இது தான் பாதை! இது தான் பயணம்!!
மகத்துவம் நிறைந்த
ஆஷூரா தினத்தில் ஜும்ஆ
உடைய நாளில் அமர்ந்திருக்கின்றோம்.
இந்த நாளின்
மகத்துவம் குறித்தும் மாண்புகள்
குறித்தும் நாம் அதிகமாகவே
அறிந்து வைத்திருக்கின்றோம்.
நபிமார்களும், நல்லோர்களும்,
நம்பிக்கையாளர்களும் இந்த
நாளில் தாங்கள் அடைந்து
கொண்டிருந்த இன்னல்களில் இருந்தும்,
அடக்குமுறைகளில் இருந்தும்
இறை உதவியைப் பெற்று
ஈடேற்றம் அடைந்த வெற்றி
நாளாகும்.
குறிப்பாக, சர்வாதிகாரமும் கொடுங்கோன்மையும் கொண்டிருந்த
ஃபிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும்
கூண்டோடு நீரில் அழிக்கப்பட்டும்,
ஒடுக்கப்பட்டு, பலவீனப்பட்டு, அடிமைகளாக
நடாத்தப்பட்ட பனூ இஸ்ரவேலர்களும் அவர்களை ஈமான்
எனும் ஒளியால் வழி
நடாத்திய மூஸா, ஹாரூன்
(அலைஹிமஸ்ஸலாம்) அவர்களும் அல்லாஹ்வின்
அளப்பெரும் அருளால் காப்பாற்றப்பட்ட ஆஷூரா தினத்தில்
“அண்ணலாரின் அறிவுறுத்தலின் பேரில்
இன்றைய நாளில் அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்தும் நோக்கில்
நோன்பு வைத்தவர்களாக அமர்ந்திருக்கும் நம் அனைவர்களையும்
அல்லாஹ் கபூல் செய்வானாக!
நம்முடைய இந்த
உலக வாழ்விலும், எதிர்
பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மறுமை வாழ்விலும்
மகத்தான வெற்றியை நஸீபாக்குவானாக!
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல்
ஆலமீன்!!!
உலகிலேயே சிறந்த
சமுதாயம்’
என்று அல்லாஹ் அல்குர்ஆனில் சிலாகித்துக் கூறும் சமூகம் முஸ்லிம் சமூகம் தான் என்றால், அதில் எந்த ஐயமும் நமக்கில்லை.
முஸ்லிம் சமூகம் பூகோல
வராலாற்றின் பல்வேறு கால கட்டங்களிலும் வெற்றியையும் தோல்வியையும் மாறிமாறிப் பெற்று வந்துள்ளது.
நபிமார்களின்
காலம் முதற்கொண்டு கடந்த 20 -ஆம் நூற்றாண்டு வரை
முஸ்லிம்கள் அடைந்த எழுச்சியும் வீழ்ச்சியும் இரவையும்
பகலையும் போன்று மாறி மாறியே நிகழ்ந்து வந்துள்ளன.
இது இந்தப்
பிரமாண்டமான பிரபஞ்சத்தை இயக்கும் இறைவனின் இயங்கியல் விதிகளில் வெற்றியும் தோல்வியும் ஒன்றாகும்.
அந்த வெற்றி
தோல்விகளை
நாம் சமூகங்களுக்கு மாறி மாறி கொடுக்கிறோம் என்று
அல்குர்ஆன் இதனைக்
குறிப்பிடுகிறது.
இன்று உலகளாவிய
ரீதியில் முஸ்லிம்கள் பல்வேறு முனைகளிலும் நெருக்கடிகளுக்கு இலக்காகி வருகின்றனர்.
சில நாடுகளில்
ஆயுதத்
தாக்குதல்களால் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து
நிற்கின்றனர். சில நாடுகளில் சிறைகளில் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.
இன்னும் சில
நாடுகளில் அகதிகளாய் அவதிப்பட்டும், சில நாடுகளில் இஸ்லாமிய அடையாளங்களோடு வாழ
முடியாமல் வதங்கி நிற்கின்றனர்.
இன்னும் சில
நாடுகளில் தமது
தாய்நாட்டு மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள் நிலை
கொண்டு தமது
மக்களைக் கொடுமைப்படுத்தி கொன்று குவிக்கப்படுவதை
காண்கிறார்கள்.
இந்தத் துயர
நிகழ்வுகளால்
முஸ்லிம் சமூகத்தில் சிலர் நம்பிக்கை இழந்து முஸ்லிம்கள்
வீழ்ந்து
விட்டார்கள் என்றும் இஸ்லாம் தோல்வியடைந்துவிட்டது என்றும் எண்ணுகின்றனர்.
முஸ்லிம்
சமூகத்தின் எழுச்சி மீது நம்பிக்கை இழந்து போய் விரக்தியடைந்து நிற்கிறார்கள். இவர்கள் போன்றவர்களுக்கு ஆறுதலை
ஏற்படுத்துவதோடு முஸ்லிம் சமூகத்தின், இஸ்லாத்தின் எழுச்சி, வீழ்ச்சி குறித்த அடிப்படை விதிகள் பற்றிய விழிப்புணர்வை இன்றைய தினத்தில்
ஏற்படுத்துவது மிகப் பொருத்தமான ஒன்றாகும்.
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ (47)
”முஃமின்களுக்கு
வெற்றியை வழங்குவது நம்முடைய கடமையாகும்”. ( அல் குர்ஆன்: 30: 47 )
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ
مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (8)
”அவர்கள்
அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்;
ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்”. ( அல்குர்ஆன்: 61:
8 )
இது முஸ்லிம்
உம்மதின், இஸ்லாத்தின் வெற்றி
குறித்தான இறைவனின் மகத்தான
வாக்குறுதியாகும்.
இஸ்லாத்தின்,
முஸ்லிம் உம்மத்தின் வெற்றி குறித்தான இந்த இறை வாக்குறுதியை பலமாக பிடித்துக்
கொண்டு,
இஸ்லாம் அல்லாஹ்விடம் இருந்து வந்தது, முஸ்லிம்கள்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் என்பதற்காக மட்டும் அந்த
வெற்றி எப்படியேனும் கிடைத்து விடும் என்று பலர் தவறாக அர்த்தம் கொள்கின்றனர்.
இந்த
எதிர்பார்ப்பும் ஆசையும் பிழையானதல்ல. எனினும் மனித முயற்சிகள்,
ஆன்மீக உழைப்புகள், அதையொற்றிய
தியாகங்கள், அர்ப்பணங்கள் என எதுவுமே
இல்லாமல்
அந்த வெற்றியை எதிர்பார்ப்பது பிழையான கண்ணோட்டமாகும்.
இதைப் பின் வரும்
வசனங்களின் மூலம் அல்லாஹ் உணர்த்துகின்றான்.
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ
مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ
وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ
اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ (214)
“உங்களுக்கு முன்
சென்றுவிட்ட (இறை நம்பிக்கையுடைய) வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு
வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?
இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன.
அன்றைய காலத்தில்
அவர்களுடன் வாழ்ந்த இறைத்தூதர்களும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும்
“அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்?” என்று ( அழுது புலம்பிக் ) கேட்கும் வரை
அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.
அப்பொழுது
அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது! “இதோ! அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில்
இருக்கின்றது என்று”. ( அல்குர்ஆன்: 2:214 )
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ
الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ (142)
“உங்களில் யார்
அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில்
நிலைகுலையாமல் நிற்பவர்கள் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் எளிதில்
சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?”. ( அல்குர்ஆன்: 3: 142 )
أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا
يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ
اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ (3)
”நாங்கள்
நம்பிக்கை கொண்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டுவிடப்படுவார்கள்; மேலும்
அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன?.
உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம்.
உண்மையாளர்கள்
யார்? பொய்யர்கள் யார்? என்பதை அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது!”. ( அல்குர்ஆன்:
29: 2, 3 )
வெற்றியை மட்டும் தான் முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் வழங்குவானா?
1. ஃபிர்அவ்ன் ஒடுக்கு முறையும்… முஸ்லிம்களின் அர்ப்பணமும்…
அல்லாஹ்வின் அற்புதத்தை மூஸா (அலை) வெளிப்படுத்திய போது, அவன் வழங்கிய அற்புதப் படைப்பான அழகிய கண்ணின் துணை கொண்டு பார்த்து விட்டு, அந்த சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து..
فَأُلْقِيَ السَّحَرَةُ
سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (70) قَالَ آمَنْتُمْ لَهُ
قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ
فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ
فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى (71)
“நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை
ரப்பாக ஏற்றுக் கொண்டோம்” என்று உரக்கக் கூறினார்கள்.
அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன் நீங்கள்
அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர் தான் உங்களுக்கு சூனியத்தைக்
கற்றுக் கொடுத்த உங்களின் குரு என்று இப்போது தெரிந்து விட்டது.
இப்போது, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். மேலும்,
பேரீச்சம்
மரத்தின் கம்பங்களில் அறைந்து உங்களை கொல்லப்போகின்றேன், அப்போது தெரியும் யாருடைய வேதனை மிகக்கடுமையானது என்று”.
قَالُوا لَنْ نُؤْثِرَكَ
عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ
قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا (72) إِنَّا آمَنَّا بِرَبِّنَا
அதற்கு, முஸ்லிம்களாக மாறியிருந்த
சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்முன்னே நடந்த பின்னரும் நாங்கள் சத்தியத்தை விட
உனக்கு ஒரு போதும் முன்னுரிமை தரமாட்டோம்.
எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்து
கொள். அதிகபட்சம் இவ்வுலக வாழ்வில் மட்டுமே
உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். திண்ணமாக,
நாங்கள் எங்கள்
இறைவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டோம்”.
( அல்குர்ஆன்: 20: 59 – 73 )
2. தீக்குண்டத்தாரும்… இறைநம்பிக்கையாளர்களின் ஒப்பற்ற உயிர்த் தியாகமும்…
وَالسَّمَاءِ ذَاتِ
الْبُرُوجِ (1) وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) قُتِلَ
أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا
قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) وَمَا
نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8)
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ
شَهِيدٌ (9)
”உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின்
மீது சத்தியமாக! வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது
சத்தியமாக! மேலும்,
பார்க்கின்றவர்
மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும்
சத்தியமாக! தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!
அது எத்தகைய தீக்குண்டமெனில், அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரி
பொருள் இருந்தது. அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து
இறை நம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த அக்கிரமச் செயல்களைப்
பார்த்து ரசித்த வண்ணம் இருந்தார்கள்.
அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் தீக்குண்டத்தார்கள் பகைமை பாராட்டிக் கொள்ள
காரணம் இதைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.
“யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே
புகழுக்குரியவனும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனுமாகிய
அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தான்!” ( அல்குர்ஆன்: 85: 1- 9 )
இது முந்தைய பனூ இஸ்ராயீல்களின் காலத்தில் நடைபெற்ற வியப்பின் விளிம்பிற்கே
அழைத்துச் செல்லும் வினோதமான வரலாறாகும்.
ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் நீண்ட ஹதீஸ்
முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னை கடவுளாக அறிவித்து, தன்னை வணங்க வேண்டும் என ஆணை
பிறப்பித்திருந்த ஓர் அரசனின் பிரதேசத்தில் ஈமான் கொண்டிருந்த ஒரு சிறுவனின்
மரணத்தின் மூலம் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் முஸ்லிமானார்கள்.
قد آمن الناس كلهم.
فأمر بأفواه السكك فَخُدّت فيها الأخاديد، وأضرمت فيها النيران، وقال: من رجع عن دينه
فدعوه وإلا فأقحموه فيها. قال: فكانوا يتعادون فيها ويتدافعون
அப்போது, அரசன் பெரிய கிடங்குகள் தோண்டச் சொல்லி
அதில் நெருப்பு மூட்டுமாறு கட்டளைப் பிறப்பித்து,
“யார் யாரெல்லாம்
தங்களது ஈமானை கைவிட வில்லையோ அவர்களைப் பிடித்து இவற்றில் வீசியெறியுங்கள்! அல்லது இந்த நெருப்பில் இறங்குங்கள் என்று அவர்களை நிர்ப்பந்தியுங்கள்! என்று தம் சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.
فجاءت امرأة بابن لها ترضعه، فكأنها تقاعست أن تقع في النار، فقال
الصبي: اصبري يا أماه، فإنك على الحق".
அவர்களும் அவ்வாறே செய்தனர். அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கைக் கொண்ட
அத்துனை பேர்களும் தீக்குண்டத்தில் வீசியெறியப்பட்டார்கள். இறுதியாக, ஒரு பெண்மணி வந்தாள். பால்குடி பருவத்தில் உள்ள தன் குழந்தையை கையில் சுமந்தவாறு தீக்குண்டத்தின்
வாசல் அருகே தயங்கிய படி நின்ற போது, அந்தக் குழந்தை சொன்னது: “தாயே! பொறுமை காத்திடு! நிச்சயமாக நீ சத்தியத்தின் மீது இருக்கின்றாய்”
என்று. ( நூல்: இப்னு கஸீர், ரியாளுஸ்ஸாலிஹீன், பாபுஸ் ஸப்ர், ஹதீஸ்எண்: 30 )
வெற்றி என்பது…
வெற்றி என்பது அல்லாஹ் இறை
நம்பிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற மகத்தான நிஃமத் - அருட்கொடையும், பேருபகாரமும்
ஆகும்.
அஹ்ஸாப் யுத்தத்தின் துவக்க தருணத்தில்
ஏற்பட்ட அமளி துமளிகளை எதிரிகளின் பலமான படை பலத்தை, நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளைக்
கண்டு விழி பிதுங்கி, கண்கலங்கி நின்ற தருணத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய
உதவியும், வெற்றியும் காலமெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய, நினைத்துப்
பார்த்து நன்றி செலுத்த வேண்டிய அருட்கொடை என்று அல்லாஹ் குறிப்பிடுவான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ
إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ
تَرَوْهَا وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا (9) إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ
وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ
الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا (10) هُنَالِكَ ابْتُلِيَ
الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا (11)
“இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்
உங்களுக்குச் செய்திருக்கின்ற பேருபகாரத்தை நினைவு கூருங்கள்! எதிரிகள் உங்களைத்
தாக்க வந்திருந்த போது நாம் அவர்கள் மீது ஒரு கடும் புயல் காற்றை ஏவினோம். உங்கள்
கண்களுக்கு தென்படாத ( வானவர்களின் ) படைகளையும் அனுப்பினோம்.
அப்போது நீங்கள் செய்து
கொண்டிருந்தவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். பகைவர்கள்
மேலிருந்தும், கீழிருந்தும் உங்கள் மீது படையெடுத்து வந்த நேரத்தில் உங்கள் கண்கள்
பீதியினால் மருண்டு விட்டன. இதயங்கள் தொண்டைகளை அடைத்து விட்டன.
மேலும், நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி
விதவிதமான சந்தேகங்கள் கொள்ள தலைப்பட்டீர்கள். அந்தக் கடினமான நேரத்தில் நம்பிக்கை
கொண்டவர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும், கடுமையாக
அலைக்கழிக்கப்பட்டார்கள்”.
( அல்குர்ஆன்: 33: 9, 10, 11 )
நெருக்கடிகளின் போதும் சிரமங்களின்
போதும் அதில் இருந்து வெளியேறிட துடிக்கின்றோம். அல்லாஹ் உதவி செய்திட வேண்டும்
என்று அங்கலாய்க்கின்றோம்.
ஆனால், அல்லாஹ்வின் உதவியைப்
பெறுவதற்கு தகுதியுடையவராக நாம் இருக்கின்றோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க
கடமைப் பட்டிருக்கின்றோம்.
வெற்றியை நோக்கிய பயணத்தில் இருக்க
வேண்டிய முக்கிய பண்புகள்..
1.
முயற்சி..
وَالَّذِينَ
جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ
الْمُحْسِنِينَ (69)
“எவர்கள் நம்மை நோக்கி முயற்சி
செய்கின்றார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய ( வெற்றியின் ) வழிகளைக் காண்பிப்போம்.
மேலும், திண்ணமாக! அல்லாஹ் நற்பணியாற்றுபவர்களுடன் இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 29: 69 )
2.
ஆன்மீக உழைப்பு...
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ
وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ (7)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள்
அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால் அவன் உங்களுக்கு உதவி வழங்குவான். மேலும், உங்களின்
பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.” ( அல்குர்ஆன்:
47: 7 )
3.
இறைநம்பிக்கை…
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ
كُنْتُمْ مُؤْمِنِينَ (139)
”நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்;
கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறை நம்பிக்கையுடையோராயின் நீங்களே வெற்றி
பெறுவீர்கள்.” ( அல்குர்ஆன்: 3: 139 )
4.
சமகால தயாரிப்புகள்…
وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ
“மேலும், அவர்களை வெற்றி கொள்ள
உங்களால் முடிந்த அளவு அதிகமான ஆற்றலையும், வலிமையையும் தயார் நிலையில் வைத்துக்
கொள்ளுங்கள்.”
( அல்குர்ஆன்: 8: 60 )
5.
பொறுமையும், ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பும்…
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ
لَعَلَّكُمْ تُفْلِحُونَ (200)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை
கடைபிடியுங்கள்! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நில்லுங்கள்!
எப்பொழுதும் ஒருங்கிணைந்து முழு முனைப்புடன் இருங்கள்! மேலும், அல்லாஹ்வுக்கே
அஞ்சி வாழுங்கள்! நீங்கள் வெற்றியாளர்களாய் திகழக்கூடும்!”. ( அல்குர்ஆன்: 3: 200 )
800 ஆண்டு கால முயற்சியும்..
உழைப்பும்…
ونشأ تحت رعاية أبيه السلطان "مراد الثاني" سابع سلاطين
الدولة العثمانيةالذي عمل على تعليمه وإعداده ليكون جديرًا بمنصب السلطان ،
والقيام بمسئوليته ، فأتم "محمد الفاتح" حفظ القرآن ، وقرأ الحديث
النبوي ، وتعلم الفقه الإسلامي .
ودرس "محمد الفاتح" الرياضيات والفلك وفنون الحرب والقتال ، وإلى جانب ذلك تعلم اللغات العربية والفارسية واللاتينية واليونانية ، وخرج مع أبيه في معاركه وفتوحاته .
ثم ولاه أبوه إمارة صغيرة ؛ ليتدرب على إدارة شئون الدولة تحت إشراف عدد من كبار علماء عصره ، وهو ما أثر في تكوين شخصية الأمير الصغير ، وبناء تفكيره بناءً إسلاميًّا صحيحًا .
وقد نجح الشيخ "آق شمس الدين "- وكان واحدًا ممن قام على تربية "محمد الفاتح" وتعليمه – في بث روح الجهاد والتطلع إلى معالي الأمور في نفس الأمير الصغير، وأن يلمح له بأنه المقصود ببشارة النبي – صلى الله عليه وسلم- .. وكان لهذا الإيحاء دور كبير في حياة "محمد الفاتح" فنشأ محبًّا للجهاد ، عالي الهمة والطموح ، واسع الثقافة ، وعلى معرفة هائلة بفنون الحرب والقتال .
· توليه الحكم .. والعمل على تحقيق البشارة :
وبعد وفاة أبيه السلطان "مراد الثاني" في (5 من المحرم 852 ﻫ = 7 من فبراير 145 م) تولى "محمد الفاتح" عرش الدولة العثمانية ، وكان شابًّا فتيًّا في العشرين من عمره ، ممتلأ حماسًا وطموحًا ، يفكر في فتح مدينة "القسطنطينية" عاصمة الدولة البيزنطية .. وسيطر هذا الحلم على مشاعر "محمد الفاتح" ، فأصبح لا يتحدث إلا في أمر الفتح ، ولا يأذن لأحد ممن يجلس معه أن يتحدث في موضوع غير هذا الموضوع .
وكانت الخطوة الأولى في تحقيق هذا الحلم هو السيطرة على مضيق "البسفور" حتى يمنع "القسطنطينية" من وصول أية مساعدات لها من أوروبا ، فبنى قلعة كبيرة على الشاطئ الأوروبي من مضيق "البسفور" ، واشترك هو بنفسه مع كبار رجال الدولة في أعمال البناء ، ولم تمض ثلاثة أشهر حتى تم بناء القلعة التي عرفت بقلعة "الروم" ، وفى مواجهتها على الضفة الأخرى من "البسفور" كانت تقف قلعة "الأناضول" ، ولم يعد ممكنًا لأي سفينة أن تمر دون إذن من القوات العثمانية .
وفى أثناء ذلك نجح مهندس نابغة أن يصنع للسلطان "محمد الفاتح" عددًا من المدافع ، من بينها مدفع ضخم عملاق لم يُرَ مثله من قبل ، كان يزن (700) طن، وتزن القذيفة الواحدة (1500) كيلو جرام، وتسمع طلقاته من مسافات بعيدة ، ويجره مائة ثور يساعدها مائة من الرجال الأشداء وأطلق على هذا المدفع العملاق اسم المدفع السلطاني .
· فتح "القسطنطينية" .. وتحقق البشارة :
وبعد أن أتم السلطان "محمد" استعداداته زحف بجيشه البالغ (265) ألف مقاتل من المشاة الفرسان ومعهم المدافع الضخمة حتى فرض حصاره حول "القسطنطينية" ، وبدأت المدافع العثمانية تطلق قذائفها على أسوار المدينة الحصينة دون انقطاع ليلاً أو نهارًا ، وكان السلطان يفاجئ عدوه من وقت لآخر بخطة جديدة في فنون القتال حتى تحطمت أعصاب المدافعين عن المدينة وانهارت قواهم .
وفى فجر يوم الثلاثاء الموافق (20من جمادى الأولى 827 ﻫ = 29 من مايو 1453 م) نجحت القوات العثمانية في اقتحام الأسوار ، وزحزحة المدافعين عنها بعد أن عجزوا عن الثبات ، واضطروا للهرب والفرار ، وفوجئ أهالي "القسطنطينية" بأعلام العثمانيين ترفرف على الأسوار ، وبالجنود تتدفق إلى داخل المدينة كالسيل المتدفق .
وبعد أن أتمت القوت العثمانية فتح المدينة دخل السلطان "محمد"- الذي أطلق عليه من هذه اللحظة "محمد الفاتح" – على ظهر جواده في موكب عظيم وخلفه وزراؤه وقادة جيشه وسط هتافات الجنود التي تملأ المكان :
"ما شاء الله ، ما شاء الله ، يحيا سلطاننا ، يحيا سلطاننا "
ومضى موكب السلطان حتى بلغ كنيسة "آيا صوفيا" حيث تجمع أهالي المدينة ، وما إن علموا بوصول السلطان "محمد الفاتح" حتى خرُّوا ساجدين وراكعين ، ترتفع أصواتهم بالبكاء والصراخ لا يعرفون مصيرهم وماذا سيفعل معهم السلطان "محمد الفاتح" .
ودرس "محمد الفاتح" الرياضيات والفلك وفنون الحرب والقتال ، وإلى جانب ذلك تعلم اللغات العربية والفارسية واللاتينية واليونانية ، وخرج مع أبيه في معاركه وفتوحاته .
ثم ولاه أبوه إمارة صغيرة ؛ ليتدرب على إدارة شئون الدولة تحت إشراف عدد من كبار علماء عصره ، وهو ما أثر في تكوين شخصية الأمير الصغير ، وبناء تفكيره بناءً إسلاميًّا صحيحًا .
وقد نجح الشيخ "آق شمس الدين "- وكان واحدًا ممن قام على تربية "محمد الفاتح" وتعليمه – في بث روح الجهاد والتطلع إلى معالي الأمور في نفس الأمير الصغير، وأن يلمح له بأنه المقصود ببشارة النبي – صلى الله عليه وسلم- .. وكان لهذا الإيحاء دور كبير في حياة "محمد الفاتح" فنشأ محبًّا للجهاد ، عالي الهمة والطموح ، واسع الثقافة ، وعلى معرفة هائلة بفنون الحرب والقتال .
· توليه الحكم .. والعمل على تحقيق البشارة :
وبعد وفاة أبيه السلطان "مراد الثاني" في (5 من المحرم 852 ﻫ = 7 من فبراير 145 م) تولى "محمد الفاتح" عرش الدولة العثمانية ، وكان شابًّا فتيًّا في العشرين من عمره ، ممتلأ حماسًا وطموحًا ، يفكر في فتح مدينة "القسطنطينية" عاصمة الدولة البيزنطية .. وسيطر هذا الحلم على مشاعر "محمد الفاتح" ، فأصبح لا يتحدث إلا في أمر الفتح ، ولا يأذن لأحد ممن يجلس معه أن يتحدث في موضوع غير هذا الموضوع .
وكانت الخطوة الأولى في تحقيق هذا الحلم هو السيطرة على مضيق "البسفور" حتى يمنع "القسطنطينية" من وصول أية مساعدات لها من أوروبا ، فبنى قلعة كبيرة على الشاطئ الأوروبي من مضيق "البسفور" ، واشترك هو بنفسه مع كبار رجال الدولة في أعمال البناء ، ولم تمض ثلاثة أشهر حتى تم بناء القلعة التي عرفت بقلعة "الروم" ، وفى مواجهتها على الضفة الأخرى من "البسفور" كانت تقف قلعة "الأناضول" ، ولم يعد ممكنًا لأي سفينة أن تمر دون إذن من القوات العثمانية .
وفى أثناء ذلك نجح مهندس نابغة أن يصنع للسلطان "محمد الفاتح" عددًا من المدافع ، من بينها مدفع ضخم عملاق لم يُرَ مثله من قبل ، كان يزن (700) طن، وتزن القذيفة الواحدة (1500) كيلو جرام، وتسمع طلقاته من مسافات بعيدة ، ويجره مائة ثور يساعدها مائة من الرجال الأشداء وأطلق على هذا المدفع العملاق اسم المدفع السلطاني .
· فتح "القسطنطينية" .. وتحقق البشارة :
وبعد أن أتم السلطان "محمد" استعداداته زحف بجيشه البالغ (265) ألف مقاتل من المشاة الفرسان ومعهم المدافع الضخمة حتى فرض حصاره حول "القسطنطينية" ، وبدأت المدافع العثمانية تطلق قذائفها على أسوار المدينة الحصينة دون انقطاع ليلاً أو نهارًا ، وكان السلطان يفاجئ عدوه من وقت لآخر بخطة جديدة في فنون القتال حتى تحطمت أعصاب المدافعين عن المدينة وانهارت قواهم .
وفى فجر يوم الثلاثاء الموافق (20من جمادى الأولى 827 ﻫ = 29 من مايو 1453 م) نجحت القوات العثمانية في اقتحام الأسوار ، وزحزحة المدافعين عنها بعد أن عجزوا عن الثبات ، واضطروا للهرب والفرار ، وفوجئ أهالي "القسطنطينية" بأعلام العثمانيين ترفرف على الأسوار ، وبالجنود تتدفق إلى داخل المدينة كالسيل المتدفق .
وبعد أن أتمت القوت العثمانية فتح المدينة دخل السلطان "محمد"- الذي أطلق عليه من هذه اللحظة "محمد الفاتح" – على ظهر جواده في موكب عظيم وخلفه وزراؤه وقادة جيشه وسط هتافات الجنود التي تملأ المكان :
"ما شاء الله ، ما شاء الله ، يحيا سلطاننا ، يحيا سلطاننا "
ومضى موكب السلطان حتى بلغ كنيسة "آيا صوفيا" حيث تجمع أهالي المدينة ، وما إن علموا بوصول السلطان "محمد الفاتح" حتى خرُّوا ساجدين وراكعين ، ترتفع أصواتهم بالبكاء والصراخ لا يعرفون مصيرهم وماذا سيفعل معهم السلطان "محمد الفاتح" .
800 ஆண்டுகளுக்கும்
மேலாக அண்ணல் நபிகளாரின் ஓர் சோபனத்தைப் பெற்றிட வேண்டும் என்கிற முனைப்போடு பல இஸ்லாமிய
ஆட்சியாளர்கள் முயன்று அது கிடைக்காமல் போனதும், அந்த சோபனத்திற்கு
சொந்தக்காரர் யார் என ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகும் எதிர்பார்த்த வரலாற்று நிகழ்வொன்று
ஹிஜ்ரி 857 –இல் சாத்தியமானது.
அந்த சோபனத்தைச் சொந்தமாக்கியவர்
உஸ்மானிய கலீஃபாவான முஹம்மது இப்னு ஸுல்தான் என்று அறியப்படுகின்ற முஹம்மத் அல் ஃபாத்திஹ் (ரஹ்) அவர்கள்.
அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு முறை நாங்கள் நபி {ஸல்} அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது, காண்ஸ்டாண்டி நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றி
கொள்ளப்படும்? என்று வினவினோம். அதற்கு,
மாநபி {ஸல்} அவர்கள்
“ஹிர்கலின் நகரம் காண்ஸ்டாண்டி நோபிள் முதலில் வெற்றி கொள்ளப்படும்.
படைத் தளபதிகளில் மிகச் சிறந்தவர். அந்த நகரத்தை
வெற்றி கொள்ளும் தளபதியே! படைகளில் மிகச் சிறந்த படையும் அதுவே!”
என கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் 6645 )
காண்ஸ்டாண்டி
நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை
அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது.
அன்று இறுதி தூதரின் காலத்தில் பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம்
பரந்த
இரண்டு கிளைகளைக் கொண்டு
அமைந்திருந்தது
. ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட
மேற்கு
ராஜ்யம். இன்னொன்று; காண்ஸ்டாண்டி நோபிளைத்
தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான்
பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது.
இந்தச் சோபனத்தைப்
பெற்றிட வேண்டும் என்ற நோக்கில் முதலாவதாக முயற்சி மேற்கொண்டவர்கள் கலீஃபா முஆவியா (ரலி) அவர்கள்.
ஸுஃப்யான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் தலைமையில் அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர்
(ரலி), அபூஅய்யூபுல் அன்ஸாரி (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நனித்தோழர்களைக் கொண்ட
படையை அனுப்பி வைத்தார்கள்.
எனினும் அந்த நகரின்
கோட்டைச் சுவரைக் கூட அந்த படையால் நெருங்க முடியாமல் போனது. அங்கு நடை பெற்ற போரில் வெற்றியும் கிடைக்கவில்லை. அபூஅய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள்
அந்த போரில் ஷஹீத் ஆனார்கள். அந்த கோட்டையின் அருகேயே நல்லடக்கமும்
செய்யப்பட்டார்கள்.
அதன் பின்னர் ஹிஜ்ரி 54 –இல் கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிக்கின் காலத்தில் தளபதி
மூஸா இப்னு நுஸைர் அவர்களும், ஹிஜ்ரி 99 –இல் ஸுலைமான் இப்னு அப்துல் மலிக்கின் காலத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
உமைய்யாக்கள் ஆட்சியின்
போதும், அப்பாஸியர்கள் ஆட்சியின் போதும் பெரும்,
பெரும் முயற்சிகள் படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் தோல்வியே
மிஞ்சியது.
அடுத்து சல்ஜூக்கிய
சாம்ராஜ்யம் முயன்று அதுவும் தோல்வியில் முடிந்தது.
பின்னர், நீண்ட காலத்திற்குப் பின்னர் உஸ்மானியப் பேரரசு அந்த சோபனத்தை
நோக்கி நகர்ந்தது.
ஆம்! 1393 –இல் உஸ்மானிய்ய பேரரசின் கலீஃபா பாயஸீத் காண்ஸ்டாண்டி நோபிளை
முற்றுகையிட்டார்.
எனினும், ஐரோப்பியர்கள், மங்கோலியர்கள் ஆகியோரின்
உதவியோடு பைஸாந்தியப் பேரரசன் முஸ்லிம் படையைத் தோற்கடித்தான். இதில் கலீஃபா பாயஸீத் (ரஹ்) ஷஹீத் ஆனார்கள்.
கலீஃபா பாயஸீதின் மரணத்தைத்
தொடர்ந்து அவரது மகன் முஹம்மது இப்னு பாயஸீத் ( 1 –ஆம் முஹம்மது
), அவர்களும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் முராத்
இப்னு முஹம்மது ( 2 –ஆம் முராத் ) அவர்களும்
ஆட்சி செய்தனர்.
1432 –இல்
2 ஆம் முராத் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. முஹம்மத் என்று பெயரிட்ட 2 ஆம் முராத் ஆக் ஷம்சுத்தீன்
என்கிற மாபெரும் மேதையிடம் தன் மகனை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
தன் மகனார் முஹம்மத்
பார்க்கும் இடம் அனைத்திலும் பெருமானார் {ஸல்}
அவர்களின் சோபனம் நிறைந்த அந்த நபி மொழியை இடம் பெறச் செய்து,
அவரை நாள் தோரும் உற்சாகமூட்டிக் கொண்டே இருப்பார் தந்தை 2 ஆம் முராத் அவர்கள்.
ஆக் ஷம்சுத்தீன் அவர்கள்
முஹம்மத் அவர்களை குர்ஆனில் தேர்ச்சி பெற்றவராகவும், ஹாஃபிழாகவும்,
ஹதீஸ் கலை, ஃபிக்ஹ் கலை, வரலாறு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவராக ஆக்கினார்.
அத்தோடு, அரபு, பாரசீகம், லத்தீன்,
கிரேக்கம் துருக்கி ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவராகவும் ஆக்கினார்.
முறையான போர்ப்பயிற்சிகள் வழங்கி மாபெரும் மதியூகியாகவும், வீரனாகவும் மாற்றினார்கள்.
அன்பும், பண்பும், மார்க்கப்பற்றும் கொண்டவராகவும்
முஹம்மத் அவர்களை உருவாக்கி 2 ஆம் முராத் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அப்போது, முஹம்மத் அவர்களுக்கு வயது 12 தான் ஆகியிருந்தது.
ஒரு ஆட்சியாளருக்கு உரித்தான அத்துனை அம்சங்களும் தம் மகனுக்கு கிடைத்து
விட்டதாகக் கருதிய மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் முஹம்மதை கலீபாவாக நியமித்து விட்டு அனைத்துப் பொருப்புக் களிலிருந்தும் ஒதுங்கி தூரமான இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார்
இந்நிலையில்,
அரியணையில் அமர்ந்து சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு
உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பு மேற்கொண்டது.
இதை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாகவந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினார்.
தந்தையிடமிருந்து “இப்பொழுது நீ தான் ஆட்சியாளன், படைக்கும் நீயே தலைமை
தாங்கு..! என்னால் வர முடியாது”
என்று பதில் வந்தது.
இதற்கு முஹம்மதின்
பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. “ஆம் நான் தான் ஆட்சியாளன். இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக வந்து படையை வழி நடாத்துங்கள் என்று.
ஒருவாராக
தந்தையின் உதவியோடு படையெடுப்பை முறியடித்து வெற்றி வாகை சூடினார் முஹம்மத்.
மீண்டும் 2 ஆம்
முராத் தம் மகனிடம் இருந்து ஆட்சிப் பொறுப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
முஹம்மத் 18 –ஆவது
வயதை அடைந்த போது உஸ்மானியப் பேரரஸின் 8 –வது ஆட்சியாளராக தந்தை 2 –ஆம் முராதால்
நியமிக்கப்படுகின்றார்.
நீண்ட கால போர்த்திட்டம் தீட்டி 1435 –ஆம்
ஆண்டு ஹிஜ்ரி 857 –இல் 2,65000 இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம் வீரர்களோடு
காண்ஸ்டாண்டி நோபிளை நோக்கி படையெடுப்பை நடத்தினார்.
சுமார் 53
நாட்களாக கடல் வழியாகவும், தரை வழியாகவும் மிகப் பெரிய முற்றுகையிட்டு மகத்தான
வெற்றி வாகை சூடினார்.
ஹிஜ்ரி 52 –இல்
முஆவியா (ரலி) அன்ஹு அவர்களிடம் இருந்து துவங்கிய சோபனத் தாகத்திற்கு வெற்றி வாகை
சூடி சுமார் 805 ஆண்டு கால தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
வரலாற்றில்
முஹம்மத் அல் ஃபாத்திஹ் என்ற நிரந்தர புகழுக்குச் சொந்தக் காரராக மாறிப்போனார்.
இந்த வெற்றியின்
பிண்ணனியில் முஹம்மத் அவர்களின் தந்தை, ஆக் ஷம்சுத்தீன் (ரஹ்) அவர்களின் மகத்தான
பங்களிப்பும், 800 ஆண்டு கால தொடர் முயற்சியும் உழைப்பும், அர்ப்பணிப்பும்,
தியாகங்களும் இருக்கின்றது. நாம் வாழும்
இந்த உலகின் 100 ஆண்டு கால ஏகாதிபத்திய, மேற்குலக, ஃபாஸிச சக்திகளுக்கு எதிரான
போராட்டத்தில் இந்த உம்மத்திற்கு மகத்தான வெற்றியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்க
வேண்டுமானால் நாமும் வெற்றிப் பாதையை நோக்கி முயற்சியும், உழைப்பும்,
அர்ப்பணிப்பும், தியாகங்களும் செய்திட முயற்சிக்க வேண்டும்.
மேற்கூறிய சாதனையை
செய்த உதுமானியப் பேரரசு உருவாகுவதற்கு முன்பாக இஸ்லாமிய உலகு கண்ட நெருக்கடியும்,
சோதனையும் சொல்லி மாளாது.
உஸ்துல் காபா, அல்
காமில் ஃபித் தாரீக் போன்ற வரலாற்று நூற்களை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கிய வரலாற்று
ஆசிரியர் அந்த சோதனையான காலத்தில் வாழ்ந்து தன் சொந்த அனுபவத்தை வரலாற்று
நூற்களில் இப்படி பதிவு செய்தார்கள்.
قال
ابن كثير : (( ومالوا على البلد فتلوا جميع من قدروا عليه من الرجال والنساء
والولدان والمشايخ والكهول والشبان ، ودخل كثير من الناس في الآبار وأماكن الحشوش
، وقني الوسخ ، وكمنوا كذلك أياماً لا يظهرون .
وكان الجماعة من الناس يجتمعون إلى الخانات ويغلقون عليهم الأبواب فتفتحها التتار إما بالكسر وإما بالنار ، ثم يدخلون عليهم فيهربون منعهم إلى أعالي الأمكنة فيقتلونهم بالأسطحة ، حتى تجري الميازيب من الدماء في الأزقة ، فإنا لله وإنا إليه راجعون .
وكذلك في المساجد والجوامع والربط ، ولم ينج منهم أحد سوى أهل الذمة من اليهود والنصارى ومن إلتجأ إليهم وإلى دار الوزير ابن العلقمي الرافضي ، وطائفة من التجار أخذوا لهم أماناً ، بذلوا عليه أموالاً جزيلة حتى سلموا وسلمت أموالهم .
وعادت بغداد بعدما كانت أنس المدن كلها كأنها خراب ليس فيها إلا القليل من الناس ، وهم في خوف وجوع وذلة وقلة .
وقد اختلف الناس في كمية من قتل ببغداد من المسلمين في هذه الوقعة ؛ فقيل ثمانمائة ألف ، وقيل ألف ألف وثمانمائة ألف ، وقيل بلغت القتلى ألفي ألف نفس ، فإنا لله وإنا إليه راجعون ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم .
وكان الجماعة من الناس يجتمعون إلى الخانات ويغلقون عليهم الأبواب فتفتحها التتار إما بالكسر وإما بالنار ، ثم يدخلون عليهم فيهربون منعهم إلى أعالي الأمكنة فيقتلونهم بالأسطحة ، حتى تجري الميازيب من الدماء في الأزقة ، فإنا لله وإنا إليه راجعون .
وكذلك في المساجد والجوامع والربط ، ولم ينج منهم أحد سوى أهل الذمة من اليهود والنصارى ومن إلتجأ إليهم وإلى دار الوزير ابن العلقمي الرافضي ، وطائفة من التجار أخذوا لهم أماناً ، بذلوا عليه أموالاً جزيلة حتى سلموا وسلمت أموالهم .
وعادت بغداد بعدما كانت أنس المدن كلها كأنها خراب ليس فيها إلا القليل من الناس ، وهم في خوف وجوع وذلة وقلة .
وقد اختلف الناس في كمية من قتل ببغداد من المسلمين في هذه الوقعة ؛ فقيل ثمانمائة ألف ، وقيل ألف ألف وثمانمائة ألف ، وقيل بلغت القتلى ألفي ألف نفس ، فإنا لله وإنا إليه راجعون ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم .
மங்கோலிய
தாத்தாரியப் படையெடுப்பும்,
சிலுவைப் போர்களும் முஸ்லிம் சமூகத்தை இரத்த வெள்ளத்தில் அமிழ்த்தியது. பாக்தாதில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மாங்கோலியர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டபோது ஈராக்கே இரத்த வெள்ளத்தில் மிதந்தது.
அப்போது உயிர்
வாழ்ந்த இப்னுல் அஸீர் (ரஹ்) என்ற வரலாற்றாசிரியர் தனது
வாலாற்று நூலில் பாக்தாதில் நடந்த கொடுமைகள் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.
حتى قال ابن الأثير _ رحمه الله _ : (( فيا ليت أمي لم تلدني ، وياليتني مت قبل حدوثها وكنت نسياً منسياً )) .
“எனது தாய் என்னைப்
பெறாமல் இருந்திருக்கக்கூடாதா? எனது கண்களால்
இக்கொடுமைகளைக் காணாமல் இருந்திருக்க வேண்டுமே“ என்று.
ஆனாலும், அந்த
வீழ்ச்சியிலிருந்து முஸ்லிம் சமுதாயம் மீண்டும் ஒருமுறை அல்லாஹ்வின் உதவியால் எழுச்சி
பெற்று எழுந்தது. உஸ்மானியப் பேரரசு என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யம் ஒன்றைக் கட்டியெழுப்பியது.
அந்த எழுச்சி
என்பது உலக நிலப்பரப்பின் அரைவாசி அதன் ஆதிக்கத்தின் கீழிருந்தது. உலகில் முஸ்லிம் என்ற பெயரைத் தாங்கியவர்கள் பெரும் மரியாதைக்குரியவர்களாக நோக்கப்பட்டார்கள். பொருளாதாரச் செழிப்பும் நீதியும் சமத்துவமும் உலகை ஆண்டது. இது பல நூற்றாண்டுகள் நீடித்தது.
முஸ்லிம் சமுதாயம்
பலவீனமடையும். நோய்வாய்ப்படவும் செய்யும். ஆனால் அது முற்றாக அழிந்து போய்விட்டதாக, வீழ்ச்சியின் அதாலபாதாளத்தில் அது வீசப்பட்டு காணாமல்
போனதாக வரலாற்றில் எங்கும் பார்த்திட இயலாது.
வீழ்ச்சி காணும் போதெல்லாம்மீண்டும் எழுச்சியின் சிகரங்களை அது தொட்டிருக்கிறது.
பலவீனம் அடையும்
போதெல்லாம் மீண்டும் அது சக்தி பெற்று, அதிகார சக்தியாக
ஆட்சிபீடத்தில் பல நூற்றாண்டு காலம் அமர்ந்திருக்கிறது.
இந்த வரலாற்று
நியதி இறந்த காலத்திற்கு மட்டும் உரியதல்ல. அது
நிகழ்காலத்தையும்,
எதிர்காலத்தையும் தழுவியது.
எனவே, இறை உதவியை
பெறுவதற்கும், வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கும் உண்டான தகுதியை வளர்த்துக்
கொள்வோம்.
முயற்சி, உழைப்பு,
ஒருங்கிணைந்த உறுதி, பொறுமை, இறை நம்பிக்கை, அர்ப்பணிப்பு, தியாகம் போன்ற
வெற்றிக்கான அரும்பண்புகளைக் கொண்ட பெரும் சமுதாயமாக அல்லாஹ் நம்மை
ஆக்கியருள்வானாக!
மேற்குலக
சூழ்ச்சிகள், இஸ்ரேலிய காழ்ப்புணர்ச்சிகள், ஃபாஸிசத்தின் சதிகள் என
எல்லாவற்றிலிருந்தும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம் உம்மத்திற்கும் அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நிரந்தரமான வெற்றியை, ஈடேற்றத்தை தந்தருள் புரிவானாக!
ஆமீன்! ஆமீன்!!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
Masha allah
ReplyDeleteArumayana korvai Allah thangaluku Ella vagayilum barakath seivanaga ameen
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் அருமை நல்ல பாதுகாக்கப்பட வேண்டிய தகவள்
ReplyDeletemasha allah காலத்திற்கு தேவையான தகவல்கள் பாரகல்லாஹ்.படிக்கும் போதே ஒரு உத்வேகத்தை தருகிறது. alhamdhu lillah
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePinnitinga haz
ReplyDeletealhamthulillah
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteما شاء الله
ReplyDelete