Thursday, 4 February 2021

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை

அவனி மாந்தர்க்கு அறிமுகம் செய்வோம்!!!

 


நமக்குப் பிடித்தமானவற்றை, நமக்குப் பிடித்தமானவர்களை நமக்கு நெருக்கமானவர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதில் நாம் அளவிலா ஆனந்தம் அடைகின்றோம்.

 

நம்மை இந்த உலத்திற்கு அடையாளப்படுத்திய பெற்றோர்களை, நம்மை சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த ஆசிரியர்களை, நாம் பெற்றெடுத்த பிள்ளைச் செல்வங்களை, நம் உறவுகளை, குடும்ப நண்பர்களை, பள்ளித் தோழர்களை இப்படியாக நாம் அறிமுகம் செய்து வைத்து மகிழ்கின்றோம்.

 

ஆனால், முஸ்லிம் என்ற அடையாளத்தோடு, கம்பீரத்தோடு பூமியில் வாழ்கிற மக்களிலேயே சிறந்த பண்புகளோடு வாழக் கற்றுத் தந்த, நிரந்தர நரகில் இருந்து காத்து, சுவனத்தின் சொந்தக்காரர்களாக ஆக்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை நாம்நம்மோடு மாமன் மச்சான்களாக, சித்தப்பா மகன்களாக, அண்ணன் தம்பிகளாக அந்நியோன்யமாக வாழ்ந்து வருகிற சகோதர சமய மக்களிடையேஇதோ! இவர் தான் என் தலைவர்! என் வாழ்வியல் வழிகாட்டி! மனித நேய மாண்பாளர், சாதனைப் படைத்த சர்தார் நபி {ஸல்} அவர்கள் என்று அவர்களின் வாழ்வியலை நாம் அறிமுகம் செய்திருக்கின்றோமா?

 

மாநபி {ஸல்} அவர்களின் கண்ணியத்தை அறியாத, மாண்பை உணராத ஒரு சமூகத்தை நம்மைச் சுற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கின்றோமே? நாளை மறுமையில் அல்லாஹ் இது குறித்து நம்மிடம் கேட்க மாட்டானா? கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்?!

 

உலகில் அதிக மக்களால் நாள் தோரும் அதிகம் தேடப்படுகிற, அதிகம் பேசப்படுகிற, அதிகம் புகழப்படுகிற, அவர்களின் பெயரை சூட்டியிருக்கிற ஒப்பற்ற ஒரு மாமனிதரை நாம் அறிமுகம் செய்திருக்க வேண்டாமா?

 

அல்லாஹ் இப்போது தமிழகத்தில் நமக்கு அழகான ஒரு சூழலை, தஃவா களத்தை ஏற்படுத்தி தந்துள்ளான்.

 

அழகான இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சகோதர சமய மக்களின் வெகுஜன மக்களிடையே மாநபி {ஸல்} அவர்களை நூற்களின் வாயிலாக, பேச்சின் ஊடாக, செயல்பாடுகளின் வழியாக அறிமுகம் செய்வோம்.

 

போராட்டக் களங்களில் பங்கேற்பதோடு இத்தகைய அரும் பணிகளில் நாம் நம்மை ஈடுபடுத்தி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம்மீது கடமையாகும்.

 

பெரும்பான்மை சமூகத்தின் முன்பாக அறிமுகம் செய்த ஜஃபர் (ரலி)…

 

حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ الْمَخْزُومِيِّ عَنْ أُمِّ سَلَمَةَ ابْنَةِ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ لَمَّا نَزَلْنَا أَرْضَ الْحَبَشَةِ جَاوَرْنَا بِهَا خَيْرَ جَارٍ النَّجَاشِيَّ أَمِنَّا عَلَى دِينِنَا وَعَبَدْنَا اللَّهَ لَا نُؤْذَى وَلَا نَسْمَعُ شَيْئًا نَكْرَهُهُ فَلَمَّا بَلَغَ ذَلِكَ قُرَيْشًا ائْتَمَرُوا أَنْ يَبْعَثُوا إِلَى النَّجَاشِيِّ فِينَا رَجُلَيْنِ جَلْدَيْنِ وَأَنْ يُهْدُوا لِلنَّجَاشِيِّ هَدَايَا مِمَّا يُسْتَطْرَفُ مِنْ مَتَاعِ مَكَّةَ وَكَانَ مِنْ أَعْجَبِ مَا يَأْتِيهِ مِنْهَا إِلَيْهِ الْأَدَمُ فَجَمَعُوا لَهُ أَدَمًا كَثِيرًا وَلَمْ يَتْرُكُوا مِنْ بَطَارِقَتِهِ بِطْرِيقًا إِلَّا أَهْدَوْا لَهُ هَدِيَّةً ثُمَّ بَعَثُوا بِذَلِكَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ بْنِ الْمُغِيرَةِ الْمَخْزُومِيِّ وَعَمْرِو بْنِ الْعَاصِ بْنِ وَائِلٍ السَّهْمِيِّ وَأَمَرُوهُمَا أَمْرَهُمْ وَقَالُوا لَهُمَا ادْفَعُوا إِلَى كُلِّ بِطْرِيقٍ هَدِيَّتَهُ قَبْلَ أَنْ تُكَلِّمُوا النَّجَاشِيَّ فِيهِمْ ثُمَّ قَدِّمُوا لِلنَّجَاشِيِّ هَدَايَاهُ ثُمَّ سَلُوهُ أَنْ يُسْلِمَهُمْ إِلَيْكُمْ قَبْلَ أَنْ يُكَلِّمَهُمْ قَالَتْ فَخَرَجَا فَقَدِمَا عَلَى النَّجَاشِيِّ وَنَحْنُ عِنْدَهُ بِخَيْرِ دَارٍ وَعِنْدَ خَيْرِ جَارٍ فَلَمْ يَبْقَ مِنْ بَطَارِقَتِهِ بِطْرِيقٌ إِلَّا دَفَعَا إِلَيْهِ هَدِيَّتَهُ قَبْلَ أَنْ يُكَلِّمَا النَّجَاشِيَّ ثُمَّ قَالَا لِكُلِّ بِطْرِيقٍ مِنْهُمْ إِنَّهُ قَدْ صَبَا إِلَى بَلَدِ الْمَلِكِ مِنَّا غِلْمَانٌ سُفَهَاءُ فَارَقُوا دِينَ قَوْمِهِمْ وَلَمْ يَدْخُلُوا فِي دِينِكُمْ وَجَاءُوا بِدِينٍ مُبْتَدَعٍ لَا نَعْرِفُهُ نَحْنُ وَلَا أَنْتُمْ وَقَدْ بَعَثَنَا إِلَى الْمَلِكِ فِيهِمْ أَشْرَافُ قَوْمِهِمْ لِيَرُدَّهُمْ إِلَيْهِمْ فَإِذَا كَلَّمْنَا الْمَلِكَ فِيهِمْ فَتُشِيرُوا عَلَيْهِ بِأَنْ يُسْلِمَهُمْ إِلَيْنَا وَلَا يُكَلِّمَهُمْ فَإِنَّ قَوْمَهُمْ أَعَلَى بِهِمْ عَيْنًا وَأَعْلَمُ بِمَا عَابُوا عَلَيْهِمْ فَقَالُوا لَهُمَا نَعَمْ ثُمَّ إِنَّهُمَا قَرَّبَا هَدَايَاهُمْ إِلَى النَّجَاشِيِّ فَقَبِلَهَا مِنْهُمَا ثُمَّ كَلَّمَاهُ فَقَالَا لَهُ أَيُّهَا الْمَلِكُ إِنَّهُ قَدْ صَبَا إِلَى بَلَدِكَ مِنَّا غِلْمَانٌ سُفَهَاءُ فَارَقُوا دِينَ قَوْمِهِمْ وَلَمْ يَدْخُلُوا فِي دِينِكَ وَجَاءُوا بِدِينٍ مُبْتَدَعٍ لَا نَعْرِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ وَقَدْ بَعَثَنَا إِلَيْكَ فِيهِمْ أَشْرَافُ قَوْمِهِمْ مِنْ آبَائِهِمْ وَأَعْمَامِهِمْ وَعَشَائِرِهِمْ لِتَرُدَّهُمْ إِلَيْهِمْ فَهُمْ أَعَلَى بِهِمْ عَيْنًا وَأَعْلَمُ بِمَا عَابُوا عَلَيْهِمْ وَعَاتَبُوهُمْ فِيهِ قَالَتْ وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ وَعَمْرِو بْنِ الْعَاصِ مِنْ أَنْ يَسْمَعَ النَّجَاشِيُّ كَلَامَهُمْ فَقَالَتْ بَطَارِقَتُهُ حَوْلَهُ صَدَقُوا أَيُّهَا الْمَلِكُ قَوْمُهُمْ أَعَلَى بِهِمْ عَيْنًا وَأَعْلَمُ بِمَا عَابُوا عَلَيْهِمْ فَأَسْلِمْهُمْ إِلَيْهِمَا فَلْيَرُدَّاهُمْ إِلَى بِلَادِهِمْ وَقَوْمِهِمْ قَالَ فَغَضِبَ النَّجَاشِيُّ ثُمَّ قَالَ لَا هَا اللَّهِ ايْمُ اللَّهِ إِذَنْ لَا أُسْلِمُهُمْ إِلَيْهِمَا وَلَا أُكَادُ قَوْمًا جَاوَرُونِي وَنَزَلُوا بِلَادِي وَاخْتَارُونِي عَلَى مَنْ سِوَايَ حَتَّى أَدْعُوَهُمْ فَأَسْأَلَهُمْ مَاذَا يَقُولُ هَذَانِ فِي أَمْرِهِمْ فَإِنْ كَانُوا كَمَا يَقُولَانِ أَسْلَمْتُهُمْ إِلَيْهِمَا وَرَدَدْتُهُمْ إِلَى قَوْمِهِمْ وَإِنْ كَانُوا عَلَى غَيْرِ ذَلِكَ مَنَعْتُهُمْ مِنْهُمَا وَأَحْسَنْتُ جِوَارَهُمْ مَا جَاوَرُونِي قَالَتْ ثُمَّ أَرْسَلَ إِلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَاهُمْ فَلَمَّا جَاءَهُمْ رَسُولُهُ اجْتَمَعُوا ثُمَّ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ مَا تَقُولُونَ لِلرَّجُلِ إِذَا جِئْتُمُوهُ قَالُوا نَقُولُ وَاللَّهِ مَا عَلَّمَنَا وَمَا أَمَرَنَا بِهِ نَبِيُّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَائِنٌ فِي ذَلِكَ مَا هُوَ كَائِنٌ فَلَمَّا جَاءُوهُ وَقَدْ دَعَا النَّجَاشِيُّ أَسَاقِفَتَهُ فَنَشَرُوا مَصَاحِفَهُمْ حَوْلَهُ سَأَلَهُمْ فَقَالَ مَا هَذَا الدِّينُ الَّذِي فَارَقْتُمْ فِيهِ قَوْمَكُمْ وَلَمْ تَدْخُلُوا فِي دِينِي وَلَا فِي دِينِ أَحَدٍ مِنْ هَذِهِ الْأُمَمِ قَالَتْ فَكَانَ الَّذِي كَلَّمَهُ جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ لَهُ أَيُّهَا الْمَلِكُ كُنَّا قَوْمًا أَهْلَ جَاهِلِيَّةٍ نَعْبُدُ الْأَصْنَامَ وَنَأْكُلُ الْمَيْتَةَ وَنَأْتِي الْفَوَاحِشَ وَنَقْطَعُ الْأَرْحَامَ وَنُسِيءُ الْجِوَارَ يَأْكُلُ الْقَوِيُّ مِنَّا الضَّعِيفَ فَكُنَّا عَلَى ذَلِكَ حَتَّى بَعَثَ اللَّهُ إِلَيْنَا رَسُولًا مِنَّا نَعْرِفُ نَسَبَهُ وَصِدْقَهُ وَأَمَانَتَهُ وَعَفَافَهُ فَدَعَانَا إِلَى اللَّهِ لِنُوَحِّدَهُ وَنَعْبُدَهُ وَنَخْلَعَ مَا كُنَّا نَعْبُدُ نَحْنُ وَآبَاؤُنَا مِنْ دُونِهِ مِنْ الْحِجَارَةِ وَالْأَوْثَانِ وَأَمَرَنَا بِصِدْقِ الْحَدِيثِ وَأَدَاءِ الْأَمَانَةِ وَصِلَةِ الرَّحِمِ وَحُسْنِ الْجِوَارِ وَالْكَفِّ عَنْ الْمَحَارِمِ وَالدِّمَاءِ وَنَهَانَا عَنْ الْفَوَاحِشِ وَقَوْلِ الزُّورِ وَأَكْلِ مَالَ الْيَتِيمِ وَقَذْفِ الْمُحْصَنَةِ وَأَمَرَنَا أَنْ نَعْبُدَ اللَّهَ وَحْدَهُ لَا نُشْرِكُ بِهِ شَيْئًا وَأَمَرَنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّيَامِ قَالَ فَعَدَّدَ عَلَيْهِ أُمُورَ الْإِسْلَامِ فَصَدَّقْنَاهُ وَآمَنَّا بِهِ وَاتَّبَعْنَاهُ عَلَى مَا جَاءَ بِهِ فَعَبَدْنَا اللَّهَ وَحْدَهُ فَلَمْ نُشْرِكْ بِهِ شَيْئًا وَحَرَّمْنَا مَا حَرَّمَ عَلَيْنَا وَأَحْلَلْنَا مَا أَحَلَّ لَنَا فَعَدَا عَلَيْنَا قَوْمُنَا فَعَذَّبُونَا وَفَتَنُونَا عَنْ دِينِنَا لِيَرُدُّونَا إِلَى عِبَادَةِ الْأَوْثَانِ مِنْ عِبَادَةِ اللَّهِ وَأَنْ نَسْتَحِلَّ مَا كُنَّا نَسْتَحِلُّ مِنْ الْخَبَائِثِ فَلَمَّا قَهَرُونَا وَظَلَمُونَا وَشَقُّوا عَلَيْنَا وَحَالُوا بَيْنَنَا وَبَيْنَ دِينِنَا خَرَجْنَا إِلَى بَلَدِكَ وَاخْتَرْنَاكَ عَلَى مَنْ سِوَاكَ وَرَغِبْنَا فِي جِوَارِكَ وَرَجَوْنَا أَنْ لَا نُظْلَمَ عِنْدَكَ أَيُّهَا الْمَلِكُ قَالَتْ فَقَالَ لَهُ النَّجَاشِيُّ هَلْ مَعَكَ مِمَّا جَاءَ بِهِ عَنْ اللَّهِ مِنْ شَيْءٍ قَالَتْ فَقَالَ لَهُ جَعْفَرٌ نَعَمْ فَقَالَ لَهُ النَّجَاشِيُّ فَاقْرَأْهُ عَلَيَّ فَقَرَأَ عَلَيْهِ صَدْرًا مِنْ كهيعص قَالَتْ فَبَكَى وَاللَّهِ النَّجَاشِيُّ حَتَّى أَخْضَلَ لِحْيَتَهُ وَبَكَتْ أَسَاقِفَتُهُ حَتَّى أَخْضَلُوا مَصَاحِفَهُمْ حِينَ سَمِعُوا مَا تَلَا عَلَيْهِمْ ثُمَّ قَالَ النَّجَاشِيُّ إِنَّ هَذَا وَاللَّهِ وَالَّذِي جَاءَ بِهِ مُوسَى لَيَخْرُجُ مِنْ مِشْكَاةٍ وَاحِدَةٍ انْطَلِقَا فَوَاللَّهِ لَا أُسْلِمُهُمْ إِلَيْكُمْ أَبَدًا وَلَا أُكَادُ قَالَتْ أُمُّ سَلَمَةَ فَلَمَّا خَرَجَا مِنْ عِنْدِهِ قَالَ عَمْرُو بْنُ الْعَاصِ وَاللَّهِ لَأُنَبِّئَنَّهُمْ غَدًا عَيْبَهُمْ عِنْدَهُمْ ثُمَّ أَسْتَأْصِلُ بِهِ خَضْرَاءَهُمْ قَالَتْ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي رَبِيعَةَ وَكَانَ أَتْقَى الرَّجُلَيْنِ فِينَا لَا تَفْعَلْ فَإِنَّ لَهُمْ أَرْحَامًا وَإِنْ كَانُوا قَدْ خَالَفُونَا قَالَ وَاللَّهِ لَأُخْبِرَنَّهُ أَنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ عِيسَى ابْنَ مَرْيَمَ عَبْدٌ قَالَتْ ثُمَّ غَدَا عَلَيْهِ الْغَدَ فَقَالَ لَهُ أَيُّهَا الْمَلِكُ إِنَّهُمْ يَقُولُونَ فِي عِيسَى ابْنِ مَرْيَمَ قَوْلًا عَظِيمًا فَأَرْسِلْ إِلَيْهِمْ فَاسْأَلْهُمْ عَمَّا يَقُولُونَ فِيهِ قَالَتْ فَأَرْسَلَ إِلَيْهِمْ يَسْأَلُهُمْ عَنْهُ قَالَتْ وَلَمْ يَنْزِلْ بِنَا مِثْلُهُ فَاجْتَمَعَ الْقَوْمُ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ مَاذَا تَقُولُونَ فِي عِيسَى إِذَا سَأَلَكُمْ عَنْهُ قَالُوا نَقُولُ وَاللَّهِ فِيهِ مَا قَالَ اللَّهُ وَمَا جَاءَ بِهِ نَبِيُّنَا كَائِنًا فِي ذَلِكَ مَا هُوَ كَائِنٌ فَلَمَّا دَخَلُوا عَلَيْهِ قَالَ لَهُمْ مَا تَقُولُونَ فِي عِيسَى ابْنِ مَرْيَمَ فَقَالَ لَهُ جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ نَقُولُ فِيهِ الَّذِي جَاءَ بِهِ نَبِيُّنَا هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَرُوحُهُ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ الْعَذْرَاءِ الْبَتُولِ قَالَتْ فَضَرَبَ النَّجَاشِيُّ يَدَهُ إِلَى الْأَرْضِ فَأَخَذَ مِنْهَا عُودًا ثُمَّ قَالَ مَا عَدَا عِيسَى ابْنُ مَرْيَمَ مَا قُلْتَ هَذَا الْعُودَ فَتَنَاخَرَتْ بَطَارِقَتُهُ حَوْلَهُ حِينَ قَالَ مَا قَالَ فَقَالَ وَإِنْ نَخَرْتُمْ وَاللَّهِ اذْهَبُوا فَأَنْتُمْ سُيُومٌ بِأَرْضِي وَالسُّيُومُ الْآمِنُونَ مَنْ سَبَّكُمْ غُرِّمَ ثُمَّ مَنْ سَبَّكُمْ غُرِّمَ فَمَا أُحِبُّ أَنَّ لِي دَبْرًا ذَهَبًا وَأَنِّي آذَيْتُ رَجُلًا مِنْكُمْ وَالدَّبْرُ بِلِسَانِ الْحَبَشَةِ الْجَبَلُ رُدُّوا عَلَيْهِمَا هَدَايَاهُمَا فَلَا حَاجَةَ لَنَا بِهَا فَوَاللَّهِ مَا أَخَذَ اللَّهُ مِنِّي الرِّشْوَةَ حِينَ رَدَّ عَلَيَّ مُلْكِي فَآخُذَ الرِّشْوَةَ فِيهِ وَمَا أَطَاعَ النَّاسَ فِيَّ فَأُطِيعَهُمْ فِيهِ قَالَتْ فَخَرَجَا مِنْ عِنْدِهِ مَقْبُوحَيْنِ مَرْدُودًا عَلَيْهِمَا مَا جَاءَا بِهِ وَأَقَمْنَا عِنْدَهُ بِخَيْرِ دَارٍ مَعَ خَيْرِ جَارٍ قَالَتْ فَوَاللَّهِ إِنَّا عَلَى ذَلِكَ إِذْ نَزَلَ بِهِ يَعْنِي مَنْ يُنَازِعُهُ فِي مُلْكِهِ قَالَ فَوَاللَّهِ مَا عَلِمْنَا حُزْنًا قَطُّ كَانَ أَشَدَّ مِنْ حُزْنٍ حَزِنَّاهُ عِنْدَ ذَلِكَ تَخَوُّفًا أَنْ يَظْهَرَ ذَلِكَ عَلَى النَّجَاشِيِّ فَيَأْتِيَ رَجُلٌ لَا يَعْرِفُ مِنْ حَقِّنَا مَا كَانَ النَّجَاشِيُّ يَعْرِفُ مِنْهُ قَالَتْ وَسَارَ النَّجَاشِيُّ وَبَيْنَهُمَا عُرْضُ النِّيلِ قَالَتْ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَجُلٌ يَخْرُجُ حَتَّى يَحْضُرَ وَقْعَةَ الْقَوْمِ ثُمَّ يَأْتِيَنَا بِالْخَبَرِ قَالَتْ فَقَالَ الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ أَنَا قَالَتْ وَكَانَ مِنْ أَحْدَثِ الْقَوْمِ سِنًّا قَالَتْ فَنَفَخُوا لَهُ قِرْبَةً فَجَعَلَهَا فِي صَدْرِهِ ثُمَّ سَبَحَ عَلَيْهَا حَتَّى خَرَجَ إِلَى نَاحِيَةِ النِّيلِ الَّتِي بِهَا مُلْتَقَى الْقَوْمِ ثُمَّ انْطَلَقَ حَتَّى حَضَرَهُمْ قَالَتْ وَدَعَوْنَا اللَّهَ لِلنَّجَاشِيِّ بِالظُّهُورِ عَلَى عَدُوِّهِ وَالتَّمْكِينِ لَهُ فِي بِلَادِهِ وَاسْتَوْسَقَ عَلَيْهِ أَمْرُ الْحَبَشَةِ فَكُنَّا عِنْدَهُ فِي خَيْرِ مَنْزِلٍ حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِمَكَّةَ ( رواه أحمد

 

 

ஒரு சிறிய வாய்ப்பை அபீ சீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற சிறு குழுவிற்கு அல்லாஹ் வழங்கினான். கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை அறிமுகம் செய்தார்கள்.  

 

அபீசீனியாவிற்கு நபித்தோழர்கள் அடைக்கலம் சென்றனர். அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ இப்னுல் முகீரா அல்மக்ஸும்மிய்யி என்பவரையும், அம்ருப்னுல் ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மிய்யி என்பவரையும் தூதுக்குழுவாக மக்கத்துக் காஃபிர்கள் அபீசீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மக்காவில் முஸ்லிம்களைத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அபிசீனியா வரை சென்றும் தொந்தரவு கொடுத்தனர்

 

இந்தக் காஃபிர்கள். கீழுள்ள அதிகாரிகளுக்கு காணிக்கைகளைக் கொடுத்து முன்கூட்டியே அவர்களைச் சரிக்கட்டி வைத்துக் கொண்டு, பிறகு அங்குள்ள மன்னரிடம் பேசுவதாகவும், காணிக்கைகள் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நமக்குச் சாதகமாகப் பேசுவார்கள் என்பதுதான் இந்த மக்கத்து காஃபிர்களின் திட்டம். திட்டமிட்டபடி கீழுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் காணிக்கைகள் கொடுக்கப்பட்டு, அவர்களும் நீங்கள் அரசவையில் உங்களது கோரிக்கைகளை வையுங்கள். நாங்கள் அதற்கு ஆதரவைத் தெரிவிக்கிறோம் என்றும் பேசி முடிக்கப்பட்டது.

 

பிறகு அரசரிடம் பேசுகிறார்கள். மன்னரே! எங்களது ஊரிலிருந்து சில முட்டாள் சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களது மார்க்கத்தையும் விட்டு விட்டார்கள். உங்களது மார்க்கத்திலும் சேராமல் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பிரிவினர் உங்களது ஊருக்கு வந்திருக்கிறார்கள்; இவர்கள் புதிதாக ஒரு மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். அதனை நாங்களும் அறியவில்லை. உங்களுக்கும் அது தெரியாது என்றும் இவர்கள் நம்மைக் கெடுக்க வந்திருக்கிறார்கள் என்று நஜ்ஜாஷி மன்னரிடம் சொல்லிவிட்டு, நாங்கள் இவர்களின் சித்தப்பாக்களும், பெரியப்பாக்களும் ஆவோம்.

 

இவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மற்றபடி அந்நியர்கள் அல்ல. வெறுத்துப் போய் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்று கூறினர். அங்கு சபையிலிருந்த அதிகாரிகளும் அப்படியே மொழிந்தனர்.

 

மக்கத்துக் காஃபிர்கள் நம்மை இங்கிருந்து கொண்டு செல்வதற்காக மன்னனிடம் பேசியிருக்கிறார்கள் என்கிற செய்தி ஜஃபர் பின் அபீதாலிபுக்குக் கிடைக்கிறது. மன்னர் நம்மைக் கூப்பிட விடுவார். மன்னர் நம்மைத் திருப்பியனுப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள்.

 

ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தான் இந்தக் கூட்டத்திற்கு தலைவராக இருக்கிறார். மன்னர் நம்மிடம் விசாரணை செய்தால் என்ன சொல்வது? என்று அவர் தலைமையில் ஆலோசனை நடக்கிறது. அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், எதையெல்லாம் இதுவரை நாம் சொல்லிக் கொண்டிருந்தோமோ அதையே இங்கேயும் சொல்வோம். அதில் ஒளிவு மறைவு தேவையில்லை. என்ன விளைவுகள் வந்தாலும் பரவாயில்லை என்கிறார்.

 

மார்க்கத்தில் இரகசியம் என்பது கிடையாது. அவ்வாறு நபியவர்கள் நம்மை வழி நடத்தவில்லை என்று முடிவு செய்தார்கள்.

 

இதுவரை நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோமோ அதைத்தான் நாம் அல்லாஹ்வின் மீதானையாகச் சொல்வோம். நபியவர்கள் நமக்கு எதை ஏவினார்களோ அதைச் சொல்வோம். இந்த நாட்டின் கொள்கைக்கு மாற்றமாக இருந்தாலும் சரி! அல்லாஹ்வைத் தான் வணங்குகிறோம். சிலைகளை எதிர்க்கிறோம். என்று சொல்லிவிட்டு, என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் முடிவு செய்தார்கள்.

 

மன்னர் நபித்தோழர்களை அழைத்து விசாரிக்கிறார்.

 

அவரிடம், மன்னரே! நாங்கள் எதையும் அறியாத மக்களாக இருந்தோம்.

சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம், செத்த பிணங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அசிங்கமான மானக்கேடான காரியங்களைச் செய்துகொண்டிருந்தோம்.

 

சொந்த பந்தங்களான உறவுகளைப் பகைத்துக் கொண்டிருந்தோம்.

அண்டை வீட்டார்களுக்குத் தொந்தரவு செய்து வந்தோம்.

பலமானவர்கள் பலவீனமானவர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் எங்களுக்கு ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பினான். அவரது பாரம்பரியத்தை நாங்கள் அறிவோம். அவரது உண்மையையும் நாங்கள் அறிவோம். அவரது நேர்மையும் பரிசுத்தமான வாழ்க்கையும் எங்களுக்குத் தெரியும்.

அவர் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என எங்களுக்குச் சொன்னார்.

மற்றவைகளை விடச் சொன்னார். மரம் செடி கொடிகள் சிலைகள் போன்ற எதையும் வணங்கக் கூடாது என்று சொன்னார்.

 

உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார். அமானிதத்தைக் காப்பாற்றச் சொன்னார். சொந்தபந்தங்களைச் சேர்த்து வாழவேண்டும் என்றார்.

அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஏவினார். இறைவனால் தடை செய்யப்பட்டதைத் தவிர்க்கச் சொன்னார். உயிரைக் கொலை செய்யக் கூடாது என்றார்.

 

அசிங்கமான காரியத்தைத் தடுத்தார். பொய் சொல்லக் கூடாது என்றார்.

அனாதை சொத்தைச் சாப்பிடக் கூடாது என்றார்.பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்று எங்களுக்கு ஏவினார்.

 

தொழச் சொன்னார். ஜகாத் கொடுக்கச் சொன்னார். நோன்பு வைக்கச் சொன்னார் என்று அப்படியே பட்டியல் போட்டு பேசுகிறார்.

 

இதை நாங்கள் நம்பியதாலும், செயல்படுத்தியதாலும் எங்களை இந்த மக்காவாசிகளான காஃபிர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டனர். அதனால்தான் நாங்கள் எங்கள் ஊரிலிருந்து உங்கள் நாட்டுக்கு வந்துவிட்டோம். உங்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம். உங்களது அடைக்கலத்திற்குத்தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். மன்னரே! உங்களது ஆட்சியில் எங்களுக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம் என்று கூறினார்கள்.

 

இப்படியெல்லாம் நஜ்ஜாஷி மன்னரிடம் ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் பேசியதும், அவர் மக்காவிலிருந்து வந்தவர்களிடம் நான் விசாரித்து விட்டுத்தான் சொல்ல முடியும் என்று சொல்லி விடுகிறார். உங்களிடம் இவர்களை ஒப்படைக்க முடியாது என்று மறுத்து விடுகிறார்.

 

மறுநாள் மன்னரிடம் மக்கா காஃபிர்கள், நீங்கள் நம்பும் ஈஸாவைப் பற்றி இவர்களிடம் விசாரியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அது போன்றே ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று மன்னர் நஜ்ஜாஷி நபித்தோழர்களிடம் கேட்டதற்கு, ஈஸா என்பவர் அல்லாஹ்வின் தூதர்,

அல்லாஹ்வின் மகனாக அவர் இல்லை, அல்லாஹ்வின் வார்த்தையினால் உருவானவர், அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார் என்றார்கள்.

 

உடனே நஜ்ஜாஷி மன்னர், உங்கள் நபி முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து வேதம் வருவதாகச் சொன்னீர்களே, அதை வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்கிறார்.

 

அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! என்ற சூரத்துல் மர்யம் என்ற 19 வது அத்தியாத்தை ஓதிக் காட்டுகிறார். அதைக் கேட்டதும் மன்னர் நஜ்ஜாஷி அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகின்றது.

 

இது மூஸா நபிக்கு யாரிடமிருந்து வந்ததோ அவரிடமிருந்தே இவருக்கும் வந்ததைப் போன்றுள்ளது என்று கூறிவிடுகிறார். மேலும் நீங்கள் எங்களது நாட்டில் அடைக்கலம் பெற்று விட்டீர்கள். உங்களது மார்க்கத்தின் பிரகாரம் இங்கே நடந்து கொள்ளலாம் என்றும் அனுமதியளித்து விடுகிறார். ( நூல்: அஹ்மத் )

صحيح البخاري

1327 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ أَنَّهُمَا حَدَّثَاهُ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: نَعَى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجَاشِيَّ صَاحِبَ الحَبَشَةِ، يَوْمَ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ

அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

 

இந்தச் சம்பவம் தான் நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்க அடிப்படையாக அமைந்தது.

 

பிற்காலத்தில் நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்காக காயிஃப் ஜனாஸா தொழுகை நடத்தியதற்கும் இதுதான் காரணம்.

 

தன் அனுபவத்தை அறிமுகம் செய்த ஸஃபானா (ரலி)...

 

ஸஃபானா நஜ்த் தேசத்தின் பெரும் கொடையாளர் ஹாதிம் தாயி அவர்களின் மகளார் இப்போது நபிகளாரின் முன்னால் கைதியாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தார்.

 

ஸஃபானாவோடு, அவர்களின் கோத்திரத்தார் சிலரும் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர். ஸஃபானா வின் சகோதரர் அதீ இப்னு ஹாதிம் முஸ்லிம்களின் படை தமது தேசத்திற்குள் நுழைவதை அறிந்ததும், ஸஃபானா வையும், தமது குடும்பத்தாரையும் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

 

அண்ணலார், மஸ்ஜிதுன் நபவீயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிலைத் தாண்டி தமது இல்லத்திலிருந்து மஸ்ஜிதை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அல்லாஹ்வின் தூதரே! எனும் ஒரு குரல் அழைத்ததை கேட்கிறார்கள்.குரல் வந்த திசை நோக்கி பார்க்கின்றார்கள் அங்கே ஸஃபானா நின்று கொண்டிருந்தார்கள்.

 

தொடர்ந்தார் ஸஃபானா தமது பேச்சை, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின் தலைவரோ எங்களை விட்டு ஓடிவிட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்! என்று கூறி முடித்தார்.

 

நபிகளார் மௌனமாக சென்று விடுகின்றார்கள். மறு நாளும் அது போன்றே நடக்கிறது. மூன்றாம் நாளும் ஸஃபானா அழைக்க, அருகே வந்த அண்ணலார் ஆதரவாய் பார்க்கின்றார்கள்.

 

ஸஃபானா, அல்லாஹ்வின் தூதரே! இல்லாதோருக்கு உதவிகள் புரிந்தும், கஷ்டத்தில் சிக்கியவர்களை அதிலிருந்து காப்பாற்றியும், பலகீனமானவர்களை தூக்கிப் பிடித்தும், குடும்ப உறவுகளை பலப்படுத்தியும், பிரயாணிகளுக்கு உணவளித்தும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தும் வந்த ஒருவரான ஹாத்திம் தாயின் மகள் தான் நான். நீங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும் என்று வேண்டி நின்றார்கள்.

 

ஸஃபானாவின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணலார் உண்மையில் நீ சொன்ன அனைத்து நற்காரியங்களும், இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்ற நற்காரியங்களே! உனக்கு எம் கருணையுண்டு! உன்னை நான் விடுதலை செய்கின்றேன்! என்று கூறினார்கள்.

 

சிறிது நேரத்தில், ஸஃபானா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டின் முன் நின்று அண்ணலாரை அழைக்கின்றார்கள்.

 

வெளியில் வந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் குடிமக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் என் தந்தை உறங்கவே மாட்டார். அப்படிப் பட்ட நல்ல மனிதர் ஒருவரின் மகளான எனக்கு என்னை மட்டும் நீங்கள் விடுவித்ததில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாய் இருக்கும்? என் நாட்டு மக்களையும் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று ஸஃபானா கூறினார்.

 

இது கேட்ட அண்ணலார், சிரித்தவாரே ஸஃபானாவின் கோத்திரத்தார் அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

 

மேலும், ஸஃபானா விற்கு அணிய ஆடைகளையும், பயணிக்க வாகனமும், வழிச்செலவுக்கு பணமும் வழங்கி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கண்ணியப்படுத்தினார்கள்.

 

                          (நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:272)

 

கண்ணியமான நடத்தையோடு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} நடந்து கொண்டதையும், பெருமானார் {ஸல்} அவர்கள் யார் என்பதையும் அருகில் இருந்து பார்த்த தம் அனுபவங்களின் மூலமாக அறிமுகம் செய்தார்கள்.

 

பத்திரமாய் வந்திரங்கிய சகோதரியையும், கோத்திரத்தார்களையும் கண்ட ஸஃபானாவின் சகோதரர் அதீ இப்னு ஹாத்திம் அசந்து போனார். இஸ்லாத்தின் மீதும், பூமான் நபி {ஸல்} அவர்களின் மீதும், முஸ்லிம்களின் மீதும் அவர் கொண்டிருந்த தவறான எண்ணத்தை அழித்தொழித்து விட்டு, ஒட்டு மொத்த சமூகத்தார்களையும், தம் சகோதரியையும் அழைத்துக் கொண்டு இஸ்லாத்தை ஏற்க மதீனா நோக்கி வந்தார்.

 

மதீனா வந்தடைந்ததும் அண்ணலாரைக்காண அனுமதி வேண்டி நின்றார். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுமதி கொடுத்ததும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்குள் நுழைந்ததும், அண்ணலார் வழங்கிய கண்ணியம் அப்படியே அவரை உலுக்கிப் போட்டுவிட்டது.

 

ஆம்! அவர் உள்ளே வந்ததும், மிருதுவான ஒருதலையணையை கீழே வைத்து, அதன் மேல் தங்களின் மேல் துண்டை விரித்து அதீ இப்னு ஹாத்திம் அவர்களை அண்ணலார் அமரச்சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வெறுமெனே தரையில் அமர்ந்தார்கள். நீண்டதொரு உரையாடலுக்குப் பின்னர் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக அதீ இப்னு ஹாத்தம் அவர்களும் அவர்களின் சகோதரி ஸஃபானா உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஷஹாதா கூறி ஏற்றுக் கொண்டனர். ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:273,274. )

 

பெருமானார் {ஸல்} அவர்களின் தயாள குணத்தை அறிமுகம் செய்த சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்)...

 

சுமார் 90 ஆண்டுகளுக்குப்பிறகு புனித பைத்துல் முகத்தஸ் நகரை சுல்தான் ஸலாஹித்தீன் அய்யூபி (ரஹ்) தலைமையில் 1187 செப்டம்பர் 20 அன்று முஸ்லிம்கள் வலம் வந்தனர்.தக்பீர் முழக்கம், தஹ்லீல் முழக்கம் விண்ணை அதிரவைத்தன.

 

பெரும் மார்க்க அறிஞர்கள், வர்த்தகர்கள் சாமானிய மக்கள் என அனைவரும் திரண்டு வந்து வெற்றி வீரர் ஸலாஹீத்தீன் (ரஹ்) அவர்களை பாராட்டப் புறப்பட்டு வந்திருந்தனர்.

 

அன்று ஜிம்ஆ நாளாக இருந்தது 90 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பைத்துல் முகத்தஸில் ஜீம்ஆத்தொழுகை நடைபெற்றது.அதன் பின் சுல்தான் ஸலாஹீதீன் (ரஹ்) அவர்கள் நடந்துகொண்ட முறை எப்படி இருந்தது என்பதைபற்றி அறியும் பின்பு கி.பி. 1099 ல் சிலுவைப் படையினர் இந்நகரை கைப்பற்றியபோது முஸ்லிம்களிடம் சிலுவைப்படையினர் நடந்து கொண்ட முறையை மிகாட் என்ற வரலாற்றாசிரியர் Histories Croisades சிலுவை யுத்த வரலாறு எனும் நுலில்...

 

v வீடுகளுக்குள்ளும், விதிகளிலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள்

v அடைக்கலம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது

v தப்பி யோர்களை தேடிச்சென்று கொன்றனர்

v கோபுரங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்களில் ஒளிந்து கொண்டோர்களையும் விட்டு வைக்கவில்லை.

 

ஜெருஸ்ஸலம் நகரெங்கும் உயிரை இழக்கும் மனிதர்களின் அழுகைகளும், முனகல்களும் தான் எதிரொலித்தன.

 

பிரிட்டானியா கலைக்களசியம் பின்வருமாறு வர்ணிக்கிறது

 

அல்  அக்ஸா பள்ளி வளாகமெங்கும் ரத்தவெள்ளம் ஒடிக் கொண்டிருந்தது. பச்சிளங்குழந்தைகள் பிடுங்கப்பட்டு சுவற்றில் அடித்தோ, அல்லது போர் நடக்கும் இடத்திற்கும் மத்தியில் வீசப்பட்டோ கொல்லப்பட்டனர்.

 

ஆனால், ஸலாஹீத்தீன் (ரஹ்) ஜெருஸ்ஸலத்தைக் கைப்பற்றியபோது நடந்து கொண்ட விதம் ஸலாஹீத்தீன் (ரஹ்) வரலாற்றை எழுதிய ஸ்டான்லி லேன் பூல் எனும் எழுத்தாளர் குறிப்பிடும் போது

 

ஜெருஸ்ஸலம் தன்னிடம் சரணடைந்த போது காட்டியதை விட உச்சக்கட்டமான கருணையைஸலாஹீத்தீன் வேறு எப்போதும் காட்டியதில்லை.பொறுப்புணர்வுமிகுந்த தளபதிகளின் தலைமையில் ஸலாஹீத்தீனின் படைகள் ஒவ்வொரு வீதியையும் காத்து அத்துமீறல்கள் நிகழ்வதைத் தடுத்தனர்.கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக எந்தவொரு தகவலும் எங்கிருந்தும் வரவில்லை.நகரத்தின் அனைத்து நுழைவாயிலும் ஸலாஹீத்தீன் வசம் தான் இருந்தது.

 

தனது சகோதரர் மாலிக் அல் அதில், இப்லீனைச் சேர்ந்த இரு பாதிரிகள் ஆகியோருக்கு பிணைக் கைதிகளில் தலா ஆயிரம் பேரை விடுவிக்க அனுமதி வழங்கினார் ஸலாஹீத்தீன்.

 

மேலும், தனது அதிகாரிகளிடம் பிணைத்தொகை செலுத்த முடியாத முதியோர்களெல்லாம் சுதந்திரமாக வெளியேறலாம் என்று பிரகடனம் செய்யுமாறு ஒர் உத்தரவை பிறப்பித்தார்.

 

இந்த அறிவிப்பை கேட்டவுடன் செயிண்ட் லாஸரஸ் பகுதியிலிருந்து அணி அணியாக கிறிஸ்தவர்கள் தமது இருப்பிடத்திலிருந்து ஜெருஸ்ஸலம் நகரை விட்டு வெளியேறினார்.சூரிய உதயத்தில் தொடங்கிய இந்த வெளியேற்றம் இரவு வரை நீடித்து.எண்ணற்ற ஏழை மக்கள் ஸலாஹீத்தீனின் கருணையால் பயனடைந்தனர்.

 

தங்களிடம் வீழ்ந்த நகரத்தில் வாழ்ந்த எதிர்தரப்பு மக்களுக்கு இவ்வரு முஸ்லிம்கள் கருணை காட்டினார்கள்.

 

மேலும், ஜெருஸ்ஸலம் நகரைக் கைப்பற்றிய விதம் ஒன்று மட்டுமே அவரை ஒரு தலை சிறந்த வீரராக கருணை நெஞ்சம் படைத்த தலைவராக கருதுவதற்கு போதுமான சான்றாக விளங்குகிறது என தனது  Saladin (P230-234)   எனும் நூலில் ஸ்டான்லி - லேன் - பூல் கூறுகிறார். (  நூல் :பாலஸ்தீன வரலாறு.பாகம் 1. பக்கம் 90-93 )

 

இன்று வரை வரலாற்று மேதைகளால் ஸலாஹுத்தீன் அய்யூபி புகழப்படுவதற்கு பின்னால் அல்லாஹ்வின்  தூதர்  (ஸல்)  அவர்கள்  மக்கா  வெற்றியின் போது கையாண்ட அரசியல் பண்பாடுகளும், மாண்புகளும் மறைந்திருக்கின்றன.

 

தன்னுடைய செயல்பாடுகளால் அறிமுகம் செய்த இளைஞர்…

 

மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது பெய்ரூத்தில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் தூதரக வளாகம்.

 

துடிப்பு மிக்க இளைஞர் பருவத்து தூதரக அதிகாரி ஒருவர் மாடியின் ஒரு பகுதியில் இருந்து ஏதோ சிந்தனையோடு கீழ் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

தூரத்தில் அவர் கண்ட ஓர் காட்சி, அவர் சிந்தனையை கலைத்தது. உடனடியாக மேலிருந்து கீழிறங்கி அந்த இடந்துக்கு வந்தார்.

 

அவர் கண்ட காட்சி இது தான் ஒரு யூத முதியவர், அரபு முஸ்லிம் இளைஞர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அந்த இளைஞரின் முகத்தில் பளார் என ஓர் அறை விட்டார். நிலை குலைந்த அந்த இளைஞன் அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்”.

 

கீழிறங்கி வந்த அந்த பிரிட்டிஷ் அதிகாரி அந்த இளைஞனை இடைமறித்து உனக்கும் அந்த முதியவருக்கும் என்ன பிரச்சனை? என்று கேட்டார். அதறகவன், நான் அவரிடம் கடன் வாங்கி இருந்தேன். சொன்ன தவணையில் என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை, என்னிடம் கடனை திருப்பிக் கேட்டார். நான் மீண்டும் அவரிடம் தவணை கேட்டேன். சினமுற்ற அவர் என்னை அடித்து விட்டார். “வாங்கிய கடனை உரிய தவணையில் கொடுத்து விடுமாறு எங்கள் நபி {ஸல்} அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்; எனினும், உரிய தவணையில் திருப்பிக் கொடுக்காதது என் குற்றம் தானே என்று அமைதியாகக் கூறினான்.

 

உரிய தவணையில் கொடுக்காவிட்டால் அதற்காக அவர் உன்னை அடிக்க வேண்டுமா? நீயும் அமைதியாக இருக்கின்றாய்? திருப்பி அடிக்க வேண்டியது தானே? உன் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் கண்டிப்பாக அடித்திருப்பார் என்று அந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி கூறினார்.

 

அப்போது, அந்த இளைஞன் திருப்பித் தாக்க வேண்டும் என என் மனம் நாடியது. எனினும், என் நபியின் உபதேசம் ஒன்று என்னை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது என்றான்.

 

அப்படியென்ன உபதேசம்? என்று கேட்டார் தூதரக அதிகாரி.

 

அதற்கவன்……. عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال:"من لم يرحم صغيرنا ، ويوقر كبيرنا فليس منّا ".

 

வயதில் சிறியோர் மீது அன்பு காட்டாதவரும் வயதில் மூத்தோருக்கு மரியாதை செய்யாதவரும் என்னைச் சார்ந்தவரல்லர் என்ற என் நபி {ஸல்} அவர்கள் கூறிய உபதேசமே!” என்றான்.

 

ஆற்றலும் வலிமையும் நிறைந்த ஓர் இளைஞனை, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் முன்பாக வாழ்ந்த ஒருவரின் உபதேசங்கள் கட்டுப்படுத்துகிறது, நெறிப்படுத்துகின்றது என்றால் நிச்சயம் அந்த மாமனிதர் மகத்துவமிக்க வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பார் என்றெண்ணி வியக்கின்றார்.

 

மாநபி {ஸல்} அவர்களின் மகத்துவமிக்க வாழ்க்கையை படிக்கும் பொருட்டு வேலையைத் துறந்தார், முறைப்படி அரபிமொழிக் கற்று, அண்ணலாரின் வாழ்க்கை நெறியைப் படித்து தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்கின்றார்.

 

மர்மடியூக் பிக்தால் என்ற பெயரோடு பிரிட்டிஷ் தூதரக அதிகாரியாக அறியப்பட்ட அவர் முஹம்மத் மர்மடியூக் பிக்தாலாக மாறிப்போனார்.

 

அல்லாஹ் அளவிலா மார்க்கஞானத்தை அவருக்கு வழங்கினான். அதன் ஊடாக அவர் “The Meaning of the Glorious Quran” என்ற பெயரில் ஆங்கிலத்தில் தலை சிறந்த திருக்குர்ஆன் மொழியாக்கத்தைத் தந்தார்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் உபதேசங்களுக்கு அந்த இளைஞன் உயிர் கொடுத்ததன் விளைவாக நரகை நோக்கிச் சென்ற ஒருவருக்கு அல்லாஹ் சுவனப்பாதையை திறந்து வைத்தான்.

 

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்த அபூபக்ர் (ரலி)..

 

أن عدداً من كبار الصحابة قد أسلموا على يد أبي بكر ، واستجابة لدعوته ، منهم : (طلحة ، والزبير ، وسعد بن أبي وقاص ، و عبد الرحمن بن عوف ، وأبو عبيدة الجراح ، وخالد بن سعيد بن العاص ، وأبو ذر ، وعثمان بن عفان ، وأبو سلمة بن عبد الأسد ، والأرقم بن أبي الأرقم) (راجع : البداية والنهاية ج3 ص29 ، والسيرة النبوية لدحلان ج1 ص94 ـ والسيرة الحلبية ج1 ص276 وتهذيب الأسماء واللغات ج2 ص182 ، وتاريخ الإسلام للذهبي ج2 ص78 . )

அபூபக்ர் (ரலி) அவர்கள் தாங்கள் விளங்கி வைத்திருந்த மாநபி {ஸல்} அவர்களை தங்களுடைய உற்ற தோழர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

 

விளைவு என்ன தெரியுமா? இந்த உம்மத்திற்கு ஒரு கலீஃபா கிடைத்தார். இந்த உம்மத்திற்கு ஒரு நம்பிக்கையாளர் கிடைத்தார். தான் சம்பாதித்து சேமித்து வைத்த செல்வங்களையெல்லாம் வாழும் போதும் வாழ்ந்த பிறகும் மார்க்கத்திற்காக செலவழித்த ஒரு தனவந்தர் கிடைத்தார். தன் துஆவாலும், தன் அம்ப்எய்தல் எனும் ஆற்றலாலும், தளபதி எனும் மகுடத்தாலும் இந்த உம்மத்திற்கு பெரும் சேவையாற்றிய சேவையாளர் ஒருவர் கிடைத்தார். தங்கள் வாழ்க்கை முழுவதையும் சன்மார்க்க போர்களுக்காக அர்ப்பணித்த இரண்டு போராளிகள் கிடைத்தனர்.

 

எல்லாவற்றிற்கும் மேலாக சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற ஐந்து மாமனிதர்களைப் பெற்றுத்தந்தார்கள்.

 

தாருல் அர்க்கம் எனும் அடைக்கலத்திற்கு சொந்தக்காரரை கொண்டு வந்து நிறுத்தினார். இந்த உம்மத்தின் ஈஸா என்று அழைக்கப்பட்ட இரு (ஸாலிம், ஃகிஃபார்) கோத்திரத்தார் இஸ்லாத்தை ஏற்க காரணமாய் இருந்த ஒரு புனிதரை அழைத்து வந்தார்.

 

தன்னலமற்ற மார்க்கப்போருக்கு பங்காற்றும் இருபெரும் வீரர்களை கொண்டு வந்து நிறுத்தினார்.

 

ஆம்! உஸ்மான் (ரலி), அபூ உபைதா (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி), ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி), அர்க்கம் இப்னு அபீ அர்க்கம் (ரலி), அபூதர் (ரலி) காலித் இப்னு ஸயீத் (ரலி), அபூஸலமா (ரலி) ( ரலியல்லாஹு அன்ஹும் ) ஆகியோர் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிமுகம் செய்து வைத்த அண்ணல் நபி அவர்களின் வாழ்க்கையால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆவார்கள்.

 

எனவே, தற்போதுள்ள சூழலை நமக்கு சாதகமாக்கி வெகுஜன மக்களிடையே பூமான் நபி {ஸல்} அவர்களை அறிமுகம் செய்வோம்! பூமான் நபி {ஸல்} அவர்களின் மாண்புயர காரணமானவர்களாய் அமைவோம்!!

 

No comments:

Post a Comment