Friday, 2 June 2017

எட்டாம் நாள் தராவீஹ் பயான்!!! மஸ்ஜித் – பள்ளிவாசல் எனும் பாக்கியம் நிறைந்த அருட்கொடை!!!



எட்டாம் நாள் தராவீஹ் பயான்!!!
மஸ்ஜித்பள்ளிவாசல் எனும் பாக்கியம் நிறைந்த அருட்கொடை!!!



எட்டாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், ஏழாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், இன்றைய நாளில் நாம் செய்த தான தர்மங்களையும், இதர வணக்க, வழிபாடுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்கி வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து வணக்க, வழிபாடுகளில் இன்பத்தோடு ஈடுபட அருள்புரிவானாக! ஆமீன்!

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் மூன்று இடங்களில் அல்லாஹ் மஸ்ஜித் குறித்தும், மஸ்ஜிதின் பரிபாலனம் குறித்தும் பேசுகின்றான்...

எனவே, மஸ்ஜித்களுக்கும் நமக்கும் இருக்க வேண்டிய நெருக்கமும், தொடர்பும் என்ன? நாம் தற்போது எப்படி தொடர்பில் இருக்கின்றோம்? மாநபித் தோழர்களின் தொடர்புகள் மஸ்ஜித்களோடு எப்படி இருந்தது? மஸ்ஜிதோடு தொடர்பில் இருப்பதால் நாம் அடைகிற அந்தஸ்துகள் என்ன? என்பவை குறித்தும், மஸ்தித் என்பது இறைவனின் மாபெரும் அருட்கொடை என்பது குறித்து இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.

இறையில்லம் என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் உணர்வுகளோடும், உள்ளத்தோடும் இரண்டற கலந்து விட்ட ஓர் உன்னதமான அங்கமாகும்.

இறையில்லத்தோடு அவன் தொடர்பில் இருக்கும் காலமெல்லாம் இறைவனின் அருள் மழையில் சதா அவன் நனைந்து கொண்டே இருக்கின்றான்.

பள்ளிவாசலின் மாண்புகளும்… மாநபித்தோழர்கள் இறையில்லத்தோடு கொண்டிருந்த தொடர்புகளும்....

روى الشيخان في صحيحيهما أن عثمان بن عفان - رضي الله عنه - أراد بناء المسجد، فكره الناس ذلك، وأحبوا أن يدعه، فقال عثمان - رضي الله عنه -: سمعت النبي - صلى الله عليه وسلم - يقول: ((مَنْ بَنَى مَسْجِدًا - قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ - بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ))

உஸ்மான் (ரலி) அவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் மதீனாவின் ஒரு பகுதியில் இறையில்லத்தை எழுப்புவதற்கு விரும்பிய போது, அப்பகுதியின் மக்கள் அதற்கு விரும்பவில்லை.

அப்போது, விரும்பாத அம்மக்களை அழைத்து, உஸ்மான் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.. “எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இறையில்லத்தைக் கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹுதஆலா சுவனத்தில் மாளிகை ஒன்றைக் கட்டுகின்றான்என்று கூறினார்கள்.                                ( நூல்: புகாரி, முஸ்லிம் )

روى أبو هريرة أنه - عليه الصلاة والسلام - قال: ((أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا)).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உலகில் எல்லா இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் இறையில்லங்களாகும். மிக வெறுப்பான இடம் கடைவீதிகளாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கின்றேன்.                ( நூல்: முஸ்லிம் )

وقال - عليه الصلاة والسلام -: ((مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنْ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ))"
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் காலை, மாலை இறையில்லத்திற்குச் செல்கின்றாரோ, அவருக்கு சொர்க்கத்தில் விருந்து உபசரிப்பு செய்ய அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான். காலையோ, மாலையோ அவர் எத்தனை முறை இறையில்லத்துக்குச் சென்றாலும் அத்தனை முறையும் அவருக்கு அந்த ஏற்பாடு செய்யப்படுகின்றதுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

فعن أبي هريرة - رضي الله عنه - قال: قال - عليه الصلاة والسلام -: ((مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ، ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللَّهِ؛ كَانَتْ خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً، وَالْأُخْرَى تَرْفَعُ دَرَجَةً))

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் வீட்டிலிருந்து உளூ செய்து விட்டு, பின்னர் இறையில்லத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைகளில் ஏதேனுமொரு கட்டளையை நிறைவேற்ற நடந்து செல்வார் எனில், அவரின் ஒவ்வொரு எட்டிற்கும் இரண்டு விதமான சன்மானம் வழங்கப்படுகின்றன. 1. அவரின் ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது. 2. அவருக்கு சுவனத்தின் ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகின்றதுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.      ( நூல்: முஸ்லிம் )

عن أبي الدرداء
رضي الله عنه
 قال
: سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: ((المسجد بيت كل تقي، وتكفل الله
لمن كان المسجد بيته بالروح والرحمة، والجواز على الصراط إلى رضوان الله إلى الجنة

அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லம் என்பது இறையச்சமுள்ள ஒவ்வொருவரின் இனிய இல்லமாகும். எவருடைய இல்லம் இறையில்லமாக ஆகிவிடுமோ, அவருக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவும், தன் அருளைப் பொழியவும், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதில் கடக்கவும், தன் திருப்பொருத்தத்தை அளிக்கவும், மேலான சுவனத்தைத் தரவும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )

وأخرج الإمام أحمد أيضا عن معاذ بن جبل رضي الله عنه أن نبي الله صلى الله عليه إن الشيطان ذئب الإنسان كذئب الغنم ، يأخذ الشاة القاصية والناحية
 فإياكم والشعاب ، وعليكم بالجماعة والعامة والمسجد }

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஆடுகளை வேட்டையாடும் ஓநாயைப் போன்று, மனிதனை வேட்டையாடும் ஓநாய் ஷைத்தான் ஆவான். மந்தையை விட்டும் தனித்திருக்கிற ஆட்டையே ஓநாய் பிடித்துக் கொள்கின்றது. அது போன்றே ஷைத்தானும் ஆவான்.

ஆகவே, தனித்து செயல்படுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்; கூட்டாக இருப்பது, பொதுமக்களுடன் சேர்ந்து இருப்பது, இறையில்லத்தில் இருப்பது ஆகியவற்றை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்:அஹ்மத்)

وفي الترمذي عن النبي صلى الله عليه وسلم أنه قال :
إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان ; لأن الله يقول : { إنما يعمر مساجد الله } الآية.

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர், இறைநம்பிக்கை உள்ளவர் என்று நீங்கள் சாட்சியம் சொல்லுங்கள்என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள்அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களே! இறையில்லங்களை நிர்வகிக்கத் தகுதியுடையோர்என அல்லாஹ் கூறியுள்ளான், என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                      ( நூல்: திர்மிதீ )

பள்ளிவாசல் கவலைகளை போக்கும் இடம்….
فعن أبي سعيد الخدري - رضي الله عنه - قال: دخل رسول الله - صلى الله عليه وسلم - ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له "أبو أمامة" فقال: ((يا أبا أمامة ما لي أراك جالساً في المسجد في غير وقت الصلاة))، قال: هموم لزمتني وديون يا رسول الله، قال: ((أفلا أعلمك كلاماً إذا أنت قلته؛ أذهب الله - عز وجل - همك، وقضى عنك دينك))، قال: قلت بلى يا رسول الله، قال: ((قل - إذا أصبحت وإذا أمسيت -: اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال))، قال: ففعلت ذلك؛ فأذهب الله - عز وجل - همي، وقضى عني ديني"

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் அபூஉமாமா (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் மிகுந்த கவலையோடு அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கே நபி {ஸல்} அவர்கள் வருகை தந்தார்கள்.

அபூஉமாமா (ரலி) அவர்களின் முகவாட்டத்தைக் கண்ட அண்ணலார்அபூஉமாமாவே! தொழுகை அல்லாத நேரத்தில், முகவாட்டத்தோடும், கவலையோடும் அமர்ந்திருக்க காரணம் என்ன?” என்று வினவினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! கடன் சுமை தான் காரணம் என்று பதில் கூறினார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்அபூஉமாமாவே! உமக்கு ஒரு துஆவைக் கற்றுத் தருகின்றேன். அதை ஓதி வாருங்கள்! என்று கூறிவிட்டு,

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் ஹம்மி வல் ஹஸன், வஅஊது பிக்க மினல் ஜுப்னி வல் புஃகுல், வஅஊது பிக்க மின் கலபதித்தைனி வகஹ்ரிர் ரிஜால்என்று கற்றுக் கொடுத்தார்கள்.

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த துஆவை நான் ஓத ஆரம்பித்ததில் இருந்து என் கடன் சுமையை அல்லாஹ் இலகுவாக்கி, என் செல்வத்தில் மேம்பாட்டை நல்கினான். என் கஷ்டங்களையும், கவலைகளையும் நீக்கினான்.                                                     ( நூல்: அஹ்மத் )

فعن سهل بن سعد - رضي الله عنه - قال: جاء رسول الله - صلى الله عليه وسلم - بيت فاطمة فلم يجد علياً في البيت فقال: ((أين ابن عمك؟))، قالت: كان بيني وبينه شيء فغاضبني، فخرج فلم يقل عندي، فقال رسول الله - صلى الله عليه وسلم - لإنسان: ((انظر أين هو؟)) فجاء فقال: يا رسول الله هو ذا في المسجد راقد (في فيء الجدار)، فجاء رسول الله - صلى الله عليه وسلم - وهو مضطجع قد سقط رداؤه عن شقه، وفي رواية (عن ظهره)، وخلص التراب إلى ظهره، فجعل رسول الله - صلى الله عليه وسلم - يمسحه عنه ويقول: ((قم أبا تراب، قم أبا تراب))

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மாநபி {ஸல்} அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களைப் பார்ப்பதற்காக வீட்டிற்குச் சென்றார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களோடு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்த நபி {ஸல்} அவர்கள் வீட்டில் அலீ (ரலி) அவர்கள் இல்லாததைக் கண்டதும், ஃபாத்திமாவே! அலீ (ரலி) எங்கே சென்றிருக்கின்றார்? என்று கேட்டார்கள்.

அதற்கு, ஃபாத்திமா (ரலி) அவர்கள் ”நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம், பேச்சின் ஊடாக கருத்துகள் முரண்பட்டு சண்டை வந்து விட்டது. என்னோடு கோபித்துக் கொண்டு என்னிடம் சொல்லாமல் வீட்டை விட்டு எங்கேயோ சென்று விட்டார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது, வீட்டை விட்டு வெளியே வந்த பெருமானார் வெளியே சென்று கொண்டிருந்த ஒருவரிடம் அலீ (ரலி) எங்கிருக்கின்றார்? என்று பார்த்து விட்டு வாரும்!” என்றார்கள். சிறிது நேரத்தில் வந்தவர் அல்லாஹ்வின் தூதரே! அலீ (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் உறங்கிக் கொண்டிருக்கின்றார்” என்றார்.

உடனே, பெருமானார் {ஸல்} அவர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தார்கள். அங்கே, சுவரின் ஓரமாக அலீ (ரலி) ஒரு பக்கமாக சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவரின் முதுகில் ஒட்டியிருந்த மண்ணை கையால் தட்டி விட்டவர்களாக மாநபி {ஸல்} அவர்கள் “மண்ணின் தந்தையே! எழுவீராக!” என்று கூறி எழுப்பினார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

பள்ளிவாசல் மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிக்கும் பாசறை….

قد كان لجابر بن عبد الله - رضي الله عنهما - حلقة في المسجد (يعني النبوي) يؤخذ عنه العلم، ومرَّ أبو هريرة - رضي الله عنه - ذات يوم بسوق المدينة فوقف عليها وقال: "يا أهل السوق ما أعجزكم!! قالوا: وما ذاك يا أبا هريرة؟ قال: ذاك ميراث النبي - عليه السلام - يقسم وأنتم هاهنا لا تذهبون فتأخذوا نصيبكم منه، قالوا: وأين هو؟ قال: فـي المسجد!! فخرجوا سراعاً، ووقـف أبو هريرة لم يبرح مكانه حتى رجعوا، فقال لهم: ما بكم؟ فقالوا: يا أبا هريرة قد أتينا المسجد فدخلنا فيه فلم نر شيئاً يقسم؛ فقال لهم أبو هريرة: وما رأيتم في المسجد أحداً؟ قالوا: بلى، رأينا قوماً يصلون، وقوماً يقرؤون القرآن، وقوماً يتذاكرون الحلال والحرام، فقال لهم أبو هريرة: ويحكم فذاك ميراث محمد - صلى الله عليه وسلم

“ஒரு முறை மதீனாவின் கடைவீதியில் சென்று கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கு ஓரிடத்தில் நின்று கொண்டு, “கடைவீதியில் இருப்போரே!  எது உங்களை இப்படி ஆக்கியது? எனக் கேட்டார்கள்.

அபூஹுரைராவே! என்ன விஷயம்? என்று மக்கள் வினவினர். அதற்கு, அபூஹுரைரா (ரலி) அவர்கள் “நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள், அங்கே மாநபி {ஸல்} அவர்களின் சொத்துக்கள் பங்கிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீங்கள் அங்கே சென்று உங்களின் பங்கைப் பெற்றுக் கொள்ள வேண்டாமா?” என்று கேட்டார்கள்.

அங்கு நின்றிருந்த மக்கள் எங்கே பங்கு வைக்கப்படுகின்றது? என்று வினவ, இதோ, பள்ளிவாசலில் வைத்து தான் பங்கிடப்படுகின்றது” என பதில் கூறினார்கள்.

மக்கள் பள்ளிக்கு விரைந்து சென்றார்கள். அபூ ஹுரைரா (ரலி) அவர்களோ போன வேகத்தில் எப்படியும் மக்கள் திரும்பி வந்து விடுவார்கள் என்று மக்கள் திரும்பி வருவதை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்.

அவ்வாறே, மக்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் “ஏன் திரும்பி வந்து விட்டீர்கள்? என அபூஹுரைரா (ரலி) வினவ, அதற்கு, மக்கள் ”நாங்கள் பள்ளிக்குச் சென்று பார்த்தோம் அங்கு எந்தப் பொருளும் பங்கிடப்பட வில்லை, என பதில் சொன்னார்கள்.

அப்போது, ”நீங்கள் பள்ளியில் யாரையும் பார்க்கவில்லையா? என அபூஹுரைரா (ரலி) கேட்க, மக்கள் “ஆம்! சிலர் தொழுது கொண்டும், சிலர் குர்ஆன் ஓதிக் கொண்டும், சிலர் ஹலால், ஹராம் குறித்து விவாதித்துக் கொண்டும் இருக்கக் கண்டோம்” என் பதில் கூறினார்கள்.

அதற்கு, அபூஹுரைரா (ரலி) அவர்கள் “மக்களே! உங்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகின்றேன்! உண்மையில் இது தானே நபி {ஸல்} அவர்களின் சொத்துக்கள்” என்று கூறினார்கள்.                                              ( நூல்: தப்ரானீ )

மஸ்ஜிதை சுத்தம் செய்வதும்… அதனால் கிடைக்கும் உயரிய பலனும்…

حدثنا محمد بن العلاء حدثنا حسين بن علي عن زائدة عن هشام بن عروة عن أبيه عن عائشة قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் வாழும் பகுதிகளில் இறையில்லங்களை அமைத்திட உத்தரவிட்டார்கள். மேலும், அவைகளை சுத்தமாகவும் நறுமணம் கமழும் இடமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்கள்”. ( நூல்:அபூதாவூத்

عن ابن عباس أن امرأة كانت تلقط القذى من المسجد فتوفيت ، فلم يؤذن النبي - صلى الله عليه وسلم - بدفنها ، فقال النبي - صلى الله عليه وسلم - : " إذا مات لكم ميت فآذنوني " وصلى عليها وقال :
 " إني رأيتها في الجنة [ لما كانت ] تلقط القذى من المسجد " .

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பெண்மணி மாநபி {ஸல்} அவர்களின் பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அகற்றி வந்தார். ஒரு நாள் அப்பெண்மணி இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்த விவரத்தை நபித்தோழர்கள் அண்ணலாருக்குத் தெரிவிக்கவில்லை.

அண்ணலாருக்குத் தெரிய வந்த போதுஉங்களில் ஒருவர் இறந்து விட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்என்று கூறிய அண்ணலார், பிறகு அப்பெண்மணிக்காக ஜனாஸா தொழுகை தொழுதார்கள்.

பின்னர், தோழர்களை நோக்கிஇப்பெண்மணி பள்ளியில் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்து வந்த காரணத்திற்காக சுவனத்தில் இருந்ததை நான் பார்த்தேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.              ( நூல்: தப்ரானீ )

وأخرج الإمام أحمد رضي الله عنه عن أبي هريرة رضوان الله عليه عن النبي صلى الله عليه وسلم قال {
إن للمساجد أوتادا الملائكة جلساؤهم ، إن غابوا يفتقدوهم ، وإن مرضوا عادوهم ، وإن كانوا في حاجة أعانوهم } .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்திற்கென முளைக்கம்புகள் இருக்கின்றன. எவர்கள் இறையில்லத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக்கிக் கொள்கின்றார்களோ, அவர்களுடன் வானவர்கள் அமர்கின்றனர்.

பள்ளியில் அவர்களை காணவில்லை என்றால், வானவர்கள் தேடுகின்றனர். மேலும், அவர்கள் நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்கின்றனர். ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு வானவர்கள் உதவுகின்றனர்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                            ( நூல்: அஹ்மத் )

இத்தோடு நின்று விடாமல் உச்சபட்சமாக இறையில்லத்தோடு சதா தொடர்பில் இருக்கிற இதயம் கொண்டவருக்கு அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும் என மாநபி {ஸல்} அவர்கள் சோபனம் கூறினார்கள்.

فعن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: ((سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: الْإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ))

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.

 நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபர், இறையில்லத்தோடு தனது இதயத்தை தொடர்புபடுத்திய மனிதர், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்.

நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                         

                                                  ( நூல்: புகாரி, முஸ்லிம் )

ஆக ஓர் இறைநம்பிக்கையாளனின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், கவலைகள் நீங்குவதற்கும், பரக்கத்தும், ரஹ்மத்தும் இறங்குவதற்கும், அந்தஸ்துகள் உயர்வதற்கும், ஈடு இணையில்லா சுவன வாழ்வையும், அர்ஷின் நிழலையும் பெற்றுத் தருகிற,   வாழ்வில் நீங்காத அருட்கொடையாக, ஈருலக வாழ்க்கையின் உயர்வுக்கும் ஆதாரமாக இருக்கிற, ஓர் பாக்யம் நிறைந்த அருட்கொடை தான் இறையில்லம் எனும் பள்ளிவாசல் ஆகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரின் உள்ளங்களை அவன் இல்லத்தோடு தொடர்பில் இருக்கிற நல்ல நஸீபை, தௌஃபீக்கை தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment