ஏகத்துவக்
கோட்பாட்டில் நிலைத்திருக்கத் தூண்டும் ஒன்பது (9) கட்டளைகள்!!!
ஓர் இறைநம்பிக்கையாளனின் ஆக உயர்ந்த
நம்பிக்கைகளில் ஒன்று என்ன
தெரியுமா? அல்லாஹ்வின் வார்த்தைகளும்,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களின் வாழ்க்கை நெறிகளும்
தான் உலகில் மனிதனுக்கு
வழங்கப்பட்டிருக்கின்ற அருட்கொடைகளில் மிக உயர்ந்தது
என்று நம்புவதும், அவ்விரண்டும்
தான் மனித வாழ்க்கையில்
மகத்தான பல அழகிய
திருப்புமுனைகளை ஏற்படுத்தவல்லது என்று உறுதி பட கூறுவதும் ஆகும்.
“வார்த்தைகளில்
மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தையாகும்; வழிகாட்டலில் மிகச்
சிறந்தது முஹம்மத் {ஸல்} அவர்களின் வழிகாட்டலாகும்”
என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்த உம்மத்தை நெறிப்படுத்தும்
பொருட்டு பல்வேறு உபதேசங்களை கூறியுள்ளார்கள்.
சில போது ஒரு குழுவுக்கு, சில போது ஒரு குடும்பத்துக்கு, சில போது
ஒரு கோத்திரத்தாருக்கு, சில போது ஒரு நாட்டு மக்களுக்கு,
இன்னும் சில போது தனித் தனியான சிலரை அழைத்து இப்படி, இப்படி நடந்து கொள்ளுங்கள்! அப்படி நடந்து கொள்ளாதீர்கள்!
என்று.
இவ்வாறு, மாநபி {ஸல்} அவர்கள்
உபதேசித்த எந்த உபதேசங்களும் அவரவர்களைத் தாண்டி ஒட்டு மொத்த உம்மத்துக்கும் பின்பற்றி
நடக்க வேண்டிய அவசியமும், கட்டாயமும் இருக்கின்றது.
அந்த வகையில், மாநபியின் உபதேசங்களுக்கு உயிர் கொடுக்கும் போது இந்த உலகில் வியத்தகு
மாற்றங்கள் நிகழும் என்பதில் எந்த அளவு சந்தேகம் இல்லையோ அது போன்றே அவர் வாழ்க்கையும்
வியக்கத்தக்க அளவில் அமையப் பெறும் என்பதிலும் அணுவளவும் சந்தேகம் இல்லை.
மிகவும் பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருந்தது பெய்ரூத்தில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் தூதரக வளாகம்.
துடிப்பு மிக்க இளைஞர்
பருவத்து தூதரக அதிகாரி ஒருவர் மாடியின் ஒரு பகுதியில் இருந்து ஏதோ சிந்தனையோடு கீழ்
தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தூரத்தில் அவர் கண்ட
ஓர் காட்சி, அவர் சிந்தனையை கலைத்தது. உடனடியாக மேலிருந்து கீழிறங்கி அந்த இடந்துக்கு வந்தார்.
அவர் கண்ட காட்சி இது
தான் “ஒரு யூத முதியவர், அரபு
முஸ்லிம் இளைஞர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அந்த இளைஞரின் முகத்தில் பளார் என ஓர் அறை விட்டார்.
நிலை குலைந்த அந்த இளைஞன் அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்”.
கீழிறங்கி வந்த அந்த
பிரிட்டிஷ் அதிகாரி அந்த இளைஞனை இடைமறித்து “உனக்கும்
அந்த முதியவருக்கும் என்ன பிரச்சனை? என்று கேட்டார். அதறகவன், நான் அவரிடம் கடன் வாங்கி இருந்தேன்.
சொன்ன தவணையில் என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை, என்னிடம் கடனை திருப்பிக் கேட்டார். நான் மீண்டும் அவரிடம்
தவணை கேட்டேன். சினமுற்ற அவர் என்னை அடித்து விட்டார்.
“வாங்கிய கடனை உரிய தவணையில் கொடுத்து விடுமாறு எங்கள் நபி {ஸல்} அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்;
எனினும், உரிய தவணையில் திருப்பிக் கொடுக்காதது
என் குற்றம் தானே” என்று அமைதியாகக் கூறினான்.
உரிய தவணையில் கொடுக்காவிட்டால்
அதற்காக அவர் உன்னை அடிக்க வேண்டுமா? நீயும் அமைதியாக
இருக்கின்றாய்? திருப்பி அடிக்க வேண்டியது தானே? உன் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் கண்டிப்பாக அடித்திருப்பார்” என்று அந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி கூறினார்.
அப்போது, அந்த இளைஞன் “திருப்பித் தாக்க வேண்டும்
என என் மனம் நாடியது. எனினும், என் நபியின்
உபதேசம் ஒன்று என்னை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது” என்றான்.
அப்படியென்ன உபதேசம்? என்று கேட்டார் தூதரக அதிகாரி.
அதற்கவன்……. عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال:"من
لم يرحم صغيرنا ، ويوقر كبيرنا فليس منّا
".
“வயதில் சிறியோர்
மீது அன்பு காட்டாதவரும் வயதில் மூத்தோருக்கு மரியாதை செய்யாதவரும் என்னைச் சார்ந்தவரல்லர்”
என்ற என் நபி {ஸல்} அவர்கள்
கூறிய உபதேசமே!” என்றான்.
ஆற்றலும் வலிமையும்
நிறைந்த ஓர் இளைஞனை, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் முன்பாக வாழ்ந்த
ஒருவரின் உபதேசங்கள் கட்டுப்படுத்துகிறது, நெறிப்படுத்துகின்றது
என்றால் நிச்சயம் அந்த மாமனிதர் மகத்துவமிக்க வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பார் என்றெண்ணி
வியக்கின்றார்.
மாநபி {ஸல்} அவர்களின் மகத்துவமிக்க வாழ்க்கையை
படிக்கும் பொருட்டு வேலையைத் துறந்தார், முறைப்படி அரபிமொழிக்
கற்று, அண்ணலாரின் வாழ்க்கை நெறியைப் படித்து தூய இஸ்லாத்தில்
தன்னை இணைத்துக் கொள்கின்றார்.
மர்மடியூக் பிக்தால்
என்ற பெயரோடு பிரிட்டிஷ் தூதரக அதிகாரியாக அறியப்பட்ட அவர் முஹம்மத் மர்மடியூக் பிக்தாலாக
மாறிப்போனார்.
அல்லாஹ் அளவிலா மார்க்கஞானத்தை
அவருக்கு வழங்கினான். அதன் ஊடாக அவர் “The Meaning of the
Glorious Quran” என்ற பெயரில் ஆங்கிலத்தில் தலை சிறந்த திருக்குர்ஆன்
மொழியாக்கத்தைத் தந்தார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் உபதேசங்களுக்கு அந்த இளைஞன்
உயிர் கொடுத்ததன் விளைவாக நரகை நோக்கிச் சென்ற ஒருவருக்கு அல்லாஹ் சுவனப்பாதையை திறந்து
வைத்தான்.
ஒரு உபதேசம் இவ்வளவு
பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்றால் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை
வழிகாட்டலையும் நாம் நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வந்தால் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும்!?
வாருங்கள்! திருப்புமுனையை ஏற்படுத்தி, பெரும் தாக்கத்தையும்,
மாற்றத்தையும் ஏற்படுத்த வல்ல மாநபியின் உபதேசங்களை கேட்டு நடை முறைக்கு
கொண்டு வர முயற்சி செய்வோம்!
இன்று தனியொரு முஸ்லிமின்
வாழ்வில் தொடங்கி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் நம்பிக்கையிழந்து நின்று கொண்டிருக்கின்றது.
எங்கு நோக்கினும் எதிர்ப்புகள்,
சூழ்ச்சிகள், ஆபத்துகள் என அனுதினமும் ஏதாவது ஒன்றை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.
என்ன செய்வது? எப்படி எதிர்கொள்வது?
யார் இதைத் தட்டிக் கேட்பது? என்பன போன்ற பல கேள்விகள் முஸ்லிம் சமூகத்தால் நாள் தோறும்
எழுப்பப் படுகின்றன.
இதற்கான விடையை, முஸ்லிம்
சமூகத்திற்கான விடியலை, எழுச்சிப் பாதையை மாநபி {ஸல்} அவர்கள் கூறாமல் சென்றிட வில்லை.
இதோ….. நம்பிக்கையிழந்து நிற்கிற
நம்மை நோக்கி மாநபி {ஸல்} அவர்கள் விடுக்கும் அறைகூவல் இது தான்…
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ
يَا غُلَامُ أَوْ يَا غُلَيِّمُ أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ
يَنْفَعُكَ اللَّهُ بِهِنَّ فَقُلْتُ بَلَى فَقَالَ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ
احْفَظْ اللَّهَ تَجِدْهُ أَمَامَكَ تَعَرَّفْ إِلَيْهِ فِي الرَّخَاءِ يَعْرِفْكَ
فِي الشِّدَّةِ وَإِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ
فَاسْتَعِنْ بِاللَّهِ قَدْ جَفَّ الْقَلَمُ بِمَا هُوَ كَائِنٌ فَلَوْ أَنَّ
الْخَلْقَ كُلَّهُمْ جَمِيعًا أَرَادُوا أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ
يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَإِنْ أَرَادُوا أَنْ
يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ
وَاعْلَمْ أَنَّ فِي الصَّبْرِ عَلَى مَا تَكْرَهُ خَيْرًا كَثِيرًا وَأَنَّ
النَّصْرَ مَعَ الصَّبْرِ وَأَنَّ الْفَرَجَ مَعَ الْكَرْبِ وَأَنَّ مَعَ
الْعُسْرِ يُسْرًا
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.
அப்போது
நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தரட்டுமா?! அல்லாஹ் அதன் மூலம் உனக்கு
நற்பயனை வழங்குவான்!” என்று கேட்டார்கள். நான், “ஆம்! அல்லாஹ்வின்
தூதரே! அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்} அவர்கள்
“1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ
ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்!
உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான்.
4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி
தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன!
எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ அவைகள் எல்லாம் உண்டாகி
விட்டன.
6. அறிந்து கொள்!
முழு மனித சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது!
7. அவ்வாறு தான் முழு மனித சமூகமும் ஒன்றிணைந்து
உனக்கொரு
தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது!
8. அறிந்துகொள்
சிறுவனே! நீ வெறுக்கின்ற பல காரியங்களில் பொறுமை மேற்கொண்டால் பல நல்ல விளைவுகளைக்
காண்பாய்!
9. திண்ணமாக! அல்லாஹ்வின்
உதவி என்பது பொறுமை கொள்வதில் தான் இருக்கின்றது!, திண்ணமாக, மகிழ்ச்சி என்பது
சிரமத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது! திண்ணமாக, இலகு என்பது கஷ்டத்தைத்
தாங்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது!” என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
இது
சிறுவராயிருந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கற்றுத்தந்த வார்த்தைகள்
மாத்திரம் அல்ல. ஒட்டு மொத்த உம்மத்துக்கும் தான் என்பதை நாம் முதலில் உணர
வேண்டும்.
هذا الحديث شرحه الحافظ ابنُ رجب الحنبليُّ في كتابه
"جامع العلوم والحكم" شرحًا عظيمًا، ومما جاء في كلامه - رحمه الله -:
"هذا الحديث تضمَّن وصايا عظيمةً، وقواعدَ كليةً من أهمِّ أمور الدين!".
இந்த நபிமொழிக்கு
விளக்கம் தருகிற ஹாஃபிழ் இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்கள் “இந்த ஹதீஸ் மகத்தான பல
கருத்துக்களை பொதிந்திருக்கின்றது. மார்க்கத்தின் பல கோட்பாடுகளை உயர்த்திப்
பிடிப்பதை அமைந்திருக்கின்றது”
( நூல்:
ஜாமிவுல் உலூமி வல் ஹிகம் )
1. முதல் கட்டளை…
قوله: ((احفظ الله)): يعني احفظ حدودَه وحقوقه،
وأوامره ونواهيَه، وحفظُ ذلك هو الوقوف عند أوامره بالامتثال، وعند نواهيه
بالاجتناب، وعند حدوده فلا يتجاوز ما أمر به وأذن فيه إلى ما نهى عنه، فمن فعَلَ
ذلك فهو من الحافظين لحدود الله،
“1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான்.
அல்லாஹ்வின்
கட்டளைகளை, கடமைகளை, ஏவல்களை பேணுகிற விஷயத்தில் அக்கறை காட்டுவது.
அவன்
விலக்கியிருக்கிற அம்சங்களில் இருந்து விலகியும், வரம்பு மீறாமலும் வாழ்வது.
அப்படி
வாழ்கின்றவர்களை அல்லாஹ் பாதுகாப்பான்.
அல்லாஹ் வெற்றி
பெற்ற நல்லடியார்கள், சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற நல்லடியார்கள் குறித்து அல்குர்ஆனில்
புகழாரம் சூடுகிற போது “அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணுதலோடு
கடைபிடித்தவர்கள்” என்று கூறுகின்றான்.
وَالَّذِينَ
هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ()
”மேலும், அவர்கள்
தங்கள் வெட்கலத்தலங்களை அல்லாஹ் தடுத்தவற்றில் இருந்தும் பாதுகாத்துக்
கொள்வார்கள்”. ( அல்குர்ஆன்:
23: 5 )
وَالَّذِينَ
هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ()
மேலும், தங்களுடைய
தொழுகைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்வார்கள்”. ( அல்குர்ஆன்:
23: 9 )
وَأُزْلِفَتِ
الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ () هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ
أَوَّابٍ حَفِيظٍ ()
“மேலும், சுவனம்
இறையச்சம் கொண்டவர்களின் அருகில் கொண்டு வரப்படும். சிறிதளவு தூரம் கூட இருக்காது!
(அவர்களை நோக்கி கூறப்படும்) “இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது.
அதிகம் மீளக்கூடியவராகவும், (அல்லாஹ்வின் கட்டளைகளை, வரம்புகளை) மிகவும் பேணுதலோடு
கடைபிடித்து வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் உரியது!” ( அல்குர்ஆன்: 50: 31, 32 )
அல்லாஹ் மேற்கூறிய
வசனங்களின் மூலம் நான்கு விஷயங்களை வலியுறுத்துகின்றான்.
ஒன்று தொழுகையை
பேணித்தொழுவது, இன்னொன்று மர்ம உறுப்புக்களை ஹராமானதிலிருந்தும் பேணிப்
பாதுகாப்பது, அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று நடப்பது, விலக்கல்களை விட்டும் தவிர்ந்து
வாழ்வது.
ஆனால், இன்று இந்த
உம்மத்தில் தொழுகையின் நிலை எவ்வாறு இருக்கின்றது?
ஹராமானதில்
இருந்தும் மர்ம உறுப்புக்கள் பாதுகாக்கப்படுகின்றதா?
ஏவல்களை ஏற்று
நடக்கின்றோமா? விலக்கல்களில் இருந்தும் விலகி வாழ்கின்றோமா?
நம்மை ஏன் அல்லாஹ்
பாதுகாக்க முன் வரவில்லை என்று நாம் ஒவ்வொருவரும் சுயமே இந்த கேள்வியைக் கேட்டுக்
கொள்வோம்.
தொழுகையைத் தவற விடுவதன் தண்டணை….
அல்லாமா ஷம்சுத்தீன் அத் தஹபீ
(ரஹ்) அவர்கள் தங்களின் அல்கபாயிர் எனும் நூலில் பதிவு செய்திருக்கும் ஒரு செய்தி.
روي
أن امرأة من بني إسرائيل جاءت إلى موسى عليه السلام فقالت : يا رسول الله إني
أذنبت ذنباً عظيماً و قد تبت منه إلى الله تعالى ، فادع الله أن يغفر لي ذنبي و
يتوب علي : فقال لها موسى عليه السلام : و ما ذنبك ؟ قالت : يا نبي الله إني زنيت وولدت ولداً فقتلته فقال لها
موسى عليه السلام : اخرجي
منها لا تنزل نار من السماء فتحرقنا بشؤمك ، فخرجت من عنده منكسرة القلب ، فنزل
جبريل عليه السلام و قال : يا موسى الرب تعالى يقول لك لما رددت التائبة يا موسى ،
أما وجدت شراً منها ، قال موسى : يا جبريل و من هو شر منها ؟ قال : تارك الصلاة
عامداً متعمداً
...
நபி மூஸா {அலை} அவர்களின்
திருச் சபைக்கு பனூ இஸ்ரவேலர் சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி கண்ணீரும் கம்பலையுமாய்
வந்து நின்றாள்.
நபி மூஸா {அலை} அவர்கள் “ஏன்
அழுகின்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ”அல்லாஹ்வின் நபியே! நான் பாவம்
ஒன்று செய்து விட்டேன்! எனக்கு தவ்பா கிடைக்குமா? அல்லாஹ்வின் நபியே! நீங்கள் என் பாவம்
மன்னிக்கப்பட எனக்காக ரப்பிடம் பாவமன்னிப்பு கேட்பீர்களா?” என்று கேட்டார்.
அப்போது, மூஸா {அலை} அப்படியென்ன
பாவம் செய்து விட்டாய்? என்று கேட்டார்கள்.
அதற்கு, அப்பெண்மணி “அல்லாஹ்வின்
நபியே! நான் தவறான வழியில் என் இரவை இன்னொரு ஆணுடன் பகிர்ந்து கொண்டேன். அதன் மூலம்
கருவுற்றேன். அந்த கருவைச் சுமந்து பெற்றெடுத்தேன். என்ற போதிலும் அந்த குழந்தையை வளர்ப்பதை
அவமானமாகக் கருதி கொன்று விட்டேன் நபியே! அல்லாஹ் என்னை மன்னிப்பானா? நபியே!” என்று
கூறினார்.
இதைக் கேட்டதும், சினமுற்ற
மூஸா {அலை} அவர்கள் “அல்லாஹ் உன்னுடைய இந்த செயலால் கோபம் அடைந்து தண்டனையை இறக்கும்
முன்பாக இந்த சபையை விட்டு வெளியேறி விடு! என்று விரட்டி விட்டார்கள்.
இறைத்தூதரே! இப்படி விரட்டி
விட்டாரே? அல்லாஹ் என்ன செய்வானோ என்கிற அச்சத்தில் மனமுடைந்து அப்பெண்மணி அங்கிருந்து
வெளியேனார்.
அப்போது, நபி மூஸா {அலை} அவர்களிடம்
அல்லாஹ்வின் ஸலாத்தை எத்திய நிலையில் ஜிப்ரயீல் {அலை} அவர்கள் வருகை புரிந்தார்கள்.
அல்லாஹ் உங்களிடம் ஏன் மனம்
வருந்தி, மனம் திருந்தி வந்த அந்தப் பெண்மணியைத் திருப்பி அனுப்பினீர்கள்? என்று கேட்கச்
சொன்னான்.
அதற்கு, மூஸா {அலை} அவர்கள்
“எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்து விட்டு வந்து நிற்கிறாள் அப்பெண்மணி? அதற்குத் தான்
நான் திருப்பி அனுப்பினேன் என்றார்கள்.
இதை விட பெரும் பாவங்களெல்லாம்
இருக்கின்றதே நபியே! அது உங்களுக்கு தெரியாதா? இதை விட பெரிய பாவமாக ஒன்றை அல்லாஹ்
கூறியிருப்பதை உங்களுக்கு நான் கூறட்டுமா? என்று கேட்டு விட்டு, “வேண்டும் என்றே தொழுகையை
விடுபவன் இந்தப் பெண்மணி செய்த பாவத்தை விட பெரும் பாவத்தைச் செய்ததற்கு ஒப்பாவான்”
என அல்லாஹ் உங்களிடம் கூறச் சொன்னான் என்று கூறி விட்டுச் சென்று விட்டார்கள். ( நூல்: அல்கபாயிர் )
இந்த ஹதீஸுக்கு விரிவுரை தரும்
ஹதீஸ் விரிவுரையாளர்கள் இந்த ஹதீஸ் பலகீனமானது என்றாலும் தொழுகையை விடுவது சம்பந்தமான
மற்ற நபிமொழிகளின் கருத்துக்களோடு ஒத்துப்போவதால் இதை ஏற்றுக் கொள்ளலாம்.
عاقب عمر بن الخطاب رضي الله عنه نفسه حين فاتته صلاة
العصر في جماعة بأن تصدّق بأرض قيمتها مائتي ألف درهم
அமீருல் முஃமினீன் உமர் (ரலி)
அவர்கள் ஒரு நாள் அஸர் தொழுகை ஜமாஅத்தை தவறவிட்டார்கள். அதற்காக அவர்கள் தங்களை இவ்வாறு தண்டித்துக்
கொண்டார்கள் "அதாவது இரண்டு லட்சம் திர்ஹம் மதிப்புள்ள ஒரு நிலத்தை தர்மம் செய்தார்கள்.
ابن عمر رضي الله عنهما كان إذا فاتته صلاة في جماعة
أحيا تلك الليلة كلها، وأخّر ليلة صلاة المغرب حتى طلع كوكبان فاعتق رقبتين مع أن
وقت الصلاة لم يخرج
இப்னு உமர் (ரலி) அவர்கள்
ஜமாஅத்துதொழுகையை தவற விட்டார்கள் என்றால் அதற்கு பரிகாரமாக இரவு முழுவதும் தொழுகையில்
ஈடுபடுவார்கள். ஒரு நாள் இரண்டு நட்சத்திரங்கள் தெரிகிற நேரம் வரை மஃக்ரிப் தொழுகையைப் பிற்படுத்தி தொழுததற்காக இரண்டு அடிமைகளை உரிமை விட்டார்கள்.
( நூல்: இஹ்யா
உலூமித்தீன் )
وحفظ الله لعبده يدخل فيه نوعان:
الأول: حفظه له في مصالح دنياه؛ كحفظه في بدنِه وولده،
وأهله وماله، قال - تعالى -: ﴿ لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ
خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ﴾ [الرعد: 11], قال ابن عباس -
رضي الله عنهما -: هم الملائكة يحفظونه بأمر الله، فإذا جاء القدر خلوا عنه.
كان بعض العلماء قد جاوز مائة العام وهو متمتَّعٌ
بقوَّته وعقله, فوثب يومًا وثبة شديدة، فعُوتب في ذلك، فقال: هذه جوارحُ حفظناها
عن المعاصي في الصغر، فحفظها اللهُ علينا في الكِبَر، وقد يحفظ الله العبدَ بصلاحه
بعد موته في ذريته، كما قال - تعالى -: ﴿ وَكَانَ أَبُوهُمَا صَالِحًا ﴾
[الكهف: 82]، فإنهما حُفظا بصلاح أبيهما.
النوع الثاني من الحفظ - وهو أشرف النوعين -: حفظ الله العبدَ في
دينه وإيمانه، فيحفظه في حياته من الشُّبهات المضلَّة، ومن الشهوات المحرَّمة،
ويحفظ عليه دينه عند موته، فيتوفاه على الإيمان، وفي الصحيحين من حديث أبي هريرة -
رضي الله عنه - أن النبي - صلى الله عليه وسلم - قال: ((إذا أوى أحدُكم إلى فراشه،
فليأخُذْ داخلةَ إزاره، فلينفض بها فراشه))، ثم قال في آخر الحديث: ((وليقل:
سبحانك اللهم ربي، بكَ وضعتُ جنبي، وبك أرفعه، إن أمسكتَ نفسي فاغفر لها، وأن
أرسلتَها فاحفظها بما تحفظ به عبادك الصالحين)).
அல்லாஹ் வழங்கும் பாதுகாப்பு
என்பது…..
ஒன்று, வாழ்க்கையில் எல்லாத்
தருணங்களிலும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் பாதுகாப்பான்.
“ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு
முன்பும் பின்பும் பாதுகாக்கும் பணியில் வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின்
ஆணையின் படி அவர்களை பாதுகாக்கின்றனர்”. ( அல்குர்ஆன்:
12: 11 )
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் விதியும் கட்டளையும் நிகழ்கிற வரை அவ்வானவர்கள் அவர்களை
பாதுகாக்கின்றனர்.
அறிஞர் பெருமக்கள் கூறுவார்கள்:
“எவர் சிறு பிராயத்திலே உடல் உறுப்புக்களை ஹராமில் இருந்தும் பாதுகாக்கின்றார்களோ அல்லாஹ்
அவரை முதுமையில் பாதுகாப்பான்.
எந்தளவுக்கெனில், நாங்கள்
எங்கள் காலத்தில் 100 வயதைத் தாண்டிய பல அறிஞர் பெருமக்களைப் பார்த்திருக்கின்றோம்
அவர்கள் இளவயதினரைப் போல் ஆற்றலும், அறிவுபலமும் கொண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
அவர்கள் சிறுபிராயத்திலே செய்த
சிறு பிழைகளுக்கும் கூட முதுமையில் தண்டிக்கப்படதாக கூறியிருக்கின்றார்கள்.
இரண்டு, அல்லாஹ் அவரின் ஹாயத்
முழுவதிலும் தீனுடைய அடிப்படையில் வாழச்செய்வான், ஈமானோடே மரணிக்கச் செய்வான் வாழும்
போது எந்தவொரு தருணத்திலும் அவர்கள் வழிகெட்டுப் போகும் சூழலையோ, ஹராமில் வீழும் சூழலையோ
உருவாக்குவதில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“உங்களில் ஒருவர் உறங்குவதற்காகச் சென்றால் அவர் விரிப்பை உதறிக் கொள்ளட்டும்! பின்பு
அவர் “பரிசுத்தமான அல்லாஹ்வே! உன் பெயரால் என் விலாவை கீழே வைக்கின்றேன்! உன் கருணையாலே
விலாவை மேலே உயர்த்தவும் செய்கின்றேன்! என் உறக்கத்திலேயே என் ஆன்மாவைக் கைபற்றிக்
கொண்டால் என் பிழைகளுக்காக என்னை பொறுத்தருள்! என் ஆன்மாவைக் கைபற்றாமல் மீண்டும் திரும்ப
அனுப்பினால் உன் நல்லடியார்களை எவ்வாறு பாதுகாப்பாயோ அவ்வாறு என்னை பாதுகாப்பாயாக!”
என்று சொல்லட்டும்! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: முஸ்லிம் )
2. இரண்டாவது, மூன்றாவது கட்டளை….
2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ
ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்!
உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான்.
எல்லா நிலைகளிலும்
அல்லாஹ்வைப் பேணி வாழும் போது அல்லாஹ் நம்மோடு இருப்பதை, நம்முடைய எல்லாக்
காரியங்களிலும் நமக்கு உதவி புரிவதை நாம் அனுபவிக்க முடியும்.
அதே போன்று
அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற எல்லா அருட்கொடைகளைக் கொண்டும் அது இருக்கும் போதே
அதை அல்லாஹ்விற்காக செலவிட, பயன்படுத்த வேண்டும்.
நல்ல நிலையில்
இருக்கும் போது, ஆரோக்கியம் இருக்கும் போது அல்லாஹ்வை மறக்காமல், செழுமை இருக்கும்
போது அல்லாஹ்வை மறக்காமல் வாழ்ந்தால், நாம் கஷ்டப்படும் போது அல்லாஹ் நமக்கு
பேருபகாரியாக விளங்குவான்.
وقد قال
ابن أبي حاتم في تفسيره: حدثنا أبو عبد الله أحمد بن عبد الرحمن
أخي ابن وهب، حدثنا
عمي(عبد
الله ابن وهب)، حدثني أبو صخر أن يزيد الرقاشي حدثه
سمعت أنس بن مالك ولا أعلم إلا أن أنسا يرفع الحديث إلى رسول الله صلى الله عليه
وسلم
" أن يونس النبي
عليه السلام حين بدا له أن يدعو بهذه الكلمات وهو في بطن الحوت قال: (اللهم لا إله
إلا أنت سبحانك إني كنت من الظالمين) فأقبلت الدعوة تحت بالعرش فقالت الملائكة يا
رب صوت ضعيف معروف من بلاد غريبة فقال أما تعرفون ذاك ؟ قالوا: يا رب ومن هو ؟
قال: عبدي يونس، قالوا: عبدك يونس الذي لم يزل يرفع له عملا متقبلا ودعوة مجابة،
قالوا: يا ربنا أولا ترحم ما كان يصنعه في الرخاء فتنجيه من البلاء ؟ قال: بلى،
فأمر الحوت فطرحه في العراء
ورواه ابن جرير، عن
يونس، عن ابن وهب
நபி யூனுஸ் {அலை}
அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது “அல்லாஹ்வே! உன்னைத்தவிர வேறு இறைவன்
இல்லை! நீ தூய்மையானவன், திண்ணமாக, நான் குற்றம் செய்து விட்டேன்!” என்று அழுது
பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
“இந்த அழுகுரல்
அர்ஷைச் சுற்றியுள்ள வானவர்களுக்கும் கேட்டது. அப்போது, வானவர்கள் “அல்லாஹ்வே!
நாங்கள் அதிகம் அறிந்த ஓர் குரல் இப்போது எங்கேயோ தூரமாக இருந்து அபயமும்,
மன்னிப்பும் கேட்பது போல் தெரிகின்றது. அல்லாஹ்வே! அவரின் குரலில் நாங்கள்
பலகீனத்தை உணர்கிறோம்! என்றார்கள்.
அதற்கு, அல்லாஹ் “நீங்கள்
அந்த சப்தத்தை கேட்கின்றீர்களா? என்று கேட்டான். அப்போது, வானவர்கள் ஆம்! நாங்கள்
கேட்கிறோம்! “அல்லாஹ்வே! யார் அவர்? என்று வினவினார்கள்.
அதற்கு, அல்லாஹ்
“என்னுடைய அடியார் யூனுஸ்” என்று பதில் கூறினான்.
அப்போது,
வானவர்கள் “அல்லாஹ்வே! உன்னுடைய அடியார் யூனுஸ் நல்ல நிலையில் இருக்கும் போது
ஏற்றுக் கொள்ளப்படுகிற அளவிலான இபாதத்களும், பதிலளிக்கத்தக்க நிறைய துஆக்களும்
செய்திருக்கின்றாரே! இப்போது, அவர் ஏதோ ஆபத்தில் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்.
அல்லாஹ்வே! நீ அவரைக் காப்பாற்றி ஈடேற்றம் கொடுப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, அல்லாஹ்
“ஆம்! அவரை நான் காப்பாற்றுவேன்! ஈடேற்றம் நல்குவேன்” என பதில் கூறிவிட்டு,
மீனுக்கு கரையில் வந்து யூனுஸ் {அலை} அவர்களைக் கக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே
மீனும் யூனுஸ் {அலை} அவர்களை கரையில் வந்து கக்கி விட்டுச் சென்றது.
( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ )
இதே போன்று, ஃபிர்அவ்ன்
நீரில் மூழ்கடிக்கப்படுகிற போது “இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது
நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை” என்று நானும்
நம்பிக்கை கொண்டேன். மேலும், அந்த இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும்
ஒருவனாவேன்” என்று கூறும் போது, அர்ஷைச் சுற்றிலும் உள்ள வானவர்கள் இதுவரை நாங்கள்
கேட்டிராத ஓர் கெட்ட ஒரு குரலைக் கேட்கின்றோம் இறைவா என்று கூறுவார்கள்.
அதற்கு, அல்லாஹ்!
நீங்கள் அந்தச் சப்தத்தைக் கேட்கின்றீர்களா? அவன் தான் ஃபிர்அவ்ன் என்பான்.
அப்போது,
வானவர்கள் “அல்லாஹ்வே! இவன் நல்ல நிலையில் இருக்கின்ற போது நல்ல அமல்களோ,
பதிலளிக்கத் தக்க பிரார்த்தனைகளோ, இபாதத்களோச் செய்ய நாங்கள் கேட்டதில்லை”
என்பார்கள்.
அப்போது, அல்லாஹ்
மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் ஃபிர்அவ்னை நோக்கி “இப்போதா நம்பிக்கை
கொள்கின்றாய்? இதற்குச் சற்று முன்பு வரை நீ மாறு செய்து கொண்டிருந்தாய்! குழப்பம்
விளைவிக்கும் ஒருவனாகவும் இருந்தாய்” என கூறுவான்”. என அல்லாமா தபரீ (ரஹ்) அவர்கள்
தங்கள் விரிவுரை நூலிலே குறிப்பிட்டுள்ளார்கள்.
3. நான்காவது, ஐந்தாவது கட்டளை....
4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே
கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ
அவைகள் எல்லாம் உண்டாகி விட்டன.
வாழ்க்கையில்
தன்னால் இயலாத எல்லாவற்றையும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். பிறரின் உதவியோடு
செய்ய இயலும் காரியமாக இருந்தாலும் அல்லாஹ்வைக் கொண்டே உதவியும் தேட வேண்டும்.
அல்லாஹ் யூஸுஃப்
அத்தியாயத்தில் யூஸுஃப் {அலை} அவர்கள் சிறை சென்றதையும், சிறையில் இரண்டு
வாலிபர்களோடு உரையாடியதையும், வாலிபர்களின் கனவுகளுக்கு விளக்கம் சொன்னதையும் கூறிவிட்டு
ஒரு செய்தியைக் கூறுவான்.
وَقَالَ
لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ مِنْهُمَا اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ فَأَنْسَاهُ
الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ ()
“பிறகு,
அவ்விருவரில் எவரைக் குறித்து திண்ணமாக அவர் விடுதலையாகி விடுவார் என்று யூஸுஃப்
கருதினாரோ அவரிடம் “உன்னுடைய எஜமான (னாகிய எகிப்தின் அரச) னிடம் என்னைப் பற்றி
எடுத்துக் கூற வேண்டும்” என்றார்.
ஆனால், தன்
எஜமானனிடம் யூஸுஃபை நினைவுபடுத்த விடாமல் அவரை ஷைத்தான் மறதியிலாழ்த்தி விட்டான்.
யூஸுஃப் மேலும் சில ஆண்டுகள் சிறையிலேயே கிடந்தார்” ( அல்குர்ஆன்: 12:
42 )
இந்த
இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அபீ அப்தில்லாஹ் முஹம்மத் அல்குர்துபீ (ரஹ்)
அவர்கள் பின் வருமாறு விளக்கம் தருகின்றார்கள்.
قال عبد العزيز بن عمير الكندي: دخل جبريل على يوسف النبي عليه السلام
في السجن فعرفه يوسف، فقال: يا أخا المنذرين! مالي أراك بين الخاطئين؟! فقال جبريل
عليه السلام: يا طاهر ابن الطاهرين! يقرئك
السلام رب العالمين ويقول: أما استحيت إذ استغثت بالآدميين؟! وعزتي! لألبثنك في السجن بضع سنين،
فقال: يا جبريل! أهو عني راض؟ قال: نعم! قال: لا أبالي الساعة.
وروي أن جبريل عليه السلام جاءه فعاتبه عن الله تعالى في ذلك وطول
سجنه، وقال له: يا يوسف! من خلصك من القتل من أيدي إخوتك؟! قال: الله تعالى، قال:
فمن أخرجك من الجب؟ قال: الله تعالى قال: فمن عصمك من الفاحشة؟ قال: الله تعالى،
قال: فمن صرف عنك كيد النساء؟ قال: الله تعالى، قال: فكيف وثقت بمخلوق وتركت ربك
فلم تسأله؟! قال: يا رب كلمة زلت مني! أسألك يا إله إبراهيم وإسحاق والشيخ يعقوب
عليهم السلام أن «2» ترحمني، فقال له جبريل: فإن عقوبتك أن تلبث في السجن بضع
سنين.
وقال ابن عباس: عوقب يوسف بطول الحبس بضع سنين لما قال للذي نجا
منهما" اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ" ولو ذكر يوسف ربه لخلصه.
அந்த வாலிபரும்
விடுதலையாகி வெளியே வந்து யூஸுஃப் {அலை} அவர்கள் சொன்னது போன்று அரசரின் பணியாளராக
அரண்மனையில் சேர்ந்தார்.
சிறையில் இருந்த
யூஸுஃப் {அலை} அவர்கள் அவ்வாலிபர் அரசரிடம் நம்மைப் பற்றி சொல்லி இருப்பார். எனவே,
இன்று நாம் விடுதலையாகி விடுவோம், நாளை விடுதலையாகி விடுவோம் என்று விடுதலை
அறிவிப்பு வரும் நாளை நோக்கி சிறையில் காத்திருந்தார்.
நாட்கள்
உருண்டோடத் தொடங்கிற்று. ஆனால், விடுதலை அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.
தொடர்ந்து யூஸுஃப் {அலை} அவர்கள் விடுதலை குறித்த சிந்தனையிலேயே கவலையில் தோய்ந்து
போயிருந்தார்கள்.
ஒரு நாள்
பார்க்கின்றார்கள். எதிரே ஒரு உருவம், இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம், ஆம்
ஞாபகம் வந்து விட்டது. எதிரே நிற்பது ஜிப்ரயீல் {அலை} அவர்கள்.
“இறைத்தூதர்களின் இனிய
தோழரே! தவறு செய்தமைக்காக தண்டனை பெறும் சிறைச்சாலையில் உமக்கென்ன வேலை? என்று
கேட்டார்கள்.
அதற்கு,
தூய்மையாளர்களின் குடும்பத்தில் பிறந்த தூய்மையாளரின் மகனே! அகிலத்தின் இரட்சகன்
உங்களுக்கு ஸலாம் சொல்லச் சொன்னான்: “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரகாத்துஹூ” என்று சொல்லி விட்டு, இன்னொரு செய்தியையும் சொல்லச் சொன்னான்.
“படைத்த ரப்பிடம்
கேட்காமல், மனிதர்களிடம் உதவி கேட்கும் போது நீர் வெட்கப்படவில்லையா?” என்
கண்ணியத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! இந்த ஒரு காரணத்திற்காகவே நாம் சிறைச்சாலையில்
உம்மை இன்னும் சில ஆண்டுகள் தங்க வைத்து விடுவோம்” என்று.
அப்போது, யூஸுஃப்
{அலை} அவர்கள் “அல்லாஹ் என் மீது திருப்தியோடு இருக்கின்றானா? என்று கேட்டார்கள்.
ஆம்! என்று ஜிப்ரயீல் பதில் கூறினார். அப்படியென்றால், ”நான் யுக முடிவு நாள் வரை
இங்கு கிடந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை” என்று பதில் கூறினார்கள்.
மற்றொரு
அறிவிப்பில்....
வருகை தந்த ஜிப்ரயீல்
{அலை} அவர்கள் “உம் சகோதரர்களின் சூழ்ச்சியில் இருந்து உம்மைக் காப்பாற்றியது
யார்? என்று கேட்க, யூஸுஃப் {அலை} அவர்கள் “அல்லாஹ்” என்றார்கள்.
ஆழமான கிணற்றில்
மூழ்கி இறந்து போவதில் இருந்தும் இம்மைக் காப்பாற்றியது யார்? என்று ஜிப்ரயீல்
{அலை} கேட்க, “அல்லாஹ்” என்று யூஸுஃப் {அலை} பதிலளித்தார்கள்.
பெண்களின்
சூழ்ச்சியில் இருந்தும், ஆபாசமான அருவெருப்பான செயலில் இருந்தும் உம்மைப்
பாதுகாத்தது யார்? என்று ஜிப்ரயீல் {அலை} அவர்கள் கேட்க அதற்கும் “அல்லாஹ் தான்
என்னைப் பாதுகாத்தான்” என்று யூஸுஃப் {அலை} அவர்கள் பதில் கூறினார்கள்.
அப்போது,
ஜிப்ரயீல் {அலை} அவர்கள் “அப்படியானால், உம்மைப் படைத்து, படைப்பினங்களின்
கெடுதியில் இருந்தும் உம்மைப் பாதுகாத்த உம் ரப்பிடம் கேட்காமல் எப்படி
படைப்பினங்களிடத்தில் நீர் உதவி கேட்டீர்? என ரப்புல் ஆலமீன் உம்மிடம் கேட்கச்
சொன்னான்” என்றார்கள்.
உடனடியாக, யூஸுஃப்
{அலை} அவர்கள் இருகைகளையும் வானை நோக்கி உயர்த்தி “இறைவா! ஒரு வார்த்தை என்னை தடம்
புரளச் செய்து விட்டது! என் தந்தையின் இறைவனான என் மூதாதையர்கள் இஸ்ஹாக்,
இப்ராஹீம் {அலைஹிமா} ஆகிய்யோரின் இறைவனான உன்னிடம் கேட்கின்றேன்! என் மீது இரக்கம்
காட்டு ரஹ்மானே!” என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது,
ஜிப்ரயீல் {அலை} அவர்கள் “நீர் கேட்ட அந்த வார்த்தைக்கு உம்மை இன்னும் சில
ஆண்டுகள் சிறையிலேயே தங்க வைக்கப்போவதாக அல்லாஹ் கூறச் சொன்னான்” என்றார்கள்.
وروى إسماعيل بن إبراهيم عن يونس عن الحسن قال قال رسول الله صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:" لولا كلمة يوسف- يعني قوله:" اذْكُرْنِي
عِنْدَ رَبِّكَ"- ما لبث في السجن ما لبث" قال: ثم يبكي الحسن ويقول:
نحن ينزل بنا الأمر فنشكو إلى الناس.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் யூஸுஃப் {அலை} அவர்களுக்கு அருள்
புரியட்டும்! அவர் மாத்திரம் அவரிடம் “உன்னுடைய எஜமான (னாகிய எகிப்தின் அரச) னிடம்
என்னைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும்” என்று கூறி இருக்காவிட்டால் இத்தனை
ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இருக்கமாட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தியை
ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் “இன்று நாம் நம்முடைய எத்தனையோ காரியங்களை
மனிதர்களிடம் தானே முறையிடுகின்றோம்” என அழுதவர்களாகவே கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல்குர்துபீ )
ஆகவே, அல்லாஹ்வின் கட்டளைப்
பேணிவாழ்கிற மேன்மக்களாக அல்லாஹ் நம் எல்லோரையும் ஆக்கியருள்புரிவானாக! ஆமீன்! யாரப்பல்
ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
بارك الله في علمكم و عمركم!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! ஆழ்ந்த சிந்தனையோடு தாங்கள் உருவாக்கிய இந்த படிப்பினைகள் மிகுந்த கருத்தாழமிக்க பயான் குறிப்புகள் இன்ஷா அல்லாஹ் பல்லாயிரம் வெள்ளி மேடைகள் மூலமாக எதிரோலித்து பல்லாயிரம் முஸ்லிம்களின் மனங்களின் நல்மாற்றத்துக்கு வழிவகுக்கும். جزاكم الله خيرا كثيرا يا أستاذ
ReplyDelete