உங்களை அவமதிப்பதை அனுமதியோம்
யாரஸூலுல்லாஹ்!!!
இன்று சர்வதேச அளவில் மிகவும் வேகமாக பரவும் மார்க்கமாக இஸ்லாம் மாறிக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாம் மேற்குலகின் கொள்கைகளையும், ஏகாதிபத்தியத்தின் சித்தாந்தங்களையும் அஸ்தமனமாக்கும் தூரம் வெகுதொலைவில் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக உலக நாடுகளில் வாழும் மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை ஆராய ஆரம்பித்திருப்பது சர்வதேச ஊடகங்களின் வாயிலாக உறுதி படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் தாக்குதலுக்குப் பின் நியூசிலாந்தில் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதிகரித்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றது.
இந்தச் செய்தி மேற்குலகிற்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கும் பேரிடியாக மாறி வழக்கம் போல முஸ்லிம்களை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி, தோல்வி மனப்பான்மையை ( Defeated Mentality ) உருவாக்கும் நோக்குடன் மிகப்பெரிய சதிவேலையைச் செய்யத் துவங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக முஸ்லிம் உம்மத் உயிரினும் மேலாக மதிக்கும் மாநபி {ஸல்} அவர்களின் உருவ அமைப்பை கேலிச் சித்திரமாக வெளியிட்ட ஒரு பத்திரிக்கையின் நகலை ஒரு ஆசிரியர் வகுப்பில் தொங்கவிட்டு அதைக்குறித்து விளக்கமளித்த ஆசிரியரை அந்த வகுப்பில் இருந்த மாணவன் கொலை செய்து விட, அதைக் கருத்துச் சுதந்திரம் என்று பிரகடனப்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாடு.
சார்லி ஹெஃப்டோ என்ற பத்திரிக்கை வெளியிட்ட அந்த கேலிச்சித்திரத்தை பிரான்ஸ் அரசு தன் நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொங்கவிட்டு இது தான் கருத்துரிமை சுதந்திரம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.
அந்நாட்டின் பிரதமர் மெக்ரான் இதை மிகத் தீவிரமாகவே ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார்.
நடைபெற்ற அந்தக் கொலையை பிரான்ஸின் முஸ்லிம் தலைவர்களும், அமைப்புகளும் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க, அந்நாட்டில் உள்ள 73 பள்ளிவாசல்களையும் பல இஸ்லாமிய கலாசாலைகளையும் இழுத்து மூட உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பரப்பளவையும், அதிகமான மக்கள் தொகையையும் கொண்ட மூன்றாவது பெரிய நாடாகும்.
அதிபர் மெக்ரானின் இந்த கண்மூடித்தனமான அறிக்கையின் பின்னால் இருப்பது எது? என்பதை நாம் அறிய வேண்டியது அவசியமாகும்.
இஸ்லாமோ போபியா..
இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதியிருக்கின்றார்கள் சமகாலத்தின் நம்முடைய அறிஞர்கள். எனினும் சுருக்கமாக ஒன்றிரண்டு வார்த்தைகள்.
11/09/2011 அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் மேற்குலகில் உருவாக்கப்பட்ட கருத்தியல் தான் இந்த இஸ்லாமோ போபியா.
இஸ்லாம் பற்றிய பீதியும், அச்சமும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும், காழ்ப்புணர்வும் உலகளாவிய அளவில் வாழும் மக்களின் மனங்களில் அவ்வப்போது விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பிண்ணனியில் உருவாக்கப் பட்ட கருத்தாக்கமே இந்த இஸ்லாமோ போபியா.
இன்று இஸ்லாமோ போபியா சர்வதேச அளவில் ஆலமரம் போன்று படர்ந்து, அடர்ந்து வியாபித்திருக்கின்றது என்றால் மிகையல்ல.
154 க்கும் மேற்பட்ட அச்சு ஊடகங்கள், 100 க்கும் மேற்பட்ட காட்சி ஊடகங்கள், வலைதளங்கள், சினிமா கம்பெனிகள் என இஸ்லாத்திற்கெதிரான சிந்தனைகளை கொண்டு சேர்க்கும் பணியில் இலட்சக்கணக்கான டாலர்களை செலவு செய்து வருகின்றனர் இதை உருவாக்கியவர்கள்.
இதை உருவாக்கி, கருவாக்கி அனைத்தின் பின்னாலும் இருந்து இயக்குபவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பாவின் முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்கள்.
இதற்கு அடிப்படை காரணம் ஒன்றும் உண்டு. Europe and Islam நூலில் The Fall of Civilization and Growing Crescent வளரும் பிறையும் நாகரிகத்தின் வீழ்ச்சியும் எனும் தலைப்பில் 21 –ஆம் நூற்றாண்டின் அரை இறுதிப்பகுதியில் இஸ்லாம் ஐரோப்பாவின் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றம் பெறுவது சாத்தியம்” என்கிறார் மோசே சாபிச் என்கிற ஆய்வாளர்.
இதே அளவு கோலைத்தான் மற்றெல்லா நாடுகளின் நிலையாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே தான் அலை அலையாய் மக்கள் இஸ்லாத்தின் பால் மக்கள் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதை தடுக்கும் முகமாக, இஸ்லாம் குறித்த மாயைகளை கட்டமைத்து இந்த கருத்தியல் மூலம் சர்வதேச அளவில் பரப்பி வருகின்றனர்.
எனவே தான் இன்று முஸ்லிம் சமூகம் உலகளாவிய அளவிலும், தேசிய, பிராந்திய மாநில அளவிலும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
இஸ்லாமோ போபியா மூலம் விதைக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பீதியும் அச்சமும், முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் தற்போது அதன் கோர விளைவுகளை முஸ்லிம் உம்மத் மீது காட்டத் தொடங்கி உள்ளது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த முஸ்லிம் உம்மத்தை உலகின் எல்லா சூழ்ச்சிகளில் இருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்!.
பிரான்ஸுக்கு ஒன்றும் புதிதல்ல…
சார்லி ஹெஃப்டோ எனும் பிரஞ்சு வாரப்பத்திரிக்கை 09/02/2006 –ல் நபி {ஸல்} அவர்களை தவறாக சித்தரித்து 3 கார்ட்டூன்களை வெளியிட்டது.
இந்த கார்ட்டூன்கள் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் எழுந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வெளியிடப்பட்ட அப்பட்டமான அவதூறு என பிரன்ஸ் நாட்டின் நீதிமன்றத்தில் The Grand Mosque of Paris, The Muslim World League, The Union of French Islamic Organisations என்ற இந்த மூன்று தரப்பின் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
22/03/2007 –ல் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் “முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தூற்றவில்லை. இது கருத்துச் சுதந்திரம், ஊடக தர்மம் என்று முடிவுரை எழுதி வழக்கை தள்ளுபடி செய்து சார்லி ஹெஃப்டோ பத்திரிக்கையை வழக்கிலிருந்து விடுவித்து” தீர்ப்பு வழங்கியது.
23/03/2011 துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிப்படையிலான ஆட்சி வீழ்த்தப்பட்டு துனிசிய பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு இஸ்லாமிய கட்சி ஒன்று பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற்று இஸ்லாமிய மக்களாட்சியை அமைத்தது.
இந்த வெற்றியைக் கண்டு வயிற்றெரிச்சல் அடைந்த சார்லி ஹெஃப்டோ 31/03/2011 அன்று இது தான் முஹம்மது நபியின் முகம் எனும் தலைப்பில் மீண்டும் மாநபி {ஸல்} அவர்கள் குறித்து கார்ட்டூன் வரைந்து வெளியிட்டது.
இம்முறை முஸ்லிம்கள் யாரும் கோர்ட்டுக்கு போகவில்லை. ஏனெனில், 2007 –ஆம் ஆண்டு தீர்ப்பும், வழக்கு தள்ளுபடியும் ஞாபகத்திற்கு வந்தது.
ஆனால், யாரோ சில மர்ம நபர்களால் இந்த பத்திரிக்கைக்குச் சொந்தமான ஒரு குடோன் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.
2012 –ஆம் ஆண்டு இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படம் வெளியாகி, சர்வதேச அளவில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்திய வேளையில் பிரான்ஸ் முஸ்லிம்களும் போராட்டக்களத்தில் குதித்தனர்.
இதைக் கண்டு குமுறிய பிரான்ஸ் நாட்டின் சார்லி ஹெஃப்டோ வாரப்பத்திக்கை 2012 –ஆண்டு செப்டம்பர் மாத இதழில் பெருமானார் {ஸல்} அவர்கள் குறித்து ஆபாசமாக, நிர்வாணமாக கார்ட்டூன் வெளியிட்டது. அந்த மாதம் முழுதும் அதை வெளியிட்டது.
அப்போதும் அரசு இது கருத்துச் சுதந்திரம் என்று சார்லி ஹெஃப்டோவுக்கு பல்லக்கு தூக்கியது. நீதிமன்றத்தில் நீதி இல்லை. அரசிடம் உண்மை இல்லை இனி நாம் ஒதுங்கிக் கொள்வோம் என பிரெஞ்சு முஸ்லிம்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
இந்நிலையில் 2015 ஜனவரி 7 –ஆம் தேதியன்று அல்ஜீரிய நாட்டு வம்சாவழி பயங்கரவாதிகள் இருவரின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு சார்லி ஹெஃப்டோ பத்திரிக்கை அலுவலகம் இரையானது.
அங்கு பணியாற்றிய 12 பேர் அதே இடத்தில் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். இறுதியில் காவல்துறை அந்த இருவரையும் சுட்டுக் கொன்று விட்டு இருவரும் அல் காய்தா அமைப்பைச் சாந்தவர்கள் என்று அறிவித்து விட்டு அவ்விரண்டு பேரின் குடும்பத்தார், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என்று சிலரின் மீது வழக்கு போட்டது.
அந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் 2020/2 –ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ தீர்ப்பை எதிர் நோக்கி இருக்கும் நிலையில் சார்லி ஹெஃப்டோ செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 2006 –ல் இருந்து வெளியான அத்துனை கார்ட்டூன்களையும் வெளியிட்டது.
வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இப்படி படங்களை வெளியிடுவது தவறில்லையா? என்ற போது அதற்கும் கருத்துரிமை என்றே பதில் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் ஒரு பள்ளிக் கூடத்தின் ஆசிரியர் வகுப்பறையில் அந்த படங்களை தொங்க விட்டு அது குறித்து பாடம் நடத்த, அங்கிருந்த ஒரு மாணவி அதை மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவச் செய்ய, அது வைரல் ஆக, ரஷ்ய வம்சாவழியைச் சேர்ந்த ஒரு மாணவன் சென்ற வாரம் அந்த ஆசிரியரை கொன்று விட்டதாகக் கூறி அந்த மாணவனை பிரான்ஸ் போலீஸ் சுட்டுக் கொன்றதாக அறித்தது.
இதற்கு அரசின் செயல்பாடும் அதிபர் இமானுவேல் மெக்ரானின் அறிக்கையும் பிரான்ஸ் முஸ்லிம்களை மட்டும் அல்ல. உலகளாவிய முஸ்லிம்களையும் கொதிப்படைய வைத்திருக்கின்றது.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளான குவைத், கத்தார், துருக்கி போன்ற நாடுகள் பிரான்ஸ் பொருளை புறக்கணிப்பதாக அறிவித்து, பெரும்பாலான மால்கள், சூப்பர்மார்க்கெட்டுகளில் இருந்து பிரான்ஸின் பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன்.
மேலும், லிபியா, ஜோர்டான், சிரியா, ஃபலஸ்தீன் போன்ற நாடுகளில் பிரான்ஸ்க்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
மாநபி {ஸல்} அவர்களும்… முஸ்லிம் உம்மத்தும்…
النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ
அல்லாஹ் கூறுகின்றான்:
“திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபி தான் முன்னுரிமை பெற்றவராவார்” ( அல்குர்ஆன்: 33: 6 )
இன்னுமோர் இறைவசனம் இவ்வாறு பிரகடனப்படுத்தும்…
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ()
”நபியே! இறை நம்பிக்கையாளர்களை அழைத்துச் சொல்லி விடுங்கள்! உங்கள் பெற்றோர், மக்கள், சகோதரர்கள், மனைவியர், மற்றும் உறவுகள், நீங்கள் நஷ்டப்படுவதை அஞ்சும் உங்கள் வர்த்தகம், நீங்கள் ஆசிக்கும் உங்களது இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும் அவனது தூதரையும், நேசிப்பதை விட, அவனுடைய பாதையிலே போரிடுவதை விட உங்களுக்கு அதிக பிரியமுடையவைகளாக இருப்பின், அல்லாஹ், தன்னுடைய ஆனையைக் கொண்டு வரும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்! அல்லாஹ், பாவிகளுக்கு அவர்களது நோக்கத்தில் ஒரு போதும் வெற்றியை தரமாட்டான்”.
( அல்குர்ஆன்: 9: 24 )
அல்லாஹ்வின் இந்தப் பிரகடனம் தான் இந்த உலகில் எல்லோரையும் விட, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} மீது அன்பும், நேசமும், காதலும் கொண்டிருக்க தூண்டுகின்றது.
இது விஷயத்தில் அண்ணலாரின் அருமைத் தோழர்கள் தான் இந்த உம்மத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரிகள்.
அண்ணலாரின் மீது அன்பு, நேசம் வைப்பதன் எல்லையை இந்த உலகத்திற்கு வகுத்தவர்கள்.
அந்த எல்லையில் இருந்து இந்த விவகாரங்களை நாம் அணுகி, மாநபி {ஸல்} அவர்களின் கண்ணியத்தை சீர்குலைப்பவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவோம்! வாருங்கள்!
وقد سُئِل علي ـ رضي الله عنه ـ كيف كان حبكم لرسول الله ـ صلى الله عليه وسلم ـ؟، قال: " كان والله أحب إلينا من أموالنا وأولادنا، وآبائنا وأمهاتنا، ومن الماء البارد على الظمأ ".
ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் ”நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்களான உங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது?” என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு, அலீ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், நாங்கள் பெற்றெடுத்த மக்கள், எங்களைப் பெற்றெடுத்த அன்பு அன்னையர்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள் நபி {ஸல்} அவர்களை நேசித்தோம்” என்று கூறினார்கள்.
நபி {ஸல்} அவர்களின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் நபி {ஸல்} அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மீதான நேசத்தையும், அன்பையும் முன்பை விட மிகவும் உயர்ந்ததாய் அமைத்துக் கொள்வோம்.
மாநபி {ஸல்} அவர்களை இவ்வளவு நேசித்த அந்த சமூகம் மாநபி {ஸல்} அவர்களின் கண்ணியம் சீண்டிப்பார்க்கப்பட்ட போது எவ்வாறு நடந்து கொண்டது? மாநபி {ஸல்} அவர்களின் மரியாதைக்கு ஒரு இழுக்கு ஏற்பட்ட போது எப்படி நடந்து கொண்டது? என்பதை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
மாநபி {ஸல்} அவர்களை எவரிடமும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது…
فلما بلغ النبي صلى الله عليه وسلم هذا الخبر قال لأصحابه أيكم( ينزل ) خبيبا عن خشبته وله الجنة؟ فقال الزبير: أنا يا رسول الله وصاحبي المقداد بن الأسود، فخرجا يمشيان بالليل ويكمنان بالنهار حتى أتيا التنعيم ليلأ 31/ب وإذا حول الخشبة أربعون رجلا من المشركين نائمون نشاوى فأنزلاه فإذا هو رطب ينثني لم يتغير منه شيء بعد أربعين يوما، ويده على جراحته وهي تبض دما اللون لون الدم والريح ريح المسك، فحمله الزبير على فرسه وسارا فانتبه الكفار وقد فقدوا خبيبا فأخبروا قريشا فركب منهم سبعون، فلما لحقوهما قذف الزبير خبيبا فابتلعته الأرض فسمي بليع الأرض.
فقال الزبير: ما جراكم علينا يا معشر قريش، ثم رفع العمامة عن رأسه وقال: أنا الزبير بن العوام وأمي صفية بنت عبد المطلب وصاحبي المقداد بن الأسود أسدان رابضان يدافعان عن شبليهما فإن شئتم ناضلتكم وإن شئتم نازلتكم وإن شئتم انصرفتم، فانصرفوا إلى مكة، وقدما على رسول الله صلى الله عليه وسلم وجبريل عنده فقال يا محمد إن الملائكة لتباهي بهذين من أصحابك فنزل في الزبير والمقداد بن الأسود { وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ } حين شريا أنفسهما لإنزال خبيب عن خشبته
عيون الأثر لابن سيد الناس: 2 / 56-66
ஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.
ஆம்! குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம்.
எதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள். ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான் அங்கே வந்தார்.
வந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின் அருகே சென்று “குபைபே! உம்மை துன்புறுத்த வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல!
குபைபே! உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான்! அதுவும் ஒற்றை வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே!
“இந்தக் கழுமரத்தில் முஹம்மத் {ஸல்} அவர்கள் ஏற்றப்படுவதை நான் விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிடு!
உமக்கு வாழ்க்கை தருகின்றோம்! உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்” என்றார்.
“என் மனைவி, மக்களுடன் வாழவோ, உலக இன்பத்தில் திளைக்கவோ நான் ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு அழிப்பீர்களே அப்போதும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
என் வாயால் ஒரு போதும் நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும் சொல்லப்போவதில்லை.
கேட்டுக் கொள்ளுங்கள்! நபி {ஸல்} அவர்களின் திருப்பாதங்களில் சிறு முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
இது கேட்ட அபூசுஃப்யான் ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே ஃகுபைபை காலி செய்யுமாறு சைகை செய்தார்.
தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.
கையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள் எதிரிகள்.
மரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி “இறைவா! உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம்! எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு! என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு!” என்று இறைஞ்சினார்கள்.
அல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடனே அங்கீகரித்தான். ஆம்! குபைப் (அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ஸல்} அவர்களுக்கு அறிவித்தான்.
நபி {ஸல்} அவர்கள் குபைப் (ரலி) அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த உள்ளார்ந்த அன்பை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.
வார்த்தையில் கூட விட்டுக் கொடுக்காத குபைப் (ரலி) அவர்களின் மாநபி {ஸல்} அவர்களின் மீதான நேசத்தை வெளிப்படுத்துகின்றது. ( நூல்:உயூனுல் அஸர் )
மனம் துடித்துப் போக வேண்டும்...
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடுத்திருந்த தருணம் அது.. நீண்ட தூர பயணம், கடுமையான வெயிற்காலமும் கூட.. நிறைய நிதிகளும், தளவாடங்களும் தேவைப் பட்டது.
மக்களை அல்லாஹ்வின் பாதையில் அள்ளி அள்ளி வழங்குமாறு மாநபி {ஸல்} அவர்கள் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். மக்களும் ஒவ்வொருவராக வந்து தங்களால் இயன்ற அளவு கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு ஏழை நபித்தோழர் தன் விரிப்பைக் கொண்டு வந்து சந்தையில் “இதோ இந்த விரிப்பை யாரேனும் விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். தபூக்கிற்கான நிதியில் என் பங்கும் சேர வேண்டுமென நான் ஆவல் கொள்கிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்.
ஒருவர் ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட அந்த நபித்தோழர் விரைவாக மாநபியை நோக்கிச் சென்றார். தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உமைர் இப்னு ஸஅதுல் காரீ என்ற சிறுவர் அந்த நபித்தோழரைப் பின் தொடர்ந்தார்.
மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருந்த நபிகளாரின் கையில் ஒரு திர்ஹத்தை கொடுத்து விட்டு தமது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தினார் அந்த ஏழை நபித்தோழர்.
அவர் நபிகளாரை விட்டு நகர்ந்ததும் உஸ்மான் {ரலி} அவர்கள் அங்கே வந்தார்கள். 1000 பொற்காசுகள் நிரப்பப்பட்ட ஒரு தோல் பையை மாநபியின் கரங்களில் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் {ரலி} அவர்கள் தமது தோள்களில் ஒரு பையைச் சுமந்து வந்து மாநபி {ஸல்} அவர்களின் முன் கொட்டினார்கள். பையிலிருந்து 200 ஊக்கியா தங்கக் கட்டிகள் வந்து விழுந்தது.
இப்படியாக, நபித்தோழர்கள் ஒவ்வொருவராக வருவதும், ஏதாவது கொடுத்து விட்டுச் செல்வதுமாய் இருந்தனர். இந்தக் காட்சியை மஸ்ஜிதின் வாசலில் நின்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிறுவரான உமைர் இப்னு ஸஅத்.
வேகமாக தம் வீட்டிற்கு வந்தார். இவரின் தந்தை ஸஅத் {ரலி} அவர்கள் பத்ரில் கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார். பின்னர் இவரின் தாயார் அர்மலா {ரலி} அவர்கள், ஜுலாஸ் இப்னு சுவைத் {ரலி} என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
இப்போது வளர்ப்புத் தந்தையான ஜுலாஸ் {ரலி} அவர்களிடம் வந்து “சந்தையிலிருந்து துவங்கி மாநபி {ஸல்} அவர்களின் தர்பார் வரையிலான தான் கண்ட காட்சியை சொல்லிவிட்டு, ஆதங்கத்தோடு அச்சிறுவர் கேட்டார்.
தந்தையே! ”நீங்களும் பெரும் செல்வந்தர் தானே ஏன் நபி {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்விற்காக கொடை வழங்கவில்லை.? போய் நீங்களும் கொடுத்து விட்டு வாருங்கள். என்றார். فقال: والله إن كان محمد صادقًا لنحن شر من الحمير، وكانت أم عمير بن سعد تحته، كان عمير يتيمًا في حجره لا مال له، وكان يكفله، ويحسن إليه، فسمعه يقول هذه الكلمة، فقال: يا جلاس، لقد كنت أحب الناس إليَّ، وأحسنهم عندي يدًا، وأعزهم عليَّ، ولقد قلت مقالة لئن ذكرتها لأفضحنك، ولئن كتمتها لأهلكن، فذكر للنبي صَلَّى الله عليه وسلم مقالة الجلاس، فبعث النبي صَلَّى الله عليه وسلم إلى الجلاس، فسأله عما قال عمير، فحلف بالله ما تكلم به وإن عميرًا لكاذب، وعمير حاضر، فقام عمير من عند النبي صَلَّى الله عليه وسلم وهو يقول: اللهم أنزل على رسولك بيان ما تكلمت به، فأنزل الله تعالى
{وَلَقَدْ قَالُوا كَلِمَةَ الْكُفْرِ}. التوبة/ 74
الآية، فتاب بعد ذلك الجلاس، واعترف بذنبه، وحسنت توبته، ولم ينزع عن خير كان يصنعه إلى عمير، فكان ذلك مما عرفت به توبته
அதற்கு, ஜுலாஸ் “முஹம்மத் அவர் சொல்வதில் {கொள்கையில்} உண்மையாளராக இருப்பாரேயானால், நாம் கழுதையை விட கேடு கெட்டவர்களாக ஆகி விட்டிருப்போம்” என்று சொன்னார்.
இதைக் கேட்ட உமைர் ”முஹம்மத் {ஸல்} அவர்கள் உண்மையாளர் தான் என்று நான் சாட்சி கூறுகின்றேன். நீர் தான் கழுதையை விட கேடு கெட்டவர்” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.
இந்த பதிலை சற்றும் எதிர் பாராத ஜுலாஸ் “மகனே தயவு செய்து இதை நபிகளாரிடம் சொல்லிவிடாதே என்று சொன்னார்.
அப்போது உமைர் “ஜுலாஸே! என்று பெயர் கூறி அழைத்து, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதுவரை என் இதயத்தில் மனிதர்களில் மிகவும் உயர்ந்தவராக உம்மைத்தான் வைத்திருந்தேன். என் சிந்தையில் உம்மைத் தான் பெரும் கொடையாளியாக இருத்தியிருந்தேன். உம்மை கண்ணியமானவராகவும், நல்லவராகவும் கருதியிருந்தேன்.
ஆனால், நீர் சொன்ன ஒரு வார்த்தை உம் மீதான அனைத்து நன்மதிப்பையும் தூக்கி எறிய வைத்து விட்டது.
இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளும்! நீர் பேசியதை மக்களிடம் தெரியப்படுத்தினால், நான் உம்மை கேவலப்படுத்தியது போல் ஆகி விடும். நீர் பேசியதை நான் மறைத்து விட்டால் மக்களெல்லாம் மதிக்கின்ற இறைத் தூதருக்கு நான் துரோகம் செய்தது போல் ஆகிவிடும்”.
ஆகவே, கண்டிப்பாக நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சொல்வேன். என்றார்.
அதற்கு ஜுலாஸ் ”நீ சிறுவனாக இருப்பதால் உன் சொல்லை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.” எனக்கொன்றும் கவலை இல்லை என்றார்.
உமைர் மஸ்ஜிதுன்நபவி-க்கு வந்தார். மாநபி {ஸல்} அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரமாகக் கூறினார்.
உறுதியான நெஞ்சோடும், உண்மைக்கும்,நீதிக்கும் சாட்சியாளனாய் நின்று சான்று பகர்வதை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த மாநபி {ஸல்} அவர்கள் ஜுலாஸை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்கள்.
அதற்குள் அங்கிருந்த சில நபித் தோழர்கள் ”ஜுலாஸ் நம்மோடு தான் தொழுகிறார். நம்மோடு தான் கலந்துறவாடுகிறார்” அவர் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றனர்.
இன்னும் சிலரோ இப்படிச் சொன்னார்கள் “சிறுவராக இருந்தாலும் இவரையும் நாங்கள் தொழக் கண்டிருக்கிறோம். மேலும், சிறுவரின் முகமே சொல்கிறது அவர் பொய் சொல்ல மாட்டார் என்று”.
ஜுலாஸ் வந்தார் வந்தவரிடத்தில் ”உமைர் சொல்வது உண்மையா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜுலாஸ் “இல்லை! அல்லாஹ்வின் தூதரே! உமைர் பொய் சொல்கிறார்” என்றார்.
மாநபி {ஸல்} அவர்கள் உமைரை நோக்கி பார்த்தார்கள். “ நான் பொய் சொல்லவில்லை அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்களைப் பற்றி அப்படித்தான் சொன்னார்” என்றார் உமைர்.
அப்போது ”அல்லாஹ்வின் மீது சத்தியமாச் சொல்கின்றேன்! நான் ஒரு போதும் அப்படிச் சொல்லவில்லை” என்றார் ஜுலாஸ். இதைக் கேட்ட பிஞ்சு நெஞ்சம் பதறியது, கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வந்தது.
வானை நோக்கிப் பார்த்த உமைரின் பிஞ்சு வதனங்கள் “அல்லாஹ்வே! உன் தூதரின் மீது என் விஷயத்தில் விளக்கத்தை இறக்கியருள்” என்று மொழிந்தது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமைதியானார்கள்.
சுற்றியிருந்த நபித்தோழர்கள் விளங்கிக் கொண்டனர் மாநபியவர்களுக்கு இறைத்தூது {வஹீ} வந்து கொண்டிருக்கின்றது என்று.
பின்பு நபி {ஸல்} அவர்கள் : “ நாங்கள் அவ்வாறு கூறவில்லை” என்று அல்லாஹ்வின் மீது (மீண்டும் மீண்டும்) சத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் நிராகரிப்பை மேற்கொண்டு விட்டார்கள். மேலும், தம்மால் செய்ய முடியாத செயலை செய்ய நினைத்தார்கள். தன்னுடைய அருளால் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குச் செல்வம் வழங்கியதற்காகவா, அவர்கள் இவ்வளவு வெறுப்புக் கொள்கிறார்கள்! அவர்கள் தம்முடைய இந்நடத்தையில் இருந்து விலகிக் கொண்டால் அது அவர்களுக்குச் சிறந்ததாகும்.விலகிக் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். இப்பூமியில் அவர்களை ஆதரிப்போரையும்,அவர்களுக்கு உதவிசெய்வோரையும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.” அல்குர்ஆன்:9:74. எனும், வசனத்தை ஓதிக்காட்டி இப்போது தான் ஜிப்ரீல் {அலை} அவர்கள் இந்த வசனத்தை தந்து விட்டுச் செல்கிறார்கள். என்றார்கள்.
இதைக் கேட்ட ஜுலாஸ் “அல்லாஹ்வின் தூதரே! எனக்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யுங்கள். நானும் தவ்பாச் செய்கிறேன். உமைர் உண்மைதான் சொன்னார்.
நான் தான் பொய் சொன்னேன்.என்று கூறியவாறு கண்ணீர் விட்டு அழுதார். அப்போது, முகம் நிறைய மகிழ்ச்சியோடு நின்று கொண்டிருந்த உமைர் இப்னு ஸஅத் {ரலி} அவர்களை மாநபி {ஸல்} அவர்கள் தம் அருகே அழைத்து,
அவரின் காதுகளை வருடிவிட்டு “உம் காதுகள் உண்மையையே கேட்டிருக்கின்றது. மேலும், உன்னுடைய இறைவன் நீ உண்மையாளன் தான் என்பதை உறுதிபடுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை தன் தந்தை சுபைர் {ரலி} அவர்கள் மூலமாக அறிவிக்கக்கூடிய உர்வா {ரஹ்} அவர்கள் “ இந்த சம்பவத்திற்குப் பிறகு உமைர் {ரலி} அவர்களின் வாழ்க்கையில், அவர் மரணிக்கும் வரை மிக உயர்வான நிலை மட்டுமே காணப்பட்டது.” என்று தம் தந்தை சுபைர் {ரலி} தம்மிடம் சொன்னதாக கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸை உர்வா {ரஹ்} அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு ஸீரீன் {ரஹ்} அவர்கள் “ இந்த சம்பவத்திற்குப் பின் ஈமானை சீர் குலைக்கும் எந்த ஒரு செயலிலும் ஜுலாஸ் {ரலி} அவர்கள் ஈடுபடவில்லை. என்று கூறுகின்றார்கள்.
ஹூமைத் இப்னு ஜஅஃபர் {ரஹ்} அவர்கள், அவர்களின் தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார்கள். “இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஜுலாஸ், உமைர் {ரலி} அவர்களை முன்பை விட மிக சிறப்பாக நடத்தினார். தான் நேர்வழி அடைய உமைர் தான் காரணம் என்று அடிக்கடி சொல்வார்களாம்.” ( நூல்:துர்ருல் மன்ஸூர், பாகம்:3, பக்கம்:463,464. முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஹதீஸ் எண்:18303. அல் இஸ்தீஆப், 1/151, 152,153. 2/158,159. )
பெருமானாரின் கண்ணியத்தை சிறு பிராயத்திலேயே ஊட்டி வளர்க்க வேண்டும்…
روى البخاري ومسلم في صحيحيهما من حديث عبد الرحمن بن عوف قال: بينا أنا واقف في الصف يوم بدر، فنظرت عن يميني وعن شمالي، فإذا أنا بغلامين من الأنصار، حديثة أسنانهما، تمنيت أن أكون بين أضْلَعَ منهما، فغمزني أحدهما فقال: يا عم، هل تعرف أبا جهل؟ قلت: نعم، ما حاجتك إليه يا ابن أخي؟ قال: أُخبرتُ أنه يسب رسول الله - صلى الله عليه وسلم -، والذي نفسي بيده، لئن رأيته لا يفارق سوادي سواده حتى يموت الأعجل منا، فتعجبت لذلك، فغمزني الآخر، فقال لي مثلها، فلم أنشب أن نظرت إلى أبي جهل يجول في الناس، قلت: ألا إن هذا صاحبكما الذي سألتماني، فابتدراه بسيفيهما، فضرباه حتى قتلاه، ثم انصرفا إلى رسول الله - صلى الله عليه وسلم - فأخبراه، فقال: "أيكما قتله؟" قال كل واحد منهما: أنا قتلته، فقال: "هل مسحتما سيفيكما؟" قالا: لا، فنظر في السيفين، فقال: "كلاكما قتله، سلبه لمعاذ بن عمرو بن الجموح" وكانا معاذ بن عفراء، ومعاذ بن عمرو بن الجموح
பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, 'அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, 'என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?' என்று கேட்டார்.
நான், 'ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!" என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், 'அவன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார்.
இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, 'இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!" என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள்.
பிறகு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களில் யார் அவனைக் கொன்றது?' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)" என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?' என்று கேட்டார்கள். இருவரும், 'இல்லை" என்று பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, 'நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) 'அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்” என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அறிவித்துவிட்டு, அவ்விருவரும் முஆத் இப்னு அம்ர் (ரலி) மற்றும் முஅவ்வித் இப்னு அம்ர் (ரலி) ஆவார்கள் என்று கூறினார். ( நூல்: புகாரி )
அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்…
وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ () إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ ()
“இணைவைத்து வணங்குவோரைப் புறக்கணித்து விடுவீராக! உம்மை பரிகாசம் செய்வோர் குறித்து தண்டனை வழங்க நிச்சயமாக நாம் போதுமானவர்களாக இருக்கின்றோம்”. ( அல்குர்ஆன்: 15: 94,95 )
إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا ()
“நிச்சயமாக! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் துன்புறுத்துவோரை அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் சபிக்கின்றான். இழிவு தரும் வேதனையையும் தயார் செய்து வைத்துள்ளான்”. ( அல்குர்ஆன்: 33: 57 )
பெருமானார் {ஸல்} அவர்களை அவமதித்த எத்தனையோ தறுதலைகளை அல்லாஹ் இந்த உலகத்தில் பெரும் கேவலத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றான் என்பதே வரலாறு சொல்கிற நிதர்சனமான பாடமாகும்.
எனவே, நம்மின் மீதான மிக முக்கியக் கடமை “பூமான் நபி {ஸல்} அவர்களை அவமதிப்பவர்களைப் புறக்கணிப்பது தான்.
அந்த வகையில் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளான குவைத், கத்தார் போன்ற நாடுகளைப் பின்பற்றி பிரான்ஸ் மட்டுமல்ல, மாநபி {ஸல்} அவர்களை இழிவு படுத்துகிற எவரையும் நாம் உடனடியாக புறக்கணிக்க முன் வர வேண்டும்.
உலகம் உள்ள வரை பூமான் நபி {ஸல்} அவர்களின் புகழில் அணுவளவு கூட உலகில் எவர் நினைத்தாலும் குறைத்து விட முடியாது என்பதை உலகிற்கு உரக்கச் சொல்வோம்!!!
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ()
“மேலும் நாம் உம்முடைய புகழை நாம் உமக்காக உயர்த்தினோம்!” (அல்குர்ஆன்: 94: 4 )
அல்லாஹ்வே! பெருமானார் {ஸல்} அவர்களின் மீதான கண்ணியத்தை முஸ்லிம் உம்மாவிற்கு உள்ளத்தில் உறுதிபடுத்துவாயாக!!
இந்த கட்டடுரையில்
ReplyDeleteநிகழ் கால செய்திகளையும்
சேர்திருக்கலாம்
உங்கள் முயற்சியை அல்லாஹ் கபூள் செய்வானாக, ஆமீன்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteகாலத்திற்கேற்ப உணர்ச்சிகரமாக ஆக்கத்தை வழங்கியுள்ளீர்கள் ஹஜ்ரத். جزاكم الله خيرا كثيرا يا استاذ الكريم
மாஷா அல்லாஹ் எப்போதும் போல இந்த தலைப்பும் அருமை.
ReplyDeleteبارك الله فيكم
baarakallh usthah
ReplyDeleteHafiz kalil ahamed aalim khairi
ReplyDelete