கறுப்பாடுகளால் தூய இஸ்லாத்தில் களங்கம் ஏற்படுமா?
தஸ்லீமா நஸ்ரின்,
பத்ர் சயீத், இஷ்ரத்
ஜஹான், ஜாமிதா வரிசையில்
தற்போது தூய இஸ்லாத்தின்
மீது களங்கத்தை வீசி,
சர்வதேச ஊடகங்களால் பெரிதும்
கொண்டாடப் படுபவர்களின் வரிசையில்
இணைந்திருக்கின்றார் எகிப்தில்
பிறந்து அமெரிக்க குடியுரிமை
பெற்ற பெண்ணியவாதி மற்றும்
பத்திரிக்கையாளர் மோனா
எல் தஹ்வீ என்கிற
பெண்மணி.
ஒற்றை வார்த்தையில்
சொல்ல வேண்டுமானால் இவர்கள்
“முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து
கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தின்
கண்ணியத்தை, தரத்தை களங்கப்படுத்திட துடிக்கும் கறுப்பாடுகள்”
ஆவார்கள்.
இன்னும் ஒரு
படி மேலே சென்று
சொல்ல வேண்டுமானால் “பணம்,
பதவி, சொகுசு வாழ்க்கை,
பிரபல்யம் ஆகியவற்றிற்காக தங்களின்
கொள்கையையே விற்றவர்கள்” ஆவார்கள்.
இஸ்லாத்தின் விரோதிகள்
இந்த மார்க்கத்தை எதிர்ப்பதற்கும்,
அழிப்பதற்கும் கையில் எடுக்கிற
ஆயுதங்களில் மிகவும் அபாயகரமான
ஆயுதமும், சக்தி வாய்ந்த
ஆயுதமும் இது தான்.
இவர்கள் போன்ற கறுப்பாடுகள்
தான்.
இஸ்லாம் அதன்
ஒளியைப் பாருலகில் பாய்ச்சிடத்
துவங்கிய காலம் முதற்
கொண்டே இத்தகைய பயங்கரமான
ஆயுதத்தை கையில் எடுத்து
சத்திய சன்மார்க்கத்தை உரசிப்பார்த்தனர்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இத்தகைய எதிரிகளின்
சூழ்ச்சியை ஒன்றும் இல்லாமல்
நிர்மூலமாக்கியதோடல்லாமல், முஸ்லிம்
சமூகத்தில் இருந்து கறுப்பாடுகளாகச் சென்றவர்களை எவ்வித
மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும்
இல்லாதவர்களாக ஆக்கி கேவலமான,
இழிவான முடிவுகளை வழங்கி
தண்டித்து இருக்கின்றான்.
எகிப்திய, அமெரிக்க
பெண்ணியவாதியும், எழுத்தாளருமான மோனா
எல் தஹ்வீ என்கிற
பெண்மணி Mosque-MeToo என்று தலைப்பிட்டு
“கஅபாவை தவாஃப் செய்கிற
போது சில ஆண்களால்
பெண்கள் ( இடுப்பு மற்றும் பின் பகுதியில் ) பாலியல்
சீண்டலுக்கும், சேட்டைகளுக்கும் உள்ளாகின்றனர்”
என்று வலையுகப் பிரச்சாரத்தை,
தனக்கு 2013 –ஆம் ஆண்டு
ஹஜ்ஜின் போது ஏற்பட்ட
பாலியல் தாக்குதல் பற்றி
குறிப்பிட்டு துவக்கி வைத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து லிவர்பூலைச் சார்ந்த அலா யாசீன்,
பாகிஸ்தானைச் சார்ந்த சபிக்கா கான், எகிப்தைச் சார்ந்த ஸல்மா உமர் ஆகியோரும் தங்களின்
அனுபவங்களை ட்வீட் செய்துள்ளனர்.
கடந்த 15/02/2018 அன்று
அர்வா இப்ராஹீம் என்பவரால்
தி வைர் THE WIRE எனும்
வெப் தளத்தில் ( முஸ்லிம்
உமென் ஸ்பீக் அபௌட்
செக்ஷுவல் ஹரெஸ்மெண்ட்
இன் ஹோலிஸ்ட் சிட்டி
ஆஃப் மெக்கா ) எனும்
தலைப்பில் பதிவு செய்யப்பட்ட
அந்த தகவலை நூறு
பெண்கள் ஹேஷ் டேக்
என்பதை பயன்படுத்தி மெய்யாகவும்,
பொய்யாகவும் பல பதிவுகள்
போட இஸ்லாத்தைக் குறைவு
படுத்தக் காத்திருக்கும் கயவர்
கூட்டத்திற்கு இது வசதியாகப்
போய் இஸ்லாம் மார்க்கத்தின்
கண்ணியத்தை களங்கப்படுத்தி விடலாம்
என்று கங்கணம் கட்டிக்
கொண்டு உலகின் அனைத்து
முன்னணி ஊடகங்களின் மூலமாக
பெரும் முக்கியத்துவத்துடன் பகிர்ந்து
வருகின்றனர்.
அதன் ஒரு
வெளிப்பாடாக BBC செய்தி நிறுவனமும்
தன் பங்குக்கு அரிப்பை
வெளிப்படுத்தி செய்தியை வெளியிட்டு
இருக்கின்றது.
இதோ உங்களின்
பார்வைக்கு தி வைர்
வெப் தளத்தில் வெளியான
அந்த ஆங்கில மூலம்…..
Muslim Women Speak About Sexual Harassment in ‘Holiest
City’ of Mecca
Hundreds
of Muslim women used the hashtag #MosqueMeToo to talk about sexual
harassment they faced while visiting Mecca.
Many women who spoke out said that
the problem persists because there are few avenues to hold offenders to
account. Credit: Twitter
It started with revelations by victims of sexual assault and harassment in Hollywood. Now, Muslim women are speaking
up about their experience of assault during the Umrah and Hajj pilgrimages to
Mecca.
“I’ve experienced it [sexual
harassment in Mecca] twice,” Salma Omar, a 33-year-old teacher and mother of
triplets from Cairo, told Middle East Eye. “The first time I was in my
early twenties, and while doing Umrah, a guy started touching me from behind.”
Such revelations follow testimonies
emerging from American celebrities, with some Muslim women using the hashtag
#MosqueMeToo to talk about sexual assault while in Mecca.
“The second time was during the Hajj
a few years later,” Omar continued. “When I was doing the Tawaf around the
Kaaba, a guy kept following me and rubbing up against me. At first, I thought
it was a mistake especially given the context.”
“It was so crowded, I couldn’t turn
around to see who it was at first, but when eventually I did, I saw a guy
staring right into my eyes and smiling. [The assault] must have continued for
about five or 10 minutes as I kept trying to reach the rest of the group I was
with.”
“I felt terrified. This incident
definitely scarred me for life.”
Many women who spoke to Middle
East Eye said that their experiences had traumatised them and that the
problem persists because there are few avenues to hold offenders to account.
“You would expect this to happen
anywhere but in Mecca, I’ve never been able to make sense of it. People are
meant to be in their purest form during the Hajj” added Omar, who said she felt
humiliated and baffled by the incident, leaving her unable to respond.
§
As the birthplace of Prophet
Muhammad and the site of his first revelation of the Quran, Mecca is regarded
as the holiest city in Islam and a pilgrimage to it, known as the Hajj, is
obligatory for all able Muslims.
Women usually make up just under
half of the total number of pilgrims who flock to Mecca each year to perform
the Hajj, or to do Umrah, a smaller pilgrimage, according to Saudi
authorities.
Credit: Twitter
While many Muslim women say they get
a sense of serenity in Mecca, hundreds of others have spoken up over the past
few days about their experiences of sexual harassment in what they thought was
the “holiest city on earth”.
Egyptian-American journalist Mona
Eltahawy, who first talked about her experience of sexual assault during the
Hajj in 2013, began using the hashtag #MosqueMeToo after a Facebook post
by Sabica
Khan went viral. Khan is a
Pakistani woman who recounted her assault in Mecca.
Alaa Yasin, a 33-year-old teacher
and mother of three from Liverpool, told MEE that she too was sexually
assaulted during the Hajj. For her one of the biggest issues was that she could
not tell who it was because of the crowds.
“I was with my brother doing Tawaf
when I felt someone bumping into me repeatedly and grinding on me. It wasn’t
someone just pushing and shoving.
“It was so crowded I couldn’t tell
who it was; I wasn’t about to accuse anyone. I told my brother and he walked
behind me from then on.”
No way to report
While Yasin told MEE that if
she had been able to discern who it was, she would have confronted the offender
and reported him to the police, other women complained of not having anyone to
report the incidents to.
“There are police here, but with the
crowds, it is very difficult to reach them. I also didn’t feel that they
[police] would have taken what I said seriously,” added Omar, as she recalled
Saudi police once berating her when her headscarf had slipped and exposed some
hair strands.
While many women have spoken up
about experiencing physical and sexual assault in Mecca, many more have shared
accounts of other forms of harassment.
I was naive going there, thinking
that Mecca is the safest place. It actually turned out to be the opposite
– Alaa Yasin, 33, Liverpool
“I was walking with my mother-in-law
right outside the holy mosque in Mecca when a few guys stopped their car,
rolled down their windows and started catcalling us,” Fatima Kaya, a
28-year-old mother of two from Istanbul, told MEE.
“I never went anywhere without my
husband from then on,” she added.
Like Kaya, 23-year-old Sarah Matar
from Boston did not experience any physical assault, but recalls feeling unsafe
whenever she moved around in Mecca alone.
“I remember feeling men’s eyes on me
when I walked from the mosque to my hotel. I felt like a prey and I didn’t feel
safe at all,” she told MEE.
Total shock
For many women who were visiting the
holy city for the first time, the experience of sexual assault came as a huge
shock as they expected to visit what they called “the purest place on earth”.
“I wasn’t a practising Muslim before
I went for Umrah and I was so excited to be in Mecca. I was expecting a lot
more respect and love between Muslim brothers and sisters,” said Kaya.
It’s important for women to be aware
that this sort of thing can and does happen all the time
– Alaa Yasin, 33, Liverpool
Like many women, Yasin believes that
much more needs to be done to raise awareness and protect women against such
harassment.
“People who act like that are
opportunistic and they hide behind anonymity. The person who did it to me
probably didn’t know what I looked like. It was just a female body for him,”
Yasin told MEE.
“If there were less crowds or more
guards, then maybe this can be prevented.”
“It’s important for women to be
aware that this sort of thing can and does happen all the time.”
‘Not my experience’
Other Muslim women spoke of having a
positive experience throughout their pilgrimage to Mecca.
“I’ve been to Mecca many times, and
I felt truly peaceful and safe while I was there,” Zeynep Ergun told MEE.
Echoing Ergun’s sentiments, Yamima
Talukder, 41, told MEE: “I felt safe and my husband left me to walk
around whenever [to go the mosque]. Nigerians were lovely and caring.
Indonesian brothers were protective. Bangladeshi street cleaners treated me
like their sister.”
“I loved best how their [men’s] gaze
was so clean in my experience.”
Reading the testimonies of women who
had been harassed, Talukder said she felt sickened.
“I have not experienced anything
like that. I can’t imagine how a situation like that would arise.”
அதாவது, புனித நிறைந்த கஅபாவிலும் கூட, இறைநினைவிலும், இறை நெருக்கத்திலும் மூழ்கித் திளைக்க வேண்டிய இடத்திலும் கூட பாலியல் சேட்டைகளால் முஸ்லிம் பெண்கள் அவதிப்பட நேர்கிறது என்கிற குற்றச்சாட்டை இந்தப் பெண்கள் முன் வைத்து பரிசுத்த மார்க்கத்தின் மீதும், வணக்க வழிபாட்டின் மீதும் களங்கம் சுமத்த முன் வந்திருக்கின்றனர்.
ஹரமின்
மகத்துவம்….
மனிதர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக முதலில் கட்டப்பட்ட
இறையில்லம் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.
إِنَّ أَوَّلَ بَيْتٍ
وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ ()
“அகிலத்தின்
நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும்
மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில் உள்ளதாகும்”. ( அல்குர்ஆன்: 3: 96 )
حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ ،
ثنا عَبْدُ
اللَّهِ ،
ثنا أَبُو
مُعَاوِيَةَ ،
وَعِيسَى
بْنُ يُونُسَ ، قَالا : ثنا الأَعْمَشُ
, عَنْ إِبْرَاهِيمَ
التَّيْمِيِّ ، عَنْ أَبِيهِ
، عَنْ أَبِي
ذَرٍّ
قَالَ : قُلْتُ : " يَا رَسُولَ اللَّهِ أَيُّ
مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ ؟ قَالَ : الْمَسْجِدُ الْحَرَامُ . قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ثُمَّ أَيُّ ؟ قَالَ :
الْمَسْجِدُ الأَقْصَى . قَالَ : قُلْتُ : كَمْ بَيْنَهُمَا ؟ قَالَ : أَرْبَعُونَ
سَنَةً ، وَأَيْنَمَا أَدْرَكْتَ الصَّلاةَ فَصَلِّ , فَإِنَّمَا هُوَ مَسْجِدُكَ "
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி {ஸல்} அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை
(வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று நபி {ஸல்} கூறினார்கள். ( நூல்: புகாரி )
அபயம் அளிக்கும் பூமி....
மக்கமா நகரத்தை
அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான்.
أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ
كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ()
”அபயம் அளிக்கும்
புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு
வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்”. ( அல்குர்ஆன்: 28: 57 )
وَمَنْ دَخَلَهُ كَانَ
آمِنًا
“அதில்
நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்”. ( அல்குர்ஆன்: 3: 97 )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் “ஆமினன் –
அபயம் தரும்
இடம்” என்பதாக கஅபாவையும், கஅபாவைச் சுற்றியுள்ள ஹரம் பகுதியையும் பற்றி குறிப்பிடுகின்றான்.
أ. أمن
البيت في الجاهلية من الهدم والغرق والخسف
.
ب. أمن أهله في الجاهلية من القتل من الجبابرة ، وأمن داخله من الناس ، فكان الرجل يرى قاتل والده ولا يمسه بسوء ولا يخيفه .
ج. أمن أهله في الإسلام من فتنة الدجال .
2. والمراد به : الأمر بتأمين من كان فيه من الناس داخل
ب. أمن أهله في الجاهلية من القتل من الجبابرة ، وأمن داخله من الناس ، فكان الرجل يرى قاتل والده ولا يمسه بسوء ولا يخيفه .
ج. أمن أهله في الإسلام من فتنة الدجال .
2. والمراد به : الأمر بتأمين من كان فيه من الناس داخل
அபயம் – நிம்மதி என்றால் எந்த வகையான அபயம் – நிம்மதி என அறிஞர் பெருமக்கள் விளக்கம் தருகின்ற போது..
“இடிந்து
போவது, நீரில் மூழ்குவது,
நில நடுக்கம் மற்றும்
பூகம்பம் ஆகியவை ஏற்பட்டு
அதன் மூலம் அழிந்து
போவதில் இருந்து அபயம்
தருவதாக பொருள் கொள்ளலாம்.
கொலை செய்யப்படுதல்
மற்றும் செல்வங்கள் கொள்ளை
போவதில் இருந்து அபயம்
தருவதாக பொருள் கொள்ளலாம்.
தஜ்ஜாலின் குழப்பங்களில்,
சோதனைகளில் இருந்து அபயம்
தருவதாக பொருள் கொள்ளலாம்.
பொதுவாக, உள்ளே
நுழைந்தவுடன் எல்லா வகையான மனிதர்களின் தீங்குகளில் இருந்தும்
அபயம் தருவதாக பொருள்
கொள்ளலாம்.
இப்ராஹீம் {அலை} அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித
நகரமாக்கினான்.
عن عبد الله بن زيد رضى الله عنه، عن النبى صلى الله
عليه وسلم
إن إبراهيم حرَّم مكة، ودعا لها، وحرمتُ المدينة كما
حرَّم إبراهيم مكة، ودعوت لها فى مُدِّها وصاعِها مثل ما دعا إبراهيم عليه السلام
لمكة
متفق عليه
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''இப்ராஹீம் {அலை}
மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம்
மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம்
{அலை} மக்காவிற்காக பிரார்த்தனை
செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற
அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை
செய்துள்ளேன்” என நபி {ஸல்} கூறினார்கள். (
புகாரி )
இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு
சொல்லிக் காட்டுவான்.
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக
ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை
வழங்குவாயாக!''
( அல்குர்ஆன்: 2: 126 )
அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.
இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை
வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.
அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள
வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.
حدثنا إسحق بن إبراهيم الحنظلي أخبرنا جرير عن منصور عن مجاهد عن طاوس عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم يوم الفتح فتح مكة لا هجرة
ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا وقال يوم الفتح فتح مكة إن هذا البلد حرمه
الله يوم خلق السماوات والأرض فهو حرام بحرمة الله إلى يوم القيامة وإنه لم يحل
القتال فيه لأحد قبلي ولم يحل لي إلا ساعة من نهار فهو حرام بحرمة الله إلى يوم
القيامة لا يعضد شوكه ولا ينفر صيده ولا يلتقط إلا من عرفها ولا يختلى خلاها فقال
العباس يا رسول الله إلا الإذخر فإنه لقينهم ولبيوتهم فقال إلا الإذخر
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை
புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய
காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும்.
எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை.
எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள
வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது.
இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர்
தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள்.
உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்'
எனும் புல்லைத்
தவிரவா? ஏனெனில்,
அது உலோகத்
தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி {ஸல்}
அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது
அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி )
பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை பெற்றுத் தரும் பூமி…
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ
وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِي جَعَلْنَاهُ لِلنَّاسِ سَوَاءً الْعَاكِفُ فِيهِ
وَالْبَادِ وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ
أَلِيمٍ ()
”(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும்
தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம்
புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
( அல்குர்ஆன்: 22: 25 )
أولا : معنى
(يرد) في قوله تعالى ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم قيل هو العزم
والتصميم الأكيد ، وليس مجرد هم الخطرات وحديث النفس الذي عفا الله عنه ، وقيل :
بل معناه هم الخطرات وحديث النفس ، وعلى هذا القول الثاني تكون لمكة خصوصية وهي أن
الله تعالى يؤاخذ بالهم في حرم مكة فقط كما روي عن ابن مسعود:
ما من بلد يؤخذ فيه العبد بالهمة قبل العمل إلا مكة وتلا
الآية ، ونقله بعض أصحاب أحمد عن الإمام أحمد
وقيل هو مطلق المعصية وهو قول ابن عمر وغيره
وقيل هو مطلق المعصية وهو قول ابن عمر وغيره
இந்த இறைவசனத்தில் وَمَنْ يُرِدْ فِيهِ - ”குற்றம்புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று அல்லாஹ் குறிப்பிடுவது குறித்து இப்னு மஸ்வூத்
(ரலி) அவர்கள் விளக்கம் தருகிற போது…
மற்றெல்லா நிலைகளிலும்
மனிதர்கள் செய்கிற பாவங்களுக்கு
மட்டுமே தண்டனை உண்டு.
ஆனால், ஹரமிலே ஒருவர்
பாவம் செய்ய நினைத்தாலே
அதற்காக அவர் குற்றம்
பிடிக்கப்படுவார் என
அல்லாஹ் எச்சரிப்பதாக விளக்கம்
கூறுகின்றார்கள்.
இப்னு உமர்
(ரலி)
அவர்களும் இந்தப் பாவம்
தான் அந்தப் பாவம்
தான் என்றில்லாமல் எந்தப்
பாவங்களைக் குறித்து நினைத்தாலும்
அல்லாஹ்வின் தண்டனைக்கு அவர்
ஆளாவார் என்று கூறுகின்றார்கள்.
حدثنا أبو
اليمان أخبرنا شعيب عن عبد
الله بن أبي حسين حدثنا نافع
بن جبير عن
ابن
عباس أن
النبي صلى الله عليه وسلم قال أبغض الناس إلى الله
ثلاثة ملحد في الحرم ومبتغ
في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليهريق دمه
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும்
வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம்
புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை
நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க
நாடுபவன்” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: புகாரி )
ஹரமின் எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதியிலும் எவரொருவர் பாவம் செய்தாலும், பாவம்
செய்வதற்கு நினைத்தாலும் இறைக் கோபத்திற்கும், இறைத் தண்டனைக்கும் உள்ளாவார் எனும்
கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இந்த
உம்மத்திற்கு வழங்கி இருக்கின்றார்கள்.
தவாஃபும் அதன் சிறப்பும்...
தவாஃப் நிறைவேறுவதற்கு பெருந்தொடக்கு மற்றும் சிறுதொடக்கிலிருந்து
சுத்தமாகியிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
ஏனெனில் தவாஃபு என்பது
தொழுகையைப் போன்றதாகும்,
ஆயினும்
தவாஃபில்
பேசுவதற்கு
அனுமதியுள்ளது.
கஃபா, இடது புறமாக இருக்குமாறு அதை ஏழு முறை வலம் வர
வேண்டும். ருக்னுல் யமானிக்கு நேராக வந்ததும் இயன்றால் பிஸ்மில்லாஹி
வல்லாஹு அக்பர் எனக் கூறி வலக்கையால் அதைத் தொட்டுக்கொள்ள வேண்டும்; முத்தமிட வேண்டியதில்லை.
அது சிரமமாகத் தெரிந்தால் அதை விட்டுவிட்டு தவாஃபைத் தொடர வேண்டும்.
அதை நோக்கி சைகை
செய்யவோ
தக்பீர் கூறவோ கூடாது. ஆனால் ஹஜருல் அஸ்வதைப் பொருத்தவரை நாம் ஏற்கனவே கூறியிருப்பதைப்
போல அதைக் கடக்கும்போதெல்லாம் தொட்டு முத்தமிட்டு தக்பீர் கூற வேண்டும். அல்லது சைகை
செய்து தக்பீர் கூற வேண்டும்.
ஆண்கள் தவாஃபுல் குதூமில் முதல் மூன்று சுற்றுக்களில் நெருக்கமாக அடிகளை எடுத்துவைத்து
சற்று வேகமாக விரைவது விரும்பத்தக்கது. அதுபோல ஆண்கள் தவாஃபுல் குதூமின் எல்லா சுற்றுக்களிலும்
மேலாடையின் வலது பாகத்தை இடது கையின் அக்குள் வழியாக எடுத்து அதை இடது தோளின்
மீது போட்டு வலது புறத்தைத் திறந்து வைத்திருப்பதும் விரும்பத்தக்கதாகும்.
இந்தச் சுற்றுக்களில் இயன்றவரை திக்ரு மற்றும் துஆக்களை
அதிகமதிகம் ஓதிக்கொள்வதும் நல்லது. தவாஃபின் போது விரும்பிய துஆக்களை, திக்ருகளை
அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்து சுற்றுகளிலும் ருக்னுல் யமானிக்கும்
ஹஜருல்
அஸ்வதுக்குமிடையே
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْآخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆத்தினா
ஃபித்துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்'| என்ற துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்.
ஏழாவது சுற்றின் முடிவில் ஹஜருல் அஸ்வதைத் தொட்டோ முத்தமிட்டோ சைகை செய்தோ
தக்பீர் கூறி தவாஃபை முடித்ததும் மேலாடையைச் சரிசெய்து வலது தோளையும்
மறைத்து அணிந்துகொள்ள வேண்டும்.
وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى
الله عليه وسلم: "ينزل كل يوم على حجاج بيته الحرام عشرين ومائة رحمة ستين
للطائفين وأربعين للمصلين وعشرين للناظرين". قال المنذري في الترغيب والترهيب
رواه البيهقي بإسناد حسن
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ்
ஒவ்வொரு நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும்,
கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும்,
கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை
ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.” ( நூல்: பைஹகீ )
தவாஃபின் போது சில்மிஷமும், பாலியல் சேட்டைகளுமா?
தவாஃபை பொறுத்தவரையில்
உம்ரா செய்பவர்களுக்கும், ஹஜ் செய்பவர்களுக்கும் மிகவும் முக்கியமான ஓர்
இபாதத் வழிபாடாகும்.
ஆகவே, எந்நேரம் பார்த்தாலும் சாதாரண நாட்களில் பல்லாயிரம் பேரும்,
ஹஜ் உடைய நாட்களில் பல லட்சக்கணக்கானவர்களும் தவாஃப் செய்வார்கள்.
தவாஃப் என்பது கஅபா
ஆலயத்தை வலம் வருவதாகும். நகர்ந்து கொண்டே செல்ல வேண்டிய ஒரு வணக்கமாகும்.
ஒரு இடத்தில் நிலையாக நின்று செய்கிற வணக்கம் என்றிருந்தால் போதிய இடைவெளியில்
செல்லலாம்.
கூட்ட நெரிசல் எனும்
போது அளவுக்கு அதிகமாக நெருக்கடி இருக்கும். உடல் நசுங்கி
விடும் அளவுக்கு கூட நெருக்கடி இருக்கும்.
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில்
யதார்த்தமாகவோ அல்லது தவறுதலாகவோ ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ள முடியுமே தவிர பாலியல்
நோக்குடன் நடந்து கொள்வதென்பது அரிதிலும் மிக அரிதானது.
பல லட்சக்கணக்கானவர்கள்
கூடுகின்ற ஓர் இடத்தில் இது போன்ற இழி செயல் செய்கிற சில அயோக்கியர்களும் கலந்திருப்பது
சாத்தியமான ஒன்று தான் என்பதும் மறுப்பதற்கில்லை.
அதே போன்று ஆயிரக்கணக்கான
கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக அங்கே ஸவூதியின் காவல் துறை கண்காணித்துக் கொண்டும்
இருக்கின்றது.
ஆண்கள் வெள்ளை ஆடையுடன்
தவாஃப் செய்கிற அதே வேளையில் வெள்ளை அல்லாத வேறு நிறத்துடன் தவாஃப் செய்கிறவர்கள் பெண்கள்
எனும் போது இவ்வாறான கீழான வேலையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கண்டறிந்து அக் கூட்டத்திலிருந்து
அகற்றி தகுந்த முறையில் கவனிப்பார்கள்.
இவைகளை எல்லாம் மீறி
ஒருவனோ அல்லது இருவரோ இது போன்ற இழி செயலில் ஈடுபட்டிருக்கவும் வாய்ப்புண்டு. எனினும் அல்லாஹ்வின் தண்டனைக்கு அவன் உள்ளாவான் என்பதில் எள் முனையளவும்
சந்தேகமில்லை.
ஒட்டு மொத்த முஸ்லிம்
உலகும் நம்பிக்கையோடும், கண்ணியத்தோடும் மிக உயர்ந்ததாக எண்ணிக் கொண்டிருக்கின்ற
ஒரு விஷயத்தில் இது போன்ற குற்றச் சாட்டுக்களைக் கூறி பொதுவெளியில் பதிவுகளைப் பதிவிட்டவர்களில்
பலர் போலிகளாகத் தான் இருப்பார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஏனெனில், முத்தலாக் விஷயத்தில் பகிரங்கமாக ஷரீஅத்தில் களங்கம் கற்பித்த
இஷ்ரத் ஜஹானாக இருக்கட்டும், இமாமத்தில் பங்கு கேட்டு தன்னை மேதாவியாக
அறிவித்துக் கொண்ட ஜாமிதா டீச்சராக இருக்கட்டும், தலாக்,
குலா விவகாரங்களில் காழிகளின் அதிகார வரம்புகள் பறிக்கப்பட வேண்டும்
என்று முழங்கிய பத்ர் ஸயீத்தாக இருக்கட்டும் அல்லது லஜ்ஜாவை வழங்கி கற்புக்கு புது
இலக்கணத்தை கொடுத்த தஸ்லீமா நஸ்ரினாக இருக்கட்டும் இவர்கள் இஸ்லாத்தின் மீது சுமத்தியக்
குற்றச்சாட்டுக்கும், களங்கத்திற்கும் பின்னால் மகத்தான ஒரு நோக்கமும்,
பேரமும் நடந்திருப்பதை நாம் அறிவோம்.
அது போன்றே அமெரிக்கப்
பெண்ணிய வாதியான மோனா அல் தஹ்வி என்பவர் பல ஆண்களுடன் ஒட்டி உரசும் பல போட்டோக்கள்
இண்டெர்நெட்டில் உலவுவதைப் பார்க்கும் போது பல ஆண்களுடன் ஒட்டி உரசும் இழிபிறவியான
இவளை யாரோ பின்புறத்தில் கிள்ளியதற்காக கொந்தளிப்பவளாகத் தெரிகிறாளா? என்கிற சந்தேகம் நமக்கு ஏற்படாமலில்லை.
ஏனெனில், மேற்குலகில் தற்போது இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் மக்கள்
கூட்டத்தை தடுத்து நிறுத்தவே மேற்குலக விரோதிகளால் ஏவப்பட்ட அம்பாகவே இவள் இருப்பாள்
என்கிற ஐயமும் எழுகின்றது.
இப்படியும் சிலர் கஅபாவிற்குள் பிரவேசிக்கலாம்….
கஅபாவிற்குள், ஹரமிற்குள் வருகிற எல்லோரும் மனிதப் புனிதராக,
மகானாக வருவார்கள் என்று ஒட்டு மொத்தமாக நாம் கருதி விடக்கூடாது. சில போது சில மோசமான
சுபாவம் கொண்ட மனிதர்களும் வந்திருப்பார்கள்.
ملك غسان جبلة بن الأيهم، الذي منعه الكبر من الثبات
على الإسلام، بعد أن دخل فيه؛ روى ابن الكلبي وغيره: أن عمر لما بلغه إسلام جبلة
فرح بإسلامه، ثم بعث يستَدْعيه ليراه بالمدينة، وقيل: بل استأذنه جبلة في القُدُوم
عليه، فأذن له، فركب في خلْق كثير من قومه، قيل: مائة وخمسين راكبًا، فلما سلَّم
على عمر رحب به عمر وأدنى مجلسه، وشهد الحج مع عمر في هذه السنة، فبينما هو يطوف
بالكعبة، إذ وطئَ إزارَه رجلٌ من بني فزارة فانحل، فرفع جبلة يده فهشم أنف ذلك
الرجل
ومن الناس مَن يقول: إنه قلع عينه، فاستعدى عليه
الفزاري إلى عمر، ومعه خلْق كثيرٌ من بني فزارة، فاستحضره عمر فاعترف جبلة، فقال
له عمر: أقدته منك؟ فقال: كيف، وأنا ملك وهو سوقة؟! فقال:
إن الإسلام جمعك وإياه، فلست تفضله إلا بالتقوى، فقال جبلة: قد كنتُ أظُن أن أكونَ
في الإسلام أعز مني في الجاهلية، فقال عمر: دع ذا عنك، فإنك إن لم ترضِ الرجل
أقدته منك، فقال: إذًا أتنَصَّر، فقال: إن تنَصَّرتَ ضرَبتُ عنقك، فلما رأى الحدَّ
قال: سأنظر في أمري هذه الليلة، فانصرف من عند عمر، فلما ادلَهَمَّ الليلُ ركب في
قومه ومن أطاعه، فسار إلى الشام، ثم دخل بلاد الروم .
ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு யர்மூக்
போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக்
கவர்னர்களில் இறுதியானவரான ‘ஜபலா இப்னு அய்ஹம்’ என்பவர் அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிமானார்.
பின்னர் மதீனா வந்த அவரை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்த கலீஃபா உமர் (ரலி)
அவர்கள் ஹஜ்ஜுடைய நாட்கள் நெருங்கி வருவதால் ஹஜ் செய்து விட்டு ஊர்
திரும்புமாறும், அதுவரை மதீனாவிலேயே தங்குமாறு வேண்டிக்கொண்டார்கள்.
உமர் (ரலி) அவர்களோடு ஹஜ்ஜுக்குச் சென்ற ஜபலா தவாஃப் செய்து கொண்டிருந்தார்.
அருகில் தவாஃப் செய்து கொண்டிருந்த ஒரு கிராமவாசி கூட்ட நெரிசலில் தவறுதலாக
ஜபலாவின் காலில் மிதித்து விட்டார்.
தான் ஒரு நாட்டின் அரசன் எனும் அகங்காரம் மேலிடவே அந்த கிராமவாசியை
கண்மூடித்தனமாக அடித்து தாக்கினார். ஒரு அறிவிப்பில் அவரின் இரு கண்களில் ஒரு கண்
பிதுங்கி வெளியே வந்து விட்டது.
மருத்துவசிகிச்சை எடுத்துக் கொண்ட அந்தக் கிராமவாசி ஹஜ்ஜுடைய நாட்கள்
முடிந்ததும் ஜபலாவின் செயல் குறித்து முறையிட்டார்.
உமர் (ரலி) அவர்கள் ஜபலாவிடம் இது குறித்து விசாரித்து விட்டு, சம்பந்தப்பட்ட
அந்த கிராமவாசியிடம் நடந்து கொண்ட செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு
கோருங்கள்! அவர் மன்னித்து விட்டால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.
அவர் மன்னிக்கவில்லை என்றால் பழிக்குப்பழி எனும் அடிப்படையில் அவர் உம்மை நீர்
அடித்தது போன்று அடிப்பார் என்றார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.
அதற்க, ஜபலா நான் ஒரு நாட்டின் ஆட்சியாளன், அவனோ ஓர் கிராமவாசி அதுவும்
சாமானியன். ஆட்சியாளனுக்கு எதிராக சாமானியனுக்கு இவ்வளவு துணிச்சலை எப்படி வழங்க
முடியும்? என்று கேட்டார்.
இஸ்லாம், கலிமா ஷஹாதா என்கிற அற்புதம் இந்த பேதத்தைக் களைந்து இருவரையும்
ஒன்றாகவே பார்க்கத்தூண்டுகின்றது. இருவரும் சரிசமமான மனிதர்கள் என்கிற தத்துவத்தை
போதிக்கின்றது என்றார் உமர் (ரலி) அவர்கள்.
அப்படியென்றால், நான் மீண்டும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போகின்றேன் என்று
மிரட்டினார் ஜபலா.
இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் “செய்த தவருக்கு மன்னிப்பு வேண்டி, அவர்
மன்னித்தால் ஒன்றும் இல்லை. அவர் மன்னிக்காவிட்டால் பழிக்குப்பழி அடிப்படையில்
தண்டனை மட்டும் தான். நீர் மதம்மாறினால் உமக்கு மரண தண்டனை என்றார்கள்.
அவ்வளவு தான் ஜபலாவின் முகம் வெளிறியது. எனக்கு சிறிது அவகாசம் வேண்டும். நாளை
காலையில் இது குறித்து நான் என் பதிலைச் சொல்கின்றேன் என்றார்.
உமர் (ரலி) அவர்களும் அவகாசம் அளித்தார்கள். ஆனால், ஜபலாவிற்கோ அகம்பாவமும்,
பெருமையும் இடம் தர மறுத்ததால் மதீனாவை விட்டு ஓடி விட்டார்.
ஜபலா மதீனாவை விட்டு ஓடிய பிறகு அவருக்கு நேர்வழியின் பால் அழைப்பு விடுக்க ஒரு தூதரை உமர் (ரலி) அனுப்பி வைத்தார்கள்.
தூதர் சென்ற போது அவர் தங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
தங்கத்தட்டில் உணவு உண்டு கொண்டு, தங்க டம்ளரில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
தூதர் அவரிடம் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கருணையோடு அவரை திரும்ப அழைத்து வரச் சொன்னதை சொன்னார்.
ஜபலாவின் கண் கலங்கியது.
எனக்கு நேர்வழியில் நீடித்து இருக்க கிடைத்த ஒரு பொன்னான வாய்பை நான் தவற விட்டு விட்டேன். என்று கதறி அழுதார். ஆனால், அவர் மீண்டும் இஸ்லாத்தில் வரவில்லை.
தூதர் திரும்பி வந்து உமர் (ரலி) அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்கள். அவர் அழுததை கண்டு ஆதங்கப்பட்ட உமர் ரலி அவர்கள் அவர் மது குடிக்கிறாரா? என ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
ஆம்! என தூதர் பதில் கூறியதும் அப்படியானால், இனி அவர் ஒரு போதும் திருந்த வாய்ப்பே இல்லை. அவர் நேர்வழியிலிருந்து வெகு தூரமாகி விட்டார் என்றார்கள்.
இறுதியில் ஜபலா கிருத்துவராகவே மரணித்தார்.
( நூல்:
அல்வாஃபீ ஃபில் வஃபிய்யாத், அல் பிதாயா வன் நிஹாயா )
மிக அருகில் கஅபாவைக் காண வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக
முண்டியடித்துக் கொண்டு பெண்கள் தவாஃபின் போது முன்னேறுவதை தவிர்த்து பின் வரும்
நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு கூட்டம் குறைவாக இருக்கும் போதும், இரவு
நேரங்களிலும், கஅபாவை விட்டு சற்று தூரமாகவும் சென்று தவாஃப் செய்யலாம். இதுவே இது
போன்ற ஃபித்னாக்களை விட்டும் தவிர்ந்து கொள்ளும் வழியாகும்.
ஆதலால் தான் தொழுகைகளிலும் கூட பெருமானார் {ஸல்} அவர்கள்
பெண்களை பின்வரிசையில் நிறுத்தினார்கள். மேலும், தொழுகை முடிந்து விட்டால் பெண்கள்
கலைந்து செல்லும் வரை தொழுத இடத்திலேயே சிறிது நேரம் ஆண்கள் தாமும் அமர்ந்து
தோழர்களையும் அமருமாறு வழியுறுத்தினார்கள்.
மேலும், இது குறித்த விளக்கங்களுக்கு புகாரி தமிழாக்கம் எண்கள்
870, 380, 866 ஆகிய நபி மொழிகளைப் பார்க்கவும்.
ما رواه البخاري (1539) عن ابْن جُرَيْجٍ
قال : أَخْبَرَنِي عَطَاءٌ إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ مَعَ
الرِّجَال قَال : كَيْفَ يَمْنَعُهُنَّ وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ صَلى الله
عَليْهِ وَسَلمَ مَعَ الرِّجَال ؟ قُلتُ : أَبَعْدَ الحِجَابِ
أَوْ قَبْلُ ؟ قَال : إِي لعَمْرِي لقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الحِجَابِ ، قُلتُ :
كَيْفَ يُخَالطْنَ الرِّجَال ؟ قَال : لمْ يَكُنَّ يُخَالطْنَ ، كَانَتْ عَائِشَةُ
رَضِي الله عَنْهَا تَطُوفُ حَجْرَةً مِنَ الرِّجَال لا تُخَالطُهُمْ ، فَقَالتِ
امْرَأَةٌ : انْطَلقِي نَسْتَلمْ يَا أُمَّ المُؤْمِنِينَ – أي : الحجر الأسود - قَالتِ :
انْطَلقِي عَنْكِ وَأَبَتْ ، يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِالليْل فَيَطُفْنَ مَعَ
الرِّجَال ، وَلكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلنَ البَيْتَ قُمْنَ حَتَّى يَدْخُلنَ
وَأُخْرِجَ الرِّجَالُ .
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெண்கள்
ஆண்களோடு தவாஃப் செய்வதை இப்னு ஹிஷாம் (ரஹ்) அவர்கள் தடுத்தது குறித்து நான் அதாவு
(ரஹ்) அவர்களிடம் வினவிய போது,
அவர் எப்படித் தடுக்கலாம்? நபி {ஸல்} அவர்களின் துணைவியர்கள்
ஆண்களோடு தவாஃப் செய்துள்ளனரே என அதாவு (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள்.
அதற்கு நான் இவ்வாறு செய்தது ஹிஜாபின் சட்டம் அருளப்படும்
முன்னரா? அல்லது அருளப்பட்டதின் பின்னரா? என கேட்டேன்.
அப்போது, அதாவு (ரஹ்) அவர்கள் “ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதன்
பின்னரே இவ்வாறு நான் கண்டேன்” என்று கூறினார்கள்.
மீண்டும் நான் “அதெப்படி பெண்கள் ஆண்களோடு ஒருவரோடொருவர் கலந்து
விடுவார்களோ?” என்று கேட்டேன். அதற்கு, இல்லை ஒரு போதும் கலந்து விட மாட்டார்கள்
என்று கூறிவிட்டு “ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களோடு கலக்காமல் ஓரமாக தவாஃப்
செய்வார்கள்.
அப்போது, ஒரு பெண் நம்பிக்கையாளர்களின் தாயே! நடந்து வாருங்கள்!
நாம் சென்று ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவோம்” என்றார். அதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள்
“நீ செல்! என்று கூறி அவர்கள் செல்ல மறுத்து விட்டார்கள்.
இரவிலும், பெண்கள் தம்மை மறைத்துக் கொண்டு சென்று ஆண்களோடு
தவாஃப் செய்வார்கள். ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால் உள்ளே இருக்கும்
ஆண்கள் வெளியேறும் வரை அதற்காகக் காத்திருப்பார்கள்”
( நூல்: புகாரி 1539 )
எனவே, ஹஜ், உம்ரா என்கிற உயர்ந்த வணக்க வழிபாட்டு விஷயத்தில்
அதன் மகத்துவம் அதன் கண்ணியம் ஆகியவற்றை விளங்கி, அங்கே எல்லை மீறுகின்றவர்களுக்கு
ஏற்படுகின்ற அல்லாஹ்வின் கோபம், தண்டனை ஆகியவற்றை பயந்து உயர்வு மேவும்
அல்லாஹ்வின் வாக்குறுதியின் மீது அளவிலா முழு நம்பிக்கையை வைத்து தூய இந்த
இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க காத்துக் கிடக்கும் கயவர் கூட்டத்துக்கு
கறுப்பாடுகளாக இரையாகாமல் இருக்க இந்த உம்மத்தின் கடைக்கோடி முஸ்லிம் வரை கடமை
பட்டிருக்கின்றார் என்பதை இதன் மூலம் நாம் உணர்வோம்.
இஸ்லாமிய மார்க்கத்தின் தூய அடையாளங்களை, சட்டங்களை, வரம்புகளை,
வணக்க வழிபாடுகளை கொச்சைப் படுத்தி இந்த மார்க்கத்தின் கண்ணியத்திலும், உயர்விலும்
களங்கத்தை ஏற்படுத்தி விடலாம் என்று பகல் கனவு காணுவோர் விஷயத்தில் மிகவும்
எச்சரிக்கையாக இருப்பதோடு அவர்களால் இந்த மார்க்கத்தின் எந்த அம்சத்தையும் குறைவு
படுத்திட இயலாது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! இந்த மார்க்கத்திற்கும், இந்த
உம்மத்திற்கும் கண்ணியத்தை வழங்குவானாக!
களங்கம் கற்பிக்கத் துடிக்கும் கயவர்களுக்கு அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் தக்க தண்டனையை வழங்குவானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment