உலகின் உன் பங்கை மறக்காதே!!!
இன்று முஸ்லிம்
சமூகத்தின் தேவைகள் அதிகரித்து
இருக்கிறது. முஸ்லிம்கள் பெருவாரியாக
வசிக்கும் சில ஊர்களில்
டிரஸ்ட்கள் தோற்றுவிக்கப்பட்டு நலப்பணிகள்
பல நடைபெற்று வருகின்றது.
கல்வி, மருத்துவம்,
திருமணம், மதரஸா என
பல்வேறு வகையான தேவை
நிமித்தமாக நாள் தோரும்,
வாரம் தோரும் பள்ளிவாசல்களிலும்,
தெருக்களிலும், செல்வந்தர்களின் வீடுகள்,
வணிக வளாகங்களிலும் “நான்
இன்ன தேவைக்காக வந்திருக்கின்றேன்”
அல்லாஹ்விற்காக உதவி செய்யுங்கள்!
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்
செய்வான்!! என்ற கோஷங்கள்
மிக அதிகமாகவே எழுப்பப்படுகின்றது.
இதே நேரத்தில்
ஏமாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்ட
சிலர் போலியான ஆதாரங்களைக்
காட்டி இல்லாத மதரஸாவிற்கு
வசூல், இருக்கும் மதரஸாவை
பெரிதாகக் காட்டி வசூல்,
குமர் பெயரைச் சொல்லி
வசூல், மருத்துவ தேவையைச்
சொல்லி வசூல் என
பெரிய அளவிளான பிழைப்பையே
நடத்தி வருகின்றனர்.
மொத்தத்தில் சமுதாயத்தில்
யாசிப்பவர்கள் பெருகி விட்டதாகவே
சொல்லத் தோன்றுகிறது.
வெவ்வேறு பெயர்கள்,
வெவ்வேறு தேவைகள் ஆனால்
யாசகம் மட்டுமே நோக்கமாகக்
கொண்டு ஊர் ஊராக
சுற்றி வருகின்றனர்.
இன்னொரு கோணத்தில்
பார்த்தால் முஸ்லிம் சமூகத்தின்
பொருளாதார வளம் பெருமளவில்
சுரண்டப்படுகிறது என்று
சொன்னால் அது மிகையல்ல.
அடுத்து மார்க்க
மாயை பூசி அரசியல்,
அதிகாரம் எனும் ஆசையை
காட்டி மாதத்திற்கு ஒரு
இயக்கத்தின் மாநாடு என
அதெற்கென தனியாக வசூல்.
இன்னொரு புறம்
நல்லா இருக்கிற பள்ளிவாசலை
இடித்து புதிதாக கட்ட
அல்லது டைல்ஸ், மார்பிள்ஸ்
ஒட்ட என ஆடம்பர
வசூல்.
ஒரு புறம்
உழைக்காத யாசித்து சாப்பிடுகிற
ஏமாற்றுப் பேர்வழிகளின் ஒரு
கூட்டம். இன்னொரு புறம்
தர்மம், அழகிய கடன்,
ஸதகத்துன் ஜாரியா எனும்
பெயரால் கஷ்டப்பட்டு, உழைத்து
சம்பாதிக்கின்றவர்கள் ஏமாற்றப்படுகிற அவலநிலை.
யாருக்கு உதவி
செய்ய வேண்டும்? என்று
செல்வந்தர்களும், தர்ம சிந்தனை
கொண்டவர்களும் தெரிந்தும் அறிந்தும்
வைத்திருப்பது காலத்தின் கட்டாயம்
ஆகும்.
அது போன்று
உழைக்காமல், யாசித்து, ஏமாற்றிப்
பிழைத்து வயிறு வளர்ப்பதால்
ஏற்படும் ஆபத்துகள் ஈருலகிலும்
ஏற்படுகிற நஷ்டங்கள், அல்குர்ஆனும்,
ஸுன்னாவும் கூறுகிற எச்சரிக்கைகள்
ஆகியனவற்றை ஏமாற்றுப் பேர்வழிகளின்
கவனத்திற்கு எடுத்துச் சொல்வதும்
காலத்தின் அவசியம் ஆகும்.
செல்வம், பொருளாதாரம்
அதன் தேவை, அதன்
உற்பத்தி அதை நோக்கிய
முக்கியத்துவம் ஆகியவற்றையும் இஸ்லாத்தின்
ஒளியில் அறிந்து கொள்வதும்,
அறிந்து கொள்ளத் தூண்டுவதும்
காலத்தின் கட்டாயம் ஆகும்.
உலக
வாழ்வு மிகவும் முக்கியமானது….
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ
فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ
مَا كَانُوا يَعْمَلُونَ (97)
“இறைநம்பிக்கை கொண்ட
நிலையில் நற்செயல் புரிகிற
ஆணாயினும், பெண்ணாயினும் சரி
அவரை இந்த உலகில்
தூய,
அழகிய வாழ்வு வாழச்
செய்வோம். மறுமையிலும் அத்தகையோர்க்கு அவர்களின் நல்லறங்களுக்கேற்ப நாம் அழகிய
கூலியை வழங்குவோம்”. ( அல்குர்ஆன்:
16: 97 )
وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً
وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (201) أُولَئِكَ لَهُمْ
نَصِيبٌ مِمَّا كَسَبُوا وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ (202)
“இன்னும் சிலர்
“எங்கள் இரட்சகா! எங்களுக்கு
இந்த உலகிலும் நலவானதை
வழங்குவாயாக! மறுமையிலும் நலவானதை
வழங்குவாயாக! மேலும், நரக
வேதனையிலிருந்து எங்களை
காத்தருள்வாயாக!” என்று பிரார்த்திக்கின்றார்கள்.
இத்தகையவர்களுக்கு அவர்கள்
எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப
ஈருலுகிலும் நலவுகள் உண்டு.
மேலும், அல்லாஹ் கணக்கு
வாங்குவதில் மிகவும் விரைவானவன்
ஆவான்”. ( அல்குர்ஆன்:
2: 201, 202 )
மேற்கூறிய இரண்டு
இறைவசனங்களும் உலக வாழ்வு
அழகாக அமைய துஆச்
செய்ய வேண்டும் என்றும்,
ஈமானிய அடிப்படையில் அமையப்
பெற்றிருக்கிற ஒரு மனிதரின்
வாழ்வு மிக தூயதாக,
அழகானதாக அமையும் என்ற
அல்லாஹ்வின் சோபனமும் உலக
வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
உலக வாழ்வின்
முக்கியத்துவத்தை பின்வரும்
இறைவசனம் இவ்வாறு கூறும்…
وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا
“இந்த உலகின்
உனது பங்கை நீ
மறந்து விடாதே!”. ( அல்குர்ஆன்:
28: 77 )
இவ்வுலகில் பிறந்து
விட்ட மனிதன் ஆணாயினும்,
பெண்ணாயினும் அல்லது மூன்றாம்
பாலினம் ஆயினும் அல்லது
மாற்றுத்திறனாளியாயினும் மரணம்
வரும் வரை வாழ்ந்து
தான் ஆக வேண்டும்.
எனவே, வாழ்தல்
என்பது மனித வாழ்க்கையில்
மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
அல்லாஹ் இந்த
உலகில் நாம் வாழ்வதற்கு
தேவையானவற்றை நாம் கேட்காமலே
அருட்கொடையாக வழங்கியிருக்கின்றான்.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
“நீங்கள் அனுபவித்துக்
கொண்டிருக்கும் அருட்கொடைகள் எல்லாம்
அல்லாஹ் விடமிருந்து வந்தவை
தான்”. ( அல்குர்ஆன்:
16: 53 )
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
“அல்லாஹ்வின் அருட்கொடைகளை
நீங்கள் எண்ணிவிட முயன்றால்
அவற்றை உங்களால் ஒரு
போதும் எண்ணிவிட முடியாது”. ( அல்குர்ஆன்: 16: 17 )
உலக வாழ்விற்கு
இன்றியமையாதவைகள் பல
அதில் ஒன்று பொருளாதாரம். இன்னும் சொல்லப்போனால்
மனித வாழ்வென்பது அழகு
பெறுவது கூட அதன்
மூலம் தான் என்றால்
அதுவும் மிகையல்ல.
الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا
“பொருளாதாரமும், பிள்ளைகளும்
உலக வாழ்க்கையின் அலங்காரமாகும்”.
( அல்குர்ஆன்:
18: 46 )
பொருளாதாரத்தின் முக்கியத்துவம்…
உலகின் முதல் இறையில்லமாகிய
கஃபத்துல்லாஹ்வை மக்களின் வாழ்க்கையை சீராக்கும் கேந்திரமாக அல்லாஹ் வர்ணிக்கின்றான்.
அதே வார்த்தையைக் கொண்டே பொருளாதாரத்தையும் அல்லாஹ் வர்ணிக்கின்றான்.
جَعَلَ
اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِلنَّاسِ
“அல்லாஹ் கண்ணியமிக்க
கஃபதுல்லாஹ்வை மக்களுக்கு (வாழ்க்கை சாதனமாக) கேந்திரமாக அமைத்தான்”. ( அல்குர்ஆன்: 5: 97 )
وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّهُ
لَكُمْ قِيَامًا وَارْزُقُوهُمْ فِيهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا
مَعْرُوفًا (5)
“உங்களுடைய
வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கேந்திரமாக அல்லாஹ் உங்களுக்கு
வழங்கியுள்ள பொருள்களை விவரமறியாதவர் (அனாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள்...” ( அல்குர்ஆன்: 4: 5 )
இஸ்லாத்தின் துவக்க
நாட்களில் இரவுத்தொழுகை கட்டயாமாக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தச் சட்டம்
விலக்கிக் கொள்ளப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறும் அல்குர்ஆன்
إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ
اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ
يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ
فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ
مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ
“பொருளீட்டுவதற்காக பூமியில் அலைந்து திரிந்து
பயணம் செய்வதையும் ஒரு காரணமாக கூறுகிறது. வேறு சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி
(வியாபாரத்திற்காக) பூமியில் பயணம் செய்கிறார்கள் ( அல்குர்ஆன்: 73: 20 ) என்றும்
கூறுகின்றது.
சுயமரியாதை மிகவும் முக்கியம்...
பொருளாதாரத்தைத்
தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும்.
சுயமரியாதையை
விட்டால்தான் பணம் கிடைக்கும் என்றால் பணத்தை அலட்சியம்
செய்து விட்டு சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுரை கூறுகிறது.
நபி (ஸல்)
அவர்களின் ஆரம்பக் கட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுயமரியாதையும் இடம்
பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
ஹெர்குலிஸ் மன்னர் நபி {ஸல்} அவர்களின் அப்போதைய எதிரியாக இருந்த அபூஸுஃப்யானிடம் நபி
(ஸல்) அவர்களின் அறிவுரைகள் என்ன? என்று விசாரித்தபோது “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்;
அவனுக்கு எதனையும், எவரையும் இணையாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக் கால) கூற்றுக்களையெல்லாம் விட்டுவிடுங்கள்! என்று கூறுகிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்
கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயமரியாதையைப் பேணுமாறும் உறவுகளைப் பேணும்படியும்
எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று கூறினார். ( நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி, நூல் : புகாரி 7
)
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் தமது ஆரம்பகாலப் பிரச்சாரத்தின்போது முன்னுரிமை அளித்த அம்சங்களில் சுயமரியாதையைப் பேணுவதும் ஒரு அம்சமாக இருந்ததை இந்த வரலாற்று நிகழ்ச்சியில் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
6470 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا
شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ
اللَّيْثِيُّ، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، أَخْبَرَهُ: أَنَّ أُنَاسًا مِنَ
الأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ
يَسْأَلْهُ أَحَدٌ مِنْهُمْ إِلَّا أَعْطَاهُ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ، فَقَالَ
لَهُمْ حِينَ نَفِدَ كُلُّ شَيْءٍ أَنْفَقَ بِيَدَيْهِ: مَا يَكُنْ عِنْدِي مِنْ
خَيْرٍ لاَ أَدَّخِرْهُ عَنْكُمْ، وَإِنَّهُ مَنْ يَسْتَعِفَّ يُعِفَّهُ اللَّهُ،
وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ،
وَلَنْ تُعْطَوْا عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ
அன்சாரிகளில்
சிலர் நபி (ஸல்)
அவர்களிடம் உதவி கேட்டார்கள். கேட்ட யாருக்குமே நபிகள்
நாயகம் (ஸல்)
அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து
விட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி (ஸல்) அவர்கள் என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை.
(இருப்பினும்)
யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ்
சுயமரியாதையுடன் வாழச் செய்வான். யார் (இன்னல்களைச்) சகித்துக்
கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். யார் பிறரிடம் தேவையாகாமல் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை உங்களுக்கு வழங்கப்படப் போவதில்லை” என்று கூறினார்கள்.
( அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நூல் : புகாரி 6470,
1469 )
சுயமரியாதையை விட
பணம்தான் பெரிது என்ற எண்ணம்தான் மனிதனை யாசகம் கேட்பவனாகவும்,
மனிதர்களிடம் கையேந்தக் கூடியவனாகவும் ஆக்கிவிடுகிறது. எனவேதான் யாசகம் கேட்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
சுயமரியாதை விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாத மாநபி {ஸல்}
لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة نزل على
أبي أيوب رضي الله عنه سنةً أو نحوها، ثم انتقل إلى منازل حارثة بن النعمان رضي
الله عنه، فلما تزوج عليٌ فاطمة قال رسول الله صلى الله عليه وسلم لعلي أطلب
منزلاً، فطلب علي منزلاً فأصابه مستأخرا عن النبي صلى الله عليه وسلم قليلا، فبنى
بها - أي تزوجها - فيه، فجاء النبي صلى الله عليه وسلم إليها فقال: إني أريد أن
أحوُلك إليّ، فقالت لرسول الله: فكلِمْ حارثة بن النعمان أن يتحول عني، وكانت
لحارثة بن النعمان منازل قرب منازل النبي عليه السلام بالمدينة، وكان كلما أحدث
رسول الله صلى الله عليه وسلم أهلاً تحول له حارثة بن النعمان عن منزلٍ بعد منزل،
فقال النبي صلى الله عليه وسلم: لقد استحييت من حارثة بن النعمان مما يتحول لنا
عن منازله.
فبلغ ذلك حارثة فتحول وجاء
إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله إنه بلغني أنك تحول فاطمة إليك،
وهذه منازلي وهي أسقب بيوت بنـي النجار بك، وإنما أنا ومالي لله ولرسوله، والله يا
رسول الله المالُ الذي تأخذ مني أحبُ إليّ من الذي تَدَع، فقال رسول الله: صدقت،
بارك الله عليك
فحوّلها رسول الله إلى بيت حارثة.
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த ஆரம்பத்தில்
சில மாதங்களாக அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கினார்கள்.
அது அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே அதிக
எண்ணிக்கையில் வீடுகளைக் கொண்டிருந்த ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களிடம் தங்களின் சிரமம் குறித்து
சொல்லி, மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே இருக்கிற
வீடுகளில் ஒன்றை தாம் தங்கி இருக்கும் வீட்டை பெற்றுக் கொண்டு, பகரமாகத் தருமாறு கோரினார்கள்.
அதற்கு, ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தங்களுடைய வீடுகளில்
பெருமானாருக்கு எது பிரியமாக இருக்கின்றதோ அதை எடுத்துக் கொள்ளுமாறு கூறி, தங்களின் ஒரு வீட்டைக் கொடுத்தார்கள்.
இந்நிலையில், அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது.
பாத்திமா (ரலி) அவர்களது வீடு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருந்து வந்தது.
ஒரு தடவை பாத்திமா (ரலி) அவர்களிடம் அண்ணலார் ”உனது வீடு, எனக்குச் சமீபத்தில் இருக்க வேண்டும் என்று எனது மணம் நாடுகின்றது!” என்று கூறினார்கள்.
தந்தையே! ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் வீடு உங்களுக்கு அருகில் தானே
இருக்கின்றது. எனது வீட்டுக்கு பதிலாக அவருடைய வீட்டில் ஒன்றை எனக்குக் கொடுக்கும்
படி தாங்கள் அவரிடம் கூறுங்களேன்!” என பாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதற்கு முன்பொரு தடவையும், அவருடைய வீட்டில் ஒன்றை இவ்வாறு
மாற்றியுள்ளேன். இப்பொழுது மீண்டும் அவ்வாறு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது!
என்றார்கள் நபி {ஸல்}
அவர்கள்.
ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுக்கு, நபி {ஸல்} அவர்கள் இவ்வாறு கூறியச் செய்தி எட்டியதும், உடனே ஓடோடி அண்ணலாரின் சமூகம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே!, பாத்திமா (ரலி) அவர்களுடைய வீடு உங்களுக்கு அருகில் இருக்க வேண்டும், என்று தாங்கள்
பிரியப்படுவதாக எனக்குத் தெரிய வந்தது! இதோ எனது அத்தனை வீடுகளையும் உங்களுக்கு
அர்ப்பணிக்கின்றேன்! இவற்றை விட வேறு எந்த வீடும் தங்களுக்கு அருகில் இல்லை” இவற்றில் எதை விரும்புகின்றீர்களோ அதனை மாற்றிக் கொள்ளுங்கள்!
அல்லாஹ்வின் தூதரே! என்னிடமுள்ள எல்லா பொருட்களுமே, அல்லாஹ்வுக்கும் அவனது தூதரான உங்களுக்கும் உரியனவே! அல்லாஹ்வின் மீது
ஆணையிட்டுக் கூறுகின்றேன்! இவை என்னிடம் இருப்பதை விட தங்களிடம் இருப்பதையே நான்
விரும்புகின்றேன்!” என்று கூறினார்கள்.
இதனைக் கேட்டு மகிழ்ந்த அண்ணலார், “நீர் உண்மையையே கூறுகின்றீர்! என்று கூறி ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுக்கு வாழ்வின் பரக்கத் -
அபிவிருத்திக்காக துஆவும் செய்தார்கள்.
அவ்வாறே தங்கள் விருப்பப்படி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்காக வீட்டை மாற்றிக்
கொண்டார்கள். ( நூல்: தபகாத்துல் குப்ரா லி இமாமி இப்னு ஸஅத் (ரஹ்).. )
உழைப்பே மூல
தனம்…
ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு யாசகம் கேட்டார்.
இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா?” எனக் கேட்டார்கள்.
ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். அவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.
அவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடாரி வாங்கி வாருங்கள் என்றும் கூறி அவரை அனுப்பி வைத்தார்கள்.
கோடாரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி யாசித்த அந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
“நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்குப் பின் எம்மை வந்து நீர்
சந்திக்க வேண்டும்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார்.
பதினைந்து நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து மகிழ்ந்த முகத்தோடு இதற்காக நன்றி கூறினார்.
அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” என்று கூறி நபி (ஸல்) அவர்கள் அவரை அனுப்பி வைத்தார்கள். ( நூல்: திர்மிதீ )
عَنِ
الزُّبَيْرِ بْنِ العَوَّامِ رَضيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم قَالَ
«لأنْ
يَأخُذَ أحَدُكُمْ حَبْلَهُ، فَيَأتِيَ بِحُزْمَةِ الحَطَبِ عَلَى ظَهْرِهِ
فَيَبِيعَهَا، فَيَكُفَّ اللهُ بِهَا وَجْهَهُ، خَيْرٌ لَهُ مِنْ أنْ يَسْألَ
النَّاسَ، أعْطَوْهُ أوْ مَنَعُوهُ».
أخرجه البخاري.
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய
முதுகில் விறகுக்
கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை
விடச்
சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல்
தடுத்து
விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்”. என ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி 1471 அத்தியாயம் : 24.
ஸகாத்தின் சட்டங்கள் )
யாசிப்பதால் ஏற்படும் விளைவுகள்….
عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قالَ: قال رَسُولُ الله صلى
الله عليه وسلم
«مَنْ
سَألَ النَّاسَ أمْوَالَهُمْ تَكَثُّراً، فَإِنَّمَا يَسْألُ جَمْراً،
فَلْيَسْتَقِلَّ أوْ لِيَسْتَكْثِر».
“ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும்
யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக்
கொள்கிறான்’
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன?’
எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஒரு பகல்,
ஓர் இரவு உண்பதற்குப் போதுமான
அளவு” என்று கூறினார்கள் என ஸஹ்ல் பின் ஹன்ழலா (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: அபூதாவூத் )
عَنِ ابْنِ عُمَرَ رَضِي اللهُ عَنْهُمَا قال: قال النَّبِيُّ صلى الله
عليه وسلم
«مَا يَزَالُ الرَّجُلُ يَسْألُ النَّاسَ،
حَتَّى يَأتِيَ يَوْمَ القِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ».
متفق عليه.
“தனக்கு போதுமான அளவு வசதி
இருந்தும் யாசகம் கேட்பவன் மறுமையில், முகத்தில் சதை
பிராண்டப்பட்டவனாக வருவான்’
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: அஹ்மத் )
“நிர்பந்தமின்றி
யாசகம் கேட்பவர் நாளை மறுமையில் எழுப்பப்படும்போது முகம்
சிதைந்தவராக இருப்பார் என்றும் எச்சரித்தார்கள். (ஸுனன்
அபூதாவூது,
ஸுனனுத் திர்மிதி, ஸுனன் நஸாம், இப்னு
மாஜா)
பிறரிடம்
கையேந்துவதிலிருந்தும்,
யாசகம் கேட்பதிலிருந்தும் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஆர்வமூட்டியதுடன் பொறுமையின் சிறப்புகள்,
போதுமென்ற மனப்பான்மையின் சிறப்புகள் பற்றி தங்களின் தோழர்களுக்கு அறிவுரைக் கூறினார்கள்.
நபி {ஸல்} அவர்களின் தோழமையை
பெற்றுத்தரும் செயல்…
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் மீது எப்படி எல்லையில்லாத அன்பையும், நேசத்தையும் கொண்டிருந்தார்களோ அதே அளவிற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களின் வாழ்க்கையை, வார்த்தையை பின்
பற்றுவதிலும் ஸவ்பான்
{ரலி}
அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
”ஒரு நாள் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்}
அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் போது,
“எவரொருவர் வாழ்க்கையில் எந்த தருணத்திலும் எவரிடத்திலும்
எந்த
ஒன்றையும் யாசிக்க மாட்டேன் என பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ, அவருக்கு நான் அவரை சுவனத்தில் கொண்டு சேர்க்கின்ற
பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன்” என்று மாநபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
அப்போது அந்த
சபையில் அமர்ந்திருந்த ஸவ்பான் {ரலி} அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் வாழ்க்கையில் எந்த
தருணத்திலும்,
எவரிடத்திலும் எந்த ஒன்றையும் யாசிக்கவே மாட்டேன் என நான் பொறுப்பு தருகின்றேன்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை
அறிவிக்கின்ற அபுல் ஆலியா {ரஹ்}
அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களின் புனித வஃபாத்திற்குப் பிறகு ஸவ்பான் {ரலி}
அவர்கள் ஷாம் தேசத்திற்கு
சென்றுவிட்டார்கள்.
ஸவ்பான் (ரலி) அவர்கள் மரணிக்கின்ற வரையிலும் அவர்கள் யாரிடத்திலும்
யாசிக்க வில்லை.”
( நூல்:அபூதாவூத், ஹதீஸ் எண்:1763, ஸியரு அஃலா மின் நுபலா, பாகம்:3,
பக்கம்:17. )
அல்லாஹ் நம் அனைவரின் கரங்களையும் கொடுக்கும் கரமாக,
உயர்ந்த கரமாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
Mashaallah
ReplyDelete