313 விழுதுகள்
தந்த 600 கோடி முஸ்லிம்கள் எனும் விருட்சம்!!!
சில போது
சில பொருட்கள் உயர்ந்தவர்களோடு சேர்கிற போது
மாண்பையும், மகத்துவத்தையும் பெரும்.
ஈமானிய உணர்வால்
உந்தப்பட்ட இளைஞர்கள் சிலர்
இணைவைப்பில் இருந்து தங்களை
காத்துக் கொள்ள ஊரை
விட்டு ஓடி குகை
ஒன்றினுள் ஒளிந்து கொண்டதால்
அந்த ( அல் கஹ்ஃப்
) குகை அல்குர்ஆனில் இடம்
பெற்றது.
இஸ்லாமிய ஏகத்துவ
அழைப்பை ஸபா நாட்டு
அரசிக்கு தன் அலகிலும்,
கால்களிலும் சுமந்து சென்றதால்
ஹுத்ஹுத் பறைவையும் அல்குர்ஆனில்
இடம் பெற்றது.
அல்லாஹ்வின் பரிசுத்த
ஆலயத்தை பாதுகாக்க அளவினில்
மிகச் சிறியதாக இருந்த
வாயினுள் எரிகற்களைச் சுமந்து
சென்ற அபாபீல் பறவையும்
அல்குர்ஆனில் இடம் பெற்றது.
அந்த வரிசையில்
ஈமானிய எழுச்சியை, இஸ்லாத்தின்
ஜோதியை பாரெங்கும் நிலைத்திடச்
செய்யும் வகையில் எவ்வித
ஆயுதமும் இன்றி மாநபி
{ஸல்}
அவர்களும், சத்திய ஸஹாபாக்களும்
ஒன்று திரண்ட ஓர்
இடம் தான் பத்ர்.
அடிப்படையில், அது
மதீனாவைச் சுற்றிலும் இருந்த
எந்த ஒரு
பிரபல்யமும் இல்லாத கிணறுகளில்
ஒன்று ஆம்! பத்ர்
எனும் கிணறு.
அல்லாஹ் அந்த
பத்ரையும் அல்குர்ஆனில் இடம்
பெறச் செய்ததோடு மாத்திரமல்லால் அந்தப் பெயரையே
பல்வேறு சிறப்புக்களுக்குச் சொந்தமாக்கி
விட்டான்.
இந்த உலகமும்,
உலகத்தில் முஸ்லிம் சமூகமும்
உள்ள வரை பேசப்படுகிற
ஓர் உயரிய அம்சமாக
ஆக்கிவிட்டான்.
அல்லாஹ் பத்ரில் வழங்கிய மாண்புகளும்… சிறப்புக்களும்…
ஹிஜ்ரி இரண்டாம்
ஆண்டு, ரமலான் நோன்பு
கடையாக்கப்பட்ட முதல் ஆண்டின்
17 –ஆம் நாள் வெள்ளிக்கிழமை
பத்ர் யுத்தம் நடைபெறுகின்றது.
فقد ورد عن ابن عباس أنه كان يقول أهل بدر
كانوا ثلثمائة وثلاثة عشر رجلاً ، وكان المهاجرون ستاً وسبعين ، وكان تاريخ الوقعة
لسبع عشرة مضين من شهر رمضان يوم الجمعة
இப்னு அப்பாஸ்
(ரலி)
அவர்கள் ரமலான் பிறை
17 –ஆம் நாள் வெள்ளிக்
கிழமை பத்ர் யுத்தம்
நடைபெற்றதாகவும், 76 முஹாஜிர்களும், 237 அன்ஸாரிகளும்
( மொத்தம் 313 ) பங்கேற்றதாக அறிவிக்கின்றார்கள்.
( நூல்: தபரானி )
وفي كتاب مجمع الزوائد ومنبع الفوائد للهيثمي ، فيمن حمل لواء يوم بدر ، عن
ابن عباس رضي الله عنهما قال
كان لواء رسول الله
صلى الله عليه وسلم يوم بدر مع علي بن أبي طالب ولواء الأنصار مع سعد بن عبادة رضي
الله عنهما
பத்ரிலே மாநபி {ஸல்} அவர்களின் சார்பாக அலீ இப்னு
அபூதாலிப் (ரலி) அவர்களும், அன்ஸாரிகளின் சார்பாக ஸஅத் இப்னு உப்பாதா (ரலி) அவர்களும்
இஸ்லாமியக் கொடியை ஏந்திச் சென்றனர் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்குர்ஆனும்….
பத்ரும்….
எப்படி ரமலானை
அல்ஃபுர்கான் சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகிற
அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம்
என்று அல்லாஹ் சொல்கின்றானோ,
அது போன்று பத்ர்
யுத்தத்தையும் சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகிற
யுத்தம் நடைபெற்ற நாள்
யவ்முல்ஃபுர்கான் என்று
அல்லாஹ் அடையாளப் படுத்துகின்றான்.
﴿
وَاعْلَمُواْ أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلّهِ خُمُسَهُ
وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ
السَّبِيلِ إِن كُنتُمْ آمَنتُمْ بِاللّهِ وَمَا أَنزَلْنَا عَلَى عَبْدِنَا
يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ
قَدِير ﴾
قال ابن كثير: ينبه تعالى على نعمته وإحسانه إلى
خلقه بما فرق به بين الحق والباطل ببدر، ويُسمى الفرقان لأن الله أعلى فيه
كلمة الإيمان على كلمة الباطل وأظهر دينه ونصر نبيه وحزبه
“நீங்கள் அல்லாஹ்வின்
மீதும், நம் அடியாருக்கு
நாம் இறக்கியருளியதன் மீதும்
நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால்
இருபடைகளும் மோதிக் கொண்ட
பத்ர் போரின் போது
நீங்கள் பெற்ற பொருள்களில்
ஐந்தில் ஒரு பங்கை
அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும்,
உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும்,
பயணிகளுக்கும் மகிழ்ச்சியுடன் கொடுத்து
விடுங்கள்! அறிந்து கொள்ளுங்கள்!
அது அவர்களுக்கு உரியதாகும்”. ( அல்குர்ஆன்:
8: 41 )
எதிரிகளின் உள்ளங்களில் பீதியை
ஏற்படுத்தி உதவுதல்…
முன் வாழ்ந்த
எந்த நபியின் உம்மத்துக்கும் வழங்காத மிகச்
சிறப்பான உதவியை அல்லாஹ்
முஹம்மத் {ஸல்} அவர்களின்
உம்மத்தான நமக்கு பத்ரின்
மூலமாக அல்லாஹ் துவக்கி
வைத்து அஹ்ஸாப் யுத்த
களத்திலும் தொடர்ந்து இன்றளவிலும்
தொடரச் செய்திருக்கின்றான்.
﴿
إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلآئِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُواْ الَّذِينَ
آمَنُواْ سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُواْ الرَّعْبَ فَاضْرِبُواْ
فَوْقَ الأَعْنَاقِ وَاضْرِبُواْ مِنْهُمْ كُلَّ بَنَان ﴾
والنصر بالرعب من خصائص
نبينا محمد صلى اللهُ عليه وسلم كما في الصحيحين من حديث جابر بن عبدالله رضي
اللهُ عنه أن النبي صلى اللهُ عليه وسلم قال: "نُصِرْتُ بِالرُّعْبِ
مَسِيرَةَ شَهْرٍ
“உம் இறைவன்
வானவர்களிடம் அறிவித்துக் கொண்டிருந்ததையும் நீங்கள் நினைவு
கூர்ந்து பாருங்கள்! ”நிச்சயமாக!
நான் உங்களோடு இருக்கின்றேன்.
எனவே, நம்பிக்கையாளர்களை நீங்கள்
உறுதியாக இருக்கச் செய்யுங்கள்!
இதோ! நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் பீதியை
ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே,
நீங்கள் அவர்களின் பிடரிகளில்
தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு
விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!” ( அல்குர்ஆன்:
8: 12 )
ஜாபிர் இப்னு
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “எதிரிகளின் உள்ளங்களில்
பீதி ஏற்படுத்துவது கொண்டு
நான் அல்லாஹ்வால் உதவி
செய்யப்பட்டுள்ளேன். அந்த பீதி
சுமார் ஒருமாத கால
அளவு கூட இருக்கும்”
என்று மாநபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்:
புகாரி )
வானவர்களைக் கொண்டு உதவுதல்….
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ
فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ () إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ
أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِنَ
الْمَلَائِكَةِ مُنْزَلِينَ () بَلَى إِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُمْ
مِنْ فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِنَ
الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ ()
“பத்ருப் போரிலே
அல்லாஹ் உங்களுக்கு உதவி
செய்திருந்தான். அப்போது நீங்கள்
மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள்.
எனவே நீங்கள் அல்லாஹ்விற்கு
நன்றி கொல்வதிலிருந்து விலகி
வாழுங்கள். இதன் மூலம்
நீங்கள் நன்றி செலுத்துவோராய் திகழக்கூடும்!
உங்களுடைய இறைவன்
மூவாயிரம் வானவர்களை இறக்கி
உங்களுக்கு உதவி செய்தது
போதுமானதில்லையா? என்று
நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை
நினைவு கூரும்!
ஆம்! நீங்கள்
நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு
அஞ்சிப் பணியாற்றினால் எந்தக்
கணக்கில் பகைவர்கள் உங்கள்
மீது படையெடுத்து வருகின்றார்களோ,
அந்தக் கணக்கில் உங்கள்
இறைவன் மூவாயிரம் என்ன?
போர் அடையாளமுடைய ஐயாயிரம்
வானவர்களின் மூலம் உங்களுக்கு
உதவி செய்வான்.
( அல்குர்ஆன்:
3: 123 – 125 )
சிறந்தவர்களும்…
மிகச்சிறந்தவர்களும்…
فضل من شهد بدراً من
الصحابة، والملائكة على غيرهم، روى البخاري في صحيحه من حديث معاذ بن
رفاعة ابن رافع عن أبيه، وكان أبوه من أهل بدر قال: جَاءَ جِبْرِيلُ إِلَى
النَّبِيِّ صلى اللهُ عليه وسلم فَقَالَ: "مَا تَعُدُّونَ أَهْلَ بَدْرٍ
فِيكُمْ؟" قَالَ: مِنْ أَفْضَلِ الْمُسْلِمِينَ، - أَوْ كَلِمَةً نَحْوَهَا -
قَالَ: وَكَذَلِكَ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمَلَائِكَةِ
முஆத் இப்னு
ரிஃபாஆ இப்னு ராஃபிஇ
(ரலி)
அவர்கள் பத்ரில் கலந்து
கொண்ட தங்களின் தந்தை
ரிஃபாஆ (ரலி) அவர்கள்
மூலமாக அறிவிக்கின்றார்கள்: “ஒரு
நாள் மாநபி {ஸல்}
அவர்களின் திருச்சமூகம் வந்த
ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
“பத்ர் போரில் கலந்து
கொண்ட உங்கள் தோழர்களை
நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்?
என்று நபி {ஸல்}
அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு, “எங்களில்
மிகச்சிறந்தவர்களாக அவர்களை
நாங்கள் மதிக்கின்றோம்” என்று
மாநபி {ஸல்} அவர்கள்
பதில் கூற, அதற்கு
ஜிப்ரயீல் (அலை) “எங்களிலும்
கூட பத்ரிலே கலந்து
கொண்ட வானவர்களை மிகச்
சிறந்தவர்களாக நாங்கள் மதிக்கின்றோம்”
என பதில் கூறினார்கள். ( நூல்:
புகாரி )
பத்ரின் ஷஹீத்கள் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிலே….
أن من قُتل منهم نال الفردوس الأعلى، روى البخاري في
صحيحه من حديث أنس بن مالك رضي اللهُ عنه: أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ
الْبَرَاءِ وَهِيَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صلى
اللهُ عليه وسلم فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ: أَلَا تُحَدِّثُنِي عَنْ
حَارِثَةَ؟ وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ، أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَإِنْ كَانَ
فِي الْجَنَّةِ صَبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ اجْتَهَدْتُ عَلَيْهِ فِي
الْبُكَاءِ، قَالَ: "يَا أُمَّ حَارِثَةَ! إِنَّهَا جِنَانٌ فِي الْجَنَّةِ،
وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الْأَعْلَى
பத்ர் யுத்தம்
முடிந்து மதீனாவின் எல்லைக்குள்
மாநபியும், மாநபித் தோழர்களும்
அடியெடுத்து வைத்த அந்தத்
தருணம் மிகவும் உணர்ச்சிப்
பிழம்பான தருணம்.
பத்ரில் கலந்து
கொண்டு வெற்றியோடு திரும்பிய
தங்களின் உறவுகளை அவரவர்களின்
குடும்பத்தினர்கள் ஆரத்தழுவி
வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
ஒரு இளைஞரின்
தாய் அங்கும் இங்கும்
அலைகிறார். தேடுகின்றார். போருக்குச்
சென்று திரும்பியவர்களில் அவர்களின்
மகன் இடம் பெறவில்லை.
பதறித் துடித்தவர்களாக அல்லாஹ்வின்
தூதரின் முன் வந்து
நின்று “அல்லாஹ்வின் தூதரே!
என் மகன் ஹாரிஸாவின்
நிலை என்ன? என்று
வினவினார்.
அப்போது, அங்கு
சுற்றி நின்றிருந்த நபித்தோழர்கள்
உம்முடைய மகன் ஒரு
அம்பு பட்டு போரில்
கொல்லப்பட்டு விட்டார்” என்றார்கள்.
மாநபியின் அருகே
வந்த அப்பெண்மணி “என்
மகன் சுவனத்தில் இருக்கின்றான்
என்றால் மாநபியே நான்
பொறுமையோடு இங்கிருந்து திரும்பிச்
செல்வேன். இல்லையேல், என்
அழுகையை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது” என்று
கூறினார்.
அதற்கு, நபி
{ஸல்}
அவர்கள் “உம்மு ஹாரிஸாவே!
சுவனங்கள் என்ன ஒன்றா?
இரண்டா? இருக்கின்றது. பல
சுவனங்கள் இருக்கின்றது. உம்முடைய
மகன் மேலான ஃபிர்தவ்ஸிலே
இருக்கின்றார்” என்று சோபனம்
சொன்னார்கள்.
( நூல்: புகாரி )
முன்னரும்,
பின்னரும் எவருக்கும் கிடைக்காத சோபனம்…
أن أهلها مغفور لهم، روى الإمام أحمد في مسنده من
حديث أبي هريرة رضي اللهُ عنه وأصله في الصحيحين أن النبي صلى اللهُ عليه وسلم
قال: "إنَّ اللَّهَ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا
شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ"
قال ابن حجر: "وهي بشارة عظيمة لم تقع لغيرهم
அபூஹுரைரா (ரலி)
அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் பத்ரில்
கலந்து கொண்டவர்களுக்கு நீங்கள்
விரும்பியதை செய்து கொள்ளுங்கள்!
அல்லாஹ் உங்களின் எல்லா
செயல்களிலும் உள்ள பிழைகளை
மன்னித்து விட்டான்” என
மாநபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்:
அஹ்மத் )
இந்த மகத்தான
சோபனம் பத்ர் ஸஹாபாக்களைத்
தவிர நபித்தோழர்களில் வேறெவருக்கும்
கிடைக்கப் பெறவில்லை என
இப்னு ஜரீர் (ரஹ்)
கூறுகின்றார்கள்.
நரக
விடுதலை எனும்
மகத்தான சோபனம்…..
رجاء النبي صلى اللهُ عليه
وسلم لأهل بدر ألا يدخلوا النار، روى مسلم في صحيحه من حديث جابر رضي اللهُ عنه:
أَنَّ عَبْدًا لِحَاطِبٍ جَاءَ رَسُولَ اللَّهِ صلى اللهُ عليه وسلم يَشْكُو
حَاطِبًا، فَقَالَ، يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ، فَقَالَ
رَسُولُ اللَّهِ صلى اللهُ عليه وسلم: "كَذَبْتَ لَا يَدْخُلُهَا،
فَإِنَّهُ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ"
ஜாபிர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹாதப்
(ரலி)
அவர்களின் அடிமை நபி
{ஸல்}
அவர்களிடம் வந்து ஹாதப்
(ரலி)
அவர்கள் குறித்து ஏதோ
முறையிட்டு விட்டு, அல்லாஹ்வின்
தூதரே! இந்த செயலால்
ஹாதப் நரகில் புகுந்து
விடுவாரா? என்று கேட்டார்.
அதற்கு, மாநபி {ஸல்}
அவர்கள் ”நீ பொய்யுரைக்கின்றாய்!
அவர் நரகில் நுழையமாட்டார்.
ஏனெனில், அவர் பத்ரிலும்,
ஹுதைபிய்யாவிலும் பங்கெடுத்தவர்”
என்று பதில் கூறினார்கள். ( நூல்:
முஸ்லிம் )
விழுதுகள் இல்லை
என்றால் விருட்சம் இல்லை….
إخباره صلى اللهُ عليه وسلم بأنه لولا أهل بدر لم
يصلنا الإسلام، ولقضي عليه معهم، روى مسلم في صحيحه من حديث عمر ابن الخطاب
رضي اللهُ عنه قال
لَمَّا
كَانَ يَوْمُ بَدْرٍ نَظَرَ رَسُولُ اللَّهِ صلى اللهُ عليه وسلم إِلَى
الْمُشْرِكِينَ وَهُمْ أَلْفٌ وَأَصْحَابُهُ ثَلَاثُ مِائَةٍ وَتِسْعَةَ عَشَرَ
رَجُلًا، فَاسْتَقْبَلَ نَبِيُّ اللَّهِ صلى اللهُ عليه وسلم الْقِبْلَةَ، ثُمَّ
مَدَّ يَدَيْهِ فَجَعَلَ يَهْتِفُ بِرَبِّهِ
اللَّهُمَّ
أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي، اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي، اللَّهُمَّ إِنْ
تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدْ فِي
الْأَرْضِ
உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பத்ருடைய
அந்நாளில் மாநபி {ஸல்}
அவர்கள் முஷ்ரிக்களைப் பார்க்கின்றார்கள்
1000 பேர் இருக்கின்றார்கள். முஸ்லிம்களைப்
பார்க்கின்றார்கள் 313 பேர் இருக்கின்றார்கள்.
மாநபி {ஸல்}
அவர்கள் கிப்லாவை முன்னோக்கி,
இரு கரத்தையும் ஏந்தி
தங்களின் ரட்சகனிடத்தில் “இறைவா!
நீ வாக்களித்ததை விரைவாகக்
கொடு! நீ இந்த
சின்னஞ்சிறிய கூட்டத்திற்கு உதவி
புரியவில்லை என்றால் இந்தப்
பூமியில் உன்னை வணங்க
எவருமே இருக்கமாட்டார்கள்” என
உருக்கமாக இறைஞ்சினார்கள்.
( நூல்: முஸ்லிம் )
ஃகனீமத் அனுமதிக்கப்படுதல்…
أن الله أحل الغنائم لهذه الأمة في هذه الغزوة،
قال تعالى
﴿ فَكُلُواْ مِمَّا غَنِمْتُمْ حَلاَلاً
طَيِّبًا وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيم ﴾. روى الطيالسي في
مسنده من حديث أبي هريرة رضي اللهُ عنه قال: "لَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ
تَعَجَّلَ النَّاسُ إِلَى الغَنَائِمِ فَأَصَابُوهَا،
فَقَالَ رَسُولُ اللهِ صلى اللهُ عليه وسلم إِنَّ
الغَنِيمَةَ لَا تَحِلُّ لِأَحَدِ سُودِ
الرُّؤُوسِ غَيْرَكُمْ
وَكَانَ النَّبِيُّ صلى اللهُ عليه وسلم
وَأَصْحَابُهُ
إِذَا غَنِمُوا غَنِيمَةً جَمَعُوهَا، وَنَزَلَتْ
نَارٌ فَأَكَلَتْهَا، فأنزل الله هذه الآية
﴿ لَّوْلاَ كِتَابٌ مِّنَ اللّهِ سَبَقَ
﴾ إلى آخر الآيتين
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பத்ர்
முடிந்ததும் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை மாநபித்தோழர்கள் ஆர்வத்தோடு எடுத்துக்
கொண்டிருந்தனர். அதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “முன் சென்ற எந்த நபியின் உம்மத்துக்கும்
ஃகனீமத் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. அவர்கள் ஃகனீமத் பொருட்களை
ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பார்கள். வானில் இருந்து ஒரு நெருப்பு வந்து அதைக் கரித்து
விடும். ஆனால், நீங்கள் ஃகனீமத் பொருட்களை எடுத்துக் கொள்வதற்கும், அனுபவித்துக் கொள்வதற்கும்
அனுமதிக்கப் பட்டுள்ளீர்கள். என்று கூறினார்கள்.
அப்போது, தான் அல்லாஹ் “நீங்கள் போரில் கைப்பற்றிய
பொருள்களை உண்ணுங்கள்! அவை அனுமதிக்கப்பட்டவையும், தூய்மையானதுமாகும். மேலும், அல்லாஹ்வுக்கு
அஞ்சி வாழ்ந்து வாருங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணையாளனாகவும்
இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 8: 69 ) எனும்
இறைவசனம் இறங்கியது. ( நூல்:
முஸ்னத் அத்தயாலிஸீ )
எதிரிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் பெறும் வெற்றி
வாக்களிக்கப்பட்ட வெற்றி….
إخباره تعالى عن نتيجة المعركة قبل بدئها، وذلك
بالنصر للمؤمنين على الكافرين، قال تعالى
﴿ وَإِذْ يَعِدُكُمُ اللّهُ إِحْدَى
الطَّائِفَتِيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ
تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللّهُ أَن يُحِقَّ الحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ
دَابِرَ الْكَافِرِين * لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ
الْمُجْرِمُون ﴾
“மேலும், இதனையும் நினைத்துப் பாருங்கள்! இரு கூட்டத்தாரில்
ஒரு கூட்டம் நிச்சயம் உங்கள் கைக்கு கிடைத்து விடுவர் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தான்.
ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தினர் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்புனீர்கள்.
ஆனால், அல்லாஹ்வோ தன் வாக்குறுதியால் சத்தியத்தை சத்தியம் என்று காட்டவும், அசத்தியத்தை
வேரறுக்கவுமே நாடியிருந்தான்.
ஏனெனில், சத்தியம் சத்தியம் தான் என்றும், அசத்தியம்
அசத்தியம் தான் என்றும் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காக! குற்றவாளிகள் இதனை வெறுத்தாலும்
சரியே!” ( அல்குர்ஆன்: 8:
7, 8 )
மாநபித்தோழர்களிடையே பத்ர் ஸஹாபாக்களின் அந்தஸ்து….
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”நாங்கள்
மாநபி {ஸல்} அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் மாநபி {ஸல்} அவர்களை முதலிடத்திலும்
அதற்கடுத்து அபூபக்ர் (ரலி) அவர்களையும், அதற்கடுத்து உமர் (ரலி) அவர்களையும், அதற்கடுத்து
உஸ்மான் (ரலி) அவர்களையும் வைத்து மதிப்பளித்து வந்தோம். அதன் பின்னர் முஹாஜிர்களில்
பத்ர் ஸஹாபாக்களையும், அதன் பின்னர் அன்ஸாரிகளில் பத்ர் ஸஹாபாக்களையும் அதன் பின்னர்
ஹிஜ்ரத் செய்தவர்கள் என அடுத்தடுத்த ஸ்தானங்களில் யாரை வைத்து அழகு பார்க்க வேண்டுமோ
அவர்களை வைத்து மதிப்பளித்து வந்தோம்.
وقال الزهري : أوصى عبد الرحمن لمن بقي ممن
شهد بدراً لكل رجل أربعمائة دينار وكانوا مائة فأخذوها وأخذها عثمان بن عفان فيمن
أخذ
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மரண
நேரத்தின் போது தங்களின் சொத்தில் இருந்து பத்ரில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபித்தோழருக்கும்
400 திர்ஹம் வழங்க வேண்டும் என வஸிய்யத் செய்தார்கள். அவர்கள் மரணித்த காலத்தில் நூறு
பத்ர் ஸஹாபாக்கள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அந்த வஸிய்யத் அடிப்படையில் கொடுக்கப்பட்டது.
அப்போது ஆட்சியாளராய் இருந்த உஸ்மான் (ரலி) அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்” ஜுஹ்ரீ
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ( ஸியரு அஃலா
மின் நுபலா )
உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் பத்ர் ஸஹாபாக்களுக்கு
பைத்துல் மாலில் இருந்து மாதாந்திர மானியத்தை உமர் (ரலி) அவர்கள் வழங்கி வந்தார்கள்.
சில நபித்தோழர்கள் தங்களின் ஆண்மக்களுக்கு பத்ர்
ஷுஹதாக்களின் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கின்றார்கள்.
கூட்டுத்துஆவும்… பத்ர் ஸஹாபாக்களும்….
تقدم سيرين إلى أمير المؤمنين فخطب منه مولاته صفية
فبادر الصديق رضي الله عنه إلى البحث عن دين الخاطب وخلقه ، كما يبادر الأب الشفيق الحاني للبحث عن حال خاطب بنته …
ولا غرو (لا عجب) ، فقد كانت صفية تحتل من نفس ابي بكر منزلة الولد من أبيه … ثم إنها بعد ذلك كله أمانة أودعها الله في عنقه .
فمضى يستقصي أحوال سيرين أشد الاستقصاء ، ويتتبع سيرته أدق التتبع .
وكان في طليعة من سألهم عنه أنس بن مالك رضي الله عنه ، فقال له أنس :
زوجها منه يا أمير المؤمنين ، ولا تخش بأساً ، فما عرفته إلا صحيح الدين رضي الخلق ، موفور المروءة (تام النخوة كامل الرجولة )
ولقد ارتبطت أسبابه بأسبابي منذ سباه خالد بن الوليد في معركة التمر (عين التمر : بلدغربي الكوفة , افتتحها خالد ابن الوليد في خلافة الصديق) مع أربعين غلاماً ، وجاء بهم إلى المدينة …
فكان سيرين من نصيبي ، وكنت محظوظاً به
فبادر الصديق رضي الله عنه إلى البحث عن دين الخاطب وخلقه ، كما يبادر الأب الشفيق الحاني للبحث عن حال خاطب بنته …
ولا غرو (لا عجب) ، فقد كانت صفية تحتل من نفس ابي بكر منزلة الولد من أبيه … ثم إنها بعد ذلك كله أمانة أودعها الله في عنقه .
فمضى يستقصي أحوال سيرين أشد الاستقصاء ، ويتتبع سيرته أدق التتبع .
وكان في طليعة من سألهم عنه أنس بن مالك رضي الله عنه ، فقال له أنس :
زوجها منه يا أمير المؤمنين ، ولا تخش بأساً ، فما عرفته إلا صحيح الدين رضي الخلق ، موفور المروءة (تام النخوة كامل الرجولة )
ولقد ارتبطت أسبابه بأسبابي منذ سباه خالد بن الوليد في معركة التمر (عين التمر : بلدغربي الكوفة , افتتحها خالد ابن الوليد في خلافة الصديق) مع أربعين غلاماً ، وجاء بهم إلى المدينة …
فكان سيرين من نصيبي ، وكنت محظوظاً به
ஸீரீன் (ரஹ்) அவர்கள் திருமண வயதை அடைந்த போது கலீஃபா
அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அவர்களிடம் அடிமையாக இருந்த ஸஃபிய்யா அவர்களை பெண்
கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுமொழி ஏதும் பகராமல் அனுப்பி
வைத்து விட்டார்கள். மீண்டும் ஒரு முறை வந்து பெண் கேட்டார். பின்னர், மீண்டும் ஒரு
முறை வந்து பெண் கேட்டார். ஸீரீன் அவர்கள் தொடர்ந்து வந்து பெண் கேட்டதால் ஸீரீன் அவர்கள்
குறித்து அவர் எப்படிப் பட்டவர்? அவர் தீன் எப்படிப்பட்டது? அவரின் குணம் எப்படி? என
விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
இறுதியாக, அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் ஸீரீன்
குறித்து விசாரிக்க, அனஸ் (ரலி) அவர்கள் ஸீரீன் மிகவும் நல்லவர், அழகிய பண்பாடு உள்ளவர்,
தீனில் உறுதியானவர் அவரைப் பற்றி நான் மிக்க அறிந்தவன்.
காலித் (ரலி) பங்கேற்று வெற்றித் தேடித்தந்த தமர்
யுத்தத்தில் கூஃபாவில் இருந்து கைதியாக கொண்டு வரப்பட்ட 40 பேரில் ஸீரினும் ஒருவர்.
அவர் என்னுடைய கண்காணிப்பில் வளர்ந்தவர் தான் எனச் சான்றளிக்க ஸீரீன் அவர்களுக்கு ஸஃபிய்யாவைத்
திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள்.
وافق الصديق رضي الله عنه على تزويج صفية من سيرين
وعزم على أن يبرها كما يبر الأب الشفيق على ابنته الأثيرة (المفضلة المحببه) فأقام لإملاكها (تزويجها) حفلاً قلما ظفرت بمثله فتاة من فتيات المدينة …
فقد شهد إملاكها طائفة كبيرة من كرام الصحابة .
وكان فيهم ثمانية عشر بدرياً (من شهد يوم بدر مع رسول الله عليه الصلاة والسلام )
ودعا لها كاتب وحي رسول الله أبي بن كعب …
وأمن على دعائه الحاضرون …
وطيبتها وزينتها ثلاث من أمهات المؤمنين رضوان الله عليهم حين زفت إلى زوجها …
وقد كان من ثمرات هذا الزواج المبارك أن رزق الأبوان غلاماً ، غدا بعد عقدين (عشر سنوات) من الزمان علماً من أعلام التابعين ، ورجلاً من أفذاذ المسلمين هو محمد بن سيرين
وعزم على أن يبرها كما يبر الأب الشفيق على ابنته الأثيرة (المفضلة المحببه) فأقام لإملاكها (تزويجها) حفلاً قلما ظفرت بمثله فتاة من فتيات المدينة …
فقد شهد إملاكها طائفة كبيرة من كرام الصحابة .
وكان فيهم ثمانية عشر بدرياً (من شهد يوم بدر مع رسول الله عليه الصلاة والسلام )
ودعا لها كاتب وحي رسول الله أبي بن كعب …
وأمن على دعائه الحاضرون …
وطيبتها وزينتها ثلاث من أمهات المؤمنين رضوان الله عليهم حين زفت إلى زوجها …
وقد كان من ثمرات هذا الزواج المبارك أن رزق الأبوان غلاماً ، غدا بعد عقدين (عشر سنوات) من الزمان علماً من أعلام التابعين ، ورجلاً من أفذاذ المسلمين هو محمد بن سيرين
குறிப்பிட்ட ஒரு நாளில் திருமணமும் நடந்தேறியது.
அந்த திருமணத்தில் கலீஃபா அபூபக்ர் (ரலி) உட்பட பெரும் நபித்தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூய அன்னையர்களில் மூவரும், பத்ரு ஸஹாபாக்களில் 18 பேரும் கலந்து கொண்டனர்.
திருமணத்தின் இறுதியாக, உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள்
துஆ ஓத சுற்றி இருந்த பத்ர் ஸஹாபாக்கள், தூய அன்னையர்கள், பெரும் நபித்தோழர்கள் அனைவரும்
ஆமீன் கூறினர்.
திருமண நாளில் இருந்து மிகச் சரியாக பத்து ஆண்டுகள்
கழித்து இந்த முபாரக்கான தம்பதியருக்கு அழகான ஆண்குழந்தை ஒன்றும் பிறந்தது. முஹம்மது
என்று பெயர் சூடி அழகு பார்த்தனர் அந்த தம்பதியர்.
பின் நாளில் அந்த குழந்தை தான் பார் போற்றும் பெரும்
ஆசானாக புகழ் பெற்றது ஆம்! அந்த புகழ் மாலையைச் சூடியவர் வேறு யாருமில்லை, புகழ்பெற்ற
தாபிஈ அல்லாமா முஹம்மத் இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.
( நூல்: ஸுவரும் மின்
ஹயாத்தித் தாபிஈன் )
அன்று அவர்கள் விழுதுகளாக இந்த சத்திய சன்மார்க்கத்தைத்
தாங்கிப் பிடிக்க வில்லை என்றால் இன்று 600 கோடிக்கும் மேலான முஸ்லிம்களாக நாம் விருட்சமாய்
பாருலகெங்கும் பரவி விரவியிருக்க மாட்டோம்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் பத்ர் ஸஹாபாக்கள் மீது
நேசத்தையும், பிரியத்தையும் வைப்பதற்கு அருள்புரிவானாக!
அல்லாஹ் அன்னார்களின் வழிச்சுவடுகளை பின்பற்றி வாழும்
மேன்மக்களில் ஒருவராக ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
தொடரந்து தராவீஹ் பயான்கள் பதிவிடப்படுமா மவுலானா?
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். இஸ்லாத்திற்கு அஸ்திவாரமாக விளங்கிய பத்ரு யுத்தம் குறித்து மிகச்சிறப்பாக வரலாறு குறிப்புகளை வழங்கியுள்ளீர்கள். அல்லாஹ் தங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக்குவானாக ஆமீன். جزاكم الله خيرا كثيرا يا أستاذ
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். இஸ்லாத்திற்கு அஸ்திவாரமாக விளங்கிய பத்ரு யுத்தம் குறித்து மிகச்சிறப்பாக வரலாறு குறிப்புகளை வழங்கியுள்ளீர்கள். அல்லாஹ் தங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக்குவானாக ஆமீன். جزاكم الله خيرا كثيرا يا أستاذ
ReplyDeleteஅருமையான பதிவு உஸ்தாத் 600 கோடி முஸ்லிம்களா? அதை மட்டும் சற்று விளக்கவும்
ReplyDelete