர் தீய செயல்பாடுகளோடு அதிககாலம் வாழ்பவரே!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ )
(( خير الناس أنفعهم للناس ))
“மனிதர்களில்
மிகச் சிறந்தவர் மனிதர்களுக்கு அதிகம் பயன் தருபவர்களே!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: ஜாமிவுஸ் ஸகீர் )
(( خيركم خيركم لنسائه ولبناته ))
“உங்களில்
மிகச் சிறந்தவர் தன் மனைவியிடத்திலும், தன் சந்ததிகளிடத்திலும் சிறந்தவர் என பெயர்
எடுத்தவரே!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( பைஹகீ)
(( خير جلسائكم من
ذكَّركم الله رؤيته ، وزاد في عملكم منطقه ، وذكّركم الآخرة عمله ، وخير أبواب
البرّ صدقة ))
”உங்கள் தோழர்களில் மிகச்சிறந்தவர் யாரெனில் எவரைப்
பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வருமோ, எவருடன் பேசினால் இபாதத் அதிகமாகுமோ, எவருடைய
செயல் உங்களுக்கு மறுமையை நினைவு படுத்துமோ அவர் தான் மிகச்சிறந்தவர், மேலும், நன்மை
எனும் பொக்கிஷங்களின் வாசல்களில் மிகச் சிறந்தது தர்மம் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஜாமிவுஸ்ஸகீர் )
عن أنس بن مالك أن النبي صلى الله عليه و سلم قال
((خيركم من لم يترك آخرته لدنياه ، ولا دنياه
لآخرته ،))
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் உலகத்தை
அடைந்து கொள்வதற்காக மறுமையை விட்டு விடவில்லையோ, மறுமையை அடைந்து கொள்வதற்கான முயற்சியில்
உலகத்தை இழக்க வில்லையோ அவரே உங்களில் மிகச் சிறந்தவர் ஆவார்” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: ஜா. ஸகீர் )
عَنْ
أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ
عَلَى أُنَاسٍ جُلُوسٍ فَقَالَ : أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ
؟ قَالَ : فَسَكَتُوا ، فَقَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ فَقَالَ رَجُلٌ : بَلَى
يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا ؟ قَالَ : خَيْرُكُمْ
مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ ، وَشَرُّكُمْ مَنْ لَا يُرْجَى
خَيْرُهُ وَلَا يُؤْمَنُ شَرُّهُ
))
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி
{ஸல்} அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த சில மனிதர்களை கடந்து செல்லும் போது அங்கே நின்று
கொண்டு, தோழர்களே! உங்களில் மிகச் சிறந்தவர்களையும், மிகக் கெட்டவர்களையும் நான் அறிவிக்கட்டுமா?
என்று மூன்று முறை கேட்டார்கள்.
அப்போது, சபை முழுவதிலும் முழு அமைதி தவழ்ந்தது.
அப்போது சபையில் இருந்து ஒருவர் “ ஆம்! அல்லாஹ்வின் தூதரே! எங்களில் மிகச்சிறந்தவர்
யார்? மிகக் கெட்டவர் யார்? என அறிவியுங்கள்” என்றார்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “உங்களில் எவரிடம் நலவுகள்
ஏற்படுவதை ஆதரவு வைக்கப்பட்டு, தீயவைகள் ஏதும் நிகழாது என நம்பப்படுமோ அவரே உங்களில்
மிகச்சிறந்தவர் ஆவார். உங்களில் எவரிடம் நலவுகளே ஏற்படாது, தீயவைகள் மட்டுமே அவரால்
விளையும் என ஆதரவு வைக்கப்படுமானால் அவரே உங்களில் மிகக் கெட்டவர் ஆவார்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ : اسْتَقْرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ سِنًّا فَأَعْطَاهُ سِنًّا خَيْرًا مِنْ سِنِّهِ ، وَقَالَ :
خِيَارُكُمْ أَحَاسِنُكُمْ قَضَاءً
))
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”உங்களில்
வாங்கிய கடனை எவர் அழகிய முறையில் கொடுக்கின்றாரோ அவரே மிகச் சிறந்தவர் ஆவார்” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
عَنْ عُثْمَانَ
رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
(( خيرُكمْ من تعلّمَ القُرآنَ وعَلَّمَهُ ))
உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில்
குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் எவர் கற்றுக் கொடுக்கின்றாரோ அவரே மிகச்சிறந்தவர்
ஆவார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரீ )
عن عائشة رضي الله عنها
قالت: قال رسول الله صلى الله عليه وسلم
خيركم خيركم لأهله، وأنا خيركم لأهلي،
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில்
மிகச் சிறந்தவர், உங்கள் மனைவியரிடம் மிகச்சிறந்தவர் என பெயர் பெற்றவரே! ஏனெனில், நான்
என் மனைவியரிடத்தில் மிகச் சிறந்தவர் என பெயரெடுத்திருக்கின்றேன்” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்:
திர்மிதீ )
قال : قال رسول الله صلى الله عليه وسلم
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த நண்பர் யாரெனில் உங்களில் மிகச் சிறந்த நண்பராக விளங்கியவரே!
அல்லாஹ்விடத்தில் மிகச்சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் உங்களில் மிகச் சிறந்த
அண்டை வீட்டுக்காரராக விளங்கியவரே” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தாரமீ, திர்மிதீ
)
ஆகவே, நாம்
பங்காற்றும் எந்த ஓர் துறையிலும் சராசரியான ஓர் மனிதனாக, முஸ்லிலிமாக வாழாமல்
மிகச் சிறந்த பெற்றோராக,
மிகச் சிறந்த ஆலிமாக,
மிகச் சிறந்த கணவனாக
& மனைவியாக, மிகச்சிறந்த தோழனாக,
தோழியாக, மிகச் சிறந்த
உறவினராக, அண்டை வீட்டுக்காரனாக,
மிகச் சிறந்த மனிதனாக,
மிகச் சிறந்த எஜமானனாக, மிகச் சிறந்த ஊழியராக, மிகச்
சிறந்த முஸ்லிமாக வாழ வேண்டும் என்று
வலியுறுத்துகிற மாநபி {ஸல்}
அவர்களின் வழிகாட்டல்கள் ஹதீஸ்
கிரந்தங்கள் எங்கும் ஆயிரக்கணக்கில் பரவி, விரவிக்
கிடக்கின்றது.
எந்த அளவுக்கு மாநபி {ஸல்} அவர்கள் கூறியிருக்கின்றார்கள்
என்றால் மண்ணறை கப்ரிடம் கூட ஓர் முஸ்லிம் மிகச் சிறந்தவன் என பெயரெடுக்க வேண்டும்.
دخَل رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم مُصَلَّاه فرَأى ناسًا كأنهم
يكتَشِرون قال : أما إنَّكم لو أكثرْتُم ذِكرَ هاذِمِ اللذاتِ لشغَلَكم عما أرى (
الموتَ ) فأكثِروا من ذِكرِ هاذِمِ اللذاتِ الموتَ فإنه لم يأتِ على القبرِ يومٌ
إلا تكلم فيه فيقولُ أنا بيتُ الغُربةِ وأنا بيتُ الوَحدَةِ وأنا بيتُ التُّرابِ
وأنا بيتُ الدودِ فإذا دُفِنَ العبدُ المؤمنُ قال له القبرُ مرحبًا وأهلًا أما إن
كنتُ لأُحِبُّ مَن يمشي على ظهري إليَّ فإذا وَلِيتُك اليومَ وصِرتَ إليَّ فسَترى
صَنيعي بك قال فيَتَّسِعُ له مَدَّ بصرِه ويُفتَحُ له بابٌ إلى الجنةِ وإذا دُفِنَ
العبدُ الفاجرُ أو الكافرُ قال له القبرُ لا مرحبًا ولا أهلًا أمَا إن كنتُ
لأُبغِضُ مَن يمشي على ظهري إليَّ فإذ وَلِيتُك اليومَ وصِرتَ إليَّ فسَترى صَنيعي
بك . قال : فيَلتَئِمُ عليه حتى يلتقيَ عليه
وتختَلِفَ أضلاعُه قال قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم بأصابِعِه فأدخَل
بعضَها في جوفِ بعضٍ قال ويُقَيِّضُ اللهُ له سبعين تِنِّينًا لو أن واحدًا منها
نفَخ في الأرضِ ما أنبَتَتْ شيئًا ما بَقِيَتِ الدنيا فيَنهَشَنَّه ويَخدِشَنَّه
حتى يُفضى به إلى الحسابِ قال قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إنما
القبرُ رَوضةٌ من رِياضِ الجنةِ أو حُفرَةٌ من حُفَرِ النارِ
அபூஸயீத் அல்
குத்ரீ (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள்
நபி
{ஸல்}
அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வருகை தந்தார்கள்.
அப்போது, அங்கே
சிலர் உரக்கச் சப்தமிட்டு
சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
உடனடியாக அண்ணலார்,
சிரித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி
“இன்பங்களை இல்லாமல் ஆக்கிவிடும்
மரணத்தை நீங்கள் அதிகமாக
நினைவுகூர்வீர்களேயானால், அது
உங்களை இது போன்று
சிரிப்பதிலிருந்து தடுத்து
விடும்.
ஆகவே, எல்லா
வகையான இன்பங்களையும் ஒழித்துக்
கட்டிவிடும் மரணத்தை மிக
அதிகமாக நினைவு கூருங்கள்!”
ஏனெனில், ஒவ்வொரு
நாளும் மண்ணறை கூறிக் கொண்டிருக்கின்றது: “நான் பயணத்தின்
வீடாவேன்; நான் தனிமைச்
சிறையாவேன்; மண் இல்லமாவேன்;
புழு பூச்சிகளின் இருப்பிடமாவேன்!”
என்று.
இறை நம்பிக்கையுடைய ஒரு மனிதன்
மண்ணறையில் புதைக்கப்படும் போது
மண்ணறை அவனை வரவேற்று
பின்வருமாறு கூறும்:
“உன் வரவு
நல்வரவாகட்டும்! என் முதுகின்
மீது நடந்து சென்றோர்களிலேயே எனக்கு அனைவரையும்
விட அன்புக்குரியவனாய் நீ
இருந்தாய்! இன்று நீ
என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாய்!
நான் உன்னிடம் எவ்வளவு
பரிவுடன் நடந்து கொள்கிறேன்
என்பதை நீ பார்க்கப்
போகிறாய்!
நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்: “அந்த
இறைநம்பிக்கையுடைய மனிதருக்காக
அவரது மண்ணறை கண்ணுக்கெட்டும் தூரம் வரை
விசாலமாகும். அவருக்காக சுவனத்தின்
ஒரு வாசல் திறந்து
விடப்படும்.”
இதுவே, ஒரு
தீய செயல் புரிந்த
ஒரு நிராகரிப்பாளன் புதைக்கப்படும் போது, அவனுக்காக
மண்ணறை அவனை வரவேற்பதில்லை.
மாறாக, அவனை
நோக்கி மண்ணறை பின்
வருமாறு கூறும்: “என்
மீது நடந்து சென்றவர்களிலேயே அனைவரையும் விட
நீயே எனக்கு மிகவும்
வெறுப்புக்குரியவனாக இருந்தாய்!
இப்போது நீ என்னிடம்
ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாய்!
நான் உன்னிடம் எவ்வளவு
மோசமாக நடந்து கொள்ளப்
போகிறேன் என்பதை நீ
பார்க்கப்போகிறாய்!
அண்ணலார் கூறினார்கள்:
பின்னர் அம்மண்ணறை அவனுக்காகக்
குறுகிவிடும்! நெருக்கமாகி விடும்!
எந்த அளவுக்கெனில் அவனது
விலா எழும்புகள் ஒன்றுக்குள்
ஒன்று புகுந்து கொள்ளும்!”
என்று கூறி விட்டு
நபி
{ஸல்}
அவர்கள் ஒரு கரத்தின்
விரல்களை மற்றொரு கரத்தின்
விரல்களுக்குள் புகுத்திக் காட்டினார்கள்.
பின்பு கூறினார்கள்:
“அவன் மீது எழுபது
பாம்புகள் சாட்டப்படும்! அவற்றின்
நச்சுத்தன்மை மிகக்கடுமையானதாய் இருக்கும்.
எந்தளவுக்கெனில், பூமியில் அதன்
மூச்சுக்காற்று பட்டு விட்டால்
அதன் பாதிப்பால் பூமி
தன்னுடைய முளைப்பிக்கும் தன்மையை
இழந்து விடும்.
மேலும், இந்தப்
பாம்புகள் அனைத்தும் கேள்வி
கணக்கு நாள் வரும்
வரை தீண்டிக் கொண்டே
இருக்கும். இறுதியாக, அவன்
மஹ்ஷர் பெருவெளியில் கணக்கு
ஒப்படைத்திட கொண்டு வரப்படுவான்.”
இதைக்கூறிய பிறகு
அண்ணலார் “ஒரு மனிதனுக்கு
மண்ணறை என்பது ஒன்று
சுவனத்து பூஞ்சோலைகளில் ஒரு
சோலையாக அமையும்! அல்லது
நரகத்து படுகுழிகளில் ஒரு
படுகுழியாக அமையும்” என்று
கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ )
எனவே, அல்லாஹ்
வழங்கியிருக்கிற குறைவான
ஆயுட்காலத்தை, அண்ணலார் அடையாளப்படுத்திய அந்த
பண்பியல்புகளை வாழ்க்கையில் அலங்கரித்து, மிகச்
சிறந்த முஸ்லிம்களாக வாழ
முயற்சிப்போம்!!
1. மிகச்
சிறந்த பெற்றோராக வாழ முயற்சிப்போம்!
மறுமையின் பயங்கரமான
நிலையில் ஒன்று….
يَوْمَ
يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ () وَأُمِّهِ وَأَبِيهِ () وَصَاحِبَتِهِ
وَبَنِيهِ () لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ()
“அந்நாளில் தன்
சகோதரனையும், தாயையும், தந்தையையும்,
தன்னுடைய மனைவியையும், குழந்தைகளையும் விட்டு மனிதன்
வெருண்டோடுவான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத்தவிர
வேறெவரைப் பற்றியும் கவனம்
செலுத்த முடியாத நிலை
வந்தே தீரும்!” ( அல்குர்ஆன்:
80: 34 – 37 )
மறுமையின் மகிழ்ச்சியான
தருணங்களில் ஒன்று….
وَالَّذِينَ
آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ
ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ
“எவர்கள் இறைநம்பிக்கை
கொண்டார்களோ அவர்களையும், இறைநம்பிக்கையில் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின்
சந்ததிகளையும் நாம் சுவனத்தில்
ஒன்று சேர்த்து வைப்போம்”.
( அல்குர்ஆன்: 52: 21 )
பெற்றோர்களைக் கண்டு
பிள்ளைகளும், பிள்ளைகளைக் கண்டு
பெற்றோர்களும் ஓடி ஒளிகிற
காட்சியையும், ஈமானோடு வாழ்ந்த
பெற்றோர், மற்றும் சந்ததிகள்
ஒன்றிணைந்து சுவர்க்கத்தில் இன்பம்
அனுபவிக்கிற காட்ச்சியையும் அல்லாஹ்
குறிப்பிடுகின்றான்.
சராசரி பெற்றோராக
இருக்க வேண்டுமா? மிகச்
சிறந்த பெற்றோராக இருக்க
வேண்டுமா? என்பதை இந்த
இரு வசனங்களின் துணை
கொண்டு நாம் விளங்கிக்
கொள்ளலாம்.
ஸாலிஹான சந்ததிகளை
உருவாக்குவது தான் மிகச்
சிறந்த ஒரு முஸ்லிம்
பெற்றோரின் கட்டாயக் கடமையாகும்.
மிகவும் சவாலான
ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து
வருகிறோம் நாம். எத்திசைகள்
நோக்கினும் தீமைகள் பரவி,
விரவிக்கிடக்கின்ற மோசமான
கால கட்டம் எனினும்
நம் சந்ததிகளை ஸாலிஹீன்களாக
உருவாக்குவதில் கவனம் செலுத்துவதில்லை.
ஆனால், மேன்மக்களான
நபிமார்கள் தங்களின் சந்ததிகள்
ஸாலிஹீன்களாக உருவாக்கம் பெற
வேண்டும் என்பதில் மிகப்
பெரிய போராட்டத்தையே நடத்தி
இருக்கின்றார்கள், அதற்காக அல்லாஹ்விடம்
மன்றாடி இருக்கின்றார்கள் என்று
குர்ஆனில் அல்லாஹ் பேசுகின்றான்.
நபிமார்கள் என்பவர்கள்
அல்லாஹ்வால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,
அவனால் பாதுகாக்கப்பட்டு, அவனுடைய
நேரடி பயிற்சிப்பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டு எல்லா நிலையிலும்
வஹி எனும் இறைச்செய்தியின் தொடர்பில் இருந்தவர்கள்.
ஆனாலும், அல்லாஹ்விடம்
அழகிய ஸாலிஹான சந்ததிகள்
வேண்டும் என, ஸாலிஹான
வாழ்க்கையை மேற்கொள்பவர்களாக இருக்க
வேண்டும் என அல்லாஹ்விடம்
மன்றாடியதை அல்லாஹ் தெரிவிக்கின்றான்.
கஅபாவை கட்டும்
திருப்பணியைத் துவக்கி வைத்து
விட்டு அல்லாஹ்விடம் இப்ராஹீம்
(அலை)
அவர்களும், இஸ்மாயீல் (அலை)
அவர்களும் கேட்ட பிரார்த்தனையில்…
رَبَّنَا
وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ
“எங்கள் இறைவா!
எங்கள் இருவரையும் உனக்கு
முற்றிலும் கீழ்ப் படிந்தவர்களாய்
– முஸ்லிம்களாய் ஆக்கிவைப்பாயாக! எங்கள்
சந்ததிகளையும் உனக்கு முற்றிலும்
கீழ்ப்படிந்தவர்களாய் – முஸ்லிம்களாய் ஆக்கி
வைப்பாயாக!”`
( அல்குர்ஆன்:
2: 128 )
இப்ராஹீம் (அலை)
அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்
கிணங்க ஹாஜர் (அலை)
அவர்களை பாலைவனத்தில் விட்டு,
விட்டு கேட்ட பிரார்த்தனையில்…
رَبِّ
اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ()
“என் இறைவா!
என்னையும், என் சந்ததியினரையும் தொழுகையை (உயிருள்ள
வரை)
நிலையாக தொழுபவர்களாக ஆக்கியருள்வாயாக! ( அல்குர்ஆன்: 14: 40 )
ஒரு கட்டத்தில்
இப்படியான போராட்டத்தில், முயற்சியில்
தோற்றுப் போன இறைத்தூதர்
குறித்தும் அல்லாஹ் பேசுகின்றான்.
அல்லாஹ்வின் தண்டனையான
வெள்ளப்பெருக்கு நூஹ்
(அலை)
அவர்களின் சமூகத்தைச் சூழ்ந்து,
அதில் நூஹ் (அலை}
அவர்களின் மகனும் சிக்கி
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்,
தத்தளிக்கும் நிலையைக் கண்டு
மகனிடம் கூறினார்கள்.
وَنَادَى
نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ
مَعَ الْكَافِرِينَ () قَالَ سَآوِي إِلَى جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ قَالَ
لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ وَحَالَ
بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ ()
என் அருமை
மகனே! நீயும் எங்களோடு
கப்பலில் ஏறிக்கொள்! நிராகரிபோர்களுடன் இருக்காதே!
என்று, அதற்கு அவரின்
மகன் “தந்தையே! இப்போதே!
இதோ அருகில் இருக்கும்
இந்த மலையில் ஏறிக்
கொள்கின்றேன்! அது என்னை
வெள்ளத்திலிருந்து காப்பாற்றி
விடும்” என்று கூறினான்.
அதற்கு நூஹ்
(அலை)
அவர்கள் “இன்று அல்லாஹ்வின்
தீர்ப்பிலிருந்து காப்பாற்றக்கூடியது எதுவும் இல்லை;
ஆனால், அல்லாஹ் யாருக்கு
கருணை புரிந்தானோ அவர்கள்
மட்டும் தான் காப்பாற்றப்படுவார்கள்”
என்றார்கள்.
இதற்குள்ளாக, இருவருக்கும்
இடையே ஓர் அலை
குறுக்கிட்டு, மூழ்கடிக்கப் பட்டவர்களில்
அவனும் சேர்ந்து விட்டான்”. ( அல்குர்ஆன்:
11: 41 – 43 )
தங்களின் முயற்சியும்,
போராட்டமும் வீணாகி விட்டதே
எனும் வருத்தத்தில் அல்லாஹ்விடம்
கையேந்தினார்கள் நூஹ்
{அலை}
அவர்கள்…
وَنَادَى
نُوحٌ رَبَّهُ فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ
وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ () قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ
إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
إِنِّي أَعِظُكَ أَنْ تَكُونَ مِنَ الْجَاهِلِينَ ()
“என் இறைவா!
என்னுடைய மகன் எனது
குடும்பத்தைச் சார்ந்தவன், மேலும்,
திண்ணமாக! உன் வாக்குறுதி
உண்மையானதாகும். மேலும், நீ
தீர்ப்பளிப்பவர்களில் மிகச்
சிறந்தவனாவாய்” என்று பிரார்த்தித்தார்கள்.
அழுது மன்றாடிய
தன் தூதரை நோக்கி
அல்லாஹ் “நூஹே! திண்ணமாக,
அவன் உம்முடைய குடும்பத்தைச்
சார்ந்தவனும் இல்லை, ஸாலிஹானவனும்
இல்லை. எதனுடைய உண்மை
நிலையை நீர் அறியமாட்டீரோ
அதைப் பற்றி என்னிடம்
கேட்காதீர்! அறியாதவர்களில் ஒருவராக
நீரும் ஆகிட வேண்டாம்
என நான் அறிவுறுத்துகின்றேன்”
என்று கூறினார். ( அல்குர்ஆன்:
அல்குர்ஆன்: 11: 45 – 47 )
வழி கெட்டுப் போய்
விட்டான், வழி கெட்டவர்களோடு சேர்ந்து அவனும் அழிந்து போகட்டும் என்று நினைக்காமல்
மரணத்தின்
விளிம்பில் நின்று கொண்டிருந்த
அந்தச் சந்தர்ப்பத்திலும் கூட
நூஹ் {அலை} அவர்கள்
தங்களின் மகனை நல்வழிப்படுத்திட போராடிய அந்த
தருணத்தை நாம் சிந்தித்துப்
பார்க்க வேண்டும்.
ஏனெனில், சந்ததிகளை
நல்வழிப்படுத்துவது என்பது
ஒரு பெற்றோருக்கு மிகவும்
இன்றியமையாத கடமையாகும்.
இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் தங்களின் மரண நேரத்தின்
போது, தாங்கள் பெற்றெடுத்த மக்களை அழைத்துப் பேசிய நிகழ்வை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ
اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
() أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ
مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ
إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ
مُسْلِمُونَ ()
”யஅகூப் தம் மக்களுக்கு மரண நேரத்தில் “என்னுடைய
மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இந்த தீனையே தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக
அன்றி மரணித்து விடாதீர்கள்! மேலும், யஅகூப் அவர்களை மரணம் சமீபித்த போது, மக்களே!
என் மரணத்திற்குப் பின்னர் நீங்கள் யாரை வணங்குவீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு, அவர்கள் அனைவரும் “உங்கள் இறைவனும், உங்கள்
மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனாகிய ஒரே இறைவனை நாங்கள் வணங்குவோம்.
அத்தோடு, அவனுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து முஸ்லிம்களாகவே திகழ்வோம்!” என்று கூறினர்.
( அல்குர்ஆன்: 2: 133 )
ஒரு இறைத்தூதர் தம் மக்களை நல்வழிப்படுத்திட மரண
நேரத்திலும் கூட முனைகின்றார் என்றால் சராசரி பெற்றோராக இருப்பதில் இருந்து ஒரு முஸ்லிம்
மிகச் சிறந்த பெற்றோராக ஏன் முயற்சிக்க வேண்டும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் நமக்கு
உணர்த்துகின்றன.
ஆனால், நாமோ வழி தவறி, நெறி தவறி நடக்கும் நம் வீட்டுச்
செல்வங்களை நல்வழிப்படுத்துவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது, அப்ப மாறி விடுவான்,
இப்ப மாறி விடுவான் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையில் அதற்கான நேரமோ, காலமோ நமக்கு வழங்கப்படவில்லை.
மணித்துளிகள் வேகமாக கடந்து கொண்டிருக்கின்றது.
2. மிகச் சிறந்த பண்பாளர்களாக வாழ முயற்சிப்போம்….
كان في زمان سليمان بن عبد الملك بن مروان بن الحكم رجلٌ يُقال له
" خُزيمة بن بِشر " ؛ من بني أسد بالرَّقَّة ، وكانت له مروءة و نِعمة
حسنة وفضل و بِرٌّ بإخوانه ، فلم يزل على تلك الحال حتى احتاج إلى إخوانه الذين
كان يتفضَّل عليهم ، فواسَوه حيناً ، ثم ملُّوه ، فلمّا لاح له تغيُّرهم أتى إلى
امرأته
وكانت ابنة عمه - ؛ فقال لها : يابنت عمّ ؛ قد
رأيتُ من إخواني تغيُّراً ، و قد عزمتُ على لزوم بيتي إلى أن يأتيني الموت .
وأغلق بابه عليه ، وأقام يتقوَّتُ بما عنده ، حتى نفد ؛ وبقي حائراً في أمره ؟!!.
وأغلق بابه عليه ، وأقام يتقوَّتُ بما عنده ، حتى نفد ؛ وبقي حائراً في أمره ؟!!.
ஸுலைமான் இப்னு அப்துல் மலிக் இப்னு மர்வான் இப்னுல்
ஹகம் (ரஹ்) அவர்களின் ஆட்சிகாலத்தில் குஸைமா இப்னு பிஷ்ர் (ரஹ்) என்கிற கொடையாளர் ஒருவர்
வாழ்ந்து வந்தார்.
அல்லாஹ்வின் வழங்கிய அருட்கொடைகள் அனைத்தையும் மனித
நேயப் பண்போடு தேவையுள்ளவர்களைத் தேடித்தேடிச் சென்று கொடுப்பார்.
அத்தோடு நின்று விடாமல் தன் சகோதரர்களுக்கும் வாரி,
வாரி வழங்குவார். ஒரு கட்டத்தில் அவரை வறுமை சூழ்ந்து கொண்டது.
அவர் தன் சகோதர்களிடம் சென்று தன் தேவையைப் பூர்த்தி
செய்ய வேண்டிய அளவிலான சூழ்நிலையும் வந்தது.
ஒரு கட்டத்தில் கொடுத்து உதவியவர்கள், சில நாட்களிலேயே
வார்த்தைகளால் சூடு வைக்கத்துவங்கினர். இவரைக் கண்டதும் முகம் சுழிக்க ஆரம்பித்தனர்.
தன் சகோதரர்களே அவமானப்படுத்துகின்றார்களே என்ற
மன வேதனையோடு வீட்டிற்கு வந்து தன் மனைவியோடு நடந்தவைகளை பரிமாறிக் கொண்டார்.
பேச்சின் ஊடாக, தன்மானத்தோடு மனைவியைப் பார்த்து
“வீட்டைப் பூட்டி விடு! நான் மௌத்தாகும் வரை வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை! என
முடிவெடுத்து விட்டேன்” என்றார். மனைவியும் அவ்வாறே செய்கின்றார்.
ஒரு நாள், இரண்டு நாள், என்று நகர்ந்து, ஒரு வாரம்
கழிந்ததும் வீட்டில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போனது.
இனி அடுத்த வேளைக்கு உண்ண உணவில்லை, வீட்டின் அத்தியாவசியத்
தேவைகளை நிறைவேற்ற பணம் இல்லை.
எனினும் தன்மான உணர்ச்சி அவரை மற்றவர்களிடம் சென்று
உதவி கேட்க தடுத்தது. ஆகவே, அங்கு இங்கு என்று கடன் வாங்கினார், திருப்பிக் கொடுக்கவும்
முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கினார்கள்.
சற்று காலம் முன்பு வரை தாம் ஒரு கொடைவள்ளல், இன்றோ
இப்படி! என்ன செய்வது அல்லாஹ்வின் சோதனை என்று வீட்டிலேயே முடங்கிப் போனார்.
ஊரெங்கும் இதே பேச்சு தான். வாழ்வாங்கு வாழ்ந்தவர்
இப்படி ஆகிப்போனாரே என்று!.
عكرمة الفياض الوالي الجزيرة الفياض لكثرة ما يفيض على إخوانه من
المال والعطايا
و في
أحد الأيام كان عكرمة في مجلسه ؛ وعنده جماعة من أهل البلد ، فجرى ذِكر خزيمة بن
بشر في المجلس ، فقال الوالي عكرمة مستفهماً عن تغيبه الذي طال عن مجلسه : ما حاله
؟ فقالوا : صار من سوء الحال إلى أمرٍ لا يُوصَف ؛ فأغلق بابه ؛ ولزم بيته .!!
فقال عكرمة الفيَّاض : فما وجدَ خُزيمةُ بنُ بِشر مُواسِياً ولامُكافياً ؟ قالوا :
لا . فأمسك عن الكلام ، و عزم في نفسه على فعل شيء
அவர் வாழ்ந்த பகுதியின் கவர்னராக அப்போது இருந்தவர்
இக்ரிமத்துல் ஃபய்யாள் (ரஹ்) என்பவர் ஆவார்கள்.
கிட்டத்தட்ட குஸைமா அவர்களைப் போன்றே இவர்களும்
இரக்கமனமும், உதவி செய்யும் மனப்பான்மையும் நிறைந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக்
குறிப்பிடுவார்கள்: “அவரின் இயற்பெயர் இக்ரிமா என்பது மட்டுமே அவரின் உதவும் மனப்பான்மையால்
ஃபய்யாள் எனும் பெயரும் ஒட்டிக்கொண்டது” என்று.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குஸைமா இப்னு பிஷ்ர்
அவர்கள் இக்ரிமா (ரஹ்) அவர்களின் சபைக்கு வருகை புரிந்திருந்தார்கள்.
எனினும், முன்பு போல் அவரின் முகத்தோற்றத்தில் பொலிவு
இல்லாததை உணர்ந்த இக்ரிமா அவர்கள் இடையிடையே அவரை கவனித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஏனெனில், அருகில் இருக்கிற நகர்ப்புறத்தில் இருந்து
குழு ஒன்று கவர்னரை சந்திக்க வந்திருந்தது. அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் கவர்னர்
இக்ரிமா அவர்கள்.
இக்ரிமாவும், குஸைமாவும் நெருங்கிய நண்பர்களும்
கூட. நீண்ட நாட்களுக்குப் பின் நாம் வந்திருந்தும் கூட நம்மை அழைத்து நம் நண்பர் ஒரு
வார்த்தை கூட பேசவில்லையே என ஆதங்கப்பட்ட குஸைமா அவர்கள் விருட்டென அங்கிருந்து சென்று
விடுகின்றார்கள்.
அந்தக் குழுவோடு பேசி முடித்த பின் இக்ரிமா (ரஹ்)
அவர்கள் குஸைமா (ரஹ்) அவர்களைத் தேடுகின்றார்கள். சபையின் எந்த பகுதியிலும் அவரைக்
காணவில்லை.
அதன் பின்னர், அவையில் அமர்ந்திருந்தவர்களிடம்
“குஸைமாவின் முகத்தில் பழைய பொலிவைக் காணவில்லையே? அவருக்கு என்ன ஆயிற்று? வந்தார்,
திடீரென சென்று விட்டாரே? என்று கேட்டார்கள்.
அப்போது தான் அவரின் முழு நிலைமையையும் இக்ரிமா
(ரஹ்) அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
فلما كان الليل عمد إلى أربعة آلاف دينار ؛ فجعلها في كيس واحد ، ثم أمر بإسراج دابته ،وخرج سِرّاً دون أن يُعلم أهله ، فركب ومعه غلام من غِلمانه يحمل المال ، ثم سار إلى بيت خزيمة ، حتى وقف ببابه ، فأخذ الكيسَ من الغلام ، ثم أبعده عن الباب حتى لا يرى و لا يسمع ماذا سيكون من فعله و كلامه .
ثم تقدم الفياض إلى الباب فدقَّه بنفسه ، فخرج إليه خزيمةُ ، و دون كلام ناوله كيس المال ، و قال له : أَصلِح بهذا شأنَكَ . فتناوله خزيمةُ ؛ فرآه ثقيلاً فوضعه ثم أمسك لجام دابّة الفياض ، وقال له : مَن أنت
جُعِلتُ فِداكَ - ؟
فقال
الفياض : ما جِئتُك هذه الساعةَ وأنا أريد أن تعرفني
فقال خُزيمة
: فما أقبل أَو تُخبرَني من أنت ؟ . قال : أنا جابر عَثَرات الكرام . قال خزيمة :
زدني . قال : لا . ثم مضى عكرمة ، و دخل خُزيمة بالكيس إلى امرأته ؛ فقال لها :
أَبشِري ؛ فقد أتى اللهُ بالفَرَج والخير ، ولو كانت فُلوساً فهي كثيرةٌ ؛ قومي
فأَسرِجي . فقالت : لا سبيل إلى السِّراج لم يتبق عندهم زيت ليوقدوا به السراج
فبات ليلته يتلمس الكيس ؛ فيجد خُشونة الدنانير و هو لا يصدِّق أنها مال ؛ و أن الفرَج قد جاء .
فبات ليلته يتلمس الكيس ؛ فيجد خُشونة الدنانير و هو لا يصدِّق أنها مال ؛ و أن الفرَج قد جاء .
அப்பொழுதே ஒரு முடிவொன்றையும் எடுத்தார்கள். இரவு
நேரத்திற்காக காத்தும் இருந்தார்கள்.
இரவு நேரம் வந்ததும், தங்களின் மனைவியிடமும் கூட
சொல்லாமல் இரகசியமாக தம் பணியாளரை அழைத்து பைத்துல் மாலில் இருந்து நான்காயிரம் தீனாரை
எடுத்து ஒரு பையில் போட்டு மாறு வேடத்தில் குஸைமா (ரஹ்) அவர்களின் வீட்டை அடையாளம்
கண்டு, தம் பணியாளரை திரும்பிச் செல்லுமாறு பணித்து விட்டு, குஸைமா அவர்களின் வீட்டு
வாசல் முன் நின்று கதவைத் தட்டினார்கள் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
சில மணித்துளிகளுக்குப் பின்னர் கதவு திறக்கப்பட்டு
வாசலில் குஸைமா அவர்கள் வந்து நின்றார்கள்.
வந்து நின்றவரின் கரங்களில் நான்காயிரம் தீனார்
நிரப்பப்பட்ட பையைக் கொடுத்து ”இதை வைத்து உங்களின் வாழ்க்கை நிலையை சரி செய்து கொள்ளுங்கள்”
என்று கூறிவிட்டு விறுவிறுவென தங்கள் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து நடக்க எத்தனித்தார்கள்.
பை அதிகக் கனமாக இருப்பதை உணர்ந்த குஸைமா (ரஹ்)
அவர்கள் “யார் நீங்கள்? என் வாழ்க்கைச் சூழல் எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று
கேட்டார்கள்.
அதற்கு, ”நான் யார் என்று அறிமுகப்படுத்துவதற்காக
இப்போது, இந்த நடுநிசி வேளையில் உம்மிடம் நான் வரவில்லை” என்று கூறி நடக்க ஆரம்பித்தார்கள்.
மீண்டும், குஸைமா (ரஹ்) அவர்கள் “என் வாழ்க்கையில்
இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றீர்கள்? என் கஷ்டத்தை போக்க இவ்வளவு
பெரிய சிரமம் எடுத்துக் கொள்கின்றீர்கள்? நீங்கள் யார் என்று சொன்னால் தான் என் மனம்
அமைதி பெரும்” என்று சொன்னார்கள்.
அதற்கு, இக்ரிமா (ரஹ்) அவர்கள் أنا جابر عَثَرات الكرام
“சங்கையான மனிதர் ஒருவரின் துயரை துடைக்க வந்தவன்” என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்
இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
வீட்டிற்குள் தீனார் பையுடன் நுழைந்த குஸைமா (ரஹ்)
அவர்கள் “என் ரப்பு என்னைக் கைவிட வில்லை, மனைவியே அல்லாஹ் நமக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும்
இதோ மீண்டும் தந்து விட்டான்” என மகிழ்ச்சி பொங்க கூறிவிட்டு விளக்கை பற்ற வை எவ்வளவு
தீனார் இருக்கிறது என்று பார்ப்போம்? என்றார். அதற்கு குஸைமாவின் மனைவி விளக்கும் இல்லை,
விளக்கை பற்ற வைக்க எண்ணையும் இல்லை என்றார்.
காலையில் விழித்து பார்த்துக் கொள்ளலாம் என்றார்
அவரின் மனைவி. அதை ஆமோதித்தவராக உறங்கிப்போனார் குஸைமா (ரஹ்) அவர்கள்.
ورجع عكرمة الفيّاض إلى منزله ، فوجد امرأته قد افتقدَتْه؛ وسألت
عنه ؟ فأُخبِرَت بركوبه منفرداً ، فارتابت لذلك ؟!! فشقت جَيبَها ؛ولَطَمَت خدَّها
؛ و هي تظن به الظنون !!! ، فلمّا رآها على تلك الحال قال لها : مادَهاكِ يا
بنتَ عم ؟ . قالت : غَدَرتَ يا عِكرمةُ بابنة عمّك ؟. قال : وما ذاك ؟قالت : أميرُ الجزيرة يخرج
بعد هَدْأَةٍ من الليل مُنفرداً من غلمانه ؛ في سِرٍّ منأهله !! والله ما يَخرُج
إلا إلى زوجة أو سَرِيةٍ ؟
و هكذا المرأة إذا ماتحركت فيها الغيرة أو أثيرت شكوكها ... بركان هادر ؛ مدمر
فقال لها زوجها عكرمة : لقد علمَ اللهُ أَنِّي ما خرجتُ إلى واحدة مما ذكرتِ . قالت : فخبِّرْني ؛فِيمَ خرجتَ ؟ قال : يا هذه ؛ لم أخرج في هذا الوقت وأنا أريد أن يعلمَ بي أحد ؟! قالت : لا بد أن تخبرني . قال : فاكتُميه إذاً . قالت : أَفعلُ . فأخبرها القصة على وجهها ، وما كان من حديث بينه و بين خزيمة و كيف أعطاه المال ؛ و كيف سأله عن اسمه؟ و كيف أجابه قائلاً : أنا جابر عثرات الكرام . ثم قال لزوجته : أتُحبِّين أن أحلف لك ؟ قالت : لا ؛ فإن قلبي قد سَكَن إلى ما ذَكَرتَ .
ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் இக்ரிமா
அவர்கள். வீட்டுக்கு வந்ததும் எதிர் பார்த்துக் காத்திருந்த இக்ரிமா அவர்களின் மனைவி,
அவர்களின் ஆடை நனைந்து இருந்ததையும், அவர்கள் மாறுவேடம் அணிந்திருந்ததையும் பார்த்து
விட்டு, எங்கே, இந்த இரவு நேரத்தில் அதுவும்
தனியாக சென்று வருகின்றீர்கள்? நெஞ்சுப் பகுதியை சட்டையோடு பிடித்துக் கொண்டு இப்போதே
நீங்கள் எனக்கு சொல்லியாக வேண்டும்? யார் வீட்டுக்கு இந்த நேரத்தில் சென்று விட்டு
வருகின்றீர்கள்? வேறு ஏதாவது பெண்ணை திருமணம் செய்து இருக்கின்றீர்களா? எனக்கு மோசம்
செய்து விட்டீர்களே? என அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார் இக்ரிமா (ரஹ்) அவர்களின்
மனைவி.
ஏன் இரவில் தனியாகச் சென்று வந்தால் இந்த நோக்கத்திற்காகத்
தான் ஒரு ஆண் செல்வானா? நான் இந்த மாகாணத்தின் கவர்னர், நான் அலுவலக வேலை நிமித்தமாக
வெளியே ஒரு இடத்திற்கு சென்று வந்தேன் என்று கூறினார்கள்.
ஆனாலும், எவ்வளவோ சமாளித்தும் அவரின் மனைவியை சமாதானம்
செய்ய முடியவில்லை. எனக்கு நீங்கள் எங்கு சென்று வந்தீர்கள் என்ற உண்மையைச் சொல்லும்
வரை உங்களை விடமாட்டேன் என மனைவி வற்புறுத்தவே வேறு வழியின்றி நடந்த சம்பவங்களை விவரித்துக்
கூறிவிட்டு, அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன் இதை எப்போதும், எந்த தருணத்திலும்,
எவரிடமும் கூறக்கூடாது என்று உறுதி வாங்கினார்கள் இக்ரிமா அவர்கள். அவ்வாறே இரகசியம்
பேணுவதாக அவர்களின் மனைவி உறுதி கூறினார்கள்.
فلما أصبح خُزيمة صالح الغرماء – دفع ديونه - ، وأصلح من حاله ، ثم
تجهز لزيارة الخليفة سليمان بن عبد الملك بفلسطين – و كانت عسقلان بفلسطين مصيف
الخلفاء - ، فسافر إليه ، و لما وقف ببابه دخل الحاجب فأخبره بوصول خزيمة بن بِشر
للقائه – و كان الخليفة سليمان بن عبد الملك يعرف خزيمة و مروءته و كرمه - ،
فأذنله بالدخول ، فلما دخل عليه وسلم بالخلافة ، قال له الخليفة
يا خزيمة ؛ ما أبطأك
عنا ؟ قال : سوء الحال . قال: فما منعك من النّهضة إلينا ؟ - لماذا لم تأت إلينا
لنسعفك ؟
قال
خزيمة : ضعفي يا أمير المؤمنين . فقال الخليفة : ففيمَ نهضت ؟ - كيف فُرِّج عنك
فاستطعت أن تأتي إلينا ؟ - قال : لم أعلم - يا أمير المؤمنين - بعد هَدأَة الليل
إلا و رَجُلٌ طرق بابي ، فكان منه كَيت وكَيتَ ... وأخبره القصة من أولها إلى
آخرها . فقال له الخليفة : هل تعرفه ؟ قال خزيمة : ما عرفته يا أمير المؤمنين ،
وذلك لأنه كان متنكِّراً ، وما سمعت منه إلا " أنا جابر عثرات الكرام "
. فقال الخليفة متلهفاً إلى معرفته : لو عَرَفناه لأعنَّاهُ على مروءته .
காலைப்பொழுதும் மலர்ந்தது. பையைப் பிரித்துப் பார்த்த
குஸைமா பூரித்துப் போனார். வாங்கிய கடன்களை அடைத்தார். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்.
சில நாட்கள் கழித்து ஃபலஸ்தீனில் அஸ்கலான் எனும்
ஊரில் இருக்கும் கலீஃபா ஸுலைமான் (ரஹ்) அவர்களைச் சந்திக்க ஃபலஸ்தீன் பயணமானார்.
ஃபலஸ்தீன் வந்த குஸைமா (ரஹ்) அவர்கள் கலீஃபாவைச்
சந்திக்க தாம் வந்திருப்பதாக வாயிற்காப்போனிடம் சொல்ல, உள்ளே வந்து இப்படியொருவர் உங்களைச்
சந்திக்க வந்திருக்கின்றார் உள்ளே வரச் சொல்லவா என வாயிற்காப்போன் அனுமதி கேட்க இறுதியாக,
அனுமதி கிடைத்து உள்ளே சென்று கலீஃபாவைச் சந்தித்தார் குஸைமா அவர்கள்.
கலீஃபா பரிவோடு நலம் விசாரித்து விட்டு, நீண்ட காலமாக
எம்மை சந்திக்க ஏன் வரவில்லை? என்று வினவினார்.
அதற்கு, குஸைமா தான் பட்ட கஷ்டங்களைக் கூறினார்.
அதற்கு, கலீஃபா எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருந்தாலோ, என்னிடம் நீர் வந்திருந்தாலோ நான்
உமக்கு தேவையான உதவிகளை செய்து இருப்பேனே!” என்று கூறி விட்டு, இப்போது எப்படி நிலைமை
சரியானதா? ஏதேனும் உதவி செய்யட்டுமா? என்று கேட்டார்.
குஸைமா (ரஹ்) அவர்கள் “அதற்கு அவசியம் இல்லை கலீஃபா
அவர்களே! இப்படி, இப்படி இரவில் நடந்தது என நடந்த சம்பவத்தைக் கூறினார்கள்.
அதற்கு, கலீஃபா உமக்கு உதவியவர் யார் என உமக்கு
தெரியுமா? என்று கேட்க, இல்லை, أنا جابر عَثَرات الكرام
“சங்கையான மனிதர் ஒருவரின் துயரை துடைக்க வந்தவன்” என்று மட்டும் என்னிடம் கூறினார்”
என்றார்.
அப்படியானால், அவரை நீர் அடையாளம் கண்டு கொண்டீர்
என்றால் எம்மிடம் அறிவியும் நாம் அவரைக் கண்ணியப்படுத்துவோம் என்று கலீஃபா கூறினார்கள்.
கலீஃபாவைச் சந்திக்கச் சென்ற குஸைமா ஜசீராவுக்கு
வருகை தருகிற போது ஒரு ஓலையோடு வந்தார். அந்த ஓலை இது தான் கலீஃபா எழுதியனுப்பிய கடிதம்
“இன்று முதல் குஸைமா ஜஸீரா மாகாணத்தின் கவர்னராக இருப்பார். கவர்னராக இருந்த இக்ரிமா
பதி நீக்கம் செய்யப்படுகின்றார்” என்று.
இக்ரிமா (ரஹ்) கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு,
குஸைமா கவர்னராக ஆக்கப்படுகிறார்.
கவர்னர் பதவியில் அமர்ந்ததும் இக்ரிமா (ரஹ்) அவர்கள்
பொறுப்பேற்று இருக்கும் போது மாகாணத்தின் பைத்துல் மாலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக்
குற்றம் சுமத்தி கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
பைத்துல்மாலின் கணக்குப் பதிவேடு சரிபார்க்கப்படுகின்றது.
பக்கம் பக்கமாக ஆய்வு செய்த விசாரணைக் குழு ஓரிடத்தைக் கண்டு அதிர்ச்சியடைகின்றது.
பைத்துல்மாலில் இருந்து உதவி பெற்றவர்கள், கொடுக்கப்பட்ட
பணம் வரிசையாக எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இடத்தில் நான்காயிரம் தீனார் கொடுக்கப்பட்டதாக
எழுதப்பட்டிருந்தது. ஆனால், உதவி பெற்ற அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
விசாரணைக்குழு கவர்னரின் முன்பாக இக்ரிமா (ரஹ்)
அவர்களை ஆஜர்படுத்தியது.
கவர்னர் குஸைமா (ரஹ்) யாருக்குக் கொடுத்தீர்கள்
என்று கேட்கின்றார். அது இரகசியம் அதை என்னால் சொல்ல முடியாது என்று கூறி மறுத்து விட்டார்
இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
கொடுத்தவர் இப்போது குற்றவாளியாக நிற்கின்றார்.
யாருக்கு கொடுக்கப்பட்டதோ அவர் இப்போது கவர்னராக இருக்கின்றார். என்ன செய்வது?
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றார்
இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
இடையிடையே யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று கேட்டு
அடி, உதை, சித்ரவதைகள் சிறையிலே வழங்குமாறு கலீஃபா உத்தரவிட்டிருந்தார்.
சிறைத்தண்டனையோடு, சித்ரவதைகளையும் அனுபவித்துக்
கொண்டிருந்தார் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
وبلغ إلى زوجته ما نزل بعكرمة من الضُّرِّ والأذى ،فجزعت عليه ، واغتمَّت لذلك ، ثم دعت مولاةً – خادمة - لها ذات عقل ، وقالت لها : امضي الساعةََ إلى باب هذا الأمير ؛ فقولي : عندي نصيحة . فإذا طُلِبَت منك ؛ فقولي : لا أقولها إلا للأمير خزيمة بن بشر . فإذا دخلتِ عليه فسَلِيه أن يُخلِيك – أن يكون حديثك معه على انفراد بينكما - ، فإذا فعل ؛ فقولي له : ما كان هذا جزاءَ جابر عثرات الكرام منك ! كافأْتَه بالحبس والضيق والحديد ؟ .
فذهبت المولاة إلى بابقصر الأمير ، و فعلت ما قالته لها سيدتها ، فلما سمع خزيمة دعاها ؛ فاستمع منها كلامها ، و إذا به يقول : وا سوأتاه ! وإنه لهُوَ جابر عثرات الكرام ؟ قالت : نعم .
சிறையில் தன் கணவர் சித்ரவதைகளைச் சந்திக்கின்றார்
என்று கேள்வி பட்டதும் துடிதுடித்துப் போனார் இக்ரிமா (ரஹ்) அவர்களின் மனைவி.
ஆவேசப்படாமல், அறிவார்ந்த முறையில் யோசித்து ஒரு
முடிவுக்கு வந்தார்.
தன்னிடம் வேலை செய்த பணிப்பெண்ணை அழைத்து, “நீ கவர்னரின்
வீட்டுக்குச் சென்று அங்கு வேலை செய்யும் பணியாளர்களிடம் சென்று, நான் கவர்னரிடம் முக்கியமான
ஒரு செய்தியைச் சொல்ல வந்திருக்கின்றேன்” என்று சொல். அப்போது, அவர்கள் என்ன செய்தி
என்று உன்னிடம் கேட்பார்கள்.
அதற்கு, நீ நான் கவர்னரை தனியாகச் சந்தித்து பேச
வேண்டும் என்று சொல், அதற்கும் அனுமதி கிடைத்தது என்று சொன்னால் கவர்னரிடம் சென்று
உங்களுக்கு உதவிய جابر عثرات الكرام க்கு
இது தான் நீங்கள் செய்கிற பிரதி உபகாரமா? சிறைத்தண்டனையும், சித்ரவதைகளையும் தான் பரிசாகக்
கொடுப்பீர்களா? என்று சொல்லி விட்டு வந்து விடு என்றார்கள்.
அப்பணிப்பெண்ணும் அது போன்றே சென்றார்கள். அப்படியே
சொல்லவும் செய்தார்கள்.
இதைக் கேட்ட குஸைமா (ரஹ்) அவர்கள் இந்த செய்தியை
யார் உனக்கு சொன்னது? என்று கேட்டார். அதற்கு, நடந்த சம்பவத்தை அப்பணிப்பெண் கூறியதும்
குஸைமா மிகவும் வருத்தத்தோடு தவறு செய்து விட்டேனே என சப்தம் போட்டு கதறினார்.
فأمر خزيمة مباشرة بتجهيز راحلته ، فأُسرِجَت ، وبَعَث إلى رؤوس أهل البلد فجمعهم ، وأتى بهم إلى باب الحبس ففُتِح ، و دخل خُزيمةُ ومن معه ، فوجد عِكرمةَ في قاع الحبس متغيِّراً ؛ قد أضناه الضُّرّ ، فلما نظر إليه عِكرمة وإلى الناس أَحشَمَه ذلك و نكَّس رأسه – خجل من الناس و من الوالي ، و علم أنهم عرفوا أنه هو جابر عثرات الكرام - ، فأقبل خُزيمة حتى أكبَّ على رأس عكرمة ؛فقبَّله ، فرفع عكرمةُ رأسَه ؛ وقال : ما أعقبَ هذا منك ؟ - ما الذي جعلك تغير موقفك مني ؛ فأنت سجنتني و عذبتني ؛ والآن تقبل رأسي ؛ فما الذي سبب هذا التغيير منك في معاملتي ؟؟ - ، فقال الوالي خزيمة بن بشر : كريمُ فِعالك ؛ وسوء مكافأتي !!. فقال عكرمة : فغَفَرَ اللهُ لنا ولك .
ثم أمر خزيمة الحدَّاد ؛ ففكَّ القيدَ عن عكرمة ، وأمره أن يضَعَه في رِجْل نفسه !! . فقال عكرمة : تريد ماذا ؟ قال خزيمة : أريد أن يَنالَني الضُّرُّ مثل ما نالك . قال عكرمة : أقسم عليك بالله ألا تفعل .
فخرجا جميعاً من السجن ، إلى أن وصلا دار خزيمة ، فودّعه عكرمة ، و أراد الانصراف ، فقال له ابن بشر : ما أنت ببارح !!. قال عكرمة : وما تريد ؟ قال : أغيِّر من حالك ، وحيائي من ابنة عمِّك – زوجتك - أشدُّ من حيائي منك !! .
உடனடியாக, ஊரின் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு சிறைக்கூடத்திற்குச்
சென்றார் குஸைமா. இக்ரிமா (ரஹ்) அவர்களை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டவாறே அழுதார்.
அருகில் இருக்கிற கொல்லனை அழைத்து இக்ரிமா (ரஹ்)
அவர்களை பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை உடைத்தெறியச் சொன்னார்.
இதைப் பார்த்த இக்ரிமா (ரஹ்) நேற்று வரை எனக்கு
சித்ரவதைகளையும், அடி உதைகளையும் வழங்க உத்தரவிட்ட நீர் இப்போது முத்தமிடுவதும், சங்கிலியை
உடைக்கச் சொல்வதும் முரணாக இருக்கின்றதே? என்ன விஷயம் என்று கேட்டார்கள்.
என் வாழ்க்கையில் வசந்தத்தை தந்தவர் நீர்! என் வறுமையை
போக்கியவர் நீர்! என் முகத்தில் மலர்ச்சியை தந்தவர் நீர்! நான் இழந்த பெருமையை மீட்டுத்
தந்தவர் நீர்! இன்னுமா புரியவில்லை உமக்கு! உம் மனைவியின் புத்திசாலித்தனமான நடவடிக்கையால்
நீர் தான் என்று சற்று முன்னர் தான் தெரிந்து கொண்டேன்.
எனக்கு உதவியும் செய்து விட்டு, நான் கொடுத்த தண்டனையையும்
மனதார ஏற்றுக் கொண்டு ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் இப்படி இருந்து விட்டீரே நீர்!
நியாயமாகப் பார்த்தால் நான் தான் இந்த தண்டனையை
அனுபவித்து இருக்க வேண்டும் என்று கூறியவாறு, சிறைக்குள் சென்று சிறைக் கதவைத் தாழிட்டு
என்னைச் சங்கிலியால் பிணையுங்கள் என்று கத்தினார் குஸைமா (ரஹ்) அவர்கள்.
அல்லாஹ் உன்னையும், என்னையும் மன்னிக்க வேண்டும்!
அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டுச் சொல்கின்றேன்! உம்மீது எனக்கு எவ்வித குரோதமும்
இல்லை, நீர் தண்டனை அனுபவிக்க ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று இக்ரிமா (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்.
ثم أمر خزيمة بالحمَّام فأُخلِي ، و دخلا جميعاً ، ثم قام خزيمةُ
فتولّى خدمة عكرمة بنفسه ، ثم خرجا ، فخلع عليه – أعطاه جميل الهدايا و ثمينها - ، وجَمَّله ، وأعطاه مالاً كثيراً ، ثم سار معه إلى
داره ، واستأذنه في الاعتذار إلى ابنة عمه ، فأذن له ،فاعتذر لها ، و صار يذمّ
نفسه على ما فعله ،
சிறையில் இருந்து அழைத்து நேராக தம்முடைய வீட்டிற்கு
இக்ரிமாவை கூட்டிப்போய் குளிக்க வைத்து, அழகிய ஆடைகளை அணிவித்து, நறுமணமும் பூசி, உணவு
உண்ண அமர வைத்து இக்ரிமா (ரஹ்) அவர்களுக்குப் பரிமாறி பணிவிடையும் செய்தார்கள். அழகிய
சில அன்பளிப்புகள், பண முடிச்சுகளைக் கொடுத்து வீடு வரை கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள்
குஸைமா (ரஹ்) அவர்கள்.
பின்னர், தன்னுடைய செயலுக்காக இக்ரிமா (ரஹ்) மற்றும்
அவரின் மனைவிடம் மன்னிப்பும் கோரினார்.
ثم طلب من عكرمة أن يسافر معه إلى أمير المؤمنين سليمان بن عبد الملك - وهو يومئذ مقيم بالرملة من فلسطين - ، فوافق عكرمة .
و في اليوم الثاني توجه عكرمة الفياض مع خزيمة بن بشر إلى الخليفة سليمان بن عبد الملك ، فسارا جميعاً ، حتى قدما على سليمان بن عبد الملك ، فدخل الحاجبُ وأعلم الخليفة بقدوم خزيمة بن بشر ، فراعه ذلك وقال : والي الجزيرة يقدم بغير أمرنا ؛ مع قُرب العهد به ؟ ما هذا إلا لحادث عظيم !! . فلما دخل خزيمة ؛ قال له الخليفة قبل أن يسلِّم : ما وراءك يا خزيمة ؟قال : خيرٌ ؛ يا أمير المؤمنين . قال : فما الذي أقدمك ؟ قال : ظفرت بـ " جابر عثرات الكرام " ، فأحببت أن أَسرَّك به ، لما رأيت من تلهفك وشوقك إلى رؤيته . فقال الخليفة : ومن هو ؟ قال : هو عكرمة الفياض . فأذن الخليفة له بالدخول ، فدخل عكرمة، وسلّم على الخليفة بالخلافة ، فرحّب به ، وأدناه من مجلسه ، وقال : يا عكرمة ؛ ماكان خيرُك له إلا وبالاً عليك !!؟؟ .
ثم قال : اكتُب حوائجَك كلَّها ، وماتختاره في رقعةٍ . قال : أَوَ يعفيني يا أمير المؤمنين ؟ قال : لا بدَّ أن تكتب . ثم دعا الخليفة بدواة وقرطاس ، وقال لخزيمة : اعتزِلْ ، و اكتُبْ جميعَ حوائجك . ففعل خزيمة ذلك ، فأمر الخليفة بقضائها جميعاً من ساعته ، وأمر لعكرمة بعشرة آلاف دينار ، وسِفطَين من ثياب ، ثم دعا بقناة وولّاه على الجزيرة و أرمينية وأذربيجان ،وقال له : أَمرُ خزيمة إليك ؛ إن شئتَ أبقيتَه ؛ وإن شئت عزلتَه ؟ فقال عكرمة : بلأردُّه إلى عمله يا أمير المؤمنين .
ثم انصرفا جميعاً إلى الجزيرة ، ولم يزالا عاملَين لسليمان بن عبد الملك مدّةَ خلافته . انتهى .
பின்னர் சில நாட்கள் கழித்து கலீஃபா ஸுலைமான் அவர்களைச்
சந்திக்க இக்ரிமா அவர்களை அழைத்துச் சென்று, முன்பு நான் சொன்னேனே அந்த அவர் جابر عثرات الكرام வந்திருக்கின்றார் என அறிமுகப்
படுத்தி வைத்து விட்டு, நடந்த சம்பவங்களைக் கூறினார்கள்.
கலீஃபா அவர்கள் தங்களின் அருகே அமரவைத்து ஆறுதல்
கூறி, உமக்கு என்ன தேவையோ அத்தனையும் இதோ இந்த பேப்பரில் எழுதித்தாருங்கள் என்று கூறி
பேப்பர் ஒன்றை இக்ரிமா அவர்களிடம் நீட்டினார்.
இக்ரிமா மறுத்து விட்டார். கலீஃபா அவர்கள் உயர்தர
ஆடை இரண்டை அன்பளிப்பாகக் கொடுத்து, 10000 தீனாரையும் அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பினார்கள்.
மீண்டும் அல்ஜசீராவின் கவர்னராக ஆக்கி அனுப்பி வைத்தார்கள்.
ஆனால், இக்ரிமா (ரஹ்) குஸைமா (ரஹ்) கவர்னராக தொடர விரும்பினால் அவரே தொடரட்டும்! அவர்
விரும்பி விலகினால் நான் கவர்னராக தொடர்கின்றேன் என்றார்கள். பின்னர் இருவரும் அல்ஜஸீராவுக்கு
திரும்பி வந்தார்கள்.
அத்தோடு நின்று விடாமல், இக்ரிமா (ரஹ்) அவர்களையும்,
குஸைமா (ரஹ்) அவர்களையும் தங்களின் ஆட்சிக்காலத்தில் அல் ஜஸீரா, அர்மீனியா, அஜர்பைஜான்
ஆகிய பகுதிகளுக்கு கவர்னராகவும் நியமித்தார்கள்.
( நூல்: அல் முஸ்தஜாத் மன்ஃபஅலாத்தில் அஜ்வாத் லிஇமாமி
அல் காழீ அத்துனூஃகி (ரஹ்) 1/6, ஃபீ தீபில் முதாக் மின்
ஸமராத்தில் அவ்ராக் லிஇமாமி இப்னு ஹுஜ்ஜதுல் ஹம்வீ (ரஹ்)... 195 – 196
)
அல்லாஹ் நம்
அனைவருக்கும் பயனுள்ள வகையில்
அவன் வழங்கிய வாழ்க்கையை
வாழ்வதற்கு நல்ல தௌஃபீக்
செய்வானாக! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!
Alhamthu lillah
ReplyDeleteهذه الأخبار مفيدة لكل خطيب الجمعة !
ReplyDelete! جزاكم الله خيرا كثيرا
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். மனதை நெகிழச்செய்த சேதிகள். جزاكم الله خيرا كثيرا
ReplyDelete