Thursday, 13 February 2020

லவ் (காதல்) வைரஸ் படுத்தும் பாடு?!....

லவ் (காதல்) வைரஸ் படுத்தும் பாடு?!....
      



இன்றைய உலகில் அதிகம் பேசப்படுகிற ஒன்று காதல். காதல் குறித்தான பார்வைகளும், அணுகுமுறைகளும், சிந்தனைகளும் வித்தியாசம் அடைந்திருக்கிற பல்கிப் பெருகியிருக்கிற காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

காதல் எனும் வார்த்தை குறிப்பாக அன்பையும், நேசத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் இவ்வார்த்தை எதிர்ப் பாலினர் மீது இளம் வயதினருக்கு ஏற்படும் ஈர்ப்பையும் அதன் மூலம் ஏற்படும் தொடர்பையும் குறிக்கும் விதத்திலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தக் காதலைப் புனிதம் என்று கூறுவோர் நம்மில் உண்டு. காதலை வானம் பூமியை விட உயர்வானது என்று கூறுவோர் உண்டு. இல்லை, இல்லை உயிரை விட மேலானது என்று கூறுவோரும் உண்டு.

இந்த உலகில் காதலை படித்தவர்கள் உண்டு, காதலைப் பார்த்தவர்கள் உண்டு, காதலை நுகர்ந்தவர்கள் உண்டு, காதலை அனுபவித்தவர்கள் உண்டு, காதலுக்கு உதவியவர்கள் உண்டு, காதலை இழந்தவர்கள் உண்டு இப்படி இந்த உலகில் காதலோடு தொடர்புடையவர்கள் ஏராளமானவர்கள் உண்டு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் காதலோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பில்லாத மனிதர்களைக் காண்பதென்பது மிகவும் அரிது.

உண்மையில், காதலின் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்பவர்கள் அதனுடைய இன்னொரு பக்கமான அபாயகரமான தாக்கத்தை, சமூகத்தில் நடைபெறுகிற கொடூரத்தை சொல்ல மறுக்கின்றார்கள்.

இந்த உலகில் காதலின் பெயரால் நடக்கிற ஆணவக் கொலைகள், கௌரவக் கொலைகள், தற்கொலைகள் உயிர்ப்பலிகள் ஏராளம். காதலின் பெயரால் நடக்கிற கற்பிழப்புகள், பாலியல் கொடுமைகள் ஏராளம், காதலின் பெயரால் நடக்கிற ஏமாற்று மோசடிகள் ஏராளம், குடும்ப, உறவு, சமூக பிரிவினைகள் ஏராளம், ஆண், பெண் என இரு பாலரும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் தாராளம்.

. நா., சபை 2000 –ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரப்படி ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 20 ஆயிரம் (காதலின் பெயரால்) கௌரவக் கொலைகள் நடக்கின்றன. அதில் 20 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன.

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 20,000 பேர் பயங்கரவாதத்தால் உயிரிழந்தனர். ஆனால், பயங்கரவாதத்தால் உயிரிழப்பவர்களைவிட காதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொலை, தற்கொலை மற்றும் பயங்கரவாத தாக்குதலைவிட, காதலால் ஏற்படுகின்ற மரணங்கள்தான் அதிகளவில் நடைபெறுகின்றன என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2001ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை காதலால் 38,585 கொலைகள், 79,189 தற்கொலைகள், 2.6 லட்சம் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன.

காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் ஆந்திராவும், இரண்டாவதாக உத்தரப்பிரதேசமும், மூன்றாவதாக மகாராஷ்டிராவும் தமிழகம் நான்காவது இடத்தையும், மத்தியப்பிரதேசம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

காதல் தற்கொலை செய்து கொள்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என கூறப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் 15,000க்கும் அதிகமான காதல் தற்கொலைகள் நடந்துள்ளன. இதில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

அத்தகைய காதலைக் கொண்டாடும் வகையில் நவீன நாகரிக உலகம் பிப்ரவரி 14 –ஆம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடுகின்றது.

சீரழிந்து போன மேற்கத்திய கலாசாரத்தின் சிந்தனையால் உருவான தினமே இந்த காதலர் தினம்.

காதலர்கள் ஒன்று கூடுவதும், புத்தாடை அணிவதும், முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசுகளை கொடுப்பதும் உல்லாசமாக ஊர் சுற்றுவதும் தனித்திருந்து உறவுகொள்வதும் மிகப்பெரிய நாகரீகமாக இன்று பார்க்கப்படுகிறது.

வாருங்கள்! காதல் குறித்தான இஸ்லாமிய வழிகாட்டலை பார்வையிட்டு, சீரழிவில் இருந்து நம்மையும், நம் எதிர்கால தலைமுறையையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்!!.

காதல் தூய்மையானதா?..

நாம் வாழும் உலகு தகாத செயல்களுக்கும், தகாத உறவுமுறைகளுக்கும் நாகரிகமான பெயர்களை சூட்டி அழைக்கிறது. அதற்கென ஒரு நாளை புனிதமானதாக ஆக்கியிருக்கிறது.

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் நாகரிகமான பெயர்களைச் சூட்டிக் கொள்வதாலோ, புனிதமாகக் கருதுவதாலோ அவை ஒரு போதும் அனுமதிக்கப்பட்டதாக ஆகிவிடப் போவதில்லை.

எந்த விஷயங்களெல்லாம் நம்மை மானக்கேடான வழிகளின் பால் அழைத்துச் செல்லுமோ, இம்மையிலும், மறுமையிலும் நம்மை அழிவில் ஆழ்த்தி விடுமோ அந்த விஷயங்களில் மிகக் கவனமாக நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் நம்மை எச்சரிக்கின்றது.

وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ

“வெளிப்படையான, மறைவான பாவங்கள் அனைத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்! எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றின் கூலி அதிவிரைவில் வழங்கப்படும்”.        ( அல்குர்ஆன்: 6: 120 )

قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَاأُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (100)
“( நபியே! ) நீர் அவர்களிடம் கூறிவிடுவீராக! “தூய்மையானவையும், அருவருப்பானவையும் ஒரு போதும் சமமாக ஆகாது. அருவருப்பானவை பெருகிக் கிடப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே! எனவே, அறிவுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டு விலகியே வாழுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!!”.                                       ( அல்குர்ஆன்: 5: 100 )

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ اللَّهَ لا يَمْحُو السَّيِّئَ بِالسَّيِّئِ وَلَكِنْ يَمْحُو السَّيِّئَ بِالْحَسَنِ ، وَأَنَّ الْخَبِيثَ لا يَمْحُو الْخَبِيثَ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்திண்ணமாக, அல்லாஹ் தீமையை தீமையைக் கொண்டு அழிப்பதில்லை. எனினும், நல்லவற்றைக் கொண்டே தீமையை அழிக்கின்றான்!” அருவருப்பான ஒன்று அருவருப்பான இன்னொன்றை அழித்திடாதுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத்துல் மஸாபீஹ், பாபு கஸ்புல் ஹலாலி, தலபுல் ஹலாலி )

எங்கிருந்து துவங்குவது? எப்படி துவங்குவது? யார் துவக்குவது?

சமூகத்தில் காதல் ஏற்படுத்துகிற சீர்கேடுகளில் இருந்து நம் சந்ததிகளை பாதுகாப்பது எப்படி? எப்போது இருந்து துவங்கப்பட வேண்டும்? யார் அதை நம் சந்ததிகளிடம் சொல்ல வேண்டும் என்கிற கேள்விகள் நம்மில் பலருக்கு ஏற்படுகிறது.

பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களின் 15 வயதிலிருந்து 25 வயதுக்கிடையில் தான் ஏற்படுகிறது. இது முற்றிலும் பிழையான சிந்தனையாகும்.

பொறுப்புள்ள பெற்றோர்களாக இருப்பின் காதலில் வீழ்வதில் இருந்து நம் சந்ததிகளை பாதுகாக்க முடியும்.

ஆம்! இன்றைக்கு தங்களின் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாமல், தட்டிக் கழிக்கிற பெற்றோர்களே தங்கள் ஆண், பெண் மக்களால் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகின்றார்கள்.

1.   வயதுக்குத் தகுந்த வாழ்க்கையை கற்றுத் தர வேண்டும்…

பாலின வேறுபாட்டின் நிலைகளை வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் அதுவும் பெற்றோர்களே துவக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

عن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال: ((مُرُوا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين، واضربوهم عليها وهم أبناء عَشْر، وفرقوا بينهم في المضاجع))؛ رواه أحمد وأبو داود، وهو صحيح

“உங்கள் மக்களை ஏழு வயதாகும் போது தொழுகைக்காக ஏவுங்கள்! பத்து வயதைத் தொட்டு விட்டால் தொழுகைக்காக அடியுங்கள்! மேலும், படுக்கையில் இருந்து பிரித்து விடுங்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                  ( நூல்: அஹ்மத் )

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறார்களும் மூன்று நேரங்களில் உங்களிடையே வருவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும்.

அதிகாலைத் தொழுகைக்கு முன்னர்; மதிய வேளையில் உங்கள் ஆடைகளின் மீது நீங்கள் கவனம் இல்லாமல் இருக்கும் போது; இஷா தொழுகைக்குப் பின்னர். இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்க வேண்டிய நேரங்களாகும்.
                                                       ( அல்குர்ஆன்: 24:58 )

ஆண், பெண் கலந்திருப்பது அது சகோதரனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் ஒரு வரம்பைப் பேணுமாறு சொல்கிற இஸ்லாத்தின் யதார்த்தத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.

எனவே, அந்தந்த வயதுக்கு தக்கவாறு எது நல்லவை? எது தீயவை? என்ற புரிதலையும், எந்த உறவு நல்ல உறவு? எது தவறான உறவு? என்பன போன்ற அறிவையும் சேர்த்தே அல்லவா மார்க்கம் கற்றுக் கொடுக்குமாறு ஏவுகின்றது.

மார்க்கத்தின் அடிப்படைகளோடு இவைகள் அனைத்தையும் ஒருங்கே கற்றுக் கொடுப்பதே மிகச் சிறந்த ஒரு பெற்றோரின் உயரிய கடமையாகும்.

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் மகனுக்கு செய்த உபதேசங்களை பட்டியலிடும் அல்குர்ஆனின் வசனங்களை என்றாவது நாம் முழுமையாக படித்துப் பார்த்திருப்போமா?

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

وَوَصَّيْنَا الإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

يَا بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُن فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ

يَا بُنَيَّ أَقِمِ الصَّلاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأُمُورِ

وَلا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلا تَمْشِ فِي الأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ

சுமார் ஏழு வசனங்களில் ( அத்தியாயம்: 31: 13 முதல் 19 வரை ) அல்லாஹ் அதை நயம்பட விவரிப்பான். இணை வைப்பின் வீரியம் குறித்து, இபாதத்தின் இன்பம் குறித்து, நன்மையை ஏவி, தீமையை தடுப்பதன் மகத்துவம் குறித்து, இறைவனின் முடிவின் மீது கொள்ள வேண்டிய நம்பிக்கை மற்றும் பொறுமை குறித்து கூறியதன் பின்னர் அவர் தம் மகனுக்கு கூறிய அறிவுரைகளைப் பாருங்கள்!

மகனே! மக்களை விட்டு உம் முகத்தை திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்கோடு நடக்காதே! அகந்தையும், ஆணவமும் கொண்ட எவரையும் அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை.

உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள்! உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள்! திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்”.                ( அல்குர்ஆன்: 31: 18, 19 )

நம் அறிவுக்கும், சிந்தைக்கும் மிகச் சிறியதாக புலப்படுகிற அம்சங்களை வாழ் நாளில் ஒரு போதும் செய்து விடக்கூடாது என்பதை எவ்வளவு அழகாக எச்சரிக்கின்றார்கள்.

ஆக மார்க்க கடமைகளை, அடிப்படைகளைக் கற்றுக் கொடுப்பதோடு யதார்த்த உலகின் வாழ்வியல் தத்துவத்தையும் கலாச்சார சீரழிவுகளையும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுவே மிகச் சிறந்த போதனை! அப்படிப் போதிப்பவர்களே மிகச் சிறந்த பெற்றோர் ஆவர்.

2.      தனிமையை கண்காணிக்காத பெற்றோர்களும், தடம் புரளும் பருவ வயதினரும்…..

குறிப்பிட்ட வயதைத் தொடுகிற போது பெற்றோர்கள் தங்களின் வயது வந்து ஆண், பெண் பிள்ளைகளுக்கு தனிமையை கொடையாக கொடுத்து விடுகின்றனர்.

தனி அறை, தனி மொபைல், தனி கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட், பைக், என்று எல்லையில்லா சுதந்திரம் வழங்கி விடுகின்றனர்.

இண்டெர்நெட் வசதியைப் பயன்படுத்தி தவறான காட்சிகள், படங்கள், சாட்டிங், ஃபேஸ்புக் என்று வழி தவறிட பெற்றோர்களே காரணமாய் அமைந்து விடுகின்றனர்.

இன்று முஸ்லிம் சமூகத்து பருவ வயதினர் பலர் பாலியல் வித்தியாசம் இன்றி மது, சுய இன்பம், விபச்சாரம், காதல், கள்ளக்காதல் என்று தடம் புரண்டு விடுவதை அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேள்விபட்டு வருகின்றோம்.

இளமைப்பருவம் சரி செய்யப்பட வேண்டிய சரியான பருவம் ஆகும். தனிமையில் தவறு செய்யும் பருவ வயதினரை கண்காணித்து, பக்குவப்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட.

மாற்று மதத்தவருடன் திருமணம் ஈமானுக்கு ஆபத்து...

ஒரு முஸ்லிம்  முஸ்லிமல்லாத ஒருவரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள முடியும்.

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.  இணை வைக்கும் ஒரு பெண்  உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.                ( அல்குர்ஆன் 2:221 )

عن عمرو بن شعيب، عن أبيه، عن جدّه، قال: كان رجل يقال له مرثد بن أبي مرثد، وكان يحمِلُ الأسرى من مكّة حتى يأتيَ بهم المدينة، قال: وكان بمكّة بَغيٌّ يقال لها عناق، وكانت صديقة له، وكان وعد رجلًا أن يحمِلَه من أَسرى مكّة، قال‏: فجئت حتى انتهيت إلى حائط من حيطان مكّة في ليلة قَمْراء، فجاءت عناق فأَبْصَرَت سواد ظِلّي بجانب الحائط، فلما انْتَهَتْ إِليَّ عرفتني فقالت: مرثد! قلت: مرثد! قالت: مرحبًا وأهلًا، هلم فبتَّ عندنا اللّيلة. قال‏: قلت: يا عناق؛ إنّ الله حرَّم الزّنا قالت: يا أهل الخباء، هذا الذي يحمل الأسْرَى: قال: فاتبعني ثمانية رجال وسلكت الخندمة حتى انتهيت إلى كَهْفٍ أو غارٍ، فدخلته، وجاءوا حتى قاموا على رأسي، وأعماهم الله عنّي، ثم رجعوا ورجعت إلى صاحبي، فحملْتُه، وكان رجلًا ثقيلًا حتى انتهيت إلى الأذخر، ففككت عنه كبْلَه، ثم جعلت أحمله حتى قدمت المدينة، فأتيتُ رسولَ الله صَلَّى الله عليه وسلم، فقلت: يا رسولَ الله، أنكح عناقًا؟ فأمسك رسولُ الله صَلَّى الله عليه وسلم فلم يردّ عليّ شيئًا حتى نزلت هذه الآية: {الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً...‏}‏ [النور 3] ‏الآية. فقرأها رسول الله صَلَّى الله عليه وسلم عليّ وقال: "لَا تَنكِحهَا".

மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் அல் ஃகனவீ (ரலி) இவர்கள் ஆஸிம் (ரலி) அவர்களோடு ஷஹீதாக்கப் பட்டவர்களில் ஒருவர். பத்ர் மற்றும் உஹத் யுத்தகளங்களில் கலந்து கொண்ட தீரர்களில் ஒருவர்.

இவர் கைதிகளாகவும், பிணையாகவும் பிடிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வீரராக அன்றைய அரபுலகத்தில் அறியப்பட்டார்கள்.

அநியாயமாக பிடித்து வைக்கப்பட்டிருக்கின்ற கைதிகளை எதிரிகளின் இடத்திற்கே சென்று அசாத்திய தைரியத்தோடு மீட்டு வரும் தைரியசாலி. அதற்காக சில திர்ஹத்தை சம்பந்த பட்டவர்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.

ஒரு நாள் அவர்கள் ஒருவரை மீட்டெடுக்க இரவு நேரத்தில் ஓரிடத்தில் பதுங்கியிருந்த போது அவர்களின் ஜாஹிலிய்யா காலத்து காதலி அனாக் என்பவளைச் சந்திக்க நேரிடுகின்றது.

இவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் அன்று தான் அவளைச் சந்திக்கின்றார்கள். தற்போது அவள் தகாத செயல் செய்யும் விபச்சாரியாக மாறிவிட்டிருந்தாள்.

அந்த இரவிலும் இவரை அடையாளம் கண்டு கொண்ட அனாக் இன்றிரவு தம்மோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றாள்.

அனாக்! இஸ்லாம் விபச்சாரத்தை தடை செய்திருக்கின்றது அது மானங்கெட்ட செயல் என்றும், அதன் அருகே கூட நெருங்கக் கூடாது எனவும் தடை செய்திருக்கின்றது. ஆகவே தூர விலகிச் செல் என்று கூறி விரட்டி விட்டார்கள் மர்ஸத் (ரலி) அவர்கள்.

        நம்மை காசு பணம் கொடுத்து அழைக்க ஆயிரம் பேர் காத்து கிடக்க, நாம் வலிய அழைத்தும் வராமல் நம்மை அலட்சியம் செய்து விரட்டி விடுகிறாரே எனும் கோபத்தில் அவரை அவர் எந்த இடத்தில் மறைந்து கைதியை தூக்கிச் செல்ல வந்திருந்தாரோ அவர்களின் பெயர் கூறி அழைத்து இதோ மர்ஸத் உங்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு கைதியை களவாடிச் செல்ல வந்திருக்கின்றார்  என்று கூறி”  சிக்க வைத்தாள்.

அவர்கள் துரத்தி வர மர்ஸத் (ரலி) அவர்கள் அங்கிருந்து தப்பி, அருகே இருந்த ஒரு குறுகலான மலைக்குன்றில் ஒளிந்து கொண்டார்கள்.

அவரைத் தேடி வந்த அந்த நபர்கள் மர்ஸத் (ரலி) அவர்கள் ஒளிந்திருந்த அந்த மலைக்குன்றின் மீது வரிசையாக ஒருவர் பின் ஒருவராக சிறுநீர் கழித்தனர்.

மலைக்குன்றின் பின் புறம் ஒளிந்திருந்த மர்ஸத் (ரலி) அவர்களின் தலை முழுக்க சிறுநீர் நன்றாக நனைத்து விட்டிருந்தது.

துரத்தி வந்தவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்து நடந்த சம்பவத்தை நபிகளாரிடம் விளக்கிக் கூறி தாம் அனாக்கை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னார்கள்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் மர்ஸத் (ரலி) அவர்கள் கேட்க, அப்போதும் நபிகளார் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

பின்னர் அண்ணலாரின் சபையிலிருந்து மர்ஸத் (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள். அவர்கள் சென்ற பின்னர், அல்லாஹ் நூர் அத்தியாயத்தின் 3-ஆம்  வசனத்தை இறக்கியருளினான்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், மர்ஸத் (ரலி) அவர்களை அழைத்து வரச் சொல்லி விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம் செய்யும் பெண்ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணையோ தவிர வேறெவரையும் திருமணம் செய்ய வேண்டாம்.

விபச்சாரம் செய்யும் பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இணைவைப்பாளனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய வேண்டாம். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடுக்கப்பட்டிருக்கின்றது”  எனும் (அல்குர்ஆன்:24:3) வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். பின்பு அனாக்கை நீர் திருமணம் செய்ய வேண்டாம்”  என்று கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:7, பக்கம்:116., அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:382,383., அபூ தாவூத், கிதாபுன் நிகாஹ் )

மாற்றாருடன் ஓடிப்போகும் நம் காலத்து இளைஞர்களும், இளைஞிகளும் சிந்தித்து உணர வேண்டிய ஓர் பாடத்தை மேற்கூறிய வரலாறு உணர்த்துகின்றது.

பெற்றோரின் அழகிய வளர்ப்பால் நெறி தவறாத இளைஞர்…..

وقد ورد معناه في حديث رواه إسحاق بن بشر في كتابه " المبتدأ " حيث قال : أنبأنا يعقوب الكوفي ، عن عمرو بن ميمون ، عن أبيه ، عن ابن عباس ، أن رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به رأى زكريا في السماء ، فسلم عليه وقال له : يا أبا يحيى ،
 خبرني عن قتلك ; كيف كان ؟ ولم قتلك بنو
 ص: 412  إسرائيل ؟ قال : يا محمد ، أخبرك أن يحيى كان خير أهل زمانه ، وكان أجملهم ، وأصبحهم وجها
، وكان كما قال الله تعالى
سيدا وحصورا وكان لا يحتاج إلى النساء ، فهويته امرأة ملك بني إسرائيل ، وكانت بغية ، فأرسلت إليه ، وعصمه الله ، وامتنع يحيى وأبى عليها ، وأجمعت على قتل يحيى ، ولهم عيد يجتمعون في كل عام ، وكانت سنة الملك أن يوعد ولا يخلف ولا يكذب . قال : فخرج الملك إلى العيد فقامت امرأته فشيعته ، وكان بها معجبا ، ولم تكن تفعله فيما مضى ، فلما أن شيعته قال الملك : سليني ، فما سألتني شيئا إلا أعطيتك . قالت : أريد دم يحيى بن زكريا . قال لها : سليني غيره . قالت : هو ذاك . قال : هو لك . قال : فبعثت جلاوزتها إلى يحيى ، وهو في محرابه يصلي ، وأنا إلى جانبه أصلي . قال : فذبح في طست وحمل رأسه ودمه إليها . قال : فقال رسول الله صلى الله عليه وسلم : فما بلغ من صبرك ؟ قال : ما انفتلت من صلاتي . قال : فلما حمل رأسه إليها ، فوضع بين يديها ، فلما أمسوا خسف الله بالملك وأهل بيته وحشمه ، فلما أصبحوا قالت بنو إسرائيل : قد غضب إله زكريا لزكريا ، فتعالوا حتى نغضب لملكنا ، فنقتل زكريا . قال : فخرجوا في طلبي ليقتلوني ، وجاءني النذير فهربت منهم ، وإبليس أمامهم يدلهم علي ، فلما تخوفت أن لا أعجزهم ، عرضت لي شجرة فنادتني وقالت : إلي إلي . وانصدعت لي فدخلت فيها . قال : وجاء إبليس حتى أخذ بطرف ردائي ، والتأمت الشجرة ، وبقي طرف ردائي  خارجا من الشجرة ، وجاءت بنو إسرائيل فقال إبليس : أما رأيتموه دخل هذه الشجرة ؟ هذا طرف ردائه ، دخلها بسحره . فقالوا : نحرق هذه الشجرة . فقال إبليس : شقوه بالمنشار شقا . قال : فشققت مع الشجرة بالمنشار . قال له النبي صلى الله عليه وسلم : هل وجدت له مسا أو وجعا ؟
 قال : لا ، إنما وجدت ذلك الشجرة جعل الله روحي فيها
 هذا سياق غريب ، وحديث عجيب

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் மிஃராஜ் சென்றிருந்த போது ஜகரிய்யா (அலை) அவர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

உரையாடலின் இடையே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நீங்கள் எவ்வாறு எதற்காக கொலை செய்யப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள்எனது மகன் யஹ்யா (அலை) அவர்கள் ஸாலிஹான, அழகுமிக்க, நல்லொழுக்கமுள்ள, தெளிவான சிந்தனையும், பெண்களின் மீதான மோகமும் இல்லாத சிறந்த இளைஞராக இருந்தார்.

இஸ்ரவேலர்களைச் சார்ந்த ஓர் அரசனின் மனைவி ஒருத்தி என் மகன் யஹ்யாவின் மீது மோகம் கொண்டு, அவருடன் தவறான உறவு கொள்ள விரும்பி, தன்னுடைய பணிப்பெண் ஒருவரை தூதனுப்பினாள். பல முறை அவள் தூதனுப்பினாள்.

ஆனால், என் மகன் யஹ்யா மறுத்து விட்டார். அல்லாஹ் என் மகனை அத்தீய செயலிலிருந்து காப்பாற்றினான்.

இதனால் என் மகன் மீது சினங்கொண்ட அவள் என் மகன் யஹ்யாவை கொலை செய்ய திட்டமிட்டாள்.

இவ்வாறிருக்க ஆண்டு தோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும் அவர்களின் பண்டிகை நாளும் வந்தது. ஒவ்வொரு ஆண்டும் அரசன் தன் மனைவிக்கு அவள் விரும்புகிற பரிசில்களை வழங்குவான்.

இந்நிலையில், எல்லா நாட்களையும் விட அன்று மிகவும் அழகாக தன் மனைவி இருப்பதைக் கண்டு இவ்வாண்டு உனக்கு மிக உயர்ந்த ஓர் பரிசை, அதுவும் நீ எதை விரும்பினாலும் உனக்கு தர வேண்டுமென விரும்புகின்றேன்என்றான் அரசன்.

அதற்கவள், ”யஹ்யா (அலை) அவர்களின் தலை தான் வேண்டும்என்று கூறினாள். இது அல்லாத வேறெதைக் கேட்டாளும் தருகின்றேன்என்றான் அரசன். ஆனால், அவளோ எனக்கு யஹ்யாவின் தலை தான் வேண்டும்என்றாள்.

மனைவியின் அழகில் அடிமைப் பட்டுக்கிடந்த அரசன் யஹ்யா (அலை) அவர்களின் தலையைக் கொய்து வருமாறு தன் சேவகர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.

அரசனின் சேவகர்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கி வந்தார்கள். நானும், யஹ்யாவும் மிஹ்ராபின் அருகே சற்று இடைவெளி விட்டு நின்று தொழுது கொண்டிருந்தோம்.

அரசனின் சேவகர்கள் யஹ்யாவின் தலையை வெட்டி அவரது தலையையும், இரத்தத்தையும் ஒரு தட்டில் ஏந்தியவர்களாக அரசனின் மனைவியிடம் கொண்டு சென்றார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்நீங்கள் எப்படி இவ்வளவு பொறுமையாக இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள் நான் என் ரப்போடு உரையாடிக் கொண்டிருந்தேன். தொழுது கொண்டிருந்தேன். நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. தொழுது முடித்த பின்னர் தான் இந்த விவரமெல்லாம் எனக்குத் தெரிந்ததுஎன்று பதில் கூறிவிட்டு

யஹ்யா (அலை) அவர்கள் கொலை செய்யப்பட்ட அன்று மாலை நேரத்தில் அரசனும், அவன் மனைவியும், குடும்பத்தார்களும், அவனின் சேவகர்களும் அரண்மனையோடு அல்லாஹ்வின் கோபத்தால் இருந்த இடத்திலேயே பூமிக்குள் இழுக்கப்பட்டார்கள்.

இதை அறிந்து கொண்ட இஸ்ரவேலர்கள்ஜகரிய்யாவின் இறைவன் ஜகரிய்யாவிற்காக கோபப்பட்டான். இஸ்ரவேலர்களே! ஒன்று படுங்கள்! நாம் நம் அரசருக்காக கோபப்படுவோம். நாமும் ஜகரிய்யாவை ஒன்று திரண்டு கொல்வோம்என சபதமிட்டுப் பழிவாங்க திட்டமிட்டார்கள்.

இச்செய்தி எனக்கு எட்டியதும் நான் அவர்கள் கண்ணில் படாதிருக்க காட்டு வழியே ஓடினேன். ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தேன். அப்போது, எனக்கு முன்பாக இருந்த ஓர் மரம் அல்லாஹ்வின் நபியே! என்னுள் ஒளிந்து கொள்ளுங்கள்! உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்என்றது.

நான் அதனுள் சென்று ஒளிந்து கொண்டேன். என்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு இப்லீஸ் வழிகாட்டிக் கொண்டு வந்தான். ஆனால், மிக விரைவாக என்னைப் பின் தொடர்ந்த அவன் மரத்தின் உள்ளே நான் ஒளியும் போது எனது ஆடையின் சிறிய ஒரு பகுதியைப் பிடித்து இழுத்துக் கொண்டான். பிளந்த மரம் மூடிய போது என் ஆடையின் சிறிய பகுதி வெளியே தெரிந்தது.

இஸ்ரவேலர்கள் மரத்தை நெருங்கியதும் இப்லீஸ் அடையாளம் காட்டிக் கொடுத்தான். கடும் கோபத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் என்னை மரத்தோடு வைத்து தீயிட்டுக் கொளுத்திட முனைந்தார்கள்.

ஆனால், இப்லீஸோ ரம்பத்தால் இரு கூறாக என் உடல் பிளக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறினான். அதன் பின்னர் ரம்பத்தால் மரத்தையும், என்னையும் இரண்டாகப் பிளந்தார்கள்என்று கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்அறுக்கப்பட்ட போது உங்களுக்கு அதன் வேதனை தெரியவில்லையா?” என்று வினவியதற்கு, ஜகரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ் தான் எனது உயிர் இவ்வாறு பிரிய வேண்டும் என நாடியுள்ளான்; அவ்வாறிருக்கையில், எனக்கு எப்படி அது வேதனையாக தெரியும். இல்லை, எனக்கு அப்படியொரு உணர்வு அப்போது ஏற்படவில்லைஎன்று பதில் கூறினார்கள்.   ( நூல்: அல்பிதாயா வன் நிஹாயா லி இமாமி இப்னு கஸீர் (ரஹ்)….. )

இறையச்சத்தின் துணை கொண்டு பாதுகாப்பு பெற முடியும்...

அழகிய வரலாறு என அல்லாஹ்வால் பெரிதும் புகழப்படுகிற வரலாற்றின் ஒரு பகுதியில் நடைபெறுகிற காட்சி இது

அங்கு நடந்த காட்சியை குர்ஆன் இவ்வாறு விவரிக்கின்றது….

நாமும் கொஞ்சம் நினைவு படுத்தித் தான் பார்ப்போமே!...

وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (23)

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அந்தப் பெண் அவரை அடைய வலை விரித்தார்! ஒரு நாள் வாயில்களை எல்லாம் அடைத்துத் தாழிட்டு விட்டுவாரும்!” என்று அழைத்தார். அதற்கு, யூஸுஃப்அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்!” திண்ணமாக, என் ரப்அதிபதி எனக்கு நல்ல கண்ணியத்தை வழங்கியுள்ளான். ( அப்படியிருக்க இது போன்ற இழிவான ஒரு செயலை நான் செய்வேனா என்ன?” ) இது போன்ற அக்கிரமமான செயலைச் செய்வோர் ஒரு போதும் வெற்றி அடைவதில்லை!” என்று கூறினார்.  (அல்குர்ஆன்: 12: 23 )

நேற்று வரை தம்மை அரவணைத்து நின்ற, தாய் போன்று பராமரித்த ஒரு பெண் அரண்மனையின் ஒரு வாசலை அல்ல, அத்துனை வாசல்களையும் அடைத்து விட்டு, யாரும் இல்லை, யாரும் பார்க்க முடியாது என்கிற தொணியில் தவறான உறவிற்கு அழைத்த போது, அதுவும் தனிமையில் யாரும் இல்லை என்று உத்திரவதமும் கிடைத்த பின்னரும் கூட யூஸுஃப் (அலை) அவர்கள் அந்த இழி செயலை செய்வதை விட்டும் தங்களை தற்காத்துக் கொள்ள தக்வா எனும் இறையச்சம் கொண்டு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார்கள்.

حَدَّثَنَا عَطَّافُ بْنُ خَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ لَيْلَةً يَحْرُسُ النَّاسَ ، فَمَرَّ بِامْرَأَةٍ وَهِيَ فِي بَيْتِهَا وَهِيَ تَقُولُ

تَطَاوَلَ هَذَا اللَّيْلُ وَاسْوَدَّ جَانِبُهْ ... وَطَالَ عَلَيَّ أَنْ لاَ خَلِيلَ أُلاَعِبُهْ
فَوَاللَّهِ لَوْلاَ خَشْيَةُ اللهِ وَحْدَهْ ... لَحُرِّكَ مِنْ هَذَا السَّرِيرِ جَوَانِبُهْ
فَلَمَّا أَصْبَحَ عُمَرُ أَرْسَلَ إِلَى الْمَرْأَةِ ، فَسَأَلَ عَنْهَا ، فَقِيلَ
 هَذِهِ فُلاَنَةُ بِنْتُ فُلاَنٍ ، وَزَوْجُهَا غَازٍ فِي سَبِيلِ اللهِ ، فَأَرْسَلَ إِلَيْهَا امْرَأَةً ، فَقَالَ : كُونِي مَعَهَا حَتَّى يَأْتِيَ زَوْجُهَا ، وَكَتَبَ إِلَى زَوْجِهَا ، فَأَقْفَلَهُ ، ثم دخل على حفصة ابنته رضي الله عنها فقال اني سائلك عن آمر قد أهمني فافرجيه عني. في كم تشتاق امرأة الى زوجها فخفضت رأسها واستحيت قال : فان الله لا يستحي من الحق قَالَتْ : أَرْبَعَةَ أَشْهُرٍ ، أَوْ خَمْسَةَ أَشْهُرٍ ، أَوْ سِتَّةَ أَشْهُرٍ ، فكتب عمر رضي الله عنه ان لا تحـبس الجيوش فوق أربعة اشهر
رواه سعيد بن منصور في سننه واخرجه عبد الرزاق في مصنفه

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. ஒரு நாள் இரவு உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வருகின்றார்கள். ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. அழுகையின் ஊடாக இடையே ஏதோ சில வாசகங்களையும் அப்பெண்மனி உதிர்த்துக் கொண்டிருந்தார்.

செவியைக் கூர்மையாக்கி கேட்கின்றார்கள். அப்பெண்மனிஎத்துனை இரவுகள் என் துணைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. எத்துனை நீண்டதாகத் தெரிகிறது இந்த இரவுகள்? என் துணைவர் என்னுடன் கொஞ்சிக் குலாவாமல் எங்கோ இருப்பதனால்….

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! அல்லாஹ்வின் அச்சம் மட்டும் என் உள்ளத்தில் இல்லாது போயிருக்குமானால், இந்த கட்டில் என்றோ அதன் உண்மைத் தன்மையை இழந்திருக்கும்என் தேகமும் தான்…” என்ற பொருள் பட கவி நடையில் தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கவிதை வரிகள் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பிழிந்தது. நெருஞ்சி முள்ளாய் தைத்தது. அங்கிருந்து அமைதியாய் அகன்று விட்டார்கள்.

மறுநாள் காலை அந்த வீட்டின் விவரங்களை சேகரிக்க உத்தரவுகள் பாய்ந்தன. இறுதியில், அப்பெண்மனியின் கணவர் அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, நீண்ட காலம் ஆகியும் திரும்பி வரவில்லை என்கிற தகவல் பெறப்பட்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே, கலீஃபா உமர் (ரலி) அவர்கள்ஒரு பெண்ணை தன்னோடு அழைத்துக் கொண்டு அப்பெண்மனியின் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பெண்மனியை அழைத்துதன்னோடு அழைத்து வந்த அப்பெண்மனியை சுட்டிக் காட்டி இதோ! இப்பெண்மனியை  உங்களுக்குத் துணையாக வைத்துக் கொள்ளுங்கள்! தங்கள் கணவருக்கு நான் கடிதம் எழுதி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டு வர ஏற்பாடு செய்கிறேன்என்று கூறினார்கள்.

பின்னர், நேராக தங்களுடைய மகளான உம்முல் முஃமினீன் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றுமகளே! கடந்த இரு தினங்களாக என் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிற ஒரு விஷயத்திற்கு நீ தெளிவாக விடையளித்து, என் உள்ளத்தை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்என்று கூறி விட்டு

தம் கணவனை விட்டும் பிரிந்து வாழ்கிற ஒரு பெண் எவ்வளவு நாள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இயல்புகளோடு இருக்க இயலும்என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார்கள். தந்தையே! என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரிந்து தான் கேட்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ் சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லைஎன்கிற இறைவசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, நடந்த சம்பவத்தை கூறினார்கள்.

அப்போது, அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள்நான்கு மாதம் அல்லது ஆறு மாதம்என்று பதில் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் விரைவாக மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி வந்தார்கள். அறப்போரில் பங்கு பெற உலகின் நாலா பாகங்களுக்கும் சென்றிருக்கிற அத்துனை படைத் தளபதிகளுக்கும்நான்கு மாதங்களுக்கு மேலாக படையில் பங்கு பெற்றிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் ஒரு மாத காலம் விடுப்பு கொடுத்து அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்; இனிமேல் எந்தப் படை வீரர்களும் நான்கு மாதத்திற்கு மேல் போர்ப் பணி செய்யக்கூடாதுஎன கடிதம் எழுதி தூது அனுப்பினார்கள்.  ( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஃ குலஃபாவுர் ரஸூல் {ஸல்}…. }

ஒரு முஸ்லிமின் காதல்….

عَنْ أَنَسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ بِهِنَّ حَلاَوَةَ الإِيمَانِ  أَنْ يَكُونَ اللَّهُ ، عَزَّ وَجَلَّ ، وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا ، وَأَنْ يَكْرَهَ الْعَبْدُ أَنْ يَرْجِعَ عَنِ الإِسْلاَمِ ، كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ ، وَأَنْ يُحِبَّ الْعَبْدُ الْعَبْدَ لاَ يُحِبُّهُ إِلاَّ للهِ ، عَزَّ وَجَلَّ. أخرجه أحمد 3/174(12814) و\"مسلم\" 76

எவ­ரிடம் மூன்று தன்­மைகள் அமைந்­து­விட்­ட­னவோ அவர் ஈமான் எனும் இறை­நம்­பிக்­கையின் சுவையை உணர்ந்­த­வ­ராவார். (அவை) அல்­லாஹ்வும் அவ­னு­டைய தூதரும் அவர்கள் இரு­வ­ரல்­லாத வேறு அனைத்தை விடவும் அதிக நேசத்­திற்­கு­ரி­ய­வர்­க­ளாக இருப்­பது, ஒருவர் மற்­றொ­ரு­வரை அல்­லாஹ்­வுக்­கா­கவே நேசிப்­பது, நெருப்பில் வீசப்­ப­டு­வதை வெறுப்­பது போல் இறை நிரா­க­ரிப்­புக்குத் திரும்பிச் செல்­வதை வெறுப்­பதுஎன்று இறைத்­தூதர் {ஸல்} அவர்கள் கூறி­னார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : புகாரி 16 )

ஒரு முஸ்லிமின் வாழ்வில் முதன் முதலாக காதல் கொள்­ளவும் நேசம் பாராட்­டவும் பொருத்­த­மானவர்கள் அல்லாஹ்வும், அவன் தூதராகிய முஹம்மத் {ஸல்}  அவர்களுமே ஆவார்கள்! என்பதையும், அடுத்த இடம் சக மனிதர்கள் எனவும் அந்த மனிதர்கள் மீது வைக்கும் அன்பும் காதலும் கூட அல்லாஹ்வுக்காகவே இருக்க வேண்டும் என்றும் இந்த நபிமொழி சுட்டிக்காட்டுகின்றது.

எனவே, இறைக்காதலில் இதயத்தை இரையாக்குவோம்! இறை நேசம் பெறுவோம்!! கலாச்சார சீர்கேடுகளில் இருந்து நம்மையும், நம் தலைமுறையினரையும் பாதுகாப்போம்!!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு அருள் புரிவானாக! ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்வதிலிருந்து நம்மையும், நம் சந்ததியினரையும் பாதுகாப்பானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


5 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். அருமையான ஆக்கம்.
    காலத்திற்கேற்ப பயான் குறிப்புகள் வழங்கியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا استاذ

    ReplyDelete
  2. காதல் என்ற உணர்வால் கர்ப்பை இழக்கும் பெண்களுக்கும்
    காதலி என்பதற்காக பாக்கெட்டை காலியாக்கும் ஆண்களுக்கும்

    தன் பிள்ளைகளை தனக்குறிய கட்டுப்பாட்டில் வைத்து வயதிற்கேர்ப்ப வாழ்க்கையின் அறிவுரைகள் வழங்க வேண்டும் என்ற உண்மை நிலையையும்

    உயர்வு தரும் காதலே இறைக் காதல் என்ற உணர்வை எழுத்தால் மனித இதயத்திற்கு உயிரூட்டிய கட்டுரையின் ஆசிரியர் அவர்களை அல்லாஹ் அங்கீகரிப்பானாக ஆமீன்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
    ஹழ்ரத் அவர்களுடைய கட்டுரை என்றுமே புதுமையே

    ReplyDelete
  4. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை முடிந்த பின்புதான் எனக்கு vellimedai bayan வருகிறது

    என்ன காரணம் ஹழரத்தான்

    ReplyDelete

  5. ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...



    1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

    2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

    3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து வாங்குவாள்.

    4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

    5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...

    6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)



    7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு, கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....


    8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

    9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?

    10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

    11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.

    12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

    13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

    14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.

    ReplyDelete