Thursday, 1 April 2021

 

மகத்தான இரு பெரும் பாக்கியங்கள்!!!

 


உலகில் வாழும் ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு அல்லாஹ் வழங்குகின்ற பாக்கியங்களில் மகத்தானது, மிகப்பெரியது இறைவனின் பொருத்தம் கிடைப்பதாகும்.

وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (72)

அல்லாஹ்வின் பொருத்தமே மிகப் பெரியதாகும், அது தான் மகத்தான வெற்றியுமாகும்”.                                             ( அல்குர்ஆன்: 9: 72 )

மறுமையில் ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு அல்லாஹ் வழங்குகின்ற பாக்கியங்களில் மகத்தானது, உயர்வானது இறைவனின் சந்திப்பு கிடைப்பதாகும்

عن صهيب الرومي - رضي الله عنه - عن النبي - صلى الله عليه وسلم - أنه قال : ( إذا دخل أهل الجنة الجنة ، قال: يقول الله - تبارك وتعالى - تريدون شيئاً أزيدكم؟ فيقولون: ألم تبيض وجوهنا؟ ، ألم تدخلنا الجنة وتنجينا من النار؟ ، قال: فيكشف الحجاب فما أعطوا شيئاً أحب إليهم من النظر إلى ربهم - عز وجل -) رواه مسلم.

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததன் பின்னர் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்உங்களுக்கு இந்த சுவனத்தில் வேறேதேனும் ஆசைகள் இருக்கின்றதா? இன்னும் அதிகப்படுத்தி தருகின்றேன்என்று கேட்பானாம் 

அதற்கு, சுவனவாசிகள்எங்களை நரகில் இருந்து நீ பாதுகாக்கவில்லையா? நீ எங்களை சுவனத்தில் பிரவேசிக்க வைக்கவில்லையா? நீ எங்கள் முகங்களை வெண்மையாக ஆக்கவில்லையா? (இதுவே எங்களுக்கு போதும்) என்பார்கள்.

இதைக் கூறி விட்டு நபி {ஸல்} அவர்கள்அல்லாஹ் தனக்கும் சுவனவாசிகளுக்கும் இடையே இருக்கிற திரையை அகற்றுவான். அல்லாஹ்வை சுவனவாசிகள் பார்க்கும் அந்த பாக்கியத்தை விட சுவனத்தில் வேறெதுவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கியங்களில் மிகப் பிரியமானதாக தெரியாதுஎன்று கூறினார்கள்.                                                   ( நூல்: முஸ்லிம் )

மகத்தான இரு பெரும் பாக்கியங்களான இவைகளை பெற்றுக் கொள்ள ஒரு இறைநம்பிக்கையாளன் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இறை பொருத்தத்தை நோக்கி இந்த உலகில் பயணிப்பவர்களின் தன்மைகள் குறித்து வர்ணிக்கும் அல்லாஹ் அந்த முஃமின்கள் மனித நேயப்பண்புகளோடு நடந்து கொள்வார்கள். ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், கைதிகளுக்கும் பசி தீர உணவு வழங்குவார்கள். அதற்காக அவர்கள் சக மனிதர்களிடம் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று கூறுகின்றான்.

وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا (8) إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا (9)

இன்னும் அவனி (அல்லாஹ்வி) ன் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாக ஏழைக்கும், அநாதைக்கும், சிறைபட்டோருக்கும் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகத்தான். உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றி செலுத்துதலையும் நாங்கள் நாடவில்லைஎன்று கூறுவார்கள்.                           ( அல்குர்ஆன்: 76: 8,9 )

இறைவனின் சந்திப்பை விரும்புபவர்கள் எப்படி தங்களின் உலக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் குறிப்பிடும் போது..

فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

எவர் தம் ரப்பை சந்திப்பதை ஆதரவு வைக்கின்றாரோ அவர் நற்செயலைச் செய்து கொள்ளட்டும்! மேலும், தன்னுடைய ரப்பின் வணக்கத்தில் ஒருவரையும் அவர் இணையாக்க வேண்டாம்”.                             ( அல்குர்ஆன்: 18: 110 )

இறைவனின் பொருத்தமோ, இறைவனின் சந்திப்போ கிடைக்க வேண்டும் என்றால் நம் செயல்பாடுகள் எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என மேற்கூறிய இறை வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அதிலும் குறிப்பாக இறை சந்திப்பை விரும்பும் ஒருவர் நிறைய அமல்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, இறை பொருத்தத்தை பெற்ற ஒரு அமல் போதும் என்றே கூறுகின்றான்.

அந்த ஒரு அமல் எது? அது சிறிய அமலா? பெரிய அமலா? அமல்களுடனான தொடர்பில் நாம் எப்படி இருக்கின்றோம்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

அபரிமிதமான நன்மைகளை பெற்றுத்தரும் செயல்களாகவும், இறை உவப்பை பெற்றுத்தரும் அமலாகவும் இஸ்லாம் மதிப்பீடு செய்திருக்கிற நன்மையான  அமல்களை நாம் மிகச் சாதாரணமாகக் கருதுகின்றோம்

நன்மையான காரியங்களை அதன் அளவைக்  கொண்டு  குறைவாக  மதிப்பிடுகிற விபரீதப் போக்கு சமீப காலமாக இஸ்லாமிய சமூக மக்களிடையே பெருகி வருவதை சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது.

ஆனால், இந்த நிலையோ நம் ஈமானையும்,  ஈமானிய அடிப்படையிலான  வாழ்வையும் ஆட்டிப்பார்க்கிற ஆற்றலும், வலிமையும் கொண்டது என்பதை முதலில் 

நாம் உணர்ந்தாக வேண்டும்.

يقول ابن المبارك رحمه الله

 رُبَّ عمل صغير تُعظِّمه النيّة، ورُبَّ عمل كبير تُصغِّره النيّة،

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: “ஓர் அடியான்  உயர்வாக எண்ணி எத்தனையோ சின்னஞ்சிறிய அமல்களைச் செய்கிறான். அவைகள் அவனுக்கு ரப்பிடமிருந்து மகத்தான கூலியைப் பெற்றுத் தந்து விடுகின்றது.

ஓர் அடியான் எத்தனையோ பெரிய அமல்களைச் செய்கிறான். அவனுடைய துச்சமான எண்ணத்தின் காரணமாக அவைகள் அவனுக்கு ரப்பிடமிருந்து மிகக் குறைவான கூலியையே பெற்றுத்தருகிறது”.

அமல்களைப் பொருத்த வரையில், அதை ஏற்றுக் கொள்வதற்கான அளவீடுகளைப் பொருத்த வரையில் அல்லாஹ்வின் பார்வை மிகவும் விசாலமானது, விசித்திரமானது.

وعن أَبي هريرة 

 قال: قال رسولُ اللَّه ﷺ

 دِينَارٌ أَنْفَقْتَهُ في سبيلِ اللَّه، وَدِينَارٌ أَنْفَقْتَهُ في رقَبَةٍ، ودِينَارٌ

 تصدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ علَى أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا الَّذي أَنْفَقْتَهُ علَى أَهْلِكَ 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் பாதையில் நீ செலவு செய்கிற ஒரு தீனாரும், ஒரு அடிமையை உரிமை விடுகிற விஷயத்தில் நீ செலவு செய்கிற ஒரு தீனாரும், ஒரு ஏழைக்கு தர்மமாக செலவு செய்கிற ஒரு தீனாரும், உன் குடும்பத்தாருக்காக நீ செலவு செய்கிற ஒரு தீனாரும் கூலி வழங்கப்படுவதால் அல்லாஹ்விடம் மகத்தான ஒரு தீனார் எது தெரியுமா? அது உன் குடும்பத்தாருக்காக நீ செலவு செய்த அந்த ஒரு தீனார் தான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                          ( நூல்: முஸ்லிம் )

இன்று அல்லாஹ்வின் பாதையில் கேட்டவுடன் எவ்வளவோ செலவு செய்கிறோம், ஏழைகளுக்கு வாரி வழங்குகின்றோம். ஆனால், குடும்பத்தில் தாய், தகப்பன், மனைவி மக்கள், பேரன், பேத்தி, சகோதரன் சகோதரி ஆகியோருக்கு செலவு செய்ய எவ்வளவு தயங்குகின்றோம். எவ்வளவு கணக்குப் பார்க்கின்றோம்

قال صلى الله عليه وسلم

من توضأ فأحسن الوضوء، ثم قال: "أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله، اللهم أجعلني من التوابين، واجعلني من المتطهرين، فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء

.صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அழகிய முறையில்  உளூ செய்து விட்டு,  வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன்

 தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், நிச்சயமாக, முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்.

யாஅல்லாஹ்! என்னை பாவமன்னிப்புக் கோரியவர்களில் ஒருவராகவும், பரிசுத்தவான்களில் ஒருவராகவும் ஆக்குவாயாக!” என்று ஓதுவாரானால் அவருக்காக சுவனத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன. அவர் நாடிய வாசல் வழியாக சுவனத்தில் நுழைந்து கொள்ளலாம்”.                                                                    ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

இன்று நம்முடைய உளூவை பரிசீலனை செய்து பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து போகிற அமல்கள், நற்காரியங்களுக்கு அல்லாஹ் வழங்குகின்ற கூலி மகத்தானதாகும் என்பதை நாம் உணர வேண்டும்

بينما نحن نصلي مع رسول الله ، إذ قال رجل من القوم: الله أكبر كبيرًا، والحمد لله كثيرًا، وسبحان الله بكرة وأصيلاً،فقال رسول الله من القائل كلمة كذا وكذا؟، فقال رجل من القوم: أنا يا رسول الله، قال: «عجبت لها، فتحت لها أبواب السماء

 قال ابن عمر فما تركتهن منذ

 سمعت رسول الله يقول ذلك

صحيح مسلم

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:“ நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது கூட்டத்தில் ஒருவர் الله أكبر كبيرًا، والحمد لله كثيرًا، وسبحان الله بكرة وأصيلاً “” என்றார். 

அப்போது, நபி {ஸல்} அவர்கள் இன்னின்னவாறு கூறியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது,”கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நான் தான் இன்னின்னவாறு கூறினேன் என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் என்ன ஓர் ஆச்சர்யம்! அந்த வார்த்தைகளை நீங்கள் கூறிய போது வானத்தின் அத்தனை வாசல்களும் திறக்கப்பட்டன என்றார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:  அல்லாஹ்வின் தூதர் {ஸல்} 

அவர்கள் இப்படிக் கூறியதைக் கேட்டதிலிருந்து ஒவ்வொரு தொழுகைக்குப் 

பின்னரும் நான் ஓதிவருவதை இதுவரை விட்டதில்லை”.         ( நூல்: முஸ்லிம் )


قال صلى الله عليه وسلم

من أنظر معسرًا، أو وضع له، أظلَّه الله يوم القيامة تحت ظل عرشه، يوم لا ظلَّ إلا ظلّه

.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் வாழ வழியில்லாமல் சிரமப்படும் ஒருவரை கருணைக் கண் கொண்டு பார்க்கின்றாரோ, அல்லது அவருக்காக ஏதேனும் சிரமமேற்கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் நிழலே இல்லாத அந்நாளில் தன் அரியணையின் கீழ் நிழல் தருவான்”.                     ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

 

قال صلى الله عليه وسلم

من نفَّس عن غريمه، أو محا عنه، كان في ظل العرش يوم القيامة

.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் கடனாளியை அவரின் கஷ்டத்திலிருந்து காப்பாற்றுகின்றாரோ, அல்லது அவரின் பெயரை கடனாளியின் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி மேற்கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் அர்ஷின் நிழலின் கீழ் இடம் பெறச் செய்கின்றான்”.        ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

 

وعن أَبي ذرٍّ 

 قَالَ: قَالَ لي رسولُ الله ﷺ

 لا تَحقِرَنَّ مِنَ المَعْرُوف شَيْئًا

ஆகவே தான் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நன்மையான காரியங்கள் எதையும் நீங்கள் குறைவாக மதிப்பிட வேண்டாம்”. ( நூல்: )


رواه مسلم في صحيحه عن عائشة رضي الله عنها قالت: « جَاءَتْنِي مِسْكِينَةٌ تَحْمِلُ ابْنَتَيْنِ لَهَا، فَأَطْعَمْتُهَا ثَلاَثَ تَمَرَاتٍ، فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً، وَرَفَعَتْ إِلَى فِيهَا تَمْرَةً لِتَأْكُلَهَا فَاسْتَطْعَمَتْهَا ابْنَتَاهَا فَشَقَّتِ التَّمْرَةَ الَّتِي كَانَتْ تُرِيدُ أَنْ تَأْكُلَهَا بَيْنَهُمَا، فَأَعْجَبَنِي شَأْنُهَا، فَذَكَرْتُ الَّذِي صَنَعَتْ لِرَسُولِ الله صلى الله عليه وسلم فَقَالَ: «إِنَّ الله قَدْ أَوْجَبَ لَهَا بِهَا الجَنَّةَ، أَوْ أَعْتَقَهَا بِهَا مِنَ النَّارِ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் இரு பெண்குழந்தைகளை சுமந்தவாறு ஒரு ஏழைப்பெண்மணி வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களை உண்ணக்கொடுத்தேன். இரு பேரீத்தம் பழங்களை தம் இரு பெண்குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு, ஒன்றை தான் தின்பதற்காக வாயின் அருகே கொண்டு சென்ற போது, அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று அம்மா என்று இரக்கமாகக் கூற தன் வாயருகே கொண்டு சென்ற அந்தப்பழத்தை தன் பிஞ்சுக்குழந்தையின் வதனத்தில் ஊட்டி விட்டு வாஞ்சையோடு அக்குழந்தையை நோக்கினாள்.

 

உண்மையில், இந்தக் காட்சியைக் கண்டு நான் ஆச்சர்யம் அடைந்தேன். நடந்த சம்பவத்தை நபி {ஸல்} அவர்களிடம் கூறிய போது அப்பெண்மணியின் இரக்க சிந்தனைக்குப் பரிசாக அல்லாஹ் அவளுக்கு சுவனத்தைக் கொடுத்து நரகிலிருந்து விடுதலையும் தந்து விட்டான்”. என்று கூறினார்கள்.           ( நூல்: முஸ்லிம் )

وروى أحمد وغيره عن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه وسلم أنه قال

 «إِنَّ رَجُلاً لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ، فَكَانَ يُدَايِنُ النَّاسَ؛ فَيَقُولُ لِرَسُولِهِ: خُذْ مَا تَيَسَّرَ وَاتْرُكْ مَا عَسُرَ وَتَجَاوَزْ؛ لَعَلَّ الله يَتَجَاوَزُ عَنَّا، فَلَمَّا هَلَكَ قَالَ الله عَزَّ وَجَلَّ لَهُ: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ قَالَ: لا، إِلاَّ أَنَّهُ كَانَ لِي غُلامٌ وَكُنْتُ أُدَايِنُ النَّاسَ، فَإِذَا بَعَثْتُهُ يَتَقَاضَى قُلْتُ لَهُ: خُذْ مَا تَيَسَّرَ وَاتْرُكْ مَا عَسُرَ وَتَجَاوَزْ؛ لَعَلَّ الله عَزَّ وَجَلَّ يَتَجَاوَزُ عَنَّا. قَالَ الله عَزَّ وَجَلَّ: قَدْ تَجَاوَزْتُ عَنْكَ»

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: முன் சென்ற காலத்தில் கடன் கொடுக்கும் தொழிலை ஒருவர் செய்து வந்தார். அவர் வெறெந்த சிறப்பான அமலும் செய்தது கிடையாது. கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூலிக்கச் செல்லும் தன் பணியாளர்களை நோக்கி தினந்தோரும் இப்படிச்சொல்வாராம் மென்மையாகக் கேளுங்கள்; தந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஏழைகள், இயலாதவர்கள் ஆகியோர் தராவிட்டால் அப்படியே மன்னித்து விட்டு விடுங்கள்; அவர்களின் கடனை தள்ளுபடி செய்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வும் நம் விஷயத்தில் மன்னிப்பான் என நான் ஆதரவு வைக்கின்றேன்என்றார்.

திடீரென ஒரு நாள் அவர் இறந்து விட்டார். அல்லாஹ்வின் திரு முன் கொண்டு வரப்பட்ட அவர் அவர் செயல் குறித்து விசாரித்தான்.

என்ன உம்முடைய ஏட்டில் எந்த ஒரு நல்லறமும் நீ செய்ததாக இடம் பெற வில்லையே? என்று அல்லாஹ் கேட்டான்.

அதற்கு அவர் ஆம் என்று கூறிவிட்டு, என்றாலும், ”இறைவா! நான் செல்வந்தனாகவும், பிறருக்கு கடன் உதவி செய்பவனாகவும் உலகில் இருந்து வந்தேன். என்னிடம் கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூலிக்கச் செல்லும் என் பணியாளர்களை நோக்கி தினந்தோரும் இப்படிச்சொல்வேன் மென்மையாகக் கேளுங்கள்; தந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஏழைகள், இயலாதவர்கள் ஆகியோர் தராவிட்டால் அப்படியே மன்னித்து விட்டு விடுங்கள்; அவர்களின் கடனை தள்ளுபடி செய்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வும் நம் விஷயத்தில் மன்னிப்பான் என நான் ஆதரவு வைக்கின்றேன் என்று கூறும் பழக்கமுடையவனாகவே இருந்தேன்என்று பதில் கூறுவார்.

அப்போது, அல்லாஹ் அவரை நோக்கி இன்று நாம் உம்முடைய பாவங்களையும் தள்ளுபடி செய்து, மன்னித்து விட்டோம்என்று சொல்வானாம்.  

 

حدثنا إسحاق بن نصر حدثنا أبو أسامة عن أبي حيان عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاة الفجر يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دف نعليك بين يدي في الجنة قال ما عملت عملا أرجى عندي أني لم أتطهر طهورا في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي أن أصلي قال أبو عبد الله دف نعليك يعني تحريك



அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு நாள் ஃபஜ்ருடைய தொழுகைக்காக நாங்கள் காத்திருந்த போது, நபி {ஸல்} அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அருகே அழைத்து, “பிலாலே! நான் சுவனத்திலே நுழைந்தேன், ஆனால், அங்கு எனக்கு முன்னாடியே யாரோ ஒருவர் நடந்து போகிற காலடிச் சப்தத்தை கேட்டேன்.

அப்போது, என் அருகே இருந்த ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் இந்த காலடிச் சப்தத்திற்கு உரியவர் யார்?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்களுடைய காலடிச் சப்தம் தான்என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

இப்போது, மீண்டும் பிலால் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் இஸ்லாத்தில் எந்த அமலை ஆதரவு வைத்து இந்த சீரிய சிறப்பை நீர் அடைந்து கொண்டீர்!எனக் கேட்டார்கள் 

அதற்கு, பிலால் (ரலி) அவர்கள் இரவு, பகல் எந்த நேரமானாலும் சரி நான் உளூவுடனே இருப்பேன். எந்த நேரத்தில் உளூ முறிந்தாலும் உடனடியாக உளூ செய்து விடுவேன். பின்னர், உடனடியாக இரண்டு ரக்அத் தொழுது விடுவேன். இதை நான் என் மீது கடமையாகவே ஆக்கிக் கொண்டேன்என பதில் கூறினார்கள்.

                                          ( நூல்: புகாரீ, அல் இஸ்தீஆப் )

وذكر عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم: " نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ فقلت من هذا قالوا صوت حارثة بن النعمان " . فقال رسول الله صلى الله عليه وسلم: " كذلك البر كذلك البر " . وكان أبر الناس بأمه.

ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் ஆயிஷாவே! எனக்கு உறக்கத்தில் சுவனம் காட்டப்பட்டது. அப்போது, சுவனத்தின் ஓர் பகுதியிலிருந்து ஒருவர் அழகிய குரலில் குர்ஆனை ஓதுகிற சப்தத்தைக் கேட்டேன்.

அப்போது, நான் யார் இவர்? இங்கே குர்ஆன் ஓதுகின்றாரே? என்று ஆச்சர்யத்தோடு வினவினேன்.

அப்போது, என்னிடம் இந்த சப்தம் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுடையது என்று கூறப்பட்டதுஎன்று கூறிய அண்ணலார் தொடர்ந்து, “ நன்மை செய்வோருக்கும் அவ்வாறே பாக்யம் கிடைக்கும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாய்க்கு மிகவும் உபகாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

قال أبو عمر كان حارثة بن النعمان قد ذ هب بصره فاتخذ خيطاً من مصلاه إلى باب حجرته ووضع عنده مكتلاً فيه تمر فكان إذا جاءه المسكين يسأل أخذ من ذلك المكتل ثم بطرف الخيط حتى يناوله وكان أهله يقولون له نحن يكفيك فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة المسكين تقي ميته السوء " .

இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் இறுதிகாலத்தில் கண்பார்வை இன்றி வாழ்ந்தார்கள்.

தான் தொழுகிற இடத்திலிருந்து வீட்டின் வாசல் வரை கயிறு கட்டியிருப்பார்கள். அருகே ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழங்களை வைத்திருப்பார்கள்.

வீட்டு வாசலில் எவராவது வந்து யாசகம் கேட்டால், கையில் பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து அந்த யாசகரின் கையில் கொடுத்து விட்டு மீண்டும் தாங்கள் அமரும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.

ஒருவர் அல்ல இருவர் அல்ல. எத்தனை பேர் யாசகம் கேட்டு வந்தாலும், கயிற்றைப் பிடித்து வருவதும் போவதுமாக இருப்பார்கள் ஹாரிஸா (ரலி) அவர்கள்.

ஹாரிஸா (ரலி) அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், சிரமங்களையும் பார்த்து விட்டு அவர்களின் குடும்பத்தினர் ஓர் யாசகருக்கு இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இவ்வாறு தர்மம் செய்கின்றீர்கள்? எங்களிடம் தந்தால் நாங்கள் கொண்டு கொடுப்போமே?” என்று கூறினார்கள்.

அதற்கு, ஹாரிஸா (ரலி) அவர்கள் ஏழை எளியோரை தேடிச் சென்று, அவர்களின் கரங்களில் கொண்டு தர்மப் பொருட்களைக் கொடுப்பதென்பது துர்மரணத்தைத் தடுக்கும்என நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.

ஆதலால், தான் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் நான் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்என்றார்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் லி இப்னி அப்தில் பர் )    

தொழுகையின் உயர்வும்.. அலட்சியமும்

தொழுகையின் மாண்புகளை இந்த உம்மத்தில் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றனர்.

தொழுகை என்பது அல்லாஹ்வோடு அடியான் தினந்தோறும் உரையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தருகின்றது. இறைவனின் உதவி கிடைக்க காரணமாக அமைகின்றது என்றெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்ற நம் சமூகம் தொழுகை விஷயத்தில் காட்டுகிற அக்கறை என்ன?

தொழுகையை விட்டவர்களுக்கான தண்டனை குறித்து பேசும் குர்ஆன் தொழுகையை அலட்சியம் செய்பவர்களுக்கான தண்டனை குறித்தும் பேசுகின்றது.

தொழுகையை காலம் முழுவதும் தொழாமல் இருந்தவர்களின் நிலை

 (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) குற்றவாளிகளைக் குறித்து விசாரித்தும் கொள்வார்கள்- -

 مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ

உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)

PlayCopyWordByWord74:43

قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ

அவர்கள் (பதில்) கூறுவார்கள்: தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

PlayCopyWordByWord74:44

وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ

 அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

PlayCopyWordByWord74:45

وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ

 “(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

PlayCopyWordByWord74:46

وَ كُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّيْنِۙ

 இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.

PlayCopyWordByWord74:47

حَتّٰٓى اَتٰٮنَا الْيَقِيْنُؕ‏

 உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்எனக் கூறுவர்).

 

ஸகர் நரகம் எப்படிப்பட்டது?..

 

 سَاُصْلِيْهِ سَقَرَ‏

அவனை நான் ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்.

PlayCopyWordByWord74:27

وَمَاۤ اَدْرٰٮكَ مَا سَقَرُؕ

. “ஸகர்என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?

PlayCopyWordByWord74:28

لَا تُبْقِىْ وَ لَا تَذَرُ‌ۚ

. அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது.

PlayCopyWordByWord74:29

لَـوَّاحَةٌ لِّلْبَشَرِ‌ۖۚ

 (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.

PlayCopyWordByWord74:30

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَؕ

அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

 

தொழுகையில் அலட்சியம் செய்தோரின் நிலை..

 

فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் (வைல் எனும் நரகத்தின் ஓடை) கேடுதான்”.                                          (அல்குர்ஆன் 107: 4, 5).

اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُوْهُمْ‌ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்”.                               (அல்குர்ஆன்4:142).

فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் நரகத்தின் (ஃகை எனும் ஓடையை) கேட்டைச் சந்திப்பார்கள்.                          ( அல்குர்ஆன்: 19: 49 )

துஆ எனும் அமல்.. 

எப்படி தொழுகை ஒரு முஃமினுக்கு மிக முக்கியமான ஒரு அமலோ அதே போன்று தான் துஆ என்கிற அமலும். துஆ கேட்பதிலும் யாராவது துஆ கேட்டால் ஆமீன் சொல்வதிலும் இந்த உம்மத்தில் எவ்வளவு பேர் அலட்சியமாக இருக்கின்றார்கள்.

துஆ என்பது அடியானுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற மகத்தான அருட்கொடையாகும். அதன் வழியே அனுதினமும் ஓர் அடியான் அல்லாஹ்விடம் உரையாட முடியும், அவனோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த உலகத்தில் எவருக்கும் சாத்தியப்படாததை நாம் துஆவின் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என்று குர்ஆனும் ஸுன்னாவும் நமக்கு தெளிவு படுத்துகின்றது.

இம்ரானின் மனைவி என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்என்று கூறியதையும்-

(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்என்று அவள்(பதில்) கூறினாள். ( அல்குர்ஆன்: 3: 35,36, 37 )

என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்எனக் கூறினார்.

ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.                           ( அல்குர்ஆன்: 38: 35,36 )

(அதற்கு மூஸா) கூறினார்: "இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக! "என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! "என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக! "என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!

"என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக! "என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)! "அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக! "என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!

"நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்,

"உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)

"நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்" (என்றார்)

"மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன" என்று (அல்லாஹ்) கூறினான்.                                  ( அல்குர்ஆன்: 20: 26 - 37 )

ஆனால், அந்த துஆவில் நாம் எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்?

மனித வாழ்வின் அனைத்துச் செயல்களும் அலசப்பட்டு, எடைபோடப்படும் மறுமை நாளில் நல்லறங்களின் எடை அதிகக் கனமுள்ளதாகக் காணப்பட வேண்டும் என்ற ஆவல் கொண்டிருக்கிற எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் எந்த ஒரு அமலையும் குறைத்து மதிப்பிட மாட்டார்.

எனவே, நன்மைகளை அள்ளித்தருகிற, இறை உவப்பைப் பெற்றுத்தருகிற எல்லா நன்மையான காரியங்களையும் முனைப்போடு செய்து, இறை பொருத்தத்தையும், இறைவனின் சந்திப்பையும் நமதாக்கிக் கொள்வோம்.

ஏனெனில், எந்த அமல் அல்லாஹ்விடத்தில் உயர்விற்குரியது என்று நாம் அறிய மாட்டோம். அமல்களை அலட்சியம் செய்யாமல் குறைவாக மதிப்பிடாமல் அனைத்து அமல்களையும் ஆர்வத்தோடு செய்வோம். ஏனெனில், அல்லாஹ்வின் சந்திப்பை உறுதி செய்யும் அமல் அந்த ஒரு அமல் அல்லாஹ்விற்கு மாத்திரமே தெரியும்.

எதிர் வருகிற ரமழானை பாக்கியமாகக் கருதி அமல்களின் மீதான ஆர்வத்தை மேம்படுத்தி அமல்களில் அதிகம் ஈடுபட கவனம் எடுப்போம்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய மேலான பொருத்தத்தையும், அவனுடைய மகத்தான சந்திப்பையும் நமக்கெல்லாம் அருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

 

 

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
    ஆலிம்ககளால் அதிகமாக தேடப்படும் பயான் தளம் தங்களுடையது தான்.
    தமிகத்தின் பெரும்பாலான பள்ளிகளின் மின்பர்களும் கடல்கடந்து வாழும் தமிழ் جزاكم الله خيرا كثيرا يا استاذ الكريم திருப்பூர் ஆலிம்கள் பணிபுரியும் மஸ்ஜித் மின்பர்களும் தங்களது ஆக்கத்தால் அழகு பெற்று அர்த்தமுள்ளதாக ஆகின்றன.

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ். சிறு அமல்கள் கூட எண்ணத்தை பொருத்து பெரும் நன்மையை பெற்றுத்தரும் என்பதனை திருகுர்ஆன் மற்றும் நபிமொழிகள் கொண்டு அழகுற விளக்கினீர்கள்.அருமையான கட்டுரை ஜஸாக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete