Monday, 20 May 2019

ரமழான் சிந்தனை, தொடர் – 16 நன்றியுணர்வு எனும் வாகான அருட்கொடை!

ரமழான் சிந்தனை, தொடர் – 16
ன்றியுணர்வு எனும்  வாகான அருட்கொடை!

 


15 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 16 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அந்நம்ல் அத்தியாயம், அல் கஸஸ் அத்தியாயம் மற்றும் அல் அன்கபூத் அத்தியாயத்தின் 44 வசனங்கள் உட்பட 220  வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய தராவீஹ் தொழுகையோடு 20 ஜுஸ்வுகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.

 அந்நம்ல் அத்தியாயத்தின் 15, 19, 40 ஆகிய இறைவசனங்களின் மூலம் நண்றியுணர்வு என்பது அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கிய வாகான அருட்கொடை என்பதை அல்லாஹ் உணர்த்திக்காட்டுகின்றான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உலகத்தில் நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடைகள் ஏராளம்.

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிவிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது”.             ( அல்குர்ஆன்: 16: 18 )

ஒன்றுமே இல்லாமல் இருந்த நம்மை நம் தந்தையின் இந்திரியத்துளியாக, பின்னர் நம் தாயின் கருவறையில் இரத்தமாக, சதைக்கட்டியாக அதன் பின்னர் அழகிய மழலையாக என்று இன்று வரை பல்வேறு அருட்கொடைகளை வழங்கி அனுபவிக்க வைத்திருக்கின்றான்.

மணம் முடித்த மனைவிக்காக உழைக்கிறோம். பெற்றெடுத்த பெற்றோருக்காக பாடுபடுகிறோம். நமக்கு பிறந்த பிள்ளைச் செல்வங்களுக்காக சேமிக்கிறோம்.

ஆனால், உலகில் நாம் வாழ நமக்காக எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்து காத்து வருகிற இறைவனுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம்?

அருட்கொடைகள் அனுபவிப்பதற்கு மாத்திரமல்ல, அதை அனுபவித்ததற்காக அக மகிழ்வோடு நன்றி செலுத்தவும் தான் என்று இறைமறையில் அல்லாஹ் பல இடங்களில் தெளிவு படுத்துகிறான்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுக்கு வயதான காலத்தில் வழங்கப்பட்ட குழந்தைப் பேற்றை நினைத்து நெகிழ்ந்துமுதுமைக் காலத்தில் இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய மக்கள் செல்வங்களை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! திண்ணமாக! என்னுடைய இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவனாவான்.  (அல்குர்ஆன்:14:39) என பிரார்த்தித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.

இவ்வுலகில் பெரும் பேற்றை பெற்றவர்களான இறைத்தூதர்களான தூவூத் அலைஹிஸ்ஸலாம், ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் தங்களின் உயர்வான நிலையை நினைத்து மனம் மகிழ்ந்து அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகட்டும்! அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரை விட, எங்களுக்கு ஏராளமான சிறப்பை வழங்கினான்.” (அல்குர்ஆன்:27:15) என உருகிப் பிரார்த்தித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.

இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் சமூகத்தையும் பெறும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி கப்பலில் ஏறிய பிறகு அல்லாஹ் கூறினானாம் நீரும் உம்முடனிருப்பவர்களும் கப்பலில் ஏறிக்கொண்டதும் கூறுவீர்களாக: கொடுமைபுரியும் மக்களிடமிருந்து எங்களை விடுவித்த அல்லாஹ்வுக்கே அனைத்து நன்றியும்!” (அல்குர்ஆன்:23:28)

சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும் இப்படிக் கூறுவார்களாம்: அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்! அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மை படுத்திவிட்டான்.

மேலும், எங்களைப் பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆஹா! செயல்படக்கூடியவர்களுக்குத் தான் கூலி எவ்வளவு உயர்வானதாய் இருக்கின்றது!    ( அல்குர்ஆன்:39: 74 )

சுவனத்து இன்பங்களை கண்ணாரக் கண்டதும் இப்படிக்கூறுவார்களாம்: எங்களுக்கு இங்கே வருவதற்கான வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்திராவிட்டால், நாங்கள் நேர்வழியை ஒரு போதும் அடைந்திருக்க மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம் அவர்களை அழைத்துக்) கூறப்படும்: நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இது தான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்கான சிறந்த பகரமாக இது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.                             ( அல்குர்ஆன்:7: 43 )  
                             
சுவனத்து இன்பங்களை அனுபவிக்கும் போது இப்படிக் கூறுவார்களாம்: நம்மை விட்டும் கவலையை அகற்றிய அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்! திண்ணமாக, நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், உரிய கண்ணியத்தை வழங்குபவனாகவும் இருக்கின்றான்.

அவனே தன்னுடைய அருளால் நம்மை நிலையான இருப்பிடத்தில் தங்க வைத்துள்ளான். இங்கு எவ்விதச் சிரமமும் நமக்கு நேருவதில்லை. மேலும், எவ்விதச் சோர்வும் ஏற்படுவதில்லை.                       ( அல்குர்ஆன்: 35: 34,35 )

எனவே, அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி வாழ வேண்டும் என்கிற உண்மையை மேற்கூறிய வசனங்களின் வாயிலாக நாம் விளங்கிக் கொண்டோம்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது எப்படி?..

أركان الشكر
أ‌- الاعتراف بالنعمة بقلبه

நன்றி செலுத்துவதில் மூன்று ஒழுங்குகள் இருக்கின்றன. அவை மூன்றும் மிகவும் முக்கியமாகும்.

1.   ஒரு அருட்கொடையை அனுபவிக்கிற போது அல்லாஹ் தான் அதை அனுபவிப்பதற்கு தந்திருக்கின்றான் என்று உளமாற எண்ணுவது.

وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ

மேலும்,  உங்களுக்கு கிடைத்திருக்கிற வாழ்க்கை வசதிகள் எல்லாமுமே அல்லாஹ்வின் அருட்கொடைகள் தாம்”.                      ( அல்குர்ஆன்: 16: 53 )


جاء رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى دار أبي الهيثم فتَقَدَّمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكر وعمر فَاسْتَأْذَنَ عَلَيْهِمْ، وَأُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْمَعُ السَّلَامَ تُرِيدُ أَنْ يَزِيدَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ السَّلَامِ فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْصَرِفَ، خَرَجَتْ أُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْعَى فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ: قَدْ سَمِعْتُ تَسْلِيمَكَ وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَزِيدَنَا مِنْ سَلَامِكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ أَبُو الْهَيْثَمِ؟» قَالَتْ: قَرِيبٌ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ، ادْخُلُوا، السَّاعَةَ يَأْتِي، فَبَسَطَتْ لَهُمْ بِسَاطًا تَحْتَ شَجَرَةٍ حَتَّى جَاءَ أَبُو الْهَيْثَمِ مَعَ حِمَارِهِ وَعَلَيْهِ قِرْبَتَانِ مِنْ مَاءٍ فَفَرِحَ بِهِمْ أَبُو الْهَيْثَمِ وَقَرَّبَ تَحِيَّتَهُمْ. وَصَعِدَ أَبُو الْهَيْثَمِ عَلَى نَخْلَةٍ فَصَرَمَ أَعْذَاقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبُكَ يَا أَبَا الْهَيْثَمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَمِنْ رُطَبِهِ، وَتَلَذُّوا بِهِ، ثُمَّ أَتَاهُمْ بِمَاءٍ فَشَرِبُوا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ إِلَى شَاةٍ لِيَذْبَحَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَاللَّبُونَ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ فَعَجَنَ لَهُمْ وَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رُءُوسَهُمْ فَنَامُوا فَاسْتَيْقَظُوا وَقَدْ أَدْرَكَ طَعَامُهُمْ، فَوَضَعَهُ بَيْنَ أَيْدِيهِمْ فَأَكَلُوا وَشَبِعُوا وَحَمِدُوا اللَّهَ، وَأَتَاهُمْ أَبُو الْهَيْثَمِ بِبَقِيَّةِ الْأَعْذَاقِ فَأَصَابُوا مِنْهُ… ولما سلم رسول الله صلى الله عليه وسلم منصرفاً قَالَتْ لَهُ أُمُّ أَبِي الْهَيْثَمِ: لَوْ دَعَوْتَ لَنَا فَقَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ» .

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:

ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் வருகை தந்திருக்கின்றார்கள். அப்போது, நபி {ஸல்} அவர்கள்அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் வரவைத்ததுஎன்று பதில் கூறினார்கள்.

சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்என்று கூறினார்கள்.

கொஞ்ச நேரம் அண்ணலார் {ஸல்} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலிஅன்ஹுமா) ஆகியோரோடு உரையாடிவிட்டுதோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!” என்று கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி {ஸல்} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது, “வஅலைக்குமுஸ்ஸலாம்யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்களின் குரல் கொடுத்தார்கள்.

உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா? தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம் நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வினவினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே மரத்தின் நிழலில் மாநபி {ஸல்} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வரவேற்றார்கள்.

உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டுஅல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதுஎன்று கூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.

மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்கள்.

நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ஸல்} அவர்கள்இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்என்று கூறினார்கள்.

அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.

மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ஸல்} அவர்களின் முன் கொண்டு வைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.

கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால் முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.

மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக துஆ செய்யுங்கள்!” என்று கூறினார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில் நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்! ஆகையால், இறைவன் தன் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ! வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                             ( நூல்: திர்மிதீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் )

கடுமையான பசி, நாட்பட்ட பசி அந்த நேரத்தில் வழங்கப்பட்ட குளிர்ந்த நீர் வயிறையும், மனதையும் எவ்வளவு குளிரூட்டி இருக்கும்.

அபூபக்ர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அந்த நீரின் குளுமையை ரசித்து, மெய்மறந்து இருக்கும் போது இந்த குளிர்ந்த நீரும் அல்லாஹ்வின் அருட்கொடை தான் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும் என்று அந்த நேரத்திலும் கூட அல்லாஹ்வின் அருட்கொடை என்று உளமாற உறுதி கொள்ளுமாறு தூண்டினார்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

2.   ஒரு அருட்கொடையை அனுபவிக்கிற போது இது என் இறைவன் தந்தான் என வாயால் சொல்வது.

ب‌- التحدث بها والثناء على المنعم
قال تعالى: {وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ} [الضحى: 11

மேலும், உம் இறைவன் உமக்களித்திருக்கிற அருட்கொடைகளைப் பற்றி எடுத்துரைப்பீராக!”                                           ( அல்குர்ஆன்: 93: 11 )

كان عبد الرحمن صائماً فوضعت مائدة الإفطار بين يديه، فلما رأى فيها ألواناً بكى، فقال له الناس: يا أبا المنذر ما يبكيك؟ فقال: إنا كنا أهل كفر وجاهلية، فبعث الله إلينا رسوله صلى الله عليه وسلم فآمنا واتبعنا وجاهدنا، فمنا من مات ولم يتعجل شيئاً من أجره، منهم أخي مصعب بن عمير، قتل يوم قتل -أي يوم أحد- وليس له إلا سيفه وبردة عليه!! إن نحن غطينا بها رأسه بدت رجلاه!! وإن نحن غطينا رجليه بدا رأسه!! فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نغطي رأسه وأن نجعل على رجليه من الإذخر، فماتوا ولم يتعجلوا شيئاً من أجرهم، وبقينا وراءهم ففتحت علينا الدنيا أبوابها فنحن نهدبها فخشينا أن يقال لنا يوم القيامة: {أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها}، هؤلاء أصحاب محمد صلى الله عليه وسلم، لا يأمنون مكر الله ويخافون عقوبته سبحانه وتعالى، وإذا أنعم الله عليهم بنعمة كان حالهم هكذا

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். இஃப்தாருடைய நேரம் நெருங்கவே பல்வேறு வகையான உணவுகளும், குடிபானங்களும் அவர்களின் முன்பாக பாத்திரங்களிலும், தட்டுகளிலும் கொண்டு வந்து வைக்கப்பட்டன.

அவர்களின் பார்வை அவைகளைக் கடந்து சென்ற போது தேம்பித் தேம்பி அழுதார்கள்.

அருகிலிருந்தவர்கள், “அபூ முன்திர் அவர்களே! ஏன் இவ்வாறு தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்நாங்கள் இறை நிராகரிப்பிலும், மடமைத்தனத்திலும் மூழ்கியிருந்தோம். அல்லாஹ் எங்களுக்கு ஓர் இறைத்தூதரை { முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை } அனுப்பினான். அவர்களை நாங்கள் ஈமான் கொண்டோம். அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என அனைத்தையும் பின்பற்றி நடந்தோம். சன்மார்க்கப் போர்களிலும் பங்கெடுத்தோம்.

எங்களில் பலர் எவ்வித உலக சுகங்களையும் அனுபவிக்காமலேயே மரணித்துப் போயினர்.

அவர்களில் உஹதில் வீரமரணம் அடைந்த என் சகோதர முஸ்லிம் முஸ்அப் இப்னு உமைரும் ஒருவர்.

அவர் மரணித்த போது அவரிடம் அவர் அணிந்திருந்த மேலாடை, அவர் போரில் பயன்படுத்திய வாள் இவ்விரண்டையும் தவிர வேறொன்றும் இல்லை.

அவருக்கு நாங்கள் அவரின் மேலாடையையே கஃபனாக அணிவிக்கும் போது, தலையை மறைத்தால், கால்களின் பகுதிகளும், இரு கால்களை மறைத்தால் தலைப் பகுதியும் தெரிந்தது.

இறுதியாக, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆணைக்கிணங்க இத்கிர் புல்லைப் போட்டு கால்களின் பகுதியை மறைத்து நல்லடக்கம் செய்தோம்.

அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த நானும், இன்னும் பலரும் இன்று சுக போகமாக வாழ்ந்து வருகின்றோம். அல்லாஹ் எங்களுக்கு உலகின் எட்டுத் திக்குகளின் அருட்கதவுகளையும் திறந்து விட்டிருக்கின்றான். நாங்கள் அருட்கொடைகள் அனைத்தையும் அனுபவித்து வருகின்றோம்.

எனினும், எங்களுக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கின்றது. அது அல்லாஹ்வைப் பற்றிய, மறுமையைப் பற்றிய பயம், நாளை மறுமையில் சிலரைப்பார்த்து அல்லாஹ் சொல்வானே..

நீங்கள் உங்கள் பங்கில் உள்ள அருட்கொடைகளை உங்கள் உலக வாழ்க்கையிலேயே அனுபவித்து விட்டீர்கள். அவற்றால் நன்கு பயனும் அடைந்து விட்டீர்கள்” ( அல்குர்ஆன்: 46: 20 ) அவர்களாக நாங்கள் ஆகி விடக்கூடாது என்கிற அந்தப் பயம் தான் இவ்வாறான நேரங்களில் அழுகையைக் கொண்டு வந்து விடுகின்றதுஎன்று கூறினார்கள்.                         ( நூல்: புகாரி, முஸ்லிம் )

3.   ஒரு அருட்கொடையை அனுபவிக்கும் போது அதற்காக அதை வழங்கிய ரப்புக்கு வணக்க வழிபாட்டின் வாயிலாக நன்றி தெரிவிப்பது.

ت‌- تسخيرها في طاعة مسديها والمنعم بها
قال تعالى: {اعملوا آل داود شكر} [سبأ: 13]
ومعنى الآية: يا آل داود: اعملوا شكرًا لله على ما أعطاكم، وذلك بطاعته وامتثال أمره

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், அவர்களின் சந்ததிகளுக்கும், அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கிய பிறகு அவர்களை நோக்கி இவ்வாறு கூறினான்.

தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள்! என்னுடைய அடியார்களில் மிகச் சிலர் தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர்”.                              ( அல்குர்ஆன்: 34: 13 )


وعن عائشة رضي الله عنها قالت: { كان النبي يقوم من الليل حتى تتفطر قدماه. فقلت له: لِمَ تصنع هذا يا رسول الله، وقد غُفر لك ما تقدم من ذنبك وما تأخر؟ قال: أفلا أكون عبداً شكوراً؟ } [متفق عليه].

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் இரு பாதங்கள் வீங்க நின்று தொழுவார்கள். நான்அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தான் அல்லாஹ்வால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக இருக்கின்றீர்களே! ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றீர்கள்?” என்று கேட்டேன்.

அப்போது, அண்ணலார்நான் அல்லாஹ்விற்கு நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா?” என்று பதில் கூறினார்கள்.

وعن حذيفة قال: { صليت مع النبي ذات ليلة، فافتتح البقرة، فقلت: يركع بها، ثم افتتح النساء فقرأها، ثم افتتح آل عمران فقرأها، يقرأ مُتَرَسلاً، إذا مرّ بآية فيها تسبيح سبّح، وإذا مرّ بسؤال سأل، وإذا مر بتعوّذ تعوذ... الحديث } [رواه مسلم].

ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் இரவு நான் நபி {ஸல்} அவர்களுடன் இரவில் தொழுதேன். அப்போது, அண்ணலார் ஒரே ரக்அத்தில் சூரா பகரா, அந்நிஸா, ஆலுஇம்ரான் ஆகிய சூராக்களை ஓதினார்கள்.

ஒவ்வொரு வசனங்களைக் கடந்து செல்லும் போது அதில் தஸ்பீஹ் சம்பந்தமான ஆயத் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள். துஆவுடைய வசனம் வந்தால் துஆ கேட்பார்கள். பாதுகாப்பு சம்பந்தமான வசனம் வந்தால் பாதுகாப்பு கேட்பார்கள்.

وعن ابن مسعود قال: { صليت مع النبي ليلة، فلم يزل قائماً حتى هممت بأمر سوء. قيل: ما هممت؟ قال: هممت أن أجلس وأَدَعَهُ ! } [متفق عليه].

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் இரவு நான் நபிகளாருடன் இரவுத் தொழுகையில் ஈடுபட்டேன். நீண்ட நேரம் நின்று தொழுதார்கள். அப்போது நான் சீக்கிரமாக தொழுகையை அண்ணலார் முடித்து விட மாட்டார்களா?” என நினைத்தேன்.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம், நீண்ட பல சூராக்களை ஓதி பாதங்களும், கால்களும் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். காரணம் கேட்ட அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன பதில்அல்லாஹ்வுக்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்பது தான்.

நன்றியுணர்வோடு வாழ்ந்திட அனுதினமும் அல்லாஹ்விடம் முறையிடுவோம்!

عن معاذ بن جبل أن رسول صلى عليه وسلم أخذ بيده، وقال: ((يا معاذ، والله إني لأحبك، والله إني لأحبك))، فقال: ((أُوصيك يا معاذ، لا تَدَعنَّ في دُبر كل صلاة تقول: اللهم أعني على ذكرك، وشكرك، وحسن عبادتك))؛ رواه أبو داود(1522)

முஆத் பின் ஜபல் {ரலி} அவர்களை ஏமனுக்கு நபிகளார்  அனுப்பிய போது, அவர்களிடம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அல்லாஹ்வே! உன்னை நினைவு கூர்வதற்கும், உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக!என்று பிரார்த்திக்குமாறு வஸிய்யத் செய்தார்கள்.

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்விடம் நன்றியுணர்வாடு வாழ்ந்திட உதவிபுரியுமாறு பிரார்த்தித்ததை அல்குர்ஆனின் 27:19-வது வசனம் கூறுகின்றது.

مَرَّ سَيِّدُنَا عُمَرَ بنَ الخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ ذَاتَ يَوْمٍ بِرَجُلٍ فِيْ السُّوْقِ.
فِإِذَا بِالرَّجُلِ يَدْعُوْا وَيَقُوْلُ: « اللهم اجْعَلْنِي مِنْ عِبَادِكَ القَلِيْلِ ... اللهم اجْعَلْنِي مِنْ عِبَادِكَ القَلِيْلِ »
فَقَالَ لَهُ سَيِّدُنَا عُمَرَ: مِنْ أَيْنَ أَتَيْتَ بِهَذَا الدُّعَاءِ؟
فَقَالَ الرَّجُلُ: إنَّ اللهَ يَقُوْلُ فِي كِتَابِهِ العَزِيْزِ: ﴿ وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ ﴾.
فَبَكَى سَيِّدُنَا عُمَرَ وَقَالَ: كُلُّ النَّاسِ أَفْقَهُ مِنْكَ يَا عُمَرَ.
رَوَى هَذَا الأَثَرَ ابْنُ أَبِي شَيْبَةَ فِي المُصَنَّفِ وَعَبْدُ اللهِ بِنْ أَحْمَدَ بن حَنْبَلَ فِي الزُّهْدِ لِأَبِيْهِ، وَقَدْ نَقَلَهُ القُرْطُبِيُّ وَجَمْعٌ مِنْ أَهْلِ العِلْمِ.

உமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் அவர்கள் பள்ளிக்குள் நுழந்தார்கள். அங்கே ஒருவர் அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தார். அருகே சென்ற அவருக்கு ஆச்சர்யம் அவர் அல்லாஹ்வே! என்னை குறைவான எண்ணிக்கை கொண்டவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக! (அல்லாஹும் மஜ்அல்னீ மினல் அகல்லீன்) என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் துஆ கேட்டு முடிந்ததும், அவரை அழைத்து உமர் {ரலி} அவர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ் ஹூத் அத்தியாயத்தின் 40-வது வசனத்திலும், ஸபா அத்தியாயத்தின் 13-வது வசனத்திலும், ஸாத் அத்தியாயத்தின் 24-வது வசனத்திலும்கூறியிருப்பதைத் தான் நான் என் துஆவில் கேட்டேன் என்றார்.

உடனே உமர் {ரலி} அவர்கள்நீர் உண்மையைத் தான் உரைத்தீர்என்று கூறினார்கள்.                      ( நூல்: முஸன்னஃப் அபீ ஷைபா )

அல்லாஹ்வின் பொருத்தத்தையும், அருட்கொடைகளையும் அள்ளித்தருகின்ற நன்றியுணர்வை நமதாக்குவோம்.

நன்றியுணர்வை வெளிப்படுத்தி நல்லதொரு வாழ்வை அமைத்திடுவோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் நன்றியுணர்வுள்ளவர்களாக ஆக்கியருள்புரிவானாக!

     ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!


No comments:

Post a Comment