திருமணம் எனும் அருட்கொடை – 2
இன்று உலகில்
மனிதனோடு தொடர்புடைய எல்லாத்
துறைகளுக்கும் அது சம்பந்தமான
அறிவும், அனுபவமும் அவசியம்
தேவைப்படுகின்றது.
ஒருவர் மருத்துவராக,
வியாபாரியாக, மாவட்ட ஆட்சித்தலைவராக,
அதிகாரியாக, டீக்கடையில் மாஸ்டராக,
ஹோட்டல் சர்வராக இப்படி
யாராக ஆக வேண்டுமானாலும் அது சம்பந்தமான
அறிவும், அனுபவமும் அவசியம்
தேவைப்படுகின்றது.
ஆனால், இந்த
உலகில் ஒரு துறை
சார்ந்த எவ்வித அறிவும்,
தெளிவும் இல்லாமல் அதை
மிகவும் ஆடம்பரமாகவும் எல்லோரும்
பார்க்கும், மெச்சும் வண்ணமும்
செய்யப்படுகின்றது என்றால்
அது திருமணம் மட்டுமே.
கணவன் – மனைவி
என்று துவங்கி தம்பதியர்,
தாய் – தந்தை, மாமா
– அத்தை, தாத்தா – பாட்டி
சம்மந்தி என பல்வேறு
கட்டங்களாக வாழ்க்கையில் பரிணமிக்கிற
ஓர் உறவு தான்
திருமணம் என்கிற உறவு.
திருமணம் என்றால்
வெறும் உடல் ரீதியான
தேவைக்கு மட்டும் தானா?
அல்லது, குலமும், பாரம்பர்யமும்
தழைத்தோங்குவதற்காகவா? அல்லது பணம்,
அழகு, குடும்பம் என்று
பெருமை பேசுவதற்கா? உண்மையில்,
திருமணம் என்பதை சமீப
காலங்களாக சமூகம் சடங்காகவும்,
சம்பிரதாயமாகவும் பார்க்க
ஆரம்பித்துள்ளதை உணர
முடிகின்றது.
எனவே, திருமணம்
குறித்தான அறிவையும், இல்லற
வாழ்விற்கு தேவையான வழிகாட்டுதலையும் திருமணத்திற்கு தயாராகி
நிற்கிற ஒரு முஸ்லிம்
ஆணும், ஒரு முஸ்லிம்
பெண்ணும் கட்டாயம் தெரிந்து
வைக்க வேண்டும்.
இஸ்லாம் திருமண
உறவின் மூலம் வாழ்க்கைத்
துணையாய் இணைகிற கணவன்
– மனைவி என ஒவ்வொருவருக்கும் கடமைகளையும், உரிமைகளையும்
வழங்கி அதன்படி செயலாற்று
மாறு வலியுறுத்துகின்றது.
கணவனுக்கு மனைவியின்
மீதான கடமைகள், உரிமைகள்
என்றும் மனைவிக்கு கணவன்
மீதான கடமைகள், உரிமைகள்
என்றும் தனித்தனியே இஸ்லாம்
வழங்கியிருக்கின்றது.
هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ
“அவர்கள் உங்களுக்கு
ஆடைகளைப் போன்றவர்கள்; நீங்கள்
அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்”. ( அல்குர்ஆன்:
2: 187 )
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ
عَلَيْهِنَّ دَرَجَةٌ
“பொதுவான நியதிப்படி
ஆண்கள் மீது பெண்கள்
மீது சில உரிமைகள்
உள்ளன. பெண்கள் மீது
ஆண்களுக்கு உள்ள சில
உரிமைகளைப் போல”. ( அல்குர்ஆன்:
2: 227 )
அதே போன்று
உலகில் வேறெந்த இஸங்களும்,
சமயங்களும், சட்டங்களும், சித்தாந்தங்களும் கூறாத அதி
உன்னத பண்பாடுகளையும், ஒழுக்காறுகளையும் இல்லற வாழ்வின்
மகிழ்ச்சிக்கான காரணங்களாக இஸ்லாம்
அடையாளப்படுத்தி இருக்கின்றது.
அந்த வகையில்
இல்லற வாழ்வில் தம்பதியராய்
இணைகிற இருவருக்குமான பொதுவான
சில பண்புகளை மகிழ்ச்சியான
வாழ்வின் அடிப்படை அம்சங்களாக
உயர்த்திக் கூறுகின்றது.
இருவருக்குமான பொதுவான பண்புகள் சில...
நாம் பங்கு
பெறுகிற இஸ்லாமியத் திருமணங்கள்
ஒவ்வொன்றிலும் பின்வரும் குத்பாவைக்
கொண்டு நிகாஹ் மஜ்லிஸ்
ஆரம்பிக்கப்படும். கணவன் மனைவியாய்
இணைகிறவர்கள் உட்பட அனைவருக்குமான
வாழ்வின் அடிப்படை கோட்பாடுகளை
நினைவு படுத்துகிற அற்புதமான
நினைவூட்டல் என்றால் அது
மிகையல்ல.
ஆனால், எங்கே
நாம் அதை செவி
கொடுத்து கேட்கின்றோம். நம்
சிந்தனையும் பார்வையும், கவனமும்
வேறெங்கோ அல்லவா சுற்றிக்
கொண்டு இருக்கின்றது.
وَعَنْ
عَبْدِاللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
عَلَّمَنَا
رَسُولُ اللَّهِ ﷺ التَّشَهُّدَ فِي الْحَاجَةِ
إِنَّ الْحَمْدَ
لِلَّهِ، نَحْمَدُهُ، وَنَسْتَعِينُهُ، وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ
مِنْ شُرُورِ أَنْفُسِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، ومَن يُضلل
فلا هادي له، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ
مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَيَقْرَأُ
ثَلَاثَ آيَاتٍ. رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ،
وَالْحَاكِمُ
والآيات
بيَّنها في الرواية الأخرى: أنها آية آل عمران
يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ
مُسْلِمُونَ
يَا
أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ
وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً
وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ
عَلَيْكُمْ رَقِيبًا الثالثة آية الأحزاب
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“எங்களுக்கு நபி {ஸல்}
அவர்கள் தொழுகையில் ஓதக்கூடிய
தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின்
“இது திருமணத்தின் போது
ஓதக்கூடிய தஷஹ்ஹுத்” எனக்கூறி
அதனையும் ஓதிக் காட்டினார்கள்.
“நன்றியும், புகழும்
அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்! நாம்
அவனிடமே உதவி தேடுகின்றோம்;
அவனிடத்திலேயே மன்னிப்பும் கோருகின்றோம்.
எங்களுடைய மனதின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே
அல்லாஹ்விடம் அபயம் தேடி
ஒப்படைத்தும் விடுகின்றோம்.
எவருக்கு அல்லாஹ்
நேர்வழியை வழங்கி விட்டானோ
அவரை எவரும் வழிகெடுக்க
இயலாது. அவன் எவனை
வழி தவறச் செய்து
விட்டானோ அவனுக்கு யாரும்
நேர்வழி காட்ட இயலாது.
மேலும், அல்லாஹ்வைத்
தவிர வணக்ககத்திற்குரியவன் எவரும்
இல்லை என நான்
சாட்சி கூறுகின்றேன். மேலும்,
முஹம்மத் {ஸல்} அவர்கள்
அல்லாஹ்வின் அடியார் என்றும்
அல்லாஹ்வின் தூதர் என்றும்
நான் சாட்சி கூறுகின்றேன்”.
பிறகு அப்துல்லாஹ்
இப்னு மஸ்வூத் (ரலி)
அவர்கள் மூன்று இறைவசனங்களை
ஓதிக் காண்பித்தார்கள். ஸுஃப்யான்
அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களின்
விளக்கப்படி அந்த மூன்று
வசனங்களாவன:
1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு
அஞ்ச வேண்டிய முறைப்படி
அஞ்சுங்கள். மேலும், நீங்கள்
முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்க
வேண்டாம்:. ( அல்குர்ஆன்:
3: 102 )
2. மனிதர்களே! உங்களை ஓர்
ஆன்மாவிலிருந்து படைத்த
உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள்.
மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை
அவன் உண்டாக்கினான். மேலும்,
அவை இரண்டின் மூலம்
உலகில் அதிகமான ஆண்களையும்,
பெண்களையும் பரவச் செய்தான்.
மேலும், எந்த அல்லாஹ்வின்
பெயரைக் கூறி நீங்கள்
ஒருவர் மற்றவரிடம் உரிமைகளைக்
கோருகின்றீர்களோ அந்த
அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்.
மேலும், இரத்த பந்த
உறவுகளைச் சீர் குலைப்பதிலிந்து நீங்கள் விலகி
வாழுங்கள். திண்ணமாக அறிந்து
கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களைக்
கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 4: 1 )
3. இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய
வண்ணம் இருங்கள். மேலும்,
சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச்
சொல்லுங்கள். இப்படிச் செய்தீர்கள்
எனில், அல்லாஹ் உங்கள்
செயல்களை (நிலைகளை) ச்சீர்
திருத்துவான். பாவங்களை மன்னித்திடுவான்.
அல்லாஹ்வுக்கும் அவனுடைய
தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள்
பெரும் வெற்றியை அடைவார்கள்:. ( அல்குர்ஆன்:
33: 70,71 ), நூல் திர்மிதீ )
மேற்கூறிய இந்த
குத்பாவை நன்கு கவனிக்கும்
பட்சத்தில் மாநபி {ஸல்}
அவர்கள் மறைமுகமாக திருமணக்
கோலத்தில் இருக்கும் அந்த
இளம் ஜோடியையும், ஒட்டு
மொத்த முஸ்லிம் சமூகத்தையும்
பின்வரும் விஷயங்களைக் கொண்டு
எச்சரிக்கை செய்வது மிக
அற்புதமாக விளங்கும்.
1.
முதலில் கூறப்படும் இறைவசனத்தில் இருந்து விடப்படும் எச்சரிக்கைகள் இது
தான்.
திருமணம் எனும்
இந்த பந்தத்தில் இணையும்
ஆணோ அல்லது பெண்ணோ
திருமணத்திற்கு முன் அல்லாஹ்வைப்
பயந்து வாழ்வதில் மிகவும்
கவனத்தோடு இருந்திருக்கலாம். அதே
கவனம் திருமணத்திற்கு பிந்தைய
வாழ்விலும் தொடர வேண்டும்.
வழிபாடுகள், ஹராம்
& ஹலால், ஏவல் & விலக்கல்,
கொடுக்கல் & வாங்கல், உறவுகளைப்
பேணுதல், தானதர்மம் செய்தல்
என அனைத்து விவகாரங்களிலும் முன்பைப் போல
அல்லது முன்பை விட
அதிகமாக அல்லாஹ்வைப் பயந்து,
வாழ்வின் எல்லா நிலைகளிலும்
முஸ்லிம்களாகவே வாழ்ந்திட வேண்டும்.
தற்போது முஸ்லிம்களாக
வாழ்வது எவ்வாறு முக்கியமான
ஒரு அம்சமோ அதே
போன்று வாழ்வின் இறுதி
கட்டமும் (கலிமாவை மொழிந்து)
முஸ்லிம் எனும் அடிப்படையில்
அமைந்திருக்க வேண்டும்.
திருமண வாழ்விற்குப்
பிறகு ஏனோ தானோவென்று
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மாறிவிடக்கூடாது.
இன்று சமூகத்தில்
திருமணத்திற்கு முன் நல்லவர்களாக
வாழ்ந்தவர்கள் எவ்வளோ பேர்
கெட்ட பண்புள்ளவர்களாக மாறி
இருக்கின்றார்கள்.
2.
இரண்டாவதாக ஓதப்படும் வசனத்தில் இருந்து விடப்படும் எச்சரிக்கைகள் இது
தான்.
சமூகத்தில் கணவன்/மனைவி
தங்களின் படிப்பு, சம்பளம்,
நிறம், அழகு, குடும்பம்
என இவைகளை அடிப்படையாகக்
கொண்டு தங்களில் ஒருவரை
விட ஒருவர் உயர்வாக
நினைக்கக் கூடாது என்பதை
மேற்கூறிய இறை வசனம்
உணர்த்துகின்றது.
இன்று சமூகத்தில்
பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாய்
அமைந்திருப்பது மேற்கூறிய ஈகோ
தான் என்றால் அது
மிகையல்ல.
மேலும், மனைவி
எனும் உறவு வந்ததும்
முழுவதும் அவள் பக்கம்
சாய்ந்து தம் பெற்றோர்,
சகோதர, சகோதரிகளுடனான உறவை
வெறுப்பதும், துண்டிப்பதும் மனைவியின்
குடும்பத்தார் மீது பாசம்
காட்டுவதும், நெருக்கம் காட்டுவதும்
அதே போன்று கணவன்
எனும் உறவு வந்ததும்
முழுவதும் அவன் பக்கம்
சாய்ந்து தம் பெற்றோர்,
சகோதர சகோதரிகளுடனான உறவை
தூக்கி எறிவதும் தவறு
என்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்று சமூகத்தில்
அநேக தம்பதியரிடம் இந்த
பிழைகள் நிகழ்வதை கண்கூடாக
பார்க்க முடிகின்றது.
3.
மூன்றாவதாக ஓதப்படும் வசனத்தில் இருந்து விடப்படும் எச்சரிக்கைகள் இது
தான்.
இல்லற வாழ்வில்
சிறு சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரையொருவர்
திட்டுவதும், ஏசுவதும், தகாத,
ஆபாச வார்த்தைகளால் பேசுவதும்
தவிர்த்துக் கொள்ள வேண்டும்
என்றும், நல்ல இல்லற
வாழ்விற்கு நன்முறையில் உறவாடுவதே
அடிப்படை என்றும் இந்த
வசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று சமூகத்தில்
பல தம்பதியர் பொது
வெளியில் நின்று மிகக்
கேவலமான முறையில் பேசிக்
கொள்வதும், திட்டிக் கொள்வதும்
சாதாரணமாகிப் போனதையும் பார்க்க
முடிகின்றது.
உயரிய இந்த
கருத்துக்களை சுமந்திருப்பதால் தான்
என்னவோ எந்த ஒரு
உரையாக இருந்தாலும் அதன்
துவக்கத்தில், குறிப்பாக திருமணத்தின்
துவக்கத்தில் இதை மாநபி
{ஸல்}
அவர்கள் ஓதியும், இந்த
உம்மத்தை ஓதுமாறு வலியுறுத்தியும் நெறிப்படுத்தியுள்ளார்கள்.
மேற்கூறிய நான்கு
பண்புகளும் மகிழ்ச்சியான வாழ்விற்கான
அடிப்படை பண்புகளாகும்.
உடல்
ரீதியான உணர்வுகளை தம்பதியர் இருவரும் மதிக்க வேண்டும்..
عن أبي
سعيد الخدري رضي الله عنه قال: جاءت امرأة صفوانَ بنِ المعطَّل إلى النبي صلى الله
عليه وسلم ونحن عنده، فقالت: يا رسول الله، إن زوجي صفوانَ بنَ المعطَّل، يضربني
إذا صليت، ويفطِّرني إذا صمت، ولا يصلِّي صلاة الفجر حتى تطلعَ الشمس. قال: وصفوان
عنده، قال: فسأله عما قالت؟ فقال: يا رسول الله، أماقولها: يضربني إذا صليت، فإنها
تقرأ سورتين، فقد نهيتها عنها، قال: فقال: (لو كانت سورةً واحدةً لكفت الناس)،
وأما قولها: يفطِّرني، فإنها تصوم وأنا رجلٌ شابٌّ فلاأصبر، قال: فقال رسول الله
صلى الله عليه وسلم يومئذ: (لا تصومنَّ امرأةٌ إلاّ بإذن زوجها). قال: وأما قولها:
بأني لا أصلي حتى تطلع الشمس، فإنّا أهل بيت قد عرف لنا ذاك، لانكاد نستيقظ حتى
تطلع الشمس، قال: فإذا استيقظت فصل
அபூஸயீத் அல்
குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
தோழர்களோடு அமர்ந்திருந்த சபைக்கு
ஒரு பெண்மனி வருகை
தந்தார்கள். அப்போது நாங்கள்
மாநபி {ஸல்} அவர்களின்
அருகாமையில் இருந்தோம்.
அந்தப்பெண்மனி மாநபி
{ஸல்}
அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே!
என் கணவர் ஸஃப்வான்
இப்னு முஅத்தில், தொழுதால்
என்னை அடிக்கிறார். நான்
நோன்பு நோற்றால் நோன்பை
முறித்து விடும்படி வற்புறுத்துகின்றார்.
அவர் சூரியன் உதயமாகிவிடும்
வரை ஃபஜ்ர் தொழுகை
தொழுவதில்லை” என்று புகார்
கூறினார்.
அந்த நேரத்தில்,
ஸஃப்வான் இப்னு முஅத்தில்
(ரலி)
அவர்கள் அந்த சபையில்
தான் இருந்தார்கள். அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
ஸஃப்வான் (ரலி) அவர்களிடம்
அவரது மனைவியின் புகார்
குறித்து விளக்கம் கேட்டார்கள்.
அதற்கு, ஸஃப்வான்
(ரலி)
அவர்கள் “அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களே! என் மனைவி
தொழுதால் நான் அடிப்பதாகக்
கூறும் குற்றச்சாட்டின் உண்மை
நிலை இதுவே! என்
மனைவி தொழுகையில் இரண்டிரண்டு
அத்தியாயங்கள் ஓதுகிறார். அதனால்
நான் அதை தடுப்பதுண்டு”
என்றார்கள். அப்போது, ஸஃப்வானின்
மனைவியை நோக்கி மாநபி
{ஸல்}
அவர்கள் “ஒரு அத்தியாயம்
ஓதுவது போதுமானதாகும்” என்றார்கள்.
பிறகு ஸஃப்வான்
(ரலி)
அவர்கள் “அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களே! என் மனைவி
நோன்பு நோற்றால் நான்
முறித்துவிடுமாறு வற்புறுத்துவதாகக் கூறும் குற்றச்சாட்டின் உண்மை நிலை
இதுவே! என் மனைவி
தொடர்ந்து(உபரியான – நஃபிலான)
நோன்பு வைத்துக் கொண்டே
இருக்கின்றார். நானோ ஒரு
வாலிபன், என்னால் பொறுத்துக்
கொள்ள இயலவில்லை!” என்றார்கள்.
அப்போது, ஸஃப்வானின்
மனைவியை நோக்கி மாநபி
{ஸல்}
அவர்கள் “எந்தப் பெண்ணும்
தன் கணவனின் அனுமதியின்றி
(உபரியான – நஃபிலான) நோன்பு
நோற்கக் கூடாது” என்றார்கள்.
அதன் பிறகு,
ஸஃப்வான் (ரலி) அவர்கள்
“அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களே! என் மனைவி
நான் சூரியன் உதயமாகும்
வரை ஃபஜ்ர் தொழுவதில்லை
என்பதாகக்கூறும் குற்றச்சாட்டின் உண்மை நிலை
இதுவே! சூரியன் உதயமாகாத
வரை கண்விழிக்க முடியாதவர்கள்
என்று பிரபல்யமடைந்துள்ள ஒரு
குடும்பத்தச் சேர்ந்தவர்கள் நாங்கள்”
என்றார்கள்.
அப்போது, ஸஃப்வானை
நோக்கி மாநபி {ஸல்}
அவர்கள் “ஸஃப்வானே! நீர்
கண் விழிக்கும் போது
தொழுது கொள்வீராக!” என்றார்கள். ( நூல்: அபூதாவூத்
)
وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال :
قال لي رسول الله صلى الله عليه وسلم : يا عبد الله ألم أخبر أنك تصوم النهار
وتقوم الليل فقلت : بلى يا رسول الله ، قال : فلا تفعل صم وأفطر وقم ونم فإن لجسدك
عليك حقا وإن لعينك عليك حقا وإن لزوجك عليك حقا وإن لزوْرك عليك حقا وإن بحسبك أن
تصوم كل شهر ثلاثة أيام فإن لك بكل حسنة عشر أمثالها فإن ذلك صيام الدهر كله
فشدَّدتُ فشدَّد عليَّ قلت يا رسول الله إني أجد قوة قال فصم صيام نبي الله داود
عليه السلام ولا تزد عليه قلت وما كان صيام نبي الله داود عليه السلام قال نصف
الدهر فكان عبد الله يقول بعد ما كبر يا ليتني قبلت رخصة النبي صلى الله عليه وسلم
. رواه البخاري ( 1874 ) ومسلم ( 1159 ) . زوْرك : أي ضيفك .
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”நபி {ஸல்} அவர்கள் என்னிடம், ''அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக நான் அறிகின்றேனே!'' அது உண்மையா? என்று கேட்டார்கள். அதற்கு, நான் ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள் ''இனி அவ்வாறு செய்யவேண்டாம்! (சில நாட்கள்) நோன்பு வைத்து; (சில நாட்கள்) விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுது; (சிறிது நேரம்) உறங்குவீராக!
ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்!
ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள்.
நான் சிரமத்தை வரிந்து கட்டிக்கொண்டு ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!'' ஆம்! அப்போது அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் ''தாவூத் நபி {அலை} அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள்.
”தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். ''வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள். ''அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த காலத்தில் ”எனக்கு 'நபி {ஸல்} அவர்கள் அளித்த சலுகைகளை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( நூல்: புகாரி )
இன்று சமூகத்தில் நகர்ப்புறங்களில்
வாழும் பெரும்பாலான தம்பதியரிடையே வேலைப்பளு, நேரமின்மை, மன உளைச்சல் போன்ற காரணங்களால்
இல்லற வாழ்வில் ஈடுபடுவதை தவிர்த்து வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியன் அசோசியேஷன் பார்
செக்ஸாலஜி சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 44 நாற்பத்தி நான்கு சதவீத திருமணமான
ஆண்கள் தங்களுக்கு மனைவியுடனான இல்லற வாழ்வில் ஆர்வம் இல்லை என்பதாக சொல்லியிருக்கின்றார்கள்.
அதிலும் குறிப்பாக 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கின்றவர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள்
“எங்கள் வேலையிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகின்றோம்” இதில் எங்கிருந்து நாங்கள்
இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது” என்று கேட்டிருக்கின்றார்கள். ( நன்றி: யாழ்.காம் அ.
ஜீவன் என்பவர் எழுதிய 22/4/2006 கட்டுரையிலிருந்து )
நன்கு நாம் சிந்திக்க வேண்டும்!
இங்கே, அதிகமாக தொழுகிற, நோன்பு நோற்கிற, நபித்தோழரை, நபித்தோழியரை அழைத்து மாநபி {ஸல்} அவர்கள் பாராட்டவில்லை. பரிசில்கள் வழங்கி சோபனங்களோ, நன்மாராயமோ கூறவில்லை.
மாறாக, மாநபி {ஸல்} அவர்கள் வணக்க, வழிபாடுகளின் பெயரால் தன்னுடைய துணைக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து பிறழ்ந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்கள்.
உள, மன ரீதியான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்...
ஒரு நாள் அண்ணலாரும், ஆயிஷா (ரலி) அவர்களும் மக்காவின் ஆரம்ப நாட்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஆயிஷா (ரலி) அவர்கள் தாங்கள் சிறுவயதுப் பெண்மணியாக இருந்த போது நடந்த ஒரு நிகழ்வை நபி {ஸல்} அவர்களிடம் விவரித்தார்கள்.
“நானும் பதினோரு பெண்களும் ஓரிடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது அப்பெண்மணிகள் தங்களின் கணவன்மார்கள் குறித்து ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்தார்கள்.
قَالَتِ
الْحَادِيَةَ عَشْرَةَ زَوْجِى أَبُو زَرْعٍ فَمَا أَبُو زَرْعٍ أَنَاسَ مِنْ
حُلِىٍّ أُذُنَىَّ ، وَمَلأَ مِنْ شَحْمٍ عَضُدَىَّ ، وَبَجَّحَنِى فَبَجِحَتْ إِلَىَّ
نَفْسِى ، وَجَدَنِى فِى أَهْلِ غُنَيْمَةٍ بِشِقٍّ ، فَجَعَلَنِى فِى أَهْلِ
صَهِيلٍ وَأَطِيطٍ وَدَائِسٍ وَمُنَقٍّ ، فَعِنْدَهُ أَقُولُ فَلاَ أُقَبَّحُ
وَأَرْقُدُ فَأَتَصَبَّحُ ، وَأَشْرَبُ فَأَتَقَنَّحُ ،
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அதில் உம்மு ஸர்வு என்ற பெண்மணி தம் கணவர் அபூஸர்ஹ் குறித்து “என் கணவர் அபூ ஸர்வு எப்படிப்பட்டவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கின்றார். ஆசையாக உணவளித்து என்னை கொழுக்கச்செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்துள்ளார்.
ஒரு மலைக்குன்றின் அருகே சிறிது ஆடுகளுடன் வாழ்ந்த என்னை, மனைவியாக ஏற்று இன்று ஏராளமான குதிரைகளும், ஒட்டகங்களும், தானியக் குவியலும் செல்வங்களின் அரவமும் நிறைந்த வீட்டில் வாழச் செய்துள்ளார்.
நான் அவரிடம் எதையும் பேசுவேன்; என்னை அவர் அலட்சியப் படுத்திய தில்லை. நான் எவ்வளவு நேரம் தூங்கினாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் ஏன் என்று எவரும் கேட்டதில்லை.
ஆனால், அபூஸர்வு என்னை விவாகவிலக்கு செய்து விட்டு, இன்னொரு பெண்ணை திருமணம் செய்து விட்டார்.
فَلَقِىَ
امْرَأَةً مَعَهَا وَلَدَانِ لَهَا كَالْفَهْدَيْنِ يَلْعَبَانِ مِنْ تَحْتِ
خَصْرِهَا بِرُمَّانَتَيْنِ ، فَطَلَّقَنِى وَنَكَحَهَا ، فَنَكَحْتُ بَعْدَهُ
رَجُلاً سَرِيًّا ، رَكِبَ شَرِيًّا وَأَخَذَ خَطِّيًّا وَأَرَاحَ عَلَىَّ نَعَمًا
ثَرِيًّا ، وَأَعْطَانِى مِنْ كُلِّ رَائِحَةٍ زَوْجًا وَقَالَ كُلِى أُمَّ زَرْعٍ
، وَمِيرِى أَهْلَكِ . قَالَتْ فَلَوْ جَمَعْتُ كُلَّ شَىْءٍ أَعْطَانِيهِ مَا
بَلَغَ أَصْغَرَ آنِيَةِ أَبِى زَرْعٍ .
قَالَتْ
عَائِشَةُ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « كُنْتُ لَكِ كَأَبِى
زَرْعٍ لأُمِّ زَرْعٍ »
நானும், இன்னொருவரை திருமணம் செய்தேன். அவர் எனக்கும் கொடுத்து என் குடும்பத்தாருக்கும் கொடுத்தார். ஆனால், அபூஸர்வு கொடுத்த அளவு அவரால் கொடுக்க முடியவில்லை” என்று உம்மு ஸர்வு கூறியதாக கூறி முடித்த ஆயிஷா (ரலி) அவர்களின் தோள்களைப் பற்றிப் பிடித்தவாறு வாஞ்சையோடு “ஆயிஷாவே! உம்மு ஸர்வுக்கு அபூஸர்வு எப்படியோ அப்படியே உனக்கு நானும் அன்பாளனாய் இருப்பேன்” ஆனால், ஒரு போதும், உம்மை விவாக விலக்கு செய்யமாட்டேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
حَدَّثَنَا
عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ
عَنْ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ قَالَ لِى رَسُولُ اللَّهِ - صلى الله
عليه وسلم - « إِنِّى لأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّى رَاضِيَةً ، وَإِذَا كُنْتِ
عَلَىَّ غَضْبَى » . قَالَتْ فَقُلْتُ مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ فَقَالَ «
أَمَّا إِذَا كُنْتِ عَنِّى رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لاَ وَرَبِّ مُحَمَّدٍ
، وَإِذَا كُنْتِ غَضْبَى قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ » . قَالَتْ قُلْتُ
أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ ، مَا أَهْجُرُ إِلاَّ اسْمَكَ .
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “என்னிடம் நபி {ஸல்} அவர்கள், “எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியாக இருக்கின்றாய்; எப்போது நீ என்னைக் குறித்து அதிருப்தியாக கோபத்துடன் இருக்கின்றாய் என்று உன்னைப் பற்றி நான் நன்கு அறிந்து வைத்திருக்கின்றேன்”
என்று கூறினார்கள்.
அதற்கு, நான் ”எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று வினவினேன். அப்போது, நபி {ஸல்} அவர்கள் “என்னைக் குறித்து நீ திருப்தியோடு இருந்தால் பேச்சின் இடையே “முஹம்மதின் இறைவன் மீது சத்தியமாக” என்று கூறுவாய்! என் மீது கோபமாக இருந்தால் “இப்ராஹீம் (அலை) அவர்களின் இறைவன் மீது சத்தியமாக” என்று கூறுவாய்!” என்று சொன்னார்கள்.
அதற்கு, நான் “உண்மைதான் அல்லாஹ்வின் தூதரே! ஆனால், ஒன்று நான் தங்களது பெயரின் மீது தான் கோபம் கொள்வேனே தவிர, தங்களின் மீது அல்ல” என்று கூறினேன். ( நூல்: புகாரி )
இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும்...
فولد له
منها غلام كان قد أعجب به فمات صغيراً فأسف عليه، ويقال: أنه أبو عمير صاحب النغير
ثم ولدت له عبد الله بن أبي طلحة فبورك فيه وهو والد إسحاق ابن عبد الله بن أبي
طلحة الفقيه وإخوته وكانوا عشرة كلهم حمل عنه العلم
அபூதல்ஹா (ரலி) உம்மு ஸுலைம்
(ரலி) மதீனாவின் மிகச் சிறப்பான தம்பதியர். இனிதே நடந்த இவர்களின் திருமணத்தின் வாயிலாக அல்லாஹ் மழலைப் பாக்கியத்தை வழங்கினான். அபூ உமைர் என்று இருவராலும் மிகச் செல்லமாக அழைக்கப்பட்டார் அந்த மழலை.
அண்ணலார் {ஸல்} அவர்கள் கூட அந்த மழலையிடத்திலே மிகவும் பாசத்தோடும் பரிவோடும் பழகியதாக வரலாற்றில் பிரபல்யமான ஒரு நிகழ்ச்சியும் உண்டு.
ஒரு நாள் வியாபார விஷயமாக அபூதல்ஹா (ரலி) வெளியூர் சென்றிருந்த தருணம் அது..
திடீரென நோய் வாய்ப்பட்டு அபூ உமைர் இறந்து போகிறார். அந்நாளின் இரவில் அபூதல்ஹா ஊர் திரும்பி வீட்டிற்கு வந்தார்.
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்,
அபூதல்ஹா (ரலி) அவர்களின் உறவினர்கள், அண்டை வீட்டார்கள் என அனைவரையும் அழைத்து என்
கணவர் அபூதல்ஹா அவர்களிடம் குழந்தை இறந்து போன விஷயம் சம்பந்தமாக நீங்கள் யாரும் அவரிடம்
சொல்லி விடக்கூடாது. நானே அவர்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்கள்.
எப்போதையும் விட தம் வீடு இப்போது மிகவும் அமைதியாக இருப்பதை அபூதல்ஹா உணர்ந்தார். ஒருவேளை சிறுவன் அபூஉமைர் உறங்கியிருப்பதால் இவ்வாறு அமைதியாக இருக்குமோ என்று மனதினில் நினைத்துக் கொண்டார் அபூதல்ஹா (ரலி) அவர்கள்.
கை, கால் கழுகி சுத்தமான பின்பு உணவுத்தட்டின் அருகே வந்தமர்ந்தார். அழகிய முறையில் உணவு பரிமாறி, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு தன் இயல்பு நிலைக்கு திரும்பினார் அபூதல்ஹா (ரலி) அவர்கள்.
அறிவின் சிகரம் இப்போது தம் கணவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் அறிவார்ந்த முறையில்.. நம்மிடம் யாராவது ஒருவர் ஒரு பொருளை தந்து அமானிதமாக வைத்திருக்கச் சொல்லி, பின்பு அந்தப் பொருளை கேட்டால் நாம் என்ன செய்வோம்? சொல்லுங்கள்” என்று…
கொடுத்தவர் கேட்டால் நமக்குச் சொந்தமில்லாத அந்தப் பொருளை திருப்பிக் கொடுத்து விடுவோம்” என்று அபூதல்ஹா கூறினார்.
இப்போது, மெல்ல தம் மகன் அபூ உமைர் இறந்த செய்தியை இப்படிக் கூறினார் உம்மு ஸுலைம் (ரலி) “உங்களுடைய குழந்தையும் அல்லாஹ் வழங்கிய ஓர் அமானிதம் தான். இப்போது அவன் அதைத் திரும்ப எடுத்துக் கொண்டான். எனவே நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள். இன்னாலில்லாஹி… என்று.
நான் வந்த உடனேயே இதை நீ கூறியிருக்க வேண்டியது தானே? என்று கடிந்து கொண்டார் அபூதல்ஹா.
“உங்களின் நிம்மதியை கெடுத்து விடும் எந்தக் காரியத்தையும் செய்யும் துணிவு எனக்கில்லை” என்றார் உம்மு ஸுலைம் (ரலி).
மறுநாள் நபிகளாரின் அவைக்கு வந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள், தம் மனைவி உம்மு ஸுலைம் (ரலி) நடந்து கொண்ட விதம் குறித்து முறியிட்டார்கள்.
அது கேட்ட அண்ணலார் “உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் பொறுமையையும் உளத்தின்மையையும் சிறப்பித்துக் கூறி வெகுவாகப் பாராட்டி விட்டு, “அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபூ உமைருக்குப் பகரமாக ஒரு நல்ல குழந்தையை வழங்குவானாக!” என்று துஆச் செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆவின் பொருட்டால் அப்துல்லாஹ் எனும் மகன் பிறந்தார். இவரும் அனஸ் (ரலி) அவர்களைப் போன்று அண்ணலாரின் அண்மையில் வளரும் பாக்கியத்தைப் பெற்றார்.
அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சந்ததியில் இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் பத்து பேர் தோன்றினார்கள்.
( நூல்: இஸ்தீஆப் )
الآن يعالج
أبو ذر سكرات الموت في الربذة.. المكان الذي اختار الاقامة فيه اثر خلافه مع عثمان
رضي الله عنه، فتعالوا بنا اليه نؤد للراحل العظيم تحية الوداع، ونبصر في حياته
الباهرة مشهد الختام.
ان هذه السيدة السمراء الضامرة، الجالسة الى جواره تبكي، هي زوجته..
وانه ليسألها: فيم البكاء والموت حق..؟
فتجيبه بأنها تبكي: " لأنك تموت، وليس عندي ثوب يسعك كفنا"..!!
".. لا تبكي، فاني سمعت رسول الله صلى الله عليه وسلم ذات يوم وأنا عنده في نفر من أصحابه يقول: ليموتنّ رجل منكم بفلاة من الأرض، تشهده عصابة من المؤمنين..
وكل من كان معي في ذلك المجلس مات في جماعة وقرية، ولم يبق منهم غيري .. وهأنذا بالفلاة أموت، فراقبي الطريق،، فستطلع علينا عصابة من المؤمنين، فاني والله ما كذبت ولا كذبت
ان هذه السيدة السمراء الضامرة، الجالسة الى جواره تبكي، هي زوجته..
وانه ليسألها: فيم البكاء والموت حق..؟
فتجيبه بأنها تبكي: " لأنك تموت، وليس عندي ثوب يسعك كفنا"..!!
".. لا تبكي، فاني سمعت رسول الله صلى الله عليه وسلم ذات يوم وأنا عنده في نفر من أصحابه يقول: ليموتنّ رجل منكم بفلاة من الأرض، تشهده عصابة من المؤمنين..
وكل من كان معي في ذلك المجلس مات في جماعة وقرية، ولم يبق منهم غيري .. وهأنذا بالفلاة أموت، فراقبي الطريق،، فستطلع علينا عصابة من المؤمنين، فاني والله ما كذبت ولا كذبت
அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) நோய்வாய்ப்படுகின்றார்கள், அந்த நோயின் வீரியம் அவர்களை மரணத்தின் விளிம்பு வரை அழைத்துச் செல்கிறது.
இப்போதோ, அப்போதோ என எப்போது வேண்டுமானாலும் அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்களின் ரூஹ் பிரிந்து விடும் என்பதை அறிந்து அழுகின்றார்கள்!
அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்களின் துணைவியார், அபூதர் (ரலி) அவர்களைப் பார்த்தவாறே! “தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்களே!; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லையே! உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் கஃபன் துணியில்லையே! நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?”
அதைக் கேட்டு புன்னகைத்தவாறே அபூதர் (ரலி) அவர்கள் “உறுதியாக இரு! நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் ‘உங்களுள் ஒருவர் பாலைவனத்தில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்’ என்று கூறியதை நான் செவியுற்றேன்.
அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர! இதோ இங்கு நான் அரவமற்ற பாலைவனத்தில்.
அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. எழுந்து செல்! பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்! என்று கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
அருகில் இருந்த சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்ப்பார் உம்மு தர் (ரலி).
அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பதும், மீண்டும் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவதும் என்று கடினமான தருணங்களை அனுபவித்தார்கள் உம்மு தர் (ரலி).
இறுதியாக, தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் (ரலி) அவர்கள் “நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் ‘இவர் அபூதர்’ என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.” என்றார்கள்.
அபூதர் (ரலி) அவர்களின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்தி விட்டு யாரேனும் வருகிறார்களா என்று அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது.
அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிவதைக் கவனித்தார்கள். அருகில் வந்த குழுவினார்கள் “அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க,
“என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வந்து, என் கணவரை நல்லடக்கம் செய்ய உதவி புரியுங்கள்! தயவுசெய்து உதவுங்கள்” என்றார் உம்முதர் (ரலி).
யார் அவர்? என்று கேட்க, அபூதர் (ரலி) என்று உம்முதர் (ரலி) அவர்கள் கூற...
“அல்லாஹ்வின் தூதரின் தோழரா?” என்று குழுவினர்கள் ஆச்சர்யத்துடன் வினவ, “ஆம்.” என்று உம்மு தர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
وفاضت روحه الى الله..
ولقد صدق..
فهذه القافلة التي تغذ السير في الصحراء، تؤلف جماعة من المؤمنين، وعلى رأسهم عبدالله بن مسعود صاحب رسول الله.
وان ابن مسعود ليبصر المشهد قبل أن يبلغه.. مشهد جسد ممتد يبدو كأنه جثمان ميّت، والى جواره سيدة وغلام يبكيان..
وتفيض عيناه بالدمع، ويقف على جثمانه الطاهر يقول:" صدق رسول الله.. نمشي وحدك، وتموت وحدك، وتبعث وحدك".
ويجلس ابن مسعود رضي الله عنه لصحبه تفسير تلك العبارة التي نعاه بها:" تمشي وحدك.. وتموت حدك.. وتبعث وحدك
ولقد صدق..
فهذه القافلة التي تغذ السير في الصحراء، تؤلف جماعة من المؤمنين، وعلى رأسهم عبدالله بن مسعود صاحب رسول الله.
وان ابن مسعود ليبصر المشهد قبل أن يبلغه.. مشهد جسد ممتد يبدو كأنه جثمان ميّت، والى جواره سيدة وغلام يبكيان..
وتفيض عيناه بالدمع، ويقف على جثمانه الطاهر يقول:" صدق رسول الله.. نمشي وحدك، وتموت وحدك، وتبعث وحدك".
ويجلس ابن مسعود رضي الله عنه لصحبه تفسير تلك العبارة التي نعاه بها:" تمشي وحدك.. وتموت حدك.. وتبعث وحدك
அப்துல்லாஹ் இப்னு
மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். இதைக் கேட்டதும், ஓடோடி வந்து பார்த்தார், அபூதர் (ரலி)
அவர்களின் அருகே உம்முதர் அவர்களும், அவர்களின் அடிமையும்
நின்று அழுது கொண்டிருந்தனர். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்கு கண்களிலிருந்து
கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
“அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார்,
தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”. ( நூல்: ரிஜாலுன்
ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... ஸியரு அஃலா
மின் நுபலா )
அல்லாஹ்வின் அருள் வசனம் ஒன்று இவ்வாறு இறக்கியருளப்பட்டது.
لما
نزلت: { مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ }
قال أبو الدحداح الأنصاري: يا رسول الله وإن الله ليريد منا القرض؟ قال: "نعم
يا أبا الدحداح" قال: أرني يدك يا رسول الله. قال: فناوله يده قال: فإني قد
أقرضت ربي حائطي. قال: وحائط له فيه ستمائة نخلة وأم الدحداح فيه وعيالها. قال:
فجاء أبو الدحداح فناداها: يا أم الدحداح. قالت: لبيك قال: اخرجي فقد أقرضته ربي
عز وجل. وقد رواه ابن مردويه من حديث عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن عمر
مرفوعًا بنحوه
“அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுப்போர் யாரும் உள்ளார்களா? அழகிய கடன் கொடுத்தால் அல்லாஹ் அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தருவான்” என்று
அல்லாஹ்வின் தூதரோடு சபையில் இருந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் ”நம்மிடமிருந்து அல்லாஹ் கடன் கோருகின்றானா? என்று பெருமானார் {ஸல்} அவர்களிடம் வினவ, ஆம்! என நபி {ஸல்} அவர்கள் பதில் கூற, “தங்களுக்குச் சொந்தமான 600 பேரீச்சம் மரங்களைக் கொண்ட தோட்டத்தின் சாவியை நபி {ஸல்} அவர்களின் கரங்களில் வைத்து விட்டு, அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் அல்லாஹ்விற்காக அழகிய கடனை தந்து விட்டேன்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து வேகமாக வெளியேறி தோட்டத்தின் வாயிலில் நின்று கொண்டு உம்முத்தஹ்தாவே! நம் தோட்டத்தை அல்லாஹ்வுக்காக நான் கடன் வழங்கி விட்டேன்! அங்கிருந்து நீ எப்படி இருக்கின்றாயோ அப்படியே வெளியேறி விடு!” என்று கூறினார்கள்.
அது போன்றே உம்முத்தஹ்தா (ரலி) அவர்களும் மறு பேச்சு பேசாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்த எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் உடுத்தியிருந்த ஆடையோடு வெளியேறி விட்டார்கள். ( நூல்: இப்னு கஸீர் )
இஸ்லாம்
அடையாளப் படுத்தியுள்ள பண்புகளும், குணங்களும் இன்னும் பல இருக்கின்றன
அவைகளைப்பேணி
நடந்தால் மகிழ்ச்சியான குடும்பங்கள் உருவாகி, முஸ்லிம் சமூகத்தின் குடும்ப நிலைகள் நிம்மதியையும், சாந்தியையும், கருணையையும், அன்பையும் எய்தப் பெரும் என்பதில் எவ்வித
சந்தேகமும் கிடையாது.
இன்ஷாஅல்லாஹ்... இதன் தொடர்ச்சி ரபீவுல் அவ்வல் மாதத்தின் முதல் இரண்டு ஜும்ஆக்களுக்குப்
பிறகு பதிவு செய்யப்படும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteதங்களின் இந்த வார மிக ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
Phone no pl
ReplyDeleteMettuppalayam
ReplyDelete