நாட்டின் தேவை
தனி சிறப்பு நீதிமன்றங்களா?
குற்றங்களை தடுக்கும்
தரமான சட்டங்களா?
கடந்த 18/08/2019 ஞாயிறன்று
தமிழக முதல்வர் இ.பி.எஸ்
அவர்கள் “பாலியல் வழக்குகளை
விரைந்து விசாரிக்க விரைவில்
தனி சிறப்பு நீதிமன்றங்கள்
தமிழகத்தில் அமைக்கப்படும்” என்று
சேலம் மாவட்டம் எடப்பாடி
உரிமையியல் மற்றும் குற்றவியல்
நீதித்துறை நடுவர் நீதிமன்ற
திறப்பு விழாவில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு
தமிழக முதல்வரால் மிகவும்
கவனமாக, அக்கறையோடு ஆய்ந்து
விடுக்கப்பட்ட அறிவிப்பு ஒன்றும்
அல்ல.
கடந்த 2018 –ஆம்
ஆண்டு மத்திய பெண்கள்
மற்றும் குழந்தைகள் அமைச்சகம்
“பாலியல் பலாத்கார வழக்குகளை
விரைவில் முடிப்பதற்காக நிர்பயா
நிதியின் மூலம் நாட்டில்
1023 விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்”
என அறிவித்தது.
அதன்படி ரூபாய்
765.25 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின்
மூலமாக முதற்கட்டமாக 9 மாநிலங்களில்
777 விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் எனவும் இரண்டாம்
கட்டமாக 240 நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இங்கே, ஒரு
விஷயத்தை நாம் கவனத்தில்
கொள்வது மிகவும் அவசியமாகும்.
இந்திய சட்ட
அமைச்சகம் வெளியிட்ட ஒரு
அறிக்கையில் “நாடு முழுவதும்
சுமார் மூன்று கோடியே
பதினோரு லட்சம் வழக்குகள்
நிலுவையில் உள்ளதாக” தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை
அடிப்படையாகக் கொண்டு ஆய்வு
செய்த தனியார் குழுவொன்று
வெளியிட்ட ஆச்சர்யமான தகவல்
என்னவென்றால் “இப்போது நிலுவையில்
இருக்கும் வழக்குகளை (இனி
வர இருக்கும் புது
வழக்குகளை எடுத்துக் கொள்ளாமல்)
விசாரித்து முடித்து தீர்ப்பு
சொல்ல இந்திய நீதிமன்றங்களுக்கு தேவைப்படும் காலம்
324 முன்னூற்றி இருபத்தி நான்கு
ஆண்டுகள்.
இங்கே, இன்னொரு
விஷயத்தையும் நாம் கவனத்தில்
எடுத்துக் கொள்வது மிகவும்
அவசியம் என்றே நான்
கருதுகின்றேன்.
Chief Justice of India
Ranjan Gogoi on Sunday said over 1,000 cases are pending in courts across the
country for 50 years, while a whopping two lakh plus cases are pending for 25
years.
Addressing a public
function here, Gogoi instructed Gauhati High Court Chief Justice (Acting) Arup
Kumar Goswami to clear such long pending cases in Assam as soon as possible.
“In India, we have a
little over one thousand 50-year- old cases and above two lakh 25-year old
cases,” Gogoi said.
He said he had
addressed the chief justices of various high courts on July 10, during which he
requested them, inter alia, to “go after” the 50-year-old and the 25-year-old
cases.
The CJI also said, out
of about 90 lakh pending civil cases, more than 20 lakh are at a stage where
summons have not been served yet.
இந்திய உச்ச
நீதிமன்றத்தின் 46 –ஆவது தலைமை
நீதிபதியாக 03/10/2018 அன்று
பதவியேற்ற ரஞ்சன் கோகாய்
அவர்கள் 04/08/2019 அன்று
அசாம் மாநிலம் கவுகாத்தி
உயர் நீதிமன்ற நிகழ்ச்சி
ஒன்றில் பங்கேற்று ஆற்றிய
உரையில் “நாடு முழுவதும்
25 ஆண்டுகளாக 2 இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள்
நிலுவையில் இருக்கின்றன.
50 ஆண்டுகளாக 1000 வழக்குகள்
நிலுவையில் இருக்கின்றன. 90 லட்சத்திற்கும் மேலான சிவில்
வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் 20 லட்சத்திற்கும் மேலான
வழக்குகளில் இன்னும் சம்மன்
கூட அனுப்பவில்லை.
2.1 கோடி கிரிமினல்
வழக்குகளில் 1 கோடி வழக்குகளுக்கு
இன்னும் சம்மன் அனுப்பவில்லை.
என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.
( நன்றி, தி இந்து
ஆங்கில நாளேடு மற்றும்
தினமலர் 04/08/2019 ஆன்லைன் வெளியீடு.
)
நாடு முழுவதும்
நிலுவையில் இருக்கிற வழக்குகள்,
நீதிமன்றத்தால் ஏற்படும் தாமதம்
என நிலவரம் இப்படி
இருக்க பாலியல் வழக்குகளுக்கு
தனி சிறப்பு நீதிமன்றம்
அமைக்கப்படும் என்ற இந்த
அறிவிப்பு வியப்பை ஏற்படுத்துகின்றது.
பாலியல் வழக்குகள், பாலியல் குற்றங்கள் குறித்தான புள்ளி விவரங்கள்….
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 2,78, 886 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதில் தண்டனை பெற்றவர்கள் 30 சதவீதத்திற்கும் குறைவு 70 சதவீதம் பேர் தண்டனை பெறவில்லை என்பது தான் உண்மை.
2007- 26.4 சதவீதம், 2008- 26.6 சதவீதம்,
2009- 26.9 சதவீதம்,
2010- 26.6 சதவீதம்,
2011-26.4 சதவீதம்,
2012- 24.2 சதவீதம்,2013- 27.1 சதவீதம், 2014- 28 சதவீதம்,
2015- 29.4 சதவீதம்,
2016- 25.5 சதவீதம்
வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்ற
வழக்குகள்
2015 ஆண்டை
விட 2016 ல் 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான
குற்றங்களின் கீழ்
பெரும்பாலான
வழக்குகள் 'கணவன்
அல்லது
அவரது
உறவினர்களால் கொடுமை
செய்யப்படுவது ஆகும். ( 32. 6 சதவீதம்) பெண்களின் மீது
தாக்குதல் நடத்தி
அவளுடைய
மன
வலிமையை சீர்குலைத்தல்
(25.0
சதவீதமாகும்)பெண்கள்
கடத்தல் (19.0
சதவீதம் ) மற்றும் 'கற்பழிப்பு' (11.5 சதவீதம்).
பாலியல் பலாத்கார வழக்கு
2015
ஆம்
ஆண்டில்
34,651
வழக்குகள், 2016 ல் 38,947 என 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசத்திலும்
உத்தரப்பிரதேசத்திலும் அதிக
அளவு
பாலியல்
பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. 4,882 வழக்குகள்
(12.5
சதவீதம் ), 4,816 (12.4சதவீதம்), மகாராஷ்டிரா
4,189
(10.7சதவீதம்) ஆகும்.
பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் சென்னையில்
தான்
குறைவு. 43 லட்சம் பெண்கள்
வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு
எதிரான
குற்றங்கள் 544 ஆக பதிவாகி
உள்ளது. சென்னையில் வசிக்கும்
ஒரு
லட்சம்
பெண்களில் 15 பேர் தான்
பாதிக்கப்படுவதாக புள்ளி விவரத்தில்
தகவல்
வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி
முதலிடம் பெற்று
உள்ளது.
75.8 லட்சம் பெண்கள் வசிக்கும்
டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள்
பதிவு
செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 1 லட்சம்
பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மொத்தத்தில் 2016 ஆம் ஆண்டு
நிலவரப்படி ஒரு மணி நேரத்தில்
பதிவாகும் பாலியல்
வழக்குகள் 39 ஆகும். இது 2007 ஆம் ஆண்டு
21
ஆக
இருந்தது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது
தொடங்கி
77
வயது
வரையிலான பெண்கள் வன்கொடுமைக்குள்ளாகின்றனர்
என்கிறது ஐ.நா. புள்ளிவிபரம்.
ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் பதின் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும்
பாலியல்
வன்கொடுமைக்குட்பட்டு கொடூரமாக கொலை
செய்யப்பட்டு
வருகின்றனர். இது அதிகரித்து
வருகிறதே தவிர
குறைந்தபாடில்லை.
இந்தியாவைப்
பொறுத்தவரை சமீப காலமாக பாலியல் வன்முறை மிகப்பெரிய
பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. National Crime Record Bureau (NCRB) 2013ம் ஆண்டின் அறிக்கைப்படி, பெண்களுக்கெதிரான
குற்றங்கள்
2010-ம் ஆண்டு முதல் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2012-ல் 24,923 ஆக இருந்த கற்பழிப்பு வழக்குகள் 2013-ல் 33,707 ஆக உயர்ந்துள்ளது.
2010-ம் ஆண்டு முதல் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2012-ல் 24,923 ஆக இருந்த கற்பழிப்பு வழக்குகள் 2013-ல் 33,707 ஆக உயர்ந்துள்ளது.
பலாத்காரத்துக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இதில் 93 சதவீத குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் உறவினர், நண்பர்களாக இருப்பது கூடுதல் தகவல்.
நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது, 90 சதவீத குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. ( நன்றி: குங்குமம் டாக்டர் ஆன்லைன் இதழ்
கவர் ஸ்டோரி )
( நன்றி: தினத்தந்தி ஆன்லைன் இதழ், பதிவு:
ஏப்ரல் 17, 2018 15:50 PM )
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது…
இந்தியாவில் புதிய
நீதிமன்றங்களுக்கான தேவைகளை
விட கடுமையான, தரமான
சட்டங்களும் தான் தேவைப்படுகின்றது.
நீதி தொடர்பான
விவகாரத்தில் நம் நாட்டிற்கு
தேவைகள் என்ன என்பதை
சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து,
ஆய்வு செய்து புதிய
சட்டங்களை உருவாக்குவதே ஆட்சியாளர்களுக்கு அறிவுடமையாகும்.
அத்தோடு, விரைவாக
நீதி வழங்குவதும் பாரபட்சமில்லாத தீர்ப்புகளும் மிக
முக்கியமானதாகும்.
நீதித்துறை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்…
1.
நீதிமன்றங்களுக்கு சென்றால் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை சாமான்ய குடிமக்களுக்கு முதலில் ஏற்படுத்த வேண்டும்.
ஏனென்றால், நாட்டில் சாமான்ய மக்களுக்கு நீதி கிடைப்பதென்பது அரிதான
ஒன்றாக இருக்கிறது.
أن عمرو
بن العاص رضى الله عنه، عندما كان واليًّا على مصر فى خلافة أمير المؤمنين عمر بن
الخطاب رضى الله عنه، اشترك ابنٌ لعمرو بن العاص مع غلام من الأقباط فى سباق
للخيول، فضرب ابن الأمير الغلام القبطى اعتمادًا على سلطان أبيه، وأن الآخر لا
يمكنه الانتقام منه؛ فقام والد الغلام القبطى المضروب بالسفر بصحبة ابنه إلى
المدينة المنورة، فلما أتى أمير المؤمنين عمر رضى الله عنه، بَيَّن له ما وقع،
فكتب أمير المؤمنين إلى عمرو بن العاص أن يحضر إلى المدينة المنورة صحبة ابنه،
فلما حضر الجميع عند أمير المؤمنين عمر، ناول عمر الغلام القبطى سوطًا وأمره أن
يقتص لنفسه من ابن عمرو بن العاص، فضربه حتى رأى أنه قد استوفى حقه وشفا ما فى
نفسه. ثم قال له أمير المؤمنين: لو ضربت عمرو بن العاص ما منعتك؛ لأن الغلام إنما
ضربك لسطان أبيه، ثم التفت إلى عمرو بن العاص قائلاً: متى استعبدتم الناس وقد ولدتهم
أمهاتهم أحرارا؟.
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் காலத்தில் எகிப்தின் ஆளுநராக அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை
எகிப்தில் ஒட்டகப் பந்தயம் நடந்தது. அதில் கவர்னர் அம்ரின் மகன் முஹம்மதுவும்
கலந்து கொண்டார்.
அவரது ஒட்டகை முதலில் ஒடிக் கொண்டிருந்தது. திடீரென
எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கிப்தி இன இளைஞன் அவரை முந்திச்
சென்றான். அப்படி முந்திச் செல்லும் போது அவனது வாயிலிருந்து ஒரு ஆவேச
வாக்கியம் வெளிப்பட்டது.
அது முஹம்மதை கோபப்படுத்தி விட்டது. அவர் அந்த இளைஞரை
நோக்கி இந்தா பிடி! நான் பிரமுகரின் மகனாக்கும்! (குத்ஹா! வ அன
இப்னுல் முக்ரமீன்) என்று சொல்லி ஓங்கி ஒரு குத்து விட்டார்.
கவர்னரின் மகன் தன்னை தாக்கியிருப்தால் அந்த எகிப்திய
இளைஞர் நேரே மதீனாவுக்கு வந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டார்.
உடனடியாக உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ரையும் அவரது மகனையும்
தலைநகருக்கு வரும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும், அரசாங்க மண்டபத்தில் வைத்து விசாரித்துவிட்டு எகிப்திய
இளைஞரின் கையில் சவுக்கை கொடுத்து உம்மை தாக்கிய முஹம்மதை அடி என்றார்கள்.
அவ்விளைஞர் அப்படியே செய்தார்.
அவர் இப்னு அம்ர அவர்களை அடித்து முடித்ததும் ஆளுநர் அம்ரை சுட்டிக்காட்டி
இவரையும் அடி என்றார்கள். அந்த இளைஞர் அதிர்ந்து போனார். இவர்
என்னை ஒன்றும் செய்ய வில்லையே என்று கூறினார்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள்
அவருடைய மகன் உன்னை அடிப்பதற்கு அவரது தந்தை ஆளுநர் என்ற எண்ணம்தான்
காரணம். ( இன்னமா லரபக இப்னுஹு பி ஸுல்தானி அபீஹி ).
அத்தகைய எண்ணத்தை மகனுக்கு கெடுத்தததற்கு இவரையும் நீ அடிக்கலாம்
என்றார்கள். அந்த வாலிபர் ஆளுநரை அடிக்கத் தயங்கினார்.
அப்படியானால், அது உம் இஷ்டம் என்று கூறிய
உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ( மதா தஅப்பத்துமுன்னாஸ
வகத் வலதத்ஹும் உம்முஹாத்துஹும் அஹ்ராரா )
எப்போதிருந்து நீங்கள் மக்களை அடிமைகளாக கருத
ஆரம்பித்தீர்கள். அவர்கiளுடைய தாய்மர்கள் அவர்களை சுதந்திர மனிதர்களாக பெற்றெடுத்
திருக்கிறார்கள் என்று கேட்டார்கள். ( நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}... )
2.
நீதிபதிகள் விருப்பு, வெறுப்பின்றி
நீதியின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும்…
أبو
نعيم - رحمه الله - في الحلية (4/139) حدثنا محمد بن أحمد بن الحسن ، ثنا عبد الله
بن سليمان بن الأشعث (ح [1]) وحدثنا سليمان بن أحمد ، ثنا محمد بن عون السيرافي
المقري ، قالا : ثنا أحمد بن المقدام ، ثنا حكيم بن خذام أبو سمير ، ثنا الأعمش ،
عن إبراهيم بن يزيد التيمي ، عن أبيه ، قال
: وجد علي بن أبي طالب درعاً له عند يهودي التقطها
فعرفها فقال : درعي سقطت عن جمل لي أورق . فقال اليهودي . درعي وفي يدي ، ثم قال
له اليهودي : بيني وبينك قاضي المسلمين ، فأتوا شريحاً ، فلما رأى علياً قد أقبل
تحرف عن موضعه وجلس علي فيه ثم قال علي : لو كان خصمي من المسلمين لساويته في
المجلس ، ولكني سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول : لا تساووهم في المجلس
وألجئوهم إلى أضيق الطرق ، فإن سبوكم فاضربوهم وإن ضربوكمفاقتلوهم . ثم قال شريح :
ما تشاء يا أمير المؤمنين ؟ قال : درعي سقطت عن جمل أورق ، والتقطها هذا اليهودي .
فقال شريح ما تقول يا يهودي ؟ قال درعي وفي يدي . فقال شريح : صدقت والله يا أمير
المؤمنين . إنها لدرعك ولكن لابد منشاهدين ، فدعى قنبراً مولاه والحسن بن علي
وشهدا : إنهما لدرعه . فقال شريح : أما شهادة مولاك فقد أجزناها ، أما شهادة ابنك
لك فلا نجيزها . فقال علي : ثكلتك أمك ، أما سمعت عمر بن الخطاب يقول : قال رسول الله -صلى
الله عليه وسلم- : الحسن والحسين سيدا شباب أهل الجنة . قال اللهم نعم . قال :
أفلا تجيز شهادة سيد شباب أهل الجنة ؟ والله لأوجهنك إلى ( بانقيا ) [2] تقضي بين
أهلها أربعين يوماً ثم قال لليهودي : خذ درعك . فقال اليهودي : أمير المؤمنين جاء
معي إلى قاضي المسلمين ، فقضى عليه ورضي ، صدقت -والله- يا أمير المؤمنين إنها
لدرعك سقطت عن جمل لك التقطتها ، أشهد أن لا إله إلا الله ، وأن محمداً رسول الله
، فوهبها له علي ، وأجازه بتسعمائة ، وقتل معه يوم صفين .
கலீபா அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது கவச ஆடை காணாமல் போனது. பிறகு,
அது கூபா நகரைச் சேர்ந்த யூதர் ஒருவரிடம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
தனது கவசத்தை
இன்னாரிடமிருந்து மீட்டுத்தருமாறு குடியரசின் தலைவர், நீதிமன்றத்தில் முறையிட்டார்.
வழக்கை
விராசரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஷுரைஹ் இப்னு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கவசம், அலி
(ரலி) அவர்களுடையதுதான் என்பதற்கு ஆதாரம் கோரினார். அது அலி
(ரலி) அவர்களுடையது என்பதற்கு அவரது மகன் ஹசன் (ரலி)
அவர்கள் சாட்சி கூறினார்.
தந்தைக்காக மகன் கூறும் சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது எனக்கூறி, கலீபா அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வழக்கை
நீதிபதி ஷுரைஹ் இப்னு ஹாரிஸ் (ரஹ்) அவர்களின் தலைமையிலான இஸ்லாமிய நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பால் மனம் நெகிழ்ந்துபோன யூதர், உண்மையை ஒப்புக்கொண்டு, கவச
ஆடையை அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமே ஒப்படைத்தார்.
3.
BIAS எனும் பக்கச்சார்புள்ள தீர்ப்பை (அழுத்தம் மற்றும் நிர்பந்தத்தின்
காரணமாக) வழங்குவதில் இருந்து நீதிபதிகள் தவிர்ந்திருக்க வேண்டும்.
وقد روى ابن مَرْدُويه، من طريق العوفي، عن ابن عباس
قال: إن نفرا من الأنصار غزوا مع رسول الله صلى الله عليه وسلم في بعض غزواته،
فسرقت درع لأحدهم، فأظن بها رجل من الأنصار، فأتى صاحب الدرع رسول الله صلى الله
عليه وسلم فقال: إن طُعْمةَ بن أُبَيْرق سرق درعي، فلما رأى السارق (2) ذلك عمد
إليها فألقاها في بيت رجل بريء، وقال لنفر من عشيرته: إني غَيَّبْتُ الدرع
وألقيتها في بيت فلان، وستوجد عنده. فانطلقوا إلى نبي الله صلى الله عليه وسلم ليلا
فقالوا: يا نبي الله، إن صاحبنا بريء. وإن صاحب الدرع فلان، وقد أحطنا بذلك علما،
فاعذُرْ صاحبنا على رءوس الناس وجادل عنه. فإنه إلا (3) يعصمه الله بك يهلك، فقام
رسول الله صلى الله عليه وسلم فبرأه وعذرَه على رءوس الناس،
عن عكرمة قال : استودع رجل من الأنصار طعمة بن أبيرق
مشربة له فيها درع فغاب فلما قدم الأنصاري فتح مشربته فلم يجد الدرع فسأل عنها
طعمة بن أبيرق فرمى بها رجلا من اليهود يقال له زيد بن السمين فتعلق صاحب الدرع
بطعمة في درعه فلما رأى ذلك قومه أتو النَّبِيّ صلى الله عليه وسلم فكلموه ليدرأ
عنه فهم بذلك
وأخرج ابن المنذر عن الحسن أن رجلا على عهد رسول
الله صلى الله عليه وسلم اختان درعا من حديد فلما خشي أن توجد عنده ألقاها في بيت
جار له من اليهود وقال : تزعمون إني اختنت الدرع - فوالله - لقد انبئت أنها عند
اليهودي فرفع ذلك إلى النَّبِيّ صلى الله عليه وسلم وجاء أصحابه يعذرونه فكأن
النَّبِيّ صلى الله عليه وسلم عذره حين لم يجد عليه بينة ووجدوا الدرع في بيت
اليهودي
ரிஃபாஆ இப்னு ஜைதுல் அவ்ஸீ (ரலி) எனும் நபித்தோழர் அன்ஸாரித் தோழர்களோடு ஓர் படைப்பிரிவில் போருக்குச் சென்றார்.
வழியில் ஓரிடத்தில் அவருடைய கேடயம் ஒன்று திருடப்பட்டது. அதை ளஃப்ரீ கோத்திரத்தைச் சார்ந்த துஃமத் இப்னு உபைரிக் என்ற அன்ஸாரித்
தோழர்களில் ஒருவர் தான் திருடி இருக்க வேண்டுமென ரிஃபாஆ (ரலி) அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
படைப்பிரிவு மதீனா வந்ததும், முதல் வேளையாக நபிகளாரைச் சந்தித்த
ரிஃபாஆ (ரலி) அவர்கள் தங்களது கேடயம் திருடு போனது
குறித்தும், துஃமத் இப்னு உபைரிக் மீதான தமது வலுவான
சந்தேகம் குறித்தும் விவரித்து விட்டு, தமக்கு இந்த விஷயத்தில் விசாரித்து நீதி
வழங்குமாறு முறையிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ரிஃபாஆ (ரலி) அவர்கள் தொடுத்த வழக்கை விசாரிக்க
ஆரம்பித்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட துஃமத் இப்னு உபைரிக், ஜைத் இப்னு ஸமீன் என்ற தமது பக்கத்து
வீட்டு யூதரின் தோட்டத்தில் தாம் திருடிய கேடயத்தைத் தூக்கியெறிந்தார்.
பின்னர், தமது கோத்திரத்தார்களிடம் வந்து நடந்த
விஷயங்களைக் கூறிவிட்டு, ”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த பொருள் எங்கே இருக்கிறது
என்பதை அறிய வீடு வீடாக சோதனை மேற்கொள்வார்கள்.
அப்படி தேடும் முயற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் அந்தக் கேடயம் ஜைத் இப்னு
ஸமீன் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்படும்.
நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், நான் குற்றமற்றவன் என்றும், ரிஃபாஆ (ரலி) என் மீது அவதூறு சுமத்துகிறார் என்றும்
நபி {ஸல்} அவர்களிடம் கூறிவிட்டு, எங்களுக்கென்னவோ இந்த திருட்டை எங்கள் கோத்திரத்தைச் சார்ந்த துஃமத் இப்னு
உபைரிக்கின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜைத் இப்னு ஸமீன் தான் செய்திருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது.
ஆகவே, அவர் வீட்டைச் சோதனை செய்தால் உண்மை
தெரிந்து விடும் என்று கூறிவிடுங்கள்” என்று தமது திட்டத்தைக் கூறினார்.
அங்கிருந்து விடைபெற்ற அவரது கோத்திரத்தார்கள்,
நேராக மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வருகை தந்து “அல்லாஹ்வின் தூதரே! எங்களின் கோத்திரத்தை சார்ந்த துஃமத்
இப்னு உபைரிக் ஒரு நல்ல முஸ்லிம். மேலும்,
அவர் மீது
சுமத்தப் பட்டிருக்கிற குற்றச்சாட்டை விட்டும் தூய்மையானவர்.
அந்தக் கேடயத்தை திருடியது அவர் இல்லை. அவரின் பக்கத்து வீட்டுக்காரரான ஜைத்
இப்னு ஸமீன் தான் திருடினார். வேண்டுமானால் நீங்கள் விசாரித்துப்
பாருங்கள்.
மேலும், எங்களது கோத்திரத்தார்கள் எவருக்கும்
தீங்கு செய்ய மாட்டார்கள். ஆனால்,
எங்கள்
கோத்திரத்தாரின் மீது இப்போது களங்கம் ஏற்பட்டுள்ளது.
நீங்கள் தான் மக்களை அழைத்து, ஒன்று கூட்டி துஃமத் இப்னு உபைரிக்
குற்றமற்றவர் என்று அறிவித்து எங்கள் கோத்திரத்தார்கள் மீது வீசப்பட்டிருக்கிற
களங்கத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
இந்தச் செய்தியைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள் மக்களை ஒன்று கூட்டி அமர வைத்து விட்டு,
யூதரின்
வீட்டில் இவர்கள் சொல்வது போன்று கேடயம் இருக்கிறதா?
என்று ஆய்வு
செய்ய சில தோழர்களை அனுப்பினார்கள்.
யூதரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட கேடயம் கண்டெடுக்கப்பட்டு நபி {ஸல்} அவர்களின் முன்னால் கொண்டுவரப்பட்டது.
உடனே, திரண்டிருந்த மக்களின் முன்பாக நின்று
நபி {ஸல்} அவர்கள்
“துஃமத் இப்னு
உபைரிக் நல்லவர், அவர் குற்றமற்றவர்” என்று அறிவித்தார்கள்.
அந்த சபையில் ரிஃபாஆ (ரலி) அவர்களின் மாமா {தாயின் சகோதரர்} கதாதா இப்னு நுஃமான் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
நேராக ரிஃபாஆ (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, ரிஃபாஆ (ரலி) அவர்களைச் சந்தித்து மாநபி {ஸல்} அவர்களின் சபையில் நடந்த சம்பவங்களை
ஒன்று விடாமல் கூறினார்கள்.
فقال:
الله المستعان.
அதைக் கேட்ட ரிஃபாஆ (ரலி) அவர்கள்
“நான் உண்மையையே
கூறினேன்! இது விஷயத்தில் அல்லாஹ் எனக்கு பேருதவி
செய்வான்” எனக் கூறினார்கள்.
அப்போது, அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்தின் 105 முதல் 109 வரையிலான வசனங்களை தொடர்ந்து
இறக்கியருளினான்.
إِنَّا أَنْزَلْنَا
إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ
وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا
(நபியே!
அல்லாஹ் உமக்கு
அறிவித்துத் தந்த நேரிய வழியின்படி மக்களிடையே நீர் தீர்ப்பு வழங்க வேண்டும்
என்பதற்காகவே உம்மீது இந்த திருக்குர்ஆனை சத்தியத்துடன் நாம் இறக்கிவைத்தோம். நீர் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு வாதாடுபவராய் இருக்க வேண்டாம்.
وَاسْتَغْفِرِ اللَّهَ
إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (106) وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ
يَخْتَانُونَ أَنْفُسَهُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا
أَثِيمًا (107) يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ
وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ
بِمَا يَعْمَلُونَ مُحِيطًا
மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக! திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
தமக்குத்தாமே வஞ்சகம் செய்து கொள்கின்றவர்களுக்காக நீர் வாதாடாதீர்! திண்ணமாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும், பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டோனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
அவர்கள் தம் இழிசெயல்களை மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு போதும் அல்லாஹ்விடம் இருந்து மறைக்க
முடியாது. அவனோ, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக
சதியாலோசனை செய்து கொண்டிருக்கும் போது கூட அவர்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் அவர்கள் செய்கிற அனைத்துச்
செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான்.”
இங்கே, அல்லாஹ் ஓர் நிரபராதி தண்டிக்கப்பட்டதை
தவறென்கிறான். நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் அவர்கள்
யாராக இருப்பினும் அவர்களுக்காக வாதிடுவதை அல்லாஹ் தடுக்கின்றான்.
மேலும், பிறரின் மீது அநீதி இழைப்பது மாபெரும்
குற்றமெனவும், நீதி நிலை நாட்டப்பட வேண்டுமெனவும்
விவரிக்கின்றான்.
அல்லாஹ் இதை தம் நபியிடம் இரகசியமாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், மறுமை நாள் வரை அனுதினமும் ஆயிரமாயிரம்
முறை வாசிக்கப்படுகிற குர்ஆனில் இதைப் பதிவு செய்திருப்பதால் நீதி என்பது எந்தளவு
அல்லாஹ்விடத்திலே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்த்துகிறது.
இந்த இறைவசனங்களை இறக்கியருளி நிறைவு செய்கிற போது அல்லாஹ் தம் நபியை நோக்கி…
هَا أَنْتُمْ هَؤُلَاءِ
جَادَلْتُمْ عَنْهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا فَمَنْ يُجَادِلُ اللَّهَ
عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَمْ مَنْ يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا
”சரி! இக்குற்றவாளிகளுக்காக உலக வாழ்க்கையில்
நீங்கள் வாதாடிவிட்டீர்கள்! ஆனால்,
மறுமையில்
அல்லாஹ்விடம் அவர்களுக்காக வாதாடுபவர் யார்? அவர்களுக்காக பொறுப்பேற்பவர் யார்?” என்று கேட்கிறான்.
( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூர் )
நீதி நிலை
நாட்டப்படுவது முக்கியத்துவம் என்பதால் தான் ஒரு யூதருக்கு அநீதி இழைக்கப்பட்ட
போது அல்லாஹ் நீதியின் மீதான நிலைப்பாட்டை தனது தூதருக்கு இறைவசனங்களை இறக்கியருளி
நினைவூட்டுகின்றான்.
4.
எவ்வித
அழுத்தத்திற்கும், நிர்பந்தத்திற்கும் உடன்பட்டு அநீதியான தீர்ப்பை வழங்கி விடக்கூடாது…
أن عمر
لقي العباس يوماً, فقال له: يا عباس لقد سمعت رسول الله صلَّى الله عليه وسلَّم
قبل موته يريد أن يزيد في المسجد، وإن دارك قريبة من المسجد، فاعطنا إيّاها نزدها
فيه، وأقطع لك أوسع منها مع التعويض،
فقال له
العباس: لا أفعل، قال عمر: إذاً أغلبك عليها ، أنا صاحب السلطة ، فأصدر لها أمرَ
استملاك، فأجابه العباس: ليس ذلك لك، فاجعل بيني وبينك من يقضي بالحق، فقال عمر:
من تختار؟, قال العباس: حذيفة بن اليمان،
وبدلاً
أن يستدعي سيدنا عمر حذيفة إلى مجلسه، انتقل عمر والعباس إليه، لماذا؟ لأن القاضي
يؤتى ولا يأتي، والعلم يؤتى ولا يأتي، هكذا الأدب،
حذيفة
الآن يمثل القضاء، وأحد الخصوم سيدنا عمر، خليفة المسلمين، وأمام حذيفة جلس عمر
والعباس، وقصا عليه الخلاف الذي بينهما،
فقال
حذيفة: سمعت أن نبي الله داود عليه السلام أراد أن يزيد في بيت المقدس، فوجد بيتاً
قريبـاً من المسجد، وكان هذا البيت ليتيم، فطلبه منه فأبى، فأراد داود أن يأخذه
قهراً، فأوحى الله إليه أن أنزه البيوت عن الظلم هو بيتي، فعدل داود، وتركه لصاحبه
، فالعباس نظر إلى عمر، وقال: ألا تزال تريد أن
تغلبني على ذلك؟، فقال له عمر: لا والله,
فقال العباس: ومع هذا, فقد أعطيتك الدار تزيدها
في مسجد رسول الله عليه الصلاة والسلام، أنا سوف أعطيها لك من عندي تبرعاً، أما أن
تغلبني عليها فلا تستطيع، وحذيفة هو القاضي بيننا .
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள்
உமர் (ரலி) அவர்கள்,
அப்பாஸ் (ரலி) அவர்களை சந்திக்க அவர்களின் வீட்டிற்குச்
சென்றார்கள்.
உரையாடலின் போது உமர் (ரலி) அவர்கள்,
அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும் போதே
மஸ்ஜிதுன் நபவீயை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று என்னிடம் விருப்பம்
தெரிவித்தார்கள்.
ஆனால், அந்த விருப்பத்தை நிறைவு செய்யும்
முன்னதாகவே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை மரணம் தழுவிக் கொண்டது.
ஆகவே, நான் நபி
{ஸல்} அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றலாம் என நினைக்கிறேன்” என்று கூறினார்கள்.
அது கேட்ட அப்பாஸ் (ரலி) அவர்கள்
”ஓ தாராளமாக
நிறைவேற்றுங்கள்! இதையெல்லாமா என்னிடம் நீங்கள்
கேட்பீர்கள்?” என்றார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் விஷயம் அதுவல்ல! மஸ்ஜிதுன் நபவீயை விரிவாக்கம் செய்ய வேண்டுமானால் அதற்கு சுற்றியுள்ள இடங்கள்
தேவைப்படுகிறது.
மஸ்ஜிதுன் நபவீயை ஒட்டினாற்போல் உங்களின் வீடும் இருக்கிறது; விரிவாக்கம் செய்வதற்கு உங்களின் வீட்டை விட்டுக் கொடுத்தீர்களானால், அதற்கு சிறந்த, தகுதியான பகரத்தை உங்களுக்குத் தருவதாக
நான் உறுதியளிக்கின்றேன்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அப்பாஸ் (ரலி) அவர்கள்
“இல்லை, என்னால் தர இயலாது” என்று கூறி விட்டார்கள்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள்
“ஒன்றும்
பிரச்சனையில்லை, நீங்கள் தர மறுக்கிற போது
ஆட்சியதிகாரத்தை வைத்து உமது நிலத்தை கையகப்படுத்த எமக்கு முழு சுதந்திரம்
இருக்கிறது” என்று கூறினார்.
அதற்கு, அப்பாஸ்
(ரலி) அவர்கள் “உம்முடைய அதிகாரத்திற்கு அதற்கான
சுதந்திரம் வழங்கப்பட வில்லை, உம்முடைய அதிகாரத்திற்கு அது அழகும் இல்லை” என்று கூறி விட்டு, என்னுடைய உரிமையை பறிக்கிற உம்
அதிகாரத்திற்கெதிராக நான் வழக்கு தொடுக்கப் போகின்றேன்” என்றார்கள்.
”ஆட்சியாளர் நான் இருக்க எனக்கு எதிராக
யாரிடம் வழக்கு தொடுப்பீர்? யார் எம்மை அழைத்து விசாரிக்கத் தைரியம்
படைத்தவர்கள்?” என்று கோபாவேசத்தோடு சீறவில்லை உமர் (ரலி) அவர்கள்.
அமைதியான குரலில் உமர் (ரலி) அவர்கள்
“சரி! இந்த விவகாரத்தில் நீர் யாரை நீதிபதியாக தேர்ந்தெடுக்கின்றீரோ அவர் வழங்கும்
நீதிக்கு இந்த உமர் கட்டுப்படுவார்” என்று கூறினார்கள்.
அதற்கு, அப்பாஸ்
(ரலி) அவர்கள் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்க நபித்தோழர் ஹுதைஃபா இப்னு அல் யமான் (ரலி) அவர்களிடம் நாம் இருவரும் செல்வோம்” என்றார்கள்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மஸ்ஜிதுன் நபவீ முழுவதிலும் நபித்தோழர்கள் நிறைந்து காணப்பட்டனர்.
பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழைக்கப்பட்டு அவர்களின் வாதப்
பிரதிவாதங்களை கேட்டறிந்தார்கள் இடைக்கால சிறப்பு நீதிபதி ஹுதைஃபா (ரலி) அவர்கள்.
ஏனென்றால், ஃகலீஃபா அவர்கள் தான் இஸ்லாமிய தேசத்தின்
பிரதான நீதிபதி, அதற்கு அடுத்து அந்தந்த மாகாண ஆளுநர்கள்
நீதிபதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
இப்போது, பிரதான நீதிபதி ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் மீது தான் அப்பாஸ் (ரலி) அதிகார துஷ்பிரயோக வழக்கு
தொடர்ந்திருந்தார்கள்.
முதலில் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள் வழக்கு குறித்து விசாரித்தார்கள்.
பின்னர், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உமர்
அவர்களே! உங்களின் நிலைப் பாடு என்ன? என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள்
“நீதிபதி அவர்களே! நான் என் சொந்த காரியத்திற்காக நிலம் கையகப்படுத்த என் அதிகாரத்தைப் பயன்
படுத்துவேன்! என்று கூறவில்லை.
மாறாக, முஃமின்களோடு தொடர்புடைய ஒரு
விவகாரத்தில், அல்லாஹ்வின் இல்லம் சம்பத்தப்பட்ட ஓர்
விஷயத்தில் அதுவும் முதலில் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அந்த இடத்திற்கு ஈடாக சிறந்த
பகரம் செய்யப்படும் என்று வாக்குறுதி தந்தேன். அவர் மறுக்கவே, எனக்கு வழங்கப்பட்டிருக்கிற ஆட்சியதிகாரத்தின் துணை கொண்டு நான் உம் நிலத்தை
கையகப் படுத்துவேன்” என்று கூறினேன்.
எனவே, நான் எப்படி குற்றமிழைத்தவனாக
கருதப்படுவேன்!” என்று உமர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.
அதற்கு, ஹுதைஃபா
(ரலி) அவர்கள் “உமர் அவர்களே! நபி {ஸல்} அவர்கள் கூற நான் செவியேற்றிருக்கின்றேன் “அல்லாஹ்வின் தூதர் தாவூத் {அலை} அவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியை
நிர்மாணிக்க ஆயத்தமான போது, இட விசாலத்திற்காக அருகே இருந்த ஓர்
அநாதைச் சிறுவனுக்குச் சொந்தமான இடத்தை அவனின் அனுமதி பெறாமலே பள்ளியின் ஒரு
பகுதியாகச் சேர்த்த போது அல்லாஹ் தம் தூதர் தாவூத்
{அலை} அவர்களை அழைத்துச் சொன்னானாம் “ஓ தாவூதே!
அநியாயமாக
அபகரிக்கப்பட்ட இடத்தை விட்டும் தூய்மையானதாக என்னை வணங்கும் இடம் அமைந்திருக்க
வேண்டுமென்று” அதற்குப் பின்னர் அந்த இடத்தை விட்டு
விட்டு தாவூத் {அலை} அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டினார்கள்.”
உமரே! உம் நோக்கம் உயர்வாக இருப்பினும் அதைக்
கையாண்ட விதம் தவறானது! என்று கூறினார்கள்.
அப்போது, அப்பாஸ்
(ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ”இதற்கு மேலும் எம்மிடம் இருந்து நீர் வலுக்கட்டாயமாக எம் வீட்டை பறித்துக்
கொள்வீரா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள்
“அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! ஒரு போதும் நான் உம்மிடம் அப்படி நடந்து
கொள்ள மாட்டேன்” என உறுதி கூறினார்கள்.
அதற்குப் பிறகு, அப்பாஸ்
(ரலி) அவர்கள் ”தங்களுடைய வீட்டை எந்தப் பிரதிபலனும்
வேண்டாம்” என்று கூறி ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். அதன் பின்னர் மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் செய்யப்பட்டது.
( நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:147
)
இங்கே, நாட்டின்
ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், நீதியின்
அடிப்படையில் அவர்களுக்கு எதிராகத் தான் தீர்ப்பு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்ட
போது, தமக்கு முன்னால் இருக்கிற அழுத்தம், கால நிர்பந்தம் எதையும் கவனத்தில்
கொள்ளாமல் ஹுதைஃபா (ரலி) அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
5.
காலத்தின் தேவை அறிந்து ஆய்ந்துணர்ந்து சட்டங்கள் இயற்றி அதன் மூலம் நீதி
வழங்க வேண்டும்..
தேசிய குற்றவியல் விசாரணை அமைப்பின் ஆண்டு விவர வெளியீட்டில், இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றும்
வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,2014 ஆம் ஆண்டினைப் பொறுத்த வரையில் நாட்டில் 33,981 கொலைகளும், 3,332 கொலைக்கு உடந்தையாக இருந்த வழக்குகளும்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014 –க்கு பிறகு
இது வரையிலான புள்ளி விவரங்களை எடுத்தால் அவ்வளவு தான். உண்மையில் கடுமையான தண்டனை
இல்லாததால் குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
கொலைக்குற்றமும்… இஸ்லாம் வழங்கும் தண்டனையும்…
நபிமார்கள் வருகை
நின்று நீண்ட இடைவெளி பெற்ற நாட்கள் அது.. மனித உயிர்களின் மதிப்பும்,
பெறுமதியும் மனித உள்ளங்களை விட்டும் அகன்று விட்ட காலம் அது... மனித இரத்தத்தை ஓட்டுவதை மிகவும் இலேசாக கருதி ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்துவதை
சாதாரணமாக கருதிய தருணம் அது.
ஆம்! அந்த காலத்தை அய்யாமுல் ஜாஹிலிய்யா – மடமையும்,
அறியாமையும் மூழ்கியிருந்த காலம் என்று கூட வரலாறு பேசும்.
உலக பேராசை, மடமைக்கால சிந்தனைகள் உள்ளங்களில்
குடிகொண்டிருந்த அந்த நாட்களில் அரேபியர்கள் மனிதனை விட மிருகங்களை
மதிப்பிற்குரியதாக மதித்து வந்தனர்.
இதன் காரணமாகவே
சாதாரண ஓர் ஒட்டகத்திற்காக அரேபியர்களுக்கு மத்தியில் பல தலைமுறைகளாக யுத்தங்கள் மூண்டுள்ளன. இதனால் பல உயிர்கள் மாய்ந்து போய் உள்ளன. பல கோடி பேர் படு காயங்களுக்கு ஆளாகி உள்ளனர். மனித இரத்தங்கள் வெள்ளமாக ஓடி உள்ளன.
கவிதையின் ஒரு
வரியின் காரணமாக,
அல்லது ஒரு வார்த்தையின் காரணமாக இரு வெவ்வேறு அரபு கோத்திரங்களிடையே பாரிய யுத்தங்கள் மூண்ட வரலாறுகளும் உண்டு. “யுத்தத்தின் ஆரம்பம் ஒரு வார்த்தை” என்பது அரேபியர்களின்
பழமொழி.
ஏதேனும் ஒரு
அரேபிய கோத்திரத்தில் மதிப்பிற்குரிய ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டால்,
அதற்காக பல பேரை பலி தீர்க்காமல் விடமாட்டார்கள். கொலை குற்றங்களை சாதரணமாகவும், இலேசாகவும் கருதி
வந்தார்கள் அரேபிய மக்கள்.
இந்த தருணத்தில்
தான் இஸ்லாம் வந்தது,
அறிவொளி வீசி, குருடாய்
போயிருந்த அவர்களின் அகக்
கண்களை திறந்தது. மனித சமூகத்திற்கு உரிய மதிப்பை வழங்கியது.
அல்லாஹ்வின்
தூதுச் செய்தியை ஏந்தி நின்ற இறுதி இறைத்தூதர் முஹம்மது {ஸல்} அவர்கள் அந்த
மனிதர்களின் வாழ்க்கைப் போங்குகளை மாற்றி அமைத்தார்கள்.
வறுமைக்குப்
பயந்து சிசுக்கொலை, கவுரவக்கொலை, ஆணவக்கொலை, என்ற பல்வேறு வடிவங்களினாலான
அவர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு முற்றுப் புள்ளி வைத்து கோடான கோடி
மனிதர்களின் வாழ்வை செம்மை படுத்தும் புனிதர்களாக அவர்களை மாற்றினார்கள்.
ஒரு உயிருக்கு
பதிலாக ஒரு சமூகத்தையே கொன்று குவித்தவர்கள் என்று வரலாறு குறிப்பிடும் ஒரு
சமூகத்தை நல்வழிப்படுத்தும் பணியில் இறங்கிய மாநபி {ஸல்} அவர்கள் துவக்கமாக மனிதன்
என்பவன் யார்? மனிதனின் மாண்பு என்ன? மனிதர்களிலே நிகழ்கிற ஏற்றத் தாழ்வுகள்
எதனால்? என்பதற்கான விடையைத் தந்தார்கள்.
وَمَنْ
أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
المائدة:
32.
மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். ( அல்குர்ஆன்: 5: 32 )
இரண்டாவதாக, கொலை
என்பது குற்றச் செயல் என்பதாக அறிவித்து, அது எவ்வளவு பார தூரமான விளைவுகளை
ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்கள்.
قال
الله – عز وجل -: مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا
قَتَلَ النَّاسَ جَمِيعًا
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே
கொலை செய்தவன் போலாவான்”. ( அல்குர்ஆன்: 5: 32 )
وَالَّذِينَ
لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي
حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ
أَثَامًا (68) يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ
مُهَانًا
“அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்க மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள்
நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் –
ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். கியாம நாளில் அவருடைய
வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர். ( அல்குர்ஆன்: 25: 68, 69 )
عن عبد
الله بن مسعود – رضي الله عنه – قال: قال النبي – صلى الله عليه وسلم -: «أول ما
يُقضَى بين الناس في الدماء»؛ أخرجه البخاري ومسلم.
“மனிதர்களுக்கு மத்தியில்
கொலை குற்றங்கள் சம்பந்தமாகவே மறுமையில் முதலில் விசாரணை நடாத்தப் படும்” என இறைத் தூதர் {ஸல்}
அவர்கள் கூறியதாக
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
قال النبي
– صلى الله عليه وسلم -: «أكبرُ الكبائر: الشرك بالله، وقتل النفس، وعقوق
الوالدين، وقول الزور»
“அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறு செய்வது, கொலை செய்வது மற்றும் பொய் பேசுவது ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
قال
رسول الله – صلى الله عليه وسلم -: «كل دمٍ عسى الله أن يغفره إلا الرجل يموتُ
كافرًا، أو الرجل يقتل مؤمنًا متعمِّدًا»؛ أخرجه أبو داود، وقال الحاكم: صحيحٌ
الإسناد، وأخرجه النسائي أيضًا.
“இறை நிராகரிப்பாளனாக
மரணித்தவனையும்,
ஒரு இறை விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தவனையும் தவிர ஏனையோர் அனைவரினதும் பாவங்களையும் இறைவன் மன்னிக்க கூடும்”
என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூ தாவூத், நஸாஈ )
عن ابن
عمر – رضي الله عنهما – قال: قال رسول الله – صلى الله عليه وسلم –
«لن يزال المسلمُ في
فُسحةٍ من دينه ما لم يُصِب دمًا حرامًا»؛ رواه البخاري.
ஒரு முஸ்லிம்
அநியாயமாக ஒருவரை கொலை செய்து விட்டால் அவனது மார்கத்தின் விசாலத் தன்மையில் இருந்து அவன் தூரமாக்கப்பட்டு விடுவான். (இறை அருளை இழந்து அவனது நிலைமகள் நெருக்கடியாக மாறிவிடும்) என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : புகாரி )
மூன்றாவதாக,
இறைநம்பிக்கை சக முஸ்லிம் ஒருவரை கொலை செய்வதால் ஏற்படும் விளைவுகளை
எச்சரித்தார்கள்.
وَمَا
كَانَ لِمُؤْمِنٍ أَنْ يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَأً وَمَنْ قَتَلَ مُؤْمِنًا
خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ
إِلَّا أَنْ يَصَّدَّقُوا فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ
مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ
وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ
مُؤْمِنَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً
مِنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (92) وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا
مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ
وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا (93)
“தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப்
பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய
குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
அவனுடைய
குடும்பத்தார்
(நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட
அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக
இருந்தால்,
முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன்
உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச்
சேர்ந்தவனாக
இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர்
அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக
இருந்தால்,
அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும்.
அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும்,
பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;
இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். ( அல்குர்ஆன்: 4: 92, 93 )
நான்காவதாக
கொலைக்குற்றம் அதற்கான சட்ட வடிவங்களை இறைவனின் தூதுச் செய்தியை அடிப்படையாகக்
கொண்டு நிறுவினார்கள்.
وَلَا
تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ ؕ وَمَنْ
قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِـوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى
الْقَتْلِ ؕ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا
”(கொலையை) அல்லாஹ்
விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து
விடாதீர்கள்;
எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம்
அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம்
பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின்
வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்”.
( அல்குர்ஆன் 17:33
)
وكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ
بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ
بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ (45)
“அவர்களுக்கு நாம்
அதில், “உயிருக்கு உயிர்,
கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு,
காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக
பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர்
(பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி
வைத்த (வேதக்
கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள்
அநியாயக் காரர்களே!. ( அல்குர்ஆன் 5:
45 )
حَدَّثَنَا مُحَمَّدٌ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ شُعْبَةَ عَنْ هِشَامِ بْنِ
زَيْدِ بْنِ أَنَسٍ عَنْ جَدِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ خَرَجَتْ جَارِيَةٌ
عَلَيْهَا أَوْضَاحٌ بِالْمَدِينَةِ - قَالَ - فَرَمَاهَا يَهُودِىٌّ بِحَجَرٍ -
قَالَ - فَجِىءَ بِهَا إِلَى النَّبِىِّ - صلى الله عليه وسلم - وَبِهَا رَمَقٌ
فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « فُلاَنٌ قَتَلَكِ » .
فَرَفَعَتْ رَأْسَهَا ، فَأَعَادَ عَلَيْهَا قَالَ « فُلاَنٌ قَتَلَكِ » .
فَرَفَعَتْ رَأْسَهَا ، فَقَالَ لَهَا فِى الثَّالِثَةِ « فُلاَنٌ قَتَلَكِ » . فَخَفَضَتْ
رَأْسَهَا ، فَدَعَا بِهِ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - فَقَتَلَهُ
بَيْنَ الْحَجَرَيْنِ .
அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“மதீனாவில் வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி வெளியே
சென்றாள். அப்போது அச் சிறுமியின் மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான்.
உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் அச் சிறுமி நபியவர்களிடம்
கொண்டுவரப்பட்டாள்.
அச் சிறுமியிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”இன்னார் உன்னைத் தாக்கினாரா? என்று இரண்டு முறை (யாரோ இரு நபர்களின் அடையாளங்களையோ, அல்லது பெயர்களையோ கூறி) கேட்டார்கள். அவள் இல்லை என்று தலையால் சைகை
செய்தாள்.
மூன்றாம் முறையாக அவளிடம் “இன்னாரா உன்னைத் தாக்கினார்? என்று கேட்ட போது, அவள் கீழ் நோக்கி (ஆம் என்று கூறும்
விதமாக) தாழ்த்தி தலையால் சைகை செய்தாள்.
ஆகவே, அந்த யூதனை அழைத்து வருமாறு நபி {ஸல்} ஆணை பிறப்பித்தார்கள். அவனை அழைத்து வந்து விசாரித்த போது அவன் குற்றத்தை
ஒப்புக்கொண்டான். ஆகவே,
இரு கற்களுக்கிடையில் வைத்து அவனது தலையினை நசுக்கிக்
கொல்லுமாறு நபி {ஸல்}
அவர்கள் உத்தரவிட்டார்கள்.
( நூல்: புகாரி,
பாடம்,பாபு இதா கதல பிஹஜரின் அவ் பிஅஸா )
இஸ்லாம் எனும் கொடையின் கீழ்
மாநபி {ஸல்} அவர்கள் வகுத்துத் தந்த குற்றவியல் சட்டங்களானது 1. குற்றம் செய்தால் கடும்
தண்டனை கிடைக்கும் என்கிற பயத்தையும், 2. பாதிப்புக்குள்ளானவனின் மனம் வழங்கப்படும்
தீர்ப்பின் மூலம் அமைதியையும், 3. இனி எந்த குற்றத்தையும் செய்து விடக்கூடாது என்கிற
உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துகிறது.
இறுதியாக…
இஸ்லாத்தில்
“அல் – அத்ல்”
எனும் நீதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்…
இஸ்லாத்தில் அல்
– அத்ல் நீதி மற்றும்
நீதிபரிபாலனம் பற்றிய வரையறை
மிக உயர்ந்த பண்பாடாக
அடையாளப்படுத்தப்படுகின்றது.
நீதி பரிபாலனம்
என்பது நபித்துவப் பணிகளில்
ஒன்றாக அல்குர்ஆனின் பல
வசனங்கள் பறை சாற்றுகின்றது.
இன்னும் சொல்லப்போனால்
நீதி பரிபாலனம் என்பது
வணக்க வழிபாடுகளில் ஒன்றாக
கருதப்படுகின்றது.
மனித சமூகங்களுக்காக அனுப்பப்பட்ட அனைத்து
நபிமார்களும், இறைதூதுவர்களாக வாழ்ந்து
வந்த அதே வேளையில்
நீதியை நிலை நாட்டும்
நீதிபதிகளாகவும் செயல்பட்டார்கள் என அல்குர்ஆன்
குறிப்பிடுகின்றது.
لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ
الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ
“நமது தூதர்களைத்
தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம்.
அவர்களுடன் வேதத்தையும் மக்களுக்கு
நீதியினை நிலை நாட்ட
தராசையும் நாம் அருளினோம்”.
( அல்குர்ஆன்:
57: 26 )
இறுதியாக வந்த
இறைத்தூதர் முஹம்மது {ஸல்}
அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில்
நீதித்துறையும் இருந்ததாக குர்ஆன்
குறிப்பிடுகின்றது.
فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ
“அல்லாஹ் அருளியதன்
அடிப்படையில் அவர்களிடையே (நபியே!)
நீர் தீர்ப்பளிப்பீராக!” (
அல்குர்ஆன்: 5: 48 )
இது தவிர்த்து
அல்குர்ஆனின் பல இடங்களில்
நீதிபரிபாலனம் குறித்து மிகத்
தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
நீதி பரிபாலனம்,
நீதி, நீதமான நடத்தை
ஆகியவைகள் இஸ்லாமிய வாழ்வியல்
கோட்பாட்டில் தவிர்க்க முடியாத
அடிப்படை என்பதே அல்குர்ஆனின்
அநேக வசனங்களின் கருத்துமாகும்.
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ
“மக்களுக்கு மத்தியில்
தீர்ப்பளிக்கும் போது
நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க
வேண்டும் எனவும் அல்லாஹ்
உங்களுக்கு கட்டளையிடுகின்றான்”. (அல்குஆன்:4:
58 )
“எனது அடியார்களே!
நிச்சயமாக, என் மீது
நானே அநீதியைத் தடை
செய்துள்ளேன். அது போன்றே
உங்கள் மீதும் அதனைத்
தடை செய்துள்ளேன். எனவே,
நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி
இழைக்க வேண்டாம்” என்கிற
இந்த வார்த்தை அல்லாஹ்வின்
கலாமைச் சுமந்து நிற்கிற
ஹதீஸ் குத்ஸியாகும்.
இறைத்தூதுத்துவத்தின் இலட்சியமும்,
இலக்கும் மனிதர்களிடையே அநீதியை
ஒழித்து நீதியை நிலைநாட்டுவது
என்கிற இந்த அடிப்படை
கோட்பாடே “நீதிக்கான இஸ்லாத்தின்
நிலைப்பாட்டை” தெரிவிக்க போதுமானதாகும்.
நீதி வழங்கும்
ஒருவர் ஒரு வழக்கில்
தனக்கு எப்படி தீர்ப்பு
வழங்கப்பட்ட வேண்டுமென்று அவர்
எதிர் பார்க்கின்றாரோ அவ்வாறே
தன்னிடம் நீதி கேட்டு
வந்து நிற்பவர்களுக்கும் தீர்ப்பு
வழங்க வேண்டும் என்று
சர்வதேச சட்டம் கூறுகின்றது.
ஆனால், இஸ்லாமிய
மார்க்கம் அதையும் தாண்டி
“நீங்கள் வழங்கும் தீர்ப்பு
உங்களுக்கே விரோதமாக இருந்தாலும்
கூட நீதி தவறாதீர்கள்”
என்கிறது.
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا
يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ
لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில்
நிலைத்திருப்போராகவும், நீதிக்கு சான்று
வழங்குவோராகவும் திகழுங்கள்!
எந்த ஒரு கூடத்தார்
மீதும் நீங்கள் கொண்டுள்ள
பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து
விடக்கூடாது. நீங்கள் நீதி
செலுத்துங்கள்! இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானதாகும்.
அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! நீங்கள்
செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவனாக
இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்:
5: 8 )
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ
عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا
أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ
تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا
تَعْمَلُونَ خَبِيرًا (135)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்போராகவும்,
அல்லாஹ்வுக்காக சான்று வழங்குவோராகவும் திகழுங்கள்! நீங்கள்
செலுத்தும் நீதியும், வழங்குகின்ற
சான்றும் உங்களுக்கோ, உங்கள்
பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ
பாதகமாக இருந்தாலும் சரியே!
நீங்கள் யாருக்காக நீதியும்,
சான்றும் வழங்குகின்றீர்களோ அவர்
செல்வந்தராகவோ, ஏழையாகவோ இருந்தாலும்
சரியே! அல்லாஹ் அவர்களின்
நலனில் உங்களை விட
அதிக அக்கறை உள்ளவனாக
இருக்கின்றான்.
எனவே, மன
இச்சையைப் பின்பற்றி நீதி
தவறி விடாதீர்கள். நீங்கள்
உண்மைக்குப் புறம்பாக சான்று
வழங்கினாலோ, சான்றளிக்காமல் விலகிச்
சென்றாலோ திண்ணமாக! அல்லாஹ்
நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கறிந்தவனாக
இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்:
4: 135 )
தனி சிறப்பு நீதிமன்றங்களை
உருவாக்குவதை விட்டு விட்டு, தரமான கடும் குற்றவியல் சட்டத்தை இயற்றிட முன்வாருங்கள்!
குற்றங்கள் புரியாத நல்லதொரு
மனித சமூகம் அமைப்போம்!!
No comments:
Post a Comment